Thursday, 16 March 2023

ரமழான்.. பொக்கிஷங்களின் புதையல்!!!

 

ரமழான்.. பொக்கிஷங்களின் புதையல்!!!


நாம் புண்ணியம் நிறைந்த அல்லாஹ்வின் அருளும், மன்னிப்பும், நரக விடுதலையும், கருணையும் நிறைந்த ரமழான் மாதத்தை எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

எத்தனையோ மாதங்கள் இருக்கின்றபோதும்,நோன்புக்கு என்று ரமலான் மாதத்தை இறைவன் தேர்ந்தெடுத்து  அந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என அறிவித்து இருப்பதிலிருந்தே இந்த நோன்பின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

ஏனென்றால், ரமலான் மாதத்தில்தான் அருள் மறை திருக்குர்ஆன் நமது  நபி (ஸல்) அவர்களுக்கு அருளப் பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் இந்த மாதத்தில்தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வேதங்களை அருளியுள்ளான்.

ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகக் கருதப்படும் லைலத்துல் கத்ர்எனும் இரவும் இந்த மாதத்தில்தான் வருகிறது.

ரமழான் என்பது இன்று இந்த உம்மத்தில் பெரும்பான்மையானவர்களிடத்தில்  உறக்கத்திற்கும் ஓய்வுக்குமான மாதமாக, வித விதமாக உண்பதற்கும், வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆனந்தப்படுவதற்குமான மாதமாக மாறி வருகிறது.

ஆனால், ரமழான் என்பது மறுமைக்கான வெற்றியின் மாதமாக மலர வேண்டும்,  ரமழான் உற்சாகமான மாதமாக, உழைப்பின் மாதமாக, முயற்சியின் மாதமாக மலர வேண்டும்; மாற வேண்டும்.

அந்த வகையில் நாம் இந்த ரமழானை ஆக்கப்பூர்வமான முறையில் அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்பும் வழியில் நாம் பயன்படுத்த வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பரிபூரண உடல் நலத்தோடு, ஆரோக்கியத்துடன் 30 நோன்பு நோற்கவும் இதர வணக்க வழிபாடுகளில் முனைப்புடன் ஈடுபடவும் நல்ல தவ்ஃபீக் செய்தருள்வானாக!

1.   ஒரு இறைநம்பிக்கையாளனின் இலக்கும், செயலும் எதை நோக்கி? எப்படி அமைந்திருக்க வேண்டும்?

இறைநம்பிக்கையாளர்கள் பாவமன்னிப்பையும், சுவர்க்கத்தையும், இறை நெருக்கத்தையும் தேடுவதில், பெற்றுக் கொள்வதில் விரைவாக ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு முந்தி செயல்படும் படி அமைந்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ

எவர்கள் நம் வழியில் (செல்ல) முயற்சிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம் (நல்) வழிகளில் செலுத்துகிறோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். ( அல்குர்ஆன்: 29: 69 )

وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. ( அல்குர்ஆன்: 3: 133 )

سَابِقُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَ الْاَرْضِۙ اُعِدَّتْ لِلَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏

உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன். ( அல்குர்ஆன்: 57: 21 )

2.   நாம் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டியது உலகச் செல்வங்களா? நல்லறங்களா?

 اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. ( அல்குர்ஆன்: 57: 20 )

இவ்வாறு தீமையான காரியங்களுக்கு முந்தாமல் நன்மையான காரியங்களை செய்வதற்கு போட்டியிடவேண்டும்

..وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன் ( அல்குர்ஆன்: 2: 148 )

حَدَّثَنِى يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – قَالَ أَخْبَرَنِى الْعَلاَءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ

بَادِرُوا بِالأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِى كَافِرًا أَوْ يُمْسِى مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا

நபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்: “இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று (வரவிருக்கும்) குழப்பத்திற்கு (முன்னால்) நற்செயல்களில் போட்டி இடுங்கள்!. (அந்தக் குழப்பம் வந்தால்) ஒரு மனிதன் முஃமினாக காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காகத் தனது மார்க்கத்தை விற்று விடுவான். ( அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-186 )

மேற்கூறப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து நல்ல செயல்களில், நன்மையான காரியங்களில் ஒருவொருக்கொருவர் போட்டி போட வேண்டும். முந்திக் கொள்ள வேண்டும் என்பதும் அதன் காரணமாகவே சுவனத்தையும், சுவனத்தில் பல தரப்பட்ட அந்தஸ்துகளையும் அடைய முடியும் என்று தெரிகின்றது.

மேன்மக்களின் நன்மையான காரியங்களில் போட்டோ போட்டி...

அபுமுஸ்லிம் அல்ஃகவ்லானி (ரஹ்) அவர்கள் தாங்கள் போட்டி போடுவதற்கு ஸஹாபாக்களை உதாரணமாக எடுத்து கொள்வார்கள்.

ஸஹாபாக்கள் தோழமையில் நபியோடு நட்பாக இருந்ததில் எங்களை முந்தி விட்டார்கள். அமல்களிலும் எங்களை முந்தி விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? இல்லை, “நாங்கள் அவர்களோடு போட்டி போடுவோம். நாங்கள் நன்மையின் விஷயங்களில் அவர்களோடு போட்டி போடுவோம்! நாளை அவர்கள் மறுமையில் எங்களைக் கண்டால் அமல்களில் வீரமாக இருந்த, அமல்களில் தீவிரமாக இருந்த, அமல்களில் கடினமாக முயற்சி செய்த ஒரு நல்ல கூட்டத்தை தான் நாம் விட்டு வந்தோம்” என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று அவர்கள் கூறுவார்களாம்.

கலிஃபா உமர் (ரலி) அவர்களுடைய காலத்தில் ரமழான் மாதத்தில் ஆண்களுக்கு தராவீஹ் தொழுகை நடத்துவதற்கு உபை இப்னு கஃபை உமர் அவர்களை நியமித்தார்கள். பெண்களுடைய கூட்டம் அதிகரிக்கவே, மஸ்ஜிதில் ஒதுங்குமிடத்தில் அவர்களுக்காக தமீமுத்தாரி (ரலி) அவர்களை தனியாக இமாமாக நியமித்து அவர்களுக்கு தொழுகை நடத்த ஏற்பாடு செய்தார்கள்.

இந்த இருவரும் தொழுகையை ஆரம்பித்தால் ஓதுவார்கள், ஓதிக்கொண்டே இருப்பார்கள். அப்படியே நின்று கொண்டிருப்பார்கள். தொழுகை முடிந்து அவர்கள் ஸஹர்  செய்வதற்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் என்றால், சுபுஹ் உடைய அதானுக்கு முன்பாக 40அல்லது 50 ஆயத்துக்கள் ஓதக் கூடிய அளவுக்குத் தான் அவர்களுக்கு ஸஹருடைய நேரம் கிடைக்கும். பலர், இன்று நமக்கு ஸஹர் கிடைக்காது என்று பயந்து விடுவார்கள். ( அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மது, எண் : 12739. )

ரமழானில் நாம் பாக்கியம் தரும் அமல்களைச் செய்ய ஒருவரையொருவர் போட்டி போட்டு முந்துவோம்! ஏனெனில்,

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ صُفِّدَتْ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ وَنَادَى مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ وَلِلَّهِ عُتَقَاءُ مِنْ النَّارِ وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ (سنن ابن ماجه

ரமலான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் நலவை தேடக்கூடியவர்களே! நலவை முன்னோக்கி வாருங்கள்! இதோ! அதற்கான மாதம் வந்திருக்கிறது மேலும், தீமை செய்ய கூடிய மனிதனை நோக்கி, தீமை செய்வதில் தீவிரமாக இருப்பவனே! தீமை செய்வதை நீ நிறுத்தி கொள்!என்று அல்லாஹ்விடம் இருந்து வந்த ஒரு அழைப்பாளர் அழைக்கிறார். ( நூல்: இப்னு மாஜா )

வழக்கமாக நாம் செய்து வருகிற அமல்களை இன்னும் மேம்படுத்துவதோடு, கவனத்துடன் செய்து வருவதோடு அல்லாஹ்வின் புறத்தில் இருந்து குவியல், குவியலாய் நன்மைகளை பெற்றுத் தருகிற பொக்கிஷங்களின் புதையலாய் நபி {ஸல்} அவர்கள் அடையாளப்படுத்திய நல்ல அமல்களை ரமழானின் முப்பது நாட்களும் பேணுதலோடு நிறைவேற்ற முயற்சி செய்வதோடு வாழ்நாள் முழுவதும் அதை தொடர்ந்து செயல்படுத்துகிற ஆற்றலை வழங்கிட வல்ல ரஹ்மானிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்!!

அல்லாஹ்வின் புறத்தில் இருந்து குவியல், குவியலாய் நன்மைகளை பெற்றுத் தருகிற பொக்கிஷங்களின் புதையலாய் நபி {ஸல்} அவர்கள் அடையாளப்படுத்திய அமல்களில் சிலதை நாம் இப்போது பார்ப்போம்.

பொக்கிஷம் 1:- 30 நாள் நோன்பு நோற்போம்... நரகிலிருந்து 3000 ஆண்டு தூரத்தையும், 30 கன்தக் இடைவெளியையும் பெறுவோம்!!

وعن أبي أمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض

அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கும் நரகிற்கும் இடையே 1 கன்தக் - அகழ் தூர இடைவெளியை ஏற்படுத்துவான். ஒரு கன்தக் – அகழ் தூர இடைவெளி என்பது வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: ஸஹீஹுத் தர்ஃகீப், இந்த ஹதீஸ் ஹஸனுல் லிஃகைரிஹி தரத்திலானது ).

وعن عمرو بن عبسة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم
 من صام يوما في سبيل الله بعدت منه النار مسيرة مائة عام  
 رواه الطبراني في الكبير والأوسط بإسناد لا بأس به  

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு வைக்கிறாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்குப் பகரமாக அல்லாஹ் அந்த அடியானின் முகத்தை நூறு வருட காலம் நரக நெருப்பை விட்டும் தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்: அம்ர் இப்னு அபஸ (ரலி) நூல்: ஸஹீஹுத் தர்ஃகீப், இந்த ஹதீஸ் ஸஹீஹுல் லிஃகைரிஹி தரத்திலானது ).

நரகத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் தூரமாக்கக்கூடிய நோன்பை, அதுவும் ரமழானுடைய நோன்பை இஸ்லாம் விடுவதற்கு அனுமதி வழங்கி இருக்கிற காரணம் இன்றி விடுவது பெரும்பாவம் என்பதைத் தாண்டி மேற்கூறிய சிறப்புக்களை பெறுகிற தகுதியை இழக்கச் செய்து விடும் என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நோன்பை விடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் யார்?..

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிமான புத்தியுள்ள, வயதுவந்த ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால், பிரயாணி, நோயாளி, கர்ப்பிணிப்பெண், பாலூட்டும் தாய், நோன்பு நோற்;க இயலாத வயோதிகர்கள், நோயிலிருந்து குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் இவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதி உண்டு.

ஆனால் பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும், நோயாளியின் நோய் குணமானதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும். கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய் இவ்விருவரும் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்களும் குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது பாலூட்டியதற்கு பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

நோன்பு நோற்கவே முடியாத வயோதிகர்கள் மற்றும் நோய் குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளித்தால் போதுமாகும். இவர்கள் விடுபட்ட நோன்புகளை நிறைவேற்ற வேண்டியதில்லை.

எனவே, எக்காரணம் கொண்டும் நோன்பு நோற்காமல் இருந்து விடக்கூடாது.

பொக்கிஷம் 2:- ரமழான் 30 நாட்கள் ஜமாஅத் தொழுகையில் பங்கேற்று, ளுஹாத் தொழுகையை தொழுது! 30 ஹஜ் செய்த, 30 உம்ரா செய்த நன்மைகளைப் பெறுவோம்!!

حديث أبي أمامة رضي الله عنه، أنَّ رسول الله صلى الله عليه وسلم قال: ((مَن خرج من بيته متطهِّرًا إلى صلاة مَكتوبة، فأجره كأجر الحاجِّ المحرِم، ومَن خَرج إلى تَسبيح الضحى لا ينصبه إلَّا إياه، فأجره كأجر المعتمِر، وصلاةٌ على إثْر صلاة لا لَغو بينهما كتابٌ في علِّيين))؛ صحيح الترغيب والترهيب.

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் தனது இல்லத்திலிருந்து வுழூச்செய்து பர்லான தொழுகைக்காக (பள்ளிவாசலுக்கு) வெளியேறிச் செல்கிறார் என்றால் அவருடைய கூலி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து வெளியேறிச் செல்பவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றதாகும்என நபிகளார் (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், ளுஹாத் தொழுகைக்காக வெளியேறுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்தவரின் கூலியைப் போன்ற கூலி கிடைக்கும், எவர் ஒரு தொழுகைக்கும் இன்னொரு தொழுகைக்கும் மத்தியில் எவ்வித வீணான செயல்களையும் செய்யவில்லையானால் அவரின் பெயர் இல்லிய்யீன்களில் பதிவு செய்யப்படும்என்றும் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவுத், அஹ்மத் ).

அதான் – தொழுகைக்கான அழைப்புசப்தத்தைக் கேட்டவுடன் நபித்தோழர்கள் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்ற, அவர்களது இல்லங்கள் வெகுதூரமாக இருந்தது அவர்களுக்கு தடையாக அமையவில்லை. 

அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள். அவர்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனிடம் நன்மையாகக் கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்திருந்ததால் மஸ்ஜிதிலிருந்து தங்களது இல்லங்கள் வெகு தொலைவிலிருப்பது குறித்து மகிழ்ச்சியடைந்தார்கள்.

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ الْعَنْبَرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبِي ‏ ‏رَحِمَهُ اللَّهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ رَجُلٌ مَا أَعْلَمُ مِنْ النَّاسِ مِنْ إِنْسَانٍ مِنْ أَهْلِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏مِمَّنْ ‏ ‏يُصَلِّي الْقِبْلَةَ أَبْعَدَ بَيْتًا مِنْ الْمَسْجِدِ مِنْهُ قَالَ فَكَانَ يَحْضُرُ الصَّلَوَاتِ كُلَّهُنَّ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ لَهُ لَوْ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي ‏ ‏الرَّمْضَاءِ ‏ ‏وَالظَّلْمَاءِ قَالَ وَاللَّهِ مَا أُحِبُّ أَنَّ بَيْتِي يَلْزَقُ ‏ ‏بِمَسْجِدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ ‏ ‏لِكَيْمَا يُكْتَبَ ‏ ‏أَثَرِي ‏ ‏وَرُجُوعِي إِلَى أَهْلِي وَإِقْبَالِي إِلَيْهِ قَالَ ‏ ‏أَنْطَاكَ ‏ ‏اللَّهُ ذَلِكَ كُلَّهُ ‏ ‏أَوْ أَعْطَاكَ مَا ‏ ‏احْتَسَبْتَ ‏ ‏أَجْمَعَ أَوْ كَمَا قَالَ ‏

உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார்.

நான் அவரிடம், “நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!என்று கூறியபோது அவர் கூறினார்: நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

தங்களது இல்லங்கள் மஸ்ஜிதிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதை எண்ணி பள்ளிக்கு அருகிலேயே தங்களது இல்லங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த வெகுமதியை வழங்கினார்கள். பள்ளியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அவர்களது செயலேட்டில் எழுதப்படும் என்பதையும், பள்ளியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட அதிகமான எட்டுக்கள் வீணடிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.

عَنْ جابرٍ – رَضْيَ اللهُ عَنْه - قَالَ: أرادَ بنو سَلِمةَ أنْ ينتَقِلوا قُرْبَ المسْجِدِ فبلَغَ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم، فقالَ لهم: «إنَّه قد بلَغني أنَّكُمْ تريدونَ أنْ تَنتقِلوا قُرْبَ المسْجِدِ؟» فَقَالوا: نَعَمْ يا رسولَ اللهِ قد أرَدْنا ذلك، فقَالَ: «بَنِي سَلِمَةَ دِيارَكُمْ تُكْتَبْ آثارُكمْ، دِيارَكُمْ تُكْتبْ آثارُكُمْ» رواه مسلم

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஸ்ஜிதுந் நபவியைச் சுற்றியிருந்த இடங்கள் காலியானபோது பனூ ஸலமா குலத்தவர்கள் தங்களது வீடுகளை மஸ்ஜிதுக்கு அருகில் மாற்றிக்கொள்ள விரும்பினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியவந்தபோது அவர்களிடம், “நீங்கள் மஸ்ஜிதுக்கு அருகில் வீடுகளை மாற்றிக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என கேள்விப்பட்டேனேஎன்றார்கள். அவர்கள் ஆம் இறைத்தூதரே! நாங்கள் விரும்பினோம்என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் பனூ ஸலமாவே! உங்கள் (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படுகின்றன, (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படுகின்றனஎன்று கூறினார்கள். பனூ ஸலமா குலத்தினர் மஸ்ஜிதின் அருகே வீடுகளை மாற்றிக் கொள்வதில் எங்களுக்கு விருப்பமில்லைஎன்று கூறிவிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இமாம் ஸயீதுப்னுல் முஸய்யிப் (ரலி) அவர்கள் முப்பதாண்டு காலமாக மஸ்ஜிதில் எவருடைய பிடரியையும் பார்த்ததேயில்லை. அவர்கள் பாங்கு சொல்லப்படும் முன்பே முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். இஸ்லாமிய வரலாறு ஸயீது (ரலி) போன்ற பல உதாரணங்களைக் கண்டிருக்கிறது.

பொக்கிஷம் 3:- ரமழான் 30 நாட்கள் கல்வியைக் கற்போம்! & கல்வியைக் கற்றுக் கொடுப்போம்!! 30 ஹஜ் செய்த நன்மைகளைப் பெறுவோம்!!

روى أبو أمامة أن رسول الله صلى الله عليه وسلم قال

 ((من غَدا إِلَى الْمَسْجِد لَا يُرِيد إِلَّا أَن يتَعَلَّم خيرًا أَو يُعلمهُ، كَانَ لَهُ كَأَجر حَاج تَامًّا حجَّته)

ஒருவர் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கமின்றி மஸ்ஜிதின் பக்கம் வந்தால் அவருக்கு பரிபூரணமாக ஹஜ்ஜை நிறைவேற்றியவரின் கூலி போன்று கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி), நூல்: ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீப் )

அன்றிலிருந்து இன்று வரை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ்ஜிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிறுவர்கள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இந்த ஆசை உண்டு. வாய்ப்பு கிடைத்தவர்கள் அங்கு சென்று விடுகிறார்கள்.

ஆனால் பல பேருக்கு பொருளாதாரத்தின் காரணமாகவோ அல்லது உடல் நிலையின் காரணமாகவோ இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

ஆனால் இஸ்லாம் இதற்கு சிறந்த வழியை நமக்குச் சொல்லித் தருகிறது. பணம் செலவில்லாமல் பயணம் செய்யாமல் ஊரில் இருந்தபடியே ஹஜ் செய்த நன்மையை பெற வேண்டுமா? மகத்தான கூலியை பெற வேண்டுமா? ஜமாஅத் தொழுகையில் முழுமையாக பெங்கேற்க முயற்சி செய்யுங்கள்!! கல்வியை கற்பதற்கு முயற்சி செய்யுங்கள்!!

ஒரு மனிதர் ஹஜ் செய்தால் அவருடைய பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பிறந்த பாலகனைப் போன்று மாறிவிடுவார் என்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கிறோம். இந்த அளவிற்கு சிறப்புப் பெற்ற ஹஜ்ஜை நிறைவேற்றினால் என்ன கூலி கிடைக்குமோ அதே கூலியை கல்வி கற்பதின் மூலமும் கற்பிப்பதின் மூலமும் நாம் பெறலாம் என்றால் ஜமாஅத் தொழுகையும், கல்வியைக் கற்பதும், கற்றுக் கொடுப்பதும் எந்த அளவிற்கு சிறப்பு பெற்றது?  என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

(ஒரு மனிதரிடம் ஹஜ் செய்வதற்கு ஏற்ற பொருளாதார வசதியும் உடல் வலிமையும் இருந்தால் அவர் கட்டாயம் ஹஜ் என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும்).

பொக்கிஷம் 4:- ரமழானில் 30 நாட்கள் 12 ரக்அத்கள் தொழுவோம்! சுவனத்தில் 30 வீடுகளைப் பெறுவோம்!!

 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ – يَعْنِى سُلَيْمَانَ بْنَ حَيَّانَ – عَنْ دَاوُدَ بْنِ أَبِى هِنْدٍ عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ قَالَ حَدَّثَنِى عَنْبَسَةُ بْنُ أَبِى سُفْيَانَ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ بِحَدِيثٍ يُتَسَارُّ إِلَيْهِ قَالَ سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ صَلَّى اثْنَتَىْ عَشْرَةَ رَكْعَةً فِى يَوْمٍ وَلَيْلَةٍ بُنِىَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِى الْجَنَّةِ قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. وَقَالَ عَنْبَسَةُ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ.

وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ. وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது. உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை” என்று. இந்த ஹதீஸை அறிவிக்கும் அம்பஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை” என்று.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அம்ர் இப்னு அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பஸா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை” என்று. இந்த ஹதீஸை அறிவிக்கும் நுஃமான் இப்னு ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் இப்னு அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை” என்று. ( நூல்: முஸ்லிம்:1319 )

12 ரக்அத்கள் எவை?.

சுப்ஹ் தொழுகைக்கு முன் 2 ரக்அத், ளுஹர் தொழுகைக்கு முன் 4 ரக்அத், ளுஹர் தொழுகைக்குப் பின்னர் 2 ரக்அத், மக்ரிப் தொழுகைக்குப் பின்னர் 2 ரக்அத், இஷா தொழுகைக்குப் பின்னர் இரண்டு ரக்அத்களாகும்.

உலகில் ஒரு வீடு வாங்குவது என்பது எவ்வளவு தேவையோ அதை விடப் பன்மடங்காக இறைநம்பிக்கையாளர்களாக உள்ள நாம், சுவன பூமியில் நமக்கென ஒரு வீட்டை அமைத்திடும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும். அல்லாஹ்வும் மறுமையில், சுவனத்தில் மாளிகைகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறான்.  

تَبٰـرَكَ الَّذِىْۤ اِنْ شَآءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّنْ ذٰ لِكَ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ وَيَجْعَلْ لَّكَ قُصُوْرًا‏

அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக எற்படுத்துவான்.  அவற்றின் கீழ் இப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மளிகைகளையும் எற்படுத்துவான். ( அல்குர்ஆன்: 25:10 )

வானுயர்ந்த அரச மாளிகையைக் காட்டிலும் இறைவனின் சுவனத்தில் உள்ள வீடே சிறந்தது என்பதை உணர்ந்து தன் விருப்பத்தை அல்லாஹ்விடம் பிரார்த்தனை மூலம் முறையிட்ட  ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (அலை) அவர்கள் முஃமின்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்கள்.

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

‘‘என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கு ஒரு வீட்டை எழுப்புவாயாக’’ என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். ( அல்குர்ஆன்: 66: 11 )

இப்பெண்மணியின் வாழ்க்கையும், அவர் கேட்ட துஆவும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு முன்னுதாரணம் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாராட்டி அல்குர்ஆனில் பதிவு செய்கிறான்

மேலும் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட  நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கும்  இறைவன் சுவன வீடு குறித்து சோபனம் சொன்னதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.  அதில் பிரதானமாக கதீஜா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

في هذا الحَديثِ أنَّ رجُلًا سَأَلَ عبدَ اللهِ بنَ أبي أوْفَى رَضيَ اللهُ عنه عن الذي قالَه النبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ في خَديجةِ رَضيَ اللهُ عنها، فأخْبَر أنَّ النبيَّ صلَّى اللهُ عليه وسلَّمَ قال: «بَشِّروا خَديجةَ ببَيتٍ في الجنَّةِ مِن قَصَبٍ»، أي: قصْرٍ في الجنَّةِ مِن لُؤلؤٍ مُجوَّفٍ ويَاقوتٍ، «لا صخَبَ فيه ولا نَصَبَ»،

இஸ்மாயீல் பின் அபீ காலித் கூறியதாவது: “அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் சொன்னார்களா?’’ என்று நான் கேட்டேன். அவர்கள், “ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி சொன்னார்கள்)’’ என்று பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி 3819 முஸ்லிம் 4818 )

قال أبو هريرة رضي الله عنه: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم؛ إِذْ قَالَ: "بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، فَقُلْتُ: لِمَنْ هَذَا القَصْرُ؟ فَقَالُوا: لِعُمَرَ بْنِ الخَطَّابِ. فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا، فَبَكَى عُمَرُ وَقَالَ: أَعَلَيْكَ أَغَارُ يَا رَسُولَ اللهِ"

நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்த போது அவர்கள், ‘‘நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். உமர் இப்னு கத்தாப் அவர்களுடையதுஎன்று பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்’’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’  என்று கேட்டார்கள். ( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3242, முஸ்லிம் 4767.  )

பொக்கிஷம் 5:- ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்போம்! ஜனாஸாவைப் பின் தொடர்ந்து மண்ணறை வரை செல்வோம்! 60 உஹத் மலையளவு நன்மையைப் பெறுவோம்!!

وروى مسلم (945) عن سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله عنه أَنَّهُ كَانَ قَاعِدًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما إِذْ طَلَعَ خَبَّابٌ ، فَقَالَ : يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ، أَلا تَسْمَعُ مَا يَقُولُ أَبُو هُرَيْرَةَ ! أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَنْ خَرَجَ مَعَ جَنَازَةٍ مِنْ بَيْتِهَا وَصَلَّى عَلَيْهَا ثُمَّ تَبِعَهَا حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ مِنْ أَجْرٍ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ كَانَ لَهُ مِنْ الأَجْرِ مِثْلُ أُحُدٍ ) فَأَرْسَلَ ابْنُ عُمَرَ خَبَّابًا إِلَى عَائِشَةَ يَسْأَلُهَا عَنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ فَيُخْبِرُهُ مَا قَالَتْ ، وَأَخَذَ ابْنُ عُمَرَ قَبْضَةً مِنْ حَصْبَاءِ الْمَسْجِدِ يُقَلِّبُهَا فِي يَدِهِ حَتَّى رَجَعَ إِلَيْهِ الرَّسُولُ ، فَقَالَ : قَالَتْ عَائِشَةُ : صَدَقَ أَبُو هُرَيْرَةَ ، فَضَرَبَ ابْنُ عُمَرَ بِالْحَصَى الَّذِي كَانَ فِي يَدِهِ الأَرْضَ ثُمَّ قَالَ : لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ ) .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்ற ஒருவர் (அதை அடக்கம் செய்யும்வரை) பின் தொடர்ந்து செல்லவில்லையானால், அவருக்கு ஒரு கீராத்” (நன்மையே) உண்டு; அதை (அடக்கம் செய்யும்வரை) பின்தொடர்ந்தால் அவருக்கு இரண்டு கீராத்கள் (நன்மை) உண்டுஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் இரண்டு கீராத்களில் மிகச் சிறிய அளவு, உஹுத் மலை அளவாகும்என்று விடையளித்தார்கள். ( நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1724,1725,1726 )

 ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) இந்த ஹதீஸ் குறித்து ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவியபோது அவர்களும் ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) கூறியது உண்மையான செய்திதான் என்றதும், ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) நாம் காரணமே  இல்லாமல் வீணாக பலகீராத் நன்மைகளை இழந்து விட்டோமே என ஏக்கத்தோடு சொன்னார்கள்  – (ஜாமிவுத்திர்மிதி )

பொக்கிஷம் 6:- ரமழான் 30 நாட்கள் நோயாளியை காலை & மாலை நலம் விசாரிப்போம்!! 4,200,000 வானவர்களின் துஆவைப் பெறுவோம்!!

عَنْ عَلِيٍّ رضي الله عنه أنه قَالَ: سَمِعْت رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِما غُدْوَةً إلا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ عَادَهُ عَشِيَّةً إلا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ، وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ»؛ (رواه الترمذي).

நபி {ஸல்} கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். ( அறிவிப்பாளர்: அலி (ரலி)  நூல்: திர்மிதி )

பொக்கிஷம் 7:- ரமழான் 30 நாட்கள் இரவுத் தொழுகையில் 1000 வசனங்கள் ஓதுவோம்! 30 குவியல்களைப் பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவோம்!!

عن عبد الله بن عمرو بن العاص قال: قال رسول الله صلى الله عليه وسلم

 "من قام بعشر آيات لم يكتب من الغافلين، ومن قام بمائة آية كتب من القانتين، ومن قام بألف آية كتب من المُقَنْطِرين".

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: எவர் இரவில் தொழுகையில் ஈடுபட்டு பத்து ஆயத்துகள் ஓதுவாரோ, அவர் அவ்விரவில் (அல்லாஹ்வை மறந்த) மறதியாளர்களில் எழுதப்படமாட்டார். எவர் நூறு ஆயத்துகளை ஓதுவாரோ, அவர் வணக்கசாலிகளின் பட்டியலில் இடம் பெறுவார். எவர் ஆயிரம் ஆயத்துகளை ஓதுவாரோ அவர் (கின்தார்) குவியலுக்குச் சமமான நன்மையைப் பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவார்”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                ( நூல்: இப்னு ஃகுஸைமா )

பொக்கிஷம் 8:- ரமழான் 30 நாட்கள் திக்ர் செய்வோம்! 6000 ஒட்டகைகள், 6000 குதிரைகள் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்த நன்மையையும், 6000 அடிமைகள உரிமை விட்ட நன்மைகளை பெறுவோம்!!

 عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم:

" مَنْ قَالَ مِائَةَ مَرَّةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ , سُبْحَانَ اللَّهِ , وَمِائَةً قَبْلَ غُرُوبِهَا كَانَ أَفْضَلَ مِنْ مِائَةِ بَدَنَةٍ

وَمَنْ قَالَ: الْحَمْدُ لِلَّهِ مِائَةَ مَرَّةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ , وَمِائَةً قَبْلَ غُرُوبِهَا كَانَ أَفْضَلَ مِنْ حُمْلَانِ مِائَةِ فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ

وَمَنْ قَالَ: اللَّهُ أَكْبَرُ مِائَةِ مَرَّةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَمِائَةً قَبْلَ غُرُوبِهَا لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَئِذٍ بِعَمَلٍ أَفْضَلَ مِنْ عَمَلِهِ وَكَانَ أَفْضَلَ النَّاسِ عَمَلًا يَوْمَ الْقِيَامَةِ , إِلَّا مَنْ جَاءَ بِمِثْلِ قَوْلِهِ أَوْ زَادَ عَلَيْهِ "
رواه النسائي في الكبرى [رقم: 10657] وغيره. [صحيح الترغيب والترهيب: رقم:658]

அம்ர் இப்னு ஷுஐபு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எவர் சூரியன் உதயமாகும் முன்னரும், சூரியன் மறையும் முன்னரும் 100 தடவை சுப்ஹானல்லாஹ் கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் 100 ஒட்டகைககளை தர்மம் செய்வதை விட சிறந்ததாகும்.

எவர் சூரியன் உதயமாகும் முன்னரும், சூரியன் மறையும் முன்னரும் 100 தடவை அல்ஹம்துலில்லாஹ் கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் 100 குதிரைகளை தர்மம் செய்வதை விட சிறந்ததாகும்.

எவர் சூரியன் உதயமாகும் முன்னரும், சூரியன் மறையும் முன்னரும் 100 தடவை அல்லாஹு அக்பர் கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் 100 அடிமைகளை உரிமை விடுவதை விட  சிறந்ததாகும். மேலும்,

"லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" என்று யார் ஒருவர் காலையில் 100 தடவையும் மாலையில் 100 தடவையும் ஓதி வருகிறாரோ
 அவர் - கியாமத் நாளில் அடைகின்ற நன்மைகளை, அதே போன்று அல்லது அதை விட அதிகமாக ஓதி வருபவர்களைத் தவிர வேறு யாரும் அடைந்திட முடியாது" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: நஸாயீ )

பொக்கிஷம் 9:- ரமழான் 30 நாட்கள் 100 முறை கடைவீதியில் சொல்வோம்! 1 லட்சம் நன்மைகள் பெறுவோம்! 1 லட்சம் பாவம் களைவோம்! 1 லட்சம் சுவன அந்தஸ்தை அடைவோம்!!

 عمر بن الخطاب  عن

 أن رسول الله صلى الله عليه  وسلم قال

 من دخل السوق فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له ألف ألف حسنة ومحا عنه ألف ألف سيئة ورفع له ألف ألف درجةوقال الترمذيحديث غريب ـ وقد اختلف في صحته كما ذكرت في السؤال فممن صححه الحاكم وقال على شرط الشيخين، والمنذري.

 قال في الترغيب: وإسناده متصل حسن ورواته ثقات أثبات وفي أزهر بن سنان خلاف، وقال ابن عدي أرجو أنه لا بأس به، 

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: கடை வீதியில் நுழையும் போது "லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லா யமூத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" என்று  எவர் ஓதுவாரோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு 1000 நன்மைகளை வழங்குகிறான். 1000 பாவங்களை அவரின் ஏட்டில் இருந்து அழித்து விடுவான். மேலும், சுவனத்தின் 1000 அந்தஸ்துகளை உயர்த்துகின்றான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ, திர்மிதீ )

நாம் நோன்பு காலங்களில் கடை வீதிக்கு பல முறை செல்லும் சந்தர்ப்பம் ஏற்படும். அந்த சந்தர்ப்பங்களில் எளிமையான இந்த திக்ரை ஓதி ஒப்பில்லா நன்மைகளை பெற முயற்சி மேற் கொள்ள வேண்டும்.

பொக்கிஷம் 10:- ரமழான் 30 நாட்கள் குர்ஆன் ஓதுவோம்!  அளவில்லா நன்மைகள் பெறுவோம்!!

أخرجه الترمذي في "سننه" (2910) ، من حديث عبد الله بن مسعود ، قال : قال صلى الله عليه وسلم :(مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لاَ أَقُولُ الْم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ).

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

குர்ஆனின் மொத்த எழுத்துக்கள் 222671 ஆகும். 3 நாட்களுக்கு ஒரு குர்ஆன் வீதம் 30 நாட்களில் 10 குர்ஆன் முடித்தால் 32,367,100 சுமார் 32 மில்லியனுக்கும் மேற்பட்ட நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.

وكان بعضهم يختم القرآن كل يوم مرة منهم الصحابي الجليل  عثمان بن عفان – رضي الله عنه ،

மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் ரமழானில் ஒவ்வொரு நாளும் ஒரு குர்ஆன் முடிப்பார்கள்.

وكان محمد بن إسماعيل البخاري - صاحب الصحيح - يختم في رمضان في النهار كلَّ يوم ختمة، ويقوم بعد التراويح كلَّ ثلاثَ ليال بختمة.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ரமழானின் ஒவ்வொரு பகலிலும் ஒரு

குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பார்கள். மேலும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தராவீஹ் தொழுகைக்கு பிறகு கியாமுல்லைல் தொழுகையில் ஒரு குர்ஆனை முழுமையாக முடிப்பார்கள்.
وكان سعيد بن جبير يختم القرآن في كل ليلتين.
ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் ரமழானின் இரண்டு இரவுகளில் ஒரு குர்ஆனை முடிப்பார்கள்.

وكان الوليد بن عبد الملك يختم في كل ثلاثٍ، وختم في رمضان سبع عشرة ختمة.

வலீத் இப்னு அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள் ரமழானின் மூன்று நாட்களில் ஒரு குர்ஆன் வீதம் பதினேழு குர்ஆன் முடிப்பார்கள். 

وكان قتادة يختم القرآن في سبع، - أي كل سبع ليالي يقرأ القرآن مرة -، وإذا جاء رمضان ختم في كل ثلاثٍ، فإذا جاء العشر الأواخر ختم كل ليلةٍ.

    இமாம் கதாதா (ரஹ்) அவர்கள் சாதாரண காலங்களில் ஏழு நாட்களில் ஒரு குர்ஆன் முடிப்பார்கள். ரமழானின் முதல் இரண்டு பத்துகளில் மூன்று நாட்களுக்கு ஒரு குர்ஆன் வீதமும், கடைசி பத்து பத்து நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு குர்ஆன் வீதம் பத்து குர்ஆன் முடிப்பார்கள். 

وقال الربيع بن سليمان - تلميذ الشافعي رحمه الله -: كان الشافعي يختم القرآن في شهر رمضان ستين ختمة، -يعني في كل ليلة يختمه مرتين- وفي كل شهر ثلاثين - أي في غير رمضان - ختمة.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் மாணவரான ரபீஉ இப்னு ஸுலைமான் (ரஹ்) அவர்கள் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் குறித்து கூறுகின்றார்கள்:- சாதாரண காலங்களில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு குர்ஆன் வீதம் முப்பது நாட்களுக்கு முப்பது குர்ஆன் முடிப்பார்கள். அதுவே ரமழான் மாதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு குர்ஆன் வீதம் அறுபது குர்ஆன் முடிப்பார்கள்.

 
وكان وكيع بن الجراح يقرأ في رمضان في الليل ختمةً وثلثاً، 

வகீஉ இப்னு அல் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஒரு குர்ஆனும் பத்து ஜுஸ்வுகளும் முடிப்பார்கள்.

وقال القاسم بن عليٍّ يصف أباه ابنَ عساكر صاحب (تاريخ دمشق): (وكان مواظباً على صلاة الجماعة وتلاوة القرآن، يختم كلَّ جمعة، أو يختم في رمضان كل يوم، ويعتكف في  جامع دمشق.

காஸிம் இப்னு அலீ (ரஹ்) அவர்கள் சாதாரண காலங்களில் ஒவ்வொரு ஜும்ஆவுக்கும் ஒரு குர்ஆன் முடிப்பார்கள். ஆனால் ரமழானில் ஒவ்வொரு நாளும் ஒரு குர்ஆன் முடிப்பார்கள்.

மேன்மக்களான ஸலஃபுகளின் ரமழான் குர்ஆன் திலாவத் இப்படி இருந்தது. நம் நிலை எப்படி இருக்கிறது?

இந்த ரமழானில் இந்த நல்லறங்களைக் கொண்டு துவங்கி, தொடர்ந்து வாழும் காலம் வரை இந்த அமல்களைக் கடைபிடிக்க முயற்சி செய்வோம்.

அல்லாஹ்வுடைய திருப்திக்கு காரணமாக இருக்கும் எந்தவொரு நற்காரியமும் பெரும் மதிப்பு வாய்ந்ததாகும். உலகில் வாழும் காலத்தில் தான் இதனை பயன்படுத்திக்கொள்ளமுடியும் . குறிப்பாக செய்து முடிப்பதில் எவ்வித சிரமுமில்லாத ஓர் நற்செயலை அலட்சியத்தாலும், பொடுபோக்காலும் விட்டுவிடுவது என்பது எத்தனை பாரதூரமான விஷயம் என்றால் அதனால் மறுமையில் ஏற்படும் கைசேதத்திற்கே அளவே இருக்காது , அதை நம்மால் தாங்கிக்கொள்ளவே இயலாது.

எனவே எந்த அமல்களை செய்வதில் பெரிய முயற்சி தேவை படாமல் அதிக நேரமும் செலவாகாமல் சிறிது கவனத்தோடு செயல்பட்டாலே செயல்களின் பட்டோலைகளில் நன்மைகளை பெருக்கி கொள்ளலாமோ அத்தகைய எளிமையான நற்செயல்களின் இந்த ரமலானில் நாம் தேடித் தேடி செய்ய வேண்டும். பின்னர் அதை ரமழானுக்கு பிந்தைய காலங்களில் தொடர வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ரமழானை பாக்கியமாக கழிக்கும் நற்பேற்றை நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான செய்திகள் நிகழ்காலத்திற்கு தேவையான பொக்கிஷங்கள் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு எல்லா வகையிலையும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  2. அருமையான பதிவு அல்லாஹ் உமது ஆயுளை நீட்டிப்பானாக ஆமீன்......

    ReplyDelete