Thursday, 27 October 2022

வரம்புகள் கடப்பதற்கல்ல.. காப்பதற்கு!

 

வரம்புகள் கடப்பதற்கல்ல.. காப்பதற்கு!


இன்று பலதரப்பட்ட கலைகள் நவீன வளர்ச்சியுடன் உலகில் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அக்கலைகளில் எது மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டது ….? எது முரண்பட்டது? என்ற அடிப்படைகளை கவனிக்காது பலரும் அவைகளைப் படிப்பதிலும், அவற்றை நடை முறைப்படுத்துவோரை வாழ்த்துவதிலும் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றார்கள்.

அந்த வரிசையில் சமீப காலமாக உடம்பில் பச்சை குத்துதல்” (Tattoo) வரைதல் குத்தி விடுதல் ஒரு சிறந்த கலையாக இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளதை  அவதானிக்க முடிகின்றது.

இது பற்றி சம்பந்தப்பட்டோரிடம் விளக்கம் கேட்டால் டாட்டூனிஸ்ட்கள் பலரும் சொல்லும் பதில் பச்சை குத்துதலை ஒரு கலையாகவும், அதை உடலில் குத்திவிடுவது தொழிலாகவும்  உடலில் குத்திக் கொள்வதை ஃபேஷனாகவும் மட்டுமே நோக்க வேண்டும் என்ற கருத்துப்பட அவர்களின் சிந்தனைகளை முன்வைக்கின்றார்கள்.

இந்த தலைப்பில் பேச வேண்டியதன் காரணம் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் தற்போது இளைஞர்களைத் தாண்டி யுவதிகளிடமும் இந்த பழக்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் இந்த தலைப்பின் கீழ் சில விஷயங்களை இந்த வார ஜும்ஆ உரையில் பேசவும், கேட்கவும் இருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விளக்கத்தை நஸீபாக்குவானாக!

டாட்டூவின் வரலாறு..

பச்சை குத்தும் முறை முற்றிலும் எகிப்திய காலத்தில்தான் உருவானது. எகிப்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது மம்மிகளுடன் கிடைத்த சில நுண்ணிய ஊசி போன்ற பொருட்கள், டாட்டூ வரைவதற்கான கருவிகளே என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களின் பெண் ஓவியங்களிலும் டாட்டூ வரையப்பட்டிருந்தன. மருத்துவ வசதியில்லாத அந்தக் காலத்தில், பிரசவ வலியைக் குறைப்பதற்காகத்தான் இந்த டாட்டூ வரையும் கலாசாரத்தைப் பின்பற்றினார்களாம்.

மம்மிகளை ஆராய்ந்த போது, தொடை, அடிவயிறு, மார்பகங்களில் அதிக அளவில் டாட்டூகள் வரையப்பட்டிருப்பது தெரியவந்தது. எகிப்தில் ஆண்களும் டாட்டூ கலாசாரத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள்.

எகிப்தியர்கள் ஓவியம், சிற்பம் வடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்களின் கலை ரசனைக்கான ஓர் அடையாளமாகவும் திகழ்கிறது டாட்டூ. கிரீன்லாந்து, சைபீரியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் 1000 ஆண்டுகளுக்கு முன் டாட்டூ வரையப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பழங்கால இந்தியர்கள் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகியோரிடமும் இந்த வழக்கம் இருந்துள்ளதை ஆய்வுகள் டெரிவிக்கின்றன.

பொதுவாக பச்சை குத்திக்கொள்வதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன, அவைகளில் சில:

அதிகமாக நேசிக்கும் ஒன்றை, நபர்களின் பெயர்களை பச்சை குத்திக்கொள்வார்கள். சில நேரங்களில் மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக, கைகளிலும், கழுத்திலும் குத்திக்கொள்வார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விஷயத்தை எதிர்ப்பதாக இருந்தால், அதனை பச்சையாக குத்திக்கொண்டு, தம் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.

சிறை கைதிகள், பணியாட்கள், அடிமைகள் ஆகியோரை அடையாளப்படுத்த பச்சை குத்தப்பட்டது.

