Thursday, 21 March 2024

அல்லாஹ்விற்கு விருப்பமான பெயரே சிறந்த, அழகான பெயர்!!

 

தராவீஹ் சிந்தனை:- 12, சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 2.

அல்லாஹ்விற்கு விருப்பமான பெயரே சிறந்த, அழகான பெயர்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் பதினோராம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 12 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நேற்றிலிருந்து   நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்க்க வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய அமர்வில் "பெயர் சூட்டுவதில் சிறந்த பெயர் எது? என்பது தொடர்பாகவும், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான பெயர் எது? " என்பது தொடர்பாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

«خيرُ الأسماءِ عبدُ اللهِ وعبدُ الرَّحمنِ» (السلسلة الصحيحة [2/573]).

"பெயர்களில் சிறந்த பெயர் அப்துல்லாஹ் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஸ் - ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா )

இன்னொரு அறிவிப்பில்...

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ زِيَادٍ سَبَلَانَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ تَعَالَى عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ .ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4300

உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ( நூல்: அபூதாவூத் 4300 )

இன்னொரு அறிவிப்பில்...

وَأَخْبَرَنِي ابْنُ لَهِيعةَ، عَنْ […] أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كانَ يَقُولُ: إِنَّ أَحْسَنَ الْأَسْماءِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَعُبَيْدُ اللَّهِ، وَشَرَّها حَرْبٌ وَمُرّةُ، وَأَصْدَقَ الْأَسْماءِ الْحارِثُ وَهَمّامٌ.

பெயர்களில் மிகவும் அழகான பெயர் அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், உபைதுல்லாஹ் ஆகும். பெயர்களில் கெட்ட பெயர் முர்ரா - கசப்பு, ஹர்ப் - சண்டை, போர் ஆகும். பெயர்களில் மிகவும் வாய்மையானது ஹாரிஸ், ஹமாம் ஆகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். 

சிறந்த பெயர், அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர், அழகான பெயர் என்ற இந்த மூன்று சிறப்பம்சங்களை அப்துல்லாஹ் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகிய பெயர்கள் உள்ளடக்கியுள்ளன.

இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட 17 -ம் அத்தியாயமான அல் இஸ்ராஃ -வின் 110 –வது வசனம் இறக்கியருளப்பட்டதன் பிண்ணனி மிகவும் கவனத்திற்குரிய ஒன்றாகும்.

பெயர் சூட்டுதல் தொடர்பான ஒரு நிகழ்வின் மூலம் இந்த வசனம் இறக்கியருளப்பட்டது. ரஹ்மான் என்பது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகும் என்று பறை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சாற்றினான். பின்னால் அந்த சம்பவம் விவரிக்கப்படுகிறது. 

குழந்தை பிறந்தவுடன் அடுத்ததாக அக்குழந்தைக்கு ஒரு நல்லப் பெயர் சூட்ட வேண்டும் என்று  நாம் ஆசைப்படுகின்றோம். 

அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அக்குழந்தைத் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குப் பெயர் சூட்டுகிறோம். 

ஆனாலும் பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை வைக்க வேண்டும் என்ற நோக்கில்  மோசமானப் பெயர்ளை சூட்டிவிடுகிறார்கள்.

இன்னும் பலர் தங்கள் பகுதியில் அல்லது தான் அறிந்த வகையில் யாரும் வைக்காத பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பெயரின் ஓசைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் அதன் பொருளை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.

அழகிய பெயரை ஏன் சூட்ட வேண்டும்?

حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏دَاوُدُ بْنُ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي زَكَرِيَّا الْخُزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ ‏

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ தர்தா (ரலி),(:நூல் : அஹ்மத் )

وعن بريدة:- أن النبي ﷺ كان لا يتطير من شيء، وكان إذا بعث عاملاً سأل عن اسمه، فإذا أعجبه اسمه فرح به، ورؤي بشر ذلك في وجهه، وإن كان كره اسمه رؤي كراهية ذلك في وجهه , رواه أبو داود:3920، وصححه الألباني السلسلة الصحيحة

நபி (ஸல்) அவர்கள் எதற்கும் சகுணம் பார்த்ததில்லை. (ஜகாத் வசூலிப்பதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம் அடைவார்கள். அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும். அவர்கள் ஓரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும். அறிவிப்பாளர் : புரைதா (ரலி),

( நூல் : அபூ தாவூத் )

عن أبي شُرَيْح هانىء الحارثي الصحابي رضي اللّه عنه؛ أنه لما وَفَدَ إلى رسول اللّه صلى اللّه عليه وسلم مع قومه سمعهم يُكنّونه بأبي الحكم، فدعاه رسول اللّه صلى اللّه عليه وسلم فقال‏:‏ ‏"‏إنَّ اللَّهَ هُوَ الحَكَمُ وَإِلَيْهِ الحُكْمُ فَلِمَ تُكَنَّى أبا الحَكَمِ‏؟‏‏"‏ فقال‏:‏ إن قومي إذا اختلفوا في شيء أتوني فحكمتُ بينَهم، فرضي كِلا الفريقين، فقال رسول اللّه صلى اللّه عليه وسلم‏:‏‏"‏ مَا أحْسَنَ هَذَا، فَمَا لَكَ منَ الوَلَدِ‏؟‏‏"‏ قال‏:‏ لي شُريح، ومُسلم، وعبدُ اللّه، قال‏:‏ ‏"‏فَمَنْ أَكْبَرُهُمْ‏؟‏‏"‏ قلت‏:‏ شريحُ، قال‏:‏ ‏"‏فأنْتَ أبُو شُرَيْحٍ‏"‏‏.‏

மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானமிக்கவன் எனக் குறிப்புப் பெயர்வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்துகொள்வார்கள். (ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்புவழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள். அவர் ஷரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு ஷுரைஹ் என்று கூறினார். அப்படியானால் நீர் அபூ ஷுரைஹ் (ஷுரைஹின் தந்தை) எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள். ( நூல் : நஸயீ 5292 )

பெருமானார் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தவறான, தீய, கெட்ட பெயர்களை மாற்ற நேரிடும் போது மிக அதிகமாக அப்துல்லாஹ் என்றும், அதற்கடுத்து அப்துர்ரஹ்மான் என்றும் அதற்குப் பிறகு சில பெயர்களையும் சூட்டியுள்ளதாக வரலாற்றில் காண முடிகிறது.

وَحَدَّثَنِي ابْنُ سَمْعانَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، أَنَّ رَسُولَ اللَّهِ عَلَيْهِ السَّلامُ قالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ ابْنِ سَلُولَ: ما اسْمُكَ؟ فَقالَ: حُبابٌ. فَقالَ رَسُولُ اللَّهِ عَلَيْهِ السَّلامُ: إِنَّ حُبابًا اسْمُ شَيْطانٍ، وَلَكِنِ اسْمُكَ عَبْدُ اللَّهِ.

 

நயவஞ்சகர்களில் தலைவனாக செயல் பட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் தம் மகனுக்கு ஹுபாப் என்று பெயர் சூட்டி இருந்தார். 

அவன் நல்லவனாக இருந்த துவக்க காலத்தில் தமது மகனை நபி ஸல் அவர்களிடம் அழைத்து வந்த போது, நபி ஸல் அவர்கள் அந்த சிறுவரிடம் "உமது பெயர் என்ன?" என்று கேட்டார்கள். சிறுவர், ஹுபாப் என்றார்.

அப்போது, பெருமானார் (ஸல்)  அவர்கள் "ஹுபாப் என்பது ஷைத்தானின் பெயராகும். உம்முடைய பெயர் அப்துல்லாஹ் ஆகும் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

وَأَخْبَرَنِي الْقاسِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عُمارةَ بْنِ غَزِيّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ حَبّانَ: أَنَّ رَسُولَ اللَّهِ عَلَيْهِ السَّلامُ قالَ يَوْمَ بَدْرٍ: اشْتَدُّوا عَلَيَّ. فَقامَ الْحُبابُ بْنُ الْمُنْذِرِ الْأَنْصارِيُّ فَقالَ: يا رَسُولَ اللَّهِ، أَوْلَى بِبَدْرٍ عِلْمًا. قالَ: مَنْ أَنْتَ؟ قالَ: أَنا الْحُبابُ بْنُ الْمُنْذِرِ. قالَ: اسْمُكَ الْحُبابُ، إِنَّما الْحُبابُ شَيْطانٌ، أَنْتَ عَبْدُ اللَّهِ.

பத்ர் யுத்த களத்திற்கு தயாராகும் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் பத்ர் குறித்து ஏதோ கூற, மாநபி ஸல் அவர்களின் மனங்கவரும் விதமாக ஒரு நபித்தோழர் பதில் கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், "நீர் யார்?" எனக் கேட்க, அதற்கவர் "நான் ஹுபாப் இப்னு முன்திர் என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் "ஹுபாப் என்பது ஷைத்தானின் பெயராகும். உம்முடைய பெயர் அப்துல்லாஹ் ஆகும் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

وَأَخْبَرَنِي ابْنُ لَهِيعةَ، قالَ: لَمّا وَفَدَ بَنُو الشَّيْطانِ بْنِ الْحارِثِ بْنِ مُعاوِيةَ عَلَى رَسُولِ اللَّهِ عَلَيْهِ السَّلامُ سَأَلَهُمْ: مَنْ أَنْتُمْ؟ فَقالُوا: نَحْنُ بَنُو الشَّيْطانِ. قالَ: بَلْ أَنْتُمْ بَنُو عَبْدِ اللَّهِ.

பனூ ஷைத்தான் எனும் கோத்திரத்தார்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வந்த போது, அவர்கள் யார் என்று? நபி ஸல் அவர்கள் நபித்தோழர்களிடம் விசாரிக்கச் சொல்ல, விசாரித்து வந்த நபித்தோழர்கள் "அவர்கள் பனூ ஷைத்தான்" கோத்திரத்தார்களாம் என்று கூற, இல்லை "அவர்கள் பனூ அப்துல்லாஹ்" என்று மாநபி ஸல் அவர்கள் பெயரிட்டார்கள்.

وَأَخْبَرَنِي ابْنُ لَهِيعةَ، عَنْ أَبِي قَبِيلٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي غِفارٍ حَدَّثَهُ: أَنَّ أُمَّهُ جاءَتْ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ عَلَيْهِ السَّلامُ وَعَلَيْهِ تَمِيمةٌ، فَقَطَعَ رَسُولُ اللَّهِ عَلَيْهِ السَّلامُ تَمِيمَتَهُ، وَقالَ: ما اسْمُ ابْنُكِ؟ فَقالَتِ: اسْمُهُ السّائِبُ. قالَ رَسُولُ اللَّهِ عَلَيْهِ السَّلامُ: بَلِ اسْمُهُ عَبْدُ اللَّهِ. فَقُلْتُ: أَتُجِيبُ بِكُلِّهِما؟ قالَ: لا واللَّهِ ما كُنْتُ أُجِيبُ إِلّا عَلَى اسْمِ رَسُولِ اللَّهِ عَلَيْهِ السَّلامُ الَّذِي سَمّانِي.

பனூ ஃகிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தமது கையில் குழந்தையுடன் வந்தார். அந்த குழந்தைக்கு பனிகால குல்லா போட்டிருந்தார். அதை அகற்றி அந்த குழந்தையின் முகத்தை பார்த்த நபி (ஸல்) அவர்கள் குழந்தையின் பெயர் என்ன என்று கேட்க, ஸாயிப் என்று அந்த தாயார் கூறினார்கள்.

 

அப்போது, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள்.

பின்னாளில் இதை அவர் மக்களிடம் சொன்ன போது, மக்கள் உம்மை இரண்டு பெயரையும் கூறி அழைக்கவா? என்று கேட்டனர்.

