ஹஜ்! நிய்யத்தும்... கபூலிய்யத்தும்.... (2026)
இந்த ஆண்டிற்கான
ஹஜ் தொடங்கிவிட்டது. இது பல ஆயிரம் ஆண்டுகள், பாரம்பரியமிக்க
வரலாற்றின் ஒரு தொடர்ச்சியாகும்.
இந்த ஆண்டு இந்திய
ஹஜ் கமிட்டி மூலம் ஒரு லட்சத்து இருபதாயிரம் நபர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு ஹஜ்
கமிட்டி சார்பில் 6,534
பயணிகள் இந்த ஆண்டு பயணம் செய்கின்றனர். தனியார் ஹஜ்
ஏற்பாட்டாளர்கள் மூலமாக சுமார் 4 ஆயிரம் பேர் ஹஜ்ஜு செய்யவுள்ளனர். ஆக மொத்த்தில் இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து சுமார் 10 ஆயிரம் பேர் ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றவுள்ளனர்.
ஹஜ் என்பது
மகத்தான ஓர் கடமையாகும். ஹஜ்ஜின் மாண்புகளும், சிறப்புகளும்
வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கின்றது.
மற்ற நான்கு
கடமைகளில் இருந்தும் வடிவத்தால், செயல் முறைகளால், நன்மைகளால்,
முற்றிலுமாக வேறுபட்ட ஓர் உன்னதமான கடமையாகும்.
ஹஜ் கடமையைப்
பற்றி குறிப்பிடும் போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதை தன்னோடு இணைத்துக் கூறுவான்.
وَأَتِمُّوا
الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ
“ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள்”. ( அல்குர்ஆன்: 2:
196 )
وَلِلَّهِ
عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا
“இன்னும், அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ்ஜு செய்வது, மனிதர்கள் மீது அதன் பால்
சென்று வர சக்தி பெற்றவரின் மீது கடமையாகும்”. ( அல்குர்ஆன்: 3: 97 )
ஹஜ் என்ற வணக்கம்
செயல் வடிவம் பெறுவதற்கு முன்பாகவே உலக மாந்தர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தனித்துவமான இபாதத் ஆகும். அல்லாஹ் இப்ராஹீம் {அலை}
அவர்களின் மூலமாக அறிவிப்புச் செய்ய வைத்தான்.
وَأَذِّنْ
فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ
كُلِّ فَجٍّ عَمِيقٍ
“இன்னும், ஹஜ்ஜுக்காக மனிதர்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுப்பீராக! நடந்தவர்களாக அவர்கள்
உம்மிடம் வருவார்கள். இன்னும், மெலிந்த எல்லா
ஒட்டகத்தின் மீதும் அவர்கள் வருவார்கள். அவை வெகுதூரமான எல்லா வழிகளில் இருந்தும்
அவர்களைக் கொண்டு வரும்”.
( அல்குர்ஆன்: 22: 27 )
இஸ்லாத்தின்
ஒவ்வொரு வணக்கமும்,
இபாதத்தும் தனித்துவங்கள் பல நிறைந்த கடமைகளாகும். அதனதன்
தனித்துவங்களை அறிந்து முழு மன ஈடுபாட்டோடு உளத்தூய்மையோடு நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக, ஹஜ் என்பது குறிப்பிட்ட சில நாட்கள் (ஐந்து நாட்கள்) குறிப்பிட்ட சில அமல்கள்
(பதினோரு அமல்கள்) கொண்ட ,
மாண்பும், மகத்துவமும் நிறைந்த ஓர்
கடமையாகும்.
الْحَجُّ
أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا
فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ
اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَاأُولِي
الْأَلْبَابِ
ஹஜ்ஜுக்குரிய
காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு
நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான். மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே!
எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். ( அல்குர்ஆன்: 2:197 )
ஹஜ்ஜின் முதல் நாள் = 1 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 8 <> [ மினாவில் ]
>
இஹ்ராம் உடைய நிலையில் மினாவில் தங்குதல்.
>
லுஹர் , அஸர் , மஃரிப் ,
மற்றும் இஷா , தொழுகையை நிறைவேற்றுதல் .
>
இரவு மினாவில் தங்குதல்.
ஹஜ்ஜின் இரண்டாம் நாள் =2 [ அதாவது ] துல் ஹஜ்
பிறை = 9
<> [ மினா & அரஃபா
>
மினாவில் இன்று ஃபஜர் தொழுகையை நிறைவேற்றுதல்
>
சூரியன் உதயமானதற்கு பின் அரஃபாவிற்க்கு புறப்ப்டுதல்
>
சூரியன் நடு உச்சியில் அடைந்த நேர முதல் சூரியன் மறையும்
நேரம் வரை அரஃபாவில் தங்குதல் ,
>
அரஃபாவில் இன்று லுஹரும் ,அஸரும் நிறை வேற்றுதல்..
>
சூரியன் மறைந்த பின் அரஃபாவில் மஃகரிப் தொழுகை நிறை
வேற்றாமல் முஜ்தலிஃபாவிற்கு புறப்படுதல்.
>
முஜ்தலிஃபாவில் இஷா வுடைய நேரத்தில் மஃகரிபும் ,இஷாவும் நிறைவேற்றுதல் .
>
இரவு முஜ்தலிஃபாவில் தங்குதல் .
ஹஜ்ஜின் மூன்றாம் நாள் = 3 [ அதாவது ] துல் ஹஜ்
பிறை = 10
<> [ முஜ்தலிஃபா ]
>
முஜ்தலிஃபாவில் இன்று ஃபஜர் சாதிக் அதிகாலையிலிருந்து
சூரியன் உதிக்கும் வரை தங்குதல் .
>
முஜ்தலிஃபாவில் இன்று ஃபஜர் தொழுகை நிறை வேற்றுதல் .
>
சூரியன் உதித்ததற்க்கு பின் மினாவிற்க்கு புறப்படுதல் .
>
மினாவில் இன்று சூரியன் உதித்த நேரத்திலிருந்து சூரியன் நடு
உச்சி அடையும் நேரம் வரை பெரிய ஷைத்தானுக்கு [ மட்டும் ] கல் எறிதல் .
>
குர்பானி கொடுத்தல் .
>
தலைமுடி இறக்குதல் / குறைத்தல் .
>
இஹ்ராம் உடைய உடைகளை நீக்கிவிட்டு தினசரி ஆடைகளை அணிந்துக்
கொள்ளுதல் .
>
தவாபே ஜியாரத் செய்தல் .
>
ஸஃயீ செய்தல்
>
இரவு மினாவில் தங்குதல் .
ஹஜ்ஜின் நான்காம் நாள் = 4 [ அதாவது ] துல் ஹஜ்
பிறை = 11
<>
>
[ நேற்றைய தினம் செய்யாமல் இருந்தால் இன்று ]
>
தவாபே ஜியாரத் செய்தல் .
>
மினாவில் சூரியன் நடு உச்சி அடைந்த நேரம் முதல் சூரியன்
மறையும் நேரம் வரை மூன்று ஷைத்தானுகளுக்கும் கல் எறிதல்
>
முதலில் சின்ன ஷைத்தானுக்கு கல் எறிதல் .
>
பின்னர் நடு ஷைத்தானுக்கு கல் எறிதல்.பிறகு பெரிய
ஷைத்தானுக்கு கல் எறிதல்
>
இரவு மினாவில் தங்குதல்
ஹஜ்ஜின் ஐந்தாம் நாள் = 5 [ அதாவது ] துல் ஹஜ்
பிறை = 12
<>
>
[ நேற்றைய தினம் செய்யாமல் இருந்தால் இன்று ] தவாபே ஜியாரத்
செய்தல்
>
மினாவில் சூரியன் நடு உச்சி ஸ்டைந்த நேர முதல் சூரியன்
மறையும் நேரம் வரை மூன்று ஷைத்தாங்களுக்கும் கல் எறிதல் .
>
பின்னர் நடு ஷைத்தானுக்கு கல் எறிதல் .
>
பின்னர் பெரிய ஷைத்தானுக்கு கல் எறிதல் .
>
மஃகரிபிற்கு முன் மக்காவிற்க்கு புறப்படுதல் .ஊரு
திரும்பும் முன் தவாபே விதா [ விடைபெறும் தவாப் ] செய்தல் .
ஹஜ் என்பது விரைவாக செய்ய வேண்டிய அமலாகும்.
ஹஜ் செய்வதற்கு
உடல் மற்றும் பொருளாதாரம்,
கால,
நேரம் ஆகிய வசதிகள் பெற்றிருக்கும் ஒருவருக்கு ஹஜ் செய்வது
கடமையாகி விடும்.
ஆனாலும், இன்று முஸ்லிம் சமூகத்தில் ஹஜ் செய்வதற்கு உடல் மற்றும் பொருளாதாரம், கால,
நேரம் ஆகிய வசதிகள் பெற்றிருந்தும் ஹஜ் செய்ய அதிக தாமதம்
செய்கின்றார்கள்.
وعن
الفضل - رضي الله عنه - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((مَن
أراد الحجَّ، فليَتَعجَّل؛ فإنه قد يَمْرَض المريض، وتَضِلُّ الضالَّة، وتَعْرِض
الحاجة))
ஃபள்ல் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் ஹஜ் செய்ய
நாடுகின்றாரோ அவர் விரைவாக ஹஜ் செய்து விடட்டும். ஒரு வேளை அவர் நோய்வாய்ப் படலாம்
அல்லது பயணப் புறப்பாட்டில் இடையூறு ஏற்படலாம் அல்லது வேறேதேனும் தேவைகள்
ஏற்படலாம்”.
என அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு மாஜா )
عن ابن
عباس - رضي الله عنهما - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -:
((تعجَّلوا إلى الحجِّ؛ فإن أحدَكم لا يدري ما يَعْرِض له
அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஹஜ்ஜை விரைவாக செய்து
விடுங்கள். ஏனெனில்,
உங்களில் எவரும் உங்களுக்கு இடையூறாக ஏற்படும் எதையும் அறிய
மாட்டீர்கள்”
என அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
عن أبي
سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "إن الله
تعالى يقول: إن عبدًا صحَّحتُ له جسمه، ووسَّعت عليه في معيشته، تَمضي عليه خمسة
أعوام لا يَفِد إليَّ لَمَحروم"؛ [أخرجه ابن حبان والبيهقي، وصحَّحه الألباني].
அபூஸயீதுல் குத்ரீ
(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- "எந்த அடியானுக்கு நான் நான் உடல் ஆரோக்கியம்
வழங்கி, விசிலமான வாழ்வாதாரமும் வழங்கி ஐந்து ஆண்டுகாலம் கடந்து சென்ற நிலையில் என்
பக்கம் அவன் பயணமாகவில்லையோ நிச்சயமாக அவன் என் பக்கம் பயணமாகி வருவதற்கு
தடுக்கப்படுவான்" என்று அல்லாஹ் கூறியதாக நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு ஹிப்பான், பைஹகீ )
بمعنى
أنه إذا مرَّ عليه خمسة أعوام، ولا يزور بيت الله الحرام، ولا يقصده بنُسك مِن
حجٍّ أو عُمرة، وهو على حالة المستطيع من الصحة ووفرة المال، فإنه مَحروم من خير
كثير، وأجرٍ عظيم.
மேற்கூறிய
நபிமொழிக்கு விளக்கம் தருகிற ஹதீஸ் கலை அறிஞர்கள் "அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
வழங்கிய உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார வளத்தை பெற்று நல்ல நிலையில் இருந்தும்
கூட ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ளாமல் பணத்தை சேர்ப்பதிலேயே கவனமாக இருக்கும்
அடியானுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நிறைவான நன்மைகளையும், மகத்தான கூலியையும் தரக் கூடிய நற்பாக்கியங்களை தடை செய்து விடுவான்.
ஹஜ் என்பது ஆசையுடன் செய்ய வேண்டிய அமலாகும்!
நபி ﷺ அவர்களுடன் ஆயிஷா (ரலி) ஹஜ் செய்கிறார்கள் ஹிஜ்ரி 10 ல். அதற்குப் பிறகு நபி ﷺ
அவர்கள் இந்த உலகை விட்டு விடைபெற்று சென்றார்கள்.
அதன் பின்னர்
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய இரண்டு ஆண்டு ஆட்சிக் காலங்கள். பிறகு உமர் (ரலி)
அவர்களுடைய ஆரம்ப ஒரு நான்கைந்து ஆண்டுகள், உம்மத்தில் நிலவுகிற
ஃபித்னாக்களை தடுப்பது ,
இஸ்லாமிய ஆட்சியை சரிப்படுத்துவது, சமப்படுத்துவது,
இதில் கழிகிறது.
இந்த கால
கட்டத்திற்குப் பிறகு நபி ﷺ
அவர்களுடைய மனைவிமார்கள் குறிப்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் கலீஃபா உமர் ரலி
அவர்களிடத்தில் நாங்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்று அனுமதி கேட்கிறார்கள்.
கலீஃபா உமர் (ரலி)
அவர்கள் நபி ﷺ அவர்களுடைய மனைவிமார்கள் ஹஜ்
செய்வதற்கான ஏற்பாடு செய்கிறார்கள். அதற்குண்டான பாதுகாப்பை பலப்படுத்துகிறார்கள்.
நபி ﷺ அவர்களின் வஃபாத்திற்குப் பின்னர் ஹிஜ்ரி 16 அல்லது 17 ல் இருந்து தமது ஹஜ் பயணத்தை துவங்கிய ஆயிஷா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 58 -ல் தான் மரணிக்கிற வரை ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்ய கூடிய வழக்கம் உள்ளவர்களாக
இருந்தார்கள் .
அப்போது, மக்களில் சிலர் கேட்கிறார்கள்: அன்னை அவர்களே! இவ்வளவு பலவீனப்பட்டு
விட்டீர்கள்! இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்! இந்த சிரமத்தோடும் இந்த ஹஜ்ஜை நிறைவேற்ற
வருகிறீர்களே என்று கேட்டபோது,
عَنْ
عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ:
يَا
رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ:
«لَا، لَكُنَّ أَفْضَلُ الجِهَادِ: حَجٌّ مَبْرُورٌ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري - 1520
எப்போது
அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து ஜிஹாதில் சிறந்தது ஹஜ் என்று சொல்லக் கேட்டேனோ
அப்போதே நான் மரணிக்கின்ற வரை இந்த இபாதத்தை விடமாட்டேன்" என்று உறுதி
பூண்டதாக சொன்னார்கள்.
ஹஜ் என்பது...
ஹஜ் என்பது, இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை தூண்களாகிய ஐந்து தூண்களில் ஒன்றாகும். இப்னு
உமர் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸை இமாம் புகாரி ரஹ் இமாம் முஸ்லிம் ரஹ் பதிவு
செய்கிறார்கள்.
" بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ "
இஸ்லாம் ஐந்து
தூண்களின் மீது அமையப் பெற்றிருக்கிறது. ஒன்று நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயமாக முஹம்மத் ﷺ அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார்கள் என்று
சாட்சி சொல்வது,
தொழுகையை நிலை நிறுத்துவது, ஜகாத்தை கொடுப்பது,
ரமலானில் நோன்பு நோற்பது, அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ் செய்வது. அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), ( நூல் : புகாரி )
ஹஜ் உடைய
சிறப்பைப் பற்றி பார்க்கும் பொழுது, இந்த ஹஜ் உடைய வணக்க
வழிபாட்டை பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்களுக்கு
கூறிய வலியுறுத்தல் அந்த அவசியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது, இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
خَطَبَنَا
رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيُّهَا النَّاسُ قَدْ
فَرَضَ اللهُ عَلَيْكُمُ الْحَجَّ، فَحُجُّوا»، فَقَالَ رَجُلٌ: أَكُلَّ عَامٍ يَا
رَسُولَ اللهِ؟ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَوْ قُلْتُ: نَعَمْ لَوَجَبَتْ، وَلَمَا
اسْتَطَعْتُمْ "، ثُمَّ قَالَ: «ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا
هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى
أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ،
وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَدَعُوهُ» وفى رواية ابى داود «بَلْ مَرَّةً
وَاحِدَةً، فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ»
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மக்களுக்கு உரையாற்றினார்கள். மக்களே! உங்கள்
மீது ஹஜ் கட்டாயக் கடமையாக்கப் பட்டிருக்கிறது. ஆகவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்.
அப்பொழுது ஒரு
மனிதர் எழுந்து கேட்டார்;
அல்லாஹ்வுடைய தூதரே! ஹஜ் கடமை என்பது ஒவ்வொரு ஆண்டுமா? ஒவ்வொரு ஆண்டும் நாம் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமா?
நபி ﷺ அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அந்த மனிதர் மூன்று
முறை இந்தக் கேள்வியைக் திரும்ப கேட்கிறார். நபி ﷺ அவர்கள் மூன்றாவது முறைக்கு பிறகு பதிலளித்தார்கள்.
நான் ஆம் என்று
சொல்லி இருந்தால் அப்படியே உங்கள் மீது கடமையாகி விடும். ஆனால் நீங்கள் நிறைவேற்ற
முடியாமல் பலவீனப் பட்டு இருப்பீர்கள்.
பிறகு சொன்னார்கள், நான் உங்களுக்கு எதை கொடுத்தேனோ, உங்களுக்கு எதை சொல்லி
விட்டேனோ,
எந்த அளவோடு சொல்லி நிறுத்தினேனோ, அந்த அளவோடு என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு போதிக்க வேண்டிய விஷயங்களில்
எந்த அளவு நான் போதித்து நிறுத்தினேனோ, அந்த அளவோடு என்னை விட்டு
விடுங்கள்.
உங்களுக்கு
முன்னுள்ள சமுதாயங்கள் அவர்கள் அழிவுக்கு ஆளானதற்கு காரணம் எல்லாம் தங்களது இறை
தூதர்கள் இடத்தில் அதிகமாக கேள்வி கேட்டார்கள். அவர்களிடத்தில் கருத்து
மாறுபட்டார்கள். அவர்களுடைய கூற்றுக்கு முரண் பட்டார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ( நூல்: முஸ்லிம்,அபூதாவூத் )
அல்லாஹ்விடத்தில்
நம்மை நெருக்கமாகி வைக்கக் கூடிய நல்ல காரியங்களில் அல்லாஹ்வின் பொருத்தத்தை அன்பை
மறுமையின் நன்மைகளை நமக்கு சேகரித்துக் தரக்கூடிய உயர்ந்த அமல்களில் சிறந்த
அமல்களில் இதுவும் ஒன்றாகும். அபூஹுரைரா (ரழி) அவர்கள்
மூலமாக அறிவிக்கப்படுகிறது.
أَيُّ
العَمَلِ أَفْضَلُ؟ فَقَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ». قِيلَ: ثُمَّ
مَاذَا؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ:
«حَجٌّ مَبْرُورٌ»
அமல்களில் எது சிறந்தது என்று
அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்களிடம் கேட்கப் படுகிறது. அப்போது நபி ﷺ அவர்கள் சொன்னார்கள்:
அமல்களில்
சிறந்தது அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் ஈமான் கொள்வது. நம்பிக்கை கொள்வது.
பிறகு கேட்கப்பட்டது,
அடுத்தது எது? நபி ﷺ அவர்கள் சொன்னார்கள், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவது.
பிறகு கேட்கப்பட்டது பிறகு என்ன என்பதாக. நன்மைகள் நிறைந்த
ஹஜ் என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ( நூல் : புகாரி )
ஹஜ் விஷயத்தில் கவனத்தில் எடுத்துக்
கொள்ளப்பட வேண்டிய இரண்டு பிரிவினர்கள்...
இன்று
சமூகத்தில் ஹஜ் கடமையானவர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது செய்யாமல் காலம்
தாழ்த்தி செய்வது போன்றே அவர்கள் சம்பாதித்த பொருளாதாரத்தில் இருந்து அவர்கள்
மட்டுமே ஹஜ் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது.
பருவ
வயதை அடைந்த தமது ஆண் பெண் மக்களை தம்மோடு ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லாமல் நீ
சம்பாதித்து நீ ஹஜ் செய்து கொள் என்று ஆண் மக்களிடமும், நீ உன் கணவரோடு ஹஜ் செய்து கொள் என்று பெண் மக்களிடமும்
சொல்வதை பரவலாக பார்க்க முடிகிறது.
ஆனால், பின் வரும் நபிமொழியில் ஒரு குழந்தையை ஹஜ்ஜுக்கு அழைத்துச்
சென்றால் அதன் நன்மை அழைத்துச் செல்கிற தாய்க்கு கிடைக்கும் என்ற சோபனத்தை நாம்
கவனத்தில் கொள்வதில்லை.
عن
كُرَيبٍ «أنَّ امرَأةً رَفَعَت صَبيًّا، فقالت: يا رَسولَ اللهِ، ألِهذا حَجٌّ؟
قال: نَعَم، ولَكِ أجرٌ» [و] عن ابنِ عَبَّاسٍ بمِثلِه، [أي بمِثلِ حديثِ: أنَّ
امرَأةً رَفَعَت صَبيًّا، فقالت: يا رَسولَ اللهِ، ألِهذا حَجٌّ؟ قال: نَعَم،
ولَكِ أجرٌ].
خلاصة
حكم المحدث : [صحيح]
الراوي
: عبدالله بن عباس | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 1336
| التخريج : من أفراد مسلم على البخاري
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண்மணி தன் குழந்தையை உயர்த்திக் காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அண்ணல்
நபி ﷺ அவர்கள் "ஆம்; (அதற்காக) உனக்கும்
நற்பலன் உண்டு" என்று விடையளித்தார்கள். ( நூல்: முஸ்லிம் )
وكان من
عادته في الحج أن يسأل أصحابه من ينوي منهم الحج؟ فيأخذ منهم نفقتهم في الحج، ويكتب
على كل صرة اسم صاحبها، ويضعها في صندوق.
ثم يخرج
بهم ويكون أميرا عليهم في الحج، فينفق عليهم من ماله بسخاء، ويعطيهم دواب
يركبونها، فإذا انتهوا من مناسك الحج، يشتري لهم هدايا لأهلهم من مكة، ثم إذا
زاروا المدينة لزيارة النبي ﷺ، يشتري لهم هدايا لأهلهم من المدينة، فإذا بدؤوا
الرجوع، أرسل في الطريق إلى من يصلح بيوتهم وبيض أبوابها ويرممها، فإذا عادوا إلى
أوطانهم صنع لهم وليمة بعد رجوعهم، فأطعمهم وكساهم ثيابا جديدة، ثم يأتي بالصندوق
الذي كان قد وضع فيه نفقتهم، فيعطي كل واحد منهم صرة المال التي عليها اسمه، فيدعون
له بالخير والقبول.
அப்துல்லாஹ் இப்னு
முபாரக் (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக இருந்ததோடு
மட்டுமல்லாமல் தம்முடைய மாணவர்கள் தமக்கு அறிமுகமான இன்னும் அறிமுகமில்லாதவர்களை அழைத்து
இந்த ஆண்டு உங்களில் யாரெல்லாம் ஹஜ் செய்ய நிய்யத் செய்துள்ளீர்கள்? என்று கேட்டு,
யாரெல்லாம் நிய்யத் செய்துள்ளதாக சொல்கின்றார்களோ அவர்களை தம்
சொந்த செலவில் ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்று, ஹஜ் பயணங்களில் ஏற்படும் அனைத்துச்
செலவுகளையும் தாமே செய்து,
ஹஜ் பயணம் முடிந்து ஊர் திரும்பும் போது வீட்டாருக்கும் குடும்பத்தாருக்கும்
உறவுகளுக்கும் அன்பளிப்புகளை வாங்கிக் கொடுத்து ஊர் திரும்பிய பிறகு அவர்களுக்கு விருந்தளித்து
புத்தாடைகள் கொடுத்து பணமுடிப்புகளை அன்பளிப்பாக வழங்கும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள்
என்று வரலாறு கூறுகிறது.
எனவே, ஹஜ் கடமையான தன்வந்தர்கள் தமது மக்களையும் தம்மோடு ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்கிற
மனோநிலையை பெற வேண்டும்.
அதே போன்று தமது தந்தையின்
அல்லது பெற்றோரின் செல்வத்தை பெற்று பொருளாதார வளத்தை பெருக்கிக் கொண்டு செல்வ செழிப்புடன்
வாழும் மக்களும் தம் பெற்றோர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழும் போது செல்வத்தை வளப்படுத்தும்
நோக்கில் ஹஜ் கடமையாகியும் ஹஜ் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தவர்கள். தற்போது வயதான
நிலையில் இருக்கிறார்கள் ஆகவே, அவர்களின் சார்பாக அவர்களின்
ஹஜ்ஜை நிறைவேற்றும் நோக்கில் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், சமூகத்தில் அந்த நிலையும் தற்போது பேணப்படுவதில்லை.
பின் வரும் நபிமொழியில்
ஹஜ் கடமையான வயதான தந்தையைப் பெற்றிருக்கும் ஒரு பெண் கேட்ட கேள்விக்கு மாநபி ﷺ அவர்கள் அளித்த பதில் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
أنَّ
امرأةً من خَثعمٍ قالت: يا رسولَ اللَّهِ إنَّ أبي شيخٌ كبيرٌ عليهِ فَريضةُ اللَّهِ
في الحجِّ، وَهوَ لا يستطيعُ أن يستويَ على ظَهْرِ بعيرِهِ، فقالَ النَّبيُّ صلَّى
اللَّهُ عليهِ وسلَّمَ: فحُجِّي عنهُ
خلاصة
حكم المحدث : أخرجه في صحيحه
الراوي
: الفضل [بن عباس] | المحدث : ابن خزيمة | المصدر : صحيح ابن خزيمة
ஃபள்ல் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கஸ்அம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி ﷺ அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே!
"என் தந்தை முதியவராக உள்ளார். இந்நிலையில், அவருக்கு அல்லாஹ் விதியாக்கிய ஹஜ் கடமை ஏற்பட்டுள்ளது. அவரால் தமது
ஒட்டகத்தின் முதுகில் அமர இயலாது" என்றார். அதற்கு அண்ணலார், "அவர் சார்பாக நீ ஹஜ் செய்யலாம்" என்றார்கள். ( நூல்: இப்னு குஸைமா )
மேற்கூறிய இரண்டு
நிகழ்வுகளிலும் நபி ﷺ
அவர்களிடம் ஆர்வத்துடன் கேள்வி கேட்டு தெளிவு பெற்றது இரண்டுமே பெண்கள் எனும் போது
ஹஜ் கடமையை நிறைவேற்றும் விஷயத்தில் நபித்தோழியர்களுக்கு இருந்த ஆர்வத்தை இது பறை
சாற்றும் விதமாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.
ஹஜ் செய்ய வேண்டும் என்ற நிய்யத் பலமாக இருக்க வேண்டும்!
ஹஜ் செய்ய
வேண்டும் என்று ஒருவரின் நிய்யத் பலமாக இருக்குமேயானால் ஒன்று அந்த நிய்யத்தை அவர்
அடைந்து கொள்வார். அல்லது ஹஜ் செய்யாமலேஅதன் பலனை அடைந்து கொள்வார்.
செருப்புத்தைக்கும் தொழிலாளியின் ஹஜ்..
قال
عبدالله بن المبارك ؛ كنت حاجاً لبيت الله الحرام ؛ وفي ليلةٍ من الليالي وأنا
نائم في منى ؛ رأيت فيما يرى النائم ؛ رجلين جالسين عند رأسي يتبادلان أطراف
الحديث ؛ فقال أحدهما للآخر : أتدري كم حاجاً تقبل الله حجه في هذا العام ..؟!!
قال الآخر : لا .. لا أعلم . فقال : لم يقبل الله من حجهم إلا القلة ؛ ولكن الله
عفا عنهم وقبل حجهم بفضل "موفقٍ الإسكافي الشامي" على أنه ببلاده ولم
يحج ..!! قال عبدالله بن المبارك : فاستيقظت ولم يكن لي هم بعدها إلا موفقٌ هذا ؛
وكيف قبل الله حج المسلمين بسببه وهو لم يحج ..!! قال عبدالله فخرجت من مكة أطلب
الشام ؛ فلما وصلتها سألت عن موفقٍ الإسكافي ؛ فلم أجده إلا بعد مدة بعد أن سألت
عنه كل من قابلت ؛ فلما قابلته قلت له : أحججت عامك هذا ..؟ قال : لا ؛ قلت له :
وما منعك من الحج ..؟ قال : ولماذا تسأل ..؟ قلت له : أخبرني بخبرك ؛ وسأخبرك
بخبري ..!! قال موفق : أنا إسكافي كما ترى ؛ ولما عزمت على الحج من العام الماضي ؛
صرت أدخر ما يزيد عن حاجتي من مال يسير للحج هذا العام أو العام الذي يليه ؛ فلما
اقترب موسم الحج وجدت أن المال يكفيني للحج ؛ فعزمت على الحج إلى بيت الله الحرام
؛ وأصبحت أعد العدة لذلك . وبينما أنا عائد إلى بيتي ذات يوم استقبلتني زوجتي
بإناء وكانت حاملاً ؛ وقالت لي : اذهب إلى جارتنا وأطلب منها شيئاً من الشواء ؛
فقد شممت رائحته عندهم واشتهيته . قال موفق : فذهبت إلى جارتنا وكانت أرملة ؛
وعندها صبية أيتام تقوم عليهم ؛ فقلت لها : خذي هذا الإناء وأعطينا شيئاً من
الشواء فقد اشتهته زوجتي وهي حامل . قالت المرأة : إنه لا يحل إلا لنا .. ولا يحل
لك يا موفق ..!! قلت : ولم ..؟ قالت : إنها ميته ؛ فقد نفقت شاةٌ عند بيت من بيوت
الحي ؛ فرموها على قارعة الطريق فرأيتها ؛ وكنت أنا وأبنائي لم نطعم شيئاً من عدة
أيام ؛ فخشيت عليهم من الهلاك ؛ فقطعت شيئاً من الشاة وجئت بها لأولادي وشويتها
لهم . قال موفق : فأظلمت الدنيا في عيني ؛ فرجعت منها إلى بيتي وأنا ألطم على وجهي
وأقول : ويلٌ لك يا موفق من الله ؛ تكنز المال لتحج .. وجارتك وصبيانها يأكلون الميتة
؛ فعمدت إلى المال وأعطيته كله لها ..!! قال عبدالله : فقلت له .. اعلم بأن الله
قد قبل حج من حج هذا العام بسبب عملك هذا ؛ ثم تركته وانصرفت إلى أهلي بالعراق .
கி.பி 760ம் ஆண்டு காலத்தில் முஹத்திஸ் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்கள்
மினாவில் உறங்கிக்கொண்டிருந்த போது ஓரு கனவு காண்கிறார். கனவில் இரண்டு பேரின்
உரையாடல் இடம்பெறுகிறது. ஹஜ்ஜுக்கு இந்த வருடம் ஆறு லட்சம் பேர் வருகை வந்தார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொற்பமானவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக் கொண்டான். ஆனாலும், சிரியாவின் தலைநகரில் வசிக்கும் அலி அல் முஃபிக் என்ற செருப்புத்தைக்கும்
தொழிலாளி ஹஜ்ஜுக்கு வரவில்லை. அவருக்கு ஹஜ் செய்த நன்மையை வழங்கியதோடு அவரின்
காரணமாக மற்ற ஹாஜிகளின் தவறுகளை மன்னித்து அவர்களின் ஹஜ்ஜையும் ஏற்றுக் கொண்டான்.
என்று உரையாடி முடித்தார்கள்.
இந்த உரையாடல்
முடிந்ததும் இமாம் அப்துல்லாஹ் பின் முபாரக் திடுக்கிட்டு எழுந்தார்கள்.
ஹஜ் பயணம்
முடிந்து ஷாம் சென்று முவஃப்பிக்கை சந்திப்பதாக இமாம் அவர்கள் முடிவுசெய்தார்கள். 6 மாத பயணத்தின் பின்னர் அவர்கள் டமஸ்கஸ் சென்றடைந்தார் தலைநகரில் இருந்த
கடையொன்றுக்குச் சென்று அல்முவஃபிக்கின் வீடு எது என கேட்டார்கள் இடம்
காட்டப்பட்டது. அலி ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. நேர்மையான மனிதராக
தென்பட்டார். சிறிது நேரம் உரையாடியதன் பின்னர் இமாம் அவர்கள் அலியை நோக்கி “நீங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற நிய்யத் வைத்திருந்தீர்களா? ஆமாம் சில வருடங்களாக நான் அதற்கான பணத்தை சேகரித்து வந்தேன் இம்முறை மொத்த
பணத்தையும் சேகரித்துவிட்டேன்.
ஆனால், சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்ட நிலையில் என்னால் ஹஜ் கடமையை
.இம்முறையும் பூர்த்திசெய்ய முடியவில்லை என்றார் அலி
இமாம் அப்துல்லாஹ்
இப்னு முபாரக் அவர்கள் முவஃப்பிக்கிடம் ஹஜ் செய்யாமைக்கான காரணத்தை
வற்புறுத்திக்கேட்டார்கள்;.
அவர் பதில்சொல்ல ஆரம்பித்தார். “நான் நாள் கூலிக்காக செருப்புத் தைத்துவருகிறேன். ஹஜ் கடமையை நிறைவேற்ற
வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஏனவே சில வருடங்களாக சேமித்ததன் மூலம் எனது
கையிருப்பில் மூவாரயிரம் தினார்கள் இருந்தன. இவை ஹஜ் செய்ய போதுமானவை. ஹஜ்
பயணத்திற்கான நாளும் நெருங்கியது. எனது மனைவியோ கர்பிணியாக இருந்தார். எனது
அயலவர்கள் மிக வறியவர்கள். அன்று இரவு பக்கத்து வீட்டில் இருந்து வீசிய இறைச்சிக்
கறியின் வாசனை எனது மனைவிக்கு இறைச்சிசாப்பிடும் ஆர்வத்தை தூண்டியது அவளோ
கர்ப்பிணி எவ்வாறு அளவது கோரிக்கையை நான் தட்ட முடியும. பக்கத்துவீட்டுக்
சென்றேன். என்னை அவர்கள் வரவேற்று உட்கார வைத்தார்கள். “ உங்கள் வீட்டில் சமைக்கப்பட்டுள்ள இறைச்சியை எனது மனைவி சாப்பிட
விரும்புகிறாள்”
என்றேன். பக்கத்துவீட்டுகாரன் என்னை பார்த்து இந்த இறைச்சிக்கறி
“ எங்களுக்கு ஹலால்,
உங்களுக்கு ஹராம்” என்றான் என்குப்
புரியவில்லை. அவன் சொன்னன் நானும் எனது பிள்ளைகளும், மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. எனது பிள்ளைகள் பசியினால்
படும்கஷ்டத்தை என்னால்பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே உணவுதேடி வெளியில் சென்ற
போது செத்த ஆடொன்று என் கண்களுக்குத் தெரிந்தது. நான் அதனை எனது மனைவியிடம்
எடுத்துச்சென்று சமைக்குமாறு கொடுத்தேன். அந்தக் கறியைதான் நீங்கள் கேட்கிறீர்கள்.
சாப்பிடுவதற்கு ஏதுவுமே இல்லாமையினால் தான் அது எங்களுக்கு ஹலால் என்றும்
உங்களுககு ஹராம் என்றும் கூறினேன் என்று பக்கத்துவீட்டுக்காரன் கூறியதும் என்னை
அறியாமலேயே என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. உடனே சில வருடங்களாக ஹஜ்
செய்வதற்கு நான் சேகரித்த பணத்தை பக்துவீட்டுக்காரனிடம் கொடுத்தேன்.
இந்த
சந்தர்ப்பத்தில் ஹஜ் செய்வதை விட அயல்வீட்டானின் தேவையயை நிறைவேற்றுவது அவசியம்
என்று நான் நினைத்தேன் என்று தனது கதையை கூறிமுடித்தார் அலி அல் முவப்ஃபிக்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களுக்கு அப்போது
தான் தெரியவந்தது “ஏன் அல்லாஹ்தஆலா அலி அல் முஃபிக் என்பவருக்கு ஹஜ்செய்யாமலேயே அதற்கான கூலியை
வழங்கினான் என்பதை. ( குறிப்பு:- அரபுலகின் பல்வேறு இமாம்கள் தங்களின் ஜும்ஆ
உரைகளில் இந்த நிகழ்வை குறிப்பிடுகிறார்கள். இதற்கு வரலாற்று நூல்களில் சான்றுகள்
இல்லை.)
"பி.டி யின் ஹஜ்"
மலையாளத்தில்
"பி.டி யின் ஹஜ்" என்ற பெயரில் ஒரு புத்தகம் இருக்கிறது, அந்தப் புத்தகத்திற்கு உயரிய விருதான "சாகித்ய அகாடமி" விருது
கிடைத்திருக்கிறது.
அந்த நூல்
சுவையானது. அந்த நூலுக்கான பின்னணி அதை விடச் சுவையானது.
1960 களின் காலம். பி.டி வீராண் குட்டி முஸ்லியார் கேரளத்தின் ஒரு சிறிய பள்ளிவாசலின் இமாம்.
இமாம் என்றாலே
அவர் "ஏழ்மையாக இருக்கவேண்டும், எளிமையாகவும்
இருக்கவேண்டும்" என்று சமூகம் வரையறுத்து வைத்து இருப்பது போல் அவரும் மிக
ஏழ்மையானவர். ஹஜ்ஜை நினைத்துப் பார்ப்பதே அவரது அன்றைய வசதிக்கு சாத்தியமில்லாதது.
அந்த ஊரின் பெரும்
பணக்காரர் ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்ல தயாராகிறார். வீட்டை விட்டு கிளம்பும் போது துஆ
செய்வதற்காக அந்த மஹல்லா இமாமான வீராண் குட்டி முஸ்லியாரை அழைத்திருக்கிறார்.
அந்த இமாம் துஆ
ஓதி முடித்த போது பணக்காரருக்கு நம் முஸ்லியாரை திருவணந்தபுரம் வரை அழைத்துச்
செல்லலாம் என்று தோன்றியது. முஸ்லியாரிடம் "நீங்கள் திருவணந்தபுரம் வரை
என்னோடு வந்து எனக்கு ஹஜ்ஜின் முறைகளைச் சொல்லிக் கொடுத்து கொண்டு வாருங்கள்.
தேவையான துஆக்களையும் செய்யுங்களேன்".. என்று கேட்டார்.
இமாம் சற்று
யோசித்து விட்டு வீட்டிற்கு போய் மனைவி குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டு இரண்டு
துணியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
திருவனந்தபுரத்தில்
அந்தப் பணக்காரர் "உஸ்தாதே..! என்னோடு அப்படியே மும்பை வரை வந்து என்னை
கப்பலேற்றி விட்டு வர வேண்டும்"... என்று கோரினார்.
திருவனந்தபுரம்
வரை வந்த உஸ்தாதின் பயணம் மும்பை வரை நீண்டது .
மும்பையில் வைத்து
அந்தப் பணக்காரருக்கு "நம் உஸ்தாதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றால் என்ன ? நமக்கும் பிரயோஜனமாக இருக்குமே..?" என்று தோன்றியது . உஸ்தாதிடம் கேட்டார்.
உஸ்தாதின்
கண்களில் கண்ணீர் மல்கியது,
அது பாஸ்போர்ட் போன்ற சமாச்சாரங்கள் தேவையில்லாத நேரம்.
கப்பலில் இடம் கிடைப்பது மட்டுமே முக்கியமாக இருந்தது. செல்வந்தர் கப்பல் கம்பெனியிடம் பேசி உஸ்தாதுக்கு சீட் வாங்கினார்.
இரண்டு செட்டு
துணிகளை எடுத்துக்கொண்டு திருவணந்தபுரத்திற்கு புறப்பட்ட உஸ்தாது இறுதியில் ஹஜ்ஜை
முடித்துக் கொண்டு திருவணந்தபுரம் திரும்பினார்.
இது சம்பந்தமான
விஷயங்களை புத்தகமாக அந்த பிடி முஸ்லியார் என்கிற இமாம் எழுத... அதுவே "பி, டி யின் ஹஜ்ஜு" என்ற பெயரில் புத்தகமாக வந்து "சாகித்ய அகாடமி"
என்கிற உயரிய விருதும் பெற்றது.
(
நன்றி: https://www.jaffnamuslim.com/2023/06/blog-post_296.html?m=1 செய்யது அஹமது அலி பாகவி அவர்கள் எழுதிய கட்டுரை )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை
தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

👍🤝💐
ReplyDeleteமாஷா அல்லாஹ் காலத்திற்கு ஏற்ற அருமையான தலைப்பு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
ReplyDeleteஹஜ்ரத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ் செய்த வருசம் ஹிஜ்ரி ஒன்பதா?பத்தா
ஹிஜ்ரி 10.
Deleteதவறாக டைப் ஆகியுள்ளது. தவறை திருத்தி விட்டேன்.
ஜஸாக்கல்லாஹு ஃகைரன் பாரக்கல்லாஹு ஃபீக்கும் ஹழ்ரத் பெருந்தகை
ஜஸாக்கல்லாஹ் கைரன் கஸீரா
ReplyDeleteஹஜ்ரத் உங்களின் சேவை மென்மேலும் தொடர அதன் மூலமாக அனைவரும் பயன் அடைய அல்லாஹ் தௌபஃபீக்செய்வானாக ஆமீன்.