Saturday, 7 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை: 19. கேளுங்கள் தரப்படும்!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை: 19.

கேளுங்கள் தரப்படும்!



18 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 19 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் ஸாத் அத்தியாயம், அஸ் ஸுமர், அத்தியாயம் மற்றும் அல் முஃமின் அத்தியாயம் என 248 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

 இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஸாத் அத்தியாயத்தின் 38 –ஆவது வசனத்தில் நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட ஒரு துஆவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பிய அரசாட்சியை இந்த உலகத்தில் அவர்களுக்கு வழங்கினான்.

قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَهَبْ لِیْ مُلْكًا لَّا یَنْۢبَغِیْ لِاَحَدٍ مِّنْ بَعْدِیْ ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ

என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்எனக் கூறினார்.

عَنْ سَلْمَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ، أَنْ يَرُدَّهُمَا صِفْرًا حكم الألباني: صحيح

நிச்சயமாக உங்கள் இரட்சகன் வெட்கமுள்ளவன். கொடையாளன். தனது அடியார் இரு கரம் ஏந்தி கேட்கும் போது வெறுங்கையுடன் திருப்பு அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி) ( நூல்: அபூதாவுத் )

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ فِي الدُّعَاءِ، وَإِنَّ أَبْخَلَ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلَامِ " - شعب الإيمان

மக்களில் மிகவும் இயலாதவர் துஆச் செய்ய இயலாதவர், (துஆச் செய்யாதவர்) மக்களில் மிகவும் கருமித்தனம் உடையவர் ஸலாம் சொல்வதில் கருமித்தனம் செய்பவர்''என ரஸூலுல்லாஹி அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஷுஅபுல் ஈமான்)

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துஆவின் விஷயத்தில் நாம் கவனக்குறைவாக இருக்கலாமா? தயங்கலாமா?

துஆ செய்தால்மூன்றிலொரு பலன் நிச்சயம் கிடைக்கும்...

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو لَيْسَ بِإِثْمٍ وَلَا بِقَطِيعَةِ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَدْفَعَ عَنْهُ مِنَ السوء مثلها) قال: إذا يكثر؟ قال: (الله أكثر) - الأدب المفرد

பாவத்தை கொண்டோ உறவு முறிவைக் கொண்டோ தம்முடைய துஆவில் எந்த ஒன்றும் இல்லாமல் ஒருவர் துஆ கேட்டால்

கேட்டது கிடைக்கும் அல்லது துஆவின் பலன் மறுமையில் நன்மையாக கிடைக்கும் அல்லது அதற்கு பகரமாக உலகில் நடக்கவிருக்கும் ஆபத்து நீக்கப்படும்" என்று நபி அவர்கள் கூறினார்கள்.

1. இறைவனிடம் மனம் உருகி கெஞ்சி பணிவோடு கேட்க வேண்டும்.

اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ‏ 

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 7:55)

2. அல்லாஹ் நம் துஆவை ஏற்றுக்கொள்வான் என்கின்ற நம்பிக்கையோடும் பொடுபோக்கு இல்லாமலும் கேட்க வேண்டும்.

روى الترمذي عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((ادعوا اللهَ وأنتم موقنون بالإجابة، واعلموا أن اللهَ لا يستجيب دعاءً من قلبٍ غافلٍ لاهٍ)؛ (حديث صحيح) (صحيح الترمذي - للألباني - حديث 2766).

3. துன்பம் ஏற்படும்போது மட்டும் இறைவனை அழைக்காமல் இன்பமான நேரத்திலும் துஆச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 روى الترمذي عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((مَن سره أن يستجيب اللهُ له عند الشدائد والكرب، فليُكثر الدُّعاء في الرخاء))؛ (حديث حسن) (صحيح الترمذي - للألباني - حديث 2693)

எவர் தன்னுடைய கஷ்டமான, சிரமமான நேரத்தில் துஆ அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் தான் நல்ல நிலையில் சந்தோஷமாக வாழும் போது அதிகம் துஆ செய்பவராக இருந்து கொள்ளட்டும்! என்று நபி அவர்கள் கூறினார்கள்.

துஆவில் எல்லை கடந்து வரம்பு கடந்து கேட்கக் கூடாது..

عن أبي أمامة أن عبد الله بن مغفل سمع ابنه يقول: اللهم إني أسألك القصر الأبيض عن يمين الجنة إذا دخلتها، فقال: أي بني، سل الله الجنة، وتعوذ بالله من النار، فإني سمعت رسول الله - - يقول: «سيكون في هذه الأمة قوم يعتدون في الطهور والدعاء»

 

அப்துல்லாஹ் இப்னு மகஃப்ஃபல் ரலி அவர்கள் ஒரு நாள் தமது மகன் பிரார்த்தனை கேட்டுக் கொண்டிருந்ததை அவதானித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் மகன் துஆவில் யாஅல்லாஹ்! எனக்கு சுவனத்தில் வலது பக்கத்தில் வெள்ளை மாளிகையை வழங்குவாயாக! நான் நுழைந்ததும் அதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அப்போது இடைமறித்த அவரது தந்தை அப்துல்லாஹ் இப்னு மகஃப்ஃபல் ரலி அவர்கள் மகனே! அல்லாஹ்விடம் சுவனத்தையும் அதன் இன்பங்களையும் நீ கேள்! மேலும் நரகில் இருந்து பாதுகாக்குமாறு கேள்! ஏனெனில் நபி அவர்கள் கூற நான் கேட்டேன் "என் உம்மத்தில் சிலர் தோன்றுவார்கள் அவர்கள் சுத்தம் செய்தலிலும் துஆக் கேட்பதிலும் எல்லை கடந்து வரம்பு மீறுவார்கள்" என்று.

وفي المسند أن سعداً سمع ابنا له وهو يدعو ويقول: اللهم إني أسألك الجنة ونعيمها وإستبرقها ونحواً من هذا، وأعوذ بك من النار وسلاسلها وأغلالها.. فقال: لقد سألت الله خيراً كثيراً، وتعوذت بالله من شر كثير، وإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنه سيكون قوم يعتدون في الدعاء، وقرأ هذه الآية: ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعاً وَخُفْيَةً إِنَّهُ لا يُحِبُّ الْمُعْتَدِينَ وإن حسبك أن تقول: اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل، وأعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل.

ஸஅது (ரலி) அவர்களின் மகனார் அல்லாஹ்வே! உன்னிடம் நான் சுவனத்தை கேட்கிறேன். சுவனத்தின் இன்னின்ன இன்பத்தை கேட்கிறேன். உன்னிடம் நரகில் இருந்தும் நரகில் சங்கிலி போடப்படுவதில் இருந்தும் பாதுகாப்பு கேட்கிறேன்" என்று துஆ செய்தார். அப்போது ஸஅது ரலி அவர்கள் தமது மகனிடம் "நீ அல்லாஹ்விடம் அதிகமான நலவுகளைக் கேள்! அதிகமான தீங்குகளை விட்டும் பாதுகாப்பு கேள்! மாறாக, இது போன்று நீ துஆ கேட்காதே! ஏனெனில், நபி அவர்கள் கூற நான் கேட்டேன் "என் உம்மத்தில் சிலர் தோன்றுவார்கள் அவர்கள் சுத்தம் செய்தலிலும் துஆக் கேட்பதிலும் எல்லை கடந்து வரம்பு மீறுவார்கள்" மேலும், அல் அஃராஃப் அத்தியாயத்தின் "நீங்கள் உங்கள் இரட்சகனிடம் பணிவாகவும், மெதுவாகவும் உங்கள் தேவைகளைக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிக்க மாட்டான்" என்ற வசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, இப்படி வேண்டுமானால் நீ கேட்டுக் கொள் அது உனக்கு போதுமாகும் என்று கூறியவர்களாக "அல்லாஹ்வே! உன்னிடம் சுவனத்தை கேட்கிறேன். அந்த சுவனத்தின் பக்கம் அழைத்துச் செல்கிற செயலை செய்யவும், சொல்லை மொழியவும் ஆற்றல் கேட்கிறேன்.

அல்லாஹ்வே! உன்னிடம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். அந்த நரகத்தின் பக்கம் அழைத்துச் செல்கிற செயலை விட்டும், சொல்லை விட்டும் பாதுகாப்பு கேட்கிறேன். ( நூல்: இப்னு குஸைமா )

நபி அவர்கள் துஆவில் எல்லை கடந்து கேட்பதை தடுத்துள்ளார்கள். மேலும், மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொண்டு நம் துஆக்களை நாம் கேட்க வேண்டும்.

அபூர்வ துஆக்கள்....

عن أبي ثابت بن شداد بن أوس رضي الله عنه قال: قال النعمان بن قوقل رضي الله عنه يوم أحد: اللهم إني أقسم عليك أن أُقتل، فأدخل الجنة، فقُتل، فقال رسول الله - صلى الله عليه وسلم -: «إن النعمان أقسم على الله، فأبره فلقد رأيته يطأ في حظيرتها ما به من عرج]).

நுஃமான் இப்னு கவ்கல் (ரலி) அவர்கள் உஹது யுத்தத்தின் போது "அல்லாஹ்வே! உன் மீது சத்தியமாக! இந்த யுத்தத்தில் நான் கொல்லப்பட வேண்டும்! சுவனத்தில் நான் நுழைய வேண்டும்" என்று துஆ செய்தார். அவர் துஆ செய்தது போன்று உஹத் யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டு ஷஹீத் ஆனார். நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:-திண்ணமாக நுஃமான் துஆவில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டார். அல்லாஹ் அவரின் துஆவை அங்கீகரித்தான். இப்போது தான் அவரை நான் காலை ஊன்றி ஊன்றி சுவனத்தில் செல்ல கண்டேன்" என்று.

عن نافع، أن ابن عمر رضي الله عنهما أضاف رجلاً أعمى، فأكرمه ابن عمر رضي الله عنهما، وأنامه في منزله الذي ينام فيه، فلما كان في جوف الليل، قام ابن عمر رضي الله عنهما، فتوضأ، فأسبغ الوضوء، ثم صلى ركعتين، ثم دعا بدعاء فهمه الأعمى، فلما رجع ابن عمر رضي الله عنهما إلى مضجعه، قام الأعمى إلى فضل وضوء ابن عمر رضي الله عنهما، فتوضأ، وأسبغ، ثم صلى ركعتين، ثم دعا بذلك الدعاء، فرد الله عليه بصره، فشده الصبح مع ابن عمر رضي الله عنهما بصيرًا، فلما فرغ، التفت إلى ابن عمر رضي الله عنهما فقال: يا أبا عبد الرحمن دعاء سمعته منك البارحة تدعو به، فهمته، فقمت، فصنعت مثل الذي صنعت، فرد الله علي بصري، قال: ذاك دعاء علَّمناه رسول الله - صلى الله عليه وسلم -، وأمرنا أن لا نعلمه أحدًا يدعو به في أمر الدنيا، قال: «قل اللهم رب الأرواح الفانية، والأجساد البالية، أسألك بطاعة الأرواح الراجعة إلى أجسادها، وبطاعة الأجساد الملتئمة بعزتك، وبكلماتك النافذة فيهم، وأخذك الحق بينهم، والخلائق بين يديك ينتظرون فصل قضائك، ويرجون رحمتك، ويخافون عقابك، أن تجعل النور في بصري، واليقين في قلبي، وذكرك بالليل والنهار على لساني، وعملاً صالحًا فارزقني»([14]).

இப்னு உமர் (ரலி) அவர்களின் பணியாளர் நாஃபிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: பார்வையற்ற ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தம்மை விருந்தாளியாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இப்னு உமர் (ரலி) அவர்களும் அவர்களை விருந்தாளியாக ஏற்றுக் கொண்டு நல்ல முறையில் உபசரித்தார்கள். இப்னு உமர் ரலி அவர்கள் வீட்டிலேயே அவரும் இரவு தங்கினார்.

இரவில் விழித்தெழுந்து அழகிய முறையில் உளூ செய்து இரண்டு ரக்அத் தொழுது முடித்த இப்னு உமர் (ரலி) அவர்கள் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் பார்வையற்ற அந்த மனிதர் புரிந்து கொள்ளும் வகையில் துஆவை ஓதினார்கள். பின்னர் படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் பார்வையற்ற அந்த மனிதர் எழுந்து இப்னு உமர் (ரலி) அவர்களின் உதவியுடன் உளூ செய்து இரண்டு ரக்அத் தொழுது இப்னு உமர் (ரலி) அவர்கள் கேட்ட அந்த துஆவைக் கேட்டார். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரின் பார்வையைத் திருப்பி அளித்தான்.

இந்நிலையில் சுபுஹ் தொழுகைக்கான அழைப்பு கேட்கவே இப்னு உமர் ரலி அவர்களுடன் இணைந்து அவரும் நன்கு பார்க்கும் திறனோடு தொழச் சென்றார்.

தொழுது முடித்ததும் இப்னு உமர் (ரலி) அவர்களை நோக்கி திரும்பி அமர்ந்து " அபூ அப்துர்ரஹ்மான் அவர்களே! இன்று அதிகாலை நேரத்தில் நீங்கள் கேட்ட அந்த துஆவின் பொருளை நான் விளங்கிக் கொண்டேன். பின்னர் நீங்கள் செய்தது போல உளூ செய்து இரண்டு ரக்அத் தொழுது நீங்கள் துஆ கேட்டது போன்றே நானும் கேட்டேன். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு பார்வையை தந்து விட்டான்" என்றார்கள்.

அதற்கு, இப்னு உமர் (ரலி) அவர்கள் "நபி ஸல் அவர்கள் அந்த துஆவை எங்களுக்கு கற்றுத் தந்தார்கள். மேலும், எங்களுக்கு அந்த துஆவை உலக நோக்கங்களுக்காக வேண்டி கேட்கும் நோக்கில் உள்ளவர்கள் எவருக்கும் கற்றுத் தரக் கூடாது " என்று கட்டளையும் பிறப்பித்தது இருக்கின்றார்கள் என்று கூறினார்கள்.

அந்த துஆவின் பொருள்:- அழிந்து போகும் ஆன்மாக்களின் இரட்சகனான அல்லாஹ்வே! சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் உடல்களின் இரட்சகனான அல்லாஹ்வே! உன்னிடத்தில் நான் ஒரு ஆன்மாவை கேட்கிறேன். அந்த ஆன்மா இந்த உடலில் சென்றால் உனக்கு வழிபடுமே, உன் பக்கம் மீளுமே அந்த ஆன்மாவை கேட்கிறேன்.

உன் கண்ணியத்தை கொண்டு உன் வழிபாட்டில் லயித்திருக்குமே அத்தகைய உடலைக் கேட்கிறேன்.

படைப்புகள் எல்லாம் உன்னுடைய தீர்ப்பை எதிர் பார்த்து இருக்குமே அந்நாளில் உன் அருளை ஆதரவு வைப்பவர்களில் ஒருவனாகவும், உன் தண்டனையை பயப்படுபவர்களில் ஒருவனாகவும் என்னை நீ ஆக்க வேண்டும் என்றும் நான் கேட்கிறேன். 

என் பார்வையில் ஒளி தர வேண்டும் என்று கேட்கிறேன்! என் உள்ளத்தில் உன்னைப் பற்றிய உறுதிப் பாட்டை கேட்கிறேன்! இரவிலும் பகலிலும் உன்னை திக்ரு செய்கிற நாவைக் கேட்கிறேன்! நல்ல அமல்களை செய்யும் தவ்ஃபீக்கை உன்னிடம் கேட்கின்றேன்! அல்லாஹ்வே! நீயே! வழங்கியருள வேண்டும் என்று உன்னிடம் கேட்கிறேன்!". ( நூல்: அல் மர்ஜிவு அஸ் ஸாபிக் லிஷ் ஷவ்கானீ (ரஹ்).. )

 

عن إبراهيم التيمي قال:” قال رجل عند عمر رضي الله عنه: اللهم اجعلني من القليل، قال: فقال عمر: ما هذا الذي تدعو به؟ فقال: إني سمعت الله يقول: (وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ‌)[1]، فأنا أدعو أن يجعلني من أولئك القليل، قال: فقال عمر: كل الناس أعلم من عمر

உமர் ரலி அவர்கள் தங்களது ஆட்சியின் போது மஸ்ஜித் நபவீயில் அமர்ந்திருக்கும் போது ஒரு மனிதர் துஆக் கேட்டுக் கொண்டு இருந்தார்.

அவருடைய துஆ சற்று வித்தியாசமாக இருந்ததை உணர்ந்த உமர் ரலி அவர்கள் அவர் துஆக் கேட்டு முடித்ததும் அவரை அருகே அழைத்து நீர் கேட்ட துஆவை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றார்கள்.

அதற்கவர், அல்லாஹ்வே! நீ என்னை குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக!" என்று கேட்டேன் என்றார்.

அது என்ன? குறைவானவர்களில் ஒருவன், புரியவில்லையே! என்றார்கள் உமர் ரலி அவர்கள்.

அப்போது அவர் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் "தனது அருள்மறையின் ஸபா அத்தியாயத்தின் 13 வது வசனத்தில் என் அடியார்கள்களில் எனக்கு நன்றி செலுத்துபவர்கள் குறைவானவர்களே!" என்று சொல்வதை நான் கேட்டுள்ளேன். ஆகவே, தான் நான் இப்படி துஆ செய்தேன் என்றார்கள்.

அதற்கு உமர் ரலி அவர்கள் "உமரை விட இங்கே மக்கள் எல்லோரும் மிக தெரிந்தவர்களாகவே இருக்கின்றார்கள்" என்றார்கள். ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா )

روى البخاري في صحيحه عن زيد بن أسلم عن أبيه عن عمر - رضي الله عنه - قال: اللهم ارزقني شهادة في سبيلك، واجعل موتي في بلد رسولك - ﷺ -، فاستجاب الله - تعالى - له، فجعل موته في المدينة، واستشهد فيها بعد ما قتله المجوسي أبو لؤلوة - لعنه الله

உமர் ரலி அவர்கள் அல்லாஹ்வே! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை தருவாயாக! யா அல்லாஹ்! உன்னுடைய தூதர் அவர்களின் ஊரான இந்த மதீனாவிலே எனக்கு மரணத்தை தருவாயாக!" என்று துஆக் கேட்டார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் துஆவை ஏற்றுக் கொண்டு மதீனாவிலேயே மரணத்தை நல்கினான். அபூலுஃலுவுல் ஃபைரோஸி என்பவனால் கொல்லப்பட்டு ஷஹீதுடைய அந்தஸ்தையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கினான். ( நூல்: புகாரி )

وصدقة الخلوة أحرى ما يكون قبولها، كان علية بن زيد رجلاً من أصحاب النبيّ - صلى اللَّه عليه وسلّم -، فلما حضّ على الصدقة جاء كلّ رجل منهم بطاقته وما عنده، فقال علية بن زيد: اللَّهمّ إنه ليس عندي ما أتصدّق به، اللَّهمّ إني أتصدّق بعرضي على من ناله من خلقك، فأمر رسول اللَّه - صلى اللَّه عليه وسلّم - منادياً، فنادى: أين المتصدق بعرضه البارحة؟ فقام علية، فقال: قد قبلت صدقتك. رواه ابن مردويه والبيهقي في الشعب بنحوه وله شاهد صحيح كما قال الحافظ.

நபி {ஸல்} அவர்கள் தபூக் யுத்தத்திற்கு புறப்படும் முன்பாக யுத்தத்திற்கு நிதி திரட்டும் முகமாக நபித்தோழர்களை அனுதினமும் ஆர்வமூட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் அவரவர் சக்திக்கு ஏற்ப பொருளாதாத்தை கொண்டு வந்து கொடுத்தனர். இந்த யுத்தத்தில் பங்கேற்க முடியாமலும், பொருளாதாரத்தை கொடுக்க முடியாமலும் ஏழ்மையில் வாடிய உல்பா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் இதற்காக மிகவும் வருந்தினார்கள். ஒவ்வொரு நாளும் தம் இயலாமையை நினைத்தும் கொடுக்க முடியவில்லையே என நினைத்தும் வேதனை அடைந்தார்கள்.

அன்றொரு நாள் தஹஜ்ஜத் தொழுது விட்டு "அல்லாஹ்வே! என்னுடைய மானத்தை உனக்காக தர்மம் செய்கிறேன். என்னுடைய இந்த நிலை கண்டு விமர்சித்தோர், கேலி பேசியோர் என உம் படைப்புகளில் என்னோடு நடந்து கொண்டவர்களோடு நான் மனம் பொறுத்தவைகளுக்காக நீ தரும் கூலியை உன் பாதையில் தர்மம் செய்கிறேன்! என்று அழுது மன்றாடினார்கள்.

அன்றைய சுபுஹ் தொழுகையின் ஜமாஅத் தொழுகையிலும் பங்கேற்றார். தொழுது முடித்ததும் நபி ஸல் அவர்கள் ஒரு நபித்தோழரை அழைத்து "இன்று அதிகாலை நேரத்தில் அல்லாஹ்விடம் இன்னின்னவாறு பிரார்த்தனை செய்த மனிதர் இங்கு இருக்கிறாரா?" என்று அறிவிக்கச் சொன்னார்கள். அந்த நபித்தோழர் அறிவித்ததும் "உல்பா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் எழுந்து தாம் தான் அப்படி பிரார்த்தித்ததாக" கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உம்முடைய தர்மத்தை ஏற்றுக் கொண்டான்" என்று கூறினார்கள். (நூல்: அல் இஸாபா )

உலகைத் துறந்த ஆத்ம ஞானி இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் ஒரு முறை ஒரு துறைமுகத்தின் அருகே அமர்ந்து தமது கிழிந்த தங்களது துணியை தைத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அங்கே ஒரு கப்பல் வந்து நின்றது. கப்பலில் பயணம் செய்த சிலர் மேள தாளங்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

அந்த காலத்தில் ஒரு பழக்கம் இருந்தது. ஆடல் பாடலின் ஊடே நடுவே ஒருவரை அமர வைத்து இரு கன்னங்களிலும் மாறி, மாறி அறைந்து அவரை அழ வைத்து ரசிக்கின்ற கொடிய பழக்கம்.

ஞானி இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களை அழைத்துச் சென்று நடுவே அமர வைத்து தங்களின் கொடூர ரசனையை ரசிக்க ஆரம்பித்தனர்.

அல்லாஹ்வின் நேசரல்லவா அவர்கள்.? ஓர் அசரீரி கேட்டது: உங்களுடன் இப்படி நடந்து கொள்கின்றார்களே? நீங்கள் விரும்பினால் இந்தக் கப்பலை அப்படியே புரட்டி, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விடுகின்றேன்.

இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் கையேந்தி இப்படித் துஆ செய்தார்களாம்: இறைவா! நீ இக்கப்பலைப் புரட்டி இவர்களை அழித்திடும் ஆற்றல் பெற்றிருப்பதைப் போன்றே, இவர்களின் கல்புகளைப் புரட்டி இவர்களை சீர் திருத்தும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றாய்! இறைவா! இவர்களின் அறிவுக் கண்களை நீ திறந்து விடு! அவர்கள் தமது தவறுகளை உணரும் பொருட்டு…”

சிறிது நேரத்திலேயே அவர்கள் தங்களின் தீய நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோரினர். சிறிது காலத்திலேயே இறை நேசத்திற்குரிய வாழ்வை வாழ ஆரம்பித்து விட்டனர். ( நூல்: ஃபகீஹுல் உம்மத் மஹ்மூது ஹஸன் கங்கோஹி அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பான குதுபாத்தே மஹ்மூத்எனும் உர்தூ நூலிலிருந்து.. )

Friday, 6 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 18. மனிதனே! நீ யார்?

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 18.

மனிதனே! நீ யார்?



17 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 18 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 9 வசனங்கள் உட்பட ஸபஃ அத்தியாயம், அல் ஃபாத்திர் அத்தியாயம் மற்றும் யாஸீன், அஸ் ஸாஃப்ஃபாத் அத்தியாயங்கள் என 373 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

இன்றைய அமர்வில் நாம் தராவீஹ் சிந்தனையாக இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அஹ்ஸாப் அத்தியாயத்தின் 72 வது வசனத்தில் மனிதனைக் குறித்த அல்லாஹ்வின் விமர்சனத்தை பற்றி பார்க்க இருக்கிறோம்.

குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனிடம் காணப்படும் ஒன்பது குணங்களை பட்டியலிடுகின்றான். அதில் இன்று ஓதப்பட்ட அஹ்ஸாப் அத்தியாயத்தின் 72 வது வசனத்தில் கூறப்படும் குணமும் ஒன்றாகும்.

1) பலகீனமானவனாக...

 وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفً

மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். ( அல் குர்ஆன்: 4: 28 )

2. பொறுமையின்மை உள்ளவனாக.

إِنَّ الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا

நிச்சயமாக மனிதன் பதற்றம் கொண்டவனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

( அல் குர்ஆன்: 70: 19 )

3. அவசரக்காரனாக...

خُلِقَ الْإِنسَانُ مِنْ عَجَلٍ

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்;( அல்குர்ஆன்: 21: 37 )

وَكَانَ الْإِنسَانُ عَجُولًا

மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 17: வசனம் 11)

4. அநியாயக்காரனாக..

إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ

நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 14: 34 )

5. நன்றிகெட்டவனாக…

وَكَانَ الْإِنسَانُ كَفُورًا

இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.

( அல்குர்ஆன்: 17: 67 )

إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ

நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். ( அல்குர்ஆன்: 22: 66 )

إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 100: 6 )

6. நிராகரிப்பாளனாக..

إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُّبِينٌ

நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 43: 15 )

7. கஞ்சனாக..

وَكَانَ الْإِنسَانُ قَتُورًا

மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்( அல்குர்ஆன்: 17: 100 )

8. சர்ச்சைக்குரியவனாக மற்றும் தர்க்கம் செய்பவனாக..

وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا

எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 18: 54 )

9. அறிவிலியாக..

إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا

நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 33: 72 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதன் குறித்து அடையாளப் படுத்தி கூறியிருக்கும் எந்தக் குணமும் அவ்வளவு நல்ல குணங்கள் அல்ல.

இந்தக் குணங்களில் எந்த குணத்தை கொண்டவனாகவும் ஒரு முஸ்லிம் இருந்து விடக் கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

1)   மனிதர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம் ஆனால், ஒரு முஸ்லிம் இறைநம்பிக்கையிலும், உடல் வலிமையிலும், மன உறுதியிலும் பலமானவனாக இருக்க வேண்டும்.

 

عن ابي هريرة قال: قال رسول اللَّهِ ﷺ:- الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا

وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- பலஹீனமான முஃமினை விட பலமான முஃமின் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவன். இருவரில் நன்மை உண்டு. அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள் சோர்வடைய வேண்டாம் நீங்கள் ஆசை பட்டு அது கிடைக்காமல் மீறி நடந்தால் நான் இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாதீர்கள். அல்லாஹ் நாடியதே நடக்கும்! 

(அது செய்திருந்தால் இது செய்திருந்தால் என்ற வார்த்தை) ஷைத்தானின் அமல்களை திறந்து விடும்" என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லீம் )

ஈமானில் பலம்...

أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَ:- أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِالْعِضَاهِ ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ سَمُرَةٍ، وَعَلَّقَ بِهَا سَيْفَهُ، وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا، وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ، فَقَالَ : ” إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتًا ، فَقَالَ :مَنْ يَمْنَعُكَ مِنِّي ؟ فَقُلْتُ : اللَّهُ ” ثَلَاثًا. وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்: நான் இறைத்தூதர் அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர் அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர் அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது, இறைத்தூதர் அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது நபி அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், ‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்என்று கூறினார்கள். பிறகு அவரை நபி அவர்கள் தண்டிக்கவில்லை (மன்னித்துவிட்டுவிட்டார்கள்.) ( நூல்: புகாரி )

உடல் பலம்..

روى الشيخان عن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما قال: كنت أصوم الدهر، وأقرأ القرآن كل ليلة، قال: فإمَّا ذُكِرت للنبي صلى الله عليه وسلم، وإمَّا أرسل إليَّ فأتيتُه، فقال لي: ((ألم أُخبر أنك تصوم الدهر، وتقرأ القرآن كل ليلة؟))، فقلت: بلى يا نبي الله، ولم أرد بذلك إلا الخير، قال: ((فإن بحسبك أن تصوم من كل شهر ثلاثة أيام))، قلت: يا نبي الله، إني أُطيق أفضل من ذلك، قال: ((فإن لزوجك عليك حقًّا، ولزَوْرِكَ عليك حقًّا، ولجسدك عليك حقًّا))، قال: ((فصم صوم داود نبي الله صلى الله عليه وسلم، فإنه كان أعْبَدَ الناس))، قال: قلت: يا نبي الله، وما صوم داود؟ قال: ((كان يصوم يومًا، ويفطر يومًا)) قال: ((واقرأ القرآن في كل شهر))، قال قلت: يا نبي الله، إني أُطيق أفضل من ذلك، قال: ((فاقرأه في كل عشرين))، قال قلت: يا نبي الله، إني أطيق أفضل من ذلك، قال: ((فاقرأه في كل عشر))، قال قلت: يا نبي الله، إني أطيق أفضل من ذلك، قال: ((فاقرأه في كل سبع، ولا تزد على ذلك؛ فإن لزوجك عليك حقًّا، ولزورك عليك حقًّا، ولجسدك عليك حقًّا))، قال: فشدَّدْتُ فشدَّدَ عليَّ، قال: وقال لي النبي صلى الله عليه وسلم: ((إنك لا تدري، لعلك يطول بك عمر))، قال: فصرت إلى الذي قال لي النبي صلى الله عليه وسلم، فلما كبِرت وَدِدْتُ أني كنت قبلت رخصةَ نبي الله صلى الله عليه وسلم؛ (البخاري، حديث: 1975 /مسلم حديث:1159).

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நான் உயிரோடு வாழும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்பேன்; இரவெல்லாம் நின்று வழி படுவேன்" என்று நான் சொல்லிக் கொண்டிருந்த செய்தி அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (என்னிடம்), "நீர் இவ்வாறு கூறினீரா?" என்று கேட்டார்கள். "நான் அவ்வாறு கூறத்தான் செய்தேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அதற்கு அவர்கள், "இது உம்மால் முடியாது; (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள் நோன்பை) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) உறங்குவீராக! (சிறிது நேரம்) நின்று வழிபடுவீராக! மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள்வீராக! ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அதைப் போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோன்பு நோற்பதற்குச் சமமாகும்.) இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று சொன்னார்கள்.

நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்யமுடியும்!" என்று கூறினேன். "(அப்படியானால்) ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று அவர்கள் கூறினார்கள். நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய முடியும், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னேன். "(அப்படியானால்) ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவீராக! இதுதான் (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே நடுநிலையானதாகும்" என்று கூறினார்கள். "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய முடியும்" என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "அதைவிடச் சிறந்தது எதுவுமில்லை" என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிட்ட மூன்று நாட்களை நான் ஏற்றுக் கொண்டிருப்பது, என் மனைவி மக்களையும் என் சொத்து பத்துக்களையும்விட எனக்கு மிகவும் விருப்பானதாகும் (என்பதை முதுமையடைந்துவிட்ட இந்நிலையில் உணர்கிறேன்). ( நூல்: புகாரி )

2)   மனிதர்கள் அவசரக்காரர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம் அப்படி இருக்கக்கூடாது.

وقال عليه الصلاة والسلام: (التأني من الله، والعجلة من الشيطان

நிதானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளது. அவசரம் ஷைத்தானின் குணங்களில் இருந்தும் உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள்.

மனிதனை தாழ்வு படுத்துகிற எல்லா அம்சங்களும் அவசரத்தில் இருக்கிறது என்பதால் தான் பெருமானார் அவர்கள் அவசரம் சைத்தானின் குணம் என்றார்கள்.

وقال عمرو بن العاص: لا يزال المرء يجتني من ثمرة العجلة الندامة.

அவசரப்படுதலின் முடிவை கவலையாகவே மனிதர்கள் பெற்றுக் கொள்வார்கள் என அம்ரு பின் ஆஸ் ரலி கூறினார்கள்

அவசரத்திற்கான தீமையை பெருமானார் அவர்கள் இப்படியும் உணர்த்தினார்கள்.

يستجاب للعبد ما لم يستعجل

அவசரப் படாதவரை மக்களின் துஆ ஏற்கப்படும்.

இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய தகவல் அவசரம் என்பதன் பொருள் நேரம் வருதற்கு முன் அல்லது ஒரு காரியம் நிறைவடைவதற்கு முன் அதற்கு முந்துவதாகும். 

عن عمر بن عبد العزيز أن ابنه عبد الملك قال له: "ما لك لا تنفذ الأمور؟ فوالله ما أبالي لو أن القدور غلت بي وبك في الحق". قال له عمر: "لا تعجل يا بني، فإن الله ذم الخمر في القرآن مرتين، وحرمها في الثالثة، وإني أخاف أن أحمل الحق على الناس جملة، فيدفعوه جملة، ويكون من ذا فتنة".

உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் பெரும் அரசியல் குழப்பங்கள், ஊழல் மோசடிகள், பிரச்சினைகள் நிறைந்த சூழலிலேயே கலீபா பதவியை ஏற்றார்கள். எனினும் அப்பிரச்சினைகளையும் மோசடிகளையும் உடனடியாக முற்றுமுழுதாக மாற்றும் முயற்சியில் அல்லது தடுக்கும் செயல்பாட்டில் அவர் இறங்கவில்லை. படிப்படியாகவே அவற்றை ஒழித்தார்கள். ஒருமுறை உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களிடம் அவருடைய மகன் கேட்டார்: தந்தையே எதற்காக நீங்கள் தயங்குகின்றீர்கள்? பிரச்சினைகளை உடனடியாக முடிக்க வேண்டியதுதானே. உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் என்ன தயக்கம்?”. தந்தை கூறினார்: அருமை மகனே! நீ அவசரப்படுகின்றாய். மதுபானத்தை அல்லாஹ் இருமுறை இழிவுபடுத்தினான். பின்னர் மூன்றாம் முறையே அதனைத் தடை செய்தான். ஒரு விஷயம் உண்மையாகவே இருந்தாலும் மக்களின் மீது திணிப்பதை நான் பயப்படுகின்றேன். அவ்வாறு திணித்தால் மக்கள் ஒரேயடியாக மறுத்துவிடலாம் என்று நான் அஞ்சுகிறேன்”. ( நூல்: ஸீரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் லிஇமாமி இப்னு அப்துல் ஹிகம் ரஹ்)

3)   மனிதர்கள் அநியாயம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு முஸ்லிம் அநியாயம் செய்பவனாக இருக்க கூடாது.

يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا».

ஹதீஸே குதுஸி ஒன்றில் அல்லாஹ் கூறுகின்றான் ; என் அடியார்களே அநியாயம் செய்வதை என் மீது நான் தடை செய்து விட்டேன். உங்களிடையேயும் அதை நான் தடுத்திருக்கிறேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள். ( நூல்: முஸ்லிம் )

وعن ابن عمرَ رضي اللَّهُ عنهما: أَن رسولَ اللَّه ﷺ قَالَ: المسلمُ أَخو المسلم، لا يَظلِمُه، ولا يُسْلِمُهُ، ومَنْ كَانَ فِي حاجةِ أَخِيهِ كانَ اللَّهُ فِي حاجتِهِ، ومَنْ فَرَّجَ عَنْ مُسلمٍ كُرْبةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بها كُرْبةً مِنْ كُرَبِ يوم القيامةِ، وَمَنْ سَتَرَ مُسْلمًا سَتَرَهُ اللَّهُ يَومَ الْقِيامَةِ مُتَّفَقٌ عَلَيهِ

நபி அவர்கள் கூறினார்கள்:- ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமைநாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். அறிவிப்பவர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ( நூல்: முஸ்லிம் )

இஸ்லாம் அநியாயம் செய்வதை மூன்று வகையாக வகைப்படுத்துகிறது. 1,மனிதன் இறைவனுக்குச் செய்கின்ற அநியாயம். 2. ஒரு மனிதன் தனக்குத் தானே செய்து கொள்கின்ற அநியாயம். 3. ஒரு மனிதன் பிற மனிதர்களுக்கு செய்கின்ற அநியாயம்.

நபி அவர்கள் எவருக்கும் அநியாயம் செய்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள்.

عن عبدِ اللَّهِ بنِ مسعودٍ قالَ كُنَّا يومَ بدرٍ كلُّ ثلاثةٍ على بعيرٍ كانَ أبو لبابةَ وعليُّ بنُ أبي طالبٍ زميلَي رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ قالَ وكانت عُقبَةُ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ قالَ فقالا نحنُ نمشي عنكَ قالَ ما أنتما بأقوى منِّي ولا أنا بأغنى عنِ الأجرِ منكما

நாங்கள் பத்ர் யுத்தத்தின் பயணத்தில் இருந்தோம். ஒட்டகங்கள் குறைவாக இருந்ததினால் மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்று நபி அவர்களால் எங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அதில் மூவரும் முறை வைத்து பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் அபூலுபாபா (ரலி), அலி (ரலி), நபி அவர்கள் ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் ஒதுக்கப்பட்டது.

இருவர் ஒட்டகத்தின் மீது அமர வேண்டும். ஒருவர் ஒட்டகத்தை வழிநடத்த வேண்டும். இது தான் முறை. ஆனால், அந்த இரு நபித்தோழர்களும் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஒட்டகத்தில் இருந்து இறங்க வேண்டாம். நீங்களே அதில் பயணித்து வாருங்கள்! நாங்கள் இருவரும் இறங்கிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அப்போது, நபி அவர்கள் நீங்கள் இருவரும் என்னை விட பலசாலிகளும் அல்ல. மேலும் நன்மையைப் பெறுவதில் நான் ஒன்றும் தேவையற்றவனும் அல்ல என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மது )

4)   மனிதர்கள் நன்றி கெட்டவர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம் நன்றி கெட்டவனாக இருக்க கூடாது.

أحد السلف كان أقرع الرأس .. أبرص البدن .. أعمى العينين .. مشلول القدمين واليدين .. وكان يقول: ("الحمد لله الذي عافاني مما ابتلى به كثيراً ممن خلق، وفضلني تفضيلاً"). فمر به رجل فقال له: مما عافاك؟؟ أعمى وأبرص وأقرع ومشلول .. فمما عافاك؟ >فقال: ويحك يا رجل؛ جعل لي لساناً ذاكراً، وقلباً شاكراً، وبدناً على البلاء صابراً، اللهم ما أصبح بي من نعمه أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك، فلك الحمد ولك الشكر.

முன் வாழ்ந்து மறைந்த ஸலஃபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவர் வழுக்கைத் தலை உடையவராகவும், உடல் குஷ்டரோகமுடையவராகவும், இரு கண்கள் பார்வையற்றவராகவும், இரு பாதங்கள் மற்றும் இரு கைகளும் இயங்காதபடி சூம்பிப்போனவராகவும் இருந்தார். அவர், “படைத்த படைப்பினங்களில் அதிகமானோரைச் சோதித்ததை விட்டு என்னைப் பாதுகாத்துச் சுகமளித்ததோடு, என்னை நன்றாகவே சிறப்பித்திருக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!என்று கூறக்கூடியவராக இருந்தார்.

 

அப்போது, அவருக்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவர் அவரிடம்: எதைக்கொண்டு அல்லாஹ் உங்களுக்குப் பாதுகாப்பும் சுகமும் அளித்திருக்கின்றான்? நீங்கள் ஓர் குருடர்; குஷ்டரோகமுடையவர்; வழுக்கைத் தலையர்; இயங்காதபடி கைகளும் பாதங்களும் சூம்பிப்போனவர்; இப்படியிருக்க, எப்படி அல்லாஹ் உங்களுக்குப் பாதுகாப்பும் சுகமும் அளித்திருக்கின்றான்?” என்று கேட்டார். அதற்கு அவர், “மனிதரே! உமக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! பேசும் நாவையும், நன்றி செலுத்தும் உள்ளத்தையும், சோதனையைப் பொறுமையுடன் தாங்கிக்கொள்வதற்கான உடலையும் அல்லாஹ் எனக்குத் தந்திருக்கின்றானே!என்று கூறினார்.

5)   மனிதர்கள் தர்க்கம் செய்பவர்களாக இருப்பார்கள் ஆனால் ஒரு முஸ்லிம் தர்க்கம் செய்பவனாக இருக்க கூடாது.

أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ طَرَقَهُ وفَاطِمَةَ بنْتَ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ لَيْلَةً، فَقالَ لهمْ: ألَا تُصَلُّونَ، قالَ عَلِيٌّ: فَقُلتُ: يا رَسولَ اللَّهِ، إنَّما أنْفُسُنَا بيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ حِينَ قُلتُ ذلكَ، ولَمْ يَرْجِعْ إلَيَّ شيئًا، ثُمَّ سَمِعْتُهُ وهو مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ ويقولُ: {وَكانَ الإنْسَانُ أكْثَرَ شيءٍ جَدَلًا} [الكهف: 54]. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : علي بن أبي طالب | المحدث : البخاري | المصدر : صحيح البخاري

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம் நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா? என்று கேட்டார்கள். நான். அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான் என்று சொன்னேன்.

நான் இப்படிச் சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு நபி அவர்கள் திரும்பிச் சென்றபடி தமது தொடையில் தட்டிக்கொண்டே மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான் என்று சொல்லி கொண்டிருந்ததை நான் கேட்டேன். அறிவிப்பவர்: அலீ (ரலி) ( நூல்: புகாரி )

وقال البخاري: حدثنا يسرة بن صفوان اللخمي، حدثنا نافع بن عمر، عن ابن أبي مليكة، قال: كاد الخيران أن يهلكا، أبو بكر، وعمر رضي الله عنهما، رفعا أصواتهما عند النبي ﷺ حين قدم عليه ركب بني تميم، فأشار أحدهما بالأقرع بن حابس أخي بني مجاشع، وأشار الآخر برجل آخر، قال نافع: لا أحفظ اسمه، فقال أبو بكر لعمر رضي الله عنهما: ما أردت إلا خلافي، قال: ما أردت خلافك، فارتفعت أصواتهما في ذلك فأنزل الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ الآية، قال ابن الزبير رضي الله عنهما فما كان عمر يسمع رسول الله ﷺ بعد هذه الآية حتى يستفهمه، ولم يذكر ذلك عن أبيه يعني أبا بكر انفرد به دون مسلم

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அறிவித்தார்:- பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூபக்ர் (ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘இல்லை; அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்என்று கூறினார்கள். அபூபக்ர்(ரலி) (உமர் அவர்களிடம்), ‘நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்என்று சொல்ல, உமர் (ரலி), ‘உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்லஎன்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, ‘இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முன்னர் (கருத்துக் கூற) முந்தாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்எனும் (திருக்குர்ஆன் 49:1) வசனம் அருளப்பட்டது. ( நூல்: புகாரி )

6)   மனிதர்கள் அறிவீனர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம் அறிவீனனாக இருக்க கூடாது.

قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ 

மூஸா கூறினார் அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்என்று கூறினார். ( அல்குர்ஆன்: 2: 67 )

وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَٰهِلِينَ﴿12:33﴾

(அதற்கு) யூசுஃப், "என் இறைவனே! இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். ( அல்குர்ஆன்: 12: 33 )

அறியாமையை அகற்றும் மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக ஒரு குழுவினர் தம்மை அர்ப்பணிப்பது அவசியம் என்ற கருத்து பின்வரும் குர்ஆன் வசனத்திலிருந்து தெரிய வருகிறது:

وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ

'விசுவாசிகள் அனைவருமே (மதீனாவிலிருந்து) யுத்தத்திற்காகச் செல்ல வேண்டியதில்லை. அவர்களது ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருசாரார் மார்க்கத்தில் ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வெளியேறிச் சென்றிருக்கக்கூடாதா? அவர்களது சமூகத்தவர்கள் (ஜிஹாதிலிருந்து) அவர்களிடம் திரும்பிவந்தவுடன் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாமல்லவா? (இதன் மூலம்) அவர்கள் (அந்த அவர்களது சமூகம்;) எச்சரிக்கையாக நடந்துகொள்ளலாம் '( அல்குர்ஆன்: 9: 122 )

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் "அறிவின்றி செயல்படுபவன் சீர்திருத்துவதை விட அதிகமாக சீர்குலைப்பான்" என்றார்கள்.

قال الإمام أحمد: ولولا العلم كان الناس كالبهائم، وقال أيضا: الناس أحوج إلى العلم منهم إلى الطعام والشراب؛ لأن الطعام والشراب يحتاج إليه في اليوم مرتين أو ثلاثا، وحاجته إلى العلم بعدد أنفاسه"، 

من كتاب أعلام الموقعين لابن القيم ج2 ص 182.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: மனிதர்கள் உணவு குடிபானத்தைவிட அறிவின் பால் அதிக தேவையுடையவர்கள். ஏனெனில், மனிதன் ஒரு நாளில் உணவு மற்றும் குடிபானம் போன்றவற்றில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் தேவையுடையவனாக இருக்கின்றான். மாற்றமாக, அவன் அறிவின்பால் ஒரு நாளில் விடும் மூச்சுக்களின் அளவு தேவையுடையவனாக இருக்கின்றான்”. ( அல்-ஆதாபுஷ் ஷரீஆ)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا، يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا ‏"‏‏. قَالَ الْفِرَبْرِيُّ حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ هِشَامٍ نَحْوَهُ‏.‏

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத்தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழிகெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கெடுப்பார்கள். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: புகாரி )

மனித சமுதாயமே! உன் நிலையைப்பற்றி இவ்வளவு தெளிவாக மாமறை கூறுகிறதே! உன் வாழ்கையை எப்படி அமைத்துக்கொள்ள போகிறாய்? என்ற இந்த கேள்வியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து, இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!