Tuesday, 28 March 2023

சுவனத்தின் அத்தனை வாசல்கள் வழியாகவும் சுவனத்தில் நுழைவதற்கு போட்டி போடுவோம்!

 

சுவனத்தின் அத்தனை வாசல்கள் வழியாகவும்                   சுவனத்தில் நுழைவதற்கு போட்டி போடுவோம்!

ரமழான் - (1444 - 2023) தராவீஹ் சிந்தனை:- 7.


ஏழாவது நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, ஆறாம் நாள் நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமாகவும்,  ஈமானுக்கு உரமாகவும் அமைந்திருக்கின்ற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், நம்முடைய இதர நல்லறங்களையும் கபூல் செய்து நிறைவான நன்மைகளை வழங்கியள்வானாக!

ஏழாவது நாள் தராவீஹ் தொழுகையில் மிகப் பொருத்தமாக அல்குர்ஆனின்  ஏழாவது அத்தியாயமான 206 வசனங்களைக் கொண்ட அல் அஃராஃப் சூரா முழுமையாக ஓதி முடிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல் அஃராஃப் அத்தியாயத்தில் 40 ம் வசனத்தில் இருந்து 51 ம் வசனம் வரை சுவனம், நரகம், சுவனவாசிகள், நரகவாசிகள் மற்றும் அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் குறித்தும் சுவனவாசிகளின் அந்தஸ்து அவர்கள் நெகிழ்ந்து கூறுகிற வார்த்தைகளையும் துஆக்களையும் வரிசை படுத்துவான். அதே போன்று நரகவாசிகள் சுவனவாசிகளிடம் யாசிப்பதையும் அல்லாஹ் குறிப்பிடுவான்.

இந்த வசனங்களை ஒரு இறைநம்பிக்கையாளர் பொருளுணர்ந்து ஓதினார் என்றால் "சுவனத்தில் நுழைந்து விட வேண்டும் என்ற ஆசை வராமல்" கடந்து சென்று விட மாட்டார்.

இங்கே சுவனவாசிகள் நெகிழ்ந்து கூறும் வார்த்தைகளையும், நரகவாசிகளின் யாசிப்பை கூறும் வசனத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்.

சுவனவாசிகளின்  நெகிழ்வான வார்த்தைகள்..

وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ‌ۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ هَدٰٮنَا لِهٰذَا

 وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا اللّٰهُ‌ ‌ۚ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ‌ ؕ وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَـنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்என்று அழைக்கப்படுவார்கள். ( அல்குர்ஆன்: 7: 43 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்தக் கூட்டத்தாரில் ஒருவராக உங்களையும் என்னையும் நம் குடும்பத்தார் அனைவரையும் ஆக்கியருள்வானாக!

நரகவாசிகள் கேட்கும் யாசகம்!..

وَنَادٰٓى اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ اَفِيْضُوْا عَلَيْنَا مِنَ الْمَآءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ قَالُـوْۤا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَى الْـكٰفِرِيْنَ ۙ‏

நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்என்று கூறுவார்கள். ( அல்குர்ஆன்: 7: 50 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த கேவலமான நிலையில் இருந்து நம் அனைவரையும் பாதுகாத்து அருள்வானாக!

ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரையில் சுவனத்தின் பிரவேசம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு சுவனத்தின் வாசல்கள் வழியாக நுழைவதும் அவ்வளவு முக்கியம். 

ஆதலால் தான் ரமழான் நோன்பின் மாண்புகளில் ஒன்றாக மாநபி (ஸல்) அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்.

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ ، قَالَ : حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُون لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ.

ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "சொர்க்கத்தில் ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி 1897, முஸ்லிம் 1947 )

சுவனத்தின் வாயில்களின் அமைப்பு என்ன?

உலகில் எந்த ஒரு இல்லத்திற்கும் பிரதான நுழைவாயிலும், அந்த இல்லத்திற்குரிய பிற வாயில்கள் என்றும் இரு அமைப்பிலான வாயில்கள் இல்லாமல் இருப்பதில்லை. அதே போன்று தான் பிரம்மாண்டமான சுவனத்திற்கும் பிரதான நுழைவாயிலும் இன்னபிற சில வாயில்களும் இருப்பதாக நமது நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவு படுத்தி இருக்கின்றார்கள்.

சுவனத்தின் பிரதான நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ:  يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَقُولُ أُمَّتِي يَا رَبِّ أُمَّتِي يَا رَبِّ أُمَّتِي يَا رَبِّ فَيُقَالُ يَا مُحَمَّدُ أَدْخِلْ مِنْ أُمَّتِكَ مَنْ لا حِسَابَ عَلَيْهِمْ مِنَ الْبَابِ الأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الأَبْوَابِ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ كَمَا بَيْنَ مَكَّةَ وَحِمْيَرَ أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى ) رواه البخاري 4712. ورواه مسلم (194) بلفظ: وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ لَكَمَا بَيْنَ مَكَّةَ وَهَجَرٍ، أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى .

நீண்ட ஹதீஸின் இறுதி பகுதி "நான் எனது உம்மத்திற்காக சிபாரிசு வேண்டுகின்றபோது முஹம்மதே உமது தலையை உயர்த்தி கேள்விக் கணக்கில்லாதவர்களை சுவனத்தின் வலது பக்க வாயில்களால் அனுப்புங்கள் என்று கூறப்படும். எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நிச்சயமாக சுவனத்தின் இரு பிரதான வாயில்களுக்கும் இடைப்பட்ட தூர அளவு மக்காவுக்கும் ஹிம்யருக்கும் (யமனில் ஒரு நகரம்) இடைப்பட்ட அல்லது மக்காவுக்கும், புஸராவுக்கும் (டமஷ்கஸில் உள்ள ஒரு நகரம்) இடைப்பட்ட தூர அளவாகும். (புகாரி, முஸ்லிம்).

عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:   مَا بَيْنَ مِصْرَاعَيْنِ فِي الْجَنَّةِ كَمَسِيرَةِ أَرْبَعِينَ سَنَةً  .

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் ஹதீஸ்களில் நாற்பது ஆண்டுகள் நடை தூர அளவு என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எவ்வளவு விசாலமானது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் வழியாக மக்கள் நெருக்கிக் கொண்டு போகும் ஒரு நேரமும் வரும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

சுவனத்தின் வாயில்கள் எப்போது திறக்கப்படும்? 

சுவனத்தின் வாயில்கள் ஆண்டுக்கொரு முறை மாத்திரம் திறக்கப்படுவதாகவே பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். ஆனால் வாரத்தில் இரு நாள் அது திறக்கப்படும் என்றும்,  ரமளான் முழுவதும் திறக்கப்படும் என்றும் பின்வரும் ஹதீஸ்கள் மூலம் அறிய முடிகின்றது.

ரமளான் முழுவதும் திறக்கப்படும்..

وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله- صلى الله عليه وسلم-: «إذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ». متفق عليه.

ரமளான் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நகரத்தில் வாயில்கள் மூடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). இது ரமளான் மாதத்தை சிறப்பிக்கின்ற செய்தியாகும்.

வாரந்தோறும் திங்கள், மற்றும் வியாழன் நாட்களில் திறக்கப்படும்...

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله- صلى الله عليه وسلم- قال: «تُفْتَحُ أَبْوَابُ الجَنَّةِ يَومَ الإثْنَيْنِ، ويَومَ الخَمِيْسِ فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لا يُشْرِكُ بِاللهِ شَيْئاً إلا رَجُلاً كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا-ثَلاثاً-». أخرجه مسلم.

வாரந்தோறும் திங்கள், மற்றும் வியாழன் நாட்களில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொருக்கும் (விஷேச) மன்னிப்பு வழங்கப்படுகின்றது. இருப்பினும், யாருக்கும், தனது சகோதரருக்கும் இடையில் குரோதம் காணப்படுகின்றதோ அவருக்கும் மன்னிப்பு நிறுத்தப்பட்டு, இவ்விருவரும் சமரசமாகும் வரை காத்திருங்கள், இவ்விருவரும் சமரசமாகும் வரை காத்திருங்கள், இவ்விருவரும் சமரசமாகும் வரை காத்திருங்கள் என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், புகாரி).

சுவனம் எட்டு வாயில்களைக் கொண்டது. அவற்றின் சில வாயில்களின் பெயர்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதராணமாக ரய்யான் இது நோன்பாளிகள் மாத்திரம் செல்லும் வாயிலாகும். அவ்வாறே தொழுகையாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோர், நோன்பாளிகள், தர்மம் செய்தோர், (ஒட்டகம், குதிரை, வாகனம் போன்ற) பொருட்களில் ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தோர் போன்ற ஒவ்வொருவரும் அதற்கென உரிய வாயில்களால் அழைக்கப்படுவார்கள். (புகாரி),

இவைகள் பிரதான வாயில் என்று சொல்ல முடியாது. சொர்க்கத்தின் பிரதான வாயிலுக்குள் நுழைந்த பின்னால் அழைக்கப்படும் வாயில்களையே இது குறிக்கலாம் என இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  (பத்ஹுல்பாரி)

சுவனத்தின் 8 வாசல்களில் எந்த வாசல் வழியாக வேண்டுமானாலும் நுழையச் செய்யும் பாக்கியமிக்க நல்லறங்கள்..

عن عمر بن الخطاب رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :" « مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ - أَوْ فَيُسْبِغُ - الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ". وفي رواية لمسلم " مَنْ تَوَضَّأَ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ » ".

உமர் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி மொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்"  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம் உடைய ஒரு அறிவிப்பில்... அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை  என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி மொழிகிறேன்)   ( நூல்: முஸ்லிம் )

2- عن عُبَادَةُ بْنُ الصَّامِتِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « «مَنْ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَأَنَّ عِيسَى عَبْدُ اللَّهِ وَابْنُ أَمَتِهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ وَأَنَّ الْجَنَّةَ حَقٌّ وَأَنَّ النَّارَ حَقٌّ أَدْخَلَهُ اللَّهُ مِنْ أَىِّ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ شَاءَ» »

உப்பாதா இப்னு அஸ் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எவர் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை  என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் திண்ணமாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனுடைய அடிமையின் (மர்யமின்) மகனாகவும், இன்னும் (குன்ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான் என்றும், சுவனம் உண்மை என்றும், நரகமும் உண்மை என்றும் சொல்கிறாரோ அவரை அல்லாஹ் சுவனத்தின் எட்டு வாசல்களில் அவர் விரும்பும் வாசல் வழியாக நுழையச் செய்வான்" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

3- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " «مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا قَالَ نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ» " 

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, “அல்லாஹ்வின் அடியாரே! இது பெரும் நன்மையாகும்! இதன் வழியாக நுழையுங்கள்!என்று அழைக்கப்படுவார்.

தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத்எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்;  நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான்  எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்;  தர்மம் செய்தவர்கள் ஸதகாஎனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, அங்கிருந்த அபூபக்ர் (ரலி)  அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே!  எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாக அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் ஆமாம்நீரும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என நான் ஆசிக்கின்றேன். ஒருவராக இருப்பீர் என நான் நம்புகின்றேன்என்று கூறினார்கள்.                                                                                  ( நூல்:முஸ்லிம் )

 

4 - عن صعصعة بن معاوية قال لقيت أبا ذر قال قلت حدثني قال نعم قال رسول الله صلى الله عليه و سلم : " «ما من عبد مسلم ينفق من كل مال له زوجين في سبيل الله إلا استقبلته حجبة الجنة كلهم يدعوه إلى ما عنده قلت وكيف ذلك قال إن كانت إبلا فبعيرين وإن كانت بقرا فبقرتين » "

ஸஃஸஆ இப்னு முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எந்த ஒரு முஸ்லிமான அடியார் தன்னிடம் உள்ள பொருளில் ஒரு ஜோடி பொருளை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வாரோ அவர் சுவனத்தை முன்னோக்கி வரும் போது சுவனத்தின் ஒவ்வொரு வாசலிலும் வானவர்கள் நின்று கொண்டு இந்த வாசல் வழியாக நுழைந்து கொள்ளுங்கள்! அழைப்பார்கள்" என நபி ஸல் அவர்கள் கூறிய போது " ஒரு ஜோடி பொருள் என்றால் என்ன? என்று நான் வினவியதற்கு "ஒட்டகம் என்றால் இரண்டு ஒட்டகம், மாடு என்றால் இரண்டு மாடு" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

عَنْ عُبَادَ ةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " «مَنْ عَبَدَ اللهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا فَأَقَامَ الصَّلَاةَ، وَآتَى الزَّكَاةَ، وَسَمِعَ وَأَطَاعَ، فَإِنَّ اللهَ يُدْخِلُهُ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ، وَلَهَا ثَمَانِيَةُ أَبْوَابٍ، وَمَنْ عَبَدَ اللهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا وَأَقَامَ الصَّلَاةَ، وَآتَى الزَّكَاةَ، وَسَمِعَ وَعَصَى، فَإِنَّ اللهَ مِنْ أَمْرِهِ بِالْخِيَارِ إِنْ شَاءَ رَحِمَهُ، وَإِنْ شَاءَ عَذَّبَهُ» "

உப்பாதா இப்னு அஸ் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எவர் அல்லாஹ்விற்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் வணக்க வழிபாடுகள் செய்து, தொழுகையை நிலை நாட்டி, ஜகாத்தை கொடுத்து, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து, கட்டுப்பட்டு வாழ்வாரோ திண்ணமாக  அவரை அல்லாஹ் அவர் விரும்பும் வாசல் வழியாக சுவனத்தில் நுழையச் செய்வான்.

மேலும், "எவர் அல்லாஹ்விற்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் வணக்க வழிபாடுகள் செய்து, தொழுகையை நிலை நாட்டி, ஜகாத்தை கொடுத்து, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து, ஆனால் மாறு செய்து வாழ்கிறாரோ திண்ணமாக அல்லாஹ் அவர் விஷயத்தில் தான் விரும்பியவாறு நடந்து கொள்வான். அவன் நாடினால் அந்த அடியார்க்கு அருள் புரிவான்! அவன் நாடினால் அந்த அடியானை தண்டிப்பான்" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். 

 6- عن عنُتْبَةَ بْنَ عَبْدٍ السُّلَمِيَّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَا مِنْ عَبْدٍ يَمُوتُ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ، لَمْ يَبْلُغُوا الْحِنْثَ ، إِلَّا تَلَقَّوْهُ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ، مِنْ أَيِّهَا شَاءَ دَخَلَ"

உத்பா இப்னு அப்திஸ் ஸுலமிய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எந்த ஒரு மனிதருக்கு 3 குழந்தைகள் பிறந்து பருவ வயதை அடையும் முன்னரே இறந்து விடுகின்றார்களோ அந்த குழந்தைகளை அவர் சுவனத்தின் எட்டு வாசல்களிலும் பெற்றுக் கொள்வார். ஆகவே, அவர் தான் விரும்பும் வாசல் வழியாக சுவனத்தில் நுழைந்து கொள்வார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7- عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " من لقي الله لا يشرك به شيئاً، ولم يتندَّ بدم حرام، إِلَّا دَخَلَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ "

உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எவர் அல்லாஹ்வை இணை வைக்காத நிலையிலும், ஹராமான முறையில் ரத்தத்தை ஓட்டாத (கொலை செய்யாத) நிலையிலும் சந்திப்பாரோ அவர் சுவனத்தின் அவர் விரும்பும் வாசல் வழியாக நுழைந்து கொள்வார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 

8- عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : ( «إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت» )

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "ஒரு பெண் ஐங்காலத் தொழுகைகளை பேணுதலாக தொழுது, ரமழானில் நோன்பு நோற்று, கற்பொழுக்கத்துடன் நடந்து, கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றாரோ அந்த பெண் சுவனத்தில் விரும்பும் வாசல் வழியாக நுழைந்து கொள்ளலாம்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

9- عن صهيب أنه سمع من أبي هريرة ومن أبي سعيد يقولان خطبنا رسول الله صلى الله عليه و سلم يوما فقال : " «والذي نفسي بيده ثلاث مرات ثم أكب فأكب كل رجل منا يبكي لا ندري على ماذا حلف ثم رفع رأسه في وجهه البشرى فكانت أحب إلينا من حمر النعم ثم قال ما من عبد يصلي الصلوات الخمس ويصوم رمضان ويخرج الزكاة ويجتنب الكبائر السبع إلا فتحت له أبواب الجنة فقيل له ادخل بسلام» 

அபூஹுரைரா மற்றும் அபூஸயீத் (ரலி - அன்ஹுமா) அறிவித்ததாக ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "ஒரு நாள் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு பிரசங்கம் செய்தார்கள்.  "எவன் கைவசம் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! என்று மூன்று முறை சொன்னார்கள். பின்னர் தலையை கவிழ்துக் கொண்டார்கள். நாங்களும் அழுதவர்களாக தலையை கவிழ்த்துக் கொண்டோம். ஏன் பெருமானார் (ஸல்) அவர்கள் தலையை கவிழ்த்துக் கொண்டார்கள் என்று எங்களில் ஒருவருக்கும் தெரியாது.

பிறகு சிறிது நேரத்தில் நபி ஸல் அவர்கள் தலையை உயர்த்திய போது நபி ஸல் அவர்களின் முகத்தில் ஒரு மலர்ச்சியை நாங்கள் கண்டோம். அந்த மலர்ச்சி எங்களுக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதை விட ஆனந்தம் தருவதாய் அமைந்திருந்தது.

பின்பு எங்களை நோக்கி "எந்த அடியான் ஐங்காலத் தொழுகைகளை தொழுது, ரமழானில் நோன்பு நோற்று, ஜகாத்தை வழங்கி, ஏழு பெரும்பாவங்களில் இருந்து தவிர்ந்து வாழ்கின்றாரோ அவருக்காக சுவனத்தின் அத்துனை வாசல்களும் திறக்கப்படும். அனைத்து வாசல்களில் இருந்தும் "ஸலாமைப் பெற்றவர்களாக உள்ளே நுழைந்திடுங்கள்" என்று சொல்லப்படும்.

எச்சரிக்கை தேவை...

رواه الإمام أحمد في "الزهد" (84) قال: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سُلَيْمَانَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ قَالَ: ( دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ النَّارَ رَجُلٌ فِي ذُبَابٍ.

قَالُوا: وَكَيْفَ ذَلِكَ؟

قَالَ: مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ لَهُمْ صَنَمٌ لَا يَجُوزُهُ أَحَدٌ حَتَّى يُقَرِّبَ لَهُ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَرِّبْ! قَالَ: لَيْسَ عِنْدِي شَيْءٌ، فَقَالُوا لَهُ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا! فَقَرَّبَ ذُبَابًا، فَخَلَّوْا سَبِيلَهُ.

قَالَ: فَدَخَلَ النَّارَ. وَقَالُوا لِلْآخَرِ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا! قَالَ: مَا كُنْتُ لِأُقَرِّبَ لِأَحَدٍ شَيْئًا دُونَ اللَّهِ عَزَّ وَجَلَّ، قَالَ: فَضَرَبُوا عُنُقَهُ، قَالَ: فَدَخَلَ الْجَنَّةَ ) .

وصححه الألباني موقوفا على سلمان رضي الله عنه، كما في "سلسلة الأحاديث الضعيفة" (12 / 722)؛

ஒரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால் சுவர்க்கம் சென்றான். இன்னொரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால்நரகம் சென்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அது எப்படி சாத்தியமானது யா ரசூலல்லாஹ்!என ஸஹாபாக்கள் வினவினார்கள். தாம் வணங்கும் சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும் வரை, அதனை கடந்துச் செல்ல அனுமதி கொடுக்காத மக்கள் வாழ்ந்த இடத்தை இருவர் கடக்க நேரிட்டது. ஒரு மனிதரிடம் அந்த சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும்படி அவர்கள் கட்டளையிட்டனர். காணிக்கை செய்ய என்னிடம் எதுவும் இல்லைஎன அவன் கூறினான். ஒரு ஈ அல்லது கொசுவாயினும் காணிக்கை செலுத்துமாறு அவர்கள் சொல்ல அவன் அந்த சிலைக்கு ஒரு கொசுவை காணிக்கை செய்தான். அக்காரணத்தால் அவன் நரக நெருப்பில் நுழைந்தான். மற்ற மனிதரையும் அச்சிலைக்கு எதையேனும் காணிக்கை செய்யும்படி வற்புறுத்திய போது மகத்துவமும், கீர்த்தியுமிக்க அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும், எதற்கும், எதையும் காணிக்கை செய்ய மாட்டேன்என அவர் மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட அந்த மக்கள் அவரை கொலை செய்தார்கள். அந்த மனிதர் சுவர்க்கம் சென்றடைந்தார்.என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாரிக் பின் ஷிஹாப் அறிவிக்கிறார்கள்.                                      ( நூல்: அஹ்மத் )

2 comments: