Thursday 1 December 2022

மாற்றுத்திறனாளிகளிடம் அறத்துடன் நடப்போம்!!!

மாற்றுத்திறனாளிகளிடம் அறத்துடன் நடப்போம்!!!

1992 ஆம் ஆண்டு ஐ.நா பொது சபை தீர்மானம் 47/3 ன் படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மூன்றாம் நாள் ஊனமுற்றோர் தினம்’ ( International Day of Disabled Persons ) அனுசரிக்கப்படும் என ஐ.நா அறிவித்தது. 2007 ஆண்டில் இருந்து “ International Day of People with Disabilities “  என்று அழைக்கப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்வதேச அளவில் அனுசரிக்கப்படும் நாட்களில் சில  கவலைக்குரிய பிரச்சனைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்கும், உலகளாவிய அளவில் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும்,  சம்பந்தப்பட்டவர்களின் விருப்பத்தையும் வளங்களையும் திரட்டுவதற்கும், மனிதகுலத்தின் சாதனைகளை கொண்டாடுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஆகும் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

எவ்வித குறைபாடுகளும் இன்றி பிறந்தவர்களே மதத்தால், இனத்தால், நிறத்தால், மொழியால் சமூக மட்டத்தில் பல்வேறு உரிமை இழப்புகளை சந்தித்து வரும் வேளையில் அங்க குறைபாடுகளுடன் பிறந்தவர்கள் சமூகத்தில் இழந்து வரும் உரிமைகளை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை.

கல்வியில் துவங்கி சமூகத்தில் பல்வேறு நிலைகளில் அவர்கள் உரிமை மறுக்கப்படுபவர்களாக, ஓரங்கட்டப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

எனவே, அவர்களுடனான நமது தொடர்பும், உறவும் எப்படி இருக்க வேண்டும்? அவர்கள் நமது குடும்பத்தில், நட்பு வட்டத்தில், நமது மஹல்லாவில் இடம் பெற்றுள்ளார்கள் எனும் போது அவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம்? என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள இது போன்ற நாட்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் தருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இரு தசாப்தங்களுக்கு முன்னால், உடற்குறைகளை முன்னிறுத்தும் குருடு, செவிடு,நொண்டிஎன்ற சொற்பதங்கள் தான் பயன்பாட்டில் இருந்தன. மனதைப் புண்படுத்தும் அச்சொற்களை விடுத்து, “ஊனமுற்றோர்என்ற சொல் பழக்கத்தில் வந்தது. ஊனம்என்ற சொல்லையும் தவிர்த்திட வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது, “மாற்றுத் திறனாளிகள்என்று அன்புடன் அழைக்கப்படும் உடற்சவால்  கொண்ட சகோதர சகோதரிகள் தம் வாழ்க்கையை ஒரு சவாலாகத் தான் ஏற்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

துவக்கமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கின்றது. அது

றைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான்.

ஒவ்வொரு மனிதரும் மற்ற மனிதரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர்.

குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் உடல் குறைபாடு, உணர்வு குறைபாடு, திறன் குறைபாடு, ஆற்றல் குறைபாடு என வெளிப்படையான குறைபாடுகளுடன் பிறந்தவர்களோடு நாம் நடந்து கொள்ளும் விதம், நாம் வெளிப்படுத்தும் உணர்வு உண்மையில் வேறுபட்டே இருக்கின்றது.

இயலாத மனிதர்களும் உலகில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். இயன்ற சகமனிதர்கள் அவர்களை பகிர்ந்து சுமப்பதுதான் ஒரு சமூகத்தின் அறமாகும்.

உடல் ஊனம் ஒருபுறம், சமுதாயம் பழிப்பதால் உண்டாகும் காயம் மறுபுறமுமாக தாழ்வு மனதோடு ஈனமாக வாழ்ந்து, தனக்குள் இருந்த மாற்றுத்திறன் வெளிப்படாமலே மண்மூடி போனவர்கள் ஏராளம்.

அந்த குற்றம் மாற்றுத்திறனாளிகளை சரியாக கையாளத் தெரியாத நம் சமூகத்தினுடையதுதான். மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் உதவிகள் வழங்குவதை விட சக மனிதனாக நடத்துவதும், மதிப்பதும் தான் மனிதாபிமானமும், சமூக தர்மமும் கடமையும் ஆகும்.

உடல் ஊனமாக பிறந்தவர்களைப் பற்றிய கண்ணோட்டம் நாம் வாழும் சமூகத்தில்  மாறுபட்டதாகவே இருக்கிறது.

ஊனம் என்பது ஒரு குறையா? ஊனம் என்பது கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளுக்கான, பாவங்களுக்கான தண்டனையா? என்பது போன்ற நம் சமூகத்தில் நிலவும் கேள்விகளுக்கு தெளிவான பதிலை பார்ப்பதோடு, இஸ்லாமிய அகீதாவோடு தொடர்பு படுத்திப் பார்த்து விளக்கம் பெற வேண்டிய அவசியமும் உள்ளது.

மாற்றுத் திறன் கொண்டவர்களும்... அவர்களைப் பெற்றெடுத்தவர்களும்...

உடல் குறைபாட்டுடன் பிறந்த பலர் தங்களின் அந்த நிலை குறித்து வருந்துவதோடு அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்வைக் குறித்து குறை கூறுகின்றனர். அதே போன்றே உடல் குறைபாட்டுடன் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெற்றோரும் இறைவனை நிந்திக்கின்றனர்.

அல்லாஹ் தன்னைப்பற்றி கூறும் போது…

“நிச்சயமாக! அவனே! மிகப்பெரிய படைப்பாளனும், (படைப்புகள் குறித்து) நன்கறிந்தவனும் ஆவான்”. ( அல்குர்ஆன்: 36: 81 )

“அவனே அனைத்து படைப்புகளையும் படைத்து அவற்றை ஒழுங்கு படுத்தினான். அவனே அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும் நிர்ணயம் செய்து அவற்றை அடையக்கூடிய வழிகளையும் அறிவித்தான்”. ( அல்குர்ஆன்: 87: 2,3 )

”திண்ணமாக! நாம் மனிதனை மிக்க அழகிய அமைப்பில் படைத்திருக்கின்றோம்”. ( 95: 4 )

“அவன் தான் கர்ப்பப்பைகளில் அவன் விரும்பியவாறு உங்களுக்கு உருவம் அமைக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 3: 6 )

”அல்லாஹ் படைத்த அனைத்து படைப்புகளுமே அழகிய படைப்புகள் தாம்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் சிலரை உடல் குறைபாட்டுடன் படைத்திருப்பதன் ரகசியத்தை அவன் மாத்திரமே அறிவான். எனவே, அல்லாஹ்வை குறை கூறுவதை, நிந்திப்பதை விட்டு விட்டு, அல்லாஹ் தங்களுக்கு விதித்திருப்பதை பொருந்திக் கொண்டு வாழ வேண்டும்.

“அல்லாஹ்வும், அவன் தூதரும் ஒரு விஷயத்தில் முடிவெடுத்து செயல் படுத்தியதன் பின்னர் அவ்விஷயத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு இறை நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை” ( அல்குர்ஆன்: 33: 36 )

ஏனெனில்,

“உம்முடைய இறைவன் தான் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துப் படைக்கின்றான். அவனுடைய தேர்ந்தெடுப்பில் (குறை கூற) மாற்று கூற எவருக்கும் உரிமையில்லை”. ( அல்குர்ஆன்: 28: 68 )

“அவன் செய்பவற்றைப் பற்றி (ஏன் செய்தாய்? எதற்காக செய்தாய் என்று) எவரும் அவனைக் கேட்க முடியாது. எனினும், படைப்புகள் தாம் அவர்களின் செயல்கள் குறித்துக் கேட்கப்படுவார்கள்”. ( அல்குர்ஆன்: 21: 23 )

சமூகத்தின் சிந்தனை…

இது போன்ற குழந்தைகளை பெற்றெடுப்பதற்கான காரணத்தை மக்கள் மனம் போன போக்கில் இவ்வாறு கூறுவதுண்டு. “வாலிப வயதில் இவர்கள் ஏதாவது பாவம் செய்திருப்பார்கள் அது தான் இப்படி உடல்; குறைபாட்டுடன் குழந்தை பிறந்துள்ளது” என்று.

“எவன் நேரான வழியில் செல்கின்றானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கின்றான். எவன் தவறான வழியில் செல்கின்றானோ அவன் தவறான வழியில் சென்று தனக்கே தீங்கிழைத்துக் கொள்கின்றான். ஒருவரின் பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்”. ( அல்குர்ஆன்: 17: 15 )

இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் இந்த உலகம் காரண, காரியங்களைக் கொண்டு இயக்கப்படுகின்ற உலகம். இந்த உலகில் நிகழும் எந்த ஒரு காரியத்தின் பிண்ணனியிலும் ஏதேனும் ஒரு காரணத்தை அல்லாஹ் வைத்திருப்பான்.

அது போன்று தான் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் பிறக்கும் குழந்தைக்கும், குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.

மறைவான ஞானங்கள் அனைத்தையும் அறிந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வே அவற்றை நன்கறிந்தவனாவான்.

மாற்றுத்திறனாளிகளும்… பெற்றெடுத்தோரும்…

உடல் குறைபாட்டுடன் பிறந்திருக்கிறவர்கள் தங்களுக்கான இந்த நிலையை அல்லாஹ்வின் சோதனையாக எடுத்துக் கொண்டு, அதனால் ஏற்படும் சிரமங்களை அழகிய முறையில் பொறுமையோடு எதிர் கொண்டு, அல்லாஹ்வின் முடிவை பொருந்திக் கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்யும் பட்சத்தில் அல்லாஹ்வின் பரிபூரணமான அருளுக்கும், கருணைக்கும், அண்மைக்கும் சொந்தக்காரர்களாக ஆகிவிடுவீர்கள்.

“அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலிஐப் பெறுபவர்கள், மகத்தான சோதனையை அடைந்தவர்களே! அல்லாஹ் ஒரு சமூகத்தை நேசிக்கின்றான் எனில் அவர்களை சோதிப்பான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

“ஒரு முஸ்லிம் வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு துன்பமும், சிரமும் அதைக் கொண்டு அல்லாஹ் அவரின் ஒரு அந்தஸ்தை உயர்த்துகின்றான். மேலும், ஒரு பாவத்தை மன்னிக்கின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

“முதன் முதலாக சுவனத்திற்கு “ஹம்மாதூன் – இறைவனைப் போற்றிப் புகழ்ந்தவர்கள் அழைக்கப்பபடுவார்கள். அவர்கள் அல்லாஹ்வை மிகவும் மகிழ்ச்சியான தருணங்களிலும், சிரமமான தருணங்களிலும் போற்றிப் புகழ்ந்தவர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

روى عطاء بن أبي رباح قال: قال لي ابن عباس: ألا أريك امْرَأَة من أهل الجنة؟ قلت: بلى. قال: هذه المرأة السوداء، أتت رسول الله صلّى الله عليه وسلّم فقالت: إن أُصرَع وإني أنكشف، فادع الله عَزَّ وجَلّ. قال: " إن شئتِ صبرتِ ولك الجنة، وإن شئت دعوت الله أن يعافيك " . فقالت: أصبر. قالت: فإني أنكشف، فادع الله أن لا أنكشف. فدعا لها.

அதாஃ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நாள் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். என்னிடம் சுவர்க்கத்துப் பெண்மணியை உமக்கு நான் அடையாளம் காட்டட்டுமா? எனக் கேட்டார்கள்.

அப்போது நான், பேறு பெற்ற அப் பெண்மணி யார் என்று வினவினேன். அப்போது அங்கே வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியை சுட்டிக் காட்டி, இதோ! இந்த கருப்பு நிற பெண் தான் அந்தப் பெண்மணி என்று கூறி விட்டு, என்னிடம் தொடர்ந்து கூறினார்கள்.

ஒரு நாள் நாங்கள் நபிகளாரோடு அமர்ந்திருந்தோம். அப்போது உம்மு ஸுஃபர் (ரலி) அவர்கள் நபிகளாரின் சபைக்கு வருகை தந்தார்கள். வந்தவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலிப்பு நோய் இருக்கின்றது.

திடீரென அது வரும் போது என் ஆடைகள் அகன்று விலகி விடுகின்றது, அதனால் நான் பல சங்கடங்களுக்கு ஆளாகின்றேன். என்னால் எங்கேயும் செல்ல முடிவதில்லை. ஆகவே, என் வலிப்பு நோய் நீங்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்றார்கள்.

அது கேட்ட அண்ணலார், நீ விரும்பியவாறே நான் துஆ செய்கின்றேன். என்றாலும் நீ பொறுமையை மேற்கொண்டால் உமக்கு கேள்வி கணக்கின்றி சுவனம் செல்லும் நஸீப் பாக்கியம் கிடைக்கப் பெறுவாய்! இதில் எதை நீ விரும்புகின்றாய்! என்று நபிகளார் {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

 

அதற்கு அப்பெண்மணி நான் அல்லாஹ்விற்காக பொறுத்துக் கொள்கின்றேன்.  ஆனாலும் வலிப்பு வருகிற போது என் ஆடை விலகாமல் இருக்க நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறி சென்று விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணிக்காக துஆ செய்தார்கள்.  ( நூல்:  இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாவமன்னிப்பையும், அந்தஸ்து உயர்வதையும், சுவனத்திற்கு முதலில் அழைக்கப்படுவதையும், சுவனத்தையும் அவனுடையை கத்ரை – விதியைப் பொருந்திக் கொண்டு, பொறுமை காத்து, ஈமானிய நிலையில் வாழ்கிறவர்களுக்கு தருகின்றான் என்ற செய்தியை மேற்கூறிய விஷயங்களின் மூலம் அறிய முடிகின்றது.

தன்னுடைய இயலாமையை இறைவனிடம் முறியிடுவது…

நபி மூஸா (அலை) அவர்கள் பேசும் திறனில் குறைபாடுள்ளவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்விடம் அது குறித்து பிரஸ்தாபித்து பிரார்த்தனை புரிந்தார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது.

“என் இறைவனே! என் உள்ளத்தை திடப்படுத்தி விரிவாக்கு! நான் செய்ய வேண்டிய என் காரியங்களை இலகுவாக்கி வை! என் சொல்லை மக்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு என் நாவிலுள்ள (கொன்னல்) முடிச்சை அவிழ்த்து விடு!” என்று அவர் பிரார்த்தித்தார். ( அல்குர்ஆன்: 20: 25 – 28 )

சமூகத்தின் சிந்தனைக்கு…

 

 ياأيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون 

இறைநம்பிக்கையாளர்களே! எந்த ஒரு பிரிவினரும் மற்றெந்த பிறிவினரையும்  பரிகாசம் செய்யவேண்டாம், ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச்  சிறந்தவர்களாயிருக்கலாம், எந்தப்பெண்களும் மற்றெந்த பெண்களையும் பரிகாசம்  செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாகயிருக்கலாம் ஒருவரையொருவர் குறித்துப் பேச வேண்டாம், ஒருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச்சூட்டி அழைக்கவேண்டாம்.இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர்  மோசமான பெயர் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும்.எவர்கள் இந்த  நடவடிக்கையைக் கைவிடவில்லையோ அவர்கள் தான் கொடுமைக்காரர்கள்.” ( al quran:

49:11 )

“அல்லாஹ் உங்களின் தோற்றத்தையோ, உங்கள் உடல் அமைப்பையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் இதயங்களையும் உங்கள் செய்ல்பாடுகளையும் தான் பார்க்கின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

எனவே, மாற்றுத்திறனாளிகளை அவர்களின் குறைபாட்டைக் காரணமாக வைத்து பரிகாசம் செய்வது, கேலி செய்து சிரிப்பது, அவர்களை புறக்கணிப்பது, அவர்களை ஒதுக்குவது போன்ற ஈனமான செயலில் ஈடுபட வேண்டாம்.

சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள்…

தங்களுடைய உடல் குறைப்பாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தங்களின் மீது எழுகிற விமர்சனங்களையும், பரிகாசங்களையும் உடைத்தெறிந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் ஏராளம் இருக்கின்றார்கள்..

தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மதித்து,  வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய ஒரு சில இஸ்லாமிய சாதனையாளர்கள்...

குர்ஆனின் சேவகர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)...

عن عبدالله بن مسعود رضي الله عنه أنه كان يجتني سواكاً من الأراك، وكان دقيق الساقين، فجعلت الريح تكفؤه، فضحك القوم منه، فقال رسول الله -صلى الله عليه وسلم-: (مم تضحكون؟) ، قالوا: يا نبي الله من دقة ساقيه، فقال: (والذي نفسي بيده لهما أثقل في الميزان من أُحُد) ، رواه أحمد .

وفي رواية أخرى: " فنظر أصحابه إلى حموشة ساقيه فضحكوا، فقال النبي -صلى الله عليه وسلم- : (ما يُضحككم ؟ لَرِجْل عبد الله في الميزان أثقل من أُحُد) رواه الطبراني .

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் ஒரு முறை அராக் (மிஸ்வாக்) மரத்தின் மீது ஏறி நின்று மிஸ்வாக் குச்சியை பறித்துக் கொண்டு இருந்தார்கள்.  திடீரென காற்று வீசவே அவர்களின் கீழாடை விலகி அவர்களின் கால்கள் தெரிந்தது. மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த நபித்தோழர்கள் சிலர் சப்தமாக சிரித்தனர். சிரிப்பின் சப்தத்தை கேட்டு அங்கு வந்த நபி ஸல் அவர்கள் "இப்போது  எதற்காக சிரித்தீர்கள்? என கேட்க அவர்களின் கால்களை பார்த்து சிரித்தோம்" என்று கூறவே,   ("அவர்களின் காலில் முட்டுக்கு கீழ் இருந்து கெண்டைக்கால் வரை சூம்பி மெலிதாக இருக்கும் ") அப்போது, நபி ஸல் அவர்கள் "நீங்கள் பார்த்து நகைத்துச் சிரித்த கால் நாளை மறுமையில் மீஜான் தராசுத் தட்டில் கனத்தால் உஹது மலையை விட கனமானது" எனக் கூறினார்கள். ( நூல்: அஹ்மத், தப்ரானீ )

பெருமானார் ஸல் அவர்களின் இந்த வார்த்தையின் வீரியத்தை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் தங்களை மென்மேலும் மெருகேற்றிக் கொண்டார்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ ﷺ: اِقْرَأْ عَلَيَّ قُلْتُ: أأَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ؟ قَالَ: فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ حَتَّي بَلَغْتُ (فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ م بِشَهِيدٍ وَّجِئْنَا بِكَ عَلَي هؤُلاَءِ شَهِيدًا۞) قَالَ: أَمْسِكْ فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ.

رواه البخاري باب فكيف اذا جئنا من كل امة بشهيد …الاية رقم:٤٥٨٢

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள், என்னிடம் நபி (ஸல்) அவர்கள், எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்என்றார்கள். யாரஸூலல்லாஹ்! தங்கள் மீது குர்ஆன் இறங்கியிருக்க, தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா?” என்று நான் கேட்டேன், வேறோருவர் குர்ஆன் ஓத நான் கேட்க விரும்புகிறேன்என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, நான் சூரா நிஸாவை ஓதினேன். (فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ م بِشَهِيدٍ وَّجِئْنَا بِكَ عَلَي هؤُلاَءِ شَهِيدًا) நபியே! ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் அவர்களுடைய நபியைச் சாட்சியாக நாம் கொண்டுவரும் போது (உம்மை நிராகரித்த இவர்கள் யாவருக்கும் (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொண்டு வந்தால் உம்மை நிராகரித்த இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும்?” என்ற ஆயத்தை அடைந்ததும், போதும் நிறுத்திக் கொள்வீராகஎன்றார்கள். நான் அன்னாரை நோக்கியபோது, அன்னாரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது”. (புகாரி)

இன்னொரு சந்தர்ப்பத்தில்....

عبدالله بن مسعود رضي الله عنه، والتي تُجمع إلى مناقبه الأخرى، كقول رسول الله –صلى الله عليه وسلم- : (خذوا القرآن من أربعة:...وذكر منهم من عبد الله بن مسعود) متفق عليه،

"அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), ‘அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்என்று கூறினார்கள். ( நூல்: புகாரி : 3758 மஸ்ரூக் இப்னு அஜ்தஹ் (ரஹ்).

 وقوله عليه الصلاة والسلام : (من أحب أن يقرأ القرآن غضّاً كما أنزل فليقرأه على قراءة ابن أم عبد) رواه ابن ماجة و أحمد

"எவர் குர்ஆனை அது இறக்கப்பட்டது போன்று ஓத வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் உம்மு அப்தின் மகனான அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்களைப் போல் ஓதவும்" என்று கூறினார்கள். ( நூல் புகாரி, அஹ்மத்)

எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை. ( புஹாரி : 5000 ஷகீக் பின் ஸலாமா (ரலி) )

எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( புகாரி )

ولنا في كثير من العلماء والصالحين قدوة، فكثير منا لا يعلم أن الفقيه

 عطاء بن أبي رباح

 كان أسودَ، أعرج، أشلَّ، ولكن كان يُرجَع إليه في الفتوى في مواسم الحج، وكثير منا لا يعلم أنَّ العالم الجليل ابن الأثير صاحب كتاب "الأصول" (11 مجلدًا) وكتاب "النهاية في غريب الحديث" (4 مجلدات)، كان مُقعَدًا لا يستطيع القيام، وكثير منا لا يعلم أن محمد بن سيرين أحد أتباع التابعين كان أصمَّ، ورغم صعوبة ذلك، فإن سيرته حافلة بالعلم والتقى، والحرص على الحلال في التجارة

மேலும், தாபிஈ அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில் ஒப்பற்று விளங்கிய மாமேதை கால் ஊணமான மாற்றுத்திறனாளியாவார்கள். மற்றொரு ஹதீஸ் கலை வல்லுநரான இமாம் இப்னுல் அஸீர் (ரஹ்) அவர்களும் எழுந்து நிற்பதற்கே சக்தி பெறாத மாற்றுத் திறனாளியாவார்கள். கனவுகளுக்கு விளக்கம் தந்த மாமேதை, ஹதீஸ் கலை வல்லுநர் தாபிஈ அல்லாமா இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் செவிப்புலன் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாவார்கள்.

أبو حازم سلمى بن دينار (شيخ المدينة الأعرج والذي كان حكيما وكثير الحديث عن الرسول صلى الله عليه وسلم، يقول الحق ويعظ به ولا يخشى لومة لائم).

– أبان بن عثمان (كان لديه ضعف في السمع ومع هذا كان عالما فقيها).

– الأحنف بن قيس (أشتهر بهذا اللقب لعوج في رجليه، إلا أنه كان أبين الناس وأطبهم كما وكان من قائدي الجيش في معركة صفين).

– موسى بن نصير (القائد الأعرج الذي غزا قبرص وفتح الأندلس في عهد معاوية ولم يهزم له جيش قط).

– أبو القاسم محمود بن عمر بن محمد الزمخشري (ذو رجل واحدة وهو إمام كبير في التفسير والحديث والنحو واللغة وعلم البيان، كما وكان رأسا في البلاغة والعربية والمعاني والبيان، واشتهر بين علماء عصره بوصفه العلامة، ومن كتبه البديعة “الكاشف في تفسير القرآن- الفائق في غريب الحديث- أساس البلاغة” وله كتب أخرى كثيرة بلغت نحو الخمسين).

தஃப்ஸீர், ஹதீஸ், அரபு இலக்கணம், இலக்கியம், அகராதி, போன்ற கலைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூற்களை எழுதிக்குவித்த அல்லாமா ஸமக்ஸரீ என்று அழைக்கப்படுகிற அபுல் காஸிம் மஹ்மூத் இப்னு அம்ர் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்களும் மாற்றுத்திறனாளியே.

முஆவியா (ரலி) ஆட்சிக்காலத்தில் வெற்றி கொள்ளப்பட்ட கிப்ரஸ், அந்தலூஸ் ஆகியவைகளுக்கு தளபதியாக இருந்து வழிநடத்தியவர் கால ஊனமான மூஸா இப்னு நஸீர் (ரஹ்) அவர்களும் ஒரு மாற்றுத்திறனாளியே!

ஏழாண்டு காலம் மதீனாவின் ஆளுநராகவும், மார்க்கச் சட்ட மேதையாகவும் சிறந்த மக்கள் வழிகாட்டியாகவும் விளங்கிய உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) அவர்களின் ம்கனார் தாபிஈ ஆன அபான் இப்னு உஸ்மான் (ரஹ்) அவர்களும் செவிப்புலன் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளியே.

உலகின் நாலா புறமும் ஹதீஸ் கலை பரவிட காரணமாய் அமைந்த இமாம் திர்மிதீ (ரஹ்), அப்துர் ரஹ்மான் இப்னு ஹுர்முஸ் அல் அஃரஜ் (ரஹ்) போன்றோரும் மாற்றுத்திறனாளிகளே!.

– عبد الرحمن بن هرمز الأعرج – حاتم الأصم – سليمان بن مهران الأعمش – أبو العباس الأصم – عمران بن الحصين –– سليمان بن عبدالملك – سلمة بن دينار – الإمام الترمذي – أبو العلاء المعري – ابن سيده –– القاضي عبده السليماني – ابن منظور…)، ويلاحظ أن إعاقات هؤلاء متنوعة فقد كان منهم (الأعمى والأصم والأعرج والأعشى والأعور والأحول والأحنف والأحدب والمفلوج والمبتور…) وإنهم برزوا في مجالات متنوعة منها (العلم – الفقه – التفسير- الأحاديث الشريفة – الأدب – الشعر – الخطابة والقضاء – الحكم والخلافة…) كما امتازوا بأخلاق رفعت من درجتهم واحترام الناس لهم، فقد كانوا من العقلاء والأبطال وأصحاب السيادة والحلم والحزم والمروءة والصبر على البلاء والورع والتواضع، بل وكتب كثير من علماء المسلمين عن المعاقين مما يدل على اهتمامهم بهم مثل الرازي الذي صنف (درجات فقدان السمع) وشرح ابن سينا (أسباب حدوث الصمم).

எனவே, மாற்றுத்திறனாளிகளை சமூகம் அங்கீகரிக்கத் துவங்கும் போது நம்மால் செய்ய முடியாத, இந்த சமூகத்திற்குத் தேவையான, முழு மனித சமூகத்திற்கும் பயன் தருகிற அரிய பல சாதனைகளை அவர்கள் தருவார்கள். 

6 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
    காலத்திற்கு ஏற்ற பதிவுகளை பதிந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை மௌலானா அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நலவை நாடுவானாக

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ் ஹஜ்ரத்

    ReplyDelete
  5. பாரகல்லாஹ். சகோதரரே! நீங்கள் என்றும் மாறா திறனாளி.

    ReplyDelete