Thursday, 26 February 2026

யாசகர்கள் இல்லா முஸ்லிம் உலகு சாத்தியமா?

 

யாசகர்கள் இல்லா முஸ்லிம் உலகு சாத்தியமா?



அல்லாஹ்வின் மகத்தான கருணையால் ரமழானுடைய அருள் நிறைந்த முதல் பத்தின் நிறைவுப் பகுதியில் நாம் வீற்றிருக்கின்றோம். மன்னிப்பு எனும் மகத்தான அடுத்த பத்தை சந்திக்க இருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் அவனுடைய அருளைப் பெற்ற மேன்மக்களாக ஆக்கியருள்வானாக!

அவனுடைய மேலான மன்னிப்புக்கு சொந்தக்காரர்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!

ரமழான் மாதத்தில் பெருமளவிலான யாசகர்கள் நமது பகுதிகளில் சுற்றித் திரிவதும், வீடு வீடாக, கடை கடையாக, பள்ளிவாசல் பள்ளிவாசலாக ஏறி இறங்கி யாசிப்பதும் சில வேளைகளில் அதற்காக அவர்கள் அவமானத்தை சந்திப்பதும் தவறாமல் நாம் கண்டு வரும் காட்சியாகும் 

உண்மையில் இது அவர்களுக்குக் கிடைத்த தனிப்பட்ட அவமானம் அல்ல. முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய அவமானமாகும்.

தற்காலத்தைப் பொருத்தவரையில் நோய், மாற்றுத் திறனாளி, பெற்றோரை இழந்தமை, உறவினர்களால் கைவிடப்பட்டிருத்தல், தொழில் வாய்ப்பின்மை போன்றவர்களுக்கு ஸகாத், ஸதகா பகிரப்படாதிருப்பது போன்றனவே யாசகத்திற்கான அடிப்படை காரணங்களாகும்.

விதிவிலக்காக பலர் தொழில் செய்ய விருப்பமில்லாமல் சோம்பேறிகளாக இருப்பதும், பிச்சை எடுத்தே பழக்கப்பட்டிருப்பதனால் அதனை விட விருப்பமில்லாமல் இருப்பதும் யாசகம் சமூகத்தில் பரவி இருப்பதற்கு மற்றொரு காரணமாகும்.

இஸ்லாம் எங்குமே யாசிப்பதை ஊக்குவிக்க வில்லை. யாசகர்களை ஊக்குவிக்கவில்லை. வரலாற்றில் எங்கும் அப்படியான ஒரு ஆதாரத்தை கூட நாம் பெற்றுக் கொள்ள முடியாது.

ஆனாலும், அதிக அளவில் யாசகர்கள் உள்ள ஒரு சமூகமாக காட்சி தருகிற சமூகமாக இஸ்லாமிய சமூகம் மாறிக் கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.

முஸ்லிம்கள் போன்று போலி தோற்றத்தில் மற்ற சமூகத்தை சார்ந்த மக்களும் கலந்திருக்கின்றார்கள் என்றாலும் கூட யாசகர்கள் அதிகம் உள்ள ஒரு சமூகமாக இஸ்லாமிய சமூகம் மாறிக் கொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவின் 3.7 லட்சம் பிச்சைக்காரர்களில் 25% முஸ்லிம்கள் உள்ளனர். அதாவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நான்காவது பிச்சைக்காரரும் ஒரு முஸ்லிம். பிச்சைக்காரர்கள் என வகைப்படுத்தப்பட்ட 3.7 லட்சம் பேரில், 92,760 பேர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சமூகத்தின் மக்கள்தொகையான 14.23% உடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால், பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் அதிகமாக இருப்பது தெளிவாகிறது. முஸ்லிம்களில், பெண் பிச்சைக்காரர்களின் சதவீதம் (56.38%) ஆண் பிச்சைக்காரர்களை விட (43.61%) அதிகம். பெரும்பாலான சமூக-பொருளாதார குறியீடுகளில் கடைசியில் வைக்கப்படும் சமூகத்தின் நிலை குறித்த சோகமான வர்ணனை இது. ( நன்றி: இஸ்லாமிக் வாய்ஸ், ஏப்ரல் 2024 )

யாசகம் கேட்பதை எப்போதுமே இஸ்லாம் வரவேற்றதில்லை.

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، قَالَ: سَمِعْتُ حَمْزَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ، حَتَّى يَأْتِيَ يَوْمَ القِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மார்க்கம் அனுமதித்துள்ள காரணம் இன்றி) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான். ( நூல் : புகாரி )

மார்க்கம் அனுமதித்த காரணம் என்ன என்பதை தெளிவு படுத்தவும் செய்தார்கள் நபி ஸல் அவர்கள்.

மிகவும் நிர்ப்பந்தமான சூழ்நிலையில் உள்ளவர்கள் யாசகம் கேட்பதற்கான அனுமதியை சில கட்டுப்பாடுகளுடன் நபி ஸல் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

إن المسألة لا تحل لأحد إلا لثلاثة : رجل تحمل حمالة فحلت له المسألة حتى يصيبها ثم يمسك ، ورجل أصابته جائحة اجتاحت ماله فحلت له المسألة حتى يصيب قواماً من عيش ، ورجل أصابته فاقة فقال ثلاثة من ذوي الحجى من قومه لقد أصابت فلاناً فاقة ، فحلت له المسألة حتى يصيب قواماً من عيش ثم قال صلى الله عليه وسلم : ما سواهن من المسألة يا قبيصة سحت يأكله صاحبه سحتاً

رواه الإمام أحمد في ( مسند البصريين ) حديث قبيصة بن مخارق برقم( 20078) ، ومسلم في ( الزكاة ) باب من تحل له المسألة برقم (1044

கபீஸா என்ற நபித்தோழரைப் பார்த்து நபியவர்கள்:- கபீஸாவே !மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு.

1.ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர்.அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரைக்கும் யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்.

2.மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் வாழ்கையின் அடிப்படையைஅல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையைஅடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம்.

3.இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்என்று (சாட்சியம் ) கூறுகின்றனர் என்றால், அவர் வாழ்கையின் அடிப்படையைஅல்லது வாழ்கையின் அவசியத் தேவையைஅடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும், கபீஸாவே! இவையன்றி மற்றைய யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இந்த மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செயப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.அறிவிப்பாளர் : கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலி (ரலி), ( நூல் முஸ்லிம் )

இந்த மூன்று சாராரை தவிர வேறு யாரும் யாசிக்க அனுமதி இல்லை.யார் இந்த மூன்று சாராரில் இல்லையோ அல்லது அந்த நிலையிலிருந்து மீண்டு விட்டாரோ அவர்கள் மறுமை நாளை அஞ்சி யாசகம் கேட்காமல் சுய மரியாதையோடு வாழ முன் வர வேண்டும்.

வறுமையில் சிக்கியவர் யாசகம் கேட்க அனுமதித்த அண்ணல் நபி ஸல் அவர்கள் அதையும் ஒரு கட்டத்தில் தடுத்தே இருக்கின்றார்கள்.

حدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن بن مهدي حدثنا سفيان عن بشير بن إسمعيل عن سيار عن طارق بن شهاب عن عبد الله بن مسعود قال : قال رسول الله صلى الله عليه و سلم من نزلت به فاقة فأنزلها بالناس لم تسد فاقته ومن نزلت به فاقة فأنزلها بالله فيوشك الله له برزق عاجل أو آجل

யாருக்கு வறுமை ஏற்பட்டு மக்களிடம் அதை முறையிடுகிறாரோ அவருடைய வறுமை அடைக்கப்படாது. யாருக்கு வறுமை ஏற்பட்டு அதை அல்லாஹ்விடம் முறையிடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் விரைவான வாழ்வாதாரத்தையோ, அல்லது குறிப்பிட்ட தவணை வரையுள்ள வாழ்வாதாரத்தையோ விரைவில் வழங்குவான். ( நூல் : திர்மிதி )

நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்வதை எந்தளவு வலியுறுத்தி கூறினார்களோ அதே அளவு சுயமரியாதை பேணுதல், யாசகம் கேட்காதிருத்தல் போன்றவற்றையும் நன்கு வலியுறுத்தி கூறியுள்ளார்கள் என்பதை நாம் நன்கு கவனிக்கவேண்டும்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ : ” إِنَّ نَاسًا مِنْ الْأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ : ( مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ، وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ ، وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنْ الصَّبْرِ) رواه البخاري (1469) ، ومسلم (1053)

அன்ஸாரீகளில் சிலர் நபி ஸல் அவர்களிடம் யாசித்தார்கள். நபியவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி (ஸல்)அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் என்னிடமுள்ள செல்வத்தை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவேமாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவராக இருக்கிறாரோ அல்லாஹ் அவரைத் தேவையற்றவராக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறாரோ அவரை அல்லாஹ் பொறுமையாளராக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச்சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லைஎன்றார்கள். (புகாரி-1469)

உறுதிமொழியில் ஒன்றாக இணைத்த நபி ஸல் அவர்கள்...

حَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِىُّ وَسَلَمَةُ بْنُ شَبِيبٍ – قَالَ سَلَمَةُ حَدَّثَنَا وَقَالَ الدَّارِمِىُّ أَخْبَرَنَا مَرْوَانُ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِىُّ – حَدَّثَنَا سَعِيدٌ – وَهُوَ ابْنُ عَبْدِ الْعَزِيزِ – عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ أَبِى إِدْرِيسَ الْخَوْلاَنِىِّ عَنْ أَبِى مُسْلِمٍ الْخَوْلاَنِىِّ قَالَ حَدَّثَنِى الْحَبِيبُ الأَمِينُ أَمَّا هُوَ فَحَبِيبٌ إِلَىَّ وَأَمَّا هُوَ عِنْدِى فَأَمِينٌ عَوْفُ بْنُ مَالِكٍ الأَشْجَعِىُّ قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- تِسْعَةً أَوْ ثَمَانِيَةً أَوْ سَبْعَةً فَقَالَ أَلاَ تُبَايِعُونَ رَسُولَ اللَّهِ وَكُنَّا حَدِيثَ عَهْدٍ بِبَيْعَةٍ فَقُلْنَا قَدْ بَايَعْنَاكَ يَا رَسُولَ اللَّهِ. ثُمَّ قَالَ أَلاَ تُبَايِعُونَ رَسُولَ اللَّهِ فَقُلْنَا قَدْ بَايَعْنَاكَ يَا رَسُولَ اللَّهِ. ثُمَّ قَالَ أَلاَ تُبَايِعُونَ رَسُولَ اللَّهِ قَالَ فَبَسَطْنَا أَيْدِيَنَا وَقُلْنَا قَدْ بَايَعْنَاكَ يَا رَسُولَ اللَّهِ فَعَلاَمَ نُبَايِعُكَ قَالَ عَلَى أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَالصَّلَوَاتِ الْخَمْسِ وَتُطِيعُوا – وَأَسَرَّ كَلِمَةً خَفِيَّةً – وَلاَ تَسْأَلُوا النَّاسَ شَيْئًا فَلَقَدْ رَأَيْتُ بَعْضَ أُولَئِكَ النَّفَرِ يَسْقُطُ سَوْطُ أَحَدِهِمْ فَمَا يَسْأَلُ أَحَدًا يُنَاوِلُهُ إِيَّاهُ.

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது :நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முன்பே உறுதிமொழி அளித்து விட்டோம் என்று கூறினோம். பின்னர் அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று (மீண்டும்) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்து விட்டோம் என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் (மூன்றாவது முறையாக) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று கேட்டபோது, நாங்கள் எங்கள் கைகளை நீட்டி அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; ஐவேளைத் தொழ வேண்டும்; எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்) என்று கூறிவிட்டு, (அடுத்த) ஒரு வார்த்தையை மெதுவாகச் சொன்னார்கள் : மக்களிடம் எதையும் யாசிக்கக் கூடாது என்றும் உறுதிமொழி கேட்டார்கள். (அவ்வாறே நாங்களும் உறுதிமொழி அளித்தோம்.) பிறகு அ(வ்வாறு உறுதியளித்த)வர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து) விழுந்தால்கூட அதை யாரிடமும் எடுத்துத் தருமாறு அவர்கள் கேட்டதில்லை. ( நூல் : முஸ்லிம் )

சுயமரியாதையை இழந்து விடக்கூடாது...

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ المُسَيِّبِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي ثُمَّ قَالَ: يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَدْعُو حَكِيمًا إِلَى العَطَاءِ، فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ، ثُمَّ إِنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، فَقَالَ عُمَرُ: إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ المُسْلِمِينَ عَلَى حَكِيمٍ، أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ، فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ

நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரகத் எனும் அருள் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் பரகத் ஏற்படுத்தப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவர் போலாவார். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது என்று கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஜகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஜகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் அதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் "முஸ்லிம் சமுதாயமே! உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!'' எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) ( நூல் : புகாரி )

மனதை அலைபாயவும் விட்டு விடக்கூடாது...

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ، فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْتِيَ رَجُلًا، فَيَسْأَلَهُ أَعْطَاهُ أَوْ مَنَعَهُ

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் என்னை விட ஏழைக்கு இதைக் கொடுங்களேன் என்பேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! என்றார்கள். ( நூல் : புகாரி )

உழைத்தே உயர வேண்டும்...

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ ثُمَّ يَغْدُوَ – أَحْسِبُهُ قَالَ: إِلَى الجَبَلِ – فَيَحْتَطِبَ، فَيَبِيعَ، فَيَأْكُلَ وَيَتَصَدَّقَ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக் கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது, மக்களிடத்தில் யாசிப்பதை விடச் சிறந்ததாகும். ( நூல் : புகாரி )

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا، فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிறரிடம் யாசகம் கேட்பதைவிட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். ஏனெனில், அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம். ( நூல் : புகாரி )

செல்வந்தர்களே உங்களைத்தான்…

குர்ஆனில் ஏறத்தாழ 32 இடங்களில் ஜகாத் கொடுப்பதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது அல்லது ஆர்வமூட்டபட்டுள்ளது.

 

அதை போன்று 16 இடங்களில் சதகா செய்ய ஆர்வமூட்டபட்டுள்ளது, சதகா செய்பவரை புகழப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு மாற்றமாக குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் ஜகாத் வாங்க சொல்லியோ, சதகா வாங்க சொல்லியோ வரவில்லை. 

செல்வந்தர்கள் மீதான கடமைகளில் ஒன்று ஏழைகள், அநாதைகள், வறுமையில் சிக்கியவர்கள் என்று அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் செல்வத்தை யாருக்கு செலவழிக்க வேண்டும் என்று கூற வரும் போது அங்கே ஏழைகளையும், வறியோரையும் குறிப்பிடுகிறான்.

یَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ قُلْ مَاۤ اَنْفَقْتُمْ مِّنْ خَیْرٍ فَلِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ 

அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.” ( அல்குர்ஆன்: 2: 215 )

யாருக்கு இஹ்ஸான் - மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செலவு செய்ய வேண்டும் என்று கூற வரும் போது அங்கே ஏழைகளையும், வறியோரையும் குறிப்பிடுகிறான்.

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّبِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَالْجَارِ ذِی الْقُرْبٰی وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِیْلِ وَمَا مَلَكَتْ اَیْمَانُكُمْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا

அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. ( அல்குர்ஆன்: 4: 36 )

யாருக்கு பொருளாதாரத்தை கொடுக்க வேண்டும் என்று கூற வரும் போது அங்கே ஏழைகளையும், வறியோரையும் குறிப்பிடுகிறான்.

 

وَاٰتَی الْمَالَ عَلٰی حُبِّهٖ ذَوِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنَ وَابْنَ السَّبِیْلِ وَالسَّآىِٕلِیْنَ وَفِی الرِّقَابِ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ ۚ

தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); ( அல்குர்ஆன்: 2: 177 )

ஜகாத் வழங்கப்பட தகுதியானவர்களை பட்டியலிடும் போது அங்கேயும் ஏழைகளையும், வறியோரையும் குறிப்பிடுகிறான்.

اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِیْنِ وَالْعٰمِلِیْنَ عَلَیْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِی الرِّقَابِ وَالْغٰرِمِیْنَ وَفِیْ سَبِیْلِ اللّٰهِ وَابْنِ السَّبِیْلِ فَرِیْضَةً مِّنَ اللّٰهِ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ 

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். ( அல்குர்ஆன்: 9: 60 )

1) ஏழைகளை இனம் கண்டு உதவி செய்ய வேண்டும்.

لِلْفُقَرَآءِ الَّذِیْنَ اُحْصِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ لَا یَسْتَطِیْعُوْنَ ضَرْبًا فِی الْاَرْضِ یَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِیَآءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْۚ لَا یَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ

பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.

( அல்குர்ஆன்: 2: 273 )

2) வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்..

ஒருமுறை நபி {ஸல்} அவர்களிடம் யாசகம் கேட்டு வந்த ஒருவருக்கு தொழிலுக்கான வழிகளைக்காட்டி வியர்வை சிந்தி உழைத்து உண்ணுமாறு உபதேசித்தார்கள்.

 

وعن أنس بن مالك : أن رجلا من الأنصار أتى النبي صلى الله عليه وسلم يسأله فقال : " أما في بيتك شيء ؟ " قال بلى حلس نلبس بعضه ونبسط بعضه وقعب نشرب فيه من الماء . قال : " ائتني بهما " قال فأتاه بهما فأخذهما رسول الله صلى الله عليه وسلم بيده وقال : " من يشتري هذين ؟ " قال رجل أنا آخذهما بدرهم قال : " من يزيد على درهم ؟ " مرتين أو ثلاثا قال رجل أنا آخذهما بدرهمين فأعطاهما إياه وأخذ الدرهمين فأعطاهما الأنصاري وقال : " اشتر بأحدهما طعاما فانبذه إلى أهلك واشتر بالآخر قدوما فأتني به " . فأتاه به فشد فيه رسول الله صلى الله عليه وسلم عودا بيده ثم قال له اذهب فاحتطب وبع ولا أرينك خمسة عشر يوما " . فذهب الرجل يحتطب ويبيع فجاء وقد أصاب عشرة دراهم فاشترى ببعضها ثوبا وببعضها طعاما فقال رسول الله صلى الله عليه وسلم : " هذا خير لك من أن تجيء المسألة نكتة في وجهك يوم القيامة

ஒரு முறை மதீனாவைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் ஒருவர் நபிகளாரிடம் யாசகம் கேட்டு வந்தார். அதற்கு நபிகளார் உமது வீட்டில் எதுவும் இல்லையா? என வினவ, விரிப்பாக பயன்படுத்தும் ஒரு போர்வையும், நீர் அருந்துவதற்கான ஒரு பாத்திரமும் இருப்பதாக கூறினார்.

அவை இரண்டையும் தங்களிடம் கொண்டு வரும்படி நபியவர்கள் வேண்டவே, அதனை கொண்டு வந்தார் அவர். நபியவர்கள் அதனை சஹாபாக்களிடம் காட்டி உங்களில் யார் இதனை வாங்கிக்கொள்கிறீர்கள் என கேட்க, ஒரு மனிதர் ஒரு திர்ஹம் கொடுத்து அதனை வாங்கிக்கொள்கின்றேன் என்றார்.

அப்போது, நபியவர்கள் மீண்டு ஒரு திர்ஹத்தை விட யார் அதிகமாகத் தர விரும்புகிறீர்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கேட்டார்கள்.

உடனே இன்னொரு மனிதர் இரு திர்ஹம் கொடுத்து நான் அவற்றை வாங்கிக்கொள்கின்றேன் என பதிலளிக்க அவரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இரு திர்ஹங்களையும் அம்மனிதரிடம் நபியவர்கள் கொடுத்து ஒரு திர்ஹமுக்கு உணவு வாங்கி அதனை உனது குடும்பத்தினருக்கு கொடுத்து விடு. எஞ்சிய திர்ஹமுக்கு ஒரு கோடாரியை வாங்கி அதனை என்னிடம் கொண்டுவா என்றார்கள்.

அதற்கு தனது கையாலேயே கைப்பிடியை செய்து கொடுத்து விறகுகளை வெட்டி அதனை வியாபாரம் செய், இன்னும் 15 நாட்களுக்கு என்னை நீ காண வரக்கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அந்த ஏழை முஸ்லிம் விறகுகளைச் சேர்த்து வியாபாரம் செய்யலானார். பத்து திர்கங்களைச் சம்பாதித்து சில பணத்திற்கு உணவுகளை வாங்கியவராக நபிகளாரின் முன் வந்து நின்ற போது,

 நபி {ஸல்} அவர்கள் யாசகம் கேட்டு மறுமை நாளில் உமது முகத்தில் புள்ளியிடப்பட்ட ஒரு அடையாளத்துடன் வருவதை விட இப்படி உழைத்து பொருளீட்டி வாழ்வது உமக்கு மிகவும் சிறந்ததாகும்என்றார்கள். ( நூல்: அபூ தாவூத் )

3) ஏழை எளியோர்களை அவ்வப்போது தமது பெருந்தன்மையால் அரவணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

وفي يوم من الأيام قَدِمتْ قافلة لعبد الرحمن بن عوف بها سبعمائة راحلة تحمل المتاع، فلما دخلت المدينة ارتجت الأرض بها، فقالت عائشة: ما هذه الرجة؟ فقيل لها: عير لعبد الرحمن بن عوف .. سبعمائة ناقة تحمل البُر والدقيق والطعام، فقالت عائشة: بارك الله فيما أعطاه في الدنيا، ولثواب الآخرة أعظم ويدخل عبد الرحمن بن عوف الجنة حبوا، كان الخبر قد وصل لعبد الرحمن بن عوف: فذهب إليها مسرعًا، وقال: أشهدك يا أُمَّه أن هذه العير جميعها بأحمالها وأقتابها وأحلاسها في سبيل الله.

ஒரு சமயம், 700 ஒட்டகங்கள் நிறைய வணிகப் பொருட்களுடனும், தானியங்களுடனும் மதீனமா நகரத்துக்குள் நுழைந்த பொழுது, அந்த வணிகக் கூட்டத்தின் வருகையால் மதீனா நகரமே அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த சலசலப்பை செவியுற்ற அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், இந்த மதீனாவிற்கு என்ன நேர்ந்து விட்டது, ஒரே சலசலப்பாக இருக்கின்றதே..! என்று தனது பணிப் பெண்ணிடம் கேட்கின்றார்கள். அப்துர் ரஹ்மானின் 700 ஒட்டகங்கள் வணிகப் பொருட்களுடன் மதீனா நகருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் இந்த சலசலப்புக்கள் என்று அவருக்குக் கூறப்பட்டது. இதனைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் :

''அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் சுவனத்தில் நுழையும் பொழுது, தவழ்ந்த நிலையிலும், குதித்துக் குதித்தும் நுழைவார்கள்;"" என்று கூறினார்கள்.

இதனைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து அன்னையவர்களிடம், நீங்கள் இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றீர்களா என்று கேட்டார்கள். அன்னையவர்களும் ஆம்..! எனச் சொன்னதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களால் தனக்கு அறிவிக்கப்பட்ட இந்த நன்மாராயத்திற்காக, அல்லாஹ்வின் பெயரால் இந்த வணிகப் பொருட்களையும், அதனைச் சுமந்து வந்திருக்கின்ற இந்த ஒட்டகங்களையும் நான் இந்த முஸ்லிம் உம்மத்தின் நல்வாழ்வுக்காக தானமாகக் கொடுக்கின்றேன் என்று கூறி, அத்தனை பொருட்களையும் ஒட்டகங்களையும் தானம் செய்து விட்டார்கள்

4) நெருக்கடியான காலங்களில் ஏழைகளுக்கும் வறியோர்களுக்கும் வாரி வாரி வழங்க வேண்டும்.

 

وذكر أهل التاريخ أنه في عهد الخليفة أبي بكر الصديق - رضي الله عنه - أصاب الناس جفاف وجوع شديدان، فلمّا ضاق بهم الأمر ذهبوا إلى الخليفة أبي بكر - رضي الله عنه - وقالوا: يا خليفة رسول الله، إنّ السّماء لم تمطر، والأرض لم تنبت، وقد أدرك الناس الهلاك فماذا نفعل؟ قال أبو بكر - رضي الله عنه -: انصرفوا، واصبروا، فإني أرجو ألاّ يأتي المساء حتّى يفرج الله عنكم. وفي آخر النهار جاء الخبر بأنّ قافلة جمالٍ لعثمان بن عفّان - رضي الله عنه - قد أتت من الشّام إلى المدينة. فلمّا وصلت خرج النّاس يستقبلونها، فإذا هي ألف جمل محملة سمناً وزيتاً ودقيقاً، وتوقّفت عند باب عثمان - رضي الله عنه - فلمّا أنزلت أحمالها في داره جاء التجار. قال لهم عثمان - رضي الله عنه - ماذا تريدون؟ أجاب التجار: إنّك تعلم ما نريد، بعنا من هذا الذي وصل إليك فإنّك تعرف حاجة النّاس إليه. قال عثمان: كم أربح على الثّمن الذي اشتريت به؟ قالوا: الدّرهم درهمين. قال: أعطاني غيركم زيادة على هذا. قالوا: أربعة! قال عثمان - رضي الله عنه -: أعطاني غيركم أكثر. قال التّجار: نربحك خمسة. قال عثمان: أعطاني غيركم أكثر. فقالوا: ليس في المدينة تجار غيرنا، ولم يسبقنا أحد إليك، فمن الذي أعطاك أكثر مما أعطينا؟! قال عثمان - رضي الله عنه -:إن الله قد أعطاني بكل درهم عشرة، الحسنة بعشرة أمثالها، فهل عندكم زيادة؟ قالوا: لا. قال عثمان: فإني أشهد الله أني جعلت ما جاءت به هذه الجمال صدقة للمساكين وفقراء المسلمين. ثم أخذ عثمان بن عفان يوزّع بضاعته، فما بقي من فقراء المدينة واحد إلاّ أخذ ما يكفيه ويكفي أهله.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், பஞ்சம் எனும் பேரிடர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடும் பஞ்சத்தால் மக்கள் உண்ண உண்வின்றி, குடிக்க நீரின்றி கடும் சோதனைக்கு உள்ளாகினர். அனுதினமும் ஆட்சியாளரின் வீட்டு வாசலின் முன்பாக ஆயிரமாயிரம் மக்கள் வருவதும், போவதுமாக தங்களின் சிரமங்களை முறையிட்டவர்களாக இருந்ததை தவிர்க்க முடியவில்லை.

அல்லாஹ்வால் எங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஆட்சியாளரே! வானம் பொய்த்து விட்டது! பூமி மலடாகி காய்ந்து விட்டது! நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் என்ன செய்வது?” என்று கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி கேட்டனர்.

கண்ணீர் மல்க, கலீஃபா அபூபக்ர் (ரலி) கூறினார்கள் மக்களே! உங்களின் இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள்! பொறுமை காத்திடுங்கள்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களின் கஷ்டங்களை எல்லாம் மிக விரைவில் நீக்கி, சுகத்தோடு வாழ வைப்பான்என ஆதரவு வைக்கின்றேன்என்று.

 

இப்படியாக நாட்கள் பல உருண்டோடியது. திடீரென ஒரு நாள் மதீனா நகரெங்கும் புளுதிப் படலம், மக்கள் என்னவோ ஏதோவென்று பதறியடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறி மதீனாவின் முக்கிய வீதியில் ஒன்று கூடி தூரத்தில் தெரிந்த புளுதி கொஞ்சம், கொஞ்சமாக மதீனா நகரை நெருங்கி வருவது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

இப்போது புளுதி சிறிது விலகி ஓர் ஒட்டகக் கூட்டம் தங்களின் அருகே வருவதை உணர்ந்தனர்.அவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! அந்த ஒட்டகக் கூட்டத்தினரைக் கண்டு

ஆம்! அந்த ஒட்டகக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்களின் வியாபாரக் கூட்டம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஷாமுக்கு சென்றிருந்த வியாபாரக் கூட்டம். பெருமளவு தானியங்களோடும், ஜைத்தூன் எண்ணெய் பீப்பாய்களோடும், கொழுப்புகளோடும் ஆயிரம் ஒட்டகைகளில் வந்து உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக நின்றது.

வரலாற்று ஆசிரியர்கள் இப்படிக் கூட கூறுவார்கள் முதல் ஒட்டகம் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன் நின்றது என்றால் ஆயிரமாவது கடைசி ஒட்டகம் ஷாமின் எல்லையில் நின்றதுஎன்று.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மதீனா மற்றும் அதன் சுற்று வட்டார வியாபாரிகள் அனைவரும் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக கூடிவிட்டனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் வியாபாரிகளின் முற்றுகையையும், மக்களின் முகத்தில் தெரிந்த சோக ரேகைகளின் பிண்ணனியையும் ஒரே நேரத்தில் புரிந்து கொண்டார்கள்.

ஏனெனில், வருகிற வழியிலேயே மதீனாவில் நிகழ்கிற பேரிடர், அதனால் ஏற்பட்டிருக்கிற பசி, பஞ்சம் ஆகியவற்றைக் கேட்டு தெரிந்து வைத்திருந்தார்கள்.

உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளின் சார்பாக ஒருவர் முன் வந்து மக்களின் தேவைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்! எனவே, மொத்த சரக்குகளையும் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளாகிய எங்களிடமே நீங்கள் விலைக்கு தர வேண்டும். வெளியூர் வியாபாரிகளுக்கு நீங்கள் விற்பனை செய்யக் கூடாதுஎன்று கோரிக்கை வைத்தார்.

அது கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் என்னிடம் இருந்து நீங்கள் வாங்கும் பொருளுக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு, வியாபாரிகள் ஒரு திர்ஹம் மதிப்புள்ள பொருளுக்கு இரண்டு திர்ஹம்கள் தருகின்றோம்என்றார்கள். அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்என்று கூறினார்கள்.

அதற்கு, வியாபாரிகள் இரண்டுக்கு மூன்று திர்ஹம்என்றார்கள். அதற்கு , உஸ்மான் (ரலி) அவர்கள் வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்என்று கூறினார்கள்.

அதற்கு, வியாபாரிகள் மூன்றுக்கு நான்கு திர்ஹம்என்றார்கள். அப்போதும் முன்பு போன்றே உஸ்மான் (ரலி) அவர்கள் கூற, இப்போது வியாபாரிகள் கடைசியாக நான்குக்கு ஐந்து திர்ஹம் தருகின்றோம்என்றார்கள்.

அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்என்று கூறினார்கள். இதைக் கேட்ட வியாபாரிகள் எங்களுக்குத் தெரிந்து உள்ளூரின்,சுற்றுபுறத்தின் அனைத்து வியாபாரிகளும் இங்கே தான் குழுமியிருக்கின்றோம். அத்தோடு இதுவரை உங்களிடம் தான் நாங்கள் கொடுக்கல் வாங்கலும் வைத்திருக்கின்றோம், எங்களை விட கூடுதல் விலைக்கு, கூடுதல் லாபத்திற்கு வியாபாரம் பேசிய அந்த வியாபாரி யார்? இப்பொழுதே எங்களுக்குத் தெரிய வேண்டும்? என்று கேட்டனர்.

அது கேட்ட உஸ்மான் (ரலி) அப்படியே மௌனித்து நிற்கின்றார்கள். மக்கள் ஏக்கத்தோடு நிற்கின்றார்கள். வியாபாரிகள் புருவத்தை உயர்த்தி யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு நின்று கொண்டிருக்கின்றார்கள்.

நீண்ட மௌனத்திற்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் நான் வியாபாரம் பேசியுள்ளேன்அவன் தான் உங்களை விட அதிக விலைக்கு, லாபத்திற்கு வியாபாரம் பேசிய வியாபாரியாவான்என்று கூறி மௌனத்தைக் கலைத்தார்கள்.

அல்லாஹ் ஒவ்வொரு திர்ஹத்திற்கும் பத்து திர்ஹம் தருவதாக திருக் குர்ஆன் மூலம் வாக்களித்திருக்கின்றான். எவர் அழகிய ஒன்றை நம்மிடம் கொண்டு வருகின்றாரோ அது போன்று அவருக்கு பத்து நன்மைகளை வழங்குவோம்அல்அன்ஆம் அத்தியாயத்தின் 160 –ஆவது வசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, இதை விட கூடுதலாக நீங்கள் யாரும் தருவீர்களா? இறைவனை விட கூடுதலாக வழங்க யாருக்குத் தான் இயலும்? என்று கேட்டார்கள்.

அதற்கு, வியாபாரிகள் எங்களால் ஒருபோதும் அப்படித் தர இயலாதுஎன்று கூறினார்கள்.

அப்போது, உஸ்மான் (ரலி) அவர்கள் என் ஒட்டகைகள் ஆயிரமும் சுமந்து வந்த அத்துனை பொருட்களையும் வறட்சியாலும், பசி பஞ்சத்தாலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிற இந்த மக்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்குகின்றேன்! அல்லாஹ்வே இதற்கு உன்னையே சாட்சியாகவும் ஆக்குகின்றேன்என்று கூறினார்கள்.

மதீனாவில் இருக்கிற எல்லா குடும்பத்தினர்களும் அவரவர்களின் தேவைக்கு ஏற்ப அதில் இருந்து எடுத்துக் கொண்டார்கள். இறுதியில் எதுவும் மிஞ்சவில்லை”. ( நூல்: ஃபிக்ஹுத் தாஜிருல் முஸ்லிம் )

செல்வந்த நபித்தோழர்களில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) அவர்களும் ஏழைகளுக்கு தங்கள் பொருளாதாரத்தை வாரி இறைப்பதில் முண்ணனியில் இருந்தனர்.

தாங்கள் வாழும் காலத்தில் எந்த ஒரு தருணத்திலும் அவர்களை கையேந்த விட வில்லை என்று வரலாறு நமக்கு சொல்கிறது.

ஏழைகள் இல்லா இஸ்லாமிய உலகை கட்டியெழுப்புவோம்!!

 

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை நபி {ஸல்} அவர்கள், யமனுக்கு ஆளுநராக நியமித்தார்கள்.

وعن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعثه إلى اليمن : "فأخبرهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم

நபி {ஸல்} அவர்கள் முஆதே (ரலி) அங்குள்ள செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்கு வழங்குவீராக! , 

நபி {ஸல்} அவர்களின் கட்டளைப்படி அங்குள்ள செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்குவறியவர்களுக்கும் முறையாக பகிர்ந்தளித்தார்கள்.

இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் கணிசமாக ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை கூடியது.

الأموال لأبي عبيد (٧٨٤) رقم (١٩١١) ، وأوله عنده: عن عمرو بن شعيب: "أن معاذ بن جبل لم يزل بالجند, إذ بعثه رسول الله إلى اليمن, حتى مات النبي , وأبو بكر. ثم قدم على عمر, فرده على ما كان عليه

فبعث إليه معاذ بثلث صدقة الناس, فأنكر ذلك عمر ... ثم ذكر ما ههنا. ثم قال: فلما كان العام الثاني، بعث إليه شطر الصدقة, فتراجعا بمثل ذلك. فلما كان العام الثالث، بعث إليه بها كلها, فراجعه عمر بمثل ما راجعه قبل ذلك, فقال معاذ: ما وجدت أحداً يأخذ مني شيئاً". رحم الله عمر, ورحم الله معاذاً، ورضي الله عنهما, وقد ذكر النص كاملاً ابن قدامة في المغني (٢/٦٧٣)

உமர் (ரலி) ஆட்சியின் போது, முஆத் (ரலி) அவர்கள் யமனில் இருந்து மூன்றில் ஒரு பங்கை மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், காரணம் கேட்டதற்கு முஆத் (ரலி) அவர்கள் ஏழைகள் கிடைக்க வில்லை என்று பதில் கூறினார்கள்.

அடுத்த ஆண்டு யமனில் இருந்து ஜகாத்தாக வசூலித்ததில் பாதி தொகையையும், அதற்கு அடுத்த ஆண்டு முழுத்தொகையையும் அனுப்பி வைத்தார்கள் முஆத் (ரலி) அவர்கள்.

உமர் (ரலி) அவர்கள் காரணம் கேட்டதற்கு, யமன் தேசத்தில் ஒரு ஏழை கூட இல்லைஎன்று பதில் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அந்த பொருளாதாரத்தைக் கொண்டு இஸ்லாம் இயம்பும் இன்ன பிற வழிகளில் அதைச் செலவிட்டார்கள். ( நூல்: அல் அம்வால் )

அடுத்த நூறாவது ஆண்டில் முழு உலகில் இருந்தும் வறுமையை இல்லாமல் ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உருவாக்கித்தந்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள்.

ஆம்! உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் காலத்தில் உலகின் எந்த ஒரு பாகத்திலும் ஜகாத் பணத்தைப் பெறுகிற அளவிலான எந்த ஓர் ஏழையில் இருந்திருக்க வில்லை.

فروى أبو عبيد بإسناده عن سهيل بن أبي صالح، عن رجل من الأنصار، قال

 كتب عمر بن عبد العزيز إلى عبد الحميد بن عبد الرحمن وهو بالعراق: أن أخرج للناس أعطياتهم، فكتب إليه عبد الحميد: إني قد أخرجت للناس أعطياتهم وقد بقي في بيت المال مال، فكتب إليه: أن انظر كل من أدان في غير سفه ولا سرف فاقض عنه، قال: قد قضيت عنهم وبقي في بيت المال مال، فكتب إليه: أن زوج كل شاب يريد الزواج، فكتب إليه: إني قد زوجت كل من وجدت وقد بقي في بيت مال المسلمين مال، فكتب إليه بعد مخرج هذا: أن انظر من كانت عليه جزية فضعف عن أرضه، فأسلفه ما يقوى به على عمل أرضه، فإنا لا نريدهم لعام ولا لعامين.

ورواه ابن زنجويه في الأموال أيضا من طريق أبي عبيد

ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஈராக்கின் ஆளுநர் அப்துல் ஹமீத் இப்னு அப்துர்ரஹ்மான் அவர்களுக்குப் பின் வருமாறு கடிதம் எழுதினார்கள்.

மக்களுக்குக் கொடுக்க வேண்டிய மாதாந்திர உதவித் தொகையை அரசுக் கருவூலத்திலிருந்து கொடுத்து விடுங்கள்என்று.

அதற்கு, அப்துர்ரஹ்மான், “நான் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டேன். ஆயினும், அரசுக் கருவூலத்தில் ஏராளமான நிதி மீதமிருக்கிறதுஎன்று பதில் எழுதினார்கள்.

அதற்கு, உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் யாராவது கடனாளியாக கஷ்டப்பட்ட்டால் அவருக்கு அத்தொகையை அரசுக் கருவூலத்திலிருந்து கொடுத்து விடுங்கள்என்று இன்னொரு கடிதத்தில் பதில் எழுதினார்கள்.

அதற்கு, அப்துர்ரஹ்மான் அவர்கள் அப்படிச் செலுத்திய பின்னரும் அரசுக் கருவூலத்தில் இருப்புத் தொகை மீதமிருக்கிறதுஎன்று பதில் எழுதினார்கள்.

மீண்டும், உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் திருமண மஹர்த் தொகையை கொடுப்பதற்கு சிரமப்படுகிற ஏழை இளைஞர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு கொடுத்து திருமணம் செய்ய உதவுங்கள்என்று இன்னொரு கடிதம் எழுதினார்கள்.

அதற்கு, அப்துர்ரஹ்மான் அவர்கள் அப்படிச் செலுத்திய பின்னரும் அரசுக் கருவூலத்தில் இருப்புத் தொகை மீதமிருக்கிறதுஎன்று பதில் எழுதினார்கள்.

இறுதியாக, உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஜிஸ்யா வரி செலுத்தக் கடமைப் பட்ட சகோதர சமய மதத்தவர்களில் எவராவது விவசாயத் தொழில் செய்ய முற்பட்டால் அவர்களுக்குத் தேவையான தொகையைக் கருவூல நிதியிலிருந்து வழங்குங்கள்என்று பரிந்துரைத்தார்கள். ( நூல்: அல் அம்வால் )

ரமலான் ஈகையின் மாதம். தர்மம் என்பது நோன்பாளிகளின் பிரதான பண்புகளில் ஒன்றாகும்.

இந்த ரமழானில் ஏழைகளுக்கான ஸகாத்தையும் உபரியான சதகாவையும் எந்த அளவு கொடுத்திருக்கிறார்கள் என்று சிந்திப்பது அவசியமாகும்.

ஏழைகளுக்கு அவரவர் ஊர்களில் உள்ள ஜகாத் கடமையான செல்வந்தர்கள் தொழில்வாய்ப்புக்களை செய்து கொடுக்கவும் தொழில் வழிகாட்டல்களை வழங்கவும் முஸ்லிம் சமூகத்தின் கல்வித் தரத்தை கூட்டவும் மஹல்லா ரீதியாக ஏற்பாடுகள் செய்வது அவசியமாகும்.

மேலும், யாசகத்தில் இருந்து இந்த உம்மத்தை பாதுகாக்கும் பொறுப்பு இந்த உம்மத்தின் உலமாக்கள், உமராக்கள், தன்வந்தர்கள் ஆகியோருக்கு உள்ளது என்பதை மறவாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க முன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வல்ல ரஹ்மான் அவனிடமே தேவையாகிற அவனிடமே கேட்டுப் பெறுகிற நஸீபை நமெக்கெல்லாம் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment