Wednesday, 29 March 2023

என் இறைவன் என் கருத்துக்கும் என் சிந்தனைக்கும் நேர்பட்டான்!!

 

என் இறைவன் என் கருத்துக்கும் என் சிந்தனைக்கும் நேர்பட்டான்!!

ரமழான் - (1444 - 2023) தராவீஹ் சிந்தனை:- 8.


எட்டாவது நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, ஏழாவது  நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமாகவும்,  ஈமானுக்கு உரமாகவும் அமைந்திருக்கின்ற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், நம்முடைய இதர நல்லறங்களையும் கபூல் செய்து நிறைவான நன்மைகளை வழங்கியள்வானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் அல் அன்ஃபால் அத்தியாயமும் அத் தவ்பா அத்தியாயத்தின் 93 வசனங்களும் ஓதப்பட்டு இன்றுடன் அல்குர்ஆனின் 3 -ல் ஒரு பகுதி 10 ஜுஸ்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இன்று ஓதப்பட்ட  168 வசனங்களில் அல் அன்ஃபால் சூராவின் மூன்று வசனங்கள் இறக்கியருளப்பட்டதன் பிண்ணனியையும் அந்த இறை வசனங்கள் இறக்கியருப்பட காரணமாக இருந்த ஒரு நபித்தோழரின் சிறப்பையும் நாம் காண இருக்கின்றோம்.

காரணம் இருக்கின்றது. தமிழகத்தில் பித்அத்களை ஒழிப்பதற்கு புறப்பட்டுள்ள ஒரு இயக்கம் சமீபத்தில் பித்அத் ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தி ஏராளமான ஃபத்வாக்களை வாரி வழங்கியிருந்தனர்.

அதில் ஒன்று தராவீஹ் தொழுகை பித்அத். அதை துவக்கி வைத்து நடைமுறைப்படுத்திய உமர் (ரலி) அவர்கள் ஒரு பித்அத்வாதி (நவூதுபில்லாஹ்) என்று ஒரு ஃபத்வாவும் வழங்கியிருந்தனர்.

உமர் (ரலி) அவர்களை இப்படி அடையாளப்படுத்த இந்த உலகில் ஷீஆக்களுக்குப் பிறகு இவர்களுக்கு தான் இத்தகைய நெஞ்சுரம் இருக்கிறது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இத்தகைய நச்சுக் கூட்டத்தில் இருந்து நம்மையும் நம் குடும்பத்தாரையும் நம் சந்ததிகளையும் பாதுகாத்து அருள்வானாக!

முதலில் நாம் அன்ஃபால் சூராவின் இரண்டு வசனங்கள் இறக்கியருளப்பட்டதன் பிண்ணனியைப் பார்த்து விட்டு, அந்த இறை வசனங்கள் இறக்கியருப்பட காரணமாக இருந்த "அந்த" நபித்தோழரின் சிறப்பையும் நாம் காண்போம்.

مَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الْأَرْضِ تُرِيدُونَ عَرَضَ الدُّنْيَا وَاللَّهُ يُرِيدُ الْآخِرَةَ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ (67) لَوْلَا كِتَابٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ (68) فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (69)

(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.

  عمر بن الخطاب قال

 لما كان يوم بدر والتقوا ، فهزم الله المشركين ، وقتل منهم سبعون رجلا وأسر [ منهم ] سبعون رجلا - استشار رسول الله - صلى الله عليه وسلم - أبا بكر ، وعمر ، فقال أبو بكر : يا رسول الله ، هؤلاء بنو العم ، والعشيرة ، والإخوان ، وإني أرى أن تأخذ منهم الفدية ، فيكون ما أخذنا منهم قوة لنا على الكفار ، وعسى الله أن يهديهم [ للإسلام ] ، فيكونوا لنا عضدا . فقال رسول الله - صلى الله عليه وسلم - : " ما ترى يا ابن الخطاب ؟ " ، قال : قلت والله ما أرى ما رأى أبو بكر ، ولكن أن تمكنني من فلان - قريب لعمر - فأضرب عنقه ، وتمكن عليا من عقيل فيضرب عنقه ، ، هؤلاء صناديدهم وأئمتهم وقادتهم . فهوي رسول الله - صلى الله عليه وسلم - ما قال أبو بكر ، ولم يهو ما قلت ، فأخذ منهم الفداء . فلما كان من الغد قال عمر : غدوت إلى النبي - صلى الله عليه وسلم - فإذا هو قاعد وأبو بكر الصديق وإذا هما يبكيان ، فقلت : يا رسول الله ، أخبرني ماذا يبكيك أنت وصاحبك ؟ فإن وجدت بكاء بكيت ، وإن لم أجد بكاء تباكيت [ لبكائكما ] ، فقال النبي - صلى الله عليه وسلم - : " أبكي للذي عرض علي أصحابك من الفداء ، لقد عرض علي عذابكم أدنى من هذه الشجرة " - لشجرة قريبة - وأنزل الله عز وجل : ( ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض ) إلى قوله : ( لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم ) من الفداء ( عذاب عظيمرواه مسلم في الصحيح عن هناد بن السري ، عن ابن المبارك ، عن عكرمة بن عمار .

பத்ருப் போரில் முஸ்லிம்கள் எதிரிகளில் 70 பேரைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?” என்று (ஆலோசனை) கேட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்என்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?” என்று கேட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)என்று (ஆலோசனை) கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.

நான் அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன்.

ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாதுஎன்று தொடங்கி, “நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்” (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான்." என்று கூறினார்கள்.

இந்த இறைவசனங்கள் இறக்கியருளப்பட காரணமாக இருந்த சிறப்பிற்குரிய அந்த நபித்தோழர் தான் உமர் இப்னு அல் கத்தாப் (ரலி) அவர்கள்.

உமர் (ரலி) அவர்கள் எத்தகைய சிறப்பிற்குரிய நபித்தோழர்?  நாம் அறியாததா என்ன?  இருந்த போதிலும் ஒரு சில நபிமொழிகள் நம் சிந்தனையின் தெளிவிற்காக...

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ ‏ ‏يُعْرَضُونَ ‏ ‏عَلَيَّ وَعَلَيْهِمْ قُمُصٌ مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ وَمِنْهَا مَا دُونَ ذَلِكَ وَعُرِضَ عَلَيَّ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ قَالُوا فَمَا ‏ ‏أَوَّلْتَ ‏ ‏ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ الدِّينَ ‏

நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன்.  அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு  மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்)  அவர்கள் விளக்கம் தந்தார்கள்”.  அறிவிப்பவர்  அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி). புஹாரி : 23

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  بَيْنَا أَنَا نَائِمٌ، أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ، فَشَرِبْتُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ فِي أَظْفَارِي، ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الخَطَّابِ.
قَالُوا: فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ:  العِلْمَ  رواه البخاري (82) ، ومسلم (2391)

நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒரு பால் கோப்பை  என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு  குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன்.  பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்  என்று  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே!  அந்தப்பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு கல்வி என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.  அறிவிப்பவர்  இப்னு உமர் (ரலி). புஹாரி: 82

وأخرج مسلم ، عن ابن عمر ، عن عمر قال : وافقت ربي في ثلاث : في الحجاب وفي أسرى بدر ، وفي مقام إبراهيم .
وأخرج ابن أبي حاتم ، عن أنس ، قال : قال عمر : وافقت ربي - أو وافقني ربي - في أربع : نزلت هذه الآية ولقد خلقنا الإنسان من سلالة من طين الآية [ المؤمنون : 12 ] فلما نزلت ق

உமர் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுவார்கள்: "என் இறைவன் என் சிந்தனைக்கு 3 சந்தர்ப்பங்களில் (இன்னோரு அறிவிப்பில்) 4 சந்தர்ப்பங்களில் நேர்பட்டு இறை வசனங்களை இறக்கியருளினான். அதில் ஒரு சந்தர்ப்பம் தான் மேற்கூறிய மூன்று இறைவசனங்கள்.

وقال ابن مردويه: حدثنا محمد

  بن أحمد بن محمد القزويني، حدثنا علي بن الحسين الجنيد، حدثنا

 هشام بن خالد، حدثنا الوليد، عن مالك بن أنس، عن جعفر بن محمد عن أبيه، عن جابر، قال: لما وقف رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة عند مقام إبراهيم، قال له عمر: يا رسول الله، هذا مقام إبراهيم الذي قال الله: { وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى } ؟ قال: "نعم". قال الوليد: قلت لمالك: هكذا حدثك { وَاتَّخِذُوا } قال: نعم. هكذا وقع في هذه الرواية.

மக்காவாசிகள் தங்களின் மூதாதையர்கள் மூலமாக மகாம் இப்ராஹீமை அறிந்து வைத்து இருந்தாலும் அறியாமைக் காலத்தில் அவர்களிடம் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் இருந்தும் கூட அவர்கள் மகாம் இப்ராஹீமை எவ்விதத்திலும் கண்ணியப்படுத்தி, பூஜை செய்து வழிபாடு செய்யக் கூடியவர்களாக இருந்திருக்கவில்லை.

இஸ்லாம் மக்காவில் வந்த பின்னரும் கூட அந்த மகாமுக்கு முஸ்லிம்கள் எவ்வித மரியாதையும் செய்யவில்லை. மக்கா வெற்றி கொண்ட பிறகு மாநபி {ஸல்} அவர்கள் கஅபாவைச் சுற்றி வருகின்ற போது, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம்… “அல்லாஹ்வின் தூதரே! இதோ நம் தந்தை இப்ராஹீம் {அலை} அவர்கள் இந்தக் கல்லின் மீது நின்று தானே இந்த கஅபாவைக் கட்டினார்கள். இங்கு நின்று தானே ஹஜ்ஜுக்கான அழைப்பை விடுத்தார்கள். ஏன் நாம் இந்தக் கல் அமைந்திருக்கும் இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? என்று வினாவொன்றை எழுப்பினார்கள்.

அப்போது, அல்லாஹ் 2: 125 –ஆவது வசனத்தை "(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும்,  பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;  மகாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்”. ( அல்குர்ஆன்- 2: 125 ) இறக்கியருளினான்.
அதுவும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் ஹஜ்ஜின் போது தான் அதற்கான செயல் வடிவத்தைக் கொடுத்தார்கள்.

حدَّثنا آدم,ُ حدَّثنا شعبةُ, حدَّثَنا عمرُو بنُ دينار, قال: سمعتُ ابنَ عمرَ رضيَ الله عنهما يقول  قِدمَ النبي صلى الله عليه وسلم فطَاف بالبيِت سبعاً, وصلَّى خَلفَ المقام ركعَتين, ثم خرجَ إلى الصَّفاَ, وقد قال الله تعالى
لقد كانَ لكم في رسول اللهِ أسوةٌ حَسَنةٌ "  الأحزاب:21.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  "நபி {ஸல்} அவர்கள் கஅபாவை தவாஃப் செய்த பிறகு மகாமு இப்ராஹீம் அருகே நின்று இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்னர் ஸஃபா மலக்குன்றை நோக்கி சென்றார்கள். அப்போது, “உங்களுக்கு உங்களின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றதுஎன்ற கருத்தைக் கூறுகின்ற அஹ்ஸாப் அத்தியாயத்தின் 21 –ஆம் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.                                                    ( நூல்: புகாரி )

وأخرج البخاري وغيره ، عن أنس قال : قال عمر : وافقت ربي في ثلاث : قلت : يا رسول الله لو اتخذنا من مقام إبراهيم مصلى ؟ فنزلت : واتخذوا من مقام إبراهيم مصلى [ ص: 138 ] [ البقرة : 125 ] وقلت : يا رسول الله ، إن نساءك يدخل عليهن البر والفاجر ، فلو أمرتهن أن يحتجبن ؟ فنزلت آية الحجاب . واجتمع على رسول الله - صلى الله عليه وسلم - نساؤه في الغيرة ، فقلت لهن : عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن [ التحريم : 5 ] فنزلت كذلك .

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே! என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.( புகாரி-4790 )

நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்என உமர் (ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி (ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த உமர்(ரலி), ‘ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்ஆயிஷா(ரலி) அறிவித்தார். ( நூல்: புகாரி 146)

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்ட போது, நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்து விட்டால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும் என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (66:5ஆவது இறைவசனம்

عَسٰى رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ يُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓٮِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓٮِٕحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبْكَارًا‏

அவர் உங்களை தலாக்சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.
இறங்கிற்று. (  நூல்: புகாரி-4916 )

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:"


وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ‌ ۚ‏

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.


ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ

பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.  என்ற இந்த  வசனங்கள் இறக்கப்பட்ட போது  நான் சொன்னேன் "அல்லாஹ்  படைப்பாளர்களிலெல்லாம் மிக  அழகிய படைப்பாளன் ஆவான்என்று. சற்று நேரத்தில் அல்லாஹ் அப்படியே இறக்கியருளினான்.

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

பிறகு, அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர்  அந்த  இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு,  அச்சதைக் கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர்  அவ்வெலும்புகளை சதையால்  போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம்.  பெரும் அருட்பேறுகள் நிறைந்தவன் மனிதன்.அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிக  அழகிய படைப்பாளன் ஆவான்”. ( அல்குர்ஆன்: 23: 14 ) .

இன்னும்  சில இறைவசனங்களையும் உமர் (ரலி) அவர்களின் ஆசைக்கு இணங்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறக்கியருளினான்.

நயவஞ்சகர்கள் ஜனாஸா தொழுகை சம்பந்தமாக...உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது
لَمَّا مَاتَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ، دُعِيَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ، فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَثَبْتُ إِلَيْهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَتُصَلِّي عَلَى ابْنِ أُبَيٍّ، وَقَدْ قَالَ يَوْمَ كَذَا: كَذَا وَكَذَا، قَالَ: أُعَدِّدُ عَلَيْهِ قَوْلَهُ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «أَخِّرْ عَنِّي يَا عُمَرُ» فَلَمَّا أَكْثَرْتُ عَلَيْهِ قَالَ: «إِنِّي خُيِّرْتُ فَاخْتَرْتُ، لَوْ أَعْلَمُ أَنِّي إِنْ زِدْتُ عَلَى السَّبْعِينَ يُغْفَرْ لَهُ لَزِدْتُ عَلَيْهَا» قَالَ: فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ انْصَرَفَ، فَلَمْ يَمْكُثْ إِلَّا يَسِيرًا، حَتَّى نَزَلَتِ الآيَتَانِ مِنْ بَرَاءَةَ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا} [التوبة: 84] إِلَى قَوْلِهِ {وَهُمْ فَاسِقُونَ} [التوبة: 84] قَالَ: فَعَجِبْتُ بَعْدُ مِنْ جُرْأَتِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ

நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை சலூல் இறந்துவிட்டபோது அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்தபோது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகிறீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படியெல்லாம் சொன்னாரே!என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்கு எண்ணிக் காட்டிக் கூறினேன்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகை புரிந்துவிட்டு, ‘ஒதுங்கிக் கொள்ளுங்கள், உமரே!என்று கூறினார்கள். நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், ‘இவருக்காகப் பாவமன்னின்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரியவருமாயின் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன்என்று கூறினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பினார்கள்.

சற்று நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் பராஅத்’ (9வது) அத்தியாயத்திலிருந்து அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸா) தொழுகை நடத்த வேண்டாம்; அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்தனர். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்தார்கள்எனும் (9:84,85) இரண்டு வசனங்கள் அருளப்பெற்றன. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள்.

موافقته للقرآن الكريم في رغبته الشديدة لتحريم الخمر تحريمًا قطعيّاً كان يدعو عمر بن الخطاب -رضي الله عنه- دائماً ليبيّن الله -تعالى- حرمة الخمر، وظلّ يلحّ بالدعاء حتّى نزلت الآيات القرآنيّة التي حرّمت الخمر تحريماً قطعيّاً؛ فقال -عز وجل-: {إنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّـهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ.

இஸ்லாம் துவங்கி ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர்.அப்போது அது பற்றி எத்தகைய சட்டமும் இல்லாதிருந்ததால், அதுஅனுமதிக்கப்பட்டதாகவே கருதப்பட்டு வந்தது. முஸ்லீம்கள் மதீனா வந்தபின்னர் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களும் சில அன்சாரித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள் : 'அல்லாஹ்வின்தூதரே !  மதுவையும் சூதாட்டத்தையும் பற்றி எங்களுக்கு ஒரு தீர்ப்பு வழங்குவீர்களாக!. அவை அறிவை கெடுக்கின்றன. பொருளை நாசம் செய்கின்றன என்றுகூறினார்கள்' அப்போதுதான் அல்லாஹுத்தாஆலா குர்ஆனில் இந்த வசனத்தை இறக்கிவைத்தான்.

عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عُمَرَ أنَّه قَالَ: لَمَّا نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ قَالَ: اللَّهُمَّ بَيِّن لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا. فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ التِي فِي الْبَقَرَةِ: {يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ [وَمَنَافِعُ لِلنَّاسِ] (1) } فدُعي عُمَرُ فقرئتْ عَلَيْهِ، فَقَالَ: اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا. فَنَزَلَتِ الْآيَةُ التِي فِي النِّسَاءِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النِّسَاءِ: 43] ، فَكَانَ مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَقَامَ الصَّلَاةَ نَادَى: أَلَّا يَقْرَبَنَّ الصَّلَاةَ سكرانُ. فدُعي عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، فَقَالَ: اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا. فَنَزَلَتِ الْآيَةُ التِي فِي الْمَائِدَةِ. فَدَعِي عُمَرُ، فَقُرِئَتْ عَلَيْهِ، فَلَمَّا بَلَغَ: {فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [الْمَائِدَةِ: 91] ؟ قَالَ عُمَرُ: انْتَهَيْنَا، انْتَهَيْنَا

"மதுவையும் சூதாட்டதையும் பற்றி (நபியே) உம்மிடம் அவர்கள்கேட்கிறார்கள். அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சிலபிரயோஜனங்களும் இருக்கின்றன. ஆயினும் இவ்விரண்டின் மூலம் ஏற்படும் பாவம்அவற்றின் பிரயோஜனத்தைவிட மிகப் பெரியதாகும் என்று நீர் பதில் கூறும் (அல்குர்ஆன்)"

மேற்கண்ட இவ்வசனத்தின் மூலம் விடையும் கிடைத்தது. எனினும் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்று இவ்வசனத்தின் மூலம் ஆரம்பத்தில் தடைவிதிக்கப்படவில்லை. அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சிலபிரயோஜனங்களும் இருக்கின்றன என்று மட்டும் கூறப்பட்டதால் பாவம் என்றுகருதிய சிலர் அதை விட்டனர். அதில் சில பலன்கள் உண்டு என கருதியோர் அதை அருந்தினர்.

மது அருந்துதல் அரேபியர்களின் அன்றாட பழக்கமாக இருந்தது. அதனால் பலன்கள் அதிகமுண்டு எனக்கருதி அதனை விடாது சிலர்கள் அருந்தி வந்தனர். முதல்    தடவையிலேயே மது அருந்தக்கூடாது என கடுமையான தடை விதிக்கப்பட்டால் அதனை அமுல் நடத்துவது அவர்களுக்கு சிரமமாகிவிடும். அதனால் தான் சிற்கச்சிறுக பலவிதமாக அதன் கெடுதிகளை உணர்த்திக்கொண்டே வரப்பட்டது.

ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் தோழர்கள் சிலரை அழைத்திருந்தார்கள். விருந்தினருக்கு உணவுபரிமாரப்பட்டது. அதில் பண்டைய வழக்கப்படி மதுவும் வைக்கப்பட்டிருந்ததால்விருந்தினர் அதையும் அருந்தினர்.

மஃரிப் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதால்யாவரும் எழுந்தனர். அவர்களில் ஒருவர் இமாமாக முன் நின்று தொழ வைக்கசென்றார். போதை தலைக்கேறியிருந்த சமயம். அதனால் "காஃபிரூன் என்றஅத்தியாயத்தை ஓதிய அவர் காஃபிர்களே! நீங்கள் வணங்கிக்கொண்டிருப்பதை நான்வணங்க மாட்டேன் என்று இருக்கும் வசனத்தில் வணங்கமாட்டேன் என்பதை வணங்குவேன்என்று மாற்றி ஓதிவிட்டார்.

இதனை உத்தேசித்து உண்மை விசுவாசிகளே ! நீங்கள்போதையாக இருக்கும் நிலையில் தொழுகையின்பால் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன் 4:43) என்னும் வசனம் அடுத்து இறக்கப்பட்டது. போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்றுதான் தடை விதிக்கப்பட்டது.இதனால் மது அருந்துவோர் இரவின் பிற்பகுதி தொழுகையான இஷாவை முடித்துக்கொண்டுமது அருந்துவிட்டு தூங்கிவிடுவர். காலை எழுந்திரிக்கும் போது போதைதெளிந்திருக்கும். 

இந்நிலைசில நாட்கள் நீடித்தது. ஆனால் மது அருந்துவது அறவே தவிர்க்கப்படவில்லை .பின்பு உதுமான் பின் மாலிக் என்பவர் ஒரு விருந்து வைத்து முஸ்லீம்கள் சிலரை அதற்கு அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் ஸஃதுபின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அவ்விருந்தில் ஒட்டகத்தின் தலைபொரித்து வைக்கப்பட்டிருந்த்து. அதனை அனைவரும் ரசித்து புசித்துவிட்டுஅதற்கு மேல் வேண்டிய மட்டும் மதுவை அருந்தினர். மிதமிஞ்சிய போதையால் ஆடலும்பாடலும், குடும்ப பெருமை பற்றிய புகழ்பாக்களும் கிளம்பிவிட்டன. ஸஃதுபின்அபீவக்காஸ்  (ரலி) அவர்களும் ஒரு கவிதை புனைந்து அதில் தன்மரபினரை பெருமைபடுத்தியும் மதினா வாசிகளான அன்சாரிகளை இகழ்ந்தும் பாடினார். இது அன்சாரிகளில் ஒருவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஒட்டகத்தின் எழும்பொன்றை எடுத்து ஸஃது அவர்களின் தலையில் ஓங்கி அடித்துகாயப்படுத்திவிட்டார். 

ஸஃது அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் சென்று முறையிட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் இறைவா! மது விஷயத்தில் தெளிவான கட்டளையைதெரிவிப்பாயாக என்று வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்னர் தான் அறவே மது அருந்தக்கூடாது என்ற கட்டளை பிறந்தது. இதனை தாங்கிய வசனம் அல்மாயிதா என்ற அத்தியாயத்தில் 90, 91 ஆவது வசனமாக வருகிறது. ( நூல்: புகாரி, முஸ்லீம்)

موافقته للقرآن الكريم في بيان حال الاستئذان
دخل أحد الغلمان على عمر بن الخطاب -رضي الله عنه- وهو نائم وقد دعا الله -تعالى- ليبيّن الاستئذان؛

                உமர் (ரலி) அவர்கள் ளுஹருடைய நேரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது சில சிறுவர்களில் ஒரு சிறுவர் திடீரென நுழைந்தார். கண் விழித்து பார்த்த போது உமர் (ரலி) அவர்களின் ஆடை விலகி இருந்ததை உணர்ந்தார்கள். உடனடியாக உமர் ரலி அவர்கள் "அல்லாஹ்விடம் வீட்டில் நுழைவதன் சட்டத்தை தெளிவு படுத்தி ஒரு சட்டத்தை இறக்கியருள வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். அப்போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பின் வரும் நூர் அத்தியாயத்தின் 58 வது  வசனத்தை  இறக்கினான்.

فنزل قوله -تعالى-: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِّن قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ الظَّهِيرَةِ وَمِن بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَّكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُم بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ يُبَيِّنُ اللَّـهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّـهُ عَلِيمٌ حَكِيمٌ}

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் லுஹர்நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

நிறைவாக ஒரு நபிமொழி..

 

وأخرج الترمذي ، عن ابن عمر أن رسول الله - صلى الله عليه وسلم - قال : إن الله جعل الحق على لسان عمر وقلبه . قال ابن عمر : وما نزل بالناس أمر قط فقالوا وقال : إلا نزل القرآن على نحو ما قال عمر

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ் சத்தியத்தை உமரின் நாவிலும், நெஞ்சத்திலும் ஆழப் பதிந்து விட்டான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ  )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சத்திய ஸஹாபாக்களை நேசிக்கும் அவர்கள் சென்ற வழியில் நடைபோடும் நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. நல்ல முயற்சி... சிறந்த தொகுப்பு

    ReplyDelete