என் இறைவனின்
ஆற்றலுக்கு முன்னால்
புல்டோசர்கள் என்ன
செய்து விடும்?
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் எங்களின் RedLine
அதை தொட்டால் ஒருக்காலும் முஸ்லிம்கள்
பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்த்தியுள்ளார்கள். தொடர்ந்து
உணர்த்தவும் செய்வார்கள்.
எதிர்காலத்தில் நவீன
ஃபிர்அவ்ன்கள் தோன்றுவார்கள், அவர்களின் இரும்புக்கரம் இன்னும் கொடூரமாக
கட்டவிழ்த்து விடப்படும் என்பது நிதர்சனமாக காட்சியளிக்கின்றது.
எனினும் எவ்வளவு
காலத்திற்கு இந்த அநீதம் அரங்கேறும்? என்ற பலகீனமான
குரல் ஒலிக்காமல் இல்லை. ஆனாலும்,
நிச்சயமாக துன்பத்திற்கு பின் இன்பம் வரவே செய்யும், நீண்ட
இருளின் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் படர்ந்து விடியல் வரவே செய்யும் என்பது தான் இறைவன் வகுத்திருக்கும் நியதி.
இந்த உலகில்
அநீதமும், அநியாயமும் மிகைக்கும் போதெல்லாம் நீதியும், நியாமும் தான்
வென்றிருக்கின்றது. அநியாயக்காரர்களின் வெற்றியும், அக்கிரமமும் சிறிது காலமே
அன்றி நிலைத்ததில்லை.
போரடத்தூண்டுவது,
அடக்குமுறையை கட்டவிழ்த்து ஒடுக்குவது என சமகால இந்தியாவில் முஸ்லிம் சமூகம் எதிர்
கொண்டு வரும் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கின்றது.
அப்படித்தான் அண்மையில்
முஸ்லிம் சமூகம் சந்தித்திருக்கும் “புல்டோசர்” விவகாரமும் புதிதாய்
இணைந்திருக்கின்றது. இந்த நேரத்தில் பலரும் டுவீட் செய்துள்ள நம்மை
ஆசுவாசப்படுத்தும் உருது கவிதை ஒன்றை நினைவூட்டுகின்றேன்.
Lashkar
bhi Tumhara hai.... Kanoon bhi Tumhara hai
Tum jhoot
ko sach likhdo... Akhbar bhi Tumhara hai
Khoon e
Mazlum ziyada din nahi bahne wala.....
Zulm ka
daur bahut din nahi rahne wala.....
In andhero
ka jigar cheerkar noor aayega....
Tum ho
Firaun.... Tum ho Firaun....
To Moosa
bhi zaroor aayega....
படைபட்டாளங்களும் உங்கள்வசம் .......... சட்டமும் உங்கள்வசம்.......
பொய்யை உண்மை என்று எழுதிக்கொள்ளுங்கள்......
ஏனெனில், ஊடகமும் உங்கள்வசம் .....
ஒடுக்கப்பட்டவர்களின் உதிரம் நீண்ட நாள் சிந்தப்பட
போவதில்லை ....
அநீதியின் அவலம் நீண்ட நாள் நிலைக்க போவதில்லை .....
இருளின் இரும்புத்திரைகளை கிழித்துக்கொண்டு ஒளி வந்தே
தீரும்
நீ ஃபிர்அவுன் என்றால்.......
நீ ஃபிர்அவுன் என்றால்........
மூஸாவும் ஒரு நாள் வந்தே தீருவார்! இன்ஷாஅல்லாஹ்...
ஜனநாயக வழியில் போராட வீதிக்கு வந்தால்
திரும்பி செல்ல வீடிருக்காது என்று புதிய விதியை எழுதுகிறது ஃபாசிஸ பாஜக.
புல்டோசர் அரசியல் வரலாறு
புல்டோஸரை உருவாக்கிய அமெரிக்க விவசாயிகளான ஜேம்ஸ்
கம்மிங்ஸும் ஜே. ஏர்ல் மெக்லியோட்டும் அது ஒரு அரசியல் குறியீடாக, ஆயுதமாக உருவாகுமென கனவில்கூட கற்பனை செய்திருக்கமாட்டார்கள். பா.ஜ.க.வின்
புதிய அரசியல் அடையாளமாய் வேகமாக உருவெடுத்து வருகிறது புல்டோஸர். உத்திரப்பிரதேச
அரசியலில் உருவெடுத்த இந்த புல்டோசர் கலாச்சாரம் தற்போது பாஜக ஆளும் பல
மாநிலங்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே புல்டோசர் நடவடிக்கை
என்பது அதிகம் காணப்படும் ஒன்றாகிவிட்டது. நாட்டையே அதிர வைக்கும் இந்த புல்டோசர்
அரசியலின் வரலாற்றைச் சற்று பார்க்கலாம்.
புல்டோசர் நடவடிக்கை சுதந்திரம் காலத்திலேயே
பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட,
1970களில் தான் இந்த
புல்டோசர் நடவடிக்கையை முதலில் பேசுபொருளானது. அவசரக் காலத்தின் போது டெல்லி தலைமை
உத்தரவின் பேரில் டர்க்மேன் கேட் இடித்துத் தள்ளப்பட்டது.
அதன் பிறகு வந்த பல்வேறு அரசுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளைப்
பயன்படுத்தினாலும் கூட, இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது
யோகியின் உபி அரசு தான். 2017ஆம் ஆண்டு ஆட்சியை அமைத்த உடனேயே புல்டோசர்
நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. நில மாஃபியா, தேச விரோதிகள், சமூக விரோதிகளை ஒடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
சொல்லப்போனால், ஆட்சி அமைத்து முதல் 100 நாட்களில் ரூ 500 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க வேண்டும்
என்ற இலக்கும் உபி போலீசாருக்கு கொடுக்கப்பட்டது. இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கைகள்
மூலம் 2017-2022
காலகட்டத்தில் மட்டும் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்துகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது..
இந்த புல்டோசர்
நடவடிக்கை 2020
-இல் பிற மாநிலங்களுக்கும் பரவ தொடங்கியது. முதலில் மத்தியப்
பிரதேசத்தில் மாஃபியா மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு எதிராக
புல்டோசர் நடவடிக்கை தொடங்கியது
அதைத் தொடர்ந்து
குஜராத் மற்றும் டெல்லியிலும் கூட வன்முறையில் ஈடுபட்டவர்களின் இடங்களில்
புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குஜராத், உத்தரகண்ட், கர்நாடகா என பாஜக ஆளும் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை தொடங்கியது.
அனுமன் ஜெயந்தி
சமயத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் இதே புல்டோசர் நடவடிக்கைகள்
பாய்ந்தது. இதேபோல பல்வேறு பாஜக ஆளும் மாநிலங்களிலும் புல்டோசர் நடவடிக்கை
எடுத்தது.
அதேபோல ராஜஸ்தானிலும்
கூட புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராஜஸ்தானில் இப்போது பாஜக அரசு ஆட்சியில்
இருந்தாலும் கூட புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்ட முனிசிபல் பாஜக கட்டுப்பாட்டில்
இருந்தது. அங்கும் கூட வன்முறையாளர்களை ஒடுக்க புல்டோசர் நடவடிக்கை
எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது
புல்டோசர்
நடவடிக்கைகள் என்பது குற்றவாளிகளையும் வன்முறையாளர்களையும் ஒடுக்கவே பயன்படுவதாகக்
கூறப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற புல்டோசர்
நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம் சமூகத்தினரை) மதத்தினரை நோக்கி மட்டுமே
இருப்பதாக சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் புறம் தள்ளும் வகையில்
இல்லை.
( நன்றி: 13/06/2022
ஒன் இந்தியா தமிழ் )
புல்டோசர்
அரசியலுக்கு எதிராக நாட்டின் மிக முக்கியமான முன்னாள் நீதிபதிகளிடம் இருந்து
துவக்கமாக கண்டனம் வந்ததோடு, கவன ஈர்ப்பு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது ஆறுதலைத் தருகின்றது.
உத்தரபிரதேசத்தில்
அரசின் நடவடிக்கைகளை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட 12 பேர் அவசர கடிதம் எழுதியுள்ளனர்.
உச்சநீதிமன்ற
முன்னாள் நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி,வி.கோபால கவுடா, ஏ.கே கங்குலி,
டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, முஹம்மது அன்வர், மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய்சிங்,
ஸ்ரீராம் பன்சு, ஆனந்த் குரோவர், பிரஷாந்த் பூஷன் ஆகியோர் இந்த அவசர கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
தலைமை நீதிபதி NV ரமணாவிற்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில்;
போராட்டக்காரர்களிடம்
அமைதியான பேச்ச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதை விடுத்து தனிநபர் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள்
தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகவே எடுக்கப்படுகின்றன. போராட்டக்காரர்களை
ஒடுக்கவும்,
சித்திரவதை செய்வதற்கும் காவல்துறைக்கு மாநில அரசு தைரியம்
அளித்துள்ளது.
போலீஸ் காவலில்
உள்ள இளைஞர்களை லத்தியால் தாக்குவது, போராட்டக்கார்களின்
வீடுகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இடிக்கப்படுவது, சிறுபான்மை இஸ்லாமிய போராட்டக்காரர்களை காவல்துறையினர் விரட்டியடிக்கும்
வீடியோ காட்சிகள் மனசாட்சியை உலுக்குகின்றன” என ஓய்வுபெற்ற நீதிபதிகள்
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ( நன்றி: ஐ தமிழ் நியூஸ் 16/06/2022 )
என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கின்றது?..
13-6-2022 அன்று சென்னையைச்
சேர்ந்த உஸ்மான் காலித் என்கிற சகோதரர் ஒருவர்
எழுதிய பதிவிலிருந்து
நீ ஃபிர்அவுன் என்றால்!... மூஸாவும் வந்தே தீருவார்*
கான்பூரில்
நடந்தது என்ன?
