Sunday, 9 April 2023

நீதமாக நட! அநீதிக்கு எதிராக குரல் கொடு!!

நீதமாக நட! அநீதிக்கு எதிராக குரல் கொடு!!

ரமழான் – (1444 – 2023) தராவீஹ் சிந்தனை:- 19.


இன்று உலகில்  அநீதிகளும் குற்றங்களும் தலைவிரித்தாடுகின்றன ஆனால் இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காதவரையில் எவரும் அநீதிகளைப் பற்றி  கவலை கொள்வதில்லை. 

ஆனால் அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ மற்றவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்ப வில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள். 

பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்படுபவர்களுக்கும் எழும் சினம் போலவே பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாதவரை அநீதிகள் ஒருபோதும் ஒழியாது.

அநீதிக்கு எதிராகப் பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல் அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது என்பதை இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஒரு இறைவசனம் உணர்த்துகிறது.

وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ‌ۖ

مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّىَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ؕ وَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِىْ يَعِدُكُمْ ۚ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ‏

ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: என் இறைவன் அல்லாஹ்வே தான்!என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.” ( அல்குர்ஆன்: 40: 28 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரை எந்த பெயரைக் கூறி இந்த வசனத்தில் அடையாளப்படுத்துகின்றானோ அதே பெயரையே இந்த அத்தியாயத்தின் மகுடமாக சூடி அல் முஃமின் என்று அழகு பார்க்கிறான்.

இந்த உலகில் தீமைகள் செழித்து வளர நல்லோர்களின் மௌனமும் ஒரு காரணம்.

"தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மெளனமாக இருப்பதே ஆகும்.” - எட்மண்ட் பர்க்.

அநீதிகள் அதிகரிக்க தவறு என்று தெரிந்த பிறகும் கூட அதை சுட்டிக் காட்ட மறுப்பதும் ஒரு காரணம்.

"உண்மையை அறிந்த பின்னரும் உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்.” - மார்டின் லூதர் கிங்.

 

فَاْتِيٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ

وَلَا تُعَذِّبْهُمْ‌ ؕ قَدْ جِئْنٰكَ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكَ‌ ؕ وَالسَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى

اِنَّا قَدْ اُوْحِىَ اِلَـيْنَاۤ اَنَّ الْعَذَابَ عَلٰى مَنْ كَذَّبَ وَتَوَلّٰى‏

இருவரும் அவனிடம் சென்று ‘‘நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவிடு! அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறுங்கள்! ( அல்குர்ஆன்: 20: 47,48 )

கொடுங்கோல் மன்னன் பிர்அவ்ன், பனூ இஸ்ராயீல் மக்களுக்குப் பெரும் கொடுமைகளைக் கொடுத்து வந்தான். அந்த மக்கள் சொல்லெனாத் துன்பங்களைச் சந்தித்து வந்தார்கள். அவர்களை மீட்டெடுக்கும் பணி மூஸா நபிக்கும், ஹாரூண் நபிக்கும் வழங்கப்பட்டது. 

ஃபிர்அவ்னுடனோ அவனின் ஆதரவாளர்களுடனோ நபி மூஸாவோ, நபி ஹாரூனோ போரிட வில்லை. மாறாக, தொடர்ச்சியாக அவனுடைய அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர் என்று மேற்கூறிய இறைவசனம் நமக்கு உணர்த்துகிறது. இதையே நபி {ஸல்} அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கின்றார்கள்.

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ (ص) وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِر *رواه أحمد

அநீதியிழைக்க கூடிய அரசனுக்கு எதிராக உண்மையை எடுத்துரைப்பது சிறந்த ஜிஹாத் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி­), ( நூல்: அஹமது 18076 )

இதன் மூலம் அடக்குமுறையைச் சந்திக்கும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாகக் களம் காண்பதின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

துல்கர்னைன் (அலை) அவர்களின் வரலாறு வழியாகவும் அல்லாஹ் நமக்குப் பாடம் கற்பிக்கிறான். அல்லாஹ்  அவருக்கு அளப்பரிய ஆற்றலை, பெரும் வலிமையைக் கொடுத்திருந்தான். அவர் பூமியில் பல்வேறு பகுதிகளுக்கு மிகவும் எளிதாகப் பயணம் சென்றார். அப்போது ஓரிடத்தில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தால் பாதிக்கப்படும் சமூகத்தைச் சந்தித்தார். அல்லாஹ்வின் அருளால் அந்த மக்களைப் பாதுகாக்கும் வகையில் மகத்தான உதவி செய்து கொடுத்தார்.

 ثُمَّ اَتْبَعَ سَبَبًا‏  حَتّٰٓى اِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًا ۙ لَّا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ قَوْلًا‏

 قَالُوْا يٰذَا الْقَرْنَيْنِ اِنَّ يَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِى الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰٓى اَنْ تَجْعَلَ بَيْنَـنَا وَبَيْنَهُمْ سَدًّا‏

 قَالَ مَا مَكَّنِّىْ فِيْهِ رَبِّىْ خَيْرٌ فَاَعِيْنُوْنِىْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ‏

 اٰتُوْنِىْ زُبَرَ الْحَدِيْدِ‌ ؕ حَتّٰٓى اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْـفُخُوْا‌ ؕ حَتّٰٓى اِذَا جَعَلَهٗ نَارًا ۙ قَالَ اٰتُوْنِىْۤ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ؕ‏ ,  فَمَا اسْطَاعُوْۤا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَـقْبًا‏

 قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّىْ‌ ۚ فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّىْ جَعَلَهٗ دَكَّآءَ‌ ۚ وَكَانَ وَعْدُ رَبِّىْ حَقًّا ؕ‏

பின்னர் (துல்கர்னைன்) ஒரு வழியில் தொடர்ந்து சென்றார். முடிவில் இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?’’ என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே தடுப்பை அமைக்கிறேன்’’ என்றார்.

(மேலும், அம்மக்களிடம்) என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!’’  என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ஊதுங்கள்!’’  என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்’’ என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது" என்று கூறி, இது  எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார். ( அல்குர்ஆன்: 18: 92-98 )

துல்கர்னைன் (அலை) அவர்கள் இரு மலைகளுக்கு இடையே மிகப்பெரும் தடுப்பை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட அந்த மக்களைக் காப்பாற்றினார். இவ்வாறு நாமும் முடிந்தளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது எப்படி?

فعند مسلم (62 /2584) من رواية أبي الزبير عن جابر قال:

اقتتل غلامان: غلام من المهاجرين، وغلام من الأنصار، فنادى المهاجر أو المهاجرون: يا للمهاجرين، ونادى الأنصاري: يا للأنصار، فخرج رسول الله صلى الله عليه وسلم، فقال: «مَا هَذَا؟ دَعْوَى أَهْلِ الْجَاهِلِيَّةِ؟»، قالوا: لا يا رسول الله، إلا أن غلامين اقتتلا، فكسع أحدهما الآخر، قال: «فَلَا بَأْسَ، وَلْيَنْصُرِ الرَّجُلُ أَخَاهُ ظَالِمًا أَوْ مَظْلُومًا: إِنْ كَانَ ظَالِمًا فَلْيَنْهَهُ، فَإِنَّهُ لَهُ نَصْرٌ، وَإِنْ كَانَ مَظْلُومًا فَلْيَنْصُرْهُ».

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஒரு போரின்போது) முஹாஜிர்களில் ஓர் இளைஞரும் அன்சாரிகளில் ஓர் இளைஞரும் சண்டை யிட்டுக்கொண்டனர். அப்போது அந்த முஹாஜிர், “முஹாஜிர்களே (உதவிக்கு வாருங்கள்)’’ என்று அழைத்தார். அந்த அன்சாரி, “அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)!’’ என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, “என்ன இது, அறியாமைக் காலத்தவரின் கூப்பாடு?’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “இல்லை; அல்லாஹ்வின் தூதரே! இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் மற்றவரின் புட்டத்தில் அடித்துவிட்டார்’’ என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிரச்சினை இல்லை. ஒருவர் தம் சகோதரர் அநீதியிழைப்பவராக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவராக இருக்கும் நிலையிலும் அவருக்கு உதவட்டும். (அது எவ்வாறெனில்) அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், (அநீதியிழைக்கவிடாமல்) அவரைத் தடுக்கட்டும்! அதுவே அவருக்குச் செய்யும் உதவியாகும். அவர் அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால்,  அவருக்கு உதவி செய்யட்டும்’’  என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

ஒதுங்கி நிற்பதும்... வேடிக்கை பார்ப்பதும் ஒரு நல்ல முஃமினின் பண்பல்ல...

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا ‏ ‏يُسْلِمُهُ ‏ ‏وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ ‏ ‏كُرْبَةً ‏ ‏فَرَّجَ اللَّهُ عَنْهُ ‏ ‏كُرْبَةً ‏ ‏مِنْ ‏ ‏كُرَبِ ‏ ‏يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو عِيسَى ‏ ‏هَذَا ‏ ‏حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ ‏ ‏مِنْ حَدِيثِ ‏ ‏ابْنِ عُمَرَ

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். ( நூல்: புகாரி 6951 )

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَشْعَثُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُعَاوِيَةُ بْنُ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ ‏ ‏قَالَ دَخَلْتُ عَلَى ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏فَسَمِعْتُهُ يَقُولُ ‏ ‏أَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ وَاتِّبَاعِ الْجَنَازَةِ ‏ ‏وَتَشْمِيتِ ‏ ‏الْعَاطِسِ وَإِبْرَارِ الْقَسَمِ ‏ ‏أَوْ الْمُقْسِمِ ‏ ‏وَنَصْرِ الْمَظْلُومِ وَإِجَابَةِ الدَّاعِي وَإِفْشَاءِ السَّلَامِ

ர்ராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:- “நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.

3. தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்என்று) சொன்னால், ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.

4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.

5. அநீதிக்கு உள்ளானவருக்கு உதவுவது.

6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.

7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது. ( நூல்: அஹ்மத் )

அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவது நன்மையே! .. அதன் மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதுவும் நன்மையே! 

தபூக் யுத்தம் நடைபெறும் போது கலந்து கொள்ளாமல் ஊரிலேயே தங்கி விட்டவர்களின் செயல்களை விமர்சித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறக்கிய வசனத்தில்...

مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَ لَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّـفْسِهٖ ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَــٴُـــوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلاً اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَۙ‏

மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, இறை நிராகரிப்பாளர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான். ( அல்குர்ஆன்: 9: 120 )

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றீர்களா? குரல் கொடுக்க தயங்குகின்றீர்களா? ஓர் எச்சரிக்கை!

وقد بين أبو بكر الصديق هذا للناس فقال :(أيها الناس إنكم لتقرأون هذه الآية وتضعونها في غير موضعها “يا أيها الناس عليكم أنفسكم لا يضركم من ضَل إذا اهتديتم” (المائدة- ١٠٥)، وإني سمعت رسول الله صلي الله عليه وسلم يقول: إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا علي يديه أوشك الله أن يعمهم بعقاب منه) .(رواه أبو داوود

மக்களே! நீங்கள் இந்த அல் மாயிதா அத்தியாயத்தின் 105 –வது வசனத்தின் பொருளை வேறு விதமாக புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தி வருகின்றீர்கள். ஆனால், நான் நபி ஸல் அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்:- " நிச்சயமாக மனிதர்கள் அநீதி இழைக்கக்கூடிய ஒருவனின் அநீதியைப் பார்த்து விட்டு அவர்கள் அதைத் தடுக்காமல் போனால் ஒரு நாள் அல்லாஹ் அநீதி இழைத்த அந்த அநியாயக்காரனை தண்டிக்கும் போது தட்டிக் கேட்காமல் இருந்த அம்மக்களையும் சேர்த்தே தண்டிப்பான்" என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

حدثنا أحمد بن محمد بن يحيى قال : حدثني أبي ، عن أبيه قال : كتب إلي المهدي بعهدي ، وأمرني أن أصيب في الحكم ، وقال في كتابه : حدثني أبي ، عن أبيه ، عن جده .

 

عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم : " قال ربك تبارك وتعالى : وعزتي وجلالي لأنتقمن من الظالم في عاجله وآجله ، ولأنتقمن ممن رأى مظلوما فقدر أن ينصره ، فلم يفعل " .

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- " உங்கள் இரட்சகன் என் கண்ணியத்தின் மீது ஆணையாக! என் மகத்துவத்தின் மீது ஆணையாக! அநீதம் இழைப்பவனை விரைவாக இந்த உலகிலேயே தண்டிப்பேன்! மேலும், அநீதி இழைக்கப்பட்டவனுக்கு ஆதரவாக சக்தி இருந்தும் செயல்படாமல் இருந்தவர்களையும் சேர்த்தே தண்டிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதாக"  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஃஜமுல் அவ்ஸத் அத் தப்ரானீ )

நீதமாக நட! பிறருக்கு அநியாயம் செய்யாதே!

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنَا الْعَلَاءُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِيِّ عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ فَقَالَ لَهُ رَجُلٌ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللَّهِ قَالَ وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ (صحيح مسلم 196 )

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- " ஒருவர் ஒரு முஸ்லிமுடைய உரிமையை பொய் சத்தியம் செய்து வாதிட்டு பறித்து கொள்கின்றான். பாதிக்கப்பட்டவர் அந்த உரிமையாளரிடத்தில் அதற்குரிய சான்று போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் பொய் சத்தியம் செய்து என்னுடையது தான் என்று ஒருவர் அதை தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்கிறார்.

அப்படி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக அல்லாஹ் அவருக்கு நரகத்தை விதித்து விட்டான். அவர் மீது சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இதைக் கேட்ட உடனே ஒரு நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் பயந்து நடுங்கியவராக வருகிறார்கள். யா அல்லாஹ்வின் தூதரே! ஒரு அற்பமான சிறிய பொருளாக இருந்தாலும் கூடவா?

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:- “பல் துலக்கக்கூடிய குச்சியாக இருந்தாலும் சரியே. அந்த குச்சியாக இருந்தாலும் கூட

அதை இன்னொருவரிடமிருந்து அநியாயமாக எடுத்துக்கொண்டால் அவருக்கு அல்லாஹுத்தஆலா நரகத்தை அவர் மீது கடமையாக்கி சொர்க்கத்தை தடைசெய்து விட்டான். (  நூல் : முஸ்லிம்,எண் : 370 )

இப்படியெல்லாமா வாழ்ந்திருக்கின்றார்கள்?..

தம்மால் பிறர் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று மிகக் கவனத்தோடு மாநபி {ஸல்} அவர்களும், மாநபித்தோழர்களும், இமாம்களான மேன்மக்களும், நல்ல ஆட்சியாளர்களும் தங்களுடைய செயல்பாடுகளை அமைத்திருக்கின்றனர். அந்தச் செய்திகளை வாசிக்கும் போது “இப்படியெல்லாமா வாழ்ந்திருக்கின்றனர்?” என்று புருவத்தை உயர்த்தி வியப்போடு பார்க்காமல் நாம் கடந்து போய் விட முடியாது. அப்படியான வரலாறுகளில் இருந்து சில…

رواه البخاري في صحيحه من حديث أبي مسعود -رضي الله عنه- قال: كان من الأنصار رجل يقال له أبو شعيب: وكان له غلام لحام، فقال: اصنع لي طعامًا، وادع رسول الله -صلى الله عليه وسلم- خامس خمسة، فدعا رسول الله -صلى الله عليه وسلم- خامس خمسة، فتبعهم رجل، فقال النبي -صلى الله عليه وسلم-: «إِنَّكَ دَعَوْتَنَا خَامِسَ خَمْسَةٍ وَهَذَا رَجُلٌ قَدْ تَبِعَنَا، فَإِنْ شِئْتَ أَذِنْتَ لَهُ، وَإِنْ شِئْتَ تَرَكْتَهُ»، قَالَ: بَلْ أَذِنْتُ لَهُ 

அபூ மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:- “அபூ ஷுஐப்என்றழைக்கப்பட்ட அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சிக் கடை வைத்திருந்த ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூ ஷுஐப் (ரலி), ‘எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய். நான் ஐந்தாவதாக நபி (ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்என்று கூறினார். அவர்கள் நபி(ஸல்) அவர்களின் திருமுகத்தில் பசியின் அடையாள(மாக வாட்ட)த்தைப் பார்த்திருந்தார்கள். எனவே, அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுடனும் அவர்களுடன் வந்திருந்தவர்களுடனும் விருந்துக்கு அழைக்கப்படாத ஒருவர் சேர்ந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் (அபூ ஷுஐப் (ரலி) அவர்களிடம்), ‘இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு (இந்த விருந்தில் கலந்து கொள்ள) நீங்கள் அனுமதியளிக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஆம் (அனுமதியளிக்கிறேன்)என்று பதில் கூறினார்கள்.

وقال الإمام أحمد أيضًا: حدثنا أبو نوح قراد  أنبأنا ليث بن سعد، عن مالك بن أنس، عن الزهري، عن عروة، عن عائشة؛ أن رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم، جلس بين يديه، فقال: يا رسول الله، إن لي مملوكين، يكذبونني، ويخونونني، ويعصونني، وأضربهم وأشتمهم، فكيف أنا منهم؟ فقال له رسول الله صلى الله عليه وسلم: "يحسب ما خانوك وعصوك وكذبوك وعقابك إياهم، إن  كان عقابك إياهم دون ذنوبهم، كان فضلا لك [عليهم] وإن كان عقابك إياهم بقدر ذنوبهم، كان كفافا لا لك ولا عليك، وإن كان عقابك إياهم فوق ذنوبهم، اقتص لهم منك الفضل الذي يبقى  قبلك". فجعل الرجل يبكي بين يدي رسول الله صلى الله عليه وسلم: ويهتف، فقال رسول الله صلى الله عليه وسلم: "ما له أما يقرأ كتاب الله؟: { وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ } فقال الرجل: يا رسول الله، ما أجد شيئًا خيرًا من فراق هؤلاء -يعني عبيده-إني أشهدك أنهم أحرار كلهم.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அருமைத் தோழர்களோடு மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருக்கின்ற தருணம் அது. மாநபியின் அருமைத் தோழர்களில் ஒருவர் அண்ணலாரின் சபைக்குள் முகமன் கூறி உள்ளே நுழைகிறார். அவரின் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது.  அவரின் பதற்றமான குரலே அவர் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் என்பதை உணர்த்தியது.

அண்ணலாரின் மிகச் சமீபமாக வந்த அந்த நபித்தோழர்,  மாநபி  {ஸல்}  அவர்களின் அருகாமையில் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் சில தொழில்கள், வியாபாரங்கள் செய்து வருகின்றேன். என்னிடம் சில பணியாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களை நான் நம்பி பணியில் அமர்த்தி இருக்கின்றேன். ஆனால்,  தவறு செய்கின்றார்கள் ஏன் செய்தீர்கள் என்று கேள்வி கேட்டால் கொஞ்சம் கூட பயமில்லாமல் பொய் பேசுகின்றார்கள். என் பொருளை, என பணத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து எனக்கு நம்பிக்கைத் துரோகம் இழக்கின்றார்கள். நான் ஏதாவது செய்யுமாறு ஆணையிட்டால், நான் சொன்னதற்கு நேர் மாறான ஒன்றை செய்கின்றார்கள்.

அவர்களின் இந்த செயல்களால் சில போது நான் அவர்களை கடுமையான முறையில் பேசியும், திட்டியும் விடுகின்றேன். கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் அடித்தும் விடுகின்றேன்.

அல்லாஹ்வின் தூதரே! நான் அவர்களோடு நடந்து கொள்ளும் முறை சரிதானா? நான் சராசரி மனிதனாக நடந்து கொள்கிறேனா? அல்லது ஒரு முஸ்லிமாக  நான் நடந்து கொள்கிறேனா? என பதறியவாறே தமது இந்த நடத்தை தங்களுடைய நல்ல குணத்தை பாதிக்கும் செயல்களாக மாறி விடுமோ எனும் அச்சத்தை நபி  (ஸல்) அவர்களிடம் வெளிப்படுத்தினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின் வருமாறு பதில் கூறினார்கள்:

தோழரே! நாளை மறுமை நாளில் விசாரணை மன்றத்தில் அல்லாஹ் உங்களுக்கும் அடிமைகளுக்கும் நடந்த நிகழ்வுகள் குறித்து உங்களையும், அவர்களையும் அழைத்து விசாரிப்பான்.

பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மோசடி செய்ததும், பொய் சொன்னதும், மாறு செய்ததும் மீஜான் தராசின் தட்டில் வைக்கப்படும். நீங்கள் அவர்களிடம் நடந்து கொண்டதும், ஏசியதும், பேசியதும் அவர்களை அடித்ததும் தராசின் இன்னொரு தட்டில் வைக்கப்படும்.இரண்டும் சமமாக இருந்தால் இருவருக்கும் பிரச்சனை இல்லை. உங்களிடம் இருந்து நிகழ்ந்த செயல்பாடுகள் அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால் அவர்களிடமிருந்து அவர்களின் நன்மைகளை எடுத்து உங்களுக்கு தரப்படும்.

நீங்கள் நடந்து கொண்ட விதம் அதிகம் என்றால் உங்களிடமிருந்து நன்மைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படும்! என்று அதனை கேட்ட மாத்திரத்தில் அந்த நபித்தோழர் அழுதார். அதிர்ச்சியில் அலறினார், கூக்குரலிட்டு அழுதார்.

அந்த நபித்தோழரை மீண்டும் அழைத்த மாநபி (ஸல்) அவர்கள் நாம் மறுமை நாளில்,துல்லியமாக் எடை போடும் தராசுகளை நிறுத்துவோம். பிறகு எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கப்பட மாட்டாது. அவருடைய ஒரு கடுகு மணியளவு செயலாயினும் அதனை நாம் (அங்கு) அவர் முன் கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நாமே போதுமானவனாக இருக்கின்றோம் ( அல்குர்ஆன்: 21: 47 ) எனும் இறை வசனத்தை ஓதிக்காண்பித்து நீர் அல்லாஹ்வின் வேதத்தில் இந்த் வசனத்தை ஓதியதில்லையா? எனக் கேட்டார்கள்.

இத்தனையையும் மிகவும் அதிர்ச்சி விலகாமல் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபித்தோழர், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! பிரச்சனைக்குரிய பணியாளர்களை விடுதலை செய்வதே தனக்கும், அவர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கூறியவாறே அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அனைவரையும் இக்கணமே விடுதலை செய்கிறேன்! அதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள்! என கூறியவாறே சபையில் இருந்து விடை பெற்றுச் சென்றார். ( நூல்: அஹ்மத், தஃப்ஸீர் குர்துபீ )

وكان كثير الأسفـار، وكان من العراق حالياً، ولكنه يذهب إلى مصـر والشام واليمـن؛ ليسمع حديث رسول الله صلى الله عليه وسلم - ذهب يوماً لدمشق؛ ليسمع حديث رسول الله صلى الله عليه وسلم؛ فسمع حديثاً أعجبه؛ فأراد أن يكتبه ولم يكن معه قلم فاستعار قلماً ليكتب الحديث، فكتب الحديث، وبعد أن كتبه، وضع القلم على أذنه، ونسي أنه لا يملكه.

وصاحب القلم - لأنه أهل حياء وأدب - لم يطالبه بالقلم وتركه، فسافر عبدالله بن المبارك. وكانوا يركبون في ذلك الوقت الجمل أو الفرس، وسافر من دمشق إلى خراسان - وهي في روسيا الآن - وعند وصوله إلى البيت، وقبل أن يهمَّ بالنزول، ذكَّره الله بأن القلم الذي على أذنه ليس قلمه، ولكنه استعاره من فلان في دمشق.

فقال: والله لا أحط رحلي ولا أدخل بيتي، حتى أرجع وأردَّ العارية إلى صاحبها. ولم تحدثه نفسه أن يقيل أو يرتاح، أو يرى زوجته وأولاده - وذلك لأنهم كانوا يخشون الفوت، ويسـابقون الموت. يقول لنفسه: هب أنه جائني الموت، وعندي هذا القــلم. ماذا أفعل؟ فاستدار بالركوبة راجعاً إلى بلاد الشام؛ لكي يرد القلم للذي استعاره منه.

தபவுத்தாபியீன்களின் ஒருவரும்,  ஹதீஸ் கலை அறிஞர்களின் தலைவர் என்றும் போற்றப்படும் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

சிரியா தேசத்தின் திமிஷ்கு சென்று அங்கிருக்கின்ற முஹத்திஸ்கள் இடத்தில் பாடம் படித்துவிட்டு திரும்புகிறார்கள். தன்னுடைய பையை பிரிக்கும் போது அதில் எழுதக்கூடிய சிறிய மரக் குச்சி (பேனா) ஒன்று இருக்கிறது.

அப்போதுதான் ஞாபகம் வருகிறது. வகுப்பில் உட்கார்ந்து இருக்கும்போது தன்னுடைய குச்சி உடைந்து விட்ட காரணத்தால் தனக்கு அருகில் இருந்த ஒருவரிடம் இருந்து எழுதுகோலை இரவலாக வாங்கினார்கள். அதை அவர்கள் திரும்பி கொடுக்கவில்லை. மறந்துவிட்டார்கள். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து விடுகிறார்கள். இவர்களும் அப்படியே புறப்பட்டு வந்து விடுகின்றார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த எழுதுகோலை யாரிடம் இருந்து பெற்றேனோ அவரிடம் கொண்டு கொடுக்காத வரை இந்த வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தமாட்டேன்! என்று கூயவர்களாக வீட்டுக்குள் செல்லாமல் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அந்தக் குச்சியை எடுத்துக் கொண்டு ஈராக்கிலிருந்து சிரியா தேசம் சென்றார்கள்.  திமிஷ்கில் உள்ள அந்த மஸ்ஜிதை தேடிச் சென்று அந்தக் குச்சியை யாரிடம் இருந்து பெற்றார்களோ அவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு குச்சியை கொடுத்துவிட்டு திரும்ப அவர்கள் ஈராக் வருகிறார்கள். 

يقول السلطان عبد الحميد في رسالته إلى محمود أبو الشامات، شيخه الشاذلي قبل وفاته بفترة "إن هؤلاء الاتحاديين أصروا علي أن أصادق على تأسيس وطن قومي لليهود في الأرض المقدسة فلسطين، ورغم إصرارهم فلم أقبل بصورة قطعية هذا التكليف، وقد وعدوا بتقديم 150 مليون ليرة إنجليزية ذهبا، فرفضت بصورة قطعية أيضا وأجبتهم بهذا الجواب القطعي الآتي: إنكم لو دفعتم ملء الدنيا ذهبا، فضلا عن 150 مليون ليرة إنجليزية ذهبا فلن أقبل بتكليفكم هذا بوجه قطعي".

உஸ்மானிய ஃகிலாஃபத்தின் கடைசி கலீஃபா இரண்டாம் அப்துல் ஹமீது அவர்கள் சிறை பிடிக்கப்பட்ட நேரத்தில் ஜியோனிஸவாதிகள் “150 மில்லியன் பவுண்ட் தங்கம் தருகிறோம் பாலஸ்தீனத்தை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள்!!! 150 மில்லியன் பவுண்ட் அல்ல இந்த உலகம் முழுவதும் தங்கம் தந்தாலும் உங்களுக்கு பாலஸ்தீனை கொடுக்க முடியாது அது எனக்கு சொந்தமானதல்ல உம்மத்துக்கு சொந்தமானது" என்று கூறியதாக தமது உஸ்தாத் மஹ்மூத் அபுஷ் ஷாமித் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வை அஞ்சிய கலிபா அப்துல் ஹமீது 2 அவர்கள் தம்முடைய பொறுப்பில் எவ்வளவு நியாயமாக நடந்துள்ளார்கள்.

ஜியோனிசவாதிகளை பார்த்து உதிர்த்த வார்த்தைகளுக்கு பகரமாக அவர்கள் பெற்ற விலை போர்‌.

இந்தப் போருக்குப் பின்னர் இந்த உம்மத்தின் நீண்ட கால உஸ்மானிய ஃகிலாஃபத் வீழ்ச்சியுற்றது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பிற்ருக்கு அநீதம் செய்யாமல் நீதமாக வாழ்வதற்கும், பிறர் அநீதிக்கு உள்ளாக்கப்படும் போது அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக செயல்படுவதற்கும், உதவி செய்வதற்கும் தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!! 

No comments:

Post a Comment