போதை:- வீழ்தலும்… மீள்தலும்…
போதையில்லா உலகு அமைப்போம்!!!
ஜூன் 26-ம் தேதியை 1987
டிசம்பரில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு
எதிரான சர்வதேச தினமாக ஐ.நா சபை (UNGA) அறிவித்தது.
மனித சமூகத்திற்கு
போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த
நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலகளவில் போதை
பொருட்களின் பயன்பாடு,
போதை பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை
ஆகிய இம்மூன்றும் மிகப்பெரிய முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக
போதைப் பழக்கம் இன்றைய உலகளாவியப் பிரச்சனையாய்
உருமாறியிருக்கிறது.
உலக அளவில் போதைப்
பொருட்களின் தாக்கமும் அதனால் சமூகம் அடையும் பின்னடைவும், சீர்கேடும்,
சிதைவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
தனிப்பட்ட
வாழ்க்கை,
குடும்ப வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, சமூக அந்தஸ்து,
நட்பு, உறவினர், பொருளாதாரம் என அனைத்தையும் ஒட்டு மொத்தமாய் சிதைத்து விடக் கூடிய சக்தி இந்த
போதைப் பழக்கத்துக்கு உண்டு.
போதைப்
பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர் பொருளாதாரத்தை இழக்கிறார்கள். சிலர்
குடும்பத்தை இழக்கிறார்கள். சிலர் கற்பை இழக்கிறார்கள். சிலர் ஒழுக்கத்தை இழக்கிறார்கள். சிலர் இவையனைத்தையும்
இழக்கிறார்கள். சிலர் உயிரை இழக்கின்றார்கள்.
ஆகவே, சமூகத்தின் நலனுக்கும்
சமூகத்தின் வளர்ச்சிக்கும் போதைப் பழக்கம் பெரும்
சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது என்றால் அது மிகையல்ல.
புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன?
இன்று 200 வகையான போதைப் பொருட்கள்
திரையுலகத்தினரால் பயன்படுத்தப்படுகிறது என்கிறது நக்கீரன் க்ரைம் டீம் ( நன்றி:
நக்கீரன்,
14/09/2020)
நாடு முழுவதும் 2,90,00,000 பேரும்,தமிழகத்தில் 104,000
பேரும் கஞ்சா பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
ஹெராயின் போதைப்
பழக்கத்திற்கு 34
லட்சம் பேர் அடிமைகளாக உள்ளனர்.
போதை மாத்திரை பயன்படுத்துவோர் நாடு முழுவதும் 1,86,44,000 பேரும்,
தமிழகத்தில் 1,54,000 பேரும் உள்ளனர்.
இந்தியாவில் 2 சதவீத மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு நிரந்தர அடிமைகளாக இருக்கின்றனர்.
என்றும்,
போதைப் பொருள் பயன்பாட்டின் காரணமாக நாள் தோறும் 7 பேர் இறக்கின்றனர் என்றும், ஆண்டு தோறும் பல ஆயிரம்
பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
மத்திய நீதித்துறை
அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் போதைப்பொருள் விற்பனையாளர்களின் நெட்வொர்க் 76 நாடுகளில் பரந்துள்ளது.
இந்தியாவில் போதை
தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் 401 இருக்கின்றன. 2015 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8500 பேர் நோயாளிகளாக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர் வரும்
நாட்களில் இந்தியாவில் 272
மாவட்டங்களை தேர்ந்தெடுத்து 8000 தன்னார்வலர்கள் 350
மறுவாழ்வு மையங்கள் உருவாக்கப்படும் என கடந்த நிதி
பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதில்
அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்
வரை சுமார் 30
கோடிக்கும் மேற்பட்டோர் போதை பொருட்களுக்கு அடிமையாக
இருக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
போதைக்கு
அடிமையாவோரில் 85
சதவீதம் பேர் படித்தவர்கள். அதில் 75 சதவீதம் பேர் இளைஞர்கள்.
உலக வர்த்தகத்தில்
பெட்ரோல்,
ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து மூன்றாவதுஇடத்தில் சட்ட
விரோதமாக போதை பொருட்கள் கடத்தல், வியாபாரம் உள்ளது.
ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு போதை பொருட்கள் வியாபாரம் நடப்பதாக
புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டம் சொல்வதென்ன?..
போதைப்பொருளை
கடத்தி பிடிபட்டால் மரணதண்டனை அளிக்கும் நாடுகள் பல உள்ளன, பல நாடுகள் ஆயுள்தண்டனையும் குறைந்தது 10 ஆண்டுகள்
தண்டனையும் வழங்குகின்றன.
இந்திய போதை
பொருள் தடுப்பு சட்டம் 1985ன்படி போதை பொருள் தடுப்பு ஆணையம் 1986ல்
துவக்கப்பட்டது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத உற்பத்தி செய்தல், விற்றல்,
பயன்படுத்துதல்,சட்ட விரோதமாக கடத்துதல், பதுக்குதலை குற்றம் என சட்டம் கூறுகிறது. இதை மீறுவோருக்கு 10 முதல் 30
ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது.
நம் நாட்டில்போதை
பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றங்களே மாவட்ட வாரியாக
உள்ளன.இதிலிருந்து எந்தளவுக்கு போதை பொருட்கள் பயன்பாடு, கடத்தல் இருக்கிறது என அறியலாம்.
என்னதான் கடுமையான
சட்டங்கள் இருந்தாலும் கூட போதை பொருட்கள் கடத்தல் தொடர் கதையாகவே உள்ளன. அதற்கான
தேவை இருப்பதே அதற்கு காரணம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தேவை குறைந்தால்
மட்டுமே கடத்தல் குறையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
போதைப் பழக்கத்திற்கெதிரான இஸ்லாத்தின் நடவடிக்கை..
மனிதனின்
அறிவுக்குத் திரை போட்டு,
பாவமான காரியங்களில் ஈடுபடச் செய்வதில் முக்கியப் பங்கு
வகிப்பது போதை பழக்கமாகும்.
இந்த போதைப்
பழக்கம் அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை இருந்து வருகிறது என்பதை
பார்த்து வந்தோம்.
இந்த மோசமான
பழக்கத்தை இஸ்லாம் முற்றிலும் ஒழிக்க, பல கட்ட நடவடிக்கைகளை
எடுத்துள்ளதை திருக்குர்ஆன் சான்று பகர்வதைப் பார்க்க முடிகின்றது.
போதைப்
பழக்கத்தில் இருந்தவர்களை படிப்படியாக நிறுத்தி, முற்றிலுமாக போதைப் பழக்கத்தை ஒழித்து மிகத் தூய்மையான ஒரு சமூகத்தை
கட்டமைத்தது. ஆகவே தான் அவை பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.
எங்கிருந்து துவங்கியது?
இஸ்லாம் பல்வேறு
சமூக மக்களின் வரலாறுகளைக் குர்ஆனில் கூறுகின்றது. அவர்களின் தீய பண்பாடுகள்,
நடத்தைகள் பற்றியும் குறிப்பிடுகின்றது. ஆனால், முற்கால சமூகத்து மக்களிடம் இந்த
போதைப் பழக்கம் இருந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்
அவர்களின் காலத்தில் இந்த பழக்கம் இருந்ததாக இரண்டு வசனங்கள் குறிப்பிடுகின்றது.
சிறையில் கனவிற்கு
விளக்கம் கேட்ட இரு இளைஞர்களில் ஒருவருக்கு யூஸுஃப் (அலை) அவர்கள் சொன்ன
விளக்கத்தில் இது இடம் பெறுவதைக் காணலாம்.
وَدَخَلَ
مَعَهُ السِّجْنَ فَتَيٰنِؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَعْصِرُ
خَمْرًا ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِىْ
خُبْزًا تَاْكُلُ الطَّيْرُ مِنْهُ ؕ نَبِّئْنَا بِتَاْوِيْلِهٖ ۚ اِنَّا نَرٰٮكَ
مِنَ الْمُحْسِنِيْنَ
அவருடன் இரண்டு
வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில்
,“நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி
சுமப்பதாகவும்,
அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு
இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை
(ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
يٰصَاحِبَىِ
السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَيَسْقِىْ رَبَّهٗ خَمْرًاۚ وَاَمَّا الْاٰخَرُ
فَيُصْلَبُ فَتَاْكُلُ الطَّيْرُ مِنْ رَّاْسِهٖؕ قُضِىَ الْاَمْرُ الَّذِىْ
فِيْهِ تَسْتَفْتِيٰنِؕ
“சிறையிலிருக்கும் என் இரு
தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு
திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில்
அறையப்பட்டு,
அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
அதற்குப் பிறகு
பெருமானார் {ஸல்} அவர்கள் வாழ்ந்த காலத்தைய மக்களிடம் இந்த மதுப்பழக்கம் இருந்ததை
குர்ஆனின் ஒரு வசனத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
يَسْــٴَــلُوْنَكَ
عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِؕ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ
لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا
மது மற்றும்
சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது’’ எனக் கூறுவீராக ( அல்குர்ஆன்: 2:219 )!
அதற்குப் பிறகு
பெருமானார் {ஸல்} அவர்கள் வாழ்ந்த காலத்தைய மக்களிடம் இந்த மதுப்பழக்கம் இருந்ததை
குர்ஆனின் ஒரு வசனத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
அதாவது, ஜாஹிலிய்யா
(அறியாமை) க்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டதும் மதுபானம் குறித்து அவர்கள் எழுப்பிய வினாவை அல்லாஹ் பதிவு
செய்திருக்கின்றான்.
அதன் பின்னர்
இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து, இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது. ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள
நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியது. அடுத்த கட்டமாக போதையுள்ள
நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தது. மூன்றாம் கட்டமாக ஸுரா
அல்மாயிதாவின் 90,
91ஆம் வசனங்கள் இறங்கின:
وَفِي
صَحِيحِ مُسْلِمٍ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ قَالَ: نَزَلَتْ فِي
آيَاتٍ مِنَ الْقُرْآنِ، وَفِيهِ قَالَ: وَأَتَيْتُ عَلَى نَفَرٍ مِنَ
الْأَنْصَارِ، فَقَالُوا: تَعَالَ نُطْعِمُكَ وَنَسْقِيكَ خَمْرًا،
وَذَلِكَ
قَبْلَ أَنْ تُحَرَّمَ الْخَمْرُ، قَالَ: فَأَتَيْتُهُمْ فِي حُشٍّ- وَالْحُشُّ
الْبُسْتَانُ- فَإِذَا رَأْسُ جَزُورٍ مَشْوِيٍّ [عِنْدَهُمْ] «1» وَزِقٌّ مِنْ
خَمْرٍ، قَالَ: فَأَكَلْتُ وَشَرِبْتُ مَعَهُمْ، قَالَ: فَذَكَرْتُ الْأَنْصَارَ
وَالْمُهَاجِرِينَ عِنْدَهُمْ فَقُلْتُ: الْمُهَاجِرُونَ خَيْرٌ مِنَ
الْأَنْصَارِ، قَالَ: فَأَخَذَ رَجُلٌ لَحْيَيْ جَمَلٍ فَضَرَبَنِي بِهِ فَجَرَحَ
أَنْفِي- وَفَى رِوَايَةٍ فَفَزَرَهُ «2» وَكَانَ أَنْفُ سَعْدٍ مَفْزُورًا-
فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ،
فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيَّ- يَعْنِي نَفْسَهُ شَأْنَ الْخَمْرِ-"
إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصابُ وَالْأَزْلامُ رِجْسٌ مِنْ عَمَلِ
الشَّيْطانِ فَاجْتَنِبُوهُ".
நான், அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது
அவர்கள்,
“வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு
மதுவும் தருகிறோம்‘’
என்று கூறினர். இது மது தடை செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற
நிகழ்வாகும். அவ்வாறே நான் ஒரு தோட்டத்திற்கு அவர்களிடம் சென்றேன். அங்கு அவர்களுக்கு அருகில் பொரிக்கப்பட்ட ஒட்டக இறைச்சியும் ஒரு தோல் பையில்
மதுவும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நான் அந்த இறைச்சியை உண்டேன்; (மதுவைப்) பருகினேன்.
அப்போது
அவர்களிடையே முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிக(ளின் சிறப்புக)ள் குறித்துப்
பேசப்பட்டது. அப்போது நான் “அன்சாரிகளை விட முஹாஜிர்களே சிறந்தவர்கள்’’ என்று சொன்னேன். அப்போது
ஒருவர் ஒட்டகத்தின் தாடையெலும்பு ஒன்றை எடுத்து என்னை அடித்துவிட்டார்; எனது மூக்கில் காயமேற்படுத்திவிட்டார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் வந்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.
அப்போதுதான்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என் விஷயத்தில் மது தொடர்பாக “நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள்,
(குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின்
நடவடிக்கையுமாகும்’’
(5:90) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (4789
”விசுவாசிகளே! மதுபானமும்
சூதாட்டமும் விக்கிரக வணக்கமும், அம்பெறிந்து
குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளிலுள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி
பெறுவீர்கள்”
”மதுபானத்தின் மூலமும்
சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் உருவாக்கவும்
அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே
நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே இவைகளிலிருந்து) நீங்கள் விலகிக்
கொள்வீர்களா?”
அல்லாஹ் இந்த இரு
வசனங்களிலும் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் ஷிர்க்குடன் இணைத்துக்
குறிப்பிட்டுள்ளான். அறுவருக்கத்தக்க செயல்கள் என்றும் வர்ணிக்கின்றான். மதுவையும், சூதையும் தவிர்ப்பதை வெற்றிக்கான வழி என்றும் கூறுகின்றான்.
மேலும் இவை
இரண்டின் மூலமாகவும் ஏற்படும் சமூக ரீதியான தீங்குகள் என, உறவுகள் அறுக்கப்படுவதையும், பகைமையும் வெறுப்பும்
தோன்றுவதையும் குறிப்பிட்டுள்ளான்.
மேலும் திக்ர், தொழுகை முதலான ஆன்மீக சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இவை
இரண்டும் அமைகின்றன எனக் கூறி இவற்றினால் விளையும் ஆன்மீகக் கேடுகளையும் அல்லாஹ்
விளக்குகின்றான்.
இந்த அல்குர்ஆன்
வசனங்களை நபித் தோழர்கள்,
இறைவிசுவாசிகள் எதிர்கொண்ட விதம் அற்புதமானது. அல்லாஹ்வின்
இந்தக் கட்டளையை செவிமடுத்தவுடன் மதுக் கிண்ணங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தோர்
அப்படியே அவைகளை தரையில் தூக்கி எறிந்தார்கள். வீதிகளில் இருந்த மதுபானப்
பீப்பாக்களை உடன் கொட்டி வீதிகளில் ஓடவிட்டார்கள்.
அறியாமைக்காலத்தில்
நடைமுறையில் இருந்த (மது) போதை வகைகள்..
என் தந்தை) உமர்
(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீது நின்று (இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்)
ஐந்து வகைப் பொருட்களினால் மது தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுவிலக்கு வந்தது.
அவையாவன: திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை.
ஆக, அறிவுக்குத் திரையிடுவதெல்லாம் மதுவேயாகும் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்
(ரலி) நூல்கள்: புகாரி (5581),
முஸ்லிம் (5769)
அன்றைய தினம்
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும், பேரீச்சம்
பழத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டது தான் மதுபானமாகும் என்றிருந்த
நிலையில் மது தடை செய்யப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரி (5584), முஸ்லிம் (4010)
மது, ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அவை: 1. உலர்ந்த திராட்சை 2. பேரீச்சம் பழம் 3. கோதுமை
4. வாற்கோதுமை 5. தேன். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்கள்: புகாரி (5589),
முஸ்லிம் (5769)
போதை தரும் அனைத்தும் ஹராம்
எந்தப்
பொருளிலிருந்து மது தயாரித்தாலும் அவை அனைத்தும் தடை என்று தெளிவான ஒரு கட்டளையை
நபிகளார் பிறப்பித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ குறித்துக் கேட்கப்பட்டது. -அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும்.- யமன்
வாசிகள் அதை அருந்தி வந்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரும் (மது) பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும் என்று
சொன்னார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி (5586),
முஸ்லிம் (4070)
நான் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,
‘பாதக்’ எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், (இவர்கள் மதுவுக்கு) ‘பாதக்’ எனும் புதுப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை
செய்யப்பட்டதாகும் என) முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆகவே, போதையூட்டும் எதுவாயினும் அது தடை செய்யப்பட்டது தான் என்று பதிலளித்தார்கள். நான், (பாதக் எனும் கெட்டியாகக்
காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாறு) அனுமதிக்கப்பட்ட நல்ல பானமாயிற்றே! என்று
கேட்டேன். அதற்கு அவர்கள், அனுமதிக்கப்பட்ட நல்ல பொருளுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட கெட்ட பொருளைத் தவிர
வேறெதுவும் இல்லை என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபுல் ஜுவைரிய்யா நூல்: புகாரி (5598)
போதை
தரும் அனைத்துமே தடை செய்யப்பட்டதாகும்…
போதை தரும்
ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல்
(திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை
அருந்தமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் (4076
இஸ்லாம்
மதுபானத்தை ஹராமாக்கியுள்ளமைக்கான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது
என்பதாகும். எனவே,
ஒரு பானம் எந்தப் பொருளில் தயாரிக்கப்பட்டிருந்தாலும்
சேர்மானங்கள் எதுவாக இருந்தாலும் அது போதையை ஏற்படுத்தும் என்றிருந்தால் அது
ஹராமாகக் கொள்ளப்படும்.