விரிவாக பார்க்கலாம் என யோசிப்பதற்குள் அல்லஹாபாத், சஹாரன்பூர், ராஞ்சி என நாடு முழுவதும் அக்கிரமங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நபிகள்
நாயகம்(ஸல்) அவர்களை அவமதிக்கும் கூற்றிற்கு எதிராக கடந்த ஜூன் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை கான்பூர் எதீம்கானா, நயிசடக் வீதிகளில் முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுதுவிட்டு ஆர்ப்பாட்டம் செய்து தங்கள்
கண்டனத்தை பதிவுசெய்தனர். வீதியின் எதிரில் ஹிந்துத்துவ விஷமிகள் அதை எதிர்த்து
களமாடினார்கள். போலீசாரோ வழக்கம்போல் முஸ்லிம்களுக்கு எதிரே நின்று கொண்டிருந்ததை
எல்லா புகைப்படங்களும் காணொளிகளும் சாட்சி பகர்ந்தது.
தி வயர் (The
Wire ) ஊடகம் மிக விரிவான கவரேஜ் வழங்கி இருக்கிறது.
ஆயிரத்திற்கும் மேலான நபர்கள் மீது பாய்ந்தது FIR. நூறுக்கு மேல்
முஸ்லிம்களை கைது செய்தார்கள். தேடப்படும் நபர்கள் என புகைப்படங்களை கான்பூர்
நகரின் முக்கிய பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின்
முக்கிய சதிகாரர் என்ற பெயரில் மௌலானா முஹம்மத் அலி ஜௌஹர் ரசிகர் சங்கதின் தலைவர் ஹயாத் ஸஃபர் ஹாஷ்மி மற்றும்
சிலரை prime
accused ஆக காவல் துறை கருதியது அதனையடுத்து அவரது உறவினர் முஹம்மத்
இஷ்தியாக் என்பவரின் கட்டிடத்தை சட்ட
விரோதமானது என்ற கூற்றில் இடிக்கப்பட்டது.
கான்பூர் தொடக்கம்
என சொல்லலாம் அதன் பிறகு சென்ற வெள்ளிக்கிழமை ஜூன் 10ஆம் தேதி ஜும்ஆ தொழுகை தொழுது விட்டு முஸ்லிம்கள் தங்களது வீதிகளில் நபிகள் நாயகம்(ஸல்) மீது கூறப்பட்ட
அவச்சொற்களுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர். உ.பி யின் சஹாரன்பூர், அல்லஹாபாத்(ப்ரயாக்ராஜ்),
முராதாபாத் மேலும் தில்லி ஜாமிஆ மஸ்ஜிதிற்கு வெளியே கண்டனம்
நடைபெற்றது.
ஜார்கண்டின்
ராஞ்சி, மேற்குவங்கத்தில் ஹவ்ரா, ஹைதராபாத் சார்மினார் அருகில், லூதியானா, அவுரங்காபாத்,
குஜராத்தின் அஹமதாபாத், மும்பை மற்றும்
ஸ்ரீநகரின் பல்வேறு வீதிகள் என இந்தியாவின் இதயப்பகுதிகளில் முஸ்லிம்கள்
தன்னெழுச்சியாக கோஷத்தை எழுப்பி நபிகள் நாயகம் தங்கள் உயிரினும் மேலானவர் என
போற்றத்துவங்கினார்கள்.
முஸ்லிம்களுக்கு
எங்கிருந்து வந்தது தைரியம் என ஆராய துவங்கிய யோகியின் அரசு உ.பி முழுவதும் தனது
வேட்டையை துவங்கியது யாரெல்லாம் CAA, NRC க்கு எதிரான
போராட்டத்தில் முன்னணியில் நின்றார்களோ அவர்களையும் சேர்த்து வேட்டையாடியது.
அல்லஹாபாத்(ப்ரயாக்ராஜ்) நகரின் முக்கிய சமூக செயல்பாட்டாளர் மாணவி ஆஃப்ரீன்
ஃபாத்திமாவின் தந்தை ஜாவித் முஹம்மத் உட்பட பலரை கைது செய்து சனிக்கிழமை
வீட்டிற்கு முன் புல்டோசறை நிப்பாட்டியது யோகி அரசு.
காவல்துறையின் அறிவிப்பு படி சஹாரன்பூரில் 48 நபர்களும்,
அல்லஹாபாதில் 68 நபர்களும், ஹத்ராஸில் 50
நபர்களும், மொராதாபாதில் 25 நபர்களும்,
அம்பேத்கர் நகரில் 28 நபர்களும், ஃபெரோஸாபாத்தில் 8 நபர்களும் கைது
செய்யப்பட்டதாக
அல்ஜஸீரா, வயர்,
குவின்ட் ஊடகங்கள் தெரிவிக்கிறது(சனிக்கிழமை தகவலின் படி). தற்போதைய நிலவரப்படி 400 க்கும் குறையாமல்
கைது வேட்டை நடைபெற்றதை ஊடகங்கள் பதிவு செய்துள்ளது. 12/06/2022 (ஞாயிறு) ஐந்து
மணிநேர கால அவகாசத்தில் ஜாவித் முஹம்மதின் வீடு புல்டோசர் கொண்டு
தரைமட்டமாக்கப்பட்டது. இதைத்தான் யோகி ஆதித்யநாதின் ஊடக
ஆலோசகர் மிரித்தியுன்ஜே குமார் @MrityunjayUP தனது ட்விட்டர் பக்கத்தில் புல்டோசர் புகைப்படத்துடன்
"ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கு பின்பு சனிக்கிழமையும்
வரும்" என்று பதிவிட்டு வெறுப்பை உமிழ்ந்தார். அதேபோல் திரிபாதி என்ற MLA டீன் ஏஜ் இளைஞர்களை காவல்துறை ஒரு அறையில் வைத்து அடிக்கும் காணொளியை Return Gift to
rioters (போராட்டக்காரர்களுக்கான பதில் அன்பளிப்பு இது) என
ட்விட்டரில் பதிவிட்டு தனது விஷத்தை கக்கினார்.
டீன் ஏஜ்
இளைஞர்களை குறிவைத்து கைது செய்வது புல்டோசர் வைத்து வீடுகளை இடிப்பது இவையெல்லாம்
ஃபலஸ்தீனில் இஸ்ரேல் படையினரால் முஸ்லிம்கள் தினம் தினம் எதிர்கொள்ளும்
பிரச்சனையாக பார்த்துக்கொண்டிருந்தோம்.
சற்று யோசித்து
பாருங்கள் நம் கண்முன் நமது வீட்டை தரைமட்டமாக்கி வீதியில் நிற்கவைத்தால் நமது
மனநிலை எவ்வாறு இருக்கும்?
15 வயது முத்தஸ்ஸிர் 20 வயது சாஹில் இரண்டு இளைஞர்கள் ராஞ்சியில் காவல்துறையினரால்
சுட்டுக்கொல்லப்பட்டனர். என் மகன் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்காக ஷஹீத்
உயிர்தியாகம் செய்திருக்கிறான். நான் பெருமை படுகிறேன் என்று சொன்ன முத்தஸ்ஸிரின்
தாய் கூறிய வார்த்தைகள் நம் நெஞ்சை தொட்டுவிட்டது. இதுவரை இப்படிப்பட்ட
தாய்மார்களை ஃபலஸ்தீனில்தான் பார்த்து வந்தோம் தற்போது இந்தியாவிலும் வீரமங்கையை
கண்டுவருகிறோம்.
நடந்து வரும்
நிகழ்வுகள் எல்லாம் நமக்கு என்ன செய்தியை சொல்கிறது? நீண்ட நெடிய ஆராய்ச்சியெல்லாம் தேவை இல்லை. சற்று கண் திறந்து பார்த்தாலே
தெரிகிறது முஸ்லிம்களிடம் இன்னும் எழுச்சிக்கான துடிப்பு குடிகொண்டுதான் உள்ளது.
எந்த உ.பி முஸ்லிம்களை நாம் வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறோமோ அங்கு தான்
இவையெல்லாம் நடந்தேறியது. பல FIR கள், கைதுகள்,
UAPA, புல்டோசர், உயிரிழப்பு என
பன்முனைத்தாக்குதல் நடந்தாலும் இன்று முஸ்லிம்கள் எழுச்சிக்கான அலையின் ஒரு சிறிய
நூலை உலகிற்கு காண்பித்துளார்கள்.
இந்த நேரத்தில் நாம் மூன்று
விஷயங்களை உலகிற்கு உரத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.
1.
முஸ்லிம்கள் ஒரு போதும் அநியாயமாக நடக்க மாட்டார்கள்…
خَرَجَ عَبْدُ اللهِ بْنُ سَهْلِ بْنِ زَيْدٍ، وَمُحَيِّصَةُ بْنُ
مَسْعُودِ بْنِ زَيْدٍ، حَتَّى إِذَا كَانَا بِخَيْبَرَ تَفَرَّقَا فِي بَعْضِ مَا
هُنَالِكَ، ثُمَّ إِذَا مُحَيِّصَةُ يَجِدُ عَبْدَ اللهِ بْنَ سَهْلٍ قَتِيلًا
فَدَفَنَهُ، ثُمَّ أَقْبَلَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
هُوَ وَحُوَيِّصَةُ بْنُ مَسْعُودٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ، وَكَانَ
أَصْغَرَ الْقَوْمِ، فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ لِيَتَكَلَّمَ قَبْلَ
صَاحِبَيْهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كَبِّرِ الْكُبْرَ فِي السِّنِّ»، فَصَمَتَ، فَتَكَلَّمَ صَاحِبَاهُ، وَتَكَلَّمَ
مَعَهُمَا، فَذَكَرُوا لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتَلَ
عَبْدِ اللهِ بْنِ سَهْلٍ، فَقَالَ لَهُمْ: «أَتَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا
فَتَسْتَحِقُّونَ صَاحِبَكُمْ أَوْ قَاتِلَكُمْ»، قَالُوا: وَكَيْفَ نَحْلِفُ،
وَلَمْ نَشْهَدْ؟ قَالَ: «فَتُبْرِئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ يَمِينًا»، قَالُوا:
وَكَيْفَ نَقْبَلُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ؟ فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى عَقْلَهُ
அப்துல்லாஹ்
பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி)
அவர்களும் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு கைபர் சென்றடைந்தனர். அங்கு ஓரிடத்தில்
தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள்
(ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) அவர்கள் கண்டு, அவரை
(எடுத்து) அடக்கம் செய்தார்.
பின்னர்
அவரும் அவருடைய (சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்ட
வரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
அப்போது
அவர்கள் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அப்துல்லாஹ்
பின் சஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம்
செய்து, நீங்கள் “உங்கள்
(உயிரிழந்த) தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை’ அல்லது “உங்கள்
கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை’ எடுத்துக்கொள்கிறீர்களா?’’ என்று
கேட்டார்கள்.
அதற்கு
அவர்கள்,
“(கொலை நடந்த இடத்தில்) நாங்கள் இருக்கவில்லையே! நாங்கள்
எப்படிச் சத்தியம் செய்வோம்?’’ என்று
கேட்டார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே
அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை
வழங்கினார்கள். ( நூல்: முஸ்லிம் )
இந்த
செய்தி சொல்லும் பாடம் தான் எவ்வளவு அழகானது! தன்னுடைய முஸ்லிம் தோழர்களில் ஒருவரை
யாரோ கொன்று விட்டார்கள்! அந்தத் தோழரோ, இரத்த வெள்ளத்தில் மிதந்து
கொண்டிருக்கின்றார்.
இப்போது
நபி (ஸல்) அவர்களிடம் வழக்கு வருகின்றது. மேலும், அந்த முஸ்லிம் நபித்தோழர்
கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடம் என்பது, சுற்றிலும் முஸ்லிமல்லாத
யூதர்கள் வசிக்கின்ற பகுதியாகும்.
இப்போது
நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடத்தில் கேட்கின்றார்கள். ஐம்பது நபர்கள் சத்தியம்
செய்து இன்னார் தான் கொலை செய்தார் என்று சொல்லுங்கள்! என்று கேட்க, அதற்கு
அருமை தோழர்கள் சொன்ன பதில், நம்முடைய உரோமங்களையெல்லாம் சிலிர்க்க வைக்கின்றது.
அதாவது, நாங்கள்
கொலை நடந்த இடத்தில் இல்லாத போது, இன்னார் தான் கொலை செய்தார் என்று கண்கூடாகக் காணாத போது, எப்படி நாங்கள் சத்தியம்
செய்வோம் என்று கேட்பதன் மூலம், நாங்கள் நீதிக்குத்தான் சாட்சியானவர்கள்! அநீதிக்கும்,
அநியாயத்திற்கும் சாட்சியானவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
அதாவது
அந்த தோழர்கள் நினைத்திருந்தால் ஒரு ஐம்பது நபர்கள் பொய் சத்தியம் செய்து எதிரியாக
இருந்த யூதர்களில் ஒருவனுக்குத் தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால்
நீதியில் சங்கமித்த தோழர்கள் அப்படிப்பட்ட அநியாயத்தை எதிரியாக இருந்தாலும்
செய்வதற்குத் துளியளவு கூட எண்ணவில்லை.
இன்றளவும்
இந்த உம்மத் இதே பாட்டையில் தான் பயணித்து வருகின்றது. கண்ணுக்குத் தெரிந்த
எதிரிகளைக் கூட மன்னித்துக் கொண்டு இந்த உலகில் செய்வதறியாது வாழ்ந்து
கொண்டிருக்கின்றது.
ஈராக்,
ஃபலஸ்தீன், ஆஃப்கானிஸ்தான், மியான்மர், சீனாவின் உய்குர் முஸ்லிம்கள், செசன்யா
முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிரான போரில் ஈடுபட்டவர்களைத் தெரிந்தும் கூட இந்த
உம்மத் என்ன செய்து விட்டது?
பைத்துல்
முகத்தஸ், பாபரி மஸ்ஜித், கியான் வாபி மஸ்ஜித் என அதற்கெதிரானவர்கள் யார் என்று
தெரிந்தும் கூட இன்றளவும் சட்டத்தையும், நீதியையையும் நம்பிக்கொண்டு தானே இந்த
உம்மத் இந்த உலகிலும், இந்த தேசத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
2. அநியாயக்காரர்கள்
ஒரு போதும் இந்த உலகில் வென்றதும் இல்லை. வெல்லப்போவதும் இல்லை.
நூஹ்
மஹ்லரி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து...
கலீஃபா உஸ்மான்
(ரலி) அவர்களுடைய வீட்டை கலகக்காரர்கள் முற்றுகையிட்டனர். உணவையும் தண்ணீரையும்
தடுத்தனர்.
நபிகளாரின் துணவி
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு கோவேறுக்
கழுதையில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய வீட்டுக்குச் சென்றார். கலகக்காரர்கள்
தடுத்தனர்.
"உள்ளே விடமுடியாது'' என்றனர். "உணவுதான் கொண்டு செல்கிறேன்'' என்றார். "முடியாது'' என்று பிடிவாதமாகக் கூறி, கழுதையை ஓங்கி மிதித்தனர். அது விரண்டு ஓடியது. அதன் மீதிருந்த நமது தாயார்
கீழே விழப்பார்த்தார்கள். அச்சத்துடன் அங்கிருந்து திரும்பிவிட்டார்.
வீட்டுக்குள்
கலீஃபா உஸ்மான் (ரலி) பசியுடன் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கிறார். அன்று நோன்பு
வைத்திருந்தார். பசியால் தூக்கம் மேலிட, கனவு காண்கிறார். கனவில்
நபிகளாரைக் காண்கிறார்.
وقال
ابن أبي الدنيا: حدثنا إسحاق بن إسماعيل، ثنا يزيد بن هارون، عن فرج بن فضالة، عن
مروان بن أبي أمية، عن عبد الله بن سلام. قال: أتيت عثمان لأسلم عليه وهو محصور
فدخلت عليه فقال: مرحبا بأخي، رأيت رسول الله ﷺ الليلة في هذه الخوخة - قال: وخوخة
في البيت - فقال: « يا عثمان حصروك؟
قلت:
نعم!
قال:
عطشوك؟
قلت:
نعم، فأدلى دلوا فيه ماء فشربت حتى رويت، إني لأجد برده بين ثديي وبين كتفي، وقال
لي: إن شئت نصرت عليهم، وإن شئت أفطرت عندنا » فاخترت أن أفطر عنده، فقتل ذلك
اليوم.
நபி (ஸல்):
"உஸ்மான்! உமக்கு உணவை தடுத்து விட்டார்களா?''
உஸ்மான் (ரலி): "ஆம். அல்லாஹ்வின் தூதரே!''
நபி (ஸல்): "தண்ணீரையும் தடுத்துவிட்டார்களா உஸ்மான்?''
உஸ்மான் (ரலி): "ஆம். அல்லாஹ்வின் தூதரே!''
நபி (ஸல்): "இன்று நோன்பு வைத்திருக்கின்றீர்களா?''
உஸ்மான் (ரலி): "ஆம். அல்லாஹ்வின் தூதரே!''
நபி (ஸல்): "இன்றைய நோன்பை எங்களுடன் திறக்கின்றீர்களா, உஸ்மான்?''
மகிழ்ச்சியுடன் விழித்து
எழுந்து,
கண்ட கனவை மனைவியிடம் கூறினார் உஸ்மான் (ரலி).
கவாரிஜிய்யாக்கள்
வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். உஸ்மான் (ரலி) தொடர்ந்து குர்ஆன்
ஓதிக்கொண்டிருந்தார்.
காஃபிகி பின்
ஹர்ப் எனும் கேடு கெட்டவன் ஓதிக்கொண்டிருந்த உஸ்மான் (ரலி) அவர்களை எட்டி உதைத்தான்.
உஸ்மானும் குர்ஆனும் தூரப்போய் விழுந்தனர். தடுக்க வந்த மனைவி நாயிலா (ரலி)
அவர்களின் கை விரல்களை வெட்டினான். ரத்தம் பீறிட்டது.
உஸ்மான் (ரலி)
அவர்களின் புஜத்தில் குறுவாளால் குத்தினான். ரத்தம் பீறிட்டது. ஓதிக்கொண்டிருந்த
குர்ஆன் வசனத்தில் ரத்தத் துளிகள் பட்டுத் தெறித்தன.
அது என்ன வசனம்
தெரியுமா?
"அவர்களுக்கு எதிராக உமக்குத் துணைசெய்ய அல்லாஹ் போதுமானவன்
(என்று உறுதியுடன் நிம்மதியாய் இருங்கள்)'' (2:137)
எவ்வளவு
பொருத்தமான வசனங்கள்..! ரத்தம் தோய்ந்த அந்தக் குர்ஆன் பிரதி காலத்தின் சாட்சியாய்
இஸ்தான்புல் அருங்காட்சியத்தில் இன்றும் உள்ளது.
ஆச்சரியம்
என்னவென்றால்,
அந்தக் கொலையில் பங்குகெடுத்த ஒருவர்கூட பிற்காலத்தில்
இயற்கையாக மரணிக்கவில்லை. அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
புல்டோசர்கள்
இடிக்கட்டும்! அநீதவான்கள் பேயாட்டம் போடட்டும்! அவர்களுக்கு எதிராக நமக்குத் துணை
செய்ய அல்லாஹ் போதுமானவன்.
3.
அநீதம் இழைக்கப்பட்டவனின் துஆவிற்கு அல்லாஹ்வின் பதில் விரைவில் கிடைத்தே
தீரும்!
أخرجه البخاري ومسلم عن ابن عباس -رضي الله عنهما- أن رسول الله -صلى الله عليه وسلم- قال لمعاذ بن جبل
حين بعثه إلى اليمن واتق
دعوة المظلوم، فإنه ليس بينها وبين الله حجاب.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது “முஆதே! அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீட்டை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஏனெனில், அவனுக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் எவ்வித திரையும் கிடையாது” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் ( நூல்: புகாரி )
وعن أبي
هريرة -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم-: (وَدَعْوَةُ الْمَظْلُومِ تُحْمَلُ على الْغَمَامِ وَتُفْتَحُ لها
أَبْوَابُ السماء
وَيَقُولُ الرَّبُّ عز وجل وعزتي لأَنْصُرَنَّكِ وَلَوْ
بَعْدَ حِين).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீடு உடனடியாக மேகத்தைக் கடக்கிறது. அதற்காக வானலோகத்தின் வாசல்களும் திறக்கப்படுகிறது. அந்த முறையீட்டுக்குப் பதில் தரும் முகமாக அல்லாஹ் “என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இதோ இப்போதே உன் முறையீட்டுக்குப் பதில் தருகின்றேன்” என்று கூறுவதாக, நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் )
وعن أبي
هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال: (دعوة المظلوم مستجابة
وإن كان فاجرا ففجوره على نفسه).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீட்டை அல்லாஹ் உடனடியாக ஏற்றுக் கொள்கின்றான். அவன் பாவியாக இருந்தாலும் சரியே!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )
قال سعيد : أما إني أشهد
وأحاج أن لا إله إلا الله وحده لا شريك له ، وأن محمدا عبده ورسوله ، خذها مني حتى
تلقاني يوم القيامة . ثم دعا سعيد الله فقال : اللهم لا تسلطه على أحد يقتله بعدي
. فذبح على النطع رحمه الله . قال : وبلغنا أن الحجاج عاش بعده خمس عشرة ليلة ، فعلم
أنه ليس بناج ، وبلغنا أنه كان ينادي بقية حياته
ما لي ولسعيد بن جبير ؟ كلما
أردت النوم أخذ برجلي .
ஹஜ்ஜாஜ் இப்னு
யூஸுஃப் அவர்களுக்கும் அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஏராளமான அறிஞர்களுக்கும் இடையே
மிகப் பெரிய அளவிளான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அந்த மாதிரி தருணங்களில்
ஹஜ்ஜாஜ் தன்னை எதிர்க்கிற அறிஞர்களில் ஏராளமானவர்கள் தன்னுடைய ஆட்சி, அதிகாரத்தைக் கொண்டு கொன்று குவித்தார்.
அப்படித்தான் ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களுக்கும், ஹஜ்ஜாஜிற்கும் இடையே கடுமையான முரண்பாடு நிலவியது. ஹஜ்ஜாஜ் தன் அதிகாரத்தைப்
பயன்படுத்தி ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார்.
கடும்
சித்ரவதைக்குப் பின்னரே அவருக்கு மரண தண்டனையை ஹஜ்ஜாஜ் வழங்கினார்.
ஸயீத் இப்னு
ஜுபைர் (ரஹ்) அவர்கள் மரணிக்கும் முன்பாக, ஹஜ்ஜாஜை நோக்கி “ஹஜ்ஜாஜே!
வணங்கத்தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வெறொருவனும் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு
யாதொரு இணியுமில்லை! நிச்சயமாக முஹம்மது நபி {ஸல்} அவர்கள் அவனுடைய அடியாரும்
தூதரும் ஆவார்கள்” என்று நான் சாட்சி பகர்கின்றேன்.
ஹஜ்ஜாஜே! எனக்கு
எதிரான உன் அடக்குமுறையை நான் நாளை மறுமையில் உனக்கு எதிராக அல்லாஹ்விடம் வழக்கு
தொடுக்க பத்திரப்படுத்தி வைக்கின்றேன்!
பிறகு கையை
உயர்த்தி அல்லாஹ்விடம் “யாஅல்லாஹ்! எனக்குப் பிறகு யாரையும் இந்த அநியாயக்கார ஆட்சியாளனின் கையால்
கொலை செய்திடும் அதிகாரத்தை வழங்கி விடாதே!
இவனுக்கும்,
இவன் ஆட்சிக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்து விடு!” என்று பிரார்த்தித்தார்கள்.
(மிகச்சரியாக
ஸயீத் (ரஹ்) அவர்கள் கொல்லப்பட்டு (ஷஹீதாக்கப்பட்டு) பதினைந்து நாட்கள் இன்னொரு
அறிவிப்பின் படி நாற்பது நாட்கள் தான்)
வாழ்ந்த அந்த குறைவான
நாட்களில் ஹஜ்ஜாஜ் மன நலம் பாதிக்கப்பட்டு, நோயாளி போன்று “எனக்கும் ஸயீத் அவர்களுக்கும் என்ன பிரச்சனை? என் கனவில் வந்து என் கால்களோடு ஆடைகளைப் பற்றி இழுத்து, அல்லாஹ்வின் விரோதியே! ஏன் என்னை அநியாயமாக கொலை செய்தாய்? என்று கேட்டு,
என் தூக்கத்தை பறித்து விட்டார்” என்று பார்க்கிறவர்களிடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார்.
இன்னொரு அறிவிப்பில்.. கடும் குளிரால் அவனது உடல் நடுங்கிக்
கொண்டே இருந்ததாம். பகல் இரவு என எல்லா நேரமும் குளிரில் இருந்து விடுபட அவனைச்
சுற்றி சிறிய அளவிலான நெருப்புக் குண்டத்தில் தீ மூட்டப்பட்டு குளிர் காய்ந்து
கொண்டிருப்பானாம். அப்படியிருந்தும் கொஞ்சம் கூட குளிர் குறையாமல் உடல் நடுங்கிக்
கொண்டே இருக்குமாம். குளிரில் இருந்து விடுபட அருகிலிருக்கும் குண்டத்தில் கையை
நுழைப்பானாம். நெருப்பின் ஜுவாலை உடலின் தோலில் பட்டு காயமாகி புண்ணாகி அதில் புழுக்கள்
வைத்து உள் உறுப்புக்கள் அனைத்தையும் அரித்து விட்டதாம். இந்த நிலையிலேயே கழிந்து
கொண்டிருந்த போது இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் ஆளப்பி “தன் நிலை மாற துஆ
செய்யச் சொன்னானாம். அதற்கு இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் அவனுக்கு துஆச் செய்ய
மறுத்து விட்டார்கள். இந்த நிலையிலேயே ஹஜ்ஜாஜ் மரணித்தும் போனான். ( நூல்: ஹுல்யத்துல் அவ்லியா )
அஃப்ரீன்
ஃபாத்திமாவின் துஆ, ஷஹீத் முத்தஸ்ஸிரின் தாயாரின் துஆ, ஷஹீத் சாஹிலின்
குடும்பத்தினரின் துஆ, ஃபாசிஸ்டுகளால் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்ட, கடைகளை,
வீடுகளை, கலவரத்தில் ஊனமாக்கப்பட்ட, சூரையாக்கப்பட்ட, தீக்கீரையாக்கப்பட்ட,
களவாடப்பட்ட இன்னும் எத்தனை எத்தனையோ முஸ்லிம்களின் துஆக்கள் அர்ஷின் அதிபதியைச்
சென்று சேர்ந்திருக்கின்றது.
இன்ஷா அல்லாஹ்...
கூடிய விரைவில் ஒட்டு மொத்தமாக அந்த துஆக்களின் பலன் நிச்சயம் உங்களை வந்தடையும்
என்று நாங்கள் நம்புகின்றோம். உங்கள் அழிவை அல்லாஹ் விரைவில் தீர்மானிப்பான் என்று
ஆதரவும் வைக்கின்றோம்.
ஏனெனில்,
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ
إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
“அநியாயக்காரர்கள்
செய்கின்றவற்றை விட்டும் அல்லாஹ் பாராமுகமாக இருக்கின்றான் என்று நீங்கள்
எண்ணாதீர்கள். அவர்களைத் தண்டிக்காமல் தமதப்படுத்துவதெல்லாம் கண்கள் அந்த தண்டனையை
பார்த்து நிலை குலைந்து நிற்குமே அந்த ஒரு நாளுக்காகத் தான்”. ( அல்குர்ஆன்: 14:
42 )
إِنَّ
اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ()
அல்லாஹ்
கூறுகின்றான்: “நிச்சயமாக அல்லாஹ் அநியாயக் காரர்களுக்கு ஒரு போதும் நேர்வழியில் செலுத்த மாட்டான். ” ( அல்குர்ஆன்: 5:51 )
بارك الله في علمك
ReplyDelete“அநியாயக்காரர்கள் செய்கின்றவற்றை விட்டும் அல்லாஹ் பாராமுகமாக இருக்கின்றான் என்று நீங்கள் எண்ணாதீர்கள். அவர்களைத் தண்டிக்காமல் தமதப்படுத்துவதெல்லாம் கண்கள் அந்த தண்டனையை பார்த்து நிலை குலைந்து நிற்குமே அந்த ஒரு நாளுக்காகத் தான்”. ( அல்குர்ஆன்: 14: 42 )
ReplyDeleteகல் நெஞ்சையும் கரைய வைக்கும் பதிவு
அல்லாஹ் உங்களுடைய துஆ வையும் உங்களுடைய கட்டுரையையும் அங்கீகரிப்பானாக ஆமீன்
ما شاء الله
ReplyDeleteமிகப்பிரமாண்ட தயாரிப்பு
ReplyDeleteஉலமா சபை இதற்காக பஷீர் உஸ்மானி அவர்களுக்கு ஒரு விருது வழங்கி ஊக்குவிக்க வேண்டும்
ஜஸாகல்லாஹு அஹ்ஸனல் ஜஸா யா இதயத்தென்றலே
அற்புதமான ஆற்றல். அல்லாஹ் அங்கீகரிப்பானாக! ஆமீன் யாரப்பல்ஆலமீன்
ReplyDeleteஆமீன்
Deleteجزاك الله خيراமாஷாஅல்லாஹ்
ReplyDelete