Thursday 22 September 2022

சைகை மொழியும் இஸ்லாமும்!!

 

சைகை மொழியும் இஸ்லாமும்!!


மனிதன் தன் உணர்வுகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த பயன்படுத்திய முதல் மொழி சைகை மொழி என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சைகை மொழி என்பது பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் பேசப்படுகிறது.

உலகில்  பேசப்படும் மொழிகள் பல்வேறு உள்ளனவோ இதைப் போன்றே, சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என பல உள்ளன.

இந்திய சைகை மொழியை கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மக்களும், எளிமையாக தங்களது தேவைகளை வெளிப்படுத்த முடிவதாக, ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளன.

சர்வதேச சைகை மொழிகளின் தினமானது, உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

சைகை மொழி அனைவராலும் அங்கீகரிக்கப் படுமேயானால் காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு மிகவும் துணை புரியும் என்பது தான் இந்நாளின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

1951ம் ஆண்டில், உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில் முதன்முதலில் 2018ல் சர்வதேச சைகை மொழிகள் தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டது.

உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் கூற்றுப்படி உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காது கேளாதவர்கள் மற்றும் அவர்களில் 80%க்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். இவர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த, தேவைகளை நிறைவேற்ற 300 -க்கும் மேற்பட்ட வெவ்வேறு சைகை மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.

மொழி எத்தனை வகைப்படும் என்று யாராவது நம்மிடம் கேட்டால் உடனே தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி, உருது, ஃபார்ஸி, மலையாளம், அரபி, ஸ்பானிஷ்,  என நம் நினைவுக்கு வருகிற, நமக்குத் தெரிந்த மொழிகளை பட்டியல் போடுவோம்.

உண்மையில் இது மொழி பற்றிய அறிவில் குறுகிய வட்டத்திற்குள் நாம் சிந்திப்பவர்களாக இருக்கின்றோம். மாறாக  இஸ்லாத்தின் பார்வையில் மொழி அறிவு என்பது பரந்து விரிந்த பொருளுக்குச் சொந்தமான ஒன்றாகும்.

முதல் படைப்பும், முதலில் பேசப்பட்ட மொழியும்...

அல்லாஹ் படைப்புகள் அனைத்தையும் படைப்பதற்கு முன்னரே மொழியைப் படைத்துவிட்டான் அதற்கு எண்ணற்ற சான்றுகள் அருள்மறைக் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இருக்கின்றன.  இதோ இரண்டு சான்றுகள் மட்டும் நம் புரிதலுக்குப் போதுமானதாகும்.

عن أبي هريرة قال

سمعت رسول الله صلي الله عليه وسلم  يقول أول ما خلق الله القلم

   ثم خلق النون وهي الدواة وذلك

   قال له اكتب قال: وما أكتب 

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:- முதம் முதலாக அல்லாஹ் பேனாவைப் படைத்தான். பிறகு மையைப் படைத்தான். அதுதான் அல்லாஹ் தனது திருமறையில்  'நூன், வல்கலம்' என்று குறிப்பிடுவதாகும். பிறகு அந்த பேனாவை எழுது! என்றான். எதை எழுத வேண்டும்? என்று பேனா கேட்டது. செயல், தவணை,  வாழ்வாதாரம் மற்றும் ஆயுள் ஆகியவற்றையும், மற்றும் இறுதிநாள் வரை என்னவெல்லாம் நடக்கிறதோ, நடக்கப்போகிறதோ அனைத்தையும் எழுது என்றான். இறுதிநாள் வரை நடக்க இருக்கின்ற அனைத்தையும் பேனா எழுதி முடித்தது. பிறகு அந்த பேனாவின் வாயில் இனி, இறுதிநாள் வரை (வேறு எதுவும்) நீ பேசக்கூடாது என அல்லாஹ் முத்திரையிட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான்   கேட்டேன்.         ( நூல்: தப்ரானீ )

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

கருப்புக் களிமண்ணில் இருந்து மணல் கலந்த களிமண்ணில் இருந்து  நான் மனிதனைப் படைக்கவுள்ளேன் என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக!                                           ( அல்குர்ஆன்: 15: 28 )

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முதலில் கூறப்பட்ட நபி மொழியில் "அனைத்துப் படைப்புகளையும் படைப்பதற்கு முன்பாகவே அல்லாஹ் மொழியைப் படைத்திருக்கின்றான்" என்பதை உணர முடிகின்றது. ஆகவே, தான் பேனாவைப் பார்த்து நீ எழுது! என்றதும், அதைப் புரிந்து கொண்ட பேனா எதை எழுதுவது? என்று கேட்கிறது.

இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள அல்குர்ஆனின் வசனத்தில் "முதல் மனிதராக  நபி ஆதம் (அலை) அவர்களைப் படைக்கும்  முன்னரே வானவர்கள் எனப்படும் மலக்குமார்களையும் மற்றும்  இப்லீஸ் என்னும் ஷைத்தானையும் அல்லாஹ் படைத்துள்ளான். மேலும், இந்த படைப்பினங்களிடம் இறைவன் தெளிவாக அழகாக உறையாடியும் உள்ளான் என்பதை  மேற்கண்ட திருக்குர்ஆனின் 15:28 வசனம் சுமந்து நிற்கிறது!

எனவே முதலில் பேசப்பட்ட மொழி இறை மொழியாகும். இறைவனின் மொழியை இன்ஷா அல்லாஹ் நாம் நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியிலும் சுவனத்திலும் கேட்க இருக்கிறோம். இப்படியாக மொழியின் அறிவை இஸ்லாம் பரந்து விரிந்து பொருளுடன் பகிர்ந்து கொள்கிறது.

பறவைகள் மொழி...

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும் என்று அவர் கூறினார். 
(
அல் குர்ஆன் 27:16)

எறும்பின் மொழி...

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது என்று ஓர் எறும்பு கூறியது. ( அல்குர்ஆன்: 27: 18 )

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக! என்றார்.                                        ( அல்குர்ஆன்:  27: 19 )

அனைத்துப் படைப்பினங்களுக்கும் மொழி...

تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا (44)

ஏழு வானங்களும், பூமியும் இன்னும் அவற்றிலுள்ளவையும் அவனைத்துதி செய்த வண்ணம் உள்ளன. அவனது புகழைக் கொண்டு துதி செய்யாது பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை. எனினும், அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக அவன் சகித்துக் கொள்ளக்கூடியவனாகவும், மிக்க மன்னிப்போனாகவும் இருக்கின்றான்”.                         ( அல்குர்ஆன்: 17: 44 )

وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ

அவனுடைய புகழைக் கொண்டு இடியும், அவனுடைய அச்சத்தினால் வானவர்களும் தஸ்பீஹ் செய்கின்றனர்”.                      ( அல்குர்ஆன்: 13: 13 )

ஜின்களின் மொழி...

قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ‌ۚ وَاِنِّىْ عَلَيْهِ لَـقَوِىٌّ اَمِيْنٌ‏

ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.” ( அல்குர்ஆன்: 27: 39 )

ஷைத்தானின் மொழி

قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏

நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

 قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُوْنُ لَـكَ اَنْ تَتَكَبَّرَ فِيْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِيْنَ‏

இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்என்று அல்லாஹ் கூறினான். 

 قَالَ اَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

“(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாகஎன அவன் (இப்லீஸ்) வேண்டினான்.

 قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَ‏

 (அதற்கு அல்லாஹ்) நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்என்று கூறினான்.

 قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ‏

.(அதற்கு இப்லீஸ்) நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்என்று கூறினான்.

 ثُمَّ لَاَتِيَنَّهُمْ مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَآٮِٕلِهِمْ‌ؕ وَلَاٰ تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ‏

பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

 قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ‌ؕ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَــٴَــنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِيْنَ‏

அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்என்று கூறினான். ( அல்குர்ஆன்: 7: 12-18 )

வானவர்களின் மொழி...

وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً

قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ‌ؕ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ‏

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்எனக் கூறினான்.

இப்படியாக, உலகின் ஒவ்வொரு படைப்புகளும் ஒவ்வொரு மொழியில் பேசிக் கொண்டிருக்கின்றன.

சைகை மொழி...

கேட்கும் திறன் இல்லாதவர்களும், பேசும் திறன் இழந்தவர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களும் பயன் படுத்தும் மொழியே சைகை மொழியாகும்.

 

மனிதராகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஆசைகளை அடைந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிரப்பமாகவே இருக்கும். அதில் உடல் குறைபாடுகள், உறுப்புகள் குறைபாடுகள், திறன் மற்றும் புலன் குறைபாடு உடையவர்கள் குறைபாடுகள் இல்லாதவர்கள் என்ற எந்த பேதமும் கிடையாது.

அந்த வகையில் திறன் மற்றும் புலன் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றவர்கள் கடைசி வரை தங்களுடைய குழந்தைகளின் ஆசைகளை, தேவைகளை அறியாமலேயே, நிறைவேற்றாமலேயே இந்த உலகை விட்டும் விடை பெற்று விடுகின்றார்கள். அந்த குழந்தைகளும் தங்களுடைய ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமலேயே பெரியவர்களாகி விடுகின்றனர். இவைகளுக்கெல்லாம் அடிப்படை காரணம் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் அவர்களுக்கான மொழியை அறிந்து கொள்ளாததேயாகும்.

நம்முடைய சமூகத்திலும் கூட இந்த திறன் குறைபாடு கொண்டவர்களுக்கென்று பிரத்யேகமான பள்ளிக்கூடங்களோ, இன்ன பிற கல்வி நிலையங்களோ இல்லை. இத்தகைய குறைபாடுள்ளவர்களுக்கு பயிற்சி தருகிற அளவிற்கான சைகை மொழி அறிந்தவர்களும் இல்லை.

மார்க்க விவகாரங்களில்...

இத்தகைய குறைபாடுள்ளவர்களுக்கு மார்க்க விவகாரங்களில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளில் என்ன நிலை? என்று நாம் பார்த்தோமேயானால் சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

முதலில் அவர்களுக்கு மார்க்கத்தின் கடமைகளை, சட்டதிட்டங்களை அவர்கள் புரிந்து கொள்கிற வகையில் எழுத்தின் மூலமோ, சைகை மொழியின் மூலமோ அவர்களுக்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்களால் இயலாத போது பிறர் மூலமாக கற்றுக் கொடுக்க வேண்டும்.

மேலும், ஹலால் ஹராம் விஷயத்தில் அவர்களுக்கு விதி விலக்கு என்று எதுவும் கிடையாது. முழுவதுமாக அவர்கள் இந்த விஷயத்தில் மற்ற முஸ்லிம்களைப்போன்றே அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

            தொழுகை விஷயத்தில்...


القاعدة العامة في الشريعة : أن من عجز عن شيء من الواجبات سقط عنه ، ولزمه الإتيان بما يقدر عليه منها ؛ لقول الله تعالى : (فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ) [التغابن: 16].

وقول النبي صلى الله عليه وسلم  : ( وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ ) متفق عليه .

وعليه : فالأبكم والأخرس الذي لا يستطيع القراءة : يسقط عنه ما عجز عنه .

فإن كان يحسن أن يسبح أو يذكر الله ، فإنه يسبح ويذكر في مواضع القراءة .

وإن كان يعجز أيضا عن التسبيح ، فلا يعلمه ، ولا يمكنه أن يتعلم بدله : سقط عنه ، ولم يلزمه شيء بدلا من قراءته .

وإن كان يحسن التكبير في مواضعه : لزمه الإتيان به .

فإن كان يعجز عن القول مطلقا ، سقطت عنه جميع الواجبات والأركان القولية في الصلاة ، ويلزمه الإتيان بالواجبات والأركان الفعلية كالقيام والركوع والسجود .

فينوي الدخول في الصلاة بقلبه وهو قائم ، ثم يركع ويسجد ، دون قراءة للقرآن ، ولا تلاوة للأذكار

 

ஷரீஆவின் பொதுவான ஒரு சட்டம் கடமையான ஒன்றை செய்ய முடியாதவாறு ஒருவர் ஆகிவிட்டால் அவர் அந்த கடமையை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் "உங்களால் இயன்ற அளவு அல்லாஹ்வை பயந்து வாழுங்கள்" என்கிறான்.

பெருமானார் (ஸல்) அவர்களும் " உங்களுக்கு நான் இடுகிற கட்டளைகளில் உங்களால் வாழ்க்கையில் கொண்டு வர முடிந்த அளவு கொண்டு வாருங்கள்" என்று கூறியுள்ளார்கள்.

جاء في "الموسوعة الفقهية " (19/92) : " مَنْ كَانَ عَاجِزًا عَنِ النُّطْقِ لِخَرَسٍ : تَسْقُطُ عَنْهُ الأْقْوَال ، وَهَذَا بِاتِّفَاقِ الْفُقَهَاءِ .

وَاخْتَلَفُوا فِي وُجُوبِ تَحْرِيكِ لِسَانِهِ بِالتَّكْبِيرِ وَالْقِرَاءَةِ.

فَعِنْدَ الْمَالِكِيَّةِ وَالْحَنَابِلَةِ وَهُوَ الصَّحِيحُ عِنْدَ الْحَنَفِيَّةِ : لاَ يَجِبُ عَلَى الأْخْرَسِ تَحْرِيكُ لِسَانِهِ ، وَإِنَّمَا يُحْرمُ لِلصَّلاَةِ بِقَلْبِهِ ؛ لأِنَّ تَحْرِيكَ اللِّسَانِ عَبَثٌ ، وَلَمْ يَرِدِ الشَّرْعُ بِهِ .

وَعِنْدَ الشَّافِعِيَّةِ يَجِبُ عَلَى الأْخْرَسِ تَحْرِيكُ لِسَانِهِ وَشَفَتَيْه وَلَهَاتِهِ بِالتَّكْبِيرِ قَدْرَ إِمْكَانِهِ ، قَال فِي الْمَجْمُوعِ : وَهَكَذَا حُكْمُ تَشَهُّدِه ، وَسَلاَمِهِ ، وَسَائِرِ أَذْكَارِهِ ، قَال ابْنُ الرِّفْعَةِ : وَإِنْ عَجَزَ عَنْ ذَلِكَ نَوَاهُ بِقَلْبِهِ كَالْمَرِيضِ .

 

لَكِنْ يَظْهَرُ أَنَّ هَذَا عِنْدَ الشَّافِعِيَّةِ بِالنِّسْبَةِ لِلْخَرَسِ الطَّارِئِ ، أَمَّا الْخَرَسُ الْخِلْقِيُّ فَلاَ يَجِبُ مَعَهُ تَحْرِيكُ شَيْءٍ" .  انتهى.

وما ذهب إليه جمهور العلماء من سقوط التحريك هو الأقرب .

قال ابن قدامة المقدسي : " فَإِنْ كَانَ أَخْرَسَ ، أَوْ عَاجِزًا عَنْ التَّكْبِيرِ بِكُلِّ لِسَانٍ : سَقَطَ عَنْهُ ... ولَمْ يَلْزَمْهُ تَحْرِيكُ لِسَانِهِ فِي مَوْضِعِهِ كَالْقِرَاءَةِ ...؛ لِأَنَّ تَحْرِيكَ اللِّسَانِ مِنْ غَيْرِ نُطْقٍ : عَبَثٌ لَمْ يَرِدْ الشَّرْعُ بِهِ ، فَلَا يَجُوزُ فِي الصَّلَاةِ ، كَالْعَبَثِ بِسَائِرِ جَوَارِحِهِ " انتهى من "المغني" بتصرف (2/130).

அதனடிப்படையில்  பேச இயலாத நிலையில் உள்ளவர்கள் தொழுகையில் ஈடுபடும் போது செயல் ரீதியான ருகூவு, சுஜூது நிலை போன்றவைகளை செய்தாலே போதுமானது. மேலும், தஸ்பீஹ், கிராஅத் போன்றவற்றை செய்ய தேவை இல்லை. ஏனெனில், அது அவர்களால் இயலாத காரியமாகும் என்பது பெரும்பாலான சட்ட அறிஞர்களின் கருத்தாகும்.

எனினும், நான்கு மத்ஹபுகளின் இமாம்களில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இயற்கையாகவு பேச இயலாதவர்கள் சொல் வடிவிலான கிராஅத் தக்பீர் தஸ்பீஹ் ஸலாம் போன்றவற்றில்  நாவை அசைக்க தேவை இல்லை மேலும், இடையே பேச முடியாமல் போனவர்கள் சொல் வடிவிலான கிராஅத் தக்பீர் தஸ்பீஹ் ஸலாம் போன்றவற்றில்  நாவை அசைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  மேலும், அப்படி ஒருவரால் ஆனாலும் மற்ற அனைத்து இமாம்களும் தேவை இல்லை என்றே கூறுகின்றனர்.

மேலும்,  அவர்கள் சைகையாக எதுவும் சொல்லவும் தேவை இல்லை.

மற்ற மார்க்க விவகாரங்களில் எழுத்துக்கள் மூலமாகவோ சைகை மொழி மூலமாகவோ அவர் வெளிப்படுத்த வேண்டும்.

உதாரணமாக நிகாஹில் கபூலிய்யத்தை எழுத்து அல்லது சைகை மொழி வழியாக உறுதிபடுத்த வேண்டும்.

காது கேளாதோர் வாய் பேச இயலாதோர் ஆகியோரின் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.அவர்கள் கண்களால் கண்டதை எழுத்து அல்லது சைகை மொழி வழியாக உறுதியாக சொல்லும் பட்சத்தில்.

நன்மையை ஏவி தீமையை தடுத்தல்...


من رأى منكم منكراً فليغيره بيده، فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان

இறைநம்பிக்கையாளன் ஒருவனின் உயர் பண்புகளில் ஒன்றாக இஸ்லாம் நன்மையை ஏவுவதையும் தீமையை தடுத்தலையும் அடையாளப் படுத்துகிறது.


لذا اشترط العلماء لإيجاب الأمر بالمعروف والنهي عن المنكر القدرة الحسية والمعنوية.

أولاً: العجز الحسي: فيشترط في الآمر بالمعروف والناهي عن المنكر سلامة جسمه وقوته وكمال حواسه فلا يلزم الأخرس والأصم والأعمى بما لا يعلمون أنه منكر، أو لا يستطيعون إنكاره لفقد تلك الحواس أو بعضها

எனினும் தீமையைத் தடுப்பதற்கான ஆற்றலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு ஆற்றலை இயற்கையாகவே ஒரு முஃமின் இழந்திருப்பாரேயானால் அவர் மீது இந்த கட்டளை கடமையாகாது. ஆகவே அல்லாஹ்விடம் இதற்காக குற்றம் பிடிக்கப்பட மாட்டார்.

தீமையை தடுப்பதற்கு முதலில் அந்த தீமையை பார்க்க வேண்டும் பார்வையற்றவரால் பார்க்க இயலாது. வாய் பேச முடியாதவரால் அதை தீமை என்று உணர்த்த முடியாது. எனவே ஷரீஆவின் இந்த கட்டளையில் அவர்கள் சலுகை வழங்கப்பட்டவர்கள் ஆவர்.

அவர்களும் மனிதர்களே!

குறைபாடுகளுடன் பிறந்திருப்பதால் அவர்களைக் கேலி செய்வதும், கண்ணியக்குறைவாக நடப்பதும், அவர்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதும் ஒரு முஃமினுக்கு அழகிய பண்பல்ல.

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ “” إِنَّ اللَّهَ قَالَ إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ “”. يُرِيدُ عَيْنَيْهِ. تَابَعَهُ أَشْعَثُ بْنُ جَابِرٍ وَأَبُو ظِلاَلٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم

நபி(ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான், என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டு அவனை நான் சோதித்து, அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால், அவ்விரு கண்களுக்குப் பகரமாக நான் அவனுக்குச் சுவர்க்கத்தை வழங்குவேன். (புகாரி : அனஸ்(ரலி)


عن جابر قال: قال رسول الله ﷺ: انطلقوا بنا إلى البصير الذي في بني واقف نعوده، وكان رجلاً أعمى رواه البيهقي، وصححه الألباني

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பனு வாகிப் என்ற இடத்தில் வசிக்கும் பார்வையுள்ள மனிதரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்என்று தமது தோழரிடம் கூறினார்கள். ஆனால் அந்த மனிதரோ பார்வையற்றவராக இருந்தார். (நூல்: பைஹகி) அவர் புறப்பார்வையில்லாத மனிதராக இருந்தாலும், அகப்பார்வை உடையவராக இருந்தார். எனவே அவரைக் கண்ணியப்படுத்தும் வகையில், அவரைப் பார்வையுள்ளவர்என்று நபிகளார் குறிப்பிட்டார்கள்.

أن عتبان بن مالك، وهو من أصحاب رسول الله ﷺ ممن شهد بدراً من الأنصار أتى رسول الله ﷺ، فقال: "يا رسول الله، إني رجل ضرير البصر، وأنا أصلي بقومي، فإذا كانت الأمطار سال الوادي الذي بيني وبين مسجد قومي، هناك مسيل ماء كثيف، فإذا كانت الأمطار سال الوادي الذي بيني وبينهم جاء المطر، وسالت المياه، وحُبِستُ عن مسجد قومي، ولم أستطع أن آتي مسجدهم فأصلي بهم، وودتُ يا رسول الله أنك تأتيني فتصلي في بيتي فأتخذه مصلى، فقال له رسول الله ﷺ: سأفعل إن شاء الله.

இத்பான்-பின்-மாலிக் என்ற நபித் தோழர், நபிகளாரிடம் முறையிட்டார். இறைத்தூதரே! நான் பார்வைக் குறைவு உடையவன். நான் எனது பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்குத் தலைமை தாங்கி நடத்துகிறேன். மழை வந்து விட்டால் தண்ணீர் தேங்கி பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே எனது வீட்டிலேயே தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நீங்கள் என் வீட்டிற்கு வந்து தொழுகையை நடத்தினால், அந்த இடத்தை நான் தொழுகைக்குரிய இடமாக ஆக்கிக் கொள்ள முடியும்என்றார். நபிகளார் அவரது கோரிக்கையை ஏற்று, நெருங்கிய தோழரான அபூபக்கருடன் அங்குச் சென்று தொழுகை நடத்தினார்கள். (நூல்: புகாரி)

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், மதீனத்து மக்கள், பார்வையற்றவர்கள், நோயாளிகள் ஆகியோருடன் சேர்ந்து உணவருந்த மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில், பார்வையற்றோர், நடக்க முடியாதவர்கள், நோயாளிகள் மீது எந்தவிதக் குற்றமுமில்லை” (24:61) என்ற திருமறை வசனத்தை ஓதிக் காட்டி மக்கள் கண்ணோட்டத்தை மாற்றி, அனைவரும் சேர்ந்து உணவு உண்ணும் நிலையை ஏற்படுத்தினார்கள்.

மறுமையில் இவர்களின் நிலை…

 

عن الأسود بن سريع رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال: «أربعة يحتجون يوم القيامة، رجل أصم لا يسمع شيئاً، ورجل أحمق، ورجل هرم، ورجل مات في فترة، فأما الأصم فيقول: رب لقد جاء الإسلام وما أسمع شيئاً، وأما الأحمق فيقول: رب لقد جاء الإسلام والصبيان يحذفوني بالبعر، وأما الهرم فيقول: رب لقد جاء الإسلام وما أعقل شيئاً، وأما الذي مات في الفترة فيقول: رب ما أتاني لك رسول، فيأخذ مواثيقهم ليطيعنه، فيرسل إليهم: أن أدخلوا النار قال: فوالذي نفس محمد بيده لو دخلوها لكانت عليهم برداً وسلاماً».

 

நான்கு நபர்கள் அல்லாஹ்வின் விசாரணை மன்றத்தில் உலகில் வாழும் காலத்தில் இறைவழிபாடுகளை முழுமையாகச் செய்யாதவர்கள் தங்களுடைய இயலாமை நிலை குறித்து இறைவனிடம் ஆதாரத்தை முன் வைப்பார்கள்.

1. எதுவுமே கேட்காத செவிப்புலன் இழந்த மனிதர். 

2. அறிவை இழந்தவர்.

3. வயது முதிர்வால் மறதியால் பாதிக்கப்பட்டவர்

4. வஹி தொடர்பு இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்.

நான் வாழும் காலத்தில் இஸ்லாம் வந்தது. ஆனால், அது குறித்து நான் எதையுமே என் செவிப்புலனால் கேட்கவில்லை என்பார் முதலாமவர்.

நான் அறிவிலியாக இருந்தேன். சிறுவர்கள் என்னை கல்லாலும், ஒட்டகச் சாணத்தாலும் என்னை அடித்த போதும் நான் ஏதும் அறியாதவனாக இருந்தேன் என்பார் இரண்டாமவர்.

நான் மறதியால் பாதிக்கப்பட்டு நினைவில் ஏதும் இல்லாமல் இருந்தேன் என்பார் மூன்றாமவர்.

நான் வாழும் காலத்தில் உன் புறத்தில் இருந்து எனக்கு எந்தத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பார் நான்காமவர்.

அல்லாஹ் இன் நால்வரின் முறையீட்டையும் கேட்டு விட்டு அவர்களுக்கு உலகில் அவர்கள் எதுவெல்லாம் இல்லை என்று முறையிட்டார்களோ அவைகளை வழங்கியிருந்தால் தன்னை வணங்கி வழிபட்டு வாழ்ந்திருப்பார்களா? என்று பரிசோதிக்கும் பொருட்டு. “இவர்களை நரகில் நுழையச் சொல்லுங்கள்” என்பான் அல்லாஹ். அதைக் கேட்டு அவர்கள் நரகில் நுழைவதற்காக ஆயத்தமாகும் போது அல்லாஹ் அவர்களின் கட்டுப்படுதலைப் பார்த்து சுவர்க்கத்திற்கு அனுப்புவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அஸ்வத் இப்னு ஸரீஉ (ரலி) அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எந்தக் குறைபாடுகளும் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை நம் அனைவருக்கும் நஸீபாக்குவானாக!

1 comment:

  1. செப்டம்பர் நாலாவது வாரம்,உலக காது கேளாதோர் வாரம், அதை அடிப்படையாகக் கொண்டு, சைகை மொழி, (குறி மொழி )அருமையான தலைப்பு இறைவன் அருள் புரிவானாக தங்களுக்கு...

    ReplyDelete