அது அளவு குறைவாக
இருந்தாலும் சரி, நிவாரணம், மருந்து என்ற பெயரில் அருந்தினாலும் சரியே!
அதிகமாக
அருந்தினால் மட்டுமே போதை தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மதுவையும் நபிகளார்
தடைசெய்தார்கள். அவற்றில் குறைவாக அருந்தினாலும் அது மார்க்கத்தில் தடை
செய்யப்பட்டதே என்று தெளிவுபடுத்தினார்கள்.
எந்தப் பொருள்
அதிகமாக உட்கொள்ளும்போது போதை தருமோ அதில் குறைவாக உட்கொள்வதும் ஹராம் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: திர்மிதீ (1788),
நஸாயீ (5513), அபூதாவுத் (3156), இப்னுமாஜா (3383)
போதை தரும்
அனைத்தும் ஹராமாகும். எது ஃபரக் அளவு (சுமார் 7.5 கிலோ) சாப்பிட்டால் போதை
தருமோ அதில் கையளவும் ஹராமாகும் என்று நபி (ஸல்) கூறியதாக ஆயிஷா (ரலி)
அறிவிக்கிறார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: திர்மிதீ (1789),
அஹ்மத் (23287)
சிலர்
மருத்துக்காக மதுவைப் பயன்படுத்தினர். நபிகளார் எந்த வகைக்கும் இந்த மதுவைப்
பயன்படுத்தக்கூடாது என்று கட்டளையிட்டார்கள்.
நபி (ஸல்)
அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்)
பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை
செய்தார்கள்;
அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், “மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்’’ என்று
கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது மருந்தல்ல; நோய்’’
என்றார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல்: முஸ்லிம் (4015)
நபி (ஸல்)
அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி
(ஸல்) அவர்கள் “இல்லை (மாற்றக் கூடாது)’’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (4014)
வினோதமாக இல்லையா?..
உலகில்
சுதந்திரத்திற்காகத்தான் அதிகமான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன. மனிதன்
யாருக்கும் அடிமைப்பட்டு வாழ விரும்புவதில்லை. கட்டுப்பட்டு வாழக் கூட
விரும்புவதில்லை. பெற்றோரின் கட்டுப்பாட்டை விரும்பாத பிள்ளைகள் ஆசிரியர்களின்
கட்டுப் பாட்டை விரும்பாத மாணவர்கள், கணவனின் கட்டுப்பாட்டை
விரும்பாத மனைவி….
என்று இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. நிலைமை
இப்படியிருக்க,
போதைக்கு ஒருவன் அடிமையாக பணத்தை செலவழிக்கின்றான் என்றால்
இது எவ்வளவு பேதமையானது?
மனிதனுக்கு
அல்லாஹ் வழங்கிய மிகப் பெரும் அருள்களில் ஒன்றுதான் அறிவாகும். இந்த அறிவை
வளர்ப்பதற்காகவே இன்று மனிதன் பெரும் முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றான். அறிவு
வளர்ச்சிதான் மனித இனத்தின் வளர்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால், போதை மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியது. பணம் கொடுத்து கொஞ்ச நேரம் பைத்தியமாக
இருப்பது எவ்வளவு பைத்தியகாரத்தனமானது!
இது குறித்து
இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறும் போது, பின்வருமாறு
கூறுகின்றார்.
“பணம் கொடுத்து வாங்கக்
கூடியதாக அறிவு இருந்தால் மக்கள் எவ்வளவு கொடுத்தும் வாங்குவார்கள். இப்படியிருக்க, அறிவை கெடுக்க கூடியதை பணம் கொடுத்து வாங்குவது ஆச்சரியமாக உள்ளது.”
என்ன காரணம்?...
குற்றம்
செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய
நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டுமென்பதற்காகத் தான்
உலகமெங்கும் சிறைச்சாலைகள்,
காவல் நிலையங்கள், நீதிமன்றங்களெல்லாம்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கக் கூடாது
என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறவில்லை.
குற்றங்களுக்கெதிராகப்
பல்வேறு தண்டனைகளை வழங்கி வரும் அரசுகள் இந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா
என்றால் நிச்சயமாக இல்லை.