நாஜிக்களின் வதை முகாம்களில் யூதர்களுக்கு எண்கள் பச்சை குத்தப்பட்டன.

மனிதர்களை அடையாளப்படுத்தவும், அவர்களை சாதி வாரியாக வகைப்படுத்தவும் பச்சை குத்தப்பட்டது.

பச்சைக் குத்துதல் குறித்து இஸ்லாமிய வழிகாட்டல்...?

1.   அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக்கூடாது.

அல்லாஹ்வின் படைப்பில் மனிதனின் வடிவம் தான் அழகிய வடிவம் என்று குர்ஆன் சான்றுரைக்கின்றது.

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

”திண்ணமாக நாம்! மனிதனை அழகிய வடிவில் படைத்தோம். ( அல்குர்ஆன்: 95: 4 )

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.                                        ( அல்குர்ஆன்: 23: 14 )

أَلَا تَتَّقُونَ (124) أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ (125)

அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு பஅல்எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா? ( அல்குர்ஆன்: 37: 125 )

அழகிய படைப்பாளன் என்று அல்லாஹ் தனக்குப் பெயர் சூட்டியுள்ளான். அவன் எதை எப்படி படைத்துள்ளானோ அது தான் அழகு.

ஆண்களுக்கு எவை அழகோ அவற்றை ஆண்களுக்கு வழங்கியுள்ளான். பெண்களுக்கு எவை அழகோ அவற்றைப் பெண்களுக்கு வழங்கியுள்ளான்.

மேலும், அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வது ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் அடையாளப்படுத்துகிறது.

وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا

அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.                                         ( அல்குர்ஆன்: 4: 119 )

மேலும், அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபி {ஸல்} அவர்களும் தடை செய்துள்ளதோடு, அவர்களை சபித்தும் உள்ளார்கள்.

حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا  جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ عَبْدُ اللَّهِ: «لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى» مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ} [الحشر: 7]

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக

அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி 5931 )

பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: பச்சை குத்துவதைப் பற்றி நபி அவர்களிடமிருந்து (ஏதேனும்) செவியுற்றவர் (யாராவது உங்களில்) இருக்கின்றாரா?” என்று (எங்களிடம்) கேட்டார்கள். நான் எழுந்து, “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நான் செவியுற்றிருக்கிறேன்என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்க, “(பெண்களே! பிறருக்குப்) பச்சை குத்திவிடாதீர்கள்; நீங்களும் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள்என்று நபி அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன் எனக் கூறினேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ( நூல் : புகாரி (5946) )

சிலர் கேட்கும் கேள்விகள்?

1.I want to have a tattoo but I'm Muslim. I'm pretty sure it's haram to have a tattoo but what if I have a tattoo, knowing I will erase it later in like 5 years? ( பச்சை குத்துவது ஹராம். முஸ்லிம் அதைச் செய்யக் கூடாதுன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் ஐந்து வருஷத்திற்கு பின்பு இதை நான் அழித்து விடுவேன் என்று உறுதியாக நின்னைக்கும் போது நான் ஏன் பச்சைக் குத்திக் கொள்ளக் கூடாது?)

2.மனித உடலைப் பற்றி நாம் எதையும் மாற்றக்கூடாது என்று சொன்னால், ஆண்கள் ஏன் விருத்தசேதனம் செய்கிறார்கள்?

3.பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கின்றார்களே? அது தவறில்லையா?

4.If tattoos are haram because it's a permanent alteration of the body, then why are ear piercings (for girls) permissable? .மனித உடலைப் பற்றி நாம் எதையும் மாற்றக்கூடாது என்று சொன்னால், பெண்கள் ஏன் காது குத்தி காதணி அணிந்து கொள்கிறார்கள்?

இன்ஷா அல்லாஹ்இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொன்றையும் நாம் பார்ப்போம்.

முதல் கேள்விக்கான பதில்…

அல்லாஹ் தடுத்த காரியங்களை கொஞ்ச நாளைக்கு செய்வேன். அப்புறம் விட்டு விடுவேன் என சொல்வது அறியாமையும், மடத்தனமும் ஆகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஹலால் - ஆகுமாக்கி இருப்பதை ஹராம் - தடுத்துக் கொள்வதற்கு, ஹராம் - தடுத்திருப்பதை ஹலால் - ஆகுமாக்கிக் கொள்வதற்கு எவருக்கும் அனுமதியோ, விருப்பம் தெரிவிக்கும் அதிகாரமோ, மாற்றுக் கருத்து கூறும் உரிமையோ தர வில்லை.

يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ‌ۚ تَبْتَغِىْ مَرْضَاتَ اَزْوَاجِكَ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். ( அல்குர்ஆன்: 66: 1 )

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكُمْ وَلَا تَعْتَدُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‏

முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

( அல்குர்ஆன்: 5: 87 )

وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ‌ؕ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَؕ‏

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். ( அல்குர்ஆன்:16: 116 )

இஸ்லாத்தில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுப்பது உண்மையான நம்பிக்கையாளர்களின் அடையாளம் கிடையாது. பரிபூரணமாக தீனுல் இஸ்லாத்தில் நுழையுமாறே ரப்புல் ஆலமீன் கூறுகிறான். 

ஆகவே முஸ்லிம் எனும் அடையாளத்துடன் இருப்போர் அனைவரும் இம்மார்கத்தில் முழுமையாக நுழைய முயற்சிக்க வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.                                       ( அல்குர்ஆன்:  2: 208 )

பெயர் மாற்றம் செய்தாலும் ஹராம் ஹராமே!

عن أبي مالك الأشعري أن رسول الله صلى الله عليه وسلم قال: "ليشرَبنَّ ناسٌ من أمَّتي الخمرَ يُسمُّونَها بغيرِ اسمِها

என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ (நபிமொழி. அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), நூல்: இப்னுமாஜா) என்று யாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அத்தகையவர்கள் இச்சமுதாயத்தில் தோன்றி விட்டனர். இவர்கள் மது என்ற பெயரை மூடி மறைத்து விட்டு அதற்குப் பகரமாக உற்சாகமூட்டும் பானங்கள்எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். 

يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ۚ وَمَا يَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَؕ‏

அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் அல்லாஹ்வையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை. அவர்கள் அதை உணர்வதில்லை” ( அல்குர்ஆன்: 2: 9 )

இந்த நபிமொழி மதுவுக்கு மட்டுமானதாக இருந்தாலும் இந்த சமுதாயம் கலை, கலாச்சாரம், நல்லிணக்கம் எனும் பெயரில் தடுக்கப்பட்ட எதைச் செய்தாலும் அது இறை கோபத்தையும் சாபத்தையும் தண்டனையும் பெற்றுத் தரும் செயலே!

இரண்டாவது மற்றும் நான்காவது கேள்விக்கான பதில்...

காது குத்துதல்..

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ يَوْمَ أَضْحَى أَوْ فِطْرٍ فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ ‏ ‏بِلَالٌ ‏ ‏فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَجَعَلَتْ الْمَرْأَةُ تُلْقِي ‏ ‏خُرْصَهَا ‏ ‏وَتُلْقِي ‏ ‏سِخَابَهَا ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (ஒரு நோன்புப் பெருநாள் அன்று உரையாற்றிய போது கூட்டம் மிகுதியாக இருந்ததால் தமது உரையைப்) பெண்களுக்கு கேட்க வைக்க முடியவில்லை என்று அவர்கள் கருதி, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால் (ரலி) தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 98, முஸ்லிம் 1605, ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பு: முஸ்லிம் 1607)

மேற்காணும் அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பெண்களிடம் தர்மம் செய்யுங்கள்என்று  கூறியதும் பெண்கள் காதணிகளையும், மோதிரங்களையும் கழற்றித் தர்மம் செய்தார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நபி (ஸல்) அவர்களின் காலத்தில், பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக காதில் ஆபரணங்கள் அணிந்திருந்தனர் என்பதை மறு கருத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்துகின்றது.

விருத்த சேதனம் - கத்னா

கத்னா எனும் விருத்த சேதனம் செய்வது நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழக்கமாகத் துவக்கப்பட்டது என ஆதாரப் பூர்வமான அறிவிப்புகளிலிருந்து அறியமுடிகிறது!

