Thursday 23 February 2023

அல்லாஹ்வை நேசிப்போம்!!

அல்லாஹ்வை நேசிப்போம்!!


இவ்வலகில் வாழும் அனைத்து படைப்புகளையும் நேசிக்கும் பண்புள்ளவையாக இறைவன் படைத்துள்ளான். மனிதர்கள் முதல் பறவைகள், மிருகங்கள் இப்படி அனைத்து படைப்புகளும் தங்களுக்குள் அன்பை, நேசத்தை வெளிப்படுத்தும் ஜீவன்களாகவே உள்ளன.

குறிப்பாக மனிதனின் அன்பு, நேசம் என்பது நீண்ட பட்டியலைக் கொண்டதாகும். ஒவ்வொரு மனிதனும் எத்தனையோ விஷயங்களை  நேசிக்கின்றான்.

மனிதன் பொன்னை நேசிக்கின்றான், பொருளை நேசிக்கின்றான், செல்வத்தை நேசிக்கின்றான், மண்ணை நேசிக்கின்றான். அவன் தனது தொழிலை நேசிக்கின்றான், அவன் தனது அழகிய இல்லத்தை, அழகிய வாகனத்தை நேசிக்கின்றான், தன்னை பெற்றெடுத்த    தாய் தந்தையை நேசிக்கின்றான், தனது மனைவியை நேசிக்கின்றான். தான் பெற்றெடுத்த மக்களை நேசிக்கின்றான்,  சொந்த பந்தங்களை நேசிக்கின்றான், தான் பிறந்த ஊரை, நாட்டை, அவனது குடும்பத்தை பாரம்பரியத்தை நேசிக்கின்றான், இயற்கையை நேசிக்கின்றான், மொழியை நேசிக்கின்றான், அவன் விரும்பிய தலைவர்களையும், இயக்கத்தையும் கட்சியையும் நேசிக்கின்றான், நடிகர் நடிகர்களை நேசிக்கின்றான். இப்படி மிக நீண்ட பட்டியல் கொண்டது அவன் நேசிக்கும் விஷயங்கள். 

நேசம் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் المحبة என்று சொல்லப்படும். இது ஒருவனின் உள்ளம் சாந்த விஷயமாகும். அன்பு, பிரியம், விருப்பம் என்ற வார்த்தைகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

ஒருவன் எதை எந்த அளவுக்கு நேசிக்கின்றான் என்பதை அளவுகோல்  வைத்து அளந்து பார்த்துச் சொல்லிவிட முடியாது! அவனது செயல் மூலமாகத்தான் அவனது நேசத்தை அளவிடமுடியும்.

ஏனெனில், நேசமும் செயலும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையது. மனிதன் வைக்கும் நேசங்கள் அனைத்திற்கும் சாட்சியாக அல்லது ஆதாரமாக இருப்பது அவனது சொல்லும் செயலும் தான். அதை வெளிப்படுத்துவதை பொறுத்து தான்  ஒருவனின் நேசத்தை அளவிடமுடியும்.

அந்த வகையில், இவ்வுலகில் மனிதர்களின் மீது ஏற்படும் அன்பை விட படைத்தவனின் மீது ஏற்படும் அன்பும், நேசமும் மிகப்பெரும் பாக்கியமாகும்.

ஏனெனில், இறைநம்பிக்கைக்கு  அவசியமான எத்தனையோ விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் வேண்டியுள்ளார்கள். அல்லாஹ்வை நேசிப்பது இறைநம்பிக்கைக்கு மிக முக்கியமான அம்சம் என்பதால் இத்தன்மை தன்னிடத்தில் இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

وعن أَبي الدَّرداءِ 

، قَالَ: قَالَ رَسولُ اللَّهِ ﷺ

كانَ مِن دُعاءِ دَاوُدَ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَالعمَل الَّذِي يُبَلِّغُني حُبَّكَ، اللَّهُمَّ اجْعل حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِن نَفسي، وأَهْلي، ومِن الماءِ البارِدِ  الترمذيُّ وَقَالَ: حديثٌ حسنٌ

அல்லாஹ்வே! உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பாளர்: முஆத் பின் ஜபல் (ரலி), நூல்: திர்மிதீ )

இறைநம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை அதிகம் நேசிப்பார்கள்!

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.  ( அல்குர்ஆன் 2: 165 )

அல்லாஹ்வின் மீது நேசம் வைப்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் அந்தஸ்தையும் சிறப்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் அல்லாஹ்வின் மீதான நேசத்தை வெளிப்படுத்தும் விதமாக செய்யும் செயலுக்கு அல்லாஹ் வழங்கும் அந்தஸ்தையும் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1.   அல்லாஹ்விற்காக நேசம் வைக்கிறவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்து!

عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله ﷺ
"إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله قالوا يا رسول الله ﷺ تخبرنا من هم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم لعلى نور ولا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ﴿ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون﴾ "
وفي لفظ لغيره "إن لله عبادا ليسوا بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء بمكانهم من الله قالوا يا رسول الله ﷺ صفهم لنا حلهم لنا لعلنا نحبهم قال هم قوم تحابوا بروح الله على غير أموال تباذلوها ولا أرحام تواصلوها هم نور ووجوههم نور وعلى كراسي من نور لا يخافون إذا خاف الناس، ولا يحزنون إذا حزن الناس، ثم قرأ هذه الآية ﴿ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون﴾ "

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள்.

அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல்

அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்ச மாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : உமர் பின் அல் கத்தாப் (ரலி)

அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தால் செய்த ஒரு செயலுக்கு அல்லாஹ் வழங்கும் அந்தஸ்து!

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا

மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.

 اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏

உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).

اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا‏

எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்).

 فَوَقٰٮهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا‌ۚ‏

எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.

:12

 وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ

மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.

مُّتَّكِـِٕـيْنَ فِيْهَا عَلَى الْاَرَآٮِٕكِ‌ۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِيْرًا‌ۚ

அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.

وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِيْلًا‏

மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.

ۙوَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۟ؔ

(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.

 قَوَارِيْرَا۟ؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِيْرًا‏

(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள்.

  ‌ وَيُسْقَوْنَ فِيْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًا ۚ

மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

 عَيْنًا فِيْهَا تُسَمّٰى سَلْسَبِيْلًا‏

ஸல்ஸபீல்என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.

 وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ‌ۚ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُـؤْلُـؤًا مَّنْثُوْرًا‏

இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.

76:20

وَاِذَا رَاَيْتَ ثَمَّ رَاَيْتَ نَعِيْمًا وَّمُلْكًا كَبِيْرًا‏

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.

عٰلِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ‌ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ‌ۚوَسَقٰٮهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا‏

அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். ( அல்குர்ஆன்: 76: 8 – 21 )

ஏதோ ஒரு ஏழைக்கு அல்லது ஒரு அநாதைக்கு அல்லது ஒரு சிறைக்கைதிக்கு அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் வெளிப்பாட்டால் உணவளித்த ஒரே காரணத்திற்காக அல்லாஹ் நாளை மறுமையின் அனைத்து நிலைகளில் இருந்தும் காத்து சுவனத்தின் மேலான அனைத்து இன்பங்களையும் வழங்குவதாக குறிப்பிடுகின்றான். அப்படியென்றால் அல்லாஹ்வை நேசித்தவருக்கு அவன் வழங்கும் அந்தஸ்து?

:22

அல்லாஹ்வை எப்படி நேசிக்க வேண்டும்?

1. அனைத்தையும் விட அல்லாஹ்வை நேசிக்க வேண்டும்

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நட்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்என்று கூறுவீராக! ( அல்குர் ஆன்: 9 : 24 )

அல்லாஹ்வை நேசிப்பதை சாதாரண ஒரு விஷயமாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், நம்முடைய அமல்களான தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ், மனித நேயம், மார்க்கக் கல்வி  இவற்றையெல்லாம் விட மறுமை வெற்றிக்கு மிக அவசியமானதாக அது இருந்து கொண்டிருக்கிறது. 

ஏனென்றால் இறைவனின் மீதான நேசம் இருந்தால் தான் ஒருவர் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் வர முடியும்.

இறைவனின் மீதான நேசம்  எப்போது ஒரு முஸ்லிமை விட்டும் நீங்கி விடுகிறதோ அப்போதே அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகிறான்.

அல்லாஹ் ஒரு அடியானை நேசித்துவிட்டால் அந்த நேசத்தின் அங்கீகாரம் எப்படியெல்லாம் அமைகிறது என்று பாருங்கள்:

1.   பூமியில் அனைத்துப் படைப்புகளிடமும் அங்கீகாரம்..

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إِذَا أَحَبَّ اللَّهُ الْعَبْدَ نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحْبِبْهُ فَيُحِبُّهُ جِبْرِيلُ فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الأَرْضِ

(البخاري).

அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்! என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான், நீங்களும் அவரை நேசியுங்கள் என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி).

2.   அல்லாஹ்வை நேசிப்பது வெற்றியைப் பெற்றுத் தரும்!

حَدَّثَنَا عَبْدَانُ ، أَخْبَرَنَا أَبِي ، عَنْ شُعْبَةَ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم مَتَّى السَّاعَةُ يَا رَسُولَ اللهِ قَالَ مَا أَعْدَدْتَ لَهَا قَالَ مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلاَةٍ ، وَلاَ صَوْمٍ ، وَلاَ صَدَقَةٍ وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ : أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ, தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய் என்று கூறினார்கள். அறி: அனஸ் பின் மாலிக் (ரலி), ( நூல்: புகாரி-6171 )

3. அல்லாஹ்வை நேசிப்பது நரக விடுதலையைப் பெற்றுத் தரும்!

- حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، عَنْ نَوْفَلِ بْنِ مَسْعُودٍ قَالَ : دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَقُلْنَا : حَدِّثْنَا بِمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ حُرِّمَ عَلَى النَّارِ ، وَحُرِّمَتِ النَّارُ عَلَيْهِ : إِيمَانٌ بِاللَّهِ ، وَحُبُّ اللهِ ، وَأَنْ يُلْقَى فِي النَّارِ فَيُحْرَقَ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ فِي الْكُفْرِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று விஷயங்கள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர் நரகத்தை விட்டும் தடுக்கப்படுவார். நரகம் அவரை விட்டும் தடுக்கப்படும். (அவை)

1.   அல்லாஹ்வை நம்புதல், 2. அல்லாஹ்வை நேசித்தல், 3.இணை வைப்பிற்குத் திரும்பிச் செல்வதை விட நெருப்பில் போடப்பட்டு கருக்கப்படுவது அவருக்கு விருப்பமானதாக இருத்தல். ( நூல்: அஹ்மத் )

3.   அல்லாஹ்வை நேசிப்பது ஈமானின் சுவையை உணரச் செய்யும்!

حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم :

لاَ يَجِدُ أَحَدٌ حَلاَوَةَ الإِيمَانِ حَتَّى يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ وَحَتَّى أَنْ يُقْذَفَ فِي النَّارِ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ إِلَى الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ وَحَتَّى يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மூன்று தன்மைகள் அமையப் பெறாத) எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார். (அவை)

1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.

2. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.

3. மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ( நூல்: புகாரி-6041 ) 

அல்லாஹ்வின் மீது நாம் நேசம் வைத்தால்… 1.அவனுக்காக எதையும் செய்யும் மனம் கிடைக்கும்.

ما نزلت: { مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ } قال أبو الدحداح الأنصاري: يا رسول الله وإن الله ليريد منا القرض؟ قال: "نعم يا أبا الدحداح" قال: أرني يدك يا رسول الله. قال: فناوله يده قال: فإني قد أقرضت ربي حائطي. قال: وحائط له فيه ستمائة نخلة وأم الدحداح فيه وعيالها. قال: فجاء أبو الدحداح فناداها: يا أم الدحداح. قالت: لبيك قال: اخرجي فقد أقرضته ربي عز وجل. وقد رواه ابن مردويه من حديث عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن عمر مرفوعًا بنحوه

அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுப்போர் யாரும் உள்ளார்களா? அழகிய கடன் கொடுத்தால் அல்லாஹ் அதைப் பன்மடங்காகப் பெருக்கித் தருவான்என்று

அல்லாஹ்வின் தூதரோடு சபையில் இருந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நம்மிடமிருந்து அல்லாஹ் கடன் கோருகின்றானா? என்று பெருமானார் {ஸல்} அவர்களிடம் வினவ, ஆம்! என நபி {ஸல்} அவர்கள் பதில் கூற, “தங்களுக்குச் சொந்தமான 600 பேரீச்சம் மரங்களைக் கொண்ட தோட்டத்தின் சாவியை நபி {ஸல்} அவர்களின் கரங்களில் வைத்து விட்டு, அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் அல்லாஹ்விற்காக அழகிய கடனை தந்து விட்டேன்என்று கூறிவிட்டு, அங்கிருந்து வேகமாக வெளியேறி தோட்டத்தின் வாயிலில் நின்று கொண்டு உம்முத்தஹ்தாவே! நம் தோட்டத்தை அல்லாஹ்வுக்காக நான் கடன் வழங்கி விட்டேன்! அங்கிருந்து நீ எப்படி இருக்கின்றாயோ அப்படியே வெளியேறி விடு!என்று கூறினார்கள்.

அது போன்றே உம்முத்தஹ்தா (ரலி) அவர்களும் மறு பேச்சு பேசாமல் வெளியேறி விட்டார்கள்.                                   ( நூல்: இப்னு கஸீர் )

وقال حماد بن سلمة، عن علي بن زيد، عن سعيد بن المسيب قال: أقبل صهيب مهاجرًا نحو النبي صلى الله عليه وسلم فاتبعه نَفَر من قريش، فنزل عَنْ راحلته، وانتثل ما في كنانته. ثم قال (2) يا معشر قريش، قد علمتم أنّي من أرماكم رجلا وأنتم والله لا تصلون إلي حتى أرمي كُلّ سهم في كنانتي، ثم أضرب بسيفي ما بقي في يدي منه شَيْء، ثم افعلوا ما شئتم، وإن شئتم دللتكم على مالي وقُنْيتي بمكة وخلَّيتم سبيلي؟ قالوا: نعم. فلما قَدم على النبي صلى الله عليه وسلم قال: "ربح البيع، ربح البيع". قال: ونزلت: { وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ }

ஸுஹைப் இப்னு ஸினான் ரோமபுரியைச் சார்ந்தவர் சிறுவயதிலேயே மக்காவிற்கு வந்தவர். பின் நாளில் மக்காவில் அறியப்படுகிற பெரும் தனவந்தராக விளங்கியவர்.

ஆபரணங்களை அழகிய முறையில் வடிவமைக்கும் நுட்பம் நிறைந்த ஆசாரி. தொழில் ரீதியாக மிகவும் நேர்மையும், கைதேர்ந்த விற்பன்னராகவும் இருந்ததால் மிக விரைவிலேயே பெரும் புகழுக்கும், செல்வாக்கிற்கும் சொந்தக்காரராகி விட்டிருந்தார்.

இந்நிலையில், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்காவிலே தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தை துவக்கியிருந்த ஆரம்ப காலகட்டம் அது.

அல்லாஹ் அவரின் இதயத்திலும் ஏகத்துவ விருட்சத்தை வேர்விட வைத்தான். ஆம், 31 – வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, முந்தைய மேன்மக்களின் பட்டியலில் இடம் பெற்றுக் கொண்டார்கள்.

அதே நாளில் தான் அம்மார் இப்னு யாஸிர் அவர்களும் 32 – வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, தம்மையும் அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டார்கள்.

வழக்கம் போல ஆரம்ப கால நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும், துன்பங்களும் இவர்களுக்கு ஏற்பட்டது. என்றாலும் மக்கா குறைஷிகளுக்கு நிகரான செல்வந்தராக இருந்ததால் பாதிப்பு கொஞ்சம் குறைவு.

அல்லாஹ் ஹிஜ்ரத்தைக் கடமையாக்கியிருந்த தருணம் அது. தம்மோடு இருந்த எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஹிஜ்ரத் செய்து, மதீனா சென்று மாநபி {ஸல்} அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.

ஒருவாராக ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமாகி, புறப்பட்டு மதீனாவிற்கு பயணமானார்கள்.

இந்த செய்தி பக்கா கேடிகளான மக்கா தலைவர்களுக்கு பேரிடியாய் இருந்தது.

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களை வழி மறித்தனர். தொடர்ந்து செல்லவிடாமல் முன்னும் பின்னுமாக சுற்றிவளைத்தனர்.

மறித்து நின்ற மக்கா தலைவர்களை நோக்கி என்னையும், நான் எப்படிப்பட்ட அம்பு எறியும் வீரன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

என்னிடத்தில் ஒரு அம்பு மீதமிருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.

அப்படியே என் அம்புகள் முழுவதும் தீர்ந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், என்னிடம் வாள் இருக்கிறது. நான் எப்படிப்பட்ட வாள் வீரன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். என் வாள் ஒடிந்து போகும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.

அப்படியே வாள் ஒடிந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், நான் மல்யுத்தம் புரிவதில் வல்லவன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று ஆவேசமாக அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியாகக் கூறினார்கள்.

இதைக் கேட்ட மக்கா தலைவர்கள் அதுவல்ல விஷயம், நீர் ரோமைச் சார்ந்தவர். இங்கு வந்து பெரும் செல்வந்தராக மாறிவிட்டீர். உம்மிடம் இருக்கும் அவ்வளவு சொத்துக்களும் எங்கள் ஊரில் நீர் சம்பாதித்தது.

ஆனால், எங்களுக்கு எதிராக செயல்படும் முஹம்மதிற்கும், அவர்களின் தோழர்களுக்கும் அது பயன் படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

அவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் ஓ! அப்படியா? என் செல்வத்தையும், என் பொற்குவியல்களை பாதுகாத்து வைத்திருக்கின்ற கருவூலத்தையும், நான் அது எங்கிருக்கின்றது என்று அறிவித்து கொடுத்து விட்டேன் என்றால், என்  உயிரை விட மேலாக மதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்காக நான் மேற்கொண்டிருக்கின்ற இந்த பயணத்தை தடுக்க மாட்டீர்களல்லவா? என்று கேட்டார்கள்.

உடனே மக்கா தலைவர்கள் அது போதும் எங்களுக்கு, அதை நீர் சொல்லி விட்டீர் என்றால் தடை விலகும். உமது பயணம் இனிதே தொடரும் என்றார்கள்.

உடனடியாக, சத்தியம் வாங்கி விட்டு அவர்களின் சொத்து எங்கெல்லாம் இருக்கின்றது என்றும், அவர்களின் கருவூலத்தின் சாவி எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பின்பு, மதீனா சென்று மாநபி {ஸல்} அவர்களை சந்திக்க விளைந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முகமலர்ச்சியோடு ரபிஹல் பைஅ அபா யஹ்யா அபூ யஹ்யா செய்து விட்டு வந்திருக்கின்ற வியாபாரம் மிகவும் லாபகரமானது என்று கூறி வரவேற்றார்கள்.

அல்லாஹ்வும் தன் பங்கிற்கு மனிதர்களில் இப்படியும் ஒருவர் இருக்கின்றார்; அவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடி, தன் வாழ்வையே அர்ப்பணித்து விடுகின்றார். இத்தகைய அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகவும் பரிவுடையோனாய் இருக்கின்றான்” (அல்குர்ஆன்:2:207) ஓர் இறைவசனத்தை இறக்கி வைத்து ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களை சந்தோஷப்படுத்தினான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பிரிதோர் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வைக் கொண்டும் மறுமை நாளைக் கொண்டும் இறை நம்பிக்கை கொண்டிருப்போர், எப்படி ஒரு தந்தை தம் பிள்ளையை நேசிப்பாரோ அது போன்று ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களை நேசிக்கட்டும்! என்று கூறினார்கள்.

(நூல்:இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:393 – 396. தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்:323,324. ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:130,131.)

2.   அல்லாஹ்வுடைய அன்பு கிடைக்கும்..

عن سهل بن سعد 

 أن رسول الله ﷺ قال يوم خيبر

 لأعطين الراية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله، يفتح الله على يديه، فبات الناس يدوكون ليلتهم أيهم يعطاها فلما أصبحوا غدوا على رسول الله ﷺ كلهم يرجو أن يعطاها، فقالأين علي بن أبي طالب؟ فقيل: هو يشتكي عينيه. فأرسلوا إليه فأتي به، فبصق في عينيه؛ ودعا له فبرأ كأن لم يكن به وجع، فأعطاه الراية فقالانفذ على رسلك حتى تنزل بساحتهم، ثم ادعهم إلى الإسلام، وأخبرهم بما يجب عليهم من حق الله تعالى فيه، فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, ‘நாளை நான் ஒரு மனிதரிடம் இஸ்லாமியச் சேனையின் கொடியைக் கொடுப்பேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியைக் கொடுப்பான். அவர் (எத்தகையவர் எனில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்என்றார்கள்.

மக்கள், ‘நபி(ஸல்) அவர்கள் யாரிடம் கொடியைக் கொடுப்பார்கள்?’ என்று தமக்குள் (இன்னாரிடம் கொடுப்பார்கள்என்று சிலரைக் குறிப்பிட்டுப்) பேசியபடி தங்கள் இரவைக் கழித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் (இஸ்லாமியச் சேனையின்) கொடி தம் கரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டபடி காலை நேரத்தை அடைந்தனர். (காலை நேரம் வந்தவுடன்) அலீ எங்கே?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அலீ அவர்களுக்குக் கண் வலிஎன்று சொல்லப்பட்டது. எனவே, (அலீ அவர்களை அழைத்து வரச் செய்து) நபி(ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரண்டு கண்களிலும் தம் எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக (வலி நீங்கிட) பிரார்த்தித்தார்கள். உடனே, அலீ அவர்கள் (அதற்கு முன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பது போன்று குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அவர்கள் நம்மைப் போன்று (இறைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்என்று அலீ அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘(அலீயே!) நிதானத்துடன் சென்று அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழையுங்கள். (இஸ்லாத்தை ஏற்பதால்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி),( நூல்: புகாரீ )

روى البخاري عن عمرة بنت عبد الرحمن، وكانت في حجر عائشة زوج النبي ﷺ، عن عائشة -رضي الله عنها- أن النبي ﷺ بعث رجلاً على سرية، وكان يقرأ لأصحابه في صلاتهم فيختم بقل هو الله أحد، فلما رجعوا ذكروا ذلك للنبي ﷺ فقالسلوه لأي شيء يصنع ذلك؟، فسألوه، فقال: لأنها صفة الرحمن، وأنا أحب أن أقرأ بها، فقال النبي ﷺ

أخبروه أن الله تعالى يحبه

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர் தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது குல் ஹுவல்லாஹு அஹத்எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்என்று கூற அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர் ஏனெனில் அந்த பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

எந்த நேசம் உண்மையான, நிலையான நேசமோ, அந்த ரப்பின் நேசத்துக்காகவே நமது வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும் ஆக்கிக்கொள்வோம்.

மேலும், அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத் தரக்கூடிய வழிமுறைகளில் ஒன்றையாவது செய்து அல்லாஹ்வின் நேசத்தை பெற்று இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக நாம் வாழ முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வே! உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன்! தந்தருள்வாயாக!! ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!! 

No comments:

Post a Comment