அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 20.
மூன்று திறவுகோல்கள்!!!
19 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
20 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் ஹாமீம் அஸ் ஸஜ்தா அத்தியாயம், அஷ் ஷூரா,
அஸ் ஸுஃக்ருஃப், அத்துஃகான், அல் ஜாஸியா அத்தியாயங்கள் என 292 வசனங்கள்
ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட 42
வது அத்தியாயத்தின் 38 வது வசனத்தில் இறை
விசுவாசிகளின் இனிய பண்புகளை இறைவன் பட்டியலிட்டுத் தருகையில் மஷ்வரா அடிப்படையில்
தங்களடைய காரியங்களை திட்டமிட்டு செயல்படுவார்கள் என்பதை குறிப்பிடுகின்றான்.
وَالَّذِينَ
اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
விசுவாசிகளாகிய
அவர்கள் எத்தகையோரென்றால்)அவர்களின் காரியமோ தங்களுக்குள் கலந்தாலோசித்ததாக
இருக்கும். ( அல்குர்ஆன்: 42:
38 )
நம்முடைய வாழ்க்கைக்கு
ஆலோசனை முக்கியமானது. சரியான பாதையில் செல்லவும், முக்கியமான தெரிவுகளைச் செய்யவும், குழப்பத்திலிருந்து
வெளிவரவும்,
தனித்து நிற்கும் வேளைகள் போன்ற பல சந்தர்ப்பங்களிலும்
வாழ்க்கைக்கு ஆலோசனை தேவை.
மிகவும் சிக்கலான
நேரத்தில் சரியான ஆலோசனைநமக்கு கிடைக்காவிட்டால், நாம் மற்றவர்களால் பிழையாக வழிநடத்தப்படக் கூடும், அல்லது நாமும் வழிதப்பிப்போகக் கூடும்.
இஸ்லாம் மூன்று
வழிகளில் நமது முக்கிய விவகாரங்களில் முடிவெடுத்து செயல்பட வழிகாட்டியுள்ளதை நாம்
குர்ஆன் மற்றும் சுன்னாவின் வாயிலாக பார்க்க முடிகின்றது.
1) இஸ்திகாரா தொழுகை, 2) சீட்டுக் குலுக்கி போடுதல், 3) ஆலோசனை செய்தல்.
1) இஸ்திகாரா தொழுகை
முதலில் நமக்கான
முதன்மை ஆலோசகர் நம்மைப் படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமீனே! அவனுக்கே நாம் முன்னுரிமை
தர வேண்டும்..
وَلَقَدْ
خَلَقْنَا ٱلْإِنسَٰنَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُۥ وَنَحْنُ
أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ ٱلْوَرِيدِ
மேலும், நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன
பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே
இருக்கின்றோம். ( அல்குர்ஆன்: 50: 16 )
இந்த இறைவசனத்தின்
கருத்தை நன்கு கவனித்து பாருங்கள்! நம்மைப் படைத்த இறைவன் அவன். நமது மனங்களில்
உள்ளதை அறிந்தவன் அவன். நமக்கு மிக சமீபமாக நம்முடனே இருப்பவன் அவன். அவனிடம் நாம்
நமது சஞ்சலங்களை முறையிட்டால் நிவர்த்தி செய்து தர மாட்டானா? என்ன?!!.
وَاِذَا
سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا
دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ
(நபியே!) என் அடியார்கள்
என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே
இருக்கிறேன்,
பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர்
பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள்
என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும்.
அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (
அல்குர்ஆன்: 2:
186 )
ஆகவே தான் நபி ﷺ அவர்கள் நமது பிரச்சினைகளின் போது முடிவெடுக்க முடியாமல்
போகும் தருணத்தில் நாம் முதன்மையாக முன்னுரிமை கொடுக்க வேண்டிய அம்சத்தை நமக்கு
அறிவுறுத்தியே உள்ளார்கள்.
عن جابر
بن عبد الله رضي الله عنهما، قال : كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا
الاستخارة في الأمور كما يعلمنا السورة من القرآن، يقول : ” إذا هم أحدكم بالأمر
فليركع ركعتين من غير الفريضة، ثم ليقل : اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ
بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
العَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ،
وَأَنْتَ عَلَّامُ الغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا
الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي - أَوْ قَالَ: فِي
عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا
الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي - أَوْ قَالَ: فِي
عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ
لِي الخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ، وَيُسَمِّي حَاجَتَهُ "
ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்:- "நபி ﷺ அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத்
தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத்
தந்தார்கள்.
"உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு
ரக்அத்களை அவர் தொழட்டும்.
பின்னர் ‘இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை
இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம்
வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய
இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய
மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை
எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய
வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும்
இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு
நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம்
தேவையைக் குறிப்பிடட்டும்.’
( நூல்: புகாரி )
இப்படி
அல்லாஹ்விடம் நம்முடைய பொறுப்பை ஒப்படைத்த பின் நாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது
எது சரி என நமக்குப்படுகிறதோ அதைச் செய்யலாம். இஸ்திகாராவுக்குப் பின் அந்தக்
காரியத்தைச் செய்யக் கூடாது என்று தோன்றினால் அதை விட்டு விட வேண்டும்.
நமக்கு எது நல்லதோ
அதன் பக்கம் அலலாஹ் நம்மைக் கொண்டு செல்வான் என்பது தான் இஸ்திகாராவின் பயனாகும்.
2) சீட்டுக் குலுக்கிப் பார்த்தல்.
சம உரிமையும் சம
பாத்தியதையும் உள்ள பல மனிதர்களுக்கு மத்தியில் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம்
என்பதை முடிவு செய்யத் தகுந்த காரணம் இல்லாமல் இருந்தால் அப்போது சீட்டுக்
குலுக்கிப் போட்டு ஒருவருக்கு முன்னுரிமை அளித்தல் இதற்கு மாநபி ﷺ அவர்கள் வாழ்க்கையில் வழிகாட்டல் இருக்கிறது.
இதில் இன்னொரு
விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பலரில் யாரைத் தேர்வு செய்வது என்பதில் இணக்கமான
முடிவுக்கு வந்து விட்டால் சீட்டுக் குலுக்கிப் பார்க்க அவசியமில்லை. ஏனெனில், இவ்வாறு செய்வது கட்டாயமானதல்ல. மாறாக, மார்க்கம் அனுமதித்துள்ள
ஒரு அம்சமே.
சீட்டுக் குலுக்கி
பார்த்து ஒரு காரியத்தை முடிவெடுப்பது என்பது முன் வாழ்ந்த மக்களின் நடைமுறை
என்பதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகிறான்.
وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ (139) إِذْ أَبَقَ إِلَى
الْفُلْكِ الْمَشْحُونِ (140) فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ (141)
فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ
மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - ரஸூலாக அனுப்பப்பட்டவர்களில் நின்று
முள்ளவர். நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -அ(க்கப்பலிலுள்ள)வர்கள்
சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று
தீர்மானித்தனர்). ஆகவே,
(அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட
வேண்டியவரானார்;
ஒரு மீன் அவரை விழுங்கிற்று. ( அல்குர்ஆன்: 37: 140 - 142 )
நபி ﷺ
அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சீட்டுக் குலுக்கிப் பார்த்து
முடிவெடுத்துள்ளார்கள்.
حدثنا
عبد الله بن يوسف ، قال : أخبرنا مالك ، عن سمي – مولى أبي بكر – عن أبي صالح ، عن
أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : ” لو يعلم الناس ما في النداء،
والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا، ولو يعلمون ما في التهجير
لاستبقوا إليه، ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا “.
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவித்தார்கள்:- "பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில்
நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி
போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக்
குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் அவர்கள் தயாராகி
விடுவார்கள்" என்று நபி ﷺ
அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
حدثنا
أبو الربيع سليمان بن داود – وأفهمني بعضه أحمد – حدثنا فليح بن سليمان ، عن ابن
شهاب الزهري ، عن عروة بن الزبير ، وسعيد بن المسيب ، وعلقمة بن وقاص الليثي ،
وعبيد الله بن عبد الله بن عتبة ، عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه
وسلم، حين قال لها أهل الإفك ما قالوا، فبرأها الله منه، قال الزهري : وكلهم حدثني
طائفة من حديثها، وبعضهم أوعى من بعض وأثبت له اقتصاصا، وقد وعيت عن كل واحد منهم
الحديث الذي حدثني عن عائشة ، وبعض حديثهم يصدق بعضا، زعموا أن عائشة قالت : كان
رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يخرج سفرا أقرع بين أزواجه، فأيتهن خرج
سهمها خرج بها معه، فأقرع بيننا في غزاة غزاها، فخرج سهمي، فخرجت معه بعدما أنزل
الحجاب
ஆயிஷா (ரலி)
அவர்கள் அறிவித்தார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம்
மனைவிமார்களிடயே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத்
தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள)
சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள்.
இவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு புனிதப் போரின் போது
(பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.
அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்…. (நீண்ட ஹதீஸின் சுருக்கம்), ( நூல்: புகாரி )
حدثنا
إسحاق بن نصر ، حدثنا عبد الرزاق ، أخبرنا معمر ، عن همام ، عن أبي هريرة رضي الله
عنه، أن النبي صلى الله عليه وسلم عرض على قوم اليمين، فأسرعوا، فأمر أن يسهم
بينهم في اليمين أيهم يحلف.
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவித்தார்கள்:- நபி ﷺ
அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள்
(ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று
அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி ﷺ அவர்கள் உத்தரவிட்டார்கள். ( நூல் : புகாரி )
حدثنا
يحيى بن بكير ، حدثنا الليث ، عن عقيل ، عن ابن شهاب ، قال : أخبرني خارجة بن زيد
بن ثابت أن أم العلاء – امرأة من الأنصار بايعت النبي صلى الله عليه وسلم – أخبرته
أنه اقتسم المهاجرون قرعة فطار لنا عثمان بن مظعون، فأنزلناه في أبياتنا فوجع وجعه
الذي توفي فيه، فلما توفي وغسل وكفن في أثوابه دخل رسول الله صلى الله عليه وسلم
فقلت : رحمة الله عليك أبا السائب فشهادتي عليك : لقد أكرمك الله. فقال النبي صلى
الله عليه وسلم : ” وما يدريك أن الله قد أكرمه ؟ ” فقلت : بأبي أنت يا رسول الله،
فمن يكرمه الله ؟ فقال : ” أما هو فقد جاءه اليقين، والله إني لأرجو له الخير،
والله ما أدري – وأنا رسول الله – ما يفعل بي “. قالت : فوالله لا أزكي أحدا بعده
أبدا. حدثنا سعيد بن عفير ، حدثنا الليث ، مثله وقال نافع بن يزيد ، عن عقيل : ما
يفعل به. وتابعه شعيب ، وعمرو بن دينار ، ومعمر
நபி ﷺ அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான
உம்முல் அலா (ரலி) அறிவித்தார்கள்:- "ஹிஜ்ரத் செய்து (வந்த) முஹாஜிர்களில்
யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்
கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது.
அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார்.
அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி ﷺ அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக்
கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே,
நபி ﷺ
அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின்தூதர்
அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ்
கண்ணியப்படுத்துவான்?'
என கேட்டேன். அதற்கு நபி ﷺ அவர்கள், 'இவர்
மரணமடைந்துவிட்டார். எனவே,
அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே
விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை
(நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின்
மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக்
கூறுவதேயில்லை." ( நூல் : புகாரி )
3) மஷ்வரா - ஆலோசனை செய்தல்..
நபி ﷺ அவர்கள் தமது வாழ்க்கையில் மூன்று வழிகளில் மிகவும்
முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
1) அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அல்குர்ஆனில் வசனங்களை இறக்கி வழிகாட்டி அதன் மூலம் முடிவெடுத்தார்கள்.
2) அல்லாஹ்வின்
உள்ளார்ந்த வழிகாட்டலின் பேரில் சுயமாக முடிவெடுத்தார்கள்.
3) அல்லாஹ்வின்
வழிகாட்டலின் பேரில் ஷூரா எனும் ஆலோசனைகள் மூலம் முடிவெடுத்தார்கள்.
"காரியங்களில்
இவர்களிடம் கலந்தாலோசிப்பீராக! ( அல்குர்ஆன்: 3: 159 )
மஷ்வரா - ஆலோசனை செய்தல் எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது?
''அஷ்ஷூரா'' (கலந்தாலோசிப்பது-42)
என்ற பெயரிலான தனியான ஓர் அத்தியாயமே அல்குர்ஆனில்
அருளப்பட்டுள்ளதே மஷ்வராவின் முக்கியத்துவத்தை உணர போதுமானதாகும்.
ومع أن
هذه الآيات مكية، نزلت قبل قيام الدولة المسلمة في المدينة، فإننا نجد فيها أن من
صفة هذه الجماعة المسلمة: «وَأَمْرُهُمْ شُورى بَيْنَهُمْ»
..
مما
يوحي بأن وضع الشورى أعمق في حياة المسلمين من مجرد أن تكون نظاما سياسيا للدولة،
فهو طابع أساسي للجماعة كلها، يقوم عليه أمرها كجماعة، ثم يتسرب من الجماعة إلى
الدولة، بوصفها إفرازا طبيعيا للجماعة.
அந்த அத்தியாயத்திலுள்ள, ''அத்துடன் அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது பண்பாகும்.” (42:38) என்ற வசனம் மக்காவில் தான் இறக்கப்பட்டது என்று கூறும் ஷஹீத் சையித் குதுப்
(ரஹ்) அவர்கள்,
ஷூரா என்பது அரசியல் விவகாரங்களுடன் மட்டும் குறுகிப்போய்
விடுவதல்ல. மாறாக,
முஸ்லிம் சமூகத்தின் வாழ்வின் சகல பகுதிகளுக்கும் விரிந்தது
என்பதை இது காட்டுகிறது என்றார்.
மேலும் , ''அஷ்ஷூரா''
எனும் அத்தியாத்தில் இறைநம்பிக்கையாளர்களின் எட்டுப்
பண்புகள் பற்றி புகழ்ந்து கூறும் அல்லாஹ் (42:36- 38)
(1)
ஈமான், (2) தவக்குல்,
(3) பெரும் பாவங்களைத் தவிர்த்தல், (4) கோபம் வந்தால் மன்னிப்பது, (5) தமது இரட்சகனின் கட்டளைகளுக்கு அடிபணிவது, (6) தொழுகையை நிலை நிறுத்துவது, (7) தமது காரியங்களை ஆலோசனையின் பேரில் அமைத்துக்கொள்வது, (8) அல்லாஹ் வழங்கிய சொத்து செல்வங்களிலிருந்து (ஜகாத் - ஸதகா மூலம்) செலவு செய்வது ஆகிய பண்புகள் அவர்களிடம் இருப்பதாகக் கூறுகிறான்.
இங்கு ஆறாவது
பண்பாக தொழுகையை நிலைநிறுத்துவதையும் எட்டாவது பண்பாக ஜகாத் கொடுப்பதையும் கூறும்
அல்லாஹ் தொழுகைக்கும் ஸகாத்துக்கும் இடைப்பட்ட பண்பாக ”அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது பண்பாகும்” என்று ஏழாவது பண்பாக ஷூராவைக் குறிப்பிடுகிறான் எனவே, இதிலிருந்து ஷூராவின் முக்கியத்துவம் உணர்த்தப்படுவதாக இமாம் இப்னு கஸீர்
(ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
وروى
الترمذي عن أبي هريرة قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : إذا كان
أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأمركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها
، وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير
لكم من ظهرها .
அபூஹுரைரா ரலி
அவர்கள் அறிவித்தார்கள்:- உங்களின் தலைவர்கள் உங்களில் சிறந்தவர்களாகவும், உங்களின் செல்வந்தர்கள் கொடையாளர்களாகவும், உங்களின் காரியங்களின்
முடிவுகள் உங்களிடையே ஆலோசனை பெறப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும் இருக்கும்
பட்சத்தில் நீங்கள் பூமிக்கடியில் (மண்ணறையில்) வாழ்வதை விட, பூமியின் மேற்பரப்பில் வாழ்வது உங்களுக்கு சிறப்பானதாகும். அதே நேரத்தில்,
உங்களின் தலைவர்கள் உங்களில் கெட்டவர்களாகவும், உங்களின் செல்வந்தர்கள் கஞ்சர்களாகவும், உங்களின் காரியங்களின்
முடிவுகள்
உங்களின் பெண்கள் மூலம் பெறப்பட்டு
செயல்படுத்தப்படுவதாகவும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பூமியின் மேற்பரப்பில்
வாழ்வதை விட பூமிக்கடியில் (மண்ணறையில்) வாழ்வது உங்களுக்கு சிறப்பானதாகும்"
என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்:
திர்மிதீ )
நபி
ﷺ அவர்கள் தங்களின் வாழ்வில் பல்வேறு
கட்டங்களில் நபித்தோழர்களோடு மஷ்வரா செய்ததை வரலாற்றில் நாம் பார்க்க முடிகின்றது.
தொழுகைக்கு எப்படி மக்களை அழைப்பது என்பதற்காக நபி ﷺ அவர்கள் ஒரு ஆலோசனையை
நடத்தினார்கள்.
நபி
ﷺ அவர்களும், நபித்தோழர்களும்,மக்களை எவ்வாறு தொழுகைக்குப் பள்ளிக்கு அழைக்கலாம் என்று
ஆலோசனை செய்கிறார்கள்.
روى
الشيخان والترمذي والنسائي عن ابن عمر ، وابن إسحاق ، وإسحاق بن راهويه ، وأبو
داود بسند صحيح صححه النووي عن محمد بن عبد الله بن زيد بن ثعلبة بن عبد ربه ، عن
أبيه ، وأبو داود بسند صحيح عن ابن عمر عن أنس بن مالك عن عمومة له من الأنصار رضي
الله عنهم ، وإسحاق بن راهويه عن الشعبي مرسلا بسند حسن ، وعبد الرزاق وأبو داود
عن عبيد بن عمير أحد كبار التابعين ، وابن أبي شيبة ، وأبو داود ، وابن خزيمة ،
وأبو الشيخ ، والدارقطني ، والبيهقي ، والطحاوي عن عبد الرحمن بن أبي ليلى قال :
"حدثنا أصحابنا- ولفظ ابن أبي شيبة وابن خزيمة والطحاوي والبيهقي : حدثنا ،
أصحاب رسول الله صلى الله عليه وسلم- حين قدم المدينة إنما كان يجمع للصلاة حين
مواقيتها بغير دعوة ، فلما كثر الناس اهتم النبي صلى الله عليه وسلم كيف يجمع
الناس للصلاة؟ فاستشار الناس ، فقيل له : انصب راية عند حضور الصلاة ، إذا رأوها
أعلم بعضهم بعضا ، وذكر له القنع ، يعني شبور اليهود ، وفي لفظ : البوق ، وفي لفظ
: القرن الذي يدعون به لصلاتهم ، فلم يعجبه ذلك وقال : "هو من أمر
اليهود" ، فذكر له الناقوس فقال : "هو من أمر النصارى" ، فقالوا :
لو رفعنا نارا ، فقال : "ذلك للمجوس"
.
وفي حديث
عمر عند الشيخين وغيرهما : فقال عمر : "أولا تبعثون رجلا ينادي بالصلاة"
؟ فقال رسول الله صلى الله عليه وسلم : "يا بلال قم فناد بالصلاة" .
அப்போது ஒவ்வொரு
நபித்தோழர்களும் பல கருத்துகளை சொன்னார்கள். அதில் ஒருவர் கொடியை கட்டலாம். அதைப்
பார்த்து மக்கள் தொழுகை நேரத்தை அறிந்து கொள்வார்கள் என்றார். இன்னொருவர், ஒவ்வொரு நேரமும் நாம் உயர்ந்த மலையின் மீது நெருப்பை மூட்டி மக்களை பள்ளிக்கு
அழைக்கலாம் என்று கூறினார். அது நெருப்பு வணங்கிகளான மஜூஸ்களின் வணக்கமாகும் என்று
நபி ﷺ அவர்கள் அதை வேண்டாம் என்றார்கள். மற்றொருவர், ஒவ்வொரு நேரமும் மணி அடிக்கலாம் என்றார். அது நஸராக்களின் வணக்கம். வேண்டாம்
என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
மற்றொருவர்
ஒவ்வொரு நேரமும் சங்கு ஊதி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்றார்.இது
முஷ்ரிக்குகளுடைய வணக்கம் வேண்டாம் என்று நபி ﷺ வர்கள் கூறி விட்டு. இன்ஷா அல்லாஹ் நாளை முடிவெடுப்போம்
என்று அனைவரும் சென்று விடுகிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு
ஸைத் (ரலி) அவர்களின் கனவிலும், அதே போல உமர் (ரலி)
அவர்களின் கனவிலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி பாங்குடைய முறைகளை கற்றுக்
கொடுக்கிறார்கள். அன்றிலிருந்து நாம் சொல்லும் இந்த பாங்கு கடமையாக்கப்பட்டது.
பின் வரக் கூடிய ஹதீஸ்களில் இவற்றில் சிலவற்றை காணலாம்.
“அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள்
(மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்பு விடுப்பதெற்கென யாரும்
இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகை(க்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு
செய்துகொள்வார்கள். ஒரு நாள் இதுதொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது
அவர்களில் சிலர்,
கிறிஸ்தவர்கள் மணி அடிப்பதைப் போன்று மணி அடியுங்கள்
என்றனர். வேறு சிலர்,
யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதுங்கள் என்றனர்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற
ஒருவரை நீங்கள் நியமிக்கக் கூடாதா? என்றார்கள். அப்போது நபி
(ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை)
அழையுங்கள்! என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது. ( நூல்: புகாரி, முஸ்லிம் )
பத்ர் கைதிகள் சம்பந்தமான ஆலோசனை....
பத்ருப்
போர்க்களத்தில் வெற்றி வாகை சூடி முக்கிய எதிரிகளை கைதிகளாய்ப் பிடித்து வைத்துக்
கொண்டு அவர்களை என்ன செய்யலாம் என்று தம் நெருங்கிய தோழர்களான அபூபக்ர் ரலி
மற்றும் உமர் ரலி ஆகியோரிடம் நபி ﷺ அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனையில்
சொல்லப்பட்ட கருத்துக்களைச் சீர்தூக்கி பார்த்தே அதில் ஒரு முடிவை எடுக்கிறார்கள்.
قالَ
ابنُ عَبَّاسٍ: فَلَمَّا أَسَرُوا الأُسَارَى، قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ
عليه وَسَلَّمَ لأَبِي بَكْرٍ وَعُمَرَ: ما تَرَوْنَ في هَؤُلَاءِ الأُسَارَى؟
فَقالَ أَبُو بَكْرٍ: يا نَبِيَّ اللهِ، هُمْ بَنُو العَمِّ وَالْعَشِيرَةِ، أَرَى
أَنْ تَأْخُذَ منهمْ فِدْيَةً فَتَكُونُ لَنَا قُوَّةً علَى الكُفَّارِ؛ فَعَسَى
اللَّهُ أَنْ يَهْدِيَهُمْ لِلإِسْلَامِ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه
وَسَلَّمَ: ما تَرَى يا ابْنَ الخَطَّابِ؟ قُلتُ: لا، وَاللَّهِ يا رَسولَ اللهِ
ما أَرَى الَّذي رَأَى أَبُو بَكْرٍ، وَلَكِنِّي أَرَى أَنْ تُمَكِّنَّا
فَنَضْرِبَ أَعْنَاقَهُمْ، فَتُمَكِّنَ عَلِيًّا مِن عَقِيلٍ فَيَضْرِبَ عُنُقَهُ،
وَتُمَكِّنِّي مِن فُلَانٍ -نَسِيبًا لِعُمَرَ- فأضْرِبَ عُنُقَهُ؛ فإنَّ
هَؤُلَاءِ أَئِمَّةُ الكُفْرِ وَصَنَادِيدُهَا، فَهَوِيَ رَسولُ اللهِ صَلَّى
اللَّهُ عليه وَسَلَّمَ ما قالَ أَبُو بَكْرٍ، وَلَمْ يَهْوَ ما قُلتُ، فَلَمَّا
كانَ مِنَ الغَدِ جِئْتُ، فَإِذَا رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ
وَأَبُو بَكْرٍ قَاعِدَيْنِ يَبْكِيَانِ، قُلتُ: يا رَسولَ اللهِ، أَخْبِرْنِي مِن
أَيِّ شَيءٍ تَبْكِي أَنْتَ وَصَاحِبُكَ؟ فإنْ وَجَدْتُ بُكَاءً بَكَيْتُ، وإنْ
لَمْ أَجِدْ بُكَاءً تَبَاكَيْتُ لِبُكَائِكُمَا، فَقالَ رَسولُ اللهِ صَلَّى
اللَّهُ عليه وَسَلَّمَ: أَبْكِي لِلَّذِي عَرَضَ عَلَيَّ أَصْحَابُكَ مِن
أَخْذِهِمِ الفِدَاءَ، لقَدْ عُرِضَ عَلَيَّ عَذَابُهُمْ أَدْنَى مِن هذِه
الشَّجَرَةِ -شَجَرَةٍ قَرِيبَةٍ مِن نَبِيِّ اللهِ صَلَّى اللَّهُ عليه
وَسَلَّمَ- وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {مَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ
لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الْأَرْضِ} إلى قَوْلِهِ {فَكُلُوا ممَّا
غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا} [الأنفال: 67 - 69] ، فأحَلَّ اللَّهُ الغَنِيمَةَ
لهمْ.
الراوي
: عمر بن الخطاب | المحدث : مسلم | المصدر : صحيح مسلم
முஸ்லிம்கள்
எதிரிகளைச் சிறை பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி)
அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன
செய்யலாம்)?”
என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி)
அவர்கள்,
“அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்)
தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே!
அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ்
இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்” என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின்
தூதர் ﷺ அவர்கள் “நீங்கள் என்ன
கருதுகிறீர்கள்,
கத்தாபின் புதல்வரே?” என்று
கேட்டார்கள்.
உமர் (ரலி)
அவர்கள்,
“இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக!
(இவ்வாறு செய்யாதீர்கள்),
அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின்
கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம்
ஒப்படைத்து விடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்து விடுகிறோம்.
அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ
துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக்
குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத்
துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின்
தலைவர்கள்;
அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)” என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உமர் (ரலி)
அவர்கள் கூறுவதாவது: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் விரும்பினார்கள்.
எனது கருத்தை நபி ﷺ அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்களும்,
அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும், உங்கள் நண்பரும் ஏன்
அழுகிறீர்கள்?
உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன்.
அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!” என்று கூறினேன்.
அதற்கு
அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள்,
“கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை
விடுவித்து விடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான்
அழுகிறேன்.
ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு
எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி)
அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், “பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது” என்று தொடங்கி,
“நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட
தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்” (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை நபி ﷺ அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான். ( நூல்: முஸ்லிம் )
நாமும் நம்முடைய
காரியங்களில் ஆலோசனை செய்து முடிவெடுப்போமாக! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது
காரியங்களை எளிதாக்கி தருவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!

No comments:
Post a Comment