அதற்கவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் என்ன பெயர் சூட்டி என்னை அழைத்தார்களோ, அதை கூறி நீங்கள் அழைப்பதையே நான் விரும்புகிறேன்" என்றார்கள்.

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنِي يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ خَيْثَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ اسْمُ أَبِي فِي الْجَاهِلِيَّةِ عَزِيزًا، فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ

என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் அஸீஸ்” (யாவற்றையும் மிகைப்பவன்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் அப்துர் ரஹ்மான்” (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயர் சூட்டினார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி),

அபூபக்ர் (ரலி) அவர்களும் அப்து அம்ர் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். வியாபார விஷயமாக அப்து அம்ர் யமனுக்குச் சென்றிருந்தார்.

இந்த வேளையில் தான் அண்ணலார் ஏகத்துவ வசந்தத்தை ஏந்தி வந்திருக்கிற இறைத்தூதர் என தங்களைப் பிரகடனப்படுத்தினார்கள்.

அன்னை கதீஜா (ரலி), அலீ (ரலி), அபூபக்ர் (ரலி), ஜைத் (ரலி) இவர்களொடு நபிகளாரின் மூன்று பெண்மக்களும் ஏகத்துவ வசந்தத்தில் தங்களை இணைத்திருந்த தருணம் அது.

 

لقد أسلم في وقت مبكر جدا..

بل أسلم في الساعات الأولى للدعوة، وقبل أن يدخل رسول الله دار الأرقم ويتخذها مقرا لالتقائه بأصحابه المؤمنين.. فهو أحد الثمانية الذن سبقوا الى الاسلام..

عرض عليه أبوبكر الاسلام

யமனில் இருந்து திரும்பிய அப்து அம்ர், நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களை சந்தித்து தான் ஊரில் இல்லாத போது நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சின் ஊடாக அண்ணலார் பற்றிய பேச்சு வரவே அத்தோடு பேச்சை நிறுத்தி விட்டு நேராக அப்து அம்ரை நபி {ஸல்} அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் மார்க்கம், வேத வெளிப்பாடு, ஓரிறைக் கொள்கை என ஏகத்துவத்தின் உண்மை முகத்தை அப்து அம்ருக்கு அண்ணலார் விளக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

அண்ணலார் பேசி முடித்ததும் அவர்களின் கரம் பற்றி கலிமா ஷஹாதா கூறி எட்டாவது நபராக தம்மை இணைத்துக் கொண்டார் அப்து அம்ர்.

 

அப்து அம்ர் - அம்ரின் அடிமை இது இஸ்லாமிய நாகரீகத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பெயர் என்று கூறிய அண்ணலார் அப்துர்ரஹ்மான் ரஹ்மானின் அடிமை என்று பெயர் சூட்டினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏகத்துவ வெளிச்சம் மக்காவின் பெருவெளியில் பரவத் தொடங்கிய போது அப்துர்ரஹ்மான் அவர்களின் பெயரும், அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் எனும் செய்தியும் பரவத்தொடங்கியது.

அன்று மிகப்பிரபல்யமாக இருந்த பெரும் வியாபாரிகளில், செல்வந்தர்களில் அப்துர்ரஹ்மான் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அப்து அம்ரும் ஒருவர்.

எப்படி தூதுத்துவத்தை கேள்விக்குரியாக்கினார்களோ, விவாதப் பொருளாக ஆக்கினார்களோ அதே போன்று அப்துர்ரஹ்மான் அவர்களின் பெயரையும் விவாதப் பொருளாக மாற்றினர் குறைஷிகள்.

அப்துர்ரஹ்மான் இது அன்று வரை குறைஷிகளால் அறியப்படாத பெயர். அப்துல் கஅபா, என்றும் அப்துல் உஸ்ஸா என்றும் அப்து அம்ர் என்றும் பெயர் சூட்டி அழைத்துப் பழகியவர்கள் அவர்கள். அபூபக்ர் அவர்களின் பெயர் கூட அப்துல் கஅபா என்று தான் இருந்தது நபி {ஸல்} அவர்கள் தான் அப்துல்லாஹ் என்று மாற்றினார்கள்.

قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا‏

நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றனஎன்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக. ( அல்குர்ஆன்: 17: 110 )

விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அல்லாஹ் அல் இஸ்ராஃ அத்தியாயத்தின் 110 –வது வசனத்தை இறக்கியருளி ரஹ்மான் என்பது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகும் என்று பறை சாற்றினான்.

அல்லாஹ் விரும்பும் அழகிய, சிறந்த பெயர்களை சூட்டுவோம்!!

Wednesday, 20 March 2024

குறைவாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்யும் அமலே சிறந்தது!!

 

தராவீஹ் சிந்தனை:- 11. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 1.

குறைவாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்யும் அமலே சிறந்தது!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் பத்தாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, 11 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

ரஹ்மத்தினுடைய முதல் பத்தை நிறைவு செய்து மஃக்ஃபிரத்துடைய பத்தின் துவக்க நாளில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவன் ரஹ்மத் செய்த மேன்மக்களில் ஒருவராக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக! அவனுடைய மகத்தான மன்னிப்பை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக் கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் கடந்த ஒன்பது அமர்வுகளில் "உங்களில் சிறந்தவர்" எனும் தலைப்பின் கீழ் தொடராக சுமார் 12 சிறந்த நற்குணங்களை கொண்ட சிறந்த மனிதர்கள் குறித்து நபி மொழி மற்றும் வரலாற்று நிகழ்வுகள் ஊடாக நாம் பேசியும் கேட்டும் வந்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! இன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களின் அமர்வில்  நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் இன்றைய அமர்வில் "எந்த ஒரு காரியத்தையும் நிரந்தரமாக செய்வதே சிறந்தது" என்பது தொடர்பாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

حَدَّثَنَا ‏ ‏الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ لَهِيعَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏اكْلَفُوا مِنْ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ خَيْرَ الْعَمَلِ أَدْوَمُهُ وَإِنْ قَلَّ ‏

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஓ மக்களே! உங்கள் சக்திக்கு உட்பட்டதையே  செய்து வாருங்கள்! ஏனெனில், நிச்சயமாக! அமல்களில் சிறந்தது கொஞ்சமாக இருந்தாலும்  நிரந்தரமாகச் செய்து வருவதேயாகும்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.   ( நூல்: இப்னு மாஜா )

இன்னொரு அறிவிப்பில், "அல்லாஹ்விற்கு விருப்பமான செயல் என்பதாக" கூறப்படுகிறது.

ولما سئل النبي صلى الله عليه وسلم أن الأعمال أحب إلى الله ، قال : أدومه وإن قل ) .

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான அமல்கள் எது?" என்று கேட்கப்பட்டதற்கு, "குறைவாக செய்தாலும் நிரந்தரமாக செய்யும் நல்ல அமல்களே!" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஒரு காரியத்தில் நாம் நிரந்தரமாய் இருப்பதற்கு இஸ்லாமிய வழக்கொழியில் இஸ்திகாமத்என்று சொல்லப்படுவது போன்றே தவாம், அத்வம் என்றம் சொல்லப்படும். இது அனைத்துவிதமான காரியங்களுக்கும் மிக அவசியமானதாகும்.

ஒருவர் ஒரு காரியத்தை அவ்வப்போதோ அல்லது நினைத்த நேரத்திலோ செய்வதற்கும், அதே காரியத்தை நிரந்தரமாகச் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. 

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதை விடாமல் நிரந்தரமாகத் தொடர்ந்து செய்யவேண்டும். 

உலகக் காரியங்களில் கூட ஒரு காரியத்தை விடாமல் தொடர்ந்து செய்பவருக்குத்தான் மதிப்பும், மரியாதையும் அதிகம்.

மனிதர்களில் தூயவர்களான நபிமார்களை அல்லாஹ் அமல்களில் நிரந்தரமாக ஈடுபடுமாறு வலியுறுத்துகின்றான்‌.

وقد توجَّه الخطاب إلى صفوة البشر من الأنبياء والرسل بالمداومة على العمل؛ كما قالى تعالى: ﴿ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ ﴾ [الحجر: 99]، وقال تعالى: ﴿ فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ ﴾ [الشرح: 7]، وقال تعالى: ﴿ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا ﴾ [مريم: 31].

நமது நபி (ஸல்) அவர்களை நோக்கி கூறும் போது...

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ

நீர் (அவர்களது பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْن

உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! ( அல்குர்ஆன்: 15: 98, 99 )

فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏

எனவே, (உமது வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. ( அல்குர்ஆன்: 94: 7 )

ஈஸா (அலை) அவர்கள் குறித்து...

وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا

மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 19: 31 )

மஆரிஜ் எனும் அத்தியாயத்தில் தொழுகையாளிகளின் மாண்புகள் குறித்து பேசும் போது....

إلا المصلين

சில தொழுகையாளிகளைத் தவிர என்று கூறி விட்டு 

அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை...

 الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ 

அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். 

دَآٮِٕمٌ

(தாயிம்) என்றால் நிலையான, நிரந்தரமான என்று பொருள்.

 دَائِمُونَ

(தாயிமூன்) என்றால் அந்த காரியத்தை நிலையாக நிரந்தரமாகச் செய்பவன் என்று பொருள்.

இந்த பொருளிலேயே...நல்லடியார்களுக்கு சுவனத்தின் உணவும் அதன் நிழலும் நிலையானது, நிரந்தரமானது என்பதைக் குறிப்பிடும்போது دَائِمُ என்ற சொல்லைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன்: 13:35)

பெருமானார் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களின் அமல்கள்....

قال رسول صلى الله عليه وسلم : ( أيها الناس عليكم من الأعمال ما تطيقون فإن الله لا يمل حتى تملوا ، وإن أحب الأعمال إلى الله ما دووم عليه وإن قل وكان آل محمد صلى الله عليه وسلم إذا عملوا عملاً ثبتوه ) أي داوموا عليه ، رواه مسلم .

மனிதர்களே! உங்களால் முடிந்த அளவு நல்ல அமல்களை செய்யுங்கள்! ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சடைவு அடைய மாட்டான். அல்லாஹ்விடம் அடியார்களின் அமல்களில் குறைவாக இருந்தாலும் நிரந்தரமாக செய்யும் அமல்களே மிகவும் பிரியமானதாகும். முஹம்மது நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் ஒரு அமலைச் செய்தார்கள் என்றால் அதை நிரந்தரமாக என்றென்றும் செய்து வருவார்கள் " என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

பெருமானார் (ஸல்) அவர்களைக் கண்ணால் கண்டு, கரம் பற்றி இறைநம்பிக்கை கொண்டு, அவர்களின் ஸுஹ்பத்தில் - தொடர்பில்  மிகவும் குறைவான காலமே  குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட 23 ஆண்டு காலத்திலும் சரி, அதற்கு பிந்தைய காலத்திலும் சரி வாழ்ந்த காலத்தில் அந்த உத்தமர்களில் பலர் தங்களுடைய அமல்களை நிரந்தரமாகக் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களை அல்லாஹ் அல்குர்ஆனில் அடையாளப் படுத்தும் போது சுமார் தொண்ணூறு இடங்களில் அவர்களின் ஈமானை உறுதி செய்து கூறுகின்றான்.

பல இடங்களில் அல்லாஹ் அவர்களை நம்பிக்கையாளர்களே என நேரடியாகவே அழைக்கின்றான்.

மற்றும் பல இடங்களில் அவர்களை நம்பிக்கையாளர்கள் என்று சான்று பகர்கின்றான். ( பார்க்க:- 3:121, 124, 164, 171, 179, – 4: 84, 95, 115, – 8: 17, 62, 64,65 – 9: 26, 72, 79, 107, 128, – 15: 88, – 24: 30….)

அப்படி என்றால் அவர்களின் அமல்களின் கனத்தை நாம் என்னவென்று சொல்வது?

حدثنا وكيع عن شعبة عن الحكم عن عبد الرحمن بن أبي ليلى عن علي أن فاطمة اشتكت إلى النبي صلى الله عليه وسلم يدها من العجين والرحى ، قال : فقدم على النبي صلى الله عليه وسلم سبي فأتته تسأله خادما فلم تجده ووجدت عائشة فأخبرتها ، قال علي : فجاءنا بعدما أخذنا مضاجعنا فذهبنا نتقدم فقال : مكانكما ، قال : فجاء فجلس بيني وبينها حتى وجدت برد قدمه فقال : ألا أدلكما على ما هو خير لكما من خادم : تسبحانه ثلاثا وثلاثين وتحمدانه ثلاثا وثلاثين وتكبرانه ثلاثا وثلاثين .

في رواية: أن عليا قال: "فما تركتها بعد"، فقالوا له: ولا ليلة صفين، قال: ولا ليلة صفين" [رواه البخاري: 5362، وأحمد: 5362].

وهذا الرجل الذي قال له ذلك جاء في رواية: أنه ابن الكواء.

ابن الكواء يقول لعلي: ولا ليلة صفين؟ فقال: قاتلكم الله يا أهل العراق، نعم ولا ليلة صفين" [رواه أحمد: 838، وقال محققو المسند: "إسناده حسن"].

அலீ இப்னு அபீ தாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்.(என் துணைவியர்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார்.இது தொடர்பாக நபியவர் களிடம் தெரிவிக்கும் படி கூறினேன். எனவே,ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள்.ஆனால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்போது வீட்டில் இல்லாததால் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் அது பற்றிக் கூறி (விட்டுத் திரும்பலா)னார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் விஷயத்தை தெரிவித்தார்கள்.உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றிருந்தோம் (அவர் களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன்.உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,' (எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்தார்கள்.அப்போது (என்னைத் தொட்டுக் கொண்டிருந்த) அவர்களின் பாதங்களின் குளிர்ச்சியை என்னுடைய நெஞ்சின் மீது உணர்ந்தேன்.(அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.)'பணியாளரை விட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?நீங்கள் இருவரும் 'படுக்கைக்குச் சென்றதும்' அல்லது 'விரிப்புக்குச் சென்றதும்' அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும்,அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள்.இது பணியாளைவிட உங்கள் இரு வருக்கும் சிறந்ததாகும்.என்றார்கள்.(நூல் புகாரி-3705,முஸ்லிம் எண் -2727)

இன்னொரு அறிவிப்பில் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "இவ்வாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்ட தில்லை"என்று சொன்னார்கள்.அப்போது "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில் கூடவா?" என்று கேட்கப்பட்டது.அதற்கு அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,"ஸிஃப்பீன் போர் நடை பெற்ற இரவில் கூட இதை ஓதாமல் இருந்ததில்லை" என பதிலளித்தார்கள்.(நூல்,புகாரி,எண் -5362,முஸ்லிம், எண்-2727)

جاء في صحيح مسلم (728) من طريق دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ ، قَالَ : حَدَّثَنِي عَنْبَسَةُ بْنُ أَبِي سُفْيَانَ ، فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ بِحَدِيثٍ يَتَسَارُّ إِلَيْهِ ، قَالَ : سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ ، تَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ :   مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ ،  بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ  .

قَالَتْ أُمُّ حَبِيبَةَ : فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عَنْبَسَةُ :  فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ ، وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ : مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ ، وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ : مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ .

அந்நுஃமான் பின் ஸாலிம் அவர்கள் அம்ர் பின் அவ்ஸ் அவர்களை தொட்டும் கூறுகின்றார்.எனக்கு அன்பஸா பின் அபீ ஸுப்யான் அவர்கள் கூறினார்.இதை எனக்கு உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.அதில் நான் நபிகளார் கூறியதை கேட்டேன்.முஸ்லிமான ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக தினமும் பர்ழ் -கட்டாயம்- அல்லாத சுன்னத்தான தொழுகைகள் 12 ரக்அத்துக்கள் தொழுது வந்தால் அவருக்கு சுவனத்தில் ஒரு வீடு கட்டப் படும்என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவி உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்:1727).

உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்"நான் இதை நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து கேட்டது முதல் இச்செயலை நான் விட்டதேயில்லை.மேலும் அன்பஸா அவர்கள் கூறுகின்றார் நான் இதை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்களி டமிருந்து கேட்டது முதல் நான் இதை விட்டது கிடையாது என.

மேலும் அம்ர் பின் அவ்ஸ் அவர்கள் "நான் இதை அன்பஸா விடமிருந்து கேட்டது முதல் விட்டதே கிடையாது" என.

மேலும் அந்நுஃமான் பின் ஸாலிம் அவர்கள் குறிப்பிடுகின்றார் நான் இதை அம்ர்பின் அவ்ஸிடமிருந்து கேட்டது முதல் கைவிட் டதில்லை என.

عن عوف بن مالك الأشجعي رضي الله عنه قال: (كنا عند رسول الله صلى الله عليه وسلم تسعة أو ثمانية أو سبعة، فقال صلى الله عليه وسلم: ألا تبايعون رسول الله؟ وكنا حديث عهدٍ ببيعة، فقلنا: قد بايعناك يا رسول الله! فقال صلى الله عليه وسلم: ألا تبايعون رسول الله؟ قال: فبسطنا أيدينا وقلنا: قد بايعناك يا رسول الله! فعلام نبايعك؟ قال صلى الله عليه وسلم: على أن تعبدوا الله ولا تشركوا به شيئا، والصلوات الخمس، وتطيعوا، وأسرَّ كلمة خفية، ولا تسألوا الناس شيئا. قال عوف: فلقد رأيتُ بعض أولئك النفر يسقط سوط أحدهم، فما يسأل أحدا يناوله إياه) رواه مسلم. 

அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் உட்பட ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பது நபர்கள் நபி ஸல் அவர்களுடன்  அமர்ந்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் பைஅத் எடுக்க வில்லையா? என்று மூன்று முறை கேட்டார்கள். மூன்று முறையும் நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் பிரமாணம் செய்கிறோம் என்று கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்க கூடாது. ஐங்கால தொழுகைகளைத்  தொழ வேண்டும், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மேலும் எந்த ஒரு மனிதனிடத்திலும் எதையும் கேட்கவே கூடாது என்று பிரமாணம் வாங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கரங்களில் பிரமாணம் கொடுத்த அந்த மனிதர்களில் சிலரை நான் கண்டுள்ளேன் " அவர்களின் கரங்களில் இருந்து கீழே விழும் சாட்டையைக் கூட பிறரிடம் எடுத்து தாருங்கள் என்று கேட்டதில்லை" என்று ‌ ( நூல் முஸ்லிம் )

فعن عمر بن أبي سلمة رضي الله عنه قال: (كنت غلاماً في حجر النبي صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة، فقال النبي صلى الله عليه وسلم: يا غلام، سمِّ الله، وكل بيمينك، وكل مما يليك، فما زالت طعمتي بعد) رواه البخاري. قال ابن حجر: "أي لزمت ذلك وصار عادة لي .. وفيه منقبة لعمر بن أبي سلمة لامتثاله الأمر، ومواظبته على مقتضاه".

அம்ர் இப்னு அபூ ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் சிறுவனாக இருக்கும் போது நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்தேன். ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் கை தட்டில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடு! வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்பிருந்தே சாப்பிடு! என்றார்கள். அதன் பின்னர் ஒரு போதும் நான் அப்படி சாப்பிட்டதே இல்லை". ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைத்து அமல்களையும் நிரந்தரமாக, நிலையாக செய்ய அருள் புரிவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!