Saturday, 1 March 2025

இருள் அகற்றும் இறைமறை தராவீஹ் சிந்தனை - 2. வாக்குறுதியை நிறைவேற்றுவோம்!

 

இருள் அகற்றும் இறைமறை

தராவீஹ் சிந்தனை - 2.

வாக்குறுதியை நிறைவேற்றுவோம்!



இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்து, முதல் நாள் நோன்பை நிறைவு செய்து அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக! ஆமீன்!

அல்பகரா அத்தியாயம் ஹிஜ்ராவிற்குப் பின்னர் மதீனாவில் இறக்கியருளப்பட்ட ஓர் அத்தியாயமாகும். நேற்றும் இன்றும் ஓதி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஓதப்பட்ட ஒன்னேகால் ஜுஸ்வின் பெரும் பகுதி சட்டதிட்டங்கள் குறித்தானதாகும்.

வஸிய்யத் எனும் மரண சாஸனம், கிஸாஸ் எனும் பழிவாங்கல், நோன்பு, ஹஜ், உம்ரா, திருமணம், தலாக் - விவாகவிலக்கு, பால்குடி, வட்டி, வியாபாரம், கடன், போர், வீட்டின் ஒழுங்குகள், தர்மத்தின் வகைகள், சில நபிமார்களின் செய்திகள், அல்லாஹ்வின் தனித்துவமான தன்மைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து, இறைவனோடும், இறையடியார்களோடும் தொடர்பிலிருக்கிற சட்டங்கள் குறித்தும் அதிகம் அல்லாஹ் பேசுகின்றான்.

இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் துவக்கமாக ஓதப்பட்ட 177 வது வசனம் நன்மை என்றால் என்ன? என்ற கேள்விக்கு மிகவும் விரிவாக விடை தரும் முகமாக அமைந்துள்ளதை காண முடிகிறது.

நன்மை என்றால் எவையெல்லாம் அடங்கும் என்பதையும்  இந்த இறைவசனம் மிக அழகாக தெளிவுபடுத்திக்காட்டுகிறது.

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ

நன்மை என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு)நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (அல்குர்ஆன்: 2: 177 )

இந்த இறைவசனத்தில் ஈமான் கொள்வதில் ஆரம்பித்து, ஹுகூக்குல் இபாத் என்று சொல்லப்படுகிற அடியார்களுக்கு செய்யவேண்டிய கடமைகளையும்,ஹுகூக்குல்லாஹ் என்று சொல்லப்படுகிற இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகள் அத்துணையும் மொத்தமாக சேர்த்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு பெயர் தான் பி(B)ர் என்று சொல்லப்படுகிற நன்மையான காரியங்கள் ஆகும்.

நன்மை செய்வதால் கிடைக்கும் பலன் என்ன?

قال الله تبارك وتعالى: «وبشّر المحسنين»(سورة الحج، الآية : ٣٧ ) قال العلاّمة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:- « وبشّر المحسنين » بعبادة الله بأن يعبدوا الله كأنهم يرونه، فإن لم يصلوا إلى هذه الدرجة فليعبدوه معتقدين وقت عبادتهم اطّلاعه عليهم، ورؤيته إيّاهم

 والمحسنين لعباد الله بجميع وجوه الإحسان من نفع مال، أو علم، أو جاه، أو نصح، أو أمر بمعروف، أو نهي عن منكر، أو كلمة طيبة ونحو ذلك.

فالمحسنون لهم البشارة من الله بسعادة الدنيا والآخرة، وسيحسن الله إليهم كما أحسنوا في عبادته ولعباده، قال الله تعالى: « هل جزاء الإحسان إلا الإحسان »- سورة الرحمن،   الآية: ٦٠ -  « للذين أحسنوا الحسنى وزيادة » - سورة يونس، الآية: ٢٦ - }

[ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسعدي، ص - ٤٨٨ ]

وَبَشِّرِ الْمُحْسِنِينَ

நன்மை செய்வோருக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக!  

( அல்குர்ஆன்: 22: 37 )

அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள் இவ்வசனத்தை இவ்வாறு விளக்கப்படுத்துகின்றார்கள்:-

வணக்க வழிபாட்டை அல்லாஹ்வுக்கு நிறைவேற்றுவதுகொண்டு நன்மை செய்வோருக்கு (நபியே) நீங்கள் நன்மாராயம் கூறுங்கள்! அந்த வணக்கத்தை அவர்கள்  அல்லாஹ்வைப் பார்ப்பது போல  நிறைவேற்றுவார்கள்;  அந்நிலைக்கு அவர்கள்  செல்லவில்லை என்றால், தமது வணக்கத்தை நிறைவேற்றும் நேரத்தில் அல்லாஹ்வின் கண்காணிப்பும் அவனது பார்வையும் இருந்துகொண்டிருக்கிறது என்று உறுதிகொண்டவர்களாக அவனை அவர்கள் வணங்குவார்கள். 

அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்மை செய்வோராகவும் அவர்கள் இருப்பார்கள். பணம் மற்றும் பொருளுதவி, அல்லது கல்வி, அல்லது பட்டம் பதவி, அல்லது உபதேசம், அல்லது நன்மையை ஏவுதல், அல்லது தீமையைத் தடுத்தல், அல்லது அழகிய வார்த்தை போன்ற அனைத்து வகையான நன்மைகளையும் அவர்கள் செய்வார்கள்.

நன்மை செய்வோருக்கு அல்லாஹ்விடமிருந்து  ஈருலக நற்பாக்கியம் கிடைக்கின்றது. அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டிலும், அவனுடைய அடியார்கள் விடயத்திலும் அவர்கள் நன்மை செய்ததுபோல் அல்லாஹ்வும் அவர்களுக்கு (அதற்கான கூலியைக் கொடுத்து) உபகாரம் செய்வான். அல்லாஹ் கூறுகிறான்:

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

      நன்மைக்குக் கூலி நன்மையேயன்றி வேறென்னதான் இருக்கிறது?!”  

( அல்குர்ஆன்: 55: 60 )

لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ

"      நன்மை செய்தோருக்கு அழகான கூலியும், மேலதிகமும் இருக்கின்றது” ( அல்குர்ஆன்: 10: 26 )

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ، – يَعْنِي ابْنَ صَالِحٍ – عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَوَّاسِ بْنِ سِمْعَانَ قَالَ :‏ أَقَمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ سَنَةً مَا يَمْنَعُنِي مِنَ الْهِجْرَةِ إِلاَّ الْمَسْأَلَةُ كَانَ أَحَدُنَا إِذَا هَاجَرَ لَمْ يَسْأَلْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ – قَالَ – فَسَأَلْتُهُ عَنِ الْبِرِّ وَالإِثْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالإِثْمُ مَا حَاكَ فِي نَفْسِكَ وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ ‏”‏ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஓராண்டுக் காலம் (மட்டும்) தங்கியிருந்தேன். அவர்களிடம் கேள்வி கேட்டு விளக்கம் தெரிந்துகொள்வ(து இயலாமல் போய் விடுமோ என்ப)தே ஹிஜ்ரத் செய்(து மதீனாவில் வந்து நிரந்தரமாகக் குடியேறு)வதற்கு எனக்குத் தடையாக இருந்தது. (நபியவர்கள் வெளியூரிலிருந்து வருபவர்களின் ஐயங்களுக்கு விளக்கம் சொல்வதற்கு முன்னுரிமை அளித்து வந்தார்கள்) எங்களில் ஒருவர் ஹிஜ்ரத் செய்து(மதீனாவுக்கு வந்து குடியேறி)விட்டால், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதைப் பற்றியும் கேட்பதில்லை. நான் நபியவர்களிடம் நன்மையைப் பற்றியும் தீமையைப் பற்றியும் கேட்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நன்மை என்பது, நற்பண்பாகும். தீமை என்பது, எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்என்று விடையளித்தார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), ( நூல்: புகாரி )

வாக்குறுதியை நிறைவேற்றுவோம்!..

மேற்கூறிய இறைவசனம் மற்றும் நபிமொழியை கவனத்தில் கொண்டு "வாக்குறுதியை நிறைவேற்றுதல்" என்ற நற்பண்பு குறித்து இன்றைய தராவீஹ் சிந்தனையாக நாம் பார்க்க இருக்கிறோம்.

வாக்குறுதிகளை நிறை‌வேற்றுவது இறைவனின் பண்பாகும். மற்றும் அவனது தூதுவர்களின் பண்புகளில் ஒன்றாகும். 

لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَعْدَ اللَّهِ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ

யார் தம் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்காக கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை. ( அல்குர்ஆன்: 39: 20 )

இஸ்மாயீல் (அலை) அவர்களின் நற்பண்புகள் குறித்து இறைவன் பேசுகையில் அவர் வாக்கை காப்பாற்றுபவர்என்று குறிப்பிடுகின்றான்.

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا

”(நபியே) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக. திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்’. ( அல்குர்ஆன்: 19: 54 )

ஒரு மனிதன் நன்நடத்தைகளுக்குச் சொந்தமானவன் என்பதற்குப் பல பண்புகள் சான்று வழங்கினாலும், அனைத்திற்கும் முதன்மையானது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.

حدثنا محمد بن يحيى بن فارس النيسابوري، حدثنا محمد بن سنان، حدثنا إبراهيم بن طهمان، عن بديل، عن عبد الكريم بن عبد الله بن شقيق، عن أبيه، عن عبد الله بن أبي الحمساء، قال: بايعت النبي صلى الله عليه وسلم ببيع قبل أن يبعث وبقيت له بقية فوعدته أن آتيه بها في مكانه، فنسيت، ثم ذكرت بعد ثلاث، فجئت فإذا هو في مكانه، فقال: «يا فتى، لقد شققت علي، أنا هاهنا منذ ثلاث أنتظرك».

அப்துல்லாஹ் பின் அபூஹம்ஸா கூறுகிறார்: நபி அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பு நான் அவர்களிடம் ஒரு வியாபாரம் செய்தேன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை சிறிது இருந்தது. இங்கே நில்லுங்கள், நான் அதை கொண்டு வந்து தருகிறேன்என்றேன். நானும் மறந்து போய்விட்டேன். மூன்று நாட்கள் கழித்து ஞாபகம் வந்ததும் அங்கே சென்றேன். அதே இடத்தில் நபி அவர்கள் இருந்தார்கள். என்னைப் பார்த்த நபியவர்கள், ‘இளைஞனே, நீ எனக்கு சிரமம் தந்து விட்டாய். நான் உன்னை எதிர்பார்த்து இங்கேயே மூன்று நாட்கள் காத்திருக்கிறேன்என்றார்கள். ( நூல்: அபூதாவூத் )

 

روي أن رسول الله صلى الله عليه وسلم كان وعد أبا الهيثم بن التهيان خادماً؛ فأتى بثلاثة من السبى فأعطى اثنين وبقي واحداً، فأتت فاطمة رضي الله عنها تطلب منه خادماً وتقول: ألا ترى أثر الرحى بيدي؟ فذكر موعده لأبي الهيثم فجعل يقول " كيف بموعدي لأبي الهيثم؟ فآخثره به على فاطمة

பணிவிடைக்கு ஆள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்ட அபுல் ஹைம் (ரலி) அவர்களுக்கு நபி அவர்கள் ஒரு பணியாளரைத் தருவதாக வாக்களித்திருந்தார்கள். இதற்குப் பின் நபி அவர்களிடத்தில் மூன்று போர்க்கைதிகள் கொண்டு வரப்பட்டனர். இதனையறிந்து நபி அவர்களிடம் பணியாளர் ஒருவரைப்  பெற்றுச்  செல்லலாம் என்று பாத்திமா (ரலி) அவர்கள் வந்து தனது கரத்தை காட்டி எனது கரம் திருகை ஆட்டி காய்த்து போய்விட்டது. எனவே எனக்கு ஒரு பணியாளரை தாருங்கள் என்று நபியவர்களிடம் கேட்டபோது, அதற்கு நபி அவர்கள் அபுல் ஹைசமுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவு கூர்ந்துவிட்டு சொன்னார்கள்."நான் உனக்கு அந்த பணியாளரை கொடுத்து விட்டால் அபுல் ஹைஸமிற்கு நான் கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றுவது?" என்று கேட்டார்கள். பாத்திமா (ரலி) அவர்களை விட அபுல் ஹைஸம் ( ரலி) அவர்களுக்கு வழங்குவதையே நபி அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.  ( நூல். இஹ்யா )

وعن جابرٍ قَالَ: قَالَ لِيَ النَّبيُّ ﷺ: لَوْ قَدْ جاءَ مالُ الْبَحْرَيْن قد أَعْطَيْتُكَ هكَذا، وهكذا، وَهَكَذا، فَلَمْ يَجِئْ مالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النبيُّ ﷺ، فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْن أَمَرَ أبُو بَكْرٍ

فَنَادى: مَنْ كَانَ لَهُ عنْدَ رسول اللَّه ﷺ عِدَةٌ أوْ دَيْنٌ فَلْيَأْتِنَا، فَأتَيتُهُ وقُلْتُ لَهُ: إنَّ النَّبيَّ ﷺ قَالَ لي كَذَا وكَذَا، فَحثَى لي حَثْيَةً،

فَعَدَدْتُها فَإذا هِي خَمْسُمِئَةٍ، فَقَالَ لِي: خُذْ مِثْلَيْهَا. متفقٌ عَلَيْهِ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வாழும் போது பஹ்ரைனில் இருந்து பொருளாதாரம் வந்தால் நான் இன்னின்னவாறு உமக்கு தருவேன் என்று கூறினார்கள். ஆனால், மா நபி அவர்கள் வாழும் வரை பஹ்ரைனில் இருந்து எவ்வித செல்வமும் வரவில்லை.

நபி அவர்கள் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று விட்ட பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பஹ்ரைனின் கவர்னர் அலா இப்னு ஹழ்ரமீ (ரழி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்கர் (ரழி), “யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தரவேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், “எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்என்று கூறினேன். – “இப்படிக் கூறும் போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர் (ரலி) அவர்கள் மூன்று முறை விரித்துக் காட்டினார்கள்என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ (ரஹ்) கூறினார்கள் , அபூபக்கர் (ரழி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள். ( நூல்: புகாரி )

قال حذيفة بن اليمان: "ما منعني أن أَشهَد بدرًا إلا أني خرجتُ أنا وأَبي حُسَيل، قال: فأخذَنا كفارُ قريش، قالوا: إنكم تُريدون محمدًا، فقلنا: ما نريده، ما نريد إلا المدينة، فأخذوا منَّا عهدَ الله وميثاقَه لننصرفَنَّ إلى المدينة، ولا نُقاتِل معه، فأتينا رسولَ الله صلى الله عليه وسلم فأخبرْناه الخبرَ، فقال: ((انصرِفا، نَفِي لهم بعهدهم، ونستعين الله عليهم

ஹுதைஃபா பின் அல்யமான் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நான் பத்ருப் போரில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷிக் காபிர்கள் எங்களைப் பிடித்துக் கொண்டனர். நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும், அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாதுஎன அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்என்று சொன்னார்கள். ( நூல்' முஸ்லிம் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் மேன்மக்களில் ஒருவராய் நம்மை ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Wednesday, 26 February 2025

இருள் அகற்றும் இறைமறை தராவீஹ் சிந்தனை - 1. رحم الله امير المؤمنين عمر بن الخطاب அல்லாஹ்! அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக!!!

 

இருள் அகற்றும் இறைமறை

தராவீஹ் சிந்தனை - 1.

رحم الله امير المؤمنين عمر بن الخطاب

அல்லாஹ்! அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக!!!


முதல் நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு முதல் நோன்புக்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ரமழானின் 30 நாட்கள், நோன்பையும், இதர வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கல் இன்றி உடல் ஆரோக்கியத்துடன், மன நிறிவோடு, இன்பத்தோடு பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல்குர்ஆனின் பெரிய அத்தியாயமான, வரிசைப்படி இரண்டாவதாக இடம் பெற்றுள்ள அத்தியாயமான 286 வசனங்களைக் கொண்ட, இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் அமுதவாயால் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிற அல் பகரா அத்தியாயத்தின் 176 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும்  முதலாவது நாள் தராவீஹ் தொழுகையின் பின்னால் ஒட்டு மொத்த உம்மத்தும் அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களுக்காக துஆச் செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம்.

ஆம்! 1400 ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் மேற்கொண்ட மிகப்பெரிய முயற்சியால் தான் அழகிய முறையில் இன்று அல்குர்ஆன் வசனங்களை தராவீஹ் தொழுகையில் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ் ஒருவர் ஓதி  அதை செவிமடுத்துக் கேட்டு இன்புறும் பாக்கியத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தாராகிய  நமக்கு வழங்கியிருக்கின்றான்.

ஆம்! 20 ரக்அத்துகளின் வாயிலாக ஹாஃபிழ்களின் தலைமையின் கீழ் தராவீஹ் தொழுகையை இந்த உம்மத்திற்கு முதன் முதலாக வடிவமைத்து தந்தவர்கள் அமீருல் முஃமினீன் ஸைய்யிதுனா உமருப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் ஆவார்கள்.

இதற்காக மாத்திரமல்ல இன்னும் ஒரு காரியத்திற்காகவும் நாம் உமர் ரலி அவர்களுக்காக துஆச் செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

ஆம்! இன்று மிக எளிதாக நம் கையில் நூல் வடிவில் அல்குர்ஆன் வந்து சேர்ந்ததற்கும் உமர் ரலி அவர்களே முதன்மைக் காரணம்.

அல்குர்ஆனை நூல் வடிவில் ஒன்று திரட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக கலீஃபா அபூபக்ர் ரலி அவர்களிடம் முன் வைத்தவர்கள் உமர் ரலி அவர்களே!.

யாஅல்லாஹ்! அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக!!!

 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنْ الَّتِي يَقُومُونَ يُرِيدُ آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ (بخاري) بَاب فَضْلِ مَنْ قَامَ رَمَضَانَ- كِتَاب صَلَاةِ التَّرَاوِيحِ

அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்காரீ ரழி கூறினார்கள் நான் உமர் ரழி அவர்களுடன் ரமழான் இரவில் மஸ்ஜிதுக்குச் சென்றேன்.அப்போது மக்கள் பல பிரிவுகளாக நின்று தராவீஹ் ஜமாஅத் நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு நான் இவர்களையெல்லாம் ஒரேயொரு ஹாஃபிழுக்குப் பின்னால் ஒன்று சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டார்கள். அதன்படி மிகச் சிறந்த காரீயாக விளங்கிய உபய் இப்னு கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் மக்களை ஒன்று திரட்டினார்கள். பின்பு மற்றொரு இரவில் நான் மஸ்ஜிதுக்குச் சென்றேன். உபய் இப்னு கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் தராவீஹ் தொழுகையை மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட உமர் ரழி அவர்கள் பித்அத்துகளில் இது நல்ல பித்அத் என்றார்கள்.                                    

குர்ஆனை ஒன்று திரட்டியதும் கூட நல்ல பித்அத் என்ற பட்டியலில் சேரும்

عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الْأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الْوَحْيَ قَالَ أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدْ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِالنَّاسِ وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ فِي الْمَوَاطِنِ فَيَذْهَبَ كَثِيرٌ مِنْ الْقُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ الْقُرْآنَ قَالَ أَبُو بَكْرٍ قُلْتُ لِعُمَرَ كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لَا يَتَكَلَّمُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ وَلَا نَتَّهِمُكَ كُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَتَبَّعْ الْقُرْآنَ فَاجْمَعْهُ فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنْ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ الْقُرْآنِ قُلْتُ كَيْفَ تَفْعَلَانِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو بَكْرٍ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ فَقُمْتُ فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنْ الرِّقَاعِ وَالْأَكْتَافِ وَالْعُسُبِ وَصُدُورِ الرِّجَالِ  (بخاري

 

யமாமா போருக்குப் பின்பு குர்ஆனை மனனம் செய்த அறிஞர்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள். இதனால் குர்ஆனை நம்மை விட்டும் சென்றுவிடுமோ என்ற கவலை ஹழ்ரத் உமர்(ரழி) அவர்களுக்கு ஏற்பட்டது. இக்கவலையை அப்போது கலீஃபாவாக இருந்த ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்களிடம் தெரிவித்து குர்ஆனை ஒன்று திரட்டும்படி கூறினார்கள். இதைக் கேட்ட ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் செய்யாத செயலை நாம் எவ்வாறு செய்ய முடியும் என்று கேட்டார்கள். அதற்கு ஹழ்ரத் உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ் மீது ஆணையாக குர்ஆனை ஒன்று திரட்டும் இந்தப் பணி நன்மையாகவே இருக்கும் என்று கூறினார்கள். அதற்கு ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். பிறகு அபூபக்கர்(ரழி) அவர்கள் ஜைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்களிடம் குர்ஆனை நீங்கள் ஒரே பிரதியாக ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் இறைத் தூதர் (ஸல்) செய்யாத ஒரு செயலை நான் எப்படிச் செய்ய முடியும் என்று கேட்க, உமர்(ரழி) அவர்கள் கூறிய பதிலை அப்படியே இவர்களிடம் அபூபக்கர் (ரழி)  கூறினார்கள்

ஜைத் இப்னு ஸாபித் (ரழி)அவர்கள் கூறுகிறார்கள். எதற்காக அபூபக்கர் (ரழி), உமர்(ரழி) ஆகியோரின் அல்லாஹ் விரிவாக்கினானோஅதற்காக எனது மனதையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் கூறியது போல் குர்ஆனை ஒன்று திரட்ட நான் முன் வந்தேன். மக்களின் கரங்களில் அவர்கள் குர்ஆனை எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள், பேரீத்த மட்டைகள், ஓடுகள் ஆகியவற்றிலிருந்து நான் திருக்குர்ஆனை ஒன்று திரட்டத் துவங்கினேன். யாரெல்லாம் குர்ஆனை மனனம் செய்திருந்தார்களோ அவர்களிடமிருந்து  ஒன்று திரட்ட ஆரம்பித்தேன். ஜைதுப்னு ஸாபித்(ரழி) அவர்கள் பொதுஅழைப்பாக யார் குர்ஆனை மனனம் செய்துள்ளீர்களோ குர்ஆனை யார் எழுதி வைத்துள்ளீர்களோ அவர்களெல்லாம் என்னிடம் வாருங்கள் என அழைத்தார்கள். தேடிச் சென்றும் குர்ஆனை ஒன்று திரட்டினார்கள். ஒருவர் சொன்னதை மட்டும் வைத்து முடிவு செய்யாமல் பலரிடம் அதை உறுதிப் படுத்துவார்கள். இவ்வாறு பல கோணங்களிலும் ஆராய்ந்த பின் தான் குர்ஆன் வசனங்களை தம் தொகுப்பில் பதிவு செய்வார்கள். திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும் விடுபட்டுப் போகாத அளவுக்கு கடும் முயற்சி செய்தார்கள். இதைப் பற்றி ஜைத் இப்னு ஸாபித் (ரழி) கூறும்போது ஒரு மலையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றியமைக்கச் சொல்லியிருந்தாலும் அது எனக்கு இலகுவாக இருக்கலாம் அதை விட குர்ஆனை ஒன்று திரட்டும் பணி எனக்கு மிக சிரமமாக இருந்தது எனக் கூறினார்கள். இவ்வாறான கடும் சிரமத்திற்கு மத்தியில் குர்ஆனை அவர்கள் திரட்டினார்கள்.

இதன் பிறகு நூல் வடிவிலான குர்ஆன் பிரதி அபூபக்கர் (ரழி)அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. அதன்பின் உமர் (ரழி) அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது.அதன்பின் உமர் (ரழி) அவர்களின் மகளும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹஃப்ஸா(ரழி) அவர்களிடம் குர்ஆன் பிரதி பாதுகாப்பாக இருந்தது.

 

ஏன் துஆ செய்ய வேண்டும்?...

தபூக் போரில் கலந்து கொள்ளாததால் அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் கட்ளைக் கிணங்க மாநபி ஸல் அவர்களால் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டவர்கள் கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள். அவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் தவ்பாவை ஏற்றுக் கொண்டு அவர்களை மன்னித்து ஆயத்துகளை இறக்கினான். 

قال ابن إسحاق: عن عبد الرحمن بن كعب بن مالك قال: كنت أقود أبي حين ذهب بصره فكنت إذا خرجت به إلى الجمعة فسمع الأذان بها صلى على أبي إمامة أسعد بن زرارة قال: فمكثت حينًا على ذلك لا يسمع لأذان الجمعة إلا صلى عليه واستغفر له. قال: فقلت في نفسي, والله إن هذا بي لعجز، ألا أسأله؟ فقلت: يا أبتِ ما لك إذا سمعت الأذان للجمعة صليت على أبي إمامة؟ فقال: أي بني، إنه كان أول من جمع بنا بالمدينة، في هرم البيت من حرة بني بياض في بقيع يقال له: بقيع الخَضِمات قال: قلت: وكم أنتم يومئذ؟ قال: أربعين رجلاً.

அபூதாவூத் (ரஹ்) அவர்களின் ரிவாயத்தில்....

ترحَّمَ لأسعدَ بنِ زرارة. فقلتُ لَهُ: إذا سمعتَ النِّداءَ ترحَّمتَ لأسعدَ بنِ زرارةَ

கஃபு இப்னு மாலிக் (ரலி) அவர்கள். வயதான காலத்தில் கண் தெரியாத நிலையை அடைந்தார்கள். அவரை அவரது மகனார் அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) பள்ளிக்கு அழைத்துச் செல்வார். 

அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:- எனது தந்தை கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆ உடைய பாங்கை (அழைப்பைக்) கேட்டால் ஒரு துஆ செய்வார். வெள்ளிக்கிழமை மட்டும் இந்த துஆ செய்வார்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ உடைய அழைப்பைக் கேட்டால் அஸ்அத் பின் ஸுராராவுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக! அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! என்று கஃபு இப்னு மாலிக் (ரலி) அவர்கள் துஆச் செய்வார்கள். மகனாருக்கு ஒன்றும் புரியவில்லை. யாரும் சொல்லாத கேட்காத ஒரு துஆவை அதுவும் வெள்ளிக்கிழமை தோறும் தமது தந்தை கேட்கிறாரே என்று ஒரு நாள் தமது தந்தையிடம்  "தந்தையே! வெள்ளிக்கிழமை தோறும் ஜும்ஆ பாங்கு சொல்லி முடிந்த உடன் அஸ்அத் பின் ஸுராராவுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என்று துஆச் செய்கிறீர்களே என்ன காரணம் என்று.

அப்போது, கஃபு இப்னு மாலிக் (ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள். "அவர்தான் இஸ்லாத்தில் முதன் முதலில் ஜும்ஆவை ஆரம்பித்து வைத்தவர். அவரது ஜும்ஆ உரை மூலம்தான் நாங்கள் இஸ்லாத்தை அறிந்து கொண்டோம் . ஊருக்கு வெளியில் இருக்கும் பனுாபயாளா என்ற கோத்திரத்திற்கு சொந்தமான "நகீஉல் கள்மாத்" என்ற இடத்தில்.  கருங்கற்கள் நிறைந்த ஒரு நிலத்தில். மதீனாவிலிருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் ஊருக்கு வெளியே அந்த ஜும்ஆவை நடத்தினார்கள். அப்போது நீங்கள் எத்தனை நபர்கள் இருந்தீர்கள்? என்று கேட்க, நாங்கள் நாற்பது நபர்கள் இருந்தோம்" என்று கூறினார்கள்.( நூல்: அபூதாவுத் )

நபியின் 50 ஆவது வயதில், அதாவது நபியான பின் 10 ஆவது ஆண்டில் மதீனாவில் இருந்து ஒரு குழு ஹஜ் செய்ய வந்தார்கள். அதில் 6 பேர் இடம் பெற்று இருந்தார்கள். அந்த 6 பேரிடமும்  நபி அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அந்த ஆறு பேரும் அப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 

அல்லாஹ்வின் அருளால் அந்த ஆறு பேருக்கும் மதீனா வந்தடைந்த பிறகு சிறிய மனமாற்றம் ஏற்பட்டது. ஏற்கனவே இருந்த கொள்கையிலிருந்து தடுமாற்றம் ஏற்பட்டது.

மதீனா திரும்பிய அந்த ஆறு பேரும் சில நாட்கள் கழித்து மேலும் சிலருக்கு எத்தி வைத்தார்கள். ஆறு என்பது இரட்டிப்பாகி 12 பேராக ஆனார்கள். இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற முடிவுடன் மக்கா வர முடிவு செய்தார்கள். 

ஆனால், நினைத்த உடனே நபியை பார்க்க வர முடியாது. வந்தால் மக்கா காபிர்கள் விட மாட்டார்கள். எனவே ஹஜ் நேரத்தில் தான் ஹஜ் செய்வது போல் வந்து நபியை பார்க்க முடியும். ஹஜ் காலத்தில்  வந்தால் சந்தேகப்பட மாட்டார்கள். ஆகவே, ஹஜ்ஜுடைய காலத்திற்காக காத்திருந்தார்கள்.

 ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் கஸ்ரஜ் கோத்திரத்தை சார்ந்த அஸ்அத்பின்ஸுராரா அவர்கள் தலைமையில் நுபுவ்வத்தின் 11ஆம் ஆண்டில் அந்த 12 பேரும் நபியைப் பார்க்க மக்காவுக்கு வந்தார்கள்.  மாநபி அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார்கள். ஒரு உடன்படிக்கையையும் செய்தார்கள். 

அந்த உடன்படிக்கை தான் அகபா உடன்படிக்கை அந்த உடன்படிக்கை தான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைய அடித்தளம் வகுத்தது.

இந்த 12 பேரும் தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க பைஅத்துல் அகபா - அகபா உடன்படிக்கையின் நாயகர்கள்.

பத்ருப் போரில் அபுஜஹ்லை கொன்ற முஆது (ரலி) அவர்கள் உட்பட பல முக்கிய தோழர்கள்தான் இந்த 12 பேரில் இடம் பெற்று இருந்தார்கள். இந்த 12 பேரிடமும் நபி அவர்கள் சொன்னார்கள். இங்கு ஜும்ஆ நடத்த முடியவில்லை என்று.

 وأمره بإقامة الجمعة فيها، فالتقى بأسعد بن زرارة فبلّغه مصعب أمر النبي صلّى الله عليه وسلّم، فجمع أسعد أربعين رجلاً فصلّى بهم عند منطقة البياضة في المدينة المنورة، فكانت تلك الصلاة أوّل صلاة جمعةٍ في الإسلام.

குழுவின் தலைவர் அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கு கட்டளை இட்டார்கள். நீங்கள் போய் உங்கள் ஊரில் ஜும்ஆ நடத்துங்கள்என்று அவர் மதீனா வந்ததும் மாநபி (ஸல்) அவர்களின் 52 ஆவது வயதில் மதீனாவில் ஜும்ஆவை நடத்தினார். 

 

நபியாகி 12 ஆண்டுகள் ஆனதில் இருந்து மதீனாவில் ஜும்ஆ நடக்க ஆரம்பித்து விட்டது. 

ஆனால், நபி(ஸல்) அவர்கள் இருக்கும் மக்காவில் ஜும்ஆ நடக்கவில்லை. காரணம் நடத்த முடியவில்லை. நடத்த முடியாது.

முதன் முதலில் ஜும்ஆ என்ற இந்த தொழுகையை நபியின் கட்டளைப்படி ஆரம்பித்து வைத்தவர் அஸ்அத் பின் ஸுராரா(ரலி) என்ற இந்த நபித்தோழர் தான். 

மறுமை நாள் வரை உலகில் எத்தனை ஜும்ஆக்கள் நடந்தாலும் அத்தனை ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு நன்மை அவருக்குப் போய் சேர்ந்து கொண்டே இருக்கும். 

நல்ல காரியத்தை யார் துவக்கி வைத்தாலும் அவருக்கு ஒரு பங்கு கியாம நாள் வரை கிடைக்கும் என்பது தான் இஸ்லாத்தின் நியதி. நமது மஸ்ஜிதில் நடைபெறும் ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கும் கிடைக்கும். அதனால் நமக்கு உள்ள நன்மையில் எதுவும் குறைந்து விடாது.

ஆகவே,  உமர் ரலி அவர்களுக்கும் அக மகிழ்ந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள் புரிந்திட துஆச் செய்வோம்!

பொதுவாகவே ஒருவர் ஒரு செயலின் மூலமாகவோ, ஒரு பண்பாட்டின் மூலமாகவோ முன்மாதிரியான ஒன்றை செய்து அதன் மூலம் நெஞ்சை நெகிழச் செய்கிறாரோ, வியப்பில் ஆழ்த்துகின்றாரோ அவருக்காக அல்லாஹ்விடம் அருள் புரிய துஆச் செய்வது இஸ்லாத்தின் விரும்பப்படுகிற மரபாகும்.

பெருமானார் அவர்கள் பல்வேறு நிகழ்வுகளின் போது இவ்வாறாக துஆச் செய்ததை நபிமொழி கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

عن عبد الله بن مسعود رضي الله عنه قال: لما كان يوم حُنين آثر رسول الله صلى الله عليه وسلم ناسًا في القِسْمَة، فأعطى الأَقْرَع بن حَابِس مئة من الإبل، وأعطى عُيينة بن حِصن مثل ذلك، وأعطى نَاسًا من أشراف العَرب وآثَرَهُم يومئذ في القِسْمَة. فقال رجل: والله إن هذه قِسْمَة ما عُدل فيها، وما أُريد فيها وجه الله، فقلت: والله لأُخبرن رسول الله صلى الله عليه وسلم فأتيته فأخبرته بما قال، فتغير وجهه حتى كان كالصِّرفِ. ثم قال: «فمن يَعْدِل إذا لم يعدل الله ورسوله؟» ثم قال: «يَرحم الله موسى، قد أُوذي بأكثر من هذا فصبر»

ஹுனைன் போரின் போது நபிகள் நாயகம் அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும் போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும் என்று கூறினார். நான், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபிகள் நாயகம் () அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன் என்று கூறினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளா விட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? அல்லாஹ், (இறைத்தூதர்) மூஸா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்துக் கொண்டார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ( நூல் : புகாரி )

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يَقْرَأُ فِي الْمَسْجِدِ فَقَالَ "" رَحِمَهُ اللَّهُ، لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً أَسْقَطْتُهَا فِي سُورَةِ كَذَا وَكَذَا "".

