அல்லாஹ்வின் அருட்கொடைகளை சிந்தித்துப் பார்ப்போம்!!!
ரமழான் - (1444 - 2023) தராவீஹ்
சிந்தனை:- 11.
பதினோராவது நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, பத்தாவது நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமாகவும், ஈமானுக்கு உரமாகவும் அமைந்திருக்கின்ற
குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், நம்முடைய இதர நல்லறங்களையும் கபூல் செய்து நிறைவான நன்மைகளை
வழங்கியள்வானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் சூரா அர் ரஅத், சூரா, இப்ராஹீம், சூரா அல் ஹிஜ்ர் மற்றும் அந்நஹ்ல்
சூராவின் பெரும்பகுதி ஓதி நிறைவு செய்யப்பட்டது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நஹ்ல் சூராவில் பெரும்பகுதியில் மனித குலத்திற்கு
தான் வழங்கியிருக்கும் அருட்கொடைகள் குறித்து விரிவாகவே பேசுகின்றான்.. அதில்
இரண்டு வசனங்கள் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ
"மேலும்
உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம்".
( அல்குர்ஆன்: 16:
53 ).
وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ
لَغَفُورٌ رَحِيمٌ
"அல்லாஹ்வின்
அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணிவிட முடியாது".
( அல்குர்ஆன்: 16:
18 ).
இறைவன் மனிதனுக்கு
எண்ணிலடங்கா அருட்கொடைகளை வழங்கி இருக்கின்றான். வழங்கிக் கொண்டே இருக்கின்றான். இறைவனின் அருட்கொடைகள் என்பது பரந்து விரிந்தது, மிகவும் விசாலமானது. அந்தளவு இறைவன் நமக்கு
அருள்புரிந்துள்ளான்.
அருட்கொடைகளைப்
பார்க்கும் முன்பாக அருட்கொடைகள் குறித்தான நம் சிந்தனையில் ஒரு தெளிவு இருக்க
வேண்டும். அந்த தெளிவு என்ன? அது இது தான்.
அல்லாஹ்வின்
அருட்கொடைய அற்பமாக கருதிவிடக் கூடாது என்று மட்டுமல்ல, அது குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் என்றும் மார்க்கம் நம்மை
எச்சரிக்கிறது.
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
பின்னர் அந்நாளில்
அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 102: 8 )
قال ابن جرير: حدثني الحُسَين بن علي الصدائي، حدثنا الوليد بن القاسم،
عن يزيد بن كيسان، عن أبي حازم عن أبي هريرة قال: بينما أبو بكر وعمر جالسان، إذ
جاءهما النبي صلى الله عليه وسلم فقال: "ما أجلسكما هاهنا؟ " قالا والذي
بعثك بالحق ما أخرجنا من بيوتنا إلا الجوع. قال: "والذي بعثني بالحق ما
أخرجني غيره". فانطلقوا حتى أتوا بيت رجل من الأنصار، فاستقبلتهم المرأة،
فقال لها النبي صلى الله عليه وسلم: "أين فلان؟ " فقالت: ذهب يستعذب (2)
لنا ماء. فجاء صاحبهم يحمل قربته فقال: مرحبا، ما زار العباد شيء أفضل من شيء (3)
زارني اليوم. فعلق قربته بكرب نخلة (4) وانطلق فجاءهم بعذق، فقال النبي صلى الله
عليه وسلم: "ألا كنت اجتنيت" ؟ فقال: أحببت أن تكونوا الذين تختارون على
أعينكم. ثم أخذ الشفرة، فقال النبي صلى الله عليه وسلم: "إياك والحلوب؟
" فذبح لهم يومئذ، فأكلوا. فقال النبي صلى الله عليه وسلم: "لتسألن عن
هذا يوم القيامة. أخرجكم من بيوتكم الجوع، فلم ترجعوا حتى أصبتم هذا، فهذا من
النعيم" (5) .
ورواه
مسلم
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) ஒரு பகல் அல்லது ஓர் இரவு (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு
வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே
இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள்,
இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து
புறப்பட்டு வர என்ன காரணம்? என்று கேட்டார்கள்.
அதற்கு, பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே! என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது
அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது என்று கூறிவிட்டு, எழுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும்
எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்)
சென்றனர்.
அப்போது
அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத்
தோழரின் துணைவியார் கண்டதும், வாழ்த்துகள்!
வருக என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், அவர் எங்கே? என்று கேட்டார்கள்.
அதற்கு
அப்பெண், எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக
(வெளியே) சென்றுள்ளார் என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்)
கண்டார். பிறகு எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும்
இல்லை என்று கூறிவிட்டு,
(திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார்.
அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும்
கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், இதை உண்ணுங்கள் என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார்.
அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பால் தரும் ஆட்டை அறுக்க
வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அவ்வாறே
அவர்களுக்காக *அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த
ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர்.
*
வயிறு நிரம்பி
தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர்
(ரலி) ஆகியோரிடம்,
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை
பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
பசி உங்களை உங்கள்
வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள்
திரும்பிச் செல்கிறீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் (4143) – இப்னு கஸீர் )
எனவே, நாம் நமக்குக் கிடைத்திருக்கும் அருட்கொடைகளைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க
வேண்டும். நம்முடைய உடல் உறுப்புக்களைக் குறித்து சிந்தித்தாலே புரியும் இறைவனின்
அருட்கொடை எவ்வளவு பெரியது என்று.
أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ (8) وَلِسَانًا وَشَفَتَيْنِ
"நாம் அவனுக்கு இரு
கண்களையும் ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா?" (திருக்குர்ஆன் 90:8,9)
என இறைவன் கேட்கின்றான்.
கண் மற்றும் பார்வைத்திறன் எனும் மகத்தான இரண்டு
அருட்கொடைகள்..
கருவறையில் முதன்
முதலாக செவிப்புலனையும்,
அடுத்ததாக கண் பார்வையையும், அடுத்ததாக இதயத்துடிப்பையும் செயல்பட வைப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
ثُمَّ
سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِ ۖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ
وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத்தன்னுடைய “ரூஹை”
அதில்புகுத்தி (உங்களைஉற்பத்திசெய்கிறான்.) உங்களுக்குக்
காதுகள்,
கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும்
அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகுசிலரே! (
அல்குர்ஆன்: 32:
9 )
إِنَّا
خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ
سَمِيعًا بَصِيرًا
(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம் தாம் மனிதனை
படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும்
பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம். ( அல்குர்ஆன்: 76: 2 )
பொதுவாக அனைத்து
உயிரினங்களிடமும் காணமுடியுமான ஒரு உறுப்புதான் இந்தக் கண். உயிரினங்கள்
ஒவ்வொன்றின் கண்களும் வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளன. சில உயிரினங்களின்
கண்கள் முகத்தின் முன்பகுதியிலும் வேறு சில விலங்குகளின் கண்கள் முகத்தின் இறு
புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
சிலந்திகள்
தலையைச் சூழ எட்டு கண்களைக் கொண்டுள்ளன. தும்பிகளின் இரண்டு பெரிய கண்களிலும் 30,000 சிறிய கண்கள் காணப்படுகின்றன. ஆந்தை, வெளவால்,
பூனை போன்ற உயிரினங்கள் இராக் காலங்களிலும் தெளிவாகப்
பார்க்கும் அபார சக்தியைப் பெற்றுள்ளன. கழுகு போன்று கூர்மையான பார்வையை உடைய
உயிரினங்களும் இருக்கின்றன. இவ்வாறு நம்மைச் சூழவுள்ள இந்த பசுமையான உலகைப்
பார்ப்பதற்கும் அதில் எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் நமக்கும் அல்லாஹ்
படைத்து அதில் பார்வையைத் தந்துள்ளான்.
இன்று
விஞ்ஞானத்துறையில் மனிதன் வியத்தகு சாதனைகளைச் செய்தும் கூட கண்களின் இயல்பை
அடிப்படையாகக் கொண்டு ஒரு போலிக் கண்ணை கூட அமைக்க அவனால் இன்னும்
முடியவில்லை.
கருவில் வளரும்
குழந்தையின கண்கள் இயல்பாக அமைவதே ஓர் அதிசயமாக உள்ளது. குழந்தை பிறப்பதற்கு பல
வாரங்களுக்கு முன்பே குழந்தைக்கு கண்கள் உருவாகி வளர்ச்சியடையத் துவங்குகிறது
என்கிறது மருத்துவ ஆய்வுகள். உடலின் மென்மையான அந்த உறுப்புகள், உடலின் மிக இன்றியமையாத அந்தப்பகுதி, மனிதனுக்கு உணர்வையும்
விழிபபையும் வழங்கும் அந்த அவயவம் எங்கே உருவாக்கப்படுவது கருவறையின் இருளில்
தான்.
ஒரு சிசு தாயின்
கர்ப்பப்பையில் வளரும் 42
ஆம் நாளிலேயே கண் எளிமையான வடிவில் உருவாகி விடுகின்றது.
ஆனால் 28
ஆம் வாரத்தில்தான் கண் விழித்திரை வெளிச்சத்தை உணரும் தன்மையையும் பார்க்கும் ஆற்றலையும் பெறுகின்றது.
மனிதனது கைவிரல்
ரேகைகள் எவ்வாறு ஒருவரிலிருந்து இன்னொருவருடன் வித்தியாசப் படுகின்றனவோ அதே
போன்றுதான் மனிதனது கண் ரேகைகளும். ஒருவரது கண் ரேகைபோன்று இன்னுமொருவரது கண்ரேகை
நிச்சயமாக இருக்காது. அவ்வளவு நுணுக்கமாக அல்லா மனித உருப்புகளைப் படைத்துள்ளான்
ரெடினா (Retina) என்ற பகுதி கண்ணில் உள்ளே உள்ள ஒரு திரை போன்ற அடுக்கு ஆகும்.இதில் பார்வைகளுக்கு
தேவையான நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதனுடைய பார்வை திறனுக்கு ரெடினா என்ற உயிர்
உள்ள போட்டோ பிலீம் இன்றியமையாத திசுஆகும். அல்லாஹ்தஆலா நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுக்கு குர்ஆன் அருளிய காலங்களில் அறிவியலில் எந்த கண்டுபிடிப்புகள்
கிடையாது. இவ்வாறு சூழ்நிலை இருந்த அக்காலத்தில் அல்லாஹ் தன் அருள் மறையில்
திருகுர்ஆனில் சூரா ஃபாத்திர் அத்தியாத்தில் வசனம் 8-ல் பார்வைகளை பற்றி இவ்வாறு கூறுகிறான். அதாவது;
أَفَمَن
زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا ۖ فَإِنَّ اللَّهَ يُضِلُّ مَن
يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ
حَسَرَاتٍ
ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُ
எவனுக்குத்
தீயகாரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீயகாரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக்கொள்கின்றானோ அவனும்
சமமாவார்களா?
ஒரு போதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ்தான்
விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை
நேரானவழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!)
அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள்.
நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(35:8)
இந்த வசனத்தில் “RAA” என்ற அரபி வார்த்தைக்கு “பார்ப்பது” என்று அர்த்தம் உள்ளது. ஆங்கிலத்தில் ரெடினா (Retina) என்று அதைக் குறிப்பிடுவர். இது மட்டுமின்றி இதே சூராவில் வசனம் 19வில் குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள் என்றும் , வசனம் 20வில் இருளும் பிரகாசமும் சமமாகாது என்றும் அல்லாஹ் கூறுகிறான். இவை குர்ஆன்
முலம் மனித குலத்திற்கு அல்லாஹ் கூறும் அத்தாட்சிகளாகும்.
குருடனும்பார்வையுடையவனும்சமமாக
மாட்டார்கள். (35:19)
وَلَا الظُّلُمَاتُ وَلَا النُّورُ
(அவ்வாறே) இருளும்பிரகாசமும் (சமமாகாது).(35:20)
One
of the Swiss pharmaceutical companies has started producing a new medicine
called “Medicine of Qur'ân” which allows the treatment of cataract without
surgery. As the newspaper Ar-Raya, published in Qatar writes, “this drug which
was synthesised by an Egyptian doctor Abdul Basit Muhammad from the secretions
of human sweat glands & has an effectiveness of 99 % with absolutely no
side effects, was registered in Europe & the United States. It is also
reported that one of the Swiss companies produces the new drug in the form of
liquid & eye drops.
The
source of inspiration is Surah Yusuf. Dr Abdul Basit Muhammad emphasised that
he obtained his inspiration from Surah Yusuf & said:
“ Once in the morning, I
was reading Surah Yusuf. My attention lingered over the 84th & successive
ayats (verses). They tell that Prophet Yakub who was mourning his son Yusuf
(peace be upon them) in sadness & grief got his eyes turned white &
later when people cast over the sorrowful father’s face, the shirt of his son
Yusuf, vision returned to him & he was able to see again. Here I started
pondering. What could be there in the shirt of Yusuf Alayhis salaam?
Finally
I arrived at the decision that nothing except sweat could be on it. I
concentrated my thoughts over the sweat & its composition. Then I proceeded
to the laboratory for research.
I
carried out a series of experiments on rabbits. The results turned out to be
positive. Later I performed treatment on 250 patients by administering the drug
twice a day for 2 weeks.
Finally
I achieved 99 % success & said to myself: “ This is the miracle of the
Qur'ân” Dr Abdul Basit Muhammad presented the results of his research to
institutions in Europe & United States dealing with patenting of new
discoveries.
After
tests & research were performed, he finalised a contract with a Swiss
company on the production of the medicine on the condition that the package
should clearly mention-“Medicine of Qur'ân.”
Allah
the Almighty said; “And We send down, of the Qur'an, that which is a healing
& a mercy to the believers.” (Surah al Isra: 82)
குர்ஆன் கூறும்
கண்புரை (Cataract)
நோய்விற்கு மருந்து; சுவிஸ் மருந்துக்கம்பெனி
குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களில் அடிப்படையில் கண்புரை நோய்விற்கு அறுவை
சிக்கிசை இல்லாமல் ஒரு அற்புதமான மருந்தை உருவாக்குகிறார்கள்.
இது சம்மந்தமான
செய்தி கத்தார் நாட்டின் அர்-ராயா என்ற செய்தித்தாளில் வந்த செய்தியாவது, எகிப்திய மருத்துவரான டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் மனிதனின்
வேர்வை (Secretions
of human Sweat Gland) யில் இருந்து 99சதவிதம் பயனுள்ள,
எந்த பக்கவிளைவும் இல்லாத ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்தார், பின்னர் அதை ஐரோப்பா மற்றும் அமெக்கா போன்ற நாட்டில் பதிவு செய்தார். அந்த
குறிப்பிட்ட பொருளில் இருந்து சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்களுக்கு
தேவையான மருந்து தயாரிப்பில் ஈடுப்படுகிறார்கள்.
சூரா யூசுப் என்ற
திருக்குர்ஆனின் அத்தியாயமே டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் கண்புரை
நோய்க்கு மருந்து உருவாக்க துண்டியது. அவர் கூறுகிறார், ஒரு நாள் காலை நேரத்தில் சூரா யூசுப் படித்துக் கொண்டு இருந்தேன், அச்சூராவின் 84
மற்றும் அடுத்து வரும் வசனங்கள் என் சிந்தனையை துண்டியது.
اذْهَبُوا
بِقَمِيصِي هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَأْتُونِي
بِأَهْلِكُمْ أَجْمَعِينَ
“நீங்கள் என்னுடைய
இந்தச்சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர்
(இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள
அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். ( அல்குர்ஆன்: 12: 93 )
நபி யஅகூப் (அலை)
அவர்களுக்கு கவலையினாலும்,
வருத்தினாலும் கண்புரை நோய் வந்தது, பின்னர் நபி யூசுப் (அலை) அவர்களின் சட்டையினால் யஅகூப் (அலை) அவர்களுக்கு
பார்வை மீண்டும் கிடைத்தது.
டாக்டர் இதற்கு
என்ன காரணம் இருக்கும் என்ற ஆய்வில் இருந்த சமயத்தில் அவரின் சிந்தனைக்கு வந்த
பொருள் தான் மனிதனின் வேர்வை. அவர் அதை சில சோதனை விலங்குகளில் ஆய்வு செய்தார்.
அது நேர் மறையான தாக்கங்கள் தந்ததின் அடிப்படையில் 250 கண்புரை நோயாளிகளுக்கு அம்மருந்தை தினத்தோறும் இருமுறை என இரண்டு வாரம்
தந்தார்.அதில் அவருக்கு 99சதவிதம் வெற்றியை தந்தது. அதன் பின் அவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற
நாட்டில் உள்ள சில ஆய்வு நிருவனங்களுடன்(Medical laboratory) மேலும் சில ஆய்வுகளை செய்து பின்னர் சுவிஸ் நாட்டை மையமாக கொண்ட மருந்து
கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்தார். மேலும் அந்த மருந்தில் “Medicine of Quran” என்ற வாசகத்தை பதியவேண்டும் என்ற நிபந்தனையுடன் அதன் உரிமையை தந்துவிட்டார்.
அல்லாஹ்
திருக்குர்ஆனில் மனித இனத்திற்கு அருமருந்தாக தந்துள்ளான். இதை தான் அல்லாஹ்
கீழ்காணும் வசனத்தில் கூறுகிறான்;
وَنُنَزِّلُ
مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ
الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
நம்பிக்கை
கொண்டவர்களுக்கு அருளாகவும் அருமருந்தாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில்
நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ
(இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை. ( அல்குர்ஆன்: 17: 82 )
கண் மருத்துவத் துறையில் இஸ்லாமியர்களின் பங்கு..
மருத்துவமும்
அறுவை சிகிச்சைகளிலும் அதிகமான கண்டுப்பிடிப்புகள் இந்த 20 மற்றும் 21வது நூற்றாண்டில் தான் பல வந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இஸ்லாமிய Golden Ages என்று சொல்லக்கூடிய காலக்கட்டதில் அதாவது கிபி 800 – 1400 காலக் கட்டத்திலேயே முஸ்லிம் மருத்துவர்களான ஹுனைன் பின் இஸ்ஷாக் , அலி பின் அல்-கஹ்ஹால் ,
அம்மார் பின் அலி அல்-மவ்சிலி, பின் அபி உசைபி’ஹ் போன்றவர்கள் கண் அறுவை சிசிச்சை பற்றி பல புத்தகங்கள் எழுதியது மட்டும்
இல்லாமல் பல அறுவை சிசிச்சைகளும் செய்து கட்டினார்கள். ( நன்றி:- acmyc.com)
கண் எவ்வளவு பெரிய அருட்கொடை?...
روى
الحاكم في المستدرك على الصحيحين ج4/ص278, قال رحمه الله:" أخبرني أحمد بن
محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا عبد الله بن صالح المقرئ ثنا
سليمان بن هرم القرشي وحدثنا علي بن حمشاد العدل ثنا عبيد بن شريك ثنا يحيى بن
بكير ثنا الليث بن سعد عن سليمان بن هرم عن محمد بن المنكدر عن جابر بن عبد الله
رضي الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم فقال:" خرج من عندي
خليلي جبريل آنفا فقال يا محمد والذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله
تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه وطوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا
والبحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية وأخرج الله تعالى له عينا عذبة بعرض
الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل وشجرة رمان تخرج له كل ليلة رمانة
فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء وأخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته
فسأل ربه عز وجل عند وقت الأجل أن يقبضه ساجدا وأن لا يجعل للأرض ولا لشيء يفسده
عليه سبيلا حتى بعثه وهو ساجد قال ففعل فنحن نمر عليه إذا هبطنا وإذا عرجنا فنجد
له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز وجل فيقول له الرب أدخلوا
عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول
يا رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الله
عز وجل للملائكة قايسوا عبدي بنعمتي عليه وبعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة
خمس مائة سنة وبقيت نعمة الجسد فضلا عليه
ஜாபிர் இப்னு
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி {ஸல்} எங்களை நோக்கி “தோழர்களே! கொஞ்ச நேரத்திற்கு
முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து
வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திப்போனார்” என்று கூறி விட்டு எங்களிடம் “என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “முஹம்மத் {ஸல்} அவர்களே! சத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு நல்லடியார் இருந்தார்.
அந்த அடியார்
நாற்புறமும் கடலால் சூழப்பட்ட மலைப்பிரதேசத்தில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து
வந்தார்.
கடல் சூழ்ந்த – உப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ்
அவருக்கு மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான். அருகில் ஓர் மாதுளை மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.
தினமும் மாலை
நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கு வரும் அவர் அந்த மாதுளை
மரத்திலிருந்து ஒரு கனியை உண்டு விட்டு, அந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி விட்டு உளூ செய்து விட்டு மீண்டும்
மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விடுவார்.
ஒரு நாள் அந்த
நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது “யாஅல்லாஹ்! என் உயிர் பிரியும்
தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும் நிலையிலேயே பிரிய வேண்டும் என
ஆசிக்கின்றேன்! மேலும், என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ
பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மேலும், அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்! என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கோரினார்.
அல்லாஹ்வும்
அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.
வானவர்களாகிய நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும்
போதும், பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே
நிலையிலேயேக் கண்டோம்.
தொடர்ந்து
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்: “ நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு மக்களாக அந்த நல்லடியார்
அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.
அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், அவரை நோக்கி “இதோ என்னுடைய இந்த
அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்பான்.
அதற்கு, அவர் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! நான் செய்த என்னுடைய
அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ
ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன். ஆனால், நீயோ உன் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச்
செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால், என்னுடைய 500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?” என்று வினவுவார்.
அப்போது, அல்லாஹ் தன் வானவர்களுக்கு “இந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான் செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள்” என்று கட்டளையிடுவான்.
அப்போது வானவர்கள் “இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும் நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான
கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.
நீ வழங்கிய
மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லை” என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.
கூறுவார்கள்.
فيقول
أدخلوا عبدي النار قال فيجر إلى النار فينادي رب برحمتك أدخلني الجنة فيقول ردوه
فيوقف بين يديه فيقول يا عبدي من خلقك ولم تك شيئا فيقول أنت يا رب فيقول كان ذلك
من قبلك أو برحمتي فيقول بل برحمتك فيقول من قواك لعبادة خمس مائة عام فيقول أنت
يا رب فيقول من أنزلك في جبل وسط اللجة وأخرج لك الماء العذب من الماء المالح
وأخرج لك كل ليلة رمانة وإنما تخرج مرة في السنة وسألتني أن أقبضك ساجدا ففعلت ذلك
بك فيقول أنت يا رب فقال الله عز وجل فذلك برحمتي وبرحمتي أدخلك الجنة أدخلوا عبدي
الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام إنما
الأشياء برحمة الله تعالى يا محمد". هذا حديث صحيح الإسناد
அது கேட்ட அல்லாஹ்
வானவர்களிடம் “இதோ இந்த அடியானை
நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்” என்பான்.
அவர் நரகத்திற்கு
இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர் “இறைவா! உன் அருளின் துணை கொண்டே
என்னை சுவனத்தில் நுழையச்செய்!” என அலறுவார்.
அந்த அலறலைக்
கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம் “அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!” என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.
அப்போது, அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த
உரையாடல் இதோ….
அல்லாஹ்: என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து உன்னை வாழ வைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: கடலும் –உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில் மதுரமான நீரூற்றையும் , புற்பூண்டுகளே முளைத்திடாத பாறையிலிருந்து மாதுளை
மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
அல்லாஹ்: உன் ரூஹ் ஸஜ்தா – சிரம் பணிந்த நிலையில் பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது
உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
இந்த உரையாடலை
முடித்து வைக்கும் முகமாக, இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம் “என் அடியானே! இவை அனைத்தும் என்
அருளின் மூலமாகத்தான் நீ பெற்றாய்! இப்போதும், நீ என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல
இருக்கின்றாய்! அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனே” என்று கூறி விட்டு வானவர்களை நோக்கி “இதோ இந்த என் அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு
விடுங்கள்!” என்பான்.
இதைக் கூறி விட்டு
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் “முஹம்மத் {ஸல்} அவர்களே! ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின்
அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றது” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்” என்று நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள். ( நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அவனுடைய
அருட்கொடைகளை நினைவு கூர்வதற்கும், அதற்காக நாவாலும், உள்ளத்தாலும், உடலாலும், பொருளாலும்
நன்றி செலுத்தும் நற்பேற்றைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!
Masha Allah
ReplyDeleteArumaiyana thagaval