அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை: 14.
யாஅல்லாஹ் எங்களை நீ இழிவு படுத்தி விடாதே!
13 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
14 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் நேற்று துவங்கப்பட்ட சூரா அல் அன்பியாவின் தொடர்ச்சி
முடிக்கப்பட்டு,
சூரா அல் ஹஜ், சூரா அல் முஃமினூன்
நிறைவு செய்யப்பட்டு 24
வது சூராவான அந் நூரில் சில வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
சூரா ஹஜ்ஜில்
ஓதப்பட்ட ஒரு இறைவசனத்தின் ஒரு சொற்றொடர் நம் இதயத்தை கனமாக்கி இருக்கிறது என்றால்
அது மிகையல்ல.
وَمَنْ
یُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یَشَآءُ ۟
எவனை அல்லாஹ்
இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். ( அல்குர்ஆன்: 22: 18 )
நபி ﷺ அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி பிரார்த்தித்த பிரார்த்தனைகளில் இந்த இழிவும் ஒன்று.
وعند
أحمد من حديث عمر أن النبي -صلى الله عليه وسلم- كان يدعو فيقول: "اللهم زدنا
ولا تنقصنا، وأعطنا ولا تحرمنا، وأكرمنا ولا تهنا، وآثرنا ولا تؤثر علينا، وارض
عنا وأرضنا"
"அல்லாஹ்வே! உனது
அருளை அதிகமாக தருவாயாக! அதில் குறைவு செய்து விடாதே! மேலும், உனது அருளை வழங்கிக் கொண்டே இருப்பாயாக! தடுத்து விடாதே! அல்லாஹ்வே! எங்களை
கண்ணியப்படுத்துவாயாக! கேவலப்படுத்தி விடாதே!" என்று நபி ﷺ அவர்கள் துஆக் கேட்பவர்களாக இருந்தார்கள். ( நூல்:
அஹ்மத் )
روى أبو
داود في سُننه مِن حديث أبي هريرة رضي الله عنه؛ أن النبي صلى الله عليه وسلم كان
يقول: الَّلهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَاْلقِلِّةِ وَالذِّلَّةِ
நபி ﷺ அவர்கள் "அல்லாஹ்வே! வறுமை ஏற்படுவதை விட்டும், என் வாழ்வில் உனது அருள் குறைந்து போவதை விட்டும், கேவலம் ஏற்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று துஆ
கேட்பார்கள். ( நூல்: அபூதாவூத் )
وكان
مِن دعاء احمد بن حنبل: (اللَّهُمَّ أَعِزَّنا بطاعتِك، ولا تُذِلَّنا
بمعصيتك)[الجواب الكافي].
அல்லாஹ்வே! உனக்கு
வழிபடுவதன் ஊடாக எங்களுக்கு கண்ணியத்தை வழங்குவாயாக! உனக்கு மாறுபடுவதின் காரணமாக
எங்களை கேவலப்படுத்தி விடாதே! என்று இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள். ( நூல்: அல் ஜவாபுல் காஃபி )
இழிவும் கேவலமும் எதனால்...?
அல்லாஹ்வும்
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களும் ஈருலகிலும் இழிவையும்
கேவலத்தையும் பெற்றுத் தரும் மட்டமான, பாவகரமான செயல்களை நமக்கு
அறிவிக்காமல் இருக்கவில்லை.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அல்குர்ஆனில் இந்த உலகிலும் நாளை மறுமையிலும் இழிவையும், கேவலத்தையும் சந்திப்பவர்கள் குறித்து நீண்ட பட்டியல் இடுகின்றான்.
இணைவைப்பாளர்கள்
இழிவையும் கேவலத்தையும் சந்திப்பவர்கள் என்று அல் அஃராஃப் அத்தியாயத்தின் 152 வது வசனத்திலும்,
அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர்கள் இழிவையும் கேவலத்தையும்
சந்திப்பவர்கள் என்று அல் முஜாதலா அத்தியாயத்தின் 20 வது வசனத்திலும்,
நயவஞ்சகர்களின் பண்புகளைக் கொண்டவர்கள் இழிவையும்
கேவலத்தையும் சந்திப்பவர்கள் என்று அல் முனாஃபிக்கூன் அத்தியாயத்தின் 08 வது வசனத்திலும்,
பாவத்திலேயே உழல்பவர்கள், தவ்பாவைத் தள்ளிப் போடுபவர்கள் இழிவையும் கேவலத்தையும் சந்திப்பவர்கள் என்று
ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 112 வது வசனத்திலும், இறைமறுப்பாளர்களை,
யூத நஸராக்களை, உற்றநேசர்களாக எடுத்துக்
கொண்டவர்கள் இழிவையும் கேவலத்தையும் சந்திப்பவர்கள் என்று அந் நிஸா அத்தியாயத்தின்
139 வது வசனத்திலும்,
அல் மாயிதா அத்தியாயத்தின் 51 வது வசனத்திலும் குறிப்பிடுகின்றான். இன்னும் பட்டியல் இருக்கிறது மனோஇச்சையை
பின்பற்றுபவர்கள்,
பிரிவினையை தூண்டுபவர்கள், முஸ்லிம் ஐக்கியத்தை விட்டும் விலகி வாழ்பவர்கள் என்று நீண்ட பட்டியல்
இருக்கிறது.
وجُعِلَ
الذُّلُّ والصَّغارُ على مَن خالَفَ أَمْري، ومَنْ تشبَّهَ بقومٍ فهُوَ مِنْهُمْ.
خلاصة حكم المحدث : إسناده صالح الراوي : عبدالله بن عمر | المحدث
: شعيب الأرناؤوط | المصدر : تخريج سير أعلام النبلاء الصفحة
أ
அப்துல்லாஹ் இப்னு
உமர் ரலி அவர்கள் அறிவித்தார்கள்: இழிவும் சிறுமைபடுத்தப்படுவதும் என் வழிமுறைக்கு
மாறுபடும் போது நிகழும். எவர் பிற சமூக மக்களுக்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த
சமூகத்தைச் சேர்ந்தவர் தான்" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
தொழாதவர்களுக்கும், இஃக்லாஸாக
தொழாதவர்களுக்கும் மறுமையில் ஏற்படும் இழிவு..
இந்த உலக வாழ்க்கையில் ஒரு
மனிதன் இபாதத்கள் இல்லாமல் வாழ்ந்து விட்டால், அல்லாஹ்வை வணங்குவதற்காக அதற்குரிய வாய்ப்பை
அவன் சேராமல் அவன் வாழ்ந்து விட்டால், அல்லாஹ்விற்கு முன்னால்
ஸுஜூது செய்வதற்குரிய வாய்ப்பை பெறாமல் அவன் வாழ்ந்து விட்டால், நாளை மறுமையில் அவன் அடையக்கூடிய கேவலம்
இன்னல்கள் துன்பங்கள் இந்த உலகத்தில் மனிதனால் சொல்லி முடிக்க முடியாது.
يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى
السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ (42) خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ
ذِلَّةٌ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ
கெண்டைக்காலை விட்டும்
திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள்
அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால்
அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.
அவர்களுடைய பார்வையெல்லாம்
கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன
தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க
நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை
நிராகரித்து விட்டனர்.) (அல்குர்ஆன் 68 : 42,43)
வசனத்தின் கருத்து : நாளை
மறுமையில் மஹ்ஷருடைய ஒரு காட்சியை அல்லாஹு தஆலா நமக்கு விவரித்துச் சொல்கிறான்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நாளை மஹ்ஷரில் அவனுடைய அடியார்களுக்கு முன்பாக ஒரு காட்சி
தருவான். தன்னுடைய கண்ணியத்திற்குரிய உருவத்தை தனது அடியார்களுக்கு காட்டுவான்.
அப்பொழுது அந்த
அடியார்களைப் பார்த்து கேட்பான்; நான் தான் உங்களுடைய
இறைவன் என்பதாக. அப்பொழுது அந்த அடியார்கள் சொல்வார்கள்; எங்களுக்கும் எங்களுடைய இறைவனுக்கும் இடையில்
அல்குர்ஆனில் வர்ணிக்கப்பட்ட ஒரு அடையாளம் இருக்கிறது.
அந்த அடையாளத்தைக் கொண்டு
நாங்கள் எங்கள் இறைவனை அறிந்து கொள்வோம், என்று சொல்லும்பொழுது, ஸஹீஹ் புகாரியில் வரக்கூடிய அறிவிப்பு இந்த
ஹதீஸ் நீண்ட விவரத்தோடு வருவதை காணலாம்.
«يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ
كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي
الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ
طَبَقًا وَاحِدًا»
அப்போது அல்லாஹ் சொல்வான், ஆம்! அந்த அடையாளத்தை நான் உங்களுக்கு
காட்டப் போகிறேன் என்று தனது காலில் பிற்பகுதியில் இருந்து கெண்டைக்காலில் இருந்து
தனது ஒளியின் திரையை அகற்றுவான்.
அல்லாஹ்வுடைய
கெண்டைக்காலில் இருந்து அந்த திரையை அகற்றும் பொழுது வரக்கூடிய அந்த ஒளிக்கு
முன்னால் யாரெல்லாம் ஈமானோடு இக்லாஸோடு இந்த துனியாவில் வணங்கிக்
கொண்டிருந்தார்களோ அல்லாஹ்வை இபாதத் செய்து கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லாம்
அப்படியே அல்லாஹ்விற்கு முன்னால் சுஜூதில் விழுந்து விடுவார்கள்.
அந்த ஒளி
வெளிப்படுத்தப்படும் பொழுது, உங்கள் இறைவனுக்கு சஜ்தா
செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்கப்படும்.
அப்பொழுது யாரெல்லாம், இந்த துன்யாவில் அல்லாஹ்வை மனத்தூய்மையோடு
ஈமான் கொண்டு, இக்லாஸோடு இபாதத்கள்
செய்து கொண்டிருந்தார்களோ, அவர்கள் எல்லாம் சுஜூதில்
விழுந்து விடுவார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்; யாரெல்லாம் இந்த துனியாவில் அல்லாஹ்வுக்கு
ஸுஜூது செய்வதற்கு அழைக்கப்பட்ட பொழுது, ஸுஜூது செய்யாமல்
இருந்தார்களோ அல்லது சுஜூது செய்தார்கள்; ஆனால் முகஸ்துதிக்காக
பெயருக்காக புகழுக்காக இபாதத் செய்து கொண்டிருந்தவர்கள், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக வணக்க
வழிபாடுகளில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள், இவர்களெல்லாம் ஸுஜூது
செய்வதற்கு முயற்சிப்பார்கள்.
அவர்களால் சுஜூது செய்ய
முடியாது. அவர்கள் கீழே குனிவதற்கு முன் பக்கமாக முயற்சிக்கும் பொழுது அவர்கள்
பின்பக்கமாக விழுவார்கள். அவர்களுடைய பார்வைகள்எல்லாம் அந்நாளில் கேவலப்படும்.
அவர்களை கேவலமும் அவமானமும் சூழ்ந்துகொள்ளும். (அல்குர்ஆன் 68 : 42,43) அறிவிப்பாளர் : அபூ சயீத்
ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4919. )
قال
الرَّسولُ صلَّى اللهُ عليه وسلَّم: ((يحشَرُ المتكَبِّرون يومَ القيامةِ أمثالَ
الذَّرِّ في صورةِ الرِّجالِ، يغشاهم الذُّلُّ من كُلِّ مكانٍ
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: இந்த உலகில் பெருமையோடு நடந்து
கொண்டவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அளவில் சிறிய உருவத்துடன் மனித தோற்றத்தில்
எழுப்புவான். நாளை மறுமையில் அவனை நாலாபுறங்களிலும் இழிவும் கேவலமும் சூழ்ந்து
கொள்ளும்!" ( நூல்: திர்மிதீ )
وَعَنِ
اِبْنِ عُمَرَ -رَضِيَ اَللَّهُ عَنْهُمَا- [قَالَ]: سَمِعْتُ رَسُولَ اَللَّهِ
- صلى الله عليه وسلم -يَقُولُ: { إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ,
وَأَخَذْتُمْ أَذْنَابَ اَلْبَقَرِ, وَرَضِيتُمْ بِالزَّرْعِ, وَتَرَكْتُمْ
اَلْجِهَادَ, سَلَّطَ اَللَّهُ عَلَيْكُمْ ذُلًّا لَا يَنْزِعُهُ حَتَّى
تَرْجِعُوا إِلَى دِينِكُمْ } رَوَاهُ أَبُو دَاوُدَ مِنْ رِوَايَةِ نَافِعٍ
عَنْهُ, وَفِي إِسْنَادِهِ مَقَالٌ.
இப்னு உமர் (ரழி)
அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூற நான் கேட்டேன்:
"நீங்கள் ‘ஈனா’
முறையில் வியாபாரம் செய்து, மாடுகளின் வால்களைப் பிடித்துக்கொண்டு (அதாவது, விவசாயம் மற்றும் உலகாதாய காரியங்களில் மூழ்கி), விவசாயத்தில் திருப்தி அடைந்து, ஜிஹாதைக் கைவிட்டால் -
அல்லாஹ் உங்கள் மீது இழிவைச் சாட்டுவான். நீங்கள் உங்கள் மார்க்கத்திற்குத்
திரும்பும் வரை அதை அவன் நீக்கமாட்டான்." ( நூல்: அபூதாவூத் )
وعن جابر بن عبد الله وأبي أيوب رضي الله عنهما قالا: قال رسول
الله صلى الله عليه وسلم: «ما من امرئ يخذل امرأ مسلماً في موضع تنتهك فيه حرمته،
وينتقص فيه من عرضه، إلا خذله الله في موطن يحب فيه نصرته، وما من امرئ ينصر
مسلماً في موضع ينتقص فيه من عرضه، وينتهك فيه من حرمته إلا نصره الله عز وجل في
موطن يحب فيه نصرته»
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிமை கேவலப்
படுத்துகிறார்கள்;
அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லை என்றால் அல்லாஹ்வுடைய
உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு
விடுவான்.
ஒரு முஸ்லிம்
கேவலப்படுத்தப்படும்போது,
அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி
செய்தால் அவன் ‘அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா?’ என்று ஏங்கும்
தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.” ( நூல்: ஸுனன்
அபூதாவூத் )
وعن سهل
بن حنيف، عن النبي صلى الله عليه وسلم أنه قال: «من أُذل عنده مؤمن فلم ينصره وهو
يقدر على أن ينصره؛ أذله الله عز وجل على رؤوس الخلائق يوم القيامة»[6]
கேவலத்தை சந்தித்த
ஒரு முஸ்லிமுக்கு அவருக்கு உதவி செய்யும் சக்தி இருந்தும் ஒருவர் அவருக்கு உதவி
செய்ய வில்லை என்றால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாளை மறுமையில் அனைத்து
படைப்பினங்கள் முன்னிலையில் கேவலப்படுத்துவான்" என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ
وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ
تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"அல்லாஹ்வே!
ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து
ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை
இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும்
ஆற்றலுடையவன்’’
என்று கூறுவீராக! ( அல்குர்ஆன்: 3: 26 )
முஸ்லிமாக
வாழ்வதில் தான் கண்ணியம் இருக்கிறது….
عن تَميم الداري رضي الله عنه، قال: سمعتُ رسول الله صلى الله
عليه وسلم يقول: «لَيَبْلُغَنَّ هَذَا الأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ
وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ
اللهُ هَذَا الدِّينَ، بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ، عِزًّا يُعِزُّ
اللهُ بِهِ الإِسْلَامَ، وَذُلًّا يُذِلُّ اللهُ بِهِ الكُفْرَ» وَكَانَ تَمِيمٌ
الدَّارِيُّ يَقُولُ: قَدْ عَرَفْتُ ذَلِكَ فِي أَهْلِ بَيْتِي، لَقَدْ أَصَابَ
مَنْ أَسْلَمَ مِنْهُمُ الْخَيْرُ وَالشَّرَفُ وَالْعِزُّ، وَلَقَدْ أَصَابَ مَنْ
كَانَ مِنْهُمْ كَافِرًا الذُّلُّ وَالصَّغَارُ وَالْجِزْيَةُ.
[صحيح] - [رواه أحمد] - [مسند أحمد: 16957]
நபி ﷺ அவர்கள் கூறுவதைக் தான் கேட்டதாக தமீமுத்தாரி (ரழி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'இந்த மார்க்கம் இரவு பகல்
சென்றடையும் இடமெல்லாம் சென்றடையும்;. அல்லாஹ் இந்த
மார்க்கத்தை நகரத்தில் மற்றும் கிராமத்தில் உள்ள எந்த வீட்டையும் சென்றடையாது
விட்டுவிட மாட்டான்.ஆகவே இந்த மார்க்த்தை ஏற்றுக்கொன்றவனை கௌரவப்படுத்துவான்
அல்லது இதனை ஏற்றுக்கொள்ளாதவனை இழிவுபடுத்துவான் . அதாவது இஸ்லாத்தின் மூலம்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவனை கண்ணியப்படுத்துவான், இஸ்லாத்தை நிராகரித்தவனை இழிவு படுத்துவான். இது குறித்து தமீமுத்தாரி அவர்கள்
குறிப்பிடுகையில் நான் இதனை எனது குடும்பத்தவரில் கண்டேன். யார் இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்டனரோ அவர்களுக்கு பாக்கியமும் கௌரவமும் கண்ணியமும் கிடைத்தது. யார்
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு அவமானமும் இழிவும் ஏற்பட்டது.
அவர்கள் ஜிஸ்யா செலுத்துவோராக இருந்தனர்.' ( நூல்: அஹ்மத் )
أخرج الحاكم في "المستدرك" (1/61 ـ 62)عن طارق بن شهاب
قال:خرج عمر بن الخطاب إلى الشام، ومعنا أبو عبيدة بن الجراح، فأتوا على مخاضة
وعمر على ناقة، فنزل عنها وخلع خفيه فوضعهما على عاتقه، وأخذ بزمام ناقته فخاض بها
المخاضة، فقال أبو عبيدة: يا أمير المؤمنين، أأنت تفعل هذا؟! تخلع خفيك وتضعهما على
عاتقيك، وتأخذ بزمام ناقتك وتخوض بها المخاضة؟! ما يسرني أن أهل البلد استشرفوك!
فقال عمر: أوه لو يقل ذا غيرك يا أبا عبيدة جعلته نكالاً لأمة محمد !
إنا كنا أذل قوم فأعزنا الله بالإسلام، فمهما نطلب العز بغير ما أعزنا
الله به أذلنا الله.
ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் சிரியாவுக்கு
புறப்பட்டார்கள்.அவர்களுடன் அபூ உபைதா ரலி அவர்களும் சென்றார்கள்.செல்லும் வழியில்
ஒரு நீர் தடாகத்தை கடந்து செல்லவேண்டியதிருந்தது.அப்போது ஜனாதிபதி உமர் ரலி
அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி,தங்களின் இரு காலுறையையும் கழட்டி தங்களின் தோழ்புஜத்தில்
வைத்துக் கொண்டு,ஒட்டகத்தின் கயிற்றை பிடித்துக்கொண்டு தண்ணீரில் இறங்கி
னார்கள்.
இந்த காட்சியை பார்த்த அபூஉபைதா ரலி அவர்கள்-முஃமின்களின்
தலைவரே!நீங்களா இவ்வாறு செய்கிறீர்கள்?நீங்கள் ஏன் ஒட்டகத்திலி ருந்து இறங்கினீர்?அது உங்களின் மரியாதைக்கு சரியில்லையே என்றார்.மேலும்
நாட்டு மக்களெல்லாம் உங்களை காண ஆவலாக இருக்கின்றனர்.என்றார்கள்.
அதை செவியுற்ற ஜனாதிபதி உமர் ரலி அவர்கள்-கடும் கோபமுற்று
உம்மை தவிர வேறுயாரும் இதை சொல்லியிருந்தால் கடுமையாக தண்டித்திருப்பேன். கண்ணியத்தை
மக்களிடமா எதிர்ப்பார்ப்பது?
நாம் இழிவாக இருந்தோம், அல்லாஹ் இஸ்லாத்தைக்கொண்டு நம்மை
கண்ணியப்படுத்திவிட்டான்.எனவே அல்லாஹ் கண்ணியம் செய்த இஸ்லாத்தை தவிர்த்து வேறு
ஒரு கண்ணியத்தை தேடினால் அது இழிவையே தரும் என்றார்கள். ( அல் இஸ்திஆப் )
கப்ரஸ் இது சிரியாவின் மேற்கே அமைந்திருந்த ஓர் அழகிய தீவு. ஆனால், இப்போது இஸ்லாமியர்களுக்கெதிரான அபாயகரமான தீவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
ஆம்! ரோமர்கள் முஸ்லிம்களுடன் தோற்றுப் போய் ஓடி ஒளிந்து அங்கு தான் தஞ்சம் புகுந்திருந்தனர். இப்போதோ அவர்கள் பெருமளவில் ஆயுதங்களைத் திரட்டி வலுவான கப்பற்படையை உருவாக்கி முன்னர் அடைந்த தோல்விக்கு பலி வாங்கும் முகமாக தயாராகி முஸ்லிம்களை அழிக்க நாள் குறித்துக் கொண்டிருந்தனர்.
இந்த தீவின் மீது படையெடுத்து அங்கேயும் ரோமர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முஆவியா
(ரலி) அவர்களுக்கு இருந்தது. ஆயினும், உமர் (ரலி) அவர்கள் அதற்குள் ஷஹாதா வீரமரணம் அடைந்து விட்டார்கள்.
இதே கருத்தை உஸ்மான்
(ரலி) அவர்களிடம் முஆவியா
(ரலி) அவர்கள் தெரிவித்த போது உஸ்மான் (ரலி) அவர்கள் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.
இதற்கு முன்னர் நடந்த போர்கள் அனைத்தும் நிலங்களிலும், பாலைவனங்களிலும் நடைபெற்றது. ஆனால், இது முற்றிலும் வேறுபட்டு கடல் மார்க்கமாக நடைபெறும் போராகும். ஆகவே, எந்த ஒரு முஸ்லிமையும் நிர்பந்திக்காமல், வற்புறுத்தாமல் படை வீரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு சைப்ரஸ் மீது போர் தொடுக்க அனுமதி வழங்கினார்கள்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய அல்லவா போர் நடத்தப் படுகின்றது. ஆர்வமாக பலர் வந்து இணைந்து கொள்கின்றார்கள். அந்தப் படையில் அபூதர் அல் ஃகிஃபாரீ (ரலி), ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவரின் மனைவி உம்மு ஹராம் பிந்த் மில்ஹான் (ரலி), அபூதர்தா (ரலி) ஆகிய மூத்த நபித்தோழர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் படை கடல் மார்க்கமாக புறப்பட்டுச் சென்றது.
அல்லாஹ் அந்தப் போரை வெற்றிகரமாக முடித்து வைத்தான். இந்தப் போர் ஹிஜ்ரி 28 மற்றும் 29 –இல் நடைபெற்றது.
ஏராளமான பொருட்செல்வங்கள் ஃகனீமத்தாக வந்து சேர்ந்தன. அந்தச் செல்வங்களை எல்லாம் முஸ்லிம் வீரர்கள் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
كانت
الدنيا كلها في عين أبي الدرداء مجرّد عارية..
عندما
فتحت قبرص وحملت غنائم الحرب الى المدينة رأى الناس أبا الدرداء يبكي... واقتربوا
دهشين يسألونه، وتولى توجيه السؤال اليه:" جبير بن نفير":
قال له:
" يا أبا الدرداء، ما يبكيك في يوم أعز الله فيه الاسلام
وأهله"..؟؟
فأجاب
أبو الدرداء في حكمة بالغة وفهم عميق:
ويحك يا
جبير..
ما أهون
الخلق على الله اذا هم تركوا أمره..
بينما
هي أمة، ظاهرة، قاهرة، لها الملك، تركت أمر الله، فصارت الى ما ترى"..!
أجل..
அதையெல்லாம் கண்ட அபூதர்தா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அருகில் இருந்த ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் “அபூதர்தா அவர்களே! அல்லாஹ் சத்திய சன்மார்க்கத்திற்கு வலுவையும், வெற்றியையும் தந்திருக்கும் இந்த தருணத்தை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் வரவேற்காமல் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கின்றீர்களே?” ஏன் என்ன காரணத்திற்காக அழுகின்றீர்கள்?”.
அபூதர்தா (ரலி) அவர்கள் வினா தொடுத்த ஜுபைரை நோக்கி “ஜுபைரே! அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றியாக வழங்கிக்கொண்டிருக்கின்றான். வெற்றியும் ஆட்சியும், நிலப்பரப்பும் விரிவடைந்து, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகள் விஷயத்தில் முஸ்லிம்கள் பொடுபோக்காக இருந்து விட்டால் எத்தகைய கேவலமானவர்களாக அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் காட்சி தருவார்கள்?”
ஜுபைரே! இதோ, நம் கண் முன்னே வீழ்ந்து கிடப்பவர்களும், கைதியாய் நிற்பவர்களும் யார் தெரியுமா? நேற்று வரை இந்தப் பூமியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்து, அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் இருந்ததால்,
இன்று நம்மிடம் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.
இதைப் போன்ற ஓர் மனோநிலை இந்த பொருட்செல்வங்களையும், வெகுமதிகளையும் கண்டு பிரமித்து நிற்கிற முஸ்லிம்களுக்கு ஏற்படுமானால்,
இன்றைய இந்த வெற்றி நாளை என்னவாகும்?”
இவர்களுக்கு ஏற்பட்ட இந்த இழிவும், கேவலமும் நாளை நமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே?” என்று நினைத்து தான் நான் அழுகின்றேன்”
என்றார்கள் அபூதர்தா (ரலி) அவர்கள்.
( நூல்: தபகாத்து இப்னு ஸஅத் )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரையும் ஈருலகின் அனைத்து இழிவுகளில் இருந்தும், கேவலத்தில்
இருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:
Post a Comment