Thursday 29 December 2022

புத்தாண்டும்… புதுமை முஸ்லிம்களும்…

புத்தாண்டும்புதுமை முஸ்லிம்களும்

தற்போதைய இஸ்லாமிய சமுதாயத்தின் நிலை கவலையடையச் செய்திருக்கின்றது மார்க்க விவகாரங்களில் பலவகையான சந்தேகங்களும், சர்ச்சைகளும் அவரவர் தம் மனோ இச்சையின்படி நடந்துகொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கின்றது.

இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை நூதனமாக ஆகிவிட்டதோடு அதைப் பின்பற்றக்கூடியவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல ஒரு நூதனமான உதாரணத்தைப் போலாகிவிட்டனர். 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ مِنْهُمْ عَلَى دِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ

அதாவது “மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது மார்க்கத்தைப் பற்றிப்பிடிப்பவர் நெருப்பைப் பற்றிப்பிடிப்பவரைப் போல் ஆகிவிடுவார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                      ( நூல்: திர்மிதீ )

அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நமது சமுதாயத்தில் மெல்ல துளிர் விட்டு படர ஆரம்பித்து இருக்கிறது.

புத்தாடை அணிந்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து நள்ளிரவு பண்ணி ரெண்டு ஒன்றுக்கு வாழ்த்து கூறும் பழக்கம் உருவாகி இருக்கிறது.

இந்த நூதன கலாச்சாரத்தில் இருந்து தற்போதைய தலைமுறையை மீட்டெடுக்க வில்லையென்றால் எதிர் கால தலைமுறையை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

எனவே, கடந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விட இன்றைய காலத்தில் வாழும் முஸ்லிம்களுக்குத்தான் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள் அதிகம் தேவைப்படுகின்றன. 

இவ்வுறுதியைப் பெறுவதற்கு கடுமையான முயற்சியும், உழைப்பும் தேவைப்படுகிறது. காரணம் காலம் கெட்டுக்கிடக்கின்றது. உண்மையான முஸ்லிம்கள் மிகவும் அரிதாகி இருக்கிறார்கள். 

அல்லாஹ் தன்னுடைய வேதத்திலும் தன்னுடைய நபியின் நாவின் மூலமாகவும் அவர்களுடைய வரலாற்றின் மூலமாகவும் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான அநேக வழிமுறையை நமக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றான். இது அல்லாஹ் நமக்களித்த அருட்கொடையாகும்.

ஆகவே, குர்ஆன் ஸுன்னாவின் ஊடாக நாம் நம் சமுதாயத்தைக் கட்டமைக்க முயற்சி செய்வோம்.

அல்லாஹ்வின் திருப்தியே மிக மேலானது...

புது வருடத்தை வரவேற்பதற்காக முழு உலகமும் தயாராகின்றது, கிருஸ்துவ சமூகம் உட்பட ஏனைய சமூகங்கள் தயாராகின்றன. சிறப்புப் பிரார்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள் என்று அந்த நாளை கொண்டாடி மகிழ்கின்றனர் என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் கொண்டாட  தயாராகின்றது என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்!?.

 

ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் ஜனவரி முதல் நாளில் ஒரு இஸ்லாமியனின் உள்ளங்களில் ஏற்படும் என்றால் இந்த அறிவு ஞானத்தின் வீழ்ச்சியை எங்கு போய் சொல்வது?.

சரி அப்படி என்ன தான் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் இவர்கள் செய்கிறார்கள் என்று பார்த்தால் புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய ஒரு இரவில் மட்டுமே எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புறம், பட்டாசு வெடிகள், கேக் வெட்டுதல், இனிப்புகள் வழங்குதல், புத்தாடை அணிதல், பிரியாணி சமைத்தல் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்ககப்படுவது மறு புறம். இவைகளுக்காக சில முஸ்லிம் நாடுகள் வாரி இறைக்கும் பணம் பல மில்லியன்கள் என்பது இன்னும் வேதனையான விஷயமாகும்.

அல்லாஹ்வின் தூதர் தமது உம்மத்துக்கு கொண்டாடி மகிழ்வதற்கு வழிகாட்டிய  நாட்கள் எவை? என்பதை மிகத் தெளிவாக இந்த உம்மத் தெரிந்து வைத்திருக்கின்றது. எனினும் இதை விட்டு விட்டு வேறு வேறு வழிகளில் சென்று மகிழ்ச்சியைத் தேடுவது என்பது அறியாமையிலும், வழிகேட்டிலும் தவிர வேறு எதில்தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை இந்த உம்மத் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடும்  ஒரு சாரார் அறியாமையால் செய்கின்றார்கள் என்றால் இன்னொரு சாரார் வெகுஜன சமூகத்தை திருப்தி படுத்த தாம் செய்வதாக நியாயம் கற்பிக்கின்றனர்.

“கிறிஸ்மஸ், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற ஏனைய மதத்தவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது, அவர்களுடன் கலந்து வாழ்ந்து கொண்டு அவர்களின் கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது இந்தியா போன்ற ஜனநாயக, மதசார்பற்ற ஒரு நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு எதிரானதாகவும்,  இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான ஒரு தோற்றத்தையே பிற மதத்தவரிடம் ஏற்படுத்தும் என்றும் கூறி  வருகின்றனர்.

எனினும், இஸ்லாமிய மக்களுடன் நெருங்கிப் பழகும், அண்மித்து வாழும் ஏனைய சகோதர சமய மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை அவர்கள் அறிந்து தெரிந்து கொண்ட வகையில் பல விஷயங்களில் நம்முடன் ஒரு வித நெகிழ்வோடு தான்  நடந்து கொள்கின்றார்கள். 

ஆனால், இங்கோ நம்மில் சிலர் இது இஸ்லாமிய பழமை வாதம், இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று குய்யோ முய்யோ என்று கூப்பாடு போடுகின்றனர்.

அறியாமையாலும், அறிந்திருந்தும் பிறரை திருப்தி படுத்த இது போன்ற ஏனைய மத கொண்டாட்டங்களில் பங்கேற்பதை நியாயப்படுத்தும் "அந்த நல்ல மனிதர்களின்" மேலான கவனத்திற்கு பின் வரும் இந்த இரு இறைவசனங்களும் அதன் கருத்தாழமும் போதுமானதாகும்.

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ

அஞ்ஞான காலத்து (செயல்முறைகளின் அடிப்படையிலான)  த்தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட (அழகிய செயல்முறைகளின் படி) தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” (அல்மாயிதா 5: 50).

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத அனைத்தும் அறியாமை (ஜாஹிலிய்யத்) என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

யாரையும் எதற்காகவும் இஸ்லாத்தை சமரசம் செய்து கொண்டு ஒரு இறைநம்பிக்கையாளர் திருப்தி படுத்த முயல மாட்டார்.

وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ

அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.”                                               ( அல்குர்ஆன்: 9: 62 )

وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (72)

அல்லாஹ்வின் திருப்தியும், பொருத்தமுமே மிக்க மேலானதாகும். அதுவே மகத்தான வெற்றியும் ஆகும்”.                                 ( அல்குர்ஆன்: 9: 72 )

புத்தாண்டும்... மூடநம்பிக்கைகளும்...

புத்தாண்டு கொண்டாட்டம் தேவை இல்லை என்பதற்கு பல்வேறு காரணங்களை நாம் கூற முடியும். அதில் ஒன்று பல மூட நம்பிக்கைகள், பாவமான காரியங்களை இறைவனின் அச்சமின்றி பகிரங்கமாக செய்வது இந்நாளில் பரவி இருப்பதையம் பார்க்க முடிகிறது.

1. தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது. இதை எந்த விதத்திலும் அறிவுப்பூர்வமான செயலாக பார்க்க முடியாது.

2. அந்த நாளில் கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது, ஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நம்புவது.

3. அந்த நாளில் யாரிடமும் ஏச்சு பேச்சுக்கள் திட்டு வாங்க கூடாது. யாரிடமும் அடி வாங்கி விடக் கூடாது  அப்படி நடந்து விட்டால் அது அந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நம்புவது.

4. தனது எதிர்காலம் தனது குடும்பத்தினரின் எதிர் காலத்தை புத்தாண்டை வைத்து கணித்து கூறும் ஜோதிடத்தின் மூலம் நம்புவது, தீர்மானிப்பது. நல்லவைகள் நடக்கும் என்று எதிர் பார்ப்பது. கெட்டவை கள் நடக்க கூடாது என்று அஞ்சுவது.

5. இதையெல்லாம் விட அன்றைய நாளின் அதிகாலைத் தொழுகையை மட்டும் பயபக்தியுடன் தொழுவது. அப்படி தொழுதால் அந்த ஆண்டின் அனைத்து நாட்களும் நல்ல படியாக அமைந்து விடும் என்று நம்புவது.

6. டிசம்பர் 31 –ம் தேதி நள்ளிரவு வரை விழித்திருந்து புதுவருடம் பிறந்ததும் கத்துவது, விசில் அடிப்பது, கூச்சலிடுவது, ஆடல், பாடல், நடனம் போன்றவைகளில் ஈடுபடுவது, மது, சூது என அந்த நாளின் அதிகாலை வரை கூத்தடிப்பது. வண்ண வண்ண வானவேடிக்கைகள் பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு தொந்தரவு செய்வது.

1. முஸ்லிம்களின் கொண்டாட்ட நாட்களில் புத்தாண்டு இல்லை..

"அறியாமை கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் மதினாவுக் ஹிஜ்ரத் செய்து வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நூல்: நஸாஈ).

ஹாபிஃழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழியை விளக்கும்போது: நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாகுவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்’.

2. ஏனைய சமூக மக்களின் செயல்பாடுகளுக்கு ஒத்துப்போகும் போக்கு ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.


عن أبي سعيدٍ الخدري -رضي الله عنه- أنَّ رسول الله -صلى الله عليه وسلم- قال: "لَتَتَّبِعُنَّ سَنَنَ مَن قَبْلَكُمْ شِبْرًا بشِبْرٍ، وَذِرَاعًا بذِرَاعٍ، حتَّى لو سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ، قُلْنَا يا رَسُولَ اللَّهِ: اليَهُودَ، وَالنَّصَارَى قالَ: فَمَنْ"،

நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குள் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).


حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم 

 مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‏"‏

எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனேஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ (208) فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (209)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ( அல்குர்ஆன்: 2: 208 )

யூதப்பாதிரியான அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு நபித்தோழர் ஒருவர் அளித்த ஒரு விருந்துக்கு சென்றார். அங்கு ஒட்டகை இறைச்சி பரிமாறப்பட்டது. அவரது முந்தைய மதக்காரர்கள் ஒட்டகை இறைச்சியை வெறுத்தார்கள். அந்தப் பழக்கத்தில் அவரும் முகத்தில் ஒரு அறுவருப்பைக் காட்டினார். அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.

தஃப்ஸீர் இப்னு கஸீரில் இந்த வசனம் இறக்கியருளப்பட்டதற்கான பின்னணியில் இது இன்னும் விரிவாக கூறப்படுகிறது:-

وزعم عكرمة أنها نزلت في نفر ممن أسلم من اليهود وغيرهم، كعبد الله بن سلام، وثعلبة وأسَد

بن عُبَيد وطائفة استأذنوا رسول الله صلى الله عليه وسلم في أن يُسْبتوا، وأن يقوموا بالتوراة ليلا. فأمرهم الله بإقامة شعائر الإسلام والاشتغال بها عما عداها. و

نزلت هذه الآية في مؤمني أهل الكتاب عبد الله بن سلام النضيري وأصحابه، وذلك أنهم كانوا يعظمون السبت ويكرهون لحمان الإبل وألبانها بعد ما أسلموا وقالوا: يا رسول الله إن التوراة كتاب الله فدعنا فلنقم بها في صلاتنا بالليل فأنزل الله تعالى { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً } (1) أي في الإسلام، قال مجاهد في أحكام أهل الإسلام وأعمالهم { كَافَّة } أي جميعا، وقيل: ادخلوا في الإسلام إلى منتهى شرائعه كافين عن المجاوزة إلى غيره، وأصل السلم من الاستسلام والانقياد، ولذلك قيل للصلح سلم،

இக்ரிமா ரலி கூறுகிறார்கள்: “சனிக்கிழமையை புனிதமாக கருதவும், இரவு நேரங்களில் தவ்ராத்தைப் படிக்கவும்  யூதர்கள் இருந்து புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட  அஸத் இப்னு கஅப், உஸைத் இப்னு கஅப், ஸஅத் இப்னு அம்ர் கைஸ் இப்னு ஸைத் ஆகியோர் அனுமதி கோரினர். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது”.

இஸ்லாம் கூறும் நடவடிக்கைகளுக்கு எதிரானவைகளை ஷைத்தானின் வழி கேடுகள் என்றும் இது விசயத்தில் சருகுதல்களும் சஞ்சலங்களும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றும்  உறுதிபட இந்த வசனம் பேசுவதை கவனிக்க வேண்டும்.

3. ஒரு முஸ்லிமின் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் மிகக் கவனமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.

وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ‏‌ۚ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةًصِبْغَةَ اللّٰهِ 

“(இதுவே) அல்லாஹ்வின் கட்டமைப்பு (ஞானம்) ஆகும்; கட்டமைப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக).                                              ( அல்குர்ஆன்: 2: 138 )

 صُنْعَ اللّٰهِ الَّذِىْۤ اَتْقَنَ كُلَّ شَىْءٍ‌ؕ اِنَّهٗ خَبِيْرٌۢ بِمَا تَفْعَلُوْنَ‏

இன்னும் ஒவ்வொன்றையும் கட்டமைத்திருப்பதிலே அல்லாஹ்வின் செயல்திறனை (நபியே!) நீங்கள் பார்க்கலாம் நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.                                            ( அல்குர்ஆன்: 27: 88 )

நபி {ஸல்} அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்என்று கூறினார்கள். (அபூதாவுத்).

அல்லாஹ்வுக்காக நிறைவேற்றப்படும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கவனமாக இருந்தார்கள் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும், மார்க்கத்தின் வாயிலாக பல வணக்கங்களில், நடை முறை வாழக்கையின் பல விஷயங்களில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் நமக்கு பணித்திருக்கின்றார்கள். 

உதாரணமாக சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் சுன்னத்தான தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக (இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது).

ஏனெனில் ஒரு முஸ்லிமின் அனைத்து செயல்பாடுகளும் தனித்துவமாக, இஸ்லாத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

4. நபி {ஸல்} அவர்களை விட நமக்கு முன் மாதிரியான வாழ்க்கையை வேறெவரும் வாழ்ந்து காட்டிட இயலாது.

அல்லாஹ் தனது ஹபீப் முஹம்மது {ஸல்} அவர்களைப் பற்றி கூறும்போது 

மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்பண்புகள் உடையவராக இருக்கின்றீர்”. ( அல்குர்ஆன்: 68: 4 ). என்று போற்றுகிறான்

இந்த உலகிற்கு பெருமானார் ஸல் அவர்களை விட அழகிய முறையில் நற்பண்புகளை போதித்தவர் வேறு எவரும் இருக்க முடியாது.  பிற சமய மக்களுடன் கலந்துறவாடிய எவ்வளவோ சான்றுகள் வரலாறு நெடுகிலும் பரந்து விரிந்து விரவிக் கிடக்கின்றன.

ஆகவே, நபி ஸல் அவர்கள் எந்த உயரிய வழி முறைகளைக் கடைபிடித்தார்களோ அது தான் நமக்கும் மிகச்சிறந்த முன் மாதிரியாகும். அதை விட்டு விட்டு நாமாக கற்பனை செய்து கொண்டு வேறு ஒரு வழியை ஏற்படுத்துவது அல்லது யாரோ ஒருவர் கூறும் கருத்துக்கு செவி சாய்ப்பது சரியானது அல்ல. 

5. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான்.

1. மனிதர்களால் மறைவானவற்றை அறிய முடியாது என்பதைத் திருக்குர்ஆன் ஓங்கி உரைக்கின்றது.

 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌ؕ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏

வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்.”.                                          ( அல்குர்ஆன்: 27: 65 )

 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும்,  ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.          (அல்குர்ஆன்:6:59.)

2. ஐந்து விஷயங்களை இறைவனைத் தவிர எந்த ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது என திருமறைக் குர்ஆன் உறுதிபடக் கூறுகிறது.

 اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ‌ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌ ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். ( அல்குர்ஆன்: 31: 34 )

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இறைவன் ஒருவன் மட்டுமே அறியமுடியும் என்ற அடிப்படைக் கொள்கை உள்ளத்தில் ஆணிவேராய் ஆழப்பதிந்து விட்டால் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கை சிதறுண்டு போய்விடும்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:

من أتى عرافاً فسأله عن شيء لم تقبل له صلاة أربعين ليلة

ஒருவர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதுநூல் : முஸ்லிம் பாகம்: 4 பக்கம் : 1751 ஹதீஸ் எண்: 2230

அபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ளார்கள்., நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:

من أتى كاهناً فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد

யாரேனும் (மறைவான விஷயங்களைச் சொல்வதாக வாதிடும்) சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத்صلى الله عليه وسلم  அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை அவர் நிராகரித்து விட்டார்நூல் : அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904

இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்து அதனை ஸஹீஹ் தரத்திலானது என்றும் கூறியுள்ளார்கள்: "நட்சத்திரம் பார்த்துக் குறி சொல்பவரிடமோ ஜோசியரிடமோ ஒருவர் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால் அவர், முஹம்மத் صلى الله عليه وسلم  அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை நிராகரித்து விட்டார்நூல்: ஹாகிம், பாகம்1-8

இந்த நபிமொழிகளில் குறி சொல்பவர்கள், ஜோசியம் பார்ப்பவர்கள், சூனியக்காரர்கள் ஆகியோரிடம் செல்வதும் அவர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்கள் சொல்வதை நம்புவதும் கூடாது என்று தடையும் எச்சரிக்கையும் உள்ளது!

ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தை பிறந்த நாள், நேரம்,  வினாடி போன்றவற்றை துள்ளியமாக வைத்துக்கொண்டு அதன்மூலம் அந்த குழந்தையின் எதிர்காலம், அதனுடைய தந்தையின் வெற்றி தோல்வி ஆகியன கணிக்கலாம் என்கிறார்கள் ஜோதிடர்கள். கேட்டால் குழந்தையின் பிறப்பின் குறிப்பிட்ட வினாடியின்போதுதான் விதி தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள் இது முற்றிலும் பொய் என்பதற்கு இதோ ஆதாரம்!

மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். ( நூல்: திர்மிதி )

இந்த நபிமொழியின் மூலம் நமக்கு தெளிவாக புரிவது என்னவென்றால் விதியை குழந்தை பிறக்கும் போது தீர்மாணிக்கப்படுவது கிடையாது மாறாக கருவறைக்குள் இருக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது என்பதே! மேலும் கருவரை யில் எந்த வினாடி விதி நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் என்ன விதி எழுதப்பட்டுள்ளது என்பதும் படைத்த இறைவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை அவ்வாறு இருக்க பிறந்த நொடியை வைத்து எவ்வாறு ஜாதகம் கணிப்பார்கள்! இநத ஜாதக-புரோகிதர்கள் குழந்தை பிறந்த வினாடி வைத்த ஜாதகம் கணித்ததாக சொல்கிறார்களே இவர்கள் பொய்யர்கள் என்பது இந்த நபிமொழியின் வாயிலாக தெளிவாக புலப்படும்.

உலகமே முடங்கிய கொரோனா தொற்று குறித்து எந்த ஜோதிடர்களும் கணித்துக் கூறவில்லையே! மாறாக, அந்த ஆண்டை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து அது நடக்கும் இது நடக்கும் என்று அள்ளி விட்டார்களே அது எதுவும் நடக்கவில்லையே! 

ஆக புத்தாண்டு எனும் பெயரில் ராசி பலன், ஜோதிடம் எனும் மூடநம்பிக்கை இன்று சமூகத்தில் புரையோடிப்போய் இருப்பதை மறுப்பதற்கில்லை.

6. வீண் விரயங்கள்...

வீண்விரயத்தைச் சுட்டிக்காட்டுவதற்கு அரபு மொழி அகராதியில் இரு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

الإسراف: صرف الشيء فيما ينبغي زائدًا على ما ينبغي.

بخلاف التبذير؛ فإنه صرف الشيء فيما لا ينبغي

ஒன்று الإِسْرَاف ، இன்னொன்று التَّبْذِيْر ஆகியனவாகும். இவற்றுள் الإسْرَاف என்பது தனக்கு அவசியமான விஷயங்களில் அளவுக்கதிகமாகச் செலவிடுவதைக் குறிக்கும். மற்றும், التَّبْذِيْر என்பது அவசியமற்ற விஷயங்களில் ஒன்றைச் செலவு செய்வதாகும்.    

وقال الشافعي: التبذير إنفاق المال في غير  حقه

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றார்கள்: தனக்கு உரிமையில்லாதவற்றில் பணத்தை செலவு செய்தல் التبذير ஆகும்.” ( நூல்: அல்ஜாமிஉ லிஅஹ்காமில் குர்ஆன் )

قال الراغب الأصفهاني: الإسراف تجاوز الحد في كل فعل يفعله الإنسان،

வீண் விரயம் என்றால் என்ன என்பது பற்றி அர்ராகிப் என்ற அறிஞர் கூறும்போது: மனிதன் புரியும் அனைத்து காரியங்களிலும் எல்லை மீறுதலாகும்என்கிறார். ( நூல்: அல்முஃப்ரதாத் பீ கரீபில் குர்ஆன் )

வீண்விரயம் தொடர்பாக அல்குர்ஆனில்

وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (141)

1. “இன்னும், (வீண்) விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.”                    ( அல்குர்ஆன்: 6: 141 )

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31)

2. “மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள். மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.” ( அல்குர்ஆன்: 7: 31 )

وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا (26) إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا (27)

3. “(செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.”                                          ( அல்குர்ஆன்: 17: 26, 27 )

وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا (67)

4. “இன்னும், அவர்கள் எத்தகையோரெனில் அவர்கள் செலவு செய்தால், வீண் விரயம் செய்யமாட்டார்கள். (ஒரேயடியாக) சுருக்கிக் கொள்ளவும் மாட்டார்கள். அ(வ்வாறு செலவு செய்வதான)து அவ்விரண்டு நிலைகளுக்கும் மத்தியிலிருக்கும்.” (அல்குர்ஆன்: 67)

வீண் விரயத்தை எச்சரிக்கும் சுன்னாவின் வரிகள்

வீண் விரயம் அல்லது பெருமை ஆகியன கலக்காத விதத்தில் உண்ணுங்கள்! பருகுங்கள்! தர்மம் செய்யுங்கள்! அணியுங்கள்!” (நஸாயி, இப்னு மாஜா)

عن المغيرة رضي الله عنه قال: سمعنا رسول الله صلى الله عليه وسلم يقول: «إن الله كره لكم ثلاثاً: قيلَ وقال، وإضاعةَ المال، وكثرةَ السؤال»،

“(அல்லாஹ் உங்களிடத்தில்) செவியுற்றவற்றையெல்லாம் பேசுவதையும் அதிகமாகக் கேள்வி கேட்பதையும் பணத்தை வீணாகச் செலவு செய்வதையும் வெறுக்கின்றான்.” (புகாரி, முஸ்லிம்)

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه عَنِ النَّبِي صلى الله عليه وسلم قَالَ: «لاَ تَزُولُ قَدَمَا ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمْرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلاَهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَ عَلِمَ

நான்கு விடயங்கள் குறித்து விசரிக்கப்படும் வரை ஓர் அடியானின் பாதம் மறுமைநாளில் அசையாது நிலைபெற்றிருக்கும்…. (அவற்றில் ஒன்று) அவனுடைய பணத்தைப் பற்றி விசாரிக்கப்படும். அதை எங்கிருந்து சம்பாதித்தான் என்றும் எவ்வழிகளில் செலவு செய்தான் என்பது பற்றியும் வினவப்படும்.” (ஸஹீஹுத் தர்கீப்)

7. பட்டாசைத் தவிர்ப்போம்! பிறர் நலம் பேணுவோம்!!

பட்டாசு வெடித்தல் என்பது பொருளாதாரத்தைப் பயனில்லாத வழியில் செலவிடுதல் என்ற குற்றத்தோடு காற்றை மாசுபடச் செய்வது மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பது,

குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகளின் நிம்மதியைக் கெடுத்து மாணவ- மாணவிகளின் படிப்பையும் கெடுத்து, பட்டாசு நெருப்பின் மூலம் குடிசைகள் எரிந்து பிறரது சொத்துகளும் நாசமாகின்றன. உயிர்களும் பலியாகின்றன. பட்டாசு வெடிப்பவர்களே பலியாகும் நிலையும் ஏற்படுகிறது.

இப்படி மார்க்கம் தடுத்துள்ள பல்வேறு வகையான பாவங்களின் தொகுப்பாக பட்டாசு வெடித்தல் அமைந்துள்ளதால் இதை முஸ்லிம்கள் உணர்ந்து பாவத்தில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

பிறர் நலம் பேணுதல் ( Altruism ) என்பது இஸ்லாத்தின் பிரதான அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். இஸ்லாம் அதை இறை நம்பிக்கையின் அடையாளம் என்றும் இறையச்சத்தின் வெளிப்பாடு என்றும்  அடையாளப் படுத்துகின்றது.

எனவே, எப்போதும் எல்லோரும் எல்லோருக்கும் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

நலம் நாடுதல் என்பதை பொதுவாகச் சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான பல  அர்த்தங்கள் கொண்டதாகும்.

நலம் நாடுதல் என்றால், அனைத்து மனிதர்களும் நலமாக இருப்பதற்காகச் செய்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் குறிக்கும்.

மேலும், நன்மையான காரியங்களை செய்வது,  செய்யத் தூண்டுவது, அதற்கு உறுதுணையாக இருப்பது, தர்மம் செய்வது, நீதியை நிலை நாட்டுவது, பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றுவது, சிரமப்படுவோருக்கு உதவுவது, பசியைப் போக்குவது, ஏழைகளுக்கு உதவுவது, அநாதைகளை ஆதரிப்பது, இணக்கத்தை ஏற்படுத்துவது, நேர்மையாக நடப்பது போன்ற அனைத்து விதமான காரியங்களும் இதற்குள் வந்துவிடும்.

அதுபோன்று நலம் நாடுதல் என்பது, அனைத்து மக்களுக்கும். தீமையைச் செய்யாமல் இருப்பது, அதை விட்டும் காப்பாற்றுவது, அதைத் தடுப்பது, அதற்குத் துணை போகாமல் இருப்பது, வரம்பு மீறாமல் இருப்பது, அடுத்தவர் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பது, மோசடி செய்யாமல் இருப்பது, ஆகிய அனைத்து தீய காரியங்களையும் விட்டு அகன்று கொள்வதையும் குறிக்கும்.

குறிப்பாக பிறருக்கு எவ்விதத்திலும் தொல்லை தராமல் இருப்பதையும் குறிக்கும்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “எவரது நாவு மற்றும்  கையி (ன் தொல்லைகளி)  லிருந்து பிற முஸ்லிம்கள்  பாதுகாப்புப்   பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ்   தடை விதித்தவற்றிலிருந்து   விலகிக்   கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ( நூல்: புகாரி )

இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

عَنْ أَبِي هُرَيْرَةَ

 قَالَ

 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

المُسْلِمُ مَنْ

سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவர் தான் முஸ்லிம். எவரிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் பொருட்கள் பற்றி அச்சமற்று மக்கள் இருக்கிறார்களோ அவர் தான் உண்மையான முஃமின்  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார் ( நூல்: திர்மிதீ )

عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الدِّينُ النَّصِيحَةُ» قُلْنَا: لِمَنْ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ

தமீமுத் தாரீ (ரலி) அவர்கல் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான் என்று கூறினார்கள்.நாங்கள்,யாருக்கு (நலம் நாடுவது)?“ என்று கேட்டோம்.நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும்,  முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும் என்று பதிலளித்தார்கள்.  

قال ابن جرير: حدثني الحسين بن عمرو العَنْقَزيِّ، حدثني أبي، عن أسباط، عن السدّي، عن عدي بن ثابت، عن البراء بن عازب في قول الله: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الأرْضِ وَلا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ } الآية. قال: نزلت في الأنصار، كانت الأنصار إذا كان أيام جذَاذ النخل، أخرجت من حيطانها أقناء البُسْر، فعلقوه على حبل بين الأسطوانتين في مسجد رسول الله صلى الله عليه وسلم، فيأكل فقراء المهاجرين منه، فيعْمد الرجل منهم إلى الحَشَف، فيدخله مع أقناء البسر، يظن أن ذلك جائز، فأنزل الله فيمن فعل ذلك: { وَلا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ }                        

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ளமாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!” (அல்குர்ஆன் 2:267)

மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக நபித்தோழர் பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்,

பேரீத்த‌ மரத்திலிருந்து பேரீத்த‌ம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்து வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்கவிடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.

ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீத்த‌ம் குலையைத் தொங்கவிட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா)

பிறருக்கு நோவினை தருபவன் நோவினை செய்யப் படுவான்...

أنه مر بأناس من أهل الذمة قد أقيموا في الشمس بالشام فقال ما هؤلاء قالوا بقي عليهم شيء من الخراج فقال إني أشهد أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يعذب يوم القيامة الذين يعذبون الناس قال وأمير الناس يومئذ عمير بن سعد على فلسطين قال فدخل عليه فحدثه فخلى سبيلهم

ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரை கடந்து சென்றார்கள். அம்மக்களின் தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு  வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள்"என்ன இது ?"என்று கேட்டார்கள்."கராஜ் (வரி செலுத்தாது ) தொடர்பாக தண்டிக்கப்படுகிறார்கள்"என்று சொல்லப்பட்டது.

அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள்,"அறிக! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள்,இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி )வேதனை செய்பவர்களை அல்லா வேதனை செய்வான் 'என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் "என்றார்கள்.

அறிவிப்பவர்:-உர்வா பின்  அஸ்ஸுபைர் (ரலி) ( நூல் :-புஹாரி  )

எனவே, புத்தாண்டின் பெயரால் புதுமையின் பெயரால், அறியாமையால், அறிந்து கொண்டே பிறரை திருப்தி படுத்தும் நோக்கில் பெரும் பாவங்களின் பக்கம் அழைத்துச் செல்லும் அனைத்து கொண்டாட்டங்களில் இருந்து தவிர்ந்து கொள்வோம்! பிறர் நலம் பேணுவோம்!! சத்திய சன்மார்க்கத்தில் முழுமையாக நம்மை இணைத்துக் கொள்வோம்!! வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!! 

3 comments:

  1. மிக அருமையான கட்டுரை சமகாலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் ஒருங்கே அமைத்து இருப்பது பாராட்டுதலுக்குரியதாகும் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு மென்மேலும் ப பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  2. 2.138 குர்ஆன் ஆயத் திருத்தம் வேண்டும்

    ReplyDelete
  3. 2:138 வசனத்தின் மூலம் ஃபாண்ட் அலைண்ட் மென்ட் காரணமாக மாறி அமைந்துள்ளது. தயவுசெய்து குர்ஆனை எடுத்து பார்த்து வசனத்தின் மூலத்தை அறிந்து கொள்ளவும். தவறை சுட்டிக் காட்டியவர்களுக்கு ஜஸாக்கல்லாஹு ஃகைரன் பாரக்கல்லாஹ்

    ReplyDelete