கண்ணியமும்… இழிவும்…
ரமழான் – (1444 – 2023) தராவீஹ் சிந்தனை:- 3.
மூன்றாம் நாள்
தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, இரண்டாம் நாள் நோன்பை
நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமும், ஈமானுக்கு உரமும் தருகிற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில்
அமர்ந்திருக்கின்றோம்.
இன்று ஓதப்பட்ட
ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 26 –ம் வசனம்
பின்வருமாறு பேசுவதை அவதானிக்க முடிகின்றது.
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ
وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ
تَشَآءُ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு
ஆட்சியைக் கொடுக்கின்றாய்;
இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும்
விடுகிறாய்;
நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன்
கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக
இருக்கின்றாய்.”
( அல்குர்ஆன்: 3: 26 )
இந்த இறைவசனம்
பல்வேறு விளக்கங்களை கொண்டதாகும் என தஃப்ஸீர் கலை மேதை இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ (ரஹ்) அவர்கள்.
தான் நாடியோருக்கு
ஆட்சி அதிகாரத்தை தருவதும் பின்னர் பறித்துக் கொள்வது, கண்ணியத்தை தருவது இழிவைத்தை தருவது அல்லாஹ்வின் கையில் உள்ள காரியங்கள் என்று
அல்லாஹ் கூறுகிறான்.
குறிப்பாக கண்ணியம்
என்பதும் இழிவு என்பதும் ஒரு முஃமின் மிகவும் கவனிக்க வேண்டிய அம்சங்கள் ஆகும்.
முதலில் இந்த இறைவசனம்
இறக்கியருளப்பட்டதன் பின்னணியைப் பார்ப்போம்.
قال
عمرو بن عوف: كنت أنا وسلمان وحذيفة ونعمان بن مقرن المزني وستة من الأنصار في
أربعين ذراعاً، فحفرنا حتى إذا كنا بجبّ ذي ناب، أخرج الله من بطن الخندق صخرة
مروة كسرت حديدنا وشقّت علينا، فقلنا: يا سلمان ارقَ إلى رسول الله(ص) وأخبره خبر
هذه الصخرة، فإما أن نعدل عنها، فإن المعدل قريب، وإما أن يأمرنا فيها بأمره، فإنا
لا نحب أن نجاوز خطه. قال: فرقي سلمان إلى رسول الله وهو ضارب عليه قبة ركية،
فقال: يا رسول الله، خرجت صخرة بيضاء مروة من بطن الخندق فكسرت حديدنا وشقّت علينا
حتى ما يحتك فيها قليل ولا كثير، فمرنا فيها بأمرك، فإنا لا نحب أن نجاوز خطك،
قال: فهبط رسول الله(ص) مع سلمان الخندق والتسعة على شفة الخندق، فأخذ رسول الله(ص)
المعول من يد سلمان فضربها به ضربةً صدعها وبرق منها برق أضاء ما بين لابتيها حتى
كان لكأن مصباحاً في جوف بيت مظلم، فكبر رسول الله تكبيرة فتح، وكبّر المسلمون، ثم
ضربها رسول الله الثانية فكسرها، وبرق منها برق أضاء ما بين لابتيها حتى لكأن
مصباحاً في جوف بيت مظلم، فكبر رسول الله1 تكبيرة فتح وكبّر المسلمون، ثم ضربها
رسول الله(ص) الثالثة فكسرها، فبرق منها برق أضاء بها ما بين لابتيها حتى لكأن
مصباحاً في جوف بيت مظلم، فكبر رسول الله تكبير فتح وكبّر المسلمون، وأخذ بيد
سلمان ورقي، فقال سلمان: بأبي أنت وأمي يا رسول الله، لقد رأيت شيئاً ما رأيت منك
قط، فالتفت رسول الله(ص) إلى القوم وقال: رأيتم ما يقول سلمان؟ قالوا: نعم يا رسول
الله، قال: ضربت ضربتي الأولى فبرق الذي رأيتم أضاءت لي منها قصور الحيرة ومدائن
كسرى كأنها أنياب الكلاب، فأخبرني جبرائيل أن أمتي ظاهرة عليها، ثم ضربت ضربتي
الثانية، فبرق الذي رأيتم أضاءت لي منها قصور الحمر من أرض الروم كأنها أنياب
الكلاب، وأخبرني جبرائيل أن أمتي ظاهرة عليها، ثم ضربت ضربتي الثالثة فبرق الذي
رأيتم أضاءت لي منها قصور صنعاء كأنها أنياب الكلاب، وأخبرني جبرائيل أن أمتي
ظاهرة عليها، فأبشروا، فاستبشر المسلمون وقالوا: الحمد لله موعد صدق وعدنا النصر
بعد الحصر، فقال المنافقون. ألا تعجبون يمنّيكم ويعدكم الباطل ويخبركم أنه يبصر من
يثرب قصور الحيرة ومدائن كسرى وأنها تفتح لكم وأنتم إنما تحفرون الخندق من
الفَرَقَ ولا تستطيعون أن تبرزوا، فنزل القرآن {وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ
وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلاَّ
غُرُوراً}[الأحزاب:12]، وأنزل الله في هذه القصة: {قُلِ اللَّهُمَّ مَالِكَ
الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَآءُ
وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى
كُلِّ شَىْءٍ قَدِيرٌ} الآية. رواه الثعلبي بإسناده عن عمرو بن عوف].
அம்ர் இப்னு
அவ்ஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நானும், ஸல்மான் ரலி ,
ஹுதைஃபா ரலி நுஃமான் இப்னு முக்ரின் ரலி மற்றும் ஆறு
முஹாஜிர் தோழர்களும்
அகழ் யுத்தத்தின் போது அகழ் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது அல்லாஹ் அந்த பகுதியில் எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத வெண்மையான ஒரு பாறையை வெளிப்படுத்தினான். அதை
நாங்கள் கடப்பாரை கொண்டு அடித்த போது எங்கள் கடப்பாரை உடைந்து போனது. எங்களுக்கு அகழ் தோண்டுவதற்கு சிரமமாகவும் இருந்தது. ஆகவே, ஸல்மானிடம் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நபி ஸல் அவர்களை
அழைத்து வருமாறு கூறினோம்.
அவரும் சென்று நபி
ஸல் அவர்களிடம் விஷயத்தை சொல்லி நபி (ஸல்) அவர்களை அழைத்து வந்தார். அப்போது
நாங்கள் அது குறித்து நபி {ஸல்} அவர்களிடம் முறையிட்டோம்.
நபி {ஸல்}
அவர்கள் அங்கு வந்து நாங்கள் தோண்டும் இடத்தில் இறங்கி, ஸல்மான் ரலி அவர்களின் கையில் இருந்த சம்மட்டியை வாங்கி (பிஸ்மில்லாஹ் சொல்லி)
பாறையின் மீது சம்மட்டியை (அ) கடப்பாறையை தூக்கி ஓர் அடி அடித்தார்கள். பாறையில்
இருந்து வெண்மையான ஒளிக் கீற்று வெளிப்பட்டது கடுமையான இருளில் வெளிச்சம்
படர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த ஒளி. அப்போது ஆச்சர்ய
மேலீட்டால் நபி {ஸல்}
அவர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள். மக்களும் தக்பீர் கூறினார்கள். “ஷாம் தேசப் பொக்கிஷங்கள்
எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கின்றேன்” என்றார்கள்
இரண்டாவதாக, (பிஸ்மில்லாஹ் சொல்லி ) பாறையின் மீது சம்மட்டியை (அ) கடப்பாறையை தூக்கி ஓர் அடி
அடித்தார்கள். முன்பு போன்றே ஒளிக்கற்றை வெளிப்பட்டது இப்போதும் ஆச்சர்ய
மேலீட்டால் நபி {ஸல்}
அவர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள். பின்னர், மக்களும் தக்பீர் கூறினார்கள். “பாரசீகத்தின் தேசப் பொக்கிஷங்கள்
எனக்கு அருளப்பட்டன. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது அங்குள்ள மதாயின்
நகரத்து வெள்ளை மாளிகைகளைப் பார்க்கின்றேன்”. என்றார்கள். பாறை
இன்னும் கொஞ்சம் உடைந்தது.
மூன்றாவதாக, “(பிஸ்மில்லாஹ் சொல்லி) பாறையின் மீது சம்மட்டியை (அ) கடப்பாறையை தூக்கி ஓர் அடி அடித்தார்கள். முன்பு
போன்றே ஒளிக்கற்றை வெளிப்பட்டது இப்போதும் ஆச்சர்ய மேலீட்டால் நபி {ஸல்}
அவர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள். மக்களும்
தக்பீர் கூறினார்கள். பின்னர், “யமன் தேசத்தின்
பொக்கிஷங்கள் எனக்கு
அருளப்பட்டன. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது அங்குள்ள
ஸன்ஆ நகரத்து தலைவாயில்களைப் பார்க்கின்றேன்”. என்றார்கள்.
ஒவ்வொரு
பாறையையும் உடைக்கும் போதும் நபி {ஸல்} அவர்கள் தக்பீர் கூறியது குறித்தும் எதிர்
கால வெற்றி குறித்து சோபனம் சொன்னது குறித்தும் விளக்கம் சொல்லும் போது ஜிப்ரயீல்
(அலை) அவர்கள் கூறியதாக கூறினார்கள்.
இந்த நிகழ்வைக்
கொண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைந்த போது நயவஞ்சகர்கள் கேலியும் கிண்டலும்
செய்தனர்.
அப்போது அல்லாஹ்
இரண்டு வசனங்களை இறக்கினான். அதில் ஒன்று இன்று ஓதப்பட்ட 26 வது இறைவசனம். இன்னொன்று அல் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 12 –ம் இறைவசனம்.
ஒரு முஃமினின் கண்ணியம் என்பது…
அல்லாஹ் கண்ணியம்
என்பது யாருக்கெல்லாம் சொந்தம்
எனும் இறை வசனத்தை
இறக்கியருளியதே ஒரு இறைநம்பிக்கையாளரின்
(நபித்தோழரின்) கண்ணியத்தைக் காப்பதற்கே!
அப்துல்லாஹ் இப்னு
உபை இப்னு ஸலூல் என்பவனுக்கு நபி (ஸல்) அவர்கள் மீது விரோதம் இருந்தது. காரணம்
மதீனாவின் மக்கள் அவனைத் தங்களின் தலைவராக ஏற்க இருந்த நிலையில்தான் நபிகள்
நாயகம்(ஸல்) மதீனாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். சூழல் மாறியது. மக்கள் அவனைத்
தலைவராக ஏற்கவில்லை. இதனை மனதில் வைத்திருந்த அப்துல்லாஹ் இப்னு உபை சின்ன
விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தான். மதீனாவாசிகளிடம், “நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள். நாயை நல்ல
கொழுக்க வளர்த்தால்,
அது இறுதியில் நம்மையே தின்றுவிடும். இழிவானவர்களை
மதீனாவிலிருந்து வெளியேற்ற வேண்டும். நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக்
கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்” என்று நபிகளாரைப் பற்றி அவதூறு கூறினான் அப்துல்லாஹ் இப்னு உபை.
அக்கூட்டத்தில்
இருந்த ஜைது இப்னு அர்கம் இதைக் கேட்டு நபிகள் நாயகத்திடம் அதைச் சொல்லிவிட்டார்.
உஸைது (ரலி) என்பவர்,
அப்துல்லாஹ் இப்னு உபை ஏன் நபிகளார் மீது வெறுப்புக்
கொண்டார் என்று விளக்கி நபிகளாரைச் சாந்தப்படுத்தினார். இருப்பினும் இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஆளனுப்பினார்கள். அவனிடம் அது குறித்துக் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை நபியவர்களைச்
சந்தித்து,
தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று சத்தியம் செய்து
கூறினான்.
“ஜைது இப்னு அர்கம்
பொய்யர்,
சரியாக விளங்கி இருக்கமாட்டார் அல்லது சரியாக நினைவில்
வைக்கத் தெரியாதவர்”
என்றெல்லாம் அப்துல்லாஹ் இப்னு உபைக்குச் சாதகமாகச் சிலரும்
பேசினர்.
நபிகளாரும்
அப்துல்லாஹ் இப்னு உபையை நம்பினார்கள், ஜைது இப்னு அர்கம் பொய்
சொல்வதாக எண்ணினார்கள். அப்போது அல்லாஹ் இறை வசனங்களை அனுப்பினான்.
அதில், “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்' என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம்
அல்லாஹ்வுக்கும்,
அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களுக்குமே உரியது; எனினும்,
இந்நயவஞ்சகர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்ற வசனத்தின் மூலம் ஸைது இப்னு அர்கம் சொன்னதை உண்மை என்று இறைவன்
தெளிவுபடுத்தினான்.
அதனை நபி முஹம்மது(ஸல்)
ஸைது இப்னு அர்கத்தை அழைத்து ஓதிக் காட்டினார்கள். வஞ்சகத்தை மனதில்
வைத்துப் பகைமை வளர்த்த அப்துல்லாஹ் இப்னு உபை நபிகளாரின் குடும்பத்திலேயே
குழப்பத்தை ஏற்படுத்தினான். ஸஹீஹ் புகாரி 5:65:4900, 4901, 4903, 4904, ( அல்குர்ஆன்: 63:
1-8 )
முஸ்லிமாக இருப்பதே கண்ணியம் தான்..
أخرج
الحاكم في "المستدرك" (1/61 ـ 62)عن طارق بن شهاب قال:خرج عمر بن الخطاب
إلى الشام، ومعنا أبو عبيدة بن الجراح، فأتوا على مخاضة وعمر على ناقة، فنزل عنها
وخلع خفيه فوضعهما على عاتقه، وأخذ بزمام ناقته فخاض بها المخاضة، فقال أبو عبيدة:
يا أمير المؤمنين، أأنت تفعل هذا؟! تخلع خفيك وتضعهما على عاتقيك، وتأخذ بزمام
ناقتك وتخوض بها المخاضة؟! ما يسرني أن أهل البلد استشرفوك! فقال عمر: أوه لو يقل
ذا غيرك يا أبا عبيدة جعلته نكالاً لأمة محمد !
إنا كنا
أذل قوم فأعزنا الله بالإسلام، فمهما نطلب العز بغير ما أعزنا الله به أذلنا الله.
ஹழ்ரத் உமர் ரலி
அவர்கள் சிரியாவுக்கு புறப்பட்டார்கள்.அவர்களுடன் அபூ உபைதா ரலி அவர்களும்
சென்றார்கள்.செல்லும் வழியில் ஒரு நீர் தடாகத்தை கடந்து
செல்லவேண்டியதிருந்தது.அப்போது ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து
கீழே இறங்கி,தங்களின் இரு காலுறையையும் கழட்டி தங்களின் தோழ்புஜத்தில் வைத்துக் கொண்டு,ஒட்டகத்தின் கயிற்றை பிடித்துக்கொண்டு தண்ணீரில் இறங்கி னார்கள்.
இந்த காட்சியை
பார்த்த அபூஉபைதா ரலி அவர்கள்-முஃமின்களின் தலைவரே!நீங்களா இவ்வாறு செய்கிறீர்கள்?நீங்கள் ஏன் ஒட்டகத்திலி ருந்து இறங்கினீர்?அது உங்களின் மரியாதைக்கு சரியில்லையே என்றார்.மேலும் நாட்டு மக்களெல்லாம்
உங்களை காண ஆவலாக இருக்கின்றனர்.என்றார்கள்.
அதை செவியுற்ற
ஜனாதிபதி உமர் ரலி அவர்கள்-கடும் கோபமுற்று உம்மை தவிர வேறுயாரும் இதை
சொல்லியிருந்தால் கடுமையாக தண்டித்திருப்பேன்.
கண்ணியத்தை
மக்களிடமா எதிர்ப்பார்ப்பது?
நாம் இழிவாக
இருந்தோம்,
அல்லாஹ் இஸ்லாத்தைக்கொண்டு நம்மை
கண்ணியப்படுத்திவிட்டான்.எனவே அல்லாஹ் கண்ணியம் செய்த இஸ்லாத்தை தவிர்த்து வேறு
ஒரு கண்ணியத்தை தேடினால் அது இழிவையே தரும் என்றார்கள்.
இழிவு என்பது…
உலகில் வாழும் போதும்
சரி நாளை மறுமையிலும் சரி ஒரு முஃமின் தான் இழிவடைந்து விடக்கூடாது என்று அஞ்ச வேண்டும். குறிப்பாக மறுமை நாளில் அனைத்து படைப்புகளுக்கும் முன்பாக கேவலப்பட்டு
நிற்பதை நாம் அஞ்ச வேண்டும்.
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் “இறைவனே! என்னை எழுப்பப்படும் நாளில் நீ கேவலப்படுத்தி
விடாதே! என்று பிரார்த்தித்ததாக குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ்வின், அல்லாஹ்வின் தூதரின் போதனையை புறக்கணித்தவர் இழிவு செய்யப்படுவார்..
وَمَنْ
اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ
الْقِيٰمَةِ اَعْمٰى
قَالَ
رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا
قَالَ
كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَاۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى
எனது போதனையைப்
புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத்நாளில் குருடனாக
எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன்
கேட்பான். “அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று
மறக்கப்படுகிறாய்”
என்று (இறைவன்) கூறுவான்.
(அல்குர்ஆன்: 20:
124-126 )
மறுமையின் இழிவைப் பயந்து
பதவியைத் துறந்த
நபித் தோழர்..
حَدَّثَنَا
أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ حَدَّثَنَا
إِسْمَاعِيلُ بْنُ أَبِى خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِى حَازِمٍ عَنْ عَدِىِّ
بْنِ عَمِيرَةَ الْكِنْدِىِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم-
يَقُولُ
« مَنِ اسْتَعْمَلْنَاهُ مِنْكُمْ عَلَى عَمَلٍ فَكَتَمَنَا
مِخْيَطًا فَمَا فَوْقَهُ كَانَ غُلُولاً يَأْتِى بِهِ يَوْمَ الْقِيَامَةِ ».
قَالَ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ أَسْوَدُ مِنَ الأَنْصَارِ كَأَنِّى أَنْظُرُ
إِلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اقْبَلْ عَنِّى عَمَلَكَ قَالَ « وَمَا لَكَ
». قَالَ سَمِعْتُكَ تَقُولُ كَذَا وَكَذَا. قَالَ « وَأَنَا أَقُولُهُ الآنَ مَنِ
اسْتَعْمَلْنَاهُ مِنْكُمْ عَلَى عَمَلٍ فَلْيَجِئْ بِقَلِيلِهِ وَكَثِيرِهِ فَمَا
أُوتِىَ مِنْهُ أَخَذَ وَمَا نُهِىَ عَنْهُ انْتَهَى ».
அதீ பின் அமீரா
அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்)
மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன்
வருவார்”
என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அன்சாரிகளில் ஒரு
கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான்
பார்ப்பதைப் போன்றுள்ளது –
“அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை
நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள்,
“உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்னவாறு
கூறியதை நான் கேட்டேன்”
என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு
அதிகாரியாக நியமித்தால்,
அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்)
கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர்
பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர்
விலகிக்கொள்ளட்டும்”
என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்-3743 , 3266 )
தொழாதவர்களுக்கும், இஃக்லாஸாக தொழாதவர்களுக்கும் மறுமையில் ஏற்படும் இழிவு..
இந்த உலக
வாழ்க்கையில் ஒரு மனிதன் இபாதத்கள் இல்லாமல் வாழ்ந்து விட்டால், அல்லாஹ்வை வணங்குவதற்காக அதற்குரிய வாய்ப்பை அவன் சேராமல் அவன் வாழ்ந்து
விட்டால்,
அல்லாஹ்விற்கு முன்னால் ஸுஜூது செய்வதற்குரிய வாய்ப்பை
பெறாமல் அவன் வாழ்ந்து விட்டால், நாளை மறுமையில் அவன்
அடையக்கூடிய கேவலம் இன்னல்கள் துன்பங்கள் இந்த உலகத்தில் மனிதனால் சொல்லி முடிக்க முடியாது.
يَوْمَ
يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ (42)
خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى
السُّجُودِ وَهُمْ سَالِمُونَ
கெண்டைக்காலை
விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை
அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.
அவர்களுடைய
பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
(இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்.) (அல்குர்ஆன் 68 : 42,43)
வசனத்தின் கருத்து
: நாளை மறுமையில் மஹ்ஷருடைய ஒரு காட்சியை அல்லாஹு தஆலா நமக்கு விவரித்துச்
சொல்கிறான். அல்லாஹு ரப்புல் ஆலமீன் நாளை மஹ்ஷரில் அவனுடைய அடியார்களுக்கு முன்பாக
ஒரு காட்சி தருவான். தன்னுடைய கண்ணியத்திற்குரிய உருவத்தை தனது அடியார்களுக்கு
காட்டுவான்.
அப்பொழுது அந்த
அடியார்களைப் பார்த்து கேட்பான்; நான் தான் உங்களுடைய
இறைவன் என்பதாக. அப்பொழுது அந்த அடியார்கள் சொல்வார்கள்; எங்களுக்கும் எங்களுடைய இறைவனுக்கும் இடையில் அல்குர்ஆனில் வர்ணிக்கப்பட்ட ஒரு
அடையாளம் இருக்கிறது.
அந்த அடையாளத்தைக்
கொண்டு நாங்கள் எங்கள் இறைவனை அறிந்து கொள்வோம், என்று சொல்லும்பொழுது,
ஸஹீஹ் புகாரியில் வரக்கூடிய அறிவிப்பு இந்த ஹதீஸ் நீண்ட
விவரத்தோடு வருவதை காணலாம்.
«يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا»
அப்போது அல்லாஹ் சொல்வான், ஆம்! அந்த அடையாளத்தை
நான் உங்களுக்கு காட்டப் போகிறேன் என்று தனது காலில் பிற்பகுதியில் இருந்து
கெண்டைக்காலில் இருந்து தனது ஒளியின் திரையை அகற்றுவான்.
அல்லாஹ்வுடைய
கெண்டைக்காலில் இருந்து அந்த திரையை அகற்றும் பொழுது வரக்கூடிய அந்த ஒளிக்கு
முன்னால் யாரெல்லாம் ஈமானோடு இக்லாஸோடு இந்த துனியாவில் வணங்கிக்
கொண்டிருந்தார்களோ அல்லாஹ்வை இபாதத் செய்து கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லாம்
அப்படியே அல்லாஹ்விற்கு முன்னால் சுஜூதில் விழுந்து விடுவார்கள்.
அந்த ஒளி
வெளிப்படுத்தப்படும் பொழுது, உங்கள் இறைவனுக்கு சஜ்தா
செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்கப்படும்.
அப்பொழுது
யாரெல்லாம்,
இந்த துன்யாவில் அல்லாஹ்வை மனத்தூய்மையோடு ஈமான் கொண்டு, இக்லாஸோடு இபாதத்கள் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்கள் எல்லாம் சுஜூதில் விழுந்து விடுவார்கள்.
அல்லாஹ்வுடைய
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்; யாரெல்லாம் இந்த துனியாவில் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்வதற்கு அழைக்கப்பட்ட
பொழுது, ஸுஜூது செய்யாமல் இருந்தார்களோ அல்லது சுஜூது செய்தார்கள்; ஆனால் முகஸ்துதிக்காக பெயருக்காக புகழுக்காக இபாதத் செய்து கொண்டிருந்தவர்கள், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு
கொண்டிருந்தவர்கள்,
இவர்களெல்லாம் ஸுஜூது செய்வதற்கு முயற்சிப்பார்கள்.
அவர்களால் சுஜூது
செய்ய முடியாது. அவர்கள் கீழே குனிவதற்கு முன் பக்கமாக முயற்சிக்கும் பொழுது
அவர்கள் பின்பக்கமாக விழுவார்கள். அவர்களுடைய பார்வைகள்எல்லாம் அந்நாளில்
கேவலப்படும். அவர்களை கேவலமும் அவமானமும் சூழ்ந்துகொள்ளும். (அல்குர்ஆன் 68 : 42,43) அறிவிப்பாளர் : அபூ சயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,
எண் : 4919. )
ஆட்சியும், கண்ணியமும் பறிக்கப்பட்டு இழிவுக்குள்ளான
சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி.…
لقد اختار النبي - صلى الله عليه وسلم - لحمل هذه الرسالة
إلى كسرى ملك الفرس عبد الله بن حذافة السهمي رضي الله عنه وكان نص الرسالة يقول:
"بسم الله الرحمن الرحيم من محمد رسول الله إلى كسرى عظيم فارس، سلام على من
اتبع الهدى، وآمن بالله ورسوله، وشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن
محمدا عبده ورسوله، وأدعوك بدعاية الله، فإني أنا رسول الله إلى الناس كافة، لينذر
من كان حيا ويحق القول على الكافرين، فأسلم تسلم، فإن أبيت فإن إثم المجوس عليك".
هذا نص الرسالة رسالة عظيمة تحمل دعوة واضحة وكلاماً
صريحاً بدأ النبي - صلى الله عليه وسلم - رسالته ببسم الله الرحمن
الرحيم ثم أنزل الملك منزلته وأعطاه قدره فقال من محمد رسول الله إلى كسرى عظيم
فارس وسلم عليه وحياه بقوله
وَالسَّلَامُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى
وبيّن له في هذه الرسالة المختصرة عظمة
الإسلام وأن الأمن والسلام على من آمن بالله ورسوله وشهد أن لا إله إلا الله وحده
لا شريك له، وأن محمدا عبده ورسوله ثم وجه له النبي - صلى الله عليه وسلم
- دعوة خاصة فقال له "أسلم تسلم" من عذاب الدنيا وخزيها وشقائها
وتسلم من عذاب الآخرة وجحيمها ونكالها فإن أبيت فإن إثم شعبك عليك فتتحمل أوزارهم
فإن أبيت فإن إثم المجوس عليك إذا حجبت عنهم دعوة الإسلام وحلت بينهم وبين التعرف
على هذا الدين العظيم.
وصلت الرسالة إلى الملك وقام الترجمان بترجمتها له
فلما قرئت عليه أخذها ومزقها ورمى بها وقال عبد حقير من رعيتي يكتب اسمه قبلي
إشارة إلى ما كتبه النبي - صلى الله عليه وسلم - في قوله "من محمد
رسول الله إلى كسرى عظيم فارس" فلما بلغ خبر تمزيق الرسالة إلى النبي - صلى
الله عليه وسلم - قال "مزق الله ملكه".
فرح المشركون في مكة والطائف بهذا الخبر وطاروا به
فرحاً وقال بعضهم لبعض أبشروا فقد نصب له كسرى ملك الملوك كفيتم الرجل.
لم يكتفي هذا الملك الخبيث بهذا القول الشنيع على
رسول الله - صلى الله عليه وسلم - والفعل الشنيع بتمزيق الرسالة وإنما
أرسل رسالة عاجلة إلى باذان عامله أو محافظه على اليمن في صنعاء يقول له فيها ابعث
برجلين جلدين (قويين) إلى الحجاز فليأتياني بهذا الرجل فاختار باذان في
سذاجة واضحة وبلادة عجيبة رجلين من عنده ليأتيا برسول الله - صلى الله عليه
وسلم - فلما قدم الرجلان إلى المدينة قابلا رسول الله - صلى الله عليه
وسلم - ودخلا عليه وقد حلقا لحاهما وفتلا شواربهما فكره النبي - صلى
الله عليه وسلم - النظر إليهما وقال ويلكما من أمركما بهذا قالا ربنا يقصدان
كسرى فقال الرسول - صلى الله عليه وسلم - ولكن ربي أمرني بإعفاء لحيتي
وقص شاربي.
فقال أحدهما وكأنه يخاطب شخصاً عادياً ولم يعلم
أنه يخاطب شخصاً هو رسول الله - صلى الله عليه وسلم - ومعه من أصحابه من
سيفدونه بأنفسهم وأرواحهم ويقدمون نحورهم دون نحره - صلى الله عليه وسلم
- قال هذا الأخرق الأحمق يامحمد إن شاهنشاه يعني ملك الملوك يقصد به كسرى قد
كتب إلى الملك باذان يأمره أن يبعث إليك من يأتيه بك وبعثني إليك لتنطلق معي وقالا
قولاً فيه تهديد لرسول الله - صلى الله عليه وسلم - فلم يرد عليه
النبي - صلى الله عليه وسلم - وأمرهما أن يلاقياه غداً.
وفي ذلك اليوم استجاب الله دعاء رسوله - صلى
الله عليه وسلم - حين دعا على كسرى أن يمزق الله ملكه فقامت في تلك الليلة
ثورة كبيرة ضد الملك ثورة من داخل الأسرة الحاكمة نفسها حيث قام ابنه شيرويه بن
كسرى بثورة على أبيه فقتله وأخذ الملك لنفسه فأعلم الله سبحانه وتعالى
رسوله - صلى الله عليه وسلم - بخبر هذه الثورة وهلاك هذا الملك المغرور.
وفي اليوم الثاني جاء الرجلان إلى النبي - صلى
الله عليه وسلم - فقالا له هل تدري ما تقول إنا قد نقمنا عليك ماهو أيسر
أفنكتب هذا عنك ونخبر به الملك باذان فقال لهما النبي - صلى الله عليه وسلم
- نعم أخبراه أن ربي قد قتل ربه الليلة وقولا له إن ديني وسلطاني سيبلغ ما
بلغ كسرى وينتهي إلى منتهى الخف والحافر وقولا له إن أسلمت أعطيتك ما تحت يدك
وملكتك على قومك فخرجا من عند رسول الله - صلى الله عليه وسلم - فقدما
على باذان في اليمن فأخبراه بخبر مقتل كسرى على يد ابنه شيرويه بن كسرى بناء على
خبر النبي - صلى الله عليه وسلم - وبعد قليل جاء المرسوم الملكي يحمل
خبر مقتل الملك على يد ابنه واستيلائه على الحكم بعد مقتل أبيه في نفس الليلة التي
أخبرهم بها النبي - صلى الله عليه وسلم - فكان ذلك سبباً في إسلام باذان
وتصديقه برسول الله - صلى الله عليه وسلم - هو ومن معه في حكومته من أهل
فارس في اليمن وعلى إثر إسلامهم أسلم أهل اليمن.
وأمر الملك الجديد شيرويه بن كسرى في رسالة له إلى
باذان أن لا يهجوا رسول الله - صلى الله عليه وسلم - ولا يفعل به شيئا
حتى يأتيه أمره وصدق الله سبحانه وتعالى إذ يقول:
﴿ يَا أَيُّهَا
الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَي
ஹுதைபியா
உடன்படிக்கையின் பின்னர் நபியவர்கள் அண்டை நாட்டு மன்னர்களுக்குக் கடிதங்கள் மூலம்
தஃவா செய்தார்கள். சிலர் கடிதத்தை மதித்தனர், பலர் மிதித்தனர். இவ்வாறே
அன்றைய இரு பெரும் வல்லரசுகளில் ஒன்றான பாரசீகச் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திக்கு
ஒரு மடலை எழுதி அதனை பஹ்ரைன் மன்னரிடம் ஒப்படைத்து அவர் மூலமாக அது பாரசீக
சக்கரவர்த்திக்குச் சென்றடைவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்கள். இந்தக் கடிதம்
அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி) அவர்கள் மூலமாக பஹ்ரைன் மன்னனிடம்
ஒப்படைக்கப்பட்டது.
பாரசீகப் பேரரசின்
மன்னர்கள் பொதுவாக குஸ்ரூ-கிஸ்ரா (Cbosroes Eparws) என்று அழைக்கப்படுவார்கள். கடிதம் அனுப்பும் போது “இப்னுவேஸ் பின் ஹுருஸ்”
(590-628) என்ற மன்னனே பாரசீகப் பேரரசை ஆண்டதாக நம்பப்படுகின்றது.
இம்மன்னனுக்கு நபி
{ஸல்} அவர்கள் எழுதிய மடல் பின்வருமாறு அமைந்திருந்தது.
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்!
தூதர்
முஹம்மதிடமிருந்து பாரசீகப் பேரரசர் கிஸ்ரா அவர்களுக்கு, சத்திய வழியைப் பின்பற்றுவோர் மீது சலாம் உண்டாகட்டுமாக! “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நீங்கள் விசுவாசியுங்கள். வணக்கத்துக்குரியவன்
அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லையென்றும், நான் மனித குலம் அனைத்தையும் எச்சரிக்க அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்றும்
சாட்சி கூறுங்கள். (இதை நம்பி) ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அமைதி பெறுவீர்கள்.
மாற்றமாக மறுத்தால்,
பாவம் உங்களைச் சாரும்” (தபரி – பா3:
ப90)
இந்த மடல் பஹ்ரைன்
ஆளுனர் மூலமாக கிஸ்ராவைச் சென்றடைந்ததும் அவன் ஆத்திரமுற்றான். எனது அடிமை ஒருவன்
எனக்கு இப்படிக் கடிதம் எழுதுவதா? என்று கொதித்தான்.
கடிதத்தை அவமதித்துக் கசக்கிப் போட்டான். இந்தச் செய்தியறிந்த நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் அவனது ஆட்சியினை கசக்கிப் போடுவானாக!” என்று பிரார்த்தித்தார்கள். (பார்க்க: புகாரி 4424)
நபிகளாரின்
திருவாயிலிருந்து வெளிப்பட்ட இவ்வார்த்தைகளின் வலு என்ன என்பதை வரலாறு
நிரூபிக்கின்றது.
பாரசீக மன்னன்
தனது அரசியல் ஆதிக்க வெறியின் உச்சக் கட்டத்தில் தனது எமன் நாட்டு கவர்னருக்கு நபி
{ஸல்} அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். யெமனின் பாரசீக ஆட்சியின் கவர்னர் “பாதான்”
என்பவன் பலம் பொருந்திய இருவரை நபி {ஸல்} அவர்களை அழைத்து
வருவதற்காக ஹிஜாஸ் மாகாணத்திற்கு அனுப்பினான். அவர்கள் இருவரும் தாயிபில் வைத்து
குறைஷிக் குல வியாபாரிகளிடம் நபி {ஸல்} அவர்களைப் பற்றி விசாரித்த போது “அவர் மதீனாவில் இருக்கிறார்” என குறைஷிகள்
கூறினார்கள். பாரசீக மன்னன் முஹம்மதைத் தீர்த்துக்கட்டிவிடுவான் என எண்ணிய அவர்கள், மக்களே! அதோ முஹம்மதைத் தேடி பாரசீகப் பேரரசர் ஆள் அனுப்பியுள்ளார்.
முஹம்மதின் கதை முடியப் போகின்றது. அவரால் எமக்கு ஏற்பட்ட தொல்லைகள்
தீரப்போகின்றன. குறைஷிக் குலத்தவரே! குதூகலம் அடையுங்கள், உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று மக்கத்து மக்களுக்கு நற்செய்தி
கூறினர்.
எமனிலிந்து வந்த
இருவரும் மதீனா வந்து மனித குல மாணிக்கமாம் முஹம்மத்(ச) அவர்களைச் சந்தித்தனர். எச்சரிக்கையும் ஆசையூட்டலும் கலந்த தொனியில் பின்வருமாறு கூறினர்.
“முஹம்மதே! எமது மன்னர்
கிஸ்ரா அவர்கள் எமது தலைவர் பாதான் அவர்களுக்கு “உம்மை அவரிடம் அழைத்து வருமாறு நிரூபனம் அனுப்பியுள்ளார். நீர் இதற்குக்
கட்டுப்பட்டு எம்மிடம் வந்தால் கிஸ்ராவிடம் சலுகையளிக்குமாறு எமது தலைவர்
பேசுவார். அதுதான் உமக்கு நல்லது. நீர் மறுத்துவிட்டால் முடிவு என்னவாக இருக்கும்
என்பதை நீரே அறிவீர். கிஸ்ராவின் பலத்தை அவரது பிடியின் கடினத்தையும் நீர்
அறிவீர். எனவே,
எமக்குக் கட்டுப்படும். உன் சமூகம் அவரது கோபப்
பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் என எண்ணுகின்றோம் என்று கூறினர்.”
இவர்களின் இந்த
எச்சரிக்கை கலந்த வேண்டுகோளுக்கு அண்ணல் நபியிடமிருந்து அழகிய புன்னகையொன்றே
பதிலாகக் கிடைத்தது. எதுவும் கூறாமல் நாளை வாருங்கள் என்றார்கள்.
தூதுவர்களோ வந்த
வேலை இவ்வளவு இலகுவாக முடிந்துவிட்டதே என்ற ஆறுதலுடன் நகர்ந்தனர்.
மறுநாள் காலையில்
முஹம்மத் {ஸல்} அவர்கள் தம்முடன் வருவதற்குத் தயாராக இருப்பார் என்ற எண்ணத்தில்
இருவரும் நபி {ஸல்} அவர்களிடம் வந்தனர். நீர் எம்முடன் வந்து கிஸ்ராவைச்
சந்திக்கத் தயாராகத்தானே இருக்கின்றீர் என்று கேட்டனர்.
இதற்கு நபி {ஸல்} அவர்கள்
கூறிய பதில் இடி தாக்கியது போன்று அவர்கள் மீது அதிர்ச்சியை அள்ளி வீசியது.
“இன்றைய தினத்திற்குப்
பின்னர் நீங்கள் கிஸ்ராவைச் சந்திக்கப் போவதே இல்லை. அவரது மகன் ஷீராவைஹ் மூலமாக
அல்லாஹ் கிஸ்ராவைக் கொன்றுவிட்டான்” என்றார்கள்.
இதனைக் கேட்ட
அவ்விருவரும் கிஸ்ரா கொல்லப்பட்டுவிட்டாரா? அதிர்ச்சியில் மூழ்கினர்.
கிஸ்ராவை அவரது மகனே கொன்றுவிட்டானா? இதை எப்படி நம்புவது
என்று முளித்தனர்.
அன்று
பாரசீகத்தில் நடந்த ஒரு செய்தி அரபு நாட்டுக்கு வருவதற்கு மாதங்கள் சில தாண்ட
வேண்டும். இந்த மனிதர் நேற்று எதையும் கூறவில்லை. இன்று கிஸ்ரா கொல்லப்பட்டான்.
கொலை செய்தது அவனது மகன் “ஷீராவைஹ் என்ற தகவலை உடனுக்குடன் கூறுகின்றாரே என்ற ஆச்சரியத்துடன் இவர்
எம்முடன் வருவதைத் தவிர்ப்பதற்காக இப்படிக் கதை கட்டுகின்றாரோ என்ற ஐயமும்
எழுந்துவிட்டது போலும்.
அவர்களுள் ஒருவர்
இதனை எமன் நாட்டு கவர்னருக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார். அதற்கு
நபியவர்கள்,
ஆம் அறிவியுங்கள். அத்துடன் அல்லாஹ்வின் இந்த மார்க்கம்
கிஸ்ராவின் ஆட்சிப் பரப்பை யெல்லாம் வெற்றி கொள்ளும்; யெமன் கவர்னர் இஸ்லாத்தில் இணைந்து கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள
பகுதிகளை அவரிடமே ஒப்படைத்து அவரை அவரது ஆட்சியில் நிரந்தரமாக நீடிக்கச் செய்வேன்
என்பதையும் சேர்த்துக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள
இந்தச் செய்தியை உண்மை என்பதா, பொய் என்பதா,
எனப் புரியாது பாதானிடம் தகவல் கூறினார். இது கேட்ட பாதான்
ஒரு முடிவுக்கு வந்தார். “முஹம்மத் கூறியது உண்மையென்றால் அவர் ஓர் இறைத்தூதர் தான். அப்படி
இல்லையென்றால் நிச்சயமாக அவரது முடிவு கஷ்டமாகத்தான் அமையப் போகின்றது என்ற
உறுதியான தீர்மானத்துக்கு வந்தான்.
நாட்கள் சில
நகர்ந்தன. பாரசீகத்திலிருந்து யெமன் கவர்னருக்கு ஒரு நிரூபம் வந்தது. அது
கிஸ்ராவின் மகன் அனுப்பிய மடல். அதில்,
“நான் என் தந்தையைக்
கொன்றுவிட்டேன். என் சமூகத்தின் நலனுக்காகவே இதை நான் செய்தேன். அவர் என்
சமூகத்தின் கண்ணியமிக்கவர்களை அழித்தார்; பெண்களைக் கற்பழித்தார்; பொருட்களைச் சூறையாடினார். எனது இந்த மடல் வந்ததும் நீயும் உம்முடன்
இருப்பவரும் இதன் பின் எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று மகன் “ஷீராவைஹ் எழுதியிருந்தான்.
நபியவர்களின்
துஆவின் பிரகாரம் கிஸ்ரா கொல்லப்பட்டான். கிஸ்ராவுக்கென்று சில விசுவாசிகள்
இருந்தனர். அவர்கள் “ஷீராவைஹுக்கு எதிராகச் செயற்பட்டனர். தனது தந்தையைத் தான் கொன்றது போல் தனது
சகோதரர்கள் தம்மைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சிய “ஷீராவைஹ் தனது சகோதரர்கள் அனைவரையும் கொலை செய்தான். பிறகு கிஸ்ராவின் விசுவாசிகள்
“ஷீராவைஹைக் கொன்றனர். அதன் பின்னர் ஆண் வாரிசு இல்லாததால் கிஸ்ராவின் மகள் “பூராண்”
பாரசீகத் தலைவியானாள். இச்சந்தர்ப்பத்தில்தான் “தன் ஆட்சி அதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த ஒரு சமூகம் ஒருபோதும்
உருப்படாது”
என்ற ஹதீஸை நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (பார்க்க: புகாரி 4425)
பல ஆண்டுகளாக பாரசீகப்
பேரரசு கட்டிக் காத்து வந்த கண்ணியம், பெருமையெல்லாம் சிதைந்து
கிஸ்ரா குடும்பக் குழந்தைகளின் கையில் அவர்களது மூதாதையர்கள் விட்டுச் சென்ற ஆட்சி
விளையாட்டுப் பொருளாக மாறியது. தொடர்ந்தும் அரசியல் கொலைகளால் கிஸ்ராவின் ஆட்சி
கசக்கிப் போடப்பட்டது. நபி(ச) அவர்கள்
கூறியது போல் பாரசீகம் முஸ்லிம்களின் கையில் வீழ்ந்தது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்ணியத்தோடு வாழச் செய்வானாக!
ஈருலகிலும் இழிவிலிருந்து பாதுகாத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
வஸ்ஸலாம்!!!!
No comments:
Post a Comment