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற நபி அவர்கள், “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! இன்ன இன்ன அத்தியாயங்களில் நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவுபடுத்திவிட்டார்என்று சொன்னார்கள். ( நூல் : புகாரி )

ومرّ عليّ - حين رجع من صفين - بقبر خباب، يشيّع الراحل بكلمات: رحم الله خباباً! أسلم راغباً، وهاجر طائعاً، وعاش مجاهداً، وابتلي في جسمه أحوالاً، وإن الله لا يضيع أجر من أحسن عملَا.

ஹல்ரத் அலீ (ரலி) அவர்கள் ஸிஃப்ஃபீன் போர் முடிந்து வந்து கொண்டிருக்கையில் ஓரிடத்தில் ஒரு மண்ணறையைப் பார்க்கிறார்கள்.

அது சமீபத்தில் இறந்து போன ஒருவருடைய மண்ணறை என்பதை உணர்ந்தார்கள். பின்பு அருகில் இருந்த தமது தோழர்களிடத்தில் இது யாருடைய மண்ணறை என வினவினார்கள்.

தோழர்கள் அது ஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்களுடையது என்றார்கள்.

கேட்டதும் தான் தாமதம் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். தேம்பித் தேம்பி அழுதவர்களாக

யாஅல்லாஹ்! ஃகப்பாப் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக! பேரார்வத்தோடு முஸ்லிமானார்! உன் உவப்பையும், உன் தூதரின் நெருக்கத்தையும் பெறுவதற்காகவே ஹிஜ்ரத்தும் செய்தார்! தான் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ கொள்கைக்காக பல்வேறு இன்னல்களை உடலில் தாங்கிக் கொண்டார்! அல்லாஹ் ஒரு போதும் அவனுக்காக தூய மனதோடு அமல் செய்பவர்களின் அமலை வீணாக்குவதில்லை. யாஅல்லாஹ் ஃகப்பாப் (ரலி) அவர்களின் மீது உன் கருணை மழையைப் பொழிவாயாக! (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:234.)

ஒரு சந்திப்பின் போது கப்பாப் ரலி அவர்களிடம் சொல்லுங்கள். அந்தக் காலத்தில் காஃபிர்களால் தாங்கள் பட்ட துன்பத்திலேயே கடினமான ஒரு நிகழ்வைச் சொல்லுங்கள்”. என்று உமர் ரலி கேட்டார்கள்.

மௌனமாக இருந்த கப்பாப் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே கப்பாப் (ரலி) அவர்கள் தமது மேலங்கியைத் தளர்த்தி முதுகைக் காண்பித்தார்கள். சதை உருகி உருக்குலைந்து போயிருந்தது முதுகுத்தண்டின் மச்சை கொழுப்பு வெளியாகி நிறம் மாறி அலங்கோலமாய் காட்சியளித்தது.

கண் கலங்கிய படி இது எப்படி நிகழ்ந்தது?” என்று உமர் ரலி அவர்கள் கேட்டார்கள்.

قال خباب: يا أمير المؤمنين  ولم يكن لي أحد يمنعني عن تعذيب المشركين فلقد رأيتني يوما أخذوني وأوقدوا لي نارا ثم سلقوني فيها، ثم وضع رجل رجله على صدري، فما اتقيت الأرض أو قال برد الأرض إلا بظهري، ثم كشف خباب عن ظهره فرأى أمير المؤمنين آثارا مما عذبه المشركون، فهاله ما رآه، فقال: ما رأيت كاليوم ظهر رجل.

கப்பாப் (ரலி) அவர்கள் சங்கடத்துடன் விவரித்தார்கள். மக்காவில் அந்தக் காபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர் எனது உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக் கங்குகளின்மேல் என்னைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். எனது முதுகின் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். எனது முதுகுத்தண்டிலிருந்து வழிந்து விழும் நீரினால் (மச்சை - கொழுப்பால்) அந்தத் தீ அணையும்என்று கூறினார்கள் கப்பாப் (ரலி) அவர்கள்.

கப்பாப் (ரலி) அவர்களின் முதுகைப் பார்த்த பிறகு உமர் (ரலி) அவர்கள் "இந்த நாளில் ஒருவரின் முதுகில்  பார்த்தது போன்ற காட்சியை வெறெந்த மனிதரின் முதுகிலும் நான் பார்த்ததில்லை" என்று கூறினார்கள்.

யாஅல்லாஹ்! அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!

Friday, 14 February 2025

வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழுங்கள்!!!

ஹரம் ஷரீஃப்பில் - 14/02/2025 அன்று இமாம் ஷேக் மாஹிர் அல் முயிக்லி ஆற்றிய ஜும்ஆ உரையின் சாராம்சம்!

எல்லா மனிதர்களுக்கும் பயனளித்து வாழ்பவரே மனிதர்களில் சிறந்தவர்.

மனிதர்களில் சிறந்தவர்களே அல்லாஹ்விற்கு விருப்பமானவர்கள்.

எனவே, மனிதர்களுக்கு பயனளிப்பவராகவும், அல்லாஹ்விற்கு விருப்பமானவராகவும் வாழ முயலுங்கள்!

ஏனெனில், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு நன்மையை நாடி விட்டான் என்றால்....

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ : حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍأَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا يَسْتَعْمِلُهُ قِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ. ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 346

“ஒரு அடியாருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவனை பயன்படுத்துவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எப்படி பயன்படுத்துவான்?‘ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த அடியாரின் மரணத்திற்கு முன் நல்லமல் புரி(ந்த நிலையில் மரணடை)யும் பாக்கியத்தை அவருக்கு வழங்குவான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: இப்னுஹிப்பான் 346

1) எந்த செயலிலும் முன்மாதிரி மனிதராக செயல்படுங்கள்!

قال الإمام أحمد : حدثنا محمد بن جعفر ، حدثنا شعبة ، عن عون بن أبي جحيفة ، عن المنذر بن جرير ، عن أبيه قال : كنا عند رسول الله - صلى الله عليه وسلم - في صدر النهار ، قال : فجاءه قوم حفاة عراة مجتابي النمار - أو العباء - متقلدي السيوف ، عامتهم من مضر ، بل كلهم من مضر فتغير وجه رسول الله - صلى الله عليه وسلم - لما رأى بهم من الفاقة ، قال : فدخل ثم خرج ، فأمر بلالا فأذن وأقام الصلاة ، فصلى ثم خطب ، فقال : ( يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ) إلى آخر الآية : ( إن الله كان عليكم رقيبا ) [ النساء : 1 ] . وقرأ الآية التي في الحشر : ( ولتنظر نفس ما قدمت لغد ) تصدق رجل من ديناره ، من درهمه ، من ثوبه ، من صاع بره ، من صاع تمره - حتى قال - : ولو بشق تمرة " . قال : فجاء رجل من الأنصار بصرة كادت كفه تعجز عنها ، بل قد عجزت ، ثم تتابع الناس حتى رأيت كومين من طعام وثياب ، حتى رأيت رسول الله - صلى الله عليه وسلم - يتهلل وجهه كأنه مذهبة ، فقال رسول الله - صلى الله عليه وسلم - : " من سن في الإسلام سنة حسنة ، فله أجرها وأجر من عمل بها بعده ، من غير أن ينقص من أجورهم شيء ، ومن سن في الإسلام سنة سيئة ، كان عليه وزرها ووزر من عمل بها من غير أن ينقص من أوزارهم شيء " .

ஒரு நாள் முற்பகல் வேளையில் மதீனாவின் மஸ்ஜித் நபவீயில் மாநபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த தருணம் அது.

மக்காவில் அடர்த்தியாக வசித்து வரும் "முளர்" கோத்திரம் முளர் கோத்திரத்தின் தலைவர் உட்பட அனைத்து ஆண்களும் மாநபி (ஸல்) அவர்களைக் காண சமூகம் தந்திருந்தனர்.

மாநபி (ஸல்) அவர்கள், அந்த கோத்திரத்தாரின் நிலை கண்டு, அவர்களின் ஆடைகளின் கோலம் கண்டு, அவர்களின் தேகத்தின் மாற்றம் கண்டு கண் கலங்கினார்கள்.

எப்படி வாழ்ந்தவர்கள் இவர்கள்! இப்போதோ! வறுமையின் கோரப்பிடியில் சிக்கி எலும்பும் தோலுமாக, பராரிகளைப் போல, பார்க்கவே பரிதாபமாக

பொலிவுடன் காட்சியளிக்கும் பெருமானாரின் (ஸல்) முகம், புன்முறுவல் பூத்துக் குலுங்கும் பெருமானாரின் (ஸல்) வதனம் சிவக்கத்துவங்கியது, முகம் மாறியது,

பிலால் (ரலி) அவர்களை அழைத்து பாங்கு சொல்லுமாறு கூறி, மதிய நேரத்து ளுஹர் தொழுகையை நடத்தி முடித்து அருகில் இருந்த மிம்பர் மேடை மீதேறி

இறையச்சத்தை நினைவூட்டி, மறுமைநாளை கண்முன் கொண்டு வந்து,

வறுமையில் வாடி நிற்கும், வசதி வாய்ப்பில் திளைத்து இப்போது விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் "முளர்" கோத்திரத்தாருக்கு உதவிட, கை கொடுத்து தூக்கி விட வேண்டும் என்று தம் முன்னால் அமர்ந்திருக்கும் தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.

ஒருவர் பின் ஒருவராக சென்று தம்மால் இயன்றதைக் கொண்டு வந்து கொண்டிருந்த வேளையில் ஒரு நபித்தோழர் தம் இரு கரங்களிலும் உணவுப் பொருட்கள், துணிமணிகள், வெள்ளிக்காசுகள் அடங்கிய இரு பை நிறைய தூக்க முடியாமல் தூக்கியவாறு கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

இவரைக் கண்டு இன்னும் சில நபித்தோழர்கள் இது போன்று கொண்டு வரத் துவங்கவே மஸ்ஜித் நபவீயில் முளர் கோத்திரத்தார்களுக்கான நிவாரணப் பொருட்கள் இரு பெரும் குவியலாக மாறிப் போயிருந்தது.

ஒரு நபித்தோழர் இரு பை நிறைய கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்த பிறகே அங்கு இருந்த மற்றவர்களும் நிறைய கொடுக்கலாயினர்.

இந்தக் காட்சியை கண்ட மாத்திரத்திலேயே மாநபி (ஸல்) அவர்களின் முகம் அப்படியே "தங்கம் ஜொலிப்பது போல் ஜொலித்தது"

இதை உற்றுக் கவனித்த கருணையே உருவான காத்தமுன் நபி (ஸல்) அவர்கள் அப்போது தான் அங்கு கூடி இருந்த அந்த நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒட்டுமொத்த இந்த உம்மத்துக்குமான ஒரு உத்தரவை பிறப்பித்தார்கள்.

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ،

"யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது".

2) அழகிய வார்த்தையை பேசுங்கள்!

قال محمد بن إسماعيل البخاري:- كنا عند إسحاق بن راهويه فقال: لو جمعتم كتابا مختصرا لصحيح سنة رسول الله؟

فوقع ذلك في قلبي فأخذت في جمع الجامع الصحيح، وخرجت الصحيح من ستمائة ألف حديث.

புகாரி ஹதீஸ் கிரந்தம் உருவான பிண்ணனி குறித்து இமாம் இஸ்மாயில் அல் புகாரீ ரஹ் அவர்கள் குறிப்பிடும் போது "ஒரு நாள் எங்கள் ஆசிரியப் பெருந்தகையோடு சபையொன்றில் அமர்ந்திருந்தோம். அப்போது எங்கள் ஆசிரியர் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) எங்களிடம் "நாம் ஏன் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னத்தை உள்ளடக்கிய சுருக்கமான, அதே நேரத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழி திரட்டு ஒன்றை தொகுக்கக் கூடாது?!" என்று கேட்டார்கள்.

அப்போது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தின் விளைவு தான் "ஸஹீஹுல் புகாரி" யாகும். ( நூல்: முகத்திமது ஃபத்ஹுல் பாரி )

நான்கைந்து நபர்கள் பேசிக் கொண்டிருந்த ஒரு சபையில் பேசப்பட்ட அழகிய வார்த்தை ஒன்று இந்த உம்மத்துக்கு ஒரு கொடையையே வழங்கியது.

3) இலட்சியத்தோடு வாழுங்கள்!

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏

"இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக! மேலும், நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!"

وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏

"இன்னும், பின்வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக!"

( அல்குர்ஆன்: 26: 83, 84 )

அல்லாஹ் லட்சியத்தை அடையச் செய்வான்.

1) உம்மத்தும், மார்க்கமும்...

اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ‏

நிச்சயமாக இப்ராஹீம் ஒரு தலைவராகவும், அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும், சத்திய வழியைச் சார்ந்தவராகவும் இருந்தார். மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.

شَاكِرًا لِّاَنْعُمِهِ‌ؕ اِجْتَبٰٮهُ وَهَدٰٮهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

(அன்றியும்,) அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அவன் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும், அவரை நேரான பாதையில் செலுத்தினான்.

وَاٰتَيْنٰهُ فِى الدُّنْيَا حَسَنَةً‌ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَؕ‏

மேலும், நாம் அவருக்கு இவ்வுலகத்தில் நன்மையானதையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் நல்லவர்களில் ஒருவராக இருப்பார்.

ثُمَّ اَوْحَيْنَاۤ اِلَيْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏

(நபியே!) பின்னர், "சத்திய வழியைச் சார்ந்தவரான இப்ராஹீமின் மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு 'வஹீ' அறிவித்தோம்; அவர் இணைவைப்போரில் ஒருவராக இருந்ததில்லை ( அல்குர்ஆன்: 16: 120 - 123 )

2) முன்மாதிரியும்...

قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ

இப்ராஹீமிடம் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது;

( அல்குர்ஆன்: 60: 04 )

4) மரணத்திற்கு பின் உண்டான வாழ்க்கைக்கு தொடர்படியாக நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும் விதத்தில் நல்லறங்கள் செய்யுங்கள்.

اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؕ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ‏

நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும், (நன்மை தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும், நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும் நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். ( அல்குர்ஆன்: 36: 12 )

عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: " إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته عالما علمه ونشره، وولدا صالحا تركه، ومصحفا ورثه، أو مسجدا بناه، أو بيتا لابن السبيل بناه، أو نهرا أجراه، أو صدقة أخرجها من ماله في صحته وحياته تلحقه بعد موته"، وهو حديث حسن، في صحيح مسلم

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- " ஒரு முஃமினான மனிதன் கற்பித்த கல்வியும் , ( எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் , அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும் , ( பள்ளிவாசல்கள் , மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும் , அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும் , வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும் , அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும் , அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும் கண்டிப்பாக அவனின் மௌத்துக்குப் பிறகும் அவனைப் போய்ச்சேரும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: 

5) நற்சான்று பகர்பவர்களை உருவாக்குங்கள்!

عن أبي زهير الثقفي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «يوشك أن تعرفوا أهل الجنة من أهل النار» قالوا: بم ذاك يا رسول الله؟! قال: «بالثناء الحسن والثناء السيئ. أنتم شهداء الله، بعضكم على بعض»  (صحيح سنن ابن ماجة). 

உலகில் வாழும் காலத்திலேயே உங்களில் சுவனவாசியையும், நரகவாசியையும் நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? என்று நபி ஸல் அவர்கள் நபித்தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எப்படி அறிந்து கொள்வது? என்று வினவிய போது, மக்களிடம் இருந்து வெளிவரும் அழகிய புகழும், கெட்ட புகழும் தான்" என்று கூறிய பிறகு, உங்களில் ஒவ்வொருவரும் பிறருக்கு அல்லாஹ்விற்காக சான்று பகர்பவர்கள் ஆவீர்கள் " என்றார்கள். ( நூல்: இப்னு மாஜா )

6) பிறருக்கு நன்மையை அறிமுகம் செய்து வாழுங்கள்! 

عن أبي مسعود الأنصاري رضي الله عنه قال: «جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال: إنه أبدِع بي فاحْمِلْني، فقال: ما عندي، فقال رجل: يا رسول اللَّه أنا أدله على من يحمله، فقال رسول اللَّه صلى الله عليه وسلم::- "من دل على خيرٍ فله مِثل أجرِ فاعِلِهِ

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களின் சமூகம் வந்து "தாம் கொண்டு வந்த வாகனத்தை தொலைத்து விட்டதாகவும், தம்முடைய ஊருக்கு செல்ல தமக்கு வாகன உதவி செய்யுமாறு நபி ஸல் அவர்களிடம் வேண்டி நின்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் "தம்மிடம் தற்போது ஏதும் வாகனம் இல்லை" என்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, அருகில் உள்ள ஒரு நபித் தோழர் "இவருக்கு வாகன ஏற்பாட்டைச் செய்து தரும் ஒரு மனிதரைப் பற்றி நான் அறிவேன். அவரிடம் இவரை நான் அழைத்துச் செல்கின்றேன்". என்றார்.

அப்போது, நபி ஸல் அவர்கள் "ஒருவர் ஒரு நன்மையான செயல் ஒன்றை அறிவித்து தருகின்றார் எனில், அதைச் செய்தவருக்கு கிடைக்கும் அதே கூலி அதை அறிவித்துக் கொடுக்கும் இவருக்கும் கிடைக்கும்" என்றார்கள்.

7) சிரமமாக இருந்தாலும் நன்மையான காரியங்களை விரும்பி செய்து வாருங்கள்!

حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَتَحَوَّلُوا، إِلَى قُرْبِ الْمَسْجِدِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُعْرَى الْمَدِينَةُ، وَقَالَ "" يَا بَنِي سَلِمَةَ. أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ "". فَأَقَامُوا.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ சலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் அருகே இடம்பெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) காலி செய்யப்படுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “பனூ சலிமா குலத்தாரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடித் தடங்களின் நன்மைகளை எதிர்பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.ஆகவே, பனூ சலிமா குலத்தார் (தாம் முன்பு வசித்துக்கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர். ( நூல்: புகாரி )

8) எவருக்கும் அநியாயம் செய்து விடாமல் வாழ வேண்டும்.

قال رسول الله لأصحابه: «لَوْ خَرَجْتُمْ إلى الْحَبَشَةِ؛ فَإِنَّ بِهَا مَلِكًا لاَ يُظْلَمُ عِنْدَهُ أَحَدٌ». فلم يعلق رسول الله على شيء فى حياة هذا الرجل ولا دينه، إنما فقط علق على عدله.

தமது 14 நபித்தோழர்களை முதன் முதலாக அபீ சீனியாவை நோக்கி ஹிஜ்ரத் பயணத்திற்காக அனுப்பி வைத்த போது 'நீங்கள் அபீ சீனியாவிற்கு பயணமாக போகின்றீர்கள். அங்கே "எவருக்கும் அநீதம் இழைக்காத ஒரு மன்னர் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்" என்றார்கள்.

ஒருவரைப் பற்றி அடையாளப்படுத்தி சொல்வதற்கு எந்தனையோ அம்சங்கள் இருந்தும் கூட நபி ஸல் அவர்கள் அவரிடம் காணப்பட்ட ஒரு அழகிய குணத்தை, பண்பாட்டை அடையாளப்படுத்தினார்கள்.

9) பாவச் சுமைகள் இல்லாத வாழ்வு வாழ வேண்டும்..

لِيَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً يَّوْمَ الْقِيٰمَةِ‌ وَمِنْ اَوْزَارِ الَّذِيْنَ يُضِلُّوْنَهُمْ بِغَيْرِ عِلْمٍ‌ؕ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ

மறுமை நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாகச் சுமக்கட்டும்; மேலும், அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழிகெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்): அறிந்து கொள்ளுங்கள்! இவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது. ( அல்குர்ஆன்: 16: 25 )

ஆகவே, உலகிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களுக்கு அழைத்துச் செல்லும் "அழகிய நற்பண்புகளை தேர்ந்தெடுத்து நமது வாழ்க்கையை நாம் செதுக்கிக் கொள்வோம்.

வல்ல ரஹ்மான் தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!