Thursday, 14 July 2022

பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பு! அலங்காரமா? அமானிதமா?

 பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பு! அலங்காரமா? அமானிதமா?

துல்ஹஜ் பிறை: 20/12/1443
வெள்ளிக்கிழமை: 20/07/2022

இன்று பொறுப்புகள், பதவி, அதிகாரத்தின் மீதான ஆசைகள் பெருகிப் போயிருப்பதையும் அதை அடைவதற்காக எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்ல தயாராக இருப்பதையும் பரவலாக காண முடிகிறது.

முன்பெல்லாம் குரல் வாக்கெடுப்பில் நடைபெற்ற பள்ளிவாசல் நிர்வாக தேர்ந்தெடுப்பு தற்போது போலீஸின் பலத்த பாதுகாப்போடு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படுவதே நம் முன் இருக்கும் சாட்சியாகும்.

இஸ்லாமிய இயக்கங்களும் கட்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் பிண்ணனியும் இதன் காரணமாகத் தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பெரும்பாலான மக்கள் தாம் வகிக்கும் பொறுப்புகளை ஒரு அலங்காரமாகக் கருதிக் கொண்டு தங்களை ஏமாற்றிக் கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் பதவி - பொறுப்பு என்பது அமானிதம். அமானிதத்தை உரிய முறையில் பேணி மக்களின் நன்னம்பிக்கையைப் பெறுவதோடு இறைவனின் அருளையும் பெற வேண்டும்.

புகழ், அதிகாரம், செல்வாக்கு ஆகிய காரணங்களுக்காகவே பொறுப்புகளைப் பெறுவதற்கு ஆசைப்படுகின்றனர்.

ஆனால், இந்த மூன்று அம்சங்களும் மிகச்சரியான முறையில் பயன் படுத்தப்படுமேயானால் பொறுப்பு வகிப்பவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் இறைவனைச் சந்திப்பார்கள்.

ஆகவே இஸ்லாம் பொறுப்பு என்பது ஓர் அமானிதம் என்றும் அதை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. அவ்வாறு இஸ்லாம் வலியுறுத்தும் பொறுப்பை பற்றி இந்த உரையில் காண்போம்..

பொறுப்புகளுக்கு வருபவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாகும்.

1. இது இறைவன் தந்த அருட்கொடை..


நம்மில் ஒருவருக்குக் கிடைக்கின்ற பதவியாக இருந்தாலும், அந்தஸ்தாக இருந்தாலும், அதிகாரமாக இருந்தாலும், மக்களை நிர்வகிக்கின்ற எந்தப் பொறுப்பாக இருந்தாலும் இறைவனின் தனிப்பெரும் கிருபையினால்  கிடைத்திருக்கின்றது; எத்தனையோ அறிவிற் சிறந்தவர்கள், பட்டம் படித்தவர்கள், பணக்காரர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நம்மை இறைவன் தேர்ந்தெடுத்து இந்தப் பதவியைக் கொடுத்திருக்கின்றான் என்று நினைக்க வேண்டும்.

இது இறைவனின் மகத்தான கருணை என்றும் நம்முடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். 

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

“ நபியே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம்  அனைத்திற்கும் அதிபதியே! நீ  நாடுகின்றவர்களுக்கு ஆட்சியை அதிகாரத்தை கொடுக்கின்றாய்.  மேலும், நீ  நாடுகின்றவர்களிடமிருந்து  ஆட்சியை, அதிகாரத்தைப் பறிக்கின்றாய். நீ 
நாடுகின்றவர்களுக்கு  கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ  நாடுகின்றவர்களை  இழிவு படுத்துகின்றாய். நலவுகள்  அனைத்தும் உன் கைவசமே  உள்ளன.” (அல்குர்ஆன்: 3: )

قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ۖ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாகும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார். (அல்குர்ஆன்: 27: 40)

ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானோர் தனக்குக் கிடைத்திருக்கின்ற பதவி, அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றை புகழுக்காகவும், பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் பயன்படுத்திக் கொண்டிப்பதைப் பார்க்கின்றோம்.

2. அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமநிலையில் இருக்க வேண்டும்...

طُوبَى لِعَبْدٍ آخِذٍ بِعِنَانِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ، أَشْعَثَ رَأْسُهُ، مُغْبَرَّةٍ قَدَمَاهُ، إِنْ كَانَ فِي الحِرَاسَةِ، كَانَ فِي الحِرَاسَةِ، وَإِنْ كَانَ فِي السَّاقَةِ كَانَ فِي السَّاقَةِ، إِنِ اسْتَأْذَنَ لَمْ يُؤْذَنْ لَهُ، وَإِنْ شَفَعَ لَمْ يُشَفَّعْ

அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிந்திட) தன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதியடைந்தவனாகச் செல்கின்ற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும். (அவன் எத்தகையவன் என்றால்) அவன் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான்.

பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு அனுமதி தரப்படாது; அவன்  பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.) என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.   ( நூல்: புகாரி )

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். காதிஸிய்யா யுத்தத்திற்காக காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஓர் படையை அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

காதிஸிய்யா போர் கிஸ்ரா வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த போர் ஆகும். இதற்குப் பிறகு ஈராக் பகுதி முழுவதும் இஸ்லாமிய நிழலின் கீழ் வந்தது.

படை சென்ற பின்னர் ஒரு நாள் நகர் வலம் வந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் காதில் பேரிடியாய் வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

ஏகத்துவத்தையும், இறை நம்பிக்கையையும் உரசிப்பார்ப்பதாய் உணர்ந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

ஆம்! மக்கள் “காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையை ஏற்றுச் சென்றிருக்கும் முஸ்லிம் படை நிச்சயம் வெற்றியுடன் தான் திரும்பும்” என்று பேசிக்கொண்டனர்.

”உடனடியாக அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பி இதை கொண்டு காதிஸிய்யாவிற்குச் செல்லுங்கள். அனைத்துப்படை வீரர்களுக்கு மத்தியில் இதைப்படித்துக் காட்டச் சொல்லுங்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் அபூ உபைதா (ரலி)  அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைவீரர்களின் ஊடாகச் சென்ற அபூ உபைதா (ரலி)  அவர்கள் தளபதி காலித் (ரலி)  அவர்களிடம் கொடுத்து ஆட்சித்தலைவர் சொன்ன விபரத்தைச் சொன்னார்கள்.

காலித் இப்னு வலீத் (ரலி)  கடிதத்தைப் பிரித்தார்கள்.  படித்தார்கள். அதில் இடம் பெற்றிருந்த வாசகம் இதோ! “ஆட்சித்தலைவர் உமர் அவர்களிடமிருந்து தளபதி மற்றும் படைவீரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்…. இதோ இந்த நிமிடத்திலிருந்து காலித் (ரலி) படைத்தளபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக 
அபூ உபைதா (ரலி)  நியமிக்கப்படுகின்றார். இது அமீருல் முஃமினீன் அவர்களின் உத்தரவு!

உடனடியாக முஸ்லிம்கள் அதை ஏற்று செயல்பட்டனர். அதே படையில் ஒரு வீரராக காலித் (ரலி) அவர்கள் பங்கு பெற்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் தலைமையில் முஸ்லிம்களின் படை வெற்றியோடு மதீனா திரும்பியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால் “ஸைஃபுல்லாஹ்” என்று கண்ணியப்படுத்தப்பட்டுள்ளேன்.  ஆகவே, என்னை நீக்கம் செய்தது செல்லாது என்றோ, தனியாய் பிரிந்து சென்று வேறு அணியில் முஸ்லிம்களை ஒன்றிணைப்பேன் என்றோ காலித் அவர்கள் சூளுரைக்கவில்லை.

மாறாக, அதே யுத்தகளத்தில் சாதாரண ஒரு படை வீரராகவே களம் கண்டார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

பின்னாளில், ஒரு நாள் உமர் (ரலி)  அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கலீஃபா அவர்களே! ”நான் எந்த ஒரு யுத்தகளத்திலும் இஸ்லாமிய யுத்த விதிகளை மீறியது கிடையாது. எந்த ஒரு மோசடியும் செய்தது கிடையாது. என் தலைமைப் பதவியை தவறாக பயன்படுத்தியதும் கிடையாது. எல்லா நிலையிலும் நான் ஓர் உண்மை இறை விசுவாசியாகவே நடந்து கொண்டிருக்கின்றேன்.

பின்னர் ஏன் நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்தீர்கள்? என்று கேட்டார்கள்.
قال عمر إني لم أعزل خالدًا عن سخطة ولا خيانة، ولكن الناس فتنوا به، فخفت أن يوكلوا إليه ويُبتلوا به. فأحببت أن يعلموا أن الله هو الصانع، وألا يكونوا بعرض فتنة.

அதற்கு உமர் (ரலி)  அவர்கள்  “என்னுடைய தனிப்பெரும் நேசத்திற்கும், பாசத்திற்கும் உடையவர்கள் நீங்கள். எப்போதும் உங்கள் மீது நான் தனிப்பெரும் கண்ணியம் வைத்துள்ளேன்.  உங்களை மோசடியாளனாகவோ அல்லது வேறு எந்த சிந்தனை கொண்டவனாகவோ நான் காணவில்லை.

மாறாக! அல்லாஹ்வை மட்டுமே நினைத்த இதயங்கள்!  அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடி கெஞ்சிய நாவுகள்! இப்பொது அதை உதறிவிட்டு காலித் போனால் வெற்றி, அவர் தலைமை தான் வெற்றிக்குரிய தலைமை என்று அல்லாஹ்வை மறந்து பேச எத்தனித்து விட்டனர்.

வேறு வழியில்லை உம்மை பதவியிலிருந்து இறக்கினால் தான் இம்மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி ஞாபகம் வரும் என்பதற்காகத் தான் உம்மை பதவி நீக்கம் செய்தேன்” என்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்…. என்று கூறி முக மலர்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றுச்சென்றார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

அதன் பின்னரும் சாதாரண படை வீரராக தொடர்ந்து முஸ்லிம்களின் வெற்றி பேரணியில்  கலந்து கொண்டார். டமாஸ்கஸையும் ஹிம்மஸையும் சிரியாவின் பிற நகரங்களை வெற்றி கொள்வதிலும் அவர் பெரும் பங்காற்றினார். இராக்கும் சிரியாவும் இஸ்லாமிய உலகிற்கு காலிதின் (ரலியல்லாஹு அன்ஹு ) கொடைகள் என்று சொன்னால் மிகையாகாது ,

தளபதியாக இருந்து பின்னர் சாதாரண வீரராக இருப்பது உங்களுக்கு சிரமமாக இல்லையா என ஒருவர் கேட்டார்

நான் தளபதியாக இருந்த போதும் அல்லாஹ்வுக்காகவே போரிட்டேன். இப்போது சாதாரண வீரனாகவும் அல்லாஹ்வுக்காகவே போரிடுகிறேன். இதில் எனக்கு வித்தியாசம் எதுவும் இல்லை என்றார் காலித் (ரலி) அவர்கள்.
(நூல்: குலஃபாவுர்ரஸூல் {ஸல்},  பக்கம்: 186-187 )

ஆனால், இன்றோ தாம் பொறுப்பு வகிக்கும் போது ஒரு மாதிரியும் பொறுப்பில் இருந்து வெளியே வந்த பிறகு மக்கள் நல பணிகளை செய்வதில் வேறு விதமாகவும் நடந்து கொள்வதைக் காணலாம். மேலும், புதிய பொறுப்புதாரிகள் கொண்டு வரும் பல நல்ல திட்டங்களுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதும் இவர்கள் தாம்.

3. பொறுப்பு மறுமை வாழ்வை, சுவனத்தை தீர்மானிக்கும் மகத்தான ஆயுதம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنِ الحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ
عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلَّا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ
மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அன்னாரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல நான் கேட்டேன்’’ எனக் கூறினார்கள். ( நூல்: புகாரி )

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ القِيَامَةِ، فَنِعْمَ المُرْضِعَةُ وَبِئْسَتِ الفَاطِمَةُ»، 

நீங்கள் அதிகாரத்தை, பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தரும் சுகங்)களிலேயே பதவி(ப் பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.                ( நூல்: புகாரி )

4. பொறுப்புகளை கேட்டுப் பெறுவது & பொறுப்புகளைப் பெற போட்டி போடுவதன் ஆபத்தை அஞ்ச வேண்டும்...

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَرَجُلاَنِ مِنْ قَوْمِي، فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ: أَمِّرْنَا يَا رَسُولَ اللَّهِ، وَقَالَ الآخَرُ مِثْلَهُ، فَقَالَ: «إِنَّا لاَ نُوَلِّي هَذَا مَنْ سَأَلَهُ، وَلاَ مَنْ حَرَصَ عَلَيْهِ

நானும் என் சமூகத்தாரில் இரண்டு பேரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், “எங்களுக்குப் பதவி தாருங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பதவியை) வழங்கமாட்டோம்’’ என்று சொன்னார்கள். என அபூ மூஸல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி )

قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَلَا تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةُ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا

அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) பொறுப்பில் அமர்த்தக் கூடாதா?’’ என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள்பட்டையில் அடித்துவிட்டு, ‘‘அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்’’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

5.பொறுப்புகளை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுபவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் துஆவும், மறுமையில் நல் வாழ்வும் உண்டு...

عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم
يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللهُمَّ، مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர்,  அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!’’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: முஸ்லிம் )

إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا

தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில் நேர்மையாக நடந்து கொண்டவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதாகும்). அவர்கள் தமது நிர்வாகத்திலும்,  குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). ( நூல்: முஸ்லிம் )

6.பொறுப்புகள் குறித்து விசாரணை கட்டாயம் உண்டு...

عن ابن عمر رضي الله عنهما، عن النبي صلى الله عليه وسلم قال: ((كلُّكم راعٍ، وكلُّكم مسؤولٌ عن رعيَّتِه، والأمير راعٍ، والرجل راعٍ على أهل بيته، والمرأة راعية على بيت زوجها وولدِه، فكلُّكم راعٍ، وكلُّكم مسؤول عن رعيَّتِه))؛ متفق عليه.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்கள் பொறுப்பில் உள்ளவர் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சியாளர் தமது பொறுப்பில் உள்ளவர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார். குடும்பத்தலைவர் தமது குடும்பத்தார்க்கு அவர் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவார். குடும்பத் தலைவியும் பொறுப்பாளரே!  அவர் தமது பொறுப்பில் உள்ள தமது கணவரின் வீட்டார் குறித்தும் தமது பிள்ளைகளுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் கேள்வி கேட்கப்படுவார். எஜமானர் பொறுப்பாளரே! அவர், தமக்குக் கீழே பணிபுரியும் பணியாட்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார்!” என்று  நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

மஸ்ஜித் பரிபாலனம்...

இன்று பள்ளிவாசல் நிர்வாக பொறுப்புகளுக்கு போட்டி நிலவுவதை சமூகத்தில் பார்க்க முடிகிறது.

பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்புகள் என்பது இன்று சாதாரணமாக பார்க்கப்படுகிறது.

பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது நோன்பு காலங்களில் கஞ்சி காய்ச்சுவது ஈதுல் அள்ஹா அன்று கூட்டு குர்பானி கொடுப்பது என்று குறுகிய வட்டத்திற்குள் அமைந்து விட்டது.

இன்னும் சிலர் மண்டபம் கட்டுவது, கடைகள், காம்ப்ளக்ஸ் கட்டி வருமானத்தை பெருக்குவது போன்றவை தான் பிரதானம் என்று கருதத் தொடங்கி விட்டனர்.

இவையெல்லாம் பள்ளிவாசல் பொறுப்புகளில் நூறில் ஒரு பங்கு தான்.

மீதமுள்ள 99 சதவீதம் சமூகத்தின் நலன் சார்ந்தது. சமூகத்தின் உயர்வு சார்ந்தது. சமூகத்தின் மேம்பாடு சார்ந்தது. சமூகத்தின் உலக மற்றும் மறுமை சார்ந்த வாழ்க்கை கட்டமைப்புடன் தொடர்புடையது.

பெருமானார் ஸல் அவர்களின் பள்ளிவாசலும், கலீஃபாக்கள் அமைத்த பள்ளிவாசல்களும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நிர்மாணித்த பள்ளிவாசல்களும் அப்படித்தான் அமைந்திருந்தன.

பள்ளிவாசல் கட்டுவது, கட்டுவதற்கு உதவுவது, பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுவது, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது, இஃதிகாஃப் இருப்பது எவ்வளவு நன்மைகளைப் பெற்றுத்தருமோ அதே போன்று தான் பள்ளிவாசலோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதும் சதா எப்போதும் பள்ளிவாசலின் நினைவோடு இருப்பதும் அளப்பரிய நன்மைகளைப் பெற்றுத் தரும்.

وفي الترمذي عن النبي صلى الله عليه وسلم أنه قال :

إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان ; لأن الله يقول : { إنما يعمر مساجد الله الآيةقلت : رواه الترمذي كما قال شيخ الإسلام من حديث أبي سعيد الخدري رضي الله عنه وقال : حديث حسن غريب ، ورواه ابن ماجه وابن خزيمة وابن حبان في صحيحيهما والحاكم من طريق دراج أبي السمح عن أبي الهيثم عن أبي سعيد وقال الحاكم صحيح الإسناد .


அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர், இறைநம்பிக்கை உள்ளவர் என்று நீங்கள் சாட்சியம் சொல்லுங்கள்” என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள் “அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களே!  இறையில்லங்களை நிர்வகிக்கத் தகுதியுடையோர்” என அல்லாஹ் கூறியுள்ளான், என்று கூறினார்கள்.                      ( நூல்: திர்மிதீ )

وعن أبي هريرة قالَ: قالَ رسُولُ اللَّه ﷺ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إِمامٌ عادِلٌ، وشابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّه تَعالى، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابَّا في اللَّه: اجتَمَعا عَلَيهِ، وتَفَرَّقَا عَلَيهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ، وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخافُ اللَّه، ورَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فأَخْفَاها، حتَّى لا تَعْلَمَ شِمالُهُ مَا تُنْفِقُ يَمِينهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّه خالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ متفقٌ عَلَيْهِ.
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே, மேற்கூறிய இரண்டு நபி மொழிகளும் பள்ளிவாசலில் பொறுப்புகளைப் பெற்று சதா பள்ளிவாசலின் நினைவோடும் தொடர்போடும் இருப்பவர்களுக்கான நன்மைகள் குறித்து கூறுவதை விளங்கிக் கொள்ளலாம்.

1. முஸ்லிம்களின் மக்கள் தொகையை கணக்கெடுத்தல்.

பள்ளிவாசலில் நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் நிர்வாக கமிட்டியின் முதல் பணி இங்கிருந்து துவங்குகிறது.
மஹல்லாவில் வசிக்கும் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஆண்/பெண், சிறுவர்/ சிறுமியர், குழந்தைகள், முதியோர், விதவைகள், வறியோர், ஏழைகள், ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்கள், பள்ளிவாசலுடன் தொடர்பில் இருப்பவர்கள், தொடர்பில் இல்லாதவர்கள், குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள்/ ஓதத் தெரியாதவர்கள். சமீபத்திய நாட்களில் பிறந்தவர்கள்/ இறந்தவர்கள் என அனைத்து விவரங்களும் அடங்கிய ஒரு ரிஜிஸ்டர் ஆவணப் பதிவு ஒரு மஹல்லாவின் மஸ்ஜிதில் இருப்பது அவசியமாகும்.

ஏனெனில், மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்த நொடிப்பொழுதுகளில் இருந்து துவங்கிய மாநபி {ஸல்}  அவர்களின் “இந்த உம்மத்தின் உயர்வு குறித்தான கவலை, தீனுல் இஸ்லாத்தின் எழுச்சி குறித்தான சிந்தனை” மாநபி {ஸல்} அவர்கள் மரணத்தை தழுவும் கடைசி நிமிடம் வரை இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

மதீனாவின் வருகைக்குப் பின்னர் மாநபி {ஸல்} அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீர்க்கமான திட்டமிடல், கள ஆய்வு, மதிவியூகம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு

பெருமானார் {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு வந்த பின்னால் மேற்கொண்ட பணிகளில் மிக முக்கியமானது “முஸ்லிம்களின் எண்ணிக்கையை” கணக்கெடுக்கச் சொன்னது தான்.

எந்தளவுக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பது என்றால் வயது வாரியாக,  குடும்ப, கோத்திர வாரியாக,  தலைமுறை வாரியாக,  மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், ஏழை, பணக்காரர்கள், உள்ளூர்,  வெளியூர் வாசிகள் என எல்லாமும் இடம் பெற்றிருந்தது.

இன்னும் சொல்லப்போனால்,  பெரும்பாலான நபித்தோழர்களின் வாழ்க்கைத் தரவுகளை பதிவு செய்து வைத்திருக்கும் தாரீஃக், ஸீரத் என்னும் வரலாற்று ஆசிரியர்களின் நூற்களில் நபித்தோழர்கள் அவர்கள் தம் வீடுகளில் பயன்படுத்திய பண்ட பாத்திரங்கள், அன்றாடம் உடுத்தும் ஆடைகள், யுத்தகளத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், வாகனிக்க பயன்படுத்திய வாகனங்கள், அவர்களின் தோட்டம் துறவுகள், நில புலன்கள்,  தோட்டத்தில் இருந்த மரங்கள் உட்பட கணக்கெடுக்கப்பட்டது.

உதாரணத்திற்கு ஜுபைர் இப்னு அல் அவ்வாம் (ரலி) அவர்களின் வீடு மற்றும் வணிக, விவசாய பணியாளர்கள் எண்ணிக்கை 1000  நபர்கள் என்பது வரை கணக்கிடப் பட்டுள்ளது.

இஸ்லாத்தின் முதல் யுத்தமான ஹிஜ்ரி இரண்டில் நடைபெற்ற பத்ர் அதில் கலந்து கொண்ட முஹாஜிர்கள் எண்ணிக்கை 82,  அன்ஸார்களில் அவ்ஸ் கோத்திரத்தாரின் எண்ணிக்கை 61,  கஸ்ரஜ் கோத்திரத்தாரின் எண்ணிக்கை 170 மொத்தம் 313.

தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாத நபித்தோழர்கள் எண்ணிக்கை 7. உஸ்மான் (ரலி) (மனைவி நோய்வாய்ப்படுதல்) ஹுதைஃபா (ரலி அவர்களின் தந்தை அல் யமான் (ரலி) (எதிரிகள் தடுத்தல்) அனஸ் இப்னு நள்ர் (ரலி) (வியாபார பயணம் ஷாம்) கஅப் இப்னு மாலிக் (ரலி) (காரணம் அறியப்படவில்லை) இப்னு உமர் (ரலி), பர்ராவு இப்னு ஆஸிப் (ரலி) (சிறுவர் என்ற காரணத்திற்காக தடுக்கப்படல்)

யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குதிரை 1,  ஒட்டகங்கள் 70.

ஷுஹதாக்கள் முஹாஜிர்களில் 6, அன்ஸார்களில் கஸ்ரஜ் கோத்திரத்தார்களில் 6. அவ்ஸ் கோத்திரத்தார்களில் 2 மொத்தம் 14 ஷுஹதாக்கள்.

ஹிஜ்ரி 3, -ல் உஹத் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் எண்ணிக்கை 700, போருக்கு வராமல் புறமுதுகிட்டு ஓடிய நயவஞ்சகர்கள் எண்ணிக்கை 300. ஷுஹதாக்கள் 70. காயமுற்றோர் 630.

ஹிஜ்ரி 5 –ல் அஹ்ஸாப், கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 3000.

ஹிஜ்ரி 6 –ல் ஹுதைபிய்யா ஒப்பந்தம் கலந்து கொண்டவர்கள் 1400.

ஹிஜ்ரி  7- ல் கைபர் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 1600, ஷுஹதாக்கள் 20, காயமுற்றோர் 50.

ஹிஜ்ரி 8 –ல் மக்கா வெற்றி கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 10000.

ஹிஜ்ரி 8 –ல் ஹுனைன் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 12000.

ஹிஜ்ரி 9 –ல் தபூக் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் 30000 க்கும் மேல்.

ஹிஜ்ரி 10- ஹஜ்ஜத்துல் விதாஃ பங்கெடுத்த ஹாஜிகள் 124000 க்கும் மேல்.

அடுத்து நபித்தோழர்களில் ஜன்னத்துல் பகீவிலே நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10000. மக்கா, மதீனாவிற்கு வெளியே சிரியா, பலஸ்தீன்,  மிஸ்ர், எகிப்து போன்ற பகுதிகளில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 30000 என கணக்கெடுப்பு விஷயத்தில் நபித்தோழர்களான மேன்மக்கள் மிகவும் கவனமாக செயல்பட்டார்கள்.

2. மஸ்ஜித் வளாகத்தில் உலக/இஸ்லாமிய கல்விக் கூடங்கள் அமைத்தல்.

மஸ்ஜிதுன் நபவியை ஒட்டிய ஒரிடத்தில் இவர்கள் தங்கி வந்தனர். ஆதரவற்றவர்கள் தங்குவதற்காகவே இந்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இடத்தையே ஸுஃப்பா (திண்ணை) என்பர். இவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது கூடும்; குறையும். இவர்களில் திருமணம் செய்து கொண்டவர், இறந்து போனவர், பயணம் சென்றவர் ஆகியோரால் அவ்வப்போது இவர்களின் எண்ணிக்கை குறைவதுண்டு.

நூற்றுக்கும் அதிகமானோர் இவ்வாறு இருந்து வந்ததாக அபூநுஐம்(ரஹ்) அவர்கள் ஹுல்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
 இன்னும் சில வரலாற்று நூற்களில் 70 முதல் 100, என்றும் 300 மேற்பட்டோர் என்று எழுதப் பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் தமது பெரும்பாலான நேரங்களில் இவர்களுடன் அமர்ந்திருப்பது வழக்கம். அவர்களோடு அளவளாவுவார்கள். 

இவர்களின் முக்கிய பணி நபி(ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் கற்றுக்கொள்வது, மார்க்கச் சட்டங் களைக் கற்றுக் கொள்வதே ஆகும். அல்லது நபி (ஸல்) அவர்கள் யாரிடம் கற்றுக் கொள்ளும் படிக் கூறுகிறார்களோ அவர்களிடம் கற்றுக் கொள்வதாகும். போர் வந்து விட்டால், இவர்களுள் சக்தி பெற்றவர்கள் போருக்காகப் புறப்படுவார்கள். இவர்களுள் முக்கியமானவர் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ஆவார்கள்.

கலீஃபா அல்வலீத் பின் அப்தில் மலிக் என்பவர் காலம் வரை திண்ணைத் தோழர்கள் வசித்த அந்தத் திண்ணை அப்படியே இருந்தது. மதீனா பள்ளியை விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக இவர் அதை மாற்றியமைத்து விட்டார். அது தற்போது ‘தக்கத்துல் அக்வாத்’ என அழைக்கப்படுகிறது.

كان ناس من الأسرى يوم بدر لم يكن لهم فداء فجعل رسول الله صلى الله عليه وسلم فداءهم أن يعلموا أولاد الأنصار الكتابة.

பத்ர் யுத்தம் நடைபெற்று முடிந்து இறைமறுப்பாளர்கள் கைதிகளாய்  பிடிக்கப்பட்டு மஸ்ஜிதுந் நபவீயின்  முன்னர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.கைதிகள் தங்களை  விடுவிப்பதற்காக மேற்கொள்ள  வேண்டியவைகளின் ஒன்றாக  கைதிகள் தாங்கள் கற்றறிந்து  வைத்திருப்பதை முஸ்லிம்களுக்கு  கற்றுக் கொடுத்துவிட்டு தம்மை விடுவித்துக் கொள்ளலாம் என்று மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுக்க  அவர்களென்ன மார்க்க  அறிஞர்களா?

ஆக, உலக அறிவும் முஸ்லிம்கள்  பெற்றிருக்க வேண்டும் என்பதை  பெருமானார் (ஸல்) அவர்கள்  விரும்பினார்கள் என்பதை  இச்சம்பவத்தின் மூலம் அறிய  முடிகிறது.

மஸ்ஜிதுன் நபவீ வளாகத்தில் மார்க்க அறிவும் உலக அறிவும் போதிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

3. பள்ளிவாசல் வளாகத்தில் மருத்துவமனை அமைத்தல்...


وقد عرف المسلمون أول مستوصف في الإسلام في عهد رسول الله – صلى الله عليه وسلم – عندما أمر بإقامته أثناء غزوة الخندق في (5 هـ - 627 م) على هيئة خيمة في مسجد المدينة لعلاج الجرحى والمصابين وتضميد جراحهم، فكانت بمثابة أول مستشفى حربي متنقل، ويؤكد ذلك ما روته أم المؤمنين السيدة عائشة – رضي الله عنها – حيث قالت: (أصيب سعد يوم الخندق في الأكحل فضرب النبي صلى الله عليه وسلم خيمة في المسجد ليعودوا من قريب، فلم يرعهم – وفي المسجد خيمة من بني غفار – إلا الدم يسيل إليهم فقالوا: يا أهل الخيمة ما هذا الذي يأتينا من قبلكم فإذا سعد يغذو جرحه دما فمات فيها) (يغذو: أي يسيل)

أمر النبي –صلى الله عليه وسلم– أن يتم نقل سعد بن معاذ –رضي الله عنه- إلى "خيمة رفيدة الأسلمية" -التي كانت تعتبر بمثابة أول ممرضة تقوم بعلاج المرضى- لمداواتهم حتى لا يفقدوا الكثير من الدماء، (كان رسول الله -صلى الله عليه وسلم- قد جعل سعد بن معاذ في خيمة لامرأة من أسلم، يقال لها رفيدة، في مسجده، كانت تداوي الجرحى، وتحتسب نفسها على خدمة من كانت به ضيعة من المسلمين، وكان رسول الله -صلى الله عليه وسلم- قد قال لقومه حين أصابه السهم بالخندق: اجعلوه في خيمة رفيدة حتى أعوده من قريب)، وفقا لما جاء في كتاب (السيرة النبوية) لابن هشام.

இஸ்லாமிய வரலாற்றில் முதல் மருத்துவமனை மாநபி ஸல் அவர்கள் வாழும் காலத்தில் நடமாடும் மருத்துவமனைகளாக செயல்பட்டது.

பின்னர் ஹிஜ்ரி 5- ஆம் ஆண்டு ஃகன்தக் யுத்தத்தின் போது மஸ்ஜிதுன் நபவீயின் ஓரப்பகுதியில் நிறுவப்பட்டது.

அந்த மருத்துவமனையின் முதல் மருத்துவராக அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ருஃபைதா அல் அஸ்லமீ (ரலி - அன்ஹா) என்கிற பெண்மணி மாநபி ஸல் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார்கள்.

முதல் சிகிச்சையாளராக ஸஅத் இப்னு முஆத் (ரலி - அன்ஹு) சிகிச்சை பெற்றார்கள்.

தங்களுடைய தந்தையின் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறையை கற்று தந்தையிடம் நர்ஸ் - செவிலியராக சேவை செய்து பின்னர் மருத்துவராக உயர்வு பெற்று பல்வேறு செவிலியர்களையும் மருத்துவர்களையும் உருவாக்கினார்.

4. மஸ்ஜித் வளாகம் சேவைகள் மையமாகத் திகழ வேண்டும்...

1. கடன் பட்டோர் மீட்பகமாக...
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த ஆரம்ப கால கட்டத்தில் பைத்துல்மாலில் அதிகமான பண வசதி இருக்கவில்லை. 
அப்போது, இறந்து போனவர்களுக்கு நடத்தப்படுகிற ஜனாஸா தொழுகை விஷயத்தில் நபி ஸல் அவர்கள் இரண்டு முறைகளைக் கையாண்டனர்.

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: இறுதித் தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “இவர் கடனாளியா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித் தோழர்கள் இல்லை என்றனர்.  அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 

عن جابر بن عبد الله قال : توفي رجل فغسلناه وكفناه وحنطناه ثم أتينا به رسول الله – صلى الله عليه وسلم – ليصلي عليه ، فقلنا : تصلي عليه ؟ فخطا خطوة ثم قال: " أعليه دين ؟ " قلنا : ديناران ، فانصرف ، فتحملهما أبو قتادة ، فأتيناه ، فقال : أبو قتادة : الديناران عليّ ، فقال رسول الله : " قد أوفى الله حقَّ الغريم وبرئ منهما الميت ؟ قال : نعم ، فصلى عليه ، ثم قال بعد ذلك بيومين : " ما فعل الديناران ؟
 قلت : إنما مات أمس ، قال : فعاد إليه من الغد فقال : قد قضيتها ، فقال رسول الله : الآن بردت جلدته " رواه أحمد وصححه الحاكم وحسنه المنذري

பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ”இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி {ஸல்} அவர்கள் 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது 'ஆம்' எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?' என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர்.

 'இவர் எதையேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். 'இவர் கடனாளியா? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டபோது  'இரண்டு தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்' என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றனர். அப்போது, நடத்துங்கள்' என்றனர். அப்போது அபூ கதாதா (ரலி) 'இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்' என்று கூறியதும் நபி {ஸல்} அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அவரின் கடனை அடைத்து விட்டீரா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! நேற்று தானே இறந்திருக்கின்றார்? என்றேன்.

பின்னர், மறுநாள் நானே மாநபி {ஸல்} அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! அந்த இரண்டு தீனார் கடனை நான் அடைத்து விட்டேன்” என்றேன். அதற்கு நபி {ஸல்} அவர்கள் “இப்போது தான் அவரின் உடல் மண்ணறையில் குளிர்ந்து இருக்கும்” என்று நவின்றார்கள். (நூல்: புகாரி – 2295)
ஒரு மனிதருக்கு ஜனாஸா தொழுகை என்பது கடைசி தொழுகை, அதில் நபி(ஸல்) அவர்களுடைய துஆ முக்கியமானது. அதைக் கூட கடன்பட்டவர்  இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டது.

சில ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தது. பின்னர் கைபர் வெற்றி பஹ்ரைன் போன்ற நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டு பைத்துல்மாலுடைய நிதி அதிகமாகக் கிடைத்தது. இதன் காரணமாக நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய சகோதரன் ஒருவன் மரணம் அடைந்து ஏதாவது விட்டுச் சென்றிருந்தால் அதை அவருடைய வாரிசுகள் எடுத்துக் கொள்ளட்டும்.

கடன் பட்டிருந்தால் என்றால் என்னிடம் கொண்டு வாருங்கள்; அதனை நான் நிறைவேற்றுகிறேன். உங்களில் நான் தான் மிகத் தகுதி வாய்ந்தவன்‘ என்று கூறுவார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.

روى البخاري ومسلم في صحيحهما عن أبي هريرة رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم كان يؤتى بالرجل المتوفى عليه الدين فيسأل: هل ترك لدينه فضلاً؟ فإن حدث أنه ترك لدينه وفاءً صلى، وإلا قال للمسلمين: صلوا على صاحبكم، فلما فتح الله الفتوح قال: "أنا أولى بالمؤمنين من أنفسهم، فمن توفي من المؤمنين، فترك ديناً فعلي قضاؤه، ومن ترك مالاً فلورثته. 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது “இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். “கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்‘ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!‘ என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்! என்று கூறினார்கள். (நூல்: புகாரி – 2298)

2. மக்கள் தேவைகள் நிறைவேற்றப் படும் இடமாக...

وفي سنن الترمذي عن بشر بن بشير الأسلمي عن أبيه قال: (لما قدم المهاجرون المدينة استنكروا الماء (لم يستسيغوا طعمه)، وكانت لرجل من بني غفار عين (ينبوع الماء الذي ينبع من الأرض ويجري) يقال لها: رومة، وكان يبيع منها القِربة بمُد (مقدار ما يملأ الرجل كفيه طعاما)، فقال له النبي صلى الله عليه وسلم: تبيعنيها بعين في الجنة؟ فقال: يا رسول الله ليس لي ولا لعيالي غيرها، فبلغ ذلك عثمان رضي الله عنه فاشتراها بخمسة وثلاثين ألف درهم، ثم أتى النبي صلى الله عليه وسلم فقال: أتجعل لي فيها ما جعلت له؟ قال: نعم، قال عثمان: قد جعلتها للمسلمين). 

நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரத் செய்து மதீனா வந்த புதிதில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது வறட்சியான காலமும் கூட அது. மக்கள்அங்கிருக்கும் ரூமத்துல் ஃகிஃபாரி (ரலி) என்கிற நபித்தோழருக்குச் சொந்தமான  பிஃர-ரூமா எனும்  கிணற்றிலிருந்து   முஸ்லிம்கள்ஒரு முத்து விலையாக  கொடுத்து  ஒரு தோல் பை  தண்ணீர்  பெற்றுக் கொண்டிருந்தனர்.

மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஒரு முத்து அளவிலான உணவுப் பொருளை கொடுத்து தண்ணீர் பெற முடியாமல் தவித்த போது கிணற்றின் உரிமையாளரிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் "தோழரே! சுவனத்தின் ஒரு ஊற்றுக்குப் பகரமாக உமது கிணற்றை எனக்கு விலைக்கு தருவீரா?" என்று கேட்டார்கள்.

அதற்கவர் "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அந்த கிணற்றைத் தவிர வேறு எந்த சொத்துக்களும் இல்லை" என்று கூறி மறுத்து விட்டார்.

இந்த தகவலை அறிந்த ஹழ்ரத்  உஸ்மான் (ரலி) அவர்கள்  35000 தீனார் கொடுத்து  முழுக் கிணற்றையும் விலைக்கு வாங்கி  மதினமாநகர் முழுவதுமுள்ள  மக்களெல்லாம் பயன் பெறும் பொருட்டு  அதை வக்ஃபு செய்தார்கள். ( நூல்: திர்மிதீ )

3.வறியோர், எளியோர் வாழ்க்கையை முன்னேற்றும் இடமாக...
நாம் ஏற்கனவே திண்ணைத் தோழர்கள் குறித்து குறிப்பிட்டிருக்கின்றோம். அத்தகைய  திண்ணைத் தோழர்களில் பலருக்கு நல்ல முறையிலான வாழ்க்கை அமைந்திட நபி ஸல் அவர்கள் களம் அமைத்துக் கொடுத்தார்கள்.
தேவையுடையோருக்கு பொருளாதார உதவிகள், இன்னும் சிலருக்கு வீடு மற்றும் திருமணத்திற்கு தேவையான உதவிகள் என பல்வேறு உதவிகளை பெருமானார் ஸல் அவர்கள் செய்தார்கள்.

அந்த நபித்தோழர் அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்தவர், தம் சமூக மக்களோடு தூரத்து பகுதியில் இருந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட அன்பினாலும், காதலினாலும் தம் சமூகத்தாரோடு மீண்டும் தம் பகுதிக்குச் சென்று விடாமல் மதீனாவிலேயே மஸ்ஜிதுன் நபவீயின் ஒரு ஓரத்திலே தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டவர்.

அவருக்கென்று தாய் வழியிலோ, தந்தை வழியிலோ எவ்வித உறவுகளும் கிடையாது. மதீனா அன்ஸாரிகளுக்கும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் பணிவிடை செய்து கிடைக்கிற உணவை உண்டும் மஸ்ஜிதுன் நபவீயில் உறங்கியும் வாழ்வைக் கழித்து வந்தார்.

சுருங்கச் சொன்னால், மஸ்ஜிதுன் நபவீயை முகவரியாகவும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், நபியவர்களின் குடும்பத்தாரையும், தனது குடும்பமாகவும், ஸஹாபாக்களை உறவினர்களாகவும், திண்ணைத் தோழர்களை நண்பர்களாகவும்,  எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த  அவர் தான் ரபீஅத்துல் அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு உதவிட வேண்டும் என எண்ணினார்கள்.

عن ربيعة بن كعب الأسلمي ـ رضي الله عنه ـ قال
  كنت أخدم رسول الله ـ صلى الله عليه وسلم ـ، فقال لي: يا ربيعة ألا تزوج؟، قال: قلت: والله، يا رسول الله، ما أريد أن أتزوج، ما عندي ما يقيم المرأة، وما أحب أن يشغلني عنك شيء، فأعرض عني، فخدمته ما خدمته، ثم قال لي الثانية: يا ربيعة، ألا تزوج؟، فقلت: ما أريد أن أتزوج، ما عندي ما يقيم المرأة، وما أحب أن يشغلني عنك شيء، فأعرض عني، ثم رجعت إلى نفسي، فقلت: والله، لرسول الله ـ صلى الله عليه وسلم ـ بما يصلحني في الدنيا والآخرة أعلم مني، والله، لئن قال: تزوج، لأقولن: نعم يا رسول الله، مرني بما شئت .
قال: فقال: يا ربيعة، ألا تزوج؟، فقلت: بلى، مرني بما شئت، قال: انطلق إلى آل فلان، حي من الأنصار، وكان فيهم تراخ عن النبي ـ صلى الله عليه وسلم ـ، فقل لهم: إن رسول الله ـ صلى الله عليه وسلم ـ أرسلني إليكم، يأمركم أن تزوجوني فلانة، لامرأة منهم، فذهبت، فقلت لهم: إن رسول الله ـ صلى الله عليه وسلم ـ أرسلني إليكم، يأمركم أن تزوجوني فلانة، فقالوا: مرحبا برسول الله، وبرسول رسول الله ـ صلى الله عليه وسلم ـ، والله، لا يرجع رسولُ رسولَ الله ـ صلى الله عليه وسلم ـ إلا بحاجته، فزوجوني وألطفوني، وما سألوني البينة .
فرجعت إلى رسول الله ـ صلى الله عليه وسلم ـ حزيناً، فقال لي: ما لك يا ربيعة؟، فقلت: يا رسول الله، أتيت قوما كراما، فزوجوني وأكرموني وألطفوني، وما سألوني بينة، وليس عندي صداق، فقال رسول الله ـ صلى الله عليه وسلم ـ: يا بريدة الأسلمي، اجمعوا له وزن نواة من ذهب، قال: فجمعوا لي وزن نواة من ذهب، فأخذت ما جمعوا لي، فأتيت به النبي ـ صلى الله عليه وسلم ـ فقال: اذهب بهذا إليهم، فقل: هذا صداقها، فأتيتهم، فقلت: هذا صداقها، فرضوه وقبلوه، وقالوا: كثير طيب .
قال: ثم رجعت إلى النبي ـ صلى الله عليه وسلم ـ
حزيناً، فقال: يا ربيعة، ما لك حزين؟، فقلت: يا رسول الله، ما رأيت قوما أكرم منهم، رضوا بما آتيتهم، وأحسنوا، وقالوا: كثيراً طيباً، وليس عندي ما أولم، قال: يا بريدة، اجمعوا له شاة، قال: فجمعوا لي كبشا عظيما سمينا، فقال لي رسول الله ـ صلى الله عليه وسلم ـ: اذهب إلى عائشة، فقل لها: فلتبعث بالمكتل الذي فيه الطعام، قال: فأتيتها، فقلت لها ما أمرني به رسول الله ـ صلى الله عليه وسلم ـ، فقالت: هذا المكتل فيه تسع آصع شعير، لا والله، إن أصبح لنا طعام غيره، خذه، فأخذته، فأتيت به النبي ـ صلى الله عليه وسلم ـ وأخبرته بما قالت عائشة، فقال: اذهب بهذا إليهم، فقل: ليصبح هذا عندكم خبزاً، فذهبت إليهم، وذهبت بالكبش، ومعي أناس من أسلم، فقال: ليصبح هذا عندكم خبزا، وهذا طبيخا، فقالوا: أما الخبز فسنكفيكموه، وأما الكبش فاكفونا أنتم، فأخذنا الكبش، أنا وأناس من أسلم، فذبحناه وسلخناه وطبخناه، فأصبح عندنا خبز ولحم، فأولمت، ودعوت رسول الله ـ صلى الله عليه وسلم ـ فَأَجَابَنِي  ) رواه أحمد .

ஒரு நாள் ரபீஆவை அருகே அழைத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் என்ன ரபீஆ திருமணம் செய்து கொள்ளவில்லையா?எனக் கேட்டார்கள். மௌனத்தை பதிலாகத் தந்தார் ரபீஆ.

இன்னொரு நாள் மாநபி  (ஸல்)  அவர்கள் அதே கேள்வியை கேட்கிறார்கள். சிரிப்பையும், ஏக்கப்பார்வையையும் பதிலாக தந்து விட்டு செல்கிறார்கள் ரபீஆ.

மூன்றாவது முறையாக மாநபி  (ஸல்)  அவர்கள் அதே கேள்வியை கேட்டபோது, இம்முறை ரபீஆ  (ரலி)  நபி (ஸல்)   அவர்களின் அருகே வந்து மஸ்ஜிதுந் நபவீயின் திண்ணையில் படுத்துறங்கும் இந்த ஏழைக்கு யார் பெண் தருவார்? எனக் கேட்டார்.

உடனே, நபி (ஸல்) அவர்கள் ஒரு வீட்டின் முகவரியை கொடுத்து அந்த வீட்டில் உள்ளவரிடம் நான் உனக்கு பெண் கேட்டதாகச் சொல்லவும் எனக் கூறி அனுப்பினார்கள்.

அந்த முகவரியில் உள்ளவரிடம் சென்று மாநபியின் விருப்பத்தை தெரியப்படுத்திய போது, முதலில் யோசித்த அக்குடும்பத்தினர் பெண் கேட்டு அனுப்பியதும், பெண் கொடுக்குமாறும் கூறுவதும் அல்லாஹ்வின் தூதரல்லவா? எனவே ரபீஆவிற்கு பெண் கொடுக்க முன் வந்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் அந்த செய்தியை சொல்லிவிட்டு தனது அடுத்த கவலையை தெரிவித்தார் ரபிஆ (ரலி) ஆம்! பெண் தயார். ஆனால், மஹர் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லையே என்றார்.

மாநபி (ஸல்) அவர்கள் புரைதத்துல் அஸ்லமீ (ரலி) என்கிற  நபித் தோழரை அழைத்து  மஹர்  வழங்க  ஏதாவது ஏற்பாடு  செய்வீராக!  என்று கட்டளை பிறப்பித்தார்கள்.  பேரீத்தங் கொட்டை அளவிலான  தங்கத்திற்கு ஏற்பாடு செய்து  கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்.

அடுத்து, வலீமா கொடுக்க வேண்டுமே? என்ன செய்ய என்றார். மீண்டும் மாநபி (ஸல்) அவர்கள் புரைதத்துல் அஸ்லமீ (ரலி) அவர்களை  அழைத்து வலீமா விருந்து கொடுக்க ஏதாவது ஏற்பாடு செய்வீராக! என்று கட்டளை பிறப்பித்தார்கள். சிறிது நேரத்தில் கொழுத்த ஆட்டை  ஏற்பாடு செய்து கொண்டு வந்தார்.

அடுத்து, குடும்பம் நடத்த வீடு வேண்டுமே, என்ன செய்வேன்!  அல்லாஹ்வின் தூதரே! என்றார். மாநபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட “குமுஸ்” ல் ஒரு சிறு நிலம் இருந்தது.அதை ரபீஆவிடம் தந்தார்கள்.

பின்பு, ரபீஆவின் தூரத்து உறவினர்களையும், நபித்தோழர்களையும் ரபீஆவிற்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார்கள். பேரீத்தங்கூரை வேயப்பட்டு வீடு தயார் ஆனது.

அடுத்து வீட்டுக்கு தேவையான சில பாத்திரங்கள், சில மளிகை சாதனங்களுடன் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ரபீஆ அவர்களுக்கு ஒரு நிரந்தர முகவரியை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இறுதியாக, அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் திருமணத்திற்கு பின் உண்டான வாழ்க்கை வசதிகளுக்காக தங்களின் விவசாய நிலத்தில் சிறு பகுதியை விவசாயம் செய்வதற்காக ரபீஆ  (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள். 

     ( நூல்: இஸ்தீஆப்: பாகம்:1 பக்கம்: 270 )

மதீனாவில் நேற்று வரை அவருக்கென்று யாரும் இல்லை. எதுவுல் இல்லை. ஆனால், இப்போது அவருக்கென்று ஒரு மனைவி, அவரின் சுக, துக்கத்தில் பங்கெடுக்க அவருக்கென்று ஒரு குடும்பம், அவருக்கென்று வீடு, வாசல், சொத்து இப்போது ரபீஅத்துல் அஸ்லமீ சமூகத்தில் மதிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான மனிதரில் ஒருவர் ஆவார்.

4. நல்வழி காட்டும் கேந்திரமாக...

عن قبيصة بن مخارق الهلالي رضي الله عنه: قال:' تحمَّلت حَمَالة ، فأتيتُ رسول الله صلى الله عليه وسلم أسأله فيها ، فقال: أقِمْ حتى تأتيَنا الصدقةُ ، فنأمُرَ لك بها ، ثم قال: يا قبيصة ، إنَّ المسألةَ لا تحلّ إلا لأحد ثلاثة: رجل تحمل حمالة ، فَحلَّتْ له المسألة حتى يُصيبَها ، ثم يُمْسِكُ ، ورجُل أصابتهُ جائحة اجتاحت ، فحلّتْ له المسألة حتى يُصيب قوَاما مِنْ عَيْش - أو قال: سِدادا مِنْ عَيْش - ورجل أصابته فاقة ، حتى يقول ثلاثة من ذوي الحِجَا من قومه: لقد أصابت فلاناً فاقة ، فحلّت له المسألة ، حتى يصيبَ قَوَاما من عَيْش - أو قال: سِدَادا من عيش - فما سِوَاُهنَّ من المسألة يا قبيصة سُحْت ، يأكلها صاحبها سُحْتا '.أخرجه مسلم وأبو داود والنسائي.

கபீஸா இப்னுல் மஃகாரிக் அல் ஹிலாலீ (ரலி) கூறுகின்றார்கள்: ”இருவருக்கு மத்தியில் நடைபெற்ற சண்டையை சமாதானம் செய்து வைத்து, அந்த சமாதானத்தை பணத்தை கொடுப்பதன் மூலம் தீர்த்து வைத்து அப்பொறுப்பை தான் ஏற்றுக்கொண்ட நிலையில் அல்லாஹ்வின் தூதரிடம் வந்தேன். சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் பொறுப்பேற்ற பணத்தை கொடுக்க என்னிடம் போதுமான பண வசதி இல்லை என்று கூறி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடத்தில் பணத்தை கேட்டேன்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்}  ”இவ்விடத்தில் நிற்பீராக, எங்களுக்கு ஸதகாக்கள் வரும் அதனை உமக்கு தருமாறு ஏவுவோம்! சற்று நிற்பீராக! என்று என்னிடம் கூறினார்கள். பிறகு ஹபீஸாவே யாசிப்பது நிர்பந்தமான மூன்று நிலையில் உள்ளவருக்குதான் அனுமதியாகும்.

”ஒருவர், இருவருக்கு மத்தியிலுள்ள சண்டையை சமாதானம் செய்து விட்டு அதில் கொடுக்க வேண்டிய பணத்தை தான் தருவதாக வாக்குறுதி அளித்தவராவார். அவரிடம் கொடுப்பதற்கு பணமில்லை எனும் நிலையில் அவர் யாசிப்பது ஹலாலாகும் அப்பணத்தைப் பெற்றவுடன் யாசிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இன்னொருவர், திடீரென ஏற்படும் பேரிடரின் காரணமாக சொத்து செல்வங்கள் அனைத்தையும் பறிகொடுத்து விட்ட ஒருவர், அவரும் யாசிப்பது அனுமதிக்கப் பட்டதாகும். இது அவர் வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளும் வரை தான் பின்னர்  அவர் யாசிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மூன்றாமவர், வறுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர். அவரது சமூகத்திலே உள்ள தலைவர்கள், அறிஞர்கள் அவருக்கு உதவி செய்யுமாறு பரிந்துரை செய்கின்கிறார்கள். அந்நபருக்கும் யாசிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அவரும் வாழ்வாதாராத்தைப் பெற்றுக்கொள்ளும் வரை தான் பின்னர் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதற்குப் பின்னரும் ஒரு மனிதன் கை நீட்டுவானேயானால்,  யாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்வானேயானால், பிச்சை கேட்பதை தொழிலாக செய்வானேயானால் அவன் ஆகுமாக்கப்படாத ஹராமான உணவையே உண்ணுகிறான்’ என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

ஒருமுறை நபி {ஸல்}  அவர்களிடம் யாசகம் கேட்டு வந்த ஒருவருக்கு தொழிலுக்கான வழிகளைக்காட்டி வியர்வை சிந்தி உழைத்து உண்ணுமாறு உபதேசித்தார்கள்.

وعن أنس بن مالك : أن رجلا من الأنصار أتى النبي صلى الله عليه وسلم يسأله فقال : " أما في بيتك شيء ؟ " قال بلى حلس نلبس بعضه ونبسط بعضه وقعب نشرب فيه من الماء . قال : " ائتني بهما " قال فأتاه بهما فأخذهما رسول الله صلى الله عليه وسلم بيده وقال : " من يشتري هذين ؟ " قال رجل أنا آخذهما بدرهم قال : " من يزيد على درهم ؟ " مرتين أو ثلاثا قال رجل أنا آخذهما بدرهمين فأعطاهما إياه وأخذ الدرهمين فأعطاهما الأنصاري وقال : " اشتر بأحدهما طعاما فانبذه إلى أهلك واشتر بالآخر قدوما فأتني به " . فأتاه به فشد فيه رسول الله صلى الله عليه وسلم عودا بيده ثم قال له اذهب فاحتطب وبع ولا أرينك خمسة عشر يوما " . فذهب الرجل يحتطب ويبيع فجاء وقد أصاب عشرة دراهم فاشترى ببعضها ثوبا وببعضها طعاما فقال رسول الله صلى الله عليه وسلم : " هذا خير لك من أن تجيء المسألة نكتة في وجهك يوم القيامة

ஒரு முறை மதீனாவைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் ஒருவர் நபிகளாரிடம் யாசகம் கேட்டு வந்தார். அதற்கு நபிகளார் உமது வீட்டில் எதுவும் இல்லையா? என வினவ, விரிப்பாக பயன்படுத்தும் ஒரு போர்வையும், நீர் அருந்துவதற்கான ஒரு பாத்திரமும் இருப்பதாக கூறினார்.

அவை இரண்டையும் தங்களிடம் கொண்டு வரும்படி நபியவர்கள் வேண்டவே, அதனை கொண்டு வந்தார் அவர். நபியவர்கள் அதனை சஹாபாக்களிடம் காட்டி உங்களில் யார் இதனை வாங்கிக் கொள்கிறீர்கள் என கேட்க, ஒரு மனிதர் ஒரு திர்ஹம் கொடுத்து அதனை வாங்கிக்கொள்கின்றேன் என்றார்.

அப்போது, நபியவர்கள் மீண்டு ஒரு திர்ஹத்தை விட யார் அதிகமாகத் தர விரும்புகிறீர்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கேட்டார்கள்.

உடனே இன்னொரு மனிதர் இரு திர்ஹம் கொடுத்து நான் அவற்றை வாங்கிக்கொள்கின்றேன் என பதிலளிக்க அவரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இரு திர்ஹங்களையும் அம்மனிதரிடம் நபியவர்கள் கொடுத்து ஒரு திர்ஹமுக்கு உணவு வாங்கி அதனை உனது குடும்பத்தினருக்கு கொடுத்து விடு. எஞ்சிய திர்ஹமுக்கு ஒரு கோடாரியை வாங்கி அதனை என்னிடம் கொண்டுவா என்றார்கள்.

அதற்கு தனது கையாலேயே கைப்பிடியை செய்து கொடுத்து விறகுகளை வெட்டி அதனை வியாபாரம் செய்,  இன்னும்  15  நாட்களுக்கு என்னை நீ காண வரக்கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அந்த ஏழை முஸ்லிம் விறகுகளைச் சேர்த்து வியாபாரம் செய்யலானார். பத்து திர்கங்களைச் சம்பாதித்து சில பணத்திற்கு உணவுகளை வாங்கியவராக நபிகளாரின் முன் வந்து நின்ற போது,

 நபி {ஸல்} அவர்கள் ”யாசகம் கேட்டு மறுமை நாளில் உமது முகத்தில் புள்ளியிடப்பட்ட ஒரு அடையாளத்துடன் வருவதை விட இப்படி உழைத்து பொருளீட்டி வாழ்வது உமக்கு மிகவும் சிறந்ததாகும்” என்றார்கள். ( நூல்: அபூ தாவூத் )

5. தீர்வுகளைத் தரும் இடமாக....

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «لاَ يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ»

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர், ஆம் (தந்து விடுகிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்! என்று கூறினார்கள்.நூல் : புகாரி 5273

حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ: «يَا عَبَّاسُ، أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَاجَعْتِهِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَنَا أَشْفَعُ» قَالَتْ: لاَ حَاجَةَ لِي فِيهِ

பரீராவின் கணவர் முகீஸ் அடிமையாக இருந்தார். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று பரீராவிடம் கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 5283

6. ஆலோசனைகள் மற்றும் சட்ட வழிகாட்டல் வழங்கும் மையமாக...

عن أبي هريرة رضي الله عنه قال : بينما نحن جلوس عند النَّبيِّ صلَّى الله عليه وسلَّم إذ جاءه رجل فقال : يا رسول الله هلكتُ ، قال : ما لك ؟ قال : وقعتُ على امرأتي وأنا صائم [ في رمضان ] فقال رسول الله صلى الله عليه وسلم : هل تجد رقبة تعتقها ؟ قال : لا ، قال : فهل تستطيع أن تصوم شهرين متتابعين ؟ قال : لا ، فقال : فهل تجد إطعام ستين مسكيناً ؟ قال : لا ، قال : فمكث النَّبيُّ صلَّى الله عليه وسلَّم فبينا نحن على ذلك أُتي النَّبي صلَّى الله عليه وسلم بعَرَق – أي : قفة كبيرة – فيها تَمْر ، قال : أين السائل ؟ فقال : أنا ، قال : خذها فتصدَّق به ، فقال الرجل : أعلَى أفقر منِّي يا رسول الله ؟ فو الله ما بين لابتيها - يريد الحرتين - أهل بيت أفقر من أهل بيتي ، فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت أنيابه ، ثم قال : أطعمه أهلك.. رواه البخاري  ومسلم .

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி (இல்லற வாழ்வில் ஈடுபட்டு) விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!” என்றார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி (ஸல்) அவர்களிடம்  “அறக்” எனும் அளவையில் பேரீச்சம் பழம் கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான்தான்!” என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா(நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள். (புகாரி 1936)

சம்பந்தப்பட்ட நபர் “நான் அழிந்து விட்டேன்!” என்று கூறிய போதிலும், நபி (ஸல்) அவர்கள் நிதானமாக “என்ன நடந்தது?” என்று கேட்கின்றார்கள். பதட்டத்துடன் வந்தவரது பதட்டத்தைப் போக்குகின்றார்கள். மேலும், தவறைச் செய்து விட்டு வந்தவர், சட்ட ஆலோசனை பெற்று விட்டு, தர்மமும் பெற்றுச் சென்றார்.

حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ حُصَيْنٍ ، عَنْ عَامِرٍ ، قَالَ : سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، وَهُوَ عَلَى الْمِنْبَرِ، يَقُولُ : أَعْطَانِي أَبِي عَطِيَّةً، فَقَالَتْ عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ : لَا أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : إِنِّي أَعْطَيْتُ ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً، فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ : " أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا ؟ " قَالَ : لَا. قَالَ : " فَاتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمْ ". قَالَ : فَرَجَعَ فَرَدَّ عَطِيَّتَهُ.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் (கூஃபாவில்)மிம்பரின் மீது நின்று கொண்டு என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாய் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன், என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக,எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதேப்போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்துச் செய்தார்கள்.
புஹாரி 2587 ஆமிர் (ரலி).

يروي المؤرخ ابن الأثير في كتابه "أُسد الغابة": أتت أسماء النبي صلى الله عليه وسلم، وهو بين أصحابه فقالت: بأبي وأمي أنت يا رسول الله، أنا وافدة النساء إليك، إن الله بعثك إلى الرجال والنساء كافة فآمنا بك. وإنّا معشر النساء محصوراتٌ مقصوراتٌ قواعدُ بيوتكم ومَقضى شهواتكم وحاملات أولادكم، وإنكم معشر الرجال فُضِّلتم علينا بالجُمَع والجماعات وعيادة المرضى وشهود الجنائز والحج بعد الحج، وأفضل من ذلك الجهاد في سبيل الله، وإنّ الرجل إذا خرج حاجّاً أو معتمراً أو مجاهداً حفظنا لكم أموالكم وغزلنا أثوابكم وربينا لكم أولادكم. أفما نشارككم في هذا الأجر والخير؟..  فالتفت النبي صلى الله عليه وسلم إلى أصحابه بوجهه كلِّه ثم قال: ((هل سمعتم مقالة امرأة قَط أحسن من مساءلتها في أمر دينها من هذه؟)) فقالوا: يا رسول الله، ما ظننا أن امرأة تهتدي إلى مثل هذا. فالتفت النبي صلى الله عليه وسلم إليها فقال: ((افهمي، أيتها المرأة، وأَعْلِمي مَن خلفك من النساء أنّ حُسْنَ تبعُّلِ المرأة لزوجها وطلَبها مرضاته واتباعَها موافقته يَعْدِل ذلك كلّه)). فانصرفت المرأة وهي تهلّل.

ஒருநாள் நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள்.

“அல்லாஹ்வின்தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். முஸ்லிம்பெண்கள், அவர்தம் தூதுவராக என்னைத் தங்களிடம் அனுப்பியுள்ளார்கள். நான்அவர்கள் கூறியதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன். இங்கு நான் சொல்லப்போகும் அவர்களது கருத்தே என் கருத்தும்கூட.

ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும்பொதுவாகத் தான் அல்லாஹ் தங்களை நபியாக அனுப்பி வைத்துள்ளான். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கைக் கொண்டோம்; பின்பற்றுகிறோம். பெண்களாகிய நாங்கள் வீட்டின்தூண்களைப் போல் தனித்து வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கணவர்களுக்கு இல்லற சுகம் அளிக்கிறோம்; அவர்களின் பிள்ளைகளைச் சுமக்கிறோம். அவர்கள் ஜிஹாதுக்குச் சென்று விடும் போது அவர்களது வீடு, வாசல், செல்வத்தைப் பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளையும் பராமரித்து வளர்க்கிறோம்.

ஆண்களுக்கோ ஜமாஅத் - கூட்டுத் தொழுகையும் ஜும்ஆத் தொழுகையும் ஜனாஸா - பிரேத நல்லடக்கத்தில் ஈடுபவதும், ஜிஹாது புரிவதும் என்று பல நல் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன.  அல்லாஹ்வின் தூதரே! அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு இருக்கவேண்டுமில்லையா?” என்று வினாவொன்றை எழுப்பினார்கள்.

அது கேட்டு வியந்துபோன நபியவர்கள் தம் தோழர்களிடம் திரும்பி, “தமது மார்க்கம் பற்றிஇத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசிகேட்டிருக்கிறீர்களா?” என்றார்கள்.


“அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இல்லை. ஒரு பெண் இந்தளவு தெளிவாய்ப் பேசக்கூடும் என்று நாங்கள் நினைத்ததில்லை.” என்று பதில் கூறினார்கள்.

“அஸ்மா! உன் தோழியரிடம் சென்று சொல், ‘தம் கணவனுக்குச் சிறந்த இல்லத்துணைவியாகவும் அவனது மகிழ்வே தனது நாட்டமாகவும் அவனது தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவளாகவும் ஒரு பெண் அமையும்போது ஆணின் நற்கூலிகள் என்று நீ விவரித்ததற்கு இணையான அனைத்தும் அவளுக்கும் கிடைத்துவிடும்’ என்று.” இறைத் தூதர் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவாறு தக்பீரை முழங்கியவாறு அங்கிருந்து விலகினார் அஸ்மா (ரலி) அவர்கள்.

பள்ளிவாசல் நிர்வாகிகளின் பண்புகள்

பள்ளிவாசலுக்குரிய இலக்கணங்கள்  சொல்லப்பட்டு இருப்பது போன்றே அதனை பரிபாலனம் செய்பவர்களுக்குரிய தகுதிகளும், இலக்கணங்களும் சொல்லப்பட்டு உள்ளன. மார்க்கம் கூறும் கொள்கை மற்றும் இறை நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் செயல்பாடுகளிலும் சரியாக இருக்க வேண்டும். மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதில் அனைத்து மக்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இப்படித்தான் பள்ளிவாசல் நிர்வாகிகள் இருப்பார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 

9:17 مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالـكُفْرِ‌ؕ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ‏

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். ( அல்குர்ஆன்:9: 17 )

 اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.
( அல்குர்ஆன்: 9: 18 )

اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ‌ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏

.அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் அதிகார வரம்பைக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. ( அல்குர்ஆன்: 22: 41 )
இன்றைய  பள்ளிவாசல் நிர்வாகத்தில் பல இடங்களில் வட்டி, வரதட்சணை போன்ற பெரும்பாவங்களிலும், கட்டப் பஞ்சாயத்து, அடிதடி போன்ற சமூகத் தீமைகளிலும் பங்கெடுப்பவர்கள், அறவே பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வராதவர்கள் ஒழுக்க வீழ்ச்சி அடைந்தவர்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.

இன்னும் சில இடங்களில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் போர்வையில் கெட்ட கொள்கை உடையோர், வழி தவறிய சிந்தனை கொண்டோர் நிர்வாகிகளாக உள்ளனர்.

அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) கூறினார்:- அனஸ்(ரலி)  அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் வெள்ளைப்பூண்டு குறித்து என்ன சொல்ல நீங்கள் கேட்டிக்கிறீர்கள்?’ என்று வினவப்பட்டது. அதற்கு அனஸ்(ரலி), ‘(அதைச்) சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம் எனக் கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள். ( புகாரி )

ஜாபிர்(ரலி) அறிவித்தார். ‘பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி )

(குறிப்பு:  துர்வாடையுடன் தொழுகைக்கே வரக்கூடாது என்ற வழிகாட்டல் இருக்கும் போது துர்கொள்கையுடன் பள்ளி நிர்வாகத்திற்கு வருபவர்கள் மேற்கண்ட ஹதீஸை நினைவு படுத்திக்கொள்ளட்டும்)

எனவே, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பள்ளிவாசலும் பராமரிப்பும்...

எந்த நோக்கத்திற்காகப் பள்ளிவாசல் கட்டப்படுகிறதோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும்; நீடிக்க வேண்டும் என்றால் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளிவாசல் கட்டுவதற்கு அளிப்பதைக் காட்டிலும் அதன் பராமரிப்புக்கு நன்கொடை அளிப்பதில் அநேக மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்திற்காக செலவளிப்பதற்கும் நிச்சயம் நன்மை உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அங்கு நிறைவேற்றப்படும் நற்காரியங்கள், வணக்க வழிபாடுகள் மூலம் அதேபோன்று நன்மை நமக்கும் கிடைக்கும்.

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான். (அல்குர்ஆன்:47:7.)

عن ابن عباس أن امرأة كانت تلقط القذى من المسجد فتوفيت ، فلم يؤذن النبي - صلى الله عليه وسلم - بدفنها ، فقال النبي - صلى الله عليه وسلم - : " إذا مات لكم ميت فآذنوني " وصلى عليها وقال :
 إني رأيتها في الجنة [ لما كانت ] تلقط القذى من المسجد " .

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு பெண்மணி மாநபி {ஸல்} அவர்களின் பள்ளிவாசலில் குப்பை கூளங்களை அகற்றி வந்தார். ஒரு நாள் அப்பெண்மணி இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்த விவரத்தை நபித்தோழர்கள் அண்ணலாருக்குத் தெரிவிக்கவில்லை.
அண்ணலாருக்குத் தெரிய வந்த போது “உங்களில் ஒருவர் இறந்து விட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கூறிய அண்ணலார், பிறகு அப்பெண்மணிக்காக ஜனாஸா தொழுகை தொழுதார்கள்.
பின்னர், தோழர்களை நோக்கி  “இப்பெண்மணி பள்ளியில் குப்பைக் கூளங்களைச் சுத்தம் செய்து வந்த காரணத்திற்காக சுவனத்தில் இருந்ததை நான் பார்த்தேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.              ( நூல்: தப்ரானீ )

عن عائشة قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் வாழும் பகுதிகளில் இறையில்லங்களை அமைத்திட உத்தரவிட்டார்கள். 

மேலும், அவைகளை சுத்தமாகவும் நறுமணம் கமழும் இடமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்கள்”. ( நூல்:அபூதாவூத்)

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள். பிறகு ‘‘உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும்போது ‘அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்’ அல்லது ‘அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்’. ஆகவே, எவரும் தமது கிப்லாத் திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்துகொள்ளட்டும்’’ என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, ‘‘அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்’’ என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

( நூல்: புஹாரி (405) )

ஆகவே, பள்ளிவாசல் - இறையில்ல பொறுப்பு என்பதும், இறையில்ல பராமரிப்பு என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கவனமாக பயணித்து இறையருளைப் பெறுவோம்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நல்லருள் பாளிப்பானாக!!



Tuesday, 12 July 2022

இது இருந்தால் ஒரு முஸ்லிமின் இஸ்லாமும் ஈமானும் பூரணமாகி விடும்!!

 ﷽

துல்ஹஜ் பிறை: 12/12/1443

செவ்வாய்கிழமை: 12/07/2022

இது இருந்தால் ஒரு முஸ்லிமின் இஸ்லாமும் ஈமானும் பூரணமாகி விடும்!!

வெட்கம் (Shyness or diffidence) அல்லது வெட்கப்படுதல் இன்று சமூகத்தில் அதிக விவாதத்தை எதிர் கொள்ளும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இன்று வெட்க உணர்வு என்பது  வேண்டாத ஒன்றாகவும் அதை ஒரு பிற்போக்குத்தனமாகவும் பார்க்கப் படுகிறது.

ஆனால், இஸ்லாம் உயர்த்திக் கூறும் பண்பாக வெட்கம் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

வெட்கம் என்பது பெயர்ச்சொல் வார்த்தையாகும். இதற்குப் பொருள், பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்கமுடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.

இரண்டு பொருள்கள்:-

மேலும் வெட்கம் இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

1. நாணம்,  திறமையை வெளிப்படுத்துவதற்கு வெட்கப்படுவது, பெண் மாப்பிள்ளையைப் பார்க்க வெட்கப்படுவது போன்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

2. அவமானம், தவறு செய்வதற்குப் பயப்படுவது, மானம் கெட்ட செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவது.

பார்க்க: கிரியாவின் தமிழ் அகராதி

மேற்சொன்ன கருத்தில்தான், அரபி மொழியின் பிரபலமான, ஆதாரத்திற்கு ஏற்கத் தகுந்த லிஸானுல் அரப் என்ற அகராதியிலும் வெட்கத்திற்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

லிஸானுல் அரப்: பாகம் 11, பக்கம் 200

பிறர் பழிப்பிற்கு பயந்து ஒன்றிலிருந்து தன்னை விடுவித்து விலக்கிக் கொள்வது அல்லது விலகிக் கொள்வது. (அல்முன்ஜித்: பக்கம் 165)

மேலும் ஹயா என்பதற்கு உயிர்வாழ்தல் என்று கூட பொருள் உண்டு. அதனால்தான் நாம்கூட மானம் இழப்பின் உயிர்வாழ்தல் உடமையா? என்றுகூட கேட்கிறோம். எனவே உயிர்வாழ்வதின் அர்த்தமே மானத்தோடும் மரியாதையோடு வாழ்தலாகும். இதுதான் வெட்கம்.

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு ஒவ்வொரு மனிதனிடமும் வெட்க உணர்வை இயல்பாகவே அமைத்திருக்கிறான் இறைவன். ஆகவே தான்,  சுவனத்தில் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் தங்களுடைய ஆடை விலகியதும் உடனே சுவனத்தின் இலைகளை எடுத்து உடலை மறைத்துக் கொண்டதாக குர்ஆன் கூறுகிறது.

فَدَلاَّهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُل لَّكُمَا إِنَّ الشَّيْطَآنَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் – அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது – அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று. அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு, “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.[7:22]

قال رسول الله صلى الله عليه وسلم” إن لكل دين خلقا وخلق الإسلام الحياء” (رواه ابن ماجه في سننه وحسنه الألباني).

நபிகளார் நவின்றார்கள்: ‘ஒவ்வொரு மார்க்கத்திற்கும் தனியே ஒரு சிறப்பு குணமுண்டு. இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு குணம் வெட்கம் ஆகும்’. (நூல்: இப்னுமாஜா, தப்ரானி)

அனைத்து நபிமார்களும் வலியுறுத்திய கடமைகளில் ஒன்றாக வெட்க உணர்வு விளங்குகிறது.

அதிலும் நமது பெருமானார் ஸல் அவர்கள் ஈமானோடு இணைத்துக் கூறியது முக்கியத்துவம் பெறுகிறது.

الإيمان بضع وستون شعبة، والحياء شعبة من الإيمان” حديث متفق عليه.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: புகாரி 9.) என்று  நபிகளார் வெகுஅழகாக இறைநம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்களைக் கற்றுத்தந்தார்கள்.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ زُهَيْرٍ ، حَدَّثَنَا مَنْصُورٌ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ عُقْبَةُ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم

إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ.

மக்கள் பெற்றுக் கொண்ட முந்தைய நபித்துவத்தின் முக்கியச் செய்தி - அதாவது - முன்வந்த நபிமார்கள் அனைவரும் கூறி வந்த செய்தி, உனக்கு வெட்கமில்லையானால் நீ நாடியதைச் செய்து கொள்!, என்பது தான், என்று நபி (ஸல்) கூறியுள்ளார்க்ள.  (புகாரி- 3484)

எனவே வெட்க உணர்வின் மீதான கவனக் குவிப்பு என்பது இன்றோ, நேற்றோ தோன்றிய ஒரு விஷயமன்று. தொன்றுதொட்டு  வாழையடி வாழையாக இறைத்தூதர்கள் மூலம் வலியுறுத்தப்பட்ட அழகிய பண்பியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் வெட்க உணர்வு...

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ ؕ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا‏

நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்களுடைய நபி விருந்துக்காக அழைத்திருந்தபோதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள். அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப் பட்டால்தான் உள்ளே செல்லவும். தவிர, நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளிப்பட்டு விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமானதன்று. அன்றி, அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்: "நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்." ஷுஅபா(ரஹ்) இதே போன்ற நபிமொழியை அறிவித்துவிட்டு, "நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்" என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள். (நூல்:புஹாரி,எண் 3562)

நபித்தோழர்களின் வெட்க உணர்வு...

وَعَنْ عَبْدِ اللَّهِ بنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ، وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الحَيَاءِ؛ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «دَعْهُ، فَإِنَّ الـحَيَاءَ مِنَ الإِيمَانِ»

"அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி,எண் 24.)

ஸலஃபுஸ் ஸாலிஹீன்களிடம் காணப்பட்ட வெட்க உணர்வு...

قال ابو علي الدقاق: جاءت امراة فسألت حاتما عن سألة فاتفق أنه خرج منها صوت في تلك الحالة فخجلت فقال حاتم ارفعي صوتك فأوهمها أنه أصم فسرت بذلك وقالت إنه لم يسمع الصوت فسرت بذلك ولقب بحاتم الصم وهذا التغافل هو نصف الفُتوَّة

مدارج السالكين ص/344 و ج/2

இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் அபூ அலீ அத்துகாக் (ரஹ்) என்பவரின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்.

பல்க் தேசத்தின் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மிகப் பெரும் அறிஞரான அபூஅப்துர் ரஹ்மான் இப்னு உல்வான் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் குறித்து அபூ அலீ அத்துகாக் (ரஹ்) அவர்களைச் சந்திக்க வந்த ஒருவர் அபூஅப்துர் ரஹ்மான் இப்னு உல்வான் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் கேட்கும் திறன் பெற்றவராக இருந்தும் அவர்களின் பெயருடன் அஸம்மு ( செவிடர் ) என்று இணைத்து அழைக்கப் படுகின்றதே “அவர்களுக்கு எப்படி அஸம்மு எனப் பெயரிட்டது? என்று கேட்டார்.

அதற்கு, அபூ அலீ (ரஹ்) அவர்கள் “ஒரு முறை ஒரு பெண்மணி ஹாத்தமுல் அஸம்மு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைச் சந்தித்து மார்க்க சம்பந்தமான கேள்வி கேட்க வந்தார்.

இமாம் அவர்கள் ஏதோ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இமாம் அவர்களுக்கு சற்று தொலைவில் திரை மறைவில் நின்று கொண்டிருந்த அப்பெண்மணி தம் சந்தேகத்தைக் கேட்டார். இந்நிலையில், அப்பெண்மனிக்கு வாயுத் தொல்லையின் காரணமாக சப்தமாக காற்றுப் பிரிந்தது.

இதைக் கொஞ்சமும் எதிர்பாராத அப்பெண்மனி வெட்கத்தால் நாணிப் போனார். அந்தப் பெண்மனியின் வெட்கத்தை உணர்ந்த இமாம் அவர்கள் “என்னம்மா கேள்வி கேட்டாய்? எனக்கு காது கேட்காது. கொஞ்சம் சப்தமாகக் கூறு” என்றார்கள்.

இமாம் அவர்கள் இப்படிக் கூறியதும் தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, மனதில் மகிழ்ச்சியோடு நல்ல நேரம் இமாம் அவர்களுக்கு காது கேட்கவில்லை என்று பூரிப்படைந்து தம் சந்தேகத்திற்கான விடையைப் பெற்று சென்று விட்டார்.

இதற்குப் பிறகு இமாம் அவர்கள் யார் அவர்களிடம் கேள்வி கேட்க, அல்லது பேச வந்தாலும் கொஞ்சம் சப்தமாக கூறுங்கள்! எனக்கு காது கேட்காது என்று கூறுவார்கள்.

நாளடைவில் இமாம் அவர்களுக்கு காது கேட்காது எனும் செய்தி தேசம் முழுவதும் பரவி ஹாத்தம் என்று அழைக்கப்பட்ட இமாம் அவர்கள் ஹாத்தமுல் அஸம்மு என்று அழைக்கப்படலானார்கள்” என்று கூறினார்கள்.

இப்னு முலக்கின் (ரஹ்) அவர்களின் இன்னொரு அறிவிப்பின் படி “ஹாத்தம் (ரஹ்) அவர்கள் அப்பெண்மணி மரணிக்கும் வரை காது கேட்காதவரைப் போன்றே இருந்து விட்டு, பின்னர் தனக்கு காது கேட்கும் என்றும் மேற்கூறிய காரணத்தால் தான் இது வரை காது கேட்காதவரைப் போன்று நான் இருந்தேன் என்றும் எனக்கு காது கேட்கும் விபரம் அப்பெண்மணிக்கு தெரிந்தால் அவரின் மனம் மிகப்பெரிய அளவில் வருந்தும் என்பதால் நான் அஸம்மு என்று அழைப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

( நூல்: மதாரிஜுஸ் ஸாலிக்கீன் லிஇமாமி இப்னுல் கய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்), தபகாத்துல் அவ்லியா லிஇமாமி இப்னுல் முலக்கின் (ரஹ்) …. )

நபி (ஸல்) அவர்களிடத்திலும், ஸஹாபாக்களிடத்திலும், ஸலஃபுகளிடத்திலும், மேன்மக்களிடத்திலும் இறையச்சமும் இருந்தது அதோடு வெட்கமும் இருந்தது. அதனால்தான் அவர்களால் வாய்மையிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கமுடிந்தது.

வெட்க உணர்வால் என்ன பெற்று விட முடியும்?

1. வெட்கம் நல்லதை மட்டுமே கொண்டு வரும்...

عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «الـحَيَاءُ خَيْرٌ كُلُّهُ» قَالَ: أَوْ قَالَ: «الـحَيَاءُ كُلُّهُ خَيْرٌ» 

வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டு வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 6117

2. வெட்கம்  காரியங்களை அழகாக்கும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கெட்ட வார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப்படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அந்தப் பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி 1897

3. வெட்கம் ஒருவரின் தீனை முழுமை படுத்தும்....

عَنْ قُرَّةَ - ابنِ إِيَاسٍ رَضِيَ اللَّهُ عَنهُ - قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم، فَذُكِرَ عِنْدَهُ الحَيَاءُ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، الحَيَاءُ مِنَ الدِّينِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «بَل هُوَ الدِّينُ كُلُّهُ»  

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் ஒரு சபையில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! வெட்கம் தீனில் கட்டுப்பட்டதா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் "மார்க்கத்தின் முழுமையே தீன் தான்" என்று கூறினார்கள்.

வெட்கம் என்பது மக்களுக்கு மத்தியில் இருக்கும்பொழுது மட்டும் இருப்பதல்ல. தான் தனிமையில் இருக்கும்போதும் தன்னுடைய இறைவன் உடன் இருக்கிறான் என்ற எண்ணத்துடன் அந்த நினைவை மனதில் கொண்டு அந்த தனிமையிலும் வெட்கத்துடன் இருக்க வேண்டும். 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «الـحَيَاءُ وَالإِيمَانُ قُرِنَا جَمِيعًا، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الآخَرُ» 

"ஈமானும், வெட்கமும்  ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இவற்றில் ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று இருக்காது" என எச்சரிக்கை செய்தார்கள்.

வெட்கம் ஒருவனிடம் இல்லாமல் போய்விட்டால் அவனது வாழ்வு உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது தான். அதனால் தான் ‘அவன் விரும்பியதை செய்து கொள்ளட்டும்’ என முன்னர் சென்ற இறைத்தூதர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.

4.வெட்கம் ஒருவருக்கு சுவனத்தைப் பெற்றுத் தரும்....

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் சஹாபாக்களிடம் மறுமையில் நடக்கவிருக்கும் சம்பவம் குறித்து சொன்னார்கள்:-

நாளை மறுமையில் ஒரு கூட்டம் எல்லோரையும் போன்று கப்ரில் இருந்து எழுப்பப்படுவார்கள். அவர்களுக்கு பறவைகளுக்கு இருப்பதை போன்று இறக்கைகள் இருக்கும்.அவர்கள் பறந்து  சொர்க்கம் சென்று  அதனுடைய இன்ப வாழ்க்கை அனுபவிப்பர். அவர்களை சந்தித்து மலக்குகள் வியப்புடன் கேட்பார்கள். விசாரணை-சிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் நடப்பது, நரகத்தை பார்ப்பது இவை எல்லாம் உங்களுக்கு இல்லையா?அம்மக்கள் நாங்கள் எதையும் பார்க்கவில்லை"  என்று சொல்வார்கள்.  நீங்கள் எந்த நபியின் உம்மத் என்று வானவர்கள் கேட்க, அதற்கவர்கள் நாங்கள் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் சமுதாயம் என்று கூறுவார்கள்.  நீங்கள் உலகில் செய்த அமல்கள் யாவை? என்று வானவர்கள் வினவியதற்கு  எங்களிடம் இரு பண்புகள் இருந்தது அதைக்கொண்டும்,  அல்லாஹ்வின் அருளாலும் நாங்கள் இந்த அந்தஸ்தை பெற்றோம். என்று கூறி ஒன்று, நாங்கள் தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்தோம். எனவே, பாவம் செய்ய வெட்கப்பட்டோம் பயந்தோம்,  இரண்டு, உலகில் அல்லாஹ் எங்களுக்கு செய்த பங்கீட்டை பொருந்திக்கொண்டோம் என்று சொல்வார்கள்." ( நூல்:  இஹ்யா உலூமுத்தீன் 4ம் பாகம் )

5. வெட்கம் நபி (ஸல்) அவர்களின் துஆவைப் பெற்றுத் தரும்...

قال جعفر الصائغ: كان في جيران أبي عبد الله أحمد بن حنبل رجل ممَّن يمارِس المعاصي والقاذورات، فجاء يومًا إلى مجلس أحمد يُسَلِّمُ عليه، فكأنَّ أحمد لم يَرُدَّ عليه ردًّا تامًّا وانقبض منه، فقال له: يا أبا عبد الله، لِمَ تنقبض مني؟! فإني قد انتقلت عمَّا كنتُ تعهدني برؤيا رأيتها. قال: وأي شيء رأيت؟ قال: رأيت النبي صلى الله عليه وسلم في النوم كأنه على علوٍّ من الأرض، وناس كثير أسفل جلوس. قال: فيقوم رجل رجل منهم إليه، فيقول: ادع لي. فيدعو له، حتى لم يبقَ من القوم غيري.

قال: فأردت أن أقوم، فاستحيت من قبيح ما كنت عليه، قال لي: "يا فلان، لِمَ لا تقوم إلي فتَسْأَلْني أدعو لك؟" قال: قلت: يا رسول الله، يقطعني الحياء لقبيح ما أنا عليه. فقال: "إن كان يقطعك الحياء فقم فسلني أدعُ لك، فإنك لا تسبُّ أحدًا من أصحابي". قال: فقمت، فدعا لي، فانتبهت وقد بَغَّضَ اللهُ إليَّ ما كنت عليه. قال: فقال لنا أبو عبد الله: يا جعفر، يا فلان حدثوا بهذا واحفظوه؛ فإنه ينفع[ابن قدامة المقدسي: التوابين] 

ஜஅஃபருஸ் ஸாயிGHக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் அண்டை வீட்டார் ஒருவர் பாவச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவராக இருந்தார்.

ஒரு நாள் அவர் இமாம் அவர்களின் சபைக்கு வருகை தந்து ஸலாம் கூறினார். இமாமவர்கள் அதற்கு முழுமையான முறையில் பதில் கூறாமல் கண்டும் காணாததைப் போல் இருந்தார்கள்.

அப்போது அவர் இமாம் அவர்களே! ஏன் என்னைக் கண்டு முகம் திருப்பிக் கொண்டீர்கள்? நான் நேற்று இரவு கண்ட ஒரு கனவு குறித்து விளக்கம் கேட்கவே வந்தேன் என்று கூறினார்.

அதற்கு இமாமவர்கள் என்ன கனவு கண்டீர்? சொல்லுங்கள் என்றார்கள்.

அப்போது அவர் "நான் பெருமானார் ஸல் அவர்களை கனவில் கண்டேன். உயர்ந்த ஒரு இடத்தில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு கீழே பல மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். 

அவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து தங்களுக்காக துஆ செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். நபி ஸல் அவர்களும் அவர்களில் ஒவ்வொருவருக்கும் துஆச் செய்தார்கள்.

நான் மட்டுமே நபி ஸல் அவர்களிடம் துஆ செய்யுமாறு வேண்டிக் கொள்ள வில்லை. எனக்கும் துஆ செய்ய சொல்ல ஆசையாக இருந்தது. எனினும், நான் என்னுடைய கெட்ட நிலைகளை நினைத்து வெட்கப்பட்டேன். 

அப்போது, நபி ஸல் அவர்கள் ஓ இன்னவரே! என்று என்னை அழைத்து சபையில் இருந்த எல்லோரும் எழுந்து என்னருகே வந்து தங்களுக்காக துஆச் செய்ய சொன்னது போல ஏன் நீரும் என்னிடம் வேண்டிக் கொள்ள வில்லை. என்று கேட்டார்கள். 

"அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் துஆச் செய்ய சொல்வதை விட்டும் என் நிலை என்னை தடுத்து விட்டது" என்றேன். அப்போது நபி ஸல் அவர்கள் என்னிடம் "என்னருகே எழுந்து வருவீராக! என்னிடம் துஆச் செய்யுமாறு கோருவீராக! உமக்காக நான் துஆ செய்வேன். ஏனெனில் நீர் என் தோழர்கள் எவரையும் திட்டாதவராக இருக்கின்றீர்! என்று கூறினார்கள்.

பின்னர் நான் நபி ஸல் அவர்களின் அருகே சென்று என் நிலை மாற துஆச் செய்யுமாறு வேண்டிக் கொண்டேன். நபி ஸல் அவர்கள் எனக்காக துஆ செய்தார்கள்.

அல்லாஹ் அந்த துஆவின் காரணமாக என் கெட்ட சுபாவங்களை மாற்றியமைத்து விட்டான்" என்பதை நான் இப்போது உணர்கிறேன்" என்று அந்த மனிதர் கூறினார். ‌

இந்த செய்தியை அறிவிக்கின்ற இமாம் ஜஅஃபருஸ் ஸாயிGHக் (ரஹ்)

அவர்கள் கூறுகிறார்கள்:- அப்போது இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் என்னையும், அவரையும் அருகில் அழைத்தார்கள். அந்த மனிதரிடம் "நீர் கண்ட கனவை அவரிடம் அறிவியுங்கள்" என்றார்கள். என்னிடம் "அவர் சொல்லும் செய்தியை பதிவு செய்யுங்கள்! நிச்சயமாக அது (இந்த உம்மத்திற்கு) பயன் தரும்!" என்று கூறினார்கள். ( நூல்: அத் தவ்வாபீன் லி இமாமி இப்னு குதாமா அல் முகத்தஸீ (ரஹ்). )

6. வெட்க உணர்வு பாவம் செய்வதை தடுக்கும்.

ذهب أبو سفيان بن حرب ومعه بعض القرشيين إلى الشام للتجارة، فأرسل إليهم هرقل ملك الروم يطلب حضورهم، فلما جاءوا إليه قال لهم : أيكم أقرب نسبا بهذا الرجل الذي يزعم أنه نبي ؟

فقال أبو سفيان : أنا أقربهم نسبا، فقال هرقل : أدنوه مني واجعلوا أصحابه خلفه، ثم قال لهم : إني سائل هذا الرجل، فإن كذبني فكذبوه، فقال أبو سفيان : لولا الحياء أن يروا عليَّ كذبا لكذبت . فأخذ هرقل يسأله عن صفات النبي ونسبه وأصحابه وأبو سفيان لا يقول إلا صدقا حياء .

அபூசுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்னர் ஒரு முறை ஷாமுக்கு வியாபார விஷயமாக குறைஷிகள் சிலருடன் பயணமானார். ரோம் மன்னர் ஹிர்கல் அபூசுஃப்யானை தம்மை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

அழைப்பின் பேரில் ஹிர்கல் மன்னரை சந்திக்க அபூசுஃப்யான் தம் வியாபார குழுவுடன் சென்றார்.

மன்னரை சந்திக்க அரண்மனையில் காத்திருந்த நேரத்தில் மன்னர் ஹிர்கல் வருகை தந்து "அபூசுஃப்யானையும், வியாபார குழுவினரையும் தம் அருகே வருமாறு கூறினார். மற்ற வியாபார குழுவினர் பின்னால் நிற்க அபூசுஃப்யான் முன்னால் நின்றார்.

அப்போது, மன்னர் "தம்மை நபி என்று சொல்கிற உங்கள் ஊரின் அந்த மனிதருக்கு உங்களில் குடும்ப உறவால் மிகவும் நெருக்கமானவர் யார்? என்று கேட்டார்.

அப்போது, அபூசுஃப்யான் "இங்கு நிற்பவர்களில் நானே அவருக்கு குடும்ப உறவால் மிகவும் நெருக்கமானவன்" என்றார்.

அபூசுஃப்யானை தம் அருகே நெருங்கி வருமாறு கூறிய மன்னர், நெருங்கி வந்து நின்ற அபூசுஃப்யானிடம் "தம்மை நபி என்று சொல்லும் அவர் குறித்து நான் உங்களிடம் கேட்கப் போகிறேன். அவர் குறித்து உண்மையான செய்தியை எனக்கு சொல்ல வேண்டும். அவர் குறித்து பொய்யான தகவல்களை யாரேனும் கூறினால் அவர் பொய் சொல்லும் மனிதர் என்று நான் உலகிற்கு பிரகடனப்படுத்தி விடுவேன்" என்றார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த நிகழ்வை நினைவு கூறிய அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் "வெட்க உணர்வு மட்டும் எனக்கு இல்லையானால் நபி ஸல் அவர்கள் குறித்து நான் பொய்யாக தகவல்களை கூறியிருப்பேன். எனினும் பொய்யாக கூற நபி (ஸல்) அவர்கள் குறித்து எதுவும் இல்லை. ஆனாலும் நான் நபி ஸல் அவர்கள் குறித்து உண்மையையே கூறினேன்" என்று கூறினார்கள்.

மேலும், மார்க்கத்தை கற்பது, கற்றுக் கொண்ட கல்வியின் அடிப்படையில் செயல்படுவது, கற்றுக் கொண்ட மார்க்க விழுமியங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வது நீங்கலாக,மற்ற அனைத்திற்கும் வெட்கப்பட வேண்டும். இத்தகைய வெட்க உணர்வும் இறையச்சமும் தான் நம்மை பக்குவப்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

மார்க்க விவகாரங்களில்  வெட்கப்பட கூடாது....

வெட்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு மேற்கூறிய செய்திகளே போதுமானதாகும். இனி வெட்கப்படக்கூடாதவைகளைப் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.சத்தியத்தைச் சொல்ல வெட்கப்படக் கூடாது...

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏

(அல்குர்ஆன் 15:94).

اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ؕ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ۚ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ؕ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏

கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக்கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். நம்பிக்கை கொண்டோர் “இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் “இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?” என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை.

(அல்குர்ஆன் 2:26)

மேற்சொன்ன வசனத்தில் இறைவன் கொசுவையோ அதைவிட அற்பமானதேயோ உதாரணம் கூறுவதற்கு வெட்கப்படமாட்டான் என்று சொல்வதிலிருந்தே இறைவன் சத்தியத்தை எடுத்துரைக்க தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டான் என்பதை விளங்கிக் கொள்ளமுடிகிறது. 

எனவே நாமும் சத்தியத்தை, உண்மையைச் சொல்வதற்கு ஏன் பயப்படவேண்டும்? வெட்கப்படவேண்டும்? எனவே வெட்கப்படக்கூடாது. இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு சொன்னதைப் போன்று ஏவப்பட்டதை உடைத்துப் பேசிவிட வேண்டும்.

2. மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள வெட்கப் படக்கூடாது...

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ قَالَ : أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ : حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ

جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَأَتِ الْمَاءَ فَغَطَّتْ أُمُّ سَلَمَةَ – تَعْنِي وَجْهَهَا – وَقَالَتْ يَا رَسُولَ اللهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ قَالَ نَعَمْ تَرِبَتْ يَمِينُكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا.

(அபூதல்ஹா ரலி அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ரலிரி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம்! உறங்கி விழித்ததும் தன் மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான் (வெட்கத்தினால்) எனது முகத்தை மூடிக் கொண்டு, “பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?” என்று கேட்டார்கள்.

அறி: உம்மு சலமா (ரலி), நூல்: புகாரி  , 282, 3328, 

3. மார்க்க சபைகளில் அமர வெட்கப்படக் கூடாது...

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّ أَبَا مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا ، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ : أَلاَ أُخْبِرُكُمْ ، عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللهِ فَآوَاهُ اللَّهُ ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ.

அபூவாகித் (அல்ஹாரிஸ் பின் மாலிரிக் அல்லைஸீலிரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப் படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப் படுத்திவிட்டான். அறி: அபூவாக்கித் (ரலி), ( நூல்: முஸ்லிம் 4389 ).

ஒருவர் தனது திறமையைக் காட்ட வேண்டிய அல்லது தன்னை நிரூபிக்க வேண்டிய தருணத்தை வாய்ப்பைப் பயன்படுத்தாமல் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல. வாய்ப்பு நம்மைத் தேடிவரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்பவனே உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியும். எனவே வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு முஃமினுக்கு வெட்கம் தடைக்கல்லாக இருக்கவே கூடாது.அதே நேரத்தில் கிடைத்த அல்லது கிடைக்க இருக்கிற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மற்றவர்களிடம் நற்சான்று வாங்கிய நபித்தோழர்களும் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் நம்மால் ஹதீஸ்களில் காணமுடிகிறது.

4. வாய்ப்புகளை பயன் படுத்த வெட்கப்படக் கூடாது.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْعَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللهِ أَخْبِرْنَا بِهَا ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை “நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்” என்றார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

( நூல்: புகாரி )

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ أَبِي بِشْرٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

، قَالَ : كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ فَقَالَ بَعْضُهُمْ لِمَ تُدْخِلُ هَذَا الْفَتَى مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ قَالَ فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِيمَعَهُمْ قَالَ وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلاَّ لِيُرِيَهُمْ مِنِّي فَقَالَ مَا تَقُولُونَ {إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ} حَتَّى خَتَمَ السُّورَةَ فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا وَقَالَ بَعْضُهُمْ لاَ نَدْرِي ، أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا فَقَالَ لِي يَا ابْنَ عَبَّاسٍ أَكَذَاكَ تَقُولُ قُلْتُ : لاَ قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَعْلَمَهُ اللَّهُ لَهُ {إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ} فَتْحُ مَكَّةَ فَذَاكَ عَلاَمَةُ أَجَلِكَ {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} قَال عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَعْلَمُ.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், “எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன்.

(அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி….. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)” என்னும் (திருக்குர்ஆனின் 110வது “அந்நஸ்ர்’) அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டி, “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், “நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினர். சிலர், “எங்களுக்குத் தெரியாது” என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை.

பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், “இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து’ என்பதில் உள்ள “வெற்றி’ என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்’ என்பதே இதன் கருத்தாகும்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள். அறி: இப்னு அப்பாஸ் (ரலி), ( நூல்: புகாரி )

5. மார்க்கக் கல்வி பயில வெட்கப்படக் கூடாது.

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى – وَهَذَا حَدِيثُهُ – حَدَّثَنَا هِشَامٌ عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ قَالَ – وَلاَ أَعْلَمُهُ إِلاَّ عَنْ أَبِى بُرْدَةَ – عَنْ أَبِى مُوسَى قَالَ

اخْتَلَفَ فِى ذَلِكَ رَهْطٌ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّونَ لاَ يَجِبُ الْغُسْلُ إِلاَّ مِنَ الدَّفْقِ أَوْ مِنَ الْمَاءِ. وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ. قَالَ قَالَ أَبُو مُوسَى فَأَنَا أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ. فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ فَأُذِنَ لِى فَقُلْتُ لَهَا يَا أُمَّاهْ – أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ – إِنِّى أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَىْءٍ وَإِنِّى أَسْتَحْيِيكِ. فَقَالَتْ لاَ تَسْتَحْيِى أَنْ تَسْأَلَنِى عَمَّا كُنْتَ سَائِلاً عَنْهُ أُمَّكَ الَّتِى وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ. قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ ».

அபூமூஸல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் ஒரு குழுவினர் இ(ரு குறிகளும் சந்தித்துக்கொண்டால் குளியல் கடமையாகுமா, அல்லது விந்து வெளிப்பட்டால்தான் குளியல் கடமையாகுமா என்ப)து குறித்துக் கருத்து வேறுபாடு (கொண்டு விவாதித்துக்) கொண்டனர். அன்சாரிகள், ” “விந்து வெளியானால்தான்’ அல்லது “துள்ளல் இருந்தால்தான்’ குளியல் கடமையாகும்” என்று கூறினர். முஹாஜிர்கள், “இல்லை, (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும். (விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே!)” என்று கூறினர். உடனே நான், “இப்பிரச்சினைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ” “அன்னையே!’ அல்லது “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே!’ நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால், தங்களிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. நானும் உங்கள் தாயார்தாம்” என்றார்கள். நான், “குளியல் எதனால் கடமையாகும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: சரியான ஆளிடம்தான் நீர் வந்திருக்கிறீர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறி: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),( நூல்: முஸ்லிம் )

ஆகவே, வெட்கத்துடன் நடக்க வேண்டிய இடங்களில் வெட்கத்துடனும் வெட்கப்படக்கூடாத இடங்களில் துணிவுடனும் வெட்கப்படாமலும் நடந்து கொள்வோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் இறைத் தண்டனையில் இருந்து காத்தருளும் வெட்க உணர்வை வழங்கியருள்வானாக!

ஈருலக வெற்றிக்கு தடைக்கல்லாக அமையும் வெட்க உணர்விலிருந்தும் காத்தருள்வானாக!!

ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


Saturday, 9 July 2022

தடம் மாறாத வாழ்க்கை! அதுவே தடம் பதித்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை!! ( ஈதுல் அள்ஹா பேருரை)

 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

துல்ஹஜ் பிறை: 09
09/07/2022, சனிக்கிழமை

தடம் மாறாத வாழ்க்கை! அதுவே தடம் பதித்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை!! ( ஈதுல் அள்ஹா பேருரை)

மனிதர்களாகப் பிறந்த அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் தடுமாற்றம் என்பது நிகழக் கூடிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அத்தகைய தடுமாற்றமான சூழலில் ஒரு இறைநம்பிக்கையாளனாய் நாம் நன்கு நிதானமாக நடக்க கடமைப் பட்டுள்ளோம்.

தடுமாற்றங்களின் போது நாம் நிதானமாக நடக்க தவறி விட்டால் தடம் மாறும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

இத்தகைய தடுமாற்றமான சூழல் இஸ்லாமிய கொள்கை சார்ந்த விஷயங்களிலோ, வணக்க வழிபாடுகள் சார்ந்த விஷயங்களிலோ, ஷரீஆவின் படி நடக்க வேண்டிய காரியங்களிலோ ஏற்படுமானால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் அவைகளை அணுக வேண்டும். அப்படி இல்லாது போனால் நம்முடைய நிலை அவ்வளவு தான்.

ஈமானை இழந்து, அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகி நரகின் அதள பாதாளத்திற்குள் வீசப்பட்டு விடுவோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் தடுமாற்றங்களின் போது தடம் மாறாமல் வாழ தௌஃபீக் செய்வானாக!

எத் தலைமுறைக்கும் முன்மாதிரியாய் வாழ்ந்து தடம் பதித்து செல்லும் மேன்மக்களில் ஒருவராக உங்களையும் என்னையும் வல்ல ரஹ்மான் ஆக்கியருள்வானாக!!

தடுமாறும் போது தடம் மாறுபவர்கள் குறித்து அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை மிகவும் அபாயகரமானது. அவர்களுக்கு நேறும் முடிவு மிகவும் ஆபத்தானது.

فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ

அவர்கள் தடம் புரண்ட போது அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தடம் புரளச் செய்து விட்டான். ( அல்குர்ஆன்: 61: 5 )

சத்தியத்தை விட்டு நாமாகத் தடம் புரண்டு விட்டால், அல்லாஹ்வே நம்முடைய உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடுவான் என்றும், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு காரியத்திலும் தடம் புரண்டு விட்டால் தடம் தெரியாமல் அழிந்து விடுவோம் என்றும் இறைவன் பகிரங்க எச்சரிக்கை செய்கின்றான்.

இன்ஷா அல்லாஹ், எதிர் வரும் காலங்களில், எல்லாக் காரியங்களிலும் நம்மை நாம் சீர்த்திருத்திக் கொண்டு தடுமாற்றம் ஏற்படும்போது, இறைவனின் கட்டளைகளை ஆழமாகப் பற்றிப் பிடித்தவர்களாக, தடுமாற்றத்தைத் தடம் தெரியாமல் அழித்து விடுவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக! ஆமீன்! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!

பலவீனமான மனிதர்களாகிய நாம் எந்தச் சூழலில் தடுமாற்றம் ஏற்படுகின்றதோ அந்தச் சூழலில் சுதாரித்து, நிதானித்து இறைவனுக்குப் பயந்து தடுமாற்றத்தைத் தவிடு பொடியாக்கக்கூடிய ஒரு உபாயத்தை கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இன்று ஈதுல் அள்ஹா தியாகத் திருநாள் இந்த நாளின் கதாநாயகர்கள் இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், அன்னை ஹாஜர் அலைஹஸ்ஸலாம், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்.

இம் மூன்று மேன்மக்களும் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணத்தில் தடுமாறும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.

தடம் மாறாமல் உறுதியான ஒரு நிலைப்பாட்டில் இருந்தபடியால் அல்லாஹ் அவர்களின் வாழ்வை தடம் பதித்தவர்களின் வாழ்வாக கபூல் செய்தான்.

அவர்கள் அன்று தடம் பதிக்க வில்லை என்றால் இன்று நமக்கு ஈதும் இல்லை. உள்ஹிய்யாவும் இல்லை.

அன்னை ஹாஜர் அலைஹஸ்ஸலாம்...

1000 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து ஷாமில் இருந்து அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத, இதற்கு முன் யாரும் வசித்ததற்கான எந்த தடயமும் இல்லாத அன்றைய மக்காவின் பாலைவன பகுதியில் தமது வயது முதிர்ந்த மனைவி ஹாஜரையும், அழுது மன்றாடி தவமிருந்து பெற்ற பச்சிளங்குழந்தையான இஸ்மாயீலையும் விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் செல்கின்ற கணவர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த செயல் அன்னை ஹாஜரின் மனதை ஒரு உலுக்கு உலுக்கியது. பதறித்தான் போனார்கள் அன்னை ஹாஜர் அவர்கள்.

கணவரே! என்று அழைக்கிறார்கள். இந்த அழைப்பு மூன்றாம் முறையைக் கடக்கிறது.

அன்னை ஹாஜர் தடுமாற்றம் தரும் அந்தச் சூழலில் இருந்து தம்மை உடனடியாக விடுவித்து, விரைந்து செல்லும் கணவரை நோக்கி உரத்த குரலில்

فقالت له : آلله أمرك بهذا؟ قال : نعم . قالت : إذا لا يضيعنا ، 

“அல்லாஹ் தான் உங்களுக்கு   இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க,  அவர்கள் ஆம்  என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர்  (அலை) அவர்கள், “அப்படியென்றால்  அவன் ஒரு போதும் எங்களைக்  கைவிடமாட்டான்” என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். 

நம் குடும்பச் சூழலோடு இந்த நிகழ்வைப் பொருத்திப் பார்ப்போம்.

நமது மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையுடன் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தில் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். திடீரென்று வாகனம் பழுதாகி நின்று விடுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத இடம், நடுநிசி நேரம் தூரத்தில் எங்கோ நாய்கள் குறைத்துக் கொண்டிருக்கும் சப்தம்.

கொஞ்சம் இந்த இடத்திலேயே காத்திரு! அருகில் ஏதாவது ஊர் இருக்கிறதா? என பார்த்து வருகிறேன். என சொல்லி விடுவோமோ? நாம்.

சொன்னதும் கேட்டு விட்டு நம் மனைவி தான் அங்கு நின்று விடுவாரா?

நம் மனம் எப்படி பதை பதைக்கும்?

ஆனால், தடுமாற்றம் தந்த அந்த சூழ்நிலையில் கூட அவர்கள் நாவிலிருந்து வெளிவந்த வார்த்தை அவர்களின் ஈமானிய தரத்தை உணர்த்துவதாக அமைந்தது.

ஆதலால் தான் அல்லாஹ் அன்னை ஹாஜர் அலை தண்ணீர் தேடி ஓடிய தடங்களை அவனின் மன்னிப்பையும் அருளையும் தேடி (ஸயீ) ஓடக் கூடியவர்களாக நம்மை ஆக்கியிருக்கிறான்.

இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்...

பச்சிளம் பாலகராய் விட்டுச் சென்ற இஸ்மாயீல் அலை இப்போது ஓடியாடி விளையாடும் பதின்ம வயதை தொட்டு நிற்கிற பருவத்தில் தாம் விட்டுச் சென்ற தமது மனைவியையும் மகனையும் பார்க்க ஷாமில் இருந்துவருகை தந்தார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

இப்போதும் இறைவனின் ஒரு கட்டளையைச் சுமந்தே வந்திருந்தார்கள். அந்த இறை கட்டளை கனவு வடிவத்தில் அமைந்திருந்தது.

மனைவி மகனோடு அளவளாவி விட்டு மனைவியை அழைத்து தாம் கண்ட கனவை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்ல, ஹாஜர் அலை அவர்கள் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியவர் நான் அல்லவே? என கூறி வளர்ந்து நிற்கும் தமது அருந்தவப்புதல்வன் இஸ்மாயீல் அலை அவர்களை நோக்கி கை காட்டினார்கள்.

அடுத்து நடந்த நிகழ்வை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

يقولُ
 ‏أهلُ العلمِ بالسِيَرِ أنّ إبراهيمَ لمّا أرادَ ذَبْحَ وَلَدِهِ قالَ لَهُ: ‏‏{إنْطلِقْ فَنُقَرّبْ قُرباناً إلى اللهِ عزَّ وجلَّ} فَأَخَذَ سِكّيناً ‏وحَبْلاً ثُمّ انطَلَقَ مَعَ ابْنِهِ حتّى إذا ذَهَبَا بَينَ الجبالِ قالَ لَهُ ‏إسماعيلُ: "يا أَبَتِ أينَ قُربانُكَ"

فَقَالَ: {يا بُنيَّ إنّي رأيتُ في المنامِ أنّي أذْبَحُكَ} فَقَالَ لَهُ: ‏‏"أُشْدُدْ رِباطِي حتّى لا أضّطَرِبَ واكْفُفْ عني ثِيابَكَ ‏حتّى لا يَنْتَضِحَ عليْكَ من دَمِي فَتَراهُ أُمّي فَتَحْزَنْ وأَسْرِعْ ‏مرَّ السّكِينِ على حَلْقِي لِيَكُونَ أَهْوَنَ لِلْمَوْتِ عَلَيَّ فإذا ‏أتيتَ أُمّي فاقْرَأْ عَلَيْها السّلامَ مِنّي

 فَأَقْبَلَ عَلَيْهِ إبراهيمُ ‏يُقَبّلُهُ ويبْكي ويَقُولُ: "نِعْمَ العونُ أنتَ يا بُنيّ على أمرِ اللهِ ‏عزَّ وجلَّ".

தமது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் மகனே! நான் அல்லாஹ்விற்காக குர்பானி ஒன்றை கொடுக்கப் போகின்றேன் நீயும் என்னோடு வர வேண்டும் என்று கூறி, அவரைத் தம்மோடு அழைத்துக் கொண்டு, கையில் ஒரு கத்தியும், கயிறும் சகிதமாக அருகில் இருந்த மலைக்குன்றுக்குச் சென்றார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

மலைக் குன்றின் உச்சியை அடைந்ததும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தந்தையிடம் “குர்பானி எங்கே?” என்று கேட்டார்கள்.

அப்போது, இப்ராஹீம் (அலை) அவர்கள் “மகனே! கனவில் உம்மை அறுப்பது போல் கண்டேன். அது குறித்து உமது அபிப்பிராயம் தான் என்ன என்பதைச் சொல்!” என்றார்கள்.

அதற்கு, இஸ்மாயீல் (அலை) 
அவர்கள் 
يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
“என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டுள்ளதோ அதைச் செய்து விடுங்கள்! அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்” என்று கூறிவிட்டு,

என் தந்தையே! நான் விரண்டோடாமல் இருக்க என்னைக் கயிற்றால் கட்டிப் போடுங்கள். என் உதிரம் உங்கள் ஆடையில் தெறிக்காமல் இருக்க உங்கள் ஆடையை உயர்த்திக் கட்டிக் கொள்ளுங்கள். உதிரம் தோய்ந்த ஆடையோடு நீங்கள் வீட்டிற்குச் சென்று அந்த ஆடையை என் தாய் பார்த்தார்கள் எனில் மனமுடைந்து போய் விடுவார். என் கழுத்தில் கத்தியை வைத்து விரைவாக அறுத்து விடுங்கள்! நீங்கள் வீட்டிற்குச் சென்றதும் என் தாயாரிடம் நான் ஸலாம் சொன்னதாக சொல்லி விடுங்கள்!” என்று கூறினார்.

இதனைக் கேட்ட இப்ராஹீம் கலீலுல்லாஹ் அவர்கள் தமதருமை மகனாரை ஆரத்தழுவி முத்தமிட்டவாரே “என் அன்பு மகனே! அல்லாஹ்வின் கட்டளையை நான் ஏற்று நடப்பதற்கு மிக உயர்ந்த அளவிலே நீ உதவியிருக்கிறாய்!” என்று பெருமிதத்தோடு கூறினார்கள்.

எப்படியான சூழல் அது. வாழ்வைத் துவங்கியிருக்கிற, பதின்ம வயதை தொட்டு நிற்கிற இளஞ்சிறாரான இஸ்மாயீலை அழைத்துச் சொன்ன அந்த தருணம் தடுமாற்றம் தரும் தருணமே!

ஆனால், அவரின் வாயில் இருந்து வந்த வார்த்தை தான் எவ்வளவு வலிமையான வார்த்தைகள்?!!

يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
“என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டுள்ளதோ அதைச் செய்து விடுங்கள்! அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்”.

முன்பு மனைவி சொன்னார்:-

فقالت له : آلله أمرك بهذا؟ قال : نعم . قالت : إذا لا يضيعنا ، 
“அல்லாஹ் தான் உங்களுக்கு   இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க,  அவர்கள் ஆம்  என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர்  (அலை) அவர்கள், “அப்படியென்றால்  அவன் ஒரு போதும் எங்களைக்  கைவிட மாட்டான்”.

இப்போது மகன் சொல்கிறார்:-
يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
“என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டுள்ளதோ அதைச் செய்து விடுங்கள்! அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்”.

எங்கிருந்து இவர்கள் ஈமானில் இவ்வளவு உறுதியைப் பெற்றார்கள்.

அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் தம் கணவரிடம் இருந்தே இத்தகைய ஈமானிய உணர்வை, ஈமானிய உரத்தை, ஈமானிய உறுதியைப் பெற்றார்கள்.

ஆம்! கடந்த கால இப்ராஹீம் நபியின் வாழ்வே அவர்களின் முன்மாதிரியாகும்.

தந்தை கல்லெறிந்து கொல்வேன் என்றார். குடும்ப உறவுகளும் ஊர் மக்களும் பகமை பாராட்டி வெறுத்து ஒதுக்கினர். நாடாளும் மன்னனோ உயிரோடு கொளுத்துவேன் என்று சூளுரைத்தான்.

ஊரும் நாடும் நாட்டு மக்களும் ஒன்றிணைந்து மாதக்கணக்கில் உருவாக்கிய மகத்தான தீக்குண்டம் கண் முன்னால் காத்திருக்கிறது.

அஞ்சா நெஞ்சோடு, ஈமானிய உறுதியோடு சற்றும் தடுமாறாமல் ஏகத்துவத்தை அதே கம்பீரத்துடன் எடுத்தியம்பிக் கொண்டிருந்தார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

நாடும் நாட்டு மக்களும் ஆராவாரத்துடன் எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தீக்குண்டத்தில் போடப்படுகிறார்கள்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைத்த ரப்பிடம் உரிமையோடு இப்படிப் பிரார்த்தித்தார்களாம்.

عن أبي هريرة قال : قال صلى الله عليه وسلم


இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையில்! “யா அல்லாஹ் வணங்கப்படத் தகுதியானவன் வானத்தில் (உலகில்) நீ ஒருவனே! இந்தப் பூமியில் உன்னை வணங்கக் கூடியவன் (இன்றைய நிலையில்) நான் ஒருவனே! (எனவே என்னைக் காப்பாற்றுவாயாக) என்று பிரார்த்தித்தார்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்னத் ஆபூயஃலா


இஸ்லாமிய வாழ்வியலை நெறியாக ஏற்றுக் கொண்ட பின் எந்த தடுமாற்றம் ஏற்பட்டாலும் தடுமாறாமல் இருக்கும் ஒருவரின் வாழ்க்கை எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பம் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகும்.

இங்கே நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும் தந்தையின் நெருக்கத்தை பெற்றிராத, நேரடியாக தந்தையின் அரவணைப்பை அடைந்திடாத இஸ்மாயீல் (அலை) அவர்களை ஈமானிய வாழ்வில் மிளிர வைத்தவர்கள் தனியொரு பெண்ணாக அன்னை ஹாஜர் அலை அவர்களே!

தந்தை எப்படி இருப்பார்? தந்தை என்ன செய்வார்? அவரின் இறை நம்பிக்கை எப்படி இருக்கும்? என எதையும் அருகில் இருந்து அனுபவித்து உணராத இஸ்மாயீல் அலை அவர்கள் சொன்ன பதில் தான் எவ்வளவு மதிப்பு மிக்கது!!?

இங்கே நாம் குடும்பமாகத் தான் வாழ்கிறோம். ஆனால்,  ஒருங்கிணைந்த இஸ்லாமிய குடும்பமாக வாழ்கின்றோமா? என்றால்?

இங்கு கேள்வி மட்டுமே மிஞ்சும்.

கணவர் தொழுகிறார். மனைவி மக்கள் தொழுவதில்லை. கணவன் மனைவி தொழுகின்றனர் பெற்றெடுத்த மக்கள் தொழுவதில்லை.

மக்கள் தொழுகின்றனர். கணவன் மனைவி தொழுவதில்லை. அல்லது மனைவி மட்டுமே தொழுகிறார் கணவனும் பெற்றெடுத்த மக்களும் தொழுவதே இல்லை.

இப்படியாக ஷரீஆவின் ஒவ்வொரு அம்சங்களிலும் நாம் கோட்டை விட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எப்போது நாம் ஒருங்கிணைந்த இஸ்லாமிய குடும்பமாக, இப்ராஹீம் நபியின் குடும்பம் போன்று வாழ்கின்றோமோ அப்போது தான் நாம் கொடுக்கும் "குர்பானி" அர்த்தம் உடையதாய் அமையும்.

இந்த ஈதுல் அள்ஹா - தியாகத் திருநாள் நன்நாளில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய குடும்பம் அமைய சபதமேற்போம்!!

அல்லாஹ் நம் குடும்பத்தார்களை கபூல் செய்தருள்வானாக!!!

அனைவருக்கும் ஈதுல் அள்ஹா - தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

மஸாபீஹுல் மிஹ்ராப்
மௌலவி பஷீர் அஹமது உஸ்மானி.