Thursday, 6 October 2022

 

உத்தம நபி அவர்களை உரிய முறையில் நேசிப்போம்!!!

பெருமானார் அவர்கள் இப்பூவுலகில் வந்துதித்த புண்ணியங்கள் பூத்துக் குலுங்கும் முதல் வசந்தமான ரபீவுல் அவ்வல் மாதத்தின் முதல் ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய இந்த அமர்வை கபூல் செய்தருள்வானாக! நாளை மறுமையில் நபி அவர்களும் அமரும், உறவாடும் நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

இஸ்லாம் ஆதாபுகள் எனும் ஒழுக்காறுகளை தன்னகத்தே கொண்ட ஒரு அற்புத மார்க்கம். ஆதாபுகளைக் கற்றுத் தருகிற, போற்றுகிற, ஆதாபுகளோடு வாழத் தூண்டுகிற, ஆதாபுகளோடு வாழ்பவர்களுக்கு உயரிய பல சன்மானங்களை வழங்கி கௌரவிக்கின்ற மார்க்கம்.

இறைநம்பிக்கைக்குப் பின்னர் ஒரு முஃமின் தம் வாழ்க்கையை ஆதாபுகளோடு அமைத்துக் கொள்ளவே கடமைப்பட்டுள்ளார்.

அந்த ஆதாபுகளை பல வகைகளாக பிரிக்கலாம். எனினும் குறிப்பிட்ட சில ஆதாபுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அதபும் மஅல்லாஹ்அல்லாஹ்வோடு பேண வேண்டிய ஒழுங்குகள், அதபும் மஅர் ரஸூல் - நபி அவர்களுடன் பேண வேண்டிய ஒழுங்குகள், அதபும் மஅல் குர்ஆன்திருமறையோடு பேண வேண்டிய ஒழுங்குகள், அதபும் மஅல் வாலிதைன்பெற்றோர்களுடன் பேண வேண்டிய ஒழுங்குகள், அதபும் மஅல் முஸ்லிமீன்சக முஸ்லிம்களோடு பேண வேண்டிய ஒழுங்குகள், அதபும் மஅன் நாஸ்சக மனிதர்களோடு பேண வேண்டிய ஒழுங்குகள், அதபும் மஅல் ஹைவான்சக உயிரினங்களோடு பேண வேண்டிய ஒழுங்குகள், அதபும் மஅல் மக்லூகாத்அனைத்துப் படைப்பினங்களோடும் பேண வேண்டிய ஒழுங்கள் என பல்வேறு அதபுகளைப் பேணி ஒரு முஃமின் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய ஆதாபுகளில் மிகவும் கவனிக்கத்தக்கதும், கட்டாயம் ஒரு முஃமின் பேண வேண்டிய இரண்டு அதபுகள் இருக்கின்றது. ஒன்று அதபும் மஅல்லாஹ் மற்றொன்று அதபும் மஅர் ரஸூல் ஆகிய இந்த இரண்டு அதபுகள் ஆகும்.

அதபும் மஅல்லாஹ் குறித்து இன்னொரு தருணத்தில் விரிவாக நாம் பேசுவோம். தற்போது பெருமானார் அவர்களுடனான அதபுகள் குறித்து நாம் ஒரு சில விஷயங்களை இன்ஷா அல்லாஹ் நாம் அறிந்து கொள்வோம்.

1.   நபி அவர்களின் கட்டளைகளுக்கு முழுவதுமாக செவி சாய்ப்பதும், கட்டுப்பட்டு நடப்பதும்

مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ 

 قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ 

قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ 

 

எவர் அல்லாஹ்வுடைய தூதருக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கின்றாரோ, அவர் தான் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். நபியே! உம்மை எவர்களும் புறக்கணித்தால் அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.மேலும், அவர்களைக் கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை”. (அல்குர்ஆன்: 4: 80 )

நபியே! அவர்களை நோக்கி நீர் கூறுவீராக! நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்போனும், பெருங்கருணையாளனும் ஆவான்.

நபியே! மேலும் நீர் கூறுவீராக! அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை”.                               ( அல்குர்ஆன்: 3: 31, 32 )

2.   நபி அவர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என்று நம்புவதும், அதை உண்மை படுத்துவதும்

அல்லாஹ்வின் தூதர் கடந்த காலம் குறித்தும், நிகழ்காலம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் இனி வர இருக்கும் மறுமை குறித்தும் சொன்ன அனைத்தும் உண்மை என நம்புவதாகும். ஏனெனில், நபி அவர்கள் பேசிய அத்துனையும் உண்மையாகும். உண்மையைத் தவிர வேறெதையும் நபி அவர்கள் பேசியதில்லை. பேசவும் மாட்டார்கள்.

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى 

 وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى 

 إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى 

நம் தூதராகிய உங்கள் தோழர் வழி தவறி விடவுமில்லை, தவறான வழியில் செல்லவும் இல்லை. மேலும், அவர் தம் விருப்பப்படி எதையும் கூறுவதுமில்லை. மேலும், அவர் பேசுவது அனைத்தும் இறைவன் அறிவித்துக் கொடுத்ததன்றி வேறெதுவும் இல்லை”.                                      ( அல்குர்ஆன்: 53: 2-4 )

الإسراء والمعراج وقص على قريش ما حدث , انطلق نفرٌ منهم إلى أبي بكر رضي الله عنه يسألونه عن موقفه من الخبر ، فقال لهم : \" لئن كان قال ذلك لقد صدق \" ، فتعجّبوا وقالوا : \" أو تصدقه أنه ذهب الليلة إلى بيت المقدس وجاء قبل أن يصبح ؟ \" ، فقال : \" نعم ؛ إني لأصدقه فيما هو أبعد من ذلك ، أصدقه بخبر السماء في غدوة أو روحة \" ، فأطلق عليه من يومها لقب \" الصديق \" . عيون الأثر , ابن سيد الناس 471.

நபி {ஸல்} அவர்கள் மிஃராஜ் பயணத்தை முடித்து மக்கத்து காபிர்களிடம் அதைப்பற்றி எடுத்துகூறியபோது அவர்களில் ஒரு கூட்டத்தினர் ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் சென்று, உம் தோழர் இவ்வாறு சொல்கிறார் என்றதும் கொஞ்சமும் யோசிக்காமல் ஸித்தீக் (ரலி) அவர்கள் அவர் சொல்லியிருந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்றார்கள்.,

திகைத்துப்போன மக்காவாசிகள் ஒரே இரவில் பைத்துல் முகத்தஸ் சென்று திரும்பிவிட்டதாக கூறுகிறாறே அதையுமா நம்புகிறீர்?என்றனர்.அதை கேட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் இதைவிடவும் பாரதூரமான விஷயத்தையும் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வானத்திலிருந்து அவருக்கு வஹி வந்துகொண்டிருக்கிறது என்று நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார்கள்.

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ ، حَدَّثَنَا أَنَسٌ ، عَنْ هِشَامٍ ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، أَنَّهُ أَخْبَرَهُ : أَنَّ أَبَاهُ تُوُفِّيَ وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنَ اليَهُودِ ، فَاسْتَنْظَرَهُ جَابِرٌ ، فَأَبَى أَنْ يُنْظِرَهُ ، فَكَلَّمَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَشْفَعَ لَهُ إِلَيْهِ ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَلَّمَ اليَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ ، فَأَبَى ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّخْلَ ، فَمَشَى فِيهَا ، ثُمَّ قَالَ لِجَابِرٍ : جُدَّ لَهُ ، فَأَوْفِ لَهُ الَّذِي لَهُ فَجَدَّهُ بَعْدَمَا رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَوْفَاهُ ثَلاَثِينَ وَسْقًا ، وَفَضَلَتْ لَهُ سَبْعَةَ عَشَرَ وَسْقًا ، فَجَاءَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُخْبِرَهُ بِالَّذِي كَانَ ، فَوَجَدَهُ يُصَلِّي العَصْرَ ، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُ بِالفَضْلِ ، فَقَالَ : أَخْبِرْ ذَلِكَ ابْنَ الخَطَّابِ ، فَذَهَبَ جَابِرٌ إِلَى عُمَرَ فَأَخْبَرَهُ ، فَقَالَ لَهُ عُمَرُ : لَقَدْ عَلِمْتُ حِينَ مَشَى فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُبَارَكَنَّ فِيهَا

ஜாபிரின் தந்தைக்குக் கடன் கொடுத்த யூதன் அவருக்கு அவகாசம் அளிக்க மறுத்து,  'முப்பது வஸக்' பேரீத்தம்  பழங்களையும் உடன் திருப்பித்தருமாறு கேட்டு நின்றான். கருணை  நபி (ஸல்) அவர்களின்  கவனத்திற்கு இந்த வழக்கு வந்தது!

