சில மனிதர்கள்… சில பயணங்கள்…
ரமழான் – (1444 – 2023) – தராவீஹ் சிந்தனை:-
20
வரலாறு
பயணங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. பயணங்கள் மூலம் புதிய நிலங்களை, புதிய நாடுகளை,
புதிய கண்டங்களைக் கண்டறிய முடிந்திருக்கிறது. புதிய விலங்கினங்களையும் பறவைகளையும் அறிய முடிந்திருக்கிறது.
நாடுகளுக்கு
இடையில் வணிக உறவுகளை ஏற்படுத்தியிருக்க முடிந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சியைத்
துரிதப்படுத்தி நவீன தொழில்நுட்பத்தை, பல்வேறு புதிய
கண்டுபிடிப்புகளை வெளிக் கொண்டு வந்திருக்கின்றது..
உலகம்
உருண்டையானது என்பதை பயணங்கள் மூலமாகவே உலகம் தெரிந்து கொண்டது.
உலகில்
எங்கிருந்தும் எங்கும் பயணிக்கலாம் என்பதை கடல் வழிப் பயணங்கள் வழியாகவே கண்டறிந்தார்கள். கடல் பயணம் இல்லையென்றால் அமெரிக்கா இல்லை.
ஒரு சவாலாக
நினைத்து பயணம் செய்பவர்கள் ஏராளம். கடல் கடந்து பயணம் போனால் செல்வந்தர் ஆகிவிடலாம்
என்னும் கனவோடு பயணங்கள் மேற்கொள்பவர்கள் பலர்.
அறிவியல்
ஆய்வுகளுக்காகவே,
கல்வியறிவைப் பெறுவதற்காகவே பயணம் மேற்கொண்டவர்கள்
இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காகப் பயணம் செய்தவர்கள் இன்னொரு வகை. பெரிய
நோக்கங்கள் எல்லாம் இல்லாமல், சாகசத்துக்காகக் பயணம்
மேற்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
பயணம் தான்
மனிதர்களைப் பிணைத்திருக்கிறது. வானமும் பூமியும் கடலும் மலையும் நாடும் கண்டமும்
பிரித்தாலும் உலகம் என்பது ஒன்றுதான்.
வெவ்வெறு
நிறங்களில் இருந்தாலும் பல்வேறு மொழிகள் பேசினாலும், விதவிதமான ஆடைகள் அணிந்தாலும், உண்ணும் உணவுகள்
வேறுபட்டாலும், வெவ்வேறு வகையான வாழ்க்கைமுறையைக் கடைபிடித்தாலும் மனிதர்களுக்கிடையே
அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை பயணங்களின் மூலமே உலகம்
தெரிந்துகொண்டது.
அதே பயணங்கள்தான்
மனிதர்களைப் பிளவுபடுத்தவும் செய்தது. எங்கெல்லாம் இயற்கை வளங்கள் இருக்கின்றன
என்பதைத் தெரிந்துவைத்துக்கொண்டு பலர் படையெடுத்து வருவதற்கும் ஆக்கிரமிப்புகள்
செய்வதற்கும் பயணங்கள் உதவியுள்ளன.
ஒரே பயணம்
சிலருக்கு நன்மையையும் வேறு சிலருக்குத் தீமையையும் கொண்டுவந்து
சேர்த்திருக்கிறது. உதாரணத்துக்கு, வாஸ்கோட காமா இந்தியாவுக்கு
மேற்கொண்ட பயணத்தால் அவருடைய நாடான போர்ச்சுகல் நன்மையடைந்தது. ஆனால் இந்தியா ஒரு
காலனி நாடாக மாறிப்போனது.
பிரச்னை
பயணங்களில் இல்லை. பயணங்கள் எல்லோரையும் ஒன்றுபோலவே வரவேற்கிறது. ஆனால், பயணம் செய்பவர் யார்,
அவருடைய நோக்கம் என்ன என்பதைப் பொறுத்தே இங்கு முடிவுகள்
வேறுபடுகிறது.
அந்த வகையில்
பயணங்கள் குறித்த இஸ்லாத்தின் பார்வையையும், வழிகாட்டலையும் இன்றைய
உரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.
பூமியில் பல
பாகங்களிலும் பயணம் செய்து பாருங்கள்! என்று அல்குர்ஆன் தூண்டுகிறது.
பயணங்கள் செய்வதன்
பல்வேறு சிறப்புகளை அவசியத்தை அல்குர்ஆன் வசனங்கள் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இந்த உலகில்
வாழும் நம் நிலை எப்படியானது என்பதை மிக எளிமையாக நபி {ஸல்} அவர்கள்
"ஒரு பயணியைப் போல்" இந்த உலகில் வாழுங்கள்!" என்று ஒரு உவமையின்
மூலம் ஒற்றை வார்த்தையில் கூறுவார்கள்.
பயணங்கள்
மேற்கொள்பவர்களுக்கு வணக்க வழிபாடுகளில் சலுகைகள், சட்டங்கள்,
ஒழுங்குகள் என பல்வேறு வழிகாட்டுதல்களை, ஒரு பயணியின் துஆ எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்ற சோபனத்தை எல்லாம் இஸ்லாம்
அழகு பட தந்திருக்கிறது.
அந்த வகையில்
பயணம் மேற்கொள்பவர்கள் துவக்கமாக செய்ய வேண்டிய காரியங்களில்
ஒன்றாக துஆ ஒன்றைக் கற்றுத் தந்திருக்கிறது நம் இஸ்லாமிய மார்க்கம்.
அந்த துஆவில் இடம்
பெறும் ஒரு பகுதி இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட 25 ம் ஜுஸ்வின் (43) அஸ் ஸுஃக்ருஃப் அத்தியாயத்தின் 13 மற்றும் 14 வது வசனங்கள் ஆகும்.
حَدَّثَنِى
هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ
ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ أَنَّ عَلِيًّا الأَزْدِىَّ
أَخْبَرَهُ
أَنَّ
ابْنَ عُمَرَ عَلَّمَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا
اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجًا إِلَى سَفَرٍ كَبَّرَ ثَلاَثًا ثُمَّ قَالَ «
سُبْحَانَ الَّذِى سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا
إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِى سَفَرِنَا هَذَا
الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا
سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِى
السَّفَرِ وَالْخَلِيفَةُ فِى الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ
وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ
وَالأَهْلِ ». وَإِذَا رَجَعَ قَالَهُنَّ. وَزَادَ فِيهِنَّ « آيِبُونَ تَائِبُونَ
عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:- “ இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட் டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்றுமுறை தக்பீர் (அல்லாஹு அக்பர்’) கூறுவார்கள். பிறகு “சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலீலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஃஸாயிஸ் ஸஃபரி, வகஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலிலி வல்அஹ்ல்” என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலை யில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பய ணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல் களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா, இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சி யிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களி லிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற் றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: “ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்” (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவ னையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்). ( நூல்: முஸ்லிம் )
பொதுவாக பயணங்கள் என்பது...
حَدَّثَنَا
عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ ، حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ سُمَيٍّ ، عَنْ أَبِي
صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى
الله عليه وسلم قَالَ السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ يَمْنَعُ أَحَدَكُمْ
طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى
أَهْلِهِ
பயணம் வேதனையில்
ஒரு பகுதியாகும். அது ஒருவரது உணவை யும், பாணத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே ஒருவர் தம் தேவையை முடித்ததும்
விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும். ( அறி : அபூஹுரைரா
(ரலி), நூல்: புகாரி )
பயணம் என்பது
எந்தளவிற்கு வேதனையானது என்பதை நபிகளாரின் மேற்கண்ட பொன்மொழியை சிந்தித்துப்
பார்த்தால் நன்கு விளங்கும். ஆகவே தான் குறிப்பிட்ட காரியம் முடிந்தவுடன்
தாமதிக்காமல் ஊர் திரும்ப வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள்
அறிவுறுத்துகின்றார்கள்.
எனவே, பயணங்களை பாதுகாப்பானதாகவும், அழகானதாகவும்
இஸ்லாமியமயப்படுத்தியும் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த உலகில் நம்
முன்னோர்களான மேன்மக்கள் மேற்கொண்ட புதுமையான சில பயணங்களை நாம் பார்க்க
இருக்கிறோம்.
தீனைப் பரப்புவதற்காக, மார்க்கத்திற்காக போராடுவதற்காக,
மார்க்க கல்வியை பெறுவதற்காக, மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்காக பல மைல்கள் தொலைவு நடந்து சென்று, ஒட்டகம்,
குதிரை, கோவேறு கழுதை, கப்பல் என பல்வேறு வாகனங்களில் பயணித்து பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு நம்
அளவில் இந்த தீனை நாம் சிரமமின்றி பெற்றுக் கொள்ள முனைந்துள்ளார்கள்.
பல்வேறு
மேன்மக்களின் வாழ்க்கைத் தரவுகளை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால் அது இயலாத
காரியம்.
ஆதாரப்பூர்வமான
ஆறு நபிமொழிக் கிரந்தங்களான புகாரி, முஸ்லிம் திர்மிதீ நஸாயீ
இப்னு மாஜா அபூதாவூத் ஆகிய கிரந்தங்களின் ஆசிரியர்கள் எவரும் அரபுலகைச்
சார்ந்தவர்கள் அல்லர். மாறாக, அரபு அல்லாத தேசங்களில்
பிறந்து மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்ள, ஹதீஸ் கலையை பயில பல
ஆயிரம் மைல்கள் பயணங்கள் மேற்கொண்டு பல்வேறு அறிஞர்களைச் சந்தித்து திரட்டிய
தரவுகள் தான் இன்று நம் கரங்களில் தவழும் இந்த கிரந்தங்கள்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அந்த மேன்மக்களைப் பொருந்திக் கொள்வானாக!!
நாம் மேற்கொள்ளும்
பயணங்களில் சிலதையாவது பயனுள்ளதாக அமைப்போம்!
2906 கிலோ மீட்டர் தூரம் பயணம்…
روى أحمد والبيهقي عن
التابعي عطاء بن أبي رباح رحمه الله تعالى أنه قال: إن أبا أيوب
الأنصاري رضي الله عنه وأرضاه رحل إلى عقبة بن عامر رضي الله عنه
ليسأله عن حديث سمعه من رسول الله صلى الله عليه وسلم، وأبو أيوب كان يسكن
المدينة المنورة، وعقبة بن عامر كان في مصر، قال عطاء : فلما قدم
في أثناء طريقه على منزل مسلمة بن مخلّد الأنصاري رضي الله عنه وأرضاه،
وكان أمير مصر في ذلك الوقت، خرج إليه فعانقه، ثم قال له مسلمة : ما جاء
بك يا أبا أيوب ؟ فقال: حديث واحد سمعه عقبة من رسول الله صلى
الله عليه وسلم في ستر المؤمن، فدلني على عقبة ، فقال: نعم، فذهب معه
إلى سيدنا عقبة رضي الله عنه، ثم ذكر لهما الحديث عن رسول الله صلى الله
عليه وسلم أنه قال: (من ستر مؤمناً في الدنيا ستره الله يوم القيامة) ، وانتهى
الحديث، فتأمل سطراً واحداً جعل أبا أيوب يرحل من المدينة المنورة إلى
مصر
بعدما سمع الحديث إلى راحلته فركبها راجعاً إلى المدينة، فلم يقعد في مصر
ولا لحظة واحدة، لم يقعد ليشاهد الأهرامات، ولا ليشاهد نهر النيل، ولا حتى يرى أهل
مصر أو يتكلم معهم، بل جاء ليتعلم سنة واحدة من سنن الرسول صلى الله عليه وسلم ثم
يرجع إلى بلده،
அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்: “அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அல்கமா (ரலி) அவர்களிடம் இருக்கும் ஒரு நபிமொழியைக்
கேட்டு வர மதீனாவிலிருந்து
மிஸ்ருக்கு பயணமானார்கள்.
மிஸ்ரின் பிரதான தெரு ஒன்றின் வழியில் மஸ்லமா இப்னு மகல்லத் அல் அன்ஸாரி (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது, மஸ்லமா (ரலி) அவர்கள் மிஸ்ரின் கவர்னராக இருந்தார்கள்.
இருவரும் சந்தித்து முஆனக்கா செய்து, ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர், மஸ்லமா (ரலி) அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் என்ன விஷயமாக மிஸ்ர் வந்தீர் என்று வினவ, நபி {ஸல்} அவர்கள் கூறிய ஒரு செய்தியை அல்கமா இப்னு ஆமிர்
(ரலி) தெரிந்து வைத்திருக்கின்றாராம். அவரிடம் இருந்து கேட்டுச் சென்றிடவே இங்கு வந்தேன்” என்றார்களாம். இது கேட்ட வியந்து போன மஸ்லமா (ரலி) தானும் உங்களோடு வருகின்றேன் என்று கூறி அவர்களோடு சேர்ந்து அல்கமா (ரலி) அவர்களைச் சந்திக்கச்
சென்றார்கள்.
இருவரும் அல்கமா இப்னு ஆமிர் (ரலி) அவர்களைச் சந்தித்து, தாங்கள் இருவரும் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
அல்கமா (ரலி) அவர்கள் “எவர் ஒரு இறைநம்பிக்கையாளனின் குறையை உலகில் மறைக்கின்றாரோ, அவரின் குறையை அல்லாஹ் மறுமையில் மறைப்பான்” என நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள்.
உடனடியாக, அங்கிருந்து அவ்விருவரிடமும் விடை பெற்று விட்டு ஒரு நிமிடம் கூட மிஸ்ரில் தங்காமல் மதீனா திரும்பினார்கள் அபூ அய்யூப் (ரலி) அவர்கள்.. ( நூல் முஸ்னத் அஹ்மத் )
வரலாற்று ஆசியர்கள்
கூறுவார்கள் அன்றைய மதீனாவுக்கும் மிஸ்ருக்கும் இடையே 1453 கிலோ மீட்டர்கள் தொலை தூரம்
சென்று வர 2906 கிலோ மீட்டர். அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் ஒரு நபிமொழியைத்
தெரிந்து கொள்ள மேற்கொண்ட இந்த பயணத்தில் ஒரு ஆண்டு கழித்தே ஊர் திரும்பினார்கள்.
4148 கிலோமீட்டர் தூரம்
பயணம்…
روى
الإمام أحمد والطبراني وأبو يعلى رحمهم الله جميعاً
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: بلغني حديث عن رجل سمعه من
رسول الله صلى الله عليه وسلم، وهذا الرجل هو عبد الله بن أنيس رضي الله
عنه وأرضاه، وهو من صحابة رسول الله صلى الله عليه وسلم المستقرين في الشام، بينما
سيدنا جابر كان في المدينة، وقد سمع أن عبد الله بن أنيس يقول
حديثاً فيه كذا وكذا، وهو لم يسمع هذا الحديث منه، وقبل ذلك لم يسمعه من الرسول
صلى الله عليه وسلم، فيريد أن يتأكد من الحديث، مع أن الذي نقل له هذا الحديث يمكن
أن يكون ثقة، لكن أراد أن يذهب إلى الشام فيسمع الحديث بنفسه من عبد الله بن
أنيس ، وهذا ما يسمى عند علماء الحديث بـ: علو السند. فهو لا يريد أن يسمع من
فلان عن فلان عن عبد الله بن أنيس، بل يريد أن يسمع منه مباشرة، فيكون أوثق
في المعرفة، فاشترى جابر بن عبد الله رضي الله عنهما بعيراً ليركب عليه
من المدينة إلى الشام، ثم شدّ عليه رحله وسار شهراً حتى قدم الشام، وقدم على
بيت عبد الله بن أنيس الأنصاري رضي الله عنه، فقال لحاجبه: قل
لسيدك: جابر على الباب، فقال: ابن عبد الله ؟ قلت: نعم، فخرج
يجر ثوبه، فاعتنقني واعتنقته، والعجب أن أول شيء قال له بعد هذا الفراق الطويل
بينهما: حديث بلغني عنك أنك سمعته من رسول الله صلى الله عليه وسلم في القصاص،
فخشيت أن تموت أو أموت قبل أسمعه. فقال عبد الله بن أنيس : سمعت رسول
الله صلى الله عليه وسلم يقول: (يحشر الناس يوم القيامة عراة غرلاً بهماً، قالوا:
وما بهم؟ قال: ليس معهم شيء، ثم يناديهم بصوت يسمعه من بعد كما يسمعه من قرب: أنا
الملك أنا الديان، لا ينبغي لأحد من أهل النار أن يدخل النار وله عند أحد من أهل
الجنة حق حتى أقصه منه، ولا ينبغي لأحد من أهل الجنة أن يدخل الجنة وله عند أحد من
أهل النار حق، حتى أقصه منه، حتى اللطمة)، تهديد وتخويف عظيم، فما بالك بالناس
التي تظلم وتعذب وتشرد وتسجن من غير وجه حق، يا ترى ماذا ستعمل هذه الناس يومذاك؟!
فيقول عبد
الله بن أنيس : (قلنا: كيف هو وإنما نأتي الله عز وجل عراة غرلاً بهماً؟
-يعني: ليس معنا شيء فكيف سنخلص حقوق بعض- فقال صلى الله عليه وسلم: بالحسنات
والسيئات).
وعند
هذا انتهى الحديث، فأخذه جابر بن عبد الله ثم رجع إلى المدينة المنورة
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:“ஒரு முறை ஒருவர் என்னிடம் மறுமை குறித்து நபி {ஸல்} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாக என்னிடம் கூறினார்.
அந்தச் செய்தியை நேரடியாக நான் கேட்க விரும்பினேன். ஆகவே, அவர் எங்கிருக்கின்றார் என்று விசாரித்தேன். அவர் ஷாமிலே இருக்கின்றார் என்பதை அறிந்து அங்கு செல்ல ஆயத்தமானேன்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இமாம் அபூ யஃலா அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் விரைவாகச் செல்கிற ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கி, ஒரு மாதகாலம் பயணம் செய்து ஷாம் சென்றார். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி)
அவர்களின் வீட்டை தேடிப்பிடித்து அவரின் வீட்டிற்குச் சென்று தான் வந்த நோக்கத்தை விவரித்துச் சொல்லி விட்டு நபி {ஸல்} அவர்கள் மறுமையில் பழிவாங்குவது குறித்து
கூறிய அந்தச் செய்தியை தமக்கு கூறுமாறு சொன்னார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி)
அவர்கள் இதற்காகவா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தீர்கள்?
என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.
அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் “ நபி {ஸல்} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை
கேட்காமலே இறந்து விடுவதை நான் அஞ்சுகின்றேன்” என்றார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ”நபி {ஸல்} அவர்கள் ஒரு நாள் எங்களிடம்
மறுமையில் மனிதர்களை அல்லாஹ் நிர்வாணிகளாக எழுப்பி மஹ்ஷரில் நிற்க
வைத்திருப்பான். அப்போது, அவர்கள் மிகச் சமீபத்திலே ஒரு சப்தத்தைக் கேட்பார்கள்.
அது வேறு யாருடைய சப்தமும் அல்ல. அது அல்லாஹ்வின் சப்தமாகும்.
அல்லாஹ் கூறுவான் “நரகம் செல்லும் எந்த நரகவாசியும் சுவனம் செல்கிற சுவனவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். அது போல், “சுவனம்
செல்லும் எந்த சுவனவாசியும் நரகம் செல்கிற நரகவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். உலகில் வாழும்
காலத்தில் அவர் கையால் ஒரு குத்து குத்தியிருந்தாலும் சரியே! பழிவாங்கிக் கொள்ளட்டும்!” என்று.
அப்போது அங்கிருந்த நாங்கள் எவ்வாறு பழிதீர்க்கப்படும்? என்று கேட்டோம். அதற்கு நபி {ஸல்} நன்மைக்கு பகரமாக தீமையையும், தீமைக்குப் பகரமாக
நன்மையையும் பெற்று பழிதீர்க்கப்படும்” என்று கூறினார்கள்.
இதன் பின்னர் ஜாபிர் (ரலி) அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்று மதீனா வந்து சேர்ந்தார்கள்.
( நூல்: முஸ்னத் அபூ யஃலா, முஸ்னத் அஹ்மத்
)
ஜாபிர் (ரலி) அவர்கள் மதீனாவிலிருந்து 2074 +
2074 = 4148 கிலோ மீட்டர் தூரமுள்ள ஷாமுக்கு இரண்டு மூன்று மாத பயணம் மேற்கொண்டு ஒரு
நபிமொழியை அறிந்து வந்தார்கள்.
6000 கிலோ மீட்டர் தூரம் பயணம்…
ஸ்பெயின் நாட்டின்
அந்தலூஸ் நகரத்தில் பிறந்த இமாம் பகீ இப்னு மக்லத் அல் - அந்தலூஸீ (ரஹ்)
ஸ்பெயினின் ஹதீஸ் துறை அறிஞர்கள் அனைவரிடமும் கற்றுத்தேர்ந்தார்கள். அடுத்து யாரிடம்
ஹதீஸ்களை கற்பது என்று விசாரித்த பொழுது, அனைவரும் பரிந்துரைத்தது
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் பெயரைத் தான்.
தமது இளம் வயதில்
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களைச் சந்திக்க, ஸ்பெயின் நாட்டிலிருந்து
மக்கா வழியாக பாக்தாத் வரை சுமார் 6000 கி. மீட்டருக்கும் மேல் நடை பயணமாக புறப்பட்ட இமாம் பகீ இப்னு மக்லத் அல்
அந்தலூஸி அவர்களின்
பயண அனுபவத்தை நெகிழ்வுடன் பதிவு செய்ததை அல்லாமா தகபீ (ரஹ்) அவர்கள் தங்களது ஸியரு அஃலா மின் நுபலாவில் குறிப்பிடுகின்றார்கள்.
ونقل
بعض العلماء من كتاب لحفيد بقي عبد الرحمن بن أحمد : سمعت أبي يقول : رحل أبي من
مكة إلى بغداد ، وكان رجلا بغيته ملاقاة أحمد بن حنبل . قال : فلما قربت بلغتني
المحنة ، وأنه ممنوع ، فاغتممت غما شديدا ، فاحتللت بغداد ، واكتريت بيتا في فندق
، ثم أتيت الجامع وأنا أريد أن أجلس إلى الناس ، فدفعت إلى حلقة نبيلة ، فإذا برجل
يتكلم في [ ص: 293 ] الرجال ، فقيل لي : هذا يحيى بن معين . ففرجت لى فرجة ، فقمت
إليه ، فقلت : يا أبا زكريا : -رحمك الله- رجل غريب ناء عن وطنه ، يحب السؤال ،
فلا تستجفني ، فقال : قل . فسألت عن بعض من لقيته ، فبعضا زكى ، وبعضا جرح ،
فسألته عن هشام بن عمار ، فقال لي : أبو الوليد ، صاحب صلاة دمشق ، ثقة ، وفوق
الثقة ، لو كان تحت ردائه كبر ، أو متقلدا كبرا ، ما ضره شيئا لخيره وفضله ، فصاح
أصحاب الحلقة : يكفيك -رحمك الله- غيرك له سؤال
.
فقلت :
بلى ، قد بلغني ، وهذا أول دخولي ، وأنا مجهول العين عندكم ، فإن أذنت لي أن آتي
كل يوم في زي السؤال ، فأقول عند الباب ما يقوله السؤال ، فتخرج إلى هذا الموضع ،
فلو لم تحدثني كل يوم إلا بحديث واحد ، لكان لي فيه كفاية . فقال لي : نعم ، على
شرط أن لا تظهر في الخلق ، ولا عند المحدثين
.
فقلت :
لك شرطك ، فكنت آخذ عصا بيدي ، وألف رأسي بخرقة مدنسة ، وآتي بابه فأصيح : الأجر
-رحمك الله- والسؤال هناك كذلك ، فيخرج إلي ، ويغلق ، [ ص: 294 ] ويحدثني
بالحديثين والثلاثة والأكثر ، فالتزمت ذلك حتى مات الممتحن له ، وولي بعده من كان
على مذهب السنة ، فظهر أحمد ، وعلت إمامته ، وكانت تضرب إليه آباط الإبل ، فكان
يعرف لي حق صبري ، فكنت إذا أتيت حلقته فسح لي ، ويقص على أصحاب الحديث قصتي معه ،
فكان يناولني الحديث مناولة ويقرؤه علي وأقرؤه عليه ، واعتللت في خلق معه . ذكر
الحكاية بطولها .
இதோ: பகீ (ரஹ்)
அவர்களின் நேரடி வார்த்தைகள்....
”பக்தாத் நகரை நான்
நெருங்கிய போது,
இமாம் அஹ்மத் (ரஹ்) தமது வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். இமாமவர்கள் மக்களுக்கு
பாடங்கள் நடத்தவும் தடை விதித்திருந்தார்கள். இதனால் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.”
”பக்தாத் நகரை அடைந்தவுடன்
மஸ்ஜிதிற்கு சென்று அங்கு யாரிடமாவது கல்விதேட வேண்டும் என்று முயற்சித்தேன்.
பள்ளிவாசலில் வீற்றிருக்கும் ஒரு பெரிய கூட்டத்திற்கு நான் வழிகாட்டப்பட்டேன், அங்கு ஒருவர் ஹதீஸ் அறிவிப்பாளர்களை பற்றி பாடம் எடுத்துக்கொண்டிருந்தார், ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரத்தை பற்றி கூறிக்கொண்டிருந்தார். அவர் யார் என
விசாரித்த பொழுது,
இவர் தான் யஹ்யா இப்னு முயீன் (ரஹ்) என்று கூறினார்கள்.
அவரின் அருகில் சென்று அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டேன்:
அபூ ஸகரிய்யா
அவர்களே! உங்கள் மீது அல்லாஹ் ரஹ்மத் பொழியட்டும்!, நான் வெகு தூரம் பயணம் செய்து வந்துள்ளேன், ஸ்பெயினிலிருந்து நடை
பயணமாக வந்துள்ளேன்,
உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன், எனக்கு அனுமதி மறுத்து விடாதீர்கள்.’ என்றேன்
அதற்கு அவர்: ‘மற்றவர்களை விட உங்களுக்கு தான் முன்னுரிமை உண்டு , கேளுங்கள்’
என்றார் ‘ஹதீஸ் கலை அறிஞர்கள்
சிலரை குறித்து அவரிடம் கேட்டேன், அவர்களில் சிலரை அவர்
சரிகண்டார் ,
சிலரை குரைகண்டார்.
அவர்களின் நிறை குறைகளை தெளிவாகவும் துல்லியமாகவும்
விளக்கினார் .
மேலும், நான் ஹிஷாம் இப்னு அம்மார் அவர்கள் குறித்து கேட்டேன். அவர்களின் நிறை குறைகளையும்
குறிப்பிட்டார். மேலும்,
ஸ்பெயின் நாட்டு அறிஞர்களை பற்றியும் கேட்டேன், அதற்கும் அவர் துல்லியமாக பதிலளித்தார், ‘
நான் அவரிடம் ‘இறுதியாக எனக்கு ஒருவரை பற்றி கேட்க வேண்டும் என்றேன். அஹ்மத் இப்ன் ஹன்பலை
பற்றி என்ன கூறுகிறீர்கள்’
என்று கேட்டேன். அங்குள்ள அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
யஹ்யா இப்ன் மயீனும் ஆச்சரியம் அடைந்தார்.
பின்னர் ‘அஹ்மத் இப்ன் ஹம்பலை பற்றி கூற எனக்கு என்ன தகுதி உள்ளது , அவர் தான் முஸ்லிம்கள் அனைவருக்கும் இமாம், முஸ்லிம்களில் சிறந்தவர், உயர்ந்தவர். இந்த பூமியில் அஹ்மத் இபின் ஹம்பலை விட மிக பெரிய ஆலிமை எனக்கு
தெரியாது ‘
என்றார்.
இதை கேட்டு எனக்கு
மேலும் ஆர்வம் ஏற்பட்டது,
இமாம் அஹ்மதின் வீட்டை தேடி சென்றேன், (காவலர்கள் கவனம் இழந்த நேரம்) அவரின் வீட்டின் கதவை தட்டினேன், அறிமுகம் இல்லா மனிதரை கண்ட அவர் யாரென்று கேட்டார்.
நான் ‘அபூ அப்துல்லாஹ் அவர்களே!! நான் வெகு தூரம் பயணம் செய்து இந்த ஊருக்கு முதல்
முறையாக வந்துள்ளேன்,
உங்களிடம் ஹதீஸ் கற்பதற்காகவே இந்த பயணத்தை
மேற்கொண்டுள்ளேன்’
என்றேன்.
யாரும்
பார்க்காதவாறு என்னை தனியே அழைத்துச்சென்றார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்
என்றார்,
‘மேற்கில் வெகுதூரத்திலிருந்து’ என்றேன்,
‘ஆஃப்ரிக்கவா?’ என்றார், ‘அதைவிடவும் தூரம்,
கடல் கடந்து தான் நான் ஆஃப்ரிக்காவுக்கு செல்லவேண்டும், நான் ஸ்பெயினிலிருந்து வந்துள்ளேன் ‘ என்றேன். அதற்கு, இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் ‘நீங்கள் வெகுதூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள், உங்களுக்கு நான் உதவி செய்ய ஆசைப்படுகிறேன், ஆனால் எனக்கு ஏற்பட்டுள்ள சோதனைனயயை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்’ என்றார்கள்.
‘நான் ஆம்! கேள்வி பட்டேன்
என்று கூறிவிட்டு,
நான் இந்த ஊருக்கு புதிதாக வந்துள்ளேன், என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது ஆகவே,
நீங்கள் அனுமதித்தால், நான் தினமும் யாசிப்பவன்
(பிச்சைக்காரன்) போல் வேடம் அணிந்து உங்களிடம் யாசகம் கேட்க வருகிறேன். நீங்கள்
வெளிவந்து தினமும் ஒரு ஹதீஸை எனக்கு அறிவித்தால் போதும்’ என்றேன்.
‘வேறு எந்த ஆலிமிடமும்
நீங்கள் பாடம் கேட்க மாட்டீர்கள் என்றால் அனுமதிக்கிறேன்’. வேறு யாரிடமும் இது பற்றி வெளிப்படுத்தக் கூடாது என்றார், நானும் சம்மதித்தேன்.
நான் தினமும் ஒரு
குச்சியை எடுத்துக்கொண்டு,
தலையில் துண்டொன்று சுத்திக்கொண்டு, காகிதமும் (எழுது கோலும்) மையும் எடுத்துக்கொண்டு அவரின் வீட்டிற்கு சென்று
யாசிப்பதைப் போல் அழைப்பேன். அவர் வெளி வந்து ரொட்டி ஒன்றை கொடுத்துவிட்டு ,இரண்டு மூன்று ஹதீஸ்கள் அறிவிப்பார், சில நேரங்களில் சற்று
அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பார். இவ்வாறு அவரிடமிருந்து 300 ஹதீஸ்களை கற்றேன். அவர் சிறை வைப்பிலிருந்து விடுதலை அடையும் வரை தொடர்ந்து சென்றேன்.
அவர் விடுதலை
அடைந்த பிறகு அவரிடம் பாடம் கற்க பாடசாலைக்கு சென்றேன். அங்கு அவர் என்னை அவரின் அருகில் அமரச்செய்வார், மற்றவர்களிடம் ‘இவர் ஹதீஸ் மாணவர் என்று அழைக்கப்பட தகுதியானவர் ‘ என்பார். அவர்களிடம் என் கதையை கூறுவார்.
இமாம் அபுல் வலீத்
அல் பர்தீ (ரஹ்) என்பவர்கள் தன் மாணவர்களை பார்த்து கூறுவாராம்:- ‘இப்படியா மார்க்க அறிவைத் தேடுவது? உங்களின் ஓய்வு நேரத்தில்
மட்டும் தான் நீங்கள் மார்க்க அறிவு தேடுகிறீர்கள்?! ‘எனக்கு ஒரு மனிதரை தெரியும், அவர் மாணவராக இருந்த போது
உண்பதற்கு தூக்கியெறியப்பட்ட முட்டைக்கோஸ் இலைகளை தவிர வேறு எதுவும் இல்லாமல் பல
நாட்கள் கழித்தார் . எனக்கு ஒரு மனிதரை தெரியும் அவர் காகிதம் வாங்குவதற்காக, தன் கீழாடைகளை விற்றார்’ ” ( நூல்: ஸியரு அஃலாமின்
நுபலா )
துஆவைப் பெறுவதற்காக ஒரு பயணம்...
أخرج
ابن عبد البر بسند جيد عن أبي داود صاحب السنن: أنه كان في سفينة فسمع عاطساً على
الشط - أبو داود في البحر في السفينة أو في النهر- فسمع عاطساً على الشط حمد الله
ولم يكن عنده أحد يشمته، فاستأجر قارباً بدرهم حتى جاء إلى العاطس فشمته، قال:
يرحمك الله ثم رجع، فسئل أبو داود عن ذلك: ما الذي حملك على ما صنعت، وتكلفت،
واستأجرت قارباً وذهبت؟ فقال: لعله يكون مجاب الدعوة فيقول لي: يغفر الله لنا
ولكم، أو يهديكم الله ويصلح بالكم، فأستفيد، فلما رقدوا سمعوا قائلاً يقول: يا أهل
السفينة إن أبا داود اشترى الجنة من الله بدرهم، وجَوَّد إسناده ابن حجر رحمه الله
تعالى.
இமாம் அபூதாவூத்
(ரஹ்) கடலிலோ அல்லது ஒரு நதியிலோ பயணம் மேற்கொண்டிருந்தார்கள். இரண்டு தளங்கள்
கொண்ட ஒரு பெரிய படகில் அந்த பயணம் அமைந்திருந்தது.
அப்போது மேல்
தளத்தில் பயணித்த ஒருவர் தும்மினார். அல்ஹம்துலில்லாஹ் -வும் சொன்னார். ஆனால், மேல் தளத்தில் உள்ள யாரும் அவரின் அல்ஹம்துலில்லாஹ் வுக்கு பதிலாக
யர்ஹமுக்கல்லாஹ் சொல்ல வில்லை. அல்லது அவருக்கு யர்ஹமுக்கல்லாஹ் என்று பதில்
சொல்லும் யாரும் அவருடன் பயணிக்க வில்லை.
அப்போது அந்த படகு
ஓரிடத்தில் நின்றது. இமாம் அபூதாவூத் (ரஹ்) மேல் தளத்திற்கு சென்று தும்மியவர்
யார் என்று விசாரித்தார்கள். இப்போது தான் அவர் இந்த நிறுத்தத்தில் இறங்கினார்
என்று அங்கிருந்தோர் சொன்னார்கள்.
உடனே வேகமாக
படகில் இருந்து கீழிறங்கி அவரை நோக்கி சென்றார்கள். அவர் இன்னொரு படகில் ஏறி உள்ளே
சென்று விட இமாம் அபூதாவூத் (ரஹ்) ஒரு திர்ஹம் கட்டணமாக கொடுத்து அந்த படகில் ஏறி
அவரிடம் தும்மியவர் நீர் தானே? அல்ஹம்துலில்லாஹ்
கூறியவர் நீர் தானே?
என்று கேட்டு விட்டு "யர்ஹமுக்கல்லாஹ்" என்று
பதில் சொல்ல தும்மியவர் அதற்கு பதில் கூற அந்த படகில் இருந்து இறங்கி மீண்டும்
தமது படகிற்கு வந்து தமது இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.
அப்போது
அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக எங்கே சென்று வந்தீர்கள் என்று வினவியதற்கு, "யர்ஹமுக்கல்லாஹ்" சொல்ல சென்று வந்தேன் என்று பதில் கூறினார்கள்.
அப்போது
அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்தோடு "இதற்காகவெல்லாமா இவ்வளவு சிரமம் எடுத்துக்
கொள்வீர்கள்?
என்று கூற, அதற்கு இமாம் அபூதாவூத்
(ரஹ்) அவர்கள் "அவர் துஆ ஒப்புக் கொள்ளப்பட்ட நபர்களின் ஒருவராக கூட
இருக்கலாம். அவர் யஃக்ஃபிருல்லாஹு லனா வலக்கும், யஹ்தீக்குமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலக்கும்" என்று பதில் கூறி, அவரின் இந்த துஆவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கபூல் செய்தால் அதன் மூலமாக நான்
மிகவும் பயனடைவேனே!" அதற்காகத்தான் நான் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டேன்
" என்று பதில் கூறினார்கள்.
அந்த படகில்
உள்ளவர்களோடு தொடர்ந்து பயணம் மேற்கொண்டார்கள் இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள்.
இரவில் எல்லோரும்
உறங்கிப் போக தீடீரென ஒரு அசரீரி "படகில் பயணம் செய்பவர்களே! திண்ணமாக!
அபூதாவூத் (ரஹ்) ஒரு திர்ஹத்தைக் கொண்டு சொர்க்கத்தை விலைக்கு வாங்கிக்
கொண்டார்" என்று ஒலித்தது. இதை அந்த படகில் பயணம் செய்த அனைவரும்
செவியுற்றனர். இந்த செய்தியை இமாம் இமாம் இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் பதிவு
செய்ய இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) உறுதி செய்கிறார்கள்.
இஸ்லாத்தை
அறிமுகப் படுத்த ஓர் பயணம்...
இன்று முஸ்லிம்
உம்மத்தை உலக ஊடகங்கள் பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டுள்ள வேளையில், அது தான்
உண்மை என பல மக்களும் நம்பிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் அந்த நம்பிக்கை தவறானது
என்பதை நம்மால் முடிந்த அளவு நாம் நிலை நிறுத்த கடமைப்பட்டுள்ளோம்.
சமீபத்தில்
அல்ஜீரிய இமாம் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் போது அவருடன் கொஞ்சிய விளையாடிய
பூனையுடன் அந்த இமாம் நடந்து கொண்ட விதம் உலக மக்களின் கவனத்தை எப்படி ஈர்த்ததோ
அது போன்று அவரவர் ஏதாவது ஒரு வகையில் இஸ்லாத்தின் மாண்பை உயரிய சித்தாந்தத்தை
கொண்டு சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
அப்படித்தான்
கடந்த 2022 –ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆதம் என்பவர் மேற்கொண்ட ஹஜ் பயணம்
உலகின் வெகுஜன மக்களின் கவனத்தைப் பெற்றது.
6500 கிலோமீட்டர் நடை பயணம்...
இங்கிலாந்தைச்
சேர்ந்த ஒருவர் 10
மாதம், 25 நாட்கள் 6,500கிமீ நடைப்பயணமாகவே ஹஜ் பயணம் மேற்கொண்டு மெக்கா சென்றடைந்திருக்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 52
வயதான ஆதம் முகம்மது என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி இங்கிலாந்தில்
உள்ள வால்வர் ஹாம்ப்டனில் இருந்து தனது மெக்கா செல்லும் ஹஜ் பயணத்தைத்
தொடங்கியுள்ளார். இவர்,
நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஹங்கேரி,
செர்பியா, பல்கேரியா, துருக்கி,
லெபனான் மற்றும் ஜோர்டான் வழியாக நடைபயணம் சென்று சவூதியை
அடைந்து தற்போது மெக்கா சென்றடைந்துள்ளார்.
இது பற்றி
இணையதளம் பக்கம் ஒன்றில் எழுதிய அவர், "ஹஜ் யாத்திரை இறைவனுக்காக... ஆனால் நடைபயணம் செல்லவேண்டும் என்பதை வெறும்
புகழுக்காகவோ,
பணத்துக்காகவோ செய்யவில்லை. நம் இனம், நிறம்,
மதம் எதுவாக இருந்தாலும் மனிதர்களாகிய நாம் அனைவரும் சமம்
என்பதை உலகுக்கு எடுத்துரைக்கவும், இஸ்லாம் கற்றுத்தரும்
அமைதி மற்றும் ஒற்றுமையின் செய்தியைப் பரப்பவும் மட்டுமே இதை நான் செய்தேன்"
என்று கூறினார். ( நன்றி: விகடன் 12/07/2022 )
ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிய ஒரு இரவு நேரப்
பயணம்…
அந்த கோடீஸ்வர
(அரபு)ப் பெண் வெகு தூரம் பயணம் செய்து தன் வாகனத்தில் போக்குவரத்துக் குறைந்த
நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தாள். வாகனம் எதிர்பாராத விதமாக பழுதடைந்து
நடு வீதியில் நின்று விட்டது.சரிசெய்ய முயற்சித்தும் கைகூடவில்லை. செய்வதறியாது
திகைத்து நின்றாள். வீதியில் சென்ற ஓரிரு வாகனங்களை
நிறுத்த முயற்சித்தும் யாரும் நிறுத்தவில்லை.
நேரம் சென்று
இருளும் சூழ ஆரம்பித்திருந்தது. இறுதியாக பழைய காரொன்று பக்கத்தில் வந்து நின்றது.
ட்ரைவரைப்
பார்த்தாள். சற்று இளமையான தோற்றம்; அவனிடம் வறுமையின்
வாசமும் வீசியது. அதில் ஏறுவதற்கு சற்று தயங்கினாள். இவனை நம்பலாமா என்று கூட
யோசித்தாள். வேறு வழியின்றி பயத்துடன் ஏறிக் கொண்டவள் ட்ரைவரிடம் பேச்சுக்
கொடுத்து அவனைப் பற்றி விசாரித்தாள்.
அதற்கு ட்ரைவர்: எனது பெயர் ஆதம். தொழில் டெக்சி ட்ரைவர்.
என்றான்.
சற்று ஆறுதலானாள். அவனின் மொபைல் இலக்கத்தையும் வாங்கிக்
கொண்டாள்.
அவன் மிகவும்
ஒழுக்கமும் பண்பாடும் நிறைந்தவனாகக் காணப்பட்டான். அவள் பக்கம் அவன்
திரும்பவுமில்லை;
அதிகம் பேசவுமில்லை. அவனைப் பற்றி தப்பெண்ணம் கொண்டதற்காக
தன்னைக் கடிந்து கொண்டாள்.
டவுனுக்குள்
வந்ததும் இறங்கிக் கொண்டு எவ்வளவு என்று கேட்டாள்.
அதற்கவன்:"
இது உதவி. உதவியில் வியாபாரம் செய்யக் கூடாது. இதை வேறு யாருக்காவது கொடுங்கள்.
என்று கூறிவிட்டுச் சென்றான். அவனது குணத்தில் வியப்பின் உச்சிக்கே சென்று
விட்டாள் அவள்.
பசியோடும்
களைப்போடும் இருந்தவள் ஒரு லேடீஸ் ரெஸ்டோரன்ட் உள்ளே சென்று ஒரு பெண்
வெய்டரிடம் தேவையானதை ஓடர் செய்தாள். அந்தப் பெண் வெய்டர்
நிறைமாத கர்ப்பிணியானதால் மிகவும் சோர்வுடன் காணப்பட்டாள்.
அவள்மீது பரிதாபம்
கொண்டு: வீட்டில் ஓய்வெடுக்கலாமே. ஏன் கஷ்டப்படுகிறாய்? என்றாள்.
அதற்கு வெய்டர்:
வறுமை நிலை. பிரசவத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்க வேண்டுமே! என்றாள்.
அல்லாஹ் உதவி
செய்வான் என்றவள் தனக்கு சற்று முன் வீதியில் நடந்த சம்பவத்தைக் கூறிவிட்டு
பில்லுக்கான பணத்தைக் கொடுத்தாள்.
மிகுதி பணத்தைக்
கொண்டு வந்த வெய்டர் பெண் அந்த பணக்காரப் பெண்ணைக் காணாது ஆச்சரியப்பட்டாள்.
அவள் இருந்த
மேசையில் சிறியதொரு பேப்பரில்: 'மிகுதிப் பணம் உக்குரியது. மேசைக்குக்
கீழிருக்கும் பணம் பிறக்கப்போகும் உன் குழந்தைக்கான எனது பரிசு' என்றிருந்தது.
மேசையின்
கீழிருந்த பணத்தை எடுத்தாள். அது அவளது 8 மாத சம்பளப் பணம்.
மிகவும் சந்தோஷப்பட்டாள். உடனடியாக அனுமதி பெற்று வீடு திரும்பினாள்.
இடையில் வீடு வந்த
மனைவியைப் பார்த்த கணவனுக்கு குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் மனைவி
கூறியதைக் கேட்டவுடன் மகிழ்ந்தான். மனைவி கூறினாள்: "
ஆதம்! அல்லாஹ் அந்தப் பெண்ணின் மூலம் எமக்கு அருள் செய்திருக்கின்றான் என்றவள்
அந்தப் பணக்காரப் பெண்ணைப் பற்றியும் அவளுக்கு வீதியில் நடந்த சம்பவம் பற்றியும் கூறினாள்.
அப்போது ஆதம்:
" அந்தப் பெண் கூறிய டெக்சி ட்ரைவர் நான்தான்" என்றான் அமைதியாக...
இருவரும்
அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டனர்.
அன்று மாலை ஆதமுக்கு மொபைல் அழைப்பொன்று வந்தது.
மறுமுனையில் ஓர் ஆண் : " ஆதம்! என் மனைவிக்கு உதவியதற்கு நன்றிகள். ABU DHABI MOTORS LLC என்ற கம்பனியில் உங்களுக்காக TOYOTA CAMRY காரொன்றுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. அங்குபோய் பெற்றுக் கொள்ளுங்கள். இது
உங்களுக்கான சிறியதொரு அன்பளிப்பு"...
சுப்ஹானல்லாஹ்... அல்லாஹ்வின் அருள் எவ்வளவு விசாலமானது. அவன் நல்லோரை கைவிடுவதில்லை.
நாம் செய்யும்
நலவுகள் நாம் விதைக்கும் விதைகள். அது விருட்சமாக வளர்ந்து அதன் பலன்கள் நமக்கே திரும்பி வரும்.
"நன்மைக்கு நன்மை
தவிர வேறு கூலி உண்டா..." அல்குர்ஆன்- 55:60 ( நன்றி: இது ஒரு
உண்மைச் சம்பவம் 09/04/2023 jaffnamuslim.com )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் பயணங்களைப் பயனுள்ளதாக,
பாதுகாப்பானதாக, நிம்மதியுள்ளதாக அமைப்பானாக!! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment