தியாகத் திருநாள் சிந்தனை - (2026) இப்ராஹீம் அலை அவர்களின் குணம் படைப்போம்!!
"ஈதுல் அள்ஹா” ஹஜ்ஜுப்பெருநாள் உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்களால் தியாகத் திருநாளாக நினைவு கூறப்படுகிறது.
அத்தகைய தியாகத் திருநாளில் மகிழ்ச்சியோடு நாம் பெருநாள் தொழுகைக்காக காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது இந்த மகிழ்ச்சியை நமது வாழ்வில் இறுதி வரை நிலைக்கச் செய்வானாக!
இந்த உலகில் நாம் வாழும் போதும் சரி, இந்த உலகை விட்டு விடை பெற்று நாம் சென்று விட்டாலும் சரி இந்த உலகின் இயக்கம் இயங்கும் வரை பேசப்படுகிற, பின்பற்றப்படும் வகையிலான ஒரு வாழ்க்கையை இந்த உலகில் நாம் வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என்பது தான் இன்றைய நாளின் கதாநாயகராக திகழ்கிற இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி இப்ராஹீம் அலை அவர்கள் குறித்து பல்வேறு சிறப்புகளை அல்குர்ஆனில் குறிப்பிட்டிருந்தாலும் இரண்டு இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் அழகிய பண்புகளை குறிப்பிடுவதை நாம் எளிதாக கடந்து போய் விட முடியாது.
ஏகத்துவ பிரச்சாரத்தின் போது ஆக்ரோஷமான இளைஞராக அடையாளப்படுத்தும் அல்லாஹ், தம் சமூகத்தை எதிர் கொள்ளும் போது விவேகியாக அறிமுகப்படுத்தும் அல்லாஹ், தம் தந்தையை நல் வழிப்படுத்தும் முயற்சியில் சிந்தையாளராக முகவரி கொடுக்கும் அல்லாஹ், தம் அரசரை எதிர் கொள்ளும் போது தர்க்க ரீதியான ஆளுமையாக அடையாளப்படுத்தும் அல்லாஹ் தம் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான இரண்டு பகுதியில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அழகிய பண்பாளராக அடையாளப் படுத்துகின்றான்.
اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ
நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். ( அல்குர்ஆன்: 11: 75 )
اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ
நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.( அல்குர்ஆன்: 9: 114 )
ஒரு மனிதர் எவ்வளவு சிறந்தவராக வாழ்ந்த போதிலும் அவர் உச்சத்தை தொடுவது அவரின் அழகிய பண்பாடுகளால் தான் என்பதை நபி இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்விலிருந்து நமக்கான மகத்தான பாடமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அமைத்துள்ளான்.
தமது தந்தை இஸ்லாமிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இப்ராஹீம் அலை அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது.
ஆதலால் இப்ராஹீம் அலை அவர்கள் தமது தந்தைக்கு ஏகத்துவ அழைப்பியலை அதன் மொத்த வடிவத்திலும் கொடுத்தார்கள்.
ஆனால், இப்ராஹீம் அலை அவர்களின் தந்தையோ ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் முழு மூச்சாக இருந்து இப்ராஹீம் அலை அவர்களை விட்டும் ஒதுங்கியே வாழ்கிறார்.
இந்த நிலையில் தமது தந்தையின் மீதான அளவு கடந்த பாசத்தால் இப்ராஹீம் அலை அவர்கள் அல்லாஹ்விடம் தொடர்ந்து பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.
وَاغْفِرْ لِاَبِىْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّيْنَۙ
என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார்.
وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ
(மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே! ( அல்குர்ஆன்: 26: 86,87 )
ஒரு கட்டத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இத்தகைய பாவமன்னிப்புக் கோரலை விட்டுவிடுமாறு கட்டளை இடுகின்றான்.
உடனடியாக இப்ராஹீம் அலை அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோருவதை விட்டு விடுகிறார்கள்.
مَا كَانَ لِلنَّبِیِّ وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَلَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِن بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِیَّاهُ ۚ فَلَمَّا تَبَیَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ
இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
( அல்குர்ஆன்: 9: 113, 114 )
அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அவர்கள் இந்த செயலை விட்ட போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் அழகிய பண்புகளை கூறி "நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்" என்று மெச்சிப் பேசுகிறான்.
தமது வயது முதிர்ந்த நேரத்தில் அல்லாஹ்விடம் தமக்காக குழந்தைப் பேற்றை தொடர்ந்து இப்ராஹீம் அலை அவர்கள் கேட்டு வந்தார்கள்.
அல்லாஹ்வும் அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு குழந்தை பேற்றை சோபனமாக சொல்ல வானவர்களை அனுப்பிய போது, அப்போதும் இப்ராஹீம் அலை அவர்கள் அல்லாஹ்வின் ஆற்றலின் மீது அதீதமான நம்பிக்கையோடு அந்த கட்டளையை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனாலும், சோபனம் சொல்ல வந்திருந்த வானவர்கள் லூத் அலை அவர்களின் சமூகத்தை அழிக்க வந்துள்ள செய்தியை கேட்டு, ஒரு சமூகமே அழிக்கப்பட உள்ளதா? என்று அல்லாஹ்விடம் இது குறித்து வாதிட்டார்களாம்.
தமக்கான சோபனம் மகிழ்ச்சியை தந்ததை விட ஒரு சமூகத்தின் அழிவு அவர்களுக்கு கவலையைத் தந்தது. இது அவர்களின் இளகிய மனதையும் இரக்க குணத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த செய்தியை பதிவு செய்து விட்டு
"நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்" என்று புகழ்ந்துரைக்கின்றான்.
فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ
(இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ
நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். ( அல்குர்ஆன்: 11: 74, 75 )
பொறுமை, சகிப்புத்தன்மை, இளகிய மனம், இரக்க குணம், எப்போதும் எந்நிலையிலும் அல்லாஹ்வின் பால் திரும்புபவராக இருந்தார்கள் என்று அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நபி இப்ராஹீம் அலை அவர்களின் அழகிய பண்புகளை குறிப்பிடுகின்றான்.
அபூபக்ரே! நீர் இப்ராஹிம் (அலை) அவர்களைப் போன்றவராவீர்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعلى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ: «أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ، وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللهِ عُمَرُ،
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுவதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தில் என் சமுதாயத்தின் மீது அதிக இரக்கமுள்ளவர் அபூபக்ர் ஆவார். அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்களில் கடுமையானவர் உமராவார். ( நூல்: திர்மிதீ )
عن عمرو بن مرّة، عن أبي عبيدة، عن عبدالله قال: لما كان يوم بدر قال رسولُ الله ﷺ: ما تقولون في هؤلاء الأسارى؟ فقال أبو بكر: يا رسول الله، قومك وأهلك، استبقهم واستتبهم لعلَّ الله أن يتوبَ عليهم.
وقال عمر: يا رسول الله، كذَّبوك وأخرجوك، فقدّمهم فاضرب أعناقهم.
وقال عبدالله بن رواحة: يا رسول الله، أنت في وادٍ كثير الحطب، أضرم الوادي عليهم نارًا، ثم ألقهم فيه.
قال: فسكت رسولُ الله ﷺ فلم يردّ عليهم شيئًا، ثم قام فدخل، فقال ناسٌ: يأخذ بقول أبي بكر. وقال ناسٌ: يأخذ بقول عمر. وقال ناسٌ: يأخذ بقول عبدالله بن رواحة.
ثم خرج عليهم رسولُ الله ﷺ فقال: إنَّ الله ليلين قلوب رجالٍ حتى تكون ألين من اللَّبن، وإنَّ الله ليشدد قلوب رجالٍ فيه حتى تكون أشدّ من الحجارة، وإنَّ مثلك يا أبا بكر كمثل إبراهيم، قال: فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَحِيمٌ [إبراهيم:36]، وإنَّ مثلك يا أبا بكر كمثل عيسى، قال: إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ [المائدة:118]، وإنَّ مثلك يا عمر كمثل موسى ، قال: رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ [يونس:88]، وإنَّ مثلك يا عمر كمثل نوحٍ ، قال: رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا [نوح:26]، أنتم عالة فلا ينفكن أحدٌ منهم إلا بفداءٍ، أو ضربة عنقٍ.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது: பத்ருப் போர் (முடிந்த போது) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இந்த அடிமைகள் விஷயத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று (மக்களிடம்) கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் தூதரே (இவர்கள்) உங்கள் கூட்டத்தினர்; மற்றும் உங்கள் குடும்பத்தினர். இவர்களை விட்டுவைத்து (திருந்துவதற்கு) அவகாசம் அளியுங்கள் என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இவர்கள் உங்களை (ஊரை விட்டும்) வெளியேற்றி உங்களைப் பொய்யர் என்று கூறினார்கள். எனவே தாமதப்படுத்தாமல் அவர்கள் பிடரிகளை வெட்டி விடுங்கள் என்று கூறினார். அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே அதிகமான விறகுகளைக் கொண்ட பள்ளத்தாக்கைக் கவனித்து அதிலே அவர்களைச் செலுத்தி அவர்கள் மீது நெருப்பை மூட்டி விடுங்கள் என்று கூறினார்கள்.
அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் பின் ரவாஹாவைப் பார்த்து) உமது உறவை நீ முறித்து விட்டாய் என்று சொன்னார்கள். சிலர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் உமர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் கூற்றையும் தூக்கிப் பிடித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இவர்களுக்கு எந்தப் பதிலும் தராமல் மக்களிடத்தில் வந்து இந்த விஷயத்தில் சிலரது உள்ளங்களை பாலை விட அல்லாஹ் மென்மையாக்கி விடுகிறான். சிலரது உள்ளங்களை கல்லை விடவும் கடினமாக்கி விடுகிறான் என்று கூறி விட்டு (பின் வருமாறு) சொன்னார்கள்.
அபூபக்ரே! நீர் இப்ராஹிமைப் போன்றவராவீர். யார் என்னைப் பின்பற்றினாரோ அவர் என்னைச் சார்ந்தவர். எனக்கு யாராவது மாறுசெய்தால் (இறைவா) நீயே (அவரை) மன்னிப்பவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறாய் என்று இப்ராஹிம் கூறினார். இன்னும் உமரே! நீர் ஈஸாவைப் போன்றவராவீர். ஈஸா கூறினார். (இறைவா) அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்கள். அவர்களை நீ மன்னித்தால் நீயே மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறாய்.
இன்னும் உமரே! நீர் மூஸாவைப் போன்றவராவீர். எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார். இன்னும் உமரே! நீர் நூஹைப் போன்றவராவீர்.
"என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே. என்று நூஹ் கூறினார். ( நூல்: அஹ்மத் )
إنَّ اللهَ وَعَدَني أنْ يُدخِلَ الجَنَّةَ من أُمَّتي أربعَ مئةِ ألْفٍ، فقال أبو بكرٍ: زِدْنا يا رسولَ اللهِ. قال: وهكذا وجَمَعَ كَفَّه، قال: زِدْنا يا رسولَ اللهِ. قال: وهكذا، فقال عُمَرُ: حَسْبُكَ يا أبا بكرٍ، فقال أبو بكرٍ: دَعْني يا عُمَرُ، وما عليكَ أنْ يُدخِلَنا اللهُ الجَنَّةَ كُلَّنا، فقال عُمَرُ: إنَّ اللهَ إنْ شاءَ أَدخَلَ خَلْقَه الجَنَّةَ بِكَفٍّ واحِدٍ، فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ: صَدَقَ عُمَرُ. خلاصة حكم المحدث : إسناده صحيح الراوي : أنس بن مالك | المحدث : شعيب الأرناؤوط | المصدر : تخريج المسند لشعيب | الصفحة أو الرقم : 12695 | التخريج : أخرجه أحمد (12695
அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: எனது சமுதாயத்தில் 4 லட்சம் பேரை சொர்க்கத்தில் நுழைவிப்பதாக அல்லாஹ் எனக்கு வாக்களித்தான் என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை (இன்னும்) அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள்.
நபி ﷺ அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வளவு (பேரை அல்லாஹ் அதிகப்படுத்துவான்) என்று சொன்னார்கள். அப்போதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள். அதற்கும் நபி ﷺ அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வாறு (அல்லாஹ் மக்களை சுவர்க்கத்தில் அள்ளிப் போடுவான்) என்றார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ரே போதும் (நிறுத்துங்கள்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரே என்னை விட்டு விடுங்கள். எங்கள் அனைவரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வதினால் உமக்கு ஒன்றுமில்லை என்று கூறினார்கள்.
அல்லாஹ் நாடினால் தன் (அனைத்து) படைப்பினங்களையும் ஒரே கையில் (எடுத்து) சொர்க்கத்தில் நுழையச் செய்து விடுவான் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உமர் சரியாகச் சொன்னார் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
( நூல்: அஹ்மத் )
இந்த உலகில் வாழும் காலத்திலேயே நபி இப்ராஹீம் அலை அவர்களின் அழகிய நற்பண்புகள் பலதிற்கும் ஒப்பாக வாழ்ந்தவர்கள் அ
பூபக்ர் சித்தீக் ரலி அவர்கள் ஆவார்கள்.
No comments:
Post a Comment