“(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் கதூம்’ (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3356, 6298, அஹ்மத்).

நபி அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 5889 )

மறுமை நாளில் கத்னா செய்யப்படும் முன்பு நாம் எப்படி இருந்தோமோ அப்படியே எழுப்பப் படுவோம்.

 

عن عائشةَ، رضي اللَّه عنها  قَالَتْ: سمعتُ رَسُول اللَّه ﷺ، يقول: « يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُراةً غُرْلًا »، قُلْتُ: يَا رَسُول اللَّه! «الرِّجَالُ وَالنِّسَاءُ جَمِيعًا يَنْظُرُ بَعْضُهُمْ إِلى بَعْضٍ؟»، قَالَ: « يَا عَائِشَةُ! الأَمرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُم ذلكَ 

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாகவும்,  நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் (கத்னா) செய்யப்படாதவர்களாகவும் ஒன்று திரட்டப்படுவீர்கள்என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள். 

உடனே நான், இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே!?”என்று கேட்டேன். 

அதற்கு நபியவர்கள், “அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று கூறினார்கள். (நூல்: புகாரி - 6527, முஸ்லிம் - 5491,5492)

விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் என்பதன் பொருள்:

உலகில் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது ஆணுறுப்பின் மேல்பகுதியில் வெட்டப்பட்டிருந்த அந்த தோல் துண்டு மறுமை நாளன்று மீண்டும்  அவ்விடத்திற்கு மீட்டிக் கொண்டுவரப்படும்.

முடிவில், மனிதர்கள் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக தமது தாய்மார்களின் வயிறுகளிலிருந்து வெளிவந்தது போல் தமது மண்ணறைகளிலிருந்து வெளியேறி வருவார்கள். 

பிளாஸ்டிக் (சர்ஜெரி) அறுவை சிகிச்சை..

படைப்பினங்களின் ஒழுங்கில் மாற்றம் செய்தல் என்ற அல்குர்ஆன் வசனத்தை விளங்கிக் கொள்வதற்கு அது குறித்த ஆரம்பகால அறிஞர்களின் புரிதல்களை படிப்பது அவசியமாகும். அவர்களின் கருத்துக்களை தொகுத்துப் பார்க்கும் போது படைப்பினங்களை மாற்றுதல்என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் இருவகையில் பொருள் கூறியுள்ளனர்.

قال ابن عباس رضي الله عنهما والحسن ومجاهد وسعيد بن المسيب والضحاك : يعني دين الله ، نظيره قوله تعالى : " لا تبديل لخلق الله " ( الروم - 30 ) أي : لدين الله ، يريد وضع الله في الدين بتحليل الحرام وتحريم الحلال .

 

ஒன்று: கருத்து ரீதியான பொருள். அதாவது அல்லாஹ்வுடைய தீனை மாற்றுதல், இயல்பாக இறைவன் எந்த நோக்கத்தில் ஒன்றை படைத்திருக்கின்றானோ அந்த இயல்புகளை மாற்றுதல், அல்லாஹ் ஏவியுள்ள கட்டளைகளுக்கு முரணாக செயல்படுதல் போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

وقال عكرمة وجماعة من المفسرين : فليغيرن خلق الله بالخصاء والوشم وقطع الآذان حتى حرم بعضهم الخصاء، وقيل : تغيير خلق الله هو أن الله تعالى خلق الأنعام للركوب والأكل فحرموها ، وخلق الشمس والقمر والأحجار لمنفعة العباد فعبدوها من دون الله ، ( ومن يتخذ الشيطان وليا من دون الله ) أي : ربا يطيعه ، ( فقد خسر خسرانا مبينا )

இரண்டு : அல்லாஹ் படைத்தவற்றின் வடிவமைப்பில் மாற்றம் செய்தல். இதில் குறிப்பாக மிருகங்களுக்கு விதையடித்தல், பச்சை குத்துதல், புருவ முடிகளை களைதல், பற்களுக்கு இடையில் செயற்கையாக இடைவெளிகளை அமைத்தல், மிருகங்களின் காதுகளை துண்டித்தல், கண்களை பிடுங்குதுல் அல்லது தண்டனை என்ற வகையில் விதையடித்தல், கண்ணைப் குருடாக்குதல், பிற முடிகளை இணைத்து சிகை அலங்காரம் செய்தல் போன்ற செயல்களை உதாரணமாக கூறலாம். இவையாவும் இந்த வசனத்திற்கு கூறியுள்ள பொதுவான கருத்துக்களாகும்.

தற்போது அறிவியல் துறையின் வளர்ச்சியாக உள்ள பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை முறையயானது இந்த வசனத்துடன் மிகுந்த தொடர்புடையதாகும். 

இது குறித்து சர்வதேச இஸ்லாமிய சட்ட சபை 2007ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 18வது மாநாட்டில் மிகவும் தெளிவான சட்டத் தீர்ப்புக்களை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விசயங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

1)    செயலிழந்த உறுப்புக்களை மீண்டும் செயல்பட வைத்தல், குறைபாடுகளை சரிசெய்தல், வழமையான ஒழுங்கமைப்புக்கு மாற்றமான தோற்றத்தில் உள்ள உறுப்புக்களை இயல்பான தோற்றத்திற்கு வடிவமைப்பு செய்தல் போன்ற ஷரீஆ அங்கீகரிக்கும் நலன்களை கருதி பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யலாம். இப்படியான நோக்கங்களுக்காக செய்யப்படும் அறுவைச் சிகிச்சை முறையை மார்க்கம் அனுமதிக்கிறது.

2)    துறை சார்ந்த தகுதிவாய்ந்த ஒரு மருத்துவரே இந்த சிகிச்சையை செய்யவேண்டும்.

3)    குறித்த சிகிச்சையின் பக்கவிளைவுகள் பற்றி நோயாளிக்கு மிகவும் தெளிவாக உணர்த்துதல் வேண்டும்.

எனவே சூரா நிஸாவின் 119ம் வசனம் அல்லாஹ்வுடைய படைப்பினங்களில் மாற்றம் செய்தல் என்பது என்ன என்பதை வெறுமனே உருவமாற்றம் என்பதாக எந்த ஆரம்பகால மற்றும் நவீன கால அறிஞரும் கூறவில்லை. குறை நீக்கும் வகையில் உறுப்புக்களில் மாற்றம் செய்தல் அல்லது குறைபாடுள்ள உறுப்புக்களை மீள் வடிவமைத்தல் என்ற நோக்கத்திற்காக அறுவைச் சிகிச்சை செய்வதை இஸ்லாம் தடுப்பதில்லை.

மேலும் இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறை  நபிமொழிக்கு எதிரானதும் அல்ல.

حدَّثنا موسى بنُ إسماعيلَ ومحمدُ بنُ عبد الله الخُزاعيُّ -المعنى- قالا: حدَّثنا أبو الأشْهبِ، عن عبدِ الرحمن بن طرَفَةَ أن جده عَرْفَجَةَ بن أسعدٍ قُطِعَ أنفُه يوم الكُلاب فاتخذ أنفاً من وَرِقٍ، فأنتنَ عليه، فأمرَهُ النبي – صلَّى الله عليه وسلم – فاتخذ أنفاً من ذهب

அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: "அறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டு விட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது. அதனால் நபிகள் நாயகம் அவர்கள் எனக்குத் தங்கத்தால் ஆன மூக்கு பொருத்தும் படி உத்தரவிட்டார்கள். ( நூல்: திர்மிதீ 4232 )

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை..

பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்குப் போரில் தாடையிலும் முகத்திலும் ஏற்பட்ட ரணங்களை சீர் செய்ய பெல்ஜியன் ஃபீல்ட் மருத்துவமனையில் மருத்துவர் ஹரால்ட் கில்லீஸ் 1915-ல் அறுவை சிகிச்சைகள் செய்தார். இதுதான் உலக வரலாற்றில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பிளாஸ்டிக் சர்ஜரி. 

பிளாஸ்டிக் சர்ஜரி தொடர்பான குறிப்புகள் 16-ம் நூற்றாண்டிலிருந்து காணக் கிடைக்கின்றன. போரில் குறைபட்ட உறுப்புகளைச் சரிசெய்வதற்கும், தனிநபர் சண்டைகளில் குறைபட்ட மூக்குகளை சரிசெய்வதற்கும், பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட முகத்தைச் சரிசெய்வதற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைகள் செய்யப்பட்டன. இனம், நிறம் சார்ந்து அழகு, ஆரோக்கியம் என்று கருதப்படும் தோற்றத்திற்காகவும் இந்த சிகிச்சைகள் வழக்கத்தில் இருந்தன. மூக்கின் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு, மேல் புஜத்திலிருந்து தோல் வெட்டியெடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

வரம்புகளில் கவனம் வேண்டும்...

عن أبي هُريرة رَضِيَ اللهُ عنه ((أنَّ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم جاء إليه رجلٌ فقال: هلكْتُ يا رسولَ الله. قال: وما أهلَكَك؟ قال: وقعْتُ على امرأتي في رمضانَ، فقال: هل تجِدُ ما تُعتِقُ؟ قال: لا. قال: هل تستطيعُ أن تصومَ شَهرينِ مُتَتابعينِ؟ قال: لا. قال: فهل تجِدُ إطعامَ سِتِّينَ مِسكينًا؟ قال: لا. قال: فمكث النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم، فبينا نحن على ذلك أُتِيَ النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم بعَرَقٍ فيها تَمرٌ- والعَرَقُ: الْمِكتَلُ- قال: أين السَّائِلُ؟ فقال: أنا. قال: خذْ هذا فتصَدَّقْ به. فقال الرجُلُ: على أفقَرَ مني يا رسولَ اللهِ؟ فواللهِ ما بين لابَتَيْها- يريدُ الحَرَّتَينِ- أهلُ بَيتٍ أفقَرُ مِن أهل بيتي. فضَحِكَ النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم حتى بدَتْ أنيابُه، ثم قال: أطعِمْه أهلَك

நபி அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் எனக்கூறினார். உம்மை அழித்தது எது? என நபி அவர்கள் கேட்டார்கள். ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியோடு நான் உடல் உறவில் ஈடுபட்டேன் என கூறினார். ஒரு அடிமையை உரிமை இட முடியுமா என (அம்மனிதரிடம்) நபி அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக்கூறினார். இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க முடியுமா என நபி அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக் கூறினார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா என நபி அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக் கூறினார். நபி அவர்கள் அவரை அமருமாறு கூறினார்கள் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபி அவர்களுக்கு ஒரு பெரிய பேரீத்தம் பழக்கூடை நன்கொடையாக கொண்டுவரப்பட்டது. அதை (ஏழைகளுக்கு) தர்மமாக கொடுத்துவிடும்படி (அம்மனிதருக்கு) நபி அவர்கள் கூறினார்கள். மதீனாவின் எல்லைக்குள் எங்களைவிட வறுமையானவர்கள் யாருமில்லையென அம்மனிதர் கூறினார். (அதைக்கேட்ட) நபி அவர்கள், அவர்களின் கோரைப்பல் தெரியுமளவு சிரித்துவிட்டு, அதை எடுத்துக் கொண்டு, உன் குடும்பத்திற்கே உணவளி என்றார்கள். (திர்மிதி)

நிர்பந்த நிலையில் வரம்பு மீறுதல்

قال ابن جرير: حدثني محمد بن عبد الله بن بزيع البصري، حدثنا يزيد بن زُرَيع، حدثنا داود بن أبي هند، عن عكرمة، عن ابن عباس قال: كان رجل من الأنصار أسلم ثم ارتد ولحق بالشرك، ثم ندم، فأرسل إلى قومه: أن سَلُوا لي (1) رسول الله صلى الله عليه وسلم: هل لي من توبة؟ قال: فنزلت: { كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ } إلى قوله: { [إِلا الَّذِينَ تَابُوا مِنْ بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا] (2) فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ } .

அன்சாரிகளில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு மதம் மாறி இணைவைப்புக் கொள்கையில் இணைந்து கொண்டார். பின்பு (இதற்காக) வருத்தப்பட்டு நபி அவர்களிடம் எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? என்று கேட்கும் படி தன்னுடைய கூட்டத்தாருக்குத் தகவல் தெரிவித்தார். அவரது கூட்டத்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இன்னார் (மதம் மாறியதற்காக) வருத்தப்பட்டு விட்டார். அவருக்கு மன்னிப்பு உண்டா? என்று உங்களிடம் கேட்கும் படி எங்களுக்குக் கூறியிருக்கிறார் என்று சொன்னார்கள். 

அப்போது தான் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (3 : 86) என்ற வசனம் இறங்கியது. நபி அவர்கள் இதை அவருக்குத் தெரிவித்த உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். 

( அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : நஸயீ (4000) )

'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. தாமாகச் செத்தவை எந்த நிலையில் எங்களுக்கு ஹலாலாகும்?' என்று நபித்தோழர்கள் நபி அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி அவர்கள், காலையில் அருந்தும் பால், மாலையில் அருந்தும் பால் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ணலாம் என்றனர். ( நூல்கள் : அஹ்மத் 20893, 20896,

தாரமி 1912 )

நான் நபி அவர்களிடம் சென்று 'தாமாகச் செத்தவை எப்போது எங்களுக்கு ஹலாலாகும்?' என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள் 'உங்கள் உணவு என்ன?' எனக் கேட்டனர். 'காலையிலும், மாலையிலும் (சிறிதளவு) பால்' என்று நான் கூறினேன். அப்போது நபி அவர்கள் தாமாகச் செத்தவற்றை அந்த நிலையில் எங்களுக்கு ஹலாலாக்கினார்கள். ( நூல் : அபூதாவூத் 3321 )

நிர்பந்தத்திற்கு ஆளானோர் தடை செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம் எனக் கூறிய இறைவன் அதற்கு இரண்டு நிபந்தனைகளைக் கூறுகிறான். அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

'வலியச் செல்லாமலும்' 'வரம்பு மீறாமலும்' என்பதே அந்த இரு நிபந்தனைகள்.

தடுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட ஆவல் கொண்டு, இது போன்ற நிலையைத் தேடிச் செல்லக் கூடாது. பஞ்சத்தில் அடிபட்ட பகுதிக்குச் சென்றால் தடுக்கப்பட்ட உணவுகளை ருசி பார்க்கலாம் என்று எண்ணுவது வலியச் செல்வதாகும்.

நிர்பந்தமான நிலையை அடைந்தோர் அதிலேயே நீடிக்கும் வகையில் நடக்கக் கூடாது. அந்த நிர்பந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும்; அதற்காக முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சோம்பி இருந்து கொண்டு தடை செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது வரம்பு மீறலாகும்.

روى من طريق الشافعي أنه قال: أنبأنا سفيان عن إسماعيل بن أبي خالد عن قيس بن أبي حازم، قال: سمعت ابن مسعود يقول: (كنا نغزو مع رسول الله صلى الله عليه وسلم وليس معنا نساء، فأردنا أن نختصي، فنهانا عن ذلك رسول الله صلى الله عليه وسلم

நாங்கள் நபி அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா?” என்று கேட்டோம். அப்போது நபி அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். ( அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி-5071, 4615, 5076 )

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித்தராத விஷயங்களைச் செய்வதும் சொல்லித்தந்த விஷயங்களில் அவர்கள் கூறாத செயல்களை அதிகப்படியாக செய்வதும் அவர்கள் சொன்ன விஷயங்களுக்கு மாற்றமாக செய்வதும் வரம்பு மீறுதலாகும்.

எனவே முஃமின்கள் ஆகிய நாம் மிகைத்தோன் அல்லாஹ்வின் மார்க்கமான இந்தத் தூய இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து அல்லாஹ்வும் ரசூலும் கட்டளையிட்ட காரியங்களை செய்து கட்டளையிடாத செயல்களைச் செய்யாமல் தவிர்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்வானாக!!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!.

No comments:

Post a Comment