நட்பின் அவசியமும்.. அதன் மகத்துவமும்..
ரமழான் – (1444 – 2023) தராவீஹ் சிந்தனை:-
15.
14 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
15 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின்
நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித
தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும்
நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின் தராவீஹ்
தொழுகையில் அந்நூர் அத்தியாயத்தின் சிறு பகுதியும் அல்ஃபுர்கான், அஷ்ஷுஅரா ஆகிய அத்தியாயங்கள் நிறைவு செய்யப்பட்டு, அந்நம்ல் அத்தியாயத்தின் 5 வசனங்கள் என 354 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
அல் ஃபுர்கான்
அத்தியாயத்தின் 27, மற்றும் 28
–ஆவது இறைவசனங்களிலும், அடுத்த அத்தியாயமான அஷ் ஷுஅரா
அத்தியாயத்தின் 100, 101 வசனங்களிலும் நல்ல நட்பை உலகில் எஉடுத்துக் கொள்ளாமல்
விட்டு விட்டோமே என்று நல்ல நட்பின் விளைவை உணர்கிற ஒரு தருணத்தை அல்லாஹ்
குறிப்பிடுகின்றான்.
وَيَوْمَ
يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَالَيْتَنِي اتَّخَذْتُ مَعَ
الرَّسُولِ سَبِيلًا (27) يَاوَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا
خَلِيلًا (28)
“அந்நாளில் கொடுமை புரிந்த
மனிதன் தன்னுடைய கைகளைக் கடித்தபடிக் கூறுவான்: “அந்தோ! நான் இறைத்தூதருக்குத் துணை புரிந்திருக்கூடாதா? ஐயகோ! எனது துர்பாக்கியமே! நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க
வேண்டுமே!”
என்று அலறுவான்”. ( அல்குர்ஆன்: 25:
27, 28 )
فَمَا لَـنَا مِنْ شٰفِعِيْنَۙ
وَلَا
صَدِيْقٍ حَمِيْمٍ
நாளை மறுமையில் எங்களுக்குப் பரிந்துரை செய்வோர் எவருமில்லை. உற்ற நண்பனும்
இல்லை" என்று சிலர் புலம்புவார்கள். ( அல்குர்ஆன்: 26: 100, 101 )
உலகில் வாழும் மனிதர்கள் அவரவர் தங்களது தகுதிகேற்ப நண்பர்களை அமைத்து
கொள்கின்றனர். ஏனெனில், மனித வாழ்வில் நட்பு என்பது அவசியமானது, அந்த உறவு
விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானது. ஆழமானது.
சமூகத்தில் பலரது
வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு
உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க
முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த
முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி
தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன
நிகழ்வுகளாகும்.
அந்த வகையில் நட்பினால் பல பயன்களை, நன்மைகளை மனிதன்
அடைவதால் நாம் எல்லோரும் நட்புகொள்கிறோம்.
ஒவ்வொரு நட்பிற்கும் ஒரு இலக்கும்,
நோக்கமும் இருக்க வேண்டும்..
ختلفوا
في سبب اتخاذ الله عز وجل سيدنا إبراهيم علية الصلاة والسلام خليلاً:
فأخبرنا أبو سعيد النَّضْرَوِيّ قال: أخبرنا أبو الحسن محمد بن الحسين السّرّاج،
قال: أخبرنا محمد بن عبد الله الحضْرَمِيّ، قال: حدَّثنا موسى بن إبراهيم
المَرْوَزِيّ، قال: حدَّثنا لَهيعَة عن أبي قَبِيل، عن عبد الله، عن عمر، قال:
قال رسول الله صل الله عليه وآله وسلم: يا جبريلُ لم اتخذ الله إبراهيم خليلاً؟
قال: لإطعامه الطعامَ، يا محمدُ.
وقال عبد الله بن عبد الرحمن بن أَبْزَى:
دخل سيدنا إبراهيم علية الصلاة والسلام منزله فجأة، فرأى ملك الموت في صورة شاب لا
يعرفه، قال له سيدنا إبراهيم علية الصلاة والسلام: بإذن من دخلت؟ فقال: بإذن رب
المنزل. فعرفه سيدنا إبراهيم علية الصلاة والسلام، فقال له ملك الموت: إن ربك اتخذ
من عباده خليلاً، قال سيدنا إبراهيم علية الصلاة والسلام: ومَن ذلك؟ قال: وما تصنع
به؟ قال: أكون خادماً له حتى أموت، قال: فإنه أنت.
ஒரு முறை இப்ராஹீம் (அலை) அவர்களிடம் ரூஹைக் கைப்பற்றும்
வானவர் வந்து "அல்லாஹ் தம் அடியார்களில் ஒருவரை தன் நண்பராக
எடுத்துக்கொண்டார் என்றுச் சொன்னார். உடனே இப்ராஹீம், அவர் யார் என்று கேட்க,
நீர் அல்லாஹ்வின் நண்பரானால் என்ன செய்வீர் என்று கேட்டார்.
அதற்கு 'என் உயிர் இருக்கும் வரை அல்லாஹ்வின் சேவகனாகவே நான் இருப்பேன்' என்று இப்ராஹீம் பதில் அளித்தார். உடனே அந்த தூதர், அல்லாஹ் எடுத்துக்கொண்ட அந்த நண்பர், வேறு யாருமில்லை அது நீர்
தான் என்றுச் சொன்னார்.
وقال الكلبي عن أبي صالح عن ابن عباس: أصاب الناس سنة
جهدوا فيها فحشروا إلى باب سيدنا إبراهيم علية الصلاة والسلام يطلبون الطعام،
وكانت الميرة لهم كل سنة من صديق له بمصر، فبعث غلمانه بالإبل إلى خليله بمصر
يسأله الميرة، فقال خليله: لو كان سيدنا إبراهيم علية الصلاة والسلام إنما يريده
لنفسه احتملنا ذلك له، وقد دخل علينا ما دَخَلَ على الناس من الشدة. فرجع رُسُلُ
سيدنا إبراهيم علية الصلاة والسلام فمروا ببطْحَاءَ فقالوا: لو احتملنا من هذه
البطحاء ليرى الناس أنّا قد جئنا بميرة، إنا لنستحيي أن نمر بهم وإبلنا فارغة.
فملأوا تلك الغَرائرَ رملاً. ثم إنهم أتوا إبراهيم عليه السلام وسَارَة نائمة،
فأعلموه ذلك، فاهتم إبراهيم عليه السلام مكان الناس، فغلبته عيناه فنام، واستيقظت
سارة فقامت إلى تلك الغَرائرَ ففتقتها فإذا هو [دقيق] أجود حُوَّارَى يكون، فأمرت
الخبازين فخبزوا وأطعموا الناس واستيقظ إبراهيم عليه السلام فوجد ريح الطعام،
فقال: يا سَارَةُ، من أين هذا الطعام؟ قالت: من عند خليلك المصري، فقال: بل من عند
الله خليلي، لا من عند خليلي المصري. فيومئذ اتخذ الله إبراهيم خليلاً.
ஒரு முறை பஞ்சம்
உண்டானது. மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் வீட்டுக்கு வந்து உணவுப்பொருட்கள்
கேட்டார்கள். இவரிடமும் உணவுப்பெருட்கள் இல்லாதபடியினால், எகிப்திலுள்ள தன் நண்பரிடம் சேவகர்களை அனுப்பினார் இப்ராஹீம் (அலை) அவர்கள்.
எகிப்திலுள்ள அவரது நண்பர்,
இப்ராஹீமுக்கு மட்டும் தேவையென்றால் ஏதாவது உதவி
செய்யமுடியும்,
ஆனால் ஊர் மக்களுக்கெல்லாம் தேவையென்றால், அது முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
சேவர்கள் வெறும்
கையொடு திரும்பி வரும்போது,
நாம் உணவு தாணியங்கள் இல்லாமல் போனால், இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அவமானமாக இருக்கும், எனவே,
தங்கள் பைகளில் மணலை மூட்டை கட்டிக்கொண்டு வந்தார்கள்.
எனினும்,
சேவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள், வருத்தத்தோடு அனைவரும் தூங்கிவிட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி
சாரா (அலை) நடந்த விஷயத்தை அறியாமல் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.
அதன் பிறகு கண்
விழித்த போது,
சேவர்கள் மணல் நிறப்பி கொண்டு வந்த பைகளை திறந்து
பார்த்தபோது,
முதல் தரமான கோதுமை இருப்பதைக் கண்டு, அதன் மூலம் உணவை தயார் படுத்தினார்கள். உணவின் (ரொட்டி) வாசனை மூக்கை துளைக்க
இப்ராஹீம் (அலை) எழுந்து என்ன இது? எங்கேயிருந்து கிடைத்தது
உணவு தாணியங்கள் என்று கேட்க? அந்த பைகளில் இருந்தது, உங்கள் எகிப்திய நண்பர் அனுப்பியுள்ளார் என்று சாரா (அலை) சொன்னார்கள்.
அதற்கு இப்ராஹீம்
"இல்லை,
என்னுடைய நண்பன் அல்லாஹ் தான் இதனை அனுப்பினான்' என்று பதில் அளித்தார்கள். அந்த நாள் தான், அல்லாஹ் இப்ராஹீம் (அலை)
அவர்களை தன் உற்ற நண்பனாக தேர்ந்தெடுத்துக்கொண்டான். ( நூல்: தப்ஸீர் இப்னு ஜரீர், தப்ஸீர் அல் பக்வீ
)
وَاتَّخَذَ
اللّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً
‘இன்னும் அல்லாஹ்
இப்ராஹீமை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்’. ( அல்குர்ஆன்: 4: 125 )
அரபியில்
நண்பனுக்கு பல வார்த்தைகள் இருக்கின்றது. ரஃபீக் என்று சொல்வார்கள், சதீக் என்று சொல்லுவார்கள், சாஹிப் என்று
சொல்லுவார்கள்,
கரீம் என்று சொல்லுவார்கள்.
இவற்றை விட ஆழமான
அர்த்தத்தை கொடுக்கக் கூடியது தான் 'கலீல்' என்ற வார்த்தை. அதாவது,
வேறு எந்த நோக்கமும் கலக்காமல், தன் நண்பனின் பொருத்தம் மட்டும் தான் நோக்கம். தன் நண்பனின் மகிழ்வு மட்டும்
தான் நோக்கம்.
அவன் கூறுவது
அனைத்தையும் செய்வதுதான் என் வாழ்க்கையின் நோக்கம். அவனுக்காக எதையும் இழக்க தயார்
என்ற தரத்தில் நட்பு வரும்போது, அந்த நட்பிற்கு “ஃகுல்லத்”
என்று சொல்லப்படும்.
ஆதலால் தான் அந்த தகுதியை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு
கொடுத்தான். அப்படித்தான் அவர்கள் நடந்து காட்டினார்கள். ஆகவே, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கலீல் – உற்ற நண்பன் என்று குறிப்பிடுகின்றான்.
عن أبي
سعيد الخدري، قال: خطب النبي صلى الله عليه وسلم فقال: «إن الله خير عبدا بين
الدنيا وبين ما عنده فاختار ما عند الله»، فبكى أبو بكر الصديق رضي الله عنه، فقلت
في نفسي ما يبكي هذا الشيخ؟ إن يكن الله خير عبدا بين الدنيا وبين ما عنده، فاختار
ما عند الله، فكان رسول الله صلى الله عليه وسلم هو العبد، وكان أبو بكر أعلمنا،
قال: «يا أبا بكر لا تبك، إن أمن الناس علي في صحبته وماله أبو بكر، ولو كنت متخذا
خليلا من أمتي لاتخذت أبا بكر، ولكن أخوة الإسلام ومودته، لا يبقين في المسجد باب
إلا سد، إلا باب أبي بكر»
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் (தம் மரண நோயின் போதும்) மிம்பரின் மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்), ‘அல்லாஹ் தன்
அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக்
கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு வாழ்வு)தனை எடுத்துக்
கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) வாய்ப்பளித்தான்.
அப்போது அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்” என்று கூறினார்கள்.
உடனே, அபூபக்ர் (ரலி) அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), ‘தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார்கள். நாங்கள் அபூபக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், ‘இந்த முதியவரைப் பாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக்
கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப்பதை எடுத்துக் கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக்
கொண்டிருக்க இவர்,
‘தங்களுக்கு என் தந்தையரும் தாய்களும் அர்ப்பணமாகட்டும்’ என்று (அழுதபடி) கூறுகிறாரே” என்று கூறினார்கள் – இறைத்தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார் – அபூபக்ர் (ரலி) தாம் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக
இருந்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள்,
‘தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம்
புரிந்தவர் அபூ பக்ர் அவர்கள் தாம். என்சமுதாயத்தாரிலிருந்து எவரையேனும் என் உற்ற
நண்பராக நான் ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூ பக்ரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்;
எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்) போதுமானதாகும். (என்னுடைய
இந்தப்) பள்ளிவாசலில் உள்ள சாளரங்களில் அபூபக்ரின் சாளரம் தவிர மற்றவை நீடிக்க
வேண்டாம்”
என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
நட்பின் மகத்துவத்தை
விளங்க மேற்கூறிய இந்த செய்திகளே நமக்குப் போதுமானதாகும்.
தூய நட்பால் இறைவனின் நேசம் கிடைக்கும்..
سَمِعْتُ
رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَي: حُقَّتْ
مَحَبَّتِيْ عَلَي الْمُتَحَابِّيْنَ فِيَّ، وَحُقَّتْ مَحَبَّتِيْ عَلَي
الْمُتَنَاصِحِيْنَ فِيَّ،وَحُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَزَاوِرِيْنَ فِيَّ،
وَحُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَبَاذِلِيْنَ فِيَّ، وَهُمْ عَلي مَنَابِرٍ
مِّنْ نُوْرٍ يَغْبِطُهُمُ النَّبِيُّوْنَ وَالصِّدِّيْقُوْنَ بِمَكَانِهِمْ.
எனக்காக ஒருவருக்கொருவர் நேசம் கொள்வோர் மீது நான் நேசம்
கொள்வது கடமையாகிவிட்டது,
எனக்காக ஒருவர் பிறரின் நன்மையை நாடுபவர் மீது நான் நேசம்
கொள்வது கடமையாகிவிட்டது. எனக்காக ஒருவர் பிறரை சந்திப்பவர்களை நான் நேசிப்பது என்
மீது கடமையாகிவிட்டது. எனக்காக ஒருவொருக்கொருவர் செலவு செய்பவர்களை நான் நேசிப்பது
என் மீது கடமையாகிவிட்டது. அவர்கள் ஒளியால் ஆன மேடைகள் மீது அமர்ந்திருப்பார்கள்
அவர்களுக்கே சொந்தமான இந்தப் பதவியைப் பார்த்து நபிமார்கள், உண்மையாளர்கள் பொறாமைப்படுவார்கள்” என்று அல்லாஹுதஆலா
கூறியதாக நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் உபாதத்திப்னு ஸாமித் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். (இப்னு ஹிப்பான் )
நட்பிற்கான இலக்கணம் என்ன?
1.இறைவனை நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்..
"من أراد اللَّه به خيرًا رزقه اللَّه أخًا صالحًا، إن نسي ذكره، وإن
ذكر أعانه
" اورده السبكي في الطبقات الشافعية الكبرى6/315
நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்: “ஓர் அடியானுக்கு அல்லாஹ்
நலவை நாடினான் என்றால் நேர்வழிக்குப் பிறகு நல்ல (நண்பனை) சகோதரனை வழங்கி
விடுவான். அந்த நல்ல நண்பன் தன் நண்பன் நல்ல விஷயங்களை மறந்து விட்டால்
ஞாபகப்படுத்துவான். அவனுக்கு நினைவு படுத்தினால் நல்லதை செய்வதற்கு உதவி செய்வான்.” ( நூல்: அத்தபகாத்துஷ் ஷாஃபிஇய்யதுல் குப்ரா லி இமாமிஸ் ஸுப்கீ )
2. இறைவனுக்காக நேசிக்க வேண்டும்..
حَدَّثَنِى
عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ
عَنْ أَبِى رَافِعٍ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم
أَنَّ رَجُلاً زَارَ أَخًا لَهُ فِى قَرْيَةٍ أُخْرَى
فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا فَلَمَّا أَتَى عَلَيْهِ
قَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أُرِيدُ أَخًا لِى فِى هَذِهِ الْقَرْيَةِ. قَالَ هَلْ
لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لاَ غَيْرَ أَنِّى أَحْبَبْتُهُ فِى
اللَّهِ عَزَّ وَجَلَّ. قَالَ فَإِنِّى رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ
قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ
ஒரு மனிதர் இன்னொரு ஊரிலிருந்த தன் சகோதரரை சந்திக்கச்
சென்றார். அவர் செல்லும் வழியில் அல்லாஹுதஆலா ஒரு மலக்கை
எதிர்பார்த்திருக்கும்படிச் செய்தான். அம்மனிதர் அந்த மலக்கு அருகில் வந்த போது, அம்மலக்கு அவரிடம் எங்கு செல்கிறீர்? என்று கேட்டார். அதற்கவர்
இந்த ஊரிலுள்ள என் சகோதரரை நாடிச் செல்கிறேன் என்றார். அப்போது அந்த மலக்கு அந்தச்
சகோதரர் உமக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டியதிருக்கிறதா? (அதற்காக அவரிடம் செய்கிறாயா?) என்று கேட்டார். அதற்கு
அம்மனிதர்,
அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன் என்பதைத் தவிர
வேறொன்றுமில்லை என்றார். அப்போது அந்த மலக்கு, அல்லாஹ்வுக்காக நீர் அவரை
நேசித்தது போல் அல்லாஹ் உன்னை நேசிக்கிறான் என்பதை உனக்கு தெரிவிக்க வந்த
அல்லாஹ்வின் தூதர்தான் நான் என்று கூறினார்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 4656)
3 .நல்ல நண்பனைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்…
حَدَّثَنِي
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ ، حَدَّثَنَا أَبُو
بُرْدَةَ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : سَمِعْتُ أَبَا بُرْدَةَ بْنَ أَبِي مُوسَى
، عَنْ أَبِيهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله
عليه وسلم
مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ
كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ وَكِيرِ الْحَدَّادِ لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ
الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ ، أَوْ تَجِدُ رِيحَهُ وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ
بَدَنَكَ أَوْ ثَوْبَكَ ، أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி
வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு
ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன்
நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது
ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி) அவர்கள் ( நூல் : புகாரி (2101)
4. சிறந்த முறையில் உறவாட வேண்டும்...
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ
اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ...
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள் தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார்
தன்னுடைய தோழரிடத்தல் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல் : திர்மிதி (1867)
நட்பைத் தேர்ந்தெடு! சொல்லி விடு!
قال
المأمون: الإخوان ثلاثة: أحدهم مثله مثل الغذاء لا يستغنى عنه, والآخر مثله مثل
الدواء يحتاج إليه في وقت دون وقت, والثالث: مثل الداء, لا يحتاج إليه قط.
கலீஃபா மஃமூன் (ரஹ்) என்ற
நட்பினை மூன்று வகையாக பிரிக்கின்றார்கள்.
முதலாவது வகை நட்பு உணவை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும்
தேவை.
இரண்டாவது வகை நட்பு மருந்தினை போன்றது. இந்த வகை நட்பு
எப்போதாவது தேவை.
மூன்றாவது வகை நட்பு நோயை போன்றது. இந்த வகை நட்பு
எப்போதும் தேவையில்லை என்பார்கள்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ عَلَى دِينِ
خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ
ஒருவர் தன் தோழனின் வழியில்தான் இருப்பார். எனவே உங்களில்
ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என பார்த்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், ( நூல்: அபூதாவூத் 4193, திர்மிதி 2300 )
عن
أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ
كُنْتُ جَالِسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ
مَرَّ رَجُلٌ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأُحِبُّ
هَذَا الرَّجُلَ قَالَ هَلْ أَعْلَمْتَهُ ذَلِكَ قَالَ لَا فَقَالَ قُمْ
فَأَعْلِمْهُ قَالَ فَقَامَ إِلَيْهِ فَقَالَ يَا هَذَا وَاللَّهِ إِنِّي
لَأُحِبُّكَ فِي اللَّهِ قَالَ أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ
நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு
மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு
தெரிவித்துவிட்டாயா?
என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை
என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை
அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று
கூறினார். அறிவிப்பர்: அனஸ் (ரலி) அவர்கள், ( நூல் : அஹ்மது 11980 )
சந்தர்ப்பவாத, சுயநல நட்பு வேண்டாம்..
عَنْ
مُعَاذٍؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: يَكُوْنُ فِيْ آخِرِ الزَّمَانِ اَقْوَامٌ
اِخْوَانُ الْعَلاَنِيَةِ اَعْدَاءُ السَّرِيْرَةِ، فَقِيْلَ: يَا رَسُوْلَ اللهِﷺ
فَكَيْفَ يَكُوْنُ ذلِكَ؟ قَالَ: ذلِكَ بِرَغْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ
وَرَهْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ. رواه احمد.
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "இறுதிக் காலத்தில் சிலர், வெளித்தோற்றத்தில் நண்பர்களாகவும், அந்தரங்கத்தில் விரோதிகளாகவும் இருப்பார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதற்கு, யாரஸூலல்லாஹ், இது எதன் காரணமாக ஏற்படும்?” எனக் கேட்கப்பட்டது.தன்னுடைய சுய நலத்துக்காக வெளிரங்கத்தில் ஒருவர் மற்றவருடன் நட்புக்கொள்வார். அந்தரங்க விரோதத்தினால் அவ்விருவரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து பயப்படுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். ( நூல்: அஹ்மத் )
உண்மையான நட்பு...
நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ‘‘ஒவ்வொரு நபிக்கும் ஒரு பயணத் தோழர் உண்டு. என்னுடைய பயணத் தோழர் உஸ்மான் (ரளி)” என்று கூறினார். நபி அவர்களின் மரணத்திற்குப் பிறகு தாம் அளித்த வாக்குறுதியை
நிரூபிக்கும் வண்ணம் இந்நிகழ்வு அமைந்து விட்டது.
ஒரு நாள் இரவு
ஹள்ரத் உஸ்மான் அவர்கள்,
நபி அவர்களை கனவில் கண்டார். அப்பொழுது நபி {ஸல்} அவர்கள், ஹள்ரத் உஸ்மானிடம்,
‘‘உஸ்மானே.. நீர் நம்மிடம் வந்து நோன்பு திறங்கள்’’ என்று கூறினார். இதை உஸ்மான் அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம்
கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே உஸ்மான் அவர்கள் மறு
நாள் நோன்பு வைத்திருக்கும் நிலையிலேயே உயிரிழந்தார்.
இறைத்தூதர் {ஸல்} அவர்கள், உஸ்மான் தன்னிடம் நோன்பு வைத்த நிலையில் வருவார்கள் என்பதை முன்கூட்டியே
கனவின் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். தன்னுடைய நண்பர் தம்மிடம் வரும் நேரத்தை
அறிவித்துவிட்டார்கள். தன் வாக்குறுதியை மெய்யாக்கி விட்டார்கள்.
உண்மையான, தூய்மையான நட்பு இறைவனுடைய பொறுத்தத்தை பெற்றுத்தரக்கூடியதாக உள்ளது. எனவே, நட்பின் ஒழுங்குகளை அறிந்து அதனடிப்படையில் நட்புகளை அமைத்து மறுமை நாளிலும், சுவனத்திலும் நண்பர்களாக, ஜோடி போட்டு வலம் வருவோம்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நல்ல நண்பர்களைத் தந்தருள்வானாக! நம் நண்பர்களுக்கு நம்மையும் நல்ல நண்பர்களாக ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment