விதையாய் விழுந்தவர்கள் 14 பத்ர் ஷுஹதாக்கள்!!!
ரமழான் – (1444 – 2023) தராவீஹ் சிந்தனை:-
17.
16 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 17 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாள் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான நாள். இன்று தான் சிறுபான்மை சமூகமாக இருந்த இந்த உம்மத் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக மகத்தான வெற்றியை பதிவு செய்த நாள்.
ஆம்! பத்ர் போரில் வெற்றி பெற்ற நாள்.இன்று பத்ர் குறித்து சில விஷயங்களைப் பார்ப்போம்.
ஷுஹத்தாக்கள்
உயிர்தியாகிகள் யாரெனில் திருக் கலிமாவை நிலை நாட்டுவதற்காகவும் ஈமானையும், சத்திய சன்மார்க்கத்தை ஸ்திரப்டுத்துவதற்காகவும் இறைநிராகரிப்பாளர்களுடன்
போர்தொடுத்து அந்தப்போரில் இறை நிராகரிப்பாளர்களால் வெட்டப்பட்டு அந்தத் தியாகிகள்
யாவரும் யுத்த களத்தில் மரணத்தைத் தழுவியவர்களாவார்கள்.
ஷுஹாதாக்கள் இல்லை
என்றால் இந்த தீன் பாதுகாக்கப்பட்டிருக்கவோ, இந்த உம்மத்
நிலைத்திருக்கவோ வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
அப்படியான
ஷஹீதுகளைப் பற்றி தான் இன்றைய உரையில் பார்க்க இருக்கிறோம்.
இஸ்லாத்தின்
துவக்க காலத்தில் அன்னை ஸுமைய்யா (ரலி) சத்திய சன்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்காக
வீர மரணம் அடைந்திருந்தாலும் பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்பிரகாரம் பத்ரில்
கலந்து கொண்டு ஷஹீத் ஆன நபித்தோழர்களில் இருந்து தான் ஷஹீத் எனும் அந்தஸ்து இந்த
உம்மத்திற்கு கிடைத்தது. இல்லை அவர்களும் ஷஹீத் தான் என்று சில அறிஞர்கள்
கூறுகின்றனர்.
அந்த வகையில்
முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் 14 நபித்தோழர்கள்
ஷஹீத் - வீரமரணம் அடைந்தார்கள். இங்கிருந்து தான்
ஷஹீத்களின் பட்டியலே துவங்குகிறது என்றும் சில அறிஞர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்!
ஷுஹதாக்களின் மகத்துவம்:-
وَلَا تحسبن الذين قتلوا فى سبيل الله اموانا بل
احيآء عند ربهم يرزقون
‘அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டுப்பட்டு ஷஹீதானவர்களை இறந்தவர்கள் என
எண்ணாதீர்கள். அவர்கள் தங்களின் இறைவனின் சன்னிதானத்தில் உயிருள்ளவர்களாவும், உணவளிக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்
மேற்கூறிய வசனம் குறித்து விளக்கம் கேட்;ட போது நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக கீழ்காணும் ஹதீதை குறிப்பிட்டார்கள்:
ومنها: أنهم {أحياء عند ربهم يرزقون} [آل عمران: 169]
كما في القرآن العزيز. «وأن أرواحهم في جوف طير خضر تسرح في
الجنة حيث شاءت، ثم تأوي إلى قناديل تحت العرش» (رواه مسلم)
‘ஷுஹதாக்களுடைய
உயிர்களானது சுவர்க்கத்தில் உள்ள பச்சை நிற பறவையின் வயிற்றில் வைக்கப்பட்டு, சுவர்க்கத்தில் நினைத்த இடங்களை சுற்றி வரும். பிறகு இறைவனின் சிம்மாசனத்தில்
தொங்க விடப்பட்ட தங்கக் கூண்டில் தஞ்சமடையும் என்று கூறினார்கள். இத்தகைய மாபெரும்
பாக்கியம் பத்ரு ஸஹாபாக்களுக்கும் கிடைத்தது. ( நூல்: புகாரி, முஸ்லிம். )
وروي
عن مجاهد أنه قال : السيوف مفاتيح الجنة . وروي عن رسول الله - صلى الله
عليه وسلم - أنه قال
أكرم
الله تعالى الشهداء بخمس كرامات لم يكرم بها أحدا من الأنبياء ولا أنا أحدها أن
جميع الأنبياء قبض أرواحهم ملك الموت وهو الذي سيقبض روحي وأما الشهداء فالله هو
الذي يقبض أرواحهم بقدرته كيف يشاء ولا يسلط على أرواحهم ملك الموت ، والثاني أن
جميع الأنبياء قد غسلوا بعد الموت وأنا أغسل بعد الموت والشهداء لا يغسلون ولا
حاجة لهم إلى ماء الدنيا ، والثالث أن جميع الأنبياء قد كفنوا وأنا أكفن والشهداء
لا يكفنون بل يدفنون في ثيابهم ، والرابع أن الأنبياء لما ماتوا سموا أمواتا وإذا
مت يقال قد مات والشهداء لا يسمون موتى ، والخامس أن الأنبياء تعطى لهم الشفاعة
يوم القيامة وشفاعتي أيضا يوم القيامة وأما الشهداء فإنهم يشفعون في كل يوم فيمن
يشفعون...
ஷுஹதாக்களைப்
பற்றி நபிகளார்,
‘ ஷுஹதாக்களை இறைவன் ஐந்து சிறப்புக்களை கொண்டு கண்ணியம்
செய்திருக்கிறான். அதுபோன்ற சிறப்பை நான் உட்பட எந்த நபிமாரும் பெறவில்லை.
அவையாவன:
1.எல்லா நபிமார்களின் உயிர்களையும் மௌத்தின் அதிபதி இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள்தான் கைப்பற்றுவார்கள். ஆனால் ஷுஹதாக்களின் உயிர்களை அல்லாஹ்வே
கைப்பற்றுவான்.
2.அனைத்து நபிமார்களும் மரணமானபின் குளிப்பாட்டப்படுவார்கள். அவ்வாறே நானும்
குளிப்பாட்டப்படுவேன். ஷுஹதாக்கள் குளிப்பாட்டப்பட மாட்டார்கள். வெட்டுண்ட
காயங்களுடன் அடக்கப்படுவார்கள். இந்த உலகின் தண்ணீர் பக்கம் அவர்கள் தேவையாக
மாட்டார்கள்.
3.
எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு கஃபனிடப்படுவார்கள்.
நானும் கஃபனிடப்படுவேன். ஆனால் ஷுஹதாக்கள் கஃபனிடப்பட மாட்டார்கள். அவர்கள் போரில்
அணிந்திருந்த உடைகளுடனே அடக்கம் செய்யப்படுவார்கள்.
4.
எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு அவர்களை மரணித்தவர்கள்
என்று கூறப்படும். நானும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து
விட்டார்கள் என்று கூறப்படும். ஆனால் ஷுஹதாக்கள் மரணித்து விட்டால் அவர்களை
மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என்று ஒரு திருமறைவசனத்திலும், மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள் என்று மேற்கூறிய வசனத்திலும் இறைவனே
கூறுகிறான்.
5.
எல்லா நபிமார்களுக்கும் மறுமைநாளில் சிபாரிசு செய்யும்
உரிமை வழங்கப்படும். ஆனால் ஷுஹதாக்கள் ஒவ்வொரு நாளும் சிபாரிசு செய்து கொண்டு
இருக்கிறார்கள் என நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ஸீர் குர்துபி )
பத்ர் யுத்தம் பல்வேறு வகையான படிப்பினைகளையும், ஞானங்களையும் இந்த உம்மத்திற்கு வழங்கும்!
அப்படியான படிப்பினைகளில் ஒன்று அன்றைய அவர்களின் உயிர்த்
தியாகங்களின் ஊடாகவே பத்ரின் வெற்றியும் இந்த உம்மத்தின் பரந்து விரிந்த இந்த
வளர்ச்சியும்.
பத்ரு களம் கண்ட
வீரத் தியாகிகள் - ஷுஹதாக்களின் பெயர்களின்
பட்டியல் இது!
ஆறு முஹாஜிர்கள் எட்டு அன்ஸாரிகள். (இதில் 2 அவ்ஸ் கோத்திரம் 6 கஸ்ரஜ் கோத்திரம்)
01.
உபைதா இப்னுல்
ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) (முஹாஜிர் - மக்கா)
02.
உமைர் இப்னு அபீ
வக்காஸ் (ரலி) (முஹாஜிர் - மக்கா)
03.
துஷ்ஷிமாலைன்
இப்னு அப்து அம்ர்(ரலி) (முஹாஜிர் - மக்கா)
04
. ஆகில் இப்னுல்
புகைர் (ரலி) (முஹாஜிர் - மக்கா)
05.மிஹ்ஜஉ இப்ன ஸாலிஹ் (ரலி)
மவ்லா உமர் (ரலி) (முஹாஜிர் - யமன்)
06.
ஸஃப்வான் இப்னு
வஹப் (ரலி) (முஹாஜிர்)
07.உமைர் இப்னுல் ஹம்மாம் (ரலி) (கஸ்ரஜ்)
08
.யஸீது இப்னுல்
ஹாரிஸ் இப்னு கைஸ்(ரலி) (கஸ்ரஜ்)
09
.அவ்ஃப் இப்னு
ஹாரிஸ் (ரலி) (கஸ்ரஜ்)
10
.முஅவ்வித் இப்னு
ஹாரிஸ் (ரலி) (கஸ்ரஜ்)
11
.ஸஅத் இப்னு
ஃகைஸமா (ரலி) (அவ்ஸ்)
12
.முபஷ்ஷிர் இப்னு
அப்துல் முன்திர்(ரலி) (அவ்ஸ்)
13
.ஹாரிஸா இப்னு
ஸுராக்கா (ரலி) (கஸ்ரஜ்)
14
.ராஃபிஃ இப்னுல்
முஅல்லா அல் அஜ்லான் (ரலி) (கஸ்ரஜ்)
இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயமும் மனதை
உலுக்கும் விஷயமும் ஒன்று உண்டு.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டதன் பின்னர் முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் இருவரை
சகோதரர்களாக அறிவித்து ஒருவர் இன்னொருவரின் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும்.
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சகோதர உறவை ஏற்படுத்தி இருப்பார்கள்.
பத்ர் ஷுஹாதாக்களில் 8 ஷுஹதாக்கள் நபி ஸல் அவர்களால் சகோதரத்துவ
உறவை ஏற்றுக் கொண்டவர்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை மரணங்களில் கூட
ஒன்றிணைத்தான்.
1. ஸஃப்வான் இப்னு வஹப் (ரலி) (முஹாஜிர்) -
ராஃபிஃ இப்னுல் முஅல்லா அல் அஜ்லான் (ரலி) (கஸ்ரஜ்)
2. உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னு அப்துல்
முத்தலிப் (ரலி) (முஹாஜிர் - மக்கா) - உமைர் இப்னுல் ஹுமாம் (ரலி) (கஸ்ரஜ்)
3. துஷ்ஷிமாலைன் இப்னு அப்து அம்ர்(ரலி) (முஹாஜிர் - மக்கா) - யஸீது இப்னுல்
ஹாரிஸ் இப்னு கைஸ்(ரலி) (கஸ்ரஜ்)
4. ஆகில் இப்னுல் புகைர் (ரலி) (முஹாஜிர் -
மக்கா) - முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி) (அவ்ஸ்)
1. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி):-
يقول
سعد بن أبي وقاص: لما كان يوم بدر وقف عمير أخي في صفوف المجاهدين، وهو بعد ابن
ستة عشر عاماً أو أقل، يتخفى من رسول الله، قلت له: مالك؟، قال: أخاف أن يراني
رسول الله صلى الله عليه وسلم فيستصغرني فيردني، وأنا أحب الخروج للجهاد لعلَّ
الله يرزقني الشهادة، وعندما رآه النبي صلى الله عليه وسلم استصغره فرده، فبكى
عمير بكاءً شديداً، فرق النبي له، وأجازه مع المقاتلين، بعد أن لمس حماسته وغيرته
الشديدتين، وكان مع عمير سيف طويل يكاد يكون أطول منه، لا يستطيع إمساكه والضرب
به، فربط السيف له في يده، قال سعد: فكنت أعقد له حمائل سيفه من صغره، فقتل في بدر
وهو ابن ست عشرة سنة.
பத்ர் யுத்தத்தின்
வீரர்களின் அணிவகுப்பை நபி ஸல் அவர்கள் சரி செய்து கொண்டிருந்த போது இளம் சிறுவர்
ஒருவர் தன் பெருவிரல் மீது நின்று தன்னையும் பெரியவராக காட்டிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் நபி ஸல் அவர்களின் கண்களில் பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒளிந்து
ஒளிந்து கூட்டத்தின் ஊடாக சென்றார்.
அது யார் என்று
பார்த்தால் 16
வயதே நிரம்பிய உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள்.
ஸஅத் இப்னு அபீ
வக்காஸ் (ரலி) அவர்களின் சகோதரர். ஸஅத் (ரலி) இஸ்லாத்தை ஏற்ற சிறிது நாளிலேயே
அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
சிறுவயதில்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் அலீ (ரலி) ஃபாத்திமா (ரலி) ஆகியோருக்கு அடுத்த
இடத்தில் இருக்கின்றார்கள்.
பத்ரிலே
கூட்டத்தின் இடையே ஒளிந்து ஒளிந்து தம் சகோதரர் சென்ற காட்சியைக் கண்ட ஸஅத் (ரலி)
அவர்கள் அருகில் வந்து விசாரிக்க தம்மால் தூக்கவே முடியாத வாளை கையில் ஏந்திக்
கொண்டு தாமும் யுத்தத்தில் பங்கெடுக்க வந்துள்ளதாகவும், எதிரிகளோடு சண்டையிட்டு வீரமரணம் அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் கூறிய
உமைர் (ரலி) எங்கே நபி ஸல் அவர்கள் என்னைப் பார்த்து "நீ சிறுவனாக
இருக்கிறாய் உனக்கு போரில் பங்கு பெற அனுமதி தர முடியாது" என்று திருப்பி
அனுப்பி விடுவார்களோ என்று பயந்தே இப்படி ஒளிந்து கொண்டு செல்கிறேன்"
என்றார்.
அவர் பயந்தது
போலவே நபி ஸல் அவர்கள் உமைரைப் பார்த்து விட்டார்கள். அருகில் அழைத்து நீ சிறுவனாக
இருக்கிறாய். வீட்டுக்கு போ என்று சொல்லி விட்டார்கள். அடுத்த கணமே அழுது ஆர்ப்பரித்த
உமைரை "நீயும் கலந்து கொள்ளலாம்" என்ற வார்த்தை ஆசுவாசப் படுத்தியது.
பத்ர் யுத்தத்தில்
பங்கேற்று இளவயதில் ஷஹீத் ஆன முதலாமவர் என்ற சிறப்பைப் பெற்றார்கள்.
2. துஷ்ஷிமாலைன் (ரலி):-
- عبد الرزاق عن معمر عن الزهري عن أبي سلمة بن عبد الرحمن وأبي بكر بن
سليمان بن أبي حثمة عن أبي هريرة1 - رَضِيَ اللَّهُ عَنهُ - قال: صلى النبي صلى
الله عليه وسلم الظهر أو العصر، فسها في ركعتين وانصرف، فقال له ذو الشمالين بن
عبد عمرو: - وكان حليفا لبني زهرة - أخففت الصلاة أو نسيت؟ فقال النبي صلى الله
عليه وسلم: ما يقول ذو اليدين؟ فقالوا: صدق يا نبي الله! فأتم بهم الركعتين اللتين
نقص.
وصح عن
أبي هريرة أنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى صلاتي العشي، فسلم
من ركعتين فقال له ذو اليدين، وأبو هريرة أسلم عام خيبر بعد بدر بأعوام، فهذا بين
لك أن ذا اليدين الذي راجع النبي صلى الله عليه وسلم في الصلاة يومئذ ليس بذي
الشمالين، وكان الزهري على علمه بالمغازي يقول: إنه ذو الشمالين المقتول ببدر، وإن
قصة ذي الشمالين كانت قبل بدر، ثم أحكمت الأمور بعد ذلك
أخبرنا
أبو ياسر عبد الوهاب بن هبة الله بإسناده، عن عبد الله بن أحمد بن حنبل، قال:
حدثني محمد بن المثنى، أخبرنا معدي بن سليمان قال: حدثنا شعيث بن مطير، عن أبيه
مطير، ومطير حاضر يصدق مقالته، قال: " يا أبتاه، أليس أخبرتني أن ذا اليدين
لقيك بذي خشب، وأخبرك أن رسول الله صلى الله عليه وسلم صلى بهم إحدى صلاتي العشي،
وهي العصر، فصلى ركعتين ثم قال: وخرج سرعان الناس وهم يقولون: قصرت الصلاة، وقام
واتبعه أبو بكر وعمر، فلحقه ذو اليدين فقال: يا رسول الله، أقصرت الصلاة أم نسيت؟
قال: " ما قصرت الصلاة ولا تناسيت
ثم أقبل
على أبي بكر وعمر فقال: " ما يقول ذو اليدين "؟ فقالا: صدق يا رسول
الله. فرجع رسول الله وئاب الناس، فصلى ركعتين، ثم سجد سجدتين للسهو "
ஒரு நாள்) நபி
(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நான்கு ரக்அத் தொழுகையான) லுஹ்ர் தொழுகையை (மறந்து)
இரண்டு ரக்அத்களாகத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு
எழுந்து பள்ளிவாசலின் தாழ்வாரத்திலிருந்த (பேரீச்சங்) கட்டையினை நோக்கிச் சென்று
அதன் மீது தம் கையை வைத்து (நின்று) கொண்டார்கள். அன்று (பள்ளிவாசலில் இருந்த)
மக்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேச அஞ்சினர்.
மக்களில் சிலர் வேகமாக வெளியேறிச் செல்லலாயினர். அப்போது அவர்கள் ‘(தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?’ என்று
பேசிக்கொண்டனர். மக்களில் (‘ம்ர்பாக்’ எனும் இயற்பெயருடைய) ஒருவரும் இருந்தார். அவரை நபி (ஸல்) அவர்கள் ‘இரண்டு கைக்காரர்’
(துல் யதைன்) என்று அழைப்பது வழக்கம். அவர், ‘அல்லாஹ்வின் நபியே! தாங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(என் எண்ணப்படி)
நான் மறக்கவுமில்லை. தொழுகை குறைந்துவிடவுமில்லை” என்று கூறினார்கள். அவர், ‘இல்லை தாங்கள்
மறந்துவிட்டீர்கள்,
இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார்.
‘இரண்டு கைக்காரர்
(துல்யதைன்) சொல்வது உண்மையா?’ என (மக்களிடம்) நபி (ஸல்)
அவர்கள் கேட்டார்கள். (மக்களும் உண்மையே என்று தெரிவித்தனர்.) பிறகு நபி (ஸல்)
அவர்கள் எழுந்து இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தி ‘ஸலாம்’
கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (‘அல்லாஹு அக்பர் -அல்லாஹ் மிகப் பெரியவன்’ எனக்) கூறி ‘முன்பு செய்ததைப் போன்று’ அல்லது ‘அதை விடவும் நீண்ட’
(மறதிக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். பின்னர்
(சிரவணக்கத்திலிருந்து) எழுந்து ‘தக்பீர்’ கூறினார்கள். பின்னர் மீண்டும் ‘முன்பு செய்ததைப் போன்று’ அல்லது ‘அதைவிட நீளமாக’
சிரவணக்கம் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி ‘தக்பீர்’
கூறினார்கள். ( புகாரி- 6051 அபூஹுரைரா (ரலி) )
துல் யதைன்
என்றும் துஷ்ஷிமாலைன் என்றும் பெயர் குறிப்பிடப்படும் இருவரும் ஒருவர் தான் என்று
வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இஸ்லாத்தை ஆரம்ப
காலத்திலேயே ஏற்றுக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். இந்த சம்பவத்தின் வாயிலாக இந்த
நபித்தோழர் அறியப்படுகின்றார்கள்.
3. ஆகில் இப்னு புகைர் (ரலி):-
نسبه
محمد بن سعد ، وقال : كان اسمه غافلا ، فسماه رسول الله - صلى الله عليه وسلم -
عاقلا .
وكان
أبو البكير حالف نفيل بن عبد العزى جد عمر ، وكان أبو معشر ، والواقدي يقولان :
ابن أبي البكير . قال : وكان موسى بن عقبة ، وابن إسحاق ، وابن الكلبي يقولون :
ابن البكير .
أنبأنا
محمد بن عمر ، حدثنا محمد بن صالح ، عن يزيد بن رومان قال : أسلم غافل ، وعامر ،
وإياس ، وخالد ، بنو أبي البكير جميعا ، وهم أول من بايع في دار الأرقم .
காஃபில் என்று
அறியப்படும் இந்த நபித்தோழர் தம் மூன்று சகோதரர்களுடன் (ஆமிர், இயாஸ்,
காலித் ரலி அன்ஹும்) தாருல் அர்க்கமில் வந்து இஸ்லாத்தை
தழுவினார்கள். மேலும்,
தாருல் அர்க்கமில் வந்து முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டதும் பைஅத் செய்ததும் இவர்களே!
அப்போது இவர்களின்
பெயரை நபி ஸல் அவர்கள் ஆகில் என்று மாற்றினார்கள்.
وأنبأنا
محمد بن عمر ، حدثنا عبد الجبار بن عمارة ، عن عبد الله بن أبي بكر قال : خرج بنو
أبي البكير مهاجرين فأوعبوا ، رجالهم ونساؤهم ، حتى غلقت أبوابهم . فنزلوا على
رفاعة بن عبد المنذر بالمدينة . ثم قال : وقالوا : وآخى رسول الله - صلى الله عليه
وسلم - بين عاقل وبين مبشر بن عبد المنذر ، فقتلا معا ببدر
.
பின்னர் இவர்கள்
வீட்டுக்கு வந்த போது இவர்கள் இஸ்லாத்தை தழுவியதை அறிந்த குடும்பத்தார்கள் இவர்கள்
நால்வரையும் வீட்டை விட்டு வெளியேறும் படி கூறி விட்டு கதவை பூட்டிக்கொண்டனர.
நான்கு பேரும் ஹிஜ்ரத் செய்து வந்து ரிஃபாஆ இப்னு அப்துல் முன்திர் (ரலி)
அவர்களிடம் தஞ்சம் புகுந்தனர்.
இதில் ஆகில் இப்னு
புகைர் (ரலி) அவர்கள் பத்ரில் ஷஹீத் ஆனார்கள். அப்போது அவர்களின் வயது 34.
4. உபைதா இப்னு ஹாரிஸ் (ரலி):-
நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனாரான இவர்கள் நபி
ஸல் அவர்களை விட 10
வயது மூத்தவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் தாருல் அர்க்கமில் நுழைவதற்கு முன்பாகவே
தங்களது இரு சகோதரர்களோடு இஸ்லாத்தை தழுவினார்கள்.
தங்களின் இரு சகோதரர்கள் மற்றும் மிஸ்தஹ் இப்னு உஸாஸா (ரலி)
ஆகியோரோடு இணைந்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டார்கள்.
நபி {ஸல்} அவர்கள்
மக்காவில் வாழும் போது பிலால் (ரலி) அவர்களுடனும் மதீனா வந்த பின்னர் அவர்களுடனும்
சகோதர உறவை ஏற்படுத்தினார்கள்.
أخبرنا عبدالواحد بن أحمد المليحي، أخبرنا أحمد بن عبدالله النعيمي،
أخبرنا محمد بن يوسف، أخبرنا محمد بن إسماعيل، أخبرنا حجاج بن منهال، حدثنا
المعتمر بن سليمان، قال: سمعتُ أبي قال: أخبرنا أبو مجلز، عن قيس بن عباد، عن علي
بن أبي طالب قال: أنا أول من يجثو بين يدي الرحمن للخصومة يوم القيامة، قال قيس:
وفيهم نزلت: ﴿ هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي
رَبِّهِمْ ﴾، قال: هم الذين بارزوا يوم بدر: علي
وحمزة وعبيدة، وشيبة بن ربيعة، وعتبة بن ربيعة، والوليد بن عتبة. قال محمد بن
إسحاق خرج – يعني: يوم بدر- عتبة بن ربيعة بين أخيه شيبة بن ربيعة وابنه الوليد بن
عتبة، ودعا إلى المبارزة فخرج إليه فتية من الأنصار ثلاثة: عوف ومعوذ ابنا الحارث،
وأمهما عفراء، وعبدالله بن رواحة، فقالوا: من أنتم؟ فقالوا: رهط من الأنصار،
فقالوا حين انتسبوا: أكفاء كرام، ثم نادى مناديهم: يا محمد، أخْرِجْ إلينا أكفاءنا
من قومنا، فقال رسول الله صلى الله عليه وسلم: قم يا عبيدة بن الحارث، ويا حمزة بن
عبدالمطلب، ويا علي بن أبي طالب، فلما دَنَوا قالوا: من أنتم؟ فذكروا فقالوا: نعم
أكفاء كرام، فبارز عبيدةَ، وكان أسن القوم عتبة، وبارز حمزةُ شيبةَ،
குறைஷிகளின் மிக
தேர்ச்சி பெற்ற குதிரை வீரர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படைக்கு
முன்னால் வந்தனர். அவர்கள் உத்பா இப்னு ரபிஆ, ஷைபா இப்னு ரபிஆ, வலீது இப்னு உத்பாவாகும். இவர்களை எதிர்க்க மூன்று அன்சாரி வாலிபர்களான அவ்ஃப்
இப்னு ஹாரிஸ்,
முஅவ்வித் இப்னு ஹாரிஸ், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா
(ரழி) ஆகியோர் களத்தில் குதித்தனர். இம்மூவடரிமும் அந்த எதிரிகள் “நீங்கள் யார்?”
என்றனர். அதற்கு அவர்கள் “நாங்கள் மதீனாவாசிகள்”
என்றனர். அதற்கு அந்த எதிரிகள், “சங்கைக்குரிய நீங்கள் எங்களுக்கு நிகரானவர்கள்தான். ஆனால் உங்களிடம்
எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் நாடி வந்திருப்பதெல்லாம் எங்கள்
தந்தையுடைய சகோதரர்களின் மக்களைத்தான் என்றனர். பின்பு அவர்களில் ஒருவன் “முஹம்மதே! எங்களது இனத்தில் எங்களுக்கு நிகரானவரை எங்களிடம் அனுப்பும்!” என்று கத்தினான்.
நபி (ஸல்)
அவர்கள். “உபைதா இப்னு ஹாஸே! எழுந்து செல்லுங்கள்! ஹம்ஜாவே! எழுந்து செல்லுங்கள்! அலீயே!
எழுந்து செல்லுங்கள்!”
என்றார்கள்.
இம்மூவரும் அந்த எதிரிகளுக்கருகில் செல்ல, அவர்கள் “நீங்கள் யார்?”
என்றனர். இவர்கள் தங்களைப் பற்றி சொன்னதும் “சங்கைமிக்க நீங்கள் எங்களுக்குப் பொருத்தமானவர்களே” என்றனர். இம்மூவரில் வயதில் மூத்தவரான உபைதா (ரழி) எதிரி உத்பாவுடனும், ஹம்ஜா (ரழி) எதிரி ஷைபாவுடனும், அலீ (ரழி) எதிரி
வலீதுடனும் மோதினர். (இப்னு ஹிஷாம்)
ஆனால், ஹம்ஜாவும் அலீயும்
தங்களது எதிரிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் அடுத்த வினாடியே அவ்விருவரையும்
கொன்றுவிட்டனர். ஆனால்,
உபைதாவும் உத்பாவும் சண்டை செய்து கொண்டதில் இருவருக்கும்
பலத்த காயமேற்பட்டது. உபைதா (ரழி) அவர்களின் கால் வெட்டுண்டு விழுந்தது. இதைக்
கண்ட ஹம்ஜா (ரழி) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் உத்பா மீது பாய்ந்து அவனை
வெட்டிக் கொன்றார்கள். அதற்குப் பிறகு உபைதாவை சுமந்து கொண்டு படைக்குத்
திரும்பினர். உபைதா (ரழி) இதனால் நோய்வாய்ப்பட்டு இப்போருக்குப் பின் 4 அல்லது 5
நாட்கள் கழித்து மதீனாவிற்கு செல்லும் வழியில் ‘ஸஃப்ரா’
என்ற இடத்தில் இறந்தார்கள்.
(இறைநம்பிக்கையாளர்கள்,
இறைமறுப்பாளர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள்
இறைவனைப் பற்றி தர்க்கித்தனர். ஆகவே, அவர்களில் எவர் (உண்மையான
இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார்
செய்யப்பட்டிருக்கிறது. (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டு இருக்கும் தண்ணீர் அவர்களுடைய
தலைகளின் மீது ஊற்றப்படும். (அல்குர்ஆன் 22:19)
இந்த வசனம் தங்கள் விஷயத்தில்தான் இறங்கியது என்று அலீ
(ரழி) சத்தியமிட்டு கூறுகிறார்கள். நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்களில் இவர்களே முதல்
ஷஹீத் ஆவார்கள்.
كان عبيدة ذا منزلة كبيرة عند رسول الله (ص) ويدلنا حديثه يوم الخندق
على مكانته السامية عندما برز علي رضي الله عنه لقتال عمرو بن عبد ود العامري
فتوجه (ص) بالدعاء وقال: اللهم إنك أخذت مني عبيدة بن الحارث يوم بدر، وحمزة بن
عبد المطلب يوم أحد، وهذا علي فلا تدعني فرداً وأنت خير الوارثين.
நபி {ஸல்}
அவர்களிடம் உபைதா (ரலி) அவர்களுக்கு தனிச் சிறப்பு இருந்தது. கந்தக் யுத்தத்தின்
போது அம்ர் இப்னு அப்த் உத் என்பவனை களத்தில் நேரடியாக அலீ (ரலி) அவர்கள் எதிர்
கொண்டு சண்டையிட்ட போது நபி ஸல் அவர்கள் "அல்லாஹ்வே! பத்ரிலே நீ என்னிடம்
இருந்து உபைதாவை எடுத்துக் கொண்டாய்! உஹதிலே ஹம்ஸாவை எடுத்துக் கொண்டாய்! இதோ
இப்போது அலீ (ரலி) அவர்கள் எதிரியைச் சந்தித்து போரிட்டுக் கொண்டிருக்கின்றார்.
அல்லாஹ்வே! என் குடும்பத்தார்களை என்னை விட்டும் பிரித்து என்னை தனிமையில் விட்டு
விடாதே! நீ அனந்தரம் கொள்பவர்களில் மிகச் சிறந்தவனாவாய்!" என்று பிரார்த்தித்தார்கள்.
5. உமைர் இப்னுல் ஹுமாம் (ரலி):-
قال رسول الله صلى الله عليه وسلم: قوموا إلى جنة
عرضها السماوات والأرض. قال عمير بن الحمام الأنصاري: يا رسول الله، جنة عرضها
السماوات والأرض؟ قال: نعم. قال: بَخٍ بَخٍ. فقال رسول الله صلى الله عليه وسلم:
ما يحملك على قولك بَخٍ بَخٍ؟ قال: لا والله يا رسول الله إلا رجاءه أن أكون من
أهلها. قال: فإنك من أهلها. فأخرج تمرات من قرنه فجعل يأكل منهن ثم قال: لئن أنا
حييت حتى آكل تمراتي هذه إنها لحياة طويلة، قال: -أي الراوي- فرمى بما كان معه من
التمر ثم قاتلهم حتى قُتل" رواه مسلم.
அனஸ் (ரலி)
அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதரும் அவர்களது தோழர்களும் பத்ருக் களத்திற்கு
இணை வைப்பவர்களை விட முந்திச் சென்றுவிட்டார்கள். இணை வைப்பவர்களும் வந்து
விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் அங்கு
வருவதற்கு முன்பாக உங்களில் எவரும் எந்தக் காரியத்திலும் இறங்கி விட வேண்டாம்’ என்று உத்தரவிட்டார்கள்.
இணை வைப்பவர்கள் (போர் புரிய) நெருங்கியதும் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள்,
‘சுவனத்தின் பக்கம் செல்லுங்கள். அதனுடைய விசாலம் வானங்கள்
பூமியை ஒத்ததாகும்’
என்று கூறினார்கள். உமைர் பின் அல் ஹுமாம் என்ற அன்சாரித்
தோழர் “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் விசாலம் வானங்கள் பூமியின் விசாலத்திற்கு
இணையானதா?”
என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அதற்கு அவர் ஓஹோ என்றார்.
“நீர் ஓஹோ,
ஓஹோ என்று கூறுவதன் காரணம் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சுவனவாசியாக வேண்டும் என்ற
எதிர்பார்ப்பிலேயே தவிர நான் அவ்வாறு கூறவில்லை” என்று பதிலளித்தார். ‘நீ சுவனவாதி தான்’
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர் தன் பையிலிருந்த பேரீத்தம் பழங்களை வெளியே எடுத்து அவற்றை
சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவர், “நான் இந்தப்
பழங்களை சாப்பிட்டு முடிக்கும் வரை உயிர் வாழ்ந்தேன் என்றால் நிச்சயமாக அது நீண்ட
வாழ்க்கை தான்”
என்று கூறி தன்னிடம் இருந்த பேரீத்தங்கனிகளை தூக்கி
வீசினார். பிறகு போராடி கொல்லப்பட்டார். ( நூல்: முஸ்லிம்-3858 (3520) )
எனக்கு நபி (ஸல்) அவர்கள்
சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொன்ன பிறகும் இந்த பேரீத்தம்பழங்களைச் சாப்பிடுவதற்காக
நான் கால தாமதம் செய்தால் இந்த உலகத்தில் ஒரு பெரிய வாழ்க்கையை வாழ்ந்தவன் ஆவேன் என்று
அந்த நபித் தோழர் சொல்வது உண்மையில் சிந்திக்கத் தக்க வைர வரிகளாகும்.
مُوسَى بْن عقبة، وقتل ببدر، وهو أول قتيل من الأنصار فِي الْإِسْلَام
فِي حرب، وكان رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ آخى بينه،
وبين عبيدة بْن الحارث المطلبي، فقتلا يَوْم بدر جميعًا.
அன்ஸாரிகளில்
முதல் ஷஹீதும் இவர் தான். முப்பது வயதைக் கடந்த இளம் நபித்தோழர் இவர்கள்.
6. மிஹ்ஜஉ இப்னு ஸாலிஹ் மவ்லா உமர் (ரலி):-
ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை தழுவியவர்களில் இவரும் ஒருவர்.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا بَكْرُ
بْنُ سَهْلٍ، ثنا عَبْدُ الْغَنِيِّ بْنُ سَعِيدٍ، ثنا مُوسَى بْنُ عَبْدِ
الرَّحْمَنِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَعَنْ
مُقَاتِلٍ، عَنِ الضَّحَّاكِ، عَنِ ابْنِ عَبَّاسٍ: « {وَلَا تَطْرُدِ الَّذِينَ
يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ» } [الأنعام:
52] يُرِيدُ بِلَالًا، وَصُهَيْبًا، وَعَمَّارًا وَخَبَّابًا، وَعُتْبَةَ بْنَ
غَزْوَانَ، وَمِهْجَعًا مَوْلَى عُمَرَ , وَأَوْسِ بْنِ خَوْلِيٍّ فِي أَصْحَابِهِ "
- حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَحْمَدَ
الْمُقْرِئُ، ثنا أَحْمَدُ بْنُ فَرَجٍ، ثنا أَبُو عُمَرَ الْمُقْرِئُ، ثنا
مُحَمَّدُ بْنُ مَرْوَانَ، عَنِ الْكَلْبِيِّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ
عَبَّاسٍ، قَالَ: " نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {وَأَنْذِرْ بِهِ الَّذِينَ
يَخَافُونَ} [الأنعام: 51] فِي بِلَالٍ، وَصُهَيْبٍ، وَعَمَّارٍ، وَمِهْجَعٍ،
وَعَامِرِ بْنِ فُهَيْرَةَ، وَخَبَّابٍ، وَسَالِمٍ
இவர்கள் தவிர இன்னும் சில நபித்தோழர்கள் குறித்தே அல் அன்ஆம்
சூராவின் 50 & 52 வசனங்கள் இறக்கியருளப்பட்டதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறினார்கள்.
حَدَّثَنَا فَارُوقٌ الْخَطَّابِيُّ، ثنا زِيَادُ
بْنُ الْخَلِيلِ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، ثنا مُحَمَّدُ بْنُ
فُلَيْحٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ: " فِي تَسْمِيَةِ
مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمُهَاجِرِينَ مِنْ بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ:
مِهْجَعٌ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنَ الْيَمَنِ , كَانَ أَوَّلَ قَتِيلٍ
رُمِيَ بِسَهْمٍ فِي سَبِيلِ اللهِ , حَلِيفٌ لَهُمْ
"
பத்ரு போரில் முதன் முதலாக ஷஹீதானவர் மிஹ்ஜஃ என்ற கறுப்பு
நிற அடிமையாவார். எமனைச் சார்ந்த இவர்களை உமர் (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி
பின்னர் விடுதலை செய்தார்கள்.
மேலும், பத்ரில் முதன் முதலாக ஷஹீத் வீர மரணம் அடைந்தவர்களும் இவர்கள் தாம். யமனில்
பிறந்து அடிமையாக சந்தையில் விற்கப்பட்டு, அல்லாஹ்வின் கவனத்தை
ஈர்த்து ஹிஜ்ரத் செய்து முதல் பத்ரின் முதல் ஷஹீத் எனும் அந்தஸ்தை அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இவருக்கு வழங்கினான்.
وقال مقاتل : نزلت في مهجع مولى عمر بن الخطاب
، كان أول قتيل من المسلمين يوم بدر ، رماه عمرو بن
الحضرمي بسهم فقتله ، فقال النبي - صلى الله عليه وسلم - [ يومئذ ] : " سيد
الشهداء مهجع ، وهو أول من يدعى إلى باب الجنة من هذه الأمة " .
நபி {ஸல்} அவர்கள்
மிஹ்ஜஉ (ரலி) பத்ரில் ஷஹீதாக்கப்பட்ட அந்த நாளில் "ஷுஹதாக்களின் தலைவர்
மிஹ்ஜஉ என்று கூறி விட்டு,
இந்த உம்மத்தில் சுவனத்தின் வாசல் வழியாக முதன் முதலாக
அழைக்கப்படுகிற ஷஹீத் இவரே" என்று கூறினார்கள்.
وأخرج الطبراني ، وَابن حبان في الضعفاء ، وَابن عساكر عن ابن
عباس
رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم اتخذوا السودان فان ثلاثة
منهم سادات أهل الجنة ، لقمان الحكيم ، والنجاشي ، وبلال المؤذن قال الطبراني :
أراد الحبشة.
وأخرج ابن عساكر عن عبد الرحمن بن يزيد ، عَن جَابر رضي
الله تعالى عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم سادات السودان أربعة ،
لقمان الحبشي ، والنجاشي ، وبلال ، ومهجع.
கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில்
நான்கு கறுப்பு நிற மனிதர்கள் சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள். 1. எத்தியோப்பியா நாட்டு அதிபரான கருப்பர் இன மக்களின் மன்னர் நஜ்ஜாஷி 2. லுக்மானுல் ஹகீம் (அலை)
3. பிலால் (ரலி) 4. பத்ருப் போரில்
முதலில் ஷஹீதான மிஹ்ஜஃ (ரலி)
ஆகியோர் எனக் கூறினார்கள். – நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்
7. ஸஅத் இப்னு ஃகைஸமா (ரலி):-
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي مُوسَى
بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ عَنْ أَبِيهِ قَالَ: آخَى رَسُولُ
اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَ سَعْدِ بْنِ خَيْثَمَةَ
وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الأَسَدِ. قَالُوا جَمِيعًا: وَكَانَ سعد بْنُ
خَيْثَمَةَ أَحَدُ النُّقَبَاءِ الاثْنَيْ عَشَرَ مِنَ الأَنْصَارِ. وَلَمَّا
نَدَبَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْمُسْلِمِينَ
إِلَى الْخُرُوجِ إِلَى عِيرِ قُرَيْشٍ فَأَسْرَعُوا قَالَ خَيْثَمَةُ بْنُ
الْحَارِثِ لابْنِهِ سَعْدٍ: إِنَّهُ لا بُدَّ لأَحَدِنَا مِنْ أَنْ يُقِيمَ
فَآثِرْنِي بِالْخُرُوجِ وَأَقِمْ مَعَ نِسَائِكَ. فَأَبَى سَعْدٌ وَقَالَ: لَوْ
كَانَ غَيْرُ الْجَنَّةِ آثَرْتُكَ بِهِ. إِنِّي أَرْجُو الشَّهَادَةَ فِي وَجْهِي
هَذَا. فَاسْتَهَمَا فَخَرَجَ سَهْمُ سَعْدٍ فَخَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ -
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى بَدْرٍ فَقُتِلَ يَوْمَئِذٍ. قَتَلَهُ
عَمْرُو بْنُ عَبْدِ وُدٍّ وَيُقَالُ طُعَيْمَةُ بْنُ عَدِيٍّ.
நபி (ஸல்) அவர்கள் பத்ரு போருக்கு தயாரான போது ஃகைஸமா (ரலி)
அவர்கள் தன்னுடைய மகனான ஸஅத் இப்னு ஃகைஸமா (ரலி) அவர்களிடம் ‘மகனே! நீ உம் மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான் போரிடப் போகிறேன்’ என வேண்டினார்கள். அதற்கு ஸஅத் இப்னு ஃகைஸமா (ரலி) அவர்கள் தந்தையைப் பார்த்து
என் அருமை தந்தையே! இது சுகப் பிரச்சனை அல்ல. சொர்க்கப் பிரச்சனை. சொர்க்கம்
அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருப்பேன். இது
சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்
என்று கூறி குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து விட்டார்கள்.
அதன்பிறகு இருவரில் யார் போருக்கு செல்வது என்பதில் கடும்
போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஅத் இப்னு ஃகைஸமா
(ரலி) அவர்கள் பெயரே வந்தது. இவர்கள் பத்ருப் போருக்காக நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டார்கள். இவர்கள்
ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினைப்
பெற்றார்கள். அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு
ஷஹீதானார்கள்.
முதல் அகபாவில் பங்கு பெற்ற சிறப்பைப் பெற்றவர்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பத்ர் ஷுஹதாக்களையும், பத்ர்
ஸஹாபாக்களையும் நேசிக்கும் நன்மக்களாக நம்மை ஆக்கியருள்வானாக!!
இன்ஷா அல்லாஹ்.. இன்னொரு சந்தர்ப்பத்திலே மீதமிருக்கிற 7
ஷுஹதாக்களின் வாழ்வையும் வாசிக்கும் நஸீபை அல்லாஹ் தந்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment