Thursday, 11 May 2023

உயரப் பறக்க ஆசைப்படு! ( உயர்கல்வி சிந்தனை!! )

 

உயரப் பறக்க ஆசைப்படு!

( உயர்கல்வி சிந்தனை!! )

ப்ளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகியது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.67 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் 

       மாணவர்களை விட மாணவிகளே இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451 (94.03%)

மாணவியர்  : 96.38% 

மாணவர்கள்  : 91.45%

சிறைவாசிகள்  : 79 பேர் 

மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வி துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்து மாணவர்களும், பெற்றோர்களும் உயர்கல்வியை நோக்கி தங்களின் பார்வையை திருப்பி இருக்கும் இந்த நேரத்தில் உயர்கல்வியின் அவசியம் குறித்தான சில தகவல்களை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் தெரிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.

What is Higher Education? உயர் கல்வி என்றால் என்ன? 

மாணவர்கள் தொடக்கம் முதல் மேல்நிலைப் பள்ளி வரை, பள்ளி படிப்பை படிப்பார்கள். 12 -ஆம் வகுப்புக்கு பிறகு கல்லூரிகளில் சேர்ந்து இளநிலை பட்டப்படிப்பு (Undergraduate Course) படித்து கல்வியை தொடர்வது உயர் கல்வி என்று வரையறுக்கப்படுகிறது. 

பொறியியல் துறை, மருத்துவத்துறை, கலை மற்றும் அறிவியல் கல்வி என்ற இத்துறைகளுக்குள்தாம் அனைத்துப் படிப்புகளும் வருகின்றன. 

ஏதாவது ஒரு பட்டம் பெற்றதோடு மாணவர்களின் உயர் கல்வி படிப்பு நின்றுவிடுவதில்லை, உயர் கல்வியில் படிப்பு என்பது தொடர்ச்சியாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட துறையில் சேர்ந்தும் படிக்கலாம்.

உதாரணமாக, இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், முதுநிலை பட்டப்படிப்பில் (Post Graduate) அல்லது முதுநிலை பட்டயப்படிப்பில் (Diploma) சேரலாம். தாங்கள் விரும்பும் வேலையில் சேருவதற்கு ஏற்ற வகையில் பி.எட், பி.எல் போன்ற மற்றொரு இளநிலை படிப்புகளிலும் சேரலாம்.

முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், எம்.பில் படிப்பிலோ அல்லது பிஎச்டி ஆய்வு படிப்பிலோ சேரலாம். பிஎச்.டி ஆய்வை முடித்து வேலையில் சேர்ந்தவர்கள். முதுமுனைவர் பட்டத்துக்காக முதுநிலை ஆய்வில் ஈடுபடலாம். எனவே, உயர் கல்வி (படிப்பு) என்பது விடாமல் நம்மை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

டிப்ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்புகளில் சேர்ந்து தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ளலாம். முதுநிலை பட்டயப் படிப்பிலும் சேரலாம். தொழில் திறன் பயிற்சிகளில் ஆர்வம் உள்ளவர்கள் அதில் ஈடுபடலாம்.

உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்புகிறவர்கள். அதில் இணைந்து கொள்ளலாம். மேலும்,  ஏதாவது பணியில் இருந்து கொண்டே தொலைநிலை கல்வி மூலம் தங்களது படிப்பை தொடரலாம்.

முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு பெரும்பாலும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முக்கிய கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான சில நுழைவு தேர்வுகளை எழுதித் தகுதிபெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் கிடைக்கிறது.

கல்லூரிகளில் விரிவுரையாளராக ஆவதற்கு ஆய்வு படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆா்வமிக்கவர்கள் முதுநிலை படிப்புகளில் சேரலாம். அரசு கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்ந்தால் கட்டணம் குறைவாகும். மேலும், கல்வி உதவித்தொகையும் கிடைக்கும்.

உயர் கல்வியை யார் தீர்மானிப்பது?

``பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில், இன்றைய மாணவர்கள் உள்ளனர். அதனால்தான், குறிப்பிட்ட படிப்புகளை நோக்கித் தள்ளப்படுகின்றனர். படிப்பை அவர்கள் மீது திணித்து, அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றனர். 

படிப்பை அவர்கள்மீது திணிக்கக் கூடாது. கடந்த தலைமுறையைவிட இந்தத் தலைமுறை மாணவர்கள் புத்திசாலிகள். பெற்றோர்கள் நினைக்கும் துறையில் மாணவர்களைத் தள்ளினால் அவர்கள் படித்து முடிப்பார்கள்.  ஆனால், சாதனையாளர் என்று பெயர் எடுக்கும் அளவுக்கு வெற்றி பெற மாட்டார்கள். 

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 5,000 டாக்டர்கள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள். பொறியியல் முடித்து ஒன்றரை லட்சம் பேர் வெளியே வருகிறார்கள். ஆனால், ஒருசிலரே சிறந்தவர்கள்; நிபுணர்கள் என்று பெயர் எடுக்கிறார்கள். காரணம் 

பிளஸ் 2க்குப் பின், 80 வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத முடியும் என்றாலும், 75 வகையான தேர்வுகளுக்கு, மதிப்பெண் முக்கியமில்லை. அதில், வெற்றி பெறும் மாணவர்களும், பல்வேறு துறைகளில் படித்து சாதனை புரிகின்றனர்.

ஐ.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட பல இடங்களில், ஒருங்கிணைந்த படிப்புகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அதில் நல்ல எதிர்காலம் உள்ளது. ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். ஒரே துறைக்கு மட்டும் மாணவர்கள் முயற்சி செய்யாமல், கற்பித்தல், அவசரகால மருத்துவம், வானிலை, நிலவியல், குரலியல், மூளை ஆய்வியல், நரம்பு மருத்துவம் உள்ளிட்ட பல துறை சார்ந்த படிப்புகளைப் பற்றித் தெரிந்து, அவற்றில் சேர முயற்சி செய்ய வேண்டும்.

ஐ.ஏ.எஸ் பணியில் அமர என்ன படிக்கலாம்?..

இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். அதில் சிறப்புமிக்கதாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ் தேர்வில், மற்றவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும். மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.

இத்தேர்வுக்கு வாசிப்புப் பழக்கம் மிக மிக அவசியம். கல்லூரித் தேர்வைப் போல் அல்லாமல் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். தினமும் செய்தித்தாள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போது, பொறியியல் படிப்பு முடித்தவர்கள், ஐ.ஏ.எஸ் தேர்வில் அதிக அளவில் வெற்றிபெறுகிறார்கள். காரணம், அந்தப் பதவிக்குத் தேவையான ஆளுமைப் பண்பு, பகுத்து அறிதல், கூர்நோக்குப் பார்வை ஆகியவை பொறியியல் பட்டதாரிகளிடம் இயல்பாகவே வந்துவிடுகிறது. எனவே, பொறியியல் படித்த பிறகு ஐ.ஏ.எஸ் தேர்வு நல்ல சாய்ஸ்.

நாட்டின் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தமிழகத்திலிருந்து கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதுவும் ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிலையங்களில் படித்தோரில் பலரும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. ஐ.ஏ.எஸ் படிக்க வருவோர் எல்லாம் அனைத்துத் துறைகளையும் சார்ந்த நடுத்தர மாணவர்கள்தாம்.

அதில், அதிக அளவில் பொறியியல் மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் எளிதாக ஜெயிக்கிறார்கள். அதற்கு இப்போதிருந்தே  திட்டமிட்டு சரியான துறையைத் தேர்ந்தெடுத்து சரியான கல்லூரியில் சேர வேண்டும்.

கல்லூரிகளை (Colleges) தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை:-

ஒழுக்க கட்டுப்பாடுகள் (Discipline)

ஆங்கிலம் மற்றும் தொடர்பு திறன் வளர்ப்பு (English and Communication and Soft skill development)

படிப்பு சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி (Technical skill development)

வேலைவாய்ப்பிற்கு Campus Interview, Placement Cell

தொழில் நிறுவனங்களில் பயிற்சி (Internship in relevant company)

அறிவுசார் போட்டிகள் (Technical Competitions)

கல்வி கட்டணம் (Fee)

தேர்வு செய்யும் போது உங்களுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் :

உங்களுடைய பொருளாதார சூழல், கல்வி திறன், தங்கி படிப்பதா ? அல்லது சென்று வந்து படிப்பதா ? (hostel or day scholar ) என்பதை அடிப்படையாக வைத்து ஒரு 5  கல்லூரிகளைத் தேர்வு செய்து இரண்டு கல்லூரியை முடிவு செய்யுங்கள். இதில் எதில் சீட் கிடைக்கிறதோ அந்த கல்லூரியில் சேர்ந்து பயிலுங்கள்.

இந்தியாவின் உயர் கல்வியும், கல்வி நிறுவனங்களும்...

சமீபத்தில் வெளியிடப்பட்ட, 2019- 20ம் ஆண்டிற்கான உயர் கல்விக்கான அனைத்திந்திய கணக்கெடுப்பு,...

கடந்த, 60 ஆண்டுகளில், நம் நாட்டில், 723 ஆக இருந்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை, 1,043 ஆக உயர்ந்துள்ளது. 135 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், அரசால் மட்டுமே எல்லா நன்மையும் செய்து விட முடியாது. தனியார் பங்களிப்பு உதவியுடன் அதை சாதிக்க முடியும் என உணர்ந்து, 2014ல், 219 ஆக இருந்த தனியார் பல்கலைக் கழகங்கள் இன்று, 396 ஆக உயர்ந்துள்ளன.

கிராமப்புறங்களில், 276 ஆக இருந்த பல்கலைக் கழகங்கள் இன்று, 420 ஆக உயர்ந்துள்ளன....

90 ஆக இருந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள், 98 சதவீதம் அதிகரித்து, 177 ஆக உயர்ந்துள்ளன....

2014ல் 43 ஆக இருந்த மருத்துவ பல்கலைக் கழகங்கள், 50 சதவீதம் அதிகரித்து, 66 ஆக உயர்ந்துள்ளன....

பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை குறிப்பிடத்தகுந்த அளவில்முன்னேறியுள்ளது. மொத்தம், 17.10  சதவீத மாக இருந்த பட்டியலின மக்களின் சேர்க்கை, 23.40 சதவீதமாக, 6.3 சதவீதம் இந்த காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது. மேலும் பழங்குடியின மக்களின் உயர் கல்வி சேர்க்கை, 11 சதவீதத்திலிருந்து, 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

2014ல், 1 லட்சத்து 7,790 மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 2020ல், 98 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 2,550 மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்....

மேலும், நம் நாட்டில் 2014ல், 17 சதவீத மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தனர். ஆனால், 2020ல், 12.6 சதவீதமாக இது குறைந்துள்ளது. மாணவர்களுக்கு பொறியியல் கல்வியின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்துள்ளதை காட்டுகின்றது.

கலைப்பிரிவில் 32.7 சதவீதம் பேரும், வணிகவியலில் 14.9 சதவீதம் பேரும், அறிவியல் பாடங்களை 16 சதவீத மாணவர்களும் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்தம், 4.4 6 சதவீத பிள்ளைகள் மட்டுமே,...

மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை பயில்கின்றனர். 2019- 20ல் மட்டும், 38 ஆயிரத்து 986 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இது, 2014 புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும்போது, 50 சதவீதம் அதிகமாகும்.

உயர்கல்வியில் பெண்களின் பங்களிப்பு..

உயர் கல்வி, ஆராய்ச்சி கல்வி என அனைத்திலும் கடந்த ஆறு ஆண்டுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது...

பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களில் ஆண்களின் எண்ணிக்கை, 61 சதவீதத்திலிருந்து, 57.5 சதவீதமாக குறைந்துள்ளது....

பெண்களின் பங்களிப்பு, 39 சதவீதத்திலிருந்து, 42.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆசிரியர், செவிலியர் போன்ற பணிகளில், இந்தியப் பெண்களுக்கு ஆர்வமும், சேவை மனப்பான்மையும் உள்ளதை இந்த புள்ளி விபரம் காட்டுகிறது.

உயர் கல்வியில் முஸ்லிம்கள்...

தேசிய கல்வி உதவித்தொகை ஆணையத்தின் இணைய அறிக்கையை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். கடந்த ஆண்டில் மட்டும், 2,433 கோடி ரூபாய் மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்கப்பட்டுள்ளது....

இதில் பயனடைந்த இஸ்லாமிய சமூகத்தினர் 61.3 சதவீதம் பேர், கிறிஸ்துவர்கள் 10.5 சதவீதம் பேர், ஹிந்துக்கள் 9.3 சதவீதம் பேர் 

ஆவார்கள். நன்றி: 21/07/2021 தினமலர் https://m.dinamalar.com/kmalardetail.php?id=51440 )

ஒரு சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை உயர் கல்வியில் எட்டப்படும் வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. வளரும் இளம் தலைமுறையினரை அதிகம் கொண்ட முஸ்லிம் சமூகம், உயர் கல்வி சார்ந்த வளர்ச்சியில் எங்கே இருக்கிறது? என்பதைப்  பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஓரளவு முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதை மேற்கண்ட உதவித்தொகை சதவீதம் தெரிவிக்கிறது.

உயர் கல்வியில் இந்தியா...

உலக கல்வித் தரவரிசைப் பட்டியலில் கட்டணமற்ற கல்வி தரும் நாடுகளே முதல் 10 இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன.

டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இதில் இந்தியா கடந்த ஆண்டு 132-வது இடத்திலும் இந்த ஆண்டு 128 -வது இடத்திலும் உள்ளது. ( நன்றி: இந்து தமிழ் 07/07/2022 )

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் கல்வியை கற்பதையும், அதன்படி செயல்படுவதையும், அதைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதையும் இபாதத்தாக அடையாளப்படுத்தி, அதற்கு பல்வேறு சிறப்புகளைக் கூறி கல்வி தொடர்பான விஷயங்களில் ஈடுபட அதிகம் வலியுறுத்துகின்றது.

கல்வியின் சிறப்பு குறித்து நாம் பல்வேறு விஷயங்களை அறிந்து வைத்திருக்கின்றோம். ஆகவே, உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் இஸ்லாமிய வழிகாட்டுதலை நாம் பார்ப்போம்.

துறைசார் கல்வி பெற்றவர்கள் நிலை...

கல்வி உயர்வுக்கு வழி வகுக்கும்!!                                   

يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.  ( அல்குர்ஆன்: 58: 11 )

கல்வி அதிகார மையத்திற்கு அழைத்துச் செல்லும்....

நபி ஸுலைமான் (அலை) அவர்களுக்கும் அவர்களின் தந்தையான தாவூத் (அலை) அவர்களுக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முதலில் கல்வியறிவை வழங்கினான். அதன் பின்னரே ஆட்சி அதிகாரத்தை வழங்கினான்.

இருவரின் வாழ்க்கை வரலாற்றை அறிமுகப்படுத்தும் போது..

وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ‏

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 27: 15 )

பின்னர் தாவூத் (அலை) அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது...

وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَيْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ‏

மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும் அவருக்கு ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம். ( அல்குர்ஆன்: 38: 20 )

يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ

(நாம் அவரிடம் கூறினோம்:) தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.  ( அல்குர்ஆன்: 38: 26 )

நபி ஸுலைமான் (அலை) அவர்களைப் பற்றி பின்னர் குறிப்பிடும் போது...

قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏

என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்எனக் கூறினார். ( அல்குர்ஆன்: 38: 35 )

துறை சார்ந்த நிபுணத்துவம் அதிகார மையத்தைப் பெற்றுத் தரும்...

யூஸுஃப் (அலை) அவர்களின் கனவுக்கு விளக்கம் தரும் ஆற்றல் அவர்களை நாட்டின் பாரிய பொறுப்பான "கருவூல காப்பகத் துறையை"  பெற்றுத் தந்ததாகவும், அந்த துறையை நபி யூஸுஃப் (அலை) அவர்களே திறம்பட நிர்வகிப்பேன் என்று கேட்டுப் பெற்றதாகவும் அல்குர்ஆன் கூறுகிறது.

முதலில் யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாற்றில் அறிமுகப் படுத்தும் போது...

وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗۤ اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا‌ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏

அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். ( அல்குர்ஆன்: 12: 22 )

وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِىْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِىْ‌ۚ‌ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِيْنٌ اَمِيْنٌ‏

قَالَ اجْعَلْنِىْ عَلٰى خَزَآٮِٕنِ الْاَرْضِ‌ۚ اِنِّىْ حَفِيْظٌ عَلِيْمٌ‏

இன்னும், அரசர் கூறினார்: அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்என்று கூறினார். (யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”
( அல்குர்ஆன்: 12: 54, 55 )

நமது பிள்ளைகளின் ஆற்றல் என்ன?

நமது பிள்ளைகளின் ஆற்றல் என்ன என்பதை நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதன் பின்னர் உந்து சக்தியாக இருந்து அதற்கு அவர்களை தயார் செய்ய வேண்டும். அதன் பின்னர் அவர்கள் அடையும் உயர்வும், சமூகத்திற்கு அவர்களால் விளையும் பயன்களும் வார்த்தைகளில் விவரித்து விட முடியாது.

1.   இஸ்லாமிய வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்…

இஸ்லாத்தின் முதல் போரான பத்ரு யுத்தத்திற்குத் தயாராகி்க் கொண்டிருந்தது. 

பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவர் ஒருவர் தன் தாயாரிடம் விரைந்து சென்றார்.

நானும் போரில் கலந்து கொள்ள வேண்டும். என்னையும் அழைத்துச் செல்லுங்கள்

அவருடைய தாயார் வியந்து போனார்.அப்படியா? தயாராகி வா. அழைத்துச் செல்கிறேன்என்றார் தாயார் அந்நவ்வார் பின்த் மாலிக்.

பெருமகிழ்வுடன் தயாராகி வந்தார் அந்தச் சிறுவர். கையில் போர் வாள்! அவரது உயரமே ஏறக்குறைய அந்த வாள் அளவுதான் இருந்தது.

தன் மகனைப் பெருமிதத்துடன் நபியவர்களிடம் அழைத்துச் சென்றார் அந்வ்வார் பின்த் மாலிக்.

தனது படையினரை இறுதிக் கட்டமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

முகத்தில் பெரும் பொலிவு மிளிர, தோரணையில் வீரம் தெறிக்க  நபி (ஸல்) அவர்களை நெருங்கி வந்தார் அந்தச் சிறுவர்.

அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களுக்காக எனது உயிரை அர்ப்பணிக்கிறேன். என்னையும் அனுமதித்து ஏற்றுக் கொள்ளுங்கள். தங்களது தலைமையில் அல்லாஹ்வின் எதிரிகளை நானும் எதிர்த்துப் போரிடுவேன்

ஆச்சரியமும் மலைப்பும் ஒருங்கே தோன்ற அந்தச் சிறுவனை ஏறி்ட்டு நோக்கினார்கள். நபி (ஸல்) 

 

 முகத்தில் என்னவோ உண்மையும் ஆர்வமும் தெரிந்தது. ஆனால் அவரது கையிலுள்ள வாள் அளவு உயரமே உள்ள அவரை எப்படிப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்வது?

அன்பாய் ஆதரவாய் அந்தச் சிறுவனது தோளைத் தட்டிக் கொடுத்தவர்கள் சமாதானம் கூறினார்கள். நீ மிகவும் சிறியவன். வாய்ப்பு ஒருநாள் வரும் அதுவரை காத்திருசிறுவரது மனம் காயப்படாமல் பேசி அனுப்பி வைத்தார்கள். ஆயினும் மிகவும் ஏமாற்றமடைந்தார் அந்தச் சிறுவர். தமது ஆசை நிராசையாய் போனதை எண்ணி மிகவும் கவலையுடன் திரும்பினார் அந்த சிறுவர்.

அவருடைய தாயாருக்கும் தன் மகனுக்கு வாய்ப்பு கிடைக்காமற் போனது மிகப் பெரும் வருத்தம் தான்.

அடுத்த ஆண்டு உஹதுப் போருக்கான தருணம்  ஒரு குழுவாய் சிறுவர்கள் ஒன்று கூடி ஈட்டி, வில்-அம்பு, வாள், கவசம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு  நபியவர்களின் முன்பு வந்து நின்றார்கள். ஏதாவது செய்து இஸ்லாமிய படையில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற பேரார்வம் அவர்களுக்குள் பிரவாகமாய் பெருகி ஓடியது.

அதில் ராஃபிஉ இப்னு ஃகதீஜ் (ரலி) ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) எனும் இருவர் தங்களது வயதுக்கு மீறிய வலிமையோடும் உடல் பலத்துடனும் இருந்தார்கள். மேலும்,மல்யுத்தம் புரிவதிலும் போர்த் தளவாடங்களை கையாள்வதிலும் அவர்களிடம் அசாத்திய திறமை இருந்தது. இதைக் கண்ணுற்ற நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும்  அனுமதி அளித்தார்கள். 

ஆனால், அங்கு ஆவலுடன் எதிர்பார்த்து நின்ற உமர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ்விற்கும், அந்தச் சிறுவர் பட்டாளத்துடன் சேர்ந்து முயற்சி செய்த "அந்த சிறுவருக்கும்" வாய்ப்பு கிடைக்கவில்லை. போருக்கான பக்குவம் அவர்களிடம் இன்னமும் ஏற்படவில்லை என்று நபியவர்கள்  கணித்தார்கள்.

இரண்டு போர்க்களங்களிலும் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அல்லாஹ்விற்காக, நபி (ஸல்) அவர்களுக்காக, இந்த மார்க்கத்திற்காக ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அந்தச் சிறுவருக்கு தணியவே இல்லை.

என்ன செய்தால் நபி (ஸல்) அவர்களின் அருகாமையும் நெருக்கமும் கிடைக்கும். என்ன செய்தால் இந்த மார்க்கத்திற்காக சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று சதா சிந்தனை செய்து கொண்டே இருந்தார் அந்த சிறுவர்.

அப்போது, தொடர்படியாக குர்ஆன் வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் இறங்கிக் கொண்டிருந்த காலம் அது.

அவர் மனதில் மின்னல் கீற்றாய் ஒரு சிந்தனை வந்து போனது. ஆம்! குர்ஆனை மனனம் செய்து மாநபி (ஸல்) அவர்களின் மாண்புயர் அண்மையைப் பெறலாம் என்பது தான்.

தன் தாயாரிடம் வந்து தன் ஆசையை தெரிவித்தார். தாயாரும் அவர் ஆசைக்கு இசைவு தெரிவித்தார்.

 

பெரும் பெரும் ஸஹாபாக்களைத் தொடர்பு கொண்டு அல்குர்ஆனின் வசனங்களை மனனமிட ஆரம்பித்தார். எண்ணப்பட்ட சில நாட்களில் அல்குர்ஆனின் 17 அத்தியாயங்கள் அவரது இதயத்தில் இதமாக பதிவான பிறகு தம் தாயாரிடம் ஓதிக் காண்பித்தார். தாயார் அந் நவ்வார் பிந்த் மாலிக் அவரின் அபார மனன ஆற்றலையும், இறைவசனங்களை ஓதும் நயத்தைக் கேட்டு அப்படியே பூரித்துப் போனார்.

هذا الغلام الصغير، حينما لم يسمح له النبي عليه الصلاة والسلام، أن يجاهد بجسمه، تفتق ذهنه عن جهاد آخر، عن العلم وعن الحفظ، فذكر الغلام الفكرة لأمه، فهشت لها وبشت، ونشطت لتحقيقها .

هل سر النبي بتلاوة زيد, وما اللغة التي أمره أن يتعلمها, وما هي المنزلة العلمية التي حازها من النبي؟

حدثت النوار أم الغلام رجالاً من قومهم برغبة الغلام, وذكرت لهم فكرته، فمضوا به إلى النبي صلى الله عليه وسلم, وقالوا:

 

((يا نبي الله, هذا ابننا زيد بن ثابت، يحفظ سبع عشرة سورة من كتاب الله, ويتلوها صحيحة كما أنزلت على قلبك، وهو فوق ذلك حاذق يجيد الكتابة والقراءة، وهو يريد أن يتقرب إليك, وأن يلزمك, فاسمع منه إذا شئت .

சிறுவரின் கையைப் பிடித்துக் கொண்டு தம் கோத்திரத்தார்களின் பெரிய மனிதர்களிடம் அழைத்து வந்து என் மகனை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அவர்களின் அருகிலேயே அமர்ந்து குர்ஆனை கற்றுத் தேறும் பாக்கியமிக்க ஒருவனாக ஆக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்வீர்களா? என வேண்டி நின்றார்.

அப்போது, அந்தப் பெரியவர்கள் அந்தச் சிறுவரை ஓதச் சொல்லி கேட்டு விட்டு அகமகிழ்ந்து கையோடு அழைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தனர்.  

அல்லாஹ்வின் தூதரே! இதோ! இந்த எங்களின் சிறுவன் பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.  நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவன், புத்திக்கூர்மையுள்ளவன். குர்ஆனின் பதினேழு அத்தியாயங்களை மனனம் செய்து வைத்துள்ளான். தங்களுக்கு அருளப்பட்ட அதே நேர்த்தியுடன் அதை ஓதக்கூடியவனாகவும் இருக்கிறான். 

தனது இந்தத் திறமையையெல்லாம் தங்களது சேவைக்கு அர்ப்பணித்து தங்களுடனிருந்து மேலும் மேலும் ஞானம் பெருக்கிக் கொள்ள விரும்புகின்றான். 

அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு விருப்பமிருந்தால் தயவுசெய்து தாங்களே அந்தச் சிறுவரை ஓதச் சொல்லிக் கேட்டு, சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்

எங்கே நீ மனனம் செய்து வைத்துள்ளதை ஓது, கேட்கிறேன்என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

அந்தச் சிறுவர் அழகாய், தெளிவாய், நேர்த்தியுடன் ஓதினார். அவரது நாவிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்கள். எந்தளவு உள்ளார்ந்து குர்ஆன் அவரது மனதில் இடம் பெற்றிருக்கிறது என்பதை  நபியவர்களுக்கு உணர்த்தியது.

எனவே, அந்தச் சிறுவரை எப்படி இஸ்லாத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு அந்த நொடியே  புலப்பட்டது.

அடுத்த கணமே அந்தச் சிறுவரை நோக்கி... சிறுவரே! யூத கோத்திரத்தினர் நான் கூறுவதை சரியாகத்தான் எழுதிக் கொள்கிறார்களா என்பதை அறியும் வாய்ப்பு எனக்கில்லை. எனவே நீ உடனே யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

இதோ தங்களது உத்தரவிற்கு அடிபணிந்தேன் நபியவர்களேஎன்று உடனே, வெகு உடனே காரியத்தில் இறங்கினார் அந்தச் சிறுவர்.

அயராது கடினமான முயற்சி. அதன் பலனாய் வெகு குறுகியகாலத்தில் அதாவது இரண்டே வாரத்தில் ஹீ்ப்ரு மொழியைக் கற்றுத் தேர்ந்தார் அந்தச் சிறுவர். அதன் பிறகு யூதர்களுக்கு எழுதக் கூடிய கடிதம், அவர்களிடமிருந்து வரும் தகவல் என்று எதுவாய் இருந்தாலும் படிப்பது மொழிபெயர்ப்பது எழுதுவது எல்லாம் அந்தச் சிறுவரின் பொறுப்பிற்கு வந்து சேர்ந்தது.

அடுத்த படியாக அந்த சிறுவரை நோக்கி.., “உனக்கு சிரியாக் மொழி தெரியுமா?” என்று கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள். தெரியாதுஎன்றார் அந்த சிறுவர். சென்று அதைக் கற்று வா!என்றார்கள் நபி ஸல் அவர்கள்.

அதையும் உடனே பயின்றார். அதுவும் வெறும் பதினேழே நாட்களில். அந்த மொழியினைக் கற்று, தயாராய் வந்து நபி ஸல் அவர்கள் முன் வந்து நின்றார் அந்தச் சிறுவர்.

அந்தச் சிறுவரின் ஆழ்ந்த அறிவையும், மொழிப்புலமையையும் கண்டு வியந்த நபி ஸல் அவர்கள்  தங்களுக்கு  அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாளராக ஆக்கினார்கள்.

உலகில் நாம் பார்க்கத் தானே செய்கிறோம். ஒருவரின் கல்வித் தகுதி கூடும் போது அவருக்கு பதவியும் உயரும். அது போலவே  பதவி உயர்வு அளித்து அந்தச் சிறுவரை ஆனந்தப் படுத்தினார்கள் நபி (ஸல்) அவர்கள்.

ஆம்! அவர் இந்த பதவி உயர்வைப் பெறுவதற்கு தான் இத்தனை நாட்களாய் ஏங்கிக் கொண்டிருந்தார். 

ஆம்! அருள் மறையாம் அல்குர்ஆனின் வசனங்களை எழுதும் பொறுப்பு அது.

அவரின் ஆற்றலின் மீது ஆழ்ந்த நம்பிக்கை  நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட போது அவ்வப்போது அருளப்பெறும் இறைவசனங்களை எழுதிவைத்துக் கொள்வதற்காகவே சிலரை நியமித்து வைத்திருந்தார்கள் நபியவர்கள். அவர்களுள் அந்தச் சிறுவரையும் இணைத்துக் கொண்டார்கள்.

பின்னாளில்  அந்தக் குழுவினரில் பிரதானமான ஒருவராய் ஆகிப்போனார் அந்த சிறுவர இறைவசனம் புதிதாய் வந்திறங்கியதும் அந்தச் சிறுவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்துவரச் சொல்வார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் உச்சரிக்க உச்சரிக்க கவனமாய் எழுதிக் கொள்வார் அந்தச் சிறுவர்.

அது மட்டுமல்லாமல் ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்வுக்குப் பின்னர் நபி (ஸல்) அவர்கள் மன்னர்களுக்கு தஃவா - அழைப்புப் பிரச்சாரத்தை சுமந்த கடிதம் எழுதும் பணியிலும் அந்தச் சிறுவரையே நியமித்தார்கள்.

இவையெல்லாம் எவ்வளவு காலத்தில் நடந்தது? என்று நினைக்கின்றீர்கள். 

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குள் அடியேடுத்து வைக்கும் போது அவருக்கு வயது சரியாக 11. நபி ஸல் அவர்களின் அதிகாரப்பூர்வ எழுத்தராக ஆகும் போது அவரின் வயது  சரியாக14. நபி (ஸல்) அவர்களின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளராக அமர்த்தப்பட்ட போது அவரின் வயது சரியாக 15. குர்ஆனின் எழுத்தர்களின் தலைமை எழுத்தராக பரிணமிக்கும் போது அவரின் வயது சரியாக 16.  இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவரின் பிரதிநிதியாக  கடிதம் எழுதும் பொறுப்பில் நியமிக்கப்படும் போது அவரின் வயது சரியாக 17.

17 வயதில் ஒருவர் என்னவாக ஆக முடியும்? மிகக் குறுகிய காலத்தில் ஒருவர் எவ்வளவு உயர் பதவிகளுக்கு வர முடியும்? கல்வியில் ஆர்வமும், துறை சார்ந்த நிபுணத்துவமும் இருந்தால் மிகக் குறைந்த வயதிலும், மிகக் குறைந்த காலத்திலும் உலகம் வியக்கும் உன்னதமா உயர்வுக்கு வர முடியும் என்பது தான் அந்தச் சிறுவரின் வாழ்க்கை கூறும் மகத்தான தத்துவம் ஆகும்.

ஆரம்பமாக ஒரு தாய்க்கு சிறந்த மகனாக, அடுத்து ஒரு குடும்பத்தில் சிறந்தவராக, தொடர்ந்து கோத்திரத்தின் அடையாளமாக, அதற்கடுத்து நபித்தோழர்களில் தனித்துவமாக, நிறைவாக இஸ்லாமிய வரலாற்றில் "தவிர்க்க முடியாத" ஆளுமையாக பல்வேறு பரிணாமங்களை நோக்கி அந்தச் சிறுவர் பயணித்தார்.

அந்தச் சிறுவர் வேறு யாருமில்ல. அவர் தான் زஸைத் இப்னு ثاஸாபித் (ரலி) அவர்கள்.

சமுதாயமும், உலகமும் கொண்டாடும்..

فقد خطب عمر رضوان الله عليه في المسلمين يوم الجابية, فقال:

((أيها الناس من أراد أن يسأل عن القرآن فليأت زيد بن ثابت، ومن أراد أن يسأل عن الفقه فليأت معاذ بن جبل ، ومن أراد أن يسألَ عنِ المال فليأت إليَّ، فإن الله عز وجل جعلني عليه والياً، ولها قاسماً))

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அந்த உரையில் "மக்களே! அல்குர்ஆன் வசனங்கள் குறித்து ஐயப்பாடு எழுபவர்கள் தெளிவு பெற ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை அணுகட்டும்! மார்க்கச் சட்ட விவகாரங்கள் குறித்து தேவை உள்ளவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களிடம் செல்லட்டும்! பொருளாதார சிரமங்கள், பொருளாதார தேவைகள் உள்ளவர்கள் என்னிடம் வாருங்கள்! ஏனெனில், அல்லாஹ் என்னை  குடி மக்களின் பொறுப்பாளியாக ஆக்கியுள்ளான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பையும் தந்துள்ளான்" என்று குறிப்பிட்டார்கள். 

