Thursday, 7 July 2022

அல்லாஹ் போற்றிப் புகழும் இப்ராஹீம் (அலை) அவர்களின் நற்பண்புகள்!!

 

அல்லாஹ் போற்றிப் புகழும்

இப்ராஹீம் (அலை) அவர்களின் நற்பண்புகள்!!



நூற்றாண்டுகளைக் கடந்தும் இம்மியளவு கூட பிசகாமல் இன்றளவும் போற்றப்படுகிற மனிதராக இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின்  வாழ்வும் தியாகமும் மிளிர்கிறது என்றால் அதன் பிண்ணனி என்ன என்பதை இந்த உம்மத் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளது. 

இப்ராஹீம் (அலை) அவர்களின் துஆவும், ஆசையும், செயலும் தான் ஹஜ் என்கிற வழிபாடு எனும் போது, இப்ராஹீம் (அலை) அவர்களின் அர்ப்பணிப்பும், தியாகமும் தான் குர்பானி என்கிற வணக்கம் எனும் போது அவர்களின் வாழ்க்கை என்பது எப்படியானது என்பதை அறிய வேண்டிய கடமையும் கடப்பாடும் இந்த உம்மத்திற்கு  இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது வருடத்திற்கு ஒருமுறை நினைவு கூறப்பட வேண்டிய ஒன்றா? அல்லது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றா? எனும் கேள்வியோடு நாம் அவர்களின் வரலாற்றை பார்ப்போம்.

சுமார் 69 இடங்களில் அல்லாஹ் அவர்களின் பெயரை அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். அவர்களின் பெயரை ஒரு அத்தியாயத்துக்குச் சூட்டி அல்லாஹ் அழகு பார்க்கின்றான். பல்வேறு இடங்களில் அவர்களின் பல்வேறு காலகட்ட வரலாற்றை பகிர்கிறான்.

இரண்டு இறை வசனங்கள் நமக்கும் நம் வாழ்க்கைக்கும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள்? என்பதை உணர்த்தப் போதுமானதாகும்.

ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ

பின்பு நாம் (நபியே) உமக்கு இவ்வாறு வஹீ அனுப்பினோம். நீர் இப்ராஹீமின் மார்க்கத்தை ஒருமனப்பட்டவராய்ப் பின்பற்றுவீராக! அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவப்பவராய் இருந்ததில்லை”.                          ( அல்குர்ஆன்: 16: 123 )

قُلْ صَدَقَ اللَّهُ فَاتَّبِعُوا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ

நபியே! மக்களிடம் சொல்லுங்கள்! அல்லாஹ் உண்மையே உரைக்கின்றான். நீங்கள் ஒருமனப்பட்ட இப்ராஹீமின் வழிமுறையைப் பின்பற்றுங்கள். அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவப்பவராய் இருந்ததில்லை”. ( அல்குர்ஆன்: 3: 95)

மேற்கூறிய இறைவசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் நமக்கும், நம் வாழ்க்கைக்கும் இடையேயான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? என்பதை உணர்த்துகின்றன.

நபி {ஸல்} அவர்களுக்கு எந்த கட்டளையை அல்லாஹ் பிறப்பித்தானோ அதே கட்டளையையே நமக்கும் பிறப்பித்துள்ளான்.

அந்த வகையில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இடம்பெற்றிருந்த  நற்பண்புகளை நம் இதயங்கள் கவர்கின்ற வகையில் அல்லாஹ் அல்குர்ஆனில் அடையாளப் படுத்துகின்றான்.

1. சோதனைகளை சாதனைகளாக்கும் அபார ஆற்றல்...

‌ؕوَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;                                            ( அல்குர்ஆன்: 2: 124 )

தமது மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் அல்லாஹ் யாரும் இல்லாத பாலைவனத்தில் விட்டு விடச் சொன்னான்.

ஆசையுடன் காத்திருந்து பெற்றெடுத்த மகனை அல்லாஹ் பலியிட கட்டளை பிறப்பித்தான்.

ஏகத்துவ பிரச்சாரத்தில் பெற்றோர், சமூகம், அரசன் என அனைவரின் எதிர்ப்பையும் எதிர் கொள்வது.

மக்கள் மறுமை நாளில் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று, “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.

அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் என் இறைவன் இன்று என் மீது கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்’’ என்று கூறுவார்கள். நூல்: புகாரி : 4712

இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை,

(அவரை இணைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது) நான் நோயுற்றியிருக்கின்றேன் நான் நோயுற்றிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்-

(சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள் இப்படிச் செய்தது யார் என்று பேட்ட போது) இவர்களில் பெரிய சிலையான இந்தச் சிலை தான் இதைச் செய்ததுஎன்று கூறியதுமாகும்.

 

ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து), ‘‘இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள்’’ என்று கூறப்பட்டது.

உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘என் சகோதரி என்று பதிலளித்தார்கள். 

பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று, ‘‘சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே’’ என்று கூறினார்கள். நூல்: புகாரி-3358

இப்ராஹீம்  நபியிடத்தில்  உள்ள  முன்மாதிரியைப் பின்பற்றுவதில் நாம் நிறையவே பின் தங்கி இருக்கின்றோம். அதுதான் அவர்கள் தன் வாழ்வில் கடைப்பிடித்த உண்மை பேசுதல் என்ற நல்ல பண்பாகும்.

மொத்தமாக அவர்கள் பேசிய பொய்கள் மூன்று தான். அந்த மூன்றும் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காகப் பேசியது தான்.   இதை நாம் மேற்சொன்ன ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

2. சகிப்புத்தன்மை, 3. இரக்ககுணம், 4. இறைவனைச் சார்ந்திருத்தல்.

اِنَّ اِبْرٰهِيْمَ لَحَـلِيْمٌ اَوَّاهٌ مُّنِيْبٌ‏

நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.                                                   ( அல்குர்ஆன்: 11: 75 )

இரக்க குணம்..

رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ ۖ فَمَن تَبِعَنِى فَإِنَّهُۥ مِنِّى ۖ وَمَنْ عَصَانِى فَإِنَّكَ غَفُورٌۭ رَّحِيمٌۭ﴿14:36﴾

("என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்."

இறைவனைச் சார்ந்திருத்தல்..

رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ﴿14:38﴾

"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை."

وقال أبو يعلى : حدثنا أبو هشام الرفاعي ، حدثنا إسحاق بن سليمان ، عن أبي جعفر الرازي ، عن عاصم بن أبي النجود ، عن أبي صالح ، عن أبي هريرة قال : قال صلى الله عليه وسلم

لما ألقي إبراهيم في النار قال : اللهم إنك في السماء واحد ، وأنا في الأرض واحد أعبدك .

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையில்! யா அல்லாஹ் வணங்கப்படத் தகுதியானவன் வானத்தில் (உலகில்) நீ ஒருவனே! இந்தப் பூமியில் உன்னை வணங்கக் கூடியவன் (இன்றைய நிலையில்) நான் ஒருவனே! (எனவே என்னைக் காப்பாற்றுவாயாக) என்று பிரார்த்தித்தார்கள்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்னத் ஆபூயஃலா

 روي عَنِ ابْنِ عَبَّاسٍ، قالَ: “كانَ آخِرَ قَوْلِ إبْرَاهِيمَ حِينَ أُلْقِيَ في النَّارِ: حَسْبِيَ اللَّهُ ونِعْمَ الوَكِيلُ”.

இப்ராஹீம் (அலை) நெருப்பில் எறியப்பட்ட போது எனக்கு அல்லாஹ்வே போதுமானவன், அவனே என்னுடைய மிகச் சிறந்த பொருப்பாளனாகவும் இருக்கிறான்எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி

5. அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல்.

شَاكِرًا لِّاَنْعُمِهِ‌ؕ اِجْتَبٰٮهُ وَهَدٰٮهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

(அன்றியும்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும் அவரை நேர் வழியில் செலுத்தினான்.                       ( அல்குர்ஆன்: 16: 121 )

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ ۚ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ﴿14:39﴾

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.

اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاؕ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ‏

நிச்சயமாக இப்ராஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார்; மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.

وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ
அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக நிறைவேற்றுபவராக இப்றாஹீம் இருந்தார்.

وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا‏

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார். ( அல்குர்ஆன்: 19: 41 )

الَّذِىْ خَلَقَنِىْ فَهُوَ يَهْدِيْنِۙ‏

 

அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.

وَ الَّذِىْ هُوَ يُطْعِمُنِىْ وَيَسْقِيْنِۙ‏
அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.

وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ‏

நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

وَالَّذِىْ يُمِيْتُنِىْ ثُمَّ يُحْيِيْنِۙ‏

மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.

وَالَّذِىْۤ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِىْ خَطِیْٓــٴَــتِىْ يَوْمَ الدِّيْنِ ؕ‏

நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏

இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!

6. பிறர் நலன் நாடுபவராக இருத்தல்.

ؕ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ‏‌ؕ قَالَ وَمِنْ ذُرِّيَّتِىْقَالَ اِنِّىْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا

நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்என்று அல்லாஹ் கூறினான்; அதற்கு இப்ராஹீம் என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். ( அல்குர்ஆன்: 2: 124 )

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ

(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாகஎன்று
கூறினார்.                                                   ( அல்குர்ஆன்: 2: 126 )

وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَـكَ وَ مِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ

اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏  وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا

 எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.

 رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” ( அல்குர்ஆன்: 2: 127 - 129 )

7. தம்மைப் போலவே தம் குடும்பத்தையும் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களாக உருவாக்குதல்...

وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ‏‏

இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.” ( அல்குர்ஆன்: 2: 131 )

 رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!

ثُمَّ جَاءَ بِهَا إِبْرَاهِيمُ وَبِابْنِهَا إِسْمَاعِيلَ وَهِيَ تُرْضِعُهُ، حَتَّى وَضَعَهُمَا عِنْدَ الْبَيْتِ عِنْدَ دَوْحَةٍ فَوْقَ زَمْزَمَ فِي أَعْلَى الْمَسْجِدِ، وَلَيْسَ بمكة يومئذ أحد، وليس

بِهَا مَاءٌ، فَوَضَعَهُمَا هُنَالِكَ، وَوَضَعَ عِنْدَهُمَا جِرَابًا فِيهِ تَمْرٌ، وَسِقَاءً فِيهِ مَاءٌ،

ஹாஜரா அம்மையார் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது இருவரையும்கொண்டு வந்து அவர்களை கஅபாவின்மேற்பகுதியில்(இப்போதுள்ள) ஸம்ஸம்கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின்அருகேவைத்து விட்டார்கள். அந்த நாளில்  மக்காவில்எவரும்இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூடகிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்குஅருகேபேரிச்சம்  பழம் கொண்ட தோல்பைஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்பை ஒன்றையும்  வைத்தார்கள். பிறகுஇப்ராஹீம் (அலை) அவர்கள்திரும்பிச்சென்றார்கள். 

 ثُمَّ قَفَّى إِبْرَاهِيمُ مُنْطَلِقًا فَتَبِعَتْهُ أُمُّ إِسْمَاعِيلَ، فَقَالَتْ: يَا إِبْرَاهِيمُ! أَيْنَ تَذْهَبُ وَتَتْرُكُنَا بِهَذَا الْوَادِي الَّذِي ليس فيه إنس «1» ولا شي، فَقَالَتْ لَهُ ذَلِكَ مِرَارًا وَجَعَلَ لَا يَلْتَفِتُ إِلَيْهَا، فَقَالَتْ لَهُ: آللَّهُ أَمَرَكَ بِهَذَا؟ قَالَ: نَعَمْ. قَالَتْ إِذًا لَا يُضَيِّعُنَا، ثُمَّ رَجَعَتْ، فانطلق إبراهيم. حتى إذا كان عند التثنية حَيْثُ لَا يَرَوْنَهُ، اسْتَقْبَلَ بِوَجْهِهِ الْبَيْتَ ثُمَّ دَعَا بِهَذِهِ الدَّعَوَاتِ، وَرَفَعَ يَدَيْهِ فَقَالَ:" رَبَّنا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوادٍ غَيْرِ ذِي زَرْعٍ" [إبراهيم: 37] حَتَّى بَلَغَ" يَشْكُرُونَ"

அப்போது  அவர்களைஇஸ்மாயீலின் அன்னை ஹாஜரா(அலை) அவர்கள் பின்  தொடர்ந்து வந்து,“இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தபொருளுமோ இல்லாத இந்தப்  பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டுநீங்கள்எங்கே போகிறீர்கள்?” என்றுகேட்டார்கள்.                  இப்படிப் பலமுறைஅவர்களிடம்கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத்  திரும்பிப்பார்க்காமல் நடக்கலானார்கள். 

ஆகவே, அவர்களிடம்ஹாஜரா (அலை) அவர்கள், “அல்லாஹ் தான்உங்களுக்கு  இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க,  அவர்கள் ஆம்  என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், “அப்படியென்றால்  அவன் எங்களைக் கைவிடமாட்டான் என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். 

இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது)நடந்துசென்று மலைக்குன்றின் அருகே,  அவர்களை எவரும் பார்க்காதஇடத்திற்கு வந்த போது தம்இரு கரங்களையும் உயர்த்தி,  இந்தச்சொற்களால்பிரார்த்தித்தார்கள்.

 எங்கள்இறைவா! எனது சந்ததிகளை உனதுபுனிதஆலயத்திற்கருகில்,  விவசாயத்துக்குத் தகுதிஇல்லாதபள்ளத்தாக்கில், இவர்கள்தொழுகையை  நிறைவேற்றுவதற்காககுடியமர்த்திவிட்டேன். எனவே எங்கள்இறைவா! மனிதர்களில்  சிலரதுஉள்ளங்களைஇவர்களை நோக்கி விருப்பம் கொள்ளவைப்பாயாக! இவர்கள்  நன்றிசெலுத்திடஇவர்களுக்குக் கனிகளை உணவாகவழங்குவாயாக என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14:37) ………..(சுருக்கம்) அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3364

8. அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்..

இப்ராஹீம் (அலை) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டிருக்கிறார்கள்.

பிரார்த்தனை நம்முடைய அடிமைத் தனத்தையும், அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் மிகப்பெரும் வணக்கம்என்பதை இப்ராஹீம் (அலை) அவர்கள் நன்றாகவே தெரிந்திருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பல துஆக்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.

இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!என்று இப்ராஹீம் கூறிய போது, “(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டதுஎன்று அவன் கூறினான்.              (அல்குர்ஆன் 2:126)

அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். ( அல்குர்ஆன் 2:128)

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.) (அல்குர்ஆன் 2:129)

என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே! (அல்குர்ஆன் 26:83, 84, 85, 86, 87)

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.) (அல்குர்ஆன் 37: 100)

எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (என்றும் பிரார்த்தித்தார்.) (அல்குர்ஆன் 60:5)

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 14:35)

இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 14:36)

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (அல்குர்ஆன் 14:37)

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது. ( அல்குர்ஆன் 14:38)

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

(அல்குர்ஆன் 14:39)

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!

(அல்குர்ஆன் 14:40)

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்) (அல்குர்ஆன் 14:41)

அல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கிய கவுரவம்...

اِجْتَبٰٮهُ وَهَدٰٮهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும் அவரை நேர் வழியில் செலுத்தினான்.

 ؕ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَؕ‏ وَاٰتَيْنٰهُ فِى الدُّنْيَا حَسَنَةً‌

                மேலும் நாம் அவருக்கு இவ்வுலகத்தில் அழகானவற்றையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் ஸாலிஹானவர்களில் (நல்லவர்களில் ஒருவராக) இருப்பார். ( அல்குர்ஆன்: 16: 21,22 )

وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا (125)

எவர் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு ஒருமனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றுகிறாரோ அவரை விடச் சிறந்த நெறி (மார்க்கம்) உடையவர் யார்? இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்”. ( அல்குர்ஆன்: 4: 125 )

إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ

இப்ராஹீம் (அலை) அவர்களுடன் தமக்கும் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலேயே மிகவும் அருகதையானவர்கள் யாரெனில், அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், இப்போது இந்த நபியும் {முஹம்மது ஸல்} இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர். அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 3: 68 )

وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا‏

 (இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.

 وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا

மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம். 

 

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌ۖ‏ 

 பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

 

   سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏ 

 

                இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்!

 

   كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 

 

 நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

   اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏ 

 

                அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

 

   وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏ 

                நபியும், நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம்.

   وَبٰرَكْنَا عَلَيْهِ وَعَلٰٓى اِسْحٰقَ‌ؕ وَ مِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِيْنٌ‌‏ 

அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியம் செய்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் நல்லோரும் உள்ளனர். தெளிவாக தமக்கே தீங்கிழைத்தோரும் உள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகு முன் மாதிரியான வாழ்க்கை அமைப்பைக் கொண்டவர்களாக இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையைத் தான் குறிப்பிடுகின்றான்.

قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ

உங்களுக்கு இப்ராஹீமிடத்திலும் அவருடைய தோழர்களிடத்திலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது”.  ( அல்குர்ஆன்: 60: 4 )

மேலும், அல்லாஹ் உலக மக்களில் அவரின் குடும்பத்தாரை சிறந்தோர்களாக ஆக்கியதாகவும் பறை சாற்றுகின்றான்.

إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ

திண்ணமாக, அல்லாஹ் அகிலத்தார்களில் ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தாரையும் சிறந்தோர்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டான்”.    ( அல்குர்ஆன்: 3: 33 )

நம் உயிரினும் மேலான பெருமாளார் (ஸல்) அவர்களைப் புகழ வேண்டும், அவர்களின் குடும்பத்தார்களுக்கு துஆ செய்ய வேண்டும் என்றால்..

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று அருள்புரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!

இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு கருணைபுரிந்தாயோ அது போன்று கருணைபுரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!என்று இப்ராஹீம் (அலை) அவர்களையும், அவர்களின் குடும்பத்தார்களையும் இணைத்துக் கூறிதான் கேட்க வேண்டும் என மார்க்கம் நமக்கு வழிகாட்டுகின்றது.

இது இந்த யுக முடிவு நாள்  வரையிலும் இன்றளவும், ஏன்? தனியாகவோ, கூட்டாகவோ, கடமையான தொழுகையிலோ, ஜனாஸா தொழுகையிலோ, மேற்கூறியவாறு தான் ஓத முடியும். இன்னும் சொல்லப் போனால் இது தான் நாம் நபி (ஸல்) அவர்களின் மீது ஓதகிற ஸலவாத்தில் மிகச் சிறந்ததும், உயர்வானதும் ஆகும்.

 

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى

"(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; மகாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்”. ( அல்குர்ஆன்:  2: 125 )

 

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِى كِلاَهُمَا عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- خَطِيبًا بِمَوْعِظَةٍ فَقَالَ

« يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تُحْشَرُونَ إِلَى اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلاً ( كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ) أَلاَ وَإِنَّ أَوَّلَ الْخَلاَئِقِ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்என்று கூறிவிட்டுப் பிறகு எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம் என்று கூறினார்கள்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நற்பண்புகளை வாழ்வில் கொண்டு வருவோம்!!!

3 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ். மிக சிறந்த ஆக்கம். அல்லாஹ் தங்களையும், குடும்பத்தார்களையும் கபூல் செய்வானாக! ஆமீன் யாரப்பல்ஆலமீன்

    ReplyDelete
  3. என்னங்க வெறும் ஆயத்தும் அதன் தமிழாக்கமும் னு முடிச்சிருக்கீங்க தகவலே இல்லையே போனவாரம் தான் இந்த தளம்குறித்து நண்பரிடம் பெருமிதத்தோடு பேசினேன் இந்த வாரமே சொதப்பிட்டிங்களே உஸ்மானி
    என்னமோ போங்க உங்க முயற்சிக்கு அல்லாஹ் கூலி வழங்கட்டும்

    ReplyDelete