ரமழான் (1444 – 2023) - தராவீஹ் சிந்தனை – 1.
கொசு அற்பமான படைப்பா? அற்புதமான படைப்பா?
அல்லாஹ்வின் மகத்தான
கருணையினால் ரமழானை அடைந்துள்ளோம்.
முதல் நாள் தராவீஹ்
தொழுகையை நிறைவு செய்து
விட்டு முதலாவது நோன்பை
நோற்பதற்கு ஆவலோடும், ஆசையோடும்
காத்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த ஆண்டின்
ரமழான் மாதத்தின் 30 நாட்களிலும்
நோன்பு நோற்கிற தராவீஹ்
தொழுகிற, இன்னபிற நன்மையான
நல்லறங்களில் ஆசையோடும், ஆர்வத்தோடும்
ஈடுபடுகிற நல்ல நஸீபை
நம் அனைவருக்கும் தந்தருள்
புரிவானாக! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!!
سبب نزول هذه الآية أن الله تعالى لما ضرب المثل بالذباب
والعنكبوت فقال
{إن الذين تدعون من دون الله لن
يخلقوا ذباباً ولو اجتمعوا له} [73-الحج]، وقال
{مثل الذين اتخذوا من دون الله
أولياء كمثل العنكبوت اتخذت بيتاً}
قالت اليهود
"ما أراد الله بذكر هذه
الأشياء الخسيسة؟"
قال المشركون
إنا لا نعبد إلهاً يذكر مثل هذه الأشياء"
فأنزل الله تعالى
إن الله لا يستحيي أن يضرب
مثلاً ما بعوضة فما فوقها
وفي الآية الأخرى: {مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ
أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنكَبُوتِ} [العنكبوت:41]، مرة الذباب، ومرة
العنكبوت، فقال الكفار: ما شأن هذا الذي ينزل على محمد؟! أيذكر الله الذباب
والعنكبوت؟! الله أعلى وأجل، هذا الكلام لا يشبه كلام رب العالمين، ربنا عظيم فلا
يتكلم عن الذباب والعنكبوت، فأنزل الله هذه الآية: {إِنَّ اللَّهَ لا يَسْتَحْيِي
أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضَةً فَمَا فَوْقَهَا} [البقرة:26].
மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம்
கூறப்படுகிறது. அதைச் செவி தாழ்த்தி கேளுங்கள். ஏக இறைவனையன்றி நீங்கள் யாரை
அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க
முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து
அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக
இருக்கிறார்கள்". ( அல்குர்ஆன்: 22: 73 )
இன்னுமொரு இடத்தில்.... "ஏக இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக்
கொண்டோருக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொள்கிறது. ஆனால், வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும்
பலஹீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?". ( அல்குர்ஆன்: 29: 41 )
இறைமறையில் இரண்டு இடங்களில் மக்காவின் இணை
வைப்பாளர்களைக் குறித்து கேள்வி கேட்டு
இறை வசனங்கள் இறக்கியருளப்பட்ட போது. இதனால் ஆத்திரமடைந்த மக்கா முஷ்ரிக்குகள் நபி (ஸல்) அவர்களிடம் "உதாரணத்துக்கு உங்கள் இறைவனுக்கு வேறு
உயிரினங்கள் கிடைக்கவில்லையா?
அற்பமான
ஈயையும் சிலந்திப் பூச்சியையும் உதாரணமாகக் காட்டுகிறானே?' என்று பரிகாசம் செய்தனர்.
அப்போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின்
பரிகாசத்திற்கும், கிண்டலுக்கும் மறுப்பு
தெரிவிக்கும் வகையில் இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல்பகரா அத்தியாயத்தின் கீழ் கண்ட 26 – ம் வசனத்தை இறக்கினான்.
إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضَةً
فَمَا فَوْقَهَا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ
رَبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ
بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ
بِهِ إِلَّا الْفَاسِقِينَ
'கொசுவையோ
அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற இறைவன் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் 'இது தமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர்.' ( அல் குர்ஆன்: 2: 26 )
அதாவது மனிதர்கள் நேர் வழி பெற வேண்டும்
என்பதற்காக எந்த அற்ப உயிரினங்களையும் உதாரணமாகக் கூற அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
தயங்குவதில்லை என்று இந்த வசனத்தின் ஊடாக பறை சாற்றுகின்றான்.
அல்லாஹ்வும்.. அவன் படைப்பாற்றலும்..
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் அல் காலிக், அல் பாரிவு, அல்
முப்திஉ, அல் முஸவ்விரு இந்த
திருநாமங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பாற்றலோடு தொடர்புடைய அழகிய திருநாமங்கள்
ஆகும்.
குறிப்பாக, அல்லாஹ்
தன்னை ‘அல் பாரி’ – தொடங்குபவன், படைப்பவன்
– என்று குர்ஆனில் மூன்று
முறை குறிப்பிட்டுள்ளான். சூரத்துல் ஹஷர் இறுதி வசனத்தில் ‘அல் காலிக்’, ‘அல் பாரி’
(படைப்பாளன், உண்டாக்குபவன்) மற்றும் ‘அல் முஸவ்விர்’ (ஒழுங்குபடுத்துபவன், உரு
கொடுப்பவன்) என்ற ஒன்றுக்கொன்று கருத்தில் தொடர்புடைய மூன்று பெயர்களையுமையே
அடுத்தடுத்து குறிப்பிடுகின்றான்.
இவை அல்லாஹ்வின் தன்மையான படைப்பாளன் என்ற
முறையில் அவன் நிலைகளைக் குறிப்பிடுகின்றன. அவனைத் தவிர, பிரபஞ்சத்தில் உள்ள மற்றவை அனைத்தும்
படைப்புகள்.
அறிஞர்களிடையே இந்த சொல்லின் மூல
வார்த்தையைப்பற்றி கருத்து வேறுபாடு உள்ளது. சிலர், ‘ஏதாவது ஒன்றிலிருந்து விலகி அல்லது தூரமாக இருத்தல் பாரிஆ
என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் படைப்பு என்று பொருள்படும் பரீஆ என்று
சொல்கிறார்கள். அல்லாஹ்வின் அழகிய திருப் பெயர்கள் என்ற நிலையில் பார்க்கும்போது "அவன் படைப்பவன், தொடங்குபவன், உயிரினங்களுக்கிடையே
ஒன்றுக்கொன்று வேறுபாடு இருப்பதற்க்காக அவைகளுக்கு தனிப்பட்ட குணங்களைக்
கொடுத்திருப்பவன்" என்று பொருள் படும்.
படைப்புகளின் வகைகள்..
அல்லாஹ்வின் படைப்புகளை
நான்கு வகையாக பிரிக்கலாம். முதல் வகை படைப்புகள்:- வானம், சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள்
மற்றும் விண்வெளியில் சுற்றிவரும் பிற கோள்கள், மழை, இடி, மின்னல்
இரண்டாம் வகை படைப்புகள்:- பூமி, கடல், நதிகள், மலை, வனம், மணல், காற்று. மூன்றாம் வகை படைப்புகள்:-, மலக்குகள் மற்றும் ஜின்கள். மலக்குகளை
ஒளியினாலும், ஜின்களை கொழுந்து விட்டு
எரியும் நெருப்பு ஜூவாலைகளாலும் இறைவன் படைத்தான்.
நான்காம் வகை படைப்புகள்:- உயிரினங்கள்.
இதில் மனிதன், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், நீரில் வாழ்வன, என பூமியில் மட்டுமின்றி
இந்த பேரண்டத்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் இறைவன் படைத்தான்.
இந்த நான்கு வகை படைப்புகளும் இறைவனின்
கட்டளைப்படியே இந்த உலகில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அவனின்
கட்டளைக்கிணங்க, தங்கள் வாழ்க்கையை
அமைத்துக்கொள்கின்றன.
பூமியில் வாழும்
உயிரினங்கள் எவ்வளவு?
பூமியின் மீது வாழும் உயிரினங்கள் மொத்தம்
எத்தனை? உயிரியல் வல்லுனர்கள் முன்
இருக்கும் மிகப் பெரிய னர்கள் முன் இருக்கும் மிகப் பெரிய சவால்களுள் இதை
கண்டறிவதும் ஒன்று. சமீபத்தில் ஓர் ஆய்வு, உலகில்
1 லட்சம் கோடி ஒரு
ட்ரில்லியன்) உயிரினங்கள் இருக்கலாம் என்று, இந்த
ஆய்வுக் குழுவினர் மதிப்பிட்டுள்ளனர்.
உலகெங்கும் அரசாங்கங்கள், கல்வி அமைப்புகள் சேமித்த பிரம்மாண்டமான
புள்ளிவிவர களஞ்சியங்களை தொகுத்து ஒரு முடிவுக்கு வர
அமெரிக்காவிலுள்ள இந்தியானா பல்கலைக்கழக உயிரியல் வல்லுனர்கள் சமீபத்தில் முயற்சி
செய்துள்ள ஆய்வுக்குழுவில் பங்கேற்ற இந்தியானா பல்கலைக்கழக துணை பேராசிரியர்
ஜே.டி.லென்னான் அவர்கள் "உலகெங்கும் உள்ள, 35 ஆயிரம் இடங்களிலிருந்து, 56 லட்சம் நுண்ணுயிரிகள் மற்றும் நுண்ணுயிரிகள் அல்லாதவை
பற்றிய தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள்
ஆகியவற்றைப் பற்றிய தகவல்களும் அடங்கும்.
ஆய்வின் முடிவில் உலகில் 1 லட்சம் கோடி உயிரினங்கள் இருப்பதாக
கண்டறிந்தோம். உண்மை என்னவென்றால் உலகில் 99.99 சதவீத உயிரினங்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் நமக்கு
தெரியாது என்பதையும் கண்டறிந்தோம்.
எங்கள் ஆய்வு இதுவரை இல்லாத அளவுக்கு
மிகப்பெரிய புள்ளிவிவர தொகுப்பை கணக்கில் எடுத்துக்கொண்டது. புதிய சூழலியல்
மாதிரிகள் மற்றும் பல்லுயிர்தன்மை குறித்த புதிய விதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டு
கறாராக
இந்த மதிப்பீட்டை செய்திருக்கிறோம். ஆனாலும், இந்த
கணக்கெடுப்பில் கிடைத்துள்ளதைவிட,
ஒரு
லட்சம் மடங்கு நுண்ணுயிரிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பதை ஆய்வு
முடிவுகள் தெரிவிக்கின்றன,'' என்கிறார் லென்னான்.
நோக்கமில்லாமல் எந்த
படைப்பும் இல்லை...
அந்த வகையில்
அல்லாஹ் படைத்துள்ள அனைத்து படைப்புகளும் அர்த்தமுள்ள மகத்தான ஒரு
நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளதாக குர்ஆன் சான்று வழங்குகிறது.
உதாரணத்திற்கு
காகங்களை நாம் எடுத்துக் கொண்டால் காகங்கள் சுற்றுப் புறச் சூழலை சுத்தம்
செய்வதில் மகத்தான பங்களிப்பை செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு காகம் தன்
ஆயுளில் சுமார் 30,000
மரங்களை நடுவதாக அந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
அப்படியான
உயிரினங்களில் பூச்சி வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் குறித்து இன்று ஓதப்பட்ட அல்
பகரா அத்தியாயத்தின் 22
ம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
உலகில் சுமார் 1.3 மில்லியன் பூச்சி இனங்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அந்த இனங்களில் ஒன்று
தான் "கொசு".
அற்பமான அந்த கொசு
அல்லாஹ்வின் அற்புதமான ஆற்றலைச் சுமந்து நிற்கும் மகத்தான சான்றுகளில் ஒன்று
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
البعوضة
هذا المخلوق الضعيف العجيب .. الله سبحانه وتعالى عندما ضرب مثلا بعوضة، فهو ليبين
للناس أن هذا المخلوق الصغير في حجمه عظيم في خلقه.
* إليكم هذه المعلومات عنها:
1. هي أنثى
2. لها مائة عين في رأسها
3. لها في فمها 48 سن
4. لها ثلاث قلوب في جوفها بكل أقسامها
5. لها ستة سكاكين في خرطومها ولكل واحدة وظيفتها
6. لها ثلاث أجنحة في كل طرف
7. مزودة بجهاز حراري يعمل مثل نظام الأشعة تحت الحمراء
وظيفته:
يعكس لها لون الجلد البشري في الظلمة إلى لون بنفسجي حتى تراه.
8. مزودة بجهاز تخدير موضعي يساعدها على غرز إبرتها دون
أن يحس
الإنسان وما يحس به كالقرصة هو نتيجة مص الدم
..
9. مزودة بجهاز تحليل دم فهي لا تستسيغ كل الدماء.
10. مزودة بجهاز لتمييع الدم حتى يسري في خرطومها الدقيق جدا.
11. مزودة بجهاز للشم تستطيع من خلاله شم رائحة عرق الإنسان من
مسافة تصل الى (60) كم.
12. واغرب ما في هذا كله أن العلم الحديث اكتشف أن فوق ظهر البعوضة
1. அது பெண்கொசு. 2. அதற்கு அதன் தலையில் 100
கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள். 4.
அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள். 6. அவை
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு
பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி
போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி
அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து
இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய
நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது.
9. மனித மூளையே
வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல்
உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படி பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து
கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த
வாசனையை 60
மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து
கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
تعيش
حشرة صغيرة جداً لا تُرى الا بالعين المجهرية وهذا مصداق لقوله تعالى: (إِنَّ
اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا .. )
11. இவை
எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு
மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
ஆதலால் தான்
அல்லாஹ் இவ்வசனத்தை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட
அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்குர்ஆன்: 2: 26 )
اَلَا يَعْلَمُ مَنْ خَلَقَؕ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ
(அனைத்தையும்) படைத்தவன்
அறிய மாட்டானா?
அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன். ( அல் குர்ஆன்: 67: 14 )
إِنَّ فِي اخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللَّهُ فِي
السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَّقُونَ
“நிச்சயமாக இரவும்,பகலும் மாறி வருவதிலும், வானங்களிலும்,பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள அனைத்திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப)
அத்தாட்சிகள் இருக்கின்றன.”
( அல் குர்ஆன்: 10:
6 )
இன்றைய சிந்தனையாக
நாம் இந்த வசனத்தில் இருந்து பின் வரும் விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.
இன்றைய நவீன
விஞ்ஞானமும்,
அறிவியலும், கண்டுபிடிப்புகளும் அகில
உலகத்தை படைத்த படைப்பாளன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையிலிருந்து
நம்மை விலக வைக்க முயற்சி மேற்கொள்ளும் இக்காலத்தில், அல்லாஹ்வை மட்டுமே ஏகன் என்றும் அவனே இந்த உலகைப் படைத்து பரிபாலனம்
செய்கிறான் என ஏற்றுக்கொண்டவர்களான நம் வாழ்வில் இந்த வசனம் ஏற்படுத்தும்
தாக்கத்தினால் நம்முடைய நம்பிக்கை உறுதியாகும்.
எவர்
"அல்லாஹ்வின் ஆற்றலை உண்மையில் எவர் புரிந்து கொண்டாரோ அவர், படைப்பாளனின் மகத்துவத்தை உணர்ந்து அஞ்சி, தன்னுடைய முக அழகு, உடலமைப்பு அல்லது உருவ அமைப்பில், தன் வாழ்வின் உயர்வில்
தனக்கு எதுவும் பங்கு இருப்பதாக சொல்லிக் கொள்வதிலிருந்து விலகிக்கொள்வார்".
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஹக்கை
ஹக் என்று விளங்கி அவனை உண்மை படுத்தி வாழும் மேன்மக்களில் ஒருவராக ஆக்கியருள்வானாக!!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment