Thursday 8 December 2022

தவறான வழியில் வரும் பொருளாதாரம் தவிர்ப்போம்!!!

 

தவறான வழியில் வரும் பொருளாதாரம் தவிர்ப்போம்!!!


உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை தடுப்பதில் ஊழலின் பங்கு மிக அதிகம்.

உலகளவில் ஆண்டுதோறும் ரூ. 70 லட்சம் கோடி லஞ்சமாக வழங்கப்படுகிறது. ஊழல் மூலம் ரூ. 183 லட்சம் கோடி கொள்ளையடிக்கப் படுகிறது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம்.

ஒவ்வொரு ஆண்டும் ஊழல் புலனாய்வு குறியீடு என்ற அறிக்கை வெளியிடப்பட்டு எந்தெந்த நாடுகளில் ஊழல் அதிகரித்துள்ளது, எந்த நாடுகள் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நாடும் ஊழலுக்கு எதிராக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நவம்பர் மாத கணக்கின்படி நடப்பாண்டில் லஞ்சம் அதிகம் உலவிடும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 77-வது இடத்தில் இருந்து 82-வது இடத்திற்கு சென்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் லஞ்சம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 77-வது இடத்தில் இருந்தது. 

மொத்தமாக 194 நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் வட கொரியா, துர்க்மெனிஸ்தான் வணிகத்தில் லஞ்சம் அதிகம் நடைபெறும் நாடுகளாக உள்ளன. அதே நேரம் டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து நாடுகளில் மிகக் குறைந்த அளவில் ஊழல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

ஊழல் அனைத்து நாடுகளிலும் பரவிஉள்ளது. ஏழை, பணக்காரர், வடக்கு, தெற்கு என வித்தியாசமில்லாமல் உலகிற்கு பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது.

ஊழல் அனைத்து துறைகளிலும் நிரம்பி இருக்கிறது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனம், மருத்துவமனை, கல்வி நிறுவனம், நீதித்துறை என அனைத்து இடங்களிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

ஊழல் என்றால்...

முறைதவறிய செயல் ஊழல். அதாவது jumping the queue. ஊழ் என்றால் முறையான வாய்ப்பு. ஊழ்+ அல் என்றால் முறையற்ற விதத்தில் உங்கள் வாய்ப்பை உருவாக்கி நீங்கள் பயன் பெறுவது. இப்படிச் செய்வதற்காக, சம்பந்தப்பட்ட ழருக்குத் தரும் அன்பளிப்பு அல்லது பணம் தான் லஞ்சம்.

ஒருவர் ஒரு வீட்டை கட்டி விட்டு மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கிறார். அந்த ஏரியாவில் அவரது விண்ணப்ப வரிசைக்கிரமப்படி எண். 210, ஏழு மாதங்கள் ஆகும் என்று வைத்துக் கொள்வோம். அவர், தனக்கு முன்பு இருக்கும் 209 பேரைக் கடந்து, ஒரே மாதத்தில் இணைப்பு பெற வேண்டி இ.பி.யில் யாரையாவது உஷார் பண்ணுவது ஊழல். அதற்காக அவருக்கு கொஞ்சம் பணம் தருவது லஞ்சம்.

 

இப்படி ஊழல், லஞ்சம் இரண்டையும் செய்வது நுகர்வோர்கள் தான். இது மாதிரி பல ஆண்டுகளாகச் செய்து செய்து செய்துஇப்போது வரிசைக்கிரமப்படி நடத்த வேண்டிய விஷயங்களுக்குக் கூடப் பணம் தர.வேண்டிய நிலை உருவாகி விட்டது.

எனவே ஊழல் பெருகிட லஞ்சம் தான் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல

பொருளாதார முன்னேற்றம் தவறானதா?

தனி மனிதனின் உயர்வுக்கும், ஒரு குடும்பத்தின் உயர்வுக்கும் பொருளாதாரம் முக்கியம் ஆகும்.

அதே போன்று நிம்மதியான குடும்ப வாழ்விற்கும் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தன் குடும்பங்களுக்காக உழைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது ஒவ்வொரின் மீது கடமையென்றும், அதற்காக அந்த பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு உழைப்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த   உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது   கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில்   மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

உழைக்கத் தூண்டுகின்ற இஸ்லாம் அந்த உழைப்பு ஹலாலான உழைப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்தமான தொழில் எது?   என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத)   நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ்   போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ

அதே போன்று, உழைப்பு இல்லாமல் அநியாயமான வழிகளில் வரும் செல்வங்களை இஸ்லாம் வெறுத்து ஒதுக்குகின்றது.

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ (188)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கிடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (லஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள்என்று திருக்குர்ஆன் (2:188) எச்சரிக்கை செய்கின்றது.

லஞ்சம் கையூட்டுப் பெற்று தன் மீதுள்ள பொறுப்புகளைச் செய்வதற்கும், கையூட்டு கொடுத்து தன் காரியங்களை சாதித்துக் கொள்வதையும் இஸ்லாம் வன்மையாகக் கடிந்து கொள்கிறது. லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் வாங்குவதும் இறைவனின் சாபத்தைக் கொண்டு வருமென்று மேற்கோள் காட்டுகிறது இஸ்லாம்.

حديث عبد الله بن عمر ، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لعنة الله على الراشي والمرتشي»، وحديث ثوبان عند أحمد بمعناه، وزيادة: « والرائش »، وهو الساعي بينهما يستزيد هذا ويستنقص هذا.

وحديث أبي هريرة بزيادة: « في الحكم »، رواه أحمد وأبو داود

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும், வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா). இன்னொரு அறிவிப்பில், லஞ்சம் கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் இடையே பாலமாக செயல்படுகிற (இடைத் தரகர்) வருக்கும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக!” என்று இடம் பெற்றுள்ளது.

பதவி, பொறுப்புகளை வைத்து பணமாகவோ, பரிசுப்பொருளாகவோ பெற்றாலும் அதுவும் லஞ்சம் என்கிறது இஸ்லாம்.

நபி (ஸல்) அவர்கள் அஸ்த்என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யாஎன்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதுஎன்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே. என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ஸகாத்பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்என்று கூறினார்கள். பிறகு, தம் கைகளை உயர்த்தி இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி), நூல்: புகாரி)

وقد ذكر ابن كثير في "تاريخه" أن جيش المسلمين لما ظفروا بالنصر على إقليم (تركستان)، وغنموا شيئًا عظيمًا أرسلوا مع البشرى بالفتح هدايا لعمر رضي الله عنه، فأبى أن يقبلها وأمر ببيعها وجعلها في بيت مال المسلمين

இஸ்லாமியப் படை ஒன்று ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது துருக்கிஸ்தானை வெற்றி கொள்கிறது. அதிலே அவர்களுக்கு ஏராளமான பொருட்கள் பொக்கிஷமாகக் கிடைத்தது. வெற்றிக்களிப்பின் மிகுதியால் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சில பொருட்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறார்கள்.

ஆனால், ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதைப் பயன்படுத்துவது கூடும் (ஹலால்) என்ற போதும், அன்பளிப்பை ஏற்க மறுத்தது மட்டுமின்றி, அதை விற்றுக்கிடைக்கின்ற பணத்தை இஸ்லாமிய அரசின் நிதி அமைச்சகத்தில் சேர்த்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்கள்.

رواه مالك قال: كان رسول الله صلى الله عليه وسلم يبعث عبد الله بن رواحة إلى خيبر فيخرص بينه وبين يهود خيبر، فجمعوا له حليًّا من حلي نسائهم، فقالوا: خذ هذا لك وخفف عنا وتجاوز في القسم، فقال عبد الله بن رواحة: يا معشر اليهود والله إنكم لمن أبغض خلق الله إلي، وما ذاك بحاملي على أن أحيف عليكم! أما ما عرضتم من الرشوة فإنها سُحتٌ وإنا لا نأكلها، فقالوا: بهذا قامت السموات والأرض.

நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களை கைபர் பகுதியில் வசிக்கும் யஹூதிகளிடம் பேரீத்தம்பழ அறுவடையில் கிடைப்பவற்றில் தோராயமாகக் கணக்கிட்டு வரியை வசூல் செய்வதற்காக நாயகம் (ஸல்) அவர்கள் நியமனம் செய்து அனுப்புகிறார்கள்.

வரி வசூல் செய்வதற்காக சென்ற அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களிடம், நாங்கள் செலுத்த வேண்டிய வரியில் சற்றுக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள், நாங்கள் தருவதை மட்டும் எடுத்துச் செல்லுங்கள், அதற்குப் பதிலாக அப்துல்லாஹ்வே இந்த ஆபரணங்களை முழுமையாக நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்! என தங்கள் பெண்களின் தங்க ஆபரணங்களை இலஞ்சமாக தருவது குறித்துப் பேசுகிறார்கள்.

யூதர்களே! என் பார்வையில் நீங்களே அல்லாஹ்வின் படைப்பில் மிகவும் கோபத்திற்குரியவர்கள். உங்களுக்கு இணங்கிச் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு என்னிடம் இலஞ்சத்தை வாங்கிக்கொண்டு உங்கள் வரியில் என்னை சமரசம் செய்யச் சொல்கிறீர்கள். நிச்சயமாக! அது ஊழல் செய்வதாகும். நிச்சயமாக! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் நாங்கள் அதை உண்ண மாட்டோம். இறைவனின் மீது சத்தியமாக அதை நான் செய்யமாட்டேன் என வாங்க மறுத்த போது அந்த யூதர்கள் “வானமும், பூமியும் உங்களைப் போன்றவர்களால் தான் (கீழே விழுந்து விடாமல்) நிலை பெற்றிருக்கிறது” என்று கூறினார்கள்.

وساق البيهقي في سننه عن عبد الرحمن بن القاسم حدثنا مالك قال: أهدى رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم - وكان من عمال عمر بن الخطاب رضي الله عنه - نمرقتين لامرأة عمر رضي الله عنه؛ فدخل عمر فرآهما فقال: «من أين لك هاتين؟ اشتريتيهما؟ أخبريني ولا تكذبيني!» قالت: بعث بهما إليّ فلان، فقال: قاتل الله فلانًا إذا أراد حاجة فلم يستطعها من قبلي أتاني من قبل أهلي؛ فاجتذبهما اجتذابا شديدًا من تحت من كان عليهما جالسًا، فخرج يحملهما فتبعته جاريتها فقالت: إن صوفهما لنا ففتقهما وطرح إليها الصوف، وخرج بهما فأعطى إحداهما امرأة من المهاجرات وأعطى الأخرى امرأة من الأنصار.

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வீட்டிற்கு அரசவையில் பணி புரியும் ஒருவர் வந்து இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். அதைப் பெற்றுக் கொண்ட கலீஃபா உமர் (ரலி) அவர்களின் மனைவி அதை உமர் (ரலி) அவர்கள் சாய்ந்து அமரும் இடத்தில் வைத்து விடுகின்றார். வெளியில் சென்று திரும்பி வந்த  உமர் (ரலி) அவர்கள் தம் வீட்டினுள் அரசவையில் அரசர்கள் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான இரு தலையணைகளைப் பார்க்கிறார்கள்.

உடனே, தம் மனைவியிடம், இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே! என கலீஃபாவாக தம் மனைவியிடம் சற்று வேகமாகவே கேட்கிறார்கள்.

இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என தம் மனைவியின் பதில் கூற மறுகணமே, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...எனக் கோபமாக கூறிய உமர் (ரலி) அவர்கள் “தம் மனைவியிடம் அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிவர்த்தி செய்து தருமாறு என் அவைக்கு வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார் என சொன்னார்.

பின்னர் அந்த இரண்டு தலையணையையும் தம் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிறார்கள். எதுவும் பேச இயலாது, மனைவி தம் கணவர் உமர் (ரலி) அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் கழற்றிக் கொடுத்து விடுகிறார்கள்.

பின்பு, கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இரண்டில் ஒன்றை முஹாஜிர் பெண் ஒருவருக்கும்,  மற்றொன்றை அன்ஸாரிப் பெண் ஒருவருக்கும் அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள்.

ஹராமான வழியில் பொருளாதாரத்தை சம்பாதிப்பதற்குரிய காரணங்கள்..

தடைசெய்யபட்ட வழிகளில் மக்களை ஏமாற்றி சாப்பிடுவதற்கும், பொருளை சேமிப்பதற்கும் உள்ள காரணங்கள் என்ன? என்று பார்த்தோமேயானால் சிலவற்றை நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம்.

1.   அல்லாஹ்வின் அச்சமின்மை

பொருளாதாரத்தை சம்பாதிக்கச் சொன்ன இஸ்லாம் அந்த பொருளாதாரத்தை சம்பாதிக்கும்போது இறைவனை அஞ்சும் படியும் போதிக்கின்றது.

ஏனோ, இன்று மக்களிடத்தில் இறைவனை பற்றியுள்ள அச்சம் எடுபட்டுப்போன காரணத்தினால் முஸ்லிம்களும்கூட வெகுவாக இந்த செயலில் இறங்கிவிடுவதை பார்க்க முடிகின்றது.

حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ

يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلاَلِ أَمْ مِنَ الْحَرَامِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலா? ஹராமா? என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: புகாரி ) 

2.   விரைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை...

இன்று மக்களில் அதிகமானோர் எந்த வழியிலாவது பொருளாதாரத்தை சம்பாதித்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். விரைவில் சம்பாதித்து சுகமான வாழ்வுக்கு வந்துவிடவேண்டும் என்பதுதான்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ ، حَدَّثَنَا فُلَيْحٌ ، حَدَّثَنَا هِلاَلٌ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ إِنَّمَا أَخْشَى عَلَيْكُمْ مِنْ بَعْدِي مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ بَرَكَاتِ الأَرْضِ ثُمَّ ذَكَرَ زَهْرَةَ الدُّنْيَا فَبَدَأَ بِإِحْدَاهُمَا وَثَنَّى بِالأُخْرَى فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللهِ أَوَيَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ فَسَكَتَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قُلْنَا يُوحَى إِلَيْهِ وَسَكَتَ النَّاسُ كَأَنَّ عَلَى رُؤُوسِهِمِ الطَّيْرَ ثُمَّ إِنَّهُ مَسَحَ عَنْ وَجْهِهِ الرُّحَضَاءَ فَقَالَ أَيْنَ السَّائِلُ آنِفًا أَوَخَيْرٌ هُوَ – ثَلاَثًا – إِنَّ الْخَيْرَ لاَ يَأْتِي إِلاَّ بِالْخَيْرِ وَإِنَّهُ كُلُّ مَا يُنْبِتُ الرَّبِيعُ مَا يَقْتُلُ حَبَطًا ، أَوْ يُلِمُّ كُلَّمَا أَكَلَتْ حَتَّى إِذَا امْتَلأَتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتِ الشَّمْسَ فَثَلَطَتْ وَبَالَتْ ثُمَّ رَتَعَتْ وَإِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ وَنِعْمَ صَاحِبُ الْمُسْلِمِ لِمَنْ أَخَذَهُ بِحَقِّهِ فَجَعَلَهُ فِي سَبِيلِ اللهِ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ ، وَمَنْ لَمْ يَأْخُذْهُ بِحَقِّهِ فَهْوَ كَالآكِلِ الَّذِي لاَ يَشْبَعُ وَيَكُونُ عَلَيْهِ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ

அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று, “எனக்குப் பின், உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள் வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்பட விருப்பதைத்தான்என்று கூறிவிட்டு, உலகின் அழகையும் செழிப்பையும் கூறினார்கள்.

(அவற்றில்) முதலில் ஒன்றைக் கூறி, பிறகு மற்றொன்றை இரண் டாவதாகக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ் வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை, தீமையைக் கொண்டு வருமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதிலளிக் காமல் மௌனமாக இருந்தார்கள். இதைக் கண்ட நாங்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத வெளிப்பாடு) அருளப்படுகிறதுஎன்று கூறிக் கொண்டோம்.

மக்கள் அனைவரும் தம் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பதுபோல் (ஆடாமல் அசையாமல்) மௌனமாக இருந்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் முகத்திலிருந்து (வழிந்த) வியர்வையைத் துடைத் துவிட்டு, “சற்று முன்பு கேள்வி கேட்டவர் எங்கே? (செல்வம்) ஒரு நன்மையா?” என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு, “(உண்மை யிலேயே) நன்மை(யாக இருக்கும் ஒரு பொருள்) நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வராதுதான்.

மேலும், நீர் நிலைகளின் கரைகளில் தாவரங்கள் விளையும்போ தெல்லாம் அவற்றைக் கால்நடைகள் மேய (அவை நச்சுத் தன்மை யுடைய புற்பூண்டுகளையும் சேர்த்துத் திண்பதாலும் அதிமாகத்  திண்று விடுவதாலும்) அவை அவற்றை வயிற்று நோயால் கொன்று விடு கின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே கொண்டு போகின்றன; பசுமையான (நல்லவகைத்) தாவரங்களை (தாங்கும் அளவுக்கு) உண்பவற்றைத் தவிர. அவை அவற்றை வயிறு நிரம்ப உண்டு, சூரியனை (வெப்பத்திற்காக) முன்னோக்கி நிற்கின்றன.

பிறகு சாணம் போட்டு சிறுநீர் கழித்து விட்டு (செரித்தவுடன்) மீண் டும் மேய்கின்றன. (இவ்வாறே) இந்தச் செல்வமும் பசுமையானதும் இனிமை யானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதைகளுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அந்தச் செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன் ஆவான். அச்செல்வம் மறுமை நாளில் அவனுக்கெதிராக சாட்சி சொல்லும்என்று கூறினார்கள். ( நூல்: புகாரி ) 

3.   போதுமென்ற மனமின்மை

அடுத்து சம்பாதித்து, சேமித்து வைத்திருக்கும் செல்வங்களில் திருப்தியும், போதுமென்ற மனமும் இல்லாமல் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அங்கலாய்த்துக் கொண்டு அலைந்து திரிவது.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، عَنْ يُونُسَ ، حَدَّثَنِي أَبُو الْعَلاَءِ بْنُ الشِّخِّيرِ ، حَدَّثَنِي أَحَدُ بَنِي سُلَيْمٍ ، وَلاَ أَحْسَبُهُ إِلاَّ قَدْ رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

، أَنَّ اللَّهَ يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ ، فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ اللَّهُ لَهُ ، بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ ، وَوَسَّعَهُ ، وَمَنْ لَمْ يَرْضَ لَمْ يُبَارِكْ لَهُ

அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொரு ளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக்கொள்கிறாரோ அவருக்கு அதில் பரகத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ளவில்லையோ அதில் அல்லாஹ் பரகத் செய்வதில்லைஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                    ( நூல்: அஹ்மத் )

 

 

போதுமென்ற மனதை யார் பெற்றுக் கொண்டவர் தவறான முறையில் சம்பாதிக்க முனைய மாட்டார்.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ

لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ

“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறா கப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் :புகாரி )

ஹராமான சம்பாத்தியத்தில் பெறப்பட்ட பொருட்களை உண்பதால், உடுத்துவதால், பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

عن أبي يزيد رضي الله عنه أنّه عبد الله تعالى سنين كثيرة فلم يجد للعبادة طعمًا ولا لذّة، فدخل على أمّه وقال لها: يا أمّاه إنّي لا أجد للعبادة ولا للطاعة حلاوة أبدًا، فانظري هل تناولت شيئًا من الطعام الحرام حين كنت في بطنك أو حين رضاعتك، فتفكرت طويلاً ثم قالت له يا بنيّ لمّا كنت في بطني صعدت فوق سطح فرأيت إجّانة (أي جرّة كبيرة) فيها جبن فاشتهيته فأكلت منه مقدار أنمُلة بغير إذن صاحبه. فقال أبو يزيد: ما هو إلاّ هذا. فاذهبي الى صاحبه وأخبريه بذلك. فذهبت إليه وأخبرته بذلك، فقال لها: أنت في حلّ منه، فأخبرت ابنها بذلك فعندها ذاق حلاوة الطاعة.

பாயஜீது பிஸ்தாமீ (ரஹ்)   அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து   வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரணங்களை   பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். நான் அறிந்த வரை ஹராமான எதையும் நான் செய்யவில்லை. ஆதலால், இது குறித்து என் தாயாரிடம் வினவ விளைந்தேன். அதாவது என்னைக்   கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச்   சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில்   சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது   பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப்   பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள்.   பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில்   அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ( நூல்: கிதாபு அல் கராயிப் வல் அகாயிப் வலாதாயிஃப் வநவாதிர் )

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது..

وقال صلى الله عليه وسلم: " من اشترى ثوباً بعشرة دراهم وفي ثمنه درهم حرام لم يقبل الله صلاته مادام عليه منه شيء

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. பத்து   திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம்   ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும்   காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது.  (அறிவிப்பவர்: இப்னு உமர்   (ரலி)   நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟

மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை 23:51) ஓதிக் காட்டினார்கள் :தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். நீங்கள் செய்வதை நான் நன்கு அறிபவன் ஆவேன்.

பின்னர் ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். அவர் தலைவிரி கோலத்துடனும், புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா என் இறைவா என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது..

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ، أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக் கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம்   செல்லமாட்டான்.

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ – قَالَ أَخْبَرَنَا الْعَلاَءُ – وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ – عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِىِّ عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِى أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ

« مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ ».

நபி {ஸல்} அவர்கள், “யார் தன்னுடைய சத்தியத்தின் மூலமாக ஒரு முஸ்லிமின் பொருளை அநியாயமாக எடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி நரகத்தில் நுழையச் செய்கிறான்என்று கூறினார்கள்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

 ابن عباس قال: تُليت هذه الآية عند النبي صلى الله عليه وسلم: { يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الأَرْضِ حَلالا طَيِّبًا } فقام سعد بن أبي وقاص، فقال: يا رسول الله، ادع الله أن يجعلني مستجاب الدعوة، فقال. "يا سعد، أطب مطعمك تكن مستجاب الدعوة، والذي نفس محمد بيده، إن الرجل ليَقْذفُ اللقمة الحرام في جَوْفه ما يُتَقبَّل منه أربعين يومًا، وأيّما عبد نبت لحمه من السُّحْت والربا فالنار أولى به"

ஒரு முறை ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள்   நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள   வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள்,   ஸஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள்.   துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர்        ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள   உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும்,   ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்என்று கூறினார்கள்.   (நூல்:   தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)  

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} ஆகியோரின்   கோபத்திற்கு ஆளாவான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப்   பிரகட னத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.                    ( அல்குர்ஆன்: 2: 278, 279 )

ஆகவே, ஆகுமான ஹலாலான வழியில் பொருளீட்டுவோம்! தவறான வழியில் பெரும் பொருளாதாரத்தைத் தவிர்ப்போம்!!!

3 comments:

  1. மிக மிக அருமையான செய்திகள் மௌலானா அல்லாஹுத்தஆலா தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் பரக்கத்தான வாழ்வையும் தந்தருள் புரிவானாக

    ReplyDelete
  2. அருமையன அவசியமான பதிவு. ஜஸாக்கல்லாஹ் மெளலானா.

    ReplyDelete