Thursday 12 January 2023

தேச நலனும்.. முஸ்லிம் சமூகமும்…

 

தேச நலனும்.. முஸ்லிம் சமூகமும்


இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் மீது வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களில் பிரதானமானதுமுஸ்லிம் சமூகத்தின் தேசப்பற்றின் மீது சந்தேகம் கொள்வதுஎன்றால் அது மிகையல்ல.

அந்த விமர்சனங்களும் கூட இரண்டு வடிவங்களில் முன் வைக்கப்படுவதை எதிர் கொண்டு வருகின்றோம்.

ஒன்று, ”அவர்கள் இந்த தேசத்தின் வந்தேறிகள், வாளேந்தி வந்தவர்கள், இந்த தேசத்தின் வளத்தை கொள்ளையடிக்க வந்தவர்கள், அரேபியர்கள் ஆகவே அவர்களுக்கு இந்த தேசத்தின் மீது பற்றோ, நலனோ, அக்கறையோ கிடையாதுஎன்று. இந்த விமர்சனத்தை வீசுபவர்கள் யாரெனில், ஃபாசிஸ்டுகள், வலதுசாரி சிந்தனை கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.

இரண்டு, “சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தமது அடையாளத்தையும், மார்க்கத்தையும் அடையாளப்படுத்துவதிலும் நாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதிலும் தான் கவனம் செலுத்துகின்றனர். மாற்றமாக, நாட்டின் தேசிய நலனில் அக்கறை காட்டுவது குறைவு” என்ற இந்த விமர்சனம் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களிடம் பொதுவாகக் காண முடிகிறது.

இவ்விரண்டு விமர்சனங்களும் களையப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக தேசத்தின் நலனில் முஸ்லிம்கள் பற்று கொண்டவர்கள், தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்கள் எனும் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்.

முதல் விமர்சனத்திற்கான பதில்:-...

நாட்டு நலன், நாட்டுப் பற்றை முஸ்லிம் சமூகத்திற்கு யாரும் கற்றுத் தர வேண்டிய அவசியம் எந்தக் காலத்திலும் யாருக்கும் இல்லை. அது முஸ்லிம் சமூகத்தின் இரத்த நாளங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகும்.

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ

இரண்டே இரண்டு ஜீவன்களை சுமந்து நின்ற ஒரு பூமியை "நிம்மதி தரும் பூமியாக, அங்கு இனிமேல் வாழ இருக்கும் உருவாக இருக்கும் மக்களுக்கு நெருக்கடி இல்லாத ரிஜ்க் வாழ்வாதாரம் செழிக்கும் பூமியாக" அமைத்து தந்திடு என் இறைவா! என இறைவனிடம் இறைஞ்சிக் கேட்ட இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் பாரம்பரியத்தில் வந்த சமூகம் இது.

قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا

போகுற போக்கில் தான் சந்தித்த தான் தங்கி இளைப்பாறிய இடத்தில் வாழ்ந்த மக்களின் இன்னலை நீக்கிட சில ஆண்டுகள் அங்கு தங்கி அவர்களின் துயர் துடைத்த துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றைச் சுமந்த சமூகம் இது! 

கண்ணியமிகு காயிதே மில்லத் ஹஜ் யாத்திரையாக மக்கா நகரம் சென்ற சமயம், உடல் நிலை பாதிக்கப்பட்டார்கள்.

பாகிஸ்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அருகில் இருப்பவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.அதனை மறுத்த காயிதே மில்லத் அவர்கள், இந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பிடிவாதம் செய்தார்கள். பின்பு இந்திய மருத்துவர் மூலம் இந்தியத் தூதரின் வீட்டில்  சிகிச்சை கொடுக்கப்பட்டது. 

பிறகு காயிதே மில்லத் தன் பிடிவாதத்திற்கான காரணத்தை விளக்கிச் சொன்னார். நோயின் கடுமையினால் நான் இறந்துவிடவும் கூடும் என நினைத்தேன். நான் இறந்தால் இந்திய மண்ணில்தான் இறக்க வேண்டும் என விரும்பினேன். அந்நிய நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதர் அலுவலகம், தூதர் வீடு இவை இந்திய மண்ணிற்குச் சமம். இது சர்வதேச மரபொழுக்கம். எனவே இந்திய இந்தியத் தூதர் வீட்டில் சிகிச்சை பெறச் சம்மதித்தேன். இறந்திருந்தால் இந்திய மண்ணில்தான் இறந்தேன் என்ற நிம்மதியோடு இறந்திருப்பேன் அல்லவா?” இந்திய மண் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்புபவர்களுக்காக நாட்டின் பல பாகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு இரயில் விடப்பட்டது. ஆனால், இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தன் சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை தேச விடுதலைக்காக வழங்கிய சமூகம் இந்த மண்ணே வேண்டும் என்று விரும்பி இங்கேயே இருந்து விட்டது. விடப்பட்ட அனைத்து ரயில்களும் நாட்கணக்காக அந்தந்த ஸ்டேஷன்களிலேயே ஆள் அரவமின்றி நின்று கொண்டிருந்தது என்பது வரலாறு.

ஆக தேசத்தின் பற்றாகட்டும், தேசத்தின் நலனாகட்டும் இந்திய முஸ்லிம்களின் இரத்த நாளங்களில் இரண்டறக் கலந்த ஒன்று என்பதை இந்திய சுதந்திர விடுதலைக்கான வேட்கையிலேயே நாம் நிரூபித்து இருக்கின்றோம்.

எனினும், இந்த தேசத்தில் நச்சுக் கருத்தை, விஷமப் பிரச்சாரத்தை இது போன்ற விமர்சனங்களின் ஊடாக விதைத்து வருகின்றனர். அதை நாம் முறியடிப்பது நமக்கான கடமையும், கடப்பாடும் ஆகும்.

இரண்டாவது விமர்சனத்திற்கான பதில்:-….

தான் பிறந்த தாய் நாட்டை நேசிப்பது தாய் நாட்டின் மீது ஏற்படும் பற்று என்பது அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் இயற்கையான பண்பாகும் என்று இஸ்லாம் கூறுகிறது.

தாய் நாட்டை நேசிக்கும் பண்பை ஒரு மனிதன் தன் உயிரை நேசிப்பது போன்று உணர்வான் என்று ஓரிடத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

لقد اقترن حب الأرض في القرآن الكريم بحب النفس، قال تعالى: {وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ اقْتُلُوا أَنفُسَكُمْ أَوِ اخْرُجُوا مِن دِيَارِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِّنْهُمْ} [النساء: 66]،

மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்என்று கட்டளைவிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும். ( அல்குர்ஆன்: 4: 66 )

இன்னொரு இடத்தில் மார்க்கத்தோடு இணைத்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

واقترن في موضع آخر بالدين: {لَّا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَارِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ} [الممتحنة: 8]، كل هذا يدل على تأثير الأرض، وعلى أن طبيعة الإنسان التي طبعه الله عليها حب الوطن والديار.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

عن عبد الله بن عباسٍ رضي الله عنهما أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لمكة: «ما أطيبكِ من بلد، وأحبَّكِ إليَّ! ولولا أن قومي أخرجوني منكِ ما سكنتُ غيركِ»

நபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரை நோக்கி மக்காவே நீ உலகிலேயே எனக்கு மிகவும் விருப்பமான பூமி. அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான தேசம். உன் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேன்என்று கூறினார்கள். (முஸ்னத் அபூயஃலா).

وأخرج الأزرقي في (أخبار مكة) عن ابن شهاب قال: "قدم أصيل الغفاري قبل أن يضرب الحجاب على أزواج النبي فدخل على عائشة رضي الله عنها فقالت له: يا أصيل! كيف عهدت مكة؟ قال: عهدتها قد أخصب جنابها، وابيضت بطحاؤها، قالت: أقم حتى يأتيك النبي فلم يلبث أن دخل النبي، فقال له: «يا أصيل! كيف عهدت مكة؟» قال: والله عهدتها قد أخصب جنابها، وابيضت بطحاؤها، وأغدق أذخرها، وأسلت ثمامها، فقال: «حسبك يا أصيل لا تحزنا» (وأخرجه باختصار أبو الفتح الأزدي في كتابه "المخزون في علم الحديث، وابن ماكولا في الإكمال)، وفيه قال رسول الله صلى الله عليه وسلم: «ويها يا أصيل! دع القلوب تقر قرارها» أرأيت كيف عبر النبي الكريم محمد صلى الله عليه وسلم عن حبه وهيامه وحنينه إلى وطنه بقوله: «يا أصيل دع القلوب تقر»

மாநபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த சில நாட்களுக்குப் பின்னர் மக்காவில் இருந்து அஸீலுல் ஃகிஃபாரி (ரலி) எனும் நபித்தோழர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார். மதீனா வந்தடைந்ததும் நேராக மாநபி {ஸல்} அவர்களைக் காண நபி {ஸல்} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இருந்தார்கள். அஸீலைப் பார்த்ததும் முதல் விஷயமாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்நீர் மக்காவில் இருந்து புறப்படும் போது மக்கா எப்படி இருந்தது? என்று கேட்டார்கள். அதற்கவர், மக்காவின் பசுமையான காட்சிகளை வார்த்தையால் வர்ணிக்க ஆரம்பித்த அந்த நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்! இதோ நபி {ஸல்} இப்போது வந்து விடுவார்கள். வந்ததும் சொல்லுங்கள் என்றார்கள்.

சற்று நேரத்திலேயே அங்கு வந்த மாநபி {ஸல்} அவர்களும் சொல்லி வைத்தாற் போன்று முதலாவதாக கேட்ட விஷயம் மக்கா எப்படி இருக்கின்றது? என்பது தான். அப்போது, அஸீலுல் ஃகிஃபாரி (ரலி) அவர்கள் மக்காவின் அழகை அதன் பசுமையை, அதன் எழிலை வர்ணித்த அந்த விதம் மாநபி {ஸல்} அவர்கள் தமது கண் முன்னே மக்காவை கொண்டு வந்து நிறுத்தியது போல் உணர்ந்தார்கள். ”போதும், போதும்.. மீண்டும் மீண்டும் அந்த மக்காவைப் பற்றி பேசி எம்மை கவலையில் ஆழ்த்தி விட வேண்டாம்!” என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில்.. “அஸீலே! என் இதயம் ஆசுவாசமாக இருக்க விட்டு விடுவீராக!” என்று கூறினார்கள். ( இந்த நிகழ்வு பர்தாவின் சட்டம் இறக்கப்படும் முன்பு நிகழ்ந்த சம்பவம் ஆகும். ) ( நூல்: அஃக்பாரு மக்கா )

நபி {ஸல்} அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட தோழர்களும் பிறந்த மண்ணை நேசித்தார்கள். ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபின் அங்குள்ள இடத்தின் சூழல் ஒத்துக்கொள்ளாமல் காய்ச்சலில் விழுந்த அபூபக்கர் சித்திக் (ரலி),  பிலால் (ரலி) போன்றவர்கள்  பிறந்த மண்ணை நினைத்து வெளிப்படுத்திய கவிதைகள் பிரச்சித்தி பெற்றது.

وإن بلالاً الذي ضحى بكل شيء في سبيل عقيدته ودينه هو بلال الذي كان يهتف في دار الهجرة بالحنين إلى مكة في أبيات تسيل رقة وتقطر حلاوة:

ألا ليت شعري هل أبيتن ليلة *** بواد وحولي أذخر وجليل

 وهل أردن يومًا مياه مجنة *** وهل يبدون لي شامة وطفيل

இத்கிர் மற்றும் ஜலீல் என்ற பசுமையான புற்றரைகள் என்னைச் சூழ இருக்க மக்காவின் அந்தப் பள்ளத்தாக்கில் ஓர் இரவேனும் தூங்கும் நாள் எனக்குக் வரக் கூடாதா?; மஜன்னாவின் (மக்காவின்; ஒரு இடம்) நீரைப் பருகும் வாய்ப்பு ஒரு நாளேனும் கிட்டாதா? ஷாமா, துஃபைல் என்ற இரு மலைகளும் எனக்குத் தென்படக் கூடாதா? என பிலால் (ரலி) தமது தேச உணர்வின் மன உளைச்சலை கவியாக பாடியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்:புகாரி.1889, 3926.

நபித்தோழர்கள் முதல் பின்னால் வந்த தாபியீன்கள், தபவுத் தாபியீன்கள், ஹதீஸ்கலை வல்லுனர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், இமாம்கள் என அனைவரும் தங்களது பெயரோடு தங்களது தாய் பூமியின் பெயரையும் இணைத்து அழைப்பதையே விரும்பினார்கள்.

ஸல்மான் அல் ஃபார்ஸி (ரலி), ஸுஹைப் இப்னு ஸினான் அர் ரூமீ (ரலி), பிலால் அல் ஹபஷீ (ரலி), இமாம் புகாரி (ரஹ்) இமாம் திர்மிதீ (ரஹ்), இமாம் நஸாயீ (ரஹ்).

ஆக இஸ்லாம் எப்படி கொள்கை கோட்பாடுகளை சொல்லித் தந்திருக்கின்றதோ அதே போன்று தம் நாட்டின் மீதான பற்றையும் அதை வெளிப்படுத்துவதன் எல்லையையும் சேர்த்தே சொல்லித் தந்திருக்கின்றது. அந்த வகையில் இஸ்லாத்தின் கொள்கைக்கு முரண்பாடில்லாத வகையில் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த நாட்டின் மீது நலனும், அக்கறையும், பற்றும் கொண்டிருக்கின்றனர்.

அதன் சான்று என்ன? என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால்? “வல்லரசை நோக்கி வீரு நடை போட்டுக் கொண்டிருக்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரே தேசம், உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்ற இந்த பெருமையை இன்றைய இந்தியா பெருவதற்கு சுதந்திர போராட்டத்தில் எங்கள் முன்னோர்களின் இரத்தமும், அர்ப்பணிப்புமே சான்று என உரத்த குரலில் கூறுவோம்.

நாட்டுப் பற்று, நாட்டு நலன் என்றால் என்ன?.

நாட்டுப் பற்று என்பது ஒரு மனிதன் தான் பிறந்த பூமியை விரும்புவதுடன் மாத்திரம் சுருங்கிவிடும் ஒன்றல்ல. மாறாக, நாட்டின் நலன் மீது அக்கறை கொள்வது, நாட்டு மக்களை நேசிப்பது, நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வது, அவர்களுடன் இணங்கி வாழ வேண்டிய இடங்களில் இணக்கமாக வாழ்வது அவர்களுக்காக உழைப்பது என்பதில் துவங்கி நாட்டின் சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பது, தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வது என தொடர்ந்து செயலாற்றி, நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும் போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் நிம்மதியான சூழலுக்காக போராடுவது வரையாகும். இதுவே நாட்டுப் பற்றாகும். 

எனவே,  ஒரு முஸ்லிமாக நாம் நமது தேசத்தை சார்ந்து நின்று, பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு, பல்லின சமூகத்தோடு இணங்கி வாழ்ந்து வருவதோடு தேசத்தை கட்டியெழுப்புவதில் கடந்த காலங்களில் இருந்தே உண்மையான உணர்வோடு பங்களிப்பு செய்து  வருகிறோம்.

எனினும், தற்போது முன்பை விட நாம் இன்னும் வீரியமாக களமாட வேண்டி இருக்கின்றது.

ஆம்! தற்போது நாட்டில் நிகழும் அசாதாரணச் சூழல், வெறுப்பு அரசியல் அதற்கு மகத்தான சான்றாகும்.

இந்தியாவின் குரல் நசுக்கப்பட்டுவருகிறது. மக்களிடையே அச்சம் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவை பிளவுபடுத்தும் வேலைகள் நடக்கின்றன. ஒரு சாதியை மற்றொரு சாதிக்கு எதிராக திருப்புகிறார்கள். ஒரு மதத்தை மற்றொரு மதத்திற்கு எதிராக திருப்புகிறார்கள்.

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது, நாட்டின் செல்வம், ஊடகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் சிலரால் கட்டுப்படுத்தப்படுகிறது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

ஃபாசிஸத்தின் சனாதன தர்ம கொள்கையை திணிக்கும் சாமர்த்திய திட்டம் ஒரு புறம், பொது சிவில் சட்டம் அமுல் படுத்த காய் நகர்த்தும் பணி மறுபுறம், குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி இந்திய தேசியத்தின் மதச்சார்பின்மையை இறையாண்மையை குழி தோண்டி புதைக்கும்  தீவிர போக்கு ஒரு புறம், ஒரே நாடு ஒரே மொழி எனும் பசுந்தோல் போர்த்தி இந்து ராஷ்டிரா அமைக்கும் கயமைத்தனம் ஒரு புறம் என நாளுக்கு நாள் மதத்தின் பெயரால் பண்டைய ஆரிய கலாச்சாரத்தை கையில் எடுத்து நாட்டையே களவாட , தேச மக்களை காவு வாங்க காத்திருக்கிறது மத்திய அரசு.

நாடு இப்படி இக்கட்டான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் என்ன செய்வது? என்ற கேள்விகளுக்கு விடை தரும் முகமாக எதிர் வருகிற 2023 ஜனவரி 15 மற்றும் 16  ஆகிய தேதிகளில் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் தமிழகம் தழுவிய அளவில்தேச ஒற்றுமைமாநாட்டிற்கான அழைப்பை தந்திருக்கின்றது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை.

எதிரி பலமானவனாக இருக்கின்றான். எதிரியின் வியூகங்களும் பலம் மிக்கதாக இருக்கின்றது எனில் அதை தனியாக எதிர் கொள்ள முடியாது. முதலில் சமூகமாக நாம் ஒன்று பட்டு, பிறகு சமுதாயமாக இந்தியாவின் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையோடு ஓரணியில் நின்று எதிர் கொள்வது தான் புத்திசாலித்தனமான முடிவு என்பதை பறை சாற்றும் விதமாக இந்த மாநாட்டிற்கு அறைகூவல் விடுக்கின்றது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை.

சமூக ஒற்றுமையும்… சமுதாய ஒற்றுமையும்…

இஸ்லாம் எப்போதுமே, எங்குமே ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயல்படுவதை தூண்டுகிறது, வலியுறுத்துகின்றது.

அந்த வகையில் மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்ததன் பின்னர் மேற்கொண்ட பல்வேறு அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், கவனிக்கத்தக்கதும் மூன்று அம்சங்களாகும். மூன்றுமே ஒற்றுமை தொடர்பானது தான்.

முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் ஒன்றிணைத்தது..

மஸ்ஜிதுன் நபவீயைக் கட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆச்சரிய மிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாரிகளையும் சகோதரர்களாக ஆக்கும் பணி.

وكما قام النبي صلى الله عليه وسلم ببناء المسجد مركز التجمع والتالف، قام بعمل آخر من أروع ما يأثره التاريخ، وهو عمل المؤاخاة بين المهاجرين والأنصار. قال ابن القيم: ثم آخى رسول الله صلى الله عليه وسلم بين المهاجرين والأنصار في دار أنس بن مالك، وكانوا تسعين رجلا، نصفهم من المهاجرين ونصفهم من الأنصار، آخى بينهم على المواساة، ويتوارثون بعد الموت دون ذوي الأرحام، إلى حين وقعة بدر، فلما أنزل الله عز وجل: وَأُولُوا الْأَرْحامِ بَعْضُهُمْ أَوْلى بِبَعْضٍ [الأنفال: ٧٥] رد التوارث، دون عقد الأخوة. وقد قيل إنه آخى بين المهاجرين بعضهم مع بعض مؤاخاة ثانية ... والثبت الأول، والمهاجرون كانوا مستغنين بأخوة الإسلام وأخوة الدار وقرابة النسب عن عقد مؤاخاة بخلاف المهاجرين مع الأنصار

இதைப் பற்றி இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் அனஸ் இப்னு மாலிக்கின் இல்லத்தில் முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சகோதரர்களாக ஆக்கப்பட்டவர்கள் மொத்தம் தொண்ணூறு நபர்கள். அதில் பாதி முஹாஜிர்களும், பாதி அன்சாரிகளும் இருந்தனர். இவர்களில் ஒருவர் மற்றவருடன் நட்பு கொள்ள வேண்டும் அன்பு காட்ட வேண்டும் ஒருவர் மரணித்து விட்டால் அவன் இரத்த உறவினர்களை விட இவரே அவன் சொத்துகளுக்கு வாரிசாவார்.

ஆனால், பத்ர் போர் நடைபெற்றதற்குப் பின்பு இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு ஏற்றமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்8:75) என்ற வசனம் இறங்கியபின் உடன்பிறவா சகோதர சொத்துமை சட்டம் ரத்து செய்யப்பட்டு சகோதரத்துவ உடன்படிக்கை மட்டும் நிரந்தரமாக்கப்பட்டது.

அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு சகோதரத்துவ உடன்படிக்கை  அவசியமாயிருந்தது.'' (ஜாதுல் மஆது)

இரண்டாம் கட்டமாக முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பேண வேண்டிய முக்கிய அம்சங்களை நபி {ஸல்} அவர்கள் ஒப்பந்தமாக்கினார்கள்.

وكما قام رسول الله صلى الله عليه وسلم بعقد المؤاخاة بين المؤمنين، قام بعقد معاهدة أزاح بها كل ما كان من حزازات الجاهلية، والنزعات القبلية، ولم يترك مجالا لتقاليد الجاهلية، وهاك بنودها ملخصا:

هذا كتاب من محمد النبي- صلى الله عليه وسلم- بين المؤمنين والمسلمين من قريش ويثرب ومن تبعهم فلحق بهم، وجاهد معهم:

١- أنهم أمة واحدة من دون الناس.

٢- المهاجرون من قريش على ربعتهم يتعاقلون بينهم، وهم يفدون عانيهم

بالمعروف والقسط بين المؤمنين، وكل قبيلة من الأنصار على ربعتهم يتعاقلون معاقلهم الأولى، وكل طائفة منهم تفدي عانيها بالمعروف والقسط بين المؤمنين.

٣- وأن المؤمنين لا يتركون مفرحا بينهم أن يعطوه بالمعروف في فداء أو عقل.

٤- وأن المؤمنين المتقين على من بغى عليهم، أو ابتغى دسيعة «١» ظلم أو إثم أو عدوان أو فساد بين المؤمنين.

٥- وأن أيديهم عليه جميعا، ولو كان ولد أحدهم.

٦- ولا يقتل مؤمن مؤمنا في كافر.

٧- ولا ينصر كافرا على مؤمن.

٨- وأن ذمة الله واحدة يجير عليهم أدناهم.

٩- وأن من تبعنا من يهود فإن له النصر والأسوة، غير مظلومين ولا متناصرين عليهم.

١٠- وأن سلم المؤمنين واحدة، ولا يسالم مؤمن دون مؤمن في قتال في سبيل الله إلا على سواء وعدل بينهم.

١١- وأن المؤمنين يبيء بعضهم على بعض بما نال دماءهم في سبيل الله.

١٢- وأنه لا يجير مشرك مالا لقريش ولا نفسا، ولا يحول دونه على مؤمن.

١٣- وأنه من اعتبط مؤمنا «٢» قتلا عن بينة فإنه قود به، إلا أن يرضى ولي المقتول.

١٤- وأن المؤمنين عليه كافة ولا يحل لهم إلا قيام عليه.

١٥- وأنه لا يحل لمؤمن أن ينصر محدثا ولا يؤويه، وأنه من نصره أو آواه فإن عليه لعنة الله وغضبه يوم القيامة، ولا يؤخذ منه صرف ولا عدل.

١٦- وأنكم مهما اختلفتم فيه من شيء فإن مرده إلى الله عز وجل وإلى محمد صلى الله عليه وسلم

நபியாகிய முஹம்மது {ஸல்} சார்பாகக் குறைஷி இனத்தைச் சேர்ந்த மற்றும் மதீனாவைச் சேர்ந்த இன்னும் இவர்களைப் பின்பற்றி இவர்களுடன் சேர்ந்து, இவர்களுக்குத் துணையாகப் போர் புரியும் அனைத்து முஸ்லிம்கள், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் எழுதிக் கொள்ளும் ஒப்பந்தம்:

1) முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர்.
2)
குறைஷிகளில் ஹிஜ்ரா செய்தவர்கள் (முஹாஜிர்கள்) தங்களுக்குள் தியத்“”தை கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் கைது செய்யப்பட்டவருக்கு அவர்கள் அழகிய முறையில் ஃபித்யா“” கொடுத்து உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். அனைத்து இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அன்சாரிகளில் உள்ள ஒவ்வொரு கிளையாரும் தங்களின் பழைய நிலைமைக்கேற்ப தங்களுக்குள் தியத்கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்களின் கைதிகளை அழகிய முறையில் ஃபித்யாகொடுத்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அனைத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.
3)
பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு மத்தியில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு ஃபித்யாஅல்லது தியத்விஷயத்தில் அழகிய முறையில் கொடுத்து உதவ வேண்டும்.
4)
தங்களில் கிளர்ச்சி செய்பவர்கள், முஃமின்களுக்கு மத்தியில் அநியாயம் செய்பவர்கள், பாவமான காரியம் செய்பவர்கள், வரம்பு மீறுபவர்கள், விஷமத்தனம் செய்பவர்கள் இவர்களை இறையச்சம் உள்ள முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.
5)
மேற்கூறப்பட்டவர்களில் (பொதுவாக முஸ்லிம்களில்) வழிதவறிய ஒருவர் தங்களைச் சார்ந்த ஒருவரின் பிள்ளையாக இருப்பினும் சரியே! அவருக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
6)
ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு காஃபிருக்காக மற்றொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்யக்கூடாது. அதாவது வாரிசில்லாத காஃபிர் கொலையுண்டதற்காக அந்த காஃபிருடைய முஸ்லிமான நண்பர், கொலையாளியான முஸ்லிமைக் கொல்லக் கூடாது.
7)
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு காஃபிருக்கு உதவி செய்யக் கூடாது.
8)
அல்லாஹ்வின் பொறுப்பு சமமான ஒன்றே. முஃமின்களில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவர் பிறருக்கு கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்கலாம். தங்களில் ஒருவர் கொடுக்கும் கார்மானத்தை மற்ற அனைத்து இறைநம்பிக்கையாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கம் இழைக்கக்கூடாது.
9)
யூதர்களில் யார் நம்மை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளப்படும். அவர் மீது எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது. அவருக்கு எதிராக பிறருக்கு உதவி செய்யக்கூடாது.
10)
சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது முஃமின்கள் அனைவரின் உரிமையாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது, நீதமின்றி ஓர் இறைநம்பிக்கையாளரை விட்டுவிட்டு அன்னியருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது.
11)
இறைநம்பிக்கையாளர்களில் யாரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது தவறுதலாக தங்களில் ஒருவரைக் கொன்று விடுவாரோ அவருக்கு அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.
12)
நமக்கு இணக்கமான எவரும் குறைஷிகளின் உயிர், பொருளுக்குக் கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு இணைவைப்பவரை பாதுகாக்க முடியாது.
13)
ஒரு முஃமின் மற்றொரு முஃமினை குற்றமின்றி கொலை செய்து விட்டதற்கு தக்க ஆதாரமிருப்பின் அவரையும் பழிக்குப்பழி கொலை செய்யப்படும். ஆனால். கொலை செய்யப்பட்டவன் உறவினர் மன்னித்துவிட்டால் அவரை விடுவிக்கப்படும்.
14)
இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் கொலை செய்தவனுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். கொலை செய்தவனுக்கு எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது.

15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக் கூடாது, அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு உதவி செய்கிறாரோ அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு. அவருடைய கடமையான, உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
16)
உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு ஹிஷாம்)

மூன்றாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல், பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.

மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள். அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை அதைச் செய்யவுமில்லை.

إن يهود بني عوف أمة مع المؤمنين، لليهود دينهم وللمسلمين دينهم مواليهم وأنفسهم، كذلك لغير بني عوف من اليهود.

٢- وإن على اليهود نفقتهم، وعلى المسلمين نفقتهم.

 

٣- وإن بينهم النصر على من حارب أهل هذه الصحيفة.

٤- وإن بينهم النصح والنصيحة، والبر دون الإثم.

٥- وإنه لم يأثم امرؤ بخليفة.

٦- وإن النصر للمظلوم.

٧- وإن اليهود يتفقون مع المؤمنين ما داموا محاربين.

٨- وإن يثرب حرام جوفها لأجل هذه الصحيفة.

٩- وإنه ما كان بين أهل هذه الصحيفة من حدث أو اشتجار يخاف فساده فإن مرده إلى الله عز وجل، وإلى محمد رسول الله صلى الله عليه وسلم.

١٠- وإنه لا تجار قريش ولا من نصرها.

١١- وإن بينهم النصر على من دهم يثرب.... على كل أناس حصتهم من جانبهم الذي قبلهم.

١٢- وإنه لا يحول هذا الكتاب دون ظالم أو آثم «١» .

وبإبرام هذه المعاهدة صارت المدينة وضواحيها دولة وفاقية، عاصمتها المدينة ورئيسها- إن صح هذ التعبير- رسول الله صلى الله عليه وسلم،

 

நபி (ஸல்) யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:

1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.

2) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவர்.

3) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.

4) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.

5) தனது நண்பன் குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக மாட்டார்.

6) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

7) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.

8) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

9) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்.

10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.

11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.

12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது.

இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. அந்த நாட்டின் தலைவராக (இவ்வாறு நாம் கூறுவது சரியாக இருப்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள்.

அமைதியும், பாதுகாப்புமுடைய சூழலை விரிவுபடுத்துவதற்காகத் தேவைக்கேற்ப மற்ற சமூகத்தவர்களுடனும் நபி (ஸல்) இதற்குப்பின் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

எனவே, ஒரு லட்சியத்துடன், கனவுடன் ஒரு சமூகத்தையே உடன் அழைத்துக் கொண்டு பயணிக்கும் ஒரு தலைமை முதன் முதலாக செய்ய வேண்டிய முதன்மையான பணி ஒன்றிணைப்பதும், ஒற்றுமையை ஏற்படுத்துவதுமாகும் என்பதைத் தான் மாநபி {ஸல்} அவர்கள் செய்த இந்த அம்சம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.

ஆகவே தான் பாஜக வின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போடும் முதல் முயற்சியாகவே இந்த தேச ஒற்றுமை மாநாட்டை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கையில் எடுத்து களமாட ஆயத்தமாகி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

தேச ஒற்றுமை மாநாட்டின் முக்கியமான நோக்கம் இதுதான், இந்தியாவின் குரல் நசுக்கப்பட்டுவருகிறது. மக்களிடையே அச்சம் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவை பிளவுபடுத்தும் வேலைகள் நடக்கின்றன. ஒரு சாதியை மற்றொருவருக்கு எதிராக திருப்புகிறார்கள். ஒரு மதத்தை மற்றொரு மதத்திற்கு எதிராக திருப்புகிறார்கள்.

 

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது, நாட்டின் செல்வம், ஊடகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் சிலரால் கட்டுப்படுத்தப்படுகிறது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் எதிரானதுதான் இந்த தேச ஒற்றுமை மாநாடு!.

ஃபாசிஸத்துக்கு எதிராக அணி திரள்வோம்!! ஒற்றுமையுடன் தேசத்தில் பயணிப்போம்!!!

7 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. இந்த வாரமும் அறு சுவை அருமை,ஈருலக ஆஃபித்தும் கிடைக்கப்பெறுக... ஆமீன்

    ReplyDelete
  3. அரு அருமையான பதிவு ஹழ்ரத்

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ் அருமையான பதிவு ஹஜ்ரத்

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் இந்த கால சூழ்நிலைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரு அருமையான கட்டுரை அல்லாஹுத்தஆலா தங்களுக்கு மென்மேலும் பரக்கச் செய்வானாக

    ReplyDelete
  6. முஸ்லிம் சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட , நினைவு படுத்த வேண்டிய அத்தியாவசியமான பதிவு.ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.

    ReplyDelete