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) இருவருடனும், ஜாபிரின் தோட்டத்திற்குச் சென்றார்கள். அங்கு நின்று பேரீத்த மரங்களைப் பார்த்தார்கள்.

மிகச் சொற்ப மரங்களே கொஞ்சம் கனிகளைக் கொண்டிருந்தன! உடனே, மரங்களுக்கிடையே சுற்றிவரத் தொடங்கினார்கள். பிரார்த்தித்தார்கள். அதன்பிறகு, ஜாபிரிடம் 'இம்மரங்களின் கனிகளை எல்லாம் கொய்துவிடு! கடன்களை அடைத்துவிடு! உன் பிரச்னைகள் தீர்ந்துவிடும் இன்ஷா அல்லாஹ்!' என்று சொல்லிவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்றுவிட்டார்கள்.

அவ்வாறே ஜாபிர் (ரலி) மரங்களின் பழங்களைப் பறித்தார். என்ன அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு ஏராளமாக இருந்தன.

அந்த யூதன் உட்பட, தம் தந்தை கடன் பட்டிருந்த அனைவரையும் அழைத்து, ஒருவர் விடாமல், அனைவருக்கும் செலுத்த வேண்டிய கடன்களை எல்லாம் நிறைவேற்றினார். அவ்வாறு எல்லோருக்கும் கடன்களை நிறைவேற்றிய பிறகும் அவரிடம் பனிரெண்டு 'வஸக்'குகள் (ஏறத்தாழ 2,150 கிலோ) பேரீத்தம் பழங்கள் எஞ்சி விட்டன! ஜாபிருக்கு பயங்கரமான ஆச்சரியம்!

சிரித்துக் கொண்டே ஓடிப்போய், அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) உடைய உடன்பிறந்த சகோதரியும் தன் அத்தையுமான ஃபாத்திமா பின்த் அம்ரு (ரலி) விடம் விவரத்தைச் சொன்னார். அத்தைக்கும் அளவிட முடியாத ஆச்சர்யம்!

நீ உடனடியாக அண்ணலாரிடம் திரும்பிச் செல்! நிகழ்ந்தவற்றைச் சொல்!' என்றார் அத்தை உள்ளப்  பூரிப்புடன்!

திகைப்பும் மகிழ்ச்சியுமாக தியாகத் திருநபி (ஸல்) அவர்களிடம் சென்றவர் 'கடன்கள் எல்லாம் அடைந்துவிட்டதென்றும் 'பன்னிரண்டு வஸக்குகள்' எஞ்சிவிட்டன அல்லாஹ்வின் தூதரே! என்றும்   மூச்சுவிடாமல் மொழிந்தார்!

புன்னகைத்த பெருமானார் (ஸல்) சிரித்துக்கொண்டே, “ உமரிடம் செல்! நிகழ்ந்ததைச் சொல்!என்றார்கள். அவர்கள் உமர் ரலி அவர்களிடம் சென்றுரைத்தபோது,

எனக்கு அப்போதே இதன் முடிவு என்னவாகும் என்று தெரியும்!

மெய்யானவரும் மெய்ப்பிக்கப் பட்டவருமாகிய உண்மைத் தூதர் (ஸல்) உன் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வரும்போதே, என்ன நிகழும் என்பதை நான் கிரகித்துக் கொண்டேன்! நிச்சயமாக அது பரக்கத் அபிவிருத்தி நிறைந்ததாக அமையும்என்றார் உமர் ரலி புன்னகையுடன்

 

3.   அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களையே வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றுவது

روى البخاريُّ عن مالك بن الحويرث، قال: قال النبيُّ صلى الله عليه وسلم: ((وصلُّوا كما رأيتموني أُصلِّي). 

روى مسلمٌ عن جابر بن عبدالله، قال

النبي صلى الله عليه وسلم يرمي على راحلتِه يومَ النَّحر، ويقول

 ((لِتأخذوا مناسكَكم؛ فإني لا أدري لعلِّي لا أحُجُّ بعد حَجِّتي هذه).

என்னை எவ்வாறு தொழுமாறு கண்டீர்களோ அவ்வாறே நீங்கள் தொழுங்கள்.

 

என்னிடத்தில் இருந்து ஹஜ்ஜின் கிரியைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டிற்குப் பின்னர் நான் ஹஜ் செய்வேனா என்று எனக்கு தெரியாது”. என்று ஹஜ்ஜத்தில் விதாவின் போது நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

قال إبراهيم بن هانئ: اختفى عندي أحمد بن حنبل ثلاثة أيام. ثم قال: اطلب لي موضعا حتى أتحول إليه.

قلت: لا آمن عليك يا أبا عبد اللَّه.

فقال: افعل، فإذا فعلت أفدتك.

وطلبت له موضعا، فلما خرج قال لي: اختفى رسول اللَّه -صلى اللَّه عليه وسلم- في الغار ثلاثة أيام ثم تحول (1)، وليس ينبغي أن يتبع رسول اللَّه -صلى اللَّه عليه وسلم- في الرخاء ويترك في الشدة.

"مناقب الإمام أحمد" لابن الجوزي ص 429 - 430

இமாம் இப்றாஹீம் இப்னு ஹானி (ரஹ்) அறிவிக்கிறார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் மூன்று நாட்கள் என்னிடம் எனது பாதுகாப்பின் கீழ் மறைந்திருந்தார்கள். அதன் பின் நான் இடம் மாறி இருப்பதற்கு வேறொரு இடத்தைப் பார் என்று என்னிடம் இமாமவர்கள் கூறினார்கள். அப்போது நான் வேறொரு இடத்தில் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க எனக்கு முடியாது. வேறொரு இடம் கிடைத்ததும் உங்களுக்குச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, அவருக்காக (பொருத்தமான) இடத்தினைப் பார்த்து சொன்னேன். அவர்கள் என் வீட்டிலிருந்து வெளியேறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் மூன்று நாட்கள் தங்கி விட்டு இடம் மாறினார்கள். செழிப்பிலும் கஷ்டத்திலும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை (ஸுன்னாவை) நாம் பின்பற்றுவதே போதுமானதாகும் எனக் கூறினார்கள். (  நூல்: ஹில்யதுல் அவ்லியா 9/180, தபகாதுல் ஹனாபிலா, பாகம், 1, பக்கம்: 97)

قال الحافظ ابن حجر رحمه الله:

(أَخْرَجَ اِبْن عَبْد الْبَرّ بِسَنَدٍ جَيِّد عَنْ أَبِي دَاوُدَ صَاحِب السُّنَن أنه كَانَ فِي سَفِينَة فَسَمِعَ عَاطِسًا عَلَى الشَّطِّ حَمِدَ فَاكْتَرَى قَارِبًا بِدِرْهَمٍ حَتَّى جَاءَ إِلَى الْعَاطِس فَشَمَّتَهُ ثُمَّ رَجَعَ، فَسُئِلَ عَنْ ذَلِكَ فَقَالَلَعَلَّهُ يَكُون مُجَاب الدَّعْوَة، فَلَمَّا رَقَدُوا سَمِعُوا قَائِلًا يَقُول

 يَا أَهْل السَّفِينَة إِنَّ أَبَا دَاوُدَ اِشْتَرَى الْجَنَّة مِنْ اللَّه بِدِرْهَمٍالفتح (10/ 745).

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் ஒரு நபிமொழியை கேட்டறிந்து வருவதற்கு ஒரு இடத்திற்கு கடலில் பயணம் மேற்கொண்டார்கள். சென்று திரும்பி வருகிற போது கப்பலில் மேல் தளத்தில் பயணித்த சக பயணி ஒருவர் தாம் தும்மியதற்காக “அல்ஹம்து லில்லாஹ்” என்று கூறினார். கீழ் தளத்தில் பயணித்த இமாம் அவர்கள் மேல் தளத்திற்குச் சென்று யார் தும்மினார் என்று விசாரித்து அறிவதற்குள் தும்மியவர் கப்பலில் இருந்து இறங்கி விட்டார். அவர் இறங்கிச் சென்ற நொடிப் பொழுதில் அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்களிடம் அங்கிருந்தவர்கள் “இதோ செல்கின்றாரே இவர் தான் தும்மினார். அவர் தான் அல்ஹம்து லில்லாஹ் கூறினார்” என்றனர். இமாம் அவர்கள் உடனடியாக கீழே இறங்க அதற்குள் அவர் இன்னொரு படகில் (கப்பலில்) ஏறி பயணமாக ஆயத்தமானார். இமாம் அவர்கள் அந்தப் படகில் ஏறி அவரின் அருகே சென்று “யர்ஹமுகல்லாஹ்” கூறி விட்டு மீண்டும் வந்து தம் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். இந்த கால தாமதத்திற்காக கப்பல் ஓட்டுனருக்கு ஒரு திர்ஹம் செலவளித்தார்கள். அங்கிருந்தவர்கள் “ஒரு யர்ஹமுகல்லாஹ் சொல்வதற்கு இவ்வளவு சிரமம் எடுக்க வேண்டுமா?” என கேட்ட போது “அவர் துஆ ஒப்புக் கொள்ளப்படுபவரில் ஒருவராக இருக்கலாம் அல்லவா? அவரின் “யஹ்தீக்குல்லாஹு வயுஸ்லிஹ் பாலக்கும்” என்கிற துஆவைப் பெறவே இப்படிச் செய்தேன்” என இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள். மீண்டும் கப்பல் புறப்பட்ட போது “ஓர் அசரீரியை அங்கிருந்த பயணிகள் அனைவரும் கேட்டனர். ஓ! பயணிகளே! இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் ஒரு திர்ஹத்தைக் கொண்டு சுவனத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்” என்று.

  حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ ، أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ

إِنَّ خَيَّاطًا دَعَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَهُ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِلَى ذَلِكَ الطَّعَامِ فَقَرَّبَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم خُبْزًا وَمَرَقًا فِيهِ دُبَّاءٌ وَقَدِيدٌ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوَالَيِ الْقَصْعَةِ قَالَ : فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்த இறைச்சித் துண்டுகளும் சுரைக்காயும் போடப்பட்ட குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்: நபி (ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை நான் பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகிவிட்டேன். ( நூல்: புகாரி )

 

4.   அவர்கள் விலக்கியிருக்கின்ற அனைத்து காரியங்களை விட்டும் விலகி வாழ்வது….

ஆகவே, நமது தூதர் அவர்கள் உங்களுக்கு கொடுத்ததை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். இவ்விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக! கடுமையாக தண்டிப்பவனாவான்”. ( அல்குர்ஆன்: 59: 7 )

எவர் நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும் அல்லாஹ்வின் தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கின்றாரோ அவரை நாம் அவர் செல்லும் வழியிலேயே செல்ல விட்டு பின்னர் நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடத்தால் மிகவும் கெட்டதாகும்”. ( அல்குர்ஆன்: 4: 115 )

ஆகவே, எவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய கட்டளைக்கு மாறு செய்கின்றார்களோ அவர்கள் தங்களுக்கு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றி எதிர் பார்த்து பயந்து கொண்டிருக்கட்டும்!”.                                         ( அல்குர்ஆன்: 24: 63 )

عن عوف بن مالك الأشجعي رضي الله عنه قال: (كنا عند رسول الله صلى الله عليه وسلم تسعة أو ثمانية أو سبعة، فقال صلى الله عليه وسلم: ألا تبايعون رسول الله؟ وكنا حديث عهدٍ ببيعة، فقلنا: قد بايعناك يا رسول الله! فقال صلى الله عليه وسلم: ألا تبايعون رسول الله؟ قال: فبسطنا أيدينا وقلنا: قد بايعناك يا رسول الله! فعلام نبايعك؟ قال صلى الله عليه وسلم: على أن تعبدوا الله ولا تشركوا به شيئا، والصلوات الخمس، وتطيعوا، وأسرَّ كلمة خفية، ولا تسألوا الناس شيئا. قال عوف: فلقد رأيتُ بعض أولئك النفر يسقط سوط أحدهم، فما يسأل أحدا يناوله إياه) رواه مسلم. قال القرطبي: "وأخْذه صلى الله عليه وسلم على أصحابه في البيعة أن لا يسألوا أحداً شيئا، حمْلٌ لهم على مكارم الأخلاق، والترفع عن تحمل مِنَن الخَلق، وتعليم الصبر على مضض الحاجات، والاستغناء عن الناس، وعزة النفوس، ولما أخذهم بذلك التزموه في جميع الأشياء، وفي كل الأحوال حتى فيما لا تلحق فيه مِنَّة، طردًا للباب وحسْماً للذرائع".

அவ்ஃப் இப்னு மாலிக் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் உட்பட ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பது நபர்கள் நபி ஸல் அவர்களுடன்  அமர்ந்திருக்கும் போது நபி ஸல் அவர்கள் எங்களை நோக்கி நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் பைஅத் எடுக்க வில்லையா? என்று மூன்று முறை கேட்டார்கள். மூன்று முறையும் நாங்கள் அல்லாஹ்வின் தூதரே உங்களிடம் பிரமாணம் செய்கிறோம் என்று கூறினோம். அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்க கூடாது. ஐங்கால தொழுகைகளைத்  தொழ வேண்டும், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மேலும் எந்த ஒரு மனிதனிடத்திலும் எதையும் கேட்கவே கூடாது என்று பிரமாணம் வாங்கினார்கள். நபி ஸல் அவர்களின் கரங்களில் பிரமாணம் கொடுத்த அந்த மனிதர்களில் சிலரை நான் கண்டுள்ளேன் " அவர்களின் கரங்களில் இருந்து கீழே விழும் சாட்டையைக் கூட பிறரிடம் எடுத்து தாருங்கள் என்று கேட்டதில்லை" என்று ‌ ( நூல் முஸ்லிம் )

فعن عمر بن أبي سلمة رضي الله عنه قال: (كنت غلاماً في حجر النبي صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة، فقال النبي صلى الله عليه وسلم: يا غلام، سمِّ الله، وكل بيمينك، وكل مما يليك، فما زالت طعمتي بعد) رواه البخاري. قال ابن حجر: "أي لزمت ذلك وصار عادة لي .. وفيه منقبة لعمر بن أبي سلمة لامتثاله الأمر، ومواظبته على مقتضاه".

அம்ர் இப்னு அபூ ஸலமா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் சிறுவனாக இருக்கும் போது நபி ஸல் அவர்களின் வீட்டில் இருந்தேன். ஒரு நாள் நபி ஸல் அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் கை தட்டில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி ஸல் அவர்கள் "சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடு! வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்பிருந்தே சாப்பிடு! என்றார்கள். அதன் பின்னர் ஒரு போதும் நான் அப்படி சாப்பிட்டதே இல்லை". ( நூல்: புகாரி )


عن أبي مسعود البدري رضي الله عنه قال: (كنتُ أَضرِب غلامًا لي بالسوط، فسمعتُ صوتًا مِن خلفي: اعلم أبا مسعود، فلم أفهم الصوت مِن الغضب، قال: فلما دنا مني إذا هو رسول الله صلى الله عليه وسلم فإذا هو يقول: اعلم أبا مسعود، اعلم أبا مسعود، قال: فألقيتُ السَّوط من يدي، فقال: اعلم أبا مسعود أن الله أقدر عليك منك على هذا الغلام، قال: فقلت: لا أَضرِب مملوكًا بعده أبدا) رواه مسلم. أي: بعد هذا القول الذي سمعه وذلك امتثالا وطاعة للنبي صلى الله عليه وسلم.

அபூ மஸ்வூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் என்னுடைய பணியாளரை அடிப்பவனாக இருந்தேன். ஒருநாள் அப்படி நான் அடித்துக் கொண்டிருந்த போது "அபூ மஸ்வூதே! விளங்கிக் கொள்!' என்று யாரோ சொல்வது போல் என் செவியில் கேட்டது. எனினும் நான் கோபத்தில் இருந்ததால் யார் சொன்னார்கள் என்பதை நான் அறியவில்லை. சற்று நேரத்தில் ஒரு உருவம் என்னை நோக்கி வந்ததை கண்டு பார்த்த போது அந்த உருவம் நபி ஸல் அவர்கள் தான் என்பதை அறிந்து கொண்டேன். அப்போது நபி ஸல் அவர்கள் " அறிந்து கொள்! அபூ மஸ்வூதே! உம்மையும் இது போல் தண்டிப்பதற்கு அல்லாஹ் சக்தி வாய்ந்தவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்! என்றார்கள். அப்போது நான்"அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! இனி ஒரு போதும் என் பணியாளரை நான் அடிக்க மாட்டேன் என்று உறுதி கூறினேன். என்றார்கள். ( நூல்: முஸ்லிம் )

5.   உலகின் அனைத்து மனிதர்களின் வார்த்தைகளை விடவும் நபி   அவர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் தருவது

عن فاطمة بنت قيس رضي الله عنها أن زوجها طلَّقها ثلاثًا، فلم يجعل لها رسول الله عليه الصلاة والسلام سُكنى ولا نَفقة، قالت: قال لي رسول الله عليه الصلاة والسلام: ((إذا حلَلتِ فآذِنيني)) فآذنتْه، فخطَبها معاوية، وأبو جهم، وأسامة بن زيد، فقال رسول الله صلى الله عليه وسلم: ((أما معاوية فرجل تَرِبٌ، وأما أبو جهم فرجلٌ ضرَّاب للنساء، ولكن أسامة بن زيد))، فقالت بيدها هكذا: أسامةُ أسامة، فقال لها رسول الله عليه الصلاة والسلام: ((طاعة الله وطاعة رسوله خيرٌ لك))، قالتْ: فتزوَّجتُهُ، فاغتَطَبْتُ به؛ [أخرجه مسلم].

ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்கள் அபீ அம்ர் இப்னு ஹஃப்ஸ் இப்னு முஃகீரா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்கள்.

கருத்துவேறுபாடு காரணமாக அபீ அம்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்களை தலாக் சொல்லி விட்டார்கள்.

இத்தா (காத்திருப்பு) காலம் கழிந்து மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு சமூகம் தந்த ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி)  அவர்கள் என்னை பலர் பெண் கேட்டு வருகின்றார்கள். அதில் முஆவியா (ரலி)  அவர்களும், அபுல் ஜஹ்ம் (ரலி) அவர்களும், உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களும் அடங்குவர். அல்லாஹ்வின் தூதரே! இம்மூவரில் நான் என் வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்ந்தெடுப்பது?”  என்று கேட்டார்கள்.

அப்போது, மாநபி {ஸல்}  அவர்கள் முஆவியா (ரலி) அவர்கள் ஏழ்மையானவர்; அபுல் ஜஹ்ம் (ரலி) அவர்கள் பெண்களிடம் கடுமையான சுபாவம் கொண்டவர்  எனவே, உமக்கு இருவரும் வேண்டாம் உமக்கு வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்குமாறு உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைப் பரிந்துரைக்கின்றேன்  என்றார்கள். அப்போது, ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்கள் “கையைப் பிசைந்தவர்களாக உஸாமாவா? உஸாமாவா? என்று வியப்போடு கேட்க, அதற்கு நபி {ஸல்} அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுவது உமக்கு சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.

قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَشَرَّفَنِي اللَّهُ بِأَبِي زَيْدٍ وَكَرَّمَنِي اللَّهُ بِأَبِي زَيْدٍ.

ஃபாத்திமா பிந்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் மாநபி {ஸல்} அவர்களின் பரிந்துரையை ஏற்று, உஸாமா (ரலி) அவர்களை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்தேன். அல்லாஹ் என்னை உஸாமா (ரலி) அவர்களின் மூலம் கண்ணியப் படுத்தினான். அல்லாஹ் என்னை உஸாமா (ரலி) அவர்களின் மூலம் மேன்மை ஆக்கினான்”.                           ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா )

وعن ابن عمر رضي الله عنه قال: بينما أنا جالسٌ عند النبي صلى الله عليه وسلم، إذ أتاه رجل فسلَّم عليه، ثم ولَّى عنه، قلت: يا رسول الله، إني لأُحب هذا في الله، قال: ((فهل أعلمتَه ذاك؟))، قلتُ: لا، قال: ((فأعلِمْ ذاك أخاك))، فاتَّبَعْتُه فأدركتُه، فأخذتُ بِمَنْكِبه، فسلَّمتُ عليه، وقلتُ: والله إني لأُحبك لله، قال هو: والله إني لأُحبك لله، قلت: لولا أن النبي صلى الله عليه وسلم أمرَني أن أُعْلِمك، لم أفعَل؛ [أخرجه ابن حبان].

இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல் அவர்களின் சபையில் அமர்ந்திருந்த ஒரு நாள் ஒருவர் வந்தார். நபி ஸல் அவர்களுக்கு ஸலாம் கூறி விட்டு வெளியே சென்றார். அவர் சென்றதும் நான் அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதரை அல்லாஹ்விற்காக நேசிக்கின்றேன்என்றேன். அப்போது நபி {ஸல்} அவர்கள் இதை அவரிடம் தெரிவித்து விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு நான்இல்லைஎன்றேன். அப்போது நபி {ஸல்} அவர்கள் அப்படியானால் அவரிடம் இதை தெரிவித்து விடுங்கள்என்றார்கள். நான் அவர் போன திசையில் சென்றேன். சிறிது தூரத்தில் அவரைக் கண்டு கொண்டேன். அவரின் புஜத்தை பிடித்துஅவருக்கு ஸலாம் சொல்லிஅல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கின்றேன்என்றேன். அவரும்நானும் அல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கின்றேன்என்று கூறினார். பின்பு நான் அவரிடம்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மாத்திரம் உம்மிடம் வந்து இவ்வாறு தெரிவிக்குமாறு கூறியிருக்கவில்லை என்றால் நான் ஒரு போதும் கூறியிருக்க மாட்டேன்என்றேன்.

عن أبي مسعود قال: ( كان رسول الله يأمرنا بالصدقة، فما يجد أحدنا شيئاً يتصدق به؛ حتى ينطلق إلى السوق، فيحمل على ظهره، فيجيء بالمدّ، فيعطيه رسول الله ، إني لأعرف اليوم رجلاً له مائة ألف، ما كان له يومئذ درهم! ) رواه النسائي/ صحيح النسائي:2528

அபூ மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் எங்களிடையே நபி {ஸல்} அவர்கள் அமர்ந்திருந்த போது எங்களிடம் தர்மம் செய்யுமாறு கூறினார்கள்.

 அப்போது எங்களில் எவரிடமும் தர்மம் செய்யும் அளவுக்கு எதுவும் இல்லை. எங்களில் ஒருவர் கடை வீதிக்குச் சென்று உழைத்து, அதன் மூலம் கிடைத்த கூலியை ஒரு முத்து அளவிற்கு பெருமானார் {ஸல்} அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார். 

இப்போது நான் அவரின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கின்றேன். அவரிடம் ஒரு லட்சம் திர்ஹம் இருக்கின்றது. ஆனால், அண்ணலாரிடம் அவர் வந்து கொடுக்கும் முன்பு வரை அவரிடம் ஒரு திர்ஹம் கூட இல்லை”.               ( நூல்: நஸாயி ) 

6.   உலகின் எல்லாவற்றையும் விட தம் உயிரை விடவும் நபி அவர்களை நேசிப்பது

عن عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ» فَقَالَ لَهُ عُمَرُ: فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الآنَ يَا عُمَرُ)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபியவர்கள் உமர் (ரலி) அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) நபியவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரே! என் உயிரைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் விட நீங்கள் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர்கள் என்று கூறி னார்கள். இல்லை! என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறுகிறேன்.

உமரே! உமது உயிரை விட நான் நேசத்திற் குரியவராக ஆகும்வரை உமது ஈமான் பூரணமடையாது என்றார்கள்.அப்போது உமர் (ரலி) அல்லாஹ் வின் மீது சத்தியமிட்டு கூறுகிறேன் என் உயிரை விட நீங்கள் எனக்கு நேசத் திற்குரியவர்கள் என கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இப்போதுதான் (ஈமான் பூரணமடைந்துள்ளது) என்றார்கள். ( அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) நூல்: புகாரி )

எனவே, நமது ஈமானின் ஒரு அம்சமான நபி {ஸல்} அவர்கள் மீதுள்ள நேசத்தை வெறும் வெற்று வார்த்தைகளில் மட்டும் காட்டும் போக்கைக் கைவிட்டு விட்டு நபி {ஸல்} அவர்கள் மீதுள்ள நேசத்தை உள்ளத்து உணர்வுகளாலும், எமது ரூபத்திலும், நடத்தையிலும் உரிய முறையில் வெளிக்காட்ட முனைவோமாக!

2 comments:

  1. Masha Allah.Very informative.jazakkallah khairan

    ReplyDelete
  2. மிக மிக அருமையான செய்திகள் பாரக்கல்லாஹ்

    ReplyDelete