Thursday, 26 June 2025

ஹிஜ்ரி 1447 – சிந்தனை! வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!!!

 

ஹிஜ்ரி 1447 – சிந்தனை! வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!!!



அல்லாஹ்வின் பேரருளால் ஹிஜ்ரி 1446 -ம் ஆண்டு முடிவடைந்து 1447 ஹிஜ்ரிப் புத்தாண்டின் துவக்க நாளில் நாம் இருக்கிறோம்.

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த புத்தாண்டை நம் அனைவருக்கும் பரக்கத்தும், ரஹ்மத்தும் நிறைந்த புத்தாண்டாக ஆக்கியருள்வானாக!

 

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய அரசு அகண்ட சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்து, 22 1/2 லட்சம் சதுர மைல் தூரம் விரிவடைந்து உலகத்தின் எட்டு திக்குகளிலும் இஸ்லாம் மிக வேகமாக பரவிய போது தான் இஸ்லாமிய காலண்டருக்கான அவசியமும் கட்டாயமும் ஏற்பட்டது. 

 

விரிவடைந்த மாகாணங்களில், நாடுகளில் அரசு சார்ந்த பல்வேறு தரவுகளுக்கு தேதி குறிப்பிடும் அவசியம் ஏற்பட்டது.

 

ஆகவே, அந்தந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நபித்தோழர்களும் இதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். 

 

எனவே, உமர் (ரலி) அவர்கள் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு, ஆண்டு கணக்கை எங்கிருந்து, எதிலிருந்து துவங்கலாம் என்று ஷூராவுக்கு அனுப்பி விவாதித்தார்கள். ஷூராவின் போது பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போதும் அந்த நேரத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து வருடக்கணக்கை தொடங்கலாம் என்று ஆலோசனை சொன்னார்கள்.

نؤرخ بمهاجرته فانه فرق بين الحق والباطل

நபி அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்ற ஹிஜ்ரத் பயணத்திலிருந்து ஆண்டின் துவக்க நாளை ஏற்படுத்திக் கொள்ளலாம். நிச்சயமாக! மாநபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் தான் "சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டியது" என்ற அழகிய காரணம் ஒன்றையும் முன் வைத்தார்கள்.

இறுதியாக, உமர் (ரலி) அவர்கள் மேற்கொண்ட வாசகத்தை கூறி உஸ்மான் அவர்களின் ஆலோசனைப் படி ஹிஜ்ரத் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு "ஹிஜ்ரி ஆண்டு" துவங்கப்பட்டது.

 

மாநபி (ஸல்) அவர்களின் புனிதம் நிறைந்த ஹிஜ்ரத் பயணத்தின் ஊடாக இந்த உம்மத்திற்கு பல பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன.

 

முதலாவதாக, அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய விருப்பத்தை நாம் முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டும்.

 

இரண்டாவது, அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய விருப்பம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

அவன் விருப்பமே நமது விருப்பமாக திருப்தி கொள்ள வேண்டும்.

 

பெருமானார் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் தரும் படிப்பினைகளில் பிரதானமான படிப்பினை இதுவே.

 

ஏனெனில், மாநபி ஸல் அவர்களின் ஹிஜ்ரத் பயணம் என்பது அல்லாஹ்வின் விருப்பமாக இருந்தது. அதைப் பொருந்திக் கொண்டு முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.

 

நமது வாழ்நாளில் ஒரு வருடம் நம்மை விட்டு கடந்து சென்றிருக்கிறது.

 

தமது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே! என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப் பார்த்து தமது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்தித்து அல்லாஹ்வை திருப்தி படுத்த முயல்வதே இந்த புத்தாண்டின் துவக்க தினத்தில் நாம் செய்ய வேண்டிய முதற் காரியமாகும்.

 

وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ

 

அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.” ( அல்குர்ஆன்: 9: 62 ).

 

حَدَّثَنِي عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ الْغِفَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَعْذَرَ اللَّهُ إِلَى امْرِئٍ أَخَّرَ أَجَلَهُ حَتَّى بَلَّغَهُ سِتِّينَ سَنَةً "". تَابَعَهُ أَبُو حَازِمٍ وَابْنُ عَجْلاَنَ عَنِ الْمَقْبُرِيِّ.

 

ஒருவர் அறுபது வயதை அடைந்துவிட்டால் அதற்குமேல் அவர் வாழ்நாள் குறித்து கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்பதில்லை. 

 

أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ

 

சிந்தித்து உணரக்கூடியவன் சிந்திப்ப தற்கு வேண்டிய நீண்ட ஆயுளை உங்களுக்கு நாம் கொடுக்கவில்லையா? இன்னும் எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்துதானே இருந்தார்! (என்று அல்லாஹ் கேட்பான்). ( அல்குர்ஆன்: 35: 37 )

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும்வரை வாழ்நாளைத் தள்ளிப்போட்ட பிறகும் அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.

 

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ مُنْذِرٍ، عَنْ رَبِيعِ بْنِ خُثَيْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ خَطَّ النَّبِيُّ صلى الله عليه وسلم خَطًّا مُرَبَّعًا، وَخَطَّ خَطًّا فِي الْوَسَطِ خَارِجًا مِنْهُ، وَخَطَّ خُطُطًا صِغَارًا إِلَى هَذَا الَّذِي فِي الْوَسَطِ، مِنْ جَانِبِهِ الَّذِي فِي الْوَسَطِ وَقَالَ "" هَذَا الإِنْسَانُ، وَهَذَا أَجَلُهُ مُحِيطٌ بِهِ ـ أَوْ قَدْ أَحَاطَ بِهِ ـ وَهَذَا الَّذِي هُوَ خَارِجٌ أَمَلُهُ، وَهَذِهِ الْخُطُطُ الصِّغَارُ الأَعْرَاضُ، فَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا، وَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا "".

 

"ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுச் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுகிறாரோ அவரே வெற்றிபெற்றார். இந்த (உலக) அற்ப வாழ்வு ஏமாற்றுகின்ற (அற்ப) இன்பமேயன்றி வேறில்லை. ( அல்குர்ஆன்: 3: 185 ) 

 

(நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும் சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க(த் தற்சமயம்) நீர் அவர்களை விட்டுவிடுவீராக. (அவர்களுடைய வீண்) எதிர்பார்ப்புகள் (மறுமையை) அவர்களுக்கு மறக்கடித்துவிட்டன; (இதன் பலனைப்) பின்னர் அவர்கள் நன்கறிந்துகொள்வார்கள். ( அல்குர்ஆன்: 15: 3 ) 

 

قال علي بن أبي طالب رضي الله عنه: "ارتحلت الدنيا مدبرة، وارتحلت الآخرة مقبلة، ولكل واحدةٍ منهما بنون، فكونوا من أبناء الآخرة، ولا تكونوا من أبناء الدنيا؛ فإن اليوم عملٌ ولا حساب، وغدًا حسابٌ ولا عمل". 

 

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "இவ்வுலகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மறுமை முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் புதல்வர்கள் உள்ளனர். எனவே, நீங்கள் மறுமையின் புதல்வர்களாயிருங்கள். இம்மையின் புதல்வர்களாகி விடாதீர்கள். இன்று வினை உண்டு. விசாரணை இல்லை. நாளை விசாரணை உண்டு. ஆனால், வினை இல்லை.

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந் தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம்வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

 

(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் சூழ்ந்துள்ளஅல்லது சூழ்ந்துகொண்டுவிட்டவாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்பு களாகும்.

 

இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனை களாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.

வாழ்நாளில் ஒரு நாள் என்பது

وقال ابن مسعود: “ما ندمت على شيء ندمي على يوم غربت شمسه، نقص فيه أجلي، ولم يزدد فيه عملي”.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுவார்களாம்: என் வாழ்வில் என்னை விட்டும் தப்பிப்போன எந்த ஒரு விஷயத்திற்காகவும் துளி அளவு கூட நான் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால், ஒவ்வொரு நாள் சூரியன் மறைகிற போதும் ஒரேயொரு விஷயத்தைக் குறித்து மாத்திரம் நான் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன்.

நேற்றை விட அதிகப்படியான எந்தவொரு நற்செயலும் செய்யாமல் என் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து விட்டதே!”… என்று.

قال الحسن البصري: “ما من يوم يمرُّ على ابن آدم إلا وهو يقول: يا ابن آدم، أنا يوم جديد، وعلى عملك شهيد، وإذا ذهبت عنك لم أرجع إليك، فقدِّم ما قال الحسن البصري: شئت تجده بين يديك، وأخِّر ما شئت فلن يعود إليك أبداً”.

 

ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மனிதனைக் கடந்து செல்கிற எந்த ஒரு நாளும் இப்படிச் சொல்லாமல் கடந்து செல்வதில்லை.

 

ஓ ஆதமின் மகனே! நான் உனக்கான புத்தம் புதிய நாளாவேன். நீ என்னை என்ன செய்யப் போகிறாய்? என்பதைக் காண நான் ஆவலாய் இருக்கின்றேன்.

 

நான் சென்று விட்டால் இனி ஒருபோதும் உன்னிடம் திரும்பி வரப்போவதில்லை.

 

நீ விரும்பினால் என்னை அழகிய முறையில் பயன்படுத்திக்கொள்! அதற்கான பலனை உன் வாழ்வில் நீ பெற்றுக் கொள்வாய்!

 

நீ விரும்பினால் என்னை பயன்படுத்தாமல் நாளைக்கு செய்கிறேன் என்று தள்ளிப்போடு! ஆனால், ஒன்றை நீ நன்றாக விளங்கிக்கொள்! இன்றாகிய நான் இப்போது உன்னை விட்டும் சென்று விட்டால் இனி எப்போதும் வரப்போவதில்லை.

 

வாழ்க்கை என்பது

மேன்மக்களான ஸாலிஹீன்களில் ஒருவர் கூறுகின்றார்: ஓர் அடியானின் கால நேரம் என்பது நான்கு வகைகள் ஆகும். ஐந்தாவதாக ஒன்று கிடையாது.

1. ஓர் அடியான் தன் வாழ்வை அல்லாஹ் வழங்கியிருக்கிற அருட்கொடையாகக் கருதி கழிப்பானேயானால் அல்லாஹ் அவன் வாழ்க்கையை நன்றி செலுத்துவோரின் பாதையில் வழி நடத்துவான்.

அதன் விளைவாக அவன் வாழ்க்கை அல்லாஹ்வின் அருட்கொடைகள் நிறைந்ததாய் அமைந்து விடுகின்றது.

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ

அல்லாஹ் கூறுவது போன்று: நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு மென்மேலும் வழங்குவேன்.” (அல்குர்ஆன்: 14:7 )

2. ஓர் அடியான் தன் வாழ்வை அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட நிலையிலேயே கழிப்பானேயானால் அல்லாஹ் பேருபகாரம் வழங்கப்பட்டோரின் பாதையில் வழி நடத்துவான். ஆம்! நேர்வழியிலும், நேர்வழியின் மீது நிலைத்திருக்கிற பேருபகாரத்தை வழங்குவான்.

அதன் விளைவாக அவனது வாழ்க்கை ஈருலகத்திலும் சோபனத்திற்குரியதாய் அமைந்து விடுகின்றது.

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ () نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ

அல்லாஹ் கூறுவது போன்று: எவர்கள்அல்லாஹ் தான் எங்கள் இறைவன்என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ திண்ணமாக, அவர்கள் மீது {மரண நேரத்தின் போது} வானவர்கள் இறங்குகின்றனர்.மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:

அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்!உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்; இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்!

3. ஓர் அடியான் தன் வாழ்வை நல்லறங்களோடு அல்லாஹ்விற்கு மாறு செய்த நிலையிலும் கழிக்கின்றானோ அல்லாஹ் அந்த அடியானுக்கு ஒரு வாய்ப்பாக பாவமன்னிப்பு எனும் பாதையை திறந்து விடுவான்.

அதன் விளைவாக அவனது வாழ்க்கை அல்லாஹ்வின் கருணைக்கும், மன்னிப்புக்கும் உரியதாய் அமைந்து விடுகின்றது.

وَآخَرُونَ اعْتَرَفُوا بِذُنُوبِهِمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللَّهُ أَنْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ ()

அல்லாஹ் கூறுவது போன்று: மேலும், தம் குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கும் வேறு சிலரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் நற்செயலோடு தீய செயலையும் கலந்து விட்டிருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரியக்கூடும்!ஏனென்றால், திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனும் ஆவான்.” ( அல்குர்ஆன்: 9:102 )

4. ஓர் அடியான் தன் வாழ்வை சோதனைகள் நிறைந்ததாய் கழிக்கின்றானோ அல்லாஹ் அந்த அடியானுக்கு பொறுமையாளர்கள், சோதனைகளை அல்லாஹ்விற்காக பொருந்திக் கொள்கின்றவர்கள் ஆகியோரின் பாதைகளில் பயணிக்க வைத்து விடுவான்.

அதன் விளைவாக அவனது வாழ்க்கை சோபனத்திற்குரியதாய், அல்லாஹ்வின் அருளுக்கு சொந்தமானதாய் அமைந்து விடுகின்றது.

وَبَشِّرِ الصَّابِرِينَ () الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ () أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ()

அல்லாஹ் கூறுவது போன்று: “(வாழ்க்கையில் சோதனையின் போது)பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே! ) நீர் நற்செய்தி கூறுவீராக! அவர்கள் எத்தகையோர் எனில், தங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றோம்என்று சொல்வார்கள்.

அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும்,நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள்.” ( அல்குர்ஆன்: 2:155 – 157 )

மறுமை நாளும்.... விசாரணையும்....

عن بن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه : " اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك " أخرجه الحاكم في المستدرك رقم ( 7846 ) 4 / 341 وقال : هذا حديث صحيح على شرط الشيخين ولم يخرجاه ، وابن أبي شيبة رقم ( 34319 )

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் அறிவுரை கேட்டு வந்த ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அறிவுரை பகர்ந்தவண்ணம் கூறினார்கள்: நீர் ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன் அரிய வாய்ப்புக்களாய்க் கருதுவீராக!

 

1. நீர் முதுமையடைவதற்கு முன்னால் உம் இளமையயும், 2. நீர் நோயுறுவதற்கு முன்னால் உம் ஆரோக்கியத்தையும், 3. நீர் ஏழ்மையடைவதற்கு முன்னால் உம் செல்வநிலையையும், 4. நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமக்கு கிடைக்கும் ஓய்வையும், 5. நீர் மரணமடைவதற்கு முன்னால் உமது வாழ்நாளையும் நீர் அரிய வாய்ப்புக்களாய்க் கருதி பயன்படுத்திக் கொள்வீராக!

لن تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما

أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل به

நாளை மறுமையில் நான்கு கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது. அவைகள்: “ 1. வாழ்நாளை எப்படி கழித்தாய்? , 2. வாலிபத்தை எப்படி கழித்தாய்?,  3. பொருளை எப்படி சேர்த்தாய்?, எப்படி செலவு செய்தாய்?, 4.கற்ற கல்வியைக் கொண்டு என்ன அமல் செய்தாய்? “ என்று  நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய செயலை கொண்டு வருவான், அவனுடைய கொள்கையை கொண்டு வருவான். அவனுடைய நம்பிக்கையை கொண்டு வருவான். அவனுடைய எண்ணங்களை கொண்டு வருவான். 

وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا

அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். ( அல்குர்ஆன்: 14: 21 )

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. ( அல்குர்ஆன்: 17: 36 )

அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்: "ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.  அந்த உரையின் இறுதியில்...

وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ

"நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். "மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?’ என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ஆம்என்று பதிலளிப்பான். அப்போது இதைவிட சுலபமான ஒன்றே (-அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)என்று கூறப்படும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி வந்தார்கள். ( நூல்: புகாரி )

 

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 102: 8 )

فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ

عَمَّا كَانُوا يَعْمَلُونَ

உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம். ( அல்குர்ஆன்: 15: 92-93 )

فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ

யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.( அல்குர்ஆன்: 7: 6 )

 

விசாரணை எப்படி இருக்கும்?

حَدَّثَتْنِي عَائِشَةُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ يَوْمَ القِيَامَةِ إِلَّا هَلَكَ» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَيْسَ قَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ العَرْضُ، وَلَيْسَ أَحَدٌ يُنَاقَشُ الحِسَابَ يَوْمَ القِيَامَةِ إِلَّا عُذِّبَ

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார்என்று கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்?” ( அல்குர்ஆன்:  84: 8 )என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லைஎன்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள். ( நூல்: புகாரி )

 

தனித்தனியாக விசாரிப்பான்...

«مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ اللهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

அதீ பின் ஹாத்திம் (ரலி) அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களுக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் தமது வலப்பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கு அவர் காணமாட்டார்.

 

பின்னர் அவர் தமது இடப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கெனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கும் அவர் காணமாட்டார். மேலும், அவர் தமக்கு முன்னால் பார்ப்பார். தமது முகத்துக் கெதிரே நரக நெருப்பையே அவர் காண்பார். ஆகவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ( நூல்: முஸ்லிம் )

قالوا: يا رَسولَ اللهِ، هلْ نَرَى رَبَّنَا يَومَ القِيَامَةِ؟ قالَ: هلْ تُضَارُّونَ في رُؤْيَةِ الشَّمْسِ في الظَّهِيرَةِ، ليسَتْ في سَحَابَةٍ؟ قالوا: لَا، قالَ: فَهلْ تُضَارُّونَ في رُؤْيَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ، ليسَ في سَحَابَةٍ؟ قالوا: لَا، قالَ: فَوَالَّذِي نَفْسِي بيَدِهِ، لا تُضَارُّونَ في رُؤْيَةِ رَبِّكُمْ إلَّا كما تُضَارُّونَ في رُؤْيَةِ أَحَدِهِمَا، قالَ: فَيَلْقَى العَبْدَ، فيَقولُ: أَيْ فُلْ، أَلَمْ أُكْرِمْكَ، وَأُسَوِّدْكَ، وَأُزَوِّجْكَ، وَأُسَخِّرْ لكَ الخَيْلَ وَالإِبِلَ، وَأَذَرْكَ تَرْأَسُ وَتَرْبَعُ؟! فيَقولُ: بَلَى، قالَ: فيَقولُ: أَفَظَنَنْتَ أنَّكَ مُلَاقِيَّ؟ فيَقولُ: لَا، فيَقولُ: فإنِّي أَنْسَاكَ كما نَسِيتَنِي، ثُمَّ يَلْقَى الثَّانِيَ فيَقولُ: أَيْ فُلْ، أَلَمْ أُكْرِمْكَ، وَأُسَوِّدْكَ، وَأُزَوِّجْكَ، وَأُسَخِّرْ لكَ الخَيْلَ وَالإِبِلَ، وَأَذَرْكَ تَرْأَسُ وَتَرْبَعُ؟! فيَقولُ: بَلَى، أَيْ رَبِّ، فيَقولُ: أَفَظَنَنْتَ أنَّكَ مُلَاقِيَّ؟ فيَقولُ: لَا، فيَقولُ: فإنِّي أَنْسَاكَ كما نَسِيتَنِي.

ثُمَّ يَلْقَى الثَّالِثَ، فيَقولُ له مِثْلَ ذلكَ، فيَقولُ: يا رَبِّ، آمَنْتُ بكَ، وَبِكِتَابِكَ، وَبِرُسُلِكَ، وَصَلَّيْتُ، وَصُمْتُ، وَتَصَدَّقْتُ، وَيُثْنِي بخَيْرٍ ما اسْتَطَاعَ، فيَقولُ: هَاهُنَا إذنْ.

قالَ: ثُمَّ يُقَالُ له: الآنَ نَبْعَثُ شَاهِدَنَا عَلَيْكَ، وَيَتَفَكَّرُ في نَفْسِهِ: مَن ذَا الذي يَشْهَدُ عَلَيَّ؟ فيُخْتَمُ علَى فِيهِ، وَيُقَالُ لِفَخِذِهِ وَلَحْمِهِ وَعِظَامِهِ: انْطِقِي، فَتَنْطِقُ فَخِذُهُ وَلَحْمُهُ وَعِظَامُهُ بعَمَلِهِ؛ وَذلكَ لِيُعْذِرَ مِن نَفْسِهِ، وَذلكَ المُنَافِقُ، وَذلكَ الذي يَسْخَطُ اللَّهُ عليه. الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم الصفحة أو الرقم: 2968 | خلاصة حكم المحدث : [ صحيح ] التخريج : أخرجه مسلم ( 2968 )

 

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமை நாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லைஎன்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள்.

 

மக்கள் இல்லைஎன்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். இறைவன் அடியானைச் சந்தித்து, “இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா?

 

உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “ஆம்என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லைஎன்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்என்பான்.

 

பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், “இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப் படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த் தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?” என்று கேட்பான்.

 

அதற்கு அந்த அடியான், “ஆம், என் இறைவா!என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லைஎன்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்என்பான். பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், “என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தானதர்மம் செய்தேன்என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.

 

அப்போது இறைவன், “நீ இங்கேயே நில்என்று கூறுவான். பிறகு அவனிடம், “இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம்என்று கூறுவான். அந்த மனிதன், தனக் கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து பேசுங்கள்என்று சொல்லப்படும். அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ( நூல்: முஸ்லிம் ) 

 

இரு பெரும் சமூகத்தின் விடி வெள்ளியாய் திகழ்ந்த அபூதர் (ரலி)...

ஒரு நிமிட வாழ்க்கை கூட நமக்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த ஒரு நிமிடத்தில் நம்மால் இறைவனை திருப்திபடுத்த முடியுமென்றால் திருப்திபடுத்த முனைய வேண்டும்.

அவன் திருப்தி பட்டு விட்டான் எனில் நாம் செய்த அந்த காரியத்தை அல்லாஹ் கபூல் செய்து விடுவான்.

ويروي لنا البخاري في صحيحه قصة إسلام أبي ذر ـ رضي الله عنه ـ فيقول: ( قال لنا ابن عباس: ألا أخبركم بإسلام أبي ذر؟، قال : قلنا : بلى، قال : قال أبو ذر : كنت رجلا من غفار ، فبلغنا أن رجلا قد خرج بمكة يزعم أنه نبي ، فقلت لأخي : انطلق إلى هذا الرجل كلمه وأتني بخبره ، فانطلق فلقيه ثم رجع ، فقلت : ما عندك ؟ فقال : والله لقد رأيت رجلا يأمر بالخير وينهى عن الشر ، فقلت له : لم تشفني من الخبر ، فأخذت جرابا وعصا ، ثم أقبلت إلى مكة ، فجعلت لا أعرفه ، وأكره أن أسأل عنه ، واشرب من ماء زمزم وأكون في المسجد ، قال : فمر بي علي ـ رضي الله عنه ـ فقال : كأن الرجل غريب ؟!، قال : قلت : نعم ، قال : فانطلق إلى المنزل ، قال : فانطلقت معه ، لا يسألني عن شيء ولا أخبره ، فلما أصبحت غدوت إلى المسجد لأسأل عنه ، وليس أحد يخبرني عنه بشيء ، قال : فمر بي علي ، فقال : أما نال للرجل يعرف منزله بعد ؟ قال : قلت : لا ، قال : انطلق معي ، قال : فقال : ما أمرك ، وما أقدمك هذه البلدة ؟ قال : قلت له : إن كتمت علي أخبرتك ، قال : فإني أفعل ، قال : قلت له : بلغنا أنه قد خرج ها هنا رجل يزعم أنه نبي ، فأرسلت أخي ليكلمه ، فرجع ولم يشفني من الخبر ، فأردت أن ألقاه ، فقال له : أما إنك قد رشدت ، هذا وجهي إليه فاتبعني ، ادخل حيث ادخل ، فإني إن رأيت أحدا أخافه عليك ، قمت إلى الحائط كأني أصلح نعلي وامض أنت ، فمضى ومضيت معه حتى دخل ودخلت معه على النبي ـ صلى الله عليه وسلم ـ ، فقلت له : اعرض علي الإسلام ، فعرضه فأسلمت مكاني ، فقال لي : يا أبا ذر ، اكتم هذا الأمر ، وارجع إلى بلدك ، فإذا بلغك ظهورنا فأقبل ، فقلت : والذي بعثك بالحق ، لأصرخن بها بين أظهرهم ، فجاء إلى المسجد وقريش فيه ، فقال : يا معشر قريش ، إني أشهد أن لا إله إلا الله ، وأشهد أن محمدا عبده ورسوله ، فقالوا : قوموا إلى هذا الصابئ ، فقاموا فضربت لأموت ، فأدركني العباس فأكب علي ثم أقبل عليهم ، فقال : ويلكم ، تقتلون رجلا من غفار ، ومتجركم وممركم على غفار ، فأقلعوا عني ، فلما أن أصبحت الغد رجعت ، فقلت مثل ما قلت بالأمس ، فقالوا : قوموا إلى هذا الصابئ ، فصنع بي مثل ما صنع بالأمس ، وأدركني العباس فأكب علي ، وقال مثل مقالته بالأمس . قال : فكان هذا أول إسلام أبي ذر ) .

 

அபூ ஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்க, நாங்கள் சரி (அறிவியுங்கள்)என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அப+தர் (ரலி) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே நான் என் சகோதரர்(அனீஸ்)இடம், “நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வாஎன்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், “உன்னிடம் என்ன செய்தி உண்டு?” என்று கேட்டேன். நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்என்றார். நான் அவரிடம், “போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லைஎன்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்ப வில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம்ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார்கள். (என்னைக் கண்டதும்), “ஆள் (ஊருக்குப்) புதியவர் போலத் தெரிகிறதேஎன்று கேட்டார்கள். நான், “ஆம்என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை.

 

அப்போது அலீ (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், “இல்லைஎன்றேன். உடனே அலீ (ரலி) அவர்கள், “என்னுடன் நடங்கள்என்று சொல்லிவிட்டு, “உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், “அவ்வாறே செய்கிறேன்என்று சொன்னார்கள். நான் அப்போது இங்கே தம்மை இறைத் தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்என்று சொன்னார்கள். இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப+தர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கி விட்ட செய்தி உனக்கு எட்டும் போது எங்களை நோக்கி வாஎன்று சொன்னார்கள். அதற்கு நான், “உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக் கிடையே உரக்கச் சொல்வேன்என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், “குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லைஎன்று நான் உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்என்றும் நான் உறுதி கூறுகின்றேன்என்று சொன்னேன்.

 

உடனே, அவர்கள் இந்த மதம் மாறி( துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்என்று சொன்னார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன்.

 

அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அடையாளம் புரிந்துகொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?) என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னை விட்டு விலகிவிட்டார்கள். மறு நாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள், “இந்த மதம் மாறி( துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்என்று சொன்னார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போலவே நடந்து கொண் டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடி படாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போலவே (அன்றும்) சொன்னார்கள் -இதை அறிவித்த பிறகு- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இது அப+தர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அப+தருக்கு கருணை காட்டுவானாக!என்று சொன்னார்கள். (நூல் : புகாரி – 3522.)

 

من اللحظة الأولى لإسلام أبي ذر ـ رضي الله عنه ـ حمل هم الدعوة إلى الله، فدعا أخاه وأهله وقبيلته للدخول في الإسلام فأسلموا جميعا ، ففي رواية لمسلم أن النبي ـ صلى الله عليه وسلم ـ قال لأبي ذر: ( إنه قد وجهت لي أرض ذات نخل، لا أراها إلا يثرب، فهل أنت مبلغ عني قومك، عسى الله أن ينفعهم بك ويأجرك فيهم، فأتيت أنيسا فقال: ما صنعت؟، قلت: صنعت أني قد أسلمت وصدقت، قال: ما بي رغبة عن دينك . فاحتملنا حتى أتينا قومنا غفارا، فأسلم نصفهم، وكان يؤمهم إيماء بن رحضة الغفاري - وكان سيدهم، وقال نصفهم: إذا قدم رسول الله ـ صلى الله عليه وسلم ـ المدينة أسلمنا. فقدم رسول الله ـ صلى الله عليه وسلم ـ وأسلم نصفهم الباقي، وجاءت أسلم فقالوا: يا رسول الله، إخوتنا، نسلم على الذي أسلموا عليه، فأسلموا، فقال رسول الله ـ صلى الله عليه وسلم: غفار غفر الله لها، وأسلم سالمها الله ) .

 

அபூதர் ரலி அவர்கள் தாம் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் தனது குடும்பத்தாருக்கும் ஊராருக்கும் இஸ்லாத்தைப் பற்றிக் கூறி அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.என்பதை பின் வரும் நபி மொழி கூறுகின்றது.

 

நான் (என் சகோதரர்) உனைஸிடம் திரும்பிச் சென்றேன். அப்போது உனைஸ் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார். நான் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்பினேன்என்று கூறினேன். உனைஸ், “(நீங்கள் ஏற்றுள்ள) உமது மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்புகிறேன்என்று கூறினார்.பிறகு நாங்கள் எங்கள் தாயாரிடம் சென்றோம். (நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிய விவரத்தைக் கூறினோம்.) அப்போது என் தாயார், “(நீங்கள் இருவரும் ஏற்றுள்ள) உங்கள் மார்க்கத்தைப் புறக் கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தைத் தழுவி, (அதை) உண்மையென நம்புகிறேன்என்று கூறினார்.பிறகு நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி எங்கள் கிஃபார்குலத்தாரைச் சென்றடைந்தோம். அவர்களில் பாதிப்பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அய்மா பின் ரஹளா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் முன்னின்று தொழுகை நடத்தினார்@ அவரே அம்மக்களுக்குத் தலைவராக இருந்தார்.ஃகிஃபார் குலத்தாரில் இன்னும் பாதிப்பேர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது நாங்கள் இஸ்லாத்தை ஏற்போம்என்று கூறினர். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, எஞ்சியிருந்த பாதிப்பேரும் இஸ்லாத்தை ஏற்றனர்.அஸ்லம்குலத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரக் குலத்தார் எந்த அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண் டார்களோ அதே அடிப்படையில் நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்என்று கூறினர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பெயருக்கேற்பவே) ஃகிஃபார்குலத்தாரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் அஸ்லம்குலத்தாரைப் பாதுகாப்புப் பெற்ற வர்களாக ஆக்கிவிட்டான்என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் – 4878.)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது பழைய வாழ்க்கையை திரும்பிப்பார்த்து இந்த புத்தாண்டில் புதியதோர் வாழ்க்கையை அமைத்திட அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment