அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 07.
ஆடை... அல்லாஹ்
வழங்கிய அருட்கொடை!!
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் மகத்தான கருணையால் ஆறாவது நோன்பை நிறைவு செய்துள்ளோம். ஏழாவது நாள்
தராவீஹ் தொழுகையை தொழுது விட்டு அமர்ந்துள்ளோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் நோன்பையும் தராவீஹ் தொழுகையையும் இதர வணக்க வழிபாடுகளையும் ஏற்றுக்
கொள்வானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் 206
வசனங்கள் கொண்ட சூரா அல் அஃராஃப் முழுமையாக ஓதி
முடிக்கப்பட்டது.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த உலகத்திற்கு இரண்டு படைப்புகளை, பொருட்களை வானில் இருந்து
இறக்கியதாக கூறுகின்றான். ஒன்று இரும்பு.
لَقَدْ
اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَیِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ
وَالْمِیْزَانَ لِیَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ وَاَنْزَلْنَا الْحَدِیْدَ فِیْهِ
بَاْسٌ شَدِیْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ
وَرُسُلَهٗ بِالْغَیْبِ اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟
நிச்சயமாக நம்
தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும்,
மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும்,
இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன -
(இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும்
மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்
(இவ்வாறு அருள்கிறான்);
நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். ( அல்குர்ஆன்: 57: 25 )
மற்றொன்று இன்றைய
தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட வசனங்களில் ஒன்றான 26 -வது வசனத்தில் கூறப்படும் ஆடையாகும்.
இதில் இருந்து
இன்னொரு விஷயமும் தெளிவாகிறது. அல்லாஹ் மனிதனை பூமியில் இறக்கும் போதே அவனுக்கான
ஆடையையும் சேர்த்தே இறக்கி விட்டான்.
يَا
بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاساً يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشاً
‘ஆதமுடைய மக்களே! உங்களுடைய வெட்கத்தளங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்கு பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக் கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்’ ( அல்குர்ஆன்: 07: 26 )
ஆடை உலகோடு முடிந்து விடும் ஒன்றல்ல...
ஆடை என்பது நாளை
மறுமையில் நல்லடியார்களை தொடரும் மகத்தான ஒரு அம்சமாக இடம் பெற்றுள்ளது என்று
இஸ்லாம் கூறுகிறது.
حدثنا عفان
، حدثنا شعبة ، حدثنا المغيرة بن النعمان ، شيخ من النخع
، قال : سمعت سعيد بن جبير يحدث ، قال : سمعت ابن عباس ، قال
: قام فينا رسول الله صلى الله عليه وسلم بموعظة ، فقال : " يا أيها
الناس ، إنكم محشورون إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده وعدا
علينا إنا كنا فاعلين [ الأنبياء : 104 ] . ألا وإن أول الخلق يكسى يوم
القيامة إبراهيم ،
எங்கள் மத்தியில்
நபி ﷺ அவர்கள் ஒருநாள் உபதேசம் செய்ய எழுந்து நின்றார்கள்.
அப்போது,
நிச்சயமாக நீங்கள் பாதணி (காலணி) அணியாதவர்களாகவும், நிர்வாணிகளாகவும்,
விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்வின் பக்கம்
மறுமையில் எழுப்பப்படுவீர்கள் எனக் குறிப்பிட்ட பின்னர், “நாம் ஆரம்பமாக படைத்ததைப் போன்றதொரு நிலைக்கு (உங்களை) மீட்டுவோம்” என்ற திருமறை வசனத்தைக் கூறினார்கள். பின்னர், படைப்புக்களில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்
குறிப்பிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவனவாதிகளில்
முதலாவதாக மஹ்ஷர் மன்றத்தில் ஆடை அணிவிக்கப்படும் நபி இப்ராஹீம் (அலை)
அவர்களாகும். அவர்களைப் போன்று அனைத்து நபிமார்களும் அணிவிக்கப்படுவார்கள் என்பதை
மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
அகிலங்களின்
அதிபதியாகிய அல்லாஹ் நல்லடியார்களுக்கு உயர்தரமிக்க ஆடை ஏற்பாடுகளை செய்து
வைத்துள்ளான் என்பதையும் குர்ஆன் குறிப்பிடுகிறது.
தடித்த, மென்மையான பட்டாடைகள் சுவனவாதிகளின் ஆடைகளாகக் கூறப்பட்டுள்ளன. பச்சை நிறமான
பட்டுக்கள் என்று நிறம் அடையாளம் காட்டப்பட்டிருப்பதையும் பார்க்கின்றோம்.
அதில் அவர்களது
ஆடை பட்டாக இருக்கும். (ஃபாதிர்: வசனம்: 33).
அவர்களின் மேல்
மேனியின் மீது மென்மையான பட்டும், (வெளி உடம்பில்)
தடிப்பமானதும் இருக்கும். (அத்தஹ்ர்: 21)
அவர்கள் தடித்த, மற்றும் மென்மையான பட்டுக்களை அணிந்தவர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கி
இருப்பார்கள். (அத்துஹ்ஹான். வசனம்: 53),
அவர்கள் மெல்லிய, மற்றும் தடித்த பச்சை நிறப்பட்டுக்களை அணிந்து, உயர்ந்த ஆசனங்கள் மீது அமர்ந்திருப்பார்கள். (அல்கஹ்ஃப்: வசனம்: 31).
எவர்கள் ஈமான்
கொண்டு நற்கருமங்களும் புரிந்தார்களோ அவர்களுக்கு சுவனச்சோலைகள் உண்டு. அதன்
கீழால் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தங்கத்திலான காப்புக்களும், இன்னும்,
முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள், அதில் அவர்களது ஆடை ஹரீர் என்ற பட்டாகும் (அல்ஹஜ்: வசனம்: 22)
(நன்மை செய்தவருக்குரிய
கூலி) அத்ன் என்ற சுவனச் சோலைகளாகும். அதில் அவர்கள் தங்கத்திலான காப்புக்களும், இன்னும்,
முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள், அதில் அவர்களது ஆடை ஹரீர் என்ற பட்டாகும் (ஃபாதிர்: வசனம்: 33).
يَا
بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاساً يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشاً
‘ஆதமுடைய மக்களே! உங்களுடைய வெட்கத்தளங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்கு பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக் கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்’ ( அல்குர்ஆன்: 07: 26 )
மேலுள்ள வசனத்தில்
அல்லாஹ் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஆடை அணிகலன்களை வழங்கியதாக
கூறுகின்றான்.
01. வெட்கத்தளங்களை மறைத்தல் :
ஆடையை அல்லாஹ் அருளியதற்கு
முதன்மையான நோக்கமாக வெட்கத்தளங்களை மறைப்பதனை அடையாளப்படுத்துகின்றான். ஆக
இம்முதல் நிலை நோக்கத்தை நிறைவு செய்வதாக எமது ஆடை அணிகலன்கள் இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிமான ஆண்; தொப்புள் முதல் முழங்கால் வரையான பகுதிகளையும் பெண் முகம், இரு கைகள் தவிர்ந்த ஏனை உறுப்புக்கள் அனைத்தையும் மறைக்கும் விதமாக ஆடைகள்
இருக்க வேண்டும். (சில அறிஞர்கள் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்க வேண்டும் எனவும்
கூறுகின்றனர்)
02 உடலுக்கு பாதுகாப்பு :
ஒரு மனிதனின்
நடத்தையினை தீர்மானிப்பதில் ஆடை என்பது பாரிய பங்கு வகிக்கின்றது. அவன் எப்படியான
ஆடைகளை அணிகின்றானோ அந்த ஆடைக்கு ஏற்பவே தனது செயற்பாடுகளை அமைத்துக்
கொள்கின்றான். ஆக மனிதனின் செயற்பாடுகளை தீர்மானிப்பதில் ஆடை என்பது மகத்தான பங்கு
வகிக்கின்றது என்பது ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவாகும்.
ஆடை உடலுக்கு
பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது சூழலில் காணப்படும் அகப்புற சூழல்
தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதனையே குறிக்கின்றது. ஒருவர் ஆடை அணிவதன் மூலம்
புறத்தாக்கங்களிலிருந்து தனது உடலை பாதுகாப்பதை அனைனவரும் எதிர்பாhப்பது போன்று அக ரீதியாகவும் ஆடை உடலில் பாதிப்பு செலுத்தவும் துர்
நடத்தைகளிலிந்து எம்மை பாதுகாக்கவும் வேண்டும் எதிர்பார்ப்பதும் அவ்வாரான ஆடைகளை
அணிவதும் அவசியமாகும்.
03. அலங்காரம் :
ஆடை என்பது
அலங்காரம் என்பதை யாரும் மறுப்பதில்லை இறைவனே அதனை தனது திருமறையிலும்
தெளிவுபடுத்தியுள்ளான். ஆனால் அந்த அலங்காரம் என்பது வரையருக்கப்பட்டதாகும்.
அவ்வயைரைகளை தழுவியதாய் ஆடை அணிகலன்கள் இருத்தல் வேண்டும். நபி ﷺ அவர்கள் ஒரு முஸ்லிமின் ஆடையின்
வரையரைகளை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்கள்.
ஆடை அணிகின்ற விஷயத்தில் இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கின்ற முறைப்படி அணிந்தால், நாம் அணியும் ஆடையின் மூலமாக கூட அல்லாஹ்விடம்
கூலியைப் பெற முடியும். மேலும் அது நன்மையான செயலாகவும் ஆகிவிடும். குறிப்பாக இந்த
மூன்று வடிவங்களில் ஆண்களும், பெண்களும் ஆடை அணிய கூடாது
1. அன்னிய மதத்தவர்கள் தங்களின் மதத்தை அடையாளம் காட்டுவதற்காக அணியும் ஆடைகளை
அணியக்கூடாது.
وَعَنِ
اِبْنِ عُمَرَ -رَضِيَ اَللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ -
صلى الله عليه وسلم -{ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ, فَهُوَ مِنْهُمْ } أَخْرَجَهُ
أَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
யார் இன்னொரு
கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவரைச்சேர்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்
2. ஆண்,
பெண் அணியும் ஆடையைப் போன்றோ, பெண் ஆண்,
அணியும் ஆடையைப் போன்றோ அணியக்கூடாது.
وعنْ
أَبي هُريْرةَ قَالَ: "لَعنَ رسُولُ اللَّه ﷺ الرَّجُلَ يلْبسُ لِبْسةَ
المرْأةِ، والمرْأةَ تَلْبسُ لِبْسةَ الرَّجُلِ" رواه أَبُو داود بإسنادٍ
صحيحٍ.
பெண் அணியும்
ஆடையைப்போன்று அணியக்கூடிய ஆணையும்,; ஆண் அணியும்
ஆடையைப்போன்று அணியக்கூடிய பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ( நூல் :
அபூதாவூத் )
وفي
روايةٍ: "لَعنَ رسُولُ اللَّهِ ﷺ المُتَشبِّهين مِن الرِّجالِ بِالنساءِ،
والمُتَشبِّهَات مِن النِّسَاءِ بِالرِّجالِ" رواه البخاري.
பெண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய ஆண்களையும், ஆண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ஆதாரம் : புகாரி
3. பெருமைக்காக ஆடை அணியக்கூடாது.
وَعَنِ
ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي
الدُّنْيَا أَلْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ رَوَاهُ
أَحْمَدُ وَأَبُو دَاوُد وَابْنُ مَاجَهْ.
யார் (இவ்வுலகில்)
பெருமைக்காக ஆடை அணிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவான ஆடையை
அணிவிப்பான். பின்பு அதில் நெருப்பு பிடித்துவிடும் என்பதாக நபி (ஸல்) அவர்கள்
அறிவித்தார்கள். ( நூல்: அபூதாவூத் )
4) மர்ம உறுப்பை மறைக்கும் படி ஆடை அணியவேண்டும்.
حدثنا عبد
الله بن مسلمة، نا أبي. (ح) ونا ابن بشار، نا يحيى نحوه عن بهز بن حكيم، عن أبيه،
عن جده قال: ((قلت: يا رسول الله عوراتنا ما نأتي منها، وما نذر؟ قال: احفظ عورتك
إلا من زوجتك، أو ما ملكت يمينك قال: قلت: يا رسول الله إذا كان القوم بعضهم في
بعض؟ قال: إن استطعت أن لا يرينها أحد فلا يرينها قال: قلت: يا رسول الله إذا كان
أحدنا خاليا؟ قال: الله أحق أن يستحيى منه من الناس)))).
“எங்கள் மறை உறுப்புகளில்
எதை மறைக்க வேண்டும்;
எவற்றை மறைக்காமல் இருக்கலாம்” என்று நபி ﷺ
அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி ﷺ அவர்கள், “உன் மனைவி, உன் அடிமைப் பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புகளை பாதுகாத்துக்
கொள்” என்று விடையளித்தார்கள். “ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும்
போது மறை உறுப்பைக் காத்து கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன்.
அதற்கு நபி ﷺ அவர்கள், “வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்” என்று விடையளித்தார்கள். இதை முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். ( நூல்: திர்மிதி )
5) ஒரு ஆடையில் இருவர் படுக்கக் கூடாது..
ஒரு ஆண் மற்றொரு
ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு
பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்” என்று நபி ﷺ
அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
நூல்: திர்மிதி )
ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியும் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த
வேண்டும்.
وَلِأَحْمَدَ
وَالْبُخَارِيِّ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ
الْإِزَارِ فِي النَّارِ.
கரண்டைக்கு கீழே
இறங்கும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (
நூல்: புகாரி )
وقال ﷺ:
ثلاثة لا يُكلمهم الله يوم القيامة، ولا ينظر إليهم، ولا يُزكيهم، ولهم عذاب أليم:
المسبل إزاره، والمنان بما أعطى، والمنفق سلعته بالحلف الكاذب،
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- நாளை மறுமையில் அல்லாஹ் மூன்று
பேரோடு பேசவும்மாட்டான்,
இன்னும் அவர்களை பார்க்கவும் மாட்டான். அவர்களை
(பாவத்திலிருந்து) தூய்மை படுத்தவும்மாட்டான். அவர்களுக்கு பெரும் வேதனையுமுண்டு
என்று மூன்று தடவை நபி ﷺ
அவர்கள் கூறினார்கள்.(அப்போது) அபூதர் (ரலி) அவர்கள் (அப்படி) நஷ்டவாளியும்
கைசேதமுள்ளவர்கள் யார்?
என வினவினார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் "கரண்டைக்கு கீழ் ஆடை அணிபவனும், கொடுத்ததை சொல்லிக்காட்டுபவனும், பொய்ச்சத்தியம் பண்ணி தன்
பொருளை விற்பவனும்" என்று நபி ﷺ அவர்கள் விடையளித்தார்கள். ( நூல்: முஸ்லிம் )
நபித்தோழர்களின் பேணுதலும், விழிப்புணர்வும்...
فدعا
عثمان فأرسله إليهم فخرج عثمان على راحلته حتى جاء عسكر المشركين، فعتبوا به
وأساءوا له القول، ثم أجاره أبان بن سعيد بن العاص ابن عمه وحمله على السرج وردفه،
فلما قدم قال يا ابن عم! ما لي أراك متخشعاً أسبل، قال: وكان إزاره إلى نصف ساقيه،
فقال له عثمان: هكذا إزرة صاحبنا) [رواه ابن أبي شيبة]
.
ஹுதைபிய்யா உடன்
படிக்கையின்போது முஸ்லிம்களின் தூதுவராக ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்கு
சென்றார்கள். அங்கு தங்களின் சிறிய தந்தையின் மகன் அபான் இப்னு சயீத் வீட்டில்
தங்கினார்கள். காலையில் மக்காவின் தலைவர்களை சந்திக்க கிளம்பினார்கள்.
அந்நேரத்தில் ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் கீழாடை இஸ்லாமிய போதனையின் படி
கரண்டைக்கு மேல் இருந்தது. இதைக் கண்ட அபான் இப்னு சயீத் கூறினார். “உஸ்மான் அவர்களே! அரபிகளிடம் எந்த மனிதர் எவ்வளவு கீழ்நோக்கி (கரண்டை வரை)
ஆடைகளை அணிவாரோ அந்தளவு அவர் உயர்ந்தவராக கருதப்படுகிறார் என்பது உங்களுக்கு
தெரியும்! தாங்கள் மக்கா தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறீர்கள்.
இவ்வாறு ஆடையை அணிந்து சென்றால் அவர்கள் உங்களை கண்ணியமாக பார்க்கமாட்டார்கள்.
பேச்சு வார்த்தை முழுமை பெறாது என்று கூறியபோது உஸ்மான் (ரலி) அவர்கள்
கூறினார்கள். “முடியாது! நீர் கூறுவதை போன்று ஒருபோதும் என்னால் அணிய முடியாது. ஏனெனில் நான்
அணிந்திருப்பதைப் போன்று தான் எனது தலைவர் முஹம்மது நபி ﷺ அவர்கள் அணிந்திருப்பார்கள் என்று கூறி மறுத்து
விட்டார்கள். ( நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா )
وعن ابن
عمر -رضي الله عنهما- قال: “مررت على رسول الله ﷺ وفي إزاري استرخاء، فقال: «يا
عبد الله، ارفع إزارك» فرفعته ثم قال: «زد»، فزدت، فما زلت أتحراها بعد، فقال بعض
القوم: إلى أين؟ فقال: أنصاف الساقين” [رواه مسلم].
அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து
சென்றேன். அப்போது எனது கீழாடை கணுக்காலுக்குக் கீழ் இருந்தது. அப்போது அவர்கள், “அப்துல்லாஹ்! உனது கீழாடையை உயர்த்திக் கட்டு!” என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். “இன்னும் உயர்த்திக் கட்டு” என்றார்கள். அவ்வாறே நான் இன்னும் உயர்த்தினேன். பின்னர் நான் அதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். (இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் கூறியதைக் கேட்ட)
மக்கள் சிலர்,
“எதுவரை உயர்த்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “கணுக்கால்களின் பாதியளவுக்கு” என்று பதிலளித்தார்கள். (
நூல்: முஸ்லிம் )
6) எளிமையாக ஆடை அணிய வேண்டும்...
روى
الترمذي (2481) وحسنه ، وأحمد (15631) ، والحاكم (7372) عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ
بْنِ أَنَسٍ الجُهَنِيِّ ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ( مَنْ تَرَكَ اللِّبَاسَ تَوَاضُعًا لِلَّهِ وَهُوَ
يَقْدِرُ عَلَيْهِ دَعَاهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ
حَتَّى يُخَيِّرَهُ مِنْ أَيِّ حُلَلِ الإِيمَانِ شَاءَ يَلْبَسُهَا )
ஹள்ரத் முஆத்
இப்னு அனஸ் (ரலி) அவர்கள் தனது தந்தை கூறியதை கூறினார்கள் : “யார் வசதியிருந்தும் அல்லாஹ்விற்காக பணிவாக இருக்கவேண்டும் என்று (பெருமையான
பகட்டான) ஆடைகளை அணிவதை தவிர்த்துக் கொள்கிறாரோ மறுமை நாளில் இறைவன் அனைத்து
படைப்பினங்கள் முன்னிலையில் அவரை அழைத்து அவர் விரும்பும் ஆடையை அவருக்கு
அணிவிப்பான்”
என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதி)
7) எளிமை என்ற பெயரில்...
وعن
مالك بن نضلة قال: أتيت النبي صلى الله عليه وسلم في ثوب دون، فقال: «ألك مال؟»
قال: نعم، قال: «من أي المال؟» قال: قد آتاني الله من الإبل والغنم والخيل
والرقيق، قال: «فإذا آتاك الله مالًا، فَلْيُر أَثرُ نعمة الله عليك وكرامته»[
நான் மட்டரகமான
ஆடை உடுத்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது 'உனக்கு வசதி (செல்வம்) இருக்கிறதா? என்று கேட்டார்கள் நான் 'ஆம்'
என்றேன். 'என்னென்ன இருக்கிறது? என்று கேட்டார்கள். 'எல்லாச் செல்வமும் இருக்கிறது ஒட்டகங்கள், ஆடுமாடுகள், குதிரைகள்,
அடிமைகள் என எல்லாவகைச் செல்வங்களையும் அல்லாஹ் எனக்கு
வழங்கிச் சிறப்பித்துள்ளான்' என்று நான் கூறினேன்.
அப்போது நபி ﷺ அவர்கள் 'அல்லாஹ் உனக்கு வசதி வாய்ப்புகளை வழங்கியிருந்தால் அவன் உனக்கு அளித்துள்ள
அருட்கொடையின் அடையாளம் உன் மீது தென்பட வேண்டும்' என்று கூறினார்கள் என் அபுல் அஹ்வஸ் (ரலி) தமது தந்தை மூலம் அறிவிக்கிறார்கள்.
( நூல்: அஹ்மத்,
நஸயீ, ஷரஹுஸ் ஸுன்னா)
وعن
عبدالله بن عمرو بن العاص قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن الله يحب أن
يرى أثر نعمته على عبده»
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் தான் வழங்கிய அருட்கொடைகள் தன் அடியானிடம் வெளிப்படுவதை விரும்புகின்றான்
என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
8) சுத்தமான,
அழகிய ஆடை அணிய வேண்டும்..
يرويه
ابن أبي شيبة في "المصنف" (25090) ، والدولابي في "الكني"
(596) عَنْ أَبِي الْأَشْهَبِ، عَنْ رَجُلٍ، مِنْ مُزَيْنَةَ، أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَأَى عَلَى عُمَرَ ثَوْبًا غَسِيلًا،
فَقَالَ: (أَجَدِيدٌ ثَوْبُكَ هَذَا؟) قَالَ: غَسِيلٌ يَا رَسُولَ اللَّهِ، قَالَ:
فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( الْبَسْ
جَدِيدًا، وَعِشْ حَمِيدًا، وَتَوَفَّ شَهِيدًا، يُعْطِكَ اللَّهُ قُرَّةَ عَيْنٍ
فِي الدُّنْيَا، وَالْآخِرَةِ )
ஒரு நாள் வெண்ணிற
ஆடை அணிந்திருந்த நிலையில் உமர் (ரலி) அவர்களை மாநபி ﷺ அவர்கள் கண்டார்கள்.
“உமரே! இது புத்தாடையா? அல்லது துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடையா? என கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இது துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடை” என்று பதிலளித்தார்கள்.
அப்போது, பூமான் நபி ﷺ அவர்கள் “உம் வாழ்வில் நீர் புத்தாடைகள் பல அணிவீர்! புகழக்குரிய வாழ்வை வாழ்வீர்!
வீரமரணம் அடைவீர்! அல்லாஹ் உமக்கு ஈருலகத்தையும் கண்குளிர்ச்சி மிக்கதாய்
அமைத்திடுவான்”
என சோபனமும் சொன்னார்கள். ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா
)
روى
مسلم (91) عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ
مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ) قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ
يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً، قَالَ: ( إِنَّ اللهَ جَمِيلٌ
يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ، وَغَمْطُ النَّاسِ) .
இப்னு மஸ்வூத்
(ரலி) அவர்கள்,
நபி ﷺ
அவர்களிடம்,
“ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ( நூல்: முஸ்லிம் )
நபி ﷺ அவர்கள் வெறுத்த ஆடையை தீயில்
போட்ட நபித்தோழர்...
عن عمرو
بن شعيب، عن أبيه، عن جده، قال: هبطنا مع رسول اللَّه ﷺ من ثنية، فالتفت إلي،
وعليّ ريطةٌ مضرجة بالعصفر، فقال: «ما هذه الريطة عليك؟» فعرفت ما كره، فأتيت
أهلي، وهم يسجرون تنورًا لهم، فقذفتها فيه، ثم أتيته من الغد، فقال: «يا عبد
اللَّه، ما فعلت الريطة؟» فأخبرته، فقال: «ألا كسوتها بعض
أهلك، فإنه لا بأس به للنساء».
அம்ரு பின் ஷுஐப்
தன் பாட்டனார் மூலம் அறிவிக்கிறார்: நாங்கள் நபி ﷺ அவர்களோடு உயரமான இடத்திலிருந்து இறங்கினோம். அப்போது
அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள்,
என் மீது மிருதுவான ஆடையில் கடுமையாக குங்குமப்பூ
சாயமிடப்பட்டிருப்பதைக் கண்டு, “இது என்ன? மிருதுவான ஆடையில் இவ்வளவு காவி நிறத்தால் சாயமிடப்பட்டு இருக்கிறதே?” என்று கேட்டார்கள். நபி ﷺ
அவர்கள் வெறுப்பதை நான் அறிந்து என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அங்கு அடுப்பு
மூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த அடுப்பில் தூக்கி எறிந்து விட்டு மறுநாள்
காலையில் நபி ﷺ
அவர்களிடம் வந்தேன். அப்போது நபி ﷺ அவர்கள், “அந்த சாயமிடப்பட்ட
ஆடையை என்ன செய்தாய்?”
என்று கேட்டார்கள். நான் விஷயத்தைக் கூறினேன் அதற்கு
நபியவர்கள்,
“அதை உன் குடும்பத்தாருக்கு அணிவிக்கக் கொடுத்திருக்க கூடாதா? பெண்கள் அணிவது தவறில்லையே” என்றார்கள். ( நூல்:
அபூதாவூத் )
நபி ﷺ
அவர்கள் அணிந்த ஆடையை தமக்கு கஃபனாக வேண்டும் என்று விரும்பிய நபித்தோழர்....
عَنْ
سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ:- جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ، قَالَ سَهْلٌ: هَلْ
تَدْرِي مَا البُرْدَةُ؟ قَالَ: نَعَمْ، هِيَ الشَّمْلَةُ مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا،
قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا،
فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا
إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا لَإِزَارُهُ،
فَجَسَّهَا
رَجُلٌ مِنَ القَوْمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اكْسُنِيهَا، قَالَ:
«نَعَمْ» فَجَلَسَ مَا شَاءَ اللَّهُ فِي المَجْلِسِ، ثُمَّ رَجَعَ فَطَوَاهَا،
ثُمَّ أَرْسَلَ بِهَا إِلَيْهِ،
فَقَالَ
لَهُ القَوْمُ: مَا أَحْسَنْتَ، سَأَلْتَهَا إِيَّاهُ، وَقَدْ عَرَفْتَ أَنَّهُ
لاَ يَرُدُّ سَائِلًا، فَقَالَ الرَّجُلُ: وَاللَّهِ مَا سَأَلْتُهَا إِلَّا
لِتَكُونَ كَفَنِي يَوْمَ أَمُوتُ. قَالَ سَهْلٌ: فَكَانَتْ كَفَنَهُ
ஒரு பெண்மணி ‘புர்தா’
(சால்வை) ஒன்றைக் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக
வழங்குகிறேன்’
என்றார்.
இவ்வாறு ஸஹ்ல்
இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள்.
(அங்கிருந்தவர்கள் ‘தெரியும்’
என்று சொல்ல,) ‘ஆம் அது கரை
வைத்து நெய்யப்பட்ட போர்வை’
என ஸஹ்ல் (ரலி) கூறினார். (பின்னர் தொடர்ந்து அவர்கள்
சொன்னார்கள்:)
இறைத்தூதர் ﷺ அவர்கள் அது தமக்குத் தேவையென்று கருதி அதை
வாங்கினார்கள். பிறகு,
அதை கீழங்கியாக அணிந்து கொண்டு நபி ﷺ அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது மக்களில் ஒருவர்
அதைத் தொட்டுப் பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இதை அணியக் கொடுங்கள்’ என்று கேட்க,
நபி ﷺ
அவர்கள்,
‘சரி’
என்றார்கள்.
பிறகு நபி ﷺ அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில்
அமர்ந்திருந்துவிட்டு (தம் வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை
மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
மக்கள், ‘நீ செய்தது சரியல்ல. நபி ﷺ
அவர்கள் தம்மிடம் கேட்பவரை (வெறுங்கையோடு) திருப்பி அனுப்புவதில்லை என்று
தெரிந்துகொண்டே அவர்களிடம் (ஏன்) இதைக் கேட்டாய்’ என்றார்கள். அதற்கு அந்த மனிதர், ‘அல்லாஹ்வின்
மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாளில் என் (உடலில்
அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத்தான்’ என்றார். அவ்வாறே அது அவருக்குக் கஃபனாக ஆயிற்று. அறிவிப்பவர்: அபூஹாஸிம் ஸலமா
இப்னு தீனார்,
( நூல்: புகாரி )
ஆடை அணியும் போது ஓதும் துஆ..
عن معاذ
بن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: مَنْ لَبِسَ ثَوْبًا
فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ
غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
وَمَا تَأَخَّرَ رواه أبو داود (رقم/4023)، صححه ابن حجر في " الخصال المكفرة
" (74)
நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் ஆடை அணிந்தால் “அல்ஹம்துலில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஷகனீஹி மின் ஙைரி ஹவ்லிம் மின்னீ வலா
குவ்வா (என்னுடைய எந்த சக்தியும் எந்த முயற்சியுமின்றி எனக்கு இந்த ஆடையை வழங்கி
எனக்கு இதை அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”) என்று ஓதட்டும்”
அப்படி ஓதினால் அவரின் முன் பின் (சிறு) பாவங்கள்
மன்னிக்கப்படுகின்றன " என்று கூறினார்கள். (நூல் : அபூதாவூத்)
புத்தாடை அணியும் போது ஓதும் துஆ:
عَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قال:
كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا
سَمَّاهُ بِاسْمِهِ، إِمَّا قَمِيصًا أَوْ عِمَامَةً، ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ
لَكَ الْحَمْدُ، أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا
صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ رواه أبو داود
(رقم/4023)
ஹள்ரத் அபூ சயீத்
குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ﷺ அவர்கள் புதிய தலைப்பாகையோ அல்லது புதிய ஆடையையோ
அணிந்தால் “அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹீ வஅஸ்அலுக மின் கைரிஹீ வகைரி மா ஸுனிஅ
லஹு - வஅஊதுபிக மின் ஜர்ரிஹு வஜர்ரி மா ஸுனிஅ லஹு (எனக்கு ஆடை அணிவித்த அல்லாஹ்வே!
உனக்கே எல்லாப் புகழும்! மேலும் நான் உன்னிடம் இதன் நலவையும் இது
உருவாக்கப்பட்டதின் நலவையும் வேண்டுகிறேன். மேலும் இதன் கெடுதியையும் இது
உருவாக்கப்பட்டதின் கெடுதியை விட்டும் உன்னி டம் பாதுகாப்பு தேடுகிறேன்” என்று ஓதும் வழமையுடையவர்களாக இருந்தார்கள். ( நூல் : திர்மிதி )
ஆடையை கழற்றும் போது ஓதும் துஆ:
عن أنس بن مالك رضي الله عنه : ولفظه : قال رسول الله صلى الله عليه وسلم : ( سِتْرُ مَا بَيْنَ أَعْيُنِ الْجِنِّ ، وَعَوْرَاتِ بَنِي آدَمَ إِذَا وَضَعُوا ثِيَابَهُمْ أَنْ يَقُولُوا : بِسْمِ اللَّهِ ) .
ஹள்ரத் அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ﷺ அவர்கள் “ஜின்களின் கண்களுக்கும்
மனிதர்களின் மர்மஸ்தானத்திற்கும் மத்தியில் மறைவு ஏற்பட (வேண்டுமானால்) அவர் தனது
ஆடையை கழற்றும் போது பிஸ்மில்லாஹ் என்று ஓதிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
இஸ்லாமிய கலாச்சார
அடிப்படையில் ஆடைகள் அணிவோம்!

No comments:
Post a Comment