Thursday 13 April 2023

நரக விடுதலையைக் கேட்போம்! நரக விடுதலைக்காக செயலாற்றுவோம்!!

 

நரக விடுதலையைக் கேட்போம்!

நரக விடுதலைக்காக செயலாற்றுவோம்!!


நரக விடுதலை குறித்து இரண்டு செய்திகள் நபிமொழிகளில் காணக் கிடைக்கின்றன.

ஒன்று:-

قال النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ: «ما مِن يومٍ أَكثرَ من أنْ يُعتِقَ اللهُ فيهِ عبداً من النارِ مِن يومِ عَرَفَةَ، وإنهُ لَيَدْنُو ثُمَّ يُباهي بهِمِ الملائكةَ فيقُولُ: ما أرادَ هؤلاءِ» (رواه مسلم)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- “அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை.

இரண்டு:-

((شهر رمضان أوَّله رحمة، وأوسَطه مغفرة، وآخِره عتق من النار)).

ரமழான் மாதத்தின் முதல் பத்து ரஹ்மத்துடைய (அருள் நிறைந்த) பத்து, இரண்டாம் பத்து மஃபிரதுடையது (பாவமன்னிப்பு), மூன்றாம் பத்து இத்குன் மினன் நார் (நரக விடுதலை) யின் பத்து நாட்களாகும் " என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஸல்மான் அல்பாரிஸி (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் இந்த செய்தி இப்னு ஹுஸைமாவில் 1887 ஆம் இலக்கத்திலும், அல் மஹாமிலி தனது அமாலீ எனும் கிரந்தத்தின் 293 ஆம் பக்கத்திலும், பைஹகி அவர்கள் ஷுஅபுல் ஈமானின் (7/216) இலும் இன்னும் சில அறிஞர்களும் இந்த செய்தியை பதிவு செய்துள்ளனர்.

நாம் இப்போது ரமழானின் நரக விடுதலையைப் பெற்றுத் தருகிற கடைசி பத்து நாட்களில் இருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மையும், நம் தாய் தந்தையையும்,  நம் குடும்பத்தாரையும் நம் மனைவி மக்களையும் முழு உலக முஸ்லிம்களையும் நரக வேதனையில் இருந்து விடுதலை செய்வானாக! ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!

நரகம் யாருக்காக?

அடிப்படையில் நரகம் என்பதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனை நிராகரிப்பவர்களுக்காகவே படைத்துள்ளான்.

وَاتَّقُوا النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‌ۚ‏

தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ( அல்குர்ஆன்: 3: 131 )

ஷைத்தானுக்காகவும், ஷைத்தானைப் பின் பற்றுபவர்களுக்காகவும் நரகத்தைப் படைத்துள்ளான்.

 

لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِيْنَ‏

நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்) ( அல்குர்ஆன்: 38: 85 )

இப்போது அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை நோக்கி கூறுவதைக் கவனியுங்கள்!

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். ( அல்குர்ஆன்: 3: 102 )

நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ؕ

இறைநம்பிக்கை கொண்டவர்களே ஷைத்தானை நீங்கள் பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவன் அல்லாஹ் தடுத்திருப்பதை செய்யுமாறும், அறுவெறுப்பான காரியங்களை செய்யுமாறும் தூண்டுவான். ( அல்குர்ஆன்: 24: 21 )

எனவே, நரகில் வீழ்வதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற இறைவனின் அறிவுரை:-

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.

( அல்குர்ஆன்: 66: 6 )

அல்லாஹ்வை மறுப்பவர்களுக்காகவும், ஷைத்தானுக்காகவும், ஷைத்தானைப் பின் பற்றுவோருக்காகவும் படைக்கப்பட்டுள்ள நரகத்திற்கு துரதிஷ்டவசமாக அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் பல செய்த நல்லடியாரும் செல்வார் என நபி {ஸல்} அவர்கள் கூறுகின்ற செய்தியை நாம் மறந்து விடக் கூடாது.

وعن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: ((أتدرون ما المفلس؟)) قالوا: المفلس فينا من لا درهم له ولا متاع فقال: ((إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة، ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا، فيعطى هذا من حسناته وهذا من حسناته، فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه، ثم طرح في النار)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர் என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார்.

ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும்..

அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்) என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் )

எச்சரிக்கை நகரத்திற்கு  நம்மைக் கொண்டு நிறுத்துவது எதுவாகவும் இருக்கலாம்.

ஒரு சின்ன தவறு தான் நம் தாய் தந்தையான ஆதம் (அலை)  ஹவ்வா (அலை) ஆகியோரை சுவனத்திலிருந்து வெளியாக்கியது. ஒரு சின்ன பாவம் தான் நாளை மறுமையில் ஒரு மனிதனை சுவனத்தில் நுழைய விடாமல் தடுத்து விடும். 

فإنَّ أحَدَكم لَيَعمَلُ بعمَلِ أهلِ الجَنَّةِ حتَّى ما يكونُ بينه وبينها إلَّا ذِرَاعٌ، أو قِيدُ ذِرَاعٍ، فيسبِقُ عليه الكتابُ فيَعمَلُ بعمَلِ أهلِ النَّارِ فيدخُلُها ابو داود ٤٧٠٨

உங்களில் ஒருவர் சுவனத்தின் பக்கம் ஒரு முழம் வரை நெருங்கும் அளவிற்கு சுவனவாதிகளின் அமல்களை செய்பவராக இருப்பார். ஆனால் அவரிடத்தில் இறைவனுடைய விதி முந்தி விடும். அவர் நரகவாசிகளின் ஒரு செயலை செய்து நரகத்திலும் நுழைந்து விடுவார். (அபூதாவூது )

எனவே, நாம் அத்தகைய நரகத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்க வேண்டும். ஏனெனில், யார் நரகத்திற்குரியவர்கள் என்று அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

عن أبي هريرة - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم :تحاجت الجنة والنار  فقالت النار : أوثرت بالمتكبرين والمتجبرين ، وقالت الجنة : فما لي لا يدخلني إلا ضعفاء الناس وسقطهم وغرتهم . قال الله تعالى للجنة : إنما أنت رحمتي أرحم بك من أشاء من عبادي ، وقال للنار : إنما أنت عذابي أعذب بك من أشاء من عبادي ولكل واحدة منكما ملؤها فأما النار فلا تمتلئ حتى يضع الله رجله .

تقول قط قط قط ، فهنالك تمتلئ ويزوى بعضها إلى بعض ، فلا يظلم الله من خلقه أحدا ، وأما الجنة فإن الله تعالى ينشئ لها خلقا " . متفق عليه .

சுவர்க்கமும் நரகமும் தற்கித்துக் கொண்டது, நரகம் கூறியது, அடக்கி ஆழ்பவர்களும் பெருமையடித்தவர்களைக் கொண்டு நான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளேன். சுவர்க்கம் கூறியது, பலஹீனர்களும், மனிதர்களால் மதிக்கப்படாதவர்களும், இயலாவாளிகளுமே என்னிடம் நுழைவார்கள். அல்லாஹ் சுவர்க்கத்திற்கு கூறினான், நீ என்னுடைய அருட்கொடையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு அருள்புரிவேன். அல்லாஹ் நரகத்திற்கு கூறினான், நீ என்னுடைய தண்டனையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு தண்டிப்பேன். உங்களில் ஒவ்வொருவரையும் அவர்களைக் கொண்டு நிரப்புவேன். நரகமோ நிரம்பாது, அப்போது அல்லாஹ் தன் கால் பாதத்தை நரகத்தின் மீது வைப்பான், அப்போது அது போதும் போதும் போதும் எனக்கூறும், அதில் சிலது சிலதுடன் சேர்ந்து விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் வர்ணித்துக் கூறும் சில மேன்மக்களின் பிரார்த்தனைகள்.

ரஹ்மானின் அடியார்கள்...

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ‌ اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا‏

எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்என்று கூறுவார்கள்.

நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும். ( அல்குர்ஆன்: 25: 65,66 )

சதாவும் இறை நினைவில் இருக்கும் அடியார்கள்...

الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏

‌ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)

எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” (என்று அவர்கள் பிரார்த்திப்பார்கள். ( அல்குர்ஆன்: 3: 191,192 )

உலகத்தை மட்டுமே கேட்போருக்கு மத்தியில் வாழும் இறை அடியார்கள்...

وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً    و قِنَا عَذَابَ النَّارِ‏

இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. ( அல்குர்ஆன்: 2: 201 ).

நரகம் எப்படிப்பட்டது?

திருக்குர்ஆனில்   نار   என்ற வார்த்தை 121 வசனங்களில் இடம் பெறுகிறது.

جهنم என்ற வார்த்தை 77 வசனங்களில் இடம்பெறுகிறது.அதை போல سعير  வார்த்தை 26 வசனங்களில் இடம்பெறுகிறது.

இவ்வாறு நரகம் குறித்த வார்த்தைகள் அதிகமாக திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருப்பதின் மூலம் அது எப்படிப்பட்ட ஆபத்தான இடம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

பாவத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்ட நமது நபி (ஸல்) அவர்கள் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடாத நாட்களே இல்லை என்று நபிமொழிகளில் காண முடிகிறது.

அப்படியானால் நரகத்தின் அபாயத்தை இதை விட கூடுதலாக நமக்கு யார் உணர்த்திட முடியும்?

وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ

இறைவா! எனது ஒரு பகுதி, மறு பகுதியைச் சாப்பிட்டு விட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

روى الإمام أحمد أن رَسُول اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِجِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ : " مَا لِي لَمْ أَرَ مِيكَائِيلَ ضَاحِكاً قَطُّ ؟ قَالَ : مَا ضَحِكَ مِيكَائِيلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ

மிஃராஜ் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் கண்ட காட்சிகளில் ஒன்று, வானவர் மீகாயீல் (அலை) சிரிப்பதில்லை. அதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டபோது, நரகம் படைக்கப்பட்டதிலிருந்து மீகாயீல் (அலை) அவர்கள் சிரிக்கவே இல்லை என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு இந்த உம்மத்திற்கு நரகத்தைக் குறித்து அச்சமூட்டி இருக்கின்றார்கள் என்றால் உலகில் சூரியன் மூலம் ஏற்படும் உஷ்ணமும் மனிதனின் உடலில் காய்ச்சல் மூலம் ஏற்படும் உஷ்ணமும் நரக வெப்பத்தின் ஒரு பகுதி என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

وَنَافِعٌ مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ

إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا ، عَنِ الصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "வெப்பம் கடுமையாகும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )

عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي نَافِعٌ ، عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ

الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "காய்ச்சல் நரகத்தின் பெரு மூச்சினால் உண்டாகிறது. எனவே அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )

 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ

نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ قِيلَ يَا رَسُولَ اللهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உஙகள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’’ என்று கூறினார்கள்.

உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே போதுமானதாயிற்றே!’’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப் பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’’ என்று கூறினார்கள். ( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )

ஓய்வும் கிடையாது, விடுமுறையும் கிடையாது..

وَقَالَ الَّذِيْنَ فِى النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ‏ قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِيْكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنٰتِ ؕ قَالُوْا بَلٰى ؕ قَالُوْا‌ فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓـؤُا الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ

உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள். உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம்என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும். ( அல்குர்ஆன்:  40: 49, 50)      

وَنَادَوْا يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ‌ؕ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ‏

மேலும், அவர்கள் (நரகத்தில்) யா மாலிக்உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களேஎன்று கூறுவார். ( அல்குர்ஆன்:  43: 77 )

மரணமும் இல்லை, வாழ்வும் இல்லை...

اِنَّهٗ مَنْ يَّاْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَـنَّمَ‌ۚ لَا يَمُوْتُ فِيْهَا وَ لَا يَحْيٰى‏

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். ( அல்குர்ஆன்: 20: 74 )

الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌ۚ‏ ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىؕ‏

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். ( அல்குர்ஆன்: 87: 12,13 )

உணவும்... குடிபானமும்..

 ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ ؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏

அநீதி இழைத் தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம். ( அல்குர்ஆன்:  18: 29 )

مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏

يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ وَيَاْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍؕ‌ وَمِنْ وَّرَآٮِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ‏

அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறு மிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது. ( அல்குர்ஆன்: 14: 16,17 )

اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِۙ‏

நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).பாவிகளுக்குரிய உணவு;அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது வெந்நீர் கொதிப்பதைப் போல் கொதிக்கும். அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!". ( அல்குர்ஆன்: 44: 43 - 49 )

கடுமையும்... இலகும்..

فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللَّهِ وَكَرِهُوا أَنْ يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنْفِرُوا فِي الْحَرِّ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا لَوْ كَانُوا يَفْقَهُونَ (التوبة : 81)

(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக (த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது  என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்) ( அல்குர்ஆன்: 9: 81 )

  عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ عَلَى أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ، كَمَا يَغْلِي الْمِرْجَلُ وَالْقُمْقُمُ))

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்  மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும்.  என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். ( நூல்: புகாரி )

நரகிலிருந்து நம்மை ஈடேற்றம் பெறச் செய்யும் செயல்கள் எது?

1. இணை வைப்பு கலக்காத தூய இறைநம்பிக்கை..

لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ‌ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ‌ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏

நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. ( அல்குர்ஆன்: 5 72 )

2. பெரும்பாவங்களில் இருந்து விலகி வாழ்வதும், நல்லறங்களில் முன்னேறிச் செல்வதும்...

اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰٓىۙ اُولٰٓٮِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَۙ‏
لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَا‌ ۚ وَهُمْ فِىْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ‌
لَا يَحْزُنُهُمُ الْـفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ؕ هٰذَا يَوْمُكُمُ الَّذِىْ كُنْـتُمْ تُوْعَدُوْنَ‏

நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள். (இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
(
அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து: உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்). ( அல்குர்ஆன்: 21: 101 - 103 )

3. தக்பீர் தஹ்ரீமாவுடன் நாற்பது நாட்கள் தொழுவது..

قال - صلى الله عليه وسلم

 من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان : براءة من النار و براءة من النفاق 

 رواه الترمذي

"எவர் அல்லாஹ்வுக்காக நாற்பது நாட்கள் தொழுகையில் அதன் ஆரம்ப தக்பீருடன் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவாரோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு இரண்டு விஷயங்களில் இருந்து விடுதலையை வழங்குகின்றான். ஒன்று நரகத்தில் இருந்து. இன்னொன்று நயவஞ்சகத்தனத்தில் இருந்து" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

4. சுபுஹ் மற்றும் அஸர் தொழுகைகளை வாழ்நாள் முழுவதும் தவறாது தொழுவது...

قال - صلى الله عليه وسلم

لن يلج النار أحد صلَّى قبل طلوع الشمس وقبل غروبها - يعني الفجر والعصر 

رواه مسلم ]

எவர் காலை மற்றும் மாலையின் இரு தொழுகையான சுபுஹ் மற்றும் அஸர் தொழுகைகளை பேணுதலாக தொழுது வருவாரோ அவரை ஒருக்காலமும் நரகம் தீண்டாது" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


وهذا بأن تصليهما في أول الوقت ، وتحافظ على أداء السنة قبلهما
قال - صلى الله عليه وسلم - : { ركعتا الفجر خير من الدنيا و ما فيها } [ رواه مسلم ]
وقال - صلى الله عليه وسلم - : { رحم الله امرءًا صلَّى قبل العصر أربعا } [رواه أبو داود والترمذي

இந்த நபிமொழிக்கு விளக்கம் தரும் அறிஞர் பெருமக்கள் இரண்டு தொழுகைகளையும் அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவதோடு சுபுஹ் (2) மற்றும் அஸரின் (4) முன் சுன்னத் தொழுகைகளையும் பேணித் தொழுது வர வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

5. ளுஹர் தொழுகைக்கு முன் 4 ரக்அத்துகளும் ளுஹர் தொழுகைக்கு பிறகு 4 ரக்அத்துகளும் வாழ்நாள் முழுவதும் பேணுதலாக தொழுது வருவது.

قال - صلى الله عليه وسلم

من يحافظ على أربع ركعات قبل الظهر وأربع بعدها حرَّمه الله على النار 

 رواه أبو داود والنسائي والترمذي

"எவர் ளுஹர் தொழுகைக்கு முன் 4 ரக்அத்துகளும் ளுஹர் தொழுகைக்கு பிறகு 4 ரக்அத்துகளும் (வாழ்நாள் முழுவதும்) பேணுதலாக தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை தடை செய்து விட்டான் " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6. அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவது..

قال - صلى الله عليه وسلم

لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ، و لا يجتمع غبار في سبيل الله و دخان جهنم في منخري مسلم أبدا 

رواه الترمذي والنسائي

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: கறந்த பால் எப்படி மடுவுக்குள் திரும்பிச்செல்ல முடியாதோ, அது போன்று தான் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்ணையும், அழுதவரையும் நரகம் தீண்டாது. அல்லாஹ்வின் பாதையில் கிளம்பும் புழுதியும், நரகத்தின் புகையும் ஒன்று சேராது.” ( நூல்: திர்மிதீ )

7. அல்லாஹ்விடம் நரக விடுதலை கேட்டு துஆ செய்வது..

قال - صلى الله عليه وسلم

ما سأل رجل مسلم الله الجنة ثلاثا إلا قالت الجنة : اللهم أدخله الجنة ، و لا استجار رجل مسلم الله من النار ثلاثا إلا قالت النار : اللهم أجره منِّي } [ رواه الإمام أحمد.

எந்த முஸ்லிம் அல்லாஹ்விடம் மூன்று முறை யாஅல்லாஹ்! எனக்கு சுவனத்தை தா! என்னை சுவனத்தில் புகச் செய்வாக! என்று கேட்கிறாரோ சுவனம் அல்லாஹ்விடம் அல்லாஹ்வே! அவரை சுவனத்தில் நுழையச் செய்திடு! என்று கேட்காமல் இருப்பதில்லை. அதே போன்று எந்த முஸ்லிம் அல்லாஹ்விடம் மூன்று முறை யாஅல்லாஹ்! எனக்கு நரகத்தை தடை செய்! என்னை நரகத்தில் இருந்து புகச் பாதுகாப்பாயாக! என்று கேட்கிறாரோ நரகம் அல்லாஹ்விடம் அல்லாஹ்வே! அவரை நரகத்தில் இருந்து காத்திடு! என்று கேட்காமல் இருப்பதில்லை!" என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

(இந்த அமலை தான் நாம் ரமழானின் இந்த பத்து நாட்களில் அதிகமாக கேட்டு வருகிறோம்)

8. நோன்பு நோற்றல்..

قال - صلى الله عليه وسلم

الصوم جنة يستجن بها العبد من النار 

 رواه الطبراني

நோன்பு நரகில் இருந்து ஒரு அடியானை காக்கும் கேடயமாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ரமழான் நோன்பை முழுமையாக நோற்பதோடு இதர சுன்னத்தான நஃபிலான நோன்புகளையும் அதிகமாக நாம் நோற்று வர வேண்டும். வாரத்தில் திங்கள் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு, மாதத்தில் அய்யாமுல் பீழ் மூன்று நாட்கள் நோன்பு நோற்க இயன்ற அளவு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

9. சக முஸ்லிமின் மானம் கிழிக்கும் புறம் பேசுதலை புறம் தள்ளுவது...

قال - صلى الله عليه وسلم

من ذبَّ عن عرض أخيه بالغيبة كان حقا على الله أن يعتقه من النار } [ رواه الإمام أحمد والطبراني 

"எவர் தன் சக முஸ்லிம் சகோதரன் ஒருவனின் மானம் காத்து, புறம் பேசாது இருக்கின்றாரோ அவரை கொடும் நரகில் இருந்து விடுவிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகும் " என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

10. நமக்கு பிறந்த பெண் மக்களை, நம்முடன் பிறந்த சகோதரிகளை வளர்த்து அரவணைப்பது..

قال - صلى الله عليه وسلم

ليس أحد من أمتي يعول ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا كنَّ له سترا من النار 

رواه البيهقي

وقال - صلى الله عليه وسلم

من كان له ثلاث بنات فصبر عليهن ، وأطعمهن ، وسقاهن ، وكساهن من جدّته كنَّ له حجابا من النار يوم القيامة 

 رواه الإمام أحمد وابن ماجه

"எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அல்லது மூன்று சகோதரிகள் இருந்து அவர்களுடன் அவர் அழகிய முறையில் நடந்து கொள்வாரோ அந்த மூன்று பெண் மக்களும் அல்லது அந்த மூன்று சகோதரிகளும் அவருக்கு நரகை விட்டும் திரையாக காத்து நிற்பார்கள்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில்...

எவருக்கு மூன்று பெண்மக்கள் இருந்து (அவர்களை வளர்க்கும் விஷயத்தில் பொறுமை காத்து) அவர்களோடு பொறுமையாக நடந்து, அவர்களுக்கு அழகிய முறையில் உணவளித்து, குடிநீர் வழங்கி, ஆடை கொடுத்து அதற்காக வேண்டி கடும் சிரத்தை எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அந்த பெண்மக்கள் நரகில் இருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ, அஹ்மத், இப்னு மாஜா )

நாம் இந்த ரமழானில் நரக விடுதலையை வல்ல ரஹ்மானிடம் கேட்பதோடு நின்று விடாமல் நரகத்தில் இருந்து காக்கும், தடுக்கும், பாதுகாக்கும் அனைத்து நல்லறங்களையும் தூய்மையான எண்ணத்தோடு செய்து நரகத்தில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெற முயற்சி செய்வோமாக! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அதற்கு தவ்ஃபீக் செய்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

4 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமை

    ReplyDelete
  2. மாஷா அல்லா அருமையான பதிவு தங்களுக்கு அல்லாஹுத்தஆலா எல்லா நன்மைகளையும் தருவானாக

    ReplyDelete
  3. جزاك الله خيرا كثيرا في الدارين

    ReplyDelete