Thursday, 8 September 2022

எழுத்தறிவித்தவன் இறைவன்!!

 

எழுத்தறிவித்தவன் இறைவன்!!

செப்டம்பர் 8 –ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எழுத்தறிவின் அவசியத்தை மக்களுக்கு விழிப்பூட்டவே இந்த தினம் கொண்டாடப்பட அழைப்பு விடுக்கப்பட்டது.

ஒரு மனிதன் பெறுகிற எழுத்தறிவு என்பது அவனையும், அவன் சார்ந்திருக்கின்ற குடும்பம், சமூகம் சமுதாயம் என அனைவரையும் அந்தஸ்தோடும், உயர்வோடும் வாழ வைக்கும்.

மேலும், ஒரு மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பதே எழுத்தறிவு. ஒவ்வொரு தனி மனிதனும் எழுத்தறிவு பெற்றிருப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. எழுத்துக்களைப் படிப்பது அறிவை வளர்க்க உதவும். எழுத்தும், அறிவும் ஒன்று சேர்கையில் தனித்து செயல்படுவதற்கான ஆற்றல் கிடைக்கும். அந்த ஆற்றலே ஆக்கப்பூர்வமான பல செயல்களுக்கு அடிப்படையாக அமையும்.

எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாத உலகை உருவாக்கவும் .நா. சபை அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ, 1965-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 'உலக எழுத்தறிவு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

எழுத்தறிவின் மாண்பு குறித்த இஸ்லாத்தின் பார்வை...

மாநபி {ஸல்} அவர்களுக்கு துவக்கமாக இறக்கியருளப்பட்ட இறைச்செய்தியில் அல்லாஹ் உமது இறைவனின் பெயரால் படிப்பீராக! ஓதுவீராக! என்று கூறிவிட்டு, இறைவனுக்கான பண்பியல்களை வரிசைப்படுத்தும் போது..

அல்லாஹ் கூறுவான்: ”(அல்லாஹ்வாகிய) அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (அதன் மூலம்) அவனே மனிதன் அறியாத அனைத்தையும் கற்றுக் கொடுத்தான்”.                                         ( அல்குர்ஆன் 96: 4 ).

எழுத்தறிவு பெறும் மனிதன் புதிது புதிதாக நிறைய கற்றுக் கொள்கின்றான் என்பதை இவ்வசனம் உணர்த்துகின்றது. எப்போது புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்கின்றானோ அப்போதே அவன் பயன் பெறத்துவங்கி விடுகின்றான்.

மற்றொரு வசனத்தில்

 நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!                                             ( அல்குர்ஆன் 68: 1 )

அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறும் அனைத்து விஷயங்களும் மாண்பானவை, மதிப்பு மிக்கவை என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். அந்த வகையில் எழுத்தறிவும் மதிப்புமிக்க ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் இப்பிரபஞ்சத்தை, வானம், பூமி மற்றும் இதர அனைத்தையும் படைத்த பிறகு முதலாவதாக பிறப்பித்த கட்டளையே பேனாவைப் பார்த்து சொன்ன எழுது! எனும் கட்டளையே! அதைப் பின் வரும் நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது.

 

 

عن أبي هريرة قال: سمعت رسول الله صلي الله عليه وسلم يقول: أول ما خلق الله القلم ثم خلق النون وهي الدواة وذلك قول تعالى: ن وَالْقَلَمِ ثم قال له اكتب قال: وما أكتب قال: ما كان وما هو كائن إلى يوم القيامة من عمل أو أجل أو رزق أو أثر فجرى القلم بما هو كائن إلى يوم القيامة- قال- ثم ختم فم القلم فلم ينطق ولا ينطق إلى يوم القيامة. 

 

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:- “முதம் முதலாக அல்லாஹ் பேனாவைப்  படைத்தான். பிறகு மையைப் படைத்தான். அதுதான் அல்லாஹ் தனது திருமறையில் 'நூன், வல்கலம்' என்று குறிப்பிடுவதாகும். பிறகு அந்த பேனாவை எழுது! என்றான். எதை எழுத வேண்டும்? என்று பேனா கேட்டது. செயல், தவணை, வாழ்வாதாரம் மற்றும் ஆயுள் ஆகியவற்றையும், மற்றும் இறுதிநாள் வரை என்னவெல்லாம் நடக்கிறதோ, நடக்கப்போகிறதோ அனைத்தையும் எழுது என்றான். இறுதிநாள் வரை நடக்க இருக்கின்ற அனைத்தையும் பேனா எழுதி முடித்தது. பிறகு அந்த பேனாவின் வாயில் இனி, இறுதிநாள் வரை (வேறு எதுவும்) நீ பேசக்கூடாது என அல்லாஹ் முத்திரையிட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.                                                  ( நூல்: தப்ரானீ )

அருள்மறையில் இடம் பெற்றிருக்கும் 6666 இறைவசனங்களில் மிக நீண்ட ஒரே வசனமாகிய அல்பகராவின் 282 வது வசனம் எழுதுவதைப் பற்றியே பேசுகின்றது.

மதீனாவாசிகளிடம் பெறப்பட்ட அகபா உடன்படிக்கை வாய்மொழியாக இருந்திருப்பினும் கூட ஹுதைபிய்யா உடன்படிக்கை எழுத்து வடிவிலே இடம் பெற்றது எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு உலக நாடுகள் அனைத்திற்கும் இஸ்லாத்தை, ஏகத்துவத்தை கொண்டு சென்றிட முயற்சி மேற்கொண்டார்கள்.

عن أنس ـ رضي الله عنه ـ : ( أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ كتب إلى كسرى وقيصر وإلى النجاشي - وهو غير الذي صلّى عليه - وإلى كل جبّار يدعوهم إلى الله عز وجل )( مسلم ).

 

توجه سفراء الرسول ـ صلى الله عليه وسلم ـ بالرسائل إلى النجاشي ملك الحبشة، وإلى المقوقس عظيم القبط في مصر، وإلى كسرى ملك الفرس، وإلى هرقل عظيم الروم، وإلى المنذر بن ساوى ملك البحرين، وغيرهم من ملوك وأمراء ..

அதன் ஒரு பகுதியாக அன்றைய பாரசீக, கிஸ்ரா, ரோம், பஹ்ரைன், அபீசீனியா, மிஸ்ர் போன்ற தேசங்களின் மன்னர்களுக்கும், அரபு நாடுகளின் அருகே ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர்களுக்கும் கடிதத்தின் மூலமாக ஏகத்துவ அழைப்பை கொண்டு செல்ல முடிவெடுத்தார்கள்.

فاختار النبي ـ صلى الله عليه وسلم ـ دحية الكلبي ، وأرسله إلى هرقل عظيم الروم . يقول ابن حجر في الإصابة عن دحية : " كان يُضرب به المثل في حسن الصورة ". وكان دحية   ـ مع حسن مظهره ـ فارسا ماهرا، وعليما بالروم ..

 

وأرسل النبي ـ صلى الله عليه وسلم ـ عبد الله بن حذافة إلى كسرى عظيم الفرس، وكان له   دراية بهم ولغتهم، وكان ابن حذافة مضرب الأمثال في الشجاعة ورباطة الجأش .

وأرسل ـ صلى الله عليه وسلم ـ إلى المقوقس ملك مصر حاطب بن أبي بلتعة ، وقد قال فيه ابن حجر في الإصابة :" كان أحد فرسان قريش وشعرائها في الجاهلية "، وكان له علم بالنصرانية، ومقدرة على المحاورة ..

அதற்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உலக நாடுகளின் மொழிகளைக் கற்றறிந்த, அந்தந்த மொழிகளில் மிகவும் புலமைப் பெற்றிருந்த நபித் தோழர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அவர்களிடம் கடிதத்தைக் கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இஸ்லாமிய தூதுத்துவச் செய்தியின் தூதுவர்களாக அனுப்பி வைத்தார்கள் என்று இமாம் வாக்கிதீ (ரஹ்), இமாம் தபரீ (ரஹ்), இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்க்கலானீ (ரஹ்) ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

عن ابن عباس ـ رضي الله عنهما : ( أن النبي ـ صلى الله عليه وسلم ـ كتب إلى قيصر يدعوه إلى الإسلام، وبعث بكتابه إليه دحية الكلبي ، وأمره أن يدفعه إلى عظيم بصرى ليدفعه إلى قيصر، فإذا فيه :

 

" بسم الله الرحمن الرحيم، من محمد بن عبد الله ورسوله، إلى هرقل عظيم الروم، سلام على من اتبع الهدى: أما بعد، فإني أدعوك بدعاية الإسلام، أسلم تسلم يؤتك الله أجرك مرتين، فإن توليت عليك إثم الأريسيِّين، { قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلا نَعْبُدَ إِلا اللَّهَ وَلا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ }(آل عمران64) )( البخاري ) .

 

ذكر الواقدي أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ كتب إلى النجاشي كتابا، وأرسله مع عمرو بن أمية الضمري ، فيه:

 

( بسم الله الرحمن الرحيم، من محمد رسول الله إلى النجاشي ملك الحبشة، أسلم أنت، فإني أحمد إليك الله، الذي لا إله إلا هو، الملك القدوس، السلام المؤمن، المهيمن، وأشهد أن عيسى ابن مريم، وروح الله، وكلمته ألقاها إلى مريم البتول، فحملت به، فخلقه من روحه، ونفخه، كما خلق آدم بيده، وإني أدعوك إلى الله وحده لا شريك له، والموالاة على طاعته، وأن تتبعني، وتؤمن بالذي جاءني، فإني رسول الله، وإني أدعوك وجنودك إلى الله عز وجل، وقد بلغت ونصحت، فاقبلوا نصيحتي، والسلام على من اتبع الهدى ).

 

كتاب النبي ـ صلى الله عليه وسلم ـ إلى المقوقس ملك مصر 

 

ذكر الواقدي أن النبي ـ صلى الله عليه وسلم ـ كتب إلى المقوقس، مع حاطب بن أبي بلتعة : ( بسم الله الرحمن الرحيم: من محمد بن عبد الله إلى المقوقس عظيم القبط، سلام على من اتبع الهدى، أما بعد: فإني أدعوك بداعية الإسلام، أسلم تسلم، وأسلم يؤتك الله أجرك مرتين، فإن توليت فإن عليك إثم القبط ، { قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلا نُشْرِكَ بِهِ شَيْئاً وَلا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضاً أَرْبَاباً مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ }(آل عمران:64) ) .

 

كتاب النبي ـ صلى الله عليه وسلم ـ إلى كسرى ملك فارس 

 

وقد أرسله النبي ـ صلى الله عليه وسلم ـ مع عبد الله بن حذافة ـ رضي الله عنه ـ كما ذكر الواقدي ، وكان فيه:

 

( بسم الله الرحمن الرحيم، من محمد رسول الله إلى كسرى عظيم فارس، سلام على من اتبع الهدى وآمن بالله ورسوله، وشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله، أدعوك بدعاية الله، فإني أنا رسول الله إلى الناس كافة، لأنذر من كان حيا ويحق القول على الكافرين، أسلم تسلم ، فإن أبيت فعليك إثم المجوس ) .

 

அவ்வகையில், திஹ்யத்துல் கலபீ (ரலி) அவர்களை ரோமுக்கும், அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்களை பஹ்ரைன் மற்றும் பாரசீகத்திற்கும், ஹாதப் இப்னு அபீ புல்தஃ (ரலி) அவர்களை மிஸ்ருக்கும், அம்ர் இப்னு உமைய்யா (ரலி) அவர்களை அபீசீனியாவிற்கும், ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களை ரோமின் இன்னொரு பகுதிக்கும் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தைக் கொடுத்து அனுப்பினார்கள்.

 

قال الطبري في تاريخه : " وقد اختلف تلقي الملوك لهذه الرسائل، فأما هرقل والنجاشي والمقوقس، فتأدبوا وتلطفوا في جوابهم، وأكرم النجاشي والمقوقس رسل رسول الله - صلى الله عليه وسلم -، وأرسل المقوقس هدايا إلى رسول الله ـ صلى الله عليه وسلم ـ .

 

وأما كسرى لما قريء عليه الكتاب مزقه، فعن ابن عباس ـ رضي الله عنهما ـ: ( أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ بعث بكتابه إلى كسرى مع عبد الله بن حذافة السهمي ، فأمره أن يدفعه إلى عظيم البحرين، فدفعه عظيم البحرين إلى كسرى، فلما قرأه مزقه ) .

 

இமாம் தபரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்திற்கு பதில் பலவாறாக இருந்தது. ரோமபுரியின் ஹிர்கல் மன்னரும், மிஸ்ரின் மகூகஸ் மன்னரும், அபீசீனியாவின் நஜ்ஜாஷி மன்னரும், கடிதம் கொண்டு சென்ற தூதுவர்களிடம் அழகிய முறையில் நடந்து, நபி {ஸல்} அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி அழகிய முறையில் பதில் கடிதமும் கொடுத்தனுப்பினார்கள்.

பாரசீகத்தின் கிஸ்ரா மன்னரும், பஹ்ரைன் மன்னரும் தூதரிடம் மிக மோசமாக நடந்து கொண்டதோடு கடிதத்தை கிழித்தும் அராஜகத்தோடு நடந்து கொண்டனர்.

( நூல்: அல் இஸாபா, அத்தாரீஃக் லி த்தபரீ, அத்தாரீஃக் லில் வாக்கிதீ )

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில் தூதுவர்களாகச் சென்றவர்களே அந்த கடிதத்தை எழுதியவர்கள் தாம். மேலும், எந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார்களோ அந்த நாட்டின் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் என்பது இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் தருகிற கூடுதல் தகவலாகும்.

وكان رسول الله صلى الله عليه وسلم حريصاً على عدم تفلت شيء منه، فكان يردد منا يلقيه عليه جبريل - عليه السلام - قبل أن ينتهي من تلقينه، حتى نزل قوله تعالى: ﴿ لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ * إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآَنَهُ * فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآَنَهُ * ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ ﴾ [القيامة: 16-19]، فكان رسول الله صلى الله عليه وسلم بعد ذلك يبقى صامتاً مطرقاً حتى ينتهي الوحي، ثم يدعو بعض كتبة الوحي ليكتبوا ما نزل من القرآن على ما تيسر من: الرقاع (وهي من الجلد)، واللخاف (وهي صفائح الحجارة)، والعسب: (جريد النخل)، والكرانيف: (أصول السعف الغليظ) والأقتاب: (الخشب يوضع على ظهر البعير)، والأكتاف: (العظم للبعير أو الشاة)[1].

وكان الصحابة - رضوان الله عليهم - حريصين على حفظ ما نزل أولاً بأول، فتوفي رسول الله صلى الله عليه وسلم والقرآن مجموع في الصدور، وكان جبريل يعارض الرسول صلى الله عليه وسلم بالقرآن كل سنة في ليالي رمضان، وعارضه في السنة التي توفي فيها مرتين.

ومن أشهر من حفظ القرآن كله وكانوا مرجع الصحابة في الإقراء والتعليم: الخلفاء الراشدون، وعبدالله بن مسعود، وسالم بن معقل (مولى أبي حذيفة)، وأبي بن كعب، وزيد بن ثابت، وأبو زيد بن السكن، وأبو الدرداء، وسعيد بن عبيد، وممن حفظه، وربما استكمل حفظه بعد وفاة رسول الله صلى الله عليه وسلم عائشة، وحفصة، وأم سلمة، وعبادة بن الصامت، وعبدالله بن عباس، وعبدالله بن عمرو بن العاص، وعبدالله بن عمر، وعبدالله بن الزبير... وغيرهم.

 

وكان القرآن مكتوباً كله عند وفاة رسول الله صلى الله عليه وسلم، إلا أنه لم يكن مجموعاً في مكان واحد، ولم يكتب على قطع متناسقة، فكل سورة أو مجموعة سور قصار كان يكتب في أحجار متناسقة، ويربط عليها الخيط، ويوضع في بيوت أمهات المؤمنين أو في بيوت بعض كتاب الوحي.

