உலக அழிவு நாள் எப்போது?
ரமழான் - (1444 - 2023) - தராவீஹ் சிந்தனை:- 18.
17 -ஆவது நோன்பை
நிறைவு செய்து,
18 -வது தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இதோ உலகம் அழியப்
போகிறது! அதோ உலகம் அழியப்போகின்றது! என்று அவ்வப்போது சில ஆண்டுகளைக் குறிப்பிட்டும், சில நிகழ்வுகள் நடந்தால்
உலகம் அழிந்து விடும் என்று அறிவிப்புகள் வெளியாவதும் அதைக் கடந்து போவதுமாக நீண்ட
ஆண்டுகளாக இந்த உலகில் நடைபெற்று வருகிறது.
அது தொடர்பான சில
அறிவிப்புகளையும்,
ஆய்வுகளையும் பார்த்து விட்டு இஸ்லாமிய மார்க்கம் கூறும்
அழகிய வழிகாட்டுதலையும் இன்றைய உரையில் நாம் பார்ப்போம்!
உலகம் அழிவதற்கு பல காரணங்களை அடுக்கி வைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
1. பூமியின் மீது
வால்நட்சத்திரம் மோதினால் உலகம் அழியும். சூரியமண்டலத்திற்கு வெளியே 'ஊர்ட்மேகம்'
என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான வால்நட்சத்திரங்கள் உள்ளன.
அவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனை சந்திக்க வரும் போது பூமியில் மோதினால் பெரிய
அளவில் அழிவு ஏற்பட்டு மனித இனம் அழியலாம். வால்நட்சத்திரங்களில்
மிகப்புகழ்பெற்றது ஹாலி வால்நட்சத்திரம். அது76 ஆண்டுகளுக்கு
ஒருமுறை சூரியனை பார்க்க வரும் கடைசியாக 1986 வந்தது, இனி 2062ல் வரும். மேலும்,
சில ஆண்டுகளுக்கு முன்னால் 'ஜூமேக்கர் லெவி'
என்ற வால்நட்சத்திரம் 9 துண்டுகளாக
உடைந்து வியாழன் கிரகத்தில் மோதியது.
2. செவ்வாய்
கிரகத்திற்கும்,
வியாழன் கிரகத்திற்கும் இடையை லட்சக்கணக்கான பாறைகள் சுற்றி
வருகின்றன,
அவற்றில் 10 அல்லது 20 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பாறைகளும் அடக்கம். இவை பாதை தவறி பூமியின் மீது
மோதினால் உலகம் அழியும்.
3. 14 பில்லியின்
ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிக் பாங் (Big Bang) எனப்படும் மிகப் பெரிய அண்டவெடிப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். பிக்
பாங்குக்கு பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெப்பம் படிப்படியாக குளிர்ந்து
நட்சத்திரக் கூட்டம்,
கிரகங்கள் உள்ளிட்டவை உருவாகின. பிரபஞ்சமும் தொடர்ந்து
விரிவடைந்து வந்தது. அந்த செயல் இன்றும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வேகம் அதிகரித்தால் இறுதியில் உலகம் முழுவதும் பனிப் பிரதேசமாகி உறைந்து போய்
விடும்.
4. நம் பூமி சூரியனை
சுற்றுவதைப்போல சூரியன் பால்வெளி மண்டலம் (கோடிக்கணக்கான நட்சத்திரம் அடங்கிய
பகுதி, இதுபோன்று வானத்தில் நிறைய உண்டு) என்கிற நட்சத்திர மண்டலத்தை சுற்றி வருகிறது.
அப்படி சுற்றிவரும் போது கதிர்வீச்சு அதிகம் உள்ள பகுதிக்குள் சூரியன் பயணம்
செய்யும் பொழுது பூமியில் உள்ள உயிரினங்கள் அடியோடு அழிந்து போகும் வாய்ப்பு
உண்டு. கடந்த 100
மில்லியன் ஆண்டுகளில் 12 முறை இதுபோன்ற
அழிவு நடந்திருக்கலாம். அதன் பிறகு 13 மில்லியன்
ஆண்டுகள் ஆகியிருக்கலாம். இனி எப்போது என்பேதை இயற்கைதான் தீரமானிக்கும்.
5. அடுத்தாக
சூரியனின் வயது தற்போது நடுத்தர கட்டத்தை எட்டிவிட்டது. வயதை கணக்கிட, வெள்ளை நிறமாக இருந்தால் இளம் வயது, மஞ்சள் நடுத்தரம், சிகப்பு முதுமை என சூரியனின் வயதை கணக்கிடலாம். நடுத்தர வயதை அடைந்துவிட்ட
சூரியன் சிவப்பாகி முதுமையடைந்து வெடித்து சிதறினால், பூமியில் உயிர்கள் அழியும். ஆனால், அதற்கு இன்னும் 400 மில்லியன் ஆண்டுகள் இருக்கின்றன.
6. மற்றொன்று
நட்சத்திர மோதல்கள். நமது சூரியனுக்கு பக்கத்தில் சீரிஸ் நட்சத்திரம்
(சூரியனிலிருந்து 2
ஒளியாண்டு தூரத்தில் உள்ளது, ஒளியாண்டு என்பது ஒரு நொடியில் ஒளி செல்லும் வேகம் 1,80,000 கி.மீ. இவ்வளவு வேகத்தில் போனாலும் சீரிஸ் நட்சத்திரத்துக்கு போக 2 வருசம் ஆகும்) ஆல்பாலெண்டார் (நான்கு ஒளியாண்டு) சூரியன்,
சீரஸ், ஆல்பா இவை முன்றும்
அவற்றின் பயணப்பதையில் மோதிகொண்டால் உலகம் அழியும்.
சுனாமி, வெள்ளம்,
பூகம்பம், சுனாமி போன்ற மாபெரும்
பிரளயங்களினால் இந்த உலகம் அழியும் என பொதுவாக நம்பப்படுகிறது. வடதுருவம்
சுருங்குவதாலும்,
கடல் மட்டம் உயர்வதாலும், காற்றில் கார்பன் டை ஆக்சைடு் அளவு அதிகரிப்பினாலும் உலகம் அழிந்துவிடும் என
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் கருதுகின்றனர். இந்த பூமி உயிர்வாழ தகுதியற்று
கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு உயிரினமாக அழியும் என்கிறார்கள்.
ஆராய்ச்சிகளும்.. உலக அழிவு
நாளும்..
2880ம் ஆண்டு உலகம்
அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத்
தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி
கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்
டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு
ஆய்வு மேற்கொண்டனர். அதில்,
மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி
பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம்.
அந்த
விண்கல்லிற்கு ‘1950
டிஏ'
என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும்,
1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி மற்றும்
பால்வெளி அண்டத்தை உருவாக்கம் குறித்த ஆய்வில் கடந்த இருநூறு, மூன்னூறு ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு
வருகின்றனர். ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் புதுப்புது தியரிகள் பரப்பரப்பாக
பேசப்படும். அந்த வகையில் பூமியின் அழிவு எப்போது? என்பது குறித்தும் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கேள்விக்கான
பதில் ஏறக்குறைய கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக இதற்கு
முன்பு கூறப்பட்ட பல ஆய்வுகள் மற்றும் கணிப்புகள் பொய் என நிரூபிக்கப்பட்ட
நிலையில்,
புதிய கண்டுபிடிப்பு ஒன்றை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில் கிட்டத்தட்ட உண்மையான காரணத்தை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவர்களின் லேட்டஸ்ட் கூற்றின்படி, சூரியனால் பூமி அழியும்
எனத் தெரிவித்துள்ளனர்.
மிரர் (The Mirror) பத்திரிகையின் அறிக்கையின்படி, சூரியனால் உலகம் அழியும்
என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதற்குள் பிரபஞ்சம் முழுவதும் எரிந்து
சாம்பலாகிவிடும் எனக் கூறியுள்ள விஞ்ஞானிகள், சூரியன் வெடிப்பு நிகழும்
சமயத்தில் பூமியில் நாம் யாரும் உயிருடன் இருக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இந்த
வெடிப்பானது சுமார் 5
பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் என விஞ்ஞானிகள்
கணித்துள்ளனர். அப்போது,
சூரியனைச் சுற்றியிருக்கும் அனைத்து கிரங்களும்
அழிந்துவிடுமாம்.
ஐந்து பில்லியன்
ஆண்டுகளுக்குப் பிறகு,
அதாவது பெருவெடிப்புக்குப் பிறகு சூரியனில் இருக்கும்
ஹைட்ரஜன் கோர் வேலை செய்வதை நிறுத்திவிடும். பின்னர் சூரியனால் வெப்பத்தை உருவாக்க
முடியாது என்று கூறப்படுகிறது. இதனால் மற்ற கிரகங்களும் குளிர்ச்சியாக மாறும்.
சூரியனை அழிக்கும் கோள்களில் புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களும் அடங்கும்
என்றும்,
ஆனால் பூமியில் வரப்போகும் அழிவைப்போல் வேறு எந்த
கிரகத்திலும் அத்தகைய அழிவு இருக்காது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சூப்பர்
கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050வாக்கில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது.
இதே கருத்துக்களை
வானியல் வல்லுநரான Martin
Rees என்பவரும் ஆதரித்துள்ளார்.
1973ஆம் ஆண்டு பல
பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் என்னும் இந்த
இயந்திரத்தால் கணிக்கப்பட்ட சில விடயங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன. உதாரணமாக, பூமியில் இயற்கை வளங்கள் மற்றும் முக்கிய தாதுக்கள் குறைந்துகொண்டே போவதை
கூறலாம்.
மாபெரும் விஞ்ஞானி
ஐன்ஸ்டீன் அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு 2060 ஆம் ஆண்டை உலகின்
இறுதிநாள் என்று கணித்துள்ளார். உலக ஜோசியர் நாஸ்டிரடாமஸ் சிக்கலாக, உலகம் இரண்டு பெரும்
பிரளயங்களை சந்திக்கும் என கணித்திருக்கிறார். அவர் கணித்த ஆண்டு கி.பி 2029 மற்றும் 3797.
முதன் முதலில்
உலகம் அழியும் என சொன்னவர் கலிலியன் இனத்தை சேர்ந்த ராபி ஜோஸ். அவர் அழியக்கூடும்
என கூறிய வருடம் கி.பி 130.
அதற்கு பின் கி.பி 381, 500, 1000, 1306, 1881, 1914, 1967, 2000 மற்றும் 2012
இதெல்லாம் உலகம் அழிந்துவிடும் என நம்பப்பட்ட வருடங்கள்.
போப்பண்டவர்
இன்னொசென்ட்-3 ,
1244 -ல் உலகம் அழியும்—அதாவது இஸ்லாமிய சமயம்
தோன்றி 666
ஆண்டுகளில்— என்று கூறினார்.
மார்ட்டின் லூதர் 1600 ஆம் ஆண்டை ஒட்டி உலகம் அழியும் என்றார்.
கிறிஸ்டோபர்
கொலம்பஸ் 1658ல் உலகம் அழியும் என்றார். அவர் கணக்கின் படி கடவுள் உலகைச் சமைத்த 7000 ஆண்டுகளில் உலகம் அழிந்திருக்க வேண்டும்!
இந்து மதத்தை
பொருத்தவரை நான்கு யுகங்கள்,
1. கிருத யுகம் -1728000 வருடங்கள்.
2. திரேதா யுகம் -1296000 வருடங்கள்.
3. துவாபர யுகம் - 864000 வருடங்கள்.
4. கலியுகம் - 432000 வருடங்கள்.
நாம் இப்பொழுது
கலியுகத்தில் இருக்கிறோம் அதில் எந்த வருடம் எனத் தெரியவில்லை. கடைசியுகம்
அதற்குப் பின் உலகம் அழிவது உறுதி.
கிருஸ்த்துவ
மதத்தின் பைபிளில் உலகத்தின் கடைசி நாள் Judgement Day தீர்ப்பு நாள் அல்லது Second
coming Christh இரண்டாவது முறையாக கிருஸ்த்து அவதரிப்பார் என குறிப்பிட்டப்
பட்டுள்ளது.
உலக அழிவு
நாள் குறித்து இஸ்லாம்
என்ன கூறுகின்றது?
முஸ்லிம்கள் ஆறு
விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும். 1. அல்லாஹ்வை நம்ப
வேண்டும்.
2. வானவர்களை நம்ப வேண்டும். 3. வேதங்களை நம்ப வேண்டும். 4. தூதர்களை நம்ப வேண்டும். 5. இறுதி நாளை நம்ப வேண்டும்.
6.
விதியை நம்ப வேண்டும்.
'இவ்வுலகம் ஒரு நாள்
அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர்
கொடுத்து எழுப்பப்படுவார்கள். அப்போது அனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோர்க்கு
சொர்க்கத்தையும்,
தீயோருக்கு நரகத்தையும் அளிப்பான்'' என்பது அந்த ஆறு விஷயங்களில் ஒன்றாகும்.
மேற்கண்டவாறு
நம்புவது தான் இறுதி நாளை நம்புதல் என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது. இந்த நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேராகத் திகழ்கிறது.
மறுமை நாள் என்று பெயர் சொல்லப்படுவது
அதற்குப் பின் ஒரு நாள் இல்லை என்பதனாலாகும்.
நாள் குறித்தாகி விட்டது..
எப்போது என்பது தான்?
இந்த உலகத்தைப்
படைத்த அல்லாஹ் உலக அழிவுக்கு என்று ஒரு நாளை ஏற்ப்படுத்தியுள்ளான். அந்த
குறிப்பிட்ட நாள் வந்து விட்டால், இந்த உலகம் முற்றாக
அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு மறுமை விசாரணை நாள் உண்டாகும் இது தான் இஸ்லாம்
கூறும் உலக அழிவு நாள் குறித்த கோட்பாடு.
இந்த உலகம்
எப்போது அழியும் என்பதில் விஞ்ஞானம் மற்றும் கணிப்பு துறைச் சார்ந்தவர்களுக்கு
மத்தியில் பல கருத்துகள் காலத்துக்கு காலம் மாறி மாறி முன் வைக்கப்பட்ட போதிலும்
அவைகள் உறுதியான செய்திகள் அல்ல என்பதை ஒவ்வொரு காலமும் நிரூபித்து வருகிறது.
நபி (ஸல்) அவர்கள்
மறுமை நாளைப்பற்றி அடிக்கடி மக்கத்து மக்களுக்கு மத்தியில் எச்சரித்து வந்த
நேரத்தில்,
இந்த மறுமை நாள் எப்போது வரும் என்ற கேள்வியை இறை
நிராகரிப்பாளர்கள் நபியவர்களிடம் கேட்ட போது, நபியவர்கள் மௌனமாக இருந்த
நேரத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதற்கு இப்படி பதிலளித்தான்
عَمَّ يَتَسَاءَلُونَ (1) عَنِ النَّبَإِ الْعَظِيمِ (2) الَّذِي هُمْ
فِيهِ مُخْتَلِفُونَ (3) كَلَّا سَيَعْلَمُونَ (4) ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
“எதைப்பற்றி அவர்கள்
ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? மகத்தான அச்செய்தியைப்
பற்றி, எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி, அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். பின்னரும் (சந்தேகமின்றி)
அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள். (78:1-5)
إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ
நிச்சயமாக அந்த
(கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது… (31:34)
عن سهل بن سعدٍ الساعدي رضي الله عنه مرفوعا بلفظ ( بُعِثْتُ
أَنَا وَالسَّاعة هكذا - ويشير بأصبعيه فيمدُّ بهما - ) رواه البخاري ( 6138 )
ومسلم
ஸஹ்ல் இப்னு
ஸஅத்(ரலி) அறிவித்தார்:- “தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள
(ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே)
அனுப்பப்பட்டுள்ளோம்’
என்று கூறக்கேட்டேன். ( புகாரி 4936)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ
الْجُمُعَةِ ؛ فِيهِ خُلِقَ آدَمُ ، وَفِيهِ أُهْبِطَ ، وَفِيهِ تِيبَ عَلَيْهِ ،
وَفِيهِ قُبِضَ ، وَفِيهِ تَقُومُ السَّاعَةُ ، مَا عَلَى الْأَرْضِ مِنْ دَابَّةٍ
إِلَّا وَهِيَ تُصْبِحُ يَوْمَ الْجُمُعَةِ مُصِيخَةً ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ
؛ شَفَقًا مِنْ السَّاعَةِ ، إِلَّا ابْنَ آدَمَ ، وَفِيهِ سَاعَةٌ لَا
يُصَادِفُهَا مُؤْمِنٌ ، وَهُوَ فِي الصَّلَاةِ ، يَسْأَلُ اللَّهَ فِيهَا شَيْئًا
؛ إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ
) .
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:- “சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த
நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.-
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1548)
சூர் ஊதுதல்….
وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي
الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ
قِيَامٌ يَنْظُرُونَ
“ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத்
தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை
ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி
நிற்பார்கள். ( அல்குர்ஆன்: 39: 68 )
உலகம் சம்பூர்ணமாக
அழிக்கப்படுவதற்கு முன் முதலாவது எக்காளம்(சூர்) ஊதப்படும். முதலாவது சூர்
ஊதப்பட்டவுடன் வானங்கள்,
பூமி. சூரியன் சந்திரன், நட்சத்திங்கள், கடல்கள்,
மலைகள் அனைத்தும் தூள், தூளாக… தூக்கி வீசப்படும்.அதன் பிறகு இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் பூமியிலிருந்து
அனைவரும் எழுப்பப்படுவார்கள்.
அல்லாஹ்
நாடியோர்களைத் தவிர என்றால், முதல் சூரின் போது
மலக்குமார்கள் அழிக்கப்பட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : "
ما بين النفختين أربعون . قالوا : يا أبا هريرة أربعون يوما ؟ قال : أبيت قالوا
أربعون شهرا ؟ قال : أبيت قالوا : أربعون سنة ؟ قال : أبيت . ثم ينزل الله من
السماء ماء فينبتون كما ينبت البقل . قال : وليس من الإنسان شيء إلا يبلى إلا عظما
واحدا وهو عجب الذنب ومنه يركب الخلق يوم القيامة "
“அபூ சாலிஹ் ஃதக்வான்
அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்:- “(உலக முடிவு நாளில் அனைத்தையும்
அழிப்பதற்காகவும்,
பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு
எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ
ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூ ஹுரைரா அவர்களே!)
நாள்களில் நாற்பதா?’
என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலகிக் கொள்கிறேன்’ என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலகிக்கொள்கிறேன்’ என்று கூறினார்கள்.
பின்னர்,
‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது
(மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல்
எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல்
இருப்பதில்லை. ஆனால்,
ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந்
தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை
வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்’ என்று மேலும் கூறினார்கள். (புகாரி 4935)
எனவே முதல் சூர்
ஊதப்பட்டவுடன் இந்த உலகம் எப்படி அழியும் என்ற காட்சியை குர்ஆன் பின் வருமாறு
நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
பூமி தூள்,
தூளாக…
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
“பூமி தூள் தூளாகத்
தகர்க்கப்படும் போது,
(89:21)
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا (1) وَأَخْرَجَتِ الْأَرْضُ
أَثْقَالَهَا
“பூமி பெரும் அதிர்ச்சியாக
– அதிர்ச்சி அடையும் போது – இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1-2)
அல்லாஹ் உலகத்தை
அழிக்க நாடும் போது பூமியை அப்படியே தூள் தூளாகத் தூக்கி புரட்டிப் போடுவான்.
மலைகள் வெடித்து சிதறும்…
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
இன்னும் மலைகள்
தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ
“மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.(101:05)
பூமி அசையாமல்
இருப்பதற்காக அல்லாஹ் மலைகளை அமைத்துள்ளான். அந்த மலைகள் உலக அழிவு நாள் அன்று
காற்றில் பறக்கும் பஞ்சைப் போல காற்றோடு, காற்றாக, பறக்கும் என்பதை அந்த குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
சூரியன்,
நட்சத்திரங்கள், ஒளியிழந்து உதிர்தல்…
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ
“நட்சத்திரங்கள் உதிர்ந்து
விழும்போது (82:
2)
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
சூரியன்
(ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)
குறிப்பிடப்பட்ட
அந்த நாள் வந்த உடன் சூரியன், நட்சத்திரங்கள் அனைத்தும்
தனது ஒளியை இழப்பதோடு,
அப்படியே மேலிருந்து கீழே உதிர்ந்து கொட்டும் என்பதை
அல்லாஹ் அந்த வசனங்கள் மூலம் குறிப்பிடுகிறான்.
வானம் பிளக்கும்…
إِذَا السَّمَاءُ انْشَقَّتْ
“வானம் பிளந்து விடும்போது
(84:1)
فَإِذَا انْشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
“எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். (55:37)
குறிப்பிடப்பட்ட
அந்த நாள் வந்த உடன் இந்த வானம் துண்டு, துண்டாக, பிளந்து உருகி வடியும் என்பதை அந்த குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.
கடல் கொந்தளிப்பு…
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
“கடல்கள் (பொங்கி ஒன்றால்
ஒன்று) அகற்றப்படும் போது…(82:3)
குறிப்பிடப்பட்ட
அந்த நாள் வந்த உடன் கடல் தண்ணீர் கொந்தளிக்கப்பட்டு, பூமியின் பக்கம் தண்ணீர் தூக்கி வீசப்படும். இப்படி பல ரீதியில் உலக அழிவுகள்
ஏற்பட்டப் பின் வெறும் மையானமாக இந்த பூமி காட்சி தரும்.
மேலே குறிப்பிட்ட மறுமை நிகழ்வதற்கு முன் ஏராளமான அடையாளங்கள் இந்த உலகில் நிகழ உள்ளன
என்பதாக நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அந்த அடையாளங்கள் இரண்டு
வகையாக உள்ளன. ஒன்று சிறிய அடையாளங்கள், மற்றொன்று பெரிய
அடையாளங்கள்.
சிறிய
அடையாளங்கள்:-
சிறிய அடையாளங்களை பொறுத்தவரையில் ஏராளமான அடையாளங்களை நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதில் சில அடையாளங்கள் நடந்தேறியும் உள்ளன, இனி மேல் நிகழவுள்ளதும் உள்ளன
உதாரணமாக சிலவற்றைப் பார்க்கலாம்.
இனிமேல் நிகழவுள்ள சில அடையாளங்கள்..
حَدَّثَنَا
إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ
القَعْقَاعِ [ص:43]، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " لاَ
تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الحَجَرُ
وَرَاءَهُ اليَهُودِيُّ: يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ "
யூதர்களுடன்
நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.
( நூல்: புகாரி 2926 )
حَدَّثَنَا
عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زِيَادُ بْنُ سَعْدٍ،
عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يُخَرِّبُ الكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الحَبَشَةِ»
கஅபா ஆலயம்
இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த
அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' ( நூல் : புகாரி 1591 )
حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الكِنْدِيُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ،
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ
جَدِّهِ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ الفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ
كَنْزٍ مِنْ ذَهَبٍ، فَمَنْ حَضَرَهُ فَلاَ يَأْخُذْ مِنْهُ شَيْئًا»
யூப்ரடீஸ்
(ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து
எதையும் எடுக்க வேண்டாம்”. ( நூல் : புகாரி 7119 )
நிகழ்ந்து கொண்டிருக்கின்ற, நாம் நம் கண்களால் பார்த்துக்
கொண்டிருக்கின்ற சில சிறிய அடையாளங்கள்..
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الحَوْضِيُّ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يُحَدِّثُكُمْ بِهِ أَحَدٌ غَيْرِي: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ العِلْمُ، وَيَكْثُرَ الجَهْلُ، وَيَكْثُرَ الزِّنَا، وَيَكْثُرَ شُرْبُ الخَمْرِ، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً القَيِّمُ الوَاحِدُ»
கல்வி
உயர்த்தப்படுவதும், அறியாமை அதிகமாவதும், விபச்சாரம் பெருகுவதும், மது குடிக்கும்
பழக்கம் அதிகரிப்பதும், ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதும், ஐம்பது பெண்களை ஒரு
ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபி {ஸல்} கூறினார்கள் ( நூல்: புகாரி )
فَقَالَ
رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " صَدَقَ وَالَّذِي نَفْسِي
بِيَدِهِ، لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ،
وَيُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ، وَشِرَاكُ نَعْلِهِ، وَيُخْبِرَهُ
فَخِذُهُ بِمَا (3) أَحْدَثَ (4) أَهْلُهُ بَعْدَهُ
"
விலங்கினங்கள்
மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும்
வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்:
அஹ்மத் 11365
)
حَدَّثَنَا
سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي
الدَّرَاوَرْدِيَّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ،
قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَقُومُ
السَّاعَةُ حَتَّى يَخْرُجَ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ كَمَا يَأْكُلُ
الْبَقَرُ بِأَلْسِنَتِهَا "
தங்கள் நாவுகளை
(மூல தனமாகக்) கொண்டு மாடுகளைப் போன்று சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக
முடிவு நாள் ஏற்படாது என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் 1511
)
عَنْ
طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ: كُنَّا عِنْدَ ابْنِ مَسْعُودٍ، رَضِيَ اللَّهُ
عَنْهُ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ
بَيْنَ يَدَيِ السَّاعَةِ تَسْلِيمَ الْخَاصَّةِ وَفُشُوَّ التِّجَارَةِ حَتَّى
تُعِينَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التِّجَارَةِ وَقَطْعَ الْأَرْحَامِ
وَظُهُورَ شَهَادَةِ الزُّورِ وَكِتْمَانَ شَهَادَةِ الْحَقِّ» هَذَا حَدِيثٌ
صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ
"
[التعليق - من تلخيص الذهبي] 7043 - صحيح
குறிப்பிட்டவர்களுக்கு
மட்டும் ஸலாம் கூறுவதும், கணவனின் வியாபாரத்தில் மனைவி உதவியாக இருப்பதும்,
உறவுகளைத்துண்டித்து வாழ்வதும், பொய சாட்சி பெருகுவதும், உண்மையையும்,
சத்தியத்தையும் மறைப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபி (ஸல்)
கூறியுள்ளனர்.
( நூல்கள்: ஹாகிம், அஹ்மத், )
حَدَّثَنَا
إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ
أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ
فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ
"
இறந்தவர்களை
அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் இறந்து போயிருக்கக்
கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள்..(
நூல்: புகாரி )
حَدَّثَنَا
سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ: حَدَّثَنِي
زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ
اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ،
حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ»، قُلْنَا يَا رَسُولَ
اللَّهِ: اليَهُودَ، وَالنَّصَارَى قَالَ: «فَمَنْ»
'உங்களுக்கு முன்
சென்றவர்களை ஜானுக்கு ஜான்,
முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள்
உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே முன்
சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?''
என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று
கூறினார்கள்.
( நூல்: புகாரி 3456, 7319
وَلَكِنْ سَأُحَدِّثُكَ عَنْ أَشْرَاطِهَا: إِذَا وَلَدَتِ المَرْأَةُ
رَبَّتَهَا، فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا
ஒரு பெண் தனது
எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி )
وَإِذَا
كَانَ الحُفَاةُ العُرَاةُ رُءُوسَ النَّاسِ، فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا
'வறுமை நிலையில் (அரை)
நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின்
தலைவர்களாக ஆவது,
யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபி (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா
(ரலி) ( நூல்: புகாரி )
وَإِذَا
تَطَاوَلَ رُعَاةُ الإِبِلِ البُهْمُ فِي البُنْيَانِ
ஒட்டகம்
மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும்
யுக முடிவு நாளின் அடையாளமாக நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். ( நூல்: புகாரி )
حَدَّثَنَا
عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ أَبِي
التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يُرْفَعَ
العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا "
யுக முடிவு நாள்
நெருங்கும் போது அறிவு குறைந்து, அறியாமை மிகைத்து விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபி (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.( நூல் : புகாரி )
قَالَ: «فَإِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ»، قَالَ:
كَيْفَ إِضَاعَتُهَا؟ قَالَ: «إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ
فَانْتَظِرِ السَّاعَةَ»
நாணயம்
பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபி {ஸல்} அவர்கள்
கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று விடையளித்தார்கள். ( நூல் : புகாரி 59, 6496 )
وحَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ
الْقَارِيُّ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى
يَكْثُرَ الْمَالُ وَيَفِيضَ، حَتَّى يَخْرُجَ الرَّجُلُ بِزَكَاةِ مَالِهِ فَلَا
يَجِدُ أَحَدًا يَقْبَلُهَا مِنْهُ، وَحَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا
وَأَنْهَارًا»
செல்வம் பொங்கிப்
பிரவாகித்து,
அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது ( நூல் : முஸ்லிம் 1681 )
حَدَّثَنَا
عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ
قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ، عَنْ سَعْدِ بْنِ
سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ
الزَّمَانُ، فَتَكُونُ السَّنَةُ كَالشَّهْرِ، وَالشَّهْرُ كَالْجُمُعَةِ،
وَتَكُونُ الْجُمُعَةُ كَالْيَوْمِ، وَيَكُونُ الْيَوْمُ كَالسَّاعَةِ، وَتَكُونُ
السَّاعَةُ كَالضَّرَمَةِ بِالنَّارِ»:
காலம் சுருங்கும்
வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும்.
(இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி
நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள்.
(
நூல் : திர்மிதீ 2254) )
நமக்கு
முன்வாழ்ந்த மேன்மக்களான உலமாக்களின், நல்லடியார்கள் வாழும் காலங்களில் அவர்களின் நேரங்களில் எவ்வளவு பரகத்துகள்
இருந்திருக்கின்றன என்பதை வரலாறுகளின் மூலம் நாம் பார்த்தால் அவை நம்மை வியப்பில்
ஆழ்த்துகின்றன.
நமக்கு ஒரு
நாளைக்கு 24 மணி நேரம் இருப்பதைப் போன்றுதான் அவர்களுக்கும் இருந்தன. எனினும், அவர்கள் படைத்த சாதனைகளை நம்மால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
அல்லாமா சுயூத்தி
(ரஹ்மத்துலாஹி அலைஹி) அவர்களுடைய வாழ்க்கையஇல் அவர்கள் தங்களின் ஜலாலைன் என்ற
(தஃப்ஸீர்)குர்ஆன் விளக்கவுரையில் 15 ஜூஸ்வுக்கு மாத்;திரம் வெறும் 40
நாட்களில் விரிவுரை எழுதி முடித்துள்ளார்கள். ஆனால், அப்போது அவர்களின் வயதோ வெறும் 22 -தான். இங்குள்ள
அநேகமான அரபு மதரஸாக்களில் இந்த தஃப்ஸீருல் ஜலாலைன் என்ற கிதாபு கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஒரு வருடம் முழுவதும் கற்றுக் கொடுத்தாலும் கூட 10 அல்லது 15
ஜுஸ்உகளை முடிப்பதே சிரமமாகத்தான் இருக்கிறது.
இப்னு ஜரீர்
(ரஹ்மத்துலாஹி அலைஹி) அவர்கள் பிரபலமான வரலாற்று ஆசிரியராவார். ஸஹாபாக்கள், தாபியீன்கள் ஆகியோருடைய வரலாறுகளைத் தினசரி நாற்பது பக்கங்கள் வீதம் நாற்பது
ஆண்டுகள் வரை எழுதியுள்ளார்கள்.
இதுதான் அந்த
நல்லடியார்களின் காலங்களில் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கயிருந்த பரகத் ஆகும்.
حَدَّثَنَا
أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو
الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقُومُ السَّاعَةُ
حَتَّى يُقْبَضَ العِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ،
وَتَظْهَرَ الفِتَنُ، وَيَكْثُرَ الهَرْجُ - وَهُوَ القَتْلُ القَتْلُ - حَتَّى
يَكْثُرَ فِيكُمُ المَالُ فَيَفِيضَ»
கல்வி
பறிக்கப்படுவதும், பூகம்பங்கள் அதிகரிப்பதும், உங்களிடையே செல்வம் பெருகுவதும் யுக
முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபி (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். ( நூல்: புகாரி 1036,
7121 )
أَخْبَرَنَا
سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ
حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مِنْ أَشْرَاطِ
السَّاعَةِ: أَنْ يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ
"
மனிதர்கள்
பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்
என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.. ( நூல்:
நஸாயி )
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ،
عَنْ سَعِيدِ بْنِ سِمْعَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ
الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَتَتَقَارَبَ الْأَسْوَاقُ، وَيَتَقَارَبَ
الزَّمَانُ، وَيَكْثُرَ الْهَرْجُ " قِيلَ: وَمَا الْهَرْجُ؟ قَالَ: " الْقَتْلُ
" (2)
குழப்பங்கள் பெருகுவதும்,
பொய் பேசுவது அதிகமாவதும், கடைகள் பெருகி அருகருகே அமைவதும், காலங்கள் விரைவாகச் செல்வதும்,
கொலைகள் பெருகுவதும் நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். ( நூல்: அஹ்மத் 10306 )
நிகழ இருக்கும் பெரிய அடையாளங்கள்..
حديثُ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، قَالَ: اطَّلَعَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ،
فَقَالَ: مَا تَذَاكَرُونَ؟ قَالُوا: نَذْكُرُ السَّاعَةَ. قَالَ: " إِنَّهَا
لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ – فَذَكَرَ – الدُّخَانَ،
وَالدَّجَّالَ، وَالدَّابَّةَ، وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَنُزُولَ
عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَأَجُوجَ وَمَأْجُوجَ،
وَثَلَاثَةَ خُسُوفٍ: خَسْفٌ بِالْمَشْرِقِ، وَخَسْفٌ بِالْمَغْرِبِ، وَخَسْفٌ
بِجَزِيرَةِ الْعَرَبِ، وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنَ الْيَمَنِ، تَطْرُدُ
النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ ". أخرجه الإمام مسلم في "صحيحه
1 – புகை மூட்டம் , 2 – தஜ்ஜால்,
3 – (அதிசயப்) பிராணி, 4 – சூரியன்
மேற்கிலிருந்து உதிப்பது,
5 – ஈஸா (அலை) இறங்கி வருவது, 6 – யஃஜுஜ்,
மஃஜுஜ் வெளியேருவது, 7 – கிழக்கே ஒரு
பூகம்பம் ஏற்படுவது, 8
– மேற்கே ஒரு பூகம்பம் ஏற்படுவது, 9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஏற்படுவது, 10 – இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்” ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த (மறுமை) நாள்
வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ( நூல்: முஸ்லிம் 5162 )
No comments:
Post a Comment