அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை: 19.
கேளுங்கள்
தரப்படும்!
18 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
19 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் ஸாத் அத்தியாயம், அஸ் ஸுமர், அத்தியாயம் மற்றும் அல் முஃமின் அத்தியாயம் என 248 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட ஸாத் அத்தியாயத்தின் 38 –ஆவது வசனத்தில்
நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட ஒரு துஆவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்றுக்
கொண்டு அவர்கள் விரும்பிய அரசாட்சியை இந்த உலகத்தில் அவர்களுக்கு வழங்கினான்.
قَالَ
رَبِّ اغْفِرْ لِیْ وَهَبْ لِیْ مُلْكًا لَّا یَنْۢبَغِیْ لِاَحَدٍ مِّنْ بَعْدِیْ
ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக!
அன்றியும்,
பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ
நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
عَنْ
سَلْمَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ
رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا
رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ، أَنْ يَرُدَّهُمَا صِفْرًا حكم الألباني: صحيح
நிச்சயமாக உங்கள்
இரட்சகன் வெட்கமுள்ளவன். கொடையாளன். தனது அடியார் இரு கரம் ஏந்தி கேட்கும் போது
வெறுங்கையுடன் திருப்பு அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி) (
நூல்: அபூதாவுத் )
عَنْ
أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
" إِنَّ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ فِي الدُّعَاءِ، وَإِنَّ أَبْخَلَ
النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلَامِ " - شعب الإيمان
மக்களில் மிகவும்
இயலாதவர் துஆச் செய்ய இயலாதவர், (துஆச் செய்யாதவர்)
மக்களில் மிகவும் கருமித்தனம் உடையவர் ஸலாம் சொல்வதில் கருமித்தனம் செய்பவர்''என ரஸூலுல்லாஹி ﷺ
அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஷுஅபுல்
ஈமான்)
இவ்வளவு
முக்கியத்துவம் வாய்ந்த துஆவின் விஷயத்தில் நாம் கவனக்குறைவாக இருக்கலாமா? தயங்கலாமா?
துஆ
செய்தால்மூன்றிலொரு பலன் நிச்சயம் கிடைக்கும்...
عَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو لَيْسَ بِإِثْمٍ وَلَا
بِقَطِيعَةِ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ
دَعْوَتَهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ
يَدْفَعَ عَنْهُ مِنَ السوء مثلها) قال: إذا يكثر؟ قال: (الله أكثر) - الأدب
المفرد
பாவத்தை கொண்டோ
உறவு முறிவைக் கொண்டோ தம்முடைய துஆவில் எந்த ஒன்றும் இல்லாமல் ஒருவர் துஆ கேட்டால்
கேட்டது
கிடைக்கும் அல்லது துஆவின் பலன் மறுமையில் நன்மையாக கிடைக்கும் அல்லது அதற்கு
பகரமாக உலகில் நடக்கவிருக்கும் ஆபத்து நீக்கப்படும்" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
1. இறைவனிடம் மனம்
உருகி கெஞ்சி பணிவோடு கேட்க வேண்டும்.
اُدْعُوْا
رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன்
நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 7:55)
2. அல்லாஹ் நம் துஆவை
ஏற்றுக்கொள்வான் என்கின்ற நம்பிக்கையோடும் பொடுபோக்கு இல்லாமலும் கேட்க வேண்டும்.
روى
الترمذي عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((ادعوا اللهَ وأنتم
موقنون بالإجابة، واعلموا أن اللهَ لا يستجيب دعاءً من قلبٍ غافلٍ لاهٍ)؛ (حديث
صحيح) (صحيح الترمذي - للألباني - حديث 2766).
3. துன்பம்
ஏற்படும்போது மட்டும் இறைவனை அழைக்காமல் இன்பமான நேரத்திலும் துஆச் செய்யும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
روى الترمذي عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله
عليه وسلم: ((مَن سره أن يستجيب اللهُ له عند الشدائد والكرب، فليُكثر الدُّعاء في
الرخاء))؛ (حديث حسن) (صحيح الترمذي - للألباني - حديث 2693)
எவர் தன்னுடைய
கஷ்டமான,
சிரமமான நேரத்தில் துஆ அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று
விரும்புகின்றாரோ அவர் தான் நல்ல நிலையில் சந்தோஷமாக வாழும் போது அதிகம் துஆ
செய்பவராக இருந்து கொள்ளட்டும்! என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
துஆவில் எல்லை
கடந்து வரம்பு கடந்து கேட்கக் கூடாது..
عن أبي أمامة أن عبد الله بن مغفل سمع ابنه يقول: اللهم إني أسألك القصر الأبيض عن يمين الجنة إذا دخلتها، فقال: أي بني، سل الله الجنة، وتعوذ بالله من النار، فإني سمعت رسول الله - ﷺ - يقول: «سيكون في هذه الأمة قوم يعتدون في الطهور والدعاء»
அப்துல்லாஹ் இப்னு
மகஃப்ஃபல் ரலி அவர்கள் ஒரு நாள் தமது மகன் பிரார்த்தனை கேட்டுக் கொண்டிருந்ததை
அவதானித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் மகன்
துஆவில் யாஅல்லாஹ்! எனக்கு சுவனத்தில் வலது பக்கத்தில் வெள்ளை மாளிகையை
வழங்குவாயாக! நான் நுழைந்ததும் அதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அப்போது இடைமறித்த
அவரது தந்தை அப்துல்லாஹ் இப்னு மகஃப்ஃபல் ரலி அவர்கள் மகனே! அல்லாஹ்விடம்
சுவனத்தையும் அதன் இன்பங்களையும் நீ கேள்! மேலும் நரகில் இருந்து பாதுகாக்குமாறு
கேள்! ஏனெனில் நபி ﷺ
அவர்கள் கூற நான் கேட்டேன் "என் உம்மத்தில் சிலர் தோன்றுவார்கள் அவர்கள்
சுத்தம் செய்தலிலும் துஆக் கேட்பதிலும் எல்லை கடந்து வரம்பு மீறுவார்கள்"
என்று.
وفي
المسند أن سعداً سمع ابنا له وهو يدعو ويقول: اللهم إني أسألك الجنة ونعيمها
وإستبرقها ونحواً من هذا، وأعوذ بك من النار وسلاسلها وأغلالها.. فقال: لقد سألت
الله خيراً كثيراً، وتعوذت بالله من شر كثير، وإني سمعت رسول الله صلى الله عليه
وسلم يقول: إنه سيكون قوم يعتدون في الدعاء، وقرأ هذه الآية: ادْعُوا رَبَّكُمْ
تَضَرُّعاً وَخُفْيَةً إِنَّهُ لا يُحِبُّ الْمُعْتَدِينَ وإن حسبك أن تقول: اللهم
إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل، وأعوذ بك من النار وما قرب إليها من
قول أو عمل.
ஸஅது (ரலி)
அவர்களின் மகனார் அல்லாஹ்வே! உன்னிடம் நான் சுவனத்தை கேட்கிறேன். சுவனத்தின்
இன்னின்ன இன்பத்தை கேட்கிறேன். உன்னிடம் நரகில் இருந்தும் நரகில் சங்கிலி
போடப்படுவதில் இருந்தும் பாதுகாப்பு கேட்கிறேன்" என்று துஆ செய்தார். அப்போது
ஸஅது ரலி அவர்கள் தமது மகனிடம் "நீ அல்லாஹ்விடம் அதிகமான நலவுகளைக் கேள்!
அதிகமான தீங்குகளை விட்டும் பாதுகாப்பு கேள்! மாறாக, இது போன்று நீ துஆ கேட்காதே! ஏனெனில், நபி ﷺ அவர்கள் கூற நான் கேட்டேன் "என் உம்மத்தில் சிலர்
தோன்றுவார்கள் அவர்கள் சுத்தம் செய்தலிலும் துஆக் கேட்பதிலும் எல்லை கடந்து வரம்பு
மீறுவார்கள்" மேலும்,
அல் அஃராஃப் அத்தியாயத்தின் "நீங்கள் உங்கள்
இரட்சகனிடம் பணிவாகவும்,
மெதுவாகவும் உங்கள் தேவைகளைக் கேளுங்கள்! நிச்சயமாக அவன்
வரம்பு மீறுபவர்களை நேசிக்க மாட்டான்" என்ற வசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, இப்படி வேண்டுமானால் நீ கேட்டுக் கொள் அது உனக்கு போதுமாகும் என்று
கூறியவர்களாக "அல்லாஹ்வே! உன்னிடம் சுவனத்தை கேட்கிறேன். அந்த சுவனத்தின்
பக்கம் அழைத்துச் செல்கிற செயலை செய்யவும், சொல்லை மொழியவும் ஆற்றல்
கேட்கிறேன்.
அல்லாஹ்வே! உன்னிடம்
நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். அந்த நரகத்தின் பக்கம் அழைத்துச் செல்கிற
செயலை விட்டும்,
சொல்லை விட்டும் பாதுகாப்பு கேட்கிறேன். ( நூல்: இப்னு
குஸைமா )
நபி ﷺ அவர்கள் துஆவில் எல்லை கடந்து கேட்பதை
தடுத்துள்ளார்கள். மேலும்,
மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்
என்பதை கவனத்தில் கொண்டு நம் துஆக்களை நாம் கேட்க வேண்டும்.
அபூர்வ துஆக்கள்....
عن أبي
ثابت بن شداد بن أوس رضي الله عنه قال: قال النعمان بن قوقل رضي الله عنه يوم أحد:
اللهم إني أقسم عليك أن أُقتل، فأدخل الجنة، فقُتل، فقال رسول الله - صلى الله
عليه وسلم -: «إن النعمان أقسم على الله، فأبره فلقد رأيته يطأ في حظيرتها ما به
من عرج]).
நுஃமான் இப்னு
கவ்கல் (ரலி) அவர்கள் உஹது யுத்தத்தின் போது "அல்லாஹ்வே! உன் மீது சத்தியமாக!
இந்த யுத்தத்தில் நான் கொல்லப்பட வேண்டும்! சுவனத்தில் நான் நுழைய வேண்டும்"
என்று துஆ செய்தார். அவர் துஆ செய்தது போன்று உஹத் யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டு
ஷஹீத் ஆனார். நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:-திண்ணமாக நுஃமான் துஆவில் அல்லாஹ்வின்
மீது ஆணையிட்டார். அல்லாஹ் அவரின் துஆவை அங்கீகரித்தான். இப்போது தான் அவரை நான்
காலை ஊன்றி ஊன்றி சுவனத்தில் செல்ல கண்டேன்" என்று.
عن
نافع، أن ابن عمر رضي الله عنهما أضاف رجلاً أعمى، فأكرمه ابن عمر رضي الله عنهما،
وأنامه في منزله الذي ينام فيه، فلما كان في جوف الليل، قام ابن عمر رضي الله
عنهما، فتوضأ، فأسبغ الوضوء، ثم صلى ركعتين، ثم دعا بدعاء فهمه الأعمى، فلما رجع
ابن عمر رضي الله عنهما إلى مضجعه، قام الأعمى إلى فضل وضوء ابن عمر رضي الله
عنهما، فتوضأ، وأسبغ، ثم صلى ركعتين، ثم دعا بذلك الدعاء، فرد الله عليه بصره،
فشده الصبح مع ابن عمر رضي الله عنهما بصيرًا، فلما فرغ، التفت إلى ابن عمر رضي
الله عنهما فقال: يا أبا عبد الرحمن دعاء سمعته منك البارحة تدعو به، فهمته، فقمت،
فصنعت مثل الذي صنعت، فرد الله علي بصري، قال: ذاك دعاء علَّمناه رسول الله - صلى
الله عليه وسلم -، وأمرنا أن لا نعلمه أحدًا يدعو به في أمر الدنيا، قال: «قل
اللهم رب الأرواح الفانية، والأجساد البالية، أسألك بطاعة الأرواح الراجعة إلى
أجسادها، وبطاعة الأجساد الملتئمة بعزتك، وبكلماتك النافذة فيهم، وأخذك الحق
بينهم، والخلائق بين يديك ينتظرون فصل قضائك، ويرجون رحمتك، ويخافون عقابك، أن
تجعل النور في بصري، واليقين في قلبي، وذكرك بالليل والنهار على لساني، وعملاً
صالحًا فارزقني»([14]).
இப்னு உமர் (ரலி)
அவர்களின் பணியாளர் நாஃபிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: பார்வையற்ற ஒரு மனிதர்
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தம்மை விருந்தாளியாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்
கொண்டார். இப்னு உமர் (ரலி) அவர்களும் அவர்களை விருந்தாளியாக ஏற்றுக் கொண்டு நல்ல
முறையில் உபசரித்தார்கள். இப்னு உமர் ரலி அவர்கள் வீட்டிலேயே அவரும் இரவு
தங்கினார்.
இரவில்
விழித்தெழுந்து அழகிய முறையில் உளூ செய்து இரண்டு ரக்அத் தொழுது முடித்த இப்னு
உமர் (ரலி) அவர்கள் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் பார்வையற்ற அந்த மனிதர்
புரிந்து கொள்ளும் வகையில் துஆவை ஓதினார்கள். பின்னர் படுக்கைக்கு வந்து படுத்துக்
கொண்டார்கள். சிறிது நேரத்தில் பார்வையற்ற அந்த மனிதர் எழுந்து இப்னு உமர் (ரலி)
அவர்களின் உதவியுடன் உளூ செய்து இரண்டு ரக்அத் தொழுது இப்னு உமர் (ரலி) அவர்கள்
கேட்ட அந்த துஆவைக் கேட்டார். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரின் பார்வையைத் திருப்பி
அளித்தான்.
இந்நிலையில்
சுபுஹ் தொழுகைக்கான அழைப்பு கேட்கவே இப்னு உமர் ரலி அவர்களுடன் இணைந்து அவரும்
நன்கு பார்க்கும் திறனோடு தொழச் சென்றார்.
தொழுது
முடித்ததும் இப்னு உமர் (ரலி) அவர்களை நோக்கி திரும்பி அமர்ந்து " அபூ
அப்துர்ரஹ்மான் அவர்களே! இன்று அதிகாலை நேரத்தில் நீங்கள் கேட்ட அந்த துஆவின்
பொருளை நான் விளங்கிக் கொண்டேன். பின்னர் நீங்கள் செய்தது போல உளூ செய்து இரண்டு
ரக்அத் தொழுது நீங்கள் துஆ கேட்டது போன்றே நானும் கேட்டேன். அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் எனக்கு பார்வையை தந்து விட்டான்" என்றார்கள்.
அதற்கு, இப்னு உமர் (ரலி) அவர்கள் "நபி ஸல் அவர்கள் அந்த துஆவை எங்களுக்கு
கற்றுத் தந்தார்கள். மேலும், எங்களுக்கு அந்த துஆவை
உலக நோக்கங்களுக்காக வேண்டி கேட்கும் நோக்கில் உள்ளவர்கள் எவருக்கும் கற்றுத் தரக்
கூடாது " என்று கட்டளையும் பிறப்பித்தது இருக்கின்றார்கள் என்று கூறினார்கள்.
அந்த துஆவின்
பொருள்:- அழிந்து போகும் ஆன்மாக்களின் இரட்சகனான அல்லாஹ்வே! சோதனைகளுக்கு
உள்ளாக்கப்படும் உடல்களின் இரட்சகனான அல்லாஹ்வே! உன்னிடத்தில் நான் ஒரு ஆன்மாவை
கேட்கிறேன். அந்த ஆன்மா இந்த உடலில் சென்றால் உனக்கு வழிபடுமே, உன் பக்கம் மீளுமே அந்த ஆன்மாவை கேட்கிறேன்.
உன் கண்ணியத்தை
கொண்டு உன் வழிபாட்டில் லயித்திருக்குமே அத்தகைய உடலைக் கேட்கிறேன்.
படைப்புகள்
எல்லாம் உன்னுடைய தீர்ப்பை எதிர் பார்த்து இருக்குமே அந்நாளில் உன் அருளை ஆதரவு
வைப்பவர்களில் ஒருவனாகவும்,
உன் தண்டனையை பயப்படுபவர்களில் ஒருவனாகவும் என்னை நீ ஆக்க
வேண்டும் என்றும் நான் கேட்கிறேன்.
என் பார்வையில்
ஒளி தர வேண்டும் என்று கேட்கிறேன்! என் உள்ளத்தில் உன்னைப் பற்றிய உறுதிப் பாட்டை
கேட்கிறேன்! இரவிலும் பகலிலும் உன்னை திக்ரு செய்கிற நாவைக் கேட்கிறேன்! நல்ல
அமல்களை செய்யும் தவ்ஃபீக்கை உன்னிடம் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! நீயே! வழங்கியருள
வேண்டும் என்று உன்னிடம் கேட்கிறேன்!". ( நூல்: அல் மர்ஜிவு அஸ் ஸாபிக் லிஷ்
ஷவ்கானீ (ரஹ்).. )
عن
إبراهيم التيمي قال:” قال رجل عند عمر رضي الله عنه: اللهم اجعلني من القليل، قال:
فقال عمر: ما هذا الذي تدعو به؟ فقال: إني سمعت الله يقول: (وَقَلِيلٌ مِّنْ
عِبَادِيَ الشَّكُورُ)[1]، فأنا أدعو أن يجعلني من أولئك القليل، قال: فقال عمر:
كل الناس أعلم من عمر”
உமர் ரலி அவர்கள்
தங்களது ஆட்சியின் போது மஸ்ஜித் நபவீயில் அமர்ந்திருக்கும் போது ஒரு மனிதர் துஆக்
கேட்டுக் கொண்டு இருந்தார்.
அவருடைய துஆ சற்று
வித்தியாசமாக இருந்ததை உணர்ந்த உமர் ரலி அவர்கள் அவர் துஆக் கேட்டு முடித்ததும்
அவரை அருகே அழைத்து நீர் கேட்ட துஆவை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றார்கள்.
அதற்கவர், அல்லாஹ்வே! நீ என்னை குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களில் ஒருவனாக
ஆக்குவாயாக!" என்று கேட்டேன் என்றார்.
அது என்ன? குறைவானவர்களில் ஒருவன், புரியவில்லையே!
என்றார்கள் உமர் ரலி அவர்கள்.
அப்போது அவர்
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் "தனது அருள்மறையின் ஸபா அத்தியாயத்தின் 13 வது வசனத்தில் என் அடியார்கள்களில் எனக்கு நன்றி செலுத்துபவர்கள்
குறைவானவர்களே!" என்று சொல்வதை நான் கேட்டுள்ளேன். ஆகவே, தான் நான் இப்படி துஆ செய்தேன் என்றார்கள்.
அதற்கு உமர் ரலி
அவர்கள் "உமரை விட இங்கே மக்கள் எல்லோரும் மிக தெரிந்தவர்களாகவே
இருக்கின்றார்கள்" என்றார்கள். ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா )
روى
البخاري في صحيحه عن زيد بن أسلم عن أبيه عن عمر - رضي الله عنه - قال: اللهم
ارزقني شهادة في سبيلك، واجعل موتي في بلد رسولك - ﷺ -، فاستجاب الله - تعالى -
له، فجعل موته في المدينة، واستشهد فيها بعد ما قتله المجوسي أبو لؤلوة - لعنه
الله
உமர் ரலி அவர்கள் அல்லாஹ்வே!
உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை தருவாயாக! யா அல்லாஹ்! உன்னுடைய தூதர் ﷺ அவர்களின் ஊரான இந்த மதீனாவிலே எனக்கு மரணத்தை
தருவாயாக!" என்று துஆக் கேட்டார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் துஆவை
ஏற்றுக் கொண்டு மதீனாவிலேயே மரணத்தை நல்கினான். அபூலுஃலுவுல் ஃபைரோஸி என்பவனால்
கொல்லப்பட்டு ஷஹீதுடைய அந்தஸ்தையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கினான். ( நூல்:
புகாரி )
وصدقة
الخلوة أحرى ما يكون قبولها، كان علية بن زيد رجلاً من أصحاب النبيّ - صلى اللَّه
عليه وسلّم -، فلما حضّ على الصدقة جاء كلّ رجل منهم بطاقته وما عنده، فقال علية
بن زيد: اللَّهمّ إنه ليس عندي ما أتصدّق به، اللَّهمّ إني أتصدّق بعرضي على من
ناله من خلقك، فأمر رسول اللَّه - صلى اللَّه عليه وسلّم - منادياً، فنادى: أين
المتصدق بعرضه البارحة؟ فقام علية، فقال: قد قبلت صدقتك. رواه ابن مردويه والبيهقي
في الشعب بنحوه وله شاهد صحيح كما قال الحافظ.
நபி {ஸல்}
அவர்கள் தபூக் யுத்தத்திற்கு புறப்படும் முன்பாக யுத்தத்திற்கு
நிதி திரட்டும் முகமாக நபித்தோழர்களை அனுதினமும் ஆர்வமூட்டினார்கள். ஒவ்வொரு
நபித்தோழரும் அவரவர் சக்திக்கு ஏற்ப பொருளாதாத்தை கொண்டு வந்து கொடுத்தனர். இந்த
யுத்தத்தில் பங்கேற்க முடியாமலும், பொருளாதாரத்தை கொடுக்க
முடியாமலும் ஏழ்மையில் வாடிய உல்பா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் இதற்காக மிகவும்
வருந்தினார்கள். ஒவ்வொரு நாளும் தம் இயலாமையை நினைத்தும் கொடுக்க முடியவில்லையே என
நினைத்தும் வேதனை அடைந்தார்கள்.
அன்றொரு நாள்
தஹஜ்ஜத் தொழுது விட்டு "அல்லாஹ்வே! என்னுடைய மானத்தை உனக்காக தர்மம்
செய்கிறேன். என்னுடைய இந்த நிலை கண்டு விமர்சித்தோர், கேலி பேசியோர் என உம் படைப்புகளில் என்னோடு நடந்து கொண்டவர்களோடு நான் மனம்
பொறுத்தவைகளுக்காக நீ தரும் கூலியை உன் பாதையில் தர்மம் செய்கிறேன்! என்று அழுது
மன்றாடினார்கள்.
அன்றைய சுபுஹ்
தொழுகையின் ஜமாஅத் தொழுகையிலும் பங்கேற்றார். தொழுது முடித்ததும் நபி ஸல் அவர்கள்
ஒரு நபித்தோழரை அழைத்து "இன்று அதிகாலை நேரத்தில் அல்லாஹ்விடம் இன்னின்னவாறு
பிரார்த்தனை செய்த மனிதர் இங்கு இருக்கிறாரா?" என்று அறிவிக்கச் சொன்னார்கள். அந்த நபித்தோழர் அறிவித்ததும் "உல்பா
இப்னு ஜைத் (ரலி) அவர்கள் எழுந்து தாம் தான் அப்படி பிரார்த்தித்ததாக"
கூறினார்.
அப்போது நபி (ஸல்)
அவர்கள் "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உம்முடைய தர்மத்தை ஏற்றுக் கொண்டான்"
என்று கூறினார்கள். (நூல்: அல் இஸாபா )
உலகைத் துறந்த
ஆத்ம ஞானி இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் ஒரு முறை ஒரு துறைமுகத்தின் அருகே
அமர்ந்து தமது கிழிந்த தங்களது துணியை தைத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது, அங்கே ஒரு கப்பல் வந்து நின்றது. கப்பலில் பயணம் செய்த சிலர் மேள தாளங்களுடன்
ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
அந்த காலத்தில்
ஒரு பழக்கம் இருந்தது. ஆடல் பாடலின் ஊடே நடுவே ஒருவரை அமர வைத்து இரு
கன்னங்களிலும் மாறி,
மாறி அறைந்து அவரை அழ வைத்து ரசிக்கின்ற கொடிய பழக்கம்.
ஞானி இப்ராஹீம்
இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களை அழைத்துச் சென்று நடுவே அமர வைத்து தங்களின் கொடூர
ரசனையை ரசிக்க ஆரம்பித்தனர்.
அல்லாஹ்வின்
நேசரல்லவா அவர்கள்.?
ஓர் அசரீரி கேட்டது: ”உங்களுடன் இப்படி நடந்து
கொள்கின்றார்களே?
நீங்கள் விரும்பினால் இந்தக் கப்பலை அப்படியே புரட்டி, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விடுகின்றேன்.”
இப்ராஹிம் இப்னு
அத்ஹம் (ரஹ்) அவர்கள் கையேந்தி இப்படித் துஆ செய்தார்களாம்: “இறைவா! நீ இக்கப்பலைப் புரட்டி இவர்களை அழித்திடும் ஆற்றல் பெற்றிருப்பதைப்
போன்றே, இவர்களின் கல்புகளைப் புரட்டி இவர்களை சீர் திருத்தும் ஆற்றலையும்
பெற்றிருக்கின்றாய்! இறைவா! இவர்களின் அறிவுக் கண்களை நீ திறந்து விடு! அவர்கள்
தமது தவறுகளை உணரும் பொருட்டு…”
சிறிது
நேரத்திலேயே அவர்கள் தங்களின் தீய நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோரினர். சிறிது
காலத்திலேயே இறை நேசத்திற்குரிய வாழ்வை வாழ ஆரம்பித்து விட்டனர். ( நூல்: ஃபகீஹுல் உம்மத் மஹ்மூது ஹஸன் கங்கோஹி அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பான
“குதுபாத்தே மஹ்மூத்”
எனும் உர்தூ நூலிலிருந்து.. )

No comments:
Post a Comment