Friday, 13 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 25. சுவனத்தில் ஓர் மாளிகை வாங்குவோம்!!!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 25.

சுவனத்தில் ஓர் மாளிகை வாங்குவோம்!!!



24 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 25 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல் கலம் அத்தியாயம் முதல் அல் முர்ஸலாத் வரையிலான 10 அத்தியாயங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் கலம், அல் ஹாக்கா, அல் மஆரிஜ், அல் முத்தஸ்ஸிர், அத் தஹ்ர், அல் முர்ஸலாத் ஆகிய அத்தியாயங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுவனத்தைப் பற்றி, சுவனத்தின் இன்பங்களைப் பற்றி, யாருக்கு சுவனம் கிடைக்கும் என்பது பற்றி சுமார் 50 க்கும் மேற்பட்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

اِنَّ لِلْمُتَّقِیْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِیْمِ 

நிச்சயமாக! பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு. ( அல்கலம்(68): 34 )

فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ فِى جَنَّةٍ عَالِيَةٍۢ

ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் - உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார். ( அல்ஹாக்கா (69): 21,22 )

أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍۢ مُّكْرَمُونَ

 (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள். ( அல்மஆரிஜ்(70) : 35 )

اِلَّاۤ اَصْحٰبَ الْیَمِیْنِ فِیْ جَنّٰتٍ ۛ۫ یَتَسَآءَلُوْنَ عَنِ الْمُجْرِمِیْنَ

வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர, (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) குற்றவாளிகளைக் குறித்து விசாரித்தும் கொள்வார்கள். ( அல் முத்தஸ்ஸிர் (73: 39-41 )

وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِیْرًا ۟

மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான். ( அத் தஹ்ர் (76): 13 )

 

اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟

நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (சுவனத்தின் குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள். ( அல் முர்ஸலாத் (77): 41 )

நிலையில்லாத இந்த உலகில் இடங்களை, நில புலன்களை வாங்கிக் குவிக்கும் ஆர்வம் நிறைந்த நம்மில் பலருக்கும் நிலையான சுவனத்தில் ஓர் இடம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதாவது வந்திருக்கிறதா? வந்திருந்தால் அல்ஹம்துலில்லாஹ்! அப்படி ஒரு எண்ணம் நமக்கெல்லாம் வர வேண்டும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் சுவனத்தின் சொந்தக்காரர்களாக ஆக்கியருள்வானாக!

சுவனத்தில் நாம் ஒரு இடம் வாங்கினால் அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் சுகங்களும் சாதாரணமானவை அல்ல. மிகப் பிரம்மாண்டமானவை. 

அதற்குத் தான் அதிகமதிகம் ஒரு முஃமினாக - இறைநம்பிக்கையாளனாக நாம் முயற்சி செய்ய வேண்டும்!

خَيْرٌ مُسْتَقَرًّا وَأَحْسَنُ مَقِيلًا

            சொர்க்கவாசிகள் அந்நாளில் தங்குமிடத்தால் மிக சிறந்தவர்கள்; இன்னும், ஓய்வெடுக்கும் இடத்தால் மிக சிறப்பானவர்கள் ஆவார்கள்.  ( அல்குர்ஆன்: 25: 24 )

மறுமையில் ஒரு சாட்டை வைக்கக்கூடிய அளவு இடம் கிடைப்பது என்பது இந்த பூமியும் அதில் உள்ளவற்றில் உள்ள அனைத்தும் கிடைப்பதை விட சிறந்தது என்றால் அந்த சொர்க்கத்தின் இன்ப வாழ்க்கைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்.

مَوْضِعُ سَوْطٍ في الجَنَّةِ، خَيْرٌ مِنَ الدُّنْيا وما فيها، ولَغَدْوَةٌ في سَبيلِ اللَّهِ أوْ رَوْحَةٌ، خَيْرٌ مِنَ الدُّنْيا وما فيها. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : سهل بن سعد الساعدي | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 6415

ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம்(கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்என நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி ) 

1)   ஆசைப்பட வேண்டும்....

சுவனத்தை ஒரு முஃமின் ஆசை வைப்பதுடன், அதை அல்லாஹ்விடமும் வேண்டி நிற்கவேண்டும்.

وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ

சுவனத்தின் வாரிசுக்காரர்களில் ஒருவராகவும் என்னை ஆக்கிடுவாயாக! (அல்குர்ஆன்: 26: 85 ) என நமது தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

 

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

என் இரட்சகனே! சுவனத்தில் எனக்கென்று உனதருகே ஒரு மாளிகையை அமைத்திடுவாயாக!, ஃபிர்அவ்ன் மற்றும் அவனது (கொடுமையான) நடவடிக்கையில் இருந்து என்னைக் காத்திடுவாயாக! என்று அன்னை ஆசியா (ரழி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது.

2) நமக்கு சுவனத்தை தருவதற்கு நம் இறைவன் ஆர்வமாக இருக்கின்றான்!

عن سعيد بن أنس ، عن أنس بن مالك رضي الله عنه ، قال : بينا رسول الله صلى الله عليه وسلم جالس إذ رأيناه ضحك حتى بدت ثناياه ، فقال له عمر : ما أضحكك يا رسول الله بأبي أنت وأمي ؟ قال : « رجلان من أمتي جثيا بين يدي رب العزة ، فقال أحدهما : يا رب خذ لي مظلمتي من أخي ، فقال الله تبارك وتعالى للطالب : فكيف تصنع بأخيك ولم يبق من حسناته شيء ؟ قال : يا رب فليحمل من أوزاري » قال : وفاضت عينا رسول الله صلى الله عليه وسلم بالبكاء ، ثم قال : « إن ذاك اليوم عظيم يحتاج الناس أن يحمل عنهم من أوزارهم ، فقال الله تعالى للطالب : » ارفع بصرك فانظر في الجنان فرفع رأسه ، فقال : يا رب أرى مدائن من ذهب وقصورا من ذهب مكللة باللؤلؤ لأي نبي هذا أو لأي صديق هذا أو لأي شهيد هذا ؟ قال : هذا لمن أعطى الثمن ، قال : يا رب ومن يملك ذلك ؟ قال : أنت تملكه ، قال : بماذا ؟ قال : بعفوك عن أخيك ، قال : يا رب فإني قد عفوت عنه ، قال الله عز وجل : فخذ بيد أخيك فأدخله الجنة « فقال رسول الله صلى الله عليه وسلم عند ذلك : » اتقوا الله وأصلحوا ذات بينكم فإن الله تعالى يصلح بين المسلمين « » أخرجه الحاكم. وقال هذا حديث صحيح الإسناد ولم يخرجاه.

அபூ உமாமா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை எங்களிடையே அமர்ந்திருந்த நபி அவர்கள் திடீரென புன்முறுவல் பூத்தார்கள்.

அண்ணலாரின் முன்பற்கள் தெரியுமளவிற்கு புன்முறுவல் பூத்தார்கள். ஒன்றிரண்டு தடவை இது போல் மாநபி புன்னகைத்து பார்த்திருந்த நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய தாய்-தந்தையர் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். எதற்காக தாங்கள் புன்னகைத்தீர்கள்என்று வினவினார்கள்.

சபையிலிருந்த உமர் {ரலி} அவர்களும் என்னுடைய தாயும்-தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். தங்களுடைய சிரிப்பிற்கு காரணம் என்ன அல்லாஹ்வின் தூதரே!?” என வினவினார்கள்.

அதற்கு அண்ணலார் நபி என்னுடைய உம்மத்தைச் சார்ந்த இரண்டு அடியார்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு முன்னால் தங்களுடைய வழக்கை முறையிட்டவாறு அமர்ந்திருக்கின்றார்கள்.

ஒருவர், இன்னொருவர் மீது இறைவா! இவர் என் மீது அநீதம் இழைத்திருக்கிறார். அதற்கான ஈட்டை வாங்கிக் கொடுஎன் முறையிடுகிறார்.

அவரிடம் இருந்து எதை நான் ஈடாக உனக்கு பெற்றுத்தருவது? அவரிடம் தான் நன்மைகள் ஒன்றும் இல்லையே! அப்படி இருந்தால் அல்லவா, நான் அவரிடம் இருந்து உமக்கு பெற்றுத்தர முடியும்என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஆனால், அந்த அடியானோ அப்படியென்றால் என்னுடைய குற்றங்களை எடுத்து அவரிடம் சேர்த்து விடுஎன்று முறையிடுகின்றான்.

இதைச் சொல்லும் போதே சுந்தர நபியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அந் நாள் மிகவும் மோசமான நாளாகும். எப்படியாவது, ஏதாவது ஒரு வழியில் தன் பாவச் சுமைகளை கொஞ்சம் இறக்கி வைக்கமுடியாதா? என ஒவ்வொரு மனிதனும் அலைபாய்வான்என்று கூறினார்கள்.

அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருக்கும் அந்த அடியானைப் பார்த்து, ஓ அடியானே! உன்னுடைய பார்வையை கொஞ்சம் மேலே உயத்திப் பார்என்று அல்லாஹ் கூறினான். அவர் அங்கே முத்துக்களாலும், மாணிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட சுவனத்து மாளிகையை காண்கிறார்.

அங்கே எல்லா வகையான அருட் கொடைகளும் கொட்டிக் கிடப்பதை கண்டு விட்டு, ஆச்சர்ய மேலிட இறைவா! இது யாருடைய மாளிகை? எனக் கேட்டார்.

இதன் விலையை யார் தருகிறாரோ அவருக்கே இது சொந்தம்என அல்லாஹ் கூறினான்.

இதனுடைய விலையை யாரால் தான் கொடுக்க முடியும்? இதனை வாங்கிட யாரிடம் தான் செல்வம் கொட்டிக்கிடக்கின்றது? என அந்த அடியான் அல்லாஹ்விடம் சொன்னான்.     

அதற்கு அல்லாஹ் உன்னால் கூட அதை விலை கொடுத்து வாங்க முடியும் என்றான்.

 நானா? என்னிடம் எங்கே இருக்கின்றது அவ்வளவு பொன்னும் பொருளும்? என்றான் அந்த அடியான். அப்போது அல்லாஹ் நீ இந்த அடியானை மன்னித்து விட்டால் இந்த மாளிகையை உனக்கு தருகிறேன்என்றான். அப்படியானால் இதோ, இப்போதே நான் அவரை மன்னித்து விடுகிறேன்என்றான் அந்த அடியான்.

அல்லாஹ் தன் கருணையால் அவ்விருவரையுமே சொர்க்கத்தில் நுழையச் செய்தான்எனக் கூறி நபி அவர்கள் தங்களின் புன்முறுவலுக்கான காரணத்தைக் கூறினார்கள். ( நூல்: ஹாகிம் )

3) நமது நபி   அவர்கள் அல்லாஹ்விடம் சுவனத்தைப் பொறுப்பேற்றுத் தர ஆர்வமாக இருக்கின்றார்கள்.

 

عن أبي أمامة الباهلي رضي الله عنه مرفوعاً: «أنا زعيم ببيت في رَبَضِ الجنة لمن ترك المِرَاءَ وإن كان مُحِقًّا، وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحاً، وببيت في أعلى الجنة لمن حَسَّنَ خلقه

தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்என்று நபி அவர்கள் கூறினார்கள் என அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: அபூதாவூத் )

4) சுவனத்து மாளிகையின் வாய்ப்பு தவறிப் போய் விடக்கூடாது

مرت زبيدة زوجة هارون الرشيد ببهلول وهو يلعب مع الصبيان ويخط الأرض بأصبعه، فما رأت ذلك زبيدة تألمت فيما يصنع ثم قالت له: ماذا تفعل؟

قال البهلول للصبيان وهو يخط بتراب الأرض بأصبعه: لا تهدموا البيت الذي بنيته ثم ألتفت إلى زبيدة وقال: أما ترين أني مشغول ببناء بيت؟

أرادت زبيدة مساعدة بهلول إلا أنها كانت تعلم أنه يرفض ذلك تألمت قليلا ثم قالت: أراك تبني بيتًا جميلاً يليق بالعظماء وها أنا أرغب بشرائه منك.

أجابها بهلول وهو منكس رأسه إلى الأرض يخط على ترابها بأصبعه هذا البيت؟ نعم أبعه إياك.

نظرت زبيدة إلى الخطوط المعوجة التي رسمها بهلول على الأرض وقالت: اشتريت منك هذا الدار فكم ثمنه؟

قام بهلول على قدميه وأشار بيده على الصبيان وقال: بألف دينار لي ولهؤلاء الذين أعانوني على البناء.

أشارت زبيدة إلى خدمها وقالت: أعطه ألف دينار، ثم أنصرفت عنه. أخذ بهلول النقود وقسمها بين الفقراء.

مضت الأيام وذات ليلة رأى هارون في المنام أمرًا عجيبًا رأى كأنه يساق إلى الجنة فلما بلغ أبوابها قيل له هذا قصر زوجتك زبيدة فلما أراد الدخول منعوه من ذلك.

وفي الصباح التالي قص هارون رؤياه على علماء قصره فقالوا: سل زبيده على ما فعلت من بر.

فلما سألها أخذت تفكر في العمل الذي أستحقت من أجله قصرًا في الجنه فلم تتذكر سوى أنها أعطت لبهلول الف دينار، وقصت خبرها بذلك على هارون.

أدرك هارون ضرورة البحث عن بهلول ليشتري منه البيت الذي ليس له في هذه الدنيا قرار لكنه يكون في الأخرة قصرًا مشيدًا فأين بهلول؟

فوجده في مكان ما يخط بالتراب مع صبيان الحارة، قال لبهلول وهو يحاول عدم الاكتراث: أرى أقرب أقربائي يلعب مع الصبيان ويعبث بأصبعه على التراب.

أجابه بهلول: نحن نتمتع بما رزقنا الله في هذه الدنيا وها أنت ترى أني مشغول ببناء بيت على ارض الله لكي أبعه.

قال هارون: ليس قصور الملوك كالبيوت التي أنت مشغول ببنائها إلا أني مع ذلك أود شراء أحدها.

نظر بهلول لهارون نظرة تأمل ثم هزأ منه ضاحكا وقال: ثمن هذا الدار باهظ جداً.

قال هارون: كل ما تعلقت به رغبتنا لا يصعب علينا حصوله وأن كان ثمنه باهظًا.

ذكر بهلول آلاف الأكياس والبساتين والأموال الطائلة قيمة لتلك الدار.

سكت هارون والغضب أستولى عليه لأن ما طلب بهلول ليس بالشيء القليل فإنه لو جمع ثروات الأغنياء كلها لما بلغت سعر هذا البيت.

أراد هارون أن يعرف اللغز وراء كلام بهلول وما يريد من ورائه ولذا قال لبهلول: لقد بعت مثل هذا الدار لزبيدة أقل من ذلك بكثير فقد بعتها بألف دينار ولما أردت شراءها منك أراك تقول قولا شططا!

نهض بهلول من الأرض وبعثر ما كان قد رسمه على الأرض بأطراف أصابع قدمه، وقال: ليعلم الخليفة أن بينه وبين زوجته زبيدة فرقًا شاسعًا، فإن زبيدة اشترت وهي لم تر وأنت رأيت وتريد أن تشتري ثم عاد مرة أخرى ليلعب مع الصبيان.

இறைநேசர் புஹ்லூல் (ரஹ்) அவர்கள் இந்த உலகின் நிலையாமையை உணர்த்தும் விதமாகப் பாலைவனத்தில் மண்ணாலான கோட்டை, கொத்தளங்களைக் கட்டுவார். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படும் அந்த மண் கோட்டைகளைக் கட்டி முடித்ததும் உடைத்துவிடுவார்கள். 

ஒருநாள். வழக்கம்போலவே பாலைவனத்தில் மண்கோட்டைகள் அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அந்த வழியே ஜனாதிபதி ஹாரூன் ரஷீத், தனது பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார். புஹ்லூலைக் கண்டதும் நின்றவர், அவரிடம் சென்று சலாம்சொல்லி நலம் விசாரித்தார்.

பதில் ஸலாம் சொல்லிய பிறகு நலமாக உள்ளேன்!என்று புஹ்லூல் (ரஹ்) பதில் அளித்தார்கள்.

புஹ்லூல் அவர்களே! இந்த மண்கோட்டை அழகாக.. அற்புதமாக உள்ளதே! இதன் விலை என்ன?” என்று கேட்டார் ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள்.

நூறு பொற்காசுகள்!என்று விலை சொன்னார்கள் புஹ்லூல் (ரஹ்) அவர்கள்.

என்ன..! மண்ணாலான இந்தக் கோட்டை, நூறு பொற்காசுகளா?” வியப்பால் வாய் பிளந்தார் ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள்.

ஜனாதிபதி அவர்களே..! நீங்கள் வாங்கினாலும் சரி.. வாங்காவிட்டாலும் சரி... இதன் விலை நூறு பொற்காசுகள்தான்! இதோ இந்த குழந்தைகளுக்காகவும், இதைக் கட்டிய எனக்காகவும் தான் என்று புஹ்லூல் (ரஹ்) பதில் கூறினார்கள்.

அவ்வளவு விலை கொடுத்து அந்த மண்கோட்டையை வாங்க விருப்பமில்லாதவராக ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள் சலாம் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்களின் துணைவியார் ஜுபைதா (ரஹ்) அவர்கள் புஹ்லூல் அவர்களை நலம் விசாரித்து ஸலாம் சொல்லி மண் கோட்டைகள் குறித்து கேட்டறிந்து அவர்கள் கேட்ட நூறு பொற்காசுகளை வழங்கி சென்றார்கள்‌.

அன்றிரவு ஜனாதிபதி ஹாரூன் ரஷீத் அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டார்.

அந்தக் கனவில், தன்னை, வானவர் ஒருவர் சொர்க்கத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கோட்டை, கொத்தளங்களுக்கு நடுவே அழைத்துச் செல்வதைப் போலவும், அதில் அவர்கள் நுழைய முற்பட்ட போது தடுக்கப்பட்டார்கள். "அற்புதமான இந்த மாடமாளிகைகளுக்கு சொந்தமானவர் யார்?’ என்று கேட்டபோது, உமது துணைவியார் ஜுபைதா (ரஹ்) அவர்களுக்குரியது என்று அந்த வானவர் சொன்னார்.

கனவைத் தொடர்ந்து விழித்துக் கொண்ட ஹாரூன் ரஷீத், தூக்கம் வராமல் தவித்தார்கள். இந்த கனவு குறித்து மறுநாள் காலை தமது அரசவை பிரதானிகளிடம் விளக்கம் கேட்ட போது, ஒட்டுமொத்மாக அனைவரும் இது குறித்து ஜுபைதா (ரஹ்) அவர்களிடமே கேட்டு விடுமாறு கூற, தமது துணைவியார் ஜுபைதா (ரஹ்) அவர்களிடம் தாம் கண்ட கனவு குறித்து கூறிய பிறகு, உமக்காக உயர்மாளிகைகளை அல்லாஹ் அமைக்கும் அளவுக்கு நீ என்ன அமல் செய்தாய்? என்று கேட்டதற்கு, ஜுபைதா (ரஹ்) அவர்கள் பாலைநில வழிப்போக்கர் புஹ்லூலிடம் விலைக்கு வாங்கிய கோட்டைகள்தான் இவை!என்று பதில் சொன்னார்கள்.

இன்னொரு அறிவிப்பில்... 

பாலைநில வழிப்போக்கர் புஹ்லூலிடம் உமது மனைவி விலைக்கு வாங்கிய கோட்டைகள்தான் இவை!என்று வானவர் பதில் சொல்வது போலவும் கனவு இருந்தது.

புஹ்லூல் (ரஹ்) அவர்களைச் சந்தித்து எப்படியாவது தனக்காக ஒரு சொர்க்கக் கோட்டையை வாங்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தவராக அதிகாலைப் பொழுதிலேயே பாலைவன மணற்பரப்பிற்கு தேடிச் சென்றார்கள் ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள்.

கடைசியில் ஓரிடத்தில், மண்கோட்டைகளை அமைக்கும் பணியில் இருந்த புஹ்லூல் (ரஹ்) அவர்களைக் கண்டார்கள்.

மிகவும் மென்மையான குரலில், சலாம் தெரிவித்த ஹாரூன் ரஷீத், “புஹ்லூல்! நேற்று நீங்கள் சொன்ன விலைக்கே மண்கோட்டையை வாங்கிக் கொள்கிறேன்!என்றார்.

ஜனாதிபதி அவர்களே! அது நேற்றைய விலை. இன்றைய விலையோ ஆயிரம் பொற்காசுகள். அதுவும் உடனடி ரொக்கமாக!புன்முறுவலுடன் புஹ்லூல் (ரஹ்) சொன்னார்கள்.

என்ன..! நேற்று நூறு பொற்காசுகள் என்று விலை சொல்லிவிட்டு இன்று ஆயிரம் பொற்காசுகள் என்கிறீரே புஹ்லூல்?” அதிர்ச்சியுடனும் வியப்புடனும் ஹாரூன் ரஷீத் கேட்க,“என்ன செய்வது ஜனாதிபதி அவர்களே! என் கோட்டைகளுக்கு வானவர்கள் வாங்கிச் செல்லும் அளவுக்கு ஏக கிராக்கி உள்ளது.

மேலும், நீங்கள் கொடுக்கும் பொற்காசுகளும் எனக்காக அல்ல. இதோ விளையாடிக் கொண்டிருக்கும் ஏழை, எளியோரின் குழந்தைகளின் தேவைக்கானதுஎன்று பதிலளித்தார் இறைநேசர் புஹ்லூல் (ரஹ்) அவர்கள் அமைதியாக.

ஒரு பெரும் வாய்ப்பு நழுவிப்போனதை எண்ணி வருந்தி ஜனாதிபதி ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள் அங்கிருந்து மௌனமாய் திரும்பினார்கள். ( நூல்: ஸில்ஸிலது லிகிஸஸி அஃகலில் மஜ்ஜானீன புஹ்லூல் (ரஹ்)... )

5) சுவனத்தில் எப்படி? எது? நம்மை நுழைய வைக்கும் என்று நமக்கு தெரியாது?

رواه الإمام أحمد في "الزهد" قال: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سُلَيْمَانَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ قَالَ: ( دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ النَّارَ رَجُلٌ فِي ذُبَابٍ. قَالُوا: وَكَيْفَ ذَلِكَ؟

قَالَ: مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ لَهُمْ صَنَمٌ لَا يَجُوزُهُ أَحَدٌ حَتَّى يُقَرِّبَ لَهُ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَرِّبْ! قَالَ: لَيْسَ عِنْدِي شَيْءٌ، فَقَالُوا لَهُ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا! فَقَرَّبَ ذُبَابًا، فَخَلَّوْا سَبِيلَهُ.

قَالَ: فَدَخَلَ النَّارَ. وَقَالُوا لِلْآخَرِ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا! قَالَ: مَا كُنْتُ لِأُقَرِّبَ لِأَحَدٍ شَيْئًا دُونَ اللَّهِ عَزَّ وَجَلَّ، قَالَ: فَضَرَبُوا عُنُقَهُ، قَالَ: فَدَخَلَ الْجَنَّةَ ) .

وصححه الألباني موقوفا على سلمان رضي الله عنه، كما في "سلسلة الأحاديث الضعيفة" (12 / 722)؛

ஒரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால் சுவர்க்கம் சென்றான். இன்னொரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால்நரகம் சென்றான்என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அது எப்படி சாத்தியமானது அல்லாஹ்வின் தூதரே!!என ஸஹாபாக்கள் வினவினார்கள். தாம் வணங்கும் சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும் வரை, அதனை கடந்துச் செல்ல அனுமதி கொடுக்காத மக்கள் வாழ்ந்த இடத்தை இருவர் கடக்க நேரிட்டது. ஒரு மனிதரிடம் அந்த சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும்படி அவர்கள் கட்டளையிட்டனர். காணிக்கை செய்ய என்னிடம் எதுவும் இல்லைஎன அவன் கூறினான். ஒரு ஈ அல்லது கொசுவாயினும் காணிக்கை செலுத்துமாறு அவர்கள் சொல்ல அவன் அந்த சிலைக்கு ஒரு கொசுவை காணிக்கை செய்தான். அக்காரணத்தால் அவன் நரக நெருப்பில் நுழைந்தான். மற்ற மனிதரையும் அச்சிலைக்கு எதையேனும் காணிக்கை செய்யும்படி வற்புறுத்திய போது மகத்துவமும், கீர்த்தியுமிக்க அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும், எதற்கும், எதையும் காணிக்கை செய்ய மாட்டேன்என அவர் மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட அந்த மக்கள் அவரை கொலை செய்தார்கள். அந்த மனிதர் சுவர்க்கம் சென்றடைந்தார்.என நபி அவர்கள் கூறியதாக தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல் : அஹ்மத் )                           

6) எளிதாக கிடைத்திடுமா சுவனம்?

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ إِلَى الْجَنَّةِ، فَقَالَ: انْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا فَرَجَعَ، فَقَالَ: وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا. فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالْمَكَارِهِ، فَقَالَ: اذْهَبْ إِلَيْهَا فَانْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا، فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالْمَكَارِهِ، فَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ. قَالَ: اذْهَبْ فَانْظُرْ إِلَى النَّارِ وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا فَإِذَا هِيَ يَرْكَبُ بَعْضُهَا بَعْضًا، فَرَجَعَ فَقَالَ: وَعِزَّتِكَ لَا يَدْخُلُهَا أَحَدٌ. فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالشَّهَوَاتِ، فَقَالَ: ارْجِعْ فَانْظُرْ إِلَيْهَا. فَنَظَرَ إِلَيْهَا فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالشَّهَوَاتِ، فَرَجَعَ وَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَنْجُوَ مِنْهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا». [حسن] - [رواه أبو داود والترمذي والنسائي] - [سنن أبي داود: 4744]

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்து விட்டு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுவர்க்கத்துக்கு அனுப்பி சுவர்க்கத்தையும், சுவர்க்கவாசிகளுக்காக நான் தயார்செய்தவற்றையும் பார்ப்பீராக என்று கூறினான். அவர் அதனை பார்த்துவிட்டு வந்து உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக எவரும் அதன் இன்பம் பற்றி கேள்விப்பட்டால்; அதில் நுழைந்து விடவே நினைப்பர். உடனே அந்த சுவர்க்கம் வெறுக்கப்டபடக்கூடிய விடயங்களால் சூழ்ந்திருக்க கட்டளைப் பிரப்பித்தான். மீண்டும் அங்கு சென்று சுவர்க்கவாசிகளுக்கு தான் தயார்செய்தவற்றை பார்த்து வருமாறு கூறினான் அங்கு சென்று பார்த்த போது சுவர்க்கம் வெறுக்கத்தக்க விடயங்களால் சூழப்பட்டிருந்தது. அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அதனுள் எவரும் நுழைய மாட்டார்களோ என நான் பயப்படுகிறேன். பின் நரகத்தையும் நரகவாதிகளுக்கு தான் தயார்ப்படுத்திவைத்திருப்பவற்றை பார்ப்பீராக என ஜிப்ரீலிடம் அல்லாஹ் கூற, அதனைச் சென்று பார்த்த போது அது அடுக்கடுக்காக இருப்பதை கண்டார்.பின் திருப்பிவந்து உனது கண்ணியத்தின் மீது ஆணையாக அதில் எவரும் நுழைய விரும்ப மாட்டார்கள். உடனே அல்லாஹ் நரகத்தை இச்சைகளால் சூழ்ந்திருக்க கட்டளைப்பிரப்பித்தான் பின் மீண்டும் அதனை பார்த்து வருமாறு அவருக்கு கட்டளையிட்டான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸ்லாம் அவர்கள் சென்று பார்த்த போது அது இச்சைகளால் சூழப்பட்டிருந்தது.உடனே திரும்பி வந்து (இறைவா) உனது கண்ணியத்தி;ன் மீது சத்தியமாக அதனுள் நுழையாது எவறும் தப்ப மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்.' ( நூல்: அபூதாவூத் )

عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعاً: «احْتَجَّتِ الجنَّة والنَّار، فقالتِ النَّار: فيَّ الجبَّارون والمُتَكَبِّرُون. وقالتِ الجنَّة: فيَّ ضُعَفَاء الناسِ ومساكِينُهُم، فقضى الله بَيْنَهُمَا: إِنك الجنَّة رحْمَتي أَرحم بك من أشاء، وإِنك النَّار عذابي أُعذب بك من أشاء، ولِكِلَيْكُمَا عليَّ مِلْؤُهَا».  

சுவர்க்கமும் நரகமும் விவாதித்துக் கொண்டன. அப்போது நரகம் "என்னிடம் அடக்கி ஆளுவோரும்,கர்வம் கொண்டவர்களும் இருக்கின்றனர்" என்று கூறியது. அதற்கு "சுவர்க்கம், என்னிடம் பலவீனமான மனிதர்களும்,ஏழை மக்களும் இருக்கின்றனர்" என்று கூறியது. அப்பொழுது அல்லாஹ் அவை இரண்டுக்கும் இடையே தீர்ப்பு வழங்கினான். "சுவர்க்கமே!நீ என்னுடைய அருளாக இருக்கின்றாய். உன்னைக் கொண்டு நான் நாடியவர்கள் மீது அருள்பாளிப்பேன்" என்றும், நரகமே! நீ எனது தண்டனையாக இருக்கின்றாய். உன்னைக் கொண்டு நான் விரும்பிய வர்களைத் தண்டிப்பேன். உங்கள் இருவரின் தலங்களையும் நிரம்பச் செய்வது என் பொறுப்பாகும்" என்றும் அல்லாஹ் கூறினான், என்று நபி அவர்கள் கூறினார்கள் என அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: முஸ்லிம் )

7) சுவனப் பேற்றை நஸீபாக்கும் சில அமல்கள்...

( اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ

اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا

إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ

وَكُفُّوا أَيْدِيَكُمْ )

ஆறு காரியங்களைச் செய்வதாக நீங்கள் எனக்கு உத்திரவாதம் தந்தால் உங்களுக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

பேசினால் உண்மையே பேசுங்கள்! வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்! அமாநிதத்தைஉரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்! கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்!

பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்! கைகளை -அநீதம் இழைப்பதை விட்டும்-

தடுத்துக் கொள்ளுங்கள்! என்று நபி அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : உபாதா -ரலி, நூற்கள் : அஹ்மத் 21695, இப்னுஹிப்பான், ஹாகிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه

عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا قَالَ

أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمُ

الْيَوْمَ جَنَازَةً قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ

فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي

اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا

قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ

صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا

دَخَلَ الْجَنَّةَ)

உங்களில் இன்று நோன்பு நோற்றிருப்பவர் யார்? என்று நபி அவர்கள்கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இன்று ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என்று நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இன்று ஏழைக்கு உணவளித்தவர் யார்? என்று நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இன்றுநோயாளியை விசாரித்தவர் யார்? என்று நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி)அவர்கள், நான்! என்றார்கள். இவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் ஒருவர் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று நபி அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, ( நூல் : முஸ்லிம் )

خمس من عملهن في يوم كتبه الله من أهل الجنة من عاد مريضاً وشهد جنازة وصام يوماً وراح يوم الجمعة وأعتق رقبة

ஐந்து காரியங்கள் உள்ளன. ஒரு நாளில் அதனை யார் நிறைவேற்றுகின்றாரோ

அல்லாஹ் அவரை சொர்க்கவாதிகளில் எழுதி விடுகிறான். அவர் நோயாளியை நலம் விசாரிக்க வேண்டும். ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும். அன்றைய தினம் நோன்புநோற்றிருக்க வேண்டும். ஜும்ஆவிற்கு முன்னேரத்தில் செல்ல வேண்டும்.

அடிமையை உரிமைவிட வேண்டும் என நபி அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : இப்னுஹிப்பான்)

عَنْ مُعَاذٍ قَالَ عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه

عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا

عَلَى اللَّهِ مَنْ عَادَ مَرِيضًا أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ أَوْ

خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ

بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ

النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ 

ஐந்து காரியங்கள் உள்ளன. அவைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்பவர் அல்லாஹ்வின் பொறுப்பில் வந்துவிடுகிறார் என நபி அவர்கள் எங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தார்கள். நோயாளியை விசாரிப்பவர் அல்லது ஜனாஸாவில் கலந்து கொள்பவர் அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் போராட வெளியேறிச் செல்பவர் அல்லது -முஸ்லிம்களின் ஆட்சித்- தலைவரை மதிக்க வேண்டும், கண்ணியப் படுத்த வேண்டும்என்ற நோக்கத்தில் அவரிடம் செல்பவர் அல்லது பிறருக்கு துன்பம் கொடுக்காமலும் பிறரின் துன்பத்திற்கு ஆளாகாமலும் தன் வீட்டிலேயே அமர்ந்துகொள்பவர் என்று நபி அவர்கள் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் : எந்த மனிதரைப் பற்றியும் புறம் பேசாமல் வீட்டிலேயேஅமர்ந்து கொள்பவர் என்று வந்துள்ளது. (அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் -ரலி, ( நூற்கள் : அஹ்மத் 21079,இப்னு குஸைமா, இப்னுஹிப்பான், ஹாகிம் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நஸீபாக்கி அருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment