Thursday, 6 April 2023

வெற்றியின் மாதம் ரமழான்!!!

 

வெற்றியின் மாதம் ரமழான்!!!


அல்லாஹ்வின் அருள் நிறைந்த முதல் பத்தை நிறைவு செய்து விட்டு மன்னிப்புடைய இரண்டாவது பத்திலே நாம் அமர்ந்திருக்கின்றோம்! அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அருள்புரிவானாக! நம் மனைவி, மக்கள் நம் பெற்றோர்கள், நம் ஆசிரியர்கள், மாணவர்கள் நம் உற்றார் உறவுகள், குடும்பத்தார்கள், நம் நண்பர்கள், நம்மிடத்தில் துஆச் செய்ய சொன்னவர்கள், நம்மீது நேசமாக இருப்பவர்கள், நாம் நேசம் வைத்திருப்பவர்கள், நமக்கு உபகாரமாக இருப்பவர்கள் என அனைவரின் பாவங்களையும் மறைத்து, மன்னித்து அருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான் மாதம், குர்ஆன் உடைய மாதம், ரஹ்மத்தின் மாதம், மஃக்ஃபிரத்தின் மாதம், நரக விடுதலையின் மாதம், சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும் மாதம், ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம் இப்படி பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்ட இந்த மாதம் பல வெற்றிகளைத் தந்த வெற்றியின் மாதமாகவும்  திகழ்கின்றது. 

ல்லாஹ் முஸ்லிம்களுக்கும், முஃமின்களுக்கும் வெற்றியை, நிம்மதியான வாழ்க்கையை தருவதாக அல்குர்ஆனில் பல இடங்களில் வாக்களிக்கின்றான்.

ஆனால், இன்று உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரானநிலைப்பாடு கொண்டவர்கள் தொடர்ந்து அமோக வெற்றியைப் பெறுகின்றார்கள். ஆட்சி, அதிகார மையத்தை  கைப்பற்றுகின்றார்கள்.

ஏன் வெற்றி அவர்களின் வசம் ஆனது? ஏன்  இறை உதவி முஸ்லிம்களுக்கு இல்லாமல் போனது உலகளாவிய  அளவில்  தொடர்ந்து  முஸ்லிம் சமூகம் ஏன் வீழ்ச்சியை சந்தித்து  வருகின்றது?

இந்த கேள்வி இன்று முஸ்லிம் சமூகத்தைத் தாண்டி, பொது வெளியிலும் அதிகமாகப்  பரிமாறப்படுகின்றது. 

விடைகள் இல்லாமல் இல்லை. வாருங்கள்! விடைகளைப் பார்த்து வெற்றி வாகை சூடுவோம்!!

உலகில் எல்லா காலத்திலும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட சமூகத்திற்கு வெற்றி தேவைப்பட்டது.

சில போது கொடுங்கோன்மை புரிந்த அரசர்களால், சில போது தங்களையே கடவுளாக அறிவித்துக் கொண்ட மன்னர்களால் சொல்லெனாத் துயரங்களைச் சந்தித்து, ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு, உயிர் வதைகளை எதிர் கொண்ட பல சமூகங்கள் வெற்றியை எதிர் நோக்கி காத்திருந்ததாய் அல்குர்ஆன் பல வரலாறுகளைப் பதிவு செய்கிறது.

أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِنْ كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ

(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த சமூக மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் முகமாக சிறுபான்மையினராக இருந்த அவர்களுக்கு பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக மகத்தான வெற்றியை நல்கினான் என்று பிந்தைய வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

قَالَ الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِۙ کَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً کَثِيْرَةً ۢ بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏

நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்என்று கூறினார்கள்.

وَلَمَّا بَرَزُوْا لِجَـالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ‏

மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.

ۙ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَفَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ

இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; வெற்றி பெற்றார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார். (அல்குர்ஆன்: 2: 246 & 249-251 )

தொடர் சோதனைகளால் நிலை குலைந்து போன ஒரு சமுதாயம் அந்த சமூகத்தின் நபி என ஒட்டுமொத்தமாக அனைவரும் வெற்றியை எதிர் நோக்கி காத்திருந்ததாக குர்ஆன் பதிவு செய்துள்ளது.

 

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏

"உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) ( அல்குர்ஆன்: 2: 214 )

இஸ்லாமிய உலகு ரமழான் மாதத்தில் பல போர்க்களங்களைக் கண்டுள்ளதோடு அதில் வெற்றிவாகையும் சூடியுள்ளது என்பதை வரலாற்றின் ஊடாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

1.   பத்ர் வெற்றி:-

ரமழானில் முஸ்லிம் சமூகம் கண்ட வெற்றி வாகைகள் சிலவற்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன். ஏனெனில், இதே ரமழான் பிறை 17 -ம் நாளில் தான் 1442 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உம்மத் பத்ரில் மகத்தான வெற்றியை பெற்றது.

இஸ்லாமிய உம்மத் மிகச் சிறுபான்மையினராக இருந்த போது கண்ட முதல் போர் பத்ர் யுத்தமாகும்.  ஹிஜ்ரி 02 ரமழான் மாதத்தில்தான் நடைபெற்றது. 

ஆயிரம் பேர் கொண்ட, அனைத்து பலமும் கொண்டிருந்த எதிர் படையினரை சுமார் 313 பேர் கொண்ட குழுவினர் எதிர்கொண்டு ஈமானிய உறுதியுடனும், நெஞ்சுரத்துடனும், வீரத்துடனும் போராடி வெற்றிவாகை சூடிய நன்னாள் இது. 

இந்தப் போரில் நபித்தோழர்களின் ஈமானிய உறுதி, கொள்கைப் பற்று, ஒற்றுமை, தியாக உணர்வு, வீரம், துணிச்சல்  போன்ற பல்வேறு ஆற்றல்கள் வெளிப்பட்டன. 

இந்தப் போர் தான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஏளனமாகவும் இழிவாகவும் பார்த்தவர்களை, கண்ணியத்துடனும், பயத்துடனும் பார்க்கச் செய்தது.

2.   கந்தக் வெற்றி:-

அகழ்ப் போர் ஹிஜ்ரி 05 இல் ஷவ்வால் மாதத்தில் நடந்தது. முஸ்லிம்களைப் பூண்டோடு அழித்துவிடும் எண்ணத்தில் 10,000 பேர் கொண்ட படையொன்று மதீனா வந்தது. 

அவர்களிடமிருந்து மதீனாவையும், உம்மத்தையும் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்களின் ஆலோசனையில் பேரில் 5000 முழம் நீளம் கொண்ட அகழியைத் தோண்ட முடிவு செய்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஏறத்தாழ ஒரு மாத காலம் ஈடுபட்டனர். 

அந்த வகையில் பார்க்கும் போது ஹிஜ்ரி 05 ரமழானில் தான் நபித்தோழர்கள் அகழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

 

உள்ளே வர முடியாமல் தற்காப்பு அடிப்படையில் தோண்டப்பட்ட இந்த அகழியால்  கூட்டுப் படையினர் தோல்வியுடன் திரும்பினர். இந்தப் போர் கந்தக் - அகழ் யுத்தம், அஹ்ஸாப் கூட்டுப்படைப் போர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

இந்தப் போரில் முஸ்லிம்கள் பெரிய அளவில் வெற்றியை ஈட்டினர்.

முதல் வெற்றியை 1000 பேரை எதிர் கொண்டு இந்த உம்மத் பதிவு செய்தது. இரண்டாம் வெற்றியை 10000 பேரை எதிர் கொண்டு இந்த உம்மத் பதிவு செய்தது.

3.   மக்கா வெற்றி:-

குறைஷித் தலைவர்கள் நபியவர்களுடன் பத்து வருட யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தனர். ஆனால்,  இரு வருடங்களுக்குள் ஒப்பந்தத்தை மீறினர். ஆகையால்,  மக்காவாசிகளுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் படை திரட்டினார்கள். 10000 பேர் கொண்ட படையுடன் ஹிஜ்ரி 08 ரமழான் மாதம்  பிறை 20 ல் மக்கா கைப்பற்றப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டது.  கஃபாவில் உள்ள சிலைகள் அத்துனையும் அகற்றப்பட்டன. கஅபா தூய்மையாக்கப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்திற்கு பின்னர் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்குப் பிறகு கஅபா தூய்மையாக்கப்பட்டது எனலாம்.

தன்னையும் தனது தோழர்களையும் ஊர்விலக்கம் செய்து வஞ்சித்தவர்களை, ஊரை விட்டு விரட்டியவர்களை, பத்ர், உஹத், கந்தக், கைபர் என போர் நடத்தி தோழர்களின் உயிர்களைப் பறித்தவர்களை, சொத்துக்களை அபகரித்தவர்களை கருணையே உருவான காருண்ய நபி (ஸல்) அவர்கள் மன்னித்து அவர்களின் மனங்களைக் கவர்ந்து சுமார் 2000 மக்கா வாசிகளின் இஸ்லாமுக்கு காரணமாக அமைந்த வெற்றி.

இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் வெற்றி பெற்ற போர்கள் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு கனீமத் கிடைக்கும். ஆனால், இந்த போரில் மாத்திரம் தான் நபி ஸல் அவர்கள் இறைமறுப்பாளர்களுக்கு தன் புறத்தில் இருந்து மன்னிப்பு எனும் கனீமத் வழியாக 2000 நபர்களின் ஹிதாயத்திற்கு காரணமாக அமைந்தார்கள்.

இஸ்லாமிய வரலாறு கண்ட மகத்தான வெற்றிகளில் பத்ர் வெற்றிக்குப் பிறகு மக்கா வெற்றி முக்கியமானது. 

ஏனெனில், இந்த வெற்றியின் தாக்கத்தால்  இஸ்லாம் வெகு வேகமாகப் பரவியது. இதையே  பின்வரும் அன் நஸ்ர் வெற்றிஅத்தியாயமும் அதைத்தான் கூறுகின்றது.

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ (1) وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا (2) فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, ”‘இன்னும் மனிதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைவதை (நபியே!) நீர் காணும் போது,” ‘உமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதித்து, அவனிடம் நீர் பாவமன்னிப்பும் கோருவீராக! நிச்சயமாக அவன் மன்னிப்புக் கோருவதை அதிகம் ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். ” ( அல்குர்ஆன்; 110: 1-3 )

4.   அல் புவையிப் போர்:-

البويب اسم نهر كان بالعراق موضع الكوفة أو مما يلى موضع

الكوفة اليوم، وسميت باسمه المعركة التى دارت عليه (فى

رمضان سنة ١٣ هـ) بين المسلمين بقيادة المثنَّى بن حارث

الشيبانى والفرس بقيادة مهران الهمذانى. وقد هُزم المسلمون

فى المعركة السابقة فى حربهم مع الفرس، وهى معركة الجسر

فى العام نفسه؛ مما أطمع الفرس فيهم، فى حين رغب المسلمون

فى الثأر لهزيمتهم. وقد استعان المثنى قبل المعركة بقبائل

العرب فى العراق، مثل قبيلتى نمر وتغلب، وكانوا من

النصارى، كما أمده الخليفة عمر بن الخطاب، رضى الله عنه،

بجيش من المدينة فبلغ جيشه نحو (١٠) آلاف مقاتل. وعسكر جيش

المسلمين على الضفة الغربية لنهر الفرات، فى حين عسكر جيش

الفرس على الضفة الشرقية، وأرسل مهران إلى المثنى يسأله:

إما أن تعبروا إلينا وإما أن نعبر إليكم، فأجاب المثنى: أن

اعبروا أنتم. ونظم المثنى جيشه ومر بفرسه المُسمَّى الشموس

على صفوف الجيش؛ يحثهم على الصمود والاستبسال. ولما عبر

مهران بجيشه دارت معركة بين الطرفين حامية الوطيس، واشتد

القتال، وحمل المثنى وجماعة معه على قلب جيش العدو

ففرقوه، وقتلوا قائدهم مهران؛ فاضطربت صفوف جيش الفرس،

وضعفت مقاومتهم، وحاولوا الهرب، فقطع المسلمون عليهم

الجسر، وأعملوا فيهم سيوفهم؛ فقُتل منهم الكثير، وغرق

الكثير، حتى قدر عدد قتلاهم بنحو (١٠٠) ألف قتيل، وهو رقم

مبالغ فيه، ولكنه يدل على كثرة من قتل فى المعركة. وكانت

هذه المعركة مقدمة لانتصار المسلمين الحاسم على الفرس فى

معركة القادسية

உமர் (ரலி) ஆட்சி காலத்தின் துவக்கத்தில் ஹிஜ்ரி 13 ரமழானில் இந்தப் போர் நடைபெற்றது. 

இந்த படையை அல் முஸன்னா இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களின் தலைமையில் 10000 போர் வீரர்களுடன் அனுப்பி வைத்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

இராக்கின் கூபாவுக்கு அருகில் உள்ள அல் புவையிப்எனும் நதி ஓடும் இடத்தில் இந்தப் போர் நடந்ததால் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

பெருந்தொகையான எதிரிகளை (சுமார் ஒரு லட்சம் எதிரிகளை) அழித்து அதுவும் பல எதிரிகளை நீரில் மூழ்கடித்துக் கொன்று இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். இந்தப் போர் காதிஸிய்யா வெற்றியின் முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

5.   நூபா  வெற்றி:-

فتح النوبة التي حدثت في العام الحادي والثلاثين من الهجرة النبوية المباركة، والتي كان من أهم آثارها معاهدة القبط التي كانت فاتحة خير على المسلمين في البلاد الأفريقية.

لما قام عمرو بن العاص بفتح في مصر في خلافة أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه، أرسل عمرو بن العاص حملة عسكرية بقيادة عقبة بن نافع لفتح بلاد النوبة التي تقع في جنوب مصر، لكن المسلمين فوجئوا في هذه المعركة بأن النوبيين يجيدون رمي السهام، فقد أصاب النوبيون من المسلمين عددا كبيرا بتلك السهام، وأصيب كثير من المسلمين في حدق عينهم من جراء النبل، فسموا (رماة الحدق).

وكان من نتيجة هذه الحملة أن تم التوافق على هدنة بين المسلمين والنوبيين، واستمر الصلح حتى كان عصر خلافة أمير المؤمنين عثمان رضي الله عنه، وكان قد عزل عمرو بن العاص عن مصر وولى مكانه عبدالله بن أبي السرح، فنقض النوبيون الصلح وهاجموا صعيد مصر، فما كان من ابن أبي سرح إلا أن خرج في جيش تعداده عشرون ألف مقاتل، وسار إلى دنقلة عاصمة النوبيين وحاصرها وضربها بالمنجنيق حتى استسلموا وطلبوا الصلح.

وتصالح المسلمون والنوبيون في شهر رمضان من العام الحادي والثلاثين بعد الهجرة على بنود من أهمها:

1 ـ حفظ من نزل بلادهم من مسلم أو معاهد حتى يخرج منها.

2 ـ رد من لجأ إليهم من مسلم محارب للمسلمين وإخراجه من ديارهم.

 

3 ـ حفظ المسجد الذي بناه المسلمون في فناء المدينة وألا يمنعوا منه مسلما.

4 ـ أن يدفعوا للمسلمين كل عام ثلاثمائة وستين رأسا من أوسط رقيق بلادهم، وكان القوم مشهورين بكثرة الرقيق عندهم.

5 ـ في مقابل ذلك لهم عند المسلمين أمان فلا يحاربونهم ولا يغزونهم.

நூபா இது எகிப்துக்கு அருகில் உள்ள பகுதியாகும். இந்த வெற்றி ஆப்ரிக்காவில்  இஸ்லாம்  பரவலுக்கு முக்கிய காரணமாக விளங்கியது.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் தலைமையில் மிஸ்ர் வெற்றி கொள்ளப்பட்டது. அந்த பகுதியின் கவர்னராக அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் நியமித்தார்கள்.

இந்நிலையில், மிஸ்ர்க்கு அருகில் இருக்கும் நூபாவைக் கைப்பற்ற உக்பா இப்னு நாஃபிஉ (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அனுப்பி வைத்தார்கள்‌.

கடுமையான சண்டைக்குப் பிறகு இரு தரப்பிலும் பலர் காயமுற்றனர். நூபா வாசிகள் தங்களுடைய கோட்டைக்குள் இருந்து அம்பெறிந்து தாக்கியதில் முஸ்லிம் படையின் பெரும்பாலான வீரர்களின் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போர் நடந்தது. எனினும் வெற்றி தோல்வியின்றி இழுத்துக் கொண்டு போன இந்த போர் நூபாவாசிகளை சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் சமரச ஒப்பந்தம் கையெழுத்தானது.

உமர் (ரலி) இந்த உலகை விட்டு சென்றதன் பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறார்கள். மிஸ்ரின் கவர்னர் பொறுப்பில் இருந்து அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) நீக்கப்பட்டு  அப்துல்லாஹ் இப்னு ஸஃத் இப்னு அபூ ஸர்ஹ் (ரலி) கவர்னராக நியமிக்கப்பட்டார்கள்.

பழைய கலீஃபாவும் இல்லை, பழைய கவர்னரும் இல்லை என்று நூபா வாசிகள் தங்களுடைய ஒப்பந்தத்தை மீறினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள்

அப்துல்லாஹ் இப்னு ஸஃத் இப்னு அபூ ஸர்ஹ் (ரலி)  அவர்களின் தலைமையிலேயே ஒரு படையை அனுப்பி வைத்தார்கள்.

முன்பு போலவே தங்களுடைய கோட்டைக்குள் இருந்து பல்முனைத் தாக்குதலை தொடுத்த நூபாவாசிகள் ஒரு கட்டத்தில் வெற்றியின் விளிம்பிற்கு வந்து விட்ட போது மிஞ்சனீக் எனும் "எரி தூக்கி" வழியாக முஸ்லிம் படைவீரர்கள் நூபாவாசிகளின் கோட்டைக்குள் புகுந்து கோட்டையை சுற்றி வளைத்தனர்.

நூபாவாசிகள் சரணடைந்து தங்களுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு மீண்டும் சமரச ஒப்பந்தம் போட்டனர். முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். சிறிது காலத்தில் முஸ்லிம்களின் எளிமையான நீதமான வாழ்க்கை முறையைக் கண்டு முழுமையாக இஸ்லாத்தையும் தழுவினர்.

 

ஹிஜ்ரி 31 ரமழானில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கிழக்காப்பிரிக்காவில் இஸ்லாம் வேகமாகப் பரவியது.

6.   ரூதுஸ் தீவு வெற்றி:-

فتح المسلمون جزيرة رودس فى رمضان سنة 53 هــ، وهي من معارك المسلمين البحرية شرقي البحر المتوسط، والتي توسع فيها المسلمون منذ عهد عثمان بن عفان - رضي الله عنه - واستكملها من بعده معاوية بن سفيان - رضي الله عنه.

ஹிஜ்ரி 53 இல் ரமழானில் ஜுனாதா பின் அபூ உமைய்யா (ரலி) அவர்களின் தலைமையில் இந்தத் தீவு வெற்றி கொள்ளப்பட்டது. 

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது துவக்கி வைக்கப்பட்ட இந்த போது முஆவியா (ரலி) ஆட்சி காலத்தில் தான் வெற்றி கொள்ளப்பட்டது.

கடல் வழியாக வெற்றிக் கொள்ளப்பட்ட இரண்டாவது தீவு இதுவாகும். கடல் கொள்ளையர்களின் தீங்கிலிருந்து மக்களைக் காக்க இந்த போர் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆட்சியாளர்கள்  தொடர்ந்து நடத்திய போரின் விளைவாக மகத்தான வெற்றி கொள்ளப்பட்டது.

அந்த பகுதியில் ஜுனாதா இப்னு அபூ உமைய்யா தலைமையில் சில முஸ்லிம் குடும்பங்களை குடியேறச் செய்து தீவு முழுவதும் தடுப்புச் சுவரை எழுப்பி பாதுகாப்பாக அங்கே மக்களை வசிக்கச் செய்தார்கள் முஆவியா (ரலி) அவர்கள்.

இந்த வெற்றியின் மூலம் கடல் போக்குவரத்து மற்றும் கடல் வாணிபமும் முஸ்லிம்களுக்கு இலகுவாகியது.

7.   தரீக் வெற்றி:-

الخليفة الأموي الوليد بن عبد الملك بن مرون (ت 96هـ) الذي أمره بالتريث وعدم الدفع بالمسلمين في أهوال البحر، وأشار عليه باختبارها بالسرايا والعمليات الهجومية الخاطفة أولا، فأُرسلت السرية الأولى المقدَّرة بـ 300 رجل بقيادة طارق بن زياد وطريف بن مالك النخعي، فنزلوا بجزيرة قرب اليابسة لا تزال تُسمى حتى الآن بجزيرة طريف فأصابت مغانم كثيرة وعادت، وهنا أدرك موسى بن نصير أن مهمة فتح الأندلس ممكنة وميسورة.

 

أمدّ موسى بن نصير قائده طارق بن زياد بسبعة آلاف مقاتل، فانطلق حتى عبر الجبل الذي لا يزال يُسمى باسمه إلى اليوم، وتوغل فاتحا مدن الأندلس حتى اقترب من طليطلة، فأرسل إلى موسى يطلب المدد، فأمدّه باثني عشر ألف مقاتل، وفي 28 رمضان سنة 92هـ/17 يوليو/تموز 711م قُرب منطقة شذونة انتصر المسلمون على جيش رودريجو “لذريق” وشتتوا شمله، ولم يُعثر له على أثر، وأصبح الطريق لفتح باقي مدن الأندلس مفتوحا، فأرسل طارق فرقة إلى قرطبة وأخرى إلى إلبيرة وتوجّه هو ببقية الجيش صوب طليطلة

நபித்தோழர் தமீமுத்தாரி (ரலி) அவர்களின் மாணவரும், ஏராளமான தாபியீன்களிடத்தில் பயின்றவருமான சில நபிமொழிகளின் அறிவிப்பாளருமான மூஸா இப்னு நுஸைர் (ரஹ்) அவர்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் வெற்றிகளால் உந்தப்பட்டு  முஆவியா (ரலி) அவர்களால் ஹிஜ்ரி 34 -ல் கிப்ரஸ் அருகில் உள்ள "தாதுஸ் ஸவாரீ" எனும் பகுதிக்கு அனுப்பப்பட்ட படையில் ஒரு வீரராக இணைக்கப்பட்டார். அப்போது வயது 15. பல்வேறு வெற்றப்படைகளில் இடம் பெற்றிருந்த காரணத்தால் மர்வான் அவர்கள் பின்னாளில் அவர்களை தளபதியாக நியமித்தார்கள். தளபதியாக பொறுப்பேற்றதில் இருந்தே தொடர் வெற்றிகளை சன்மார்க்க பரவலுக்கு விதையாக வித்திட்டார்கள். ஹதீஸ் கலை வல்லுநராக வர வேண்டியிருந்தவர்களை முஆவியா (ரலி) போர் வீரராக மாற்றினார்கள். 95 வயது வரை வாழ்ந்த மூஸா இப்னு நுஸைர் (ரஹ்) அவர்கள் எதிரிகளால் முறியடிக்கவே முடியாத தளபதியாகத் திகழ்ந்தார்கள்.

அந்த வகையில்  தரீக் வெற்றியும் ஸ்பெயின் வெற்றி கொள்ளப்பட்டு 800 ஆண்டு கால இஸ்லாமிய சாம்ராஜ்யம் அமைய அடித்தளம் அமைத்த வெற்றி தான் தரீக் போர். அந்த வெற்றியை அல்லாஹ் ரமழானில் தான் வழங்கினான்.

தளபதி மூஸா பின் நுஸைர் (ரஹ்) அவர்களால் தரீப் என்பவரின் தலைமையில் அந்தலூஸ் பகுதிக்கு ஒரு படை அனுப்பப்பட்டது. அவர் அந்தலூஸ் கரைப் பகுதியில் தரையிறங்கினார். அந்த இடம் ஜஸீரது தரீக்என அழைக்கப் படுகின்றது. இது ஹிஜ்ரி 92 ரமழானில் நடந்தது. இந்த வெற்றி மூலம் ஏராளமான கனீமத் பொருட்களை முஸ்லிம் படை பெற்றது.

8.   அந்தலூஸ் வெற்றி:-

حين علم موسى بن نصير بهذه الأخبار التي جاءته من طارق أرسل إليه يأمره بالتوقف والتريث حتى يوافيه، يقول ابن خلدون الذي يُصوِّر لنا طموحات موسى بن نصير التي كانت تتعدى مجرد فتح الأندلس إلى فتح القارة الأوروبية كلها قائلا:

نهض (موسى بن نصير) مِن القيروان سنة ثلاث وتسعين من الهجرة في عسكر ضخم من وجوه العرب والموالي وعُرفاء البربر، ووافَى خليج الزقاق (مضيق جبل طارق) فأجازَ إلى الأندلس. وتلقّاه طارقُ وانقاد واتَّبع، وتمّمَ موسى الفتح، وتوغَّل في الأندلس إلى برشلونة في جهة الشرق، وأربونة في الجوف، وصنم قادس في الغرب، ودوّخ أقطارها وجمع غنائمها. وجمعَ (عزم) أن يأتي المشرق على القُسطنطينية ويتجاوز إلى الشام ودروب الأندلس، ويخوض ما بينها من بلاد الأعاجم أمم النصرانيّة مجاهدا فيهم مستلحما لهم إلى أن يلحق بدار الخلافة. ونمى الخبر إلى الوليد (بن عبد الملك الخليفة الأموي) فاشتدّ قلقُه بمكان المسلمين مِن دار الحرب، ورأى أن ما همَّ به موسى غررَ بالمسلمين، فبعثَ إليه بالتوبيخ والانصراف، وأسرّ إلى سفيره أن يرجعَ بالمسلمين إن لم يرجع هو، وكتبَ له بذلك عهده، ففتَّ ذلك في عزم موسى، وقفلَ عن الأندلس بعد أن أنزلَ الرابطة والحامية بثغورها. واستعمل ابنه عبد العزيز لغزوها وجهاد أعدائها، وأنزله بقرطبة فاتخذها دار إمارة

அதைத் தொடர்ந்து ஹிஜ்ரி 91 ரமழானில் தளபதி மூஸா பின் நுஸைரின் பணியாளாக இருந்த தளபதி தாரிக் பின் ஸியாத் (ரஹ்) அவர்களின் தலைமையில் அந்தலூஸ் வெற்றி கொள்ளப்பட்டது. இஸ்லாமிய உலகு கண்ட மகத்தான வெற்றிகளில் மூன்றாவது வெற்றியாக இது கருதப்படுகின்றது. இதன் பின்னர் இஸ்லாம் ஐரோப்பா, ஆசியா என உலகெங்கும் பரவியது.

وينقل ابن خلّكان في كتابه “وفيات الأعيان” أن الدافع الذي دفع موسى بن نصير لهذا الفتح والتوسع فيه “إيماني صرف”؛ إذ أرسل إلى الخليفة الأموي الوليد بن عبد الملك قائلا: “إنها ليست الفتوح ولكنها الجنة

அந்தலூஸ் - ஸ்பெயின் வெற்றி குறித்து அப்துல் மலிக் இப்னு மர்வானுக்கு கடிதத்தின் வாயிலாக மூஸா இப்னு நுஸைர் (ரஹ்) அவர்கள் தெரிவித்த போது அப்துல் மலிக் இப்னு மர்வான் பதில் கடிதத்தில் "இது வெற்றியல்ல. மாறாக, இது சுவனத்தின் வெற்றி!" என்று குறிப்பிட்டாராம். ( நூல்: வஃயாத்துல் அஃயான் லிஇமாமி இப்னு கல்லாகான் )

9.   ஹதீன் போர்:-

لقد كان يومُ حطين يومًا عظيمًا في الإسلام، وكانت معركتها القاصمة التي قصمت ظُهور النصارى، وهي المُمَهِّدَة لفتح بيت المقدس، وتطهيره من عُبَّاد الصليب، ورُعاة الخنزير؛ إذ بعد ثلاثة أشهر فقط من معركة حطين تم فتح بيت المقدس، وانتهت إمارة الصليبيين عليه بعد أن دَنَّسوه بكُفْرِهم وتثليثهم إحدى وتسعين سنة، كما انتهت إماراتهم في كثير من بلاد الشام بتتابع الفتوح والانتصارات بعد معركة حِطِّين الخالدة على يد صلاح الدين، ثم على يد ملوك بني أيوب ومَنْ بَعْدَهُمْ إلى أن تَمَّ طردُهم من الشرق الإسلامي، وانتهتِ الحملاتُ الصليبية بعد أن أيقن ملوك أوروبا أنهم لن يستطيعوا إخضاع الشرق الإسلامي لحكمهم، ولم تأت قناعتهم تلك إلا بعد معاناة طويلة، وتضحيَّات كبيرة بالأنفس والأموال والمتاع بذلها المسلمون، ودامت مائتي سنة، فلله الحمد أولاً وأخيرًا.

 

உலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான் சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல் முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக் கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும் இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான். இந்த வெற்றியும் ரமழான் பிறை 27 லேயே இந்த உம்மத்திற்கு கிடைத்தது.

இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 200 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக! ( நூல்: பிதாயா வந் நிஹாயா )

10.  ஐன்-ஜாலூத் போர்:-

كانت معركة عين جالوت واحدة من أكثر المعارك حسمًا في التاريخ، أنقذت العالم الإسلامي من خطر داهم لم يواجه بمثله من قبل، وأنقذت حضارته من الضياع والانهيار، وحمت العالم الأوروبي أيضًا من شر لم يكن لأحد من ملوك أوروبا وقتئذ أن يدفعه.

 

وكان هذا النصر إيذانًا بخلاص الشام من أيدي المغول؛ إذ أسرع ولاة المغول في الشام بالهرب، فدخل قطز دمشق على رأس جيوشه الظافرة في (27 من رمضان 658 هـ)، وبدأ في إعادة الأمن إلى نصابه في جميع المدن الشامية، وترتيب أحوالها، وتعيين ولاة لها

 

உலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள் வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.

ரமழான் பிறை 25 ல் துவங்கிய இந்த போர் ரமழான் பிறை 27 ல் வெற்றியுடன் முடிந்தது. இந்த வெற்றியும் முஸ்லிம் உம்மத் பெற்ற வெற்றிகளில் மகத்தான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மங்கோலியர்கள் இஸ்லாமிய நினைவுச் சின்னங்களில் எவைகளையெல்லாம் தகர்த்தார்களோ, அழித்தார்களோ அவகளை எல்லாம் இந்த வெற்றியின் பின்னர் அல்லாஹ் மங்கோலியர்களுக்கு ஹிதாயத்தை வழங்கி மீண்டும் புணரமைப்பு செய்ய வாய்ப்பு வழங்கினான். ( நூல்: பிதாயா வந் நிஹாயா, வஃயாத்துல் அஃயான் )

ஒவ்வொரு ரமழானிலும் அல்லாஹ்வின் அருளைக் கேட்கின்றோம்! மக்ஃபிரத்தைக் கேட்கின்றோம்! நரக விடுதலையைக் கேட்கின்றோம்! சுவனத்தைக் கேட்கின்றோன். அமல்களின் மக்பூலிய்யத்தைக் கேட்கின்றோம்! எப்போதாவது நாம் இந்த உம்மத்திற்கு வெற்றியைக் கேட்டிருக்கின்றோமா?

 

அல்லாஹ்விடம் இந்த உம்மத்திற்கு வெற்றியைக் கேட்போம்! நிரந்தரமான வெற்றியைக் கேட்போம்! நிம்மதியான வெற்றியைக் கேட்போம்!

அல்லாஹ்வே! இந்த உம்மத்திற்கு சகல விதமான எதிரிகளிடம் இருந்தும் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் மகத்தான வெற்றியைத் தந்தருள்வாயாக! எல்லா விதமான துன்பங்களில் இருந்தும், சோதனைகளில் இருந்தும் ஈடேற்றத்தைத் தந்தருள்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!.

2 comments:

  1. மாஷா அல்லாஹ் மிக அருமை புதிய கோணம்

    ReplyDelete