இளைஞர்களின் உரிமைகளை வழங்க மறந்த முஸ்லிம் சமூகம்!
இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும் பயன்படுவதில்லை என்பதையும் தாண்டி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை என்றும், போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிப் போனார்கள் என்றும், பெற்றோரை பெரியோரை மதிப்பதில்லை என்றும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டி வருகிறோம்.
ஆனால், நாம் எந்த அளவுக்கு இளைஞர் சமூகத்தை நமது அண்மையில் வைத்துள்ளோம்? அவர்களுடன் உறவாடுகின்றோம்? அவர்களை கண்ணியப்படுத்துகிறோம்? அவர்களை அங்கீகரிக்கின்றோம்? அவர்களின் திறமைகளை மதிக்கின்றோம்? அவர்களைப் பாராட்டுகின்றோம்?
ஒரு தாய் தந்தையாக, ஒரு சகோதர சகோதரியாக, ஒரு குடும்ப உறவுகளாக, ஒரு மஹல்லாவாசியாக, ஒரு இமாமாக, ஒரு ஜமாஅத் நிர்வாகிகளாக எந்த அளவுக்கு இளைஞர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி வருகின்றோம்? என்று சிந்தித்து சீர் தூக்கிப் பார்க்க சமூகமாக நாம் கடமைப்பட்டுள்ளோம்.
1)
கண்ணியமாக பேச வேண்டும்!
அல் குர்ஆனிலே 31 வது அத்தியாயம் ஸூரா லுக்மானில் வசனம் 13 முதல் 19 வரை லுக்மான் (அலை) தன் மகனிற்கு செய்யும் உபதேசம் ஒவ்வொறு பெற்றோர்களுக்கும் சிறந்ததோர் முன்மாதிரியாகும்.
இன்று பெற்றோர் தம் பிள்ளைகளை எவ்வாறு அனுகுகின்றார்கள்? தம் சிறார்களை - இளைஞர்களை அன்பாக அழைத்து அறிவுரை கூறுபவர்கள் மிகக்குறைவு. பிள்ளைகள் சிறியதோர் பிழை செய்தாலும் உடனே ஏசுபவர்கள்தான் அதிகம். இவ்வாரான பிழையான அனுகுமுறைகள் காரணமாகவே பிள்ளைகள் பெற்றோர்களை விட்டும் தூரமாகின்றனர்.
1. என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும்.
2.
என் அருமை மைந்தனே! நிச்சயமாக நன்மையோ,
தீமையோ கடுகின் வித்தளவாக இருப்பினும் அது ஒரு பாறைக்குள் அல்லது வானங்களில் அல்லது புமியில் மறைந்து இருந்த போதிலும் அல்லாஹ் அதனைகொண்டுவந்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமானவன் நன்கு உணர்பவன்.
3. என் அருமை மைந்தனே! நீ தொழுகையை நிறைவேற்றுவாயாக! நன்மையைக் கொண்டு பிறரை ஏவுவாயாக! நிச்சயமாக அது காரியங்களில் உறுதியானதில் உள்ளது.
4. உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே! மேலும் புமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் தற்பெருமைக்காரர், கர்வங்கொண்டோர் ஒவ்வொருவரையும் நேசிக்கமாட்டான்.
5. மேலும் உன் நடையில் மத்திய தரத்தை கடைபிடிப்பாயாக உன் சத்தத்தையும் தாழ்திக் கொள்வாயாக! சத்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது கழுதைகளின் சத்தமாகும்.
அழகிய முறையில் கனிவான உபதேசங்கள். ஒவ்வொறு வார்தையிலும் 'யா புனய்ய' என் அருமை மைந்தனே என்ற கனிவான வார்த்தை. இவ்வாரான வார்தைகள்தான் எம் சிறார்களில் - இளைஞர்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
2) அங்கீகாரம் வழங்க
வேண்டும்!
பல நேரங்களில் இளைஞர்களை நாம் அங்கீகரிக்க மறுக்கின்றோம்.அவர்களின் ஆலோசனைகளை ஏற்க மறுக்கின்றோம். அவர்களின் முடிவுகளை புறந்தள்ளி அவர்களை முடக்கி விடுகின்றோம்.
ஆனால், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களோ இளைஞர்களை அங்கீகரிக்க தவறவில்லை. அவர்களின் ஆலோசனைகளை ஏற்க மறந்ததில்லை. அவர்களின் முடிவுகளை பாராட்டி அவர்களை தம்மோடு இணைத்துக் கொண்டார்கள்.
மக்காவில் துவக்க கால என்று சொல்வதை விட துவக்க நேர ஏகத்துவ
பிரச்சாரத்தின் போது நபி ﷺ
அவர்கள் மக்கா குறைஷிகளின் கடுமையான எதிர்ப்புகளை எதிர் கொள்ள வேண்டிய சூழல்
நிலவிய
மிக முக்கியமான ஒரு தருணத்தில், இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை பத்து அல்லது பன்னிரண்டு என இரட்டை இலக்கத்தை தொட்டு நிற்கிற வேளையில் நம்முடைய அடுத்த நகர்வு என்ன? என்று நபி ﷺ அவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய போது அதில் இஸ்லாத்தை ஏழாவது நபராக ஏற்றிருந்த 16 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரின் ஆலோசனையை நபி ﷺ அவர்கள் ஏற்றுக் கொண்டு அவரின் முடிவுக்கு இசைவு தெரிவுத்து அவருக்கு அங்கீகாரம் வழங்கினார்கள்.
மக்காவில் ஒரு சிலரே ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்று இருந்தார்கள். மக்கா காஃபிர்களுக்கு தெரியாமல் நபி ﷺ அவர்களும், ஆரம்ப கால நபித்தோழர்களும் இஸ்லாம் மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது, மறைமுகமாக தொழுதும் வந்தார்கள். ஒரு முறை சில காஃபிர்கள் நபி ﷺ அவர்கள் மற்றும் நபித்தோழர்கள் தொழுவதை பார்க்க இரு தரப்பினருக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டது.
இவ்வாறு அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படவே நபி ﷺ அவர்கள் ஸஹாபாக்கள் உடன் ஆலோசனையை தொடங்கினார்கள்.
நமக்கு ஒரு பாதுகாப்பான ஒரு இடம் கட்டாயம் வேண்டும், அங்கிருந்து இஸ்லாமிய அழைப்பு தரப்பட வேண்டும், இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு மார்க்கத்தை பற்றி கற்று கொடுக்கவும், நாம் இருக்கும் இடம் பிறருக்கு தெரியாத வண்ணம் இருக்க வேண்டும் என்று பல இடங்களை பற்றி ஆலோசனை செய்தார்கள்.
அப்போது தான் 16 வயதே நிரம்பிய அர்கம் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! எனது வீட்டை தேர்வு செய்யலாமே!, எனது வீட்டை நான் தருகிறேன்! சபா மலையின் அருகாமையில் கஃபத்துல்லாஹ்வுக்கு பக்கத்தில் இருக்கிற எனது வீட்டை நான் தருகிறேன், என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள் அர்கமின் வீட்டை தேர்வு செய்தார்கள்.
காரணம் அர்கம் (ரழி) அவர்கள் வாலிபர் மக்காவிலும் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாதவர், இதனால் இவர் வீட்டில் முஸ்லீகள் இருப்பார்கள் என்று யாரும் யோசிக்க கூட மாட்டார்கள் எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இவரின் வீட்டை தேர்வு செய்தார்கள். இந்த வீடு தான் இஸ்லாத்தின் முதல் மதரஸா (கல்விகூடம்), தஃவா (அழைப்பு) பணிக்கான முதல் மையம், இஸ்லாம் துவங்கிய இடமாகும்.
இங்கு நாம் மற்றொன்றை கவனிக்க வேண்டும், அர்கம் (ரழி) அவர்கள் மக்காவில் மக்சூம் கோத்திரத்தை சேர்ந்தவர் இந்த குலத்தை சார்ந்தவர்கள் தான் அபூஜஹ்ல், வலீது பின் உகைரா இவர்கள் எல்லாம் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள் ஆனால் அல்லாஹ் அவர்கள் குலத்தை சார்ந்த ஒருவரை வைத்தே இஸ்லாம் பரவ வழி வகுத்தான்.
அர்கம் (ரழி) அவர்கள் வீடு ஸஃபா மலையின் அடிவாரத்தில் இருந்ததனால் முஸ்லிம்கள் தங்களின் தொழுகையை இங்கு தான் நிறைவேற்றினர். எனவே மக்கா வரும் வெளியூர்வாசிகள் இவ்வில்லத்திற்கு குறைஷிகளின் கண்களுக்கு தென்படாமல் அழைத்து வரப்பட்டனர்.
இவரின் வீடு தான் முதல் மதரஸா, முதல் தொழுகை பள்ளிவாசல், மக்காவில் முஸ்லிம்கள் கூடி கலந்தாலோசிக்க ஆறுதலாய் கிடைத்த இடம், இந்த இடம் வரலாற்றில் ‘தாருஸ் ஸலாம்’ அமைதி இல்லம் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கியது. இன்றும் கஃபாவின் ஒரு அங்கமாக இவர் வீடு இருந்த இடம் உள்ளது. இவருடைய வீட்டில் தான் அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரழி), உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். ( நூல்: ரஹீக் அல் மக்தூம் )
3) பொறுப்புகளை வழங்க வேண்டும்!
இன்று முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு தேவைகள் இருக்கின்றன. அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் வாயிலாக அரசின் உதவிகளை இலகுவாக அடையலாம்.
மேலும், மஹல்லாவில் நம் சமூக மக்களின் உலகக் கல்வியில் சிறார் சிறுமிகளை மேம்படுத்த டியூஷன் வகுப்புகளின் தேவை இருக்கிறது.
ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் பணிகள் எவ்வளவோ இருக்கிறது.
நம் சமூகத்தின் படித்த இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி அதன் மூலம் நம் சமூகத்தின் தேவைகளை எளிதாக நிறைவேற்றலாம்.
ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?
நபித்துவத்தின் 11-ஆம் ஆண்டு, மக்காவிற்கு ஹஜ் செய்ய வந்த கஜ்ரஜ் கோத்திரத்தைச் சார்ந்த சிலரிடம் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஏகத்துவ அழைப்பை எத்திவைக்கின்றார்கள்.
அல்லாஹ் அவர்களின் இதயத்தில் ஏகத்துவ ஜோதியை ஏற்றிவைத்தான். அவர்கள் மதீனா சென்றதும் இஸ்லாத்தைப் பற்றியுண்டான விளக்கத்தை பரவலாக, மதீனா நகரெங்கும் வியாபித்துக் கூறினார்கள்.
இதன் விளைவாக, அடுத்த ஆண்டு ஹஜ் செய்ய வரும் போது புதிதாக ஏழு நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். முந்தைய ஆண்டு 5 நபர்கள், தற்போது 7 நபர்கள் என மொத்தம் 12 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
وبعد أن
تمت البيعة وانتهى الموسم بعث النبي صلى الله عليه وسلم مع هؤلاء المبايعين أول
سفير في يثرب؛ ليعلم المسلمين فيها شرائع الإسلام، ويفقههم في الدين، وليقوم بنشر
الإسلام بين الذين لم يزالوا على الشرك، واختار لهذه السفارة شابًا من شباب
الإسلام من السابقين الأولين، وهو مُصْعَب بن عُمَيْر العبدرى رضي الله عنه .
قال ابن اسحاق فلما انصرف عنه القوم بعث رسول الله صلى الله عليه وسلم معهم مصعب بن عمير بن هاشم بن عبد مناف بن عبد الدار بن قصي وأمره ان يقرئهم القرآن ويعلمهم الإسلام ويفقههم في الدين فكان يسمى المقرىء
இன்னும் இதை விட இஸ்லாத்தை மதீனாவிலே விரிவடையச் செய்ய விரும்பிய அல்லாஹ்வின் தூதர் ﷺ முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு அனுப்பினார்கள்.
வயதில் மூத்த எத்தனையோ நபித்தோழர்கள் இருந்தும், உமர், உஸ்மான், அபூபக்ர், ஹம்ஸா, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி-அன்ஹும்) போன்ற பெரிய நபித்தோழர்கள் இருந்தும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இளைஞரான முஸ்அப் (ரலி) அவர்களை மதீனாவின் முதல் தாஈ - இஸ்லாமிய அழைப்பாளராக தேர்வு செய்தார்கள்.
மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்த முஸ்அப் (ரலி) அவர்கள் அடுத்த முறை 60 முஸ்லிம்களை தயார் செய்து அனுப்பினார்கள்.
அதற்கடுத்த முறை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது. தமது தஃவா எனும் மார்க்க அழைப்பால் உஸைத் பின் ஹுளைர் (ரலி), ஸஅத் இப்னு முஆத் (ரலி) அஸ்அத் இப்னு ஸர்ராரா (ரலி) போன்ற உன்னதமான மேன்மக்களை வென்றெடுத்தார்கள்.
மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது, மதீனாவின் எல்லையில் திரண்டு வந்து வரவேற்கும் இதயப்பூர்வமான ஒரு கூட்டத்தை உருவாக்கினார்கள். (நூல்: ரஹீக் அல் மக்தூம், பாடம் அகபதுல் ஊலா, நூல்:தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:94)
4) பாராட்டி, தட்டிக் கொடுக்க வேண்டும்!
இளைஞர்களிடம் காணப்படும் நல்ல பண்புகள் மற்றும் குணங்களைக் கண்டாலோ அல்லது நம் கவனத்துக்கு யாரேனும் கொண்டு வந்தாலோ அந்த இளைஞரை பாராட்டி மென்மேலும் அந்த பண்புகளை வளர்த்துக் கொள்ளுமாறு தட்டிக் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவரின் வாழ்க்கை சரியான திசையில் செல்லும். காலமெல்லாம் தடம் புரளாமல் நேரிய வழியில் பயணிப்பார்.
رَأيتُ
في المَنامِ كَأنَّ في يَدي سَرَقةً مِن حَريرٍ، لا أهوي بها إلى مَكانٍ في
الجَنَّةِ إلَّا طارَت بي إليه، فقَصَصتُها على حَفصةَ، فقَصَّتها حَفصةُ على
النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم، فقال: إنَّ أخاكِ رَجُلٌ صالِحٌ. أو قال: إنَّ
عَبدَ اللهِ رَجُلٌ صالِحٌ. خلاصة حكم المحدث : [صحيح]
الراوي
: عبدالله بن عمر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم :
7015
| التخريج : أخرجه مسلم (2478) باختلاف يسير
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்:-"(நபி ﷺ அவர்களின் காலத்தில்) நான் கண்ட கனவில், என்னுடைய கையில் ஒரு பட்டுத் துணி இருப்பதைப் போன்றும், அதை நான் சொர்க்கத்தில் ஓரிடத்தில் எறியும்போதெல்லாம் அது என்னை அந்த இடத்திற்குத் தூக்கிக் கொண்டு பறந்ததைப் போன்றும் பார்த்தேன். இது குறித்து நான் (என் சகோதரி) ஹஃப்ஸாவிடம் எடுத்துரைத்தேன். அது குறித்து ஹஃப்ஸா, நபி ﷺ அவர்களிடம் விவரித்தபோது நபி ﷺ அவர்கள், 'உன் சகோதரர் நல்ல மனிதர்' அல்லது 'அப்துல்லாஹ் நல்ல மனிதர்' என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
كان
الرَّجُلُ في حَياةِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم إذا رَأى رُؤيا قَصَّها
على رَسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فتَمَنَّيتُ أن أرى رُؤيا، فأقُصَّها
على رَسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم، وكُنتُ غُلامًا شابًّا، وكُنتُ أنامُ
في المَسجِدِ على عَهدِ رَسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فرَأيتُ في النَّومِ
كأنَّ مَلَكَينِ أخَذاني، فذَهَبا بي إلى النَّارِ، فإذا هي مَطويَّةٌ كَطَيِّ
البِئرِ، وإذا لَها قَرنانِ، وإذا فيها أُناسٌ قد عَرَفتُهم، فجَعَلتُ أقولُ:
أعوذُ باللهِ مِنَ النَّارِ، قال: فلَقيَنا مَلَكٌ آخَرُ فقال لي: لَم تُرَعْ،
فقَصَصتُها على حَفصةَ فقَصَّتها حَفصةُ على رَسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم
فقال: نِعمَ الرَّجُلُ عبدُ اللهِ، لو كان يُصَلِّي مِنَ اللَّيلِ، فكان بَعدُ لا
يَنامُ مِنَ اللَّيلِ إلَّا قَليلًا.
خلاصة
حكم المحدث : [صحيح]
الراوي
: عبدالله بن عمر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم :
1121
| التخريج : أخرجه مسلم (2479) باختلاف يسير
இப்னு உமர்(ரலி) அவர்களின் தோழர்களில் சிலர் நபி ﷺ அவர்களின் காலத்தில் கனவு கண்டால் அதை நபி ﷺ அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். இறைத்தூதர் ﷺ அவர்களும் அல்லாஹ் நாடிய (விளக்கத்)தைக் (கனவுக்குக்) கூறுவார்கள். நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னல் இளம் வயது வாலிபனாய் இருந்த சமயம் பள்ளிவாசலே என் வீடாய் இருந்தது. (அங்கு தான் உறங்குவேன்.) அப்போது நான் மனத்துக்குள்ளே 'உனக்கு ஏதேனும் நன்மை நடப்பதாயிருந்தால் இவர்களைப் போன்று நீயும் (கனவு) கண்டிருப்பாய்'' என்று சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு (நாள்) இரவு நான் உறங்கப்போனபோது, 'அல்லாஹ்வே! என் விஷயத்தில் நீ ஏதேனும் நன்மையை அறிந்திருந்தால் எனக்கும் கனவைக் காட்டு'' என்று பிரார்த்தித்தேன். நான் அவ்வாறே (உறக்கத்தில்) இருந்தபோது (கனவில்) இரண்டு வானவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் முனை வளைந்த இரும்புத் தடி ஒன்று இருந்தது. அவர்கள் இருவரும் என்னை நரகத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் அவர்கள் இருவரிடையே இருந்து கொண்டு அல்லாஹ்விடம், 'அல்லாஹ்வே! நரகத்தைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று இறைஞ்சிக் கொண்டிருந்தேன்.
பிறகு தம் கையில் இரும்புத் தடி இருக்க இன்னொரு வானவர் என்னைச் சந்திக்கக் கண்டேன். அவர் (என்னிடம்) 'இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்; நீங்கள் அதிகமாகத் தொழுதால் நீங்கள் நல்ல மனிதர்தாம்'' என்றார். அப்போது அந்த வானவர்கள் (இருவரும்) என்னை நரகத்தின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தினர். கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. கிணற்றின் இரண்டு பக்கவாட்டிலுமுள்ள கல் தூண்களைப் போன்று தூண்கள் அதற்கும் இருந்தன. ஒவ்வோர் இரண்டு தூண்களுக்கும் இடையே ஒரு வானவர் இருந்தார். அவரின் கையில் முனை வளைந்த ஓர் இரும்புத் தடி இருந்தது. அந்த நரகத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த பல மனிதர்களை கண்டேன். அதில் (எனக்கு அறிமுகமான) குறைஷியர் சிலரை நான் கண்டுகொண்டேன். பிறகு அவ்வானவர்கள் (சொர்க்கவாசிகளின் வழித்தடமான) வலப்பக்கத்தில் என்னைக் கொண்டுசென்றார்கள். (தொடர்ந்து) இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (நான் உறங்கி எழுந்ததும்) இதை (என் சகோதரியும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன். ஹஃப்ஸா(ரலி) அவர்கள் அதை இறைத்தூதர் ﷺ அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள், 'அப்துல்லாஹ் நல்ல மனிதர் தாம் (இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் நன்றாக இருக்கும்)" என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இதைக்கேட்ட பின் இப்னு உமர்(ரலி) அவர்கள் (இரவில்) அதிகமாகத் தொழுது கொண்டேயிருந்தார்கள். ( நூல்: புகாரி )
முதலாவதாக பாராட்டிய நபி ﷺ அவர்கள் இரண்டாவதாக அவரை தட்டிக் கொடுத்தார்கள்.
இதனால் இப்னு உமர் ரலி அவர்கள் தம் வாழ்க்கையை எல்லா வழிகளிலும் நெறிப்படுத்திக் கொண்டார். மாநபி ﷺ அவர்களைப் போலவே வாழ வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டு மிகவும் பேணுதலான ஒரு வாழ்க்கையை இந்த உலகில் வாழ்ந்தார்கள்.
பின் வரும் நிகழ்வுகளை நாம் கவனிக்கும் போது குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் எவ்வளவு கவனமாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை அவதானிக்க முடிகிறது.
உஸ்மான் (ரழி) அவர்கள் முற்றுகை பற்றியும், அந்நேரத்தில் இப்னு உமர் (ரழி) அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள், கிளர்ச்சியாளர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொன்னார்கள் போன்ற அனைத்தையும் கீழ்வரும் செய்தி விவரிக்கின்றது.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ حَدَّثَنَا عُثْمَانُ هُوَ ابْنُ مَوْهَبٍ قَالَ جَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ مِصْرَ حَجَّ الْبَيْتَ فَرَأَى قَوْمًا جُلُوسًا فَقَالَ مَنْ هَؤُلَاءِ الْقَوْمُ فَقَالُوا هَؤُلَاءِ قُرَيْشٌ قَالَ فَمَنْ الشَّيْخُ فِيهِمْ قَالُوا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ يَا ابْنَ عُمَرَ إِنِّي سَائِلُكَ عَنْ شَيْءٍ فَحَدِّثْنِي هَلْ تَعْلَمُ أَنَّ عُثْمَانَ فَرَّ يَوْمَ أُحُدٍ قَالَ نَعَمْ قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَدْرٍ وَلَمْ يَشْهَدْ قَالَ نَعَمْ قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ قَالَ اللَّهُ أَكْبَرُ قَالَ ابْنُ عُمَرَ تَعَالَ أُبَيِّنْ لَكَ أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَفَا عَنْهُ وَغَفَرَ لَهُ وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَدْرٍ فَإِنَّهُ كَانَتْ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ مَرِيضَةً فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ لَبَعَثَهُ مَكَانَهُ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ وَكَانَتْ بَيْعَةُ الرِّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ الْيُمْنَى هَذِهِ يَدُ عُثْمَانَ فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ فَقَالَ هَذِهِ لِعُثْمَانَ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ اذْهَبْ بِهَا الْآنَ مَعَكَ
எகிப்து வாசியான ஒருவர் வந்து, (கஅபா எனும்) இறையில்லத்தை ஹஜ் செய்தார் அப்போது ஒரு கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டு, ‘இந்தக் கூட்டத்தார் யார்?’ என்று கேட்டதற்கு மக்கள், ‘இவர்கள் குறைஷிகள் என்று பதில் கூறினார்கள். அப்போது, ‘இவர்களின் முதிர்ந்த அறிஞர் யார்’ என்று அவர் கேட்டதற்கு மக்கள், ‘அப்துல்லாஹ் இப்னு உமர்’ என்று பதில் அளித்தார்கள். உடனே அவர் அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை நோக்கி, ‘இப்னு உமர் அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றிச் சொல்லுங்கள். உஸ்மான்(ரலி) உஹுதுப் போர்க்களத்திலிருந்து வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) ‘ஆம் அறிவேன்’ என்று பதில் அளித்தார்கள். அப்போது அவர் ‘உஸ்மான்(ரலி) பத்ர் போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். அற்கு இப்னு உமர்(ரலி) ‘ஆம் தெரியும்’ என்று பதில் அளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் அவர், ‘ஹுதைபியாவில் நடந்த பைஅத்துர் ரில்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க ஆம் தெரியும் என்று பதில் அளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு உஸ்மான்(ரலி) தாம் நினைத்தது போன்றே இவ்வளவு குறைகளுள்ளவர்தாம் என்று தொனிக்கும் படி) அந்த மனிதர், அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன் என்று என்று கூறினார். அப்போது இப்னு உமர்(ரலி), ‘வாரும்! (இவற்றிலெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லை என்பதை உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரின் பிழையைப் பொறுத்து மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியாக இருக்கிறேன். பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் மகள் (ருகய்யா(ரலி)) உஸ்மான்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) அப்போது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்த ஒருவருக்குரிய (மறுமைப்) பலனும், (போர்ப் பொருளில்) உங்களுக்கான பங்கும் கிடைக்கும் (நீங்கள் உங்களுடைய மனைவியைக் கவனியுங்கள்) என்றார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை.) பைஅத்துர் ரிள்வான் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம் உஸ்மான்(ரலி) அவர்களையும் விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) அப்படி இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்கள், குறைஷிகளிடம் பேசுவதற்கு தம் தூதராக அவரை) அனுப்பி இருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை.) எனவேதான், நபி(ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும் இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குள் போனபின்னர்தான் நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலகக்ரத்தைச் சுட்டிக் காண்பித்து இது உஸ்மானுடைய கை என்று கூறி அதை தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு, இப்போது நான் செய்யும் சத்தியப்பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்’ என்றார்கள். என இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, (உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், ‘நான் இப்போது சொன்ன பதில்களை நீ எடுத்துச் செல்லலாம்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உத்மான் பின் வஹப் ( புஹாரி )
இந்தக் குழப்பகாலங்களில் இப்னு (ரழி) அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவேயிருந்தன. பிரச்சினைகள் எதிலும் தொடர்பற்றவராகவே அவர்கள் இருந்தர்கள். இது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரிடம் வினவப்பட்ட போது அவர்களளித்த பதிலைக் கீழ்வரும் செய்தி விபரிக்கின்றது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَاهُ رَجُلَانِ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ فَقَالَا إِنَّ النَّاسَ صَنَعُوا وَأَنْتَ ابْنُ عُمَرَ وَصَاحِبُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا يَمْنَعُكَ أَنْ تَخْرُجَ فَقَالَ يَمْنَعُنِي أَنَّ اللَّهَ حَرَّمَ دَمَ أَخِي فَقَالَا أَلَمْ يَقُلْ اللَّهُ {وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ} فَقَالَ قَاتَلْنَا حَتَّى لَمْ تَكُنْ فِتْنَةٌ وَكَانَ الدِّينُ لِلَّهِ وَأَنْتُمْ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِغَيْرِ اللَّه
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் இப்னு
யூசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப (வருட)த்தில் இப்னு உமர்(ரலி)
அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து, ‘மக்கள் (அரசியல்
காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள்
உமர்(ரலி) அவர்களின் புதல்வரும் நபி(ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள்.
(நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது?’ என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘என் சகோதரனின்
இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத்
தடுக்கிறது’
என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும் ‘குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை
அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்’ என்று (திருக்குர்ஆன் 02:193 வது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?’ என்று
கேட்டார்கள். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘(ஆம்!
இறைத்தூதர்(ஸல்) காலத்தில்) குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள்
போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்க உரித்தானதாக ஆனது. ஆனால், (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே
விரும்புகிறீர்கள்!’
என்றார்கள்
அறிவிப்பவர் : நாபிஃ (ரஹ்), ( புஹாரி )
உஸ்மான் (ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்து போது இப்னு உமர் (ரழி) அவர்கள் அங்கு சென்றதும் உஸ்மான் (ரழி) அவர்கள் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ‘முகீரா இப்னு அஹ்னஸ் கூறுவது பற்றி நீர் என்ன சொல்கிறீர்’; என்றுஆலோசனை கேட்கிறார்கள். அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் ‘நீங்கள் ஆட்சியை அவர்களுக்குக் கொடுத்து விட்டால் உங்களை உலகில் அவர்கள் வாழவிடுவார்கள் என்று நினைக்கிறீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் ‘இல்லை என்னைக் கொலை செய்வார்கள்’ என்றார்கள். மீண்டும் இப்னு உமர் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் ‘ஆட்சியை நீங்கள்அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் உம்மைக் கொலை செய்வதைத் தவிர வேறெதையாயினும் அவர்களால் செய்ய முடியுமா?’ எனக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். தொடர்ந்தும் இப்னு உமர் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் ‘அவர்களுக்கு சொர்க்கமும், நரகமும் சொந்தமா?’ எனக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் ;இல்லை’ என்றார்கள். அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் ‘நீங்கள் ஆட்சியை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தால் இஸ்லாத்தில் அது முதல் ஸுன்னாவாக மாறிவிடும். எனவே அல்லாஹ் உங்களுக்கு அணிவித்த இந்த ஆடையை அல்லாஹ்வை சந்திக்கும் வரை நீங்கள் கழட்ட வேண்டாம் அதுவே நான் உங்களுக்குக் கூறும் அறிவுரை’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உஸ்மான் (ரழி) அவர்கள் தன் உயிர் பிரியும் வரை இதே ஆலோசனையில் உறுதியாக இருந்தார்கள்.
5) அவர்கள் யார் என்று அவர்களுக்கு அடையாளப் படுத்துங்கள்!
இளம் தொழில் முனைவராக இருந்த முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் தனது 18 ஆவது வயதில் இறைத்தூதர் ﷺ அவர்களை சந்தித்து பைஅத் செய்து இஸ்லாத்தை தழுவினார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் தோழர்களை நோக்கி இப்படிக் கூறினார்கள்.
قَالَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: (خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: مِنِ ابْنِ مَسْعُوْدٍ، وَأُبِيٍّ، وَمُعَاذِ بنِ جَبَلٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ)
”குர்ஆனின் அறிவை நீங்கள் நான்கு நபர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்! 1. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல், ஸாலிம் மவ்லா அபீ ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹும்)”
இன்னொரு சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார்கள்.
عَنْ
خَالِدٍ، وَعَاصِمٍ، عَنْ أَبِي قِلاَبَةَ:
عَنْ أَنَسٍ مَرْفُوْعاً: (أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي: أَبُو بَكْرٍ، وَأَشَدُّهَا فِي دِيْنِ اللهِ: عُمَرُ، وَأَصْدَقُهَا حَيَاءً: عُثْمَانُ، وَأَعْلَمُهُم بِالحَلاَلِ وَالحَرَامِ: مُعَاذٌ، وَأَفْرَضُهُم: زَيْدٌ، وَلِكُلِّ أُمَّةٍ أَمِيْنٌ، وَأَمِيْنُ هَذِهِ الأُمَّةِ: أَبُو عُبَيْدَةَ
“என் உம்மத்தில் மிகவும் இரக்கமுடையவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆவார்கள். தீனுடைய காரியங்களில் மிகவும் ரோஷமுடையவர் உமர் (ரலி) அவர்கள் ஆவார்கள். உண்மை பேசுவதிலும், வெட்க உணர்விலும் மேலோங்கியவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆவார்கள். ஹலால், ஹராமை மிகவும் விளங்கியவர் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
ابْنُ سَعْدٍ: أَنْبَأَنَا مُحَمَّدُ بنُ عُمَرَ، حَدَّثَنَا إِسْحَاقُ بنُ يَحْيَى، عَنْ مُجَاهِدٍ، قَالَ: لَمَّا فَتَحَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- مَكَّةَ، اسْتَخْلَفَ عَلَيْهَا عَتَّابَ بنَ أَسِيْدٍ يُصَلِّي بِهِم، وَخَلَّفَ مُعَاذاً يُقْرِئُهُم وَيُفَقِّهُهُم
மக்கா வெற்றிக்குப் பிறகு மக்காவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி இணைந்த வண்ணம் இருந்தனர்.
”அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மக்காவாசிகளுக்கு கவர்னராக அத்தாப் இப்னு உஸைத் (ரலி) அவர்களையும், குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கும், சன்மார்க்க சட்டதிட்டங்களை போதிப்பதற்கும் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை ஆசானாகவும் நியமித்தார்கள்”.
وروى سهل بن أبي حثمة، عن أبيه قال: كان الذين يفتون على عهد رسول الله صلى الله عليه وسلم من المهاجرين: عمر، وعثمان، وعلي. وثلاثة من الأنصار: أُبي بن كعب، ومعاذ بن جبل، وزيد بن ثابت.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் வாழும் காலத்திலேயே மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வளித்திடும் ஆற்றல் மிக்க ஆறு நபித்தோழர்கள் உண்டு. முஹாஜிர்களில் மூன்று பேர். 1.உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), அன்ஸார்களில் மூன்று பேர். 1.உபை இப்னு கஅப் (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி), ஜைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் ஆவார்கள். ( நூல்: உஸ்துல் ஃகாபா )
فهذا عائذ الله بن عبدالله يحدثنا انه دخل المسجد يوما مع أصحاب الرسول صلى الله عليه وسلم في أول خلافة عمر..قال: " فجلست مجلسا فيه بضع وثلاثون، كلهم يذكرون حديثا عن رسول الله صلى الله عليه وسلم، وفي الحلقة شاب شديد الأدمة، حلو المنطق، وضيء، وهو أشبّ القوم سنا، فاذا اشتبه عليهم من الحديث شيء ردّوه اليه فأفتاهم، ولا يحدثهم الا حين يسألونه، ولما قضي مجلسهم دنوت منه وسالته: من أنت يا عبد الله؟ قال: أنا معاذ بن جبل".
ஆயிதல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) எனும் தாபியீ கூறுகின்றார்கள்: நான் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் மஸ்ஜிதுன் நபவீ –யிற்குச் சென்றேன். அங்கே முப்பதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் ஒரு இளம் வயது வாலிபரிடம் நபிகளாரின் ஹதீஸ் குறித்தும், சன் மார்க்க சட்டதிட்டங்கள் குறித்தும் வினா எழுப்பிக் கொண்டிருக்க, சற்றும் அசராமல் ஒவ்வொன்றுக்கும் மிக அழகிய முறையிலே பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.
உடனடியாக அந்த சபையில் என்னையும் ஒரு மாணவராக நான் இணைத்துக் கொண்டேன். அவர்கள் அளிக்கும் பதிலில் ஒளியும், இனிமையும் இழையோடியதை நான் அறிந்து கொண்டேன்.
நீண்ட நேரத்திற்குப் பின் சபை முடிந்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது அவர் அருகே சென்று அல்லாஹ்வின் அடியாரே நீங்கள் யார்? என்று வினவினேன். அதற்கு அவர்கள் நான் தான் முஆத் இப்னு ஜபல் (ரலி) என்று அடக்கத்தோடும் பணிவோடும் பதில் கூறினார்கள்.
وهذا أبو
مسلم الخولاني يقول:
" دخلت مسجد حمص فاذا جماعة من الكهول يتوسطهم شاب برّاق الثنايا، صامت لا يتكلم. فاذا امترى القوم في شيء توجهوا اليه يسألونه. فقلت لجليس لي: من هذا..؟ قال: معاذ بن جبل.. فوقع في نفسي حبه".
அபூ மூஸ்லிம் ஃகவ்லானி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் ஹிம்ஸ் நகரின் ஒரு பள்ளிவாயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு பெருங்கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். அவர்களின் நடுவே ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.
அவரை நான் உற்று நோக்கினேன். அவரது கண்களும், பற்களும் வெண்முத்துக்கள் போல் பளிச்சிட்டன. ஆனால், அவரோ மிகவும் அமைதியாகவும், அடக்கமாகவும் அமர்ந்திருந்தார்.
அங்கே கூடியிருந்தவர்கள் அவ்வப்போது தங்களுக்கான மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று கொண்டிருந்தனர். அப்போது நான் இவர் யார்? என அங்கிருந்தோரிடம் வினவ, அவர்கள் இவர் தான் முஆத் இப்னு ஜபல் (ரலி) பதில் கூறினார்கள். அன்றிலிருந்து நான் அவர்களை நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.
وهذا
شهر بن حوشب يقول:
" كان أصحاب رسول الله صلى الله عليه وسلم اذا تحدثوا وفيهم معاذ بن جبل، نظروا اليه هيبة له"…
ஷஹ்ர் இப்னு ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபித்தோழர்கள் ஒன்று கூடி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கும் அவைக்கு முஆத் (ரலி) வருகை புரிந்தார்கள் என்றால் முஆத் (ரலி) அவர்களை மரியாதை கலந்த பார்வையோடு அணுகுவார்கள். ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.)
முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை ஏமன் பிரதேசத்திற்கு அதிகாரியாக நியமித்து இறைத்தூதர் ﷺ அவர்கள் வழியனுப்பி வைக்கிறார்கள்; முஆத் இப்னு ஜபல் ஒட்டகையில் ஏறி புறப்பட இறைதூதர் முஹம்மத் ﷺ அவர்கள் நடையாக சிறிது தூரம் அவருடன் செல்லுகிறார்கள்.
ஈடு இணையில்லா ஓர் ஒப்பற்ற வாழ்க்கையை வாழுமாறு அவர்களைத் தூண்டியது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஒரு நாள் பொழுதில் உதிர்த்த ஒரு வார்த்தை தான்..
وعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, فَقَالَ: ((إِنِّي لَأُحِبُّكَ يَا مُعَاذُ, فَقُلْتُ: وَأَنَا أُحِبُّكَ يَا رَسُولَ اللَّهِ, فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَلَا تَدَعْ أَنْ تَقُولَ فِي كُلِّ صَلَاةٍ رَبِّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ )) أخرجه النسائي في سننه
ஆம்! அண்ணலாரின் அண்மையில் சுகம் பெற்றுக் கொண்டிருந்த ஓர் உயரிய தருணத்தில் ஓ முஆதே! என்றழைத்து.. முஆத் அவர்களின் கரங்களைப் பற்றிப் பிடித்து நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “முஆதே! உம்மை நான் நேசிக்கின்றேன்!
அது கேட்ட, முஆத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நானும் தங்களை நேசிக்கிறேன்! என்றார்கள்.
மீண்டும் நபி ﷺ அவர்கள் முஆதே! அது உண்மையானால், கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும்…
யா அல்லாஹ்! உன்னை நினைப்பதிலும், உனக்கு நன்றி செலுத்துவதிலும், உன்னை அழகிய முறையில் வணங்குவதிலும் எனக்கு உதவி புரிவாயாக! என்று பிரார்த்திப்பதை விட்டு விட வேண்டாம்” என்று கட்டளையிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் இந்த வலிமை நிறைந்த வார்த்தையும், ஆற்றல் நிறைந்த கட்டளையுமே அவர்கள் உயர்வின் உச்சத்திற்கே, சிகரத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.
தமது 33 ஆம் வயதில் ஹிஜ்ரி 18 ஆம் ஆண்டு கொள்ளை நோயில் ஷஹீதாகுகின்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இஸ்லாத்தில் நுழையும் போது முஆத் (ரலி) அவர்களின் வயது 18, அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களின் அறிவுக் கண்ணை திறக்கும் அழைப்பாளராக மிளிர்ந்த போது முஆத் (ரலி) அவர்களின் வயது 19, பத்ரில் வீரராக களம் கண்ட போது வயது 20, மக்காவிற்கு ஆசானாகச் சென்ற போது வயது 26, ஏமனுக்கு ஆட்சியாளராகச் சென்ற போது வயது 28,
நபி ﷺ அவர்களில் உறவில் திளைத்தது வெறும் 8 ஆண்டுகள். மொத்தத்தில் இஸ்லாமிய நிழலில் முஆத் இப்னு ஜபல் (ரலி) இளைப்பாரியது வெறும் 16 ஆண்டுகளே!
வெறும் 34 ஆண்டுகள், அதிலும் சத்திய சன்மார்க்க நெறியோடு 16 ஆண்டுகளே வாழும் பாக்கியம் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கையை வாழ்ந்து சென்ற ஒரு மாமனிதரின் வாழ்க்கைக்கு வித்திட்டது அவர் யார் என்று நபி ﷺ அவர்கள் அவரை அடையாளப் படுத்தியது தான்.
18 வயது முதல் 33 வயது வரை ஒரு இளம் நபித்தோழரது வாழ்வு எவ்வாறு இருந்திருக்கிறது. நபி ﷺ அவர்கள் ஒரு இளைஞரை எவ்வாறு வழிநடத்தினார்கள் என்று
சற்று நிதானமாக இவ்வாறான சரிதைகளை படித்து எம்மை ஒருமுறை நாம் சுயவிசாரணை செய்து
கொள்வோம்.

No comments:
Post a Comment