இறையச்சம் உடைய இதயம் பெற்றவர்களாய் திகழ்வோம்!!!
இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான சங்கை நிறைந்த ரஜப் மாதத்தின் முதல் ஜும்ஆவில்
நாம் வீற்றிருக்கின்றோம்.
ரஜப் மாதம்
பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுமந்து நிற்கும் ஒரு மாதம் ஆகும்.
இந்த உம்மத்திற்கு
தொழுகையும்,
ஜகாத்தும் கடமையாக்கப்பட்ட மாதம் ஆகும்.
இந்த மாதத்தில்
தான் கஅபாவை கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று இந்த உம்மத்திற்கு அல்லாஹ்
கட்டளை பிறப்பித்தான்.
பெருமானார் {ஸல்}
அவர்கள் இறைவனை தரிசித்து, உரையாடி மகிழ்ந்த மிஃராஜ் பயணம் நிகழ்ந்த மாதமாகும்.
ரஜப் மாதம் என்பது
ஹிஜ்ரி (எனும் இஸ்லாமிய) ஆண்டின் ஏழாவது மாதமாகும். இந்த மாதம், அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ் திருக்குர்ஆனின் 9ஆவது அத்தியாயமாகிய ‘தவ்பா’வின் 36ஆவது வசனத்தில் கூறுகின்றான்:
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي
كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ
حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ
“திண்ணமாக அல்லாஹ்வின்
அங்கீகாரம் பெற்ற மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்குப்) பன்னிரண்டுதாம். (இவ்வாறே)
வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்வின் (பதிவுப்) புத்தகத்தில்
(பதிவு செய்யப்பட்டு) உள்ளது. அவற்றுள் நான்கு(மாதங்கள்) புனிதமானவையாகும். இதுவே
நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக்
கொள்ளாதீர்கள்”.(
அல்குர்ஆன்: 9: 36 )
عَنِ
ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ
صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ
يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا
مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو
الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان
(البخاري, ومسلم).
காலம் அதன்
சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே
மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும்.
மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா, துல்ஹஜ்,
முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி), ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்' என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
அல்லாஹ்
புனிதமாக்கிய நான்கு மாதங்களில் ரஜப் மாதமும் ஒன்றாகும்.
புனிதங்களை
கண்ணியப்படுத்துவது இஸ்லாமிய மரபுகளில் மிகவும் இன்றியமையாததாகும்.
அதே போன்று இந்த
புனித மாதங்களில் பாவங்களும் தீமைகளும் ஏற்படா வண்ணம் தவிர்த்துக் கொள்ளுமாறும்
கட்டளையிட்டுள்ளான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا
الشَّهْرَ الْحَرَامَ
“நம்பிக்கையாளர்களே!
அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களையும் சிறப்பான மாதங்களையும் … (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள் …” ( அல்குர்ஆன்: 5:
2 )
அதாவது, பாவமான காரியங்களைத் தவிர்ப்பதையும், அல்லாஹ்
சிறப்பித்தவற்றுக்கு மாசு கற்பிப்பதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் புனித
மாதங்களைக் கண்ணியப்படுத்திடுமாறு அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளான். இந்தத் தடையும்
கட்டளையும் பாவமான காரியங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்
காட்டுகிறது.
குறிப்பாக, மிகவும் தெளிவாகவே அல்லாஹ் "உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக்
கொள்ளாதீர்கள்" என்று வலியுறுத்தி கூறுகின்றான்.
எப்படி நாம் ரஜப்
மாதத்தில் அல்லாஹ்விடம் பரக்கத்தை வேண்டுகிறோமோ, அதைப் போன்று பரக்கத்தை தடுக்கிற பாவமான காரியங்களை செய்வதில் இருந்தும் நாம்
தவிர்ந்து வாழ வேண்டும்.
فلا
تظلموا فيهن أنفسكم)(لتوبة:36)، أي بفعل السيئات، وارتكاب الموبقات، والوقوع في
الفواحش والمنكرات، فإنها آكد وأبلغ في الإثم من غيرها.
மேற்கூறிய
வசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள்
”தீமைகளைச் செய்வதும்,
அழிவில் ஆழ்த்தக் கூடிய பாவமான காரியங்களை செய்வதும், அல்லாஹ் தடுத்திருக்கும் பாவமான காரியங்களில் வீழ்வதும் பாவங்களில் மிகப்
பெரிய பாவங்களாகும்" என்று விளக்கம் தருகிறார்கள்.
மேற்கூறிய
வசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்களில்
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கமும், கதாதா (ரஹ்) அவர்கள் தரும் விளக்கமும் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
قال ابن
عباس: "اختص الله أربعة أشهر جعلهن حراما، وعظم حرماتهن وجعل الذنب فيهن أعظم
وجعل العمل الصالح والأجر أعظم".
இப்னு அப்பாஸ் ரலி
அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நான்கு மாதங்களை புனிதமாக்கி, அவைகளை கண்ணியப்படுத்த கூறுகிறான். அந்த நான்கு
மாதங்களில் செய்யும் நல் அமல்களுக்கு மகத்தான கூலி வழங்கப்படுவதைப் போன்றே, அந்த நான்கு மாதங்களில் செய்யும் பாவங்களுக்கு மகத்தான தண்டனையும் உண்டு.
وقال
قتادة: "إن الظلم في الأشهر الحرم أعظم خطيئة ووزرا منه في سواها".
இந்த நான்கு
மாதங்களில் செய்யும் அநியாயங்கள் (பாவமான காரியங்கள்) மற்றெல்லா (காலங்களில்
செய்யும்) பாவங்களை விட மிகப் பெரியதும், தண்டனையால் மிகக்
கடுமையானதும் ஆகும்" என்று கதாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த வசனத்தில் பயன்படுத்தியுள்ள "ளுல்ம் - الظلم" என்ற வார்த்தைக்கு பல்வேறு விளக்கங்கள் உள்ளன.
அநியாயம் என்ற
பொருளுக்கான விளக்கத்தை நபி ﷺ
அவர்கள் மூன்று வகையாக வகைப்படுத்தினார்கள் என்பதை முஸ்னத் பஸ்ஸாரில், ஸஹீஹுல் ஜாமிஇல்,
அபூதாவூதில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் நமக்கு
தெளிவு படுத்துகிறது.
1,மனிதன் இறைவனுக்குச் செய்கின்ற அநியாயம்.
2, மனிதன் பிற மனிதர்களுக்கு செய்கின்ற அநியாயம்.
3, மனிதன் தனக்குத் தானே செய்து கொள்கின்ற அநியாயம்.
عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ الله عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله
عَلَيْهِ وَسَلَّمَ: “الظُّلْمُ ثَلاثَةٌ، فَظُلْمٌ لا يَغْفِرُهُ الله، وَظُلْمٌ
يَغْفِرُهُ، وَظُلْمٌ لا يَتْرُكُهُ، فَأَما الظُّلْمُ الَّذِي لا يَغْفِرُهُ الله
فَالشِّرْكُ، قَالَ الله: {إنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ} وَأَمَّا الظُّلْمُ
الَّذِي يَغْفِرُهُ فَظُلْمُ العِباَدِ أَنْفُسَهُمْ فِيمَا بَيْنَهُمْ وَبَيْنَ
رَبِّهِمْ، وَأَمَّا الظُّلْمُ الَّذِي لا يَتْرُكُهُ الله فَظُلْمُ الْعِبَادِ
بَعْضِهِمْ بَعْضًا حَتَّى يُدَبِّرُ لِبَعْضِهِمْ مِنْ بَعْضٍ”.
அனஸ் ரலி அவர்கள்
அறிவித்தார்கள்:- அநியாயம் என்பது மூன்று வகைப்படும். ஒரு வகை அநியாயம் அதை
அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இரண்டாம் வகை அநியாயம் அதை அல்லாஹ் மன்னிப்பான்.
மூன்றாம் வகை அநியாயம் அதை அல்லாஹ் ஒரு போதும் விட்டு விட மாட்டான்.
அல்லாஹ் மன்னிக்காத அநியாயம் இறைவனுக்கு இணை
கற்பிக்கும் காரியங்களைச் செய்வது, இறைவனுக்கு இணை வைக்கும்
செயல்களில் ஈடுபடுவது இதை ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்" என்று கூறி
விட்டு "இணை வைத்தல் என்பது மிகப் பெரிய அநியாயம் ஆகும் என்ற லுக்மான் அத்தியாயத்தின்
வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள் நபி ﷺ அவர்கள். அல்லாஹ் மன்னிக்கும் அநியாயம் என்பது ஒரு
அடியான் தனக்கும்,
தன் இறைவனுக்கும் செய்யும் (இதர) பாவமான காரியங்கள் ஆகும்.
அல்லாஹ் விட்டு விடாத அநியாயம் என்பது ஒரு அடியான் சக அடியானுக்கு இழைக்கும்
அநியாயம் ஆகும்" என்றார்கள். ( நூல்: பஸ்ஸார், ஸஹீஹுல் ஜாமிஉ )
1)
இணை வைத்தல்:-
லுக்மான் (அலை)
அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகளை அல்குர்ஆனில் அல்லாஹ் லுக்மான் எனும்
பெயரில் ஒரு சூராவையே இறக்கியருளி அதை குறிப்பிடுகிறான். அவைகளில் முதலாவதாக
அவர்கள் தம் மகனுக்கு முன்வைத்த அறிவுரை என்ன என்பதை அல்லாஹ் நமக்கு
நினைவூட்டுகிறான்.
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَابُنَيَّ لَا
تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
லுக்மான், தனது மகனுக்கு நற்போதனை செய்யும்போது, “என் அருமை மகனே!
நீ அல்லாஹ்வுக்கு (எதையும்) இணைவைக்காதே! இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! ( அல்குர்ஆன்: 31: 13 )
رَوَى
الْبُخَارِيُّ وَمُسْلِمٌ فِي صَحِيحَيْهِمَا عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ
اَللَّهُ عَنْهُ قَالَ: كُنْتُ رَدِيفَ اَلنَّبِيِّ صَلَّى اَللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَلَى حِمَارٍ فَقَالَ لِي : ((يَا مُعَاذُ؟ أَتَدْرِي مَا حَقُّ
اَللَّهِ عَلَى الْعِبَادِ، وَمَا حَقُّ الْعِبَادِ عَلَى اَللَّهِ؟ )) قُلْتُ
اَللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ : ((حَقُّ اَللَّهِ عَلَى الْعِبَادِ أَنْ
يَعْبُدُوهُ، وَلا يُشْرِكُوا بِهِ شَيْئًا، وَحَقُّ الْعِبَادِ عَلَى اَللَّهِ
أَنْ لا يُعَذِّبَ مَنْ لا يُشْرِكُ بِهِ شَيْئًا
))
நபி (ஸல்) அவர்கள்
(என்னிடம்),
“முஆதே! அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று
உங்களுக்குத் தெரியுமா?”
என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனுடைய
தூதருமே நன்கறிந்தவர்கள்”
என்று நான் கூறினேன். “அப்போது நபி ﷺ அவர்கள் அவனையே வணங்குவதும், எதையும் அவனுக்கு இணைவைக்காமலிருப்பதுமாகும்’’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
عن أبي
هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «قَالَ اللهُ
تَبَارَكَ وَتَعَالَى: أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ، مَنْ عَمِلَ
عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم - 2985]
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் கூறுகிறான்: நான் இணையாளர்களை விட்டும், இணைகற்பித்தலை விட்டும் அறவே தேவைகளற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும்
இணையாக்கி (எனக்காகவும்,
பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால் அவனையும், அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டு விடுவேன். ( நூல்கள்: முஸ்லிம்,
இப்னுமாஜா )
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ
ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا
عَظِيمًا
தனக்கு இணை
வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர வேறு எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் மிகப் பெரிய
பாவத்தை இட்டுக்கட்டி விட்டான். ( அல்குர்ஆன்: 4: 48 )
ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ
أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ
இது அல்லாஹ்வின்
நேர்வழியாகும். தனது அடியார்களில் அவன் நாடியோருக்கு இதன் மூலம் நேர்வழி
காட்டுகிறான். அவர்கள் இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த
(நற்)செயல்கள் அவர்களை விட்டு அழிந்திருக்கும். ( அல்குர்ஆன்: 6:
88 )
وأخرج
الطبراني في الأوسط وابن مردويه بسند صحيح ، عن جابر بن عبد الله رضي الله عنه قال
: قال رسول الله صلى الله عليه وسلم : « إن ناساً من أمي يعذبون بذنوبهم فيكونون
في النار ما شاء الله أن يكونوا ، ثم يعيرهم أهل الشرك فيقولون : ما نرى ما كنتم
فيه من تصديقكم نفعكم . فلا يبقى موحد إلا أخرجه الله تعالى من النار ، ثم قرأ
رسول الله صلى الله عليه وسلم { ربما يود الذين كفروا لو كانوا مسلمين } » .
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: என் சமுதாயத்தில் சிலர் அவர்களின் பாவங்களுக்காக வேதனை
செய்யப்படுவார்கள். அவர்கள் நரகத்தில் இருக்க வேண்டும் என்ற அல்லாஹ் நாடிய (கால)
அளவுக்கு அவர்கள் நரகத்தில் இருப்பார்கள். (இதனால் நரகத்தில் இருக்கும்)
இணைவைப்பாளர்கள் இறைநம்பிக்கையாளர்களைக் குறைகூறும் வகையில் “நீங்கள் (இறைத் தூதரை) உண்மைப்படுத்தியும், (அல்லாஹ்வின்மீது)
நம்பிக்கை கொண்டும் எங்களுக்கு மாற்றமாக (உலகில்) இருந்தீர்கள். அது உங்களுக்குப்
பயனளிப்பதை நாங்கள் காணவில்லையே?” என்று கூறுவார்கள்.
அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்குப் பெரும் துயரத்தைக் காட்டுவதற்கு நாடுவான். எனவே
எல்லா ஏகத்துவவாதிகளையும் அல்லாஹ் (நரகத்திலிருந்து) வெளியேற்றி(ச் சொர்க்கத்திற்கு
அனுப்பி) விடுவான். (இவ்வாறு கூறிய) பின்னர் “தாங்கள் முஸ்லிம்களாக
இருந்திருக்க வேண்டுமே என்று இறைமறுப்பாளர்கள் சில வேளைகளில் விரும்புவார்கள்” என்ற (15:2)
வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். ( நூல்:
நஸாயீ-குப்ரா )
عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: «يَقُولُ اللَّهُ تَعَالَى لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا
يَوْمَ القِيَامَةِ: لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ أَكُنْتَ
تَفْتَدِي بِهِ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيَقُولُ: أَرَدْتُ مِنْكَ أَهْوَنَ مِنْ
هَذَا، وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ: أَلّاَ تُشْرِكَ بِي شَيْئًا، فَأَبَيْتَ
إِلَّا أَنْ تُشْرِكَ بِي».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري - 6557]
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படுபவரிடம், “பூமியிலிருக்கும் பொருட்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றைப்
பிணைத் தொகையாகத் தந்து (இந்த வேதனையிலிருந்து விடுதலை பெற்று) விட முன்வருவாய்
அல்லவா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ஆம் என்று பதிலளிப்பார். அப்போது அல்லாஹ், “நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகந்தண்டில் (அணுவாக) இருந்த போது இதைவிட
இலேசான ஒன்றை –
எனக்கு எதையும் இணை வைக்கக்கூடாது என்பதை – உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு
இணை வைப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக் கொள்ளவில்லையே!” என்று கூறுவான்.
( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )
இறுதியாக ஒரு
இறைவசனம் நாம் மிகுந்த கவனத்தோடு அணுக வேண்டிய ஒன்றும் கூட.
பெரும்பாவங்கள்
செய்வதில் இருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள். அந்த நல்லடியார்களான நபிமார்களுக்கே இணை வைக்கும் விஷயத்தில் அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இடுகிற ஆணையைப் பாருங்கள்!!
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ
أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
“நீர் இணை வைத்தால் உமது
நற்செயல் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவீர்” என (நபியே!) உமக்கும்,
உமக்கு முன்னிருந்தோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ( அல்குர்ஆன்: 39:
65 )
அப்படியென்றால்
ஈமானில் சாமானியர்கள் ஆன நம்முடைய நிலையைச் சொல்ல வேண்டுமா? இணைவைப்பு என்ற பெரும் பாவத்தை யார் செய்தாலும் அதை அல்லாஹ் சாதாரணமாக
விட்டுவிடமாட்டான். அவர்களைக் கடுமையான முறையில் தண்டிப்பான். ஆகவே, இணைவைப்பு என்ற கொடூர அநியாயத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாப்போம்.
2)
அடியார்களுக்கு அநியாயம் இழைத்தல்:-
சக அடியார்களுக்கு
அநியாயம் இழைத்தல் என்பதற்கு மிக விரிவான பொருள் இருக்கிறது.
சொல்லால் அநியாயம்
இழைப்பது,
செயலால் அநியாயம் இழைப்பது, உரிமையை வழங்காமல் அநியாயம் இழைப்பது, கடமையை செய்யாமல்
அநியாயம் இழைப்பது என்று நீண்ட பட்டியல் இருக்கிறது.
அதே போன்று சக
அடியார்கள் என்று வரும் போது பெற்றோர், உறவுகள், மனைவி மக்கள்,
அண்டை வீட்டார், சக மனிதர்கள் என்று நீண்ட
பட்டியல் இருக்கிறது.
وعن
عَبدِ اللهِ بنِ عُمَرَ رَضِيَ اللهُ عنهما أنَّ رَسولَ اللهِ صلَّى اللهُ عليه
وسلَّم قال: ((المُسلمُ أخو المُسلمِ، لا يَظلِمُه، ولا يُسلِمُه، ومَن كان
في حاجةِ أخيه كان اللهُ في حاجَتِه، ومَن فرَّج عن مُسلمٍ كُربةً فرَّج اللهُ عنه
كُربةً مِن كُرُباتِ يومِ القيامةِ، ومَن سَتَرَ مُسلِمًا سَتَرَه اللهُ يومَ
القيامةِ)) .قَولُه: ((لا يظلِمُهـ)) هو خَبَرٌ
بمَعنى الأمرِ؛ فإنَّ ظُلمَ المُسلمِ للمُسلمِ حَرامٌ .
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின்
சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன்
சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில்
அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை
விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு
முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.( நூல்: புகாரி )
عن
أَبِي أُمَامَةَ إِياسِ بنِ ثَعْلَبَةَ الحَارِثِيِّ رضي الله عنه أَنَّ رَسُولَ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ
مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ
الْجَنَّةَ» فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ
اللهِ؟ قَالَ: «وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم - 137]
நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : ஒருவர் ஒரு முஸ்லிமுடைய உரிமையை
பொய் சத்தியம் செய்து வாதிட்டு பறித்து கொள்கின்றான். (பாதிக்கப்பட்டவர் அந்த
உரிமையாளரிடத்தில் அதற்குரிய சான்று போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால்) பொய்
சத்தியம் செய்து என்னுடையது தான் என்று ஒருவர் அதை தனக்கு உரியதாக ஆக்கிக்
கொள்கிறார்.
அப்படி எடுத்துக்
கொண்டால் கண்டிப்பாக அல்லாஹ் அவருக்கு நரகத்தை விதித்து விட்டான். அவர் மீது
சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்.
இதைக் கேட்டதும்
உடனே ஒரு நபித்தோழர்,
அல்லாஹ்வின் தூதரிடத்தில் பயந்து நடுங்கியவராக அல்லாஹ்வின்
தூதரே! ஒரு அற்பமான சிறிய பொருளாக இருந்தாலும் கூடவா?
(அல்லாஹ்வுடைய தூதரின்
ஆழமான அழுத்தமான பதிலை கவனியுங்கள்!)
அதற்கு, நபி ﷺ அவர்கள் ஆம்! பல் துலக்கக்கூடிய குச்சியாக இருந்தாலும் சரியே". என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ உமாமா (ரலி), ( நூல் : முஸ்லிம்)
قال ابن
المبارك رحمه الله: استعرت قلما بأرض الشام، فذهبت على أن أرده لصاحبه،فلما قدمت
(مرو) نظرت فإذا هو معي، فرجعت إلى الشام حتى رددته على صاحبه. السير (٤٢١/٣٧٨/٨
يقول:
ابن المبارك رحمه الله: "استعرت قلماً بأرض الشام..فذهب عليّ أن أرده إلى
صاحبه[أي نسي]..
فلما
قدمت مرْو [في تركمانستان] نظرتُ فإذا هو معي،فرجعت إلى أرض الشام حتى رددته على
صاحبه"سير أعلام النبلاء 8/395
முஹத்திஸ்களின்
அமீர் என்று போற்றப்பட்ட தபவுத்தாபியீன்களின் ஒருவராகிய அப்துல்லாஹ் இப்னு முபாரக்
(ரஹ்) அவர்கள் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள்.
ஷாம் தேசம் சென்று
அங்கிருக்கின்ற முஹத்திஸ்களிடத்தில் பாடம் படித்துவிட்டு (இன்றைய
துர்க்மெனிஸ்தான்) முஸ்வ் எனும் ஊருக்கு திரும்புகிறார்கள். தன்னுடைய பையை
பிரிக்கும் போது அதில் எழுதக்கூடிய (சிறிய குச்சி) எழுதுகோல் ஒன்று இருக்கிறது.
அப்போதுதான்
ஞாபகம் வருகிறது. வகுப்பில் உட்கார்ந்து இருக்கும்போது தன்னுடைய எழுதுகோல்
(குச்சி) உடைந்து விட்ட காரணத்தால் தனக்கு அருகில் இருந்த ஒருவரிடம் இருந்து
எழுதுகோலை இரவலாக வாங்கினார்கள். அதை அவர்கள் திரும்பி கொடுக்கவில்லை.
மறந்துவிட்டார்கள். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து விடுகிறார்கள்.
இமாமவர்களும் ஊருக்கு வந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில்
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அந்த எழுதுகோலை (க்குச்சியை) எடுத்துக்
கொண்டு முஸுவிலிருந்து ஷாம் தேசம் சென்றார்கள். அந்த மஸ்ஜிதை தேடிச் சென்று அந்த
எழுதுகோலை (க்குச்சியை) யாரிடம் இருந்து பெற்றார்களோ அவர்களை தேடிக் கண்டுபிடித்து
அவர்களிடம் மன்னிப்பு கேட்டு எழுதுகோலை (குச்சியை) கொடுத்து விட்டு மீண்டும் ஈராக்
திரும்பினார்கள். ( நூல்: ஹயாத்துல் ஹயவான், ஸியரு அஃலாமின் நுபலா, அஸ் ஸியர் )
குறிப்பு:- துர்க்மெனிஸ்தானில் இருந்து (சிரியா)
ஷாமுக்கு வான்வழி பயணம் செய்தால் 9 முதல் 10 மணி நேரம் பயணம். வான்வழி தொலை தூரம் (The air distance is around 1,886 km (1,172
miles)
عن أبي
مسعود البدري – رضي الله عنه – قال: «كنت أضرب غلاماً لي بالسوط، فسمعت صوتاً من
خلفي: اعلم أبا مسعود! فلم أفهم الصوت من الغضب. قال: فلما دنا مني إذا هو رسول
الله –صلى الله عليه وسلم-، فإذا هو يقول: اعلم أبا مسعود، اعلم أبا مسعود! قال:
فألقيت السوط من يدي. فقال: اعلم أبا مسعود! أن الله أقدر عليك منك على هذا
الغلام. قال فقلت: لا أضرب مملوكًا بعده أبدًا»
அபூ மஸ்வூத் ரலி
அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் என்னுடைய பணியாளரை அடிப்பவனாக இருந்தேன். ஒருநாள்
அப்படி நான் அடித்துக் கொண்டிருந்த போது "அபூ மஸ்வூதே! விளங்கிக் கொள்!' என்று யாரோ சொல்வது போல் என் செவியில் கேட்டது. எனினும் நான் கோபத்தில்
இருந்ததால் யார் சொன்னார்கள் என்பதை நான் அறியவில்லை. சற்று நேரத்தில் ஒரு உருவம்
என்னை நோக்கி வந்ததை கண்டு பார்த்த போது அந்த உருவம் நபி ஸல் அவர்கள் தான் என்பதை
அறிந்து கொண்டேன். அப்போது நபி ஸல் அவர்கள் " அறிந்து கொள்! அபூ மஸ்வூதே!
உம்மையும் இது போல் தண்டிப்பதற்கு அல்லாஹ் சக்தி வாய்ந்தவனாக இருக்கின்றான் என்பதை
அறிந்து கொள்! என்றார்கள். அப்போது நான்"அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! இனி
ஒரு போதும் என் பணியாளரை நான் அடிக்க மாட்டேன் என்று உறுதி கூறினேன். என்றார்கள்.
( நூல்: முஸ்லிம் )
وقال
الإمام أحمد أيضًا: حدثنا أبو نوح قراد أنبأنا ليث بن سعد، عن مالك بن أنس، عن
الزهري، عن عروة، عن عائشة؛ أن رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم، جلس
بين يديه، فقال: يا رسول الله، إن لي مملوكين، يكذبونني، ويخونونني، ويعصونني،
وأضربهم وأشتمهم، فكيف أنا منهم؟ فقال له رسول الله صلى الله عليه وسلم:
"يحسب ما خانوك وعصوك وكذبوك وعقابك إياهم، إن كان عقابك إياهم دون ذنوبهم،
كان فضلا لك [عليهم] وإن كان عقابك إياهم بقدر ذنوبهم، كان كفافا لا لك ولا عليك،
وإن كان عقابك إياهم فوق ذنوبهم، اقتص لهم منك الفضل الذي يبقى قبلك". فجعل
الرجل يبكي بين يدي رسول الله صلى الله عليه وسلم: ويهتف، فقال رسول الله صلى الله
عليه وسلم: "ما له أما يقرأ كتاب الله؟: { وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ
لِيَوْمِ الْقِيَامَةِ فَلا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ
حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ } فقال الرجل: يا
رسول الله، ما أجد شيئًا خيرًا من فراق هؤلاء -يعني عبيده-إني أشهدك أنهم أحرار
كلهم.
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் அருமைத் தோழர்களோடு மஸ்ஜிதுன் நபவீயில்
வீற்றிருக்கின்ற தருணம் அது.
மாநபியின் அருமைத்
தோழர்களில் ஒருவர் அண்ணலாரின் சபைக்குள் முகமன் கூறி உள்ளே நுழைகிறார்.
அவரின் முகத்தில்
ஏதோ வாட்டம் தெரிந்தது. அவரின் பதற்றமான குரலே அவர் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி
இருக்கிறார் என்பதை உணர்த்தியது.
அண்ணலாரின் மிகச்
சமீபமாக வந்த அந்த நபித்தோழர், மாநபி {ஸல்}
அவர்களின் அருகாமையில் அமர்ந்தார்.
அல்லாஹ்வின்
தூதரே! நான் சில தொழில்கள்,
வியாபாரங்கள் செய்து வருகின்றேன். என்னிடம் சில பணியாளர்கள்
இருக்கின்றார்கள். அவர்களை நான் நம்பி பணியில் அமர்த்தி இருக்கின்றேன்.
ஆனால், தவறு செய்கின்றார்கள் ஏன் செய்தீர்கள் என்று கேள்வி கேட்டால் கொஞ்சம் கூட
பயமில்லாமல் பொய் பேசுகின்றார்கள்.
என் பொருளை, என பணத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து எனக்கு நம்பிக்கைத் துரோகம்
இழக்கின்றார்கள்.
நான் ஏதாவது
செய்யுமாறு ஆணையிட்டால்,
நான் சொன்னதற்கு நேர் மாறான ஒன்றை செய்கின்றார்கள்.
அவர்களின் இந்த
செயல்களால் சில போது நான் அவர்களை கடுமையான முறையில் பேசியும், திட்டியும் விடுகின்றேன். கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் அடித்தும்
விடுகின்றேன்.
அல்லாஹ்வின்
தூதரே! நான் அவர்களோடு நடந்து கொள்ளும் முறை சரிதானா? நான் சராசரி மனிதனாக நடந்து கொள்கிறேனா? அல்லது ஒரு முஸ்லிமாக
நான் நடந்து கொள்கிறேனா?
என பதறியவாறே தமது இந்த நடத்தை தங்களுடைய நல்ல குணத்தை
பாதிக்கும் செயல்களாக மாறி விடுமோ எனும் அச்சத்தை நபி (ஸல்) அவர்களிடம்
வெளிப்படுத்தினர்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் பின் வருமாறு பதில் கூறினார்கள்:
“தோழரே! நாளை மறுமை நாளில் விசாரணை மன்றத்தில் அல்லாஹ் உங்களுக்கும்
அடிமைகளுக்கும் நடந்த நிகழ்வுகள் குறித்து உங்களையும், அவர்களையும் அழைத்து விசாரிப்பான்.
பணியாளர்கள்
உங்களுக்கு எதிராக மோசடி செய்ததும், பொய் சொன்னதும், மாறு செய்ததும் மீஜான் தராசின் தட்டில் வைக்கப்படும். நீங்கள் அவர்களிடம்
நடந்து கொண்டதும்,
ஏசியதும், பேசியதும் அவர்களை
அடித்ததும் தராசின் இன்னொரு தட்டில் வைக்கப்படும்.இரண்டும் சமமாக இருந்தால்
இருவருக்கும் பிரச்சனை இல்லை.
உங்களிடம் இருந்து
நிகழ்ந்த செயல்பாடுகள் அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால்
அவர்களிடமிருந்து அவர்களின் நன்மைகளை எடுத்து உங்களுக்கு தரப்படும்.
நீங்கள் நடந்து
கொண்ட விதம் அதிகம் என்றால் உங்களிடமிருந்து நன்மைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு
கொடுக்கப்படும்! என்று”
அதனை கேட்ட மாத்திரத்தில் அந்த நபித்தோழர் அழுதார்.
அதிர்ச்சியில் அலறினார்,
கூக்குரலிட்டு அழுதார்.
அந்த நபித்தோழரை
மீண்டும் அழைத்த மாநபி (ஸல்) அவர்கள் “நாம் மறுமை நாளில்,துல்லியமாக் எடை போடும் தராசுகளை நிறுத்துவோம். பிறகு எவருக்கும் அணுவளவு கூட
அநீதி இழைக்கப்பட மாட்டாது. அவருடைய ஒரு கடுகு மணியளவு செயலாயினும் அதனை நாம்
(அங்கு) அவர் முன் கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நாமே போதுமானவனாக
இருக்கின்றோம்”
( அல்குர்ஆன்: 21: 47 ) எனும் இறை வசனத்தை ஓதிக்காண்பித்து நீர் அல்லாஹ்வின் வேதத்தில் ஓதியதில்லையா? எனக் கேட்டார்கள்.
இத்தனையையும்
மிகவும் அதிர்ச்சி விலகாமல் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபித்தோழர், ”அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! பிரச்சனைக்குரிய பணியாளர்களை
விடுதலை செய்வதே தனக்கும்,
அவர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கூறியவாறே அல்லாஹ்வின்
தூதரே! அவர்கள் அனைவரையும் இக்கணமே விடுதலை செய்கிறேன்! அதற்கு நீங்களே
சாட்சியாயிருங்கள்! என கூறியவாறே சபையில் இருந்து விடை பெற்றுச் சென்றார். ( நூல்:
தஃப்ஸீர் அல் குர்துபீ,
முஸ்னத் அஹ்மத் )
3)
தனக்குத் தானே அநியாயம் செய்தல்:-
மனிதன் தனக்குத்
தானே அநியாயம் செய்து கொள்வது என்பது இறைக் கட்டளையை மீறுவது, இறைவனுக்கு மாறு செய்வது. பாவமான காரியங்களில் ஈடுபடுவது. ஒருவன்
இறைக்கட்டளையை மீறுகின்ற போது இறைவனுக்கு மாறு செய்கின்ற போது பாவமான காரியங்களில்
தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற போது இறைவனின் கோபத்திற்கும் அதிருப்திக்கும்
ஆளாகிறான்,
அதனால் இறைவனிடம் தண்டனையையும் பெறுகிறான். அந்த
அடிப்படையில் தான் தனக்கு தானே அநீதம் செய்து கொண்டான் என்று சொல்லப்படுகிறது.
ثُمَّ
اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِیْنَ اصْطَفَیْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ
ظَالِمٌ لِّنَفْسِهٖ وَمِنْهُمْ مُّقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَیْرٰتِ
بِاِذْنِ اللّٰهِ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ
பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக
ஆக்கினோம். எனினும்,
அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி
நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்.
( அல்குர்ஆன்: 32:
35 )
وَالَّذِينَ
إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا
لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى
مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத்
தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள்
பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.)
அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில்
நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) (
அல்குர்ஆன்: 3
: 135 )
وَمَن
يَعْمَلْ سُوءاً أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ
اللَّهَ غَفُوراً رَّحِيماً
எவர் தீமை
செய்கிறாரோ அல்லது தனக்குத் தானே அநீதி இழைத்துக் கொள்கிறாரோ, பின்னர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருகிறாரோ, அவர் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாகவும், கருணை மிக்கவனாகவும்
காண்பார். ( அல்குர்ஆன்: 4:
110 )
أَن
تَقُولَ نَفْسٌ يحَسْرَتَى عَلَى مَا فَرَّطَتُ فِى جَنبِ اللَّهِ وَإِن كُنتُ
لَمِنَ السَّـخِرِينَ - أَوْ تَقُولَ لَوْ أَنَّ اللَّهَ هَدَانِى لَكُـنتُ مِنَ
الْمُتَّقِينَ - أَوْ تَقُولَ حِينَ تَرَى الْعَذَابَ لَوْ أَنَّ لِى كَـرَّةً
فَأَكُونَ مِنَ الْمُحْسِنِينَ
(ஒரு மனிதன் கூறக்கூடும்:
"ஐயோ,
நான் அல்லாஹ்விற்கு மாறுசெய்தேனே என்ற என் துக்கமே! மேலும்
நான் கேலி செய்தவர்களில் ஒருவனாக இருந்தேன்." அல்லது அவன் கூறக்கூடும்:
"அல்லாஹ் என்னை நேர்வழிப்படுத்தியிருந்தால், நிச்சயமாக நான் தக்வா உடையவர்களில் ஒருவனாக இருந்திருப்பேன்." அல்லது
அவன் வேதனையைக் காணும்போது கூறக்கூடும்: "எனக்கு இன்னொரு வாய்ப்பு
கிடைத்திருந்தால்,
நிச்சயமாக நான் நல்லவர்களில் ஒருவனாக
இருந்திருப்பேன்.")
( அல்குர்ஆன்: 39: 56-58 )
இமாம் அஹ்மத்
அவர்கள் பதிவு செய்தார்கள்,
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
«كُلُّ أَهْلِ النَّارِ يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ فَيَقُولُ: لَوْ أَنَّ اللهَ هَدَانِي فَتَكُونُ عَلَيْهِ حَسْرَةً، قال: وَكُلُّ أَهْلِ الْجَنَّةِ يَرَى مَقْعَدَهُ مِنَ النَّارِ فَيَقُولُ: لَوْلَا أَنَّ اللهَ هَدَانِي، قال: فَيَكُونُ لَهُ شُكْرًا»
(நரக வாசிகள் ஒவ்வொருவரும்
சுவர்க்கத்தில் தனது இடத்தைக் காண்பார். அப்போது அவன்,
"அல்லாஹ் என்னை நேர்வழிப்படுத்தியிருந்தால்!" என்று
கூறுவான். எனவே அது அவனுக்கு வருத்தத்திற்குரியதாக இருக்கும். மேலும்
சுவர்க்கவாசிகள் ஒவ்வொருவரும் நரகத்தில் தனது இடத்தைக் காண்பார். அப்போது அவன், "அல்லாஹ் என்னை நேர்வழிப்படுத்தியிருக்காவிட்டால்!" என்று கூறுவான். எனவே
அது அவனுக்கு நன்றிக்குரியதாக இருக்கும்.)
عَنْ
أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَهُ
رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَرَّتْكَ
حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» فَقَالَ: يَا رَسُولَ
اللَّهِ مَا الْإِثْمُ؟ قَالَ: «إِذَا حَاكَ فِي صَدْرِكَ شَيْءٌ فَدَعْهُ».
[صحيح] - [رواه أحمد والحاكم]
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) ஒரு நபித்தோழர் கேட்டார்கள்;
அல்லாஹ்வின் தூதரே! ஈமான் இருக்கிறது என்பதற்கு என்ன
அடையாளம்?
அதற்கு நபி ஸல்
அவர்கள் "நீ நன்மை செய்யும் போது அது உனக்கு மனதில் மகிழ்ச்சியை கொடுத்தால்,நீ ஏதாவது ஒரு பாவம் செய்தால் அது உனக்கு வருத்தத்தை கொடுத்தால் நீ முஃமின்
என்பதை தெரிந்து கொள். அறிவிப்பாளர் : அபூ உமாமா (ரலி) அன்ஹு,( நூல் : முஸ்னத் அஹ்மத் )
ஒரு முஸ்லிம்
தனக்கு தானே அநியாயம் செய்தார் என்றால் அவர் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து
பாவமன்னிப்பு பெறுவதே அவருக்கான பரிகாரம் ஆகும்.
அல்லாஹ் தான்
மன்னிப்பாளன் என்பதை அல்குர்ஆனில் மூன்று விதமாக அடையாளப்படுத்துகின்றான். 1. ஃகஃபூர் 2.
ஃகாஃபிர், 3. ஃகஃப்ஃபார்.
அல்குர்ஆனில்
ஏறத்தாழ 5
இடங்களில் ஃகஃப்ஃபார் - - என்றும், ஒரு இடத்தில் ஃகாஃபிர் - - என்றும், 90 மேற்பட்ட
இடங்களில் ஃகஃபூர் என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்
அடியார்கள் செய்கிற பாவத்தை மன்னிப்பதோடு, ஈருலகத்திலும் மறைத்து
அவர்கள் மீது அருள் புரிகின்றான்.
عن أنس
بن مالك رضى الله عنه قال: سمعت رسول الله يقول: قال الله تعالى
(يا ابن آدَمَ إِنَّكَ مَا دَعَوتَنِى وَرَجَوتَنِى غَفَرتُ
لَكَ عَلى مَا كَانَ مِنكَ وَلاَ أُبَالِى
يَا ابنَ آدَمَ لَو بَلَغَت ذُنُوبُكَ عَنَانَ السَّماءِ ثُمَّ
استَغفَرتَنِى غَفَرتُ لَكَ
يَا ابنَ آدَمَ إِنَّكَ لَو أَتَيتَنِى بِقُرَابِ الأَرضِ
خَطَايَا ثُمَّ لَقِيتَنِى لا تُشرِكُ بِى شَيئاً لأَتَيتُكَ بقُرَابِها
مَغفِرَةً). رواه الترمذى وقال: حديث حسن صحيح
அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ் சொன்னதாக மாநபி {ஸல்}
அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: “ஆதமுடைய மகனே! நீ என் மன்னிப்பை ஆதரவு வைத்து, என்னை அழைத்துப் பிரார்த்திக்கின்றாய்! நான் உன் ஆதரவை ஏற்று உன் பாவங்களை
மன்னித்து விடுகின்றேன்!
ஆதமின் மகனே! நீ
வானத்தின் முகட்டை தொடும் அளவுக்கு பாவத்தோடு என்னிடம் மன்னிப்பு கேட்டு வந்தாலும்
எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நான் மன்னித்து விடுவேன்!
ஆதமின் மகனே!
எனக்கு இணை கற்பிக்காத நிலையில் பூமி முழுவதும் பாவத்தோடு நீ என்னிடம் வந்தாலும், நான் உன்னிடம் மன்னிப்பு எனும் பெரும் கருணையோடே உன்னை நான் நெருங்கி வருவேன்”. ( நூல்: திர்மிதீ )
وروي ان
حبيب بن الحارث قال للنبي (صلى الله عليه وآله وسلم): إني مقراف للذنوب، قال: (فتب
إلى الله يا حبيب، فقال: إني أتوب ثم أعود، فقال: كلما أذنبت فتب، حتى قال: عفو
الله أكبر من ذنوبك يا حبيب).
ஹபீப் இப்னு
ஹாரிஸ் (ரலி) என்கிற தோழர் மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் பாவத்தால் சூழப்பட்டிருக்கின்றேன்” என்று கூறினார். ஹபீபே! அல்லாஹ்விடம் தவ்பாச் செய் என்று நபி {ஸல்}
அவர்கள் பதில் கூற, அல்லாஹ்வின் தூதரே! நான்
தவ்பாச் செய்கிறேன்,
எனினும் மீண்டும் பாவம் செய்து விடுகின்றேனே” என்ன செய்ய அல்லாஹ்வின் தூதரே! என்று மீண்டும் வினவினார். அதற்கு, மாநபி {ஸல்}
அவர்கள் “நீர் பாவம் செய்கிற போதெல்லாம்
அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து விடு” என்று கூறினார்கள்.
மீண்டும் அவர்
இவ்வாறு கேட்கவே,
“ஹபீபே! உம்முடைய பாவத்தை விட அல்லாஹ்வின் மன்னிப்பு மிகப்
பெரியது”
என்று பதிலளித்தார்கள். ( நூல்: அல் கபாயிர் )
அநியாயம் செய்பவர்கள் கவனத்திற்கு....
قال
الله تعالى: ولا تحسبنّ الله غافلا عمّا يعمل الظّالمون (إبراهيم : ٤٢)
قال
الإمام ميمون بن مهران رحمه الله تعالى:« هي تعزية للمظلوم، ووعيد للظالم » {
تفسير الطبري، ١٣/٧٠٣
“(நபியே!) அநியாயக்காரர்கள்
செய்வது குறித்து அல்லாஹ் அலட்சியமாக இருக்கின்றான் என்று நிச்சயமாக நீர் எண்ண
வேண்டாம். பார்வைகள் பிதுங்கும் ஒரு நாளுக்காகவே அவன் அவர்களைப்
பிற்படுத்துகின்றான்”.
(அல்குர்ஆன்: 14: 42 )
“அநீதியிழைக்கப்பட்டவனுக்கு
ஆறுதலை அளிப்பதாகவும்,
அநீதியிழைத்தவனுக்கு எச்சரிக்கையாகவும் இந்த வசனம்
இருக்கிறது!”
என இமாம் மைமூன் இப்னு மஹ்ரான் (ரஹ்) அவர்கள்
இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள். ( நூல்: 'தஃப்ஸீர் அத்தபரீ',
13/703 )
عن أبي
موسى رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إِنَّ اللهَ لَيُمْلِي
لِلظَّالِمِ، حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ» قَالَ: ثُمَّ قَرَأَ:
«{وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ
أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ}[هود: 102]» [صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4686]
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள் : "நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனுக்கு அவகாசம் வழங்கிக்
கொண்டிருப்பான்,
ஆனால் அவனை தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் அவனை விடவும்
மாட்டான்'
என்று நபி ﷺ அவர்கள் கூறிவிட்டு, ஸூறா ஹூதின் 102 ம்;
வசனத்தை ஒதினார்கள். ''மேலும் அக்கிரமம்
புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி
- வேதனை –தண்டனை மிக்கதாகவும்;
மிகக் கடினாமானதாகவும் இருக்கும்'' . ( நூல்: புகாரி,
முஸ்லிம் )
وعن أبي
هُرَيرةَ رَضِيَ اللهُ عنه: أنَّ رَسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قال: ((من
كانت عِندَه مَظلَمةٌ لأخيه فلْيتَحَلَّلْه منها، فإنَّه ليس ثَمَّ دينارٌ ولا
دِرهَمٌ، مِن قَبلِ أن يُؤخَذَ لأخيه مِن حَسَناتِه، فإنْ لم يكُنْ له حَسَناتٌ
أُخِذَ مِن سَيِّئاتِ أخيه، فطُرِحَت عليهـ))
ஒருவன் தன்
சகோதரருக்கு அவருடைய மானத்திலோ, (பணம், சொத்து போன்ற) வேறு விடயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்)
இருக்குமாயின்,
அவன் அவரிடமிருந்து அதற்காக இன்றே மன்னிப்புப் பெறட்டும்.
தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ,
வெள்ளிக்காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும்
மறுமை நாள்) வருவதற்கு முன்னால் மன்னிப்புப் பெறட்டும். (ஏனெனில், மறுமை நாளில்) அவனிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவருக்கு இழைக்கப்பட்ட
அநீதியின் அளவுக்கு அவனிடமிருந்து எடுக்கப்பட்டு (அநீதியிழைக்கப்பட்டவரின்
கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவனிடம் நற்செயல்கள் எதுவும்
இல்லையென்றால் (அநீதிக்குள்ளான) அவனின் தோழரின் தீய செயல்கள் (அவர்
கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவன் மீது சுமத்தப்பட்டு விடும்!” என்று நபி ﷺ
அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
قال
سفيان الثوري – رحمه الله -: «إن لقيت الله تعالى بسبعين ذنباً فيمابينك وبين الله
–تعالى-؛ أهون عليك من أن تلقاه بذنب واحد فيما بينك وبين العباد»
ஸுஃப்யான் அஸ்
ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ்வை நீ எழுபது பாவங்களுடன் சந்திப்பது
உனக்கு இலகுவானது. ஏனெனில்,
அவன் பாவங்களை மன்னித்து அருள் புரிவபவன். ஆனால், சக அடியார்களுக்கு செய்த பாவங்களுடன் அல்லாஹ்வை சந்திப்பது அந்நாளில் உனக்கு
மிகவும் கடினமான நாளாக இருக்கும்" என்றார்கள்.
وذُكر
عن أبي بكر الوراق أنه قال: «أكثر ما ينزع الإيمان من القلب: ظلم العباد»
அபூபக்ர் அல்
வர்ராக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- ஒரு மனிதரின் உள்ளத்தில் இருந்து ஈமான்
பறிக்கப்படுவதற்கான காரணங்களில் அதிகமான காரணம் சக அடியார்களுக்கு அநியாயம்
செய்வதால் தான். ( நூல்: அல் மஸ்தருஸ் ஸாபிக் )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரையும் இந்த மூன்று வகையான அநியாயங்களில் இருந்தும் பாதுகாத்து
அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Jazakallah hazrat
ReplyDeleteவாராவாரம் தங்களுடைய தகவல்களில் பல உலமாக்கள் பயனடைகிறார்கள்.. இதை தாங்கள் தொடர்ந்து செய்வதற்கு அல்லாஹ் மேலும் மேலும் தவ்ஹீத் செய்வானாக மேலும் ஹஜ்ரத் அவர்களுடைய குடும்பத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்...
ReplyDelete