Sunday, 2 April 2023

யாஅல்லாஹ்!! எங்களுடைய விசாரணையை எளிதாக்குவாயாக!

 

யாஅல்லாஹ்!! எங்களுடைய விசாரணையை எளிதாக்குவாயாக!

ரமழான் - (1444 - 2023) தராவீஹ் சிந்தனை 12.

12 -வது நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, 11 -வது  நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமாகவும்,  ஈமானுக்கு உரமாகவும் அமைந்திருக்கின்ற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், நம்முடைய இதர நல்லறங்களையும் கபூல் செய்து நிறைவான நன்மைகளை வழங்கியள்வானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா நஹ்லின் எஞ்சிய வசனங்கள் மற்றும் சூரா அல் இஸ்ராஃ, சூரா கஹ்ஃபின் பெரும் பகுதி வசனங்கள் ஓதப்பட்டுள்ளன.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சூரா அல் இஸ்ராவின் வசனத்தில் நாளை மறுமையில் விசாரணை செய்யப்படுவது குறித்து பேசுகின்றான்.  

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. ( அல்குர்ஆன் : 17 : 36 )

விசாரணை மன்றம்..

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ

(‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.) (அல்குர்ஆன் 23 : 115)

وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا

அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள்.  ( அல்குர்ஆன்: 14: 21 )

விசாரணை அனைவருக்கும் பொதுவானதே!

فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ (92) عَمَّا كَانُوا يَعْمَلُونَ

உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம். ( அல்குர்ஆன்: 15: 92,93 )

فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ

யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம். ( அல்குர்ஆன்: 7: 6 )

أَيُّ شَهْرٍ هَذَا “، قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ ذُو الحِجَّةِ»، قُلْنَا: بَلَى، قَالَ: «فَأَيُّ بَلَدٍ هَذَا». قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ البَلْدَةَ». قُلْنَا: بَلَى، قَالَ: «فَأَيُّ يَوْمٍ هَذَا». قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ يَوْمَ النَّحْرِ». قُلْنَا: بَلَى، قَالَ: ” فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ، – قَالَ مُحَمَّدٌ: وَأَحْسِبُهُ قَالَ – وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ

அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவிக்கும் நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி:- "ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக் கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது துல்ஹஜ் இல்லையா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘ஆம்என்றோம். (பிறகு,) ‘இது எந்த நகரம்?’ எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்என்றோம். 

அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது (புனிதமிக்க) நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள், ‘ஆம்என்றோம். மேலும், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?’ எனக் கேட்க, நாங்கள், ‘ஆம்என்றோம். (பிறகு,) ‘உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்

நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்தீர்ப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான்." என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் விசாரணை எப்படி இருக்கும்?

مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ اللهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அறிவித்தார்கள்:- "அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் தமது வலப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கு அவர் காணமாட்டார்.

பின்னர் அவர் தமது இடப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கெனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கும் அவர் காணமாட்டார். மேலும், அவர் தமக்கு முன்னால் பார்ப்பார். தமது முகத்துக் கெதிரே நரக நெருப்பையே அவர் காண்பார். ஆகவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திரிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

حَدَّثَنَا حَاتِمُ بْنُ أَبِي صَغِيرَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، حَدَّثَنِي القَاسِمُ بْنُ مُحَمَّدٍ: حَدَّثَتْنِي عَائِشَةُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ يَوْمَ القِيَامَةِ إِلَّا هَلَكَ» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَيْسَ قَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ العَرْضُ، وَلَيْسَ أَحَدٌ يُنَاقَشُ الحِسَابَ يَوْمَ القِيَامَةِ إِلَّا عُذِّبَ

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார்என்று கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்?” (84:8) என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர் களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : புகாரி )

முதல் கேள்வி  எதைப்பற்றி…

இறைக்கடமைகளில்...

« إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلاَتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ فَإِنِ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَىْءٌ قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ انْظُرُوا هَلْ لِعَبْدِى مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنَ الْفَرِيضَةِ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ »

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான். அறி: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ-413 (378)

இறையடியார் கடமைகளில்...

أن النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ بِالدِّمَاءِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். ( நூல்: புகாரி )

அருட்கொடைகளில்….

وعن أبي هريرة قال رسول الله ﷺ

 إن أول ما يُسأل عنه يعني العبد من النعيم أن يقال له: ألم نصح لك جسمك، ونرويك من الماء البارد، 

رواه الترمذي: 3358، وصححه الألباني في صحيح الجامع الصغير: 2022].

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- “அல்லாஹ் ஒரு அடியானிடம் கேட்கும் கேள்விகளில் முதல் கேள்வி “உனக்கு உடல் ஆரோக்கியத்தைத் தரவில்லையா? நீ தாகித்திருக்கும் போது குளிர்ந்த நீரை பருகுவதற்கு தரவில்லையா?” என்று கேட்பான். என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதி )

அடுத்த அடுத்த விசாரணைகள்…

كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَهِيَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»، قَالَ: فَسَمِعْتُ هَؤُلاَءِ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَحْسِبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தன் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.

பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுக்குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்று சொன்னதாக எண்ணுகிறேன் என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

உடல் உறுப்புகள் சாட்சி சொல்லும்!!

قال الإمام أحمد -رحمه الله-: حدثنا أبو معاوية، حدثنا الأعمش، عن عمارة، عن عبد الرحمن ابن يزيد  عن عبد الله قال: كنت مستترًا بأستار الكعبة فجاء ثلاثة نفر: قرشي، وختناه ثقفيان -أو ثقفي وختناه قرشيان-كثير شحم بطونهم قليل فقه قلوبهم، فتكلموا بكلام لم أسمعه، فقال أحدهم: أترون أن الله يسمع كلامنا هذا؟ فقال الآخر: إنا إذا رفعنا أصواتنا سمعه ، وإذا لم نرفعه لم يسمعه، فقال الآخر: إن سمع منه شيئا سمعه كله. قال: فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم، فأنزل الله عز وجل: { وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلا أَبْصَارُكُمْ وَلا جُلُودُكُمْ } إلى قوله: { مِنَ الْخَاسِرِينَ }

وكذا رواه الترمذي عن هناد، عن أبي معاوية، بإسناده نحوه

இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும் (ஆக மூன்று பேர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகள் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்கள் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்கள் ஒருவர்,"நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?'' என்று கேட்டார். மற்றொருவர், "நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை'' என்று பதிலளித்தார்.

(அவர்களில்) இன்னும் ஒருவர், "நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ், "உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை'' எனும் வசனங்களை (அல்குர்ஆன் 41:22) அருளினான்” என ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: அஹ்மத், புகாரி – தஃப்ஸீர் இப்னு கஸீர் )

மக்கள், “”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமை நாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”மேகமூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லைஎன்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள்.

மக்கள் இல்லைஎன்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.

இறைவன் அடியானைச் சந்தித்து, “”இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “ஆம்என்பான். இறைவன், “”நீ என்னைச் சந்திப்பாய் என எண் ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லைஎன்பான். இறைவன், “”அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்என்பான்.

பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், “”இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப் படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த் தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?” என்று கேட்பான்.

அதற்கு அந்த அடியான், “”ஆம், என் இறைவா!என்பான். இறைவன், “”நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லைஎன்பான். இறைவன், “”அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்என்பான். பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், “”என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தானதர்மம் செய் தேன்என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.

அப்போது இறைவன், “”நீ இங்கேயே நில்என்று கூறுவான். பிறகு அவனிடம், “”இப்போது உனக் கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம்என்று கூறுவான். அந்த மனிதன், தனக் கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து “”பேசுங்கள்என்று சொல்லப்படும்.

அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் )

 

 

விசாரணை நாளை பயப்படுவது மேன்மக்களின் பண்பாகும்...

இப்ராஹீம் (அலை) விசாரணை நாளை பற்றி பயந்து தமது இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கின்றார்கள்.

وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ

கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என் குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன். (அல்குர்ஆன்26 : 82)

وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ

யா அல்லாஹ்! அந்த மறுமையில் நீ என்னைக் கேவலப்படுத்தி விடாதே! (அல்குர்ஆன்26 : 87)

وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ

மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள். ( அல்குர்ஆன்13 : 21)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ (41)

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" ( அல் குர்ஆன் 14:41 )

விசாரணையின்றி சுவனம் செல்ல ஆசைப்படுவோம்!!

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُ ‏ ‏قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يَدْخُلُ مِنْ أُمَّتِي ‏ ‏زُمْرَةٌ ‏ ‏هُمْ سَبْعُونَ أَلْفًا تُضِيءُ وُجُوهُهُمْ إِضَاءَةَ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَقَامَ ‏ ‏عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ الْأَسَدِيُّ ‏ ‏يَرْفَعُ ‏ ‏نَمِرَةً ‏ ‏عَلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ثُمَّ قَامَ رَجُلٌ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَبَقَكَ بِهَا ‏ ‏عُكَّاشَةُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் பௌர்ணமி இரவின் முழுநிலவு போன்ற ஒளிரும் முகத்தவராய் (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள்என்று கூறினார்கள்.

அப்போது உக்காஷா பின் மிஹ்ஸம் அல்-அஸதீ (ரலி) தம் மேலங்கியைத் தூக்கிப் பிடித்தவராக எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!என்று பிரார்த்தித்தார்கள். பிறகு அன்ஸாரிகளில் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

விசாரணையைப் பயந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்….

நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் இரவில் பள்ளிவாசலுக்கு அருகே எச்சில் துப்பினார்கள். ஆனால் அதனை மண்போட்டு மூட மறந்த நிலையில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். வீட்டுக்குச் சென்ற பின்னரே பெருமானார் {ஸல்} அவர்களுக்கு அது குறித்து நினைவுக்கு வந்தது. உடனே ஒரு நெருப்புப் பந்தத்தை எடுத்தவாறு வீட்டைவிட்டு வேகமாக வெளியேறி பள்ளிவாசலுக்கு அருகே வந்து எச்சிலைத் தேடினார்கள். நபித்தோழர்கள் அதை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்த வேளையில் நபி {ஸல்} அவர்கள் அதைக் கண்டுபிடித்து அதனை மண்போட்டு மூடினார்கள். பின்னர் இவ்வாறு கூறினார்கள்: இன்று இரவு என் வினைப்பட்டியலில் ஒரு குற்றச்செயல் பதிவு செய்யப்படுவதில் இருந்து என்னைப் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” ( நூல்: எச்சில் தொடர்பான பாடத்தின் விரிவுரையில்.. பத்ஹுல் பாரி)

في كتاب سمط النجوم العوالي للامام العصامي وفي الرياض النضرة للمحب الطبري
لما رجع رضي الله عنه من الشام إلى المدينة - انفرد عن الناس؛ ليتعرف أخبار رعيته، فمر بعجوز لها خباء، فقصدها، فقالت: يا هذا، ما فعل عمر؟ قال: قد أقبل من الشام سالماً، فقالت: لا جزاه الله عني خيراً. قال لها: ولم؟ قالتلأنه ما فاتني من عطائه منذ ولي أمر المسلمين دينار ولا درهم، فقال: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟! فقالت: سبحان الله: ما ظننت أن أحداً يلي على الناس، ولا يدري ما بين مشرقها ومغربها. فبكى عمر، فقال: واعمراه بك أتدافعه منك حتى العجائز، ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر؟ فإني أرحمه من النار، فقالت: لا تهزأ بي، يرحمك الله؟ فقال عمرلست بهزاء - فلم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً - فبينما هو كذلك إذ أقبل: علي بن أبي طالب، وعبد الله بن مسعود - رضي الله عنهما - فقالا: السلام عليك يا أمير المؤمنين. فوضعت العجوز يدها على رأسها، وقالتواسوأتاه، شتمت أمير المؤمنين في وجهه، فقال: لا عليك، يرحمك الله.
ثم طلب وفاء فلم يجده، فقطع قطعة من مرقعته، وكتب فيها: " بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى عمر ظلامتها منذ ولي إلى يوم كذا بخمسة وعشرين ديناراً، فما تدعيه عند وقوفه في المحشر بين يدي الله تعالى فهو منه بريء شهد على ذلك من فلانة: علي بن أبي طالب، وعبد الله بن مسعود " .
قال أبو طلحة: ثم دفع الكتاب إلي، وقال: إذا مت فاجعله في كفني؛ ألقى به ربي عز وجل
.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலம். அபூ உபைதா (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில் ஷாமுக்குச் சென்று விட்டு மதீனா நோக்கி, தம் நண்பர்கள் இப்னு மஸ்வூத் (ரலி), அலீ (ரலி) மற்றும் சிலரோடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அவர்களில் இருந்து பிரிந்து தங்களின் ஆட்சியின் நிலைகள் குறித்து மக்கள் என்ன கூறுகின்றார்கள் என அறிய ரகசியமாக ஆய்வு செய்வதற்காக புறப்பட்டார்கள்.

அப்போது வயதான மூதாட்டி ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். அந்த மூதாட்டி உமர் (ரலி) அவர்கள் யார் என்று தெரியாமல் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

பேச்சின் ஊடாக உமர் (ரலி) அவர்களிடம் எங்கு சென்று கொண்டிருக்கின்றாய்?  நீ யார்? என்று கேட்டார் அந்த மூதாட்டி.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் தாம் மதீனாவைச் சார்ந்தவர் என்றும் மதீனாவிற்கு ஒரு வேளையாக வந்து விட்டு மீண்டும் மதீனா திரும்புவதாகக் கூறினார்கள்.

அம்மூதாட்டி, “உமர் எப்படி இருக்கின்றார்?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் அவர் சலாமத்தாக நலமோடு உள்ளார்என்றார்கள்.

அதற்கு அம்மூத்தட்டி அல்லாஹ் உமருக்கு நற்கூலி வழங்காமல் இருப்பானாக! என்றார்கள். அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்? இப்படித் துஆச் செய்கின்றீர்கள் என வினவினார்கள்.

அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாள் அம்மூதாட்டி.

உன் நிலைகள் உமருக்கு எப்படி தெரியும்?  என்று கலீஃபா உமர் (ரலி) கேட்ட போது, அம்மூதாட்டி, “சுப்ஹானல்லாஹ்! மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற ஒருவரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வாரா என்ன உமர்?” என்று கேட்டார்.

இது கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். அழுது கொண்டே தங்களின் ஆன்மாவோடு உமரே! உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உலகில் உண்டு! இதோ இந்த மூதாட்டி உட்பட என்றார்கள்.

அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே! உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்ற பிரியப்படுகின்றேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். 

அதைக் கேட்ட அம்மூதாட்டி,  என்னைக் கேலி செய்யாதீர்! யாரோ ஒரு உமருக்காக நீர் இரக்கப்படுகின்றீர்! அல்லாஹ் உமக்கு அருள் புரிவான்! என்றார்.

அதற்கு, உமர் ரலி,  இல்லை அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே!  நான் கேலி செய்யவில்லை, உண்மையைத் தான் பேசுகிறேன் என்று கூறி - ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக அம்மூதாட்டியின் கையில் கொடுத்தார்கள்.

 

 

அப்போது, அப்பக்கம் வந்த அலி (ரலி), மற்றும் இப்னு மஸூத் (ரலி) ஆகிய இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்.

அதை செவியுற்ற அந்த மூதாட்டி,இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களை, அவர்களின் முகத்திற்கு நேராகவே திட்டிவிட்டேனே! என்று பயந்து நடுங்கினார்.

இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் நீங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள்.

அதில் எழுதப்பட்ட விஷயம் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....  உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல்  இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 25 தீனார் பெற்றுக் கொண்டு நான் அவரை விடுதலை செய்கிறேன்.

மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்தமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி  அலி (ரலி) மற்றும் இப்னு மஸ்வூத் (ரலி) ஆகிய இருவரையும் சாட்சியாக்கி அந்த தோல் பேப்பரை தங்களோடு மதீனா கொண்டு வந்தார்கள்.

இந்தச் செய்தியை நினைவு படுத்தும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னர், ஒரு நாள் என்னை அழைத்த உமர் (ரலி) அவர்கள் அந்த தோல் பேப்பரை என்னிடம் கொடுத்து, அபூதல்ஹாவே! நான் மரணித்து என்னை கஃபன் செய்கிற போது இந்த தோல் பேப்பரையும் என்னோடு இணைத்து விடுங்கள்! இந்தக் கடிதத்தோடு என் ரப்பைச் சந்திக்க விரும்புகின்றேன்என்றார்கள். ( நூல்: அர் ரியாளுன் நள்ரா லில் முஹிப்பி லிஇமாமி அத் தபரீ (ரஹ்), ஸமத்துன் நுஜூமுல் அவாலீ லிஇமாமி அல் உஸாமீ (ரஹ்)... )

யாஅல்லாஹ் எங்களுடைய கேள்வி, கணக்கை இலேசாக்குவாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment