அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவோம்!!!
ஓர் இறைநம்பிக்கையாளன் எனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இந்த ரஹ்மத் கிடைக்காதா என்று ஏக்கப்படும்
அளவுக்கு உள்ள ஒரு ரஹ்மத் இருக்குமானால் அது ரிளா எனும் இறை திருப்தி மட்டும்
தான்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் மேன்மக்களான நபிமார்களுடைய வாழ்க்கை வரலாறுகளை சொல்லும் போது இவர் நல்ல
அடியாராக இருந்தார்,
இவர் நன்றியுள்ள அடியாராக இருந்தார், இவர் பெற்றோர்க்கு நன்மை செய்யக் கூடியவராக இருந்தார் என்று பாராட்டுகிறான்.
மேலும், நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களை அடையாளப் படுத்தும் போது “ ரளியல்லாஹு அன்ஹும் வரளூ அன்ஹு" - அல்லாஹ் அவர்களை பொறுந்தி
கொண்டான் அவர்களும் அவனை பொறுந்தி கொண்டார்கள் என்று கூறுகிறான்.
இந்த வசனங்களை ஒர் முஃமின் வாசிக்கும் போது இது போன்ற செயல்களை நான் செய்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்வானா? அந்த செயல்களை அங்கீகரித்து கொள்ளுவானா? என்று ஏக்கம் கொள்ள
வேண்டும்.
ஏனெனில், உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறப்பானது எது தெரியுமா? அல்லாஹ்வுடைய திருப்தி தான்.
وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
அல்லாஹ்வின்
திருப்தியே அனைத்தையும் விட சிறந்தது. அதுவே மகத்தான வெற்றியும் ஆகும். ( அல்குர்ஆன்: 9:
72 )
ஓர்
இறைநம்பிக்கையாளன் இறை திருப்தியைப் பெறுவது என்பது பெரும் சிறப்பும்
பாக்கியமாகும்.
இறை திருப்திக்கு
எண்ணற்ற சிறப்புகளும் மகிமைகளும் உண்டு. ஆதலால் தான் இறை திருப்தியைப்
பெற்றவர்களும் அதனை பெறாதவர்களும் சமமாக மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
اَفَمَنِ
اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْۢ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰٮهُ
جَهَنَّمُؕ وَ بِئْسَ الْمَصِيْرُ
அல்லாஹ்வின்
திருப்தியைப் பெற்றவன்,
அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி, நரகத்தை அடைந்தவனைப் போன்றவனா? (அது) சென்றடையும்
இடங்களில் மிகவும் கெட்டது.
( அல்குர்ஆன்: 3:
162 )
நபி {ஸல்} அவர்கள்
அனுதினமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனையின் வாயிலாக இறை திருப்தியைக்
கோருபவர்களாகவும் இறைக் கோபத்திலிருந்து பாதுகாவல் தேடக்கூடியவர்களாகவும்
இருந்துள்ளார்கள் என்பதை பின்வரும் நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.
حَدَّثَنَا
أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِى عُبَيْدُ
اللَّهِ بْنُ عُمَرَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنِ الأَعْرَجِ
عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ
فَقَدْتُ
رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ
فَوَقَعَتْ يَدِى عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِى الْمَسْجِدِ وَهُمَا
مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ « اللَّهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ
وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِى ثَنَاءً
عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
“அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின்
உகூபத்திக்க,
வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க
அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க”
இறைவா! உன்
திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது
மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால்
முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு
இருக்கிறாய். (நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வின்
பொருத்தம் கிடைக்கப் பெற்றவர்களுக்கு மட்டும் தான் மறுமை நாளில் மலக்குமார்களின்
பரிந்துரைக்குத் தகுதி பெறுவார்கள் என திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
يَعْلَمُ
مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَ لَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ ارْتَضٰى
وَهُمْ مِّنْ خَشْيَـتِهٖ مُشْفِقُوْنَ
அவர்களுக்கு
முன்னும்,
பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக்
கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள்
அவனது அச்சத்தால் நடுங்குவார்கள். ( அல்குர்ஆன்: 21: 28 )
1. இறைவனுக்கு நன்றி செலுத்துதல்
اِنْ
تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنْكُمْ وَلَا يَرْضٰى لِعِبَادِهِ
الْـكُفْرَ ۚ وَاِنْ تَشْكُرُوْا يَرْضَهُ لَـكُمْ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ
وِّزْرَ اُخْرٰى ؕ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا
كُنْتُمْ تَعْمَلُوْنَ ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
நீங்கள் (ஏக
இறைவனை) மறுத்தால் அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவன். அவன் தனது அடியார்களிடம்
மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப்
பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள்
மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு
அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன். ( அல்குர்ஆன்: 39:
7 )
அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்துவது இறைவனுடைய பொருத்தத்தை பெற்றுத்தரும் என்று இக்குர்ஆன் வசனம்
கூறுகிறது.
அல்லாஹ்வைப்
பொறுத்த வரை அடியார்கள் எப்போதும் தனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்
என்று அடியார்களுக்கு தான் செய்த அருட் கொடைகளை அல்லாஹ் அடிக்கடி நினைவுப்
படுத்திக் கொண்டிருக்கிறான்.
وَمَا يَسْتَوِي الْبَحْرَانِ هَذَا عَذْبٌ فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ
وَهَذَا مِلْحٌ أُجَاجٌ وَمِنْ كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا
وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ فِيهِ مَوَاخِرَ
لِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
“இன்னும் இரண்டு கடல்கள்
சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்)
குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்)
மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம்
செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் – இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! ( அல்குர்ஆன்: 35: 12 )
وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا
طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ
مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
“. (முஃமின்களே!)
அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள்
புசியுங்கள்;
நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு
நன்றி செலுத்துங்கள். ( அல்குர்ஆன்: 16: 114 )
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ
شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ
تَشْكُرُونَ
“உங்கள் அன்னையர்களின்
வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ்
வெளிப்படுத்துகிறான்;
அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும்,
இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும்
பொருட்டு –
அவனே அமைத்தான் (16:78)
وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا
مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ
” (மனிதர்களே!)
நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். ( அல்குர்ஆன்: 7: 10 )
وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا
اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி
செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(3: 123)
மேற்கூறிய
வசனங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடியார்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை அதன்
நன்மைகளை,
பயன்களை கூறியதன் பின்னர் நன்றியுணர்வுடன் நடக்குமாறு பணிக்கின்றான்.
அல்லாஹ்வின் அருளை உணர்ந்து உடனடியாக அவனை புகழ்வதே நன்றியா
عن النوّاس بن سمعان قال : سرقت ناقة رسول الله صلى
الله عليه وسلم فقال لئن ردها الله لأشكرن ربي ، فوقعت في حي من أحياء العرب فيهم
امرأة مسلمة ، فوقع في خلدها أن تهرب عليها ، فرأت من القوم غفلة فقعدت عليها ثم
حركتها فصبحت بها المدينة ، فلما رأها المسلمون فرحوا بها ، ومشوا بمجيئها حتى
أتوا رسول الله صلى الله عليه وسلم فلما رأها قال { الحمد لله } فانتظروا هل يحدث
رسول الله صلى الله عليه وسلم صوماً أو صلاة؟ فظنوا أنه نسي فقالوا : يا رسول الله
قد كنت قلت لئن ردها الله لأشكرن ربي . قال : ألم أقل الحمد لله.
ஒரு தடவை நபி {ஸல்} அவர்களின் ஒட்டகம் திரு
அந்த ஒட்டகத்தை ஒரு அரபி கோத்தி
அக்கூட்டத்தார் தூங்கிய நேரத்தி
அதை கண்ட நபியும் அவர்களின் தோ
வேறு எதுவும் செய்
ஆனால் நபி அவ்வாறு செய்யவில்லை
فقال داود عليه السلام كيف أطيق شكرك وأنت الذي تنعم علي ثم ترزقني على
النعمة الشكر فالنعمة منك والشكر منك فكيف أطيق شكرك؟ فقال جل وعلا : يا داود الآن
عرفتني حق معرفتي
தாவூத் (அலை)
அவர்கள் "யா அல்லாஹ்! நான் உனக்கு நன்றி செலுத்த எப்படி சக்தி பெறமுடியும்
ஏனென்றால் நீ எனக்கு உபகாரம்செய்கின்றாய் பிறகு அந்த உபகாரத்துக்கு நன்றி
செலுத்தவும் நீ எனக்கு உதவி செய்கின்றாய்.
எனவே, உபகாரத்தையும் அந்த உபகாரத்துக்கு
நன்றி செலுத்துவதையும் உன்னிடமே நான் பெற்றேன் எனவே நான் உனக்கு செலுத்தும்
சக்தியை எப்படி பெறமுடியும் என்று கூறியபோது, அல்லாஹ் சொன்னான்! "இப்பொழுதான் என்னை அறிய வேண்டிய விதத்தில்
அறிந்துகொண்டீர்" என்றான். ( நூல் : தப்ஸீர் அத் தபரீ )
2. பாவத்திலிருந்து விலகியிருத்தல்!
அல்லாஹ்வின்
பொருத்தம் கிடைக்க சிற்சில குற்றங்களை விட்டும் விலகி இருத்தல் அவசியம். ஏனென்றால்
பாவங்கள் செய்பவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் பொருத்தம்
அவர்களுக்கு கிடைக்காது.
يَحْلِفُوْنَ
لَـكُمْ لِتَرْضَوْا عَنْهُمْۚ فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا
يَرْضٰى عَنِ الْقَوْمِ الْفٰسِقِيْنَ
”நீங்கள் அவர்கள்
மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள்
அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக்
கொள்ள மாட்டான்.
( அல்குர்ஆன்: 9:
96 )
قال
حبيب الفارسي رحمه الله تعالى:-
[ إن من سعادة المرء أن يموت وتموت معه ذنوبه! ]
{ حلية الأولياء، ٦ /١٥٢ }
ஹபீப் அல் ஃபாரிஸீ
(ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஒரு மனிதன் மரணிக்கின்றபோது, அவனுடன் சேர்ந்து அவனது
பாவங்களும் மரணித்து விடுவதுதான் அவனுக்குரிய உண்மையான மகிழ்ச்சியும்
ஈடேற்றமுமாகும்!”
{ நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’, 06/152}
பாவங்களில்
இருந்து தவிர்ந்துகொள்வது எல்லாவற்றையும் விட முக்கியமானது. அதாவது, நஃபிலான சிறிய சிறிய
அமல்கள், துஆக்களை விட அது முக்கியமானது.
அமீருல் முஃமினீன்
அலீ இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் "அமலில்
சிறந்தது எது?"
என்று வினவுகிறார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் "பாவங்களில் இருந்து தவிர்ந்துகொள்ளுதல்" என்று
கூறினார்கள்.
பாவங்களைத்
தவிர்ப்பது இஸ்லாமிய கடமைகளை விட அதிக முக்கியத்துவமிக்கதாகும். இது ஒருவரின்
இதயத்தையும் ஆன்மாவையும் கறைபடுத்துவதை விட்டும் தடுக்கிறது.
فَلَمَّا
سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً
وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُنَّ سِكِّينًا وَقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ
فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ
لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ (31) قَالَتْ
فَذَلِكُنَّ الَّذِي لُمْتُنَّنِي فِيهِ وَلَقَدْ رَاوَدْتُهُ عَنْ نَفْسِهِ
فَاسْتَعْصَمَ وَلَئِنْ لَمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًا
مِنَ الصَّاغِرِينَ (32) قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا
يَدْعُونَنِي إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ
وَأَكُنْ مِنَ الْجَاهِلِينَ (33)
பாவத்தை வெறுத்து, பாவத்தை செய்வதில் இருந்து தவிர்ந்து நெருக்கடியான வாழ்வை விரும்பி
தேர்த்தெடுத்த யூஸுப் நபியை அல்லாஹ் நேசித்தான், அவரை தேர்ந்தெடுத்தான். குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
”எவளது வீட்டில் அவர்
இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களை அடைத்து ‘வா!’
என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம்
பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன்
தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்” எனக் கூறினார். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின்
சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்).
இவ்வாறே அவரை
விட்டும் தீமையையும்,
வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு
செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர். இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள்
அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல்
அருகே இருவரும் கண்டனர். “உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?” என்று அவள் கூறினாள்.
“இவள் தான் என்னை
மயக்கலானாள்”
என்று அவர் கூறினார். “அவரது சட்டை முன்புறம்
கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது
சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்”
என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார்.
அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்டபோது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது” என்றார். “யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!” (என்று யூஸுஃபிடம்
கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக்கொள்! நீயே
குற்றவாளி. (எனவும் கூறினார்).
“அமைச்சரின் மனைவி தனது
அடிமையை மயக்கப் பார்த்திருக்கிறாள். அந்த அடிமை அவளைக் காதலால் கவர்ந்து
விட்டான். அவள் பகிரங்க வழிகேட்டில் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று அந்நகரத்திலுள்ள பெண்கள் கூறினர். அப்பெண்களது சூழ்ச்சியைப் பற்றி அவள்
கேள்விப்பட்டபோது,
அவர்களை அழைத்து வரச் செய்தாள். அவர்களுக்கு விருந்தையும்
ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருத்திக்கும் ஒரு கத்தியையும் கொடுத்தாள்.
(யூஸுஃபிடம்) “அவர்களை நோக்கிச் செல்”
என்று கூறினாள். அவரை அப்பெண்கள் கண்டவுடன், மலைத்துப் போயினர். தமது கைகளையும் வெட்டிக் கொண்டனர். “அல்லாஹ் தூயவன். இவர் மனிதரே இல்லை. இவர் கண்ணியமான வானவர் தவிர வேறில்லை” என்றனர்.
“இவரைக் குறித்துத் தான்
என்னைப் பழித்தீர்கள். இவரை நான் தான் மயக்கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார்.
நான் கட்டளையிடுவதை இவர் செய்யாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார். சிறுமையானவராக
ஆவார்” என்று அவள் கூறினாள். “என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது.
இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட்டால் இவர்களை நோக்கிச்
சாய்ந்து,
அறிவீனனாக ஆகி விடுவேன்” என்றார். ( அல்குர்ஆன்: 12:
23 – 33 )
3. அழகிய வார்த்தைகள் பேசுதல்.
حَدَّثَنِي
عَبْدُ اللهِ بْنُ مُنِيرٍ سَمِعَ أَبَا النَّضْرِ ، حَدَّثَنَا عَبْدُ
الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللهِ ، يَعْنِي ابْنَ دِينَارٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ
أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
قَالَ
إِنَّ
الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ لاَ يُلْقِي لَهَا
بَالاً يَرْفَعُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ
بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ لاَ يُلْقِي لَهَا بَالاً يَهْوِي بِهَا فِي
جَهَنَّمَ
நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ
சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக
அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின்
கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி
யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். ( நூல்: புகாரி )
எந்தச்
சூழ்நிலையிலும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளாத வார்த்தைகளை உதிர்த்து விடக் கூடாது.
அல்லாஹ்வின்
கோபத்திற்குரிய,
சாபத்திற்குரிய வார்த்தைகளை பேசி விடாமல் அல்லாஹ்
திருப்திக் கொள்ளும் வார்த்தைகளையே பேச வேண்டும்.
நபி {ஸல்} அவர்கள்
தம் குழந்தை இறந்து பெரும் துன்பத்தில் ஆழ்ந்த போதும் அல்லாஹ் பொருந்தாத எதுவும்
தம்மிடம் நிகழ்ந்து விடக் கூடாது என்றே கவனத்துடன் செயல்பட்டுள்ளார்கள்.
حَدَّثَنَا
الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ ،
حَدَّثَنَا قُرَيْشٌ ، هُوَ ابْنُ حَيَّانَ – عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسِ بْنِ
مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ
دَخَلْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي سَيْفٍ الْقَيْنِ ،
وَكَانَ ظِئْرًا لإِبْرَاهِيمَ – عَلَيْهِ السَّلاَمُ – فَأَخَذَ رَسُولُ اللهِ
صلى الله عليه وسلم إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ
بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ
اللهِ صلى الله عليه وسلم تَذْرِفَانِ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ
، رَضِيَ اللَّهُ عَنْهُ ، وَأَنْتَ يَا رَسُولَ اللهِ فَقَالَ يَا ابْنَ عَوْفٍ
إِنَّهَا رَحْمَةٌ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ صلى الله عليه وسلم إِنَّ
الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ ، وَلاَ نَقُولُ إِلاَّ مَا يَرْضَى
رَبُّنَا وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُون
நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற
கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின்
பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி {ஸல்} அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து
முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது
இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி {ஸல்} அவர்களின் கண்கள் நீரைப்
பொழியலாயின.
இதைக் கண்ட
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே!
தாங்களா (அழுகிறீர்கள்)?”
என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்ஃபின் புதல்வரே!” என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு “கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது. எனினும் இறைவன்
விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள்
உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்” என்றார்கள். ( நூல் : புகாரி )
நபி (ஸல்)
அவர்களிடம் வந்து,
”அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம்
மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப்
பற்றியும் சொல்லுங்கள்”
என்றேன். அதற்கு அவர்கள் ”அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ”எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு
காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். ”சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும்
போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9996)
மேலும், நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத்
தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல
பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு
துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி (6023)
தீய வார்த்தைகளால் பிறரை அச்சத்திற்குள்ளாக்குபவரை
மோசமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்.அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவரை உள்ளே வரச் சொல்லுங்கள்.அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்'' என்று சொன்னார்கள்.உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம்
கனிவாகவே பேசினார்கள்.(அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்.பிறகு
அவரிடமே கனிவாகப் பேசினீர்களே!'' என்று கேட்டேன். நபி
(ஸல்) அவர்கள்,
''ஆயிஷா! யாருடைய அருவருப்பான பேச்சுகளிருந்து (தங்களைத்)
தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர்
ஆவார்''
(அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை
செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)என்றார்கள்.அறிவிப்
ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம், நாவினாலும் நாம் தண்டிக்கப்படுவோமா? என்று கேட்ட போது, நாவு சம்பாதித்த தீமைகள் தான் மக்களை நரகில் தள்ளுகிறது என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான்
அறிவிக்கட்டுமா?''
என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான்
அவர்களிடத்தில்,
''அல்லாஹ்வின் நபியே! ஆம் (எனக்கு சொல்லுங்கள்)'' என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, ''இதை நீ பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் ''மக்களை முகம் குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை
செய்தவைகளாகும்''
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பனி ஜபல் (ரலி) நூல்: அஹ்மத் (21008)
அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் ஒரு அமலேனும் நம்மிடம்
உண்டா?
وذكر أن
"السيدة صفية عمة النبي صلى الله عليه وسلم ضربت نموذجًا في الرضا، وذلك بعد
أن قتل أخوها سيدنا حمزة في غزوة أحد، وقامت هند بنت عتبة ببقر ببطنه، وقضم كبده،
عندما أرادت أن ترى أخاها، قال النبي للزبير بن العوم إياك أن تجعلها تراه، فقال:
يا أمي، قال رسول الله لا تنظري إلى حمزة، فقالت السيدة صفية: أيظن رسول الله أني
أسخط على قدر الله، يابني لقد أرضنا الله كثيرًا".
அன்னை ஸஃபிய்யா
(ரலி) அவர்களின் சகோதரர் ஹம்ஜா (ரலி) அவர்கள் உஹதிலே கொடூரமான முறையில்
ஷஹீதாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறார்கள்.
தலை உடலில்
இருந்து கழற்றப்பட்டு மண்டை ஓடு பிரிக்கப்பட்டு, நெஞ்சு பிளக்கப்பட்டு,
ஈரல் குலை நசுக்கப்பட்டு வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் உடல்
கிடக்கும் காட்சியை அந்த வழியாக வந்த ஹம்ஜா (ரலி) அவர்களின் சகோதரி கண்டு
விடக்கூடாது என்பதற்காக ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களிடம் "ஷுஹதாக்களின்
உடல் கிடத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு நீங்கள் சென்றால் உங்கள் சகோதரரைப் பார்க்க
வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்ட போது
ஸஃபிய்யா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின்
விதியை நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் எங்கே நாங்கள் கோபப்பட்டு ஏதேனும் சொல்லி
விடுவோம்" என்று நினைத்துக் கொண்டார்களோ? என்று கேட்டு விட்டு, மகனே! "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வை அதிகம் பொருந்திக் கொண்டவர்கள்
ஆவர்" என்று கூறினார்கள்.
ومن
نماذج الرضا أيضًا التي تحدث عنها خالد أيضًا، "ما فعله سيدنا سعد بن أبي
وقاص أحد العشر المبشرين بالجنة، والذي فتح كثيرًا من البلدان، وانتصر في
القادسية، وبعد الفتح فقد بصره، فتعاطف الناس معه، وبكى أحدهم عندا رآه على هذه
الحال، فقال له: يابني لا تبك.. قضاء الله أحب إلي من بصري".
துஆ ஒப்புக்
கொள்ளப்பட்ட நபித்தோழரும்,
சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட நபித்தோழர்களில்
ஒருவருமான ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இஸ்லாமிய படைகள் பலதை தலைமையேற்று
நடத்தி பல்வேறு வெற்றிகளை குவித்துக் கொடுத்து இறுதியாக காதிஸிய்யா யுத்தத்தையும்
வெற்றியுடன் நிறைவு செய்த சில நாட்களில் அவர்களின் கண் பார்வை பறி போனது அப்போது
மக்கள் "அவர்களிடம் அன்பொழுக இது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே
இருப்பார்கள். அப்படித் தான் அன்று ஒருவர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களின்
முன் அமர்ந்து அழுதே விட்டார். பின்னர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம்
"உங்களின் இந்த நிலையை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை" என்றார்
அழுதவாறு.
அதற்கு, ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் "மகனே! அழாதே! அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் என்னை வைத்திருக்கும் இந்த நிலை எனக்கு மீண்டும் பார்வை கிடைப்பதை விட
மிகப் பிரியமானதாகும்" என்று கூறினார்கள்.
ஆகவே, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மிடம் இருந்து பொருந்திக் கொள்கிற ஒரு அமலேனும்
நம்மிடம் இருக்க வேண்டும்.
அல்லாஹ் நம்
அனைவரையும் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
No comments:
Post a Comment