அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவோம்!!!
இந்த உலகில் நாம்
நம் வாழ்வில் நிறைய நபர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்.
நம்மை பெற்றெடுத்த
நம் தாய் தந்தையருக்கு,
நம் மனைவி மக்களுக்கு, நம் அயலவர்களுக்கு, நம் உறவுகளுக்கு,
நம் நட்புகளுக்கு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
நன்றிக் கடனில் ஆக
உயர்ந்தது நம்மைப் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கும், நம் வாழ்க்கையை வளமாக்க நமக்கு அருட்கொடையாய் வழங்கப்பட்ட நமது நபி ﷺ அவர்களுக்கும் தான்.
நமது நபி ﷺ அவர்களின் வாழ்க்கையை தூய்மையான முறையில் நம்மிடம்
சேர்த்துச் சென்ற முன்னோர்களான நபித்தோழர்கள், தாபிஈன்கள், ஹதீஸ் கலை அறிஞர்கள் திருக்குர்ஆன் விரிவுரை அறிஞர்கள், இறைநேசர்கள்,
இமாம்கள் நல்லோர்கள் ஆவார்கள்.
இந்த வரிசையில்
ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நாம் நன்றிக் கடன் பட்டிருக்கும் ஒருவராக நபி
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பரிணமிக்கின்றார்கள்.
ஆம்! அகிலத்தின்
அருட்கொடையாய் வழங்கப்பட்ட நமது நபி ﷺ அவர்கள் இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
உளப்பூர்வமான துஆவால் நமக்கு வழங்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
رَبَّنَا
وَابْعَثْ فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِكَ
وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُزَكِّیْهِمْ اِنَّكَ اَنْتَ
الْعَزِیْزُ الْحَكِیْمُ
“எங்கள் இறைவனே!
அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்
கொடுத்து;
அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை
அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” ( அல்குர்ஆன்: 2: 129 )
ஆகவே தான் நபி ﷺ அவர்கள் நமக்கு கற்றுத் தந்த ஸலவாத் நபி இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.
اللَّهُمَّ
صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ
إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ،
وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ
مَجِيدٌ.
இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் நமக்கும் இடையேயான இந்த தொடர்பு நம்முடைய இஸ்லாமிய
வாழ்க்கையில் பல்வேறு வகையில் தொடர்புடையதாக இருக்கிறது.
ஏகத்துவ
பிரச்சாரம்
& வாழ்க்கை, ஹஜ், குர்பானி என்று இஸ்லாமிய வாழ்க்கையின் பின்பற்றப்படும் ஓர் அங்கமாக, முன்மாதிரியாக ஏற்று வாழ வேண்டிய ஒருவராக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
மிளிர்கிறார்கள்.
அத்தகைய நபி
இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வோடு பிரார்த்தனையின் ஊடாக ஒரு பிணைப்பை
ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒரு
இறைநம்பிக்கையாளராக இந்த பிணைப்பின் ஊடாக நாம் பெற வேண்டிய பாடங்களும்
படிப்பினைகளும் அதிகமதிகம் இருக்கின்றன.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகளில் ஒன்று.
رَبَّنَا
وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ
وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
ரப்பனா வஜ்அல்னா
முஸ்லிமைனி லக வமின் dhதுர்ரிய்யதினாa
உம்மதம் முஸ்லிமதல் லக், வஅரினா மனாஸிகனா வதுப்
அலைனா, இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்.
பொருள்: எங்கள்
இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை
உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு
முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை
ஏற்பவன்;
நிகரற்ற அன்புடையோன். ( அல்குர்ஆன்: 2: 128 )
பிரார்த்தனையை
கேட்டதோடு நின்று விடாமல் வாழ்க்கை முழுவதும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு
முற்றிலும் வழிபட்டு வாழ்ந்தார்கள் இப்ராஹீம் {அலை} அவர்கள்.
إِذْ
قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ
“மேலும், இப்ராஹீமுடைய இறைவன் அவரிடம், ”நீர் முற்றிலும்
வழிபட்டவராக (முஸ்லிமாக) ஆகிவிடுவீராக!” என்று கூறிய போது, “அனைத்துலகங்களின் அதிபதியான இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டேன்” என்று பதில் கூறினார்”.
( அல்குர்ஆன்: 2: 131 )
இறைவனுக்கு
கட்டுப்பட்டு நடப்பது என்றால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவ்வளவு
பிரியம்.
இறைவனுக்கு
கட்டுப்பட்டு நடப்பதற்கு வரைவிலக்கணத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் இப்ராஹீம் {அலை}
அவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
வயது முதிர்ந்த
நிலையில் அல்லாஹ்விடம் கேட்டு, மன்றாடிப் பெற்றெடுத்த
இஸ்மாயீல் மழலையாக,
பால்குடிப் பாலகனாக இருக்கும் போது, அல்லாஹ்விடம் இருந்து ஓர் கட்டளை.
உம்மனைவியையும், உம் மகனையும் மக்காவிற்கு அழைத்துச் சென்று அங்கு விட்டு விட்டு, திரும்பிப்பார்க்காமல் வந்து விட வேண்டும்.
எங்கிருக்கின்றது
மக்கா? அது எப்படியான ஊர்?
என்னென்ன வசதிகள் அங்கே இருக்கிறது? இப்படியான எந்தக்கேள்விகளையும் ரப்பிடம் கேட்காமல் இப்ராஹீம் {அலை}
அவர்கள் தம் மனைவியையும், பால்குடி மாறா பாலகனையும் அழைத்துக் கொண்டு ஷாம் தேசத்திலிருந்து மக்காவை
நோக்கி கால் நடை பயணமாக வருகின்றார்கள்.
மக்கா வந்ததும், தம் மனைவி மகனை விட்டு விட்டு, அப்படியே ஒன்றும் பேசாமல்
திரும்புகின்றார்கள்,
அவருடைய மனைவி காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.
இரண்டாம்
முறைகேட்டும் பதிலில்லை. மூன்றாம் முறை "இது இறைவனின் கட்டளையா?" என்று கேட்டதற்கு இப்ராஹீம் நபி " ஆம் " என்ற பதிலைமட்டும் அளித்து
விட்டு, அல்லாஹ்விடம் துஆவும் செய்து விட்டு மீண்டும் ஷாமுக்கு பயணமானார்கள்.
அது போலவே தம்
மகனை அறுத்துப் பலியிடுவதாகக் கண்ட கனவை நிறைவேற்ற எவ்வித சலனமும் தடுமாற்றமும்
இன்றி முழுமையாக கட்டுப்பட்டு தம் மகனை அறுக்க முன் வந்தது.
இப்ராஹீம் அலை
அவர்களின் வாழ்விலிருந்து நமக்கான மகத்தான பாடம் ஒன்று இருக்குமானால் அது
"அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல்" என்ற அழகிய பண்பாடு தான்.
وإن من
عِظَم أمر التسليم والانقياد لله -عز وجل- ولرسوله وشرعه وأمره ونهيه، أن الله
-سبحانه وتعالى- ذكره في أكثر من عشرين موضعا من القرآن الكريم، وكل آية تحمل
دلالة معينة وإشارة هامة على طريق التسليم.
அல்லாஹ்வுக்கு
கட்டுப்படுதல் என்ற அழகிய பண்பாடாகிறது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு கட்டுப்படுதல், அல்லாஹ்வின் ஷரீஆவிற்கு கட்டுப்படுதல், அல்லாஹ்வின் ஏவல்
விலக்கல்களுக்கு கட்டுப்படுதல் என்ற பொருளில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள்
மறையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட வசனங்களின் ஊடாக தெளிவு படுத்துகின்றான்.
அதில் மிகப்
பிரதானமான இரண்டு வசனங்கள் நம் கவனத்துக்கு மிகவும் உகந்ததாகும்.
فَلَا
وَرَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ
لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَیُسَلِّمُوْا
تَسْلِیْمًا ۟
உம் இறைவன் மேல்
சத்தியமாக,
அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம்
மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் கட்டுப்படாத (ஏற்றுக் கொள்ளாத) வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் (கட்டுப்பட்டவர்கள்) ஆகமாட்டார்கள். (
அல்குர்ஆன்: 4:
65 )
وَمَا
كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَی اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا
اَنْ یَّكُوْنَ لَهُمُ الْخِیَرَةُ مِنْ اَمْرِهِمْ وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ
فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِیْنًا
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த
ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக
அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ( அல்குர்ஆன்: 33: 36 )
ஒன்று அல்லாஹ்வும்
அவனது தூதரும் தீர்ப்பளித்த விஷயங்களில் கட்டுப்படுவது, மற்றொன்று,
அல்லாஹ்வும் அவனது தூதரும் ﷺ தீர்மானித்த விவகாரங்களில் மாற்றுக் கருத்து கொள்ளாமல்
இருப்பது மேலும்,
அதை அப்படியே முற்றிலுமாக ஏற்றுக் கொள்வது.
நபி ﷺ
அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை!
اِنَّمَاۤ
اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِیْ حَرَّمَهَا وَلَهٗ
كُلُّ شَیْءٍ ؗ
وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟ۙ
“இந்த ஊரை எவன் கண்ணியப்
படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப்
பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே
முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக). ( அல்குர்ஆன்: 27: 91 )
قُلْ
اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا
جَآءَنِیَ الْبَیِّنٰتُ مِنْ رَّبِّیْ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ
الْعٰلَمِیْنَ
(நபியே!) கூறுவீராக: “என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான்
தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே கட்டுப்பட வேண்டும்
என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.” ( அல்குர்ஆன்: 40: 66 )
நமக்கான கட்டளை!
كَذٰلِكَ
یُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ ۟
நீங்கள்
(அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பதற்காக, இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்கினான். ( அல்குர்ஆன்: 16:
81 )
கட்டுப்பட்டு வாழ்பவருக்கு....
بَلٰی
مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ
۪ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ
அப்படியல்ல!
எவனொருவன் அல்லாஹ்வுக்கே (முழுமையாக) கட்டுப்பட்டு, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம்
உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும்
மாட்டார்கள்.
( அல்குர்ஆன்: 2:
112 )
நபித்தோழர்களை அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலில்
நெறிப்படுத்திய நபி ﷺ அவர்கள்!
وَقَد
رَبَّى النَّبِيُّ ﷺ أَصحَابَهُ عَلَى التَّسلِيمِ لِلَّهِ وَلِأَمْرِهِ وَأَمْرِ
رَسُولِهُ ﷺ، فَفِي صَحِيحِ مُسلِمٍ: «لَمَّا نَزَلَت عَلَى رَسُولِ اللَّهِ ﷺ:
لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرضِ وَإِنْ تُبدُوا مَا فِي
أَنفُسِكُم أَو تُخفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللهُ فَيَغفِرُ لِمَن يَشَاءُ
وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللهُ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ اشتَدَّ ذَلِكَ عَلَى
أَصحَابِ رَسُولِ اللَّهِ ﷺ، فَأَتَوا رَسُولَ اللَّهِ ﷺ، ثُمَّ بَرَكُوا عَلَى
الرُّكَبِ فَقَالُوا: أَيْ رَسُولَ اللَّهِ! كُلِّفنَا مِن الأَعمَالِ مَا
نُطِيقُ: الصّلَاةَ وَالصّيَامَ وَالجِهَادَ وَالصَّدَقَةَ، وَقَد أُنزِلَت
عَلَيكَ هَذِهِ الآيَةُ وَلَا نُطِيقُهَا! قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «أَتُرِيدُونَ
أَن تَقُولُوا كَمَا قَالَ أَهلُ الكِتَابَينِ مِن قَبلِكُم: سَمِعنَا
وَعَصَينَا؟! بَل قُولُوا: سَمِعنَا وَأَطَعنَا غُفرَانَكَ رَبَّنَا وَإِلَيكَ
المَصِيرُ»، فَلَمَّا اقتَرَأَهَا القَومُ وَذَلَّت بِهَا أَلسِنَتُهُم؛ أَنزَلَ
اللَّهُ تَعَالَى فِي إِثرِهَا:﴿آمَنَ الرَّسُولُ بمَا أُنزِلَ إِلَيهِ مِن
رَبِّهِ وَالمُؤمنُونَ كُلٌّ آمَنَ بِاللهِ وَمَلائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِه
لا نُفَرِّقُ بَينَ أَحَدٍ مِن رُسُلِه﴾، فَلَمَّا فَعَلُوا ذَلِكَ نَسَخَهَا
اللَّهُ تَعَالَى، فَأَنزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: :﴿لا يُكَلِّفُ اللَّهُ
نَفْساً إِلَّا وُسعَهَا لَهَا مَا كَسَبَت وَعَلَيهَا مَا اكتَسَبَت رَبَّنَا لا
تُؤَاخِذنَا إِنْ نَسِينَا أَو أَخطَأنَا﴾، قال: نعم، ﴿رَبَّنَا وَلَا تَحمِلْ
عَلَينَا إِصرًا كَمَا حَمَلتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبلِنَا﴾ قال: نعم،
﴿رَبَّنَا وَلَا تُحَمِّلنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ﴾ قال: نعم، ﴿وَاعْفُ
عَنَّا وَاغفِر لَنَا وَارحَمنَا أَنتَ مَولَانَا فَانصُرنَا عَلَى القَومِ
الكَافِرِينَ﴾ قال: نعم».
لِّلَّـهِ
مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ
أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ
وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
‘வானங்களில் உள்ளவையும்
பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள்
வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை
விசாரிப்பான். தான் நாடுவோரை அவன் மன்னிப்பான். தான் நாடுவோரை தண்டிப்பான்.
அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.’ (2:284)
இந்த வசனம்
அருளப்பட்ட போது அது நபித்தோழர்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்தது. எனவே, அவர்கள் நபி ﷺ
(அவர்களிடம் வந்து முழங்காலில் விழுந்து நின்று அல்லாஹ்வின் தூதரே! தொழுகை, நோன்பு,
ஜிஹாத், ஸதகா என எமது
சக்திக்குட்பட்ட அமல்களைச் செய்யுமாறு நாம் பணிக்கப்பட்டோம். அவற்றை நாம்
செய்கின்றோம். இதோ இப்போது இந்த ஆயத்து உங்களுக்கு அருளப்பட்டுள்ளது. இதைச் செய்ய
நாம் சக்தி பெற மாட்டோமே என தமது கவலையை வெளியிட்டனர். உங்களுக்கு முன்னர் வேதம்
கொடுக்கப்பட்டவர்கள் செவியேற்றோம், மாறு செய்தோம் என்று
கூறியது போல் நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? கூடாது! நாம் செவியேற்றோம், கட்டுப்பட்டோம். இதில்
நாம் தவறு விட்டால்) எங்கள் இறைவனே மன்னித்து உன்னிடமே மீள வேண்டியுள்ளது என்று
நீங்கள் கூறுங்கள் என்று கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் செவியேற்றோம், கட்டுப்பட்டோம் எங்கள் இறைவனே! மன்னித்துவிடு. உன் பக்கமே மீள வேண்டியுள்ளது
எனக் கூறினார்கள். அவர்கள் இதை ஏற்று வாயால் சொன்ன போது அதை ஒட்டி (2:285) வசனம் அருளப்பட்டது.
آمَنَ
الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ
بِاللَّـهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ
مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا
وَإِلَيْكَ الْمَصِيرُ
‘இத்தூதர் தனது இரட்சகனிட
மிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின் களும் (நம்பிக்கை
கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர் களையும்,
அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும்
நம்பிக்கை கொண்டுள்ளனர். ‘அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு; காட்டமாட் டோம். நாம் செவியேற்றோம், கட்டுப்பட்டோம், எங்கள் இரட்சகனே! உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.’
.(2:285) நபி ﷺ
அவர்களுடைய ஏவலுக்கு நபித்தோழர்கள் கட்டுப்பட்ட போது, 2:283 வசனத்தை அல்லாஹ் மாற்றி,
لَا
يُكَلِّفُ اللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا
مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ
رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن
قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ
عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى
الْقَوْمِ الْكَافِرِينَ
‘எந்த ஓர் ஆத்மாவையும்
அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அது சம்பாதித்ததன் நன்மை அதற்குரியதே.
அது சம்பாதித்ததன் தீமையும் அதற்குரியதே! ‘எங்கள் இரட்சகனே! நாம்
மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எம்மைக் குற்றம் பிடித்து
விடாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! எமக்கு முன் சென்றோர் மீது சுமத்தியது போன்ற
சிரமத்தை எம்மீது நீ சுமத்தி விடாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! எதில் எமக்கு
சக்தி இல்லையோ அதை எம்மீது சுமத்தி விடாதிருப்பாயாக! எம்மை மன்னித்து விடுவாயாக!
எங்கள் பாவங்களை அழித்து விடுவாயாக! மேலும், எங்களுக்கு அருள்
புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். எனவே, நிராகரிப்பாளர்களான
கூட்டத்திற்கு எதிராக எமக்கு உதவி புரிவாயாக!’ (2:286) என்ற வசனத்தை அருளினான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரலி)
( நூல்: முஸ்லிம் )
இந்த நிகழ்ச்சி
நபித்தோழர்களின் அல்லாஹ்விற்கும், அல்லாஹ்வின் தூதருக்கும்
கட்டுப்படும் பண்பாட்டை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அதே வேளை, அல்லாஹ்வினதும்,
அவனது தூதரினதும் சட்டங்கள் கட்டளைகள் எதுவாக இருந்தாலும்
பூரண மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொள்ளத் தயங்கக் கூடாது என்பதையும் உணர்த்துகிறது.
கட்டுப்படுவதில் உச்சத்தில் நின்ற நபித்தோழர்கள்...
நமது நபி ﷺ அவர்களுக்கு அருள்மறை அருளப்படுவதை நேரடியாகப் பார்த்த
நபித்தோழர்கள்,
திருமறையின் ஒவ்வொரு கட்டளைக்கும் மறு விநாடியே முழுமையாகக்
கட்டுப்பட்டார்கள். அதனுடைய கருத்துகளுக்கேற்ப தங்களைப் பரிசுத்தப்படுத்திக்
கொண்டார்கள். தீமையான விஷயங்களை தயக்கமின்றி தூக்கியெறிந்து விட்டு நன்மையான
காரியங்களின் பக்கம் விரைந்து சென்றார்கள் என்பதை நபிமொழிக் கிரந்தங்களில் நாம்
நிறைய காணலாம்.
நபி (ஸல்) அவர்கள்
மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ததிலிருந்து 16 அல்லது 17 மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது வந்தார்கள். பிறகு அல்லாஹ் தனது
அருளை வழங்குவதற்காவும்,
இறைவழிக்கேற்ப வாழ்பவர்கள் யார்? என்பதைப் பிரித்து காட்டுவதற்காகவும், முஸ்லிம்களை
கஅபத்துல்லாஹ்வை நோக்கி தொழுமாறு (அல்குர்ஆன்: 2:150) வசனத்தின் மூலம் உத்தரவு பிறப்பித்தான். அத்தகவலை அறிந்ததும், அடுத்தநொடிப்பொழுதிலேயே நம்பிக்கை கொண்டவர்கள் அக்கட்டளையை அப்படியே
அமல்படுத்தினார்கள்.
عَنِ
البَرَاءِ بْنِ عَازِبٍ : " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ كَانَ أَوَّلَ مَا قَدِمَ المَدِينَةَ نَزَلَ عَلَى أَجْدَادِهِ ، أَوْ
قَالَ أَخْوَالِهِ مِنَ الأَنْصَارِ ، وَأَنَّهُ صَلَّى قِبَلَ بَيْتِ المَقْدِسِ
سِتَّةَ عَشَرَ شَهْرًا ، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ
تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ البَيْتِ ، وَأَنَّهُ صَلَّى أَوَّلَ صَلاَةٍ صَلَّاهَا
صَلاَةَ العَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ ، فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ صَلَّى
مَعَهُ ، فَمَرَّ عَلَى أَهْلِ مَسْجِدٍ وَهُمْ رَاكِعُونَ ، فَقَالَ: أَشْهَدُ
بِاللَّهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
قِبَلَ مَكَّةَ ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ البَيْتِ ،
பராஉ பின் ஆஸிப்
(ரலி) அறிவித்தார்கள்: நபி ﷺ
அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் தம் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டத்தில்’ அல்லது அன்சாரிகளிலுள்ள தம் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி) டத்தில்’ தங்கியிருந்தார்கள். நபி ﷺ
அவர்கள் (ஜெரூசலேமிலுள்ள) பைத்துல் மக்திஸ் நோக்கி பதினாறு மாதங்கள்’ அல்லது பதினேழு மாதங்கள்’ தொழுதார்கள்.
(மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தொழுகையில் தாம் முன்னோக்கும் திசையாக இருக்க
வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (பிறகு கஅபாவை முன்னோக்கித்
தொழும்படி,
இறைவனிடமிருந்து உத்தரவு வந்தது).
(கஅபாவை முன்னோக்கி) நபி ﷺ அவர்கள் தொழுத முதல்தொழுகை அஸ்ர் தொழுகையாகும். (அந்தத்
தொழுகையை) நபி ﷺ
அவர்களுடன் மற்ற சிலரும் தொழுதனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு
(மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுது கொண்டு) இருந்தவர்களைக் கடந்துசென்றார். அப்போது
அங்கிருந்தவர்கள் ருகூஉ’
செய்து கொண்டிருந்தனர்.
உடனே அவர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித்
தொழுதேன் என்று சொல்ல,
அவர்கள் (அனைவரும்) அப்படியே (ருகூஉவிலிருந்தபடியே சுழன்று)
கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள். ( நூல்: புகாரி )
மதீனாவிற்கு
ஹிஜ்ரத் செய்து வந்த பிறகுதான், முஃமினான பெண்கள்
தங்களுடைய அலங்காரத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம்
வகுத்தளிக்கப்பட்டது. அச்சட்டத்தைப் பேணுவதிலே அன்றைய நம்பிக்கைக் கொண்ட பெண்கள்
அஜாக்கிரதையாக இருக்கவில்லை. அடுத்த கணமே ஏக இறைவனின் உத்தரவிற்கு உளப்பூர்வமாகக்
கட்டுப்பட்டவர்களாக ஹிஜாபை அணிந்து கொண்டார்கள்.
عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:- يَرْحَمُ اللَّهُ نِسَاءَ
المُهَاجِرَاتِ الأُوَلَ، لَمَّا أَنْزَلَ اللَّهُ: {وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ
عَلَى جُيُوبِهِنَّ} [النور: 31] شَقَّقْنَ مُرُوطَهُنَّ فَاخْتَمَرْنَ بِهَ
ஆயிஷா (ரலி)
கூறினார்கள்:-
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! “(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புகள் மேல்
தங்கன் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்!” எனும் (அல்குர்ஆன்: 24:31)
ஆவது வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழாடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டாவாக
ஆக்கி(மறைத்து)க் கொண்டார்கள். ( நூல்: புகாரி )
ஒருவரை அழைப்பதாக
இருந்தால் அவருடைய தந்தை பெயருடன் சேர்த்து அழைப்பதுதான் அரபிகளின் வழக்கம். அதே
நேரத்தில் வளர்ப்பு மகன்களை அவர்களுடைய அசல் தந்தையுடன் சேர்த்து அழைக்காமல், வளர்ப்புத் தந்தையின் பெயரோடு இணைத்து அழைத்து வந்தனர். இந்தவகையில் அவர்களை
அழைப்பது கூடாது என்று அல்லாஹ் ஆணையிட்டான். அதன்பிறகு அன்றைய மக்கள் அனைவரும்
தங்களிடத்தில் நெடுங்காலமாக இருந்த வழக்கத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு, இறைவனுக்கு அழகிய முறையில் அடிபணிந்தார்கள்.
عَنْ
عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا:- أَنَّ زَيْدَ بْنَ
حَارِثَةَ مَوْلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم مَا كُنَّا نَدْعُوهُ إِلاَّ
زَيْدَ ابْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ {ادْعُوهُمْ لآبَائِهِمْ هُوَ
أَقْسَطُ عِنْدَ اللهِ}
அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அறிவித்தார்கள்:- “வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின்
சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (அல்குர்ஆன்: 33:5)
ஆவது குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி)
அவர்களை ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர்
ஸைத்) என்றே அழைத்து வந்தோம். ( நூல்: புகாரி )
عَنِ
ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ :- كَادَ الْخَيِّرَانِ أَنْ يَهْلِكَا – أَبَا
بَكْرٍ وَعُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا رَفَعَا أَصْوَاتَهُمَا عِنْدَ
النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَدِمَ عَلَيْهِ رَكْبُ بَنِي تَمِيمٍ
فَأَشَارَ أَحَدُهُمَا بِالأَقْرَعِ بْنِ حَابِسٍ أَخِي بَنِي مُجَاشِعٍ وَأَشَارَ
الآخَرُ بِرَجُلٍ آخَرَ- قَالَ نَافِعٌ لاَ أَحْفَظُ اسْمَهُ – فَقَالَ أَبُو
بَكْرٍ لِعُمَرَ مَا أَرَدْتَ إِلاَّ خِلاَفِي قَالَ مَا أَرَدْتُ خِلاَفَكَ
فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا فِي ذَلِكَ فَأَنْزَلَ اللَّهُ : {يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا لاَ تَرْفَعُوا أَصْوَاتَكُمْ} الآيَةَ قَالَ ابْنُ الزُّبَيْرِ
فَمَا كَانَ عُمَرُ يُسْمِعُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَعْدَ هَذِهِ
الآيَةِ حَتَّى يَسْتَفْهِمَهُ
இப்னு அபீமுலைக்கா
அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி)
அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூதமீம் குலத்தைச் சேர்ந்த
பயணக்குழுவினர் நபி ﷺ
அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி ﷺ அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப்
பேசினார்கள்.
அந்த இருவரில்
ஒருவர் (உமர்),
பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி
(அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக
நியமிக்கும்படி) சைகை செய்தார். (அந்த இன்னொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்).
அப்போது அபூபக்ர்
(ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எனக்கு
மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள். உமர்
(ரலி) அவர்கள்,
“தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று” என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன.
அப்போது,
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு
மேல் உயர்த்தாதீர்கள்!”
எனும் (அல்குர்ஆன்: 49:2) ஆவது வசனத்தை
அல்லாஹ் அருனான்.
இப்னு ஸுபைர்
(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள்
நபி ﷺ அவர்களிடம் எந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள் எனில்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி ﷺ அவர்கள், அவரிடம் (திரும்ப)
விசாரித்தே தெரிந்து கொள்வார்கள். ( நூல்: புகாரி )
عن أم
المؤمنين عَائِشَةَ -رضي الله عنها- جَلَسَ رَسُولَ اللَّهِ -صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ- عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ، فَلَمَّا جَلَسَ
قَالَ: "اجْلِسُوا"، فَسَمِعَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ قَوْلَ
النَّبِيِّ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ-: "اجْلِسُوا"، فَجَلَسَ
فِي بَنِي غَنَمٍ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ ذَاكَ ابْنُ رَوَاحَةَ جَالِسٌ
فِي بَنِي غَنَمٍ، سَمِعَكَ وَأَنْتَ تَقُولُ لِلنَاسِ: اجْلِسُوا، فَجَلَسَ فِي
مَكَانِهِ" [المعجم الأوسط:9128]. وفي رواية: فَمَرَّ بِهِ النَّبِيُّ -صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَقَالَ لَهُ: مَا شَأْنُكَ؟ قَالَ: سَمِعْتُكَ
تَقُولُ: اجْلِسُوا فَجَلَسْتُ، فَقَالَ لَهُ النَّبِيُّ -صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ-:زَادَكَ اللَّهُ طَاعَةً" [مصنف عبد الرزاق:5367].
ஆயிஷா (ரலி)
கூறினார்கள்:- “அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் ஒரு நாள் மிம்பரில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது, பேச்சின் ஊடாக எல்லோரும் அமருங்கள்! என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அப்போது, பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின்
காதில் இந்த ஆணை விழுந்ததும், வந்த வழியிலேயே அப்படியே
அமர்ந்து விட்டார்கள்.
நபி ﷺ அவர்கள் உரை நிகழ்த்தி முடித்ததும் அப்துல்லாஹ் இப்னு
ரவாஹா (ரலி) அவர்கள் குறித்து சொல்லப்பட்டதும் “அல்லாஹ்வுக்கும்,
அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்ற விஷயத்தில் அவர்
பேரார்வம் கொண்டவராக இருக்கவே நான் காண்கின்றேன். அல்லாஹ் அவருக்கு அவரின்
பேரார்வத்தை அதிகப்படுத்தித் தருவானாக!” என்று வாழ்த்திப் பேசி
துஆ செய்தார்கள். ( நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் )
கட்டுப்படாத தன்மையை சுட்டிக் காட்டிய நபித்தோழர்கள்...
عَن عَبدِ اللَّهِ بنِ مُغَفَّلٍ رضي الله عنه، أَنَّهُ رَأَى رَجُلًا مِن أَصحَابِهِ يَخذِفُ -أَي يَرمِي بِالحَجرِ بَينَ إِصبَعَينِ- فَقَالَ لَهُ: لَا تَخذِف؛ فَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَكرَهُ -أَو قَالَ- يَنهَى عَن الخَذفِ؛ فَإِنَّهُ لَا يُصطَادُ بِهِ الصَّيدُ، وَلَا يُنكَأُ بِهِ العَدُوُّ، وَلَكِنَّهُ يَكسِرُ السِّنَّ، وَيَفقَأُ العَينَ، ثُمّ رَآهُ بَعدَ ذَلِكَ يَخذِفُ، فَقَالَ لَهُ: «أُخبِرُكَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَكرَهُ أَو يَنهَى عَنِ الخَذفِ ثُمَّ أَرَاكَ تَخذِفُ؟! لَا أُكَلِّمُكَ كَلِمَةً كَذَا وَكَذَا!».
அப்துல்லாஹ் இப்னு
மகஃப்ஃபல் (ரலி) அவர்கள் ஒரு மனிதர் கற்களை விரல்களால் சுண்டி எறிவதைப்
பார்த்தார்கள். அவரிடம் கற்களை விரல்களிடையே வைத்து சுண்டி எறிய வேண்டாம். ஏனெனில், திட்டமாக,
நபி ﷺ
அவர்கள் கற்களை விரல்களால் சுண்டி எறிவதை வெறுத்தார்கள். அல்லது தடுத்துள்ளார்கள்.
என்று கூறிவிட்டு;
இச்செயல், "வேட்டையாடாது (பிராணியைக்
கொல்லாது),
ஆனால் கண்ணை பழுதாக்கும், பற்களை உடைக்கும்" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அதன் பின்னரும் அவர் அப்படிச்
செய்வதைப் பார்த்த போது,
நபி ﷺ
அவர்கள் கற்களை விரல்களால் சுண்டி எறிவதை வெறுத்தார்கள். அல்லது தடுத்துள்ளார்கள்.
என்று கூறிய பின்னரும் நீர் கற்களை விரல்களால் சுண்டி எறிவீரா? இனி நான் உம்மிடம் பேசவே மாட்டேன்" என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
وَقَد
سَأَلَتِ امرَأَةٌ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنهَا: «مَا بَالُ المَرأَةِ
الحَائِضِ تَقضِي الصَّومَ وَلَا تَقضِي الصَّلَاةَ؟!»: فَقَالَت لَهَا:
«أَحَرُورِيَّةٌ أَنتِ؟!» -تَعنِي: هَل أَنتِ مِن الخَوَارِجِ؟ وَقَد كَانُوا
يُنكِرُونَ السُّنّةَ-، فَقَالَت: لَستُ بِحَرُورِيَّةٍ، وَلَكِنّي أَسأَلُ،
فَقَالَت عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنهَا: «كَانَ يُصِيبُنَا ذَلِكَ، فَنُؤمَرُ
بِقَضَاءِ الصَّومِ، وَلَا نُؤمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ».
அன்னை ஆயிஷா ரலி
அவர்களிடம் ஒரு பெண் வருகை தந்து "மாதவிடாய் வந்த பெண்ணின் நிலை குறித்து
நான் வியப்படைகிறேன். நோன்பை கழாச் செய்ய வேண்டும். தொழுகையை கழாச் செய்ய
வேண்டியதில்லை. என்றார். அது கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் "சுதந்திர சிந்தனை
கொண்ட பெண்ணா?"
-( ஃகவாரிஜ் கூட்டத்தை சேர்ந்த பெண்ணா?) என்று கேட்டார்கள். அதற்கு அந்த பெண் "இல்லை, நான் சும்மா தான் கேட்டேன்" என்றார். அப்போது, ஆயிஷா (ரலி) அவர்கள் "பெண்களாகிய நமக்கு மாதவிடாய் ஏற்படுவது இயற்கையான
நிகழ்வாகும். அந்த நேரத்தில் நோன்பை கழாச் செய்யுமாறு நமது ஷரீஆவால் நாம்
ஏவப்பட்டுள்ளோம். தொழத் தேவையில்லை என்று நமது ஷரீஆவால் நாம் வழி
காட்டப்பட்டுள்ளோம்" என்று கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
اللَّهُمَّ
ارْزُقْنا التَّسلِيمَ لِشَرْعِك، والرِّضَا بِأَمرِك، والانقِيَادَ لِحُكمِكَ،
وارْزُقْنَا إِيمَانًا كَامِلًا، ويَقِينًا صادِقًا
அல்லாஹ்வே! உன் ஷரீஆவிற்கு கட்டுப்பட்டு நடப்பதையும், உன் கட்டளைகளை பொருந்திக் கொள்வதையும், உன் முடிவை ஏற்று வாழ்வதையும் எங்களுக்கு வழங்கியருள்வாயாக! அல்லாஹ்வே! பரிபூரணமான ஈமானையும், வாய்மையான உறுதிப்பாட்டையும் எங்களுக்கு வழங்கியருள்வாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:
Post a Comment