 ففي غزوة تبوك حمل عُمارة بن حزم أولا راية بني النجار، فأخذها النبي صلي الله عليه وسلم  منه فدفعها لزيد بن ثابت فقال عُمارة: ” يا رسول الله! بلغكَ عنّي شيءٌ ؟ ” فقال له الرسول صلي الله عليه وسلم  : ” لا، و لكن القرآن مقدَّم ” …

தபூக் யுத்தத்தின் போது ஆரம்பத்தில்   பனூ நஜ்ஜார் கோத்திரத்தார்களின் கொடியை  உமாரா இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்)  வழங்க வேண்டும் என தளபதிக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்கள். படை புறப்படும் நேரத்தில் கொடியை ஸைத் இப்னு ஸாபித்  (ரலி) அவர்களிடம் வழங்குமாறு கூறினார்கள். இந்த தகவலை அறிந்து நபி (ஸல்)அவர்களிடம் ஓடோடி வந்த  உமாரா இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்கள்  "நான் இன்னின்னவாறு கேள்விப் பட்டேனே அது உண்மை தானே?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்)அவர்கள் "ஸைத் இப்னு ஸாபித் (ரலி) குர்ஆனில் தேர்ச்சி உள்ளவராக திகழ்கிறார். தோழரே! முற்படுத்தப்படும் இடத்தில் தானே அல்குர்ஆன் இருக்கிறது" என்று அவருக்கு சமாதான வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தார்கள். 

لقد توفي في السنة الخامسة والاربعون من الهجرة الموافق سنة 665 ميلاديا في عهد معاوية بن ابي سفيان … و عند موته قال بن عباس : “لقد دفن اليوم علم كثير ” ….. و قال أبو هريرة :  “مات حبر الأمة ! ولعل الله أن يجعل في ابن عباس منه خلف ” .

ஹிஜ்ரி 45 -ம் ஆண்டு முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் இந்த உலகை விட்டும் விடைபெற்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இரங்கல் தெரிவிக்கும் போது "இதோ! இன்று பெரும் கல்வி பூமியோடு புதையுண்டு போனது" என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் இரங்கல் தெரிவிக்கும் போது "இந்த சமுதாயத்தின் பெரும் பொக்கிஷம் இன்று உலகை விட்டும் விடை பெற்றுச் சென்று விட்டது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் அந்த வெற்றிடத்தை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் " என்று கூறினார்கள்.

فما كان عمر ولا عثمان يقدّمان على زيد أحداً في القضاء والفتوى والفرائض والقراءة.

உமர் (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் ஏற்படும்  நீதிபரிபாலனம், மார்க்கத் தீர்ப்பு, சொத்துரிமை ,  அல்குர்ஆன் ஓதுதல் தொடர்பான  விவகாரங்களில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் முதலில் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களையே தொடர்பு கொண்டு தெளிவு பெறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

وفي خلافة ابي بكر الصديق رضي الله عنه وهو أحد أصحاب الفَتْوى الستة: عمر وعلي وابن مسعود وأبيّ وأبو موسى وزيد بن ثابت،

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிகாலத்தில் மார்க்க தீர்ப்பு வழங்கும் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்தார்கள். அதில் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார். மேற்படி ஐவர், உமர் (ரலி) அலீ (ரலி) இப்னு மஸ்வூத் (ரலி) அபூ மூஸா (ரலி) உபை இப்னு கஅப் (ரலி) ஆகியோர் ஆவர்.

و كان عمر بن الخطاب  رضي الله عنه يستخلفه إذا حجّ على المدينة و قد استعمله عمربن الخطاب  على القضاء …  

و زيد بن ثابت رضي الله عنه هو الذي تولى قسمة الغنائم يوم اليرموك .

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய சென்ற போது  ஸைத்  இப்னு ஸாபித் (ரலி) அவர்களை மதீனாவின் இடைக்கால நீதிபதியாக  நியமித்தார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

மேலும், யர்மூக் யுத்தத்தில்  பெறப்பட்ட கனீமத் பொருட்களையும் பங்கு வைக்கும் பொறுப்பையும் உமர் (ரலி) அவர்கள் ஸைத்  (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள்.

عن أنس بن مالك قال: قال رسول الله :أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في الله عمر وأصدقهم حياء عثمان وأقرؤهم لكتاب الله أبي بن كعب وأفرضهم –أي: أعلمهم بالفرائض- زيد بن ثابت وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل ألا وان لكل امة أمينا وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح".

எனது உம்மத்தில் எனதுஉம்மத்தின் மீது அதிக இரக்கமுடையவர் அபூபக்ர் (ரலி) ஆவார். அல்லாஹ்வின் மார்க்கத்தின் விஷயத்தில் மிகுந்த உறுதியோடு நடந்து கொள்பவர் உமர் (ரலி) ஆவார்.  உண்மையாக அதிக வெட்க உணர்வுஉடையவர் உஸ்மான் (ரலி) ஆவார். மிகச் சிறந்த தீர்ப்பு வழங்குபவர் அலீ இப்னு அபீதாலிப்  (ரலி) ஆவார். அல்லாஹ்வின் வேதத்தை சிறப்பாக ஓதுபவர் உபை இப்னு கஅப் (ரலி) ஆவார். ஹலால், ஹராம் விஷயங்களில் மிகவும் அறிவுடையவர் முஆத் இப்னு ஜாபல் (ரலி) ஆவார். வாரிசுரிமைச் சட்டங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளவர் ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆவார். நிச்சயமாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும் நம்பிக்கையாளர் ஒருவர் இருப்பார் இந்த சமூகத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரலி) ஆவார்". என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு மாஜா – 125 )

நிதித்துறை, நீதித்துறை, சட்டத்துறை, ஆழ்ந்த குர்ஆனிய ஞானம், எழுத்துப்புலமை, மொழிப்புலமை, மொழிபெயர்ப்பு புலமை என பல்வேறு துறைகளில் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் மிளிர்ந்தார்கள்.

தங்களுடைய 16 வயதில் இருந்து இந்த உலகை விட்டு விடைபெறும் வரை இந்த உலகத்தில் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கண்டது உயர்வு, உயர்வு, உயர்வு என்பது மட்டுமே.

கல்வியறிவில் சிறந்து விளங்கிய ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் உயர்ந்த அந்தஸ்து வழங்கி அடையாளப் படுத்தினார்கள்.

அதன் பின்னர் வந்த நான்கு கலீஃபாக்களும் தங்களுடைய அதிகாரமிக்க அனைத்து இடங்களிலும் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை வைத்து அலங்கரித்தார்கள்.

40  ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சமூகம் அவர்களை கண்ணியத்திற்கு மேல் கண்ணியம் செய்து சிறப்பு படுத்தியது.

பனூ நஜ்ஜார் கோத்திரத்தில் பத்து தலைமுறைக்கும் பின்னால் பிறந்த ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அந்த கோத்திரத்தின் பிரதான 11 மனிதர்களில் முதல் மனிதராக பரிணமித்து அந்த கோத்திரத்துக்கே பெருமை சேர்த்தார்.

எனவே, உயர் கல்வியில், துறை சார்ந்த அறிவில் நிபுணத்துவம் கொண்டிருக்கும் ஒருவரால் அவர் மட்டுமல்ல. அவர் குடும்பம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகமுமே நன்மை பெற முடியும் என்ற மகத்தான படிப்பினையைத் தாங்கி நிற்கிறது ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களின் வாழ்க்கை.

ஒரு சிறந்த மாணவரின் துவக்கப் புள்ளியாக...

ஒரு மாணவர் தான் இன்ன துறையில் சிறந்து விளங்குவார் என அவரின் சிறப்பு ஆற்றலை அவருக்கு உணர்த்துவது அந்த மாணவரின் அருகில் இருக்கும் வாய்ப்பு பெற்ற பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் தலையாய கடமையாகும்.

அந்த மாணவர் சிறந்து விளங்கிட அவர்களே துவக்கப்புள்ளியாக, தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

அப்படி பெற்றோரால், ஆசிரியரால் கண்டெடுக்கப்பட்டவர்கள் வரலாற்றில் வாகாய் தடம் பதித்து மிளிர்வதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

2. இமாம் ஷாஃபிஈ (ரஹ்)..

உலகம் போற்றும் பேரறிஞராக வரலாறு அடையாளப்படுத்தும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் வாழ்விலிருந்து...

இமாம் ஷாஃபிஈ அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தார்கள். அதுவும் அம்பெறியும் விளையாட்டில் பெரும் வீரராக உருவெடுத்தார்கள்.

وأقبل على الرمي ، حتى فاق فيه الأقران ، وصار يصيب من عشرة أسهم تسعة

இமாம் ஷாஃபிஈ அவர்களே கூறுவார்கள்: நான் இலக்கை நோக்கி குறி வைத்து பத்து அம்புகளை எய்கிறேன் என்றால் ஒன்பது அம்புகள் மிகச் சரியாக இலக்கை சென்று அடைந்து விடும், ஒரு அம்பு தான் இலக்கில் இருந்து தவறும்”.

மாபெரும் அறிஞராக உருவெடுக்க வேண்டும் என்கிற கனவைச் சுமந்து நிற்கிற அவரது தாய்க்கு இது கவலையைத் தந்தது.

وجعلت أطلب العلم ، فتقول لي : لا تشتغل بهذا ، وأقبل على ما ينفعك ، فجعلت لذتي في العلم

ஒரு நாள் தனது மகனை அமர வைத்து மகனே! இது போன்ற உனக்கு பயன் தராதவைகளில் கவனம் செலுத்தாதே! உனக்கு பயன் அளிக்கும் விஷயத்தில் உன் கவனத்தைத் திருப்பு!இமாம் ஷாஃபிஈ அவர்கள் கூறுவார்கள்: அதன் பின்னர் எனக்கு அறிவு ஞானத்தைப் பெறுவதில் இன்பம் ஏற்பட்டது.

ثم أقبل على العربية والشعر 
فبرع في ذلك وتقدم . ثم حبب إليه الفقه ، فساد أهل زمانه

பின்பு அரபு மொழியிலும், அரபி இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றார்கள். பின்னர் ஃபிக்ஹ் கலையில் கவனம் செலுத்தி அதிலும் தேர்ச்சி பெற்று சம காலத்து பெரும் அறிஞர்களுக்கு நிகராக விளங்கினார்கள். அப்போது இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு என்ன வயதிருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? வெறும் 9 வயது தான்.

3. இமாம் அபூயூஸுஃப் (ரஹ்)..

وقد روى الخطيب البغدادي بسنده عن علي بن الجعد قال: أخبرني يعقوب بن إبراهيم أبو يوسف القاضي، قال: توفي أبي؛ إبراهيم بن حبيب، وخلفني صغيرًا في حجر أمي، فأسلمتني إلى قصار أخدمه؛ فكنت أدع القصار، وأمر إلى حلقة أبي حنيفة، فأجلس استمع، فكانت أمي تجيء خلفي إلى الحلقة، فتأخذ بيدي وتذهب بي إلى القصار، وكان أبوحنيفة يعني بي؛ لما يرى من حضوري وحرصي على التعلم، فلما كثر ذلك على أمي، وطال عليها هربي، قالت: لأبي حنيفة؛ ما لهذا الصبي فساد غيرك، هذا صبي يتيم لا شيء له، وإنما أطعمه من مغزلي، وآمل أن يكسب دانقًا يعود به على نفسه، فقال لها أبو حنيفة: مري يا رعناء، هذا هو ذا يتعلم أكل الفالوذج بدهن الفستق، فانصرفت عنه، وقالت له: أنت شيخ قد خرفت، وذهب عقلك، ثم لزمته؛ فنفعني الله بالعلم، ورفعني حتى تقلدت القضاء، وكنت أجالس الرشيد، وآكل معه على مائدته، فلما كان في بعض الأيام قدم إلي هارون فالوذجة، فقال لي هارون: يا يعقوب، كل منه فليس كل يوم يعمل لنا مثله، فقلت: وما هذه يا أمير المؤمنين؟ فقال: هذه فالوذجة بدهن الفستق، فضحكت، فقال لي: مم ضحكت؟ فقلت: خيرًا أبقى الله أمير المؤمنين، قال: لتخبرني وألح علي، فخبرته بالقصة من أولها إلى آخرها؛ فعجب من ذلك، وقال: لعمري إن العلم ليرفع وينفع دينًا ودنيا، وترحم على أبي حنيفة، وقال: كان ينظر بعين عقله مالا يراه بعين رأسه.

ஹிஜ்ரி 113 –ஆண்டு யஅகூப் இப்னு இப்ராஹீம் என்பவர்கள் கூஃபா நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கின்றார்கள்.

இமாமுல் அஃளம் அபூஹனீஃபா  (ரஹ்)  அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற காலமும் கூட.

உலகின் எட்டுத் திக்கிலும் இமாமவர்களின் புகழ் பரவி, சன்மார்க்க அறிவைப் பருக, பெற்றிட தூர தேசங்கள் அனைத்திலிருந்தும் அலை அலையாய் இமாமவர்களின் பாடசாலையை நோக்கி மாணவர்கள் திரண்டு வந்து கொண்டிருந்த தருணம் அது.

ஏழ்மை சூழலில் வாழ்ந்து வந்த, இமாமுல் அஃளம் பாடசாலையின் அருகே வாழ்ந்து வந்த யஅகூப் அவர்களின் உள்ளத்திலும் அந்த ஆசை இடம் பெற்றது.

மதி கூர்மையும், அபார மனன சக்தியும் நிறைந்திருந்த இளவல் யஅகூப் அவர்கள் இமாமவர்களின் பாடசாலையில் அடியெடுத்து வைக்கின்றார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பாகத் தான் அவரின் தாயார் அவர்கள் ஒரு சலவையாளரிடம் தொழில் பழகுவதற்காக விட்டு வந்திருந்தார்கள்.

ஆனால், யஅகூப் அவர்களோ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இமாமவர்களின் பாடசாலைக்கு வந்து ஆர்வத்தோடு கல்வி பயில ஆரம்பித்தார்கள்.

துவக்கமாக, அவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்.

இந்தச் செய்தியை சலவையாளரின் மூலம் அறிந்து அவரது தாயார், ஒரு நாள் நேராக பாடசாலைக்குச் சென்று கடும் கோபத்தோடு தங்களது மகனை அழைத்துச் சென்றார்கள்.

அங்கே, பாடம் நடத்திக் கொண்டிருந்த இமாமுல் அஃளம் அவர்கள் இதனைக் கண்டு எழுந்து வந்து காரணம் வினவுகின்றார்கள்.

அதற்கு, அந்த தாயார் இவரோ ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரும் நானும் இணைந்து உழைத்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும். இது தெரியாமல் என் பிள்ளையை அழைத்து வந்து ஓதிக் கொடுக்கின்றேன் என்று அவன் வாழ்வை பாழாக்குகின்றீர்களே! இது நியாயமா? என்று கேட்டார்கள்.

அப்போது, இமாமவர்கள் ஓ! விபரமில்லாத பெண்ணே! இந்தச் சிறுவரை எதிர் காலத்தில் பிஸ்தா எண்ணையினால் தயாரிக்கப்படும் ஃபாலூதா எனும் உணவை உண்பதற்காக தயார் படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்றார்கள்.

அது கேட்டதும், கோபத்தில் இருந்த அந்த தாய் ஓ! பெரிய மனிதரே! நீர் கெட்டுப் போய் விட்டீர் போலும்! உமது அறிவு மழுங்கி விட்டது போலும்! என்று கடுமையாக பேசினார்கள்.

பின்னர், சிறிது நேரம் கழித்து யஅகூப் அவர்களின் தாயாரைச் சந்தித்து100 திர்ஹம்கள் அடங்கிய ஒரு பையைக் கொடுத்து இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மகன் மாதந்தோரும் தரும் ஊதியமாக நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள்.

அவர் கல்வி கற்று முடியும் வரை இது போன்று பண முடிப்புகளை உங்கள் ஏழ்மையை கருத்தில் கொண்டு உபகார நிதியாக தருகின்றேன். உங்கள் மகனை சன்மார்க்க கல்விக்காக விட்டு விடுங்கள் என்றார்கள்.

அவர்களின் தாயாரும் அதற்கு சம்மதித்தார்கள். குர்ஆனை மனனம் செய்தார். குர்ஆனுக்கான விரிவுரை வழங்கும் கலை, ஹதீஸ் கலை, வரலாற்றுக் கலை, ஃபிக்ஹ் கலை என பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்றார்கள்.

இமாமவர்களால் நீதிபதியாகும் தகுதி படைத்த மாணவர் என புகழாரம் சூட்டப்பட்டவர்களில் ஒருவரானார் யஅகூப் எனும் இயற்பெயரைக் கொண்ட இமாம் அபூயூஸுஃப் (ரஹ்) அவர்கள்.

உலகின் நான்கில் மூன்று பகுதிகள் இஸ்லாமிய எல்கையால் சூழப்பட்டிருந்த தருணம் அது. அமீருல் முஃமினீனாக ஹாரூன் ரஷீத் பாதுஷா (ரஹ்) அவர்கள் வீற்றிருந்த காலம் அது. இஸ்லாமிய முழு உலகின் முதன்மை நீதிபதியாக முதலாவதாக நியமிக்கப் பட்டார்கள் இமாம் அபூயூஸுஃப் (ரஹ்) அவர்கள்.

ஒருநாள் கலீஃபாவோடு உணவருந்த அமர்ந்திருந்த இமாம் அவர்களின் முன்பாக நறுமணமும், சுவையும் மிக்க ஒரு உணவு வைக்கப்படுகின்றது. அதை அப்போது தான் முதன் முதலாகப் பார்க்கின்றார்கள் இமாம்.

கலீஃபாவிடம் இது என்ன உணவு? என்று வினவினார்கள். கலீஃபா அவர்கள் இமாமிடம் இது ஃபாலூதா, பிஸ்தா எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவு என்றார்கள்.

இதைக் கேட்டதும் இமாம் அவர்கள் சிரித்தார்கள். கலீஃபா சிரித்ததன் காரணம் என்ன என்று கேட்டதற்கு இமாமவர்கள் கடந்த கால நிகழ்வுகளைக் கூறி என் ஆசிரியர் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் எவ்வளவு தீட்சண்யத்தோடு இதை சொல்லி இருக்கின்றார்கள். அல்லாஹ் அன்னாருக்கு அருள் புரிவானாக! என்றார்கள்.

இதைக் கேட்ட கலீஃபா அவர்கள், ஆம்! உலகில் எல்லோரும் புறக்கண்களால் பார்க்கும் ஆற்றல் கொண்டவர்கள். உமது ஆசான் இமாமுல் அஃளம் அவர்களோ அகக் கண்களால் பார்க்கும் அபார ஆற்றல் கொண்டவர்கள் என்று கூறினார்கள். (  நூல்:  கிதாபுல் கராஜ், கிதாபு கதீபுல் பக்தாதீ )

சாதாரண சலவைத் தொழிலாளியாகவோ அல்லது ஏதேனும் ஒரு கூலித் தொழிலாளியாகவோ வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவரை தஃப்ஸீர்,  ஹதீஸ்,  ஃபிக்ஹ்,  வரலாறு போன்ற மாபெரும் கலைகளில் மகத்தான ஆற்றல் கொண்டவராக,  இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் முதன்மை நீதிபதியாக இமாம் அபூயூஸுஃப்   (ரஹ்) அவர்கள் பரிணமிக்க, வரலாற்றில் வாகாய் அமர்ந்து ஒளி வீசிக்கொண்டிருக்க  பொறுப்பு மிக்க ஆசிரியர் அபூ ஹனீஃமா (ரஹ்) அவர்களால் தான் என்றால் அது மிகையல்ல.

ஆகவே, உயர்கல்வியின் மூலம் உச்சத்தஒ தொடுகிற, உலகமே கொண்டாடுகிற ஓர் ஒப்பற்ற சமூகமாக நம் இஸ்லாமிய சமூகம் மலரட்டும்! இந்தியாவில் எதிர்கால முஸ்லிம்களின் வாழ்வில் சுபிட்சம் தொடரட்டும்!!

3 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள்.நன்றி

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete