Sunday, 1 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 13. மர்யமின் குமாரர் நபி ஈஸா (அலை) அவர்கள்!

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 13.

மர்யமின் குமாரர் நபி ஈஸா (அலை) அவர்கள்!



12 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 13 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறு பகுதியும் மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்கள் நிறைவு செய்யப்பட்டு, அல் அன்பியா அத்தியாயத்தின் சில பகுதிகள் என 318 வசங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

தனிப்பட்ட பெண் ஒருவரின் பெயரால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் இறக்கியருளிய ஒரே சூரா மர்யம் சூரா தான். தனிப்பட்ட பெண்ணின் பெயரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுவதும் அன்னை மர்யம் (அலை) அவர்களை மட்டும் தான். அந்த வகையில் அன்னை மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தனித்துவமான கவனத்திற்கு சொந்தக்காரர் ஆவார்கள்.

இந்த உலகில் யூதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று ஆன்மீகக் கோட்பாடுகளின் வரலாற்றிலும் பேசப்படும் முக்கிய மனிதர்களாக இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள். இன்னொருவர் ஈஸா (அலை) அவர்கள். 

இதில் யூதர்கள் ஈஸா நபியின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்; அவரைப் புறக்கணிக்கிறார்கள். கிறித்தவர்களோ அவரின் தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடித்து அவரைக் கடவுளாகக் கொண்டாடுகிறார்கள். இப்படியிருக்க, முஸ்லிம்களாகிய நாம் மட்டுமே அவரின் தகுதிக்கேற்பப் புகழ்கின்றோம்; முறைப்படி மதிக்கின்றோம். 

இதற்கு முக்கிய காரணம், இஸ்லாம் மட்டுமே ஈஸா நபியின் வரலாற்றை உண்மையுடன் உரத்துச் சொல்கிறது. இவ்வகையில் ஈஸா (அலை) அவர்கள் குறித்து சில செய்திகளை இன்றைய தராவீஹ் சிந்தனையின் அமர்வில் பேசவும் கேட்கவும் இருக்கிறோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி ஈஸா (அலை) அவர்கள் குறித்து சூரா மர்யமில் 16 வது வசனம் முதல் 40 வது வசனம் வரை சுமார் 25 வசனங்களில் பேசுகின்றான். மொத்த சூராவின் நான்கில் ஒரு பகுதி நபி ஈஸா (அலை) அவர்கள் குறித்து பேசப்படுகிறது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் ஈஸா என்று 25 இடங்களிலும், அவர்களின் சிறப்புப் பெயரான அல் மஸீஹ் என்று 11 இடங்களிலும், இப்னு மர்யம் என்று 17 இடங்களிலும், அவர்களின் அன்னை மர்யம் அலை அவர்களின் பெயரை 16 இடங்களிலும் குறிப்பிடுகின்றான்.

நபி ஈஸா அலை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை 13 சூராக்களில் 33 இடங்களில் பேசுகின்றான்.

இவ்வளவு விரிவாக ஈஸா (அலை) அவர்கள் குறித்து பேசக் காரணம் இருக்கிறது.

இந்த உலகில் ஏற்படும் குழப்பங்களில் மிகப் பெரியது தஜ்ஜாலின் குழப்பம் அந்த குழப்பத்தை முஹம்மது நபி அவர்களின் உம்மத்தில் ஒருவராக இருந்து தீர்த்து வைக்கூடிய முக்கியப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது, அந்த பொறுப்பை நபி ஈஸா (அலை) அவர்கள் அவர் நிறைவேற்றுவார்கள்.

ஈஸா நபியின் மீள் வருகை உலக அழிவின் ஓர் அடையாளம்:-

وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا

வேதமுடையோரில் எவரும் (அவர் பூமிக்கு வந்து ) மரணிப்பதற்கு முன்னரே அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். மறுமை நாளிலோ அவர் (வேதமுடைய)அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். ( அல்குர்ஆன்: 4: 159 )

وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ

நிச்சயமாக் (ஈஸாவாகிய) அவர் இறுதிநாளின் அடையாளமாவார். அது குறித்து நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். நீங்கள் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேர்வழியாகும் (என்று நபியே நீர் கூறும்) ( அல்குர்ஆன்: 43: 61 )

عَنْ ابْنِ الْمُسَيَّبِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ- البخاري 

மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல் : புகாரி )

عَنْ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَا فَيَقُولُ لَا إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الْأُمَّةَ- مسلم 225

ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபி கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் )

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ يَعْنِي عِيسَى وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ بَيْنَ مُمَصَّرَتَيْنِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الْإِسْلَامِ فَيَدُقُّ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ – ابوداوود 3766

எனக்கும் அவருக்கும் இடையே எந்த நபியும் இல்லை. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈஸாவை அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் வாழும் காலத்தில் இஸ்லாத்தை தவிர அனைத்து மதங்களும் இல்லாமல் போகும். தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள லுத் என்ற கிராமத்தின் வாசலில்) அவனைக் கொல்வார்கள். அவர்கள் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் இறந்து போவார்கள். அவர்களின் ஜனாஸா தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்பார்கள். என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல் : அபூதாவூத் )

عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُرِضَ عَلَيَّ الْأَنْبِيَاء وَرَأَيْتُ عِيسَى ابْنَ مَرْيَمَ عَلَيْهِ السَّلَام فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا عُرْوَةُ بْنُ مَسْعُودٍ – مسلم 244

ஈஸா (அலை) அவர்களை நான் மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் சென்றிருந்த போது பார்த்தேன். உர்வா இப்னு மஸ்ஊத் அஸ் ஸகஃபீ ரலி அவர்களின் சாயலை ஒத்து இருந்தார்கள். ( நூல்: முஸ்லிம் )

عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَصِفَةُ عِيسَى ابْنِ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ فَقَالَ أَبُو مَوْدُودٍ وَقَدْ بَقِيَ فِي الْبَيْتِ مَوْضِعُ قَبْرٍ - ترمذي

ஈஸா (அலை) அவர்கள் மதீனாவில் இறப்பார்கள். பெருமானாருக்குப்   பக்கத்தில் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல: திர்மிதீ )

 

ஈஸா {அலை} அவர்களை அறிந்து கொள்வோம்!!!

ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அற்புதப்படைப்பாற்றலின் மகத்தான ஓர் எடுத்துக்காட்டு ஆவார்கள். 

அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும்.

وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آيَةً لِلْعَالَمِينَ

தனது கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் எனும்) பெண்ணிடத்தில் நமது உயிரிலிருந்து (ரூஹிலிருந்து) ஊதினோம். (அவள் கருத் தரித்தாள்) மர்யமையும் அவரது மகனையும் நாம் உலகத்தாருக்கு ஓர்  அத்தாட்சியாக்கினோம். ( அல்குர்ஆன்: 21:91 )

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ

மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுமை யிலும் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களில் உள்ளவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார் என வானர்கள் கூறியதை (எண்ணிப்பார்பீராக.)

தொட்டில் பருவத்தில் பேசுவார் எனும் முன்னறிவிப்பு...

وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ (46) قَالَتْ رَبِّ أَنَّى يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ قَالَ كَذَلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ (47)

மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் இளமை பருவத்திலும் மக்களிடம் பேசுவார். மேலும் அவர் நல்லவர்களில் உள்ளவருமாவார் என்றும் கூறினர்

அதற்கு மர்யம் எனது இரட்கசனே! எந்த ஆணும் என் னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ் வாறு குழந்தை உருவாகும்? என்று கேட்டார். அவ்வாறே அது நடக்கும் என்று அவன் கூறினான். அல்லாஹ் தான் நாடுவதைப்படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அல்லாஹ் முடிவு செய்துவிட்டால் ஆகுக என்பான். உடனே அது ஆகிவிடும்.                          ( அல்குர்ஆன்: 3: 45-47 )

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியவர்:-

فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا

(ஈஸாவை பெற்றெடுத்து) அவரை சுமந்தவராக தனது கூட்டத் தாரிடம் (மர்யம்) கொண்டு வந்த போது மர்யமே! விபரீதமான ஒரு செயலைச் செய்து விட்டாயே எனக் கூறினர்.ஹாரூனின் சகோதரியே உமது தந்தை கெட்ட மனிதராக இருக்குவுமில்லை. உமது தாயாரும் நடத்தைக் கெட்டவராக இருக்கவும் இல்லையே எனவும் கூறினர். அப்போது மர்யம் தம் குழந்தையை சுட்டிக்காட்னார். தொட்டில் குழந்தையாக இருப்பவரிடம் நாம் எப்படி பேச முடியும் என அவர்கள் கேட்டனர். ( அல்குர்ஆன்: 19:27.28.29. )

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது நபியாகஆக்கப்பட்டவர் இன்ஜீல் வேதம் கொடுக்கப்பட்டவர்:-

 

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا

(தொட்டிலிலிருந்தவாறு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை யாவேன். அவன் எனககு வேதத்தை வழங்கி நபியாகவும் ஆக்கி யுள்ளான் என்று (அக்குழந்தை )கூறியது. ( அல்குர்ஆன்: 19: 30 )

ஈஸா நபியின் அற்புதப்படைப்பு ஆதம் நபியின் படைப்புக்கு ஒப்பானதாகும்.

إِنَّ مَثَلَ عِيسَى عِنْدَ اللَّهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும்.அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு (குன்) ஆகுக என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.( அல்குர்ஆன்: 3: 59 )

ஈஸா நபி அல்லாஹ்வின் அடிமையாவார்:-

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ

நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன் என (ஈஸாவாகிய) அவர் கூறினார். (19:30)

لَنْ يَسْتَنْكِفَ الْمَسِيحُ أَنْ يَكُونَ عَبْدًا لِلَّهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَمَنْ يَسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا

 

(ஈஸா) மஸீஹோ நெருக்கமான வானவர்களோ அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை; தரக்குறைவாகக் கருதமாட்டார்கள். யார் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை தரக் குறைவாகக் கருதி பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (மறுமையில்) தன்னிடம் ஒன்று திரட்டுவான். (4:172)

ஈஸா நபி வணங்கத்தகுந்தவரல்லர்:-

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ قُلْ فَمَنْ يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَنْ يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை) நிராகரித்து விட்டனர்.        மர்யமின் மகன் மஸீஹையும் அவரது தாயாரையும் பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நபியே நீர் கேட்பீராக. வானங்கள் பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். ( அல்குர்ஆன்: 5: 17 )

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ

நிச்சயமாக மர்யமின் மகன் அல் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை நிராகரித்து விட்ட னர். இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும் உங்கள் இறை வனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சுவர்க்கத்தை அல்லாஹ் தடுத்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம் தான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர் களும் இல்லை என்றே அல் மஸீஹ் கூறினார். ( அல்குர்ஆன்: 5: 72 )

ஈஸா {அலை) அல்லாஹ்வின் மகன் அல்ல மர்யம் (அலை) -ன் மகனாவார்):-

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ

உஸைர் அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறு கின்றனர். மஸீஹ் (ஈஸா) அல்லாஹ்வின் மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். இது அவர்களது வாய்களால் கூறும் (வெற்று ) வார்த்தைகளாகும். இதற்கு முன் (ஏக இரட்சகனை) நிராகரித்தோரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகின்றனர். அல்லாஹ் இவர் களை அழித்துவிடுவான். இவர்கள் எவ்வாறு திசைதிருப்பப் படுகின்றனர். ( அல்குர்ஆன்: 9: 30 )

مَا كَانَ لِلَّهِ أَنْ يَتَّخِذَ مِنْ وَلَدٍ سُبْحَانَهُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ

 

எந்தப் பிள்ளையையும்; தனக்கென எடுத்துக் கொள்வது அல்லாஹ் வுக்கு தகுமானதல்ல.அல்லாஹ் தூய்மையானவன். ஏதேனும் ஒரு விடயத்தை அவன் முடிவு செய்தால் அதற்கு ‘‘குன்’’ (ஆகுக) என்று கூறுவது தான் உடனே அது ஆகிவிடும்.( அல்குர்ஆன்: 19: 35 )

மூன்று கடவுளர்கள் எனும் கொள்கையை போதித்தார்களா?:-

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ

நிச்சயமாக அல்லாஹ் என்பவன் (பிதா சுதன் பரிசுத்த ஆவி என) மூவரில் ஒருவன் என்று கூறுபவர்களும் நிராகரித்து விட்டனர். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் ஒரே ஓரு இரட்சகனைத் தவிர வேறு யாருமில்லை. ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக் குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும். ( அல்குர்ஆன்: 5: 73 )

وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுளாக்கிக் கொள்ளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது யா அல்லாஹ்! மிகத் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத வார்த்தையை நான் கூற எனக்கு எந்த அதிகாரமுமல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை நீயே அறிபவன் என்று அவர் கூறுவார்.

எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள் என்று நீ (கூறும் படி)நீ எனக்கு கட்டளையிட்டதைத் தவிர வேறு எதனையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோது அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களை கண்கானிப்பவனாக இருந்தாய். நீ தான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.

அவர்களை நீ தண்டித்தால், நிச்சயமாக அவர்கள் உனது அடியார் களே! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீ மிகைத்தவன், ஞான மிக்கவன் (எனவும் அவர் கூறுவார்). ( அல்குர்ஆன்: 5: 116-118 )

يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதை யும்) கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவ்வார்த்தையை அவன் மர்யமிடம் போட்டான். அவனிடமிருந்து வந்த ஓர் ஆத்மாவே அவர்! ஆகவே அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசி யுங்கள். (கடவுள்கள்;) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அது) உங்களுக்குச் சிறந்ததாகும். நிச்சயமாக (வணங்கப்படத்தகுதியானவன்) அல்லாஹ ஒவனே. அவனுக்குப் பிள்ளை (மகன்) இருப்பதை விட்டும் அவன் மிகத்தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பெறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன். ( அல்குர்ஆன்: 4: 171 )

ஈஸா நபி போதித்த கொள்கை என்ன? அவர்களின் பணி என்ன? 

ஈஸா நபி போதித்த கொள்கை ஓரிறைக் கொள்கை:-

إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ

நிச்சயமாக அல்லாஹ்வே எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனு மாவான். எனவே அவ னையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும் என ஈஸா கூறினார். (3:51)

ஈஸா நபி போதித்த மார்க்கம், இஸ்லாம்:-

شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ

நூஹுக்கு எதை அல்லாஹ் வலியுறுத் தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) மார்க்கத்தை நிலை நாட்டுங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே உமக்கு நாம் வஹியாக அறிவித்ததும் இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததுமாகும். நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ, அது இணை கற்பிப்போருக்குப் பழுவாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். தன்னிடம் மீளுவோரை நேர்வழியில் செலுத்துகிறான். ( அல்குர்ஆன்: 42: 13 )

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

அல்லாஹ்விடம் நிச்சயமாக மார்க்கம் (என்பது) இஸ்லாம்; தான். வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் அறிவு வந்த பின்னரும் தமக்குள் காணப்பட்ட பொறாமையின் காரணமாகவேயன்றி   முரண்படவில்லை. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ (அவர் களை) நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிரமானவன். ( அல்குர்ஆன்: 3: 19 )

யூதர்களுக்கு மட்டும் தூதுவராக அனுப்பப்பட்டவர்:-

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ

இஸ்ராயிலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் உங்க ளுக்கு அனுப் பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என மர்யமின் மகன் ஈஸா கூறினார். (61:6, 3:49, 61:14)

முந்தைய வேதங்களையும், பிந்தைய நபியின் வருகையையும் உண்மைப் படுத்தியவர்:-

மூஸா நபிக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை உண்மைப் படுத்தியவர்:

وَقَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ

தமக்கு முன்னுள்ள தவ்ராத்தில் இருப்பதை உண்மைப்படுத்து பவராக மர்யமின் மகன் ஈஸாவை (நபிமார்களான) அவர்களின் அடிச்சுவட்டில் நாம் தொடரச் செய்தோம். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலையும் வழங்கினோம். அதிலே நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் அது தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் நேர்வழியாகவும் பயபக்தியாளர்களுக்கு    நல்லுபதேசமாகவும் இருக்கிறது. ( அல்குர்ஆன்: 5:46, 3:48, 5:110, 57:27 )

முஹம்மத் நபி பற்றி ஈஸா நபியின் முன்னறிவிப்பு:

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும் எனக்குப் பின்வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதராவேன் என்று மர்யமுடைய மகன் ஈஸா கூறியதை நபியே (முஹம்மதே) நீர்       நினைவூட்டுவீராக! அவர் தெளிவான சான்றுகளுடன் வந்த போது இது தெளிவான சூனியமே என அவர்கள் கூறினர். ( அல்குர்ஆன்: 61:6 )

கடந்த காலமும்... எதிர் காலமும்...

ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை:

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا

அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா மஸீஹை நாங்கள் கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதினாலும் (சபிக்கப் பட்டனர்) அவர்கள் அவரை கொல்லவுமில்லை. அவரைச் சிலுவையில் அறையவு மில்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கபட்டான்.நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து முரண்பாடு கொண்டோர் அவர் பற்றிய சந்தேகத்தில் இருக் கின்றனர். வெறும் யூகத்தை பின் பற்றுவதை; த் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை; ( அல்குர்ஆன்: 4: 156-157 )

ஈஸா நபி அல்லாஹ்வின் பால் உயிரோடு உயர்த்தப்பட்டார்:-

بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا

மாறாக, அவரை அல்லாஹ் தன்னள வில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். ( அல்குர்ஆன்: 4:158, 3: 52-56 )

இது தான் வரலாறு.. இது தான் உண்மை..

 ( اَلۡحَـقُّ مِنۡ رَّبِّكَ فَلَا تَكُنۡ مِّنَ الۡمُمۡتَرِيۡنَ‏ ﴿۶۰

இதுவே ஈஸா நபி விஷயமாக இறைவனிடமிருந்து வந்த உண்மை வரலாறாகும். அதுபற்றிய விவாதத்திற்கு இனி அவசியமில்லை.

  فَمَنۡ حَآجَّكَ فِيۡهِ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ الۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡا نَدۡعُ اَبۡنَآءَنَا وَاَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَاَنۡفُسَنَا وَاَنۡفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ اللّٰهِ عَلَى الۡكٰذِبِيۡنَ‏ ﴿۶۱

(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்!"" என நீர் கூறும். ( அல்குர்ஆன்: 3: 60, 61, 62 )

 اِنَّ هٰذَا لَهُوَ الۡقَصَصُ الۡحَـقُّ ‌‌ۚ وَمَا مِنۡ اِلٰهٍ اِلَّا اللّٰهُ‌ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ‏ ﴿۶۲

நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு, அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன், மிக்க ஞானமுடையோன். 

No comments:

Post a Comment