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
1.ஒன்று,
தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல்
இருப்பது,
ஆபாசப் படங்களைத் திரையிடுவதற்கும், ஆபாசப் பத்திரிகைகள் வெளிவருவதற்கும், ஆபாசமாக உடையணிவதற்கும்
அனுமதி வழங்கப்பட்ட நாட்டில் விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தனை திட்டங்கள்
தீட்டினாலும்,
சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஒழிக்க முடியாது.
ஏனென்றால் விபச்சாரத்திற்கு அடிப்படையே ஆபாசம் தான். இவற்றை இல்லாமல் ஆக்கினால்
தான் இந்தத் தீமையை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியும்.
மது அருந்துவதும், போதைப் பொருட்களைப்
பயன்படுத்துவதும்,
புகை பிடிப்பதும் உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதை
உணர்ந்த நம்முடைய நாட்டிலே மது பாட்டில்களின் மீது, “குடி குடியைக் கெடுக்கும்’ என்றும் பீடிக்
கட்டுகளில் மண்டை ஓட்டுப் படங்களை போடுவதன் மூலமும், பதினாறு வயதிற்குக் குறைந்தோர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என
விளம்பரம் செய்வதன் மூலமும் இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாத்து விடலாம் என
நினைக்கின்றனர்.
ஆனால் , இவற்றைத் தயாரிக்கும்
தொழிற்சாலைகள் இயங்கவும்,
உற்பத்தி செய்யவும் அனுமதி வழங்கிய பிறகு, இவற்றைக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதியளித்த பிறகு இவற்றை
விட்டும் மக்களைப் பாதுகாக்க விளம்பரம் செய்வது என்பது எப்படி அறிவார்ந்த செயலாக
இருக்க முடியும்?
இதையெல்லாம் விட அதிர்ச்சி தரும் தகவல் இது தான். அதாவது 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கஞ்சா பயிரிடப்பட்டு அபின் தயாரிக்கப்பட்டு
ஜப்பான் இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு இந்திய அரசே ஏற்றுமதி
செய்கிறது. இதன் மூலம் அரசுக்கு 432 கோடி ரூபாய் வருமானம்
ஆண்டு தோறும் கிடைக்கிறது.
அரசே மதுபான கடைகள் நடத்துகிறது. அதற்கென தனி இலாகா, தனி அதிகாரிகள் தனி சம்பளம் என தனி நிர்வாகம்
நடத்துகிறது. வெளியில் குற்றம் என்று சொல்வப்படுவதை அரசே இன்னொரு வழியாக
அனுமதிக்கிறது.
2.
இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதின் காரணம் என்ன?
குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும்
மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு
மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி
கிடைத்துவிட்டதாக நம்ப வேண்டும். அவன் மனநிறைவு அடைய வேண்டும்.
குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க இந்த மூன்றைத் தவிர வேறு
காரணங்களிருக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் நோக்கங்கள் இவை தான்
என்பதை மாற்றுக் கருத்துடையவர்களும் மறுக்க மாட்டார்கள்.
ஆனால்,குற்றம் செய்பவனையும், செய்ய நினைப்பவனையும்,
குற்றம் செய்ய தூண்டுபவனையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு
வலிமை மிக்கதாக உலகின் எந்த நாட்டிலும் சட்டம் இல்லாததே இதற்குக் காரணமாகும்.
3.
குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக்
கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
اَلزَّانِيَةُ
وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍوَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ
كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۚ وَلْيَشْهَدْ
عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ
விபசாரியும், விபசாரனும் -
இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே,
நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை
நிறைவேற்றுவ)தில்,
அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்)
பார்க்கட்டும். ( அல்குர்ஆன்: 24: 2 )
எப்படியான மனிதனையும் மாற்றும் ஆற்றல் இஸ்லாத்திற்கே
உண்டு..
1.ஸகீஃப் கோத்திரம்…
سبق أن النبي حاصر أهل الطائف بعد غزوة حنين ، ثم تركهم في
أماكنهم ، ورجع ، فلما رجع تبع أثره عروة بن مسعود الثقفي حتى أدركه قبل أن يصل
إلى المدينة ، فأسلم ، ثم رجع ودعا قومه إلى الإسلام – وكان أحب إليهم
من أبكارهم ، فظن أنهم يطيعونه – فرموه بالنبل من كل جانب حتى قتلوه ، ثم ائتمروا
بينهم ، ورأوا أنهم لا طاقة لهم بحرب من حولهم من العرب ، فبعثوا عبد ياليل بن
عمرو ، ومعه خمسة آخرون من أشرافهم ، وذلك في رمضان سنة 9هـ فلما قدموا المدينة ضرب
عليهم رسول الله قبة في ناحية المسجد ليسعوا القرآن ، ويروا الناس إذا
صلوا .
ومكثوا يختلفون إلى رسول الله ، يدعوهم إلى الإسلام ، وهم لا
يسلمون ، حتى طلبوا منه أن يسمح لهم بالزنا وشرب الخمر وأكل الربا ، وأن لا يهدم
اللات ، ويعفيهم عن الصلاة ، وأن لا يكسروا أصنامهم بأيديهم ، فأبى ، وأخيراً
رضخوا له ، وأسلموا واشترطوا أن يتولى هو بهدم اللات ، وأن ثقيفاً لا يهدمونها
بأيديهم أبداً . فقبل ذلك .
وكان عثمان بن أبي العاص الثقفي أصغرهم سناً ، فكانوا يختلفونه في
رحالهم ، فكان إذا رجعوا يذهب إلى النبي يستقرؤه القرآن ، وإذا رأه
نائماً استقرأ أبا بكر ، حتى حفظ شيئاً كثيراً من القرآن ، وهو يكتم ذلك عن أصحابه
، فلما أسلموا أمره عليهم رسول الله لحرصه على الإسلام وقراءة القرآن
وتعلم الدين .
ورجع الوفد إلى قومه عنهم إيمانه ، وخوفهم الحرب والقتال ، وقالوا :
جئنا رجلاً فظاً غليظاً قد ظهر بالسيف ، ودان له الناس ، فعرض علينا أموراً شديدة
، وذكروا ما تقدم من ترك الزنا والخمر والربا وغيرها ، وإلا يقاتلهم ، فأخذتهم
النخوة ، واستعدوا للقتال يومين أو ثلاثة أيام ، ثم ألقى الله في قلوبهم
الرعب فقالوا للوفد : ارجعوا فأعطوه ما سأل . فقال الوفد : قد قاضيناه وأسلمنا
فأسلم ثقيف .
وبعث رسول الله خالد بن الوليد والمغيرة بن شعبة الثقفي في
رجال إلى الطائف ليهدموا اللات ، فكسروها وهدموا بنيانها .
وكان
مما اشترطوا على رسول الله أن يدع لهم الطاغية ثلاث سنين، فما برحوا يسألونه سنة
سنة، ويأبى عليهم، حتى سألوه شهرا واحدا بعد مقدمهم ليتألفوا سفهاءهم، فأبى عليهم
أن يدعها شيئا مسمى، إلا أن يبعث معهم أبا سفيان بن حرب، والمغيرة ليهدماها،
وسألوه مع ذلك أن لا يصلوا، وأن لا يكسروا أصنامهم بأيديهم.
فقال: «أما كسر أصنامكم بأيديكم فسنعفيكم من ذلك، وأما
الصلاة فلا خير في دين لا صلاة فيه».
فقالوا: سنؤتيكها وإن كانت دناءة.
وقد قال الإمام أحمد: حدثنا عفان، ثنا محمد بن مسلمة عن
حميد، عن الحسن، عن عثمان ابن أبي العاص أن وفد ثقيف قدموا على رسول الله فأنزلهم
المسجد ليكون أرق لقلوبهم، فاشترطوا على رسول الله أن لاتحشروا، ولا يعشروا، ولا
يجبوا، ولا يستعمل عليهم غيرهم.
فقال رسول الله: «لكم أن لا تحشروا، ولا تجبوا، ولا
يستعمل عليكم غيركم، ولا خير في دين لا ركوع فيه».
ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ரமலான் மாதம் அண்ணலாரைக் காண ஒட்டு மொத்த ஸகீஃப் கோத்திரமும் மதீனா வந்திருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன் வந்து நின்ற ஸகீஃப் கோத்திரத்தினர் “நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், சில விஷயங்களில் எங்களுக்கு விதி விலக்கு வழங்க வேண்டும்.” என வேண்டி நின்றனர்.
1. நாங்கள் வசிக்கும் பகுதியை யுத்த தளமாக, இராணுவ தளமாக ஆக்கக் கூடாது. 2.
இஸ்லாத்தில் எங்களுக்கு ஈடுபாடு வரும் வரை சில காலங்களுக்கு சிலைகளை வணங்க அனுமதிக்க வேண்டும். 3.
தொழுகை மற்றும் ஜகாத்தில் சலுகைகள் தர வேண்டும். 4.
எங்களில் ஒருவரே எங்களுக்கு தலைவராக இருக்க வேண்டும். 5. ஜிஹாத் - மார்க்கப் போரில் கலந்து கொள்ள எங்களை கட்டாயப் படுத்தக்கூடாது. 6. விபச்சாரம், வட்டி போன்றவற்றில் எங்களுக்கு விலக்கு தர வேண்டும். 7. எங்கள் கரங்களால் எங்களின் பழைய கடவுளர்களின் சிலைகளை
உடைக்கச் சொல்லக்கூடாது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ஸகீஃப்
கோத்திரத்தார்களின் ஐந்து நிபந்தனைகளில் மூன்றை நிராகரித்து விட்டார்கள்.
1.அல்லாஹ்வுக்கு இணை வைக்க அனுமதிக்க முடியாது.
2.தொழுகையிலும், ஜகாத்திலும் சலுகைகள் தர முடியாது.
3.இஸ்லாம் விலக்கியிருக்கிற
எந்தப் பாவமான காரியங்களிலும் சலுகைகள் தரப்படாது. ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்: 259 – 262
)
இப்படியெல்லாம் நிபந்தனியிட்ட ஸகீஃப் கோத்திரத்தார்கள்
பங்கு பெறாத யுத்த களங்களும் இல்லை, ஷஹீத் ஆகாத எந்த குடும்பமும் இல்லை என்று சொல்லும்
அளவுக்கு இஸ்லாமிய வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார்கள்.
2.ஃபுளைல் இப்னு இயாழ்
(ரஹ்)…
காலங்களில் சிறந்த
இரண்டாம் நூற்றாண்டில் வாழந்தவர்கள் ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள். வரலாற்று ஆசிரியர்களால், ஹதீஸ்கலை வல்லுனர்களால்
பெரிதும் மதிக்கப்படுவார்கள்.
ஹிஜ்ரி 107-ல் பிறந்து ஹிஜ்ரி –
187-ல் மறைந்தார்கள். தஸவ்வுஃப் கலையில நிகரற்று விளங்கியவர்கள்.
ஆனால், ஒரு காலத்தில்,
தூரத்து தேச மக்களே இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி
நடுங்குவார்கள்.
பயங்கரத் திருடராக விளங்கினார்கள்.
தாரீதீ திமிஷ்க்
எனும் நூலின் ஓர் அறிவிப்பில்,
ஒரு நாள் ஒரு
இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக்
கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள். இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், அசால்ட்டாக திருடி விட்டுச் சென்றிடுவாராம். எனவே,
ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார்.
வெட்கித் தலை குனிந்தார். அவர்களின் அருகே வந்த
ஃபுளைல் நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல்
இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன். என்றார்
வியாபாரக்
கூட்டத்தினர் உறங்கினார்கள் இரவில்
விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.
ஆம்! நாம்
மாறினால் என்ன?
நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம்
தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே!
ஆம்! இனி நான் திருட மாட்டேன் என உறுதி கொண்டார். காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற
போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்களின்
பெயர் என்னவோ?
நான் தான்
நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என
முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல். இதை இப்னு அஸாகிர் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் தாரீகீ திமிஷ்க்
பாகம் 48,
பக்கம்-384 )
என்றாலும் அந்த
நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.
இப்ராஹீம் இப்னு
அஷ் அஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்
ஒரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட
முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.
திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார்.
“நம்பிக்கையாளர்களுக்கு
அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? எனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும்
“இதோ வந்துவிட்டேன் என் இறைவா? இதோ உருகிவிட்டேன் என் இறைவா? இதோ பணிந்துவிட்டேன் என்
இறைவா? என் பாவங்களை மன்னித்துவிடு! என் – குற்றங்களை பொறுத்து
விடு! என்றார்.
ஃபுளைல் மாறினார்!
ஆம்! நம்பத்தகுந்த ஆலிமாக,
சுஃப்யான் இப்னு உயைனா, ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி
போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக, நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம்
பெற்றார்,
(நூல்- ஸியரு அஃலாமின் நுபலா, பாகம்-13,
பக்கம்-59எண்-379)
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அருமையான பதிவு
ReplyDeleteகாலத்திற்கு தகுந்த தகவல்
ReplyDeleteجزاك الله
நிகழ்கால சூழ்நிலைக்கு ஏற்ற அருமையான தலைப்பு பாரக்கல்லாஹு ஹஜ்ரத்
ReplyDelete