அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 18.
மனிதனே! நீ யார்?
17 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
18 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 9 வசனங்கள் உட்பட ஸபஃ
அத்தியாயம்,
அல் ஃபாத்திர் அத்தியாயம் மற்றும் யாஸீன், அஸ் ஸாஃப்ஃபாத் அத்தியாயங்கள் என 373 வசனங்கள்
ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய அமர்வில்
நாம் தராவீஹ் சிந்தனையாக இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அஹ்ஸாப்
அத்தியாயத்தின் 72
வது வசனத்தில் மனிதனைக் குறித்த அல்லாஹ்வின் விமர்சனத்தை
பற்றி பார்க்க இருக்கிறோம்.
குர்ஆனில் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் மனிதனிடம் காணப்படும் ஒன்பது குணங்களை பட்டியலிடுகின்றான். அதில்
இன்று ஓதப்பட்ட அஹ்ஸாப் அத்தியாயத்தின் 72 வது வசனத்தில்
கூறப்படும் குணமும் ஒன்றாகும்.
1) பலகீனமானவனாக...
وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفً
மனிதன்
பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். ( அல் குர்ஆன்: 4: 28 )
2. பொறுமையின்மை உள்ளவனாக.
إِنَّ
الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا
நிச்சயமாக மனிதன் பதற்றம் கொண்டவனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
(
அல் குர்ஆன்: 70: 19 )
3. அவசரக்காரனாக...
خُلِقَ
الْإِنسَانُ مِنْ عَجَلٍ
மனிதன்
அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்;( அல்குர்ஆன்: 21: 37 )
وَكَانَ
الْإِنسَانُ عَجُولًا
மனிதன்
அவசரக்காரனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 17: வசனம் 11)
4. அநியாயக்காரனாக..
إِنَّ
الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
நிச்சயமாக மனிதன்
மிக்க அநியாயக்காரனாகவும்,
மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 14: 34 )
5. நன்றிகெட்டவனாக…
وَكَانَ
الْإِنسَانُ كَفُورًا
இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
(
அல்குர்ஆன்: 17: 67 )
إِنَّ
الْإِنسَانَ لَكَفُورٌ
நிச்சயமாக மனிதன்
நன்றிகெட்டவனாக இருக்கிறான். ( அல்குர்ஆன்: 22: 66 )
إِنَّ
الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 100:
6 )
6. நிராகரிப்பாளனாக..
إِنَّ
الْإِنسَانَ لَكَفُورٌ مُّبِينٌ
நிச்சயமாக மனிதன்
பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 43: 15 )
7. கஞ்சனாக..
وَكَانَ
الْإِنسَانُ قَتُورًا
மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்( அல்குர்ஆன்: 17: 100 )
8. சர்ச்சைக்குரியவனாக மற்றும் தர்க்கம் செய்பவனாக..
وَكَانَ
الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا
எனினும் மனிதன்
அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 18: 54 )
9. அறிவிலியாக..
إِنَّهُ
كَانَ ظَلُومًا جَهُولًا
நிச்சயமாக மனிதன்
(தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும்
இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 33: 72 )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் மனிதன் குறித்து அடையாளப் படுத்தி கூறியிருக்கும் எந்தக் குணமும் அவ்வளவு
நல்ல குணங்கள் அல்ல.
இந்தக் குணங்களில்
எந்த குணத்தை கொண்டவனாகவும் ஒரு முஸ்லிம் இருந்து விடக் கூடாது என்பதில் நாம்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
1)
மனிதர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம் ஆனால், ஒரு முஸ்லிம் இறைநம்பிக்கையிலும், உடல் வலிமையிலும், மன உறுதியிலும் பலமானவனாக
இருக்க வேண்டும்.
عن ابي
هريرة قال: قال رسول اللَّهِ ﷺ:- الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى
اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا
يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا
تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا
وَكَذَا
وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ
الشَّيْطَانِ
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவித்தார்கள்:- பலஹீனமான முஃமினை விட பலமான முஃமின் இறைவனுக்கு மிகவும்
விருப்பமானவன். இருவரில் நன்மை உண்டு. அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள் சோர்வடைய
வேண்டாம் நீங்கள் ஆசை பட்டு அது கிடைக்காமல் மீறி நடந்தால் நான் இப்படி
செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாதீர்கள். அல்லாஹ் நாடியதே
நடக்கும்!
(அது செய்திருந்தால் இது செய்திருந்தால் என்ற வார்த்தை) ஷைத்தானின் அமல்களை
திறந்து விடும்" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லீம் )
ஈமானில் பலம்...
أَنَّ
جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَ:- أَنَّهُ غَزَا
مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَلَمَّا
قَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ،
فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِالْعِضَاهِ ، فَنَزَلَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ
بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ
سَمُرَةٍ، وَعَلَّقَ بِهَا سَيْفَهُ، وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا، وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ،
فَقَالَ : ” إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ،
فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتًا ، فَقَالَ :مَنْ يَمْنَعُكَ مِنِّي ؟
فَقُلْتُ : اللَّهُ ” ثَلَاثًا. وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ
ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்: நான் இறைத்தூதர் ﷺ அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக
சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர் ﷺ அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக்
கொண்டிருந்தேன். கருவேல முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர் ﷺ
அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல
திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் ﷺ அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி
ஓய்வெடுத்தார்கள்;
அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள்
ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது, இறைத்தூதர் ﷺ அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம்
சென்றோம். அங்கே நபி ﷺ
அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது நபி ﷺ அவர்கள், ‘நான் தூங்கிக்
கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள்
உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர்
என்னிடம்,
‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நான்,
‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். இதோ
அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்’ என்று கூறினார்கள். பிறகு
அவரை நபி ﷺ அவர்கள் தண்டிக்கவில்லை
(மன்னித்துவிட்டுவிட்டார்கள்.) ( நூல்: புகாரி )
உடல் பலம்..
روى
الشيخان عن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما قال: كنت أصوم الدهر، وأقرأ
القرآن كل ليلة، قال: فإمَّا ذُكِرت للنبي صلى الله عليه وسلم، وإمَّا أرسل إليَّ
فأتيتُه، فقال لي: ((ألم أُخبر أنك تصوم الدهر، وتقرأ القرآن كل ليلة؟))، فقلت:
بلى يا نبي الله، ولم أرد بذلك إلا الخير، قال: ((فإن بحسبك أن تصوم من كل شهر
ثلاثة أيام))، قلت: يا نبي الله، إني أُطيق أفضل من ذلك، قال: ((فإن لزوجك عليك
حقًّا، ولزَوْرِكَ عليك حقًّا، ولجسدك عليك حقًّا))، قال: ((فصم صوم داود نبي الله
صلى الله عليه وسلم، فإنه كان أعْبَدَ الناس))، قال: قلت: يا نبي الله، وما صوم داود؟
قال: ((كان يصوم يومًا، ويفطر يومًا)) قال: ((واقرأ القرآن في كل شهر))، قال قلت:
يا نبي الله، إني أُطيق أفضل من ذلك، قال: ((فاقرأه في كل عشرين))، قال قلت: يا
نبي الله، إني أطيق أفضل من ذلك، قال: ((فاقرأه في كل عشر))، قال قلت: يا نبي
الله، إني أطيق أفضل من ذلك، قال: ((فاقرأه في كل سبع، ولا تزد على ذلك؛ فإن لزوجك
عليك حقًّا، ولزورك عليك حقًّا، ولجسدك عليك حقًّا))، قال: فشدَّدْتُ فشدَّدَ
عليَّ، قال: وقال لي النبي صلى الله عليه وسلم: ((إنك لا تدري، لعلك يطول بك
عمر))، قال: فصرت إلى الذي قال لي النبي صلى الله عليه وسلم، فلما كبِرت وَدِدْتُ
أني كنت قبلت رخصةَ نبي الله صلى الله عليه وسلم؛ (البخاري، حديث: 1975 /مسلم
حديث:1159).
அப்துல்லாஹ் பின்
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நான் உயிரோடு வாழும்வரை
பகலெல்லாம் நோன்பு நோற்பேன்; இரவெல்லாம் நின்று வழி படுவேன்"
என்று நான் சொல்லிக் கொண்டிருந்த செய்தி அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (என்னிடம்), "நீர் இவ்வாறு கூறினீரா?"
என்று கேட்டார்கள். "நான் அவ்வாறு கூறத்தான் செய்தேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அதற்கு அவர்கள், "இது உம்மால் முடியாது;
(சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள் நோன்பை)
விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) உறங்குவீராக! (சிறிது நேரம்) நின்று
வழிபடுவீராக! மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள்வீராக! ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அதைப் போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள்
உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோன்பு
நோற்பதற்குச் சமமாகும்.) இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று
சொன்னார்கள்.
நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்யமுடியும்!" என்று கூறினேன்.
"(அப்படியானால்) ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் நோன்பை
விட்டுவிடுவீராக!" என்று அவர்கள் கூறினார்கள். நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய முடியும், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னேன். "(அப்படியானால்) ஒரு நாள்
நோன்பு நோற்று,
ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவீராக! இதுதான் (இறைத்தூதர்)
தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே நடுநிலையானதாகும்"
என்று கூறினார்கள். "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய
முடியும்" என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "அதைவிடச் சிறந்தது எதுவுமில்லை" என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் குறிப்பிட்ட மூன்று நாட்களை நான் ஏற்றுக்
கொண்டிருப்பது,
என் மனைவி மக்களையும் என் சொத்து பத்துக்களையும்விட எனக்கு
மிகவும் விருப்பானதாகும் (என்பதை முதுமையடைந்துவிட்ட இந்நிலையில் உணர்கிறேன்). ( நூல்: புகாரி )
2)
மனிதர்கள் அவசரக்காரர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம்
அப்படி இருக்கக்கூடாது.
وقال
عليه الصلاة والسلام: (التأني من الله، والعجلة من الشيطان
நிதானம்
அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளது. அவசரம் ஷைத்தானின் குணங்களில் இருந்தும்
உள்ளது என்று நபி ﷺ
அவர்கள் கூறினார்கள்.
மனிதனை தாழ்வு
படுத்துகிற எல்லா அம்சங்களும் அவசரத்தில் இருக்கிறது என்பதால் தான் பெருமானார் ﷺ அவர்கள் அவசரம் சைத்தானின் குணம் என்றார்கள்.
وقال
عمرو بن العاص: لا يزال المرء يجتني من ثمرة العجلة الندامة.
அவசரப்படுதலின்
முடிவை கவலையாகவே மனிதர்கள் பெற்றுக் கொள்வார்கள் என அம்ரு பின் ஆஸ் ரலி
கூறினார்கள்
அவசரத்திற்கான
தீமையை பெருமானார் ﷺ
அவர்கள் இப்படியும் உணர்த்தினார்கள்.
يستجاب
للعبد ما لم يستعجل
அவசரப் படாதவரை
மக்களின் துஆ ஏற்கப்படும்.
இந்த இடத்தில்
நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய தகவல் அவசரம் என்பதன் பொருள் நேரம்
வருதற்கு முன் அல்லது ஒரு காரியம் நிறைவடைவதற்கு முன் அதற்கு முந்துவதாகும்.
عن عمر
بن عبد العزيز أن ابنه عبد الملك قال له: "ما لك لا تنفذ الأمور؟ فوالله ما
أبالي لو أن القدور غلت بي وبك في الحق". قال له عمر: "لا تعجل يا بني،
فإن الله ذم الخمر في القرآن مرتين، وحرمها في الثالثة، وإني أخاف أن أحمل الحق
على الناس جملة، فيدفعوه جملة، ويكون من ذا فتنة".
உமர் பின் அப்துல்
அஸீஸ் (ரஹ்) அவர்கள் பெரும் அரசியல் குழப்பங்கள், ஊழல் மோசடிகள்,
பிரச்சினைகள் நிறைந்த சூழலிலேயே கலீபா பதவியை ஏற்றார்கள்.
எனினும் அப்பிரச்சினைகளையும் மோசடிகளையும் உடனடியாக முற்றுமுழுதாக மாற்றும்
முயற்சியில் அல்லது தடுக்கும் செயல்பாட்டில் அவர் இறங்கவில்லை. படிப்படியாகவே
அவற்றை ஒழித்தார்கள். ஒருமுறை உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களிடம் அவருடைய மகன்
கேட்டார்: “தந்தையே எதற்காக நீங்கள் தயங்குகின்றீர்கள்? பிரச்சினைகளை உடனடியாக முடிக்க வேண்டியதுதானே. உடனுக்குடன் தீர்த்து வைப்பதில்
என்ன தயக்கம்?”.
தந்தை கூறினார்: “அருமை மகனே! நீ
அவசரப்படுகின்றாய். மதுபானத்தை அல்லாஹ் இருமுறை இழிவுபடுத்தினான். பின்னர்
மூன்றாம் முறையே அதனைத் தடை செய்தான். ஒரு விஷயம் உண்மையாகவே இருந்தாலும் மக்களின்
மீது திணிப்பதை நான் பயப்படுகின்றேன். அவ்வாறு திணித்தால் மக்கள் ஒரேயடியாக
மறுத்துவிடலாம் என்று நான் அஞ்சுகிறேன்”. ( நூல்: ஸீரத் உமர்
இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் லிஇமாமி இப்னு அப்துல் ஹிகம் ரஹ்)
3)
மனிதர்கள் அநியாயம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு
முஸ்லிம் அநியாயம் செய்பவனாக இருக்க கூடாது.
يا
عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا».
ஹதீஸே குதுஸி
ஒன்றில் அல்லாஹ் கூறுகின்றான் ; என் அடியார்களே அநியாயம்
செய்வதை என் மீது நான் தடை செய்து விட்டேன். உங்களிடையேயும் அதை நான்
தடுத்திருக்கிறேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள். ( நூல்:
முஸ்லிம் )
وعن ابن
عمرَ رضي اللَّهُ عنهما: أَن رسولَ اللَّه ﷺ قَالَ: المسلمُ أَخو المسلم، لا يَظلِمُه،
ولا يُسْلِمُهُ، ومَنْ كَانَ فِي حاجةِ أَخِيهِ كانَ اللَّهُ فِي حاجتِهِ، ومَنْ
فَرَّجَ عَنْ مُسلمٍ كُرْبةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بها كُرْبةً مِنْ كُرَبِ يوم
القيامةِ، وَمَنْ سَتَرَ مُسْلمًا سَتَرَهُ اللَّهُ يَومَ الْقِيامَةِ مُتَّفَقٌ
عَلَيهِ
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின்
சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் ஒரு
முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமைநாளின் துன்பங்களில்
ஒரு துன்பத்தை நீக்குகின்றான். அறிவிப்பவர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ( நூல்: முஸ்லிம் )
இஸ்லாம் அநியாயம்
செய்வதை மூன்று வகையாக வகைப்படுத்துகிறது. 1,மனிதன் இறைவனுக்குச்
செய்கின்ற அநியாயம். 2.
ஒரு மனிதன் தனக்குத் தானே செய்து கொள்கின்ற அநியாயம். 3. ஒரு மனிதன் பிற மனிதர்களுக்கு செய்கின்ற அநியாயம்.
நபி ﷺ அவர்கள் எவருக்கும் அநியாயம் செய்து விடக்கூடாது
என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள்.
عن عبدِ
اللَّهِ بنِ مسعودٍ قالَ كُنَّا يومَ بدرٍ كلُّ ثلاثةٍ على بعيرٍ كانَ أبو لبابةَ
وعليُّ بنُ أبي طالبٍ زميلَي رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ
قالَ وكانت عُقبَةُ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ قالَ
فقالا نحنُ نمشي عنكَ قالَ ما أنتما بأقوى منِّي ولا أنا بأغنى عنِ الأجرِ منكما
நாங்கள் பத்ர்
யுத்தத்தின் பயணத்தில் இருந்தோம். ஒட்டகங்கள் குறைவாக இருந்ததினால் மூன்று
நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்று நபி ﷺ அவர்களால் எங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அதில்
மூவரும் முறை வைத்து பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் அபூலுபாபா (ரலி), அலி (ரலி),
நபி ﷺ
அவர்கள் ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் ஒதுக்கப்பட்டது.
இருவர்
ஒட்டகத்தின் மீது அமர வேண்டும். ஒருவர் ஒட்டகத்தை வழிநடத்த வேண்டும். இது தான்
முறை. ஆனால்,
அந்த இரு நபித்தோழர்களும் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள்
ஒட்டகத்தில் இருந்து இறங்க வேண்டாம். நீங்களே அதில் பயணித்து வாருங்கள்! நாங்கள்
இருவரும் இறங்கிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அப்போது, நபி ﷺ அவர்கள் நீங்கள் இருவரும் என்னை விட
பலசாலிகளும் அல்ல. மேலும் நன்மையைப் பெறுவதில் நான் ஒன்றும் தேவையற்றவனும் அல்ல
என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மது )
4)
மனிதர்கள் நன்றி கெட்டவர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு
முஸ்லிம் நன்றி கெட்டவனாக இருக்க கூடாது.
أحد
السلف كان أقرع الرأس .. أبرص البدن .. أعمى العينين .. مشلول القدمين واليدين ..
وكان يقول: ("الحمد لله الذي عافاني مما ابتلى به كثيراً ممن خلق، وفضلني
تفضيلاً"). فمر به رجل فقال له: مما عافاك؟؟ أعمى وأبرص وأقرع ومشلول .. فمما
عافاك؟ >فقال:
ويحك يا رجل؛ جعل لي لساناً ذاكراً، وقلباً شاكراً، وبدناً على البلاء صابراً،
اللهم ما أصبح بي من نعمه أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك، فلك الحمد ولك
الشكر.
முன் வாழ்ந்து
மறைந்த ஸலஃபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவர் வழுக்கைத் தலை உடையவராகவும், உடல் குஷ்டரோகமுடையவராகவும், இரு கண்கள்
பார்வையற்றவராகவும்,
இரு பாதங்கள் மற்றும் இரு கைகளும் இயங்காதபடி
சூம்பிப்போனவராகவும் இருந்தார். அவர், “படைத்த
படைப்பினங்களில் அதிகமானோரைச் சோதித்ததை விட்டு என்னைப் பாதுகாத்துச்
சுகமளித்ததோடு,
என்னை நன்றாகவே சிறப்பித்திருக்கும் அல்லாஹ்வுக்கே
புகழனைத்தும்!”
என்று கூறக்கூடியவராக இருந்தார்.
அப்போது, அவருக்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவர் அவரிடம்: “எதைக்கொண்டு அல்லாஹ் உங்களுக்குப் பாதுகாப்பும் சுகமும் அளித்திருக்கின்றான்? நீங்கள் ஓர் குருடர்;
குஷ்டரோகமுடையவர்; வழுக்கைத் தலையர்; இயங்காதபடி கைகளும் பாதங்களும் சூம்பிப்போனவர்; இப்படியிருக்க,
எப்படி அல்லாஹ் உங்களுக்குப் பாதுகாப்பும் சுகமும் அளித்திருக்கின்றான்?” என்று கேட்டார். அதற்கு அவர், “மனிதரே! உமக்கு அல்லாஹ்
அருள் புரிவானாக! பேசும் நாவையும், நன்றி செலுத்தும்
உள்ளத்தையும்,
சோதனையைப் பொறுமையுடன் தாங்கிக்கொள்வதற்கான உடலையும்
அல்லாஹ் எனக்குத் தந்திருக்கின்றானே!” என்று கூறினார்.
5)
மனிதர்கள் தர்க்கம் செய்பவர்களாக இருப்பார்கள் ஆனால் ஒரு
முஸ்லிம் தர்க்கம் செய்பவனாக இருக்க கூடாது.
أنَّ
رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ طَرَقَهُ وفَاطِمَةَ بنْتَ رَسولِ
اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ لَيْلَةً، فَقالَ لهمْ: ألَا تُصَلُّونَ، قالَ
عَلِيٌّ: فَقُلتُ: يا رَسولَ اللَّهِ، إنَّما أنْفُسُنَا بيَدِ اللَّهِ، فَإِذَا
شَاءَ أنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه
وسلَّمَ حِينَ قُلتُ ذلكَ، ولَمْ يَرْجِعْ إلَيَّ شيئًا، ثُمَّ سَمِعْتُهُ وهو
مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ ويقولُ: {وَكانَ الإنْسَانُ أكْثَرَ شيءٍ جَدَلًا}
[الكهف: 54]. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : علي بن أبي طالب | المحدث :
البخاري | المصدر : صحيح البخاري
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி
அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம் நீங்கள் (தஹஜ்ஜுத்)
தொழவில்லையா?
என்று கேட்டார்கள். நான். அல்லாஹ்வின் தூதரே! எங்கள்
உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன அவன் எங்களை
(தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான் என்று சொன்னேன்.
நான் இப்படிச்
சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு நபி
ﷺ அவர்கள் திரும்பிச் சென்றபடி தமது தொடையில்
தட்டிக்கொண்டே மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான் என்று சொல்லி
கொண்டிருந்ததை நான் கேட்டேன். அறிவிப்பவர்: அலீ (ரலி) ( நூல்: புகாரி )
وقال البخاري: حدثنا يسرة بن صفوان اللخمي، حدثنا نافع بن عمر،
عن ابن أبي مليكة، قال: كاد الخيران أن يهلكا، أبو بكر، وعمر رضي الله عنهما، رفعا
أصواتهما عند النبي ﷺ حين قدم عليه ركب بني تميم، فأشار أحدهما بالأقرع بن حابس
أخي بني مجاشع، وأشار الآخر برجل آخر، قال نافع: لا أحفظ اسمه، فقال أبو بكر لعمر
رضي الله عنهما: ما أردت إلا خلافي، قال: ما أردت خلافك، فارتفعت أصواتهما في ذلك
فأنزل الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ
فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ
لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ الآية، قال ابن
الزبير رضي الله عنهما فما كان عمر يسمع رسول الله ﷺ بعد هذه الآية حتى يستفهمه،
ولم يذكر ذلك عن أبيه يعني أبا بكر انفرد به دون مسلم
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்
(ரலி) அறிவித்தார்:- பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி ﷺ அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி
கோரினர்.) அபூபக்ர் (ரலி),
‘(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா
அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்” என்று கூறினார்கள். உமர்
(ரலி), ‘இல்லை;
அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர்(ரலி) (உமர் அவர்களிடம்), ‘நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்” என்று சொல்ல,
உமர் (ரலி), ‘உங்களுக்கு
மாறுசெய்வது என் நோக்கமல்ல”
என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச்
சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும்
உயர்ந்தன. இது தொடர்பாகவே,
‘இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்
முன்னர் (கருத்துக் கூற) முந்தாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்
செவியேற்பவன்;
நன்கறிந்தவன்” எனும் (திருக்குர்ஆன் 49:1) வசனம் அருளப்பட்டது. ( நூல்: புகாரி )
6)
மனிதர்கள் அறிவீனர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம்
அறிவீனனாக இருக்க கூடாது.
قَالَ
اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ
மூஸா கூறினார்
அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்புத்
தேடுகிறேன்”
என்று கூறினார். ( அல்குர்ஆன்: 2: 67 )
وَإِلَّا
تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ
ٱلْجَٰهِلِينَ﴿12:33﴾
(அதற்கு) யூசுஃப், "என் இறைவனே! இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில்
ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். ( அல்குர்ஆன்: 12: 33 )
அறியாமையை
அகற்றும் மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக ஒரு குழுவினர் தம்மை அர்ப்பணிப்பது
அவசியம் என்ற கருத்து பின்வரும் குர்ஆன் வசனத்திலிருந்து தெரிய வருகிறது:
وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ
مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ
وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
'விசுவாசிகள் அனைவருமே
(மதீனாவிலிருந்து) யுத்தத்திற்காகச் செல்ல வேண்டியதில்லை. அவர்களது ஒவ்வொரு
குழுவிலிருந்தும் ஒருசாரார் மார்க்கத்தில் ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக
வெளியேறிச் சென்றிருக்கக்கூடாதா? அவர்களது சமூகத்தவர்கள்
(ஜிஹாதிலிருந்து) அவர்களிடம் திரும்பிவந்தவுடன் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாமல்லவா? (இதன் மூலம்)
அவர்கள் (அந்த அவர்களது சமூகம்;) எச்சரிக்கையாக
நடந்துகொள்ளலாம் '(
அல்குர்ஆன்: 9: 122 )
உமர் இப்னு
அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் "அறிவின்றி செயல்படுபவன் சீர்திருத்துவதை விட
அதிகமாக சீர்குலைப்பான்" என்றார்கள்.
قال
الإمام أحمد: ولولا العلم كان الناس كالبهائم، وقال أيضا: الناس أحوج إلى العلم
منهم إلى الطعام والشراب؛ لأن الطعام والشراب يحتاج إليه في اليوم مرتين أو ثلاثا،
وحاجته إلى العلم بعدد أنفاسه"،
من كتاب
أعلام الموقعين لابن القيم ج2 ص 182.
இமாம் அஹ்மத்
(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “மனிதர்கள் உணவு குடிபானத்தைவிட
அறிவின் பால் அதிக தேவையுடையவர்கள். ஏனெனில், மனிதன் ஒரு நாளில் உணவு
மற்றும் குடிபானம் போன்றவற்றில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் தேவையுடையவனாக
இருக்கின்றான். மாற்றமாக,
அவன் அறிவின்பால் ஒரு நாளில் விடும் மூச்சுக்களின் அளவு
தேவையுடையவனாக இருக்கின்றான்”. ( அல்-ஆதாபுஷ் ஷரீஆ)
حَدَّثَنَا
إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ
عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ اللَّهَ لاَ
يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا، يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ
الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ
النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا
وَأَضَلُّوا ". قَالَ الْفِرَبْرِيُّ حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ هِشَامٍ نَحْوَهُ.
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து
ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த
அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக்
கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த
அறிவுமில்லாமல் மார்க்கத்தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழிகெட்டுப்
போவார்கள்;
பிறரையும் வழி கெடுப்பார்கள். இதை அப்துல்லாஹ் பின் அம்ர்
பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: புகாரி )
மனித சமுதாயமே!
உன் நிலையைப்பற்றி இவ்வளவு தெளிவாக மாமறை கூறுகிறதே! உன் வாழ்கையை எப்படி
அமைத்துக்கொள்ள போகிறாய்?
என்ற இந்த கேள்வியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து, இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக!
மறுமையில் வெற்றி பெறுவோமாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:
Post a Comment