ومن أشهر كتاب الوحي: علي بن أبي طالب، ومعاوية بن أبي سفيان، وأبي بن كعب، وزيد بن ثابت... وغيرهم، وكثير من الصحابة كان يكتب لنفسه خاصة.

هذا اللون من الجمع تم في عهد رسول الله صلى الله عليه وسلم.

 

திருக்குர்ஆனை பாதுகாக்கும் பணியில் மாநபி {ஸல்} அவர்கள்...

மாநபி {ஸல்} அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

"திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்காதீர். அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' ( அல்குர்ஆன் 75:16-19, 20: 114 )

இன்னொரு வசனத்தில் (87:6) "உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.

எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும் நபி {ஸல்} அவர்களின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.

இறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது என அறுதியிட்டுக் கூறலாம்.

இப்படித்தான் திருக்குர்ஆன் நபி {ஸல்} அவர்களின் உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.



நபித்தோழர்களின் உள்ளங்களில் பாதுகாக்கும் பணியில் மாநபி {ஸல்}...

நபி {ஸல்} அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாய மக்களில் அதிகமானோர் எழுத்தறிவில்லாதவர்களாகவும், மிகக் குறைவாகவர்களே எழுத்தறிவு பெற்றவர்களாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடையவர்களாகவும் இருந்தார்கள்

எனவெnஎனவே, அந்த மக்களில் தம்மை ஈமான் கொண்டவர்களிடம் நபி {ஸல்} அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.

                மேலும்,மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபி {ஸல்} அவர்கள் செய்தார்கள். "முஸ்லிம்கள் தினமும் தொழுகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பித் தொழுகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்'' என்பது தான் அந்த ஏற்பாடு.

திருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யும் நிலை ஏற்பட இது உதவியாக இருந்தது.

எங்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.

இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.

நபி {ஸல்} அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் அவர்கள் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக ஏற்கத்தக்க நபிவழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நூல்: புகாரி 6, 1902, 3220, 3554, 4998)

இவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.

குறிப்பாக, அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி), ஸஅது (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி), ஹுதைஃபா (ரலி), ஸாலிம் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அம்ர் பின் ஆஸ் (ரலி)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரலி), ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), உம்மு ஸலமா (ரலி), உபை பின் கஅபு (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), ஸைத் பின் தாபித் (ரலி)

அபூதர்தா (ரலி), மஜ்மா பின் ஹாரிஸா (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி)

ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களில் பலர் நபி {ஸல்} அவர்கள் காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் நபி {ஸல்} அவர்களின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள்.

எழுத்து வடிவில் பாதுகாக்கும் பணியில் மாநபி {ஸல்}…

உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபி {ஸல்} அவர்கள் அருகே அமர வைத்து பதிவு செய்ய சொல்வார்கள்.

திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், "இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள். (பார்க்க: திர்மிதீ 3011)

இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த எழுத்தர்கள் நபி {ஸல்} அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயம், இவற்றைத்தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தது.

இவ்வாறு எழுதப்பட்டவை நபி {ஸல்} அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

இப்படித்தான் நபி {ஸல்} அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக்குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இவை நபி {ஸல்} அவர்கள் வாழும் காலத்தில் செய்து வைத்த ஏற்பாடுகள் ஆகும்.

மாநபி {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யமாமா போருக்குப் பின்னர் குர்ஆனை மனனம் செய்திருந்த ஏராளமான ஹாஃபிள்கள் ஷஹீதாக்கப்பட்ட போது உமர் (ரலி) அவர்களின் தூண்டுதலின் பேரில் திருக்குர்ஆன் ஒன்று திரட்டப்பட்டது.

அதாவது, உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள்

 

உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள். "நபி {ஸல்} அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணிதான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலைசிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)

பிறகு உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்ட பிரதியாக இன்று நாம் காணும் இந்த அமைப்பில் வெளியிடப்பட்டது.

பெருமானார் {ஸல்} அவர்கள் திருக்குர்ஆனைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகளில் எழுத்து வடிவிலான முயற்சியை மேற்கொண்டதன் விளைவாக இன்று உலகில் திருக்குர்ஆன் தொடர்பான உயர்ந்த நிலையை நாம் அனுபவித்து வருகின்றோம்.

ஆம்! இதுவரை வெளிவந்துள்ள இரண்டு இலட்சம் தப்ஸீர்களில், மொழி பெயர்ப்பகளில் 20,000 விளக்க வுரைகளுக்குக் குறையாமல் திரிப்போலியிலுள்ள நூல்நிலையத்தில் இருப்பதாக டாக்டர் அர்னால்ட் கூறுகிறார்.
ஆங்கிலம் இலத்தீன், ஜெர்மனி டச்சு ,பிரஞ்சு,ரஷ்யா ஆகிய மொழிகளிலெல்லாம் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய மொழிகளில் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள்

36 ஐரோாப்பிய மொழிகளில் 374 திருக்குர்ஆன் மொழபெயர்ப்புகள் 60 ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டன. இப்போது இவை இன்னும் இரண்டு மடங்கு அதிகமாகவே பெருகியிருக்கும்.
1.
ஆங்கிலத்தில் 85 மொழி பெயர்ப்புகள்
2.
ஜெர்மனியில் 46 மொழி பெயர்ப்புகள்
3.
இலத்தீனில் 43 மொழி பெயர்ப்புகள்
4.
பிரஞ்சில் 36 மொழி பெயர்ப்புகள்
5.
துருக்கியில் 33 மொழி பெயர்ப்புகள்
6.
ஸ்பானிஷ் 19 மொழி பெயர்ப்புகள்

இத்தகவலை மிகச்சிறந்த ஆய்வாளர் டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்கள் 1970ல் வெளியிட்டுள்ளார்கள்.

ஐரோப்பிய மொழிகளிலன்றி ஆப்ரிக்க ஆசிய மொழிகளிலும், ஏராளமான மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. இந்திய மொழிகள் பலவற்றிலும், தொடர்ந்து எத்தனையோ மொழிபெயர்ப்புகள் வந்த வண்ணமுள்ளன. அண்மையில் ஹரியானா மாநிலத்திலுள்ள யமுனா நகரைச் சார்ந்த சத்யாதார் வர்மாவும் மொழிபெயர்த்துள்ளார்.

மதீனாவிலுள்ள மன்னர் ஃபஹ்து குர்ஆன் வெளியீட்டகம் மட்டும் இதுவரை 150 மொழிகளில் குர்ஆனை மொழியாக்கம் செய்து பலகோடி பிரதிகளை ஆண்டு தோறும் ஹஜ்ஜுக்கு வரும் ஹாஜிகளுக்கும், உலகிலுள்ள பல பாகங்களுக்கும் இலவசமாக வினியோகம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது.

மூலமொழி பாதுகாக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள் எத்தனை வந்த போதிலும், அரபி மூலம் (அஸல்) தூய்மையுடன் ஒருபுள்ளிகூட மாற்றப்படாமல் பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

குர்ஆனை முழுமையாக மொழிபெயர்க்க முடியாது.
எத்தனை தஃப்ஸீர்கள் மொழிபெயர்ப்புகள் உலகில் வெளிவந்த போதினும் அவற்றுள் ஒன்றையேனும்,திருக்குர்ஆனுக்கு முழுமை யான மொழிபெயர்ப்பு என்றோ, விளக்கவுரை என்றோ கூறிவிட முடியாது. அவ்வாறு எழுதிவிடவும் முடியாது” (குர்ஆன் 18: 109).

எல்லாம் வல்ல அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு நல்ல எழுத்தறிவை அருள்வானாக! அதன் மூலம் சிறந்தவர்களாக உயர்ந்தவர்களாக ஆக்குவானாக! நமது எழுத்தறிவைக் கொண்டு இஸ்லாத்தைத் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக

ஆக்கியருள் வானாக!! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!!.

1 comment:

  1. மாஷா அல்லாஹ் நல்ல தகவல் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு இல்மிலையும் வாழ்விலும் அருள் புரிவானாக

    ReplyDelete