Tuesday, 4 April 2023

குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம்!!!

 

குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம்!!!

ரமழான் – (1444 – 2023) தராவீஹ் சிந்தனை:- 14.


முஸ்லிம்களை ஒரு வித பதற்றட்டத்துடனே வைத்திருக்க வேண்டும், எப்போதும் கொதி நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது தான் சர்வதேச அளவிலான வலதுசாரி சிந்தனை கொண்ட தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் சிந்தனையும், இந்திய தேச அளவிலான ஃபாசிஸ்டுகளின் சிந்தனையும், மேற்கத்தைய, ஐரோப்பிய சிந்தனையும் ஆகும்.

ஆகவே தான் சமீப காலமாகவே ஒவ்வொரு ரமழானிலும் இஸ்லாத்திற்கெதிரான ஏதாவதொரு செயலை சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் தொடர்ந்து இவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒரு ரமழானில் ஃபலஸ்தீன் மீது குண்டு வீசி ஈவிரக்கமில்லாமல் பெருவாரியான குழந்தைகளை கொன்று குவித்தனர். ஒரு ரமழானில் சிரியா மீது குண்டு வீச்சு, இன்னொரு ரமழானில் மியான்மர் முஸ்லிம்கள் பிரச்சினை, அடுத்த ரமழானில் கொரோனாவை பரப்பியவர்கள் முஸ்லிம்கள் என்ற பிரச்சினை அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் தற்போது சுவீடனில் “குர்ஆனை எரித்தும், இந்தியாவில் வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலங்களின் பெயரால் பள்ளிவாசல்களை சேதப்படுத்தியும், கல்வீசி உடைத்தும், பள்ளிவாசல் மினாராக்களில் காவிக் கொடியேற்றியும், வீடுகளில் தராவீஹ் தொழுகை நடத்தியவர்கள் மீது வழக்கு போட்டு, அபராதம் விதித்தும், இஃப்தார் நேரங்களில் அத்துமீறி முஸ்லிம் வீடுகளில் நுழைந்து பொருட்களை சூரையாடியதாய் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலைதள & ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.

குர்ஆன் எரிப்பு சம்பவமும், இஸ்லாமிய நாடுகளின் கண்டனமும்..

ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ உறுப்பினர் ஆவதற்கு விண்ணப்பித்தன.

நேட்டோ ராணுவ கூட்டணியில் சேர்வதற்கு ஸ்வீடன் விரும்புகிறது. ஆனால், நேட்டோ உறுப்பினரான துருக்கி அதற்கு எதிராக உள்ளது.

நேட்டோவில் உறுப்பினராக இருப்பதால், வேறு நாடுகள் அந்தக் கூட்டணியில் இணைவதை துருக்கியால் எதிர்க்கவும் நிறுத்தவும் முடியும்.

அதற்கு துருக்கியின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து, ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் துருக்கிக்கு எதிராக வலதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களின்போது, தீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவரான ராஸ்மஸ் பலுதன், ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே சனிக்கிழமையன்று குர்ஆன் பிரதியை எரித்தார்.

கடந்த ஆண்டும் நேட்டோவில் இணைவதற்கு ஸ்வீடனும் ஃபின்லாந்தும் முன்வைத்த கோரிக்கையை துருக்கி எதிர்த்தது.

 

அப்போதும் ராஸ்மஸ் பலுதன் குர்ஆனை எரிக்கப் போவதாக மிரட்டி பல பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தார். இம்முறை ஸ்வீடன் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் குர்ஆனை எரித்துள்ளார்.

ராஸ்மஸ் பலுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே, ஜனவரி 21, சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு குர்ஆனை எரிக்க ஸ்வீடிஷ் காவல்துறையிடம் அனுமதி பெற்றதாகக் கூறினார். குரான் எரிப்பு என்பது "இஸ்லாமிய எர்துகானுக்கு  (துருக்கிய ஜனாதிபதி) எதிரான பேச்சு சுதந்திரம் மற்றும் விமர்சனத்தின் சிறந்த வெளிப்பாடாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து துருக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் "கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் முஸ்லிம்களை குறி வைத்து முஸ்லிம்களின் புனிதமான விஷயங்களை அவமதிக்கும் இந்த முஸ்லிம் விரோத செயலை அனுமதிக்கும் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமோஃபோபியா, இனவெறி, பாகுபாடு ஆகியவை ஐரோப்பாவில் எச்சரிக்கை மணியை அடிக்கும் நிலையை எட்டியுள்ளன என்பதற்கு குர்ஆன் எரிப்பு சம்பவம் மற்றொரு சான்று என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க ஸ்வீடன் அரசாங்கம், “தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஓ.ஐ.சி.யும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஓஐசியின்  பொதுச் செயலாளர் ஹிசின் பிரஹிம் தாஹாவும், ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகம் முன்பாக குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ளார். இவையனைத்தும் ஸ்வீடன் அதிகாரிகளின் அனுமதியுடன் நடந்ததாகவும் ஓஐசி அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலையில், ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் தனது துருக்கி பயணத்தையும் ரத்து செய்துள்ளார். மேலும் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் டொபையாஸ் பில்ஸ்ட்ரோம், “இந்தச் சம்பவம் அதிர்ச்சியூட்டக் கூடியதுஎனக் கூறியுள்ளார்.

டொபையாஸ் பில்ஸ்ட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்வீடனில் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால், அதற்காக, இங்குள்ள அரசோ அல்லது நானோ ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளை ஆதரிப்பவர்கள் கிடையாதுஎன்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இப்படி பல தனிப்பட்ட நபர்கள், வலது சாரி அமைப்புக்கள் பகிரங்கமாக அறிவித்து குர்ஆன் பிரதிகளை எரித்தும் உள்ளது. அந்த அறிவிப்பிலிருந்து பின் வாங்கியும் உள்ளது.

Terry Jones had announced the stunt in response to plans to build an Islamic centre near to the site of the 9/11 terrorist atrocities in New York.

 

But, as the world marked the ninth anniversary of the attacks, Mr Jones said his church would not burn the Islamic holy book - "not today, not ever". "We feel that God is telling us to stop," he told NBC.

Pressed on whether his church would ever burn the Islamic holy book, he said: "Not today, not ever. We're not going to go back and do it. It is totally cancelled."

The leader of the 50-member Dove World Outreach Centre in Gainesville, Florida, said his church's intention was "to expose that there is an element of Islam that is very dangerous and very radical". "We have definitely accomplished that mission," he said.

US president Barack Obama said the anniversary should be a day not only to mourn the 9/11 victims but to show that Americans "are not at war against Islam".

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த (2010) காலகட்டத்தில் இரட்டை கோபுர தாக்குதல் (9/11 - செப்டம்பர் 11) நினைவு தினத்தன்று  பயங்கரவாத நிகழ்வுக்கு எதிராக, முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் இறைவேதம் அல்குர்ஆன் பிரதிகளை தாம் எரிக்கப் போவதாக அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியார் அறிவித்திருந்தார். இதற்கு அமெரிக்கா வெள்ளை மாளிகையிலிருந்து, வாடிகன் என சர்வதேச அளவில் கண்டனங்கள் பதிவுசெய்யப்பட்டு, நெருக்கடி ஏற்பட்டன. தற்போது டெர்ரி ஜோன்ஸ் பாதிரியார் குர்ஆன் பிரதிகளை எரிப்பதைக் கைவிட்டார் என்பது செய்தி!

வாஷிங்டன் - செப்டம்பர் 11 அன்று நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு இஸ்லாமே காரணம் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வெள்ளை மாளிகை முன்பு கூடி குரானிலிருந்து சில பக்கங்களை கிழித்தெறிந்த ஆறு கிறிஸ்துவர்களை காவல்துறை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட ஆறு நபர்களில் ஒருவரான அபார்ஷன் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரான ரண்டால் டாரி இஸ்லாம் அமைதி மார்க்கம் எனும் பிரசாரத்தை நிறுத்துவதற்காகவே தாம் இம்முயற்சியை மேற்கொண்டதாக கூறினார். ஆன்ட்ரு பெக்கம் எனும் இன்னொரு நபர் குரானில் கிறித்துவர்கள் மற்றும் யூதர்கள் குறித்து கூறப்படும் குரான் வசனங்களை படித்து காட்டி அப்பக்கங்களை கிழித்தார்.

மேலும் இரட்டை கோபுர தாக்குதலுக்கு குரானின் போதனைகளே காரணம் என்றும் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர்களை குறித்து கொண்ட காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்த எம்முயற்சியும் எடுக்கவில்லை. செப்டம்பர் 11 நினைவு தினத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்கா மேல் இஸ்லாம் போர் தொடுக்கவில்லை, மாறாக அல் காயிதாவே என்று கூறி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

 

இதே போன்று கடந்த மார்ச் 20/03/2011 ஆம் தேதி புளோரிடாவைச் சேர்ந்த வெயின் சாப் என்ற கிறிஸ்தவ பாதிரியார் "மனிதத்துக்கு எதிரான குற்றம்" எனக்கூறி புனித நூலான குர்ஆனை எரித்திருந்தார்.

அப்போது ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு குர்ஆனை எரித்த புளோரிடாவின்  கிறித்தவ மதகுருவே பொறுப்பெடுக்க வேண்டும் என ஐநா உயரதிகாரி ஸ்டப்பான் டி மிஸ்தூரா தெரிவித்திருந்தார். ( தகவல்:  http://edition.cnn.com/2011/WORLD/asiapcf/04/02/afghanistan.pastor.protest/?hpt=T2 )

அதே போன்று இந்த ஆண்டு டென்மார்க்கில் கடந்த மார்ச் 24, 31/2023 ஆகிய தேதிகளில் அல்-குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.  டென்மார்க்கில் அல்-குர்ஆன் எரிப்பு சம்பவங்கள் & இஸ்லாத்திற்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ( தகவல்: நம்பிக்கை செய்திகள் மலேசியா ஏப்ரல் 3/2023 )

இந்தியாவிலும், அசாம் மாநிலத்தின் பக்சா மாவட்டத்திலுள்ள போடோ பகுதியில் காலாபானி பள்ளிவாசலில் இருந்த 11 குர்ஆன் பிரதிகள், 3 ஹதீஸ் பிரதிகள் (நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளின் தொகுப்பு) மற்றும் வேறு சில முஸ்லிம் மத புத்தகங்களையும் சில பாசிஸ பாசிஸ்டுகள் எரித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

இந்த சம்பவம் மார்ச் 1/2020 ம் தேதி இரவு நடைபெற்றது. எரிக்கப்பட்ட குர் ஆன் பிரதிகளை பள்ளிவாசல் இமாம் அடுத்த நாள் காலையில் தொழுகைக்கு சென்ற போது கண்டெடுத்துள்ளார். பின்னர் அங்குள்ள மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விரைவில் கைது செய்வதாக அறிவித்த காவல் துறை இறுதி வரை அந்த வழக்கை கிடப்பில் போட்டது தான் மிச்சம். ( தகவல்: newscap.in march 4/2020 )

உலக அளவில் பிரபல்யமாகவேண்டும் என்று ஒருவர் விரும்பினாால் அதற்கென கல்வி, அறிவியல், தொழில் துறைகளில் சிந்தித்துத் திறனாய்வு செய்து, உழைத்து சாதனை ஏற்படுத்திட வேண்டுமென்பதில்லை. இஸ்லாமிய எதிர்ப்பைத் தெரிவித்தாலே போதும் சிந்திக்காமலும், உழைக்காமலும் ஓர் அறிவிப்பின் மூலம் பிரபல்யமாகி விடலாம். அப்படி பிரபல்யமான ஏராளமான வர்களை சர்வதேச அளவில்  அடையாளம் காட்ட முடியும்.

ஆனால், இஸ்லாம் எத்தகைய எதிர் மறையான தாக்குதல்களையும் எதிர் கொள்ளும் அபாரமான வலிமை கொண்டதை எதிரிகள் உணர வேண்டும்.

ஏனெனில், இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ் இப்புவியில் அங்கீகரிக்கும் ஒரே மார்க்கம். இப்புவியில் வாழும் ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கும் பின்பற்றத்தகுந்த வாழ்க்கை நெறியாக, தன் புறத்தில் இருந்து வழங்கப்பட்ட அருட்கொடையான ஒரே மார்க்கம்.

குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் இருந்தே குர்ஆனுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களை, குர்ஆனை அவமதிப்பவர்களை, குர்ஆனின் வசனங்களை மாற்றத்துடித்தவர்களை இந்த உம்மத் சந்தித்தே வந்துள்ளது.

 

குர்ஆனுக்கு எதிரானவர்கள், அவமதித்தவர்கள் என்று ஒரு பெரும் கூட்டத்தை இஸ்லாம் ஒரு காலத்தில் தன் வயப்படுத்தியதே அதன் வரலாறு.

ஒரு சிலர் அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி அழிந்து போனார்கள் என்பதும் வரலாறு.

ஆரம்பமாக, உலகெங்கிலும் வாழும் இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் புண்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றே நாமும் பதிவு செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

திருக்குர்ஆன் என்பது…

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مَا مِثْلهُ آمَنَ عَلَيْهِ البَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ، فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ القِيَامَةِ»

‘‘ஒவ்வொரு இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய (திருக்குர்ஆன் எனும்) வேத அறிவிப்பு தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-4981 

திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்றும், திருக்குர்ஆனால் அதிக மக்கள் இந்த ஏகத்துவத்தின் பக்கம் வந்த வண்ணம் இருப்பார்கள் என்றும் இந்தச் செய்தி நமக்கு எடுத்துரைக்கின்றது. 

இந்த அற்புதத்தை நாம் கண்கூடாக இன்று கண்டு கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் உலகின் நாலா பாகங்களில் இருந்தும் இஸ்லாத்தை நோக்கி வரும் மக்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

உலக அரங்கில் ஒவ்வொரு சாராரும் தங்கள் கொள்கையைச் சார்ந்த புனித நூல் என்று சில நூற்களைச் சமர்ப்பிக்கின்ற பொழுது, அவற்றில் உள்ள முரண்பாடான விஷயங்களையும், ஒழுக்கமற்ற பல செய்திகளையும், உலக இயற்கைக்கு ஒவ்வாத பல கருத்துக்களையும் சிந்திக்கின்ற மக்கள் கண்டுகொள்கின்றனர்.

இந்த உலகில் படித்தவர், பாமரர் என்று யார் குர்ஆனை எடுத்து வாசித்தாலும் அதில் அடங்கியுள்ள உண்மைகளையும், ஒழுக்கத்தைப் போதிக்கும் பல செய்திகளையும், உலக பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கண்டு இதுவே உண்மையான இறைவேதம்என விளங்கி இஸ்லாத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் ஓதப்படுவதைச் செவிமடுத்து, அதை உண்மையென விளங்கிப் பலர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

இஸ்லாத்திற்கு மக்களின் வருகை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஏக இறைவனை மறுப்போரின் கூடாரம் காலியாகத் துவங்கின. அதனால், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில், “இந்தக் குர்ஆனை யாரும் செவிமடுக்காதீர்கள்என்று மக்காவின் குறைஷிகள் பிரச்சாரமும் செய்ததாக குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுவான்.

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ‏

இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப் பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!’’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். ( அல்குர்ஆன்: 41: 26 )

ஆனால், இவர்களின் இந்தப் பிரச்சாரத்தினால் துளியளவும் இஸ்லாத்திற்குப் பங்கம் ஏற்படவில்லை. மாறாக, இஸ்லாம் ஆல விருட்சத்தைப் போல் மக்காவைத் தாண்டி பரந்து விரிந்தது.

திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றத்தைப் பற்றி திருக்குர்ஆன்..

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّ‌ۚ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!’’ என அவர்கள் கூறுகின்றனர். ( அல்குர்ஆன்: 5: 83 )

திருக்குர்ஆனைப் பற்றி திருக்குர்ஆன்…

اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِيْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِىَ ‌ۖ  تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ‌ۚ ثُمَّ تَلِيْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللّٰهِ‌ ؕ ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ‏

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை. ( அல்குர்ஆன்: 39: 23 )

لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏

 

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம். ( அல்குர்ஆன்: 59: 21 )

சிந்தனையற்ற, உயிரற்ற ஜடமான மலையின் மீது இந்த குர்ஆன் அருளப்பட்டிருந்தால் அது கூட அல்லாஹ்வுக்குப் பணிந்திருக்கும் என்றால் சிந்திக்கும் திறனோடு படைக்கப்பட்டிருக்கும் மனிதனை கண நேரத்தில் அது மாற்றி விடாதா?!

மேற்கண்ட வசனங்கள் யாவும் குர்ஆன் மனித சமூகத்தின் வாழ்வில் நிச்சயம் மாற்றங்களைத் தரும் என்பது பற்றி எடுத்துரைக்கின்றது.

திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்...

ஜகரிய்யா (அலை) அல்லாஹ்விடம் தமது வயது முதிர்ந்த காலத்தில் தமக்கு வாரிசு வேண்டி பிரார்த்தனை செய்ததை ஆலு இம்ரான், மர்யம், அல் அன்பியா போன்ற அத்தியாயங்களில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வாரிசைத் தருவதாக, அதுவும் ஆண் வாரிசைத் தருவதாக பஷாரத் சோபனம் சொல்லும் போது...

يَازَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَى لَمْ نَجْعَلْ لَهُ مِنْ قَبْلُ سَمِيًّا

”ஜகரிய்யாவே! உமக்கு ஒரு வாரிசைக் கொண்டு சோபனம் தருகிறோம். அந்த வாரிசின் பெயர் யஹ்யா வாகும்.யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன்னர் யாரும் (இந்த உலகில்) இருந்ததில்லை ( அல்குர்ஆன்: 19: 7 )

இவ்வசனத்தில்  அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜகரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண்குழந்தையை  கொடுத்த செய்தியைச் சொல்கிறான்.

ஜகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான்.

இந்தப் பெயரை இதற்கு முன் சூட்டியதில்லை என்று அன்றைக்கு எந்த மனிதனாலும் பேச முடியாது. ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இருந்தால் அவனுக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும்.

அன்று வரை உலகில் பிறந்த, பிறந்து மரணித்த ஒவ்வொரு நபரின் பெயரும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி மக்களின் பெயர்களுக்குள் யஹ்யா என்ற பெயரில் ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் தான் இப்படிக் கூற முடியும்.

இன்றைய நவீன கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இப்படி ஒரு விஷயத்தை யாராலும் சொல்ல முடியாது. இந்த விஷயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஜகரியா நபியிடம் இறைவன் சொன்னதாகக் கூறப்படுகிறது.

யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இல்லை என்று சொன்ன பிறகு உலகில் ஏதாவது ஒரு காலத்தில் பழங்கால ஏடுகளில் யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் இறைவசனம் பொய்யாகி விடும்.

ஜகரிய்யா நபியிடம் அல்லாஹ் இப்படிச் சொன்னதாக முஹம்மது நபி {ஸல்} அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து சொல்லியிருக்கவும் முடியாது. அப்படிச் சுயமாகச் சொல்ல நினைத்தால் எங்காவது யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் என்னாவது என்ற தயக்கமே இது போல் பேசுவதை விட்டும் நபி (ஸல்) அவர்களைத் தடுத்து இருக்கும்.

இப்படி ஒரு பெயரில் இதற்கு முன் ஒருவர் கூட இல்லை என்று இறைவனால் தான் சொல்லி இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் ஸகரிய்யா நபியிடம் இறைவன் இப்படிச் சொன்னதாக யூத கிறித்தவ வேதங்களில் சொல்லப்படாமல் இருந்தும் திருக்குர்ஆன் இப்படிச் சொல்கிறது என்றால் இது இறைவனின் வார்த்தை என்பதில் சந்தேகம் இல்லை.

திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒருவசனமே போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது.

أن أهل تلك القرية لما سمعوا نزول هذه الآية استحيوا وجاءوا إلى رسول اللّه صلّى اللّه عليه وسلم بحمل من الذهب وقالوا : يا رسول اللّه نشتري بهذا الذهب أن تجعل الباء تاءا حتى تصير القراءة هكذا : فأتوا أن يضيفوهما.

أي أتوا لأن يضيفوهما ، أي كان إتيان أهل تلك القرية إليهما لأجل الضيافة ،

وقالوا : غرضنا منه أن يندفع عنا هذا اللؤم فامتنع رسول اللّه صلّى اللّه عليه وسلم وقال : إن تغيير هذه النقطة يوجب دخول الكذب في كلام اللّه ،

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பயணித்து  உறவாடிய சம்பவம் குறித்து அல்குர்ஆனில்  அல்லாஹ் இறைவசனங்களை  இறக்கியருளிக் கொண்டிருந்த தருணம் அது

حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا

பிறகு, இருவரும் ஓர் ஊர்வாசிகளிடம்  வந்திறங்கினார்கள். அவ்வூரார்களிடம்  இருவரும் தங்களுக்கு உணவளிக்குமாறு  வேண்டினார்கள்; ஆனால், அவ்வூரார்கள்  அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து  விட்டனர்”. என்கிற 18 – ஆம்  அத்தியாயத்தின்  77 – ஆவது  இறைவசனம் இறக்கியருளப்பட்ட  சில நாட்கள்  கழித்து ஒரு  கிராமத்தார்கள் மாநபி {ஸல்} அவர்களை  சந்திக்க அனுமதி வேண்டி மஸ்ஜிதுன்  நபவீயின் முன்பாக காத்திருந்தார்கள்.

அண்ணலாரும், அனுமதி கொடுத்து உள்ளே வரச் சொன்னார்கள். உள்ளே வந்த  அந்த  கிராம மக்கள் முஹம்மது அவர்களே! “பிறகு, இருவரும் ஓர்  ஊர்வாசிகளிடம் வந்திறங்கினார்கள். அவ்வூரார்களிடம் இருவரும் தங்களுக்கு  உணவளிக்குமாறு வேண்டினார்கள்; ஆனால், அவ்வூரார்கள் அவ்விருவருக்கும்  விருந்தளிக்க மறுத்து விட்டனர்”. என்கிற  செய்தி தங்களுக்கு அல்லாஹ்வின்  புறத்திலிருந்து இறக்கியருளப்பட்டதாக  கேள்விப்பட்டு வந்தோம்.

நாங்களும் அந்த கிராமத்தைச் சார்ந்த  மக்கள் தாம். எங்களின் முன்னோர்கள்  விபரமில்லாமல், அறிவில்லாமல் நடந்து  கொண்டமைக்காக நாங்கள் மிகவும்  வருந்துகின்றோம். இனிமேல், ஒட்டு மொத்த  மனித சமூகமும் எங்களை இனி எப்படிப்  பார்க்கும் என்பதை நினைத்து நாங்கள்  வெட்கப்படுகின்றோம். இதோ, நாங்கள்  பொன்னை அள்ளிக் கொண்டு  வந்திருக்கின்றோம். இதை வைத்துக்  கொள்ளுங்கள்! 

எங்கள் மூதாதையர்கள் அளிக்காத விருந்துக்குப் பகரமாக  இதை ஏற்றுக்கொள்ளுங்கள்! அதற்கு,  பிரதி உபகாரமாக நீங்கள் ஒன்றே ஒன்றை  மட்டும் செய்தால் போதும் فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا என்பதில் உள்ள பாவில் கீழே  இருக்கிற ஒரு புள்ளியை எடுத்து விட்டு, 

மேலாக இரண்டு புள்ளியை வைத்து فأتوا أن يضيفوهما என்பதாக மாற்றி விடுங்கள்!  விருந்தளிக்க மறுத்தார்கள் என்ற பொருள்  மாறி விருந்து கொடுத்தார்கள் என்கிற  பொருள் வந்து விடும்! என்று கூறினார்கள்.

இது கேட்ட பெருமானார் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில், அவன்  இறக்கியருளிய வசனத்தில் இப்படி ஒரு  புள்ளியை மாற்றம் செய்வதென்பது  அல்லாஹ்வின் விஷயத்தில் பொய்யை  ஏற்படுத்திய பெரும் பாவத்திற்கு என்னை  அழைத்துச் சென்று விடும்! ஒரு போதும் நான் அவ்வாறு செய்யமாட்டேன் என்று  மறுமொழி பகர்ந்தார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல்  மஃபாதீஹுல் ஃகைப் )

விரண்டோடியவரை கவர்ந்திழுத்து ஆரத்தழுவிய குர்ஆன்..

وذات مرة كان يزورها، وقد شرع الرسول يجهر بدعوته..
وخشيت قريش أن يلقاه الطفيل ويسلم، ثم يضع موهبته الشعرية في خدمة الاسلام، فتكون الطامة على قريش وأصنامها..
من أجل ذلك أحاطوا به.. وهيئوا له من الضيافة كل أسباب الترف والبهجة والنعيم، ثم راحوا يحذرونه لقاء رسول الله صلى الله عليه وسلم، ويقولون له:

" ان له قولا كالسحر، يفرّق بين الرجل وابيه.. والرجل وأخيه.. والرجل وزوجته.. ونا نخشى عليك وعلى قومك منه، فلا تكلمه ولا تسمع منه حديثا"..!!

துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ ஏமனைச் சேர்ந்த தவ்ஸ் கோத்திரத்தின் மதிப்பு மிக்க தலைவர். அறியப்பட்ட அன்றைய அரேபிய தீபகற்பத்தின் கொடையாளர்களில்  மிகவும் பிரசித்தி பெற்றவர். கஅபாவை தரிசிக்க அடிக்கடி மக்காவிற்கு வந்து செல்பவர்.

அப்படித்தான் அன்றும் கஅபாவை தரிசிக்க மக்காவிற்குள் அடியெடுத்து வைத்திருந்தார். ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவருக்கு குறைஷி தலைவர்கள்  உபசரிப்பு வழங்கினர்.

ولنصغ للطفيل ذاته يروي لنا بقية النبأ فيقول:
" فوالله ما زالوا بي حتى عزمت ألا أسمع منه شيئا ولا ألقاه..
وحين غدوت الى الكعبة حشوت أذنيّ كرسفا كي لا أسمع شيئا من قوله اذا هو تحدث..
وهناك وجدته قائما يصلي عند الكعبة، فقمت قريبا منه، فأبي الله الا أن يسمعني بعض ما يقرأ، فسمعت كلاما حسنا..
وقلت لنفسي: واثكل أمي.. والله اني لرجل لبيب شاعر، لا يخفى عليّ الحسن من القبيح، فما يمنعني أن أسمع من الرجل ما يقول، فان كان الذي يأتي به حسن قبلته، وان كان قبيحارفضته.
ومكثت حتى انصرف الى بيته، فاتبعته حتى دخل بيته، فدخلت وراءه، وقلت له: يا محمد، ان قومك قد حدثوني عنك كذا وكذا.. فوالله ما برحوا يخوّفوني أمرك حتى سددت أذنيّ بكرسف لئلا أسمع قولك..
ولكن الله شاء أن أسمع، فسمعت قولا حسنا، فاعرض عليّ أمرك..
فعرض الرسول عليّ الاسلام، وتلا عليّ من القرآن..
فأسلمت، وشهدت شهادة الحق،

துஃபைல் அவர்கள் கூறுகின்றார்கள்: “உபசரிப்பின் ஊடாக  அபூஜஹ்லும்  இன்ன பிற  தலைவர்களும்  ஒன்று சேர்ந்து என்னிடம்   துஃபைல் அவர்களே!  நீங்கள் எங்கள் ஊருக்கு வந்துள்ளீர்கள். தன்னை நபியெனக் கூறிக்கொண்டு முஹம்மத்  எனும் மனிதர் எங்களைத் துண்டாடி விட்டார். நீங்கள் அவரிடம்  சென்று பேசவோ,  அவரிடம் இருந்து எதையும் கேட்கவோ வேண்டாம். அவரின் பேச்சு பெற்றோரிடம்  இருந்து பிள்ளைகளையும், கணவனிடமிருந்து மனைவியையும் பிரித்து விடும் அளவுக்கு அமைந்திருக்கிறது என்று கூறினர்.

நானும் அப்போதிலிருந்து இனி முஹம்மத்  {ஸல்} அவர்களின் பேச்சைக்  கேட்கவோ, பேசவோ கூடாது எனும் முடிவோடு மக்காவின் வீதிகளில் காதில் பஞ்சை வைத்துக் கொண்டு அலைந்து திரிந்தேன்.

இந்நிலையில் ஒரு நாள் நான் கஅபாவிற்குள் நுழைந்த போது, தூரத்தில் ஒருவர்  என்னுடைய வணக்க முறைக்கு மாற்றமான முறையில் நின்று வணங்குவதைக்  கண்டேன். அந்த வணக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. என்னையும் அறியாமல் நான் அவரின் பக்கம் ஈர்க்கப்பட்டதை உணர்ந்தேன்.

மெதுவாக அவரின் அருகில் சென்றேன். அவர் ஏதோ முணு முணுப்பதாக நான்  உணர்ந்தேன். என் காதில் ஏதோ கேட்டது. அது அழகானதாகவும் இருந்தது. அப்போது நான் எனக்குள் துஃபைலே! உமக்கென்ன கேடு! நீ ஒன்றும் முட்டாள் அல்ல, நீ ஒரு கவிஞன்  தானே, ஏன் காதில் பஞ்சை வைத்துக் கொண்டு அலைகிறாய்? தூக்கி எறிந்து விட்டு அவர் சொல்வதைக் கேள்! நல்லதாயின் ஏற்றுக் கொள்! கெட்டதாக இருப்பின் தூக்கி எறிந்து விடு! என்று பேசிக்கொண்டேன்.

இதன் பின்னர் காதில் இருந்த பஞ்சை தூக்கி எறிந்து விட்டு முஹம்மத் {ஸல்} அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்தேன். அவர்கள் சென்ற பின் நானும்  பின்னாலேயே சென்று அவர்கள் இல்லத்தில் நுழைந்தேன்.

பின்னர் மக்காவில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்து விட்டு, ”நீங்கள்  என்ன கூறுகின்றீர்கள்! எனக்கும் கொஞ்சம் கூறுங்கள்! என்றேன்.

நபி {ஸல்} அவர்கள் ஏகத்துவ சுகந்தத்தை என் மீது பொழிந்தார்கள். நான் அதன்  வசந்தத்தில் திளைத்துப் போனேன். நபி {ஸல்} எனக்கு ஃபலக், இக்லாஸ்  அத்தியாயங்களை ஓதிக்காட்டினார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இவற்றை விட சிறந்த  வார்த்தைகளை நான் முன்னெப்போதும் கேட்டதில்லை. அப்போதே நான் நபிகளாரின்  கரம் பற்றி திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

பின்பு நான் சிறிது காலம் அண்ணலாரின் அருகாமையில் இருந்து சன்மார்க்கக்  கல்வியைக் கற்றுக் கொண்டேன். குர்ஆனின் சில பகுதிகளையும் மனனமிட்டேன்.

وقلت: يا رسول الله: اني امرؤ مطاع في قومي واني راجع اليهم، وداعيهم الى الاسلام، فادع الله أن يجعل لي آية تكون عونا لي فيما أدعهوهم اليه، فقال عليه السلام: اللهم اجعل له آية"..

மீண்டும் என் ஊருக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் தோன்றிய போது, அண்ணலாரின் முன் வந்து நின்று அல்லாஹ்வின் தூதரே! என் குடும்பத்தினருக்கும், என் கோத்திரத்தாருக்கும் நான் இந்த சத்திய தீனை எத்தி வைக்க விரும்புகின்றேன்.

நான் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். எனினும் ஏதேனும் ஓர் அத்தாட்சியோடு நான் அவர்களிடம் சென்றால் அது எனக்கு உறுதுணையாக இருக்கும், அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றேன்.

அப்போது நபிகளார் அல்லாஹ்வே! இவருக்கு உறுதுணையாக ஓர் அத்தாட்சியை இவரிடம் நீ ஏற்படுத்துவாயாக! என்று துஆ செய்தார்கள்.
(
 இதன் விளைவாக அவரின் தலைக்கு மேல் அல்லாஹ் ஒளிக்கற்றையை பிரகாசிக்கச்  செய்தான் என்று ஓர் அறிவிப்பிலும், இரண்டு கண்களுக்கிடையே ஒளியை பிரகாசிக்கச் செய்தான் என்று வேறொரு அறிவிப்பிலும் கூறப்படுகிறது. )


وأسلم أبوه في الحال..
ثم انتقل الى أمه، فأسلمت
ثم الى زوجه، فأسلمت..

ولما اطمأن الى أن الاسلام قد غمر بيته، انتقل الى عشيرته، والى أهل دوس جميعا.. فلم يسلم منهم أحد سوى أبي هريرة رضي الله عنه..

ஊருக்குச் சென்ற துஃபைல் (ரலி) அவர்கள் ஆரம்பமாக தம் தந்தை, பின்னர் தாய்,  பின்னர் மனைவி, பின்னர் குடும்பம் என இஸ்லாமிய வட்டத்தை விரிவு படுத்தினார்.

பின்னர் தம் கோத்திரமான தவ்ஸ் மக்களிடம் சத்திய தீனின் அழைப்பைக் கொண்டு சென்றார். அங்கே அபூஹுரைரா மாத்திரம் இவரின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தில்  இணைந்தார்கள்.


ولقد راحوا يخذلونه، وينأون عنه، حتى نفذ صبره معهم وعليهم. فركب راحلته، وقطع الفيافي عائدا الى رسول الله صلى الله عليه وسلم يشكو اليه ويتزوّد منه بتعاليمه..

وحين نزل مكة، سارع الى دار الرسول تحدوه أشواقه..
وقال للنبي: " يا رسول الله..انه ق غلبني على دوس الزنى، والربا، فادع الله أن يهلك دوسا"..!!
وكانت مفاجأة أذهلت الطفيل حين رأى الرسول يرفع كفيه الى السماء وهو يقول: " اللهم اهد دوسا وأت بهم مسلمين"..!!
ثم التفت الى الطفيل وقال له: " ارجع الى قومك فادعهم وارفق بهم".

பின்னர், மீண்டும் அண்ணலாரைச் சந்திக்க வந்த துஃபைல் (ரலி) அவர்கள்  அல்லாஹ்வின் தூதரே! என் கோத்திரத்தார் இஸ்லாத்தை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் வட்டியிலும், விபச்சாரத்திலும் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களை அல்லாஹ் அழித்திட துஆச் செய்யுங்கள்! என்றார்கள்.

ஆனால், அல்லாஹ்வின் தூதரோ அல்லாஹ்வே! தவ்ஸ் கோத்திரத்தாருக்கு  இஸ்லாத்தை நஸீபாக்குவாயாக! அவர்களை என் முன்னால் முஸ்லிம்களாக வரச்  செய்வாயாக! என்று துஆச் செய்தார்கள்.

பின்னர், துஃபைலை நோக்கி துஃபைல் அவர்களே! உம் மக்களிடம் திரும்பிச்  செல்லுங்கள்! மென்மையான முறையில் அவர்களை அணுகுங்கள்! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

ولقد هدى الله دوسا..
وجاء بهم مسلمين..
وها هم أولاء.. ثمانون بيتا، وعائلة منهم، يشكلون أكثرية أهلها، يأخذون مكانهم في الصفوف الطاهرة خلف رسول الله الأمين.

அகழ்ப்போர் நடந்து முடிந்திருந்த தருணத்தில் நான் என் குடும்பம் மற்றும்  கோத்திரம் சமூகமாக 80 குடும்பங்களை அழைத்துக் கொண்டு மதீனா வந்து  அண்ணலாரின் முன்னிலையில் இஸ்லாத்தில் இணைத்தேன். மக்கா வெற்றி வரை  அண்ணலாருடன் இருந்து விட்டு எஞ்சியிருந்த என் கோத்திரத்தார்களுக்கு தீனை  எத்தி வைக்கவும், அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் சிலைகளை தீயிட்டு எரிப்பதற்கும்அனுமதி கேட்டேன். அண்ணலார் அனுமதி வழங்கினார்கள். 

பின்னர், நான் என் கோத்திரத்தார்களிடம் சென்று தீனை எத்தி வைத்து சிலைகளை தீயிட்டு எரித்தேன். அந்த சாம்பலோடு என் கோத்திரத்தார்களின் மூடநம்பிக்கைகளும்,  இணைவைப்பும் எரிந்து சாம்பலாயின. என் ஒட்டு மொத்த தவ்ஸ் கோத்திரமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.  ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}….

அண்ணலார் நபியாக அனுப்பப்பட்ட காலத்திலிருந்து கிட்டத்தட்ட 93  அத்தியாயங்கள் நபிகளாருக்கு இறக்கியருளப்பட்டது. இதில் பெரும்பாலான  சூராக்களையும், குர்ஆன் வசனங்களையும் அண்ணலார் ஓத அபூஜஹ்ல் உட்பட குறைஷி குலத்தின் தலைவர்கள் கேட்டிருந்த போதிலும், குர்ஆன் வசனம் ஓதப்படுவதை கேட்கவே கூடாது எனும் நோக்கத்தோடு காதில் பஞ்சை வைத்துக் கொண்டு மக்காவின் வீதி எங்கும் அலைந்து திரிந்த துஃபைல் அவர்களின் காதில் அல்லாஹ் ஒரு சில வசனங்களை விழச் செய்தான்.

இப்படித்தான் குர்ஆன் பல இதயங்களை வென்றெடுத்து, மனிதப் புனிதர்களாக சமூகத்தின் கலங்கரை விளக்குகளாக மாற்றியுள்ளது.

நிறைவாக...

اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَۙ‏

 لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَؕ‏                                                                       

وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ

இந்த (குர்ஆன்) அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள். ( அல்குர்ஆன்: 81: 27 – 29 )

:29          

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். ( அல்குர்ஆன்: 15: 9 )

அல்லாஹ்வே! முஸ்லிம் சமூகத்தை நிம்மதியோடு, கண்ணியத்தோடு வாழச் செய்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்

No comments:

Post a Comment