அற்புதக் குழந்தைகள் மூலம் அல்லாஹ் வழங்கும்
அழகிய அறி(ற)வுரைகள்!!!
ரமழான் - (1444
- 2023) தராவீஹ் சிந்தனை 13.
13 -வது நாள் தராவீஹ்
தொழுகையை நிறைவேற்றி,
12 -வது
நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில்
இதயத்திற்கு உற்சாகமாகவும், ஈமானுக்கு உரமாகவும் அமைந்திருக்கின்ற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும்
ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்,
நம்முடைய இதர நல்லறங்களையும் கபூல் செய்து நிறைவான நன்மைகளை
வழங்கியள்வானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் சூரா கஹ்ஃபின் எஞ்சிய வசனங்கள் மற்றும் சூரா மர்யம், சூரா தாஹா ஆகியவை ஓதப்பட்டுள்ளன.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் சூரா மர்யமின் 29 முதல் 33 வசனங்கள் வரை தொட்டில் குழந்தையாக
ஈஸா (அலை) அவர்கள் இருந்த போது அவர்கள் பேசிய அற்புதம் குறித்துப் பேசுகின்றான்.
فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي
الْمَهْدِ صَبِيًّا (29) قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ
وَجَعَلَنِي نَبِيًّا (30) وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي
بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ
يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا (32) وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ
وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا
ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) மர்யம் அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
“நிச்சயமாக நான்
அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக்
கொடுத்திருக்கின்றான்;
இன்னும், என்னை நபியாக
ஆக்கியிருக்கின்றான்.
“இன்னும், நான் எங்கிருந்தாலும்,
அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும்,
நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு)
இருக்கின்றான்.
“என் தாயாருக்கு நன்றி
செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட
பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
“இன்னும்,
நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும்
(மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
ஈஸா (அலை) அவர்கள்
உட்பட இன்னும் சில குழந்தைகள் தொட்டில் பருவத்தில், பால்குடி பருவத்தில் பேசியதாக
நபிமொழிகளில் சில வரலாறுகள் காணக்கிடைக்கின்றன.
வரலாறு...1:-
حدثنا
عبد الله حدثني أبي ثنا أبو عمر الضرير أنا حماد بن سلمة عن عطاء بن السائب عن
سعيد بن جبير عن بن عباس قال قال رسول الله صلى الله عليه و سلم : لما كانت الليلة
التي أسرى بي فيها أتت علي رائحة طيبة فقلت يا جبريل ما هذه الرائحة الطيبة فقال
هذه رائحة ماشطة ابنة فرعون وأولادها قال قلت وما شأنها قال بينا هي تمشط ابنة
فرعون ذات يوم إذ سقطت المدري من يديها فقالت بسم الله فقالت لها ابنة فرعون أبي
قالت لا ولكن ربي ورب أبيك الله قالت أخبره بذلك قالت نعم فأخبرته فدعاها فقال يا
فلانة وان لك ربا غيري قالت نعم ربي وربك الله فأمر ببقرة من نحاس فأحميت ثم أمر
بها ان تلقى هي وأولادها فيها قالت له ان لي إليك حاجة قال وما حاجتك قالت أحب ان
تجمع عظامي وعظام ولدي في ثوب واحد وتدفننا قال ذلك لك علينا من الحق قال فأمر
بأولادها فألقوا بين يديها واحدا واحدا إلى ان انتهى ذلك إلى صبي لها مرضع وكأنها
تقاعست من أجله قال يا أمه اقتحمي فإن عذاب الدنيا أهون من عذاب الآخرة فاقتحمت
قال قال بن عباس تكلم أربعة صغار عيسى بن مريم عليه السلام وصاحب جريج وشاهد يوسف
وبن ماشطة ابنة فرعون
மிஃராஜ் பயணத்தின்
போது ஒரு இடத்தில்,
கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை
நுகர்ந்த. நபி (ஸல்) அவர்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அதைப் பற்றி
கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இந்த வாசனை ‘மாஷித்தா’வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க
மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை” என்று கூறினார்கள்.
தொடர்ந்து நபி
(ஸல்) அவர்கள் மாஷித்தாவின் வரலாறை விவரிக்கும் படி கேட்க, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
“மாஷித்தா பிர்அவ்னின் குடும்பத்துப்
பெண்களுக்கு தலை வாரி விட்ட பெண். ஒரு நாள் அவர் பிர்அவ்னின் மகளுக்கு தலை வாரிக்
கொண்டிருந்த போது தற்செயலாக சீப்பு கீழே விழுகிறது. உடனே மாஷித்தா “பிஸ்மில்லாஹ்- அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு” என்று கூறினார். அப்போது அந்தப் பிள்ளை “நீ அல்லாஹ் என்று கூறியது
என் தந்தை பிர்அவ்னைத் தானே?” என்று வினவினாள். அதற்கு
மாஷித்தா “இல்லை! என்னையும்,
உன் தந்தையையும் படைத்து பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ்வை” என்று கூறினார்.
மாஷித்தா, வணக்கத்திற்குரிய நாயனாக அல்லாஹ்வையும், இறைத்தூதராக நபி மூஸா
(அலை) அவர்களையும் ஈமான் கொண்டு அதை மனதில் மறைத்து வைத்திருந்த பெண்ணாவார்.
உடனே அந்தப்
பிள்ளை போய் தன் தந்தை பிர்அவ்னிடம் குற்றஞ் சொல்ல அவன் மாஷித்தாவை சபைக்கு
அழைத்து முழு விஷயத்தையும் வினவினான். பிர்அவ்ன் கேட்டான் “என்னைத் தவிர உனக்கு வேறு யாரும் கடவுள் உண்டோ?” என்று. அதற்கு மாஷித்தா “ஆம்! நிச்சயமாக என்னையும் உன்னையும்
படைத்து பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்தான் என் இறைவன்” என்றார் உறுதியோடு.
கோபங்கொண்ட
பிர்அவன் நெருப்பை மூட்டி செம்பால் ஆன பெரும் பாத்திரத்தில் எண்ணையைக் கொதிக்க
வைத்து மாஷித்தாவுடைய கணவனிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பிள்ளைகளாக நெருப்பில்
எரிந்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் எறிந்தான். ஆனால் மாஷித்தா
மனந்தளறவுமில்லை,
அவருடைய ஈமானில் சற்றேனும் உறுதி குறையவுமில்லை.
கடைசியாக பிர்அவன்
மாஷித்தாவையும் அவருடைய மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையையும்
தூக்கி எறியும்படி கூறினான். அப்போது மாஷித்தா “எனது கடைசி ஆசை ஒன்று இருக்கிறது” என்று கூறினார்.
பிர்அவ்ன் “என்ன,
சொல்?” என்று கேட்டான். மாஷித்தா
“என்னையும் என் கைக்குழந்தையையும் எண்ணையில் தூக்கி எறிந்த பின் கடைசியாக எமது
எலும்புகள் எதுவெல்லாம் மிச்சமாகுமோ அவற்றையெல்லாம் ஒன்றாக ஒரு புடவையினுள் சுற்றி
ஒரே கப்றில் அடக்கஞ் செய்ய வேண்டும்” என்று.
கொடிய பிர்அவ்ன்
மாஷித்தாவுடைய வேண்டுகோளிற்கு இணக்கம் தெரிவித்தான். அப்போது மாஷித்தா தன்
மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையைப் பார்த்து “ஒரு பாவமும் அறியாத இந்தப் பிஞ்சும் சேர்ந்து எண்ணையில் கருகப் போகிறதே” என்று தயங்கினார். அப்போது வல்ல அல்லாஹ் அந்தக் குழந்தைக்கு பேசும் சக்தியைக்
கொடுத்தான். அக்குழந்தை “கவலைப்படாதே தாயே! நீ சத்தியத்தில் இருக்கிறாய், பொறுமை கொண்டு முன்னேறிச் செல், மறுமையுடைய வேதனைகளும்
தண்டனைகளும் இதை விடக் கொடியது” என்று ஆறுதல் கூறியது.
கடைசியில் மாஷித்தாவும் அவரது கைக் குழந்தையுடன் எண்ணைப் பாத்திரத்தில்
எறியப்பட்டார்கள்.
வல்லவன் அல்லாஹ்
மாஷித்தாவையும் அவருடைய குடும்பத்தையும் பொருந்திக் கொண்டு வாக்களித்த உயர்ந்த
சுவர்க்கத்தை அளித்து விட்டான்.
அறிவிப்பவர்:- இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: முஸ்னத் அஹ்மத், தபறானி, இப்னு ஹிப்பான்,
ஹாகிம்.
இந்த ஹதீஸின்
இறுதியில்
قال بن
عباس تكلم أربعة صغار عيسى بن مريم عليه السلام وصاحب جريج وشاهد يوسف وبن ماشطة
ابنة فرعون
المستدرك
على الصحيحين للحاكم
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” تَكَلَّمَ أَرْبَعَةٌ وَهُمْ
صِغَارٌ: هَذَا وَشَاهِدُ يُوسُفَ، وَصَاحِبُ جُرَيْجٍ وَعِيسَى ابْنُ مَرْيَمَ
عَلَيْهِ السَّلَامُ
குழந்தைப்
பருவத்தில் நால்வர் பேசியுள்ளனர். 1 ஈஸா நபி, 2 ஜுரைஜ் என்பாரின் தோழர், 3 யூசுஃப் நபிக்கு ஆதரவாக
சாட்சி சொன்னவர்,
ஃபிர் அவ்னின் மகளாகிய மாஷிதாவின் மகன் என்று இப்னு அப்பாஸ்
கூறினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட அதே
விஷயம் இப்னு அப்பாஸின் கூற்றாக அல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக
ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாறு.. 2, 3, 4:-
حَدَّثَنَا
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ
بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، قَالَ: ” لَمْ يَتَكَلَّمْ فِي المَهْدِ إِلَّا ثَلاَثَةٌ: عِيسَى، وَكَانَ
فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ، كَانَ يُصَلِّي، جَاءَتْهُ
أُمُّهُ فَدَعَتْهُ، فَقَالَ: أُجِيبُهَا أَوْ أُصَلِّي، فَقَالَتْ: اللَّهُمَّ
لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ المُومِسَاتِ، وَكَانَ جُرَيْجٌ فِي
صَوْمَعَتِهِ، فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى، فَأَتَتْ
رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا، فَوَلَدَتْ غُلاَمًا، فَقَالَتْ: مِنْ
جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ،
فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الغُلاَمَ، فَقَالَ: مَنْ أَبُوكَ يَا غُلاَمُ؟
قَالَ: الرَّاعِي، قَالُوا: نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ؟ قَالَ: لاَ، إِلَّا
مِنْ طِينٍ. وَكَانَتِ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ،
فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتْ: اللَّهُمَّ اجْعَلِ ابْنِي
مِثْلَهُ، فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ، فَقَالَ: اللَّهُمَّ
لاَ تَجْعَلْنِي مِثْلَهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ، – قَالَ:
أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَمَصُّ إِصْبَعَهُ – ثُمَّ مُرَّ بِأَمَةٍ، فَقَالَتْ: اللَّهُمَّ لاَ
تَجْعَلِ ابْنِي مِثْلَ هَذِهِ، فَتَرَكَ ثَدْيَهَا، فَقَالَ: اللَّهُمَّ
اجْعَلْنِي مِثْلَهَا، فَقَالَتْ: لِمَ ذَاكَ؟ فَقَالَ: الرَّاكِبُ جَبَّارٌ مِنَ
الجَبَابِرَةِ، وَهَذِهِ الأَمَةُ يَقُولُونَ: سَرَقْتِ، زَنَيْتِ، وَلَمْ
تَفْعَلْ “
மூன்று பேர்களைத்
தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா
(அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் 'ஜுரைஜ்'
என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு
முறை) அவர் தொழுது கொண்டிருந்தார்.
அப்போது அவரின்
தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) 'அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?' என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.)
அதனால் கோபமடைந்த
அவரின் தாய்,
'இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!''
என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில்
இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்)
பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன்
வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு 'இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்களிடம்)
சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே
இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள்.
உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக்
குழந்தையிடம் சென்று,
'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அக்குழந்தை, '(இன்ன) இடையன்'' என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், 'தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறிவிட்டார்.
(மூன்றாமவர்)
இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று
கொண்டிருந்தான். உடனே,
அவள், 'இறைவா! என் மகனை இவனைப்
போல் ஆக்கு''
என் மகனை இவனைப் போல் ஆக்கு'' என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய
மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, 'இறைவா! இவனைப்
போல் என்னை ஆக்கி விடாதே''
என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால்
குடிக்கச் சென்றது.
இந்த இடத்தில்
நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது - பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப்
பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், 'இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே'' என்று கூறினாள்.
உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, 'இறைவா! என்னை
இவளைப் போல் ஆக்கு''
என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), 'ஏன் இப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்டதற்கு
அக்குழந்தை,
'வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) 'நீ திருடிவிட்டாய்;
விபசாரம் செய்துவிட்டாய்' என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும்
செய்யவில்லை''
என்று பதிலளித்தது.
என்று
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ( நூல்: புகாரி )
வரலாறு.. 5:-
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ (1) وَالْيَوْمِ الْمَوْعُودِ
(2) وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3) قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ
الْوَقُودِ (5) إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ
بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا
بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ (8
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ
شَيْءٍ شَهِيدٌ (9
”உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக!
வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக! மேலும், பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக! தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!
அது எத்தகைய தீக்குண்டமெனில், அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரி பொருள் இருந்தது. அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து இறை நம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்து கொண்டிருந்த அக்கிரமச் செயல்களைப்
பார்த்து ரசித்த வண்ணம் இருந்தார்கள்.
அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் தீக்குண்டத்தார்கள் பகைமை பாராட்டிக்
கொள்ள காரணம் இதைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.
“யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனும் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனுமாகிய அல்லாஹ்வின் மீது
அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தான்!” ( அல்குர்ஆன்: 85:
1- 9 )
இது முந்தைய பனூ இஸ்ராயீல்களின் காலத்தில் நடைபெற்ற வியப்பின் விளிம்பிற்கே அழைத்துச் செல்லும் வினோதமான வரலாறாகும்.
ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கும் நீண்ட ஹதீஸ் முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னை கடவுளாக அறிவித்து, தன்னை வணங்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்த ஓர் அரசனின் பிரதேசத்தில் ஈமான் கொண்டிருந்த ஒரு சிறுவனின் மரணத்தின்
மூலம் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் முஸ்லிமானார்கள்.
قد آمن الناس كلهم. فأمر بأفواه السكك فَخُدّت فيها الأخاديد، وأضرمت
فيها النيران، وقال: من رجع عن دينه فدعوه وإلا فأقحموه فيها. قال: فكانوا يتعادون
فيها ويتدافعون
அப்போது, அரசன் பெரிய கிடங்குகள் தோண்டச் சொல்லி அதில் நெருப்பு
மூட்டுமாறு கட்டளைப் பிறப்பித்து,
“யார் யாரெல்லாம் தங்களது ஈமானை கைவிட வில்லையோ அவர்களைப் பிடித்து இவற்றில் வீசியெறியுங்கள்! அல்லது இந்த நெருப்பில் இறங்குங்கள் என்று அவர்களை நிர்ப்பந்தியுங்கள்! என்று தம் சேவகர்களுக்கு உத்தரவிட்டான்.
فجاءت
امرأة بابن لها ترضعه، فكأنها تقاعست أن تقع في النار، فقال الصبي: اصبري يا أماه،
فإنك على الحق".
அவர்களும் அவ்வாறே செய்தனர். அல்லாஹ்வைக் கொண்டு நம்பிக்கை கொண்ட அத்துனை பேர்களும் தீக்குண்டத்தில் வீசியெறியப்பட்டார்கள். இறுதியாக, ஒரு பெண்மணி வந்தாள். பால்குடி பருவத்தில் உள்ள தன் குழந்தையை கையில் சுமந்தவாறு
தீக்குண்டத்தின் வாசல் அருகே தயங்கிய படி நின்ற போது, அந்தக் குழந்தை சொன்னது: “தாயே! பொறுமை காத்திடு! நிச்சயமாக நீ சத்தியத்தின் மீது இருக்கின்றாய்” என்று. ( நூல்: இப்னு கஸீர், ரியாளுஸ்ஸாலிஹீன், பாபுஸ் ஸப்ர், ஹதீஸ்எண்: 30
)
இவைகள் வெவ்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த அற்புதம்
என்றிருந்தாலும் அனைத்துக் கால கட்டத்திற்குமான அறி(ற)வுரைகளைச் சுமந்ததாகவே அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் இந்த அற்புதத்தை அமைத்து இருக்கின்றான்.
அற்புதக் குழந்தைகளும்… அறி(ற)வுரைகளும்..
மாஷித்தாவின் இரு மக்களும், தீக்குண்டத்தில் தூக்கி
வீசப்பட்ட பெண்ணின் குழந்தையும் “தீனில் நிலைத்திருப்பது, அல்லாஹ்வின் கத்ரை ஏற்று
பொறுமையோடு பொருந்திக் கொள்வது ஆகியற்றையும், ஆட்டு இடையனுக்குப் பிறந்த குழந்தை பேசியதன்
பின்னூடாக “ஓர் இறைநம்பிக்கையாளர், வணக்கசாலி அவரின் தவறை உணர்ந்து தவ்பாச் செய்து
இறைவனின் மீதான நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் போது” அல்லாஹ் நிச்சயம் பேருதவியைச்
செய்வான் என்பதையும், முன்காலத்துப் பெண்மணியொருவரின் பால்குடிக் குழந்தையின் பேச்சின்
மூலமாக “எப்போதுமே மனித சமூகம் வெளிப்படையான ஒன்றைக் கொண்டே அனைத்தையும் அளவிடுகிறது
என்பதையும், பல நேரங்களில் அத்தகைய அளவீடுகள் தவறாகப் போய் விடுவதையும் சுட்டிக் காட்டுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக நபி ஈஸா (அலை) அவர்கள் பேசியதில்
பல்வேறு அறிவுறைகள் இருக்கின்றன. எனினும் ”வாழும் காலமெல்லாம் தாயாருக்கு உபகாரம்,
பணிவிடை செய்ய நான் ஏவப்பட்டிருக்கின்றேன்” என்ற இந்த அறிவுரையின் கீழ் சில செய்திகளைப்
பார்ப்போம்.
பெற்றோருக்கு உபகாரம் செய்வது, குறிப்பாக தாய்க்கு
உபகாரம் செய்வது குறித்தான சிறப்புகளை நாம் பார்ப்போம்.
عن أبي
عمرو الشيباني، قال: حدثنا صاحب هذه الدار وأشار إلى دار عبد الله بن مسعود - قال:
سألت رسول الله صلى الله عليه وسلم: (أي العمل أحب إلى الله عز وجل؟ قال: الصلاة
لوقتها). قلت: ثم أي؟ قال: (بر الوالدين). قلت: ثم أي؟ قال: (الجهاد في سبيل الله).
அப்துல்லாஹ் பின்
மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் நபியே! நற்செயல்களில்
சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?’’ என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?’’ என்று
கூறினார்கள். “அடுத்து எது?
அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டேன்.
அதற்கு “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். “அடுத்தது எது?
அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டபோது, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்றார்கள். ( நூல்: முஸ்லிம் 138
)
பெற்றோருக்குப்
பணிவிடை செய்வது எவ்வளவு அவசியம் என்பதை மேற்கண்ட ஹதீஸ் மனித சமூகத்திற்கு
எடுத்துரைக்கின்றது.
அஸ்மா பின்த்
அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: என்னிடம் என் தாயார் அல்லாஹ்வின்
தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்போராக இருந்தார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதரிடம் “என் தாயார் என்னிடம் ஆசையுடன்
வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?’’ என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் “ஆம், நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்’’ என்று கூறினார்கள்.
( நூல்: புகாரி 2620 )
பெற்றோர் இணை வைப்போராக
இருந்த போதிலும் அவர்களுடன் உறவைப் பேணி வாழ வேண்டும் என்பதே மார்க்கத்தின்
வழிகாட்டுதல் என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
وعن أبي
هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: (رغم أنفه، رغم أنفه). قيل: من يا
رسول الله؟ قال: (من أدرك والديه عنده الكبر أو أحدهما فدخل النار)
“அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், (இழிவடை யட்டும்!) அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், அவனுடைய மூக்கு
மண்ணாகட்டும்‘’
என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே அவன் யார்?’’ என்று கேட்கப்பட்டது. “யார் வயதான தாய் தந்தையர்களில் இருவரையுமோ, அல்லது இருவரில் ஒருவரையோ
(உயிருடன்) பெற்று அவர்களுக்கு (பணிவிடை செய்வதின் மூலம்) சுவனம் புகவில்லையோ
அவன்தான்’’
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4627)
நோவினை செய்வது பெரும்பாவமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பெற்றெடுத்த தாய்மார்களுக்குத் துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு
ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்’’
அறிவிப்பவர்: முகீரா பின் ஸுஃபா (ரலி)
நூல்: புகாரி (2408)
நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றிக்
கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு
இணைவைத்தல்,
பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன
(பெரும் பாவங்களாகும்)’’
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2653)
وهذا
ابن عمر - رضي الله عنهما - رأى رجلاً يطوف حول الكعبة وعلى ظهره امرأة عجوز
(منظرٌ عجيب) فتقدم ابن عمر إلى ذلك الرجل فقال له: من أي الديار؟ فقال: من
خُراسان، فقال ابن عمر: من هذه؟ فقال الرجل: هذه أمي، أتيت بها من بلاد خُراسان،
وهي على ظهري، وأطوف بها وهي على ظهري، وسأعود بها إلى الرحال والبلاد على
ظهري...... يا ابن عمر، أُتراني قد وفّيت حقها من المعروف والبر الذي عليّ؟ قال
ابن عمر لا.. ولا بطلقةٍ واحدةٍ من طلقات وضعك".
அப்துல்லாஹ் இப்னு
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ஒரு தோழர் வருகிறார். ஈரானில் உள்ள ஒரு நகரம், ஹுராசானிலிருந்து நான் என்
தாயை சுமந்து வந்திருக்கிறேன் அப்துல்லாஹ் இப்னு
உமரிடத்தில் சொல்கின்றார். “என் தாயை முதுகில் சுமந்தவனாக தவாஃப்
செய்தேன், என் தாயை முதுகில் சுமந்தவனாக சயீ செய்தேன்,
முதுகில் சுமந்தவனாக மினா அழைத்துச் சென்றேன், பிறகு அரஃபா, பிறகு முஸ்தலிஃபா, பிறகு மக்கா என அனைத்து கடமைகளையும் என் தாயை முதுகில் சுமந்தவனாகச்
செய்தேன்.
பிறகு கேட்கிறார்; என்
தாய்க்குள்ள கடமையை நான் செய்துவிட்டேனா? என்று. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் : இல்லை.
நீ சிறு பிராயத்தில் இருக்கும் போது, அந்த
தாய் உன்னை பார்த்து ஒரு புன்முறுவலாக சிரித்தாள் அல்லவா, மனமாற உன்னை பார்த்து மகிழ்ந்தாள் அல்லவா! அதற்கு கூட நீ இன்னும் நன்றி
செலுத்தவில்லை என்று
இன்றைய நவீன
போக்குவரத்து பாதை வழியாக ஈரானிலிருந்து மக்காவிற்கு ஏறக்குறைய வான்பாதை வழியாக 1916 கிலோ மீட்டர்
தூரம். தரை வழியாக 2639.1 கிலோ மீட்டர்
தூரம் ஆகும் .
முஆத் ரழியல்லாஹு
அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்.
أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا
تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ
وَمَالِكَ
அல்லாஹ்வின் தூதர்
எனக்கு வஸிய்யத் -அறிவுரை கூறினார்கள்; உன் பெற்றோருக்கு நீ மாறு
செய்யாதே! அவர்கள் உன் குடும்பத்தை விட்டும் உன் சொத்தை விட்டும் உன்னை வெளியே
செல் என்று சொன்னாலும் சரியே”. (1)
அறிவிப்பாளர் : முஆத்ரழியல்லாஹு அன்ஹு, நூல்
: முஸ்னத் அஹ்மத், எண் : 21060.
அபூ ஸயீது அல்குத்ரி
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:- " ஒருவர் நபி ஸல் அவர்களின் சமூகத்திற்கு எமன் நாட்டிலிருந்து
வருகிறார்.
هَاجَرَ
رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْيَمَنِ
فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَجَرْتَ الشِّرْكَ
وَلَكِنَّهُ الْجِهَادُ هَلْ بِالْيَمَنِ أَبَوَاكَ قَالَ نَعَمْ قَالَ
أَذِنَا لَكَ قَالَ لَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ارْجِعْ إِلَى أَبَوَيْكَ فَاسْتَأْذِنْهُمَا فَإِنْ فَعَلَا وَإِلَّا
فَبِرَّهُمَا
நபி {ஸல்} அவர்களிடத்தில்
”அல்லாஹ்வின் தூதரே! என் முழு வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்து வந்து
விட்டேன். அப்போது நபி {ஸல்} அவர்கள் அவர்கள் அவரிடம்
கேட்டார்கள். ஷிர்க்கை விட்டு விட்டாயா? விட்டு விட்டேன்.
ஜிஹாத் அல்லாஹ்வின்
பாதையில் போர் செய்வது பாக்கியிருக்கிறது என்றார்.
எமன் நாட்டில் உன்
பெற்றோர் இருவரும் உயிரோடு இருக்கிறார்களா? அவர் கூறினார், உயிரோடு இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்; அல்லாஹ்வின்
தூதரே! இருவரும் உயிரோடு இருக்கிறார்கள்.
நீ ஜிஹாதிற்கு
வந்திருக்கிறாயே,
உன் பெற்றோர் இடத்தில் அனுமதி கேட்டு விட்டு வந்திருக்கிறாயா!
என்று கேட்டார்கள். அப்போது அந்த நபித்தோழர் கூறுகிறார்,
அல்லாஹ்வின் தூதரே! நான் அனுமதி கேட்கவில்லை, ஜிஹாதின் மேல் உள்ள பிரியத்தால் நான் அனுமதி பெறாமல் ஓடி வந்துவிட்டேன்
என்று.
அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,உன்
பெற்றோரிடத்தில் செல்வாயாக! அவர்களிடத்தில் அனுமதி கேட்பாயாக! அவர்கள் அனுமதி
கொடுத்தால் நீ என்னிடம் வருவாயாக!.அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால், அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நன்மை செய்வீராக" என்று கூறி அவரை
எமனுக்கு அனுப்பி வைத்தார்கள். அறிவிப்பாளர் : அபூ ஸயீது அல்குத்ரி
ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மது,எண் : 11296.
وعن أبي نوفل، قال: جاء رجل إلى عمر رضي الله عنه، فقال: أني قتلت
نفساً، فقال: (ويحك، خطأ أم عمد؟) قال: خطأ. قال: هل من والديك أحد؟). قال: نعم،
قال: (أمك). قال: أنه أبي. قال: (انطلق فبره وأحسن إليه). فلما انطلق، قال عمر:
(والذي نفسي بيده لو كانت أمه حية فبرها وأحسن إليها، رجوت ألا تطعمه النار
أبداً).
ஒரு மனிதர் உமர் (ரலி)
அவர்களிடம் வந்து நான் ஒருவரை கொலை செய்து விட்டேன் என்றார். வேண்டும் என்றே
கொன்றீரா?
அல்லது தவறுதலாக கொன்றீரா? என்று
கேட்டார்கள் உமர் (ரலி) அவர்கள். அதற்கவர் தவறுதலாக என்று பதில் சொன்னார். உமக்கு பெற்றோர்கள் இருக்கின்றார்களா? என்று
உமர் ரலி கேட்க, அவர் என் தாயார் மட்டுமே உயிருடன்
உள்ளார் என்றார். அப்படி என்றால் உம் தாயாரிடம் அழகிய முறையில் நடந்து பணிவிடை
செய்து கொள்வீராக!" என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அவர் சென்றதும் உமர் (ரலி) அவர்கள் "எவன் கைவசம் என் உயிர் உள்ளதோ அவன் மீது
ஆணையாக! அவர் கூறிச் சென்றது போன்று அவர் தாய் உயிருடன் இருந்து இவர் அவருக்கு
பணிவிடை செய்து அழகிய முறையில் உறவாடினால் ஒரு போதும் அவரை நரகம் தீண்டாது என்று
நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள்( நூல்: பிர்ருல் வாலிதைன் லி இமாமி இப்னுல் ஜவ்ஸீ) .
عن معمر
عن الزهري عن عروة عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم: " نمت
فرأيتني في الجنة فسمعت صوت قارئ فقلت من هذا قالوا صوت حارثة بن النعمان " .
فقال رسول الله صلى الله عليه وسلم: " كذلك البر كذلك البر " . وكان أبر
الناس بأمه.
عن عائشة رضي الله عنها قالت: وأما حارثة فأنه كان يفلي رأس أمه ويطعمها بيده، ولم
يستفهمها كلاماً قط تأمر به حتى يسأل من عندها بعد أن يخرج: ما أرادت أمي؟.
ஆயிஷா (ரலி)
அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
என்னிடம் “ஆயிஷாவே!
எனக்கு உறக்கத்தில் சுவனம் காட்டப்பட்டது. அப்போது, சுவனத்தின்
ஓர் பகுதியிலிருந்து ஒருவர் அழகிய குரலில் குர்ஆனை ஓதுகிற சப்தத்தைக் கேட்டேன். அப்போது, நான் “யார்
இவர்? இங்கே
குர்ஆன் ஓதுகின்றாரே? என்று
ஆச்சர்யத்தோடு வினவினேன்.
அப்போது, என்னிடம் ”இந்த
சப்தம் ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுடையது என்று கூறப்பட்டது” என்று
கூறிய அண்ணலார் தொடர்ந்து,
“ நன்மை
செய்வோருக்கும் அவ்வாறே பாக்யம் கிடைக்கும்” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள்: “ஹாரிஸா
இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாய்க்கு மிகவும் உபகாரம் செய்யக் கூடியவர்களாக
இருந்தார்கள். எந்த அளவுக்கு என்றால் தன் தாய்க்கு அவரே தலைவாரி சீவி விடுவார்கள்.
தன் கரங்களால் உணவு ஊட்டுவார்கள். அவரது தாயார் பேசுவது அவருக்கு புரியாத போதும்
புரிந்தது போன்று காட்டிக் கொண்டு தாயாரின் அறையை விட்டு வெளியே வந்த பிறகு
"என் தாயார் என்ன சொன்னார்கள்?" என்று
கேட்பார்கள்.
وعن أبي
غسان الضبي أنه خرج يمشي بظهر الحرة وأبوه يمشي خلفه، فلحقه أبو هريرة، فقال: من
هذا الذي يمشي خلفك؟ قلت: أبي قال:
(أخطأت الحق ولم توافق السنة، لا تمش بين يدي أبيك، ولكن
أمشي خلفه أو عن يمينه، ولا تدع أحداً يقطع بينك وبينه، ولا تأخذ عرقاً (أي: لحماً
مختلطاً بعظم) نظر إليه أبوك، فلعله قد اشتهاه، ولا تحد النظر إلى أبيك، ولا تقعد
حتى يقعد، ولا تنم حتى ينام).
அபூ கஸ்ஸான் என்பவர்
கூறுகிறார்கள்: நானும் என் தந்தையும் ஒரு வெயில் காலத்தில் நான்
முன்னாலும், என் தந்தை எனக்கு பின்னாலுமாக நடந்து வந்து
கொண்டிருந்தோம். அப்போது அந்த வழியாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களோடு
இணைந்து கொண்டார்கள். பின்னர் எங்கள் இருவரையும் பார்த்து விட்டு என்னிடம் ,இவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது,
நான்
இவர் என்னுடைய தந்தை என்று சொன்னேன்.
உன் தந்தையா! என்று
கேட்டு விட்டு,
நீ குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் மாறு செய்து தவறிழைத்து
விட்டாய்! உம் தந்தைக்கு முன்பாக நடந்து வராதே! அவருக்குப் பின்னாலோ அல்லது வலது
புறமாகவோ நடந்து வா! அவரை பெயர் கூறி நீ அழைக்காதே! உமக்கும் அவருக்கும் இடையே எவரையும்
சேர்த்துக் கொள்ளாதே!
உன் தந்தை பார்த்துக் கொண்டிருக்க இறைச்சி துண்டு எதையும் நீ
முன்னதாக எடுக்காதே! ஏனெனில், அந்த இறைச்சி துண்டை அவர்
மனம் விரும்பக்கூடும்! ஓர் இடத்திற்கு நீங்கள் சென்றால் அவர் உட்கார்வதற்க்கு
முன்னால் நீ உட்காராதே! அவர் தூங்கும் முன் நீ தூங்காதே! ( நூல்:
அத்துர்ருல் மன்சூர் 6/253, அல்குர்ஆன்: 17:23, 34
)
وعن ابن
عباس أن النبي صلى الله عليه وسلم قال: (ما من رجل ينظر إلى أمه نظر رحمة لها إلا
كانت له حجة مقبولة مبرورة، قيل: يا رسول الله وإن نظر إليها في اليوم مائة مرة؟
قال: وإن نظر إليها في اليوم مائة ألف مرة، فإن الله عز وجل أكثر وأطيب).
இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எந்த மனிதர் தன்னுடைய தாயை அருள் கூர்ந்து
பார்க்கின்றாரோ அவருக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும்"
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே!
ஒருவர் ஒரு நாளைக்கு நூறு முறை பார்த்தால்? நூறு ஹஜ்ஜின் நன்மை
கிடைக்குமா? எனக் கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள்
"ஆம்! நூறு முறை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும் என்று கூறி
விட்டு, திண்ணமாக அல்லாஹ் இதை விட அதிகமாக தருபவன் அவன்
மிகவும் தூய்மையானவன்" என்று கூறினார்கள். ( நூல்: பிர்ருல் வாலிதைன் லி இமாமி இப்னுல் ஜவ்ஸீ)
وعنه أنه أتاه رجل، فقال: أني خطبت امرأة فأبت أن تنكحني، وخطبها غيري
فأحبت أن تنكحه، فغرت عليها فقتلتها، فهل لي من توبة؟ قال: (أمك حية؟ قال: لا.
قال: تب إلى الله وتقرب إليه ما استطعت.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் "நான் திருமணம் செய்ய ஒரு பெண்ணை பெண் பேசினேன். அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இன்னொருவர் பெண் கேட்டார். அவருக்கு சம்மதம் தெரிவித்தார். எனக்கு ரோஷம் வந்து அவளை நான் கொன்று விட்டேன் ". எனக்கு தவ்பா - பாவமன்னிப்பு உண்டா?
என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "உம் தாயார் உயிருடன் இருக்கின்றாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று சொன்னார். அப்படி என்றால் அல்லாஹ்விடம் நீ தவ்பா செய்! அவனின் பக்கம் எவ்வளவு நெருங்க முடியுமோ அமல்களால் அவ்வளவு நெருங்கிச் செல் " என்று கூறினார்கள். ( நூல்: பிர்ருல் வாலிதைன் லி இமாமி இப்னுல் ஜவ்ஸீ)
No comments:
Post a Comment