ரமழானும்...
குர்ஆனும்... நாமும்…
அல்லாஹ்வின்
மகத்தான கருணையால் பாக்கியமான மூன்று இரவுகளில் இரண்டு இரவுகளை கடந்து விட்டோம்.
ரஜபில் மிஃராஜ்
இரவையும்,
ஷ(ஃ)அபானில் பராஅத் இரவையும் கடந்து இருக்கிறோம்.
லைலத்துல் கத்ர்
இரவை அடைந்து அமல்களால் அலங்கரிக்க ஆவலாக நாம் காத்திருக்கின்றோம். அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் மகத்தான அந்த இரவை அடையும் பாக்கியத்தை நம் அனைவருக்கும்
தந்தருள்வானாக!
பாக்கியமான அந்த
இரவுகளில் நாம் கேட்ட அத்தனை பிரார்த்தனைகளையும் அல்லாஹ் அங்கீகரித்து அருள்
புரிவானாக!
பரக்கத் வேண்டி
ரஜபில் இருந்து நாம் கேட்டு வரும் பிரார்த்தனையையும் அல்லாஹ் அங்கீகரித்து அருள் புரிவானாக!
நாம் ஆவலோடு
எதிர்பார்த்து காத்திருக்கும் ரமழான் இதோ இன்னும் சில நாட்களில் நம்மை நோக்கி வர
இருக்கிறது.
ரமழான் மாதத்தின்
மேன்மை குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறும் அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று
உயர்த்திக் கூறுகின்றான்.
شَهْرُ
رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ
مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ
ரமளான் மாதம்
எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை -
தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ( அல்குர்ஆன்: 2: 184 )
ஆனால், இன்று குர்ஆனையே பார்க்காத, குர்ஆனையே ஓதத் தெரியாத
ஒரு சமூகம் உருவாகி வருகின்றது. உலகக் கல்வியின் மீதான அதீத ஆசையால் குர்ஆன் ஓதக்
கற்றுக் கொள்ள வரும் சிறார்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதைப்
பார்க்கின்றோம். இது இந்த உம்மத்துக்கு அழகல்ல.
ஏனெனில், குர் ஆனைக் கொண்டே இந்த சமூகம் இந்த உலகிலும், மறுமையிலும் உயர்வடையும். மேலும், எதிரிகளிடம் இருந்து
பாதுகாக்கப்படும் என்பதை இந்த உம்மத் உணர வேண்டும்.
குர்ஆனை ஓதக்
கற்றுக் கொள்ளவும்,
குர்ஆனை ஓதவும் இந்த உம்மத் முன் வர வேண்டும்.
சில இபாதத்கள்
இருக்கிறது. அந்த இபாதத்களை செய்வதால் அதைச் செய்தவருக்கு மட்டும் தான் அதன் நன்மை
கிடைக்கும். உதாரணமாக தொழுகை, ஜகாத்.
தொழுகையை நாம்
தொழுதால் தான் நமக்கு நன்மை உண்டு. மற்றவர் தொழுத தொழுகைக்காக நமக்கு நன்மை
கிடைக்காது.
ஜகாத்
கொடுத்தவருக்குத்தான் ஜகாத்தின் நன்மை கிடைக்கும்.
ஆனால், குர்ஆன் இருக்கிறதே அதன் மகத்துவமும் மாண்பும் மிக அலாதியானது.
ஆம்! குர்ஆனை நாம்
ஓதினாலும் நமக்கு நன்மை கிடைக்கும், பிறர் ஓதக் கேட்டாலும்
நமக்கு நன்மை கிடைக்கும். வீடியோ ஆடியோ வடிவில் போட்டு ஓதக் கேட்டாலும் நன்மை
கிடைக்கும். குர்ஆனை எப்படி ஓதக் கேட்டாலும் நன்மை கிடைக்கும்.
وَإِذَا
قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
“குர்ஆன் ஓதப்படும்போது
அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் – (இதனால்) நீங்கள்
கிருபை செய்யப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 7: 204 )
குர்ஆன் ஓதத்
தெரிந்தும் ஓதாதவர்கள்,
அல்லது அறவே ஓதத் தெரியாதவர்கள் மறுமை நாளில்
அல்லாஹ்விடத்தில் மிகவும் நஷ்டமடைந்தவர்களாக நிற்க வேண்டும்.
நம்மில் பலர்
தினமும் எத்தனையோ வீணான செய்திகளைப் படிப்பதற்காக சோஷியல் மீடியாவில் நேரத்தைச்
செலவிடுகிறோம். ஆனால் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்று நபி (ஸல்)
அவர்களால் கூறப்பட்ட குர்ஆனை நம்மில் எத்தனை பேர் தினமும் ஓதக் கூடியவர்களாக
இருக்கிறோம்.
திருக்குர்ஆனோடு உள்ள தொடர்பு..
عَنْ
أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنَ النَّاسِ» قَالُوا: مَنْ هُمْ
يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَهْلُ الْقُرْآنِ هُمْ أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ
அல்லாஹ்விற்கென்றே
சொந்தமானோர் மக்களில் சிலர் இருக்கின்றனர் என்று நபி (ஸல்) கூறிய போது அல்லாஹ்வின்
தூதரே! அவர்கள் யார் என ஸஹாபாக்கள் கேட்டனர். அவர்கள் குர்ஆன் உடையவர்கள். அவர்கள்
தான் அல்லாஹ்விற்கு உரியவர்கள், அல்லாஹ்விற்கு சொந்தமானவர்கள்
என நபி (ஸல்) கூறினார்கள். (ஹாகிம்)
குர்ஆனை இனிமையாக ஓதுவோம்!
عَنِ
الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ، فَإِنَّ الصَّوْتَ
الْحَسَنَ يَزِيدُ الْقُرْآنَ حُسْنًا» حاكم
இனிமையான குரலைக் கொண்டு குர்ஆன் ஓதுவதை அழகுபடுத்துங்கள் . ஏனெனில்,
இனிய குரல் குர்ஆன் ஓதுவதின் அழகை அதிகரிக்கச் செய்கிறது. (ஹாகிம்: 2125)
குர்ஆனை பிறர் ஓதுவதைக் கேட்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆர்வம்
காட்டியுள்ளார்கள்.
குர்ஆன்
கொடுக்கப்பட்ட இறைத் தூதர் (ஸல்) அவர்கள், குரல் வளமிக்கவர்கள் அதை
ஓதும் போது கேட்டு ரசித்திருக்கின்றார்கள். அவ்வாறு ஓதுவோரின் இல்லங்களை அடையாம்
கண்டிருக்கிறார்கள்.
قَالَ
أَبُو بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "
إِنِّي لأَعْرِفُ أَصْوَاتَ رُفْقَةِ الأَشْعَرِيِّينَ بِالْقُرْآنِ، حِينَ
يَدْخُلُونَ بِاللَّيْلِ، وَأَعْرِفُ مَنَازِلَهُمْ مِنْ أَصْوَاتِهِمْ
بِالْقُرْآنِ بِاللَّيْلِ، وَإِنْ كُنْتُ لَمْ أَرَ مَنَازِلَهُمْ حِينَ نَزَلُوا
بِالنَّهَارِ، وَمِنْهُمْ حَكِيمٌ، إِذَا لَقِيَ الْخَيْلَ ـ أَوْ قَالَ
الْعَدُوَّ ـ قَالَ لَهُمْ إِنَّ أَصْحَابِي يَأْمُرُونَكُمْ أَنْ تَنْظُرُوهُمْ
".
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: “என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது
அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள்
தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்காவிட்டாலும், இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை
நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும், அவர்களில் விவேகம் மிக்க
ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால்.... அல்லது எதிரிகளைச்
சந்தித்தால்.... அவர்களைப் பார்த்து, "என் தோழர்கள்,
தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு
உத்தரவிடுகின்றனர்'
என்று (துணிவோடு) கூறுவார்'' என்று கூறினார்கள். ( அறிவிப்பவர்: அபூமூசா (ரலி) நூல்: புகாரி 4232 )
حَدَّثَنَا
عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، قَالَ
حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه
قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم " اقْرَأْ عَلَىَّ
الْقُرْآنَ ". قُلْتُ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ
" إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي ".
(ஒருமுறை) நபி (ஸல்)
அவர்கள் என்னிடம் "குர்ஆனை எனக்கு ஓதிக் காட்டுங்கள்!'' என்று சொன்னார்கள். நான் "தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?'' என்று கேட்டேன்.
அவர்கள் "பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். ( அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல்:
புகாரி 5049
)
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ خَلَفٍ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ،
حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي
بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
قَالَ لَهُ " يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ
مَزَامِيرِ آلِ دَاوُدَ "
நபி (ஸல்) அவர்கள்
(நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) "அபூ மூசா! (இறைத்தூதர்)
தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல்
உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என என்னிடம் கூறினார்கள்.
( அறிவிப்பவர்: அபூமூசா (ரலி) நூல்: புகாரி 5048 )
அழகிய குரலில் ஓதுவார்கள் நபி {ஸல்}
அவர்கள்..
அடுத்தவர் ஓதக்
கேட்டு ரசிக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அந்த அருள்மிகு குர்ஆனை ஓதினால்
அதன் அருமை எப்படியிருக்கும்?
இதோ அதன்
அருமையையும் அழகையும் நபித்தோழர்கள் கூறக் கேட்போம்.
حَدَّثَنَا
خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا عَدِيُّ بْنُ
ثَابِتٍ، سَمِعَ الْبَرَاءَ، رضى الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله
عليه وسلم يَقْرَأُ فِي الْعِشَاءِ، وَالتِّينِ وَالزَّيْتُونِ وَمَا
سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ أَوْ قِرَاءَةً.
நபி (ஸல்) அவர்கள்
இஷா தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) "வத்தீனி வஸ்ஸைத் தூனி'யை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை விட "அழகிய குரலில்' அல்லது "அழகிய ஓதல் முறையில்' வேறெவரும் ஓத நான்
கேட்டதில்லை
(
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: புகாரி 769
)
குர்ஆனை அல்லாஹ் ரசித்துக் கேட்கின்றான்
அல்குர்ஆனை அருளிய
அல்லாஹ்வே,
அவனது தூதர் (ஸல்) அவர்கள் ஓதும் போது அதை ரசிக்கின்றான்.
அதாவது ஓதக்கூடிய அவர்களை ரட்சிக்கின்றான். அவர் மீது தன் அருள்மழையைப்
பொழிகின்றான்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ الزُّهْرِيِّ ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ ، مَا أَذِنَ لِلنَّبِيِّ أَنْ يَتَغَنَّى بِالْقُرْآنِ . قَالَ سُفْيَانُ : تَفْسِيرُهُ يَسْتَغْنِي بِهِ .
நபி (ஸல்) அவர்கள், "நான் இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் செவிகொடுத்துக் கேட்டது போல்
வேறெதனையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை'' என்று
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5024 )
குர்ஆனின்
தொடர்பில் உள்ளவர்கள் குர்ஆனின் தொடர்பை அதிகரிப்பதோடு தொடர்பில் இல்லாதவர்கள்
குர்ஆனோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆனே ஓதத் தெரியாதவர்கள்
குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும்.
குர்ஆன் ஓதுதலே எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காக்கும் கேடயமாகும்..
وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ
لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۙ
(நபியே!) நீர் குர்ஆனை
ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும்
மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம். ( அல்குர்ஆன்: 17: 45 )
குர்ஆனை அல்லாஹ்
நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட
வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள்
நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும்
குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன்
குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக
இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள்.
நாமோ பரம்பரை
முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும்
தெரியாதவர்களாக இருக்கின்றோம்.
பிறருக்கு அழகிய முன்னுதாரணமாக வாழ வேண்டுமா?
இவ்வுலகில் வாழும்
அனைவரும் பிறருக்கு ஒரு நல்ல உதாரணமாக வாழத்தான் விரும்புவார்கள்.
கெட்டவனாக
இருந்தாலும் கூட பிறருக்கு கெட்ட உதாரணமாக இருப்பதற்கு விரும்பவே மாட்டான்.
மக்கள் எல்லோரும்
விரும்பக் கூடிய முன்னுதாரணமான வாழ்வைப் பெற வேண்டுமானால் குர்ஆனை ஓதுவதன் மூலமே
அந்தச் சிறப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.
حَدَّثَنَا
أَنَسٌ ، عَنْ أَبِي مُوسَى ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَثَلُ
الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا
طَيِّبٌ وَالَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ ،
وَلاَ رِيحَ لَهَا وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ
الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي
لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ ، وَلاَ رِيحَ
لَهَا
அபூ மூஸல் அஷ்அரீ
(ரலி) அறிவிக்கின்றார்கள்:- "குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது
எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து)
குர்ஆன் ஓதாமல் இருப்பவர்,
பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது.
தீயவனாகவும்
இருந்து கொண்டு குர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்து
இருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும்
செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை
ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும்
கிடையாது" நபி ﷺ
அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
இயன்றளவு குர்ஆன் ஓதுவோம்...
وَلَقَدْ
یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் (ஓதிக்) கொள்ளும் பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
فَاقْرَءُوْا
مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ
குர்ஆனிலிருந்து
உங்களால் இயன்றளவு ஓதுங்கள். ( அல்குர்ஆன்: 73: 20 )
وقد بلغ
النبي -ﷺ- أن عبدالله بن عمرو يقرأ القرآن في ليلة، فقال له: اقْرَأ الْقُرْآنَ
فِي أَرْبَعِينَ [الترمذي (2946) وحسنه الألباني في صحيح الجامع (1154)].
فلما
قال له:إنه يطيق أكثر من ذلك، وراجع النبي -ﷺ- في المدة، قال له: اقْرَأ
الْقُرْآنَ فِي كُلِّ شَهْرٍ، قَالَ: قُلْتُ: إِنِّي أَجِدُ قُوَّةً، قَالَ:
فَاقْرَأهُ فِي عِشْرِينَ لَيْلَةً قَالَ: قُلْتُ: إِنِّي أَجِدُ قُوَّةً، قَالَ:
فَاقْرَأهُ فِي سَبْعٍ، وَلا تَزِدْ عَلَى ذَلِكَ [البخاري (5054)ومسلم (1159)].
ولما
استمر الحوار، وقال عبدالله:إنه يطيق قراءة القرآن في أقل من ثلاث ليالٍ، قال له
النبي -ﷺ-: لَمْ يَفْقَهْ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي أَقَلَّ مِنْ ثَلاثٍ
[الترمذي (2946) وصححه الألباني في صحيح سنن الترمذي (2949)].
அப்துல்லாஹ் பின்
அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் ஒரே இரவில் குர்ஆன் முழுவதையும் ஓதுவதாக நபி ﷺ அவர்களுக்கு சொல்லப்பட்டது. அப்போது, அப்துல்லாஹ் ரலி அவர்களை அழைத்து நபி ﷺ அவர்கள் நாற்பது நாட்களில் ஒரு குர்ஆனை ஓதி நிறைவு
செய்வீராக! என்று கூறினார்கள்.
அப்போது , “(அதைவிடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு
உள்ளது” என்று கூறவே,
அதற்கு நபி ﷺ அவர்கள் “ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை
குர்ஆனை) ஓதி நிறைவு செய்வீராக!" என்று கூறினார்கள். அப்போது, “(அதைவிடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு
உள்ளது” என்று கூறினார்கள். அதற்கு நபி ﷺ அவர்கள், “இருபது நாட்களில்
(ஒரு குர்ஆன்) ஓதி நிறைவு செய்வீராக!" என்று கூறினார்கள்.
அப்போதும், “அதைவிட அதிகமாக ஓத எனக்கு சக்தி உள்ளது என்று அப்துல்லாஹ் ரலி அவர்கள் கூற, அதற்கு நபி ﷺ
அவர்கள்,
“ஏழு நாட்களில் (ஒரு குர்ஆன்) ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட
(ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே!” என்று கூறினார்கள்.
அப்போதும்,
“அதைவிட அதிகமாக ஓத எனக்கு சக்தி உள்ளது என்று அப்துல்லாஹ்
ரலி அவர்கள் கூற,
அதற்கு நபி ﷺ அவர்கள், “ஒருவர் மூன்று
நாட்களை விட குறைவான நாட்களில் குர்ஆனை ஓதுவாரேயானால் அவரால் குர்ஆனின்
கருத்துக்களை புரிந்து கொள்ள இயலாது" என்று அவருக்கு பதிலளித்தார்கள். (
நூல்: திர்மிதி,
புகாரீ, அபூதாவூத் )
அல்குர்ஆனை எதற்காக நாம் ஓத வேண்டும்?
1. நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஓத வேண்டும்!
مَنْ
قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ ، وَالحَسَنَةُ بِعَشْرِ
أَمْثَالِهَا ، لاَ أَقُولُ الْم حَرْفٌ ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ
وَمِيمٌ حَرْفٌ
“அல்லாஹ்வின்
வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து
நன்மைகளைப் போன்றதாகும். “அலிஃப்,
லாம், மீம்’ என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து,
லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று
தான் கூறுவேன்”
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி) ( நூல் : திர்மிதீ )
عَنْ
عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
الْمَاهِرُ
بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِى يَقْرَأُ الْقُرْآنَ
وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ
“குர்ஆனை நன்கு (மனனம்
செய்து) தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க
வானவத்தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு
இரு கூலிகள் இருக்கின்றன”
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ( நூல் : முஸ்லிம் )
2. பரிந்துரையை பெறுவதற்காக ஓத வேண்டும்!
اقْرَءُوا
الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِى يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ
“நீங்கள் குர்ஆனை
ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச் சார்ந்தவருக்குப் பரிந்துரையாக வரும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) ( நூல் :
முஸ்லிம் )
3. வழிதவறி விடாமல் இருப்பதற்காக ஓத வேண்டும்!
قال
رسول الله صلى الله عليه وسلم: " أبشروا فإن هذا القرآن طرفه بيد الله وطرفه
بأيديكم فتمسكوا به فإنكم لن تهلكوا ولن تضلوا بعده أبدا
"
இந்த குர்ஆனின்
ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை
உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) ( நூல்:
தப்ரானி )
4. அல்லாஹ்வின் பேச்சாக இருப்பதால் ஓத வேண்டும்!
عن جابر
بن عبدالله رضي الله عنهما: أن النبي صلى الله عله وسلم كان يقول في خطبته: ((أما
بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهديِ هديُ محمد، وشر الأمور محدَثاتها، وكل
بدعة ضلالة))؛ رواه مسلم
பேச்சுக்களில்
மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது
முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப்
புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ( நூல்: முஸ்லிம்)
5. உயர்வு பெறுவதற்காக ஓத வேண்டும்!
قال
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنَّ اللَّهَ يَرْفَعُ
بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ
இவ்வேதத்தைக்
கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக்
கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம்
குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) – ( நூல்: முஸ்லிம் )
6. நன்மைகளில் குவியல்கள் கிடைப்பதற்காக ஓத வேண்டும்!
عَنْ
عُقْبَةَ بْنِ عَامرٍ رضي الله عنه قَالَ: خَرَجَ رَسُولُ الله صلّى الله عليه
وسلّم وَنَحْنُ في الصُّفَّةِ فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ
يَوْمٍ إِلَى بُطحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ
كَوْمَاوَيْنِ، فِي غَيْرِ إِثْمٍ وَلاَ قَطْعِ رَحِمٍ؟»، فقُلْنَا: يَا رَسُولَ
اللهِ! نُحِبُّ ذَلِكَ، قَالَ: «أَفَلاَ يَغْدَوُ أَحَدُكُمْ إِلَى المَسْجِدِ
فَيَتَعَلَّمَ أَوْ يَقْرَأَ آيَتَيْنِ مِنْ كِتَابِ الله عزّ وجل خَيْرٌ لَهُ
مِنْ نَاقَتَيْنِ. وَثَلاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثٍ. وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ
مِنْ أَرْبَعٍ، وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الإِبِلِ؟»
நாங்கள்
திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ஸல்) எங்களிடம் வந்து
உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும்
புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை
கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள்
அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம்
செல்லக்கூடாதா?
அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை
ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது
மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட
சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு
செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும்
என்று விரும்புவாரா?
என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம்
என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில்
ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) ( நூல்: முஸ்லிம், இப்னுமாஜா )
7. விசாலமான சொர்கத்தை பெறுவதற்காக ஓத வேண்டும்!
و قال
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "يُقَالُ لِصَاحِبِ
الْقُرْآنِ اقْرَأْ , وَارْتَقِ , وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي
الدُّنْيَا , فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا".
மறுமை நாளில்
குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று
கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு
ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில்
உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ( நூல்: அபூதாவுத், திர்மிதி)
8. குர்ஆனின் வெகுமதிகளை அடைவதற்காக ஓத வேண்டும்!
عَنْ
أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
" يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ ، فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ ،
فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ، ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ ، فَيُلْبَسُ
حُلَّةَ الْكَرَامَةِ ، ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ ، فَيَرْضَى عَنْهُ
، فَيُقَالُ لَهُ : اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً "
أخرجه الترْمذي
குர்ஆனை ஓதிய
தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று
சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன்
அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும்.
பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக்
கொள்வான்.
அம்மனிதரிடம்
குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு
வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) ( நூல்: திர்மிதி, இப்னு குஸைமா )
9. பாழாய் போவாமல் இருப்பதற்காக ஓத வேண்டும்!
وعنِ
ابنِ عباسٍ رضيَ اللَّه عنهما قال : قال رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ
وسَلَّم : «إنَّ الَّذي لَيس في جَوْفِهِ شَيْءٌ مِنَ القُرآنِ كالبيتِ الخَرِبِ »
أخرجه الترمذي
குர்ஆனின் சிறு
பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப்
போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) ( நூல்: திர்மிதி )
10. அமல் செய்வதற்காக ஓத வேண்டும்!
عَن
النَّوَّاسِ بنِ سَمعانَ رضيَ اللَّه عنهُ قال : سمِعتُ رسول اللَّهِ صَلّى اللهُ
عَلَيْهِ وسَلَّم يقولُ : «يُؤْتى يوْمَ القِيامةِ بالْقُرْآنِ وَأَهْلِهِ الذِين
كانُوا يعْمَلُونَ بِهِ في الدُّنيَا تَقدُمهُ سورة البقَرَةِ وَآل عِمرَانَ ،
تحَاجَّانِ عَنْ صاحِبِهِمَا » أخرجه مسلم
குர்ஆனை ஓதி
அதன்படி அமல் செய்தவரையும்,
குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து
அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
தனித்துவம் வாய்ந்த அல்குர்ஆன்...
ததப்பருல் குர்ஆன்' என்ற பெயரில் விளக்கவுரை எழுதியுள்ள அல்லாமா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்)
அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
‘அல் குர்ஆன் அல்லாஹ்வின்
வேதம். அது முன்சென்றோர் பின்வருவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் தொடர்பான
அறிவையும் கொண்டுள்ளது. உலகம் இருக்கும் வரையும் அது நிலைத்திருக்கக்கூடியதாகும்.
அது மக்களுக்கு நேர்வழிகாட்டல் வழங்கிக்கொண்டே இருக்கும். அதனால் அதன் அற்புதங்கள்
ஒரு போதும் முடிவுறாது’
என்றுள்ளார்.
அது தான் உண்மை.
உலகில் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் நேர்வழிகாட்டல் வழங்கத் தேவையான அத்தனை
பண்புகளையும் தன்மைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது இக்குர்ஆன். உலகம்
இருக்கும் வரையும் சமூகங்கள் தோன்றி மறைவது தொடராக நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
அதனால் அந்தந்த கால சமூகங்களை சேர்ந்தவர்கள் குர்ஆனை அணுகும் போது அவர்கள்
தமக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். அவ்வாறு ஒவ்வொருவரும் எவ்வளவு தான்
இக்குர்ஆனிலிருந்து அருள் வளங்களைப் பெற்றுக்கொண்டாலும் அதில் எவ்வித குறைபாடும்
ஏற்படாது. அந்தளவுக்கு அருள் நிறைந்த வளமான அற்புதம் அல் குர்அன்'.
அதேநேரம் ‘இக்குர்ஆனை ஒரிரு முறை ஒதிவிட்டால் அல்லது படித்தவிட்டால் அதன் அனைத்து அறிவு
வாசல்களையும் அடைந்துவிடலாமென எதிர்பார்க்க முடியாது. அது அல்லாஹ்வின் வற்றாத
அறிவியல் ஊற்று. அது ஒரு மாபெரும் சுரங்கம். அது எவ்வளவு ஆழ அகலமாக அணுகப்
படுகின்றதோ அந்தளவுக்கு அதன் பிரதிபலன்களை அடைந்து கொள்ளலாம்.’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை 'தப்ஸீர் அஷ்டஷஃராவி'
என்ற பெயரில் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியுள்ள
இமாம் முதவல்லி அஷ்ஷஃராவி (ரஹ்) அவர்கள் இக்குர்அனின் அற்புதம் தொடர்பில், இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ‘குர்ஆன் அருளப்பட்ட
காலத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இந்த 21ஆம் நூற்றாண்டிலும்
காணப்படுகின்றது. அவை இந்நூற்றாண்டின் செய்திகளோடு கொஞ்சமும் பிசகாமல், முரண்படாமல்,
மோதல் நிலையை அடையாமல் ஒத்துப்போகக் கூடியதாக உள்ளது. இது
குர்ஆன் கொண்டிருக்கும் மாபெரும் அற்புதமாகும். இக்குர்ஆன் அருளப்பட்ட மக்களது
அறிவோடு எவ்வாறு ஒத்துப்போனதோ அதே போன்று நவீன கண்டுபிடிப்புக்களும் அறிவியல்
வெளிப்பாடுகளும் நிறைந்த இந்த 21ஆம் நூற்றாண்டோடும்
ஒத்துப்போகின்றது. இக்குர்ஆனின் வசனங்களிலும் சொற்களிலும் எவ்வித மாற்றங்களுமே
ஏற்படவில்லை. அதன் பொருட்களும் ஒன்று தான். ஆனால் காலத்திற்கு ஏற்ப அதன் விளக்கம்
விரிவடைந்து செல்கின்றது.
சவால் விட்டு அழைக்கும் அல்குர்ஆன்...
قُلْ
لَّىِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰۤی اَنْ یَّاْتُوْا بِمِثْلِ هٰذَا
الْقُرْاٰنِ لَا یَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ
ظَهِیْرًا
“இந்த குர்ஆனை போன்ற
ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும். ( அல்குர்ஆன்: 17: 88 )
وَاِنْ
كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰی عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ
مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ
صٰدِقِیْنَ
இன்னும், (முஹம்மது நபி ﷺ
என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக
இருப்பீர்களானால்,
(அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால்
அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு
இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். ( அல்குர்ஆன்: 2: 23 )
அரபுலகிலே தனது
ஆற்றல் மிகு கவிதைகளாலும்,
வீறு கொண்ட உணர்வுகளாலும் புகழ் பெற்ற லபீத் இப்னு ரபீஆ
என்பவர் இதை ஏற்று போட்டியிட முன் வந்தார். அரபு நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம்
கவிதை வெள்ளம் கரைபுரண்டு கொண்டிருந்த காலத்தில் கஃபாவில் தொங்கவிடப்படுகின்ற
கவிதைகளுக்குத் தனிப்புகழ் இருந்தது. மிகச் சிறந்த கவிதைக்கு மட்டுமே அந்த மரியாதை
கிடைத்தது. எழுவர் கவிதைகளே அத்தகைய சிறப்பை பெற்றிருந்தன. ஏழு தொங்கல் கவிதைகள்
(ஸப்அ முஅல்லகாத்.) என்பவை அரபு இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவையாகும்.
அந்த எழுவரில்
ஒருவர் தான் இந்த லபீத் இப்னு ரபீஆ. லபீத் இப்னு ரபீஆ ஒரு கவிதை எழுதி கஃபாவின்
வாயிலில் தொங்கவிட்டார். இவ்வாறு அவர் தொங்கவிட்ட நிகழ்ச்சி நடந்த உடனே முஸ்லிம்
ஒருவர் குர்ஆனிலிருந்து ஓர் அத்தியாயத்தை எழுதி அதற்கு அருகிலேயே மாட்டி வைத்தார்.
இஸ்ஸாத்தை அது வரை ஏற்றுக் கொள்ளாதிருந்த கவிஞர் லபீத் மறுநாள் கஃபா ஆலயத்தின்
வாயில் அருகே வந்தார். திருக்குர்ஆன் அத்தியாயத்தை வாசித்தார். அத்தியாயத்தி ஆரம்ப
வரிகளிலேயே அவர் அசாதாரண முறையில் ஒருவித மாறுதலுக்கு ஆளானார்.
இவை மனிதனின்
வார்த்தைகளே அல்ல. இவை இறைவசனங்கள் தாம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று
உரத்துக் கூறினார். பின்னர் இஸ்லாத்தை தழுவி தமது வாழ்க்கையை இஸ்லாமிய
மார்க்கத்தால் அழகாக்கினார். ( Source: MOHAMED THE HOLY PROPHET BY H.G SARWAR, P.448 )
அரபுலகின் ஒர்
ஒப்பற்ற கவிஞர் இவர். திருக்குர்ஆனின் இலக்கிய நடையால் மிகப்பெரிய அளவில்
ஆட்கொள்ளப்பட்ட இவர் கவிதை எழுதுவதையே விட்டுவிட்டார்.
وكان
عمر – رضي الله عنه – يعجبه شعر العرب وأيّامهم، ويذكر الرواة ومحقّقو ديوان لبيد
أن عمر أرسل يستنشد لبيداً الشعر، فما كان من لبيد إلا أن كتب سورة البقرة وأرسلها
لعمر قائلاً: أبدلني الله هذه في الإسلام مكان الشعر
பின்னாளில்
ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் இந்த கவிஞரிடம் கவிதை வேண்டி கடிதம் எழுதிய போது லபீத்
(ரலி) பின்வருமாறு பதிலளித்தார்கள்.
"அல்பகரா மற்றும் ஆல இம்ரான் போன்ற அத்தியாயங்களை அல்லாஹ் எனக்கு
வழங்கியிருக்கும் போது கவிதையை தொடுவதே எனக்கு அழகல்ல."
பிற்காலத்தில்
இன்னொருவர் இந்த சவாலை ஏற்றார். இப்னுல் முகப்பஉ என்பார் இந்தச் சவாலை ஏற்க முன்
வந்தார். இவரைப் பற்றிய பிரபல கீழைக் கல்வியாளர் ஓல்ஆடன் என்பவர் வியப்புடன்
குர்ஆன் ஒர் அற்புதம் என்பதைப் பற்றி முஹம்மது நபி பெருமிதத்தோடு கூறுவது
உண்மைதான். பொய்யல்ல. இந்த உண்மையை இஸ்லாம் தோன்றி 100 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்று உறுதிபடுத்துகிறது என்று
எழுதுகின்றார்.
அந்த நிகழ்ச்சி
இது தான். மதங்களையே மறுக்கும் ஒரு குழுவினர் குர்ஆன் வெகு வேகமாக தன்
ஈர்ப்பதையும் அதனால் மக்கள் இஸ்லாத்தை தழுவதையும் கண்டு குர்ஆனின் சவாலை ஏற்று
அதற்கு எதிராக ஒரு வேதத்தை உருவாக்க தீர்மானித்தார்கள். இந்த நோக்கத்திற்காக
அவர்கள் இப்னு முகஃப்பஉ தங்கியிருந்த அறைக்குச் சென்றார்கள். அவர்
உட்கார்ந்திருந்தார் அவரது கையில் பேனா இருந்தது. ஆழ்ந்த வாசிப்பில்
ஈடுபட்டிருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே ஒரு கூடை இருந்தது. எழுதி, எழுதி கிழிக்கப்பட்ட காகிதங்கள் பெரும் குவியலாக அதில் கிடந்தன. அங்கு
மட்டுமல்ல அறை முழுவதுமே அத்தகைய குவியல்கள் காணப்பட்டன.
அவை வெறும்
தாள்கள் ஒரு வரி கூட அதில் எழுதப்படவில்லை. அளவு கடந்த திறமையுடைய மிகச் சிறந்த
மொழி அறிவு படைத்த அந்த ஈரான் நாட்டு மேதை தன்னுடைய எல்லா சக்திகளையும்
பிரயோகித்து குர்ஆனுக்கு எதிராக ஒரு நூலை எழுதுகின்ற தமது முயற்சியில் ஈடுபட்டு
ஒரு வரி கூட எழுத முடியாமல் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார். அவர் தன்னுடைய
தோல்வியை ஏற்றுக் கொண்டார் ஒரு வரி எழுத முயன்று ஆறு மாதங்கள் ஆகியும் அவரால் எழுத
முடியவில்லை. அவர் நம்பிக்கை இழந்து வெட்கமுற்று அந்த பணியை விட்டே ஒதுங்கிக்
கொண்டார். ( Source:
MOHAMED, HIS LIFE AND DOCTRINES BY WOLLATON. P.143 )
எதிர் வரும்
ரமழானில் இறைமறையோடு நெருங்கிய தொடர்பொன்றை ஏற்படுத்திக் கொள்வோம்!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் வாழும் காலமெல்லாம் அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதும் நற்பேற்றை தந்தருள்வானாக!
அல்குர்ஆனின் வழி
நடந்திடும் மகத்தான பாக்கியத்தை வழங்கியருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:
Post a Comment