அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 21.
மாநபி ﷺ அவர்களை அல்லாஹ் மகிழ்வித்த தருணம்!!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால் 20
–வது நோன்பை நோற்று, 21 – வது தராவீஹை
நிறைவு செய்து,
21 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும்
நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும்
பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் அல் அஹ்காஃப்,
முஹம்மத், அல் ஃபத்ஹ் ஆகிய சூராக்கள்
நிறைவு செய்யப்பட்டு,
அல் ஹுஜ்ராத் அத்தியாயத்தின் 11 வசனங்கள் என 113
வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அல் ஃபத்ஹ் அத்தியாயம் மாநபி ﷺ அவர்களின் மாண்பையும், மகத்துவத்தையும் அறிவுறுத்துவதாக அமைந்திருப்பதையும் பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்ற
நபித்தோழர்களின் சிறப்புகளை உணர்த்துவதையும் அவதானிக்க முடிகிறது.
நமது நபி ﷺ அவர்கள் மகிழ்ந்த தருணங்கள் என்று வாழ்வில் சில
தருணங்களை அடையாளப் படுத்துகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.
அந்த தருணங்களில்
எல்லாம் சிறந்த தருணமாக இருந்தது சூரா அல் ஃபத்ஹ் இறக்கியருளப்பட்ட தருணம் தான்
என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர்.
وَقَالَ
الْإِمَامُ أَحْمَدُ: حَدَّثَنَا أَبُو نُوحٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ،
عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ:
كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ في سَفَرٍ، قَالَ: فَسَأَلْتُهُ عَنْ شَيْءٍ
-ثَلَاثَ مَرَّاتٍ-فلم يَرُدَّ عَلَيَّ، قَالَ: فَقُلْتُ لِنَفْسِي: ثَكِلَتْكَ
أُمُّكَ يا ابن الْخَطَّابِ، نَزَرْتَ رَسُولُ اللَّهِ ﷺ ثَلَاثٌ مَرَّاتٍ فَلَمْ
يَرُدَّ عَلَيْكَ؟ قَالَ: فَرَكِبْتُ رَاحِلَتِي فَتَقَدَّمْتُ مَخَافَةَ أَنْ
يَكُونَ نَزَلَ فِيَّ شَيْءٌ، قَالَ: فَإِذَا أَنَا بِمُنَادٍ يُنَادِي: يَا
عُمَرُ، أَيْنَ عُمَرُ؟ قَالَ: فَرَجَعْتُ وَأَنَا أَظُنُّ أَنَّهُ نَزَلَ فِيَّ
شَيْءٍ، قَالَ: فَقَالَ النَّبِيُّ ﷺ: "نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ سُورَةٌ
هِيَ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا: ﴿إِنَّا فَتَحْنَا لَكَ
فَتْحًا مُبِينًا. لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا
تَأَخَّرَ﴾ . وَرَوَاهُ الْبُخَارِيُّ، وَالتِّرْمِذِيُّ، وَالنَّسَائِيُّ مِنْ
طُرُقٍ، عَنْ مَالِكٍ، رَحِمَهُ اللَّهُ ، وَقَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ:
هَذَا إِسْنَادٌ مَدِينِيٌّ [جَيِّدٌ] لَمْ نَجِدْهُ إِلَّا عِنْدَهُمْ.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்: உமர் பின் அல்-கத்தாப்
(ரழி) அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் இருந்தோம். நான் அவர்களிடம் ஒரு விஷயத்தைப்
பற்றி மூன்று முறை கேட்டேன், ஆனால் அவர்கள் எனக்குப்
பதிலளிக்கவில்லை. எனவே நான் எனக்குள், 'கத்தாபின் மகனே!
உன்னை உன் தாய் இழக்கட்டும்! அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் ஒரே கேள்வியை மூன்று முறை திரும்பத்
திரும்பக் கேட்டுப் பிடிவாதம் செய்தாய்; ஆனால் ஒவ்வொரு முறையும்
அவர்கள் உனக்குப் பதிலளிக்கவில்லை' என்று கூறிக் கொண்டேன்.
எனவே, என்னைக் குறித்து குர்ஆனின் ஏதேனும் பகுதி வஹீயாக (இறைச்செய்தியாக)
அருளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், எனது ஒட்டகத்தில் ஏறி முன்னே
சென்றேன். திடீரென,
'உமரே!' என்று ஒரு அறிவிப்பாளர்
அழைக்கும் சத்தம் கேட்டது. என்னைப் பற்றி குர்ஆன் வசனம் அருளப்பட்டுவிட்டதோ என்று
அஞ்சியவாறே நான் தூதர் ﷺ
அவர்களிடம் சென்றேன். அப்போது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
«نَزَلَ عَلَيَّ الْبَارِحَةَ سُورَةٌ هِيَ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا:إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحاً مُّبِيناً لِّيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنبِكَ وَمَا تَأَخَّرَ»
(நேற்றிரவு எனக்கு ஒரு
ஸூரா வஹீயாக (இறைச்செய்தியாக) அருளப்பட்டது. அது இந்த உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும்
விட எனக்கு மிகவும் பிரியமானது: (நிச்சயமாக நாம் உமக்கு ஒரு தெளிவான வெற்றியை
வழங்கியுள்ளோம். உமது முந்தைய மற்றும் பிந்தைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்காக.))
புகாரி, திர்மிதி மற்றும் நஸாயீ ஆகிய அறிஞர்கள் இந்த ஹதீஸை மாலிக் (ரஹ்) அவர்களின்
வழியாகப் பல்வேறு அறிவிப்பாளர் தொடர்களில் பதிவு செய்துள்ளனர். அலி பின் அல்-மதீனி
அவர்கள் கூறும்போது,
"இது மதீனாவின் அறிஞர்களைக் கொண்ட ஒரு சிறந்த அறிவிப்பாளர்
தொடராகும்" என்றார்.
சூரா அல் ஃபத்ஹ் இறக்கியருளப்பட்டதன் வரலாற்றுப் பிண்ணனி...
نَزَلَتْ
هَذِهِ السُّورَةُ الْكَرِيمَةُ لَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ ﷺ من
الْحُدَيْبِيَةِ فِي ذِي الْقِعْدَةِ مِنْ سَنَةِ سِتٍّ مِنَ الْهِجْرَةِ، حِينَ
صَدَّهُ الْمُشْرِكُونَ عَنِ الْوُصُولِ إِلَى الْمَسْجِدِ الْحَرَامِ لِيَقْضِيَ
عُمْرَتَهُ فِيهِ، وَحَالُوا بَيْنَهُ وَبَيْنَ ذَلِكَ، ثُمَّ مَالُوا إِلَى
الْمُصَالَحَةِ وَالْمُهَادَنَةِ، وَأَنْ يَرْجِعَ عَامَهُ هَذَا ثُمَّ يَأْتِيَ
مِنْ قَابِلٍ، فَأَجَابَهُمْ إِلَى ذَلِكَ عَلَى تَكَرُّهٍ مِنْ جَمَاعَةٍ مِنَ
الصَّحَابَةِ، مِنْهُمْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ، كَمَا
سَيَأْتِي تَفْصِيلُهُ فِي مَوْضِعِهِ مِنْ تَفْسِيرِ هَذِهِ السُّورَةِ إِنْ
شَاءَ اللَّهُ. فَلَمَّا نَحَرَ هَدْيَهُ حَيْثُ أُحْصِرَ، وَرَجَعَ، أَنْزَلَ
اللَّهُ، عَزَّ وَجَلَّ، هَذِهِ السُّورَةَ فِيمَا كَانَ مِنْ أَمْرِهِ
وَأَمْرِهِمْ، وَجَعَلَ ذَلِكَ الصُّلْحَ فَتْحًا بِاعْتِبَارِ مَا فِيهِ مِنَ
الْمَصْلَحَةِ، وَمَا آلَ الْأَمْرُ إِلَيْهِ، كَمَا رُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ،
رَضِيَ اللَّهُ عَنْهُ، وَغَيْرِهِ أَنَّهُ قَالَ: إِنَّكُمْ تَعُدُّونَ الْفَتْحَ
فَتْحَ مَكَّةَ، وَنَحْنُ نَعُدُّ الْفَتْحَ صُلْحَ الْحُدَيْبِيَةِ.
وَقَالَ
الْأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ: مَا كُنَّا نَعُدُّ
الْفَتْحَ إِلَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ(٣)
.
وَقَالَ(٤)
الْبُخَارِيُّ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ
أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ قَالَ: تَعُدُّونَ أَنْتُمُ الْفَتْحَ فَتْحَ
مَكَّةَ، وَقَدْ كَانَ فَتْحُ مَكَّةَ فَتْحًا، وَنَحْنُ نَعُدُّ الْفَتْحَ
بَيْعَةَ الرِّضْوَانِ يَوْمَ الْحُدَيْبِيَةِ، كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ
أَرْبَعَ عَشْرَةَ مِائَةٍ، وَالْحُدَيْبِيَةُ بِئْرٌ. فَنَزَحْنَاهَا فَلَمْ
نَتْرُكْ فِيهَا قَطْرَةً، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ﷺ، فَأَتَاهَا
فَجَلَسَ عَلَى شَفِيرِهَا، ثُمَّ دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ، ثُمَّ
تَمَضْمَضَ وَدَعَا، ثُمَّ صَبَّهُ فِيهَا، فَتَرَكْنَاهَا غَيْرَ بَعِيدٍ، ثُمَّ
إِنَّهَا أَصْدَرَتْنَا مَا شِئْنَا نَحْنُ وَرَكَائِبُنَا
இந்தக்
கண்ணியமிக்க ஸூரா,
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு துல்கஃதா மாதத்தில் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஹுதைபிய்யா பகுதியிலிருந்து திரும்பிய பிறகு
வஹீயாக (இறைச்செய்தியாக) அருளப்பட்டது. அவர்கள் நாடிய உம்ராவை நிறைவேற்ற மஸ்ஜிதுல்
ஹராமை அடையவிடாமல் இணைவைப்பாளர்கள் அவர்களைத் தடுத்த தருணம் அது. அப்போது அவர்கள்
நபி ﷺ அவர்களை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தாலும், பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். அதன்படி, அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் இந்த ஆண்டு திரும்பிச் சென்றுவிட்டு, அடுத்த ஆண்டு
உம்ராவிற்காக வர வேண்டும் என்று ஒரு சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் இதற்குச் சம்மதித்தார்கள். இருப்பினும், உமர் பின் அல்-கத்தாப் (ரழி) உள்ளிட்ட சில ஸஹாபாக்கள் இந்த நிபந்தனைகளை
விரும்பவில்லை. நபி ﷺ
அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே தமது பலிப்பிராணிகளை அறுத்துவிட்டு
மதீனாவிற்குத் திரும்பியபோது, அவர்களுக்கும்
இணைவைப்பாளர்களுக்கும் இடையே நடந்தவை குறித்து மாண்பும் கண்ணியமும் மிக்க அல்லாஹ்
இந்த ஸூராவை வஹீயாக (இறைச்செய்தியாக) அருளினான். ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கையினால்
ஏற்படவிருந்த நன்மைகள் மற்றும் அதன் நற்பலன்களைக் கருத்தில் கொண்டு, அல்லாஹ் அதனை ஒரு தெளிவான வெற்றி என்று அறிவித்தான். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
(ரழி) அவர்களும் மற்ற ஸஹாபாக்களும் கூறினார்கள்: "நீங்கள் மக்கா வெற்றியையே 'அல்-ஃபத்ஹ்'
(வெற்றி) என்று கருதுகிறீர்கள், ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஹுதைபிய்யா உடன்படிக்கையே 'அல்-ஃபத்ஹ்'
ஆகும்." ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்
கூறினார்கள்: "நாங்கள் ஹுதைபிய்யா நாளையே வெற்றியாகக் கருதினோம்!"
புகாரி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்: அல்-பரா பின் ஆஸிப் (ரழி) அவர்கள்
கூறினார்கள்: "நீங்கள் மக்கா வெற்றியையே 'அல்-ஃபத்ஹ்' என்று கருதுகிறீர்கள்,
அது நிச்சயமாக ஒரு வெற்றிதான். எனினும், நாங்கள் ஹுதைபிய்யா நாளில் மேற்கொள்ளப்பட்ட 'பைஅத்துர் ரிழ்வானையே'
(அர்-ரிழ்வான் உடன்படிக்கை) 'அல்-ஃபத்ஹ்'
என்று கருதுகிறோம். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.
ஹுதைபிய்யாவில் ஒரு கிணறு இருந்தது, அதன் நீரை ஒரு சொட்டு கூட
மிச்சமில்லாமல் நாங்கள் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தோம். இந்தச் செய்தி
அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்களுக்கு எட்டியதும்,
அவர்கள் எங்களிடம் வந்து கிணற்றின் விளிம்பில்
அமர்ந்தார்கள். பின்னர் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அதைக் கொண்டு உளூ செய்தார்கள். பிறகு வாய் கொப்பளித்து, அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டு அந்தத் தண்ணீரை மீண்டும் கிணற்றுக்குள்
ஊற்றினார்கள். சிறிது நேரத்திலேயே, அந்தக் கிணறு
எங்களுக்கும் எங்கள் கால்நடைகளுக்கும் தேவையான அளவு நீரைத் தாராளமாக
வழங்கியது." ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
"பைஅத்துர் ரிள்வான்"
நபி ﷺ அவர்கள் ஒரு மரத்தடியின் கீழே அமர்ந்து நபித்தோழர்கள்
அனைவரிடமும் பைஅத் (உறுதி மொழி) வாங்கினார்கள். நபி ﷺ அவர்கள்
அமர்ந்திருக்க ஒவ்வொரு நபித்தோழராக வந்து பைஅத் கொடுத்தார்கள். இது இஸ்லாமிய வரலாற்றில் "பைஅத்துர் ரிள்வான்"என சொல்லப்படுகிறது.
இதைப்பற்றி
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த அத்தியாயத்தின் 18 வது வசனத்தில்
கூறும்போது,
அதில் கலந்துக் கொண்ட நபித் தோழர்களை, தான் திருப்திப்பட்டுக் கொண்டதாக கூறிக்காட்டுகிறான்.
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ
الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ
وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا
"அந்த
மரத்தினடியில் நம்பிக்கையாளர்கள் உம்மிடம் உறுதி மொழி செய்தபோது அவர்களை அல்லாஹ்
பொருந்திக் கொண்டான். அவர்களது உள்ளங்களில் இருந்தவற்றை அறிந்தான். அவர்களுக்கு
நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும்
வழங்கினான்" (அல்குர்ஆன் 48:18)
என்ன உறுதி மொழி நபி ﷺ அவர்கள் வாங்கினார்கள்?
وقال
البخاري أيضًا: حدثنا أبو عاصم! حدثنا يزيد بن أبي عبيد، عن سلمة قال: بايعت رسول
الله ﷺ يوم الحديبية، ثم تنحيت فقال ﷺ: يا سلمة ألا تبايع؟ قلت: قد بايعت، قال ﷺ:
أقبل فبايع فدنوت فبايعته، قلت: علام بايعته يا سلمة؟ قال: على الموت. وأخرجه مسلم
அறிவிப்பாளர்
யஸீத் பின் அபீ உபைத்(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்: நான்,(இந்த செய்தியை எனக்கு அறிவித்த சலமா பின் அக்வஃ (ரலி) அவர்களிடம்) "அபூ
முஸ்லிமே! அன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக நபி ﷺ அவர்களிடம் உறுதிமொழி அளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்" என்று
பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
மேலும் இந்த
உடன்படிக்கையை பாராட்டும் விதமாக, நபி ﷺ அவர்களிடம் நபித்தோழர்கள் செய்த உடன்படிக்கையானது
தன்னிடம் செய்த உடன்படிக்கையாகும் என்றும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த அத்தியாயத்தின்
10 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ
اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَى نَفْسِهِ
وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
"உம்மிடத்தில்
உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள்
மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே
முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ
அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்." (அல்குர்ஆன் 48:10)
"பூமியில் சிறந்தவர்கள்" ....
وقال
الحميدي أيضًا: حدثنا سفيان عن عمرو أنه سمع جابرًا
قال:
كنا يوم الحديبية ألفًا وأربعمائة فقال لنا رسول الله ﷺ: أنتم خير أهل الأرض اليوم
ஜாபிர்(ரலி)அவர்கள்
கூறுகிறார்கள்:
நாங்கள் ஹுதைபிய்யா தினத்தன்று ஆயிரத்து நானூறு பேர்
இருந்தோம். அப்போது நபி ﷺ அவர்கள் எங்களிடம்,
"பூமியிலிருப்பவர்களிலேயே நீங்கள் தான் சிறந்தவர்கள்"' என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
பைஅத்துர் ரிள்வான் வரலாற்றுப் பிண்ணனி...
ثم إن
رسول الله صلى الله عليه وسلم أراد أن يبلغ قريشا موقفه وهدفه وغايته من هذا
السفر؛ فعزم على أن يبعث إليها سفيرا يؤكد لها موقفه ذلك، فانتدب عمر بن الخطاب
رضي الله عنه ليرسله إليهم، فاعتذر عمر رضي الله عنه قائلا: يا رسول الله، ليس
لي أحد بمكة من بني عدي بن كعب ، يغضب لي إن أوذيت، فأرسل عثمان بن عفان ، فإن
عشيرته بها، وإنه مبلغ ما أردت. فدعى رسول الله صلى الله عليه وسلم عثمان رضي الله
عنه، وأرسله إلى قريش، وقال: أخبرهم أنا لم نأت لقتال وحرب، وإنما جئنا عمارا -
أي: نبتغي العمرة - وادعهم إلى الإسلام، وأمره أن يأتي رجالا بمكة مؤمنين، ونساء
مؤمنات، فيبشرهم بالفتح، ويخبرهم أن الله عز وجل مظهر دينه بمكة، حتى لا يستخفي
فيها أحد بالإيمان .
فانطلق
عثمان رضي الله عنه لما وجهه إليه رسول الله صلى الله عليه وسلم، وأتى قريشا، وبلغ
زعماءها الرسالة التي حمله إياها رسول الله صلى الله عليه وسلم، فلما فرغ من إبلاغ
رسالته، عرضوا عليه أن يطوف بالبيت، فرفض هذا العرض، وأبي أن يطوف إلا مع رسول
الله صلى الله عليه وسلم .
فلما
رأت قريش هذا الموقف من عثمان رضي الله عنه، وهو موقف لم يرق لها بحال، لجأت إلى
أسلوب الضغط والتهديد، فاحتبست عثمان عندها - ولعلها أرادت من وراء هذه الخطوة، أن
تتشاور فيما بينها في الوضع الراهن، وتبرم أمرها. أو لعلها أرادت أن تتخذ من عملية
اعتقال عثمان رضي الله عنه ورقة ضغط في وجه المسلمين - وأشاعت خبر ذلك بين
المسلمين، وطال احتباس عثمان رضي الله عنه، حتى شاع بين المسلمين أنه قتل. فلم بلغ
خبر تلك الإشاعة رسول الله صلى الله عليه وسلم، قال: ( لا نبرح حتى نناجز
القوم ) ثم دعا أصحابه إلى البيعة، فثاروا إليه يبايعونه على ألا يفروا، وبايعته
جماعة على الموت، وأول من بايعه أبو سنان الأسدي، وبايعه سلمة بن الأكوع على الموت
ثلاث مرات، في أول الناس ووسطهم وآخرهم، وأخذ رسول الله صلى الله عليه وسلم بيد
نفسه وقال: ( هذه عن عثمان ). ولم يتخلف عن هذه البيعة إلا رجل من
المنافقين يقال له: جد بن قيس
.
وقد ذكر القرآن الكريم خبر هذه البيعة، ومدح أصحابها، ورضا الله عنهم، قال تعالى في ذلك: { لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا } (الفتح:18) ولأجل ما ذكر الله، سميت هذه البيعة ( بيعة الرضوان ) وقد أخذ رسول الله صلى الله عليه وسلم هذه البيعة من صحابته رضوان الله عليهم تحت شجرة، وكان عمر رضي الله عنه آخذا بيده، و معقل بن يسار آخذا بغصن الشجرة، يرفعه عن رسول الله صلى الله عليه وسلم .
ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதம் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தாங்கள் கண்ட கனவின் அடிப்படையில் உம்ரா செய்ய 1400 தோழர்களுடன் மக்கா நோக்கி பயணமானார்கள்.
நபி ﷺ தங்களின் நிலையையும், நோக்கத்தையும் உறுதியாகத் தெளிபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.
ஆனால், உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அங்கு சென்ற பின் எனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால்
எனக்காக களமிறங்கிப் போராடும் அதீ இப்னு கஅப் கிளையைச் சார்ந்த எவரும் அங்கில்லை.
எனவே, உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் தான்
சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்!” என்று கூறினார்கள்.
பின்பு, நபி ﷺ அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை
அழைத்து “நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை; உம்ராவிற்காகத்தான் வந்திருக்கின்றோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு
அவர்களை சத்திய தீனின் பக்கம் அழையுங்கள்! மேலும், மக்காவில் இருக்கும் முஸ்லிகளைச் சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற
நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மிக விரைவில் மக்காவில்
ஓங்கச் செய்வான்.
ஆகவே, யாரும் இறைநம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களிடம்
சொல்லுங்கள்! என்று கூறினார்கள்.
உடனே, உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். வழியில் பல்தஹ்
எனும் இடத்தை கடந்த போது சில குறைஷிகளை சந்தித்தார்கள். தங்களின் உரையாடலின் போது
தாங்கள் மக்காவிற்கு செல்வதின் நோக்கத்தை குறைஷிகளிடம் தெரிவித்தார்கள் உஸ்மான்
(ரலி) அவர்கள்.
அதற்கு குறைஷிகள் ”நீர் சொல்வதை நாங்கள் கேட்டு விட்டோம். நல்ல விஷயம் தான். நீர் உமது நோக்கத்தை
நிறைவேற்ற மக்காவிற்குச் செல்லலாம்” என்றனர்.
கூட்டத்தில்
இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல் ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரலி) அவர்களை
வரவேற்று,
பின்னர் தம் குதிரைக்கு கடிவாளமிட்டு அதில் தன் பின்னால்
அமரவைத்து,
அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்கு அழைத்து
வந்தார்.
மக்கா வந்ததும்
குறைஷித்தலைவர்களிடம்,
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் ஆசையை உஸ்மான் (ரலி) அவர்கள்
தெரிவித்தார்கள். ஆனால்,
நீங்கள் வேண்டுமானால் கஅபாவை வலம் வர அனுமதிக்கின்றோம்.
ஆனால், நபியவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்று குறைஷிகள் கூறிவிட்டனர்.
ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் நபி ﷺ
அவர்கள் இல்லாமல் தாம் வலம் வர இயலாது என மறுத்து விட்டார்கள்.
குறைஷிகள் உஸ்மான்
(ரலி) அவர்களை கையில் காப்பு இட்டு மக்காவில் ஓரிடத்தில் தடுத்து வைத்து விட்டனர்.
இந்த பிரச்சனையில் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கும் வரை உஸ்மான் அவர்களை அனுப்பாமல்
தடுத்து வைத்திடுவோம் என அவர்கள் முடிவெடுத்தனர்.
ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தி
மக்காவிலும்,
மக்காவிற்கு வெளியிலும் மிக விரைவாக பரவியது.
இப்படியே
முஸ்லிம்களுக்கும் வந்து கிடைத்தது. இந்தச் செய்தி மாநபி ﷺ அவர்களிடம் சொல்லப்பட்ட போது “குறைஷியர்களிடம் போர் செய்யாமல் இவ்விடத்தை விட்டு நாம் நகரக்கூடாது.” என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். ஸஹாபாக்கள்
உயிர் இருக்கும் வரை போராடுவோம் என்பதாகவும், அதற்காக உயிரைக் கொடுக்க
தாங்கள் தயாராக இருப்பதாகவும் நபிகளாரிடம் ஒப்பந்தம் செய்தார்கள்.
அபூ ஸினான் அல்
அஸதீ (ரலி) என்பவர்தான் முதன் முதலில் ஒப்பந்தம் செய்தார். ஸலமா இப்னு அக்வஃ (ரலி)
அவர்களோ மூன்று முறை ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்னர் இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார்.
நபி ﷺ அவர்கள் தங்களின் ஒரு
கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி “இந்தக் கை உஸ்மான்
சார்பாக”
என்று கூறினார்கள். அதாவது, உஸ்மான் (ரலி) உயிருடன் இருந்தால் இதிலும் பங்கெடுத்து இருப்பார் என்பதை
உணர்த்தும் முகமாக நபிகளார் இதைச் செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
ﷺஅவர்கள் ஒரு மரத்திற்கு கீழ் இந்த உடன்படிக்கையை வாங்கினார்கள்.
அப்போது உமர்
(ரலி) அவர்கள் நபியின் கையைத் தாங்கி பிடித்து இருந்தார்கள்.
மஃகில் இப்னு
யஸார் (ரலி) அவர்கள் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபிகளாருக்கு நிழல் தரும்
வண்ணமாக பிடித்திருந்தார்கள்.
இந்த
உடன்படிக்கையைத் தான் “பைஅத்துர் ரிள்வான்”
– அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இறைபொருத்தத்திற்குரிய
உடன்படிக்கை”
என இஸ்லாமிய வரலாறு சான்று பகர்கின்றது.
அல்லாஹ்வும், இது குறித்து திருமறையில்......
لَقَدْ
رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ
فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ
فَتْحًا قَرِيبًا (18)
“இறை நம்பிக்கையாளர்கள்
உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது
அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை
அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது
நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு
வெகுமதியாக வழங்கினான்.”
என்று (அல்குர்ஆன்:48:18). குறிப்பிடுகின்றான்.
நிலைமை
இவ்வாறிருக்க,
முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க
ஆயத்தமாகி விட்டார்கள். எனும் செய்தி குறைஷிகளுக்குத் தெரியவரவே, இனியும் உஸ்மான் (ரலி) அவர்களை தடுத்து வைத்திருப்பது தங்களுக்கு நல்லதல்ல
என்று கருதி உஸ்மான் (ரலி) அவர்களை விடுதலை செய்துவிட்டனர்.
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்களும்,
நபித்தோழர்களும் புறப்பட்டு சில எட்டுக்கள் தான்
வைத்திருப்பார்கள். அதற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கே வந்து விடுகின்றார்கள்.
( நூல்: தபரீ,
தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், தஃப்ஸீர் அல் குர்துபீ,.
)
உஸ்மான் இப்னு அஃப்ஃபான் ரலி அவர்களை
குறைவாக மதிப்பிடப்பட்ட நபருக்கு இப்னு உமர் ரலி அவர்கள் தந்த பதிலடி...
حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ حَدَّثَنَا عُثْمَانُ هُوَ
ابْنُ مَوْهَبٍ قَالَ جَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ مِصْرَ حَجَّ الْبَيْتَ فَرَأَى
قَوْمًا جُلُوسًا فَقَالَ مَنْ هَؤُلَاءِ الْقَوْمُ فَقَالُوا هَؤُلَاءِ قُرَيْشٌ
قَالَ فَمَنْ الشَّيْخُ فِيهِمْ قَالُوا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ يَا
ابْنَ عُمَرَ إِنِّي سَائِلُكَ عَنْ شَيْءٍ فَحَدِّثْنِي هَلْ تَعْلَمُ أَنَّ
عُثْمَانَ فَرَّ يَوْمَ أُحُدٍ قَالَ نَعَمْ قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ
عَنْ بَدْرٍ وَلَمْ يَشْهَدْ قَالَ نَعَمْ قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ
بَيْعَةِ الرِّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ قَالَ اللَّهُ أَكْبَرُ
قَالَ ابْنُ عُمَرَ تَعَالَ أُبَيِّنْ لَكَ أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ
فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَفَا عَنْهُ وَغَفَرَ لَهُ وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ
بَدْرٍ فَإِنَّهُ كَانَتْ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ مَرِيضَةً فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا
وَسَهْمَهُ وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَوْ كَانَ أَحَدٌ
أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ لَبَعَثَهُ مَكَانَهُ فَبَعَثَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ وَكَانَتْ بَيْعَةُ
الرِّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ الْيُمْنَى هَذِهِ يَدُ عُثْمَانَ
فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ فَقَالَ هَذِهِ لِعُثْمَانَ فَقَالَ لَهُ ابْنُ
عُمَرَ اذْهَبْ بِهَا الْآنَ مَعَكَ
எகிப்து வாசியான
ஒருவர் வந்து,
(கஅபா எனும்) இறையில்லத்தை ஹஜ் செய்தார் அப்போது ஒரு கூட்டம்
அமர்ந்திருப்பதைக் கண்டு,
‘இந்தக் கூட்டத்தார் யார்?’ என்று கேட்டதற்கு மக்கள், ‘இவர்கள் குறைஷிகள் என்று
பதில் கூறினார்கள். அப்போது, ‘இவர்களின் முதிர்ந்த
அறிஞர் யார்’
என்று அவர் கேட்டதற்கு மக்கள், ‘அப்துல்லாஹ் இப்னு உமர்’ என்று பதில்
அளித்தார்கள்.
உடனே அவர்
அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை நோக்கி, ‘இப்னு உமர் அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு
அதைப்பற்றிச் சொல்லுங்கள். உஸ்மான்(ரலி) உஹுதுப் போர்க்களத்திலிருந்து
வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டதற்கு
இப்னு உமர்(ரலி) ‘ஆம் அறிவேன்’
என்று பதில் அளித்தார்கள்.
அப்போது அவர் ‘உஸ்மான்(ரலி) பத்ர் போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்பது
தங்களுக்குத் தெரியுமா?’
என்று கேட்டடார். அற்கு இப்னு உமர்(ரலி) ‘ஆம் தெரியும்’
என்று பதில் அளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் அவர், ‘ஹுதைபியாவில் நடந்த பைஅத்துர் ரில்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து
கொள்ளவில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க ஆம்
தெரியும் என்று பதில் அளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு உஸ்மான்(ரலி) தாம்
நினைத்தது போன்றே இவ்வளவு குறைகளுள்ளவர்தாம் என்று தொனிக்கும் படி) அந்த மனிதர், அல்லாஹு அக்பர் –
அல்லாஹ் மிகப்பெரியவன் என்று என்று கூறினார். அப்போது இப்னு
உமர்(ரலி),
‘வாரும்! (இவற்றிலெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லை
என்பதை உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரின் பிழையைப் பொறுத்து மன்னித்துவிட்டான் என்று
நானே சாட்சியாக இருக்கிறேன்.
பத்ர் போரில்
அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் மகள்
(ருகய்யா(ரலி)) உஸ்மான்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) அப்போது
நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். எனவே, நபி ﷺ அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்த ஒருவருக்குரிய
(மறுமைப்) பலனும்,
(போர்ப் பொருளில்) உங்களுக்கான பங்கும் கிடைக்கும் (நீங்கள்
உங்களுடைய மனைவியைக் கவனியுங்கள்) என்றார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை.)
பைஅத்துர்
ரிள்வான் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம்
உஸ்மான்(ரலி) அவர்களையும் விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில்
இல்லை. அப்படி) அப்படி இருந்திருந்தால் நபி ﷺ அவர்கள், குறைஷிகளிடம் பேசுவதற்கு
தம் தூதராக அவரை) அனுப்பி இருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை.) எனவேதான்,
நபி ﷺ அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும் இந்த சத்தியப்
பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குள் போனபின்னர்தான் நடந்தது. அப்போது நபி
ﷺ அவர்கள் தங்களின் வலகக்ரத்தைச் சுட்டிக் காண்பித்து இது
உஸ்மானுடைய கை என்று கூறி அதை தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு, இப்போது நான் செய்யும் சத்தியப்பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்’ என்றார்கள். என இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, (உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், ‘நான் இப்போது சொன்ன பதில்களை நீ எடுத்துச் செல்லலாம்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உத்மான் பின் வஹப் ( நூல்: புகாரி )

No comments